Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 01/22/23 in all areas
-
இன்னொரு இறையாண்மையுள்ள நாட்டின்மீது ஆக்கிரமிப்புப்போர் ஒன்றினைக்ன்கட்டவிழ்த்துவிட்டு அம்மக்களை மீட்கவே அவர்களைக் கொல்கிறேன் என்று கூறும் ரஸ்ஸியாவிற்கும், தமிழினத்தை இனவழிப்புச் செய்துகொண்டே மபிதாபிமான மீட்பு நடவடிக்கை என்று கூறும் இலங்கைக்கும் அதிக வேறுபாடில்லை. அப்படியானால் ரஸ்ஸியா எந்தப்பக்கம் என்று புரிந்துகொள்வது கடிணமாக இருக்காது. ஆனால் என்ன, ரஸ்ஸியாவை நியாயப்படுத்த வெளிக்கிட்டால், இலங்கை செய்வதையும் நியாயப்படுத்தவேண்டி வரும். அதையும் செய்வோம்!8 points
-
உங்கள் பார்வைக்கும் எனது பார்வைக்குமான வித்தியாசம் இது தான். நான் ஆட்களை பார்ப்பதில்லை உலகுக்கு எது தேவை, சிறந்தது என்று பார்க்கிறேன் நீங்கள் ரசிக்கும் அல்லது போற்றும் ரசியாவிலோ வட கொரியாவிலோ இது எல்லாம் கனவில் கூட சரிவராது. நன்றி4 points
-
ஒரு முழுமையான நாடான உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமிப்பதை, அழிக்கபடுவதை , ரஷ்ய போர் குற்றங்களை, புரின் மீதுள்ள பற்றுதலினாலும், சித்தாந்த பற்றுதலினாலும் முழுமையாக ஆதரிக்கும் போதே தனி நாடு பெறுவதற்கு தகுதியில்லாதவர்கள் ஈழத்தமிழர்கள் என்கின்றாகிவிட்டது. அமெரிக்காவுக்கு பின்னால் பல நாடுகள் இருப்பதனால் அமெரிக்காவை பிடித்து தமிழீழம் எடுத்துவிட்டு பின்பு ரஷ்யாவின் நட்பு நாடாக மாறுவோம் என்கிறார் ஒருவர் அவ்வளவுக்கு பூலோக சொர்க்கம் ரஷ்யா🤣 இலங்கைக்கு கை கொடுக்கும் நண்பன் ரஷ்யா. தமிழீழத்துடன் நட்பு வைக்குமா ?3 points
-
சீ சீ சாராயத்தை வாங்கி தந்து கள்ளவாக்கு போடச் சொல்லி கரைச்சல்படுத்தலாம்.3 points
-
புருஜோத்தமன் தங்கமயில்.... தமிழரசு கட்சியின் பழைய செம்பு போலை இருக்கு. 😂 பல இடங்களில்... அவரின் வா(ஆ)ய்வுக் கட்டுரைகள், சம்பந்தனின் தமிழரசு கட்சிக்கு, முரட்டு முட்டு கொடுப்பதாகவே இருக்கின்றது. 🤣3 points
-
நன்றி இதனைத்தன் கோசானும் கூறுகிறார். எனக்கு புரிகிறது, சினோடன் போலவோ, யூலியன் அசாஞ்ச் போலவோ படனுக்கும் வரவேண்டும் என்று உன்மையாக விரும்பவில்லை சும்மா ஒரு கருத்து பதிந்தேன் அவ்வளவுதான்.2 points
-
இவர் தேர்தலுக்கு முன்னமோ பின்னோ போகப்போவதில்லை.ஊருக்கு போவதில்லை என்டு எப்பவோ முடிவெடுத'திட்டார்.🙂மற்றது இங்கு ஒரு தேர்தல் நடக்கப்போகுது என்டு யாழைப் பாக்கும் போதுதான் தெரியுது.இங்கு மக்களிடம் எந்தவிதமான அசமாத்தங்களம் இல்லை.2 points
-
