Jump to content

Leaderboard

  1. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      13

    • Posts

      43212


  2. ஈழப்பிரியன்

    ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      15558


  3. கிருபன்

    கிருபன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      33775


  4. ஏராளன்

    ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      18715


Popular Content

Showing content with the highest reputation on 11/09/22 in all areas

  1. இவர் பெரிய எழுப்பம் விட.....😁 மற்றவர் சிங் சா போட......😃 ஒரே அமர்க்களம் தான் 😂
    4 points
  2. நாளை வியாழன் (10 நவம்பர்) இரண்டாவது அரையிறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 56) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் 10 நவ-22 8:00 AM அடிலெயிட், இங்கிலாந்து (பிரிவு 1 இரண்டாவது இடம்) எதிர் இந்தியா (பிரிவு 2 முதல் இடம்) ENG vs IND இருவர் இங்கிலாந்து வெல்வதாகவும், மூவர் இந்தியா வெல்வதாகவும், மற்றையோர் வேறு அணிகள் வெல்வதாகவும் கணித்துள்ளனர். இங்கிலாந்து: சுவி ஏராளன் இந்தியா: முதல்வன் பிரபா வாத்தியார் குறிப்பு: பிற அணிகள் வெல்வதாகக் கணித்த 14 பேருக்கும் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் PAK பையன்26 PAK முதல்வன் IND சுவி ENG அகஸ்தியன் SRI தமிழ் சிறி AUS பிரபா IND குமாரசாமி PAK நுணாவிலான் PAK வாதவூரான் SRI வாத்தியார் IND கிருபன் SRI சுவைப்பிரியன் PAK ஏராளன் ENG புலவர் PAK எப்போதும் தமிழன் AUS கறுப்பி SRI கல்யாணி PAK நீர்வேலியான் AUS நாளைய அரையிறுதிப் போட்டியில் 3 புள்ளிகளை யார் எடுப்பார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்!
    3 points
  3. அவுஸ் தெரு நாய்க‌ளும் தென் ஆபிரிக்கா குர‌ங்கு கூட்ட‌மும் உள்ள‌ போய் இருந்தா நான் தான் முத‌ல்வ‌ர் நீங்க‌ள் துனைத் த‌லைவ‌ர் தாத்தா 😔
    2 points
  4. 1987 இலங்கையில் இந்தியா படைகள் போர் புரிந்தார்கள்..வடக்கு கிழக்கில் கடுமையாக போரிட்டார்கள். அந்த நேரத்தில் இலங்கையிலுள்ள இந்திய படை தலமை அதிகாரியிடம் ஒரு பத்திரிகை நிருபர் கேட்டார் நீங்கள் ஏன் போர் புரிகிறீர்களென்று. அந்த அதிகாரி. தெரியாது ரஜிவ். சொன்னார் அடிபடுகிறோம். என்று பதிலளித்தார் ரஷ்யா படைகளுக்கும். ஏன். போரிடுகின்றன என்பது தெரியாது மாணிக்கம். [தமிழ் பெயரா] 🤣?புடின் சொன்னார் அவ்வளவு தான் தெரியும் 🤣மனிதர்கள் சரி நாடுகள் சரி கடந்து வந்த பாதையை மறந்து விடக்கூடாது ரஷ்யா 1990 ஆம் ஆண்டை. மறந்து விட்டது இனிமேல் 1990 ஆண்டு போல் ஒரு ஆண்டு வரதா என்ன? அந்த 1990 ஆண்டு எரிவாயு எரிபொருள் எங்கே போனது ?அது ரஷ்யாவில் தான் இருந்தது இருந்தும் மேற்குலகிடம். பிச்சை எடுத்தார்கள் ..கிழக்கு ஜேர்மனியை நிர்வாகம் செய்ய முடியாது ஓடினார்கள் இன்று உக்ரேனை பிடித்து நிர்வாகம் செய்ய போகிறார்கள் ...எப்படி எவ்வளவு காலம் செய்ய முடியும்? மேற்குலகு சிந்திக்கவும் செயல்படவும். தொடங்கி விட்டது ரஷ்யா இடமிருந்து எரிவாயு எரிபொருள் கொள்வனவு செய்யாமல் எப்படி வாழ்வது? ஆமாம் முடியும் இது இந்த போர் பெற்று தந்த வெற்றி ஆகும் ஆனால் ரஷ்யா புட்டின் காலத்தில் அல்லது புட்டினுக்கு பின் கண்டிப்பாக 1990 ஆண்டை சந்தித்தே தீரும். அந்நேரம். மேற்குலகின் ஆதரவு கிடையவே கிடையாது இன்றைய கோத்தா இன் நிலைமை என்ன?2009ஆண்டு பால் சோறு திண்டவன். இன்று தனியாக தெருக்களில் வர முடியவில்லை நாளைக்கு மாண்புமிகு மாணிக்கம் புட்டினுக்கு ரஷ்யா தெருக்களில் போக முடியாது வரலாம்” ரஷ்யா உக்ரேனை பிடிக்கும் சீனா தைவானை பிடிக்கும் ..காரணம் ரஷ்யா..சீனா க்பாகுதுகாப்பு இல்லை இப்படி ஒவ்வொரு நாடாக பிடித்து மிகப்பெரிய நாடாக வந்த உடன் பாதுகாப்பு பிரச்சனை இல்லையா?. 😛
    2 points
  5. யோவ் பெரிசு! போட்டி எட்டு மணிக்கு நடந்தாலும் பாத்து என்னத்த பெரிசா கிழிக்கப்போறியள்? முதல்வராய் வாறதுக்கு இனி சாத்தியமே இல்லை எண்டு அப்பன் அடிச்சு சொல்லுறார்....🤣
    2 points
  6. 2 points
  7. Kherson ஐ விட்டு ரஸ்ய படைகள் ஓடுதமே, மன்னிக்கவும் தந்திரோபாய பின்வாங்கல் செய்யுதாமே 🤔
    2 points
  8. இன்றைய முதலாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 152 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 153 ஓட்டங்களை எடுத்தது. முடிவு: பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளது. யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளி இல்லை!
    2 points
  9. உலகத்துக்கே கோதுமை,நவதானியம் வழங்கிற உக்ரேன் எண்டு பீலா விட்டு முடிஞ்சுது. இனி உலகத்துக்கே அரிசி வழங்கிற கிழக்கு மாகாணம்.....என்னமோ நடத்துங்கோ....நடத்துங்கோ....🤪
    2 points
  10. ஓம் அண்ணா பாக்கிஸ்தானில் க‌ரிஸ் என்ர‌ அதிர‌டியா ஆட‌க் கூடிய‌ வீர‌ரை அணியில் சேர்த்து இருக்கின‌ம் அவ‌ன் அடிக்கிர‌ ப‌ந்து கூட‌ சிக்ஸ் பாக்கிஸ்தானின் பின்ன‌னி வீர‌ர்க‌ள் அதிர‌டியா ஆட‌க் கூடிய‌வ‌ர்க‌ள் ❤️🙏
    2 points
  11. NZ 152/4 PAK (4.6/20 ov, T:153) 47/0 Pakistan need 106 runs in 90 balls. Current RR: 9.40 • Required RR: 7.06 Win Probability:PAK 84.50% • NZ 15.50% போறபோக்கைப் பார்த்தால் பாகிஸ்தான் இலகுவாக வெல்லப்போகிறது!
    2 points
  12. ஒரு வியாபாரம், வேண்டத் தகுதியுள்ளோரிடமே நடத்தப்படும். இங்கு மாணவர்கள் நலிந்தவர்கள், தங்கள் தேவைகளுக்கு பெற்றோரிடத்தில் தங்கியுள்ளவர்கள், அவர்களை இலக்கு வைத்து வியாபாரம் செய்வது யார்? இதானால் அவர்களின் எதிர்பார்ப்பு என்ன? என்பது எல்லோருக்கும் புரியும். கல்வியில், பொருளாதாரத்தில், உழைப்பில், பண்பாட்டில் உயர்ந்து நின்ற சமுதாயத்தை வேரோடு சாய்க்கும் வேலை. அவர்களது நிலங்களை பறித்து,கல்வியை சிதைத்து, தொழிலை முடக்கி, பண்பாடடை சீரழித்து கையேந்த வைக்கும் சூழ்நிலை. தன் இனம் சீரழியுது அதுபற்றி கவலையில்லை, தங்க விருது வேண்டிக்கிடக்கு தலைவருக்கு!
