Jump to content

Leaderboard

  1. கிருபன்

    கிருபன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      23

    • Posts

      33796


  2. ராசவன்னியன்

    ராசவன்னியன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      14

    • Posts

      7331


  3. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      12

    • Posts

      76760


  4. ஏராளன்

    ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      18750


Popular Content

Showing content with the highest reputation on 12/19/22 in all areas

  1. யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டி 2022 இறுதி நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 கல்யாணி 106 2 நீர்வேலியான் 100 3 ஈழப்பிரியன் 93 4 எப்போதும் தமிழன் 92 5 முதல்வன் 87 6 தமிழ் சிறி 86 7 நுணாவிலான் 81 8 புலவர் 80 9 கிருபன் 77 10 அகஸ்தியன் 76 11 வாதவூரான் 72 12 கறுப்பி 72 13 வாத்தியார் 70 14 ஏராளன் 70 15 சுவைப்பிரியன் 69 16 நிலாமதி 69 17 சுவி 68 18 பிரபா 68 19 குமாரசாமி 57 20 பையன்26 56 21 கந்தையா 51 உலகக்கோப்பை கால்பந்தாட்டம் 2022 இல் சாதனை படைக்கும் பல அணிகளையும் வீரர்களையும் சரியாகக் கணித்தும், குழுநிலைப் போட்டியில் முன்னணியில் நின்ற @கிருபன் ஐயும், பின்னைய போட்டிகளில் பல நாட்கள் முன்னணியில் நின்ற @முதல்வன் ஐயும், இறுதிப் போட்டிவரை முன்னணியில் நின்ற @நீர்வேலியான் ஐயும் பின்னுக்குத் தள்ளி யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டம் 2022 இல் வெற்றியைத் தட்டிச் செல்லும் கல்யாணிக்கு (@kalyani) மனமார்ந்த வாழ்த்துக்கள்! போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், இடையில் யாழ்களம் தடங்கலுக்கு உட்பட்டு பல பக்கங்கள் காணாமல் போயிருந்தும் சளைக்காமல் திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும் நன்றிகள்.
    10 points
  2. இன்று நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினா அணியும் பிரான்ஸ் அணியும் ஆட்டநேர முடிவில் தலா இரு கோல்கள் போட்டமையால் சமநிலையில் இருந்தன. பின்னர் கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டைமையால் சமநிலையிலேயே இருந்தன. எனவே வெற்றி சமன்நீக்கி மோதல் மூலம் தீர்மானிக்கப்பட்டது. சமன்நீக்கி மோதலில் ஆர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை 4 - 2 என்ற கணக்கில் வெற்றியீட்டியது. ஆர்ஜென்டினா 3 - 3 பிரான்ஸ் சமன்நீக்கி மோதல் முடிவு: ஆர்ஜென்டினா 4 - 2 பிரான்ஸ் ஆர்ஜென்டினா வெல்லும் எனக் கணித்த @ஈழப்பிரியன், @kalyani, @Eppothum Thamizhan, @நீர்வேலியான் ஆகியோருக்கு தலா ஆறு புள்ளிகள் கிடைக்கின்றன! ஏனையோருக்கு புள்ளிகள் கிடையாது. இறுதிப் போட்டி முடிவில் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள் (சாதனை படைத்த வீரர்கள்/நாடுகளுக்கான பதில்கள் பின்னர் தரப்படும்): நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 நீர்வேலியான் 87 2 கல்யாணி 85 3 ஈழப்பிரியன் 79 4 எப்போதும் தமிழன் 78 5 முதல்வன் 77 6 அகஸ்தியன் 76 7 தமிழ் சிறி 75 8 நுணாவிலான் 74 9 புலவர் 73 10 கிருபன் 71 11 ஏராளன் 70 12 சுவைப்பிரியன் 69 13 சுவி 68 14 வாதவூரான் 68 15 வாத்தியார் 66 16 நிலாமதி 66 17 கறுப்பி 61 18 பிரபா 58 19 குமாரசாமி 57 20 பையன்26 56 21 கந்தையா 51 இன்னும் இருக்கு! போட்டி நிர்ணயித்த நேரத்தில் முடியாததால் பார்ட்டி ஒன்றுக்குப் போகவேண்டியதாகிவிட்டது. எனவே பதிவுகள் போடமுடியவில்லை! இறுதி நிலைகளை இனித்தான் கணக்கிடவேண்டும். @Eppothum Thamizhan, எப்போதும் கணக்கு வழக்குகளை சரிபார்க்கும் வல்லுநராக இருப்பதால் பிழைகள் விடாமல் நடாத்தமுடிகின்றது😎
    7 points
  3. போட்டியை திறம்பட நடாத்திய @கிருபன்ஜீக்கும், போட்டியில் கலந்து கொண்ட யாழ். உறவுகளுக்கும், போட்டியை கூடுமானவரை துல்லியமாக கணித்து…. முதல் மூன்று இடங்களை பெற்றுக் கொண்ட… @kalyani, @நீர்வேலியான், @ஈழப்பிரியன் க்கும்… போட்டியின் இடையே சோர்வு ஏற்படா வண்ணம் நகைச்சுவையாக கருத்துக்களை பகிர்ந்த @ஈழப்பிரியன், @பையன்26, @குமாரசாமி, @suvy, @Kandiah57, @நிலாமதி போட்டிச் செய்திகளை உடனுக்குடன் இணைத்துக் கொண்டிருந்த @ஏராளன் , @nunavilan க்கும் போட்டியில் கலந்து கொள்ளாமல்… இறுதியில் திண்ணையில் இணைந்து வெடி கொழுத்திய துபாய் ஷேக்கு @ராசவன்னியன்க்கும் அவ்வப் போது… எட்டிப் பார்த்து… கருத்துக்களை பகிர்ந்த @goshan_che க்கும், போட்டியை நடத்த, களம் அமைத்துத் தந்த யாழ். கள நிர்வாகத்தினருக்கும்… 🤝 பாராட்டுக்களும் 👏🏻, நன்றிகளும் 🙏 உரித்தாகட்டும். 🙂 மீண்டும் ஒரு போட்டியில் சந்திப்போம் உறவுகளே… 🥰
    5 points
  4. வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே 2009 இறுதி யுத்த‌த்தில் சிங்க‌ள‌ இர‌ணுவ‌த்தின‌ருட‌ன் ந‌ட‌ந்த‌ ச‌ண்டையின் போது த‌ன‌து த‌ந்தைய‌ இழ‌ந்த‌ சிறுவ‌ன்.............எல்லாரும் கை விட்ட‌ நிலையில் உப்பு வித்து தாயை க‌வ‌ணிக்கும் ம‌க‌ன் , தாய் நோயால் அவ‌தி ப‌டுகிறா , எம‌க்காக‌ போராடி உயிர் நீத்த‌ போராளியின் ம‌க‌ன்...........வ‌ய‌து 15 ஜ‌ந்து..........சாப்பாட்டுக்கு காசு இல்லாட்டி தாயும் ம‌க‌னும் சாப்பிடாம‌ ப‌ட்டினியா இருப்ப‌தாக‌ க‌ன‌த்த‌ ம‌ன‌துட‌ன் தாயார் சொல்லுறா...........நேற்று ச‌மைக்க‌ கூட‌ ப‌க்க‌த்து வீட்டில் தான் க‌ட‌னுக்கு அரிசி வேண்டி சோறு சாப்பிட்ட‌வையாம்.........காணொளி எடுத்த‌ பெடிய‌ன் அக்க‌ம் ப‌க்க‌த்தில் விசாரிச்சு போட்டுத் தான் 50ஆயிர‌ம் ரூபாய் உத‌வி செய்து இருந்தார் அந்த‌ உத‌விய‌ செய்த‌து க‌ன‌டாவில் வ‌சிக்கும் ஒரு அன்ரி அடுத்த‌ வ‌ருட‌த்தில் இருந்து இந்த‌ குடும்ப‌த்தை நானே பொருப்பு எடுத்து அந்த‌ சிறுவ‌னின் ப‌டிப்புக்கு சாப்பாட்டுக்கு ம‌ருந்துக்கு தேவையான‌ ப‌ண‌த்தை மாத‌ம் மாத‌ம் அனுப்ப‌ போகிறேன் 🙏🙏🙏
    4 points
  5. தமிழ் தேசிய அரசியலில் கொள்கை – ஒரு பகிரங்க சவால்? - யதீந்திரா விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் காலமாகி 16 வருடங்களாகின்றன. கடந்த 14ம் திகதி, அவரது பதினாறாது நினைவுதினம். அதற்கு முதல் நாள்தான், தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் ரணில் விக்கிரசிங்கவின் சர்வகட்சி கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றியமை தொடர்பில் மாறுபட்ட அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. நிபந்தனையுடன் பேசியிருக்க வேண்டுமென்று ஒரு கருத்து முன்வைக்கப்படுகின்றது. சமஸ்டியை ஏற்றுக்கொண்டால் மட்டுமே சிங்கள தரப்புடன் பேசவேண்டுமென்று, இன்னொரு கருத்து முன்வைக்கப்படுகின்றது. மூன்றாம் தரப்பு இல்லாமல் பேச்சுவார்த்தையில் பங்குகொள்ளக் கூடாதென்று, இன்னொரு பார்வை முன்வைக்கப்படுகின்றது. இவைகள் எவையுமே தவறான கருத்துக்கள் அல்ல. ஏனெனில் சிங்களவர்களோடு பேசிப், பேசி ஏமாந்துபோனதே தமிழர் வரலாறு. ஆனால் இந்த இடத்தில் எழும் கேள்வி இவற்றையெல்லாம் அழுத்திக்கூற, அடம்பிடிக்க, பேரம்பேச, நம்மிடமுள்ள பலம் என்ன ? ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகள் அமைப்பிற்குமிடையிலான பேச்சுவார்த்தையின் முதல் நாளில், அன்ரன் பாலசிங்கம் கூறுகின்றார். அவரது குரல் மிகவும் கம்பீரமாக ஒலிக்கின்றது. ஆயுதக் களைவு விடயத்தில் சமரசமில்லை. அது எங்களுடைய மக்களின் அதிகாரமாகும். அது தமிழர்களின் பேரம் பேசும் பலம். அது எங்களுடைய மக்களின் பாதுகாப்பிற்கான கருவி. இதற்கு சிறிலங்கா அரசிலிருந்து எந்தவொரு எதிர்ப்பும் வரவில்லை. ஏனெனில் எதிர்க்க முடியாது. எதிர்த்தால் பேச்சுவார்த்தை இடம்பெறாது. உண்மையில் பாலசிங்கம் பேசவில்லை, பிரபாகரனது இராணுவாற்றல் அவரை அவ்வாறு பேசவைத்தது. தமிழர்கள் உச்ச பலத்தோடிருந்த காலத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையது. அது இனிமையான நினைவுகளை தரவல்ல கடந்தகாலம். கடந்த காலம் என்னதான் அற்புதமான உணர்வை தந்தாலும் கூட, நிகழ்காலத்தில் அதற்கு எவ்வித பெறுமதியும் இல்லை. எங்கள் தாத்தாவிற்கு ஒரு யானையிருந்ததென்று, கூறுவதைப் போன்ற ஒன்றுதான் இதுவும். யானை தாத்தாவிடம் இருந்திருக்கலாம் ஆனால் நம்மிடம்? தமிழ் தேசிய அரசியலை நான்கு கட்டங்களாக பிரிக்கலாம். ஒன்று, செல்வநாயகம் காலகட்டம். இரண்டு விடுதலை இயக்கங்களின் காலகட்டம். மூன்று, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் காலகட்டம். நான்கு சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் காலகட்டம். இந்த பின்புலத்தில் நோக்கினால், தமிழர்கள் கொழும்மை நிர்பந்திக்கும் பலத்தோடிருந்த காலமாக, இரண்டு காலகட்டங்களைத்தான் குறிப்பிட முடியும். மேற்படி இரண்டு காலகட்டங்களும் தமிழர்கள் ஆயுத பலத்துடனிருந்த காலகட்டங்களாகும். அன்று 36 ஆயுத இயக்கங்கங்கள் இருந்ததாக ஒரு பதிவுண்டு. சிலர் இதனை 32 என்றும் பதிவிடுக்கின்றனர். இதனை சிலர் வேடிக்கையாக சொல்வதுண்டு. ஆங்கில எழுத்துக்கள் அனைத்தையும் முன்னுக்கு பின்னாக போட்டுக் கொண்டு உருவாக்கப்பட்ட இயக்கங்கள். ஜந்து இயக்கங்கள் மட்டுமே இதில் பிரதானமாக பேசப்பட்டது. இயக்கங்களின் அன்றைய ஆளணி, சிறிலங்கா இராணுவத்தைவிடவும் மூன்று மடங்கென்று சொல்வார்கள். இந்த இயக்கங்களின் பிரதான இலக்கு என்னவாக இருந்தது? மிதவாதிகளால் அடைய முடியாமல் போன தனிநாட்டை ஆயுத பலம்கொண்டு அடைவதுதான் இவர்களுடைய இலக்காக இருந்தது. இந்த இயக்கங்கள் அனைத்தும் இறுதியில் சிறிலங்காவிற்கு ஒரு பலமான இராணுவத்தைத்தான் உருவாக்கிக் கொடுக்கப் போகின்றன – என்று தங்களுடைய ஆசிரியர் ஒருவர் கூறியதாக ஒரு நண்பர் என்னிடம் கூறினார். இன்று திரும்பிப்பார்த்தால் அப்படித்தான் நடந்திருக்கின்றது. தமிழர்கள் பலத்துடனிருந்த முதல் காலகட்டமும், இரண்டாவது காலகட்டமும் இயங்கங்களின் காலகட்டம்தான். ஒரு வேறுபாண்டு. அதாவது, முதல் கட்டத்தில் இயங்கங்கள் – இரண்டாவது கட்டத்தில் இயக்கம். இயக்கங்களின் முதல் கட்டத்தில் ஒரு இணக்கப்பாடு ஏற்பட்டு, அதன் விளைவாகவே திம்புப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதன் பெறுபேறாகவே இந்திய-இலங்கை ஒப்பந்தம் இடம்பெற்றது. மாகாண சபை முறைமை ஒரு தீர்வாக முன்வைக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் இராணுவ பலத்தின் விளைவாகவே, ஒஸ்லோ பேச்சுவார்த்தை இடம்பெற்றது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையின் விளைவாக எதனையும் அடைய முடியவில்லை மாறாக, தமிழர்களின் ஒட்டுமொத்த பலமும் அழிக்கப்பட்டது. திம்பு பேச்சுவார்த்தைக்கும், ஒஸ்லோ பேச்சுவார்த்தைக்கும் இடையில் ஒற்றுமையுமுண்டு. அதேவேளை வேற்றுமையுமுண்டு. ஒற்றுமை, இரண்டிலும் மூன்றாம் தரப்பிருந்தது. வேற்றுமை, இந்திய தலையீட்டினதும் நோர்வேயின் தலையீட்டினதும் கனதி முற்றிலும் வேறானது. இந்திய தலையீட்டின் போது, இந்தியா, கொழும்மை நிர்பந்திக்கும் சக்தியாக இருந்தது. ஆனால் ஒஸ்லோ பேச்சுவார்தையின் போது, நோர்வே ஒரு நிர்பந்திக்கும் சக்தியாக இருக்கவில்லை. இந்த பின்புலத்திலிருந்துதான் சம்பந்தனின் காலகட்டத்தை நோக்க வேண்டும். 2009இற்கு பின்னர் தமிழ் தேசிய அரசியல் நிலைமை முற்றிலும் மாற்றமடைந்தது. உண்மையில் 2009இற்கு முன்னரான தமிழ் தேசிய அரசியலானது, இராணுவ ஆற்றல் மீதான நமபிக்கையின் வழியாகவே நோக்கப்பட்டது. 