எழுத்து பிழைகளை நக்கலடிக்கும் நீங்கள் மாற்று திறனாளிகளையும் நக்கலடிக்க தயங்க மாட்டீர்கள். நானும் யாழ்களத்தில் எழுத பழகி எழுத்து பிழைகளுடன் எழுத ஆரம்பிக்கும் போது சக உறவு ஒருவர் வந்தமாம் வாசிச்சமாம் என்றிருக்கோணும் என பதில் எழுதி இருந்தார். பிழைகளை திருத்த மனம் இல்லாவிட்டாலும் தமிழில் எழுதிய கருத்தை நையாண்டி பண்ணாமல் இருந்தாலே தமிழ் உலகிற்கு பேருதவியாக இருக்கும். ஏனெனில் அவர்கள் தமிழர்கள். அடுத்த முறை திருத்தி எழுதுவார்கள். 😎1 point
-
நான் கேட்ட கேள்விக்கு பதில் இன்னொரு கேள்வியா🤣. வாழ்துக்கள்! நீங்களும் தேர்ந்த யாழ்கள கருத்தாளர் ஆகிவிட்டீர்கள்🤣 ஜனநாயக நாட்டில் சட்டம் எல்லாருக்கும் பொதுவானதே ஆனால் அதை நடைமுறைபடுத்துவதில் வழுக்கள் வரலாம், வராமலும் போகலாம். உண்மையில் என் பார்வையில் அமெரிக்கா ஒரு குறை-ஜனநாயக நாடே. ஸ்கண்டிநேவியா, ஐரோப்பா வில் சில நாடுகள்தான் உண்மையான ஜனநாயக ஆட்சிக்கு கிட்ட நெருங்கி வருவன. ஆனால் அமெரிக்காவில் கூட, நிக்சன், கிளிண்டன், டிரம்ப், இப்போ பைடன் என நாம் அறிய 4 பதவியில் உள்ள அதிபர்கள், பதவியில் இருக்கும் போதே அரச அதிகாரிகளால் விசாரணைக்குள்ளாகி உள்ளனர். இப்போ என் கேள்வியை மீள கேட்கிறேன். ஆம். இல்லை என பதில் சொல்லும் எளிமையான கேள்வி. இது. திரி திசை திரும்பும் என்ற அச்சம் வேண்டாம் (அது எப்படியும் திரும்பித்தான் தீரும்🤣). ஒகே ப்ரோ…நீங்க சொன்னா க்ரெட்க்டாதான் இருக்கும் 🤣. உங்க கூட இருந்த ஈராக்கிய முதியர் பெயர் கெமிக்கல் அலி இல்லையே?1 point
-
ஜனநாயகவாதிகள் ஏன் அசான்சேக்கும் ஸ்னோடனுக்கும் குத்தி முறிகின்றார்கள்? அப்பன்! கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேணுமெண்டு எங்கடை ஆக்கள் சும்மாவே சொன்னவையள்? உக்கல் உக்ரேன் பிரச்சனை தொடங்கி ஒரு வருசமாச்சு. உந்த சனநாயகவாதிகள் தங்கடை பிரச்சனையை தீர்க்க ஏலாதவங்கள் இல்லாட்டி விரும்பாதவங்கள் எங்கடை நாட்டு பிரச்சனையை தீர்ப்பாங்கள் எண்டுறியள்?1 point
-
1 point
-
நீங்கள் சொல்கின்ற அந்த சாதாரண நடை முறை ரஷ்யா , பெலாருஸ் , சீனா , வட கொரியா , ஈரான் போன்ற சர்வாதிகார ஆட்சி நடைபெறுகின்ற நாடுகளில் நடைபெறமுடியாது ஒன்று .1 point
-
Error சீனாவில் ஷி இப்படி ஒரு காரியத்தை செய்திருந்தால், அல்லது ரஸ்யாவில் புட்டின் இப்படி ஒரு காரியத்தை செய்திருந்தால் - அந்த நாட்டு அமைப்புகள், இவர்கள் பதவியில் இருக்கும் போதே இப்படி ஒரு சோதனையை நடத்தி இருக்க முடியுமா? இதைதான் விசுகு அண்ணா கேட்கிறார். நான் மேலே கேட்ட கேள்விக்கு கூச்சமே இல்லாமல் ஆம் என பதில் சொல்ல கூடியோர் யாழில் உள்ளார்கள்🤣. வசியும் அந்த வகையா என அறிய ஆவல்🤣1 point