    2 points
  13. மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன் வலையேற்றியது: RAMPRASATH | நேரம்: 8:37 AM | வகை: கதைகள், பிரபஞ்சன் "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" "ஆமாம். அப்பப்போ இஷ்டப்பட்டால், ஏதோ எனக்கு தயவு பண்ணுகிற மாதிரி கிளாசுக்கு வரும். போகும்." "உம். நீரே சொல்கிறீர் பாரும்." என்று சொல்லிவிட்டு இரண்டாள் சேர்ந்து தூக்க வேண்டிய வருகைப் பதிவு ரிஜிஸ்டரையும், இன்னும் இரண்டு மூன்று ஃபைலையும் தூக்கி என் முன் போட்டார். "பாரும். நீரே பாரும். போன ஆறு மாச காலத்திலே எண்ணிப் பன்னிரண்டே நாள் தான் ஸ்கூலுக்கு வந்திருக்கிறாள். வீட்டுக்கும் மாசம் ஒரு கடிதம் எழுதிப் போட்டுக் கொண்டுதான் இருக்கேன். ஒரு பூச்சி, புழு இப்படி எட்டிப் பார்த்து, அந்த கடுதாசிபோட்ட கம்மனாட்டி யாருன்னு கேட்டுச்சா? ஊகூம். சர்தான் போடா நீயுமாச்சு உன் கடுதாசியுமாச்சுன்னு இருக்கா அவள். சரி ஏதாச்சும் மெடிக்கல் சர்டிபிகேட் கேட்டு வாங்கிச்சேர்த்துக்கலாம்னா, வந்தால்ல தேவலாம். நம்ம டி.இ.ஓ மாதிரியில்ல ஸ்கூலுக்கு இஷ்டப்பட்டால் வருகிறாள். வந்தாலும் ஸ்டூடண்ட் மாதிரியா வர்றாள்? சே…சே…சே… என் வாயாலே அத எப்படிச் சொல்றது? ஒரு பிரஞ்சு சைக்கிள்ளே, கன்னுக்குட்டி மேலே உட்கார்ந்து வர்ற மாதிரி பாண்ட் போட்டுக் கொண்டு வர்றாள். பாண்டுங்காணும்… பாண்ட்! என்ன மாதிரி பாண்ட்டுங்கறீர்? அப்படியே 'சிக்'குன்னு பிடிச்சிக்கிட்டு, போட்டோவுக்கு சட்டம் போட்ட மாதிரி, அதது பட்பட்டுன்னு தெறிச்சுடுமோன்னு நமக்கெல்லாம் பீதியை ஏற்படுத்தற மாதிரி டிரஸ் பண்ணிட்டு வர்றாள். சட்டை போடறாளே, மேலே என்னத்துகுங்காணும் இரண்டு பட்டனை அவுத்துவிட்டுட்டு வர்றது? அது மேலே சீயான்பாம்பு மாதிரி ஒரு செயின். காத்தாடி வால் மாதிரி அது அங்கிட்டும் இங்கிட்டும் வளைஞ்சு வளைஞ்சு ஆடறது. கூட இத்தினி பசங்க படிக்கறாங்களேன்னு கொஞ்சமாச்சும் உடம்பிலே வெக்கம் வேணாம்? இந்த இழவெடுத்த ஸ்கூல்லே ஒரு யூனிபார்ம், ஒரு ஒழுங்கு, ஒரு மண்ணாங்கட்டி, ஒரு தெருப்புழுதி ஒன்றும் கிடையாது. எனக்கு தெரியுங்காணும்… நீர் அதையெல்லாம் ரசிச்சிருப்பீர்!" "சார்…" "ஓய் சும்மா இருங்காணும். நாப்பது வருஷம் இதுல குப்பை கொட்டியாச்சு. ஐ நோ ஹ்யூமன் சைக்காலஜி மிஸ்டல் டமிள்! தமிழ்சார், எனக்கு மனத்தத்துவம் தெரியும்பா. உமக்கு என்ன வயசு?" "இருபத்தொன்பது சார்!" "என் சர்வீஸே நாற்பது வருஷம்." "பாண்ட் , சண்டை போடக்கூடாதுன்னு விதி ஒன்னும் நம்ம ஸ்கூல்ல இல்லையே சார்." "அதுக்காக, அவுத்துப் போட்டுட்டும் போகலாம்னு விதி இருக்கா என்ன? வயசு பதினெட்டு ஆகுதுங்காணும் அவளிக்கு! கோட்டடிச்சு கோட்டடிச்சு இப்பத்தான் டெந்த்துக்கு வந்திருக்கிறாள். எங்க காலத்துல பதினெட்டு வயசுல இடுப்பிலே ஒண்ணு, தோள்லே ஒண்ணு இருக்கும். போதாக்குறைக்கு மாங்காயைக் கடிச்சிட்டு இருப்பாளுக. போனவாட்டி, அதான் போன மாசத்திலே ஒரு நாள் போனாப் போவுதுன்னு நம்ம மேலே இரக்கப்பட்டு ஸ்கூலுக்கு வந்தாளே அப்போ, அவள் ஒரு நாள்லே, ஆறு மணி நேரத்துக்குள்ளாறே-ஹார்ட்லி ஸிக்ஸ் அவர்ஸ் சார்- என்ன என்ன பண்ணி இருக்காள் தெரியுமா? யாரோ நாலு தடிக்கழுதைகளோட - நீங்கள்ளாம் ரொம்ப கௌரவமா சொல்லிப்பேளே பிரண்ட்ஸ் அப்படீன்னு - நாலு தடிக்கழுதைங்களோட ஸ்கூல் வாசல்லே சிரிச்சு பேசிட்டு இருந்திருக்காள். நம்ம ஹிஸ்டரி மகாதேவன் இருக்கே… அது ஒரு அசடு. நம்ம ஸ்கூல் வாசல்லே, நம்ம ஸ்டூடண்ட் இப்படி மிஸ்பிஹேவ் பண்ணறாளேன்னு அவ கிட்ட போய் "இப்படி எல்லாம் பண்ணக்கூடாது அற்புத மரி, உள்ள வான்னு கூப்பிட்டு இருக்கான். அவள் என்ன சொன்னாள் தெரியுமா? "சொல்லுங்க சார்" "உங்களுக்கு பொறாமையா இருக்கா சார்ன்னு கேட்டுட்டாள். அந்தப்பசங்க முன்னால வெச்சு மனுஷன் கண்ணாலே ஜலம் விட்டுட்டு என்கிட்டே சொல்லி அழுதார். இந்த ஸ்கூல் காம்பசுக்குள்ளே நடக்கிறதுக்குதான் நீங்க பொறுப்பு. வெளியிலே நடக்கிற விவகாரத்துக்கெல்லாம் நீங்க என்னைக் கட்டுப்படுத்த முடியாது சார்னு மூஞ்சியிலே அடிச்ச மாதிரி சொல்றாள். யாருகிட்டே? இந்த நரசிம்மன்கிட்டே.” எச்.எம்.முக்கு முகம் சிவந்து மூக்கு விடைத்தது. “இந்த அநியாயம் இத்தோடு போகலே. சாயங்காலம், பி.டி. மாஸ்டர்கிட்டே சண்டை போட்டுக்கொண்டாள். அவன் இப்படிப் பண்ணப்படாது, இப்படி வளையணும், இந்த மாதிரி கையை வச்சுக்கணும்னு அவளைத் தொட்டுச் சொல்லிக்கொடுத்திருக்கான். தொட்டவன், எசகுபிசகா எங்கேயோ தொட்டுட்டான் போலிருக்கு. இவ என்ன கேட்டிருக்கா தெரியுமா?” “என்னைத் தொட்டுப் பேசாதீங்கன்னு சொல்லியிருப்பாள்.” “மனுஷ ஜாதின்னா அப்படித்தானே சொல்லியிருக்கணும்? இவள் என்ன சொன்னாள் தெரியுமா?” எச்.எம். தலையைக் கையில் தாங்கிப் பிடித்துக் கொண்டார். அவர் முகம் வேர்த்து விட்டிருந்தது. ”சார்... உங்க பொண்டாட்டியோட நீங்க படுக்கறது இல்லையான்னு கேட்டுவிட்டாள். பாவம்! நம்ம பி.டி. பத்மநாபன் லீவு போட்டு விட்டு போய்விட்டான். முடியாதுப்பா முடியாது. நானும் நாலு பெத்தவன். இந்த ராட்சஸ ஜென்மங்களையெல்லாம் வச்சிக்கிட்டு, இரத்தக் கொதிப்பை வாங்கிக்கிட்டு அல்லாட முடியாதுப்பா. அந்தக் கழுதையைத் தொலைச்சுத் தலைமுழுகிட வேண்டியதுதான்.” “இப்போ போய் டி.சி. கொடுத்துட்டால், அவள் எஸ்.எஸ்.எல்.சி. எழுத முடியாமல் போயிடும் சார். அவள் வாழ்க்கை வீணாகப் போய்விடும்.” ”அந்தக் கழுதைக்கே அதைப் பத்திக் கவலை இல்லை. உமக்கெதுக்கு?” *** நமக்கெதுக்கு என்று என்னால் இருந்து விட முடியாது. அது என் சுபாவமும் இல்லை. அத்தோடு, அந்த மரி என்ற ஆட்டுக்குட்டி, ஒரு சின்னப்பெண். அப்படி என்ன பெரும் பாவங்களைப் பண்ணிவிட்டாள்? அப்படியேதான் இருக்கட்டுமே. அதற்காக அவளைக் கல்லெறிந்து கொல்ல நான் என்ன அப்பழுக்கற்ற யோக்கியன்? நான் சுமதியிடம் சொன்னேன். எச்.எம். மாதிரிதான் அவளும் சொன்னாள். ”உங்களுக்கெதுக்கு இந்த வம்பெல்லாம்? நீங்க சொல்றதைப் பார்த்தால், அது ரொம்ப ராங்கி டைப் மாதிரி தெரியுது. உங்களையும் தூக்கி எறிஞ்சு ஏதாச்சும் பேசிட்டால்??” என்றாள். அவளை சம்மதிக்க வைத்து, அவளையும் அழைத்துக்கொண்டு மரி வீட்டுக்கு ஒரு நாள் சாயங்காலம் போனேன். என் வீட்டுக்கு ரொம்ப தூரத்தில் இல்லை அவள் வீடு. ரயில் நிலையத்துக்கு எதிரே இருந்த வரிசை வீடுகளில், திண்ணை வைத்த, முன்பகுதி ஓடு போட்டு, பின் பகுதி ஒட்டிய பழங்காலத்து வீடு அவளுடையது. விளக்கு வைத்த நேரம். திண்ணை புழுதி படிந்து, பெருக்கி வாரப்படாமல் கிடந்தது. உள்ளே விலை மதிப்புள்ள நாற்காலிகள் சோபாக்கள் இருந்தன. ஆனாலும் எந்த ஒழுங்கும் இன்றிக் கல்யாண வீடு மாதிரி இரைந்து கிடந்தன. “மரி,” என்று நான் குரல் கொடுத்தேன். மூன்று முறை அழைத்தபிறகுதான், “யாரு?” என்று ஒரு குரல் உள்ளிருந்து வந்தது. கலைந்த தலையும், தூங்கி எழுந்த உடைச் சுருக்கங்களோடும், சட்டையும் கைலியுமாக வெளிப்பட்டாள் மரி. என்னைப் பார்த்ததில் ஒரு ஆச்சரியம், வெளிப்படையாக அவள் முகத்தில் தோன்றியது. என் மனைவியைப் பார்த்ததில் அவளுக்கு இரட்டை ஆச்சரியம் இருக்க வேண்டும். “வாங்க சார்.. வாங்க, உட்காருங்க.” என்று எங்கள் இருவரையும் பொதுவாக வரவேற்றுவிட்டு நாற்காலிகளை ஒழுங்குபடுத்தினாள். சோபாவில் நானும் சுமதியும் அமர்ந்தோம். எதிரே இருந்த ஒரு நாற்காலியில் அவள் அமரச் சொன்னதும் அமர்ந்தாள். “தூக்கத்தைக் கலைச்சுட்டேனாம்மா?” என்றேன். ”பரவாயில்லே சார்,” என்று வெட்கத்தோடு தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். முகத்தில் விழுந்த முடியை மேலே தள்ளிவிட்டுக் கொண்டாள். ”நீங்க எப்படி இங்கே..?” “சும்மாத்தான். பீச்சுக்குப் போய்க்கிட்டு இருந்தோம். வழியிலே தானே உங்க வீடு. பார்த்து ரொம்ப நாளாச்சேன்னு நுழைஞ்சிட்டோம். அழையாத விருந்தாளி. உடம்பு சரியில்லையா?” ”தைலம் வாசனை வருதா சார்? லேசாத் தலைவலி. ஏதாச்சும் சாப்பிடறீங்களா சார்?” “எல்லாம் ஆச்சு. வீட்டிலே யாரும் இல்லையா?” “வீடா சார் இது....? வீடுன்னா அப்பா, அம்மா