2009இற்கு பின்னர், நிலைமைகள் பழைய மிதவாத அரசியலை நோக்கித் திரும்பியது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போது சம்பந்தனது தலைமையின் கீழ் வந்ததோ, அப்போதே தமிழ் தேசிய அரசியல் பழைய மிதவாத அரசியலுக்கள் பிரவேசித்துவிட்டது. ஆனால் முன்னரைவிடவும் அது பலவீனமாகவே காட்சியளித்தது. ஏனெனில் சம்பந்தன் ஒரு தேசிய இயக்கத்திற்கு தலைமைதாங்கக் கூடிய ஆற்றலுள்ள ஒருவர் அல்ல. ஏனெனில் அவரிடம் இயல்பிலேயே மோதும் பண்பில்லை. அப்படியான பண்பு அமிர்தலிங்கத்திடமிருந்ததாக சொல்வார்கள். ஒரு மூத்த தலைவரென்னும் தகுதியை கொண்டே, சம்பந்தன் கூட்டமைப்பை வழநடத்த முற்பட்டார். ஆனால் அதனைக் கூட அவரால் சரிவரச் செய்ய முடியவில்லை. 2009இற்கு முன்னரான தமிழ் தேசியக் கூட்டமைப்பானது, விடுலைப்புலிகளின் தேர்தல் முகமாக மட்டுமேயிருந்தது. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து எதை எதிர்பார்க்கலாம்? ஏற்கனவே தோல்வியடைந்த மிதவாதிகளால் புதிதாக எதைச் செய்ய முடியும்? இந்தக் கேள்விகளிலிருந்துதான், 2009இற்கு பினனரான அரசியலை மதிப்பிட வேண்டும். மிதவாதிகளால் எதனையுமே கையாள முடியாமல் போனதால்தான், ஆயுத இயக்கங்கள் தோற்றம்பெற்றன. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஆதரித்த அமிர்தலிங்கம், மாகாண சபை தேர்தலில் போட்டியிட மறுத்தார். இந்தப் பின்புலத்தில்தான், விடுதலை இயக்கங்கங்களில் ஒன்றான, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அந்த இடத்தை நிரப்பியது. அதாவது, மாகாண சபைக்கு வடிவம் கொடுப்பதற்கும் ஒரு இயக்கம்தான் தேவைப்பட்டது. இவ்வாறானதொரு பின்புலத்தில், இன்றுள்ள அரசியல் கட்சிகளால் கொழும்மை நிர்பந்திப்பதற்கு என்ன செய்ய முடியும்? இந்தக் கேள்வியிலிருந்துதான், நாம், இன்றைய சூழலை மதிப்பிட வேண்டு;ம். விமர்சிக்க வேண்டும். கோபப்பட வேண்டும். குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டும். நடக்க முடியாத ஒருவரைப் பார்த்து ஏன் நீங்கள் நடக்கவில்லையென்று கேட்கலாமா? இன்றுள்ள சூழலில் பேச்சுவார்த்தையை எவ்வாறு கையாளலாமென்று கூறுகின்ற போது, இந்த அரசியல் யதார்த்தத்தை நாம் மறந்துவிடக் கூடாது. 2009இற்கு பின்னரான சூழலில், கொழும்மை நிர்பந்திக்கும் பலத்தை தமிழர்கள் முற்றிலும் இழந்துவிட்டனர். இந்தச் சூழலில் போரின் இறுதிக் காலத்தில் இடம்பெற்றதாக நம்பப்படும் மனித உரிமை மீறல்களையே ஒரு துருப்புச் சீட்டாக நாம் கையாண்டு வருகின்றோம் ஆனால் அதிலும் ஒரு பிரச்சினையுண்டு. கடந்த 13வருடங்களாக பொறுப்பு கூறல் விடயத்தை கொழும்பு ஏதோவொரு வகையில் இழுத்தடித்தே வருகின்றது. கொழும்பால் இவ்வாறு இழுத்தடிக்க முடிகின்றதென்றால், இங்கு கொழும்பு மட்;டும் பிரச்சினையில்லை – மாறாக, அவ்வாறானதொரு வாய்ப்பு சர்வதேச பொறிமுறையில் இருக்கின்றது என்பதையே நாம் உற்றுநோக்க வேண்டும். இந்த பின்புலத்தில் நோக்கினால். உள்நாட்டில் பலமில்லை. பிராந்திய சக்தியான இந்தியாவின் நிலைப்பாடு இந்திய – இலங்கை ஒப்பந்தத்துடன் மட்டுப்பட்டிருக்கின்றது. அமெரிக்காவின் கரிசனையோ, மனித உரிமைகள் விவகாரத்தை தாண்டி அசைவதாக இல்லை – அரசியல் தீர்வு தொடர்பில் அவர்கள் இதுவரை உச்சரித்ததில்லை. ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் அழுத்தங்கள் நமது எதிர்பார்ப்புக்களை சிறியளவில் கூட, பூர்த்திசெய்யவில்லை. இந்த நிலையில் என்ன செய்ய முடியும்? கொழும்பிற்கு நிபந்தனை வைக்கலாம். சமஸ்டியை பகிரங்கமாக அறிவித்தால்தான், நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வருவோமென்று உரத்து பேசலாம் – ஆனால், அதற்காக அவர்களை எவ்வாறு நிர்பந்திப்பது? இந்த இடத்தில் தமிழர்கள் என்னதான் செய்வது? நாம் எப்போது மீளவும் பலம் பெறுவோம்? எப்போது முன்னைய கம்பீரத்துடன் பேசச் செல்வோம்? எந்த ஆய்வாளரிடம், எந்த புத்திஜீவிடம், எந்த சிவில் சமூகத்திடம் இதற்கு பதிலுண்டு. புலம்பெயர் அமைப்புக்களிடம் பதிலிருக்கின்றதா? ஓரு மொங்கோலிய கூற்றுண்டு. அதாவது, குதிரை கிடைக்கும் வரையில் கழுதையை ஓட்டுங்கள். இப்போது அந்தக் கழுதை எதுவென்பதில்தானே நமக்குள் விவாதங்கள் இடம்பெறுகின்றன. இப்போது, 13 என்னும் எண்ணை உச்சிரித்தாலே, மகா பாவம் என்பது போல் சிலர் சிலிர்த்துக் கொள்கின்றனர். அனைவரையும் நோக்கி இந்தக் கட்டுரையாளர் ஒரு கேள்வியை முன்வைக்கின்றார். மனச்சாட்சிப்படி பதில் கூறுங்கள். கடந்த 73 வருடகால தமிழ் தேசிய அரசியல் பயணத்தின் போது, நாம் கொள்கை வழியில் மட்டும்தான் பயணித்திருக்கின்றோமா? நாம் கொள்கை தவறியதேயில்லையா? சூழ்நிலைகருதி சிந்தித்ததில்லையா – செயற்பட்டதில்லையா? சமஸ்டிக் கோரிக்கை முன்வைத்த செல்வநாயகம் எந்த அடிப்படையில் பண்டா-செல்வா, டட்லி-செல்வா உடன்பாடுகளுக்கு சென்றார். தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணியினர் எந்த அடிப்படையில் மாவட்ட சபைக்கு இறங்கினர்? எந்த தமிழ் தேசிய கொள்கையின் அடிப்படையில், தமிழரசு கட்சி, 1965இல், டட்லி சேனநாயக்க தலைமையிலான, ஜக்கிய தேசியக் கட்சியின் தேசிய அரசாங்கத்தில்; அங்கம் வகித்து, அமைச்சரவையிலும் பங்குகொண்டது? ஜம்பதிற்கு ஜம்பது கோரிய ஜி.ஜி.பொன்னம்பலம், டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சியில் அமைச்சராக இருந்த கதையை மறக்க முடியுமா? இவைகள் அனைத்தும் எந்த தமிழ் தேசிய கொள்கையின் அடிப்படையில் இடம்பெற்றன? இவற்றுக்கு பதில் என்ன? இவற்றுக்கான பதில் தந்திரோபாயமென்றால் – ஏன் இருக்கின்ற ஒரேயொரு துருப்புச் சீட்டான மாகாண சபையை உச்சபட்டசமாக பயன்படுத்திக் கொள்ளக் கூடாது? அது ஏன் ஒரு தந்திரோபாயமாக இருக்க முடியாது? இல்லை! – இது பச்சைத் துரோகமென்றால், முன்னர் இடம்பெற்றவைகளையும் பச்சைத் துரோகமென்று அறிவிக்கும் துனிவுண்டா? இன்று சூழ்நிலை கருதி, தந்திரோபாயமாக சில விடயங்களை முன்னெடுப்பது தவறென்றால், தமிழினத்தின் முதல் துரோகி எஸ்.ஜே.வி.செல்வநாயகமாகத்தானே இருக்க முடியும்? அதற்கு முன்னர் பச்சைத் துரோகமிழைத்தவர் (கஜன் பொன்னம்பலத்தின் பாட்டன்) ஜி.ஜி.பொன்னம்பலமல்லவா? இயக்கங்களின் வரலாறு என்ன? எந்த இயக்கம் எதிரியென்று கூறப்பட்டவர்களோடு தேவைகருதி ஊடாடாத இயக்கம். இந்திய அமைதிப் படைகளால் முற்றிலுமாக அழிக்கப்பட்;டுவிடுவோமென்னும் சூழலில்தான், அதிலிருந்து, தப்பித்துக் கொள்வதற்காக, விடுதலைப் புலிகள் பிரேமதாசவோடு உடன்பாட்டை ஏற்படுத்திக்கொண்டனர். 2000இல், அன்ரன் பாலசிங்கம், இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இதனை பச்சையாக போட்டுடைத்திருந்தார். இந்திய அமைதிப்படை வடக்கு கிழக்கு முழுவதையும் கட்டுப்பாட்டுக் கொண்டுவந்திருந்தது. இந்த நிலையில், முழுமையான அழிவிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில்தான், பிரேமதாசவோடு புரித்துணர்வு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டது. பின்னர் இந்தியாவின் தேவையை உணர்ந்து, பாலசிங்கம் இந்தியாவை நோக்கித் திரும்பினார். (When we entered into negotiations with President Premadasa, we were on the brink of destruction. The IPKF had taken over the entire north and east and the LTTE and Prabhakaran were fighting for survival. So we entered into an understanding with Premadasa to escape from total annihilation. ) ஒரு வீழ்சியை எதிர்கொள்ளும் போது, தந்திரேபாயமாக செயற்பட முடியும் – அந்த தந்திரேபாயத்திற்காக எந்தவொரு எல்லைக்கும் செல்லலாமென்பதுதானே இதன் பொருள்! இதில் எங்கிருக்கின்றது கொள்கை? எனவே தந்திரேபாயத்தை கொள்கையோடு இணைத்து குழம்பிக்கொள்ள வேண்டியதில்லை என்பதுதானே விடயம். இந்த பின்புலத்தில் சிந்தித்தால், கடந்த 73 வருடகால தமிழ் தேசிய அரசியலில் கொள்கை வழியை மட்டுமே முன்னிறுத்தி சிந்தித்த – கட்சிகளும் இல்லை, இயங்கங்களும் இல்லை. சூழ்நிலை கருதிய முடிவுகளுக்கு எவருமே தங்கவில்லையென்பதுதான் வரலாறு. இப்போது புதிதாக தமிழ்-தேசிய வகுப்பெடுப்போர், இந்த அடிப்படையில் விவாதிப்பதற்கு தயாராக இருக்கின்றீர்களா? விவாதிப்போமா? இந்தக் கட்டுரை துனிவுள்ளவர்களை அழைக்கின்றது. நாம் ஒவ்வொரு விடயங்களை உச்சரிக்கின்ற போதும், நாம் – நமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய அரிவரிக் கேள்வி – நாம் கூறும் விடயத்தை எவ்வாறு அடையப் போகின்றோம்? அதற்கான பலத்தை எவ்வாறு திரட்டிக்கொள்ளப் போகின்றோம்? அதனை எங்களால் திரட்டிக்கொள்ள முடியுமா? விடுதலைப் புலிகள் இராணுவநிலையில் பலமாக இருந்த காலத்தில் கூட, நிலைமைகள் பாரதூரமாவதை உணர்ந்த பாலசிங்கம், இந்தியாவை நோக்கித் திரும்பினார். உண்மையில் பாலசிங்கத்தை இன்று நினைவு கூறுவோர் எவருமே – அவரது இறுதிக்கால நகர்வுகள் தொடர்பில் பேசுவதில்லை. பலத்தோடு இருந்த காலத்திலேயே ஒரு கட்டத்திற்குமேல் எதனையும் முன்னெடுக்க முடியவில்லை. பேச்சுவார்த்தையிலிருந்து பிரபாகரன் வெளியேறிய பின்னர், நிலைமைகள் மிகவும் வேகமாக அவருக்கு எதிராகத் திரும்பியது. ஒரு கட்டத்தில் அனைத்துமே கைமீறியது. விடுதலைப் புலிகள் பலத்தோடு இருக்கின்ற காலத்திலேயே எதிர்கொள்ள முடியாத விடயங்களை, இன்று எந்தவிதமான பலமுமில்லாத சூழலில் எவ்வாறு நம்மால் முன்னெடுக்க முடியும்? அதற்காக இந்தக் கட்டுரை இலக்கை கைவிடுமாறு வாதிடவில்லை. மாறாக, இருப்பதை பாதுகாத்துக் கொண்டு. எடுப்பதை எடுத்துக் கொண்டு, முன்னேறுவோமென்றே வாதிடுகின்றது. நம் கனவுகளை சேமித்துவைப்போம். மீண்டும் பலம்பெறும் காலமொன்று வரும்போது, அந்தச் சேமிப்பை கவனமாகப் பயன்படுத்துவோம். வரலாறு முழுவதிலும் – இவ்வாறுதான் வீழ்ந்த சமூகங்கள், எழுந்திருக்கின்றன. http://www.samakalam.com/தமிழ்-தேசிய-அரசியலில்-கொ/
    3 points
  6. ஆட்டத்தின் முதல் பாதியிலிருந்தே ஆர்ஜென்ரினாதான் உலக கிண்ணத்தை தூக்கப்போகின்றது என நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில்...... யாருமே எதிர்பாக்காத ஆட்டம் முடிய 11 நிமிடங்களே இருந்த அந்த 79வது நிமிடம் உலக கால்பந்தை ரசிகர்களுக்கு ஒரு மறக்கவே இயலாத ஒரு அனுபவத்தையும், வரலாற்றின் நினைவுகளில் மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தப்படும் போட்டியாக மாறப்போகிறது என எவருமே, ஏன் பிரான்சின் பயிற்சியாளருமே கூட அறியவில்லை. மெர்சி கூட தோல்வியின் விளிம்பிற்கே சென்றிருப்பார். அந்தளவிற்கு போட்டியின் நிலைமைகள் கடைசி நிமிடங்களில் தலைகீழாக மாறி விட்டிருந்தது. பிரான்ஸ் வீரர் கிலியன் போட்டியின் கதாநாயனாக மாற்றப்பட்டார். போட்டியில் பிரான்ஸ் தான் வெற்றியீட்டும் என பலர் மாற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டனர். அந்தளவிற்கு விளையாட்டு நிலவரம் மாறியிருந்தது. எனினும் சூதாட்டம் போலவே விளையாட்டு முடிவுகளும் அமைந்து இருந்தது. ஆர்ஜென்ரினா வெற்றியடைய வேண்டியவர்கள் தான். நாட்டு பொருளாதார நெருக்கடியிலும் மக்கள் இந்த வெற்றியை கொண்டாடிய மகிழ்சியை பார்க்கும் போது சந்தோசமாகத்தான் இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் தன் வாழ்நாளை உதைபந்தாட்டத்திற்காக அர்ப்பணித்து ஓய்வு நிலைக்கு வரும் மெர்சி உலக விருதை தூக்குவதற்கும் உரித்துடையவர் தான். வாழ்த்துக்கள் ஆர்ஜென்ரினா.
    3 points