-
ஜனநாயகம் என்பது இதுதானா என்பது தெரியாது, ஆனால் ஒரு சாதாரண வேலையில் உள்ள நடமுறை என கருதுகிறேன். எமது வேலையில் உள்ள கணனியில் யு ஸ் பி இனை இணைத்து தரவேற்றவோ அல்லது தரவிறக்கவோ முடியாது. தனிப்பட்ட ஈமெயிலுக்கு ஈமெயில் அனுப்பமுடியாது. கோப்புகளை பதிவெடுக்கும் போது நீர் எழுத்தில் பிரதி என கோப்பில் பெரிதாக வரும், அத்துடன் பதிவெடுத்தவரின் பெயரும் திகதி நேரம் என்பனவையும் வரும். வேலையில் சேரும் போதே நிறுவன கோப்புகளை மற்றும் இலத்திரனியல் கோப்புகளை பாதுகாப்போம் என ஆவனத்தில் உறுதி மொழி வழ்ங்கவேண்டும். கோப்புகளை வீட்டிற்கு எடுத்து செல்ல முடியாது, அனைத்து நிறுவன சட்ட ஒழுங்கினை ஆண்டு தோறும் மீண்டும் மீண்டும் நினைவில் வைப்பதற்காக இலத்திரனியல் ஆவணத்தினை வாசித்து உறுதி மொழி வழங்கப்பட வேண்டும். ஆனாலும் சிலர் இதனை மீறி ஆவணங்களை நிறுவனத்திற்கு வெளியே எடுத்து சென்றமைக்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். அரசின் முக்கிய தகவல்களை வெளியில் எடுத்து சென்றவரை நிட்சயமாக பதவி நீக்கம் செய்வார்கள், அந்த வேலைக்குரிய நிபந்தனை அதுவாக உள்ளது. அரசின் முக்கிய ஆவணங்களை வெளியில் கொணர்ந்த சிலருக்கு தேசத்துரோக குற்றச்சாட்டப்பட்டுள்ளார்கள், அதனை மக்களுக்கு எடுத்துரைத்ததனால் அவர்கள் பல நெருக்கடிக்குள் வாழ்கிறார்கள், மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்ற ஒரே நோக்கமன்றி அவர்களுக்கு எந்த பொருளாதார நன்மையுமில்லை. அதே நிலை பைடனுக்கு வருமா எனபது தெரியவில்லை, சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்பது ஒரு கருதுகொள் மட்டுமே.1 point
-
துருக்கியில் இடைத் தங்கல் என்றால்…. இஸ்தான்புல் விமான நிலையத்திலா நின்றீர்கள். அமெரிக்காவில் இருந்து வருகிறீர்கள் என்றால்… முஸ்லீம் நாடுகளில் வெறுப்பை காண்பிப்பார்கள். நான், துனீசியாவிற்கு சுற்றுலா போன போது.. போகின்ற இடம் எல்லாம் பலரும் அமெரிக்காவில் இருந்து வருகின்றேனா என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அமெரிக்கர்களில்… அவ்வளவு வெறுப்புடன் இருந்தார்கள்.1 point
-
அண்ணை இதோ விலாசம் சாராயத்தவறனை பெரிய கடை றோட் யாழ்ப்பாணம் இலங்கை எப்ப பயணம் தேர்தலுக்கு முன்பா. ? இல்லை பின்பா. ?😂😂1 point
-
