Jump to content

Leaderboard

  1. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      11

    • Posts

      43244


  2. பெருமாள்

    பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      9

    • Posts

      14446


  3. இணையவன்

    இணையவன்

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்


    • Points

      9

    • Posts

      7240


  4. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      76759


Popular Content

Showing content with the highest reputation on 01/30/23 in all areas

  1. ஆரம்பத்திலிருந்தே ரஸ்யா உக்ரெய்ன் மக்கள் வாழ்விடங்கள் மீது தாக்குதல் நடத்தும்போதெல்லாம் நீங்களும் உங்கள் சகாக்களும் புதினைப் பாராட்டியும் அழிவை ரசித்தும் பக்கம் பக்கமாக எழுதியதெல்லாம் பகிடியாகவா இல்லை இது பகிடியா ? நீங்களும் ரஸ்ய ஆதாரவாளர்களும் எழுதிய கருத்துகள் அப்படியே யாழில் உள்ளன. இதற்கு 3 அப்பாவிகள விருப்பு வாக்கு வேறு போட்டுள்ளனர் 🙂
    7 points
  2. உங்களுக்கென்ன? அமெரிக்கா.......... நீங்கள் எட்டத்த இருந்து உள்ள நாடுகளுக்கு சொட்டிப்போட்டு இருப்பியள். சாகிறது இன்னல்களை அனுபவிக்கிறது முழுக்க அப்பாவிச்சனங்கள். கேட்டால் அரபு வசந்தம்,அப்பு வசந்தம் ஆச்சி வசந்தம் உக்ரேன் வசந்தம் எண்டுவியள். கொஞ்சம் நில்லுங்கோ... உக்ரேன் பிரச்சனையில் நானும் நான் சார்ந்தோரும் ரஷ்ய சார்பாக இருந்தாலும் மக்கள் அழிவை விரும்பாதவர்கள். ஆனால் நீங்களும் நீங்கள் சார்ந்தோரும் உக்ரேன் ஆதரவாளர்கள்.மனித உரிமையை மதிப்பவர்கள். மனிதாபிகள். ஆனால் உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை ஆதரிப்பவர்கள். இதன் மூலம் நீங்கள் சார்ந்தோர்தான் போரை விரும்புகின்றீர்கள். அப்பாவிகள் உயிரிழப்பை விரும்புகின்றீர்கள். அமைதி வழியில் போரை நிறுத்த சிந்திக்காதவர்கள். அது பற்றியே கருத்தெழுதாதவர்கள். போர் நடப்பது ரஷ்யாவில் அல்ல.உக்ரேனில். அழிவு யாருக்கு???
    4 points
  3. முதலில் இங்கிருக்கும் ஆளுக்கு யாராவது ஏதாவது செய்யுங்க மந்திரித்து விட்ட நாம்பன் கண்டு போல் ஓடி ஓடி எல்லா திரிக்குள்ளு,ம் புகுந்து பாடம் எடுக்கிறார் யுவர் ஆனர் .🐵
    3 points
  4. ரைசியாவை எதிர்த்து இந்தியா ஒரு அறிக்கை விட்டால் காணும் நிலைமை தலைகீழ் ஆகும் .அதுக்காக அதானி குழுமம் சுத்தமானவர்கள் கிடையாது இன்னமும் வீம்பு காட்டினால் வட இந்தியர்கள் கோமணத்துடன் நிக்க வேண்டி வரும் . இந்த உலக அரசியல் நல்லாத்தான் இருக்கு நாம் அழிந்தபோது வட இந்தியர்கள் இருந்த நிலையில் நான் இருக்கிறேன் பொப் கோனும் கையுமாய் . ஆனாலும் தமிழ் பிபிசி ஓவராதான் வட இந்தியர்களுக்கு ..... விடுது .இந்தியா வல்லரசு எனும் கனவு காண்பதிலேயே அழிந்து போகும் பல்வேறு மொழி ஜாதி இனம் கொண்ட தேசம் முதலில் வல்லரசுக்கு உள்ள தகுதி என்ன என்பதை தேடி பார்க்கணும் .
    3 points
  5. எல்லாருக்கும் எல்லாம் சீரியசாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களுக்கு சீரியசாக இருந்தா வாசித்து விட்டு போங்க. யார் மறித்தது? மற்றவர்களுக்கு வகுப்பு எடுக்கிற வேலையை… வேறு ஆட்களுடன் வைத்துக் கொள்ளவும். 😡
    2 points
  6. இப்படி கருத்து சொல்லிக்கொண்டே இந்த திரியில் பேசப்படும் ரெண்டு நாடுகள் விவகாரத்தில் ரஷ்ய "அல்ட்டிமேட் ஸ்டார்", "தானைத்தளபதி" புட்டினை போற்றியும், வாழ்த்தியும் அறிக்கை விட்டுக்கொண்டு இருந்தால் எப்படி?
    2 points
  7. இந்திய சிறீலங்கா இராணுவத்துடன் பயனித்தவர்களுக்கு புலிகள் பொது மன்னிப்பு அளித்து தமிழ் தேசிய அரசியலில் பங்கு பெற வைத்தார்கள். ஆனால் புலிகளால் மன்னிப்பு வழங்காத புளொட்டிற்கு மன்னிப்பு வழங்கியது சம் சும் தலைமையிலான கூட்டமைப்பு. இவை யாவும் ஊரில் வாழ்ந்து வந்தவர்களுக்கு வாழ்பவர்களுக்கு சும்மின் பித்தலாட்டம் புரியும்.
    2 points
  8. அவர்கள் செய்ததை விட சுமத்திரன் சார் தமிழர்களுக்கு செய்த துரோகம் மிகபெரியது இறுதி சண்டையில் சிங்கள ராணுவத்தால் போர் குற்றம் நடக்கவில்லை என்று நாடு நாடாய் பறந்து பறந்து காரியம் ஆற்றியது .
    2 points
  9. சர்வதேசச் செய்தி நிறுவனம் ஒன்றில் மேற்குநாடுகள் உக்ரேனுக்கு 321 புதிய ரக தாங்கிகளை வழங்கவிருக்கின்றன என்று செய்தி வெளிவந்திருக்கிறது. ஜேர்மனின் நவீன லெப்பேர்ட் - 2 ரகத் தாங்கிகள், அமெரிக்கத் தயாரிப்பான ஏப்ராம் தாங்கிகள் மற்றும் இங்கிலாந்தின் சலெஞ்சர் ரக தாங்கிகளும் இதற்குள் அடக்கமாம். தற்போது உக்ரேன் யுத்தத்தில் பாவித்துவரும் தாங்கிகள் சோவியத் ஒன்றியத்தின் காலத்தில் தயாரிக்கப்பட்டவையாம் . குறைந்தது 40 வருடங்களுக்கு முன்னதான தொழிநுட்பமே இத்தாங்கிகளில் காணப்படுவதால் தாக்குதல்த் திறன் குறைவானதென்று நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். ரஸ்ஸியாவின் நவீன ரக தாங்கிகளுக்கு நிகராக இவற்றால் தாக்குப் பிடிப்பதென்பதே இலேசான காரியமல்ல என்று சொல்லப்படுகிறது. ஆனாலும், பல களங்களில் இந்தப் பழமையான சோவிய கால தாங்கிகளைப் பாவித்தே உக்ரேன் தாக்குப்பிடித்து வருகிறது. போதாக்குறைக்கு, மேற்குநாடுகள் நீண்டதூர எறிகணைகள், மிகயொலி யுத்த விமானங்களையும் தரும் யோசனையில் இருக்கின்றனவாம். https://edition.cnn.com/2023/01/27/world/ukraine-tanks-western-allies-intl-hnk/index.html https://edition.cnn.com/videos/world/2023/01/29/ukraine-tanks-pleitgen-cnntmw-vpx.cnn
    2 points
  10. அதே போல முதல் வெடி கேட்க முன்னரே "சிங்களவன் அடிக்கிறான்!" என்று ஓடி வந்த தேசிய வீரர்களும் போகாமல் சிவிங்கம் போல ஒட்டிக் கொண்டார்களாம்! அது மட்டுமல்லாமல், ஒட்டிக் கொண்டிருக்கும் இடத்தில் இருந்து புட்டின், கிம், சதாம், ட்ரம்ப் என்று ஆதரவு வேறு! ஆனால், என்ன, ரஷ்யா தற்செயலாக வென்று ஜேர்மனி, டென்மார்க் என்று ரஷ்ய தாங்கிகள் நுழைந்தால் முதலில் ஓடப் போவதும் இதே சிவிங்கங்கள் தான்! 😂
    2 points
  11. காந்தியின் கொலையை காவல்துறை தடுத்திருக்க முடியாதா? ரஜ்னீஷ் குமார் பிபிசி செய்தியாளர் 30 ஜனவரி 2020 புதுப்பிக்கப்பட்டது 30 ஜனவரி 2023 பட மூலாதாரம்,GEORGE RINHART / GETTY காந்தி கொல்லப்பட்ட சம்பவத்துடன் சேர்த்து அவர் மீது மொத்தம் ஆறு கொலை முயற்சிகள் நடைபெற்றன. காவல்துறையினருக்கு போதுமான ஆதாரங்கள் கிடைத்தபோதிலும், சதித்திட்டத்தின் வேரை கண்டுபிடிக்கவில்லை. 1949 பிப்ரவரி 10இல், டெல்லியின் செங்கோட்டைப் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். செங்கோட்டைக்குள் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் காந்தி படுகொலை தொடர்பான தீர்ப்பை அறிவிக்கவிருந்தது. சரியாக 11.20 மணியளவில், நாதுராம் கோட்சேவுடன் எட்டு குற்றவாளிகள் நீதிமன்ற அறைக்கு அழைத்து வரப்பட்டனர். சாவர்க்கரின் முகத்தில் கவலை இருந்தது, ஆனால், நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே மற்றும் விஷ்ணு கர்கரே ஆகியோர் சிரித்தபடி வந்தனர். கருப்பு ஆடை அணிந்த நீதிபதி ஆத்மாசரண் காலை 11.30 மணிக்கு நீதிமன்ற அறைக்கு வந்து தனது இருக்கையில் அமர்ந்தார். நாதுராம் கோட்சே என்ற பெயரை நீதிபதி அழைத்தவுடன், கோட்சே எழுந்து நின்றார். பின்னர் அனைவரின் பெயரும் ஒன்றன் பின் ஒன்றாக அழைக்கப்பட்டன. காந்தி கொலை வழக்கில் நாதுராம் கோட்சே மற்றும் நாராயண் ஆப்தே ஆகியோருக்கு நீதிபதி ஆத்மாசரண் மரண தண்டனை விதித்தார். விஷ்ணு கர்கரே, மதன்லால் பாஹ்வா, ஷங்கர் கிஸ்ட்யா, கோபால் கோட்சே, தத்தாத்ரேயா பர்ச்சுரே ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சாவர்க்கரை நிரபராதி என்று கூறிய நீதிபதி, அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டார். இந்த முடிவைக் கேட்டதும், கோட்சே உட்பட அனைவரும் 'இந்து மதம் வாழ்க, பாகிஸ்தானை பிரிப்போம், இந்தி இந்து இந்துஸ்தான்' என்ற முழக்கங்களை எழுப்பினர். நீதிமன்ற அறையில் முழக்கங்களை கோட்சே எழுப்பியது அது முதல் முறை அல்ல. 1948 நவம்பர் 8-ஆம் தேதி செங்கோட்டையில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சாட்சியங்கள் அனைத்தும் விசாரிக்கப்பட்ட பிறகு, நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று நீதிபதி நாதுராம் கோட்சேவிடம் கேட்டார். பட மூலாதாரம்,BETTMANN / GETTY IMAGES படக்குறிப்பு, நீதிமன்றத்தில் நாதூராம் கோட்சே, ஆப்தே, விஷ்ணு ராம கிருஷ்ணா (இடமிருந்து வலம்) தாம் எழுதிய 93 பக்க அறிக்கையை படிக்க விரும்புவதாக நாதுராம் பதிலளித்தார். நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்க, காலையில் சுமார் பத்தேகால் மணிக்கு தனது அறிக்கையை வாசிக்கத் தொடங்கினார். 