  7. இந்த போட்டியை திறமையாக நடாத்திய @கிருபன் க்கு மிகுந்த பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த களஉறவுகளுக்கு பாராட்டுக்கள். போட்டியில் முறையே முதலாம் இரண்டாம் இடங்களைப் பெற்ற @கல்யாணி @நீர்வேலியான் க்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். போட்டியில் பங்கு பற்றாமலே திரியை கலகலப்பாக வைத்திருந்த உறவுகளுக்கு நன்றிகள். இந்த போட்டி கலகலப்பாக இருக்க வேண்டுமென்று திரு @குமாரசாமி @பையன்26 @Kandiah57 ஆகியோரை மிகவும் அதிகமாகவே கலாய்த்துவிட்டேன்.குறையேதும் எண்ண வேண்டாம். நன்றி.
    3 points
  8. ரொம்ப வருசங்களுக்குப் பின் ரசித்து பார்த்த கால்பந்து விளையாட்டு..! 🤩 வெற்றி பெற்ற அர்ஜென்டைனாவிற்கும், சளைக்காமல் போராடிய ஃபிரான்சு அணிக்கும் வாழ்த்துக்களோடு அருமையான விளையாட்டு விருந்தை படைத்த இரு அணிகளுக்கும் பாராட்டுகள். 💐 யாழில் திறம்பட போட்டிகளை தொகுத்து வழங்கிய கிருபனுக்கும் நன்றி. 💐 உறவுகளின் அலப்பறையால் நானும் யாழ் போட்டியில் கலந்துகொண்டிருக்கலாமென ஒருகணம் தோன்றியது. 😍
    3 points
  9. கட்டுரைக்கு நன்றி நொச்சி. சொல்கெயிம் தமிழர்களுக்கானவர் அல்ல. அவர் ஒரு அரசியல் வியாபாரி. இன்று ரணிலுக்காக வேலை செய்ய வந்திருக்கிறார். தமிழர்கள் இவரிடமிருந்து எட்டவிருப்பதே நல்லது.
    2 points
  10. சந்தியா எக்னெலிகொட 2022 ஆம் ஆண்டுக்கான பிபிசி 100 பெண்கள் தொடரில் டிசம்பர் 6 ஆம் திகதி இலங்கையிலிருந்து செயற்பாட்டாளராக தெரிவு செய்யப்படுவதாக அறிவிக்க இன்று ஊடகங்களுக்கு உரையாற்றினார். கறுத்த உடையும், வழித்த தலையுமாக ஊடகவியலாளர் முன் தோன்றினார் அவர். 12 வருடகால துன்பங்கள் மற்றும் வேதனைகளுக்குப் பின்னரும் தனது கணவருக்கு நீதி கிடைக்கும் வரை ராஜபக்சக்கள் தனது சாபத்தில் இருந்து விடுபட மாட்டார்கள் என காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார். “எனது அன்புக் கணவர் மறைந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்த ஜனவரி 25, 2022 அன்று, அவரை காணாமல் ஆக்கிய ராஜபக்சேக்களுக்கு ‘சுவாமிபக்தி ஆதுர மஹா சபயா’ என்ற சக்தி வாய்ந்த சாபத்தை உண்டாக்குவதற்காக நான் தலையை மொட்டையடித்து கறுப்பு அங்கி அணிந்தேன். பிபிசி 100 பெண்கள் சீசன் 2022 இல் இலங்கையில் இருந்து ஆக்டிவிசம் மற்றும் அட்வகேசி என்ற பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெருமிதம் கொள்வதாக அவர் கூறினார், இதில் 25 குறிப்பிடத்தக்க பெண்கள் உலகளவில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 2010 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி எனது கணவர் கடத்தப்பட்டபோது அல்லது காணாமல் போனபோது நான் முதன்முதலில் கேமராவின் முன் வந்தேன், அதன் பின்னர் எனது கணவருக்கு நீதி தேடி பலவிதமான விவரிக்க முடியாத துன்பங்களை அனுபவித்து வந்தேன். எங்களிடம் இருந்து பிரகீத்தை பறித்து 4,712 நாட்கள் ஆகியும் என் தேடல் இன்னும் முடியவில்லை. இந்த பயணத்தின் போது பல நல்ல உள்ளம் கொண்டவர்கள் எனக்கு உதவினர், சிலர் நீதிமன்ற அறையிலிருந்து காவல் நிலையம் வரை தாமதம் செய்து ஆட்சேபித்தனர்,” என்று அவர் கூறினார். “ஜனவரி 25, 2010 அன்று நான் பொலிஸ் நிலையத்தில் இருந்தபோது, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்னை அழைத்து, பிரகீத்தை கண்டுபிடிக்க உதவுவேன், கவலைப்பட வேண்டாம் என்றார். இன்று அவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாகி விட்டார், நான் அவரிடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால், சாட்சிகளிடம் இருந்து அரசியல் அழுத்தத்தை எடுத்துக்கொண்டு பிரகீத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும், அரசியல் பழிவாங்கலுக்கு ஆளான ஆயிரக்கணக்கானோருக்கு நீதி கிடைக்க உதவ வேண்டும்” என்று அவர் கூறினார். *** இந்த பெண்ணின் பெரும் சாபம் இவ்வாண்டு ஜனவரி மாதம் உருக்கொண்டுள்ளது. அது, ராஜபக்சேக்களையும் அவர்கள் ஆண்ட நாட்டினையும் ஒரு பெரும் உலுக்கு உலுக்கித்தான் விட்டுள்ளது என்றால் மிகையாகாது. இந்நிலையில், ஐநா, யுத்த குற்ற விசாரணைக்காக $3.2M பாதீட்டினை ஒதுக்கிய செய்தியும் வெளிவந்து, அவர்களை திகைக்க வைத்துள்ளது. Source: Daily Mirror, Colombo https://www.ohchr.org/en/stories/2022/10/search-journalist-continues-12-years-after-his-disappearance
    2 points
  11. தற்போதிருக்கும் பல "மிளகாய்" ஆய்வாளர்களிடமிருந்து வித்தியாசமாக யதீந்திரா எழுதியிருக்கிறார். எத்தனை வரலாறு தெரிந்த ஆய்வாளர்கள் சவாலை ஏற்றுக் கொள்கிறார்கள் எனப் பார்க்கலாம்!
    2 points
  12. எங்களுடைய நாடுகளில்…. எம்.பி. மார் கூட, ஸ்ரேடியப் பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டான். 😂🤣 அவனுக்கு… சின்ன வீட்டுக்கு போறதுக்கே நேரம் சரியாய் இருக்கும். 😁
    2 points
  13. உலகக்கோப்பையை உச்சி முகர்ந்த மெஸ்ஸி – அர்ஜென்டினாவின் வெற்றி சாத்தியமானது எப்படி? கட்டுரை தகவல் எழுதியவர்,க. சுபகுணம் பதவி,பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு போட்டி ரசிகர்களை என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதற்குச் சிறந்த சான்று, நேற்றிரவு நடந்த கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி. அர்ஜென்டினாவும் பிரான்சும் அப்படியோர் அபாரமான ஆட்டத்தை ரசிகர்களுக்கு வழங்கினார்கள். முஷ்டிகளை மடக்கி, கை முட்டிகளை உந்தி, அர்ஜென்டினா வீரர்களும் ரசிகர்களும் காற்றில் பறந்தனர். இறுதியாக அனைத்தும் முடிந்தது. வெற்றி கிடைத்தது. உலகக்கோப்பையைச் சுமக்கும் பாக்கியம் அர்ஜென்டினாவுக்குக் கிடைத்துவிட்டது. இறுதிப்போட்டி, இரு அணிகளுக்கும் இடையிலானது, எனச் சொல்வதைவிட, மெஸ்ஸிக்கும் எம்பாப்பேவுக்கும் இடையிலானது என விவரிப்பது சரியாக இருக்கும். ஆட்டம் முடிய ஒன்பது நிமிடங்கள் இருந்த நிலையில், ஒரு பெனால்டி ஷாட் மூலம் கோல் அடித்து, அணியினருக்கு உயிர் கொடுத்தார் பிரான்ஸ் அணியின் எம்பாப்பே. பிரான்சுக்கு 19 வயதில் உலகக்கோப்பையைப் பெற்றுத்தந்த, 23 வயதான அந்த வீரர் அதோடு நிறுத்திவிடவில்லை. அதற்கு அடுத்த நிமிடத்திலேயே மற்றுமொரு கோல் அடித்து அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES 75வது நிமிடம் வரை வீறுகொண்டு தாக்கிக் கொண்டிருந்த அர்ஜென்டினா, அதற்குப் பிறகு கொஞ்சம் சாவகாசமாக விளையாடத் தொடங்கியது. ஆனால், கடைசி பத்து நிமிடங்கள் வரையல்ல, கடைசி நொடி வரை தனக்கு எதிராகப் போராடியாக வேண்டும் என்று எம்பாப்பே, அந்த இரண்டு கோல்களின் மூலம் எதிரணிக்கு உணர்த்தினார். அவருடைய அனைத்து ஆட்டத்தில் கொஞ்சம் திணறிய எதிரணி, மீண்டும் தங்களுடைய தாக்குதல் ஆட்டத்தைத் தொடங்கி, போராடி வெற்றியைப் பெற்றது. 1986ஆம் ஆண்டு கோப்பையை மாரடோனா வென்றுகொடுத்தபோது, அவர் கோப்பையைச் சுமந்தார். அணியின் வீரர்களும் ரசிகர்களும் அவரைச் சுமந்தார்கள். 36 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று, அதேபோல் மெஸ்ஸி அணிக்கு வெற்றியைப் பரிசளித்து கோப்பையைச் சுமந்தார். அணி வீரர்களும் ரசிகர்களும் அவரைச் சுமந்தார்கள். வரலாறு மீண்டும் நிகழ்ந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES கத்தாரில் நடந்த உலகக்கோப்பையின் வியத்தகு இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியைத் தோற்கடித்து, தங்களது 36 ஆண்டுக்கால கனவை அவர்கள் சாத்தியமாக்கியுள்ளார்கள். கடைசியாக மெக்சிகோவில் மாரடோனா கோப்பையைச் சுமந்தபோது ருசித்த மகிழ்ச்சியை, இப்போது மீண்டும் ருசிக்கிறார்கள். பெனால்டி ஷூட் அவுட் வரை சென்ற இந்த ஆட்டத்தில், இறுதியாக கொன்சாலோ மோன்டியெல் அடித்த நான்காவது பெனால்டியில் பந்து கோல் போஸ்டுக்குள் போனபோது, அங்கிருந்த ஒருவராலும் நிலைகொள்ள முடியவில்லை. அளவில்லா மகிழ்ச்சி அனைவரையும் ஆட்கொண்டிருந்தது. லுசைல் மைதான அரங்கில், முழுவதும் வெள்ளையும் நீலமும் ஆட்கொண்டிருந்தது. அனைவர் மனதிலும் ஓர் ஆறுதல். மகிழ்ச்சி வெடிப்பில் கத்திக் கொண்டிருந்தனர். 120 நிமிடங்களுக்கு நடந்த இறுதிப்போட்டியில், அவ்வளவுதான் ஆட்டம் முடிந்தது என நினைத்த போதெல்லாம், இல்லை நாங்கள் விட்டுவிட மாட்டோம் என்று, எம்பாப்பே சவால் விட்டுக் கொண்டேயிருந்தார். உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: 36 ஆண்டுகளுக்கு பின் கால்பந்து உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா18 டிசம்பர் 2022 மு.க.ஸ்டாலின் மெச்சிய எம்பாப்பேயின் 'கடைசிவரை விட்டுவிடாத' வீரம்9 மணி நேரங்களுக்கு முன்னர் அர்ஜென்டினா ரசிகர்களை அழவைத்த எம்பாப்வேயின் ‘ரோலர் கோஸ்டர்’ தருணங்கள்18 டிசம்பர் 2022 இறுதியில் போட்டி பெனால்டி ஷூட் அவுட்டாக சென்றது. நிகோலஸ் ஒட்டமெண்டி, கொன்சாலோ மோன்டியெல் இருவரும் இரண்டு தருணங்களில் செய்த சிறுபிழை, பிரான்ஸ் அணிக்குச் சாதகமாகவே, ஆட்டம் மிகவும் சூடு பிடித்தது. போட்டியின் 80வது நிமிடம் வரை பிரான்ஸ் அணியை ஆட விடவே இல்லை அர்ஜென்டினா. ஆனால், ஒட்டமெண்டியின் பிழையால் கிடைத்த பெனால்டியை எம்பாப்பே கோலாக்கியதும் பிரான்ஸ் அணிக்குக் கிடைத்த வீரியம் கொஞ்ச நஞ்சமல்ல. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முதல் பாதியில் ஏஞ்சல் டி மரியா வெளிப்படுத்திய ஆட்டம், அவரை உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்காக ஸ்கலோனி ஒளித்து வைத்திருந்ததைப் போல் இருந்தது. பிறகு, அடுத்தடுத்து அவர்கள் களமிறக்கிய வீரர்களான கோமன், கிங்ஸ்லி கோமன், இப்ராஹிம் கொனாடே, எட்வர்டோ காமவிங்கா ஆகியோர், ஆட்டத்தின் பாதையையே மாற்றிவிட்டார்கள். மார்கஸ் துரம், யெல்லோ கார்ட் வாங்கினாலும் சரி என்ற நிலையில் இறங்கி ஆடினார். ஆனால், அர்ஜென்டினா அணி முதன்முதலாக மாற்றாக களமிறக்கிய மார்கோஸ் அகுனா, கொஞ்சமும் சளைக்காமல் பிரான்ஸ் அணியின் பலவீனமான இடது பக்கத்திலிருந்து தாக்குதலைத் தொடர்ந்தார். அவரைத் தொடர்ந்து, மெஸ்ஸி, டி பால், ஆல்வாரெஸ் ஆகியோர் கொஞ்சம் விடாது வாய்ப்பை மூர்க்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES முதல் பாதியில் டி மரியாவின் பங்களிப்பைச் சொல்லியே ஆக வேண்டும். களத்தில் சற்று இடைவெளி விழுந்திருந்த அவரை ஸ்கலோனி ஏன் இறுதிப்போட்டியில் இறக்கினார் என்ற கேள்வி ஆரம்பத்தில் எழுந்தது. ஆனால், “அவரை இதற்காகத்தான் நான் ஒளித்து வைத்திருந்தேன்” என்னும் அளவுக்கு இருந்தது டி மரியாவின் அதிரடி. ஆம், அர்ஜென்டினா அணியின் இறுதிக்கோப்பைக்கான துருப்புச்சீட்டாக திகழ்ந்தார் டி மரியா. பெனால்டி மூலம் முதல் கோல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து, சாகசம் நிரம்பிய இரண்டாவது கோலை தானே அடித்துவிட்டு அவர் மைதானத்தில் துள்ளிக் குதித்தபோது, அவரால் அழாமல் இருக்க முடியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES 120 நிமிடங்களுக்கு நடந்த அந்தப் போரில் வெற்றியைச் சுவைத்து, அணியின் கேப்டன் லியோனெல் மெஸ்ஸி கோப்பையை உயர்த்திய சிறிது நேரத்திலேயே அரங்கம் முழுவதும் ஆனந்தக் கண்ணீர் நிரம்பி வழிந்தது. நான்கு வாரங்கள், 64 போட்டிகள், 172 கோல்களுக்கு பிறகு கத்தார் உலகக்கோப்பை போட்டி சாகசங்களையும் திருப்புமுனைகளையும் அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் ஒருங்கே அளித்து முடிவுக்கு வந்துள்ளது. பிரான்ஸ் அணியின் முதல் 60 நிமிடங்கள் சற்று தடுமாற்றங்களுடன் தான் இருந்தது. முதல் 70 நிமிடங்கள் வரையிலுமே, அங்கு