இருக்கணும். அப்பா எப்பவோ போயிட்டார். போயிட்டாருன்னா செத்துப் போயிடலே. எங்களை விட்டு விட்டு போயிட்டார். அம்மா என்னைச் சுத்தமாக விட்டுடலை. அப்பப்போ நாங்க சந்திக்கிறோம். சமயத்திலே இரண்டு நாளுக்கு ஒரு முறை நாங்க பார்த்துக்கொண்டால் அது அதிகம். அதனால்தான் இது வீடான்னேன். எனக்கு ஏதோ லாட்ஜிலே தங்கற மாதிரி தோணுது.” எனக்குச் சங்கடமாய் இருந்தது. இரவுகளில், நசுங்கிய அலுமினியப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பிச்சைக்கு வருகிற குழந்தையைப் பார்ப்பது போல இருந்தது. ”சாப்பாடெல்லாம் எப்படியம்மா?” “பெரும்பாலும் பசி எடுக்கறப்போ, எங்க தோணுதோ அங்கே சாப்பிடுவேன். ஓட்டல்லேதான். அம்மா வீட்டிலே தங்கியிருந்தா ஏதாவது செய்வாங்க. அம்மா சமையலைக் காட்டிலும் ஓட்டலே தேவலை. நல்லாயிருக்காதுன்னு சொல்லலை. அம்மான்னு நினைச்சு சாப்பிட முடியலே. பொண்ணுன்னு நினைச்சு அவங்களும் பண்ணலை.” சுமதி என்னை முந்திக்கொண்டு கேட்டாள். ”உன் அம்மாதானே அவங்க?” “ஆமாங்க. இப்போ வேறு ஒருத்தரோட அவங்க இருக்காங்க. அவரை எனக்குப் பிடிக்கலை. என்னையும் அவருக்குப் பிடிக்கலை. சரி அவங்க வாழ்க்கையை அவங்க வாழறாங்க. என் வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டு தீர்க்கிறேன்.” ஓர் இறுக்கமான மௌனம் எங்கள் மேல் கவிந்தது. நான், சாவி கொடுக்காமல் எப்போதோ நின்று போயிருந்த கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். “மரி... ஸ்கூலுக்கு வந்தால், ஒரு மாறுதலாக இருக்குமில்லே?” “நான் யாருக்காக சார் படிக்கணும்?” “உனக்காக,” “ப்ச்!” என்றாள் அவள். இதற்கு மேல் எதுவும் பேசக்கூடாது என்று எனக்குத் தோன்றியது. ”பீச்சுக்குப் போகலாம். வாயேன்.” ”வரட்டுமா சார்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள். “வா.” “இதோ வந்துவிட்டேன் சார்,” என்று துள்ளிக் கொண்டு எழுந்தாள். உள்ளே ஓடினாள். நான் சுமதியைப் பார்த்தேன். “பாவங்க,” என்றாள் சுமதி. “யாருதான் பாவம் இல்லே? இந்தப் பெண்ணை விட்டுவிட்டு எங்கேயோ இருக்கிற அந்த அம்மா பாவம் இல்லையா? இத்தோட அப்பா பாவம் இல்லையா. எல்லோருமே ஒருவிதத்திலே பாவம்தான்.” என்றேன் நான். அப்போதுதான் பூத்த ஒரு பூ மாதிரி, மழையில் நனைந்த சாலை ஓரத்து மரம் மாதிரி, ஓடைக் கூழாங்கல் மாதிரி, வெளிப்பட்டாள் மரி. பேண்ட்தான் போட்டிருந்தாள். சட்டையை டக் பண்ணியிருந்தாள். அழகாகவே இருந்தது அந்த உடை. உடம்புக்குச் சௌகரியமானதும், பொருத்தமானதும்தானே உடை. “ஸ்மார்ட்!” என்றேன். “தேங்க்யூ சார்,” என்றாள், பரவசமான சிரிப்பில். நான் நடுவிலும், இரண்டு புறமும் இருவருமாக, நாங்கள் நடந்தே கொஞ்ச தூரத்தில் இருந்த கடற்கரையை அடைந்தோம். கடற்கரை சந்தோஷமாக இருந்தது. ஓடிப் பிடித்துக் கல் குதிரைகளின் மேல் உட்கார்ந்து விளையாடும் குழந்தைகள். குழந்தைகள் விளையாட்டைப் பார்த்து ரசிக்கும் பெற்றோர்கள். உலகத்துக்கு ஜீவன் சேர்க்கும் யுவர்களும் யுவதிகளும். கடலைகள், கடல் மணலில் சுகமாக வறுபட்டன. குழந்தைகள் வாழ்வில் புதிய வர்ணங்களைச் சேர்த்துப் பலூன்கள் பறந்தன. ஸ்டூல் போட்டுப் பட்டாணி சுண்டல் விற்கும் ஐயரிடம் வாங்கிச் சாப்பிட்டோம். “கார வடை வாங்கிக் கொடுங்க சார்,” என்றாள் மரி, கொடுத்தேன். தின்றாள். ”மத்தியானம் சாப்பிடல்லே சார். சோம்பேறித்தனமாக இருந்துச்சு. தூங்கிட்டேன்.” “ராத்திரி எங்களோடுதான் நீ சாப்பிடறே,” என்றாள் சுமதி. “இருக்கட்டுங்க்கா.” ”என்ன இருக்கட்டும். நீ வர்றே.” வரும்போது, சுமதியின் விரல்களில் தன் விரல்களைக் கோத்துக்கொண்டு, சற்றுப்பின் தங்கி மரி பேசிக் கொண்டு வந்தாள். நான் சற்று முன் நடந்தேன். சாம்பாரும் கத்தரிக்காய் கறியும்தான். மத்தியானம் வறுத்த நெத்திலிக் கருவாடு இருந்தது. “தூள்க்கா.... தூள்! இந்தச் சாம்பாரும் நெத்திலிக் கருவாடும் பயங்கரமான காம்பினேஷங்க்கா,” என்றாள் மரி. ***** மரி இப்போதெல்லாம் காலையும் மாலையும் தவறாமல் எங்கள் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தாள். காலை இட்டிலி எங்கள் வீட்டில்தான். வருஷம் 365 நாட்களும் எங்கள் வீட்டில் இட்டிலி அல்லது தோசைதான். “ஆட்டுக்கல்லை ஒளித்து வைத்து விட்டால், சுமதிக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும். மரி,” என்பேன். மரி விழுந்து புரண்டு சிரிப்பாள். சாயங்காலங்களில் எங்கள் வீட்டில்தான் அவள் வாழ்க்கை கழிந்தது. பேண்ட் போட்ட அந்தப்பெண், சிரமப்பட்டுச் சம்மணம் போட்டு உட்கார்ந்து சுமதிக்கு வெங்காயம் நறுக்கித் தருவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும். “ஏம்மா... சைக்கிள்ளே ஊரைச் சுற்றுகிற பெண் நீ. இங்கே இவளுக்கு வெங்காயம் நறுக்கித் தர்றியோ?” என்றேன். “இதுதான் சார் த்ரில்லிங்கா இருக்கு. கண்ணிலே நீர் சுரக்கச் சுரக்க வெங்காயம் நறுக்கிறது பயங்கரமான எக்ஸ்பீரியன்ஸ்.” என்றாள். ஐயோ இந்தப் பயங்கரமே! “சார், ஒண்ணு சொல்லட்டுமா?” “ஊகூம். ரெண்டு மூணு சொல்லு.” “சீரியஸாகக் கேட்கிறேன், சார். நான் இங்கே வந்து போறதிலே உங்களுக்குத் தொந்தரவு இல்லையே சார்?” “சத்தியமாகக் கிடையாது.” கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு அவள் சொன்னாள். “ஏன் சார் - கெட்டுப் போனவள்னு எல்லோரும் சொல்கிற என்னை எதுக்கு உங்க வீட்டிலே சேர்த்து, சோறும் போடறீங்க?” சிரிப்புத்தான் வந்தது. “பைத்தியமே! உலகத்திலே யார் தான் கெட்டுப் போனவங்க? யாராலுமே கெட முடியாது, தெரியுமா? மனசுக்குள்ளே நீ கெட்டுப் போனவள்னு நினைக்கிறியாக்கும்? அதை விட்டுடு. நீயும் கெட்டவள் இல்லை, உங்க அம்மாவும், அப்பாவும் யாருமே கெட்டவங்க இல்லே.” அவள் சொனாள்: “எங்க அம்மாவைப் பழி தீர்க்கணும்னுதான் அப்படியெல்லாம் நடந்துக்கறேன் சார்.” “எனக்கும் தெரியும்.” என்றேன். பத்து நாள் இருக்குமோ? இருக்கும். ஒரு நாள் மரி என்னிடம் கேட்டாள். ”சார்.. நான் ஸ்கூலுக்கு வர்றதே இல்லைன்னு நீங்க ஏன் கேட்கவில்லை?” நான் அவள் முகத்தைப் பார்த்தேன். இரண்டு மணிகள் உருண்டு விழத்தயாராய் இருந்தன. அவள் கண்களில். “என்னை நீங்க கேட்டிருக்கணும் சார். ஏண்டி ஸ்கூலுக்கு வரலைன்னு என்னை அறைஞ்சு கேட்கணும் சார். அப்படி யாரும் என்னைக் கேட்க இல்லேங்கறதுனாலதானே நான் இப்படி விட்டேத்தியா இருக்கேன்? என் மேல் இப்படி யாரும் அன்பு செலுத்தினது இல்லே சார். அன்பு செலுத்தறவங்களுக்குத்தானே அதட்டிக் கேக்கவும் அதிகாரம் இருக்கு?” “உனக்கே அது தோணனும்னுதானே நான் காத்திருக்கேன். அதனாலே என்ன? ஒன்றும் முழுகிப் போய்விடவில்லை. இன்னைக்குப்புதுசா ஆரம்பிப்போம். இன்னைக்குத்தான் டென்த் கிளாஸ்லே நீ சேர்ந்தன்னு வச்சுக்க. நாளையிலேர்ந்து நாம் ஸ்கூலுக்குப் போறோம்.” என்றேன். மரி, முகத்தை மூடிக் கொண்டு விசும்பி விசும்பி அழுதாள். ****** தட்டச்சு : சென்ஷி https://azhiyasudargal.blogspot.com/2010/09/blog-post_04.html
    1 point
  14. அவரை நையப்புடைக்கப்பட்டதை வீடியோ எடிக்கவில்லையா ? அழியாத கோலங்கள் படம் பார்த்த நினைவு வருகிறதோ 😉
    1 point
  15. ஆக.....ரஷ்ய-உக்ரேன் சண்டைக்கான காரணம் கந்தையருக்கு இன்னும் தெரியேல்லை எண்டது உறுதியாகி விட்டது.🤣😂🤪
    1 point
  16. ஒரு வகையில் பார்த்தால் மனோ கணோசன் அதிகம் சத்தம் போடுகிறார் ஆனால் செயல்பாடு குறைவு ஒரு 1௦௦௦ சம்பளம் அதெல்லாம் கண்முன் வந்து போகுது தமிழ்நாட்டு அரசியல் போல் கூப்பாடு போடுகிறார் தீர்வு இல்லை நம்மடையல் தீபாவளிக்கு மாத்திரம் நித்திரை முறிக்கும் பனிக்கரடி அடுத்தவர் சும் கூட்டம் வடகிழக்கில் போதைவஸ்த்து கேசில் மாட்டுபடுபவர்களை வெளியில் எடுத்து விட கோர்ட் படியேறி வலு பிசி.
    1 point
  17. பரிசோதனை என்ற பெயரில் கொஞ்ச பேர் நல்லா பணம் பண்ண போறாங்க.
    1 point
  18. குரங்கின் கையில பூமாலை கிடைத்து போல ஒரு கு...க்கு போன் கிடைத்துள்ளது. எம் காலத்தில் பெண்கள் குளிக்கும் போது அண்ணா தம்பி மார் ...தண்ணீர் அள்ள வ்ரமாடார்கள்.