6 பாகங்களாக அறிக்கையை வாசிப்பதாக நாதுராம் கூறினார். முதல் பகுதியில் சதி மற்றும் அதனுடன் தொடர்புடைய விஷயங்கள், இரண்டாம் பாகத்தில் காந்தியின் ஆரம்பகால அரசியல், மூன்றாம் பகுதி காந்தியின் அரசியலின் கடைசி கட்டம், நான்காவது பகுதி காந்தி மற்றும் இந்தியாவின் சுதந்திர போராட்டம், ஐந்தாவது பகுதி நாட்டின் விடுதலைக்கான கனவுகள் சிதைந்து என்று அவர் தெரிவித்தார். தனது அறிக்கையின் கடைசிப் பாகம், தேச விரோதக் கொள்கையைப் பற்றியதாக இருக்கும் என்றும் கோட்ஸே தெரிவித்தார். தனது அறிக்கையை எந்த குறிப்பும் இல்லாமல் அச்சிட வேண்டாம் என்று ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்த கோட்சே, தனது அறிக்கையை 45 நிமிடங்கள் படித்த பிறகு, நீதிமன்ற அறையிலேயே சரிந்து விழுந்தார். சிறிது நேரம் கழித்து, மீண்டும் எழுந்து நின்று எழுதப்பட்ட அறிக்கையை படிக்கத் தொடங்கினார், முழு அறிக்கையையும் படித்து முடிக்க ஐந்து மணி நேரம் ஆனது. அறிக்கையை வாசிக்கும்போது, அவர் அடிக்கடி தண்ணீர் குடித்தார். கோட்சே தனது அறிக்கையை 'அகண்ட பாரதம் நீண்ட காலம் வாழ்க', 'வந்தே மாதரம்' என்ற முழக்கங்களுடன் முடித்தார். கஸ்தூரிபாவின் அந்த 5 வளையல்கள்: என்ன சொன்னார் காந்தி? மகாத்மா காந்திக்கு நெருக்கமான 8 பெண்கள் யார்? நீதிமன்றத்தில் பேசிய கோட்சே, தற்போதைய இந்திய அரசாங்கம் 'முஸ்லிம் சார்புடையது' என்பதால் அதை நம்பவில்லை என்று கூறினார். இருப்பினும், கோட்சேவின் அறிக்கையை நீதிமன்றப் பதிவிலிருந்து நீக்க மறுத்த நீதிபதி ஆத்மாசரண், எழுத்துபூர்வ அறிக்கைகளை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். அன்றைய தினம் நீதிமன்ற அறையில் மக்கள் கூட்டம் நிரம்பியிருந்தது. 1948 நவம்பர் 9ஆம் நாளன்று நீதிபதி ஆத்மாசரண் நாதுராமிடம் 28 கேள்விகளைக் கேட்டார். ஒரு கேள்விக்கு பதிலளித்த கோட்சே, 'ஆம், நான் காந்திஜியை சுட்டுக் கொன்றேன் என்று சொன்னார். காந்தியை சுட்டுக் கொன்ற பிறகு, பின்னால் இருந்து ஒருவர் என்னை தலையில் அடித்தார், ரத்தம் கசியத் தொடங்கியது. நான் திட்டமிட்டதைச் செய்தேன், எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று அந்த மனிதரிடம் சொன்னேன். அவர் என் கையிலிருந்து கைத்துப்பாக்கியைப் பறித்தார். அது தானியங்கி துப்பாக்கி, எனவே தற்செயலாக வேறு யாரையும் சுட்டுவிடக்கூடாது என்று அஞ்சினேன். துப்பாக்கியால் என்னை குறிவைத்த அந்த நபர், உன்னை சுட்டுவிடுவேன் என்று சொன்னான். என்னை சுடு, நான் இறக்க தயாராக இருக்கிறேன்," என்று நான் சொன்னேன். பட மூலாதாரம்,BETTMANN / GETTY IMAGES 'லெட்ஸ் கில் காந்தி' என்ற தனது புத்தகத்தில் காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி இவ்வாறு குறிப்பிடுகிறார்: "இது கோட்சே நீதிமன்ற அறையில் நடத்திய நாடகம். காந்தியைக் கொன்றால் பிரபல ஹீரோவாக மாறலாம் என்று நினைத்துதான், அவர் கொலை செய்ய ஒப்புக்கொண்டார். "ஆனால், அப்படி நடக்காமல் போனதால், நீதிமன்ற அறையில் வேறு நாடகத்தை நடத்த முயன்றார்." 30 ஜனவரி 1948 மிகவும் மோசமான நாள். டெல்லி ரயில் நிலைய உணவகத்தில் காலை உணவை உட்கொண்ட நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே மற்றும் விஷ்ணு கர்கரே பிர்லா மந்திர் கோவிலுக்கு புறப்பட்டனர். பிர்லா மந்திர் கோவிலுக்கு பின்னால் உள்ள காட்டுப் பகுதியில் மூன்று-நான்கு ரவுண்டுகள் சுட்டு, துப்பாக்கியை சோதனை செய்தார். காலை 11.30 மணிக்கு கோட்சே பழைய டெல்லி ரயில் நிலையத்திற்கு சென்றார். மெட்ராஸ் ஹோட்டலில் இருந்து கர்கரே பழைய டெல்லி ரயில் நிலையத்திற்கு புறப்பட்டார். கர்கரே மதியம் இரண்டு மணிக்கு பழைய டெல்லி ரயில் நிலையத்தை அடைந்தார். அங்கு கோட்சேவையும் ஆப்தேவையும் சந்தித்தார். மாலை 4.30 மணியளவில், மூவரும் ரயில் நிலையத்திலிருந்து குதிரை வண்டியில் பிர்லா மந்திர் கோவிலுக்கு புறப்பட்டனர். பிர்லா மந்திருக்குப் பின்னால் இருந்த சிவாஜியின் சிலையை பார்க்க கோட்சே சென்றார். அங்கிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில், அல்புர்கக் சாலையில் (தற்போது தீஸ் ஜன்வரி மார்க் என்று அழைக்கப்படும் சாலை) இருந்த பிர்லா பவனுக்கு , ஆப்தே மற்றும் கர்கரே சென்றனர். தற்போது 'காந்தி ஸ்ம்ருதி' என்று அழைக்கப்படும் பிர்லா பவனில் பிரார்த்தனை செய்யும் இடத்தை நோக்கி சென்ற கோட்ஸே, மாலை 5.10 மணிக்கு காந்தியை சுட்டுக் கொன்றார். கோட்சே கைது செய்யப்பட்டார், ஆனால் ஆப்தே மற்றும் கர்கரே டெல்லியில் இருந்து தப்பிச் சென்றனர். காந்தி படுகொலை செய்யப்பட்ட 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஏன் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது என்பது ஒரு முக்கியமான கேள்வி. இதற்கு பதிலளிப்பதும் கடினமானது அல்ல. பட மூலாதாரம்,UNIVERSAL HISTORY ARCHIVE காந்தியை திடீரென படுகொலை செய்யப்படவில்லை. சுதந்திர இந்தியாவில் காவல்துறையின் அலட்சியம் பற்றிய கதை, காந்தி படுகொலையுடனெ தொடங்கிவிட்டது என்றே கூறலாம். காந்தி கொல்லப்பட்டார் என்பதைவிட, கொல்ல அனுமதிக்கப்பட்டார் என்றே பலர் நம்புகிறார்கள். காந்தி படுகொலை செய்யப்பட்ட 17 ஆண்டுகளுக்குப் பிறகு, 1965 மார்ச் 22 அன்று தேசத்தந்தையின் கொலை குறித்து விசாரிக்க ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜீவன் லால் கபூரிடம் இந்த விசாரணை ஆணையத்தின் பொறுப்பு வழங்கப்பட்டது. எனவே இது கபூர் விசாரணை கமிஷன் என்று அழைக்கப்படுகிறது. 1964 அக்டோபர் 12ஆம் நாளன்று, ஆயுள் தண்டனை முடிவடைந்த உடன், விஷ்ணு கர்கரேவும் மதன்லால் பஹ்வாவும் விடுவிக்கப்பட்டனர். நாதுராம் கோட்சேவின் தம்பி கோபால் கோட்சே மட்டும் விடுவிக்கப்படவில்லை. கோபால் கோட்சேவும், விஷ்ணு கர்கரேவும் புனேவுக்கு வந்தததும், அவரை ஒரு ஹீரோ போல வரவேற்க அவர்களது நண்பர்கள் திட்டமிட்டிருந்தனர். இதற்காக, ஒரு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டது, அதில் காந்தியின் படுகொலையில் அவர்களது பங்கைப் பாராட்டவும், கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டது. 1964 நவம்பர் 12அன்று சத்யவிநாயக் பூஜை, நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மராத்தியில் அழைப்பு அனுப்பப்பட்டன. அதில் தேசபக்தர்கள் விடுவிக்கப்பட்ட மகிழ்ச்சிக்காக இந்த பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அனைவரும் வந்து அவர்களை வாழ்த்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், நாதுராம் கோட்சேவும் தேசபக்தர் என்றே அழைக்கப்பட்டார். பால கங்காத திலகரின் பேரன் ஜி.வி.கேட்கரின் கருத்து அனைவருக்கும் மிக்க ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. திலகர் தொடங்கிய கேசரி மற்றும் தருண் பாரத் ஆகிய இரண்டு பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்த ஜி.வி.கேத்கர், இந்து மகாசபையின் சித்தாந்தங்களை பின்பற்றுபவராக அறியப்பட்டார். கேத்கர் தலைமை தாங்கிய இந்த நிகழ்ச்சியில் பூஜைக்குப் பிறகு, கோபால் கோட்சே மற்றும் கர்கரே ஆகியோர் சிறைச்சாலை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். அந்த சந்தர்ப்பத்தில் பேசிய கேத்கர், காந்தியின் படுகொலைக்கான திட்டத்தை தான் ஏற்கனவே அறிந்திருந்ததாகவும், அதை நாதுராம் கோட்சேவே தன்னிடம் சொன்னதாகவும் கூறினார். பட மூலாதாரம்,MONDADORI PORTFOLIO / GETTY திலகரின் பேரன் ஜி.வி.கேத்கர் இவ்வாறு கூறினார்: "சில வாரங்களுக்கு முன்பு, சிவாஜி கோயிலில் நடைபெற்ற கூட்டத்தில் கோட்சே தனது விருப்பத்தை தெரிவித்தார். தான் 125 வயது வரை வாழப் போவதாக காந்தி கூறுகிறார், ஆனால் அவரை 125 ஆண்டுகள் வாழ யார் விடப்போகிறார்கள்? என்று கோட்சே தெரிவித்தார். அப்போது எங்களுடன் பாலுகாகா கனேத்கரும் இருந்தார். கோட்சே இப்படிச் சொன்னதைக் கேட்டு அவருக்கு வருத்தம் ஏற்பட்ட து. நாத்யாவுக்கு (நாதுராம்) புரிய வைக்கிறோம் என்று நான் கனேத்கருக்கு உறுதியளித்தன். காந்தியைக் கொல்ல விரும்புகிறீர்களா என்று நான் நாதுராமிடம் கேட்டேன். ஆம் என்று கூறிய அவர், நாட்டில் அதிக பிரச்சனைகளை காந்தி ஏற்படுத்த வேண்டாம் என்று நினைப்பதாக தெரிவித்தார்". கேத்கரின் அறிக்கை பத்திரிகைகளில் தீயாகப் பரவியது. 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேடு, ஜி.வி.கேட்கரை நேர்காணல் செய்து விரிவான கட்டுரையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் நாதுராம் கோட்சேவின் புகைப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தி, அவரை தேசபக்தர் என்று கூறியதும் வெளியானது. 1964 நவம்பர் 14 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய ஜி.வி. கேத்கர், "மூன்று மாதங்களுக்கு முன்பு, காந்தியின் படுகொலை திட்டத்தை நாதுராம் கோட்சே என்னிடம் கூறினார். 1948 ஜனவரி 20 அன்று காந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் மதன்லால் பஹ்வா ஒரு குண்டை வீசி எறிந்தார். பிறகு அவர் புனேவுக்கு வந்தபோது, தனது எதிர்காலத் திட்டத்தைப் பற்றிச் சொன்னார். காந்தி கொல்லப்படுவார் என்று எனக்குத் தெரியும். இது குறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கோபால் கோட்சே என்னிடம் சொன்னார் ". இதன் பின்னர் கேத்கர் கைது செய்யப்பட்டார். கோபால் கோட்சேவும் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். இதன் பின்னரே காந்தியின் படுகொலை குறித்து விசாரிக்க கபூர் ஆணையம் அமைக்கப்பட்டது. காந்தியின் கொலை திட்டமிடப்பட்டு செய்யப்பட்டது என்றும், விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, இதில் வேறு யார் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று கண்டறியவேண்டும் என்பதே கபூர் விசாரணை ஆணையத்தின் பணி. காந்தி படுகொலைக்கு உடனடி காரணங்கள் 1948 ஜனவரி 13 அன்று, பகல் 12 மணியளவில், காந்தி இரண்டு கோரிக்கைகளுடன் உண்ணாவிரதத்தில் அமர்ந்தார். பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாயை இந்தியா கொடுக்க வேண்டும் என்பது முதல் கோரிக்கை. டெல்லியில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கை. உண்ணாவிரதத்தின் மூன்றாம் நாளில், அதாவது ஜனவரி 15 அன்று, பாகிஸ்தானுக்கு உடனடியாக 55 கோடி ரூபாயைத் தருவதாக இந்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பால் காந்திக்கு