ஆடிக்கொண்டிருப்பது பிரான்ஸ் அணி தானா என்ற சந்தேகம் எழும் அளவுக்கு அவர்களுடைய செயல்பாடு இருந்தது. அது அவர்களுடைய தோல்விக்கு ஒரு முக்கியக் காரணம் எனக் கூறலாம். “நாங்கள் முதல் 60 நிமிடங்களில் அவ்வளவு சிறப்பாக ஆடவில்லை. அளவுக்கு அதிகமான ஆற்றலோடு இருந்த எதிரணிக்கு ஈடுகொடுக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிலியன் எம்பாப்பே என்ற தனியொரு வீரன் அர்ஜென்டினாவுக்கு சவாலாக இருந்தார். ஆனால், நாங்கள் மீண்டு வந்தோம். ஆட்டத்தை மிகவும் கடினமான சூழலுக்குத் திசை திருப்பினோம். இந்தப் போட்டி, நிறைய உணர்ச்சிகரமான தருணங்கள் நிறைந்தது. இறுதியில் மிகவும் கடுமையாகத் தோற்றுவிட்டோம்,” எனக் கூறியுள்ளார் பிரான்ஸ் பயிற்சியாளர் டிடியெர் டெஸ்ஷாம்ப்ஸ். அவர் கூறியதைப் போலவே, 80, 81வது நிமிடங்களில் இரண்டாம் பாதியில் பிரான்ஸின் கிலியன் எம்பாப்பே அடித்த மூன்று கோல்களும் அர்ஜென்டினா ரசிகர்களின் இதயங்களை நொறுக்கிவிட்டது என்றே சொல்லலாம். கால்பந்து வரலாற்றில் மிகவும் சிறப்பான ஆட்டங்களில், வரலாற்றில் இடம் பிடிக்கக்கூடிய வகையில் இந்த இறுதிப்போட்டியை மாற்றிய தருணம் அது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அர்ஜென்டினாவின் வெற்றியைக் கொண்டாடும் கால்பந்து ரசிகர்கள் இரண்டாவது கூடுதல் நேரத்தின் இறுதியில் எம்பாப்பே உருவாக்கிய கோல் வாய்ப்பு மூலம், அங்கேயே ஆட்டம் முடிந்திருக்க வேண்டியது. கோல் கீப்பர் எமிலியானோ மார்ட்டினெஸ் அதைத் தடுத்து காப்பாற்றினார். அங்கு மட்டுமின்றி, அவருடைய செயல்பாடு பெனால்டி ஷூட் அவுட்டிலும் அபாரமாக இருந்தது. அர்ஜென்டினா விடவில்லை. இறுதிவரை அவர்களுடைய அனைத்து திறனையும் செலுத்தினார்கள். இந்த வெற்றி அவர்களுடைய 36 ஆண்டுக்கால கனவு, அதைத் தவறவிட மாட்டோம் என்ற உறுதியை, அணியிலிருந்த ஒவ்வொருவரின் ஆட்டமும் காட்டியது. அதற்கான பரிசுதான் இந்தக் கோப்பை. https://www.bbc.com/tamil/articles/c4ne1qz8n1qo
    2 points
  14. உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டியில் சாதனை படைக்கும் நாடுகள்/வீரர்கள் தொடர்பான கேள்விகளும் யாழ்களப் போட்டியாளர்களின் பதில்களும் கீழே தரப்படுகின்றன. கேள்விகள் 81) இலிருந்து 88) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும்: ---------------------------------------------------------- 81) அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Kylian Mbappe (FRA) - 8 கோல்கள் சரியாகக் கணித்தவர்கள்: நுணாவிலான், தமிழ் சிறி, கறுப்பி போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் Lionel Messi சுவி Antoine Griezmann வாத்தியார் Cristiano Ronaldo பிரபா Serge Gnabry முதல்வன் Karim Benzema கந்தையா Kevin De Bruyne ஏராளன் Lionel Messi சுவைப்பிரியன் Cristiano Ronaldo நுணாவிலான் Kylian Mbappe கல்யாணி Robert Lewandowski கிருபன் Karim Benzema தமிழ் சிறி Kylian Mbappe புலவர் Cristiano Ronaldo அகஸ்தியன் Karim Benzema வாதவூரான் Cristiano Ronaldo நிலாமதி Cristiano Ronaldo பையன்26 Neymar எப்போதும் தமிழன் Neymar குமாரசாமி Neymar கறுப்பி Kylian Mbappe நீர்வேலியான் Lionel Messi 82) அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 81 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!) Kylian Mbappe (FRA) - 8 கோல்கள் சரியாகக் கணித்தவர்கள்: பிரபா, முதல்வன், நுணாவிலான், கிருபன், நீர்வேலியான் போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் ARG சுவி ARG வாத்தியார் POR பிரபா FRA முதல்வன் FRA கந்தையா BEL ஏராளன் ARG சுவைப்பிரியன் GER நுணாவிலான் FRA கல்யாணி POL கிருபன் FRA தமிழ் சிறி POR புலவர் POR அகஸ்தியன் BEL வாதவூரான் POR நிலாமதி POR பையன்26 BRA எப்போதும் தமிழன் BRA குமாரசாமி BRA கறுப்பி POR நீர்வேலியான் FRA 83) போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Lionel Messi (ARG) - தொடரின் சிறந்த வீரர் சரியாகக் கணித்தவர்கள்: ஈழப்பிரியன், வாத்தியார், கல்யாணி, தமிழ் சிறி, புலவர், வாதவூரான், எப்போதும் தமிழன், கறுப்பி, நீர்வேலியான் போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் Lionel Messi சுவி Cristiano Ronaldo வாத்தியார் Lionel Messi பிரபா Kylian Mbappe முதல்வன் Kylian Mbappe கந்தையா Neymar ஏராளன் Kylian Mbappe சுவைப்பிரியன் Antoine Griezmann நுணாவிலான் Karim Benzema கல்யாணி Lionel Messi கிருபன் Neymar தமிழ் சிறி Lionel Messi புலவர் Lionel Messi அகஸ்தியன் Vinicius Junior வாதவூரான் Lionel Messi நிலாமதி Antoine Griezmann பையன்26 Neymar எப்போதும் தமிழன் Lionel Messi குமாரசாமி Neymar கறுப்பி Lionel Messi நீர்வேலியான் Lionel Messi 84) போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 83 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!) Lionel Messi (ARG) - தொடரின் சிறந்த வீரர் சரியாகக் கணித்தவர்கள்: ஈழப்பிரியன், கல்யாணி, தமிழ் சிறி, புலவர், எப்போதும் தமிழன் போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் ARG சுவி FRA வாத்தியார் BRA பிரபா FRA முதல்வன் FRA கந்தையா BRA ஏராளன் FRA சுவைப்பிரியன் ENG நுணாவிலான் FRA கல்யாணி ARG கிருபன் FRA தமிழ் சிறி ARG புலவர் ARG அகஸ்தியன் FRA வாதவூரான் FRA நிலாமதி FRA பையன்26 BRA எப்போதும் தமிழன் ARG குமாரசாமி BRA கறுப்பி BRA நீர்வேலியான் BRA 85) போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Kylian Mbappe (FRA) - 8 கோல்கள் சரியாகக் கணித்தவர்கள்: ஈழப்பிரியன், பிரபா, முதல்வன், கல்யாணி போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் Kylian Mbappe சுவி Lionel Messi வாத்தியார் Cristiano Ronaldo பிரபா Kylian Mbappe முதல்வன் Kylian Mbappe கந்தையா Harry Kane ஏராளன் Cristiano Ronaldo சுவைப்பிரியன் Xherdan Shaqiri நுணாவிலான் Lionel Messi கல்யாணி Kylian Mbappe கிருபன் Lionel Messi தமிழ் சிறி Cristiano Ronaldo புலவர் Cristiano Ronaldo அகஸ்தியன் Lionel Messi வாதவூரான் Antoine Griezmann நிலாமதி Lionel Messi பையன்26 Neymar எப்போதும் தமிழன் Lionel Messi குமாரசாமி Thomas Muller கறுப்பி Cristiano Ronaldo நீர்வேலியான் Harry Kane 86) போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 85 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!) Kylian Mbappe (FRA) - 8 கோல்கள் சரியாகக் கணித்தவர்கள்: ஈழப்பிரியன், பிரபா, முதல்வன், கல்யாணி, கிருபன், கறுப்பி, நீர்வேலியான் போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் FRA சுவி POR வாத்தியார் POR பிரபா FRA முதல்வன் FRA கந்தையா ENG ஏராளன் POR சுவைப்பிரியன் CRO நுணாவிலான் ARG கல்யாணி FRA கிருபன் FRA தமிழ் சிறி POR புலவர் POR அகஸ்தியன் BRA வாதவூரான் ESP நிலாமதி GER பையன்26 BRA எப்போதும் தமிழன் ARG குமாரசாமி GER கறுப்பி FRA நீர்வேலியான் FRA 87) போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Emiliano Martinez (ARG) சரியாகக் கணித்தவர்கள்: கல்யாணி, எப்போதும் தமிழன் போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் Steve Mandanda சுவி Manuel Neuer வாத்தியார் Ederson பிரபா Manuel Neuer முதல்வன் Alisson கந்தையா Manuel Neuer ஏராளன் Alisson சுவைப்பிரியன் Manuel Neuer நுணாவிலான் Alisson கல்யாணி Emiliano Martinez கிருபன் Alisson தமிழ் சிறி Alisson புலவர் Manuel Neuer அகஸ்தியன் Alphonse Areola வாதவூரான் Manuel Neuer நிலாமதி Manuel Neuer பையன்26 Alisson எப்போதும் தமிழன் Emiliano Martinez குமாரசாமி Manuel Neuer கறுப்பி Alisson நீர்வேலியான் Alisson 88) போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள், கேள்வி 87 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான நாட்டைச் சேர்ந்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை!) Emiliano Martinez (ARG) சரியாகக் கணித்தவர்கள்: கல்யாணி, நிலாமதி, எப்போதும் தமிழன், நீர்வேலியான் போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் FRA சுவி GER வாத்தியார் BRA பிரபா GER முதல்வன் BRA கந்தையா GER ஏராளன் BRA சுவைப்பிரியன் ENG நுணாவிலான் BRA கல்யாணி ARG கிருபன் FRA தமிழ் சிறி BRA புலவர் GER அகஸ்தியன் BRA வாதவூரான் GER நிலாமதி ARG பையன்26 BRA எப்போதும் தமிழன் ARG குமாரசாமி GER கறுப்பி FRA நீர்வேலியான் ARG
    2 points
  15. அப்படியல்ல, ஐயா. பிறந்து வளர்ந்த இடத்தில் தாய்மொழி தமிழ் மட்டுமே இல்லாமல், மற்ற மொழிகளோடு அல்லது அதன் ஆதிக்கத்தையே பார்த்துவிட்டு, தமிழ் மட்டுமே அனைத்து இடங்களிலும் என்பதை பார்த்து, பழகி உணர்கையில் நிச்சயம் மனதில் ஒரு சிலிர்ப்பும், புத்துணர்ச்சியும் இருக்கும். ஏனெனில், தமிழ் நம் இதயத்தோடும், உணர்வோடும் பிணைந்தது. இதை நான் ஒவ்வொரு முறையும் இங்கிருந்து தமிழ்நாடு சென்று கால் பதிக்கும்போது உணர்கிறேன். அவ்வளவு ஏன், இங்கிருக்கும் கடைகளில் தமிழில் எங்காவது எழுதியிருந்தால் அந்த கடைக்குதான் நான் முதலில் செல்வேன்..! உதாரணத்துக்கு, இரண்டு மாதங்களுக்கு முன் இங்கே 23 வருடங்களாக இயங்கி வந்த தமிழ் முடி திருத்தும் கடை ஒன்று மூடப்பட்டுவிட்டது. வேறு வழியின்றி சில வீதிகளில் ஏதாவது தமிழ் தெரிந்த முடி திருத்துபவர் இருக்கிறாரா..? என தேடினேன்(முடி திருத்தப்படும்போது ஏதாவது தமிழில் உரையாடுவது வழக்கம்). எங்கும் அருகில் இல்லை. ஆனால் ஒரு கடையில் மற்ற மொழிகளோடு (அரபி, வங்காளம்) தமிழில் "சலூன்" என மேலே முதலில் எழுதியிருந்தது. உள்ளே சென்று "தமிழா..?" என விசாரித்தேன். கடைக்காரர் "அண்ணே.." என என்னை தமிழில் விளித்துவிட்டு, ஆங்கிலத்தில் சொன்னார், "இங்கே தமிழர் ஒருவர் வேலை பார்த்து வந்தார், இப்பொழுது இங்கே இல்லை, ஆனால் அவரை தேடி தமிழ் வாடிக்கையாளர்கள் சிலர் வருவதுண்டு, அவர்தான் கடைக்கு வெளியே தமிழிலும் மேலே எழுத சொன்னார்". இப்பொழுது அந்தக் கடையில் முழுவதும் பெங்காளிகளே வேலை செய்கிறார்கள். ஆனால் ஏனோ நான் இரண்டு மாதங்களாக அந்தக் கடையில்தான் முடி திருத்த செல்கிறேன். இது சிறு நிகழ்வாக இருக்கலாம், ஆனால் அக்கடையோடு பிணைப்பிற்கு தமிழே காரணம். இம்மாதிரி, நிழலி தமிழ்நாட்டில் இறங்கியவுடன், 'எங்கும் தமிழ், எதிலும் தமிழ் மட்டுமே' என்பதை புத்துணர்வோடு உணர்ந்திருக்கலாம், அவரின் உணர்வை புரிந்து, மனதார பாராட்டுகிறேன்..! 👍 💐 நன்றி, நிழலி..! அடுத்தது 'தமிழ்நாட்டில் மக்கள் நெருக்கம்' பற்றியது. நான் முதன் முதலில்(1998) துபைக்கு மதியம் வந்து இறங்கி, விமான நிலையத்திலிருந்து டாக்சியில் வெளியே வந்தால், சாலையில், தெருவில் ஒரு பயலையும் காணோம்..! 😲 🧐 'என்னடா நாடுதான் பொட்டல் என்றால், சனங்கள் இல்லாத பொட்டல் தெருக்களாக இருக்கிறதே..!' என மலைப்பும், உறுத்தலும் இருந்தன. சில சமயம் ஈழத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வல்வட்டுத்துறை இன்னபிற காணொளிகளை காணும்போது, சில சனங்களே மிதிவண்டிகளில் அல்லது வாகனங்களில் செல்வதை பார்க்கையில் 'இப்படி அத்துவான காடாக இருக்கிறதே..!' என வியப்பதுண்டு. ஏனெனில், தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் மக்கள் அடர்த்தி அதிகம். அதுவே எமக்கும் வாழ்ந்து பழகியது..! வெளிநாடுகளிலிருந்து இங்கு வருபவர்களுக்கு மக்கள் நெருக்கம் என்பது ஆச்சரியம்தான், ஆனால், எங்களுக்கு அது மிகச் சாதாரணம்..! இது குளிர் மற்றும் வெப்ப நாடுகளில் வாழ்பவர்கள், ஒருத்தருக்கொருத்தர் 'எப்படி ஐயா இப்படிப்பட்ட சூழலில் வாழ்கிறீர்கள்..?' என சொல்லிக்கொள்வது போன்றதுதான். முடிவாக, தமிழர்களின் மக்கள் தொகை அதிகம் இருந்தால் நல்லதுதானே..? 😍 இல்லையெனில், இலங்கை மாதிரி சிறுபான்மை ஆகிவிடுவோம் ஐயா..! 😂 அதுவே உங்கள் விருப்பமா..? 😜 சொல்லுங்கள், கோப்பால்..!! 🤣