    1 point
  19. போட்டி 1: ஞாயிறு நவ 20 7pm: குழு A: கட்டார் எதிர் எக்குவடோர் (Al Bayt Stadium, Al Khor) QAT ECU DRAW ECU போட்டி 2: திங்கள் நவ 21 1pm: குழு B: இங்கிலாந்து எதிர் ஈரான் (Khalifa International Stadium, Al Rayyan) ENG IRN DRAW ENG போட்டி 3: திங்கள் நவ 21 4pm: குழு A: செனிகல் எதிர் நெதர்லாந்து (Al Thumama Stadium, Al Khor) SEN NED DRAW NED போட்டி 4: திங்கள் நவ 21 7pm: குழு B: ஐக்கிய அமெரிக்கா எதிர் வேல்ஸ் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) USA WAL DRAW USA போட்டி 5: செவ்வாய் நவ 22 10am: குழு 😄 ஆர்ஜென்டினா எதிர் சவுதி அரேபியா (Lusail Iconic Stadium, Lusail) ARG KSA DRAW ARG போட்டி 6: செவ்வாய் நவ 22 1pm: குழு 😧 டென்மார்க் எதிர் துனிசியா (Education City Stadium, Al Rayyan) DEN TUN DRAW DEN போட்டி 7: செவ்வாய் நவ 22 4pm: குழு 😄 மெக்ஸிக்கோ எதிர் போலந்து (Stadium 974, Doha) MEX POL DRAW MEX போட்டி 8: செவ்வாய் நவ 22 7pm: குழு 😧 பிரான்ஸ் எதிர் அவுஸ்திரேலியா (Al Janoub Stadium, Al Wakrah) FRA AUS DRAW FRA போட்டி 9: புதன் நவ 23 10am: குழு F: மொரோக்கோ எதிர் குரோசியா (Al Bayt Stadium, Al Khor) MAR CRO DRAW CRO போட்டி 10: புதன் நவ 23 1pm: குழு E: ஜேர்மனி எதிர் ஜப்பான் (Khalifa International Stadium, Al Rayyan) GER JPN DRAW GER போட்டி 11: புதன் நவ 23 4pm: குழு E: ஸ்பெயின் எதிர் கோஸ்ட்டா ரிக்கா (Al Thumama Stadium, Al Khor) ESP CRC DRAW ESP போட்டி 12: புதன் நவ 23 7pm: குழு F: பெல்ஜியம் எதிர் கனடா (Ahmed bin Ali Stadium, Al Rayyan) BEL CAN DRAW BEL போட்டி 13: வியாழன் நவ 24 10am: குழு G: சுவிட்சர்லாந்து எதிர் கமரூன் (Al Janoub Stadium, Al Wakrah) SUI CMR DRAW SUI போட்டி 14: வியாழன் நவ 24 1pm: குழு H: உருகுவே எதிர் தென்கொரியா (Education City Stadium, Al Rayyan) URU KOR DRAW URU போட்டி 15: வியாழன் நவ 24 4pm: குழு H: போர்த்துகல் எதிர் கானா (Stadium 974, Doha) POR GHA DRAW POR போட்டி 16: வியாழன் நவ 24 7pm: குழு G: பிரேசில் எதிர் சேர்பியா (Lusail Iconic Stadium, Lusail) BRA SRB DRAW BRA போட்டி 17: வெள்ளி நவ 25 10am: குழு B: வேல்ஸ் எதிர் ஈரான் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) WAL IRN DRAW IRN போட்டி 18: வெள்ளி நவ 25 1pm: குழு A: கட்டார் எதிர் செனிகல் (Al Thumama Stadium, Al Khor) QAT SEN DRAW SEN போட்டி 19: வெள்ளி நவ 25 4pm: குழு A: நெதர்லாந்து எதிர் எக்குவடோர் (Khalifa International Stadium, Al Rayyan) NED ECU DRAW NED போட்டி 20: வெள்ளி நவ 25 7pm: குழு B: இங்கிலாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா (Al Bayt Stadium, Al Khor) ENG USA DRAW ENG போட்டி 21: சனி நவ 26 10am: குழு 😄 துனிசியா எதிர் அவுஸ்திரேலியா (Al Janoub Stadium, Al Wakrah) TUN AUS DRAW TUN போட்டி 22: சனி நவ 26 1pm: குழு 😄 போலந்து எதிர் சவுதி அரேபியா (Education City Stadium, Al Rayyan) POL KSA DRAW POL போட்டி 23: சனி நவ 26 4pm: குழு 😧 பிரான்ஸ் எதிர் டென்மார்க் (Stadium 974, Doha) FRA DEN DRAW FRA போட்டி 24: சனி நவ 26 7pm: குழு 😄 ஆர்ஜென்டினா எதிர் மெக்ஸிக்கோ (Lusail Iconic Stadium, Lusail) ARG MEX DRAW ARG போட்டி 25: ஞாயிறு நவ 27 10am: குழு E: ஜப்பான் எதிர் கோஸ்ட்டா ரிக்கா (Ahmed bin Ali Stadium, Al Rayyan) JPN CRC DRAW JPN போட்டி 26: ஞாயிறு நவ 27 1pm: குழு F: பெல்ஜியம் எதிர் மொரோக்கோ (Al Thumama Stadium, Al Khor) BEL MAR DRAW BEL போட்டி 27: ஞாயிறு நவ 27 4pm: குழு F: குரோசியா எதிர் கனடா (Khalifa International Stadium, Al Rayyan) CRO CAN DRAW CRO போட்டி 28: ஞாயிறு நவ 27 7pm: குழு E: ஸ்பெயின் எதிர் ஜேர்மனி (Al Bayt Stadium, Al Khor) ESP GER DRAW ESP போட்டி 29: திங்கள் நவ 28 10am: குழு G: கமரூன் எதிர் சேர்பியா (Al Janoub Stadium, Al Wakrah) CMR SRB DRAW SRB போட்டி 30: திங்கள் நவ 28 1pm: குழு G: தென்கொரியா எதிர் கானா (Education City Stadium, Al Rayyan) KOR GHA DRAW KOR போட்டி 31: திங்கள் நவ 28 4pm: குழு H: பிரேசில் எதிர் சுவிட்சர்லாந்து (Stadium 974, Doha) BRA SUI DRAW BRA போட்டி 32: திங்கள் நவ 28 7pm: குழு H: போர்த்துகல் எதிர் உருகுவே (Lusail Iconic Stadium, Lusail) POR URU DRAW POR போட்டி 33: செவ்வாய் நவ 29 3pm: குழு A: நெதர்லாந்து எதிர் கட்டார் (Al Bayt Stadium, Al Khor) NED QAT DRAW NED போட்டி 34: செவ்வாய் நவ 29 3pm: குழு A: எக்குவடோர் எதிர் செனிகல் (Khalifa International Stadium, Al Rayyan) ECU SEN DRAW SEN போட்டி 35: செவ்வாய் நவ 29 7pm: குழு B: வேல்ஸ் எதிர் இங்கிலாந்து (Ahmed bin Ali Stadium, Al Rayyan) WAL ENG DRAW ENG போட்டி 36: செவ்வாய் நவ 29 7pm: குழு B: ஈரான் எதிர் ஐக்கிய அமெரிக்கா (Al Thumama Stadium, Al Khor) IRN USA DRAW USA போட்டி 37: புதன் நவ 30 3pm: குழு 😧 அவுஸ்திரேலியா எதிர் டென்மார்க் (Al Janoub Stadium, Al Wakrah) AUS DEN DRAW DEN போட்டி 38: புதன் நவ 30: 3pm குழு 😧 துனிசியா எதிர் பிரான்ஸ் (Education City Stadium, Al Rayyan) TUN FRA DRAW FRA போட்டி 39: புதன் நவ 30 7pm: குழு 😄 போலந்து எதிர் ஆர்ஜென்டினா (Stadium 974, Doha) POL ARG DRAW ARG போட்டி 40: புதன் நவ 30 7pm: குழு 😄 சவுதி அரேபியா எதிர் மெக்ஸிக்கோ (Lusail Iconic Stadium, Lusail) KSA MEX DRAW MEX போட்டி 41: வியாழன் டிச 1 3pm: குழு F: குரோசியா எதிர் பெல்ஜியம் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) CRO BEL DRAW BEL போட்டி 42: வியாழன் டிச 1 3pm: குழு F: கனடா எதிர் மொரோக்கோ (Al Thumama Stadium, Al Khor) CAN MAR DRAW MAR போட்டி 43: வியாழன் டிச 1 7pm: குழு E: கோஸ்ட்டா ரிக்கா எதிர் ஜேர்மனி (Al Bayt Stadium, Al Khor) CRC GER DRAW GER போட்டி 44: வியாழன் டிச 1 7pm: குழு E: ஜப்பான் எதிர் ஸ்பெயின் (Khalifa International Stadium, Al Rayyan) JPN ESP DRAW ESP போட்டி 45: வெள்ளி, டிச 2 3pm: குழு G: தென்கொரியா எதிர் போர்த்துகல் (Education City Stadium, Al Rayyan) KOR POR DRAW POR போட்டி 46: வெள்ளி, டிச 2 3pm: குழு G: கானா எதிர் உருகுவே (Al Janoub Stadium, Al Wakrah) GHA URU DRAW URU போட்டி 47: வெள்ளி, டிச 2 7pm: குழு H: சேர்பியா எதிர் சுவிட்சர்லாந்து (Stadium 974, Doha) SRB SUI DRAW SUI போட்டி 48: வெள்ளி, டிச 2 7pm: குழு H: கமரூன் எதிர் பிரேசில் (Lusail Iconic Stadium, Lusail) CMR BRA DRAW BRA குழு A: 49) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் QAT Select QAT Select ECU Select ECU Select SEN Select SEN 2 NED Select NED 1 50) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #A1 - ? (2 புள்ளிகள்) NED #A2 - ? (1 புள்ளிகள்) SEN குழு B: 51) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் ENG Select ENG 1 IRN Select IRN Select USA Select USA 2 WAL Select WAL Select 52) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 51) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #B1 - ? (2 புள்ளிகள்) ENG #B2 - ? (1 புள்ளிகள்) USA குழு 😄 53) குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் ARG Select ARG 1 KSA Select KSA Select MEX Select MEX 2 POL Select POL Select 54) குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 53) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #C1 - ? (2 புள்ளிகள்) ARG #C2 - ? (1 புள்ளிகள்) MEX குழு 😧 55) குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் FRA Select FRA 1 AUS Select AUS Select DEN Select DEN 2 TUN Select TUN Select 56) குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 55) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #D1 - ? (2 புள்ளிகள்) FRA #D2 - ? (1 புள்ளிகள்) DEN குழு E: 57) குழு E போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் ESP Select ESP 1 CRC Select CRC Select GER Select GER 2 JPN Select JPN Select 58) குழு E போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 57) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #E1 - ? (2 புள்ளிகள்) ESP #E2 - ? (1 புள்ளிகள்) GER குழு F: 59) குழு F போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் BEL Select BEL 1 CAN Select CAN Select MAR Select MAR Select CRO Select CRO 2 60) குழு F போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 59) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #F1 - ? (2 புள்ளிகள்) BEL #F2 - ? (1 புள்ளிகள்) CRO குழு G: 61) குழு G போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் BRA Select BRA 1 SRB Select SRB Select SUI Select SUI 2 CMR Select CMR Select 62) குழு G போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 61) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #G1 - ? (2 புள்ளிகள்) BRA #G2 - ? (1 புள்ளிகள்) SUI குழு H: 63) குழு H போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் POR Select POR 1 GHA Select GHA Select URU Select URU 2 KOR Select KOR Select 64) குழு H போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 63) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். #H1 - ? (2 புள்ளிகள்) POR #H2 - ? (1 புள்ளிகள்) URU சுற்று 16 போட்டிகள்: சுற்று 16 போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும். சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளி வீதம் வழங்கப்படும் 65) போட்டி 49: சனி டிச 3 3pm: குழு A முதலாம் இடம் எதிர் குழு B இரண்டாம் இடம் (Khalifa International Stadium, Al Rayyan) NED USA NED 66) போட்டி 50: சனி டிச 3 7pm: குழு C முதலாம் இடம் எதிர் குழு D இரண்டாம் இடம் (Ahmed bin Ali Stadium, Al Rayyan) ARG DEN ARG 67) போட்டி 52: ஞாயிறு டிச 4 3pm: குழு D முதலாம் இடம் எதிர் குழு C இரண்டாம் இடம் (Al Thumama Stadium, Doha) FRA MEX FRA 68) போட்டி 51: ஞாயிறு டிச 4 7pm: குழு B முதலாம் இடம் எதிர் குழு A இரண்டாம் இடம் (Al Bayt Stadium, Al Khor) ENG SEN ENG 69) போட்டி 53: திங்கள் டிச 5 3pm: குழு E முதலாம் இடம் எதிர் குழு F இரண்டாம் இடம் (Al Janoub Stadium, Al Wakrah) ESP CRO ESP 70) போட்டி 54: திங்கள் டிச 5 7pm: குழு G முதலாம் இடம் எதிர் குழு H இரண்டாம் இடம் (Stadium 974, Doha) BRA URU BRA 71) போட்டி 55: செவ்வாய் டிச 6 3pm: குழு F முதலாம் இடம் எதிர் குழு E இரண்டாம் இடம் (Education City Stadium, Al Rayyan) BEL GER BEL 72) போட்டி 56: செவ்வாய் டிச 6 7pm: குழு H முதலாம் இடம் எதிர் குழு G இரண்டாம் இடம் (Lusail Iconic Stadium, Lusail) POR SUI SUI கால் இறுதிப் போட்டிகள்: கால் இறுதிப் போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும். சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளி வீதம் வழங்கப்படும் 73) போட்டி 58: வெள்ளி டிச 9 3pm: போட்டி 53 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 54 இல் வெல்லும் நாடு (Education City Stadium, Al Rayyan) ESP BRA BRA 74) போட்டி 57: வெள்ளி டிச 9 7pm: போட்டி 49 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 50 இல் வெல்லும் நாடு (Lusail Iconic Stadium, Lusail) NED ARG ARG 75) போட்டி 60: சனி டிச 10 3pm: போட்டி 55 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 56 இல் வெல்லும் நாடு (Al Thumama Stadium, Doha) BEL SUI BEL 76) போட்டி 59: சனி டிச 10 7pm: போட்டி 51 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 52 இல் வெல்லும் நாடு (Al Bayt Stadium, Al Khor) ENG FRA FRA அரை இறுதிப் போட்டிகள்: அரை இறுதிப் போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும். சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 4 புள்ளி வீதம் வழங்கப்படும் 77) போட்டி 61: செவ்வாய் டிச 13 7pm: போட்டி 57 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 58 இல் வெல்லும் நாடு (Lusail Iconic Stadium, Lusail) ARG BRA ARG BRA 78) போட்டி 62: செவ்வாய் டிச 14 7pm: போட்டி 59 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 60 இல் வெல்லும் நாடு(Al Bayt Stadium, Al Khor) FRA BEL FRA BEL மூன்றாமிடப் போட்டி: மூன்றாமிடப் போட்டியில் வெல்லும் நாட்டைக் குறிப்பிட வேண்டும். சரியான பதிலுக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும் 79) போட்டி 63: சனி டிச 17 3pm: மூன்றாமிடப் போட்டியில் வெல்லும் நாடு எது? போட்டி 61 இல் தோற்கும் நாடு எதிர் போட்டி 62 இல் தோற்கும் நாடு (Khalifa International Stadium, Al Rayyan) ARG FRA ARG இறுதிப் போட்டி: உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி 2022 இறுதிப் போட்டியில் வெல்லும் நாட்டைக் குறிப்பிட வேண்டும். சரியான பதிலுக்கு 6 புள்ளிகள் வழங்கப்படும் 80) போட்டி 64: ஞாயிறு டிச 18 3pm: உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி 2022 இறுதிப் போட்டியில் வெல்லும் நாடு எது? போட்டி 61 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 62 இல் வெல்லும் நாடு(Lusail Iconic Stadium, Lusail) BRA BEL BRA உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டியில் சாதனை படைக்கும் நாடுகள்/வீரர்கள்: 81) அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Lionel Messi 82) அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்) ARG 83) போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Kylian Mbappe 84) போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்) FRA 85) போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Cristiano Ronaldo 86) போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்) POR 87) போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Alisson 88) போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்) BRA கிரிக்கெட் போட்டியின் துணிவில் இதில குதிச்சிருக்கன் அடிபடாம பாத்துக்கொள்ளுங்க!