எதிராக இந்து மகாசபை உள்ளிட்ட கடும்போக்கு இந்துக்கள் மிகுந்த கோபமடைந்தனர். உண்ணாவிரதத்தை முடித்த காந்தி, பிரார்த்தனைக்கு பிந்தைய உரையில் இவ்வாறு குறிப்பிட்டார், "முஸ்லிம்களை தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றக்கூடாது, முஸ்லிம்களை வீடுகளை விட்டு கட்டாயமாக வெளியேற்றுவதற்காக எந்தவிதமான வன்முறையிலும் ஈடுபடக்கூடாது. இந்து அகதிகள், வெளியேறிய முஸ்லிம்களின் இருப்பிடங்களை ஆக்ரமிக்கக்கூடாது". பட மூலாதாரம்,UNIVERSAL HISTORY ARCHIVE இருப்பினும், பாபுவின் உண்ணாவிரதத்தின் முக்கிய நோக்கம் பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் நிதியைப் பெற்றுத் தருவது அல்ல, மாறாக வகுப்புவாத வன்முறையைத் தடுத்து மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுதான் என்று துஷார் காந்தி கூறுகிறார். "பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று காந்தி கோரியது உண்மை தான். ஆனால் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவரது முக்கிய நோக்கம் ஆகும்". பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் கொடுக்க நேருவும் படேலும் ஏன் விரும்பவில்லை? அதற்கு பதிலளிக்கும் துஷார் காந்தி, "இரு நாடுகளுக்கும் இடையிலான பிரிவினை பிரச்சனை தீர்க்கப்படும் வரை பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாயை கொடுக்க வேண்டாம் என்று அமைச்சரவை முடிவு செய்தது. இருப்பினும், பிரிவினைக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு 75 கோடி ரூபாயை நிபந்தனையின்றி இந்தியா வழங்கும் என்று ஒப்பந்தம் இருந்தது. இதில் முதல் தவணையாக பாகிஸ்தானுக்கு 20 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது, நிலுவையில் இருந்த 55 கோடி ரூபாய் நிதியையும் உடனடியாக கொடுக்கவேண்டும் என்று பாகிஸ்தான் கேட்கத் தொடங்கியது. கொடுத்த வாக்குறுதியை எப்படி நிறைவேற்றாமல் இருக்க முடியும்? அது இருதரப்பு ஒப்பந்தத்தை மீறுவதாக இருந்திருக்கும். எனவே தான் காந்தி அதை வலியுறுத்தினார்" என்று கூறுகிறார். காந்தியின் உண்ணாவிரதத்திற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாயைக் கொடுக்க அரசாங்கம் முடிவு செய்தது, இந்த முடிவால், கடும்போக்கு இந்துக்களின் பார்வையில் வில்லனாக மாறிவிட்டார் காந்தி. 55 கோடி ரூபாயை பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டும் என்ற காந்தியின் வார்த்தைக்கு சர்தார் படேலும் உடன்படவில்லை. கபூர் கமிஷனின் விசாரணையில் சர்தார் படேலின் மகள் மணிபன் படேல் சாட்சி எண் 79 ஆக ஆஜராகியிருந்தார். கபூர் கமிஷனிடம் சாட்சியளித்த மணிபென், "பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்ற மகாத்மா காந்தியுடன் என் தந்தை உடன்படவில்லை என்பது எனக்கு நினைவில் இருக்கிறது. பாகிஸ்தானுக்கு இந்த தொகை வழங்கப்பட்டால், இந்திய மக்கள் கோபப்படுவார்கள் என்று என் தந்தை நம்பினார். பாகிஸ்தானுடனான அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்ட பின்னரே இந்த தொகை வழங்கப்பட வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. "பாகிஸ்தானுக்கு இந்த தொகை கிடைத்தால், இந்தியாவில் உள்ளவர்கள் அதை தவறாகப் புரிந்துகொள்வார்கள், பாகிஸ்தான் இந்த பணத்தை நமக்கு எதிராகப் பயன்படுத்தலாம் என்று என் தந்தை சொன்னார். இதுபோன்ற சூழ்நிலையில் நம் நாட்டு மக்களின் உணர்வுகள் புண்படும் என்றும் சொன்னார். இந்த உண்ணாவிரதத்தை மக்கள் சரியானதாக கருத மாட்டார்கள் என்றும் இது பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் ஆயுதமாக பயன்படுவதாக கருதப்படும் என்று என் தந்தை மகாத்மா காந்தியிடம் தெரிவித்தார்" என்றார் மணிபென். பொதுமக்களின் உணர்வை கருத்தில் கொண்டு நேருவும் படேலும் 55 கோடி ரூபாயைக் கொடுக்க ஒப்புக் கொள்ளவில்லை என்று துஷார் காந்தி கூறுகிறார். "எது சரி எது தவறு என்பதை மனிதநேய அடிப்படையில்தான் பாபு தீர்மானிப்பார். வாக்குறுதியை மீறுவதை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பொதுமக்களின் உணர்வு என்ற அழுத்தத்தின் கீழ் தவறான முடிவை எடுப்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்தியா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதில் பாபு உறுதியாக இருந்தார். நேருவும் படேலும் தேர்தல் அரசியலில் நுழைந்துவிட்டாலும், சுதந்திரத்திற்குப் பிறகும் பாபு தனது கொள்கைகளைப் பின்பற்றி வந்தார். பொதுமக்களின் உணர்வுகளை விட சத்தியமே முக்கியம் என்று அவர் நம்பினார். பாபு மரணத்திற்கு பயப்படவில்லை ". காந்தி உண்ணாவிரதத்தில் அமர்ந்தபோது, மக்கள் அவருக்கு எதிராக பிர்லா பவனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 55 கோடி ரூபாய் கொடுக்குமாறு அரசாங்கத்தை காந்தி கட்டாயப்படுத்துவதாகவும், டெல்லியில் உள்ள முஸ்லிம்களின் வீடுகளை இந்து அகதிகளுக்கு வழங்கவில்லை என்றும் மக்கள் கோபமடைந்தனர். டெல்லியில் வகுப்புவாத பதற்றம் காரணமாக, முஸ்லிம்கள் வீடுகளை விட்டு வெளியே சென்றனர். அவர்கள் புரானா கிலா மற்றும் ஹுமாயூன் கிலாவிலும் தங்க வைக்கப்பட்டனர். மகாத்மா காந்தியின் மரணத்தை நேரில் பார்த்த 14 வயது பெண் காந்தியை கொல்ல திட்டமிடப்பட்டு தோல்வியடைந்த 5 முயற்சிகள் இந்து அகதிகள் முஸ்லிம் வீடுகளை கையகப்படுத்த விரும்பினர், காந்தி அதற்கு எதிராக உண்ணாவிரதத்தில் அமர்ந்தார். காந்தியின் உண்ணாவிரதத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவர்கள், "காந்தி இறந்தால் பரவாயில்லை, அவர் இறக்கட்டும்" என்று அறைகூவல் விடுத்தார்கள். மகாத்மா காந்தியிடம் இறுதி வரை செயலாளராக இருந்த பியரேலால் எழுதிய 'Mahatma Gandhi the last phase' என்ற புத்தகத்தில், "இந்த உண்ணாவிரதம் டெல்லியில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான பகைமையைக் குறைக்க கணிசமான பங்காற்றியது" என்று எழுதினார். 1948 ஜனவரி 18இல் அமைதிக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. "மெஹ்ரோலியில், சூஃபி துறவி குதுப்-உத்-தின் பக்தியார் காக்கியின் உர்ஸ் (திருவிழா) வழக்கம்போலவே ஆண்டுதோறும் கொண்டாடப்படும். டெல்லியில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்லலாம். இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் ஆக்கிரமித்த மசூதிகள் அவர்களின் ஆக்ரமிப்பில் இருந்து விடுவிக்கப்படும். முஸ்லிம் பகுதிகள் சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்படும். அச்சம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறிய முஸ்லிம்கள் திரும்பி வருவதை இந்துக்கள் எதிர்க்க மாட்டார்கள்" என்று அந்தக் குழு காந்திக்கு உறுதியளித்தது. இந்த உத்தரவாதங்களுக்குப் பிறகு, மகாத்மா காந்தி ஜனவரி 18 அன்று மதியம் 12.45 மணிக்கு மெளலானா ஆசாத் கொடுத்த ஆரஞ்சு பழச்சாற்றைக் குடித்து உண்ணாவிரதத்தை முடித்தார். இதன் பின்னர் இந்து மகாசபையின் மேடையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இந்திய அரசு பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் கொடுக்குமாறு கட்டாயப்படுத்தியது மற்றும் இந்து அகதிகளை முஸ்லிம்களின் வீடுகளில் தங்க அனுமதிக்கவில்லை என்பது தொடர்பாக கடுமையான விவாதங்கள் நடைபெற்றன. இந்தக் கூட்டத்தில் மகாத்மா காந்திக்கு எதிரான மோசமான வார்த்தைகளும் பயன்படுத்தப்பட்டன. சர்வாதிகாரி என்று அழைக்கப்பட்ட காந்தி, ஹிட்லருடன் ஒப்பிடப்பட்டார். இந்து மகாசபையின் செயலாளர் அசுதோஷ் லஹிரி ஜனவரி 19 அன்று, இந்துக்களிடம் உரையாற்றியபோது கடுமையாக பேசினார். முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மகாத்மா காந்தி உண்ணாவிரதம் இருப்பது குறித்து சீக்கியர்களும் கோபமடைந்ததாக காவல்துறை அறிக்கை கூறுகிறது. இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்காக காந்தி எதுவும் செய்யவில்லை என்று சீக்கியர்களும் கருதினர். மறுபுறம், காந்தி தன்னலமற்ற முறையில் தங்களுக்கு சேவை செய்ததாக ஜனவரி 19 மற்றும் 23 ஆகிய தேதிகளில் முஸ்லிம்கள் இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியதாக காவல்துறையின் அறிக்கை கூறுகிறது. காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு இந்த சம்பவங்கள் உடனடி காரணமாக இருந்தன. ஜனவரி 17 முதல் 19 வரை, காந்தியின் படுகொலையைத் திட்டமிட்டு செய்தவர்கள் டெல்லிக்கு ரயில் மற்றும் விமானத்தில் வந்தனர். அவர்கள் டெல்லியில் உள்ள ஹோட்டல்களிலும், இந்து மகாசபா பவனிலும் தங்கியிருந்தனர். 