    2 points
  16. உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: 36 ஆண்டுகளுக்கு பின் கால்பந்து உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா கட்டுரை தகவல் எழுதியவர்,க. சுபகுணம் பதவி,பிபிசி தமிழ் 18 டிசம்பர் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முதல் கோல் அடித்தபின் கொண்டாடும் மெஸ்ஸி 36 ஆண்டுகளுக்கு பின் கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜென்டினா வென்றுள்ளது. இரண்டு அணிகளும் தலா மூன்று கோல் அடித்த நிலையில்; பெனால்டி ஷூட் அவுட்டில் பிரான்ஸை 4-2 என்ற கணக்கில் வென்றது அர்ஜென்டினா. எமிலியானோ மார்ட்டினெஸ், ஐந்து பெனால்டி ஷூட்களில் இரண்டை தடுத்து அணியைக் காப்பாற்றினார். பிரான்ஸ் அணிக்கு எதிராக, அர்ஜென்டினாவிலிருந்து மெஸ்ஸி, டிபாலா, பாரெடெஸ், மோன்டியல் ஆகியோர் தொடர்ந்து கோல் அடித்து, பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றியை உறுதி செய்தார்கள். அர்ஜென்டினாவின் வரலாற்று வெற்றியை இறுதியாக மோன்டியெல்லின் கோல் உறுதி செய்தது. அர்ஜென்டினா ரசிகர்களின் 36 ஆண்டுக்கால கனவு இந்த முறை சாத்தியமாகியுள்ளது. ஒவ்வொரு வீரரின் கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர் பொங்கி வழிகிறது. அங்குள்ள அனைவரின் பார்வையும் லியோனெல் மெஸ்ஸியின் மீதே உள்ளது. அவருடைய சாதனைகளில் இல்லாமல் இருந்த ஒரேயொரு வெற்றி, உலகக் கோப்பையாகவே இருந்தது. அதுவும் இன்று சாத்தியமாகியுள்ளது. உலகத்திற்கே மகிழ்ச்சியளித்த ஒரு கால்பந்து கலைஞனின் உலகக்கோப்பை "இறுதிப்போட்டி"முழுவதும் அன்பால் நிரம்பியுள்ளது. இப்படியொரு அபாரமான போட்டியின் மூலம் கால்பந்து விளையாட்டு அவருக்கு உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து அவருக்கு பிரியாவிடை அளிக்கிறது என்றே சொல்ல வேண்டும். இரண்டாம் பாதியில் பிரான்ஸின் எம்பாப்பே அடித்த மூன்று கோல்களும் அர்ஜென்டினா ரசிகர்களின் இதயங்களை நொறுக்கிவிட்டது என்றே சொல்லலாம். கால்பந்து வரலாற்றில் மிகவும் சிறப்பான ஆட்டங்களில் ஒன்றாக இந்த இறுதிப்போட்டி மாறியதற்கு முக்கியக் காரணம் அவர்தான். 2018இல் பிரான்ஸ் அணிக்காக, 19 வயதில் எம்பாப்பே உலகக்கோப்பையை வென்று, உலகளாவிய பார்வையைப் பெற்றார். மெஸ்ஸியின் 'மந்திரக் கால்கள்' நிகழ்த்திய 5 மாயாஜாலங்கள்17 டிசம்பர் 2022 மொரோக்கோ வீரர் ஹக்கிமிக்கு தாயின் அன்பு இன்னொரு வெற்றியைத் தருமா?17 டிசம்பர் 2022 கோபப்பட்ட மெஸ்ஸி... வைரலான வீடியோ - பின்னணி என்ன?13 டிசம்பர் 2022 முதல் பாதியில் அர்ஜென்டினாவில் ஆதிக்கம் அர்ஜென்டினா அணியினர் முதல் பாதியில், வெறும் தங்களுடைய தற்காப்பையும் மெஸ்ஸி, ஆல்வாரெஸின் தாக்குதலையுமே நம்பியிருக்காமல், பிரான்ஸ் அணியைச் சிந்திக்க விடாமல் ஆடினார்கள். டி மரியா, டிபால், மெக் ஆலிஸ்டர், ரொமேரோ என்று அனைவரும் அதிரடி ஆட்டத்தைக் காட்டினார்கள். அதற்கான பலனாக பிரான்ஸை திணறடித்தது, அவர்களுடைய தடுப்பாட்டமும் தாக்குதல் ஆட்டமுமே. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எமிலியானோ மார்ட்டினெஸ் அர்ஜென்டினா இதற்கு முன்பு 1930ஆம் ஆண்டில் இதேபோல் இரண்டு கோல் முன்னிலையில் உருகுவேகவுக்கு எதிராக இருந்தது. ஆனால், இறுதியில் உருகுவே 4-2 என்ற கணக்கில் வென்றது. எம்பாப்பே பெனால்டி ஷாட்டை கோலாக்கி, பிரான்ஸுக்கான முதல் கோலை அடித்தார். ஒட்டமெண்டியின் தவறால், பிரான்ஸுக்கு ஒரு கம்பேக் கிடைத்தது. எம்பாப்பேவின் ஆறாவது உலகக்கோப்பை கோல் இது. ஒரேயொரு தனிமனித தவறால் அர்ஜென்டினாவுக்கு மீண்டும் ஓர் அபாய நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் பிரான்ஸுக்காக கிலியன் எம்பாப்பே ஒரு கோல் அடித்தார். எம்பாப்பே ஏழாவது கோலுடன், கோல்டன் பூட் பெறுவதற்கான போட்டியில் முன்னிலைக்கு வந்துள்ளார். ஓர் அணி முதல் பாதியில் இருந்த அதே ஆக்ரோஷத்துடன் ஆடுவது சிரமம் தான். ஆனால், அர்ஜென்டினா இந்த முறை அதைச் செய்தது. அர்ஜென்டினா செய்த சிறு தவறால், எம்பாப்பே பந்தை அவர்களுடைய எல்லைக்குள் கொண்டு சென்றார். ஆனால், அவர் இறுதி நேரத்தில் தடுக்கப்பட்டார். அதில் கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பையும் கோல் கீப்பர் மார்ட்டினெஸ் தடுத்துவிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒரு கோல் அடித்ததோடு, இன்னொரு கோலுக்கான பெனால்டியையும் பெற்றுக்கொடுத்த டி மரியா 64வது நிமிடத்தில் வெளியேறினார். அர்ஜென்டினாவின் டி மரியாவின் ஆட்டம் ஓர் ஆச்சர்யம் தான். அவர் இடையே சில காலம் ஆடவில்லையே, அவரை ஏன் இப்போது இறக்கினார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அவருடைய ஆட்டத்தை இறுதிப்போட்டிக்காக ஸ்கலோனி ஒளித்து வைத்திருந்ததைப் போலவே தோன்றியது. ஒரு கோல் அடித்ததோடு, இன்னொரு கோலுக்கான பெனால்டியையும் பெற்றுக்கொடுத்த டி மரியா 64வது நிமிடத்தில் வெளியேறினார். அவருக்கு பதிலாக தடுப்பாட்டக்காரரான அகுனா களமிறக்கப்பட்டார். 64 நிமிடங்களில் ஒரு வீரரால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் அவர் அணிக்காக செய்துகொடுத்து விட்டுச் சென்றார். பிரான்ஸின் ஆட்டம் அவ்வளவு திறன் மிக்கதாக இந்தத் தொடர் முழுவதுமே இருந்தது. ஆனால், இந்த ஆட்டத்தில் அவர்களை ஆடவே எதிரணி விடவில்லை. இரண்டாவது பாதியில் அவர்கள் கோல் அடித்தே ஆக வேண்டிய கட்டாயம் இருந்தது. அப்போதுதான் எம்பாப்பே ஹாட்ரிக் கோல் அடித்தார். அர்ஜென்டினாவின் முதல் கோல் 23வது நிமிடத்தில் பெனால்டியை பயன்படுத்தி போட்ட மெஸ்ஸி கோல் மூலம் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் பிரான்ஸைவிட முன்னிலை பெற்றது. இறுதிப்போட்டி தொடங்கிய ஐந்து நிமிடங்களிலேயே லியோனெல் மெஸ்ஸி, ஹூலியன் ஆல்வாரெஸ், டி மரியா மூவரும் உருவாக்கிய கோல் வாய்ப்பு, அர்ஜென்டினா ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. அந்த முயற்சி தோல்வியடைந்திருந்தாலும், அவர்களுடைய ஆட்டம் எப்படியிருக்கப் போகிறது என்பதையும் காட்டியது. அதுமட்டுமின்றி, ஆல்வாரெஸின் பணி தாக்குதல் மட்டுமில்லை, பந்தை அர்ஜென்டினாவின் எல்லைக்குள் செல்லவிடாமல் பிரான்ஸின் பக்கமே தக்கவைக்க வேண்டிய பணியும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருப்பதைப் போல் இருந்தது. மெஸ்ஸி இந்த உலகக் கோப்பையில் ஐந்து கோல்களை அடித்துள்ளதோடு, கோல் அடிப்பதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். மெஸ்ஸி, ஆல்வாரெஸ் இருவரும், ஒருவித தீவிர தாக்குதல் ஆட்டத்தைத் தொடங்கியிருந்தனர். அப்படிப்பட்ட ஒரு கோல் முயற்சியில், கிறிஸ்டியன் ரொமேரோவால் எதிரணியின் கோல் கீப்பரும் கேப்டனுமான ஹ்யூகோ லோரிஸ் சற்று தடுமாறினார். முதலுதவிக்குப் பிறகு மீண்டும் ஆடத் தொடங்கினார். ஆல்வாரெஸ் செய்த கோல் முயற்சிகளை தியோ ஹெர்னான்டெஸ் தடுத்துக் கொண்டிருந்தார். மொலினாவும் எம்பாப்பே செல்லக்கூடிய இடங்களுக்கெல்லாம் நிழல் போலத் தொடர்ந்தார். ஆட்டம் தொடங்கிய முதல் 15 நிமிடங்களில் அர்ஜென்டினாவின் வசமே 38 சதவீதத்திற்கும் மேல் பந்து இருந்தது. பிரான்ஸ் மிகக் குறைவாகவே பந்தின் மீது ஆதிக்கம் செலுத்தியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி மற்றும் பிரான்சின் கிலியன் எம்பாப்பே ஆட்டம் தொடங்கியதிலிருந்து முதல் 20 நிமிடங்களில் எம்பாப்பே தடுப்பாட்டத்திலும் சரி தாக்குதல் ஆட்டத்திலும் சரி அவ்வளவு வீரியமாகக் களமிறங்காமலே இருந்தார். அந்த நேரத்தில் 21வது நிமிடத்தில், அர்ஜென்டினாவுக்கு டி மரியா மூலமாக பெனால்டி கிடைத்தது. டி மரியா களத்தில் இறங்கியது முதல் இடதுபுறத்திலேயே ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடைய முயற்சிகள் அனைத்தும் இதை நோக்கியே இருந்ததைப் போல் இருந்தது. டி மரியா ஏற்படுத்திக் கொடுத்த பெனால்டி வாய்ப்பை, மெஸ்ஸி தவறவிடாமல் கோலாக்கினார். இதன்மூலம் இந்த உலகக் கோப்பையில் அவர் 6 கோல்களை அடித்துள்ளார். கோல் கீப்பரை வேறுபுறம் திசை திருப்பி, மிகவும் கூலாக தனது மெஸ்ஸி ஸ்பெஷல் ஷாட்டை அடித்தார். அந்த நேரத்தில், ஒருவேளை மைதானத்திற்குள் மாரடோனா இருந்திருந்தால் எப்படி உணர்ந்திருப்பார் என்பது தான் முதலில் தோன்றியது. 2018ஆம் ஆண்டில் அவர் பெனால்டி ஷாட்டை மிஸ் செய்தபோது மாரடோனாவின் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தை மறக்க முடியவில்லை. இப்போது உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவர் அடித்திருக்கும் இந்த கோலை, மெஸ்ஸியை பொறுத்தவரை அவர் வானத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறார். டி மரியா அடித்த 2ஆம் கோல் அர்ஜென்டினாவுக்கு இரண்டாவது கோல் 36வது நிமிடத்தில் கிடைத்தது. மெஸ்ஸி இடது காலில் அழகாக அடித்த ஒன் டச் பாஸை, மெக் ஆலிஸ்டர் பிரான்சின் எல்லைக்குள் கொண்டு சென்று, டி மரியாவுக்கு பாஸ் செய்தார். டி மரியா அந்த வாய்ப்பை கோலாக்கினார். கோபா அமெரிக்காவின் இறுதிப் போட்டியில் இதேபோல் டி மரியா கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த முறையும் அதேபோல், அர்ஜென்டினாவுக்காக இறுதிப் போட்டியில் அவரை இறக்கியதற்கு அவர் மிகப்பெரிய ஒன்றைச் சாத்தியமாக்கினார். மிகவும் திட்டமிடப்பட்ட கச்சிதமான கோல். ஒரு தோல்வியில் தொடங்கிய அர்ஜென்டினாவின் ஆட்டம், இறுதிப்போட்டியில் டி மரியாவின் இரண்டாவது கோல் வரை வந்து நின்றது. அர்ஜென்டினாவின் தாக்குதலும் சரி மிட் ஃபீல்டும் சரி மிகவும் திட்டமிடப்பட்டதாக இருந்தது. ஆனால், வழக்கமாக மிகுந்த ஒருங்கிணைப்போடு இருக்கும் பிரான்ஸ் அணியின் திறமையான வெளிப்பாடு எங்கே சென்றது என்பதைப் போல் உள்ளது. டி மரியாவின் ஆட்டம் இன்று அணிக்கு மிகவும் உதவியது. அர்ஜென்டினா வீரர்களைப் பார்த்தால், இறுதிப்போட்டி என்ற அழுத்தம் இருப்பதைப் போலவே தெரியவில்லை. அந்தளவுக்கு மிகவும் கூலாக விளையாடினார்கள். உப்பமெக்கானோ, மெஸ்ஸியை நிழல் போல் தொடர்ந்து அவர் காலுக்கு பந்து கிடைக்காமல் தடுக்கப் பலமுறை முயன்றாலும், அவரால் அதைச் செய்ய முடியவில்லை. எம்பாப்பே ஒருபுறம் பெரியளவில் தடுக்கப்பட்டார். அர்ஜென்டினா அவரைக் கட்டம் கட்டி தடுத்திருந்தது. பிரான்ஸ் அணிக்காக எம்பாப்பெ செய்ய வேண்டியதை, அர்ஜென்டினா அணிக்காக டி மரியா செய்துகொண்டிருந்தார். பிரான்ஸ் அணி பந்தைத் தங்கள் வசம் கொண்டு வந்து, கிலியன் எம்பாப்பே கொண்டு செல்லும்போது, அவரிடமிருந்து, மெஸ்ஸி, டிபால், ஃபெர்னாண்டெஸ் மூவரும் மிகச் சாதாரணமாகப் பறித்துவிட்டனர். அதைத் தொடர்ந்து எம்பாப்பே ஒரு ஃபௌலும் செய்தார். அது நடந்த அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் டி மரியா கொண்டு சென்ற பந்தைப் பெற்று ஆல்வாரெஸ் கோல் வாய்ப்பை உருவாக்கிவிட்டார். முன்னிலையில் தாக்குதல் இடத்தில் மெஸ்ஸி, ஆல்வாரெஸ், டி மடியா மூவரையும் நிலைநிறுத்தியது, மிகச் சரியான முடிவாகவே தெரிந்தது. இந்த இரு அணிகளுமே இதற்கு முன்பு தலா இரண்டு முறை ஃபிஃபா உலகக்கோப்பையை வென்றுள்ளன. அர்ஜென்டினா கடைசியாக 1986இல் உலகக்கோப்பையை வென்றது. அர்ஜென்டினா அணிக்கு தலைமை தாங்கும் லியோனல் மெஸ்ஸி 1987இல் பிறந்தவர். 