    1 point
  20. நான் ஊரிலை இருக்கேக்கையே கோயில் சங்கு ஊதுற பிரச்சனையிலை இருட்டடி போட்டவங்கள். அதுவும் இப்ப வெளியிலை இருந்திட்டு கோயில் நிர்வாகத்திலை தலையிட சும்மா விடுவாங்களே? 🤣 அதுதானே எனக்கென்ன விசரே? 🤣 முந்தினய மாதிரி இனி ஓடவும் ஏலாது
    1 point
  21. அமெரிக்கா எண்டால் "அரிச்சந்திரன் பூமி" எண்ட அர்த்தம் கண்டியளோ ஒருதடவை சொன்னா நுhறு தடவை சொன்ன மாதிரி.
    1 point
  22. இது சாத்தயமாவதற்கு, மத்திய அரசின் நடுநிலைமையே காரணம். போனமாசம் தீபாவளிக்கு, இந்தியர்களை அதிகம் கொண்ட பிராம்டன்பகுதியில் பட்டாசு வெடிகள் காரணமாக புகை சூழலை மாசுபடுத்தும், கவனமா இருங்கள் என்று அரச சூழலியல் திணைக்களம் சொல்ல, அது சரி இந்த அறிவிப்பு ஏன் கனடா தினத்திலோ, கடந்தாண்டு பாண்ட் பயர் தினத்திலோ மிக அதிக பட்டாசு வெடிக்கும் நிலையில் வரவில்லை என்று எதிர்ப்பு கிளம்ப, உடனடியாக மன்னிப்பை கோரியது சம்பந்தப்பட்ட திணைக்களம்.
    1 point
  23. புத்துக்குள்ளால பாம்பு வந்த மாதிரி ஒவ்வொருவராக வருவார்கள். கந்தையர் இந்த போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன். போட்டி விதிமுறைகள் வாசித்து பார்தீர்களா.?. கடைசியா பங்கேற்பவர்கள். ஒரே புள்ளிகள் ஒரே நேரத்தில் பலருக்கு வருமெனில். பட்டியலில் கடைசி இடம்பெறுவார்கள். ...எனக்கு தெரியும் நீங்கள் எப்போதும் கடைசியா வருவீர்கள். என்று கந்தையர் இப்பவே அந்தாளை குழப்பியடித்து பிரசரை ஏத்தி விட்டுடாதேங்கோ.
    1 point
  24. கபிதனின் முன்னோர்கள் விதைத்து விட்டுச் சென்ற அனைத்து பாவங்களும் கஞ்சாவாக இன்று விளைந்துள்ளது
    1 point
  25. இரசாயன உரங்களை அள்ளி வழங்கி விவசாயியை சோம்பேறியாக்கி, கடைசியா விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்கள் வாங்கி அரிசிக்கு அவங்கள் சொல்வது தான் விலையாக இருக்கும்.
    1 point
  26. //ஆகஸ்ட் 23, 2022 செவ்வாய் அன்று, சுமார் மதியம் 2:00 மணியளவில், மிசிசாகா நகரின் டெர்ரி ரோடு வெஸ்ட் மற்றும் மெக்லாலின் ரோடு பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் கொள்ளையடிக்கப்பட்டது. சந்தேக நபர் அந்த நபரை அணுகி பணம் கேட்டு கையால் எழுதப்பட்ட குறிப்பொன்றை வழங்கினார். // துண்டுச் சீட்டில்... பணம் வேணும் என்று வங்கி அதிகாரியிடம் கேட்டுள்ளாராம். 😂 இதே போல ஒரு நகைச்சுவை வடிவேலு 👆 படத்தில் 👆 வந்துள்ளது. 🤣 அந்தப் படத்தை, வங்கியில் கொள்ளை அடித்தவர் பார்த்துள்ளார் போலுள்ளது. 😁
    1 point
  27. இப்பவே உக்ரேனை... யாழ்.களத்திலும், உலக அரங்கிலும் கைவிட்டு விட்டார்கள். 2023´ம் ஆண்டு உக்ரேனுக்கு பல சம்பவங்கள் நிகழ இருக்கு, கடைசியாய்... செலென்ஸ்கி, மாண்புமிகு புட்டின் அவர்களின் காலைப் பிடித்து, கெஞ்சி கதறப் போகிறார். 🤣
    1 point
  28. 1 point
  29. இந்தியாவை வீட்டை அனுப்பினால் ரொம்ப சந்தோசம்.🙂
    1 point
  30. மிக பிந்திவிட்டது. தவறு முதலே திருத்தப்பட்டிருக்க வேண்டும். பெரிய கைகளுக்கு கட்டார் கையூட்டு கொடுத்திருக்கலாம்.
    1 point
  31. நியூசிலாந்தை வீட்டை அனுப்ப போகிறார்கள்.
    1 point
  32. ""அதேவேளை கனேடிய வர்த்தகப்பிரமுகர்கள் குழுவின் சார்பில் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ரேச்சல் தோமஸ், கனடா - இலங்கை வர்த்தகக்கூட்டிணைவின் தலைவர் குலா செல்லத்துரை, கனடா - இலங்கை வர்த்தகக்கூட்டிணைவின் பணிப்பாளர் கணேசன் சுகுமார் மற்றும் கனடா - இலங்கை வர்த்தகக்கூட்டிணைவின் இலங்கைக்கான நிறைவேற்றுப்பணிப்பாளர் இளங்கோ ரட்ணசபாபதி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்."" 🤣 இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னரும் இப்படியான சுற்றுலா ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள். அந்த சுற்றுலாவிற்குப் போனவர்கள் சிங்களத்தின் விருந்தோம்பலில் மூழ்கி திளைத்து வந்தது மட்டும்தான் மிச்சம். அதன் பின்னர் அங்கு எந்தவிதமான முதலீட்டையும் செய்ததாக யான் அறியேன். இதுவும் முன்னர் போன்ற சுற்றுலா என்பதுதான் என் யூகம். 😀
    1 point
  33. அவர் என்ன சொன்னார் என்பது பெரிதல்ல, அவர் சொன்னபடியால் பிழை, அதையே இவர்கள் சொன்னால் சரி. ஆனால் காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லையே? அவர்கள் பிள்ளைகளின் கல்வி, பொருளாதாரம் இதனால் பாதிப்படைவது இல்லையே, பாதிக்கப்படுவது எல்லாம் ஏழைகளின், அவர்களுக்கு வாழ்வு கொடுத்தவர்களின் பிள்ளைகளே.
    1 point
  34. இதைத்தானே ஆரம்பத்தில் முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரனும் தெரிவித்திருந்தார். அப்போ அவரை ஏளனம் செய்தவர்கள், இப்போ அதையே தூக்கிக்கொண்டு வருகிறார்கள்.
    1 point
  35. யாழ் களத்தில் கால்பந்தாட்ட ரசிகர்கள் அதிகம் இல்லையா?🤔 யாழ்களப் போட்டியில் கலந்து கொள்ள இன்னும் 10 நாள் மட்டும்தான் இருக்கின்றது!
    1 point
  36. கடவுளே இந்த கனேடிய அங்கிள்களிடம் இருந்து பொண்ணுங்களை காப்பாத்துப்பா Prashanthan Navaratnam இது அங்கிள் இல்ல தாத்தா Uthayan Soma எல்லாம் அந்த பிடிபட்ட Sri Lankan cricketer சொல்லி கொடுத்தது அண்ணே Prashanthan Navaratnam சிங்கத்துக்கு அவுஸ்ரேலியாவில பசிக்குது.. கனடாவில இருந்து போனது செத்தகிளியா இருக்குமோ… Jeyakanthan Kandasamy தமிழன் ஆக்டிவா இருக்கிறான் என்று சந்தோசப்படுங்கோ. வல்லவரையன் கி.ச யாழ்ப்பாணம்
    1 point
  37. இலங்கை கிரிக்கெட் வாரியம்: சிதைந்த அமைப்பு.