1948 ஜனவரி 18 அன்று, மாலை ஐந்து மணியளவில் பிர்லா பவனில் நடந்த மகாத்மா காந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் சில சதிகாரர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தையும் இடத்தையும் சரிபார்ப்பதற்காக அவர்கள் சென்றார்கள். அவர்கள் ஜனவரி 19 அன்று இந்து மகாசபா பவனில் சந்தித்தனர். மகாத்மா காந்தியின் படுகொலை குறித்த முழு வரைபடமும் தயாரிக்கப்பட்டது. ஜனவரி 19 அன்று, நாதுராம் விநாயக் கோட்சே, விஷ்ணு கர்கரே மற்றும் நாராயண் ஆப்தே ஆகிய மூவர் பிர்லா மாளிகைக்குச் சென்று பிரார்த்தனைக் கூட்டத்தை ஆய்வு செய்தனர். அதே நாளில் மாலை நான்கு மணியளவில், மீண்டும் பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் சென்ற அவர்கள், இரவு பத்து மணிக்கு, ஐந்து பேரும் மகாசபா பவனில் சந்தித்தனர். ஜனவரி 20ஆம் தேதி, நாதுராம் கோட்சேவின் உடல்நிலை மோசமடைந்தது. ஆனால் நான்கு பேர் மீண்டும் பிர்லா பவனுக்குச் சென்று அங்குள்ள செயல்பாடுகளைப் புரிந்து கொண்டனர். இந்த நான்கு பேரும், பிர்லா பவனில் இருந்து இந்து மகாசபா பவனுக்கு காலை 10.30 மணிக்கு திரும்பினார்கள். இதன் பின்னர், இந்து மகாசபா பவனுக்குப் பின்னால் உள்ள காட்டில் தனது ரிவால்வரை சுட்டுப் பரிசோதித்தார். ரிவால்வரை பரிசோதித்த பின்னர், அவர்கள் அனைவரும் டெல்லியின் கன்னாட் பிளேஸில் உள்ள மரீனா ஹோட்டலில் சந்தித்து இறுதித் திட்டத்தை அமைத்தனர். மாலை ஐந்து மணிக்கு அவர்கள் பிர்லா பவனுக்குச் சென்றார்கள். பிர்லா பவனின் பின்ப்புற சுவரில் இருந்து ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் மதன்லால் பஹ்வா ஒரு குண்டை வீசினார். சம்பவ இடத்திலேயே மதன்லால் கைது செய்யப்பட்டார், அவரிடமிருந்து ஒரு கைக்குண்டு மீட்கப்பட்டது. பிரார்த்தனைக் கூட்டத்தில் இருந்த மற்ற முவரும், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி தப்பி ஓடிவிட்டார்கள். ஜனவரி 20 தேதியே பாபுவைக் கொல்வதாக சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்ததாகவும், , ஆனால் அன்று அது தோல்வியடைந்தததால், திட்டம் பத்து நாட்களுக்குத் தள்ளிப்போடப்பட்டது என்றும் காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி கூறுகிறார். கொலை வழக்கு குறித்து தீவிரமாக விசாரணை நடத்திய துஷார் காந்தியிடம் பிபிசி பேசியது. "குண்டு வீசியதும் அது வெடிக்கும்போது, மக்கள் இங்கும் அங்குமாக சிதறியோடுவார்கள். அப்போது திகம்பர் பட்கே காந்தியை சுட்டுவிட வேண்டும் என்பதே அவர்களின் திட்டம். ஆனால் மதன்லால் பாஹ்வா குண்டை வீசி எறிந்தபோது, மக்களை சமாதானப்படுத்தி உட்காரச் செய்தார் காந்தி. அப்போது கொலை முயற்சியை மேற்கொள்ள திகம்பர் பட்கேவுக்கு சந்தர்ப்பம் கிடைக்காத சூழ்நிலையில் பாபு தப்பிவிட்டதால் திகம்பர் பட்கே அங்கிருந்து நழுவிச் சென்றுவிட்டார். அன்று காந்தியை கொலை செய்ய வேண்டிய பொறுப்பு திகம்பர் பட்கேவுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. பட மூலாதாரம்,DINODIA இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நாதுராம் கோட்சே மற்றும் நாராயண் ஆப்தே ஆகிய இரண்டு முக்கிய குற்றவாளிகளும் அதே நாளில், டெல்லியின் முக்கிய ரயில் நிலையத்திலிருந்து அலகாபாத் கான்பூர் வழியாக பம்பாய்க்கு தப்பிச் சென்றார்கள். ஜனவரி 23ஆம் தேதியன்று மாலை பம்பாய்க்கு சென்று சேர்ந்துவிட்டார்கள். மூன்றாவது நபரான நாதுராம் கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்சே, அன்று இரவு டெல்லியில் இந்து ஹோட்டலில் தங்கியிருந்தார், ஜனவரி 21 காலை, ஃப்ரண்டியர் மெயில் மூலம் பம்பாய்க்கு புறப்பட்டார். விஷ்ணு கர்கரே மற்றும் சங்கர் கிஸ்ட்யாவும் ஜனவரி 23 மதியம் வரை டெல்லியில் தங்கியிருந்தார்கள். பிற்பகலில் அவர்களும் ரயில் மற்றும் பேருந்து என மாறிமாறி பயணித்து, ஜனவரி 26 ஆம் தேதி காலை கல்யாணுக்கு சென்றார்கள். அங்கிருந்து அன்றே புனேவுக்கு புறப்பட்டனர். அப்படித்தான் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் டெல்லியில் இருந்து தப்பிச் சென்றனர், யாருக்கும் எதுவும் தெரியவில்லை. காவல்துறையின் அலட்சியம் ஜனவரி 20 அன்று குண்டு வீசப்பட்ட செய்தி மறுநாள் செய்தித்தாள்களில் வெளிவந்தது. டைம்ஸ் ஆப் இந்தியா, தி ஸ்டேட்ஸ்மேன், பாம்பே குரோனிக்கிள் என்ற நாளிதழ்களில் இந்த செய்தி வந்த்து. அப்போது டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் பேசிய ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், "வெடிகுண்டு சக்தி வாய்ந்தது, பலர் உயிரிழந்திருக்கலாம். மகாத்மா காந்தியைக் கொலை செய்யும் நோக்கத்தில் கைக்குண்டு வீசப்பட்டது" என்று கூறியிருந்தார். குண்டு வீசிய குற்றத்தை மதன்லால் பாஹ்வா ஒப்புக்கொண்டதாகவும், மகாத்மா காந்தியின் சமாதான பிரசாரம் தனக்கு கவலையளிப்பதால் அவரைத் தாக்கியதாகவும் பம்பாய் குரோனிக்கிள் செய்தி வெளியிட்டிருந்தது. மதன்லால் பாஹ்வாவிடம் முதலில் பிர்லா பவனில் விசாரணை நடைபெற்றது. பின்னர் அவர் நாடாளுமன்ற வீதியில் இருக்கும் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, மூத்த போலீஸ் அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார். பாஹ்வா சொன்ன கருத்துகள் தொடர்பாகவும் சர்ச்சைகள் எழுந்தன. கர்கரேவின் பெயரை மதன்லால் தெரிவித்தார். அதோடு, அவரும் எஞ்சிய தோழர்களும் டெல்லியில் தங்கியிருந்த இடத்தையும் கூறினார். மெரினா ஹோட்டல் மற்றும் இந்து மகாசபா பவனில் சோதனைகள் நடத்தப்பட்டன. கோட்சே மற்றும் ஆப்தே இருவரும் தங்கள் பெயரை மாற்றி எஸ். மற்றும் எம். தேஷ்பாண்டே என்ற பெயரில் தங்கியிருந்தது தெரியவந்தது. ஹோட்டல்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் இந்து மகாசபாவின் சில ஆவணங்களும் கிடைத்தன. ஜனவரி 21 ஆம் தேதி, பாஹ்வா 15 நாள் ரிமாண்டில் எடுக்கப்பட்டார். நாடாளுமன்ற வீதியில் உள்ள காவல் நிலையத்திலிருந்து சிவில் லைன்ஸ் பகுதிக்கு பாஹ்வா கொண்டு செல்லப்பட்டு ஜனவரி 24 வரை விசாரணை நடைபெற்றது. 'இந்து ராஷ்டிரா' செய்தித்தாளின் உரிமையாளரின் பெயரையும் பாஹ்வா குறிப்பிடார். ஆனால் முன்னணி செய்தித்தாளின் ஆசிரியரின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. இந்த பத்திரிகையின் உரிமையாளர் நாராயண் ஆப்தே, நாதுராம் கோட்சே ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 23ஆம் தேதி, மெரினா ஹோட்டலின் பணியாளர் காளிராம் சில துணிகளை டெல்லி போலீசாரிடம் ஒப்படைத்தார், ஆனால் விசாரணையில் அவற்றைப் பயன்படுத்த காவல்துறை தவறிவிட்டது. ஜனவரி 25ஆம் தேதி, பம்பாய் போலீசார் பம்பாய்க்கு அழைத்துச் சென்றது. ஜனவரி 29 வரை விசாரணை தொடர்ந்தாலும், அதில் எந்த பலனும் ஏற்படவில்லை. ஜனவரி 27 அன்று, கோட்சே மற்றும் ஆப்தே பம்பாயிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டனர். ரயிலில் குவாலியருக்கு வந்த இருவரும் இரவில் டாக்டர் தத்தாத்ரேயா பர்ச்சுரேவின் வீட்டில் தங்கினர். அடுத்த நாள் இத்தாலியில் தயாரிக்கப்பட்ட ஒரு கருப்பு நிற தானியங்கி பைரெடா துப்பாக்கியை வாங்கினார்கள். ஜனவரி 29 காலை டெல்லிக்கு வந்து, இருவரும் டெல்லி ரயில் நிலையத்தில் ரயில்வேயின் அறையிலேயே தங்கினார்கள். அங்குதான் கர்கரேவை அவர்கள் சந்தித்தார்கள். ஜனவரி 30ஆம் தேதி, பிர்லா பவனுக்குப் பின்னால் உள்ள காட்டில் கைத்துப்பாக்கி சுடுவதற்கு பயிற்சி எடுக்க்கொண்டு, மாலை ஐந்து மணிக்கு பாபுவை சுட்ட நாதுராம் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார், ஆனால் ஆப்தே மற்றும் கர்கரே மீண்டும் டெல்லியில் இருந்து தப்பித்துச் சென்றனர். இவர்கள் இருவரும் பிப்ரவரி 14 அன்று கைது செய்யப்பட்டனர். பட மூலாதாரம்,BETTMANN / GETTY உள்துறை அமைச்சர் படேல் மீதான குற்றச்சாட்டுகள் 1948 ஜனவரி 20 முதல் 30 வரை காவல்துறையினர் மிகுந்த அலட்சியம் காட்டியதாக நீதிபதி ஆத்மாசரண் தீர்ப்பின் போது கூறினார். மதன்லால் பாஹ்வா கைது செய்யப்பட்ட பின்னர், காந்திஜியை படுகொலை செய்வதற்கான சதிச் செயல் தொடர்பான போதுமான தகவல்கள் டெல்லி காவல்துறையிடம் இருந்தன. "சதித்திட்டம் குறித்து மதன்லால் பாஹ்வா பல தகவல்களைக் கூறியிருந்தார். பம்பாய் மாகாணத்தின் உள்துறை அமைச்சர் மொரார்ஜி தேசாயிடம், ருயா கல்லூரியின் பேராசிரியர் ஜி.சி.ஜெயின் சதி குறித்து தெரிவித்தார். அதோடு, அவர் அனைத்து தகவல்களையும் மும்பை காவல்துறைக்கு கொடுத்தார். ஆனால் காவல்துறையினர் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. காவல்துறை சரியாக செயல்பட்டிருந்தால், காந்திஜி கொல்லப்பட்டிருக்க மாட்டார்" என்பதே துஷார் காந்தியின் இறுதிக் கருத்து. இவை அனைத்திற்கு பிறகும், எந்த போலீஸ்காரர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காந்தி படுகொலை வழக்கை விசாரித்த ஜாம்ஷெட் தோராப் நகர்வாலா, பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு என்ன சொன்னார் தெரியுமா? "சாவர்க்கரின் உதவியும் ஈடுபாடும் இல்லாமல் காந்தியை படுகொலை செய்வதற்கான வேலை முழுமையடைந்திருக்காது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்". இதை துஷார் காந்தி 'லெட்ஸ் கில் காந்தி' புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ('லெட்ஸ் கில் காந்தி', பக்கம் -691) நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் படேல் மீதும் பல கேள்விகள் எழுந்தன. "உள்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் சர்தார் படேல் காந்தி படுகொலை விவகாரத்தில் தனது பொறுப்பை துறக்க முடியாது என்று ஜெயபிரகாஷ் நாராயண் கூறினார்" என மெளலானா ஆசாத் எழுதினார். (இண்டியா வின்ஸ் ஃப்ரீடம், பக்கம் - 223) சர்தார் படேலின் மகள் மணிபென் படேல் கபூர் கமிஷனுக்கு அளித்த சாட்சியத்தில், தனது தந்தை முஸ்லிம் விரோதியாக பார்க்கப்பட்டதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறியுள்ளார். காந்தியின் படுகொலைக்கு தனது தந்தைக்கு பொறுப்பு இருப்பதாக ஜெயபிரகாஷ் நாராயண் பகிரங்கமாக குற்றம் சாட்டியதாக மணிபென் படேல் ஒப்புக் கொண்டார். "காந்தியை படுகொலை செய்ததற்கு தனது தந்தைக்கு பொறுப்பு இருப்பதாக ஜெயபிரகாஷ் நாராயண் குற்றம் சாட்டிய கூட்டத்தில் மெளலானா ஆசாத் இருந்தார், ஆனால் அவர் அதை எதிர்க்கவில்லை. இது என் தந்தையை மிகவும் பாதித்தது" என்றும் மணிபென் கூறியுள்ளார். கபூர் கமிஷனிடம் சாட்சியமளித்த மணிபென், "பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் கொடுத்தது எனது தந்தைக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இந்த பணத்தை கொடுத்ததால்தான் பாபு கொல்லப்பட்டிருக்கலாம் என்பதை அவர் உணர்ந்தார். நேரு கூட பணம் கொடுக்க ஆதரவாக இல்லை. இதற்கிடையில், தன்னை அமைச்சரவையில் இருந்து விடுவித்துவிடுமாறு நேருவிடம் அப்பா கேட்டுக் கொண்டார். ஏனெனில் மெளலானாவுக்குக் கூட தன்னை பிடிக்கவில்லை என்று நேருவிடம் அவர் தெரிவித்தார்" என்று தெரிவித்தார். காந்தியின் படுகொலைக்குப் பிறகு, படேலுக்கு கடிதம் ஒன்றை எழுதிய நேரு, "கடந்த காலத்தை மறந்து நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். அதற்கு சர்தாரும் ஒப்புக் கொண்டார், ஆனால் ஜெயபிரகாஷ் நாராயண் தொடர்ந்து அப்பாவைத் தாக்கிக் கொண்டேயிருந்தார். 