என்ன செய்ய திருமண வழியில் தான் சொந்தம் ...எனது மனைவியும் தியாகியின் மனைவியும் சகோதரிமார். அதாவது கூடப்பிறந்த அக்கா தங்கைமார் ....நான் ஒரு விவசாயின் மகன்....ஒரு சிறந்த குடிகாரனின். மகன். .....🤣🤪 மேலும் தியாகி அண்ணையின். மூத்த மகளின் திருமண விழாவுக்கு 2012 சுவிஸ் போயிருந்தேன். பிறகு போகவில்லை நான் தான் தனிய வேலை செய்கிறேன் ...மனைவி வேலை செய்ய முடியாது என்று விட்டாள் ...சரி வேலைக்கு போகவிட்டாலும். பிரச்சனையில்லை கதையமால். அமைதியாக இரு என்றாலும் கேட்கிறாளில்லை வாயை திறந்தால் 24 மணிநேரமும் ஒரே அறுவை தான் 😂🤪😛. தமக்கை வீட்டை சுவிஸ் போகும் போது உங்களையும் ஒருக்கால். பார்ப்போம் ...என்னை விட. உயரமா. ?இல்லை கட்டையா.?🤣. 6.2.23 மீண்டும் கனடா போகவேண்டும்.1 point
-
இவர் போன இடம் முழுக்க குழப்பம்தான் சிவாஜி லிங்கம் அல்ல கோமாளி லிங்கம் . உங்களுக்கு விளங்குது .1 point
-
1 point
-
ஓமோம். பாஸ்போட் கவனம். அதுகும்… அமெரிக்கன் பாஸ்போட் என்று தெரிந்தால் விஸ்கி வாங்கித்தர வரிசை கட்டி நிப்பாங்கள். 😁1 point
-
ஒவ்வொரு அமெரிக்க சனாதிபதிகளும் கொள்ளையடிக்கும் நோக்குடனே வருகின்றார்கள். இதுதான் உலகிற்கு பாடம் படிப்பிக்கும் அமெரிக்க ஜனநாயகம்...1 point
-
வியாழன் கோளை சுற்றி வரும் ஐஸ் நிலாக்களை ஆராயப் போகும் ஜூஸ் செயற்கைக்கோள் கட்டுரை தகவல் எழுதியவர்,ஜோனத்தான் அமோஸ் பதவி,பிபிசி அறிவியல் செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH/SWRI/MSSS வியாழன் கிரகத்தின் பனிக்கட்டி நிலவுகளை ஆராய்வதற்காக ஐரோப்பா தனது மிகப்பெரிய விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ள உள்ளது. ஜூஸ் செயற்கைக்கோள் பிரான்சின் துலூஸ் நகரில் இறுதிச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதன் பிறகு தென் அமெரிக்காவில் உள்ள ஏவுதளத்திற்கு அனுப்பப்படும். ஏப்ரல் மாதத்தில் பூமியில் இருந்து தனது பயணத்தை அது தொடங்கும். இந்த 6000 கிலோ விண்கலம் வியாழனின் நிலவுகளான காலிஸ்டோ, கேனிமீட் மற்றும் யூரோபா ஆகியவற்றில் தரையிறங்கி இவற்றில் ஏதாவது ஒன்று உயிர்கள் வாழ தகுதியானதா என ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. இது கற்பனையானது போல் தோன்றலாம். வியாழன் கிரகத்தை சுற்றி ஏராளமான நிலவுகள் உள்ளன. இவையனைத்தும் சேர்ந்து ஜோவியன் அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த ஜோவியன் அமைப்பு சூரியனில் இருந்து வெகுதொலைவில் உள்ளதால், பூமியில் விழும் சூரிய ஒளியில் இருபத்தி ஐந்தில் ஒரு பங்கை மட்டுமே பெறுகிறது. ஜோஷிமட் போல மண்ணுக்குள் புதைந்து கொண்டிருந்த ஊரை ஒன்றுகூடி காப்பாற்றிய மக்கள்22 ஜனவரி 2023 போதை பொருளாக மாற்றப்படும் மயக்க மருந்துகள், ஊசிகள்: எப்படி நடக்கிறது?22 