    1 point
  38. இதுபோன்று துணிந்து எப்படியெல்லாம் செய்திகளை உலவவிடுகிறார்கள் என்பதற்காக இணைத்துள்ளேன். எச்சரிக்கையோடு பார்க்கவும். நன்றி - யூரூப்
    1 point
  39. கை பேசி பிரச்சனை என்றால் கால் பேசியாவது போட்டியில் கலந்து கொள்ளவும் உதவிக்கு யாம் இருக்கப் பயம் ஏன் 0049 மிகுதி தரமாட்டேன் 😂😅
    1 point
  40. இவர் சொல்வது சரிதான். நான் கனடாவில் இருந்த போது விளங்கிக்கொண்டது இது. மார்கம் பகுதியில் சீனர் வெற்றி. தோற்ற தமிழர் இடையே வித்தியாசம் சுமார் இருபத்தொன்பது வாக்குக்கள். போட்டியிட்டவர் ஒரே ஒரு சீனர். போட்டியிட்ட தமிழர்கள் நால்வர். ஆக ஆறாயிரத்து சொச்ச தமிழர் வாக்குகளை பிரிக்க வைத்து, இரண்டாயிரத்து சொச்ச வாக்குகளுடன் சீனர் வென்று விட்டார். இதில் போட்டியிட்டதமிழர்களில் இருவர் தமிழே ஒழுங்கா கதைக்க முடியாதவர்கள். இவர்களை போட்டியிட வைத்தவர்கள் யார், பணம் கொடுத்தது யார் என்ற கேள்விக்கே கனடிய பிரதமர் பதில் அளித்துள்ளார். அதே வேளை தமிழர் மத்தியில், இனிமேல் வெல்லக்கூடிய தகுதி உள்ள ஒருவரை மட்டுமே ஒரு தொகுதியில் நிற்க வைத்து அவருக்கு மட்டுமே வாக்களிக்க கோர வேண்டும் என்ற படிப்பினை உருவாகி உள்ளது.
    1 point
  41. சுவி எனக்கு மிகவும் பிடித்த பாட்டு. அத்துடன் 84இல் திருமணமாகி மீசாலைக்கு எமது நெருங்கிய உறவினர் வீட்டுக்கு போய் அன்று இரவு அங்கேயே தங்குவதென்று முடிவெடுத்து மூன்றாம் பிறை படத்தை டெக் மூலம் பார்த்துக் கொண்டிருந்தோம்.இந்த பாட்டு போய்க் கொண்டிருக்கும் போது சாவகச்சேரி பொலிஸ்நிலையம் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக யாரோ வந்து சொல்ல கொடிகாமத்திலிருந்து ஆமியும் வந்து கொண்டிருப்பதாக சொன்னார்கள். மண்டுவில் அம்மன் கோவிலடியில் உள்ள இன்னொரு உறவினர் வீட்டில் அன்றிரவு தங்கினோம். அன்றிலிருந்து இந்த பாட்டு எப்ப கேட்டாலும் அந்த ஞாபகம் தான் வரும். இணைப்புக்கு நன்றி.
    1 point
  42. முற்காலத்தில் இருந்து சிறு தெய்வ வணக்கம் இருந்து வந்தது என்பதிற்காக அது தான் நல்லது மூட நம்பிக்கை இல்லாதது, பெரிய கடவுளை வணங்கும் மதங்கள் தான் கெட்டது என்று பொய் சொல்ல மாட்டேன். முற்காலத்தில் இருந்து சாதி வேற்றுமைகள் ஏற்ற தாழ்வுகள் பார்த்துவருகின்றது எமது பாரம்பரிய முறை அதனால் சாதி முறை நல்லது என்றும் சொல்லலாம் 😒
    1 point
  43. சிங்கள தேசங்களில் அதிவேக நெடுஞ்சாலைகள் அமைத்துள்ளார்கள்.அனேகமானவை வெறிச்சோடியே காணப்பட்டன. வடக்கிற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வீதியாக இருந்தும் இன்னமும் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படவில்லை. இதன் உள்நோக்கங்கள் இன்னமும் புரியவில்லை. போர் முடிந்தவுடன் தமிழர் தாயகங்களுக்காக கொடுக்கப்பட்ட நிதிகளிலிருந்து சிங்கள பிரதேசங்களை அபிவிருத்தி செய்துள்ளார்கள். வடக்கிற்கு என்றெரு நெடுஞ்சாலை இருந்தால் இப்படி சிறிய வீதிகளில் வாகனங்களை நிற்பாட்டி கைத்திருப்பது போல நெடுஞ்சாலைகளில் நிற்பாட்டி வைக்க மாட்டார்கள். கனரக வாகனங்கள் சாதாரண வீதியிலேயே பயணிக்கலாம். தூர தேசங்கள் போகிற வாகனங்களும் சிறிய வீதியில் அடித்து பிடித்து ஓட தேவையில்லை. பொலிசாருக்கு ஒரேஒரு பிரச்சனை. இப்போது வடக்கு வீதிகளில் போய்வரும் வாகனங்களை மறித்து தண்டம் என்ற பெயரில் கப்பம் அறவிட முடியாது.
    1 point
  44. உயிர்தரிப்பு – ப.தெய்வீகன் 01 மூண்டு அணைந்த காட்டுத்தீயினால் எரிந்த பெருமரங்களின் எச்சங்கள் தூரத்தில் தெரிந்தன. கம்பீரமற்ற தரவை நிலத்தைக் கிழித்து பல கிலோ மீற்றர்களுக்கு நீண்டிருந்த புறநகர் நெடுஞ்சாலையில் நாங்கள் பயணித்தோம். மெல்பேர்னின் மேற்குத் திசை வழியாகச் சென்று பண்ணைப்பகுதிகளை தொட்டுவிட்டால், நாம் செல்லும் இடம் வந்துவிடுமென வரைபடத்தில்ஏற்கனவே பார்த்திருந்தேன். வாகனத்துக்குள்ளிருந்த மூன்று பேரையும்விட பேரச்சம்தழும்பிக்கொண்டிருந்த என்னுள் இறுக்கம் கூடியது. கண்ணாடி வழியாகத் தெரியும் பூமியை பார்க்கத்தொடங்கினேன். அடர்பசுமை நிறைந்த பண்ணை நிலங்கள் தெரியத்தொடங்கின. அடுத்து வந்த வயல்களில் அறுத்த புல்லுக்கட்டுகள் பெரும் எண்ணிக்கையில் சுருட்டி ஆங்காங்கே அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. மெல்பேர்னின் மேற்கு நிலத்தின் வழியாக கடலை நோக்கி நீண்டிருக்கும் இந்தப் பகுதி மிகவும் மர்மமானது. ஆளரவமற்ற அமைதி அடர்ந்திருந்தது.வெறித்துக் கிடக்கும் வீதியிலும் அவ்வூர் தனித்துக் கிடந்தது. ஆனந்தக்களிப்பின் உல்லாச புருஷர்கள் போதையில் தள்ளாடுவதும் இங்கே தான் நிகழுமாம். எனக்குள்ளே குமிழ்விடும் பதற்றம் வியர்வையாக வழிந்தபடியிருந்தது. வந்து சேரவேண்டியஇடத்தினை அண்மித்துவிட்டோம் என்பது வாகனத்தின் வேகம் தணிந்ததில் புரிந்தது. தகரங்களால்வேயப்பட்ட சமச்சீரற்ற தனி வீடு, அருகில் செல்லச் செல்ல பெரிதாய் தெரிந்தது. அந்த வீட்டின் மீதுஎனக்கு அளவுக்கதிகமான கவனம் குவிந்தது. தனித்த தகரக்கொட்டகை. என்னில் தெரியஆரம்பித்த கலவர ரேகைகளை அழித்து, அமைதிப்படுத்துவதில் எல்லோரும் சேர்ந்து கொண்டார்கள். வாகனத்திற்குள் பாட்டுச் சத்தம் குறைந்தது. தகர வீட்டுக்குமுன்பாக கிளைவிட்டிருந்த பெயர் தெரியாத ஒரு மர நிழலில், வாகனம் ஓய்வுக்கு வந்தது. எல்லோரும் இறங்கினோம். “வேற ஆக்களும் வருவாங்களோ, நாங்கள் மட்டும்தானோ” என்று கேட்டான் செந்தூரன். செல்லக்கிளி ஏற்கனவே இங்கு பல தடவைகள் வந்திருக்கிறான். வாகனம் பூட்டியிருக்கிறதாஎன்று இரண்டு தடவைகள் சோதனை செய்த அப்பன், செல்லக்கிளியை முன்னால் நடக்கவிட்டு, பின்தொடர்ந்தான். மரங்களில் மோதி முறிந்த காற்று குளிர்ச்சியை எங்கள் மீது பொழிந்தது. வீட்டு வளாகத்திற்குள் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் எனக்கு முள்ளந்தண்டுகுளிர்ந்தது. உயரமாகக் குவிக்கப்பட்ட வைக்கோல் போன்ற புல்லுக்குவியல், வீட்டின் கிழக்குப்பக்கம் அரணாகத் தெரிந்தது. வீட்டைச் சுற்றி ஒரே காலப்பகுதியில் நடப்பட்ட மரங்கள், சமஉயரத்தில் வளர்ந்து, தகரக்கூரையின் மீது சரிந்து கவிழ்ந்திருந்தது. தூரத்திலிருந்து பார்த்தால்கைவிடப்பட்ட மயானம் என்ற நம்பிக்கையைத் தந்துவிடக்கூடிய பாழடைந்த பிரதேசம்போலிருந்தது அந்த வீடு. வீட்டின் உரிமையாளராக அடையாளப்படுத்திக்கொள்ளும் தொப்பி போட்ட நடுத்தர வயதானவன்வெளியில் வந்தான். எங்களை எதிர்பார்த்துக் காத்திருந்திருக்கலாம். மார்பில் நரை பொங்கத்தெரிந்த முடி, அவனது தொப்பையின் சிறுபகுதியையும் வயதையும் தனக்குள்அழுத்தி வைத்திருந்தது. செல்லக்கிளி எங்களை நோக்கித் திரும்பி “இவர்தான் முக்காலா” என்றான். “வாங்கோ…வாங்கோ” பியரில் கரைந்த முக்காலாவின் கரகரத்த குரல், பரம்பரையான வெள்ளையின ஆஸ்திரேலியர்களுக்கே வாடிக்கையானது. எங்கள்எல்லோருக்குமான புன்னகையை அவன் செல்லக்கிளியிடம் பகிர்ந்தான். இவனுக்கு முக்காலாஎன்பது எங்களைப் போன்றவர்கள் வைத்துக்கொண்ட பெயர்தான் என்பதைப் புரிந்கொள்வதற்குக்கனநேரமாகவில்லை. முக்காலாவுக்கு பின்னாலேயே வந்த குதிரையளவு நாயொன்று, எங்கள்அனைவரிலும் தேறக்கூடிய இறைச்சியை தனது விழிகளால் எடைபோட்டது. அதன் நீண்ட சிவந்தநாக்கு, கூரிய பற்களை மீறி வெளியே தொங்கியது. முக்காலா தனது செல்லக்குதிரையைகூட்டுக்குள் தள்ளி கதவைப்பூட்டினான். எஜமானின் உத்தரவை ஏற்றுக்கொண்ட அந்த நாய், கூட்டுக்குள்ளிருந்து எங்களைப் பார்த்து கொட்டாவி விட்டது. பற்கள் அனைத்துமே கொத்தாகமினுங்கின. “இறைச்சியைத் தூக்கிப்போவதற்கு இவ்வளவு ஆட்களை அழைத்து வந்திருக்கிறாயா கிளி?”