1948 மார்ச் 5ஆம் தேதியன்று, சர்தார் படேலுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது, இப்போது நான் இறந்து காந்திஜியிடம் சென்றுவிட வேண்டும், அவர் தனியாக சென்றுவிட்டார் என்று அப்பா கூறினார்" என மணிபென் படேல் தெரிவித்தார்.. காந்தி படுகொலை செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, அதாவது 1948 பிப்ரவரி ஆறாம் தேதியன்று, நாடாளுமன்றத்தின் ஒரு சிறப்பு கூட்டம் அழைக்கப்பட்டது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சர்தார் படேலிடம் பல கூர்மையான கேள்விகளைக் கேட்டனர். 'தேஜ்' செய்தித்தாளின் நிறுவனரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தேஷ்பந்து குப்தா, "மதன்லால் பாஹ்வா கைது செய்யப்பட்ட பின்னர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார், அப்போது இது குறித்த திட்டம் குறித்தும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் பற்றியும் தெரிவித்தார். டெல்லி சி.ஐ.டி பம்பாயில் இருந்து அவர்களுடைய புகைப்படங்களை ஏன் சேகரிக்கவில்லை? புகைப்படங்களைப் பெற்று விநியோகித்திருந்தால், மக்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள். இதில் ஏன் அலட்சியம் காட்டப்பட்டது? இது எவ்வளவு பெரிய தவறு? " என்று சராமாரியாக கேள்விகளை எழுப்பினார். இந்த கேள்விக்கு பதிலளித்த படேல், "டெல்லி காவல்துறை அவர்களைக் கைது செய்ய முயன்றது, ஆனால் அனைவரும் வெவ்வேறு இடங்களில் இருந்தனர். அவர்களின் புகைப்படங்களும் கிடைக்கவில்லை" என்றார். விசாரணையில் சாட்சி எண் 54 ஆக மகாத்மா காந்தியின் தனிச்செயலாளர் பியரேலால் இருந்தார். பிரிவினைக்குப் பிறகு காந்தியுடன் படேலுக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், காந்தி மீதான அவரது மரியாதை ஒருபோதும் குறைந்த்தில்லை என்று அவர் தெரிவித்தார். "முஸ்லிம்கள் இங்கு வாழலாம், அவர்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும் என்று படேல் சொல்லியிருந்தார், ஆனால் அவர்களின் விசுவாசமானது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பிரிக்க முடியாத ஒன்று" என்று பியரேலால் கூறியிருந்தார். இதற்கு முன்னரும் தாக்குதல்கள் நடந்ததால் பாபுவின் பாதுகாப்பு குறித்து, தனது தந்தை சர்தார் படேல் அக்கறை கொண்டிருந்ததாக மணிபென் படேல் கூறியுள்ளார். "பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள வருபவர்களை பரிசோதித்த பிறகுதான் உள்ளே விடுவேன் என்று என் தந்தை மகாத்மா காந்தியிடம் தெரிவித்தார். ஆனால் காந்தி அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை" என்று மணிபென் கபூர் விசாரணை கமிஷனிடம் தெரிவித்தார். காந்தி படுகொலை மற்றும் ஆர்.எஸ்.எஸ் காந்தியின் படுகொலையில் தனக்கு பங்கு இல்லை என ஆர்எஸ்எஸ் தொடர்ந்து மறுத்து வருகிறது. ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு கூட பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த விஷயம் அவ்வளவு எளிதல்ல. காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தை தடை செய்தபோது படேல் இவ்வாறு தெரிவித்தார்: "காந்தியின் படுகொலைக்கு நாடு முழுவதும் பரவிய இனவாத நச்சுதான் காரணம்". பட மூலாதாரம்,ULLSTEIN BILD DTL. / GETTY அகமதாபாத்தில் இருந்து வெளியிடப்பட்ட நவ்ஜீவன் என்ற பத்திரிகையில் காந்தியின் தனிச் செயலாளர் பியரேலால் இவ்வாறு எழுதினார்: " "வெள்ளிக்கிழமையன்று வானொலியை கண்டிப்பாக கேளுங்கள், நல்ல செய்தி வரப்போகிறது என்று காந்தி கொல்லப்படுவதற்கு முன்னரே ஆர்எஸ்எஸ் சில இடங்களில் அறிவித்திருக்கிறது. காந்தி படுகொலை செய்தி வெளியானதும், ஆர்.எஸ்.எஸ் கிளை அலுவலகங்களில் இனிப்புகள் விநியோகிக்கப்பட்டன". (துஷார் காந்தி, லெட்ஸ் கில் காந்தி, பக்கம் 70) காந்தி படுகொலை செய்யப்பட்ட இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, ஆர்எஸ்எஸ்ஸின் 'ஆர்கனைசர்' என்ற பத்திரிகை 1970 ஜனவரி 11 அன்று ஒரு தலையங்கத்தில் இவ்வாறு எழுதியது, "நேரு பாகிஸ்தான் சார்புடையவராக இருந்ததும், காந்திஜி உண்ணாவிரதம் இருப்பதற்கும் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி இருந்தது." அத்தகைய சூழ்நிலையில், நாதுராம் கோட்சே மக்களின் பிரதிநிதியாக செயல்பட்டார். காந்தியின் படுகொலை பொதுமக்களின் சீற்றத்தின் வெளிப்பாடாகும்.'' ஜெயபிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோஹியா மற்றும் கமலதேவி சட்டோபாத்யாய் ஆகியோரின் செய்தியாளர் கூட்டத்தைப் பற்றியும் கபூர் கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது, அதில் அவர்கள் 'காந்தியின் படுகொலைக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை, ஆனால் அதன் பின்னால் ஒரு பெரிய சதி மற்றும் அமைப்பு உள்ளது' என்று கூறியிருந்தனர். அமைப்புகள் என்பதில், ஆர்.எஸ்.எஸ், இந்து மகாசபா மற்றும் முஸ்லிம் லீக் பெயர் குறிப்பிடப்பட்டது. காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் ஆர்.எஸ்.எஸ். மீது விதிக்கப்பட்ட தடை பிப்ரவரி 1948 முதல் ஜூலை 1949 வரை இருந்தது. 1994 ஜனவரி 28ஆம் தேதி, பிரண்ட்லைன் பத்திரிகைக்கு பேட்டியளித்த நாதுராம் கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்ஸே, "சகோதரர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ்ஸில் இருந்தோம். நாதுராம் , தத்தத்ரேயா, நான், கோவிந்த் அனைவரும் வளர்ந்தது எங்கள் வீட்டில் அல்ல, ஆர்.எஸ்.எஸ்ஸில்தான். எங்கள் குடும்பமே ஆர்.எஸ்.எஸ். தான். ஆர்.எஸ்.எஸ்ஸில் அறிவார்ந்த ஆர்வலராக நாதுராம் இருந்தார். ஆர்.எஸ்.எஸ்ஸை விட்டு வெளியேறுவதாக தனது அறிக்கையில் நாதுராம் கூறியிருந்தார்." "ஏனெனில் காந்தியின் படுகொலைக்குப் பிறகு, கோல்வல்கர் மற்றும் ஆர்.எஸ்.எஸ்க்கு சிக்கல்கள் ஏற்பட்டதால், அவர்களை காப்பாற்றுவதற்காக நாதுராம் இப்படி அறிவித்தார். ஆனால், ஆர்.எஸ்.எஸ் ஒருபோதும் அவரை வெளியேற்றவில்லை'' என்று கூறியிருந்தார். நாதுராமுடனான தொடர்பை அத்வானி மறுத்தது பற்றி அந்த பேட்டியில் கோபால் கோட்சேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 'அத்வானி கோழைத்தனமாக பேசுகிறார். 'சென்று காந்தியை கொன்றுவிட்டு வா என்று நாதுராமுக்கு ஆர்.எஸ்.எஸ் உத்தரவிடவில்லை என்று அவர் கூறுகிறாரா?' நாதுராமுக்கும் ஆர்எஸ்எஸ்க்கும் எதவித தொடர்பும் இல்லை என்று மறுத்துவிடமுடியாது. ஆனால் இந்து மகாசபை நாதுராமுடனான தொடர்பை மறுக்கவில்லை. நாதுராம் 1944ஆம் ஆண்டிலேயே இந்து மகாசபைக்கு வேலை செய்ய தொடங்கிவிட்டார்.'' நாதுராம் கோட்சே ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இருந்தார், ஆனால் அவர் பிறகு இந்து மகாசபாவிற்கு வந்தார். இருப்பினும், 2016 அன்று செப்டம்பர் 8ஆம் தேதியன்று எகனாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு கோட்சேவின் குடும்பத்தினர் அளித்த பேட்டியில் கூறியது மிகவும் முக்கியமானது. நாதுராம் கோட்சே மற்றும் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் வம்சாவளியான சத்தியகி கோட்சே, எகனாமிக் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், "நாதுராம் சாங்லியில் இருந்தார். அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் 1932ஆம் ஆண்டில் இணைந்தது முதல் உயிருடன் இருந்தவரை ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராகவே இருந்தார். அவர் ஒருபோதும் அமைப்பை விட்டு வெளியேறவில்லை, அவர் நீக்கப்படவும் இல்லை" என்று தெரிவித்திருந்தார். காந்தி கொலை செய்யப்படுவதற்கு ஏறக்குறைய ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, தனது 72வது வயதில், 125 ஆண்டுகள் வாழ விரும்புவதாகக் கூறினார். ஆனால், 37 வயதான மராத்தி பிராமணரான நாதுராம் கோட்சேவால் 78 வயதிலேயே கொல்லப்பட்டார் மகாத்மா காந்தி. அவரது விருப்பம் நிறைவேறாமல் போய்விட்டது. https://www.bbc.com/tamil/india-51299212
    1 point
  12. அது பரவாயில்லை.... மிளகு தமிழர்களிடம் மட்டுமே இருந்தது என்று பிபிசி முதல் ஏபிசி வரை டாக்குமெண்டரி போடுகினம். பண்டைய தமிழ் மூவேந்தர்களில் சேரரின் வழித்தோன்றலான மலையாளிகள். இந்த அஞ்சாப்பு விளக்கமே இல்லாமல், தமிழர் மிளகு எண்டு போட்டிருக்கே எண்டால் எனனத்தை சொல்லுறது? தமிழகம் எங்கும் விளைந்த மிளகு, அரேபியர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், சீனர்கள், மலேயர், சியாமியர் (தாய்) என்று, தமிழகத்துக்கு வந்து மிளகு உள்பட வாசனை திரவியங்கள் வாங்க வந்துள்ளனர். கொலம்பஸ் கிளம்பியதும், போர்த்துக்கேயர் வந்ததும், மிளகை தேடி. இதனை, இந்திய அரசின் தளம் சொல்கிறது என்றாலும், பெரிசு, முசிறிக்கொண்டு விதண்டாவாதம் செய்யிறன், முயலுக்கு மூண்டு கால் தான் என்று நிக்குதப்பா. 😅 சீனாக்காரர், அல்லைபிட்டியில், தாங்கள் 11ம் நூறாண்டில் அங்கை தங்கி இருந்து யாவாரம் பார்த்தோம் எண்டு வந்து நிண்டு கிண்டினார்களே. இவர், அவையளிடம் மிளகு இருந்திருக்கலாமாம். மிளகின் பிரச்சனை, நாம் பாவிக்கும் அந்த மிளகு பருப்புகளை போட்டு விளைவிக்க முடியாது. அதுவே இவ்வளவு பேரும் தமிழரிடம் ஓடி வந்ததுக்கு காரணம்.