ஜனவரி 2023 மனித குல வரலாற்றை கழுதைகள் எப்படி மாற்றி எழுதின?21 ஜனவரி 2023 ஆனால், ராட்சத கிரகமான வியாழனை அழுத்தும் மற்றும் தள்ளும் புவியீர்ப்பு விசையானது, அதன் நிலவுகளுக்கு ஆழத்தில் அதிக அளவு திரவ நீரைத் தக்கவைத்துக்கொள்ளும் ஆற்றலையும் வெப்பத்தையும் வழங்குகின்றன. நீர் இருந்தால் அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியம் உள்ளது என்பதை நாம் பூமி மூலம் அறிவோம். “யூரோபாவை பொருத்தவரை , பனி மேலோட்டத்தின் அடியில் 100 கிமீ ஆழத்தில் ஒரு ஆழமான சமுத்திரம் இருப்பதாக கருதப்படுகிறது” என்று கூறுகிறார் பிரிட்டனில் லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் திட்ட விஞ்ஞானியுமான எம்மா பன்ஸ். “பூமியில் உள்ள ஆழமான சமுத்திரத்தை விடவும் அவை 10 மடங்கு ஆழமானவை. சமுத்திரம் ஒரு பாறைத் தளத்துடன் தொடர்பு கொள்கிறது என்று நாங்கள் நினைக்கிறோம். இதன் காரணமாக, இது கலவை மற்றும் சில சுவாரஸ்யமான வேதியியல் இருக்கும் ஒரு காட்சியை வழங்குகிறது ” என்று அவர் பிபிசியிடம் கூறினார். ஜூஸ் செயற்கைக்கோளின் 6.6 பில்லியன் கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த பயணம் 8.5 ஆண்டுகள் வரை நீடிக்கும். ஜூலை 2031 வியாழன் கிரகத்தை சென்றடையும் இந்த செயற்கைக்கோள் அங்கிருந்து மூன்று நிலவுகளுக்கும் சென்றடைந்து இறுதியாக 2034ல் கேனிமீட்டில் நிரந்திரமாக தஞ்சமடையும். ஜூஸுக்குப் பின்னால் உள்ள ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (இ.எஸ்.ஏ) திட்டக் குழு இந்த வாரம் ஒரு பெரிய ஆய்வை நடத்தி, இந்த திட்டம் தயார் நிலையில் இருப்பதாக முடிவு செய்துள்ளது. ஏரோஸ்பேஸ் நிறுவனமான ஏர்பஸ் 1.6 பில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் 14 ஆயிரம் கோடி) செலவில் ஜூபிடர் ஐசி மூன்ஸ் எக்ஸ்ப்ளோரரின் கட்டுமானத்தை முன்னெடுத்துள்ளது. இதன் தயாரிப்புக்காக ஐரோப்பா முழுவதிலும் இருந்து நிபுணத்துவம் மற்றும் கூறுகளை அதன் உற்பத்தியாளர்கள் பெற்றுள்ளனர். ஜூஸின் 10 அறிவியல் கருவிகள் உட்பட அனைத்தும் இப்போது முழுமையாக சேகரிக்கப்பட்டுள்ளன. “அகச்சிவப்பு, புலப்படும் மற்றும் புற ஊதா என அனைத்து சாத்தியமான அலைவரிசையிலும் கூடிய ஏராளமான உயர்திறன் கேமராக்கள் எங்களிடம் உள்ளன ” என, வெள்ளி மற்றும் கருப்பு செயற்கைக்கோளின் ஒரு பக்கத்தில் தொங்கும் பெட்டிகளின் தொகுப்பை சுட்டிக்காட்டி பொறியாளர் சிரில் கேவல் விளக்கினார். “வெளிப்படையான மற்றும் பாதுகாப்பான கவர்களுக்கு அடியில் இந்த