வேடிக்கையானதொரு புன்னகையென்றாலும் முக்காலாவின் முகத்துக்கு அழகாகஇருந்தது. எங்களில் குறிப்பாக யாரையோ முக்காலாவின் கண்கள் தேடியது. உணர்ந்து கொண்டசெல்லக்கிளி என்னைக் காட்டி “அவர்தான் உங்களைச் சந்திக்க வந்திருப்பவர்” என்றான். அடுத்த கணமே எனது சோர்ந்த கரத்தைப் பிடித்துக்குலுக்கினான் முக்காலா. அதுவரைஉள்ளே ததும்பிக்கொண்டிருந்த அச்சம் வெளியில் சிந்திவிட்டதுபோல உணர்ந்தேன்.முக்காலாசொன்னான் – “உங்களுக்காகக் கொழுத்த கறியை நேற்றிரவு பண்ணையிலிருந்து தூக்கி வந்திருக்கிறேன், வாருங்கள், காட்டுகிறேன்” எல்லோரும் முக்காலாவைத் தொடர்ந்தோம். 02 முக்காலா மஞ்சள் வண்ணச் சப்பாத்துக்களை அணிந்திருந்தான். அவை அவனதுமுழங்கால்கள் வரை நீண்டிருந்தன. நடையில் அநாயாசமான நடனம். முறுகிய தேகத்தில் கைகள்சொன்ன வேகத்தில் அடுத்த நொடியே ஏவலை முடிப்பதற்காகக் காத்திருப்பது போல அவனதுவிரல்கள் ஒன்றையொன்று உரசிக்கொண்டிருந்ததைக் கவனித்தேன். பின்வளவில் பரந்துகிடந்த கம்பி வலைக்குள் பல நூறு கோழிகள் அடைக்கப்பட்டிருந்தன. நெடுமரமொன்றில் சிவப்புநிற “பொக்சிங்” பொதி தொங்கியது. எல்லாவற்றையும் தாண்டி, சதுப்பு நிலத்துடன் கூடிய வேலியின் அருகில், மரப்பலகையால் அமைக்கப்பட்ட சிறிய கூடொன்றுதெரிந்தது. தனது இரண்டாவது வீடுபோல உரிமையோடு உள்ளே நுழைந்த முக்காலா, அதற்குள்ஆயத்தமாக நின்றுகொண்டிருந்த கொழுத்த ஆடு ஒன்றை செவியில் பிடித்து இழுத்து வந்தான். தனது செவிகளைப் பிடித்திருக்கும் முக்காலாவின் கைகளை ஆடு உறுதியாக நம்பியது. வாலை உதறியது. அதிலிருந்து சேற்று மண் உதிர்ந்தது. “என்ன பார்க்கிறீர்கள், உடனே வேலையை முடிக்கலாமா?” கள்ளப் பாஸ்போர்ட்டில் விமானம் ஏறி இந்த நாட்டிற்கு வந்து இறங்கியவன் நான். எப்போதும்பதற்றத்தை அணிந்தபடி அலையும் சட்டவிரோதச் சீவன். எனது விரல்கள் அச்சத்தில் ஏற்கனவேவிறைத்திருந்தன. இரண்டு கைகளையும் உரசிக்கொண்டேன். முக்காலா கேட்டான் – “வழியில் பொலீஸ் நடமாட்டம் ஏதாவதிருந்ததா?” “இல்லை….இல்லை….” என்றான் செல்லக்கிளி. “முன்பெல்லாம் வேலைகளை முடிப்பதில் எந்த சிக்கலுமிருப்பதில்லை. ஆறு மாதங்களுக்குமுன்னர் இங்கிருந்து முப்பது கிலோ மீற்றர் தொலைவில், கள்ளமாக ஆட்டு இறைச்சி அடித்தார்கள்என்று ஆறு இந்தியர்களைப் பொலீஸ் கைது செய்து, பெரிய பிரச்சினையாகிவிட்டது. அதற்குப்பிறகு, இந்த ஏரியாவின் மீது எல்லோருக்கும் ஒருவிதமான சந்தேகப் பார்வைவிழத்தொடங்கியிருக்கிறது. உதிரிகளின் குற்ற வரைபடம் போல இந்த ஊர் ஆகிவிட்டிருக்கிறது” நாங்கள் ஒருவரையொருவர் விநோதமாகப் பார்த்துக்கொண்டோம். செல்லக்கிளி கேட்டான். “இந்தப் பக்கம் இந்தியர்கள் இருக்கிறார்களா” “இந்தப் பக்கமாக வாடி வீடுகள் உள்ளன. தூர இடங்களிலிருந்து வருபவர்கள் அவற்றைவாடகைக்கு எடுத்துக் கூத்தடிப்பார்கள்” தகரக்கூரைக்குள் செருகி வைத்திருந்த இரண்டு பெரிய கத்திகளை எடுத்து, அவற்றின்கூர் பக்கங்களை மெதுவாக உரசியபடி சொன்ன முக்காலா, கத்தியோடு எனக்கு அருகில் வந்தான். “ஒன்றுக்கும் பயப்படாதே, ஒரு சிறிய வேலை அவ்வளவுதான். உன்னுடைய நண்பர்கள்கூடவே இருக்கும்போது என்ன பயம்?” வீட்டுக்குள் சென்று ‘விக்டோரியா பிற்றர்’ பியர் தகரப்புட்டியை எடுத்து வந்தான். சிகரெட்ஒன்றை வாயில் பொருத்தினான். கைக்கு அடக்கமான பியரை இரண்டு தடவைகள் அண்ணாந்துசரித்து உறிஞ்சினான். இரண்டொரு துளிகள் அவனது தாடியில் வழிந்து விழுந்தன. பியர் சுவைநாவிலிருந்து அருகும் முன்னரே, சிகரெட் புகையை இழுத்தான். தணல் பிரகாசமாக எரிந்தது. அவனது கொலை நரம்புகளில் சென்று கங்குகளாய் பரவியது. “ஆடு பதற்றமாக இருக்கும்போது வெட்டினால், இறைச்சி ருசியிராது. அது நிதானமாக இருக்கும் போதுதான் வெட்டவேண்டும். அதுதான், ஆட்டுக்கும் நல்லது. எங்களுக்கும் நல்லது. இல்லையாகிளி? நீங்கள் இரத்த வறையும் கேட்டீர்கள் இல்லையா” என்னைத் தவிர எல்லோரும் முக்காலாவைப் பார்த்து தலையாட்டினார்கள். பற்றி முடிந்த சிகரட் அடிக்கட்டையை தரையில் அழுத்தி, வெளியில் தட்டிவிட்டான்.ஆட்டின் அசைவுறும் கண்களைக் ஒருதடவை உற்றுப்பார்த்தான். தனது பொக்கெட்டிலிருந்துஎடுத்த சிறுதுண்டு கயிற்றினால் ஆட்டின் நான்கு கால்களையும் ஒன்றாக இழுத்துக் கட்டினான். வெள்ளிக்கிண்ணமொன்றை ஆட்டின் கழுத்துக்கு அடியில் வைத்த முக்காலா, இழுத்துக் கட்டியநான்கு கால்களையும் தனது ஒரு காலால் அழுத்திப்பிடித்தான். ஆட்டின் வாயை ஒரு கையால்சேர்த்து மூடினான். அதன் தொண்டைப்பகுதியில் ஓடும் நரம்பினை, எந்தக் குழப்பமும் இல்லாமல், மினுங்கிய சிறு கத்தியால் ஒரே இழுவையில் அறுத்தான். சீறிப்பாய்ந்தஇரத்தம் வெள்ளிக்கிண்ணத்தில் ஓசையோடு நிரம்பி நுரைத்தது. முக்காலாவின் கால்களுக்குள்கிடந்த ஆட்டின் உடம்பில் உயிர் விலகித் துடித்தது. ஒரு கொலையின் சாட்சியாக நான் அங்கு நின்று கொண்டிருக்கிறேன் என்பதைஎன்னால் நம்பமுடியவில்லை. அழைத்தபோது நம்பிக்கையோடு தனது செவிகளைக் கொடுத்து, மரக்கூட்டிலிருந்து வெளியில் வந்த பொசு பொசுவென்ற வெண்ணிற ஆட்டின் துடிப்பு நிரந்தரமாகஓய்ந்தது. அதன்பிறகு, கழுத்தோடு வட்டமாக கத்தியை முன்பின்னாக ஓடவிட்ட முக்காலா, ஒருகிளையிலிருந்து பூவைப்பிடுங்கும் லாவகத்துடன், சில செக்கன்களிலேயே ஆட்டின் தலையைத்தனியாக அறுத்தெடுத்தான். எஞ்சிய இரத்தத்துளிகள் நிலத்தை நனைத்தன. திறந்திருந்த ஆட்டின்கண்களில் என்னுடைய பிம்பம் தெரிந்தது. எனக்கு இரண்டு கண்களும் இருட்டியது. “கிளி நான் கொஞ்சம் வெளியில நிக்கவா?” பதிலை எதிர்பாராமல் வீட்டின் முன்பக்கமாக வந்தேன். ஏற்றுக்கொள்ள முடியாத அந்தமரணத்தின் கணங்களும் ஆட்டின் கடைசித்துடிப்பும் நெஞ்சில் அறைந்தது. என் கண் முன்னால்நட்சத்திரங்கள் பறந்தன. ஒவ்வொரு அடி எடுத்து வைத்து நடக்கும் போதும், எனது கால்களைமுக்காலா அழுத்திப் பிடித்திருப்பது போன்ற பாரத்தை உணர்ந்தேன். செந்தூரன் பின்னாலேயே வந்தான். “மச்சான், காருக்குள்ள சிகரெட் கிடக்கு. ஒண்டை எடுத்து அடி. முக்கியமானகாரியத்துக்கு வந்திருக்கிறம். அதை மறந்திடாத” நான் அந்தக் காட்சியைப் பார்த்திருக்கக்கூடாது. உயிர் பிரியும் அந்த வலியை ஒருபோதும் அங்குநின்று உணர்ந்திருக்கக்கூடாது. விக்டோரியா பிற்றர் பியரும் சிகரெட் புகையும் ஒரு மரணத்தின்துர்நாற்றமாக வயிற்றைக் குமட்டியது. இப்போது எப்படி திரும்பவும் உள்ளே போவது?கசாப்புக்காரனிடம் தான் எனதுஉடலை ஒப்படைக்கப்போகிறேனா? வீட்டுக்கு முன்னால் நீண்டிருந்த கிறவல் பாதையினால் நடந்தேன். சிறிது தூரம் சென்றதும், பாதைக்குக் குறுக்காக நீண்ட மண் நிறத்திலான கொழுத்த பாம்பொன்று அசைந்தபடி கிடந்தது. எனது அருகாமையை தன் சருமத்தினால் உணர்ந்து, தலையை நிமிர்த்திப் பார்த்தது. அந்தஇடத்திலேயே கால் மடங்கி விழுந்து விடப்போவதைப்போல எடையிழந்தேன். என் முழுத்தேகமும்ஒரு துணி போல சுருங்கி விழுவதாய் உணர்ந்தேன். என்ன அதிசயம் நிகழ்ந்ததோ தெரியவில்லை. அந்தப் பாம்பைப் பார்த்தபடியே பின்பக்கமாக ஓடிவந்து, முக்காலா வீட்டு வாசலுக்குள் விழுந்தேன். “என்ன நடந்தது….உன்னை வரட்டாமடா….