35 வயதுள்ள அவருக்கு இதுதான் கடைசி உலகக்கோப்பை போட்டி. கடைசியாக 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் குரேஷியாவை வீழ்த்திய பிரான்ஸ் இந்த முறையும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. கடைசியாக 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் குரேஷியாவை வீழ்த்திய பிரான்ஸ் இந்த முறையும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. படக்குறிப்பு, அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகள் கத்தார் உலகக்கோப்பை 2022ல் கடந்துவந்த பாதை இறுதிப்போட்டிக்கு முன்னர் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகளின் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. கத்தாரில் நடக்கும் இந்தக் கால்பந்து உலகக்கோப்பை தொடர்களிலேயே மிகவும் அதிகமான பொருட்செலவில் நடத்தப்படும் தொடர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Twitter பதிவை கடந்து செல்ல காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு அர்ஜென்டினா ஆறாவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்கிறது. 1978 மற்றும் 1986ல் வெற்றி பெற்ற அவர்கள் 1930, 1990 மற்றும் 2014ல் தோல்வியடைந்தனர்.ஜெர்மனி (எட்டு) மட்டுமே உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிகமுறை பங்கேற்ற அணி என்ற பெயரைப் பெற்றிருக்கிறது. பிரான்ஸ் நான்காவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. பிரான்ஸ் 2006, 1998, 2018 ஆகிய ஆண்டுகளில் இதற்கு முன் கால்பந்து உலகக்கோப்பையில் விளையாடியுள்ளது. இதில் 1998 மற்றும் 2018இல் வென்றுள்ளது. இதுவரை இரு அணிகள் மட்டுமே அடுத்தடுத்து கால்பந்து உலகக்கோப்பையை வென்றுள்ளன. 1958 மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளில் பிரேசில் அணி கால்பந்து உலகக்கோப்பையை வென்றுள்ளது. அதற்கு முன் 1934 மற்றும் 1938 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு முறை இத்தாலி வென்றது. இம்முறை பிரான்ஸ் வென்றால் இந்த சாதனையைச் செய்த மூன்றாம் அணி என்ற பெருமையை பெற்றிருக்கும். https://www.bbc.com/tamil/articles/c0drerg3p4yo
    1 point
  17. முள்ளிவாய்க்கால் இரண்டாம் பாகம் நோக்கித் தமிழினம்?- மா.பு.பாஸ்கரன் Posted on December 14, 2022 by சமர்வீரன் 35 0 தமிழீழ விடுதலைப் போராட்டம் எப்போதெல்லாம் தமிழினத்துக்குச் சாதகமான திருப்புமுனையைச் சந்திக்கிறதோ அப்போதெல்லாம் அது வீழ்த்தப்பட்டதே வரலாறு. சிங்களம் தமிழ்த் தரப்போடு செய்த உடன்பாடுகளைத் தூக்கியெறிந்த சந்தர்ப்பங்கள் பல(1918 – 1965) ஆனால், மூன்றாம் தரப்பொன்றின் தலையீட்டில் எட்டப்பட்ட இரண்டு ஒப்பந்தங்கள் கூடச் சிங்களத்தால் நிராகரிக்கப்பட்டதே வரலாறு. இந்திய – இலங்கை ஒப்பந்தமானது பாதிக்கப்பட்ட தரப்பினது ஆலோசனைகளை நிராகரித்து இரு அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தமாக உருவாகியிருந்தது. அதில் தமிழர் தாயகமான இணைந்த வட-கிழக்கு என்ற விடயம் சேர்க்கப்பட்டிருந்தது. அதனை மக்கள் விடுதலை முன்னணி(JVP) என்ற சிவப்புக்கொடியினுள் ஒழிந்திருக்கும் சிங்கள இனவாதக் கட்சியானது சிறிலங்கா சிங்கள நீதிமன்றில் வழக்கொன்றின் ஊடாக வடக்கு, கிழக்கு எனத் தனித்தனி மாகாணங்கள் ஆக்கப்பட்டுள்ளன. அதேவேளை இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட காணி மற்றும் காவற்றுறை அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. அவற்றை வழங்கக்கூடாது என்று அரசிலிருக்கும் அமைச்சர்களே குரலெழுப்புகின்றனர். வட மாகாணசபையின் ஆட்சிக்காலத்தில் வளர்ச்சிப்பணிகளை முன்னெடுக்கும் நோக்கில் வட மாகாணசபையால், வட மாகாண நிதியத்திற்கான திட்டவரைபு முன்மொழியப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டபோது அது நிராகரிக்கப்பட்டுத் தூக்கி எறியப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் அவர்களது “சுதுமலைப் பிரகடணம்” என்று சுட்டப்படும் இந்திய – இலங்கை ஒப்பந்தம் தொடர்பான கொள்கைவிளக்க உரையிற் கூறப்பட்ட விடயங்கள் பின்னாளிற் தமிழினத்தின் அனுபவமானது. அவரது உரைப்பகுதியிலிருந்து, இந்த உடன்படிக்கையின் மூலம் நிரந்தரத்தீர்வு வரும் என்று நான் நினைக்கவில்லை. சிங்கள இனவாதப் பிசாசு இந்த உடன்படிக்கையை விழுங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. தமிழீழ மக்களின் பிரச்சினைகளுக்கான நிரந்தரத்தீர்வைத் தமிழீழத் தனியரசு மட்டும்தான் தரமுடியும் என்பதுதான் எனது கணிப்பும் மாறாத நம்பிக்கையுமாகும்’ என்பதோடு தமிழினத்தின் பாதுகாப்பை இந்தியாவின் கைகளில் அளித்தமையும், அதன் பின்னான இந்தியப் படைகளின் காலமென்பது இருண்டகாலமாகக் கடந்துவிடத் தமிழினம் தனது விடுதலை நோக்கிய பயணத்தில் வீறுடன் தொடர்ந்தது. அமைதிப்புறா வேடமிட்டு வந்த சந்திரிகா அரசும் தமிழின அழிப்பில் எந்த சிங்களத் தலைமைக்கும் தாம் சளைத்தவரல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் மாபெரும் புலப்பெயர்வையும் இனஅழிப்பையும் மேற்கொண்டதை வரலாறு பதிவுசெய்துகொண்டது. பின்னாளில் சிறிலங்காப்படைகள் தீச்சுவாலையை மூட்டியதன் விளைவாக படைவலுவிலான முதுகெலும்பு முறிந்த நிலையில், புலிகளது படைவலு மேலோங்கியிருந்த நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தைப் படலத்தைக் கையிலெடுத்தனர். இம்முறை நோர்வே சமாதான முன்னெடுப்பில் களமிறங்கிச் செயற்படலானது. சிறிலங்கா அரசானது சமாதானச் செயற்பாடுகளை நேர்மையாகக் கையாளாது என்பதைத் குறிப்பிட்டவாறு தமிழர் தலைமை சமாதானத்தை நோக்கிய தனது மெய்நிலையை வெளிப்படுத்தியதோடு, அதனைக் கடைப்பிடித்துச் செயற்படலாயிற்று. ஆனால், மறுவளமாகச் சிறிலங்கா அரசதரப்பும் இந்திய – மேற்குலகக் கூட்டும் சமாதானத்தை தமிழினத்தின் இருப்பை தகர்க்கும் பொறியாகப் பயன்படுத்தியதோடு, படைவலுச் சமநிலையை மாற்றியமைத்ததோடு, புலிகள் மீதான தடையையும் ஏற்படுத்திச் சமாதான முன்னெடுப்புகளைப் பலவீனப்படுத்தியமையைத் தமிழினம் மனம்கொள்ள வேண்டும். இறுதியாக 2006ஆம் ஆண்டு ஒருதலைப்பட்சமாக சமாதான ஒப்பந்தத்தை கிழித்தெறிந்துவிட்டு மாபெரும் தமிழின அழிப்போடு 2009இல் ஆயுதப்போர் மௌனித்துவிடத் தமிழின அழிப்புத்தொடர்கிறது. தமிழின அழிப்பின் விளைவாக ஊதிப்பெருத்துவிட்ட படைத்துறை செலவினங்களோடு, போர் ஓய்ந்துவிட்ட 13 ஆண்டுகளிற் ஊழல்களும் சேர்ந்துவிட நாட்டில் பெரும் பொருண்மிய நெருக்கடி சூழ்ந்துகொண்டது. அந்தச் சூழலில் ஏற்பட்ட சிங்கள மக்களின் எழுச்சியின் விளைவாக, வீழ்த்த முடியாத முடிசூடா மன்னனாக வந்த கோத்தபாய ராயபக்ச அரசுத் தலைவர் பதவியிலிருந்து தப்பியோட, நாடாளுமன்றுக்குத் தேசியப் பட்டியல் ஊடாகத் தெரிவாகி ஒரே ஒரு இருக்கையை மட்டும் கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்க(ஐ.தே.க) அரசுத்தலைவராக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். சீனாவைப் பெருமளவிற் சார்ந்திருந்த ராயபக்சாக்களுக்கு மாற்றாக மேற்கின் சார்புநிலையாளரான ரணில் விக்கிரமசிங்க அரசுத் தலைவராகியுள்ளமை மேற்குலகிற்குச் சாதகமாகியுள்ளது. இந்தச் சூழலைத் தக்கவைக்கத் தமிழர்கள் மீண்டும் பலியிடப்படக்கூடிய வாய்ப்பே தென்படுகிறது. அமெரிக்கா முதல் யப்பான் என மேற்கிலிருந்து கீழ்த்திசைவரையான இராயதந்திரிகளின் வருகை ஒன்றும் புதிதல்ல. ஆனாற் தமிழினம் உற்றுநோக்க வேண்டிய வரவாக இருப்பவர் யாரென்றால் முன்னாள் சமாதானத் தூதுவரான எரிக் சொல்கைம் ஆவார். சனாதிபதிக்கான காலநிலை ஆலோசகர் என்ற போர்வையில் எரிக் சொல்கைம் அவர்கள் களமிறங்கியுள்ளதை எச்சரிக்கை மணியாகவே கொள்ளவேண்டியுள்ளமை தமிழினத்தின் பட்டறிவாகும். சமாதானத் தூதுவராக அவர் ஆற்றிய பணியின் பயனாகத் தமிழினம் எந்தவொரு அனுகூலத்தையும் பெறவில்லை என்பது உலகறிந்த உண்மை. பேச்சுவார்த்தை என்ற போர்வையில் சமாதானப் பொறியினுள் இழுத்துவிடப்பட்டதன் விளைவாக நடைமுறை அரசைக்கொண்டிருந்த தமிழர்தேசம் தனி அரசுக்கே உரித்தான பல்வேறு நிர்வாகக் கட்டமைப்புகளோடு உருப்பெற்றிருந்த தாயகம் சிதைவடைந்ததோடு, மாபெரும் இனஅழிப்பையும் சந்தித்ததோடு, அது முள்ளிவாய்காலில் தரித்துவிடப் 13ஆண்டுகள் உருண்டோடிவிட்டது. 13 ஆண்டுகளில் இலங்கையானது தள்ளாடித் தள்ளாடி நகர்ந்தபோதும் கடந்த இரண்டு ஆண்டுகள், குறிப்பாகக் கோத்தபாய ராயபக்சவினது ஆட்சிக்காலம் பெரும் பொருண்மியச் சரிவுடன் கூடிய இன்னல் நிறைந்தகாலமாக மாறியது. இக்காலத்திற் புலம்பெயர் இலங்கையர் என்ற சொல்லாடலோடு தமிழர்களது பொருண்மிய முதலீடுகளை கவரும் நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டது. எரிக் சொல்கைம் அவர்கள் கூட புலத்திலே உள்ள தமிழர்களிடம் அப்படியானதொரு கருத்தை முன்வைத்திருந்தார். இந்தப் பின்னணியிலேயே தமிழினம் எரிக் சொல்கைம் அவர்களது மாறுவேடத்திலான மீள்வருகை குறித்து விழிப்புடன் இருத்தல் அவசியமாக உள்ளது. முள்ளிவாய்க்கால் முதற் பாகத்தில் தமிழரது ஆயுதபலத்தை சிதைத்தழித்ததுபோல், தமிழினத்தின் அரசியற் கோட்பாட்டையும் இல்லாதொழிக்கும் மறைமுக நிகழ்ச்சி நிரலோடு முள்ளிவாய்க்கால் இரண்டாம் பாகத்திற் களமிறங்கியுள்ளாரா(?) என்பது குறித்தும் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். ஏனென்றால், எரிக் சொல்கைம் அவர்கள் இந்தப் 13ஆண்டுகளில் சமாதானத்தூதுவராக இருந்தவர் என்றவகையிலே, தனது பணிக்காலத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்துப் பேசியுள்ளாரா? தமிழின அழிப்புக் குறித்து கவலையையாவது தெரிவித்துள்ளாரா? காணாமற்போன தமிழர்கள் மற்றும் கையளிக்கப்பட்ட சிறுவர்களுட்படப் 13 ஆண்டுகளாகியும் விடையறிய முடியாதிருக்கும் நிலைகுறித்து அவரது நிலைப்பாட்டை விளக்கியுள்ளாரா? சேர்ந்து வாழ முயற்சியுங்கள் என்று சொன்னதைத் தவிர, தமிழினத்தின் அழிவுக்கு ஒருவகையில் தானும் கரணியமானவர் என்ற சிந்தனையின்றி சிறிலங்கா அரசியல்வாதிகள் போலவே பேசும் எரிக் சொல்கைம் அவர்களது வருகை ஐயத்திற்குரியதே. அது இரண்டாம் முள்ளிவாய்க்காலில் கொண்டு சென்றுவிடும் ஆபத்திற்குரியதாகவே நோக்க வேண்டியுள்ளது. தமது உறவுகளைப் பறிகொடுத்துவிட்டும், விடுதலைக்காக விதைத்துவிட்டும், கையளிக்கப்பட்ட உறவுகள் எங்கென்றே தெரியாது தேடியலைந்துகொண்டிருப்பது அரசியல்வாதிகளல்ல. அப்பாவி மக்களே. அந்த மக்களுக்கு அரசியற் களநிலவர உண்மைநிலை தெரியவேண்டும். எனவே, இனிவரும் காலங்களில் தமிழினத்தின் எந்தவொரு தரப்பும், தமிழரது அரசியற்தீர்வு தொடர்பான விடயங்களை மூடிய கதவினுள் பேசும்நிலை மாற்றப்பட வேண்டும். வெளிப்படையான அணுகுமுறைகள் மட்டுமே இன்றைய தேவையாகும். அதனூடாக மட்டுமே இன்னொரு முள்ளிவாய்க்காலைத் தமிழினம்; தவிர்க்கமுடியும். நன்றி மா.பு.பாஸ்கரன் (ஆண்டுதோறும் வெளியிடப்பட்டுவரும் ‘கார்த்திகைத் தீபம்’ நவம்பர் 2022, இதழ் 9இல் வெளியான ‘முள்ளிவாய்க்கால் இரண்டாம் பாகம் நோக்கித் தமிழினம்?’ கட்டுரையைக் குறியீடு இணையத்தில் பிரசுரித்துள்ளோம்) முள்ளிவாய்க்கால் இரண்டாம் பாகம் நோக்கித் தமிழினம்?- மா.பு.பாஸ்கரன் – குறியீடு (kuriyeedu.com)