கருவிகள் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். ஜானஸ் என்று அழைக்கப்படும் உயர் திறன் கொண்ட தொலைநோக்கி, நிலவுகளுக்கு மிக அருகில் சென்று அற்புதமான புகைப்படங்களை எடுக்கும். அவை பிரமிக்கவைக்கும் காட்சிகளாக இருக்கும். ஏனெனில் அது வெறும் 400 கிலோமீட்டர் உயரத்தில் பறக்கும். ” என்று ஏர்பஸ் ஜூஸ் திட்ட மேலாளர் கூறினார். பட மூலாதாரம்,NASA/SWRI இதில் உள்ள ரேடார்கள் நிலவுகளின் உள்ளேயும் உற்று நோக்கும். லேசர் அளவீடு அமைப்பான லிடார் அவற்றின் நிலப்பரப்பு தொடர்பாக 3டி வரைப்படங்களை உருவாக்கும். காந்தமானிகள் அவற்றின் சிக்கலான மின் மற்றும் காந்த சூழல்களைக் கண்டறியும்; மற்றும் சென்சார்கள் அவற்றைச் சுற்றியுள்ள துகள்களை மாதிரி செய்யும். ஜூஸ் குறிப்பிட்ட "உயிர் குறிப்பான்களை" தேடாது; ஆழமான கடல்களில் வேற்றுகிரக மீன்களைக் கண்டறிய அது முயற்சி செய்யாது. எதிர்கால பயணங்கள் பின்னர் இன்னும் விரிவாக ஆராயக்கூடிய, வசிப்பிடத்திற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்வதே இதன் வேலை. வியாழனின் பனிக்கட்டி நிலவுகளில் ஒன்றில் தரையிறக்கி அதன் மேலோடு வழியாக கீழே உள்ள தண்ணீருக்கு துளையிடும் யோசனையை விஞ்ஞானிகள் நீண்ட காலமாக யோசித்து வருகின்றனர். ஒருநாள் அது நடக்கும். ஒருவேளை, இந்த நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் கூட அது இருக்கலாம். சூரிய குடும்பத்தின் வெளிப்புற பகுதிகள் குறித்து நீங்கள் வேலை செய்யும்போது, பொறுமை அவசியம் தேவை. பூமி மற்றும் வியாழனின் சுற்றுப்பாதைகள் வெறும் 600 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கலாம். ஆனால், ஒரு அற்புதமான ராக்கெட் இல்லாமல் நீங்கள் எளிதாக நேரடியாக சென்றுவிட முடியாது. ஐரோப்பாவின் ஏரியன் 5 சக்தி வாய்ந்ததாக இருந்தாலும், அது அந்த மாதிரியான திறன் பெற்றது அல்ல. அதற்கு பதிலாக, இது ஜூஸ் செயற்கைகோளை வீனஸ் மற்றும் பூமியின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தும் வேறு ஒரு சுற்று பாதையில் அனுப்பும். இதன் மூலம் வாயு கிரகத்தின் ஆய்வை துரிதப்படுத்தும். ஜூஸ் ஒரு குளிரூட்டப்பட்ட தொட்டி போல் கட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற நிலையில், வியாழனைச் சுற்றி சுழலும் கடுமையான கதிர்வீச்சில் அதன் எலக்ட்ரானிக்ஸ் விரைவாக சிதைந்துவிடும். அந்த நீண்ட பயணமானது வீனஸை நோக்கி உள்நோக்கி சென்று பின்னர் வாயு கிரகத்தை நோக்கி செல்லும் போது செயற்கைக்கோளின் வெளிப்புறத்தில் வெப்பநிலை 250C இலிருந்து மைனஸ்-230C ஆக இருக்கும். “கதிர்வீச்சில் இருந்து