வா” செந்தூரன் கீழே கிடந்த என்னை நோக்கி ஓடிவந்தான். என்னால் நிலத்திலிருந்துநிதானித்து எழுந்துகொள்ள சில நொடிகளானது. நான் இப்போது உள்ளே போகவேண்டுமா? “டேய் வந்த வேலைய மறந்திடக்கூடாது கெதியா வா” சினம் தலைக்கேறியது. “டேய், இறைச்சி வெட்டுறவனிட்ட என்னைக் கொண்டு வந்து விட்டிருக்கிறீங்களேடா… அவன்என்னத்தை செய்தாலும் அது காலம் பூராவும் என்ர உடம்பில இருக்கப்போகுது தெரியுமா….” “மச்சான், இந்த விசயம் உனக்கு முதலே தெரியும்தானே. தெரிஞ்சுதானே வந்தனீ….” “இதைச் செய்யப்போறவன், ஆடு – மாடு வெட்டுறவன் எண்டு எனக்குத் தெரியாதடா….” “இப்ப உன்ர பிரச்சினை, முக்காலா ஆடு வெட்டுறதா? நீ வந்த விசயத்தில கவனமா இரு. அவன்ஆட்டை வெட்டினால் என்ன, மாட்டை வெட்டினால் என்ன?” “இந்த நாட்டில குடியுரிமை எடுக்கவேணும் எண்டு, திருட்டுத்தனமாக வாறதுதான், நான்செய்யப்போற முதலும் கடைசியுமான கள்ள வேலையாக இருக்கவேணும் எண்டு நினைச்சனடா. ஆனால், இஞ்சவந்த பிறகும்……நினைக்க… தலை வெடிக்குது”. செந்தூரனுக்கு என்னுடைய கடைசி நேரக் குழப்பம்புரிந்தது. “டேய் …… ஒரு நாட்டுக்குள்ள கள்ளமாக வந்து குடியுரிமை எடுக்கிறது எண்டால், அதுஎயார்போர்ட்டோடயோ படகு வந்து இறக்கிற இடத்தோடையோ முடியுற வேலை இல்ல. பாஸ்போட் எடுக்கிற வரைக்கும் அந்தப் போராட்டத்தைத் தொடர வேண்டிக்கிடக்கு. இஞ்சஅதிகாரத்தில இருக்கிறவன், எத்தனையோ குறுக்கு வழிகளில யோசிச்சு, யோசிச்சு எங்களுக்குப்பொறி வச்சு சொந்த நாட்டுக்கு திரும்பி அனுப்பிறதில குறியா இருக்கிறான். நாங்கள் வந்த நாடு, இடையில நிண்டநாடு எண்டு எல்லா நாடுகளோடையும் ஒப்பந்தங்கள் எழுதி, பெரிய திட்டங்களைப்போட்டு, எங்களை அதில விழுத்தப் பாக்கிறான். ஆனால், நாங்கள் எந்த அதிகாரமும் ஆதரவும்இல்லாத அநாதைச்சாதியடா. அகதியள். ஒரு பெரிய அரசாங்கத்தோட மோதுறதெண்டால், அவங்களைப்போல நாங்களும் கள்ளத்தனமாக யோசித்தால் தான் சரி. அகதி ஒருத்தன் செய்யிறகளவுக்கு கருணை இருக்கு. அது வாழ ஆசைப்படுகிற மானுட உத்தரிப்பு. இஞ்ச ஆடு வெட்டுறஆஸ்திரேலியன்தான், அந்த கடவுச்சீட்டுக்கான வழிய காட்டப்போறான். சரி, இவன்தான் அந்தஇமிகிரேசன் அதிகாரி எண்டு நினைச்சுக்கொண்டு, காரியத்தில இறங்குவம். அவ்வளவுதான்வித்தியாசம். இனியும் பிந்தக் கூடாது. பாஸ்போட் தாற பரமபிதாஉள்ள பாத்துக்கொண்டிருக்கிறான், வா” 03 முக்காலா வீட்டுக்குள் நின்றுகொண்டிருந்தான். செல்லக்கிளி அவனருகில் நின்றான்.இருண்ட அறையினுள் அவர்களது கண்கள் செந்தணலாய் எரிந்து கொண்டிருப்பது போலிருந்தது. அதிக பொருட்கள் இல்லா அந்த தகரக்கூரையுடைய வீட்டினை, முக்காலாஇப்படியான காரியங்களுக்குத்தான் உபயோகிப்பது போல் தெரிந்தது. மூலையிலிருந்த அடுப்பில்விறகு எரிந்து கொண்டிருந்தது. அடுப்புக்குப் பக்கத்தில் பெரிய சருவம் ஒன்றில் பலநீளங்களிலான அலுமீனியத் தடிகளிருந்தன. “மச்சான்…. நீ ஒருத்தரையும் நிமிர்ந்து பாக்காத. கண்ணை மூடிக்கொண்டு குப்புறப்படு.அஞ்சு செக்கனுமில்ல. உடன முடிஞ்சிடும். கொஞ்ச நேரம் பல்லைக் கடிச்சுக்கொண்டிரு. விளங்குதா” – செல்லக்கிளி அருகில் வந்து நம்பிக்கை தந்தான். இந்த நிலத்தில் ஒரு வாழ்வு நிரந்தரமாகுவதற்கு இதுதான் கடைசி வழியென்றால், அதனைஇக்கணமே தீர்மானிக்கட்டும். திருப்தியாக இரண்டு சிகரெட் பற்றியிருக்கிறேன். அது போதாதா? தைல மணம் பரவிக்கொண்டிருந்த அந்த அறையில், சட்டையைக் கழற்றிவிட்டு வெற்றுடம்பாகநடுவிலிருந்த நீளமான மேசையில் குப்புறப்படுத்தேன். எதுவும் கேட்கவில்லை. அறையின்மூலையில் கங்குத் தீயின் ஓசை மாத்திரம் அதிர்ந்து பரவியது. சற்று நேரத்தில் என்னைநோக்கி வருகின்ற காலடிச் சத்தங்கள் பேரிடியாகக் கேட்டன. அச்சத்தால் குளிர்ந்த நான்கு கைகள்எனது இரண்டுகால்களையும் மேசையோடு சேர்த்து அழுத்திப்பிடிக்கின்றன. எனது கைகள்இரண்டையும் செல்லக்கிளி பிடித்துக்கொண்டான். கைகளை மேசையோடு அழுத்திப்பிடித்திருக்கும் என் வாயில் தடித்த மரத்துண்டொன்றை திணித்தான் முக்காலா. கங்குகளின் ஓசையும் வாசனையும் ஒருங்கே என்னை நோக்கி வருவதை உணர்ந்தேன். விக்டோரியா பிற்றர் பியரும் சிகரெட் வாசனையும் என்னை அண்மிக்கின்றன. முதுகுத் தசையைக் கிழித்ததுபோல தீயினால் இரண்டு ஒத்தடங்கள், ஆழமாக என்னைப் பிழந்தன. தடம்பட்ட நீள் காயங்கள் இதயத்தின் வழி ஈட்டிபோல பாய்ந்தன. மூளை நரம்புகளில் ஒன்றிரண்டுவெடித்து உள்ளே உடலெங்கும் அமிலமாய் கரைந்தோடியது. தடித்த தோலின் மீது பதிந்தஅலுமீனியத் தணல் குழாய், சருமத்தை சதையோடு பொசுக்கியது. அந்த நேரம் எனது கால்களையும்கைகளையும் மேலும் அழுத்திக்கொண்டதால் எனது தேகம் பெருவலியிடம் கோரமாகஅடைக்கலமாகியது. குறி விறைத்தது. தடித்த மரத்துண்டினை பலம் முழுவதையும் திரட்டிக் கடித்துவலியைக் கரைக்கப் பார்த்தேன். வாய் நீர் வடிந்து நிலத்தில் வீழ்ந்தது. விழிகள் இரண்டும்மேலே செருகின. “அவ்வளவும் தான் மச்சான்….அவ்வளவும் தான்…முடிஞ்சுது…முடிஞ்சுது…..” கைகளைத் தளர்த்திவிட்டு செல்லக்கிளி என்னை அணைத்துக் கொள்கிறான். “எல்லாம்முடிஞ்சுது மச்சான்….சக்ஸஸ்….” என்கிறார்கள். மூவரும் சேர்ந்து, நான் மேசையிலிருந்து எழுந்து கொள்ள உதவினார்கள். முதுகில் இன்னமும் தீவடிந்து கொண்டிருந்தது. உடம்பில் ஒருபாகம் சுவாலையுடன் எரிந்துகொண்டிருப்பது போலிருந்தது. அழுதேன். பெரு வெப்பமேறியகொடிய திரவமாகக் கண்ணீர் என் கன்னத்தில் வடிந்தது. “எந்தப் பிரச்சினையும் இல்லாமல் முடிந்துவிட்டது, நீ கெட்டிக்காரன். என்னிடம் வருபவர்கள், டொக்டர் மெலினாவிடம் போவதுதான் வழக்கம். இந்தக் காயம் சொந்த நாட்டில் இராணுவத்தினர்அடித்தது என்று அவர் உறுதிப்படுத்திக் கொடுக்கும் மெடிக்கல் சேர்டிபிக்கெட்டை ஆஸ்திரேலியஇமிகிரேசன் ஆட்கள் ஒரு போதும் நிராகரித்ததில்லை. கிளி..…உனக்குத் தெரியும்தானே…டொக்டர் மெலினா” பொறுப்பான கேள்விகளுடன் முக்காலாவின் குரல் ஒலித்தது. “இளம் இரத்தம் பாய்கின்ற கட்டிளம் காளையே…..! இங்கு நான் அறுபது வயது ஈரான்கிழவனுக்குக்கூட தீத்தடம் வைத்து, அவருக்கு மெலீனா சேர்ட்டிபிக்கட் கொடுத்த மூன்றுமாதங்களில் இமிகிரேசன் ஆஸ்திரேலிய நிரந்தர வதிவிட உரிமை கொடுத்திருக்கிறது. ஒன்றுக்கும்அஞ்சாதே. ஆஸ்திரேலியனாக மாறும் நாட்களை எண்ணிக்கொண்டிரு. நெருங்கிவிட்டாய்” என்னை நோக்கி முக்காலா பேசிக்கொண்டிருந்தான். என்னால் அவனது முகத்தைநிமிர்ந்துபார்க்கமுடியவில்லை. மேசையிலிருந்து எழுந்து அப்பனைப் பிடித்துக்கொண்டு வெளியேவந்தேன். வெட்டியகற்றப்பட்ட ஆட்டின் தோல்கள் ஓரிடத்தில் குவிக்கப்பட்டிருந்தன. ஆட்டின் தலைஎங்காவது தெரிந்துவிடுமா என்று தேடினேன். காணவில்லை. எங்களுக்கான இரத்தம் தோய்ந்தஇறைச்சி இறுகக்கட்டிய பொலீத்தீன் பையொன்றில் பொதிசெய்து ஆயத்தமாயிருந்தது. அருகில்சென்று, அந்தப்பொதியை வருடிப்பார்த்தேன். என்னையே நான் வருடுவது போலிருந்தது. பணத்தை எண்ணிக்கொடுத்து முக்காலாவின் கைகளைப் பிடித்து நன்றிகளைச்சொரிந்தான் செல்லக்கிளி. இரண்டு வாரங்களில் டொக்டர் மெலீனாவிடம் போகுமாறு மீண்டும் சொன்ன முக்காலா, காயத்தில் சீழ் வருவதுபோன்ற ஏதாவது சிக்கல் காணப்பட்டால், எந்த மருத்துவர்களிடமும்சென்றுவிடவேண்டாம் என்றும் தன்னிடம் வருமாறும் சொன்னான். வெளி முற்றத்துக்கு வந்தோம். காரியம் முடிந்த திருப்தியினால் எல்லோரது குரல்களும் சமசுருதியில் ஒலித்தன. நான் முக்காலாவைப் பார்த்து “நன்றி” என்றபடி காரில் ஏறினேன். நாடற்றவனுக்கு வாழும் உரிமை வாங்கிக் கொடுப்பவன் நான் எனும் கம்பீரத்தோடு பரிசுத்தவானைப் போல நின்று கொண்டிருந்த முக்காலா என்னருகே ஓடிவந்து, “நீ விடுதலைக்காய் போரிட்ட வீரன் சகோதரா, எனக்குத் தெரியும். செல்லக்கிளி சொல்லியிருக்கிறான். எதற்கும் அஞ்சாதே” – என்றான். முதுகில் எரியும் காயத்தின் மீது எனது சொந்த நிலத்தின் கந்தக எரிச்சல் எழுந்தது. முற்றும். *** -ப.தெய்வீகன் https://vanemmagazine.com/உயிர்தரிப்பு-ப-தெய்வீகன/
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.