    1 point
  18. அட அவையளுக்கு கோள்வம் வேற வந்திட்டு. சும்மா இருக்கிற வெட்டிப் பயலுக போய் நித்திரையாக்கிவிட்டு வந்தாத்தான் என்னவாம். “அரசுக்கு செலவு ஏற்படுவதாகவும், அத்துடன் தமது கடமைகளை செய்வதில் தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவித்து” இதை வாசிச்சு குபீரெண்டு சிரிச்சுட்டன்😂
    1 point
  19. ஆர‌ம்ப‌த்தில் ந‌ல்லா போய் கொண்டு இருந்தோம் குசா தாத்தாவும் நானும் , ஏன் எங்க‌ட‌ வாத்தியார் கூட‌ ஒரு க‌ட்ட‌த்தில் என்னை பாராட்டினார் ஆர‌ம்ப‌த்தில் புள்ளி ப‌ட்டிய‌லில் கீழ‌ நின்ர‌ வாத்தியார் ஆர‌ம்ப‌ சுற்று விளையாட்டு முடிய‌ மின்ன‌ல் வேக‌த்தில் மேல‌ வ‌ந்தார் 57புள்ளியோட‌ தாத்தாவும் 56புள்ளியோட‌ நானும் 51 புள்ளியோட‌ க‌ந்தையா ஜ‌யாவும் எங்க‌ட‌ புள்ளியில் சிறு மாற்ற‌ம் கூட‌ வ‌ர‌ வில்லை , ந‌ம்பின‌ அணிக‌ள் ஏமாற்றி போட்டின‌ம் உந்த‌ பிரான்ஸ் அணி உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ முதல் சுத‌ப்பி விளையாடின‌வை..................பிரான்ஸ் அணி சீக்கிர‌ம் வெளிய‌ போகும் என்று க‌ணித்த‌து முட்டாள் த‌ன‌ம் 🤣😁😂
    1 point
  20. அக்கா நானும் வரவேற்றனான், மறந்து போனியளே?
    1 point
  21. ஆக 23 வயது தான் ஆகிறது... அதற்குள் ஒரு உலக கோப்பை... ஒரு கோல்டன் பூட்... பீலேவின் கோல் கணக்கிற்கு நிகராக 12 கோல்.. கால் பந்து உலகை கட்டி ஆளப் போகிறான் இவன். இனி மெஸ்ஸியும் இல்லை ரொனால்டோவும் இல்லை, ஆனால் இவன் இருப்பான். ஆனால் இவனோடு ஒப்பீடு செய்ய அங்கே யாரும் இருக்கப் போவதில்லை. தனி ஆளாக இறுதி வரை போராடினான். அதுவும் 23 வயதில். இனித்தான் காலம் கனிகிறது உனக்கு....
    1 point
  22. கனடா ஐயா பலாலி சுடலையில் செய்த செயல் | புலம்பெயர் உறவுகளால் உருவாகிய அழகிய சுடலை | யாழ்ப்பாணம்
    1 point
  23. 21 கந்தையா 51 கந்தையர்!😁 பொன்னி நதி பாக்கணுமே தீயாரி எசமாரி... பொழுதுக்குள்ள.... தீயாரி எசமாரி...🤣 கந்தையர்!😁 கன்னி பெண்கள் காணணுமே தீயாரி எசமாரி காற்ற போல...🤣
    1 point
  24. ஐஸ் போதைப்பொருள் பாவிப்பவர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? ஐஸ் போதைப்பொருளை உட்கொள்பவர்களின் ஆயுட்காலம் கண்டிப்பாக குறையும் என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார் . ஐஸ் போதைக்கு அடிமையானவர்களிடம் பசி படிப்படியாக குறைவதால், உடல் பலவீனமடைந்து, நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால், பல்வேறு நோய்களுக்கு அவர்கள் இலக்காவது பொதுவான பண்பு. இதன் காரணமாக அவர்களின் உடல் மற்றும் மனவலிமை பலவீனமடைவதோடு கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்படும் எனவும் தீபால் பெரேரா தெரிவித்தார். மற்ற போதை மருந்துகளுடன் ஒப்பிடும்போது ஐஸ் போதைக்கு அடிமையாதல் அதிகம் என்றும், ஐஸ் மருந்துகளை உட்கொள்பவர்களின் ஆயுட்காலம் கண்டிப்பாக குறையும் என்றும் அவர் கூறினார். கடத்தல்காரர்கள் பலர் ஐஸ் போதைப்பொருள்களை பொய் கூறி பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக அறியமுடிகிறது ஞாபக சக்தி அதிகரிக்கும் படிக்கும்போது தூக்கம் வராது என பொய்களை பரப்பி வருகின்றனர். இவை அப்பட்டமான பொய்களாகும். மேலும் ஐஸ் மருந்துகளை உபயோகிப்பதால் நினைவாற்றல் குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.. https://thinakkural.lk/article/228815
    1 point
  25. Penalty Shootout Argentina vs. France 2022 FIFA World Cup Final in Qatar EXCLUSIVE VIEW Argentine VS France Final Penalties Worldcup 2022 FIFA World Cup 2022 Qatar 🏆 trophy ceremony 💘🇦🇷🇨🇵
    1 point
  26. பெரிய‌ப்பா ப‌ட்டும் ப‌டாத‌ மாதிரி என்னையும் குசா தாத்தாவையும் ந‌க்க‌ல் அடிக்கிற‌து வெளிச்ச‌மாய் தெரியுது............இந்த‌ தோல்வி அவ‌மான‌ தோல்வி அடுத்த‌ போட்டியில் யார் என்று காட்டுறோம் லொல் 🤣😁😂
    1 point
  27. யாழ்களப் போட்டியில் கலந்துகொண்டவர்கள் எல்லாம் வெற்றியாளர்களே! என்ன நிலைகள் முன்னுக்குப் பின்னர் நிற்கும்😄 அடுத்த போட்டி நடாத்த வாய்ப்பிருந்தால் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும்! வெற்றியாளர் எடுத்த புள்ளிகளில் அரைவாசிக்கு மேலாவது எடுக்கவும் முயற்சிக்கலாம்😂
    1 point
  28. அர்ஜென்டினாவின் அதிசய வெற்றிக்குக் காரணமான கோல் கீப்பர் எமிலியானோ மார்ட்டினெஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அர்ஜென்டினா, பிரான்ஸ் இடையே நடந்த நம்பமுடியாத உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முந்தைய அனைத்து விவாதங்களும் லியோனெல் மெஸ்ஸி, கிலியன் எம்பாப்பேவுக்கு இடையிலான போட்டியாக இருக்குமென்றே கூறப்பட்டது. அது ஒருவகையில் உண்மைதான் என்றாலும், நேற்றைய போட்டிக்குப் பிறகு, அர்ஜென்டினா அணியிலிருந்த மற்றொருவரின் பெயரும் பேசுபொருளானது. 120 நிமிடங்களில், 3-3 என்ற கணக்கில் போட்டி டிரா ஆனது. அதைத் தொடர்ந்து, பெனால்டி ஷூட் அவுட் மூலம் 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா வெற்றியடைந்தது. திருப்புமுனை, கண்ணீர், உணர்ச்சிமிகுதி ஆகியவை நிரம்பிய இந்தப் போட்டியில், அர்ஜென்டினாவின் வெற்றிக்கு ஒரு முக்கியக் காரணமாக இருந்தார், கோல் கீப்பர் எமிலியானோ மார்ட்டினெஸ். அவருக்கு 'கோல்டன் கிளவுஸ்' விருது கிடைத்துள்ளது. அர்ஜென்டினாவின் வீரர்கள் தங்கள் நான்கு முயற்சிகளையும் நிதானமாக கோலாக்கினார்கள். அவர்கள் தங்களுடைய பணியைக் கச்சிதமாகச் செய்திருந்தாலும், மார்ட்டிஎன்ஸ் பிரெஞ்சு ரசிகர்களின் இதயங்களை உடைத்துவிட்டார். உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: 36 ஆண்டுகளுக்கு பின் கால்பந்து உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா18 டிசம்பர் 2022 அர்ஜென்டினா ரசிகர்களை அழவைத்த எம்பாப்வேயின் ‘ரோலர் கோஸ்டர்’ தருணங்கள்18 டிசம்பர் 2022 மு.க.ஸ்டாலின் மெச்சிய எம்பாப்பேயின் 'கடைசிவரை விட்டுவிடாத' வீரம்9 மணி நேரங்களுக்கு முன்னர் அவ்வளவுக்கும் அதை அவர் கூலாக செய்தார் என்பதுதான் சுவாரஸ்யமானது. இறுதியாக பெனால்டி ஷூட் அவுட்டின்போது, அவர்மீது தான் அதிக அழுத்தம் இருந்தது. சொல்லப் போனால், அவர் கைகளில் தான் அர்ஜென்டினாவுக்கு வெற்றியா தோல்வியா என்பதைத் தீர்மானிக்கும் தருணமே இருந்தது. ஆனால், அவை எதைப் பற்றியும் கவலைப்படாமல், எதிரணி வீரர்கள் ஒவ்வொரு முறை பெனால்டி ஷாட் அடிக்க வந்தபோதும் அவர் ஆடிய ஆட்டம் பிரான்ஸை அச்சுறுத்தியது. எம்பாப்பே போட்டியின் நடுவிலேயே மார்ட்டினெஸுக்கு எதிராக இரண்டு கோல்களை அடித்திருந்தார். ஆகவே கடைசியிலும் ஷூட் அவுட்டை தொடக்கி வைத்த எம்பாப்பே, அதை கோலாக்கியதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. வெற்றிக் கனியை நெருங்க உதவிய மார்ட்டினெஸ் அந்த கோலையும் கூட கைக்கு எட்டும் தூரத்தில், மார்ட்டினெஸின் தடுப்பு முயற்சியின்போது அவர் கைகளில் பட்டு உள்ளே சென்றது. அவர் எடுத்த அந்த முயற்சியே பிரான்ஸ் அணியினரைக் கலங்க வைத்திருக்க வேண்டும். எம்பாப்பே கோல் அடித்திருந்தாலும், அதைத் தடுக்க அவர் எடுத்த முயற்சியிலேயே போட்டியின் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டார். அதைத் தொடர்ந்து அடுத்ததாக கிங்ஸ்லி கோமன், ஷாட் அடிக்க வந்தபோது, அவருடைய அமைதியை மார்ட்டினெஸின் கூலான ஆட்டமும் அமைதியான அணுகுமுறையும் குலைத்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆரேலியன் சூயிமென்னி, அடுத்ததாக அவருடைய கோல் வாய்ப்பை எடுக்கச் சென்றபோது, அதையும் தவிடுபொடியாக்கினார் அர்ஜென்டினாவின் அந்த உயரமான கோல் கீப்பர். இந்த இடத்தில், மார்ட்டினெஸின் உடல் அமைப்பும் அவருக்கு நன்றாகவே உதவியது. அவரால் கோல் போஸ்டுக்குள் நன்கு இடதும் புறமும் வேகமாக நகர்ந்து, பெரிதாகத் தன்னை அலட்டிக் கொள்ளாமல் செயல்பட முடிந்தது. மார்ட்டினெஸ் பெனால்டி ஷூட் அவுட் கோல்களை தடுக்கும்போது, ஒரு நடனம் ஆடுவார். அந்த நடனம் ரசிகர்களுக்கு வெற்றிக் களிப்பைக் கொடுக்கும் அதேநேரத்தில், எதிரணிக்கு கலக்கத்தையும் கொடுக்கக்கூடியது. ஏனெனில், அந்த நடனத்தில், “யாராக இருந்தாலும் நான் எதிர்கொள்வேன்” என்ற நம்பிக்கை பிரதிபலிக்கும். கோமன், சூயிமென்னி ஆகியோரின் கோல்களை அவர் தடுத்தது, அதுவரை சென்னைக்கு மிக அருகில் செங்கல்பட்டு போல் இருந்த அர்ஜென்டினாவின் வெற்றியை, உண்மையாகவே மிக அருகில் கொண்டு சென்றது. அவர்களைத் தொடர்ந்து கோலோ முவானி அடுத்த பெனால்டியை கோல் அடித்திருந்தாலும்கூட, அதற்கு அடுத்ததாக அர்ஜென்டினா தரப்பில் கொன்சாலோ மோன்டியெல் அடித்த நான்காவது பெனால்டி கோலின் மூலம் அவர்கள் தங்கள் வெற்றியை உறுதி செய்தார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES அரவணைத்த மெஸ்ஸி இங்கிலாந்தின் முன்னாள் மிட்ஃபீல்டர் ஜெர்மைன் ஜெனாஸ், “பிரான்ஸ் ஷூட் அவுட்டில் ஷாட் அடிக்க முயன்ற போதெல்லாம், அவர்களுடைய முயற்சியின்மீது மார்ட்டினெஸ் உளரீதியாகத் தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதை மறுக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார். “எமிலியானோ மார்ட்டினெஸ், மிகவும் நேர்மறையான நபர். அவர் தமது அணியிடம் சில பெனால்டிகளை தடுக்கப் போவதாகக் கூறியிருந்தார்” என்று கூறினார் அர்ஜென்டினாவின் பயிற்சியாளர் லியோனெல் ஸ்கலோனி. இந்த இடத்தில் நெதர்லாந்துக்கு எதிரான பெனால்டி ஷூட் அவுட்டை நினைவுகூறியாக வேண்டியது அவசியம். அன்றிரவு, காலிறுதிப் போட்டியில் ஷூட் அவுட் வெற்றிக்குப் பிறகு அர்ஜென்டினா அணியைச் சேர்ந்த லௌடாரோ மார்ட்டினெஸ் கடைசியாக வெற்றிக்கான கோலை அடித்தார். அப்போது அணியைச் சேர்ந்த அனைத்து வீரர்களும் வெற்றியைக் கொண்டாடுவதற்காக லௌடாரோவை நோக்கி ஓடினார்கள். ஆனால், மெஸ்ஸி மட்டும் வலது பக்கமாக, கோல் போஸ்டை நோக்கி ஓடினார். அங்கு, லுசைல் மைதானத்தின் ஒரு முனையில், டை-பிரேக்கரில் நெதர்லாந்தின் இரண்டு கோல்களை, இடதும் வலதுமாகப் பறந்து பறந்து தடுத்த கோல் கீப்பர் மார்ட்டினெஸ் அங்கு தரையில் கிடந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES மெஸ்ஸி ஓடிச் சென்று அவரைத் தூக்கி அரவணைத்து, தனது பாராட்டுகளையும் பாசத்தையும் பகிர்ந்துகொண்டார். அவருடைய பெயர் அன்றே எதிரணிகளின் காதுகளுக்குள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. இது மெஸ்ஸியின் கனவு. மார்ட்டினெஸின் கனவு. மார்ட்டினெஸை பொறுத்தவரை, இறுதிப்போட்டிக்கான இந்த ஓட்டம் மிகவும் எதார்த்தமானது. ரஷ்யாவில் நடந்த கடைசி தொடரில், பிரான்ஸ் அர்ஜென்டினாவை ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நாக் அவுட் செய்து வெளியேற்றியது. அப்போதே மார்ட்டினெஸ் தனது சகோதரரிடம் 2022 உலகக் கோப்பையில் நான் இதற்கு பதிலடி கொடுப்பேன் என்று உறுதியளித்திருந்தார். அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றியுள்ளார். நேற்று 'கோல்டன் கிளவுஸ்' விருது பெற்றவுடன் அதை வைத்து எமிலியானோ மார்ட்டினெஸ் காட்டிய சைகையும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. அது மரியாதைக்குறைவான செயல் என்று சமூக ஊடகங்களில் சிலர் விமர்சித்துள்ளனர். Twitter பதிவை கடந்து செல்ல காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு யார் இந்த எமிலியானோ மார்ட்டினெஸ் 2010ஆம் ஆண்டில், மார்ர்டினெஸுக்கு ஆர்சனலில் விளையாட வாய்ப்பு கிடைத்தபோது, அவருடைய குடும்பம் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு இருந்தது. அப்போது தொடங்கி அவருடைய வாழ்வில் பல தடைகளைத் தகர்த்து அவர் இந்த இடத்திற்கு வந்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES எமிலியானோ மார்ட்டினெஸ், ஜூன் 2021இல் தான் முதன்முதலாக அர்ஜென்டினாவுக்காக விளையாடினார். முந்தைய இரண்டு சீசன்களில் ஆர்சனல், ஆஸ்டன் வில்லா ஆகிய கிளப்புகளில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடந்த கோபா அமெரிக்கா தொடரிலும் அர்ஜென்டினாவின் வெற்றியில் அவருக்குப் பெரும் பங்குண்டு. 