கணினிகளை பாதுகாக்கவும் அதே அளவிலான வெப்பநிலையில் குழாய்களின் நெட்வொர்க் மூலம் அவற்றை பராமரிக்கவும் விண்கலத்தின் உள்ளே இரண்டு பெரிய பெட்டகங்கள் உள்ளன, ” என்று கூறுகிறார் வெப்பநிலை நிபுணரான செவெரின் டெஷாம்ப்ஸ். உந்துவிசை அமைப்புக்கும் இதே முறைதான். ஏவப்படும்போது சிறப்பான முறையில் செயல்பட அதன் இயக்கம் சற்று வெதுவெதுப்பாக 20C என்ற அளவிலேயே பராமரிக்கப்பட வேண்டும். தனது பணிகளை ஜூஸ் செயற்கைக்கோள் மட்டும் தனியாக மேற்கொள்ளப்போவதில்லை. அமெரிக்க வான்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தனக்கு சொந்தமான கிலிப்பர் என்ற செயற்கைக்கோளையும் அனுப்புகிறது. ஜூஸ் செயற்கைகோள் பூமியில் இருந்து புறப்பட்டு சென்ற பிறகு தனது பயணத்தை கிலிப்பர் தொடங்கினாலும், தனது ஐரோப்பிய தோழனுக்கு முன்பே அது பயண இலக்கை சென்று அடைந்துவிடும். யூரோபா குறித்து இது அதிகம் கவனம் செலுத்தவுள்ளது. இரண்டு செயற்கைக்கோள்களும் சேர்ந்து ஒரு சக்திவாய்ந்த குழுவை உருவாக்கும். “இரண்டையும் ஒன்றாகக் கொண்டிருப்பது உங்களுக்கு மிகவும் ஆழமான புரிதலை கொடுக்கும், மேலும் இது என்ன நடக்கிறது என்பதற்கான சில யூகங்களை நீக்குகிறது” என்று ஜூஸின் காந்தமானி கருவியின் முதன்மை ஆய்வாளர் பேராசிரியர் மைக்கேல் டகெர்டி கூறினார். “இது சுவாரஸ்யமாக இருக்கும், எடுத்துக்காட்டாக, கிளிப்பர் யூரோபாவைக் கடந்து செல்லும் போது சந்திரனில் இருந்து ஒரு ப்ளூம் வருகிறது என்றால், கிளிப்பர் நெருக்கமான அளவீடுகளை செய்யும், ஆனால் ஜூஸ் அது யூரோபாவைச் சுற்றியுள்ள சூழலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் வியாழனில் உள்ள அரோரல் விளக்குகளில் நாம் பெரிய புள்ளிகளைப் பெறுகிறோமா என்பதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும். ” https://www.bbc.com/tamil/articles/c80v2y220zro1 point
-
கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா வேட்பாளர் ஆக்கியிருப்பினம்! கட்சிகள் கூட போட்டியிட ஆளில்லை!1 point
-
விஸ்கியை தந்திட்டு பாஸ்போட்டை உருவிக் கொண்டு போயிடுவாங்களே?1 point
-
1 point
-
ஆமா... எதுக்கு, இரண்டு கையையும்... வெட்டிக்கிட்டீங்க.1 point
-
அப்படி கேட்டால், அமெரிக்கன் சிற்றிசன் என்று சொல்லிப் போடுங்கோ... அப்பதான்... சாராயத்துக்கு பதிலாக.. விஸ்கி தருவார்கள். 🤣1 point
-
ஏராளன்... என்றாலும், இது ஆபத்தான விளையாட்டு. வெற்று சிலிண்டர் என்றாலும், திறந்த மூடியிலிருந்து சிறு கசிவு இருக்கத்தான் செய்யும். அதுகும்... இவ்வளவு சிலிண்டர்களில் இருந்து ஏதாவது ஒன்று அரைகுறையாக இருந்தால், அந்த இடத்தில் ஒரு வெடிப்பு நிகழ சாத்தியங்கள் அதிகம்.1 point