    1 point
  13. விசுகர்! ஒவ்வொரு நாடுகளுக்கும் பிரச்சனை இருக்கின்றது. அது அந்தந்த நாடுகளுக்கேற்ப வேறுபடும். உக்ரேன் பிரச்சனை ஐரோப்பிய அரசியல் பிரச்சனை. அதை எம்மின பிரச்சனையோடு தொடர்பு படுத்தினால் தலை வெடித்து விடும். மீண்டும் சொல்கிறேன் முள்ளிவாய்க்கால் அழிவும் உக்ரேன் அழிவும் ஒன்றல்ல. குழுவாதத்தால் மட்டுமே என்னுடன் முரண்பட நினைக்கின்றீர்கள்.இது முன்னரும் ஒரு முறை நடந்தது. ஆனால் நான் யதார்த்தவாதி.
    1 point
  14. 1 point
  15. அது யார் யார் எந்தப் பக்கம் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது 🤣 அதுசரி உங்களுக்கு எது நினைவிற்கு வருகிறது பன்றியா யானையா ? 😉
    1 point
  16. புட்டினின் நோக்கம் பொது மக்களைக் கொல்வதல்ல என்றால், இராணுவ நிலைகள் மீது மட்டும் தக்காமல் மேற்கு உக்ரைன் நகரங்கள் வரை மக்கள் வாழ்விடங்களைக் குறிவைக்கும் ரஷ்ய ஏவுகணைகளின் நோக்கம் என்ன என்று நினைக்கிறீர்கள்? ரஷ்யாவின் தாக்குதலில் மக்கள் இறப்புக் குறைய பிரதான காரணம் உக்ரைனிய மக்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளேயொழிய புட்டினின் தூய இதயமல்ல!😂 எச்சரிக்கை சைரன், நிலக்கீழ் ரயில் நிலையங்களை (இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் செய்தது போல) பதுங்குமிடங்களாக மாற்றியிருப்பது போன்ற நடவடிக்கைகள் தான் இழப்புக் குறையப் பிரதான காரணம். பிரான்ஸ் ஹிற்லரிடம் சரணடந்ததால் விளைந்த நன்மைகளை எங்காவது வரலாற்று நூலில் வாசித்துப் பார்த்திருக்கிறீர்களா? பிரான்ஸ் சரணடையாமல் போராடியிருந்தால் ஹிற்லரை மஜினோ கோட்டுக்கு (Maginot line) அப்பால் நகராமல் முடக்கியிருக்கலாம் என்பது தான் உண்மை. அப்படி முடக்கியிருந்தால், பிரிட்டனும், பிரான்சும் சேர்ந்தே அமெரிக்காவின் துணையின்றி நாசி ஜேர்மனிக்குப் பாடம் படிப்பித்திருக்கலாம். அந்தப் பாடம் கிடைக்காமல் தான் ஹிற்லர் பிரிட்டனைப் பிடிக்க முனைந்து, அமெரிக்காவும் தலையிட வேண்டி வந்தது. சேர்ச்சில் தலைமையில் பிரிட்டன் மட்டும் ஹிற்லருக்குப் பணியாமல் போராடியிருக்கா விட்டால் இன்றைய உலகம் தலை கீழாக இருந்திருக்கும். நீங்கள் கூட ஜேர்மனியில் இருந்திருக்க மாட்டீர்கள்.
    1 point
  17. சம்பந்தன், சிங்கக் கொடி ஆட்டினது… யாழ்ப்பாணத்தில் 2012’ம் ஆண்டு நடந்த மேதின கொண்டாட்டத்தின் போது நடந்த வேறு ஒரு சம்பவம் ஈழப்பிரியன்.
    1 point
  18. பெரிய சிங்கத்தின் உடம்பு இயலுமெனில் கொடியோடு போய் விடுவார் அவர்கள் அழைக்காவிட்டாலும்.
    1 point
  19. புட்டினை நீங்கள் விரும்பத்தக்க தலைவர் வரிசையில் பார்ப்பதை தவறாக நான் எடுக்கவில்லை. 👍 ஆனால் குறிப்பிட்ட இரண்டு நாடுகள் விடயத்தில் அவரால் மேற்கொள்ளபட்ட வழிந்த தாக்குதல் / போர் முனைவு; பெரும் உயிர் அழிவுகளையும், சொத்து அழிவுகளையும், நாடுகள் முழுவதும் சிதறி ஓடும் அகதிகளையும் உருவாக்கி உள்ளதே; அதை தான் நாங்கள் கண்டிக்கிறோம். 🙏
    1 point
  20. நன்றி பையன், நேராக விருப்புப் புள்ளி போட்டதைக் கூறி கருத்தாடியமைக்கு. பல காலமாகவே குழு வாதங்களை யாழ் களம் எதிர்த்து வந்துள்ளது. பச்சை குத்துவதும் இதன் ஒரு அங்கமே. குழு விவாதங்களை ஆதரிக்கக் கூடாது என்பதற்காகவே பச்சைப் புள்ளிகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டது. அதுவும் பலனளிகாதபடியால்தான் இறுதியாக பச்சை இடுபவரின் விபரம் மறைக்கப்பட்டது. குழு விவாதம் யாழின் வளர்ச்சிக்கு முற்றாக முரனானது. உங்களுக்கு ஒவ்வொரு நாளும் தரப்படும் ஊக்குவிப்புப் புள்ளிகளை நல்ல கருத்துக்களையும் கட்டுரை செய்தி இணைப்புகளையும் சொந்த ஆக்கங்களையும் ஊக்குவிக்கப் பயன்படுத்துங்கள். யாழின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். நன்றி.
    1 point
  21. அதே வட்டுக்கோட்டை தான் டென்மார்க்கில் குர்ரானை எரிப்பதற்கும் புட்டின் புகழை இங்கேயும் தொழுவதற்கும் என்ன தொடர்பு??? நான் வேலைக்கு போனால் தான் சாப்பாடு.
    1 point
  22. இது பற்றிச் சில நாட்களுக்கு முன் யாழிணையத்தில் நித்தியானந்தாவின் திரி ஒன்றில் எழுதப்பட்டது. 😀 தமிழீழத்துக்கான தேவை வெளிநாட்டில் அருகி வருகிறது. ஏனென்றால் யாரும் தமிழீழம் கிடைத்தாலும் திரும்பிப் போகப் போவதில்லை. இலங்கையில் பொருளாதார முன்னேற்றம் கொஞ்சம் ஏற்பட்டால் அங்குள்ளவர்களுக்கும் தமிழீழத்தை மறந்து விடுவார்கள்.
    1 point
  23. பஸ்டியாம்பிள்ளையின் கொலை தலைவருடன் செல்லக்கிளி அம்மான் கனகரட்ணம் மீதான தாக்குதல் ஜெயவர்த்தனாவை ஆத்திரப்பட வைத்திருந்ததுடன் பொலிஸாரை அவமானத்திற்குள்ளும் ஆழ்த்தியிருந்தது. ஆகவே, யாழ்ப்பாணத்திலேயே முகாமிட்டு தங்கத்துரை அமைப்பையும், பிரபாகரனின் அமைப்பையும் அழித்துவிடவேண்டும் என்று பொலீஸ் பரிசோதகர் பஸ்டியாம்பிள்ளைக்கு அறிவுருத்தல் வழங்கப்பட்டது. பஸ்டியாம்பிள்ளைக்கு உதவியாக பரிசோதகர் பத்மநாதனும், உதவிப் பரிசோதகர் பேரம்பலமும் அமர்த்தப்பட்டார்கள். இந்தத் தமிழ் பொலீஸ் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றிய சிங்கள அதிகாரிகளின் கருத்துப்படி இவர்கள் விசாரணைகளை மேற்கொள்வதில் சிறந்து விளங்கியவர்கள் என்றும், கடுமையான சித்திரவதைகளும், குரூரமான தண்டனைகளும் இவர்களுக்கு மிகவும் பரீட்சயமாக இருந்ததாகவும் கூறுகிறார்கள். அப்படியிருந்தபோதும்கூட பஸ்டியாம்பிள்ளைக்கும் பதம்நாதனுக்கும் இடையே போட்டி மனப்பான்மை இருந்துவந்ததையும் அவர்கள் சொல்லத் தவறவில்லை. தனது ரகசிய உளவு வலையமைப்பூட்டாக, பிரபாகரனும் அவரது தோழர்களும் மன்னார் மாவட்டத்தின் வட மேற்குப் பதியான மடுக் காட்டுப்பகுதியில் ரகசிய பயிற்சிமுகாம் ஒன்றினை நடத்தி வருவதை பஸ்டியாம்பிள்ளை அறிந்துகொண்டார். இந்த ரகசியத் தகவலை தன்னிடமே வைத்திருந்த பஸ்டியாம்பிள்ளை சித்திரை 4 ஆம் திகதி நள்ளிரவு தனது உதவியாளர்களான கொன்ஸ்டபிள் பேரம்பலம், கொன்ஸ்டபில் பாலசிங்கம் மற்றும் சாரதி சிறிவர்த்தனா ஆகியோரை திடீர் சோதனை ஒன்றிற்குத் தயாராகுமாறு உத்தரவிட்டார். ஆனால், எங்கு செல்லாப்போகிறார்கள் என்பதை அவர் கூறவில்லை. பஸ்டியாம்பிள்ளையின் உத்தியோகபூர்வ வாகனமான பேஜோ 404 காரில் இந்த நால்வரும் ஆ 9 வீதியூடாக வவுனியா நோக்கிப் பயணமானார்கள். தம்முடன் ஒரு துணை இயந்திரத் துப்பாக்கி, இரண்டு ரைபிள்கள், மற்றும் கைத்துப்பாக்கிகள் சுழற்துப்பாக்கிகள் என்று ஒரு தொகை ஆயுதங்களையும் கொண்டு சென்றனர்.சித்திரை 7 ஆம் அதிகதி, காலை புளரும் வேளை புலிகளின் முகாமினை அண்மித்த பகுதியை அவர்களின் கார் அடைந்தது. முருங்கன் - மடு வீதியிலிருந்து காட்டினுள் செல்லும் ஒற்றையடிப் பாதையினைப் பார்த்தவுடன் அவர்கள் காரை நிறுத்திக்கொண்டார்கள். அங்கிருந்துகொண்டே தடயங்கள் ஏதாவது தென்படுகின்றனவா என்று தேடத் தொடங்கினார்கள். அவர்கள் இறங்கி நின்றுகொண்டு தேடிய இடம் புலிகளின் முகாமிலிருந்து சில நூறு மீட்டர்கள் தூரத்திலேயே இருந்தது. புலிகளின் மத்திய குழு உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் அன்று அங்கிருந்திருக்கிறார்கள். அங்கிருந்தவர்களில் உமா மகேஸ்வரன், நாகராஜா, செல்லக்கிளி, சிவகுமார், ரவி, கணேச ஐய்யர் ஆகியோரும் உள்ளடக்கம். பிரபாகரன் மட்டுமே அங்கிருக்கவில்லை. முகாமிற்கருகிலிருந்த உயரமான மரத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு நிலையில் உமா மகேஸ்வரனும், நாகராஜாவும் மறைந்திருந்தார்கள். ஏனையவர்கள், அருகிலிருந்த கொட்டகையினுள் இருந்தார்கள். 1987 ஆம் ஆண்டு நடைபெற்றுவந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களின் இடைக்கால நிர்வாகம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்த காலப்பகுதியில் கொழும்பில் உமா மகேஸ்வரனைச் சந்தித்த நான், பஸ்டியாம்பிள்ளையின் கொலை தொடர்பாக டெயிலி நியூஸ் பத்திரிகைக்காகப் பேட்டி கண்டேன். "நானும் நாகராஜாவும் கண்காணிப்பு நிலைக்குப் போனோம். காலை 6 மணியளவில் ஒரு காரின் விளக்கு வெளிச்சம் கண்களுக்குத் தெரிந்தது. அக்கார் மிக மெதுவாக ஊர்ந்து வந்துகொண்டிருந்தது. ஆள் நடமாட்டம் எதுவுமற்ற அந்த வீதியில் இப்படி ஒரு வாகனம் மெதுவாக ஊர்ந்து வருவது மிகவும் அசாதாரணமாக எமக்குத் தெரிந்தது. எமக்குச் சந்தேகம் வந்துவிட்டது. எமது முகாமுக்கு வரும் நடைபாதையின் அருகில் அக்கார் நிறுத்தப்பட்டது. நாம் கீழே முகாமினுள் இருந்தவர்களுக்கு உடனே தகவல் அனுப்பினோம். செல்லக்கிளி நிலைமையினைப் பொறுப்பெடுத்தார்" என்று உமா கூறினார் காரிலிருந்து பஸ்டியாம்பிள்ளையும், பேரம்பலமும் இறங்கியபோது அவர்களது சந்தேகம் உறுதிப்படுத்தப்பட்டது. "நாம் அதிர்ச்சியில் உறைந்துபோனோம். இந்த ராஸ்கல்கள் இங்குவரை எம்மைத் தேடி வந்துவிட்டார்களே என்று நாகராஜாவிடம் ரகசியமாகக் கூறினேன். நாம் காரில் வந்தவர்கள் பற்றி செல்லக்கிளியிடம் தகவல் சொன்னோம்" என்றும் உமா கூறினார். பொலீஸாரால் தேடப்படாத தனது இரு உதவியாளர்களை நடைபாதையூடாக செல்லக்கிளி