2020ஆம் ஆண்டில், எமிரேட்ஸின் எஃப்.ஏ கோப்பையை ஆர்சனல் அணி வென்றபோது, அவர் கோல் கீப்பராக அணிக்கு அளித்த உற்சாகத்தை வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது. 17 வயது இளைஞராக கிளப்பில் சேர்ந்து, அவர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பல போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES 2021-22 சீசன் தொடங்கவிருந்த நேரத்தில் அவர் ஆஸ்டன் வில்லா அணிக்குச் சென்றார். அங்கு அவர் தனது இடத்திற்காக யாருடனும் சண்டையிடவில்லை. 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல வகைகளில் தனது திறமையைக் காட்டியவர், அங்கு மிக முக்கிய வீரராகத் திகழ்ந்தார். ஷூட் அவுட்களில் அவர் மிகவும் திறமையாக இருக்க ஒரு காரணம் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. அவர் தொடர்ந்து பெனால்டி ஷாட் அடிக்க வைக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி, பல ஷாட்களை எதிர்கொள்வார். மேலும் 2021 கோபா அமெரிக்கா அவரை ஒரு ஹீரோவாக மாற்றியது. கொலம்பியாவுக்கு எதிரான அரையிறுதி ஷூட் அவுட்டில் மூன்று முறை கோல் முயற்சியைத் தடுத்து, அணியைக் காப்பாற்றினார். அவருடைய நுணுக்கங்கள் இந்த முறையும் அர்ஜென்டினா அணிக்குப் பேருதவி புரிந்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/c84pz5jq5yzo
    1 point
  29. மு.க.ஸ்டாலின் மெச்சிய எம்பாப்பேயின் 'கடைசிவரை விட்டுவிடாத' வீரம் பட மூலாதாரம்,GETTY IMAGES 8 மணி நேரங்களுக்கு முன்னர் கத்தார் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கடைசி நாற்பது நிமிடங்களை ஆக்கிரமித்திருந்தவர் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே. ஒரே பக்கமாகச் சென்று கொண்டிருந்த போட்டியை இழுத்துப் பிடித்து பிரான்ஸின் பக்கம் கொண்டுவந்தவர் அவர். போட்டியை மாற்றுவதற்கு அவருக்கு இரண்டே நிமிடங்கள்தான் தேவைப்பட்டன. 80-ஆவது நிமிடத்தில் பெனால்ட்டி முறையில் ஒரு கோலும், 81-ஆவது நிமிடத்தில் மற்றொரு மின்னல் வேக கோலும் அடித்து பிரான்ஸ் ரசிகர்களை உற்சாகத்தில் குதிக்க வைத்தார். அந்த இரு நிமிடங்களில் 2018-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தோல்வி, அர்ஜென்டினா அணி ரசிகர்களின் மனங்களில் நினைவுக்கு வந்திருக்கும். அந்தத் தொடரின் நாக் அவுட் சுற்றில் பிரான்ஸும் அர்ஜென்டினாவும் மோதின. உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி: 36 ஆண்டுகளுக்கு பின் கால்பந்து உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா18 டிசம்பர் 2022 அர்ஜென்டினா ரசிகர்களை அழவைத்த எம்பாப்வேயின் ‘ரோலர் கோஸ்டர்’ தருணங்கள்18 டிசம்பர் 2022 மெஸ்ஸி அதிர்ந்தது முதல் ரொனால்டோ அழுதது வரை கத்தார் உலகக் கோப்பையில் ‘ஷாக்’ கொடுத்த 7 சம்பவம்18 டிசம்பர் 2022 19 வயது வீரராகக் களமிறங்கினார் எம்பாப்வே. ஒரு கட்டத்தில் அர்ஜென்டினா அணி முன்னிலையில் இருந்தபோது, அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து வெற்றியைத் தேடித் தந்தார் எம்ப்பாப்வே. கத்தார் இறுதிப் போட்டியிலும் எம்பாப்பேவை பொறுத்தவரை, இரண்டாவது பாதி ஆட்டம் அப்படித்தான் இருந்தது. கடைசி நொடி வரை எம்பாப்வே பிரான்ஸுக்கு வெற்றியைத் தேடித் தருவதற்கான தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பிரான்ஸ் வீரர்களின் விட்டுவிடாத மன உறுதியையும் எம்பாப்பேயின் ஹாட்ரிக் கோல்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். Twitter பதிவை கடந்து செல்ல காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு மின்னல் வேகக் கோல் 80-ஆவது நிமிடத்தில் பெனால்ட்டி முறையில் பிரான்ஸுக்கான முதல் கோலை அடித்த எம்பாப்பேக்கு அடுத்த நிமிடத்திலேயே மற்றொரு வாய்ப்புக் கிடைத்தது. இந்த முறை எதிர்பாராத வகையில் மெஸ்ஸியிடம் இருந்து பந்தைப் பறித்து பிரான்ஸ் வீரர்கள் அதை கோலை நோக்கிக் கொண்டு வந்தார்கள். பெனால்ட்டி பாக்ஸுக்கு சற்று உள்ளேயிருந்து மிகத் துல்லியமாகவும் அதி வேகமாகவும் கோலுக்குள் அடித்தார் எம்பாப்பே. ஓடியபடியே சாய்ந்த நிலையிலும் அவரது தாக்குதல் மிகவும் வலிமையாக இருந்தது. சுமார் 90 நொடிகள் இடைவெளியில் அவர் அடித்த இரண்டு கோல்களும்தான் பிரான்ஸ் அணி போட்டியில் புத்துயிர் பெறக் காரணமாக அமைந்தன. போட்டியை பெனால்ட்டி ஷூட் அவுட் வரைக்கும் அவர்தான் எடுத்துச் சென்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES எம்பாப்பேயின் சாதனைகள் உலகக் கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டியில் அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் எம்பாப்பே. கடந்த உலகக் கோப்பை போட்டியில் ஒரு கோலும் இந்தப் போட்டியில் மூன்று கோல்களும் என அவரது உலகக் கோப்பை இறுதிப் போட்டி கோல்களின் எண்ணிக்கை 4. அதேபோல உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் கோல்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் எம்பாப்பேக்கு கிடைத்திருக்கிறது. போட்டி தொடங்கியபோது மெஸ்ஸியும், எம்பாப்பேயும் இந்தத் தொடரில் 5 கோல்களை அடித்த சமநிலையில் இருந்தார்கள். மெஸ்ஸி முதல் கோலை பெனால்ட்டி முறையில் அடித்து தங்கக் காலணிக்கான போட்டியில் முந்தினார். ஆனால் 80 மற்றும் 81-ஆவது நிமிடத்தில் எம்பாப்பே இரண்டு கோல்களை அடித்து தனது எண்ணிக்கையை 7 ஆக உயர்த்தினார். போட்டி அப்போதும் முடியவில்லை கடைசி சில நிமிடங்கள் இருந்தபோது மெஸ்ஸி மற்றொரு கோலை அடித்து மீண்டும் இருவருக்குமான போட்டியை சமநிலைக்குக் கொண்டுவந்தார். அப்போது தங்கக் காலணி மெஸ்ஸிக்கே கிடைக்கும் என்ற நிலையும் இருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் பெனால்ட்டி முறையில் மற்றொரு கோலை அடித்து மெஸ்ஸியை முந்தினார். இப்போது தங்கக் காலணி விருது அவருக்குக் கிடைத்திருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES 23 வயதில் ஜாம்பவான்களை முந்தியவர் 23 வயதே ஆன எம்பாப்பே ஏற்கெனவே உலகக் கோப்பை போட்டிகளில் அதிகக் கோல் அடித்தவர்கள் பட்டியலில் ரொனால்டோ, மாரோடோனா போன்ற மாபெரும் வீரர்களை முந்திவிட்டார். இறுதிப் போட்டியில் மூன்று கோல்களை அடித்ததன் மூலம் அவர் பீலேயின் கோல் எண்ணிக்கையை சமன் செய்திருக்கிறார். இப்போது அவர் அடித்திருக்கும் மொத்த கோல்களின் எண்ணிக்கை 12. மெஸ்ஸி 5 உலகக் கோப்பை போட்டிகளில் அடித்திருக்கும் கோல்களின் எண்ணிக்கை 13. https://www.bbc.com/tamil/articles/cl4g0zd425eo
    1 point
  30. ஆரம்பித்த சில போட்டிகளில் ஆர்வமில்லாமல்தான் இருந்தேன், ஆனால் கால் இறுதிப் போட்டிகளை பார்த்தவுடன் பள்ளியிலிருந்த அந்த பழைய விளையாட்டு உற்சாகமும், காய்ச்சலும் என்னயும் தொற்றிக்கொண்டது. '80 களில் 'மொரடோனா' விளையாடியபோதும் இதே உற்சாகம்தான். கால்பந்து விளையாட்டில் பிடித்ததே எப்பொழுதும் ஓடிக்கொண்டேயிருக்கும் சுறுசுறுப்பும், எதிராளியை கெலித்து பந்தை நேர்த்தியாக நழுவிக் கடத்திச் செல்லும் லாவகமும்தான். 🤩 மீண்டும் அடுத்த கால்பந்து விளையாட்டில் சந்திக்கலாம்..! 😎 (ஏனெனில், மற்ற விளையாட்டுகளைப் பற்றி எதுவும் தெரியாது.) 😜
    1 point
  31. போட்டியை சுவாரசியாமாக நடாத்திய கிருபனுக்கு நன்றி. போட்டியை கலகலப்பாக வைத்திருந்த அனைவருக்கும் நன்றி. சக போட்டியாளர்கள் சளைக்காமல் ஒவ்வொரு போட்டியிலும் கலந்து கொள்வது மகிழ்ச்சி. மீண்டும் ஒரு போட்டியில் சந்திப்போம்.
    1 point
  32. இந்தாள்போறன் போறன் என்று போகுதில்லையே நானும் காலடியில் இருந்து சிவபராணம் பாடிக் கொண்டிருக்கிறேன். அமைதி அமைதி புலவர் இன்னமும் கிருபனுக்காக காத்திருக்கிறோம். ஊரெல்லாம் உறங்கிய பின்பு தான் வருவார் போல இருக்கு.
    1 point
  33. மெஸ்சி இந்தப் போட்டிடியோடு ஓய்வு பெறப் போகிறார் எம்பாவேவின் ஆட்டம் இனித்தான் ஆரம்பம். அடுத்த ஒரு சகாப்தத்துக்கு எம்பாவேயின் ஆட்சிதான்.
    1 point
  34. நீங்களே ஒரு கூகிள் சீற் தயாரித்து வைத்திருக்கிறீர்கள் போல இருக்கே? @கிருபன் வந்து உத்தியோக பூர்வமாக அறிவிப்பார் என்றால் கூடக் குறைய அடித்துவிட்டு படுத்திட்டாரோ என்னவோ?
    1 point
  35. நீங்கள் எத்தனையாவது இடம் என அறிய ஆவல்🤣 அதற்கு கிருபர் ஜீ வந்தால் மட்டுமே நம்புவோம் 😄
    1 point
  36. @கிருபன் பரிசளிப்பு விழா எப்போது? போட்டியாளர்கள் நடுவரின் இறுதி முடிவை அறியாமல் அவதிப்படுவதாக ஒரு பீலிங்க் 😃 பார்வையாளர்கள் எங்களுக்கே டென்சன் ஆக உள்ளபோது.. 😀😀 நீர்வேலியான் ஆர்ஜன்ரீனா வெற்றி பெறும் என கணித்துள்ளதாக கிருபனின் பதிவில் உள்ளதே. வேறு கேள்விகளும் உள்ளனவோ இறுதி புள்ளிகளை கணக்கிட?
    1 point
  37. நன்றி பையா🙏! அநேகமாக கல்யாணி முதல்வராகவும் நீர்வேலியான் துணைமுதல்வராகவும் வர வாய்ப்புள்ளது போல தெரிகிறது!👏
    1 point
  38. மெர்ஸியின் 32 வருட கனவு இன்று நனவாகியது........! 👏 சலைக்காமல் விளையாடிய இரு அணியினருக்கும் பாராட்டுக்கள்........ஒரு சிறப்பான விளையாட்டை பார்த்தோம்........ பாராட்டுக்கள்.......! 👏
    1 point
  39. ஒரு காலத்தில், பள்ளியின் கால்பந்து அணியில் இருந்தேன். இப்போ வயதின் காரணமாக ரசிப்பது மட்டுமே உண்டு. எனது பாதத்தில் எதிரணி வீரர் மிதித்து தோல் கிழிந்த விழுப்புண் உண்டு.😌
    1 point
  40. ஆனந்தம் பரமானந்தம் ......! 😂
    1 point
  41. கோஷான் மிக அருமையான கருத்துக்களை இந்தத்திரியில் சொல்லியிருக்கிறீர்கள்.இந்தத்திரியில் அலசப்படும் விடயங்களை எமது அரசியல்வாதிகள் கருத்திற்கெடுப்பார்களா என்பது சந்தேகம். எமது அரசியல் நிலைப்பாடு. அடைய முனையும் தீர்வு பற்றிய தெளிவான திட்டம் வகுக்கப்பட வேண்டும். அதற்கு அரசியல் கட்சிக்கு அப்பால் அரசியல் சட்ட வல்லுநர்களைக் கொண்ட ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு அவர்களால் எழுத்து வடிவில் கொடுக்கப்பட வேண்டும். எந்த அரசியல் கட்சியின் பிரதிநிதிகளும் அதற்குள் தலையை நுழைக்கக் கூடாது. ஆனால் அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துகளை எழுத்து வடிவில் அந்த அமைக்கு வழங்கலாம். அந்த அமைப்பு அரசியல்கட்சிகளின் கருத்துக்களை உள்வாங்கி இறுதியானதும் உறுதியானதுமான தீர்வுத்திட்ட கொள்கையை எழுத்து வடிவில் கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களே பேச்சு மேசைக்குப் போக வேண்டும். இதுவே அனைத்து அரசியல்கட்சிகளின் பங்களிப்போடு ஆதரவோடு ஆனால் அவர்களின் தலயீடு இன்றி வகுக்கப்படும் தீர்வுத்திட்டமாக அமையும்.
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.