-
சிலதுகள்... வில்லங்கத்துக்கு அரசியலுக்கு வந்து, தமிழனின் உயிரை எடுக்குதுகள்.1 point
-
1 point
-
1 point
-
வேட்பு மனுவை... ஒழுங்காக நிரப்பத் தெரியாதவன் எல்லாம், என்ன இழவுக்கு அரசியலுக்கு வாறாங்கள். 😎 போய்.... பிள்ளை குட்டியளை படிக்க வைத்து, அதுகளை கொண்டு, அடுத்த முறை வேட்பு மனுவை நிரப்புங்கப்பா... 😂 🤣1 point
-
சபாஷ்டா மாப்பிள்ளை, நீ பூந்து விளையாடு.......! 👍1 point
-
1 point
-
நீங்கள் விடையை வைத்துக்கொண்டு எங்களை ரெஸ்ட் பண்ணிப்பார்த்து இருக்கிறீங்கள்.🤣1 point
-
அப்போ அமெரிக்கா இவர்களுக்கு தடை போட பயந்து, சும்மா இராணுவ அதிகாரிகளுக்கு தடை விதித்துவிட்டு இவர்களை கனடா பக்கம் விட்டதோ? ரஸ்யா உக்ரேயினில் எப்படி நடந்து கொள்கிறதோ அதற்கு என்ன காரணம் சொல்கிறதோ அது ஏற்கெனவே நம் நாட்டில் நடந்தேறி விட்டதே. இதற்குப்பின் எதற்கு விளக்கம். "உன் நண்பனைக்காட்டு நான் உன்னைப்பற்றி சொல்கிறேன்." என்றொரு பழமொழி உண்டு.1 point
-
இந்த வியாக்கியானம் ரஷ்யாவிற்கும் தகும்.1 point
-
இதை மிக இலகுவாக கையாண்டு இருக்கலாம். அணி ஒன்று - ததேகூ - இதில் எல்லா கட்சிகளும் இடம்பெறும். இடப்பங்கீடு வழமை போலவே. அணி இரெண்டு - சுயேட்ச்சை குழு - இதிலும் ததேகூ இல் உள்ள எல்லா கட்சிகளும் இடம்பெறும். இடப்பங்கீடும் அதே முறையில். இப்போ 40, 60 இரெண்டு முறையிலும் கூட்டமைப்பு வேட்பாளர் (அணி1, 2) வெல்ல வாய்ப்பு உள்ளதில் அதிகமகாக இருக்கும். இதை மக்களுக்கு எடுத்து சொன்னால் அவர்களும் புரிந்து கொண்டு வாக்களித்திருப்பர். ததேகூ வை உடைக்க வேண்டிய தேவையும் வந்திராது. இதை சுமந்திரனோ, செல்வமோ, சித்தரோ யோசிக்காமல் விட்டார்களா? அல்லது இதை சாக்காக வைத்து சுமந்திரன் தமிழரசின் பலத்தையும், ஏனையோர் தத்தம் பலத்தையும் பரிட்சிக்க முயல்கிறார்களா? சுய நலனும், கட்சி நலனும் இன நலனை மேவி நிற்கிறது.1 point
-
மாண்புமிகு உத்தம புத்திரன் புட்டின் அவர்கள் பின்னர் விட்ட உத்தியோகபூர்வ அறிக்கைகளை தாங்கள் கண்ணுறவில்லை போலும்..... புட்டின் ஐயா அவர்கள் தனது நாட்டிற்கு எது அவசியமோ அதை மட்டும் தன்னகப்படுத்தியுள்ளார். அவ்வளவே 😎1 point
-
மாண்புமிகு புட்டின் உக்ரேனுக்கு சாத்த வெளிக்கிட்டு ஒரு வருசம் ஆகுதெல்லோ? இன்னும் எத்தினை நாளுக்குத்தான் பழைய மணிக்கூட்டை பாத்துக்கொண்டிருப்பியளோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் 😊1 point