அனுப்பினார். அவர்களில் ஒருவர் கட்டைக் காற்சட்டையும், மற்றையவர் சரம் ஒன்றினையும் அணிந்திருந்தனர். அவர்கள் இருவரும் பொலீஸாரைக் கடந்து செல்ல முற்பட்டவேளை, பொலீஸார் அவர்களை மறித்தனர். அவர்கள் யாரென்பதை பஸ்டியாம்பிள்ளை அறிய விரும்பினார். "நாங்கள் பண்ணையில் வேலை செய்யும் கூலித் தொழிலாளிகள்" என்று அவர்கள் கூறினார்கள். "நீங்கள் சட்டவிரோதமான மரத் தறிப்பில் ஈடுபட்டு வருகிறீர்களா?" என்று அவர்களைப்பார்த்து பஸ்டியாம்பிள்ளை கேட்கவும், அவர்கள் இருவரும் "இல்லை" என்று பதிலளித்தார்கள். "அப்படியானால் எதற்காகக் காட்டிற்குள் கொட்டகை அமைத்திருக்கிறீர்கள்?" என்று மீண்டும் அவர்களைப் பார்த்துக் கேட்டார் பஸ்டியாம்பிள்ளை. "ஏனென்றால், அங்கே நல்லதண்ணிக் கிணறு ஒன்று இருக்கிறது. அதனாலேயே அங்கு கொட்டகை அமைத்தோம்" என்று இளைஞர்கள் பதிலளித்தார்கள். தாம் முருங்கன் பொலீஸ் நிலையத்திலிருந்து வருவதாகக் கூறிய பஸ்டியாம்பிள்ளை, தமக்கு இப்பகுதியில் சட்டவிரோதமாக மரம் தறிக்கும் வேலைகளில் சிலர் ஈடுபட்டிருப்பதாகத் தகவல் கிடைத்ததாகக் கூறினார். மேலும், அவர்களது கொட்டகையினைப் பார்க்க வேண்டும் என்று பஸ்டியாம்பிள்ளை கேட்டபோது, அந்த இளைஞர்கள் இருவரும் அவர்களைக் கூட்டிக்கொண்டு கொட்டகை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். கொட்டகை வாயிலில் செல்லக்கிளி பொலீஸாரை வரவேற்றார். பஸ்டியாம்பிள்ளை செல்லக்கிளியை உடனடியாக அடையாளம் தெரிந்துகொண்டாலும், அவர் அதனைக் காட்டிக்கொள்ளவில்லை. கையில் உப இயந்திரத் துப்பாக்கியுடன் பஸ்டியாம்பிள்ளை கொட்டகையினுள் தேடுதல் நடத்த, பேரம்பலமோ கைத்துப்பாக்கியுடன் கொட்டகையின் சுற்று வட்டாரத்தை அலசிக்கொண்டிருந்தார். கையில் ரைபிளுடன், பஸ்டியாம்பிள்ளைக்குப் பாதுகாப்பாக அருகிலேயே நடந்து கொண்டிருந்தார் பாலசிங்கம். நடைபாதையினை மறித்து சாரதியான சிறிவர்த்தனா நின்றிருந்தார். "சரி, சரி, நாங்கள் எங்கள் கடமையினைச் செய்ய வேண்டும். நீங்கள் எங்களுடன் பொலீஸ் நிலையத்திற்கு வந்து ஒரு அறிக்கையொன்றினைத் தாருங்கள். கடமைக்காக இதனைச் செய்யவேண்டியிருக்கிறது. அது முடிந்தவுடன் நாங்கள் உங்களை இங்கே கொண்டுவந்து இறக்கிவிடுகிறோம்" என்று பஸ்டியாம்பிள்ளை செல்லக்கிளியிடமும், அங்கிருந்த ஏனைய இளைஞர்களையும் பார்த்துக் கூறினார். செல்லக்கிளியும் அதற்கு ஒத்துக்கொண்டார். "அவர்கள் தேநீர் போட்டுவிட்டார்கள், குடித்துவிட்டே போகலாம்" என்று செல்லக்கிளி தனது தோழர்களை சிலரைக் காட்டி பஸ்டியாம்பிள்ளையிடம் கூறினார். இளைஞர்களில் ஒருவர் தேனீர்க் குவளையை பஸ்டியாம்பிள்ளையிடம் கொடுக்கவும், பஸ்டியாம்பிள்ளை தனது இயந்திரத் துப்பாக்கியை அருகில் வைத்துவிட்டு தேனீர்க் குவளையினைப் பெற்றுக்கொள்ள தனது கையை நீட்டினார். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய செல்லக்கிளி பாய்ந்து பஸ்டியாம்பிள்ளையின் இயந்திரத் துப்பாக்கியைக் கைப்பற்றி அதனைக் கொண்டு பஸ்டியாம்பிள்ளையின் தலையில் ஓங்கி அடித்தார். பிரபாகரனின் மெய்க்காப்பாளராக பணியாற்றி வந்த செல்லக்கிளிக்கு இயந்திரத் துப்பாக்கியை இயக்குவது கடிணமானதாக இருக்கவில்லை, நிலைகுலைந்து கீழே சரிந்த பஸ்டியாம்பிள்ளை மீது அவரது இயந்திரத் துப்பாக்கியினாலேயே சரமாரியாகச் சுடத் தொடங்கினார் செல்லக்கிளி. அவ்விடத்திலேயெ விழுந்து உயிர் விட்டார் பொலீஸ் பரிசோதகர் பஸ்டியாம்பிள்ளை. மீண்டும் தனது இயந்திரத் துப்பாக்கியை பொலீஸ் கொன்ஸ்டபிள் பாலசிங்கம் நின்றிருந்த திசை நோக்கிச் சுழற்றிய செல்லக்கிளி அவரையும் கண்ணிமைக்கும் நேரத்தில் சுட்டு வீழ்த்தினார். கொன்ஸ்டபிள் பேரம்பலத்தை ஏனைய இளைஞர்கள் மடக்கிப் பிடித்துச் சுட்டுக் கொன்றனர். நடைபாதையில் நின்றபடியே நடப்பதை அவதானித்த சாரதி சிறிவர்த்தனா தப்பியோட எத்தனிக்க, அவரைத் துரத்திச் சென்ற இளைஞர்கள் வழியிலேயே சுட்டுக் கொன்றனர். "எல்லாமே கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது. தமிழர்கள் தமது ஆயுதப் போராட்டத்தினை இன்னொரு நிலைக்கு உயர்த்தியிருந்தார்கள்" என்று சிரித்துக்கொண்டே கூறினார் உமா. ஆனால், அவர் கூறத் தவறிய இன்னொரு விடயம் இந்தத் தாக்குதலில் புலிகள் ஒரு தானியங்கித் துப்பாக்கியையும் கைப்பற்றிக்கொண்டதுதான். இவை நடந்து முடிந்ததும், மரத்திலிருந்து இறங்கிவந்த உமாவும், நாகராஜாவும் பேரம்பலத்தின் உடலை கிணற்றில் வீசிவிட்டு, ஏனைய மூவரின் உடல்களையும் காட்டிற்குள் எறிந்தார்கள். பின்னர் கொட்டகையை தீமூட்டிவிட்டு பஸ்டியாம்பிள்ளையின் பேஜோ 404 இல் அங்கிருந்து கிளம்பினார்கள். சில நாட்களுக்குப் பின்னர் அந்தக் கார் எரிந்த நிலையில் கிளிநொச்சிக் காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பின் மடுக் காட்டுப்பகுதியில் விறகுவெட்டச் சென்ற ஒருவர் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்து தேடியபோது உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட மூன்று உடல்கள் பற்றி பொலீஸுக்கு அறியத் தந்திருந்தார். விசாரணைகளின்போது அந்த மூவரும் பஸ்டியாம்பிள்ளை, பாலசிங்கம், சிறிவர்த்தனா என்பதைக் கண்டுகொண்ட பொலீஸார், கிணற்றுக்குள் இருந்து தாம் மீட்ட சடலத்தின் சட்டைப்பையிலிருந்த அடையாள அட்டையினைக்கொண்டு அவர் பேரம்பலம் தான் என்று உறுதிப்படுத்திக்கொண்டனர். புலிகளின் முகாமைச் சல்லடை போட்டுத் தேடிய பொலீஸார், அங்கிருந்த 300 வெற்றுத் தோட்டாக்கள், குறிபார்த்துச் சுடும் பயிற்சிக்காகப் பாவிக்கப்பட்ட மனித தலையின் உருவப்படம், தகர டப்பாக்களின் அடைக்கப்பட்ட உணவு மற்றும் சமையல்ப் பாத்திரங்கள் என்பவற்றைக் கண்டுபிடித்தனர். மேலும் அப்பகுதிக்கு அருகாமையில் இயங்கிவந்த ஈரோஸ் அமைப்பின் பயிற்சி முகாமையும் அவதானித்த பொலீஸார், அங்கே சில இளைஞர்கள் பயிற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததையும் கண்டனர். அந்த இளைஞர்கள் ஆயுதங்கள் எவையுமின்றி தடிகளை வைத்துப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களைக் கைதுசெய்து கடுமையாகத் தாக்கிய பொலீஸார், ஆயுதங்களை எங்கே மறைத்து வைத்திருக்கிறீர்கள் என்று விசாரிக்கத் தொடங்கினர். பஸ்டியாம்பிள்ளையின் கொலை அரசாங்கத்திற்கு கடுமையான அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது. 1963 ஆம் ஆண்டு உப பரிசோதகராக கடமையேற்ற பஸ்டியாம்பிள்ளை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும், அவர்களோடு தொடர்புபட்ட ஆயுத அமைப்புக்களின் இளைஞர்களையும் கண்காணிக்கும் உளவுப் பிரிவுக்குப் பொறுப்பாகவிருந்தார். பஸ்டியாம்பிள்ளையின் கொலை நடந்து சரியாக மூன்று வாரங்களின் பின்னர், சித்திரை 25 ஆம் திகதி புலிகள் முதன்முதலாக வெளியே வந்தனர். புலிகளின் உத்தியோகபூர்வ இலட்சினையைக் கொண்ட கடிதத் தலைப்பில் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் அல்பிரெட் துரையப்பா, பொலீஸ் உளவாளி நடராஜா (உரும்பிராய் எரிபொருள் விற்பனையாளர்) மற்றும் பஸ்டியாம்பிள்ளை உட்பட ஒன்பது பொலீஸ் அதிகாரிகளின் கொலைக்கு தாமே பொறுப்பேற்பதாக அறிவித்தனர். புலிகள் இனிமேலும் புறக்கணிக்கக் கூடிய சக்தியல்ல என்பதை அரசாங்கம் புரிந்துகொண்டது. பஸ்டியாம்பிள்ளை தலைமையிலான பொலீஸ் அணியினரை அழித்ததன் மூலமும் பின்னர் தாமே அதற்கான பொறுப்பினை வெளிப்படையாக உரிமை கோரியதன் மூலமும் சிங்கள ஆதிக்க அரசாங்கத்திற்கு புலிகள் கடுமையானா சவால் ஒன்றினை ஏற்படுத்தியிருந்தார்கள். தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களை மட்டுமே நடத்திக்கொண்டிருக்கமாட்டார்கள், தமது உரிமைக்காக ஆயுதமேந்திப் போராடவும் தயாராகி விட்டார்கள் என்பதனை இந்த நிகழ்வு அப்பட்டமாகக் காட்டியிருந்தது.
    1 point
  24. ஏகேடி க்கு தெரியுமா? திசைகாட்டி வந்திடும் எண்டு பயந்துதான் பாதி பணக்காரான் ஓடுறான் எண்டது🤣
    1 point
  25. எனக்கு நீங்கள் வேலை வெட்டியற்றவராக சோசல்காசில் மட்டும் வாழ்பவராக தெரிகிறது🤣
    1 point
  26. புட்டினை தவிர உந்த நாச வேலையளை செய்ய வேறை ஆருக்கு மனம் வரும்???
    1 point
  27. 7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப் பால் தானம் செய்த கோவை பெண்: இவ்வளவு பால் சுரக்குமா? கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SRIVIDYA கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவித்யா என்ற 27 வயது பெண் 7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப் பால் தானம் செய்து சாதனை படைத்துள்ளதாக 'ஏசியா புக் ஆஃப் ரெக்கார்டஸ்' அங்கீகரித்துள்ளது. ஸ்ரீவித்யா தனக்கு சுரந்த அதிகமான தாய்ப்பாலைச் சேகரித்து கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கியில் தானமாக வழங்கியுள்ளார் என்று அந்த மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தியுள்ளனர். இவ்வளவு தாய்ப்பாலை தானம் செய்ய அவரால் எப்படி முடிந்தது? இவ்வளவு அதிகளவில் தாய்ப்பால் தானம் செய்யலாமா? தானம் செய்யப்படும் தாய்ப்பால் குறித்து நிலவும் தவறான நம்பிக்கைகள் என்ன? விரிவாகப் பார்ப்போம். ஸ்ரீவித்யா 'ஹைப்பர் லேக்டேடிங்' (Hyper lactating condition) என்று சொல்லப்படும் அதிகமாகப் பால் சுரக்கும் நிலை கொண்ட தாயாக இருந்தார். இதனால் அவர் தனது குழந்தைக்கு கொடுத்தது போக, மீதம் சுரந்த பாலை சேகரித்து தானமாக கொடுத்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். கோவை அரசு மருத்துவமனையில் 2015 ஆம் ஆண்டு முதல் தாய்ப்பால் வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 2022 முதல் அக்டோபர் 2022 வரை, ஸ்ரீவித்யா தனக்கு தினமும் அதிகமாக சுரக்கும் தாய்ப்பாலைச் சேகரித்து, தன்னார்வலர்கள் மூலமாக கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கிக்கு கொடையாக அளித்துள்ளார். இரண்டாவது முறை கருவுற்ற சமயத்தில், தாய்ப்பால் தானம் குறித்து கேள்விப்பட்ட ஸ்ரீவித்யா, தனது குடும்பத்தினர் ஒப்புதலுடன் தானம் செய்ய முடிவு செய்ததாக கூறுகிறார். தாய்ப்பால் ஊட்டுதல் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய 4 முக்கிய தகவல்கள்3 ஆகஸ்ட் 2019 தாய்ப்பால் பரிசுத்தமானதா? ஃபார்முலா பாலை குழந்தைகளுக்கு தரலாமா?24 ஜூன் 2022 தாய்ப்பாலை எடுக்க மெஷினை பயன்படுத்தினால் மார்பகங்கள் பாதிக்கப்படுமா?6 ஆகஸ்ட் 2022 என்ன சொல்கிறார் ஸ்ரீவித்யா? ''என்னுடைய குழந்தைக்குப் பாலூட்டிய பின்னர், நான் மெஷின் வைத்து பம்ப் செய்து அதிகமாகச் சுரந்த பாலை சேகரித்தேன். அதிகமாக சுரக்கும் தாய்ப் பாலை குழந்தைக்கு புகட்டாமல் இருப்பது தவறு என்றும் அவ்வப்போது வெளியேற்றினால்தான் மீண்டும் பால் சுரக்கும் என்றும் மருத்துவர்கள் அறிவுரை கூறினர். அதுவே தாய்ப்பாலை தானம் செய்வதற்கு எனக்கு ஊக்கம் அளித்தது. நான் சரிவிகித உணவை எடுத்துக்கொள்கிறேன், என் பெற்றோர் மற்றும் கணவர் உதவியால்தான் நான் தொடர்ந்து தாய்ப்பால் தானம் செய்தேன். என் குடும்பத்தார் அளித்த ஊக்கம்தான் எனக்கு உதவியது,'' என்கிறார் அவர். அதிகமாக சுரக்கும் பாலை எப்படி எடுப்பது, சேகரிப்பது என்பது குறித்து மருத்துவர்களிடம் பலமுறை கேட்டு விளக்கம் பெற்றதாக கூறுகிறார் ஸ்ரீவித்யா. பட மூலாதாரம்,SRIVIDYA ஹைப்பர் லேக்டேட்டிங் நிலை என்பது என்ன? கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கியைக் கண்காணிக்கும் மருத்துவர் செந்தில் குமார் பிபிசி தமிழிடம் பேசியபோது, `ஸ்ரீவித்யா 'ஹைப்பர் லேக்டேடிங்' என்ற நிலையைக் கொண்டுள்ள தாயாக இருப்பதால், ஏழு மாதங்களில் 100 லிட்டருக்கு மேற்பட்ட பாலை அவரால் தானம் செய்ய முடிந்தது` என்கிறார். அவர் மேலும் கூறும்போது ''ஒரு சில தாய்மார்களுக்கு அதிக அளவில் பால் சுரக்கும். அவர்களால் அதை தடுக்கமுடியாது. ஒரு சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பது மிகவும் குறைவாக இருக்கும். இதில் ஸ்ரீவித்யா முதல் வகையைச் சேர்ந்தவர் என்பதால் தானம் கொடுக்க முடிந்தது. இதை எல்லா தாய்மார்களிடமும் எதிர்பார்க்க முடியாது. இதுபோன்ற தானம் செய்யப்பட்ட தாய்ப்பாலை இரண்டு முறை 'பாக்டீரியா கல்ச்சர் சோதனை` உள்ளிட்ட பலவிதமான அறிவியல் ரீதியான சோதனைகளுக்கு உட்படுத்திய பின்னர்தான் தேவைப்படும் குழந்தைகளுக்குத் தருவோம் '' என்று தெரிவித்தார். ஸ்ரீவித்யா ஏழு மாதங்களில் 105 லிட்டர் தாய்ப்பால் தானமாக கொடுத்துள்ளதற்கான தரவுகள் அரசு மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவற்றை இரண்டு முறை ஆய்வு செய்த பின்னர்தான் 'ஏசியா புக் ஆப் ரெகார்டஸ்' நிறுவனத்திற்கு ஸ்ரீவித்யாவின் தானம் பற்றிய சான்று வழங்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக 100 தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு கொடுத்தது போக, மற்ற நேரங்களில் சுரக்கும் பாலை அரசு தாய்ப்பால் வங்கியில் செலுத்துவதாக கூறுகிறார் அவர். ஆனால் ஸ்ரீவித்யாவைப் போல தொடர்ந்து தானம் கொடுக்கும் தாய்மார்கள் மிகவும் குறைவு என்கிறார். இந்த தாய்ப்பால் வங்கியில் ஒரு நேரத்தில் 400 லிட்டர் வரை இருப்பு வைக்கிறோம். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தாய்மார்கள் மட்டுமின்றி, தனியார் மருத்துவமனையில் உள்ளவர்களும் இந்த வங்கியில் தாய்ப்பாலை தானமாக செலுத்தும் வசதி உள்ளது என்று கூறினார் செந்தில்குமார். பட மூலாதாரம்,SRIVIDYA சாதனைக்காக செய்தாரா? ஸ்ரீவித்யா மிக அதிக அளவில் தாய்ப்பால் தானம் செய்துள்ளது பிறரை ஊக்குவித்தாலும், சாதனை செய்வதற்காக அவர் தாய்ப்பாலை தானம் கொடுக்க முன்வந்தாரா என்ற கேள்வியும், அவரது உடல்நலன் மற்றும் அவரது குழந்தையின் உடல்நலன் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன. ஆனால், தன்னுடைய தனிப்பட்ட விருப்பத்தின் பெயரிலும், தாய்ப்பால் இல்லாத குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டும்தான் இந்த தானத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீவித்யா நம்மிடம் தெரிவித்தார். வல்லுநர்கள் கருத்து என்ன? தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிர்மலா ஒரு தாய்ப்பால் ஆலோசகர் (lactation consultant). தாய்ப்பால் சுரப்பு, தாய் பாலூட்டும் முறைகள், பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில் தாய்ப்பால் கொடுப்பதற்கான வசதிகள் குறித்த நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறார் இவர். எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கும், பால் சுரக்காத நிலையில் உள்ள தாய்மார்களின் குழந்தைகளுக்கும் தானம் செய்யப்படும் தாய்ப்பால் உயிர் காக்கும் பொருளாக உள்ளதால் ஸ்ரீவித்யாவின் செயலில் தவறில்லை என்று கருதுகிறார் அவர். ''ஸ்ரீவித்யா தனது குழந்தைக்குக் கொடுத்தது போக, மீதமுள்ள பாலை தானமாக கொடுக்கிறார் என்பதால், அதில் வேறு எந்த உள்நோக்கமும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. அவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், அவரது குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். 'ஹைப்பர் லேக்டேடிங்' என்ற நிலையில் சில பெண்களுக்கு அளவுக்கு அதிகமான பால் சுரப்பு இருக்கும். அதனை நல்ல முறையில், தானம் கொடுத்து பல உயிர்களைக் காப்பாற்ற அவர் உதவுகிறார் என்பதை வரவேற்கலாம். இது எல்லா பெண்களுக்கும் சாத்தியமில்லை. மிகவும் அரிதாக நடக்கும் நிகழ்வு,'' என்கிறார் நிர்மலா. தாய்ப்பால் குறித்த மூடநம்பிக்கைகள் பட மூலாதாரம்,SAKTHIPRIYA படக்குறிப்பு, தாய்ப்பால் ஆலோசகர் 'சக்தி' பிரியா திருவள்ளூரில் பணிபுரியும் மற்றொரு தாய்ப்பால் ஆலோசகரான சக்திபிரியா, தாய்ப்பால் தானம் குறித்த சில மூடநம்பிக்கைகள் தற்போதும் சமூகத்தில் நிலவுவதாக சொல்கிறார். ''பிறந்த குழந்தைக்கு தாயின் பாலை மட்டும்தான் தரவேண்டும். அதற்கான வாய்ப்பில்லை என்னும்போது, இதுபோல தானமாகக் கிடைக்கும் தாய்ப் பாலை அந்த குழந்தைக்கு தருவதற்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். பலர் இதை ஏற்றுக்கொள்கிறார்கள். சில பெற்றோர் அதனை ஏற்றுக்கொள்வதற்கு சிரமப்படுவார்கள். தானமாக கிடைக்கும் பாலை குழந்தைக்குத் தருவது குறித்து பல விதமான சந்தேகங்களுடன் எங்களிடம் பெற்றோர்கள் வருவார்கள்,'' என்று கூறிய அவர் பெற்றோருக்கு வரும் சில சந்தேகங்களைப் பட்டியலிட்டார். அவர் பட்டியலிட்ட அனுபவங்கள்: 1) சமீபத்தில் ஒரு பெற்றோர், பாலை தானமாகக் கொடுத்த நபரின் சாதி என்ன என்று அறிய முற்பட்டார்கள், அது ஒரு கசப்பான அனுபவமாக இருந்தது. ஒருவேளை தானம் கொடுத்த பெண் சாதிப் படிநிலையில் தங்களது சாதியைவிட கீழே இருந்தால் அவரிடம் இருந்து பெற்ற பாலை எப்படி கொடுப்பது என்று அவர்கள் யோசித்தனர். 2) ஒரு சிலர், தங்களது குழந்தைக்கு ஏதாவது நோய் வருமா என்று கேட்பார்கள். தானமாகப் பெற்ற பாலை கொடுப்பதால், பாலை வழங்கிய தாய்க்கு இருக்கக்கூடும் சாத்தியமான பாதிப்புகள் தங்களது குழந்தையையும் தாக்குமோ என்ற சந்தேகம் இருக்கும். 3) சில தாய்மார்களுக்கு தொடக்கத்தில் பால் சுரப்பு இருக்காது, சில நாட்களில் சுரப்பு தொடங்கிவிடும் என்பதால், சில நாட்களுக்கு தானமாக பெறப்பட்ட பாலை கொடுக்கவேண்டும். அதனால், தன்னுடைய குழந்தை தன்னிடம் குடிக்க மறுத்துவிடுமோ என்ற சந்தேகம் இருப்பதைப் பார்த்துள்ளேன். பட மூலாதாரம்,GETTY IMAGES இவ்வளவு தாய்ப்பால் தானம் செய்யலாமா? தாய்ப்பால் குறித்த கட்டுக்கதைகள் சமூகத்தில் தொடர்வதாகக் குறிப்பிட்ட சக்திபிரியா, தாய்ப்பால் தானம் குறித்த விழிப்புணர்வுதான் இதற்குத் தீர்வு என்கிறார். இப்படி அசாதாரணமான அளவில் தாய்ப்பால் தானம் செய்வது தாயின் உடலில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சக்தி பிரியாவிடம் கேட்டோம். “தன் குழந்தைக்கு கொடுத்தது போக மீதம் கிடைக்கும் பாலை தானம் செய்வதற்கு நாங்கள் ஊக்குவிக்கிறோம். பால் சுரப்பது எப்படி செயல்படுகிறது என்றால், உங்கள் குழந்தை அதிகமாக குடிக்கத் தொடங்கும்போது அதற்கு ஏற்றபடி தாயின் உடல் அதிகம் சுரக்கத் தொடங்கும். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு பால் சுரப்பது இயல்பாக குறையும். தானம் செய்யவேண்டும் என்பதற்காக ஒருவர் அபரிமிதமாக பம்ப் செய்தால் அதற்கு ஏற்ப பாலும் அதிக அளவில் சுரக்கத் தொடங்கும். இதனால் பால்சுரப்பது தாமாக மட்டுப்படும் நடைமுறை தாமதமாகும். அபரிமிதமாக சுரக்கும் பால் தாய்க்கு சில நேரங்களில் சுமையாக மாறக்கூடும்," என்றார். மேலும் இது பற்றிப் பேசிய சக்தி பிரியா, "ஸ்ரீவித்யா இப்படி அபரிமிதமாக தாய்ப்பால் தானம் செய்திருப்பது தாய்ப்பால் கிடைக்காத பல குழந்தைகளுக்கு உதவியாக இருந்திருக்கும். அவர் இதன் மூலம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறார் என்றால், தாய்ப்பால் தானம் செய்யவேண்டும் என்பதற்கான விழிப்புணர்வாக மட்டுமே இதை நாம் எடுத்துக்கொள்ளவேண்டும்," என்கிறார். "இவ்வளவு அதிகமாக ஒருவரே தானம் செய்யலாம் என்பதற்கான செய்தியாக எடுத்துக்கொள்ளக்கூடாது. நிறைய பேர் தாய்ப் பால் தானம் செய்யவேண்டும். ஒருவரே இவ்வளவு நிறைய செய்வது தேவையற்றது. செய்கிறவருக்கு சிரமங்களைத் தரக்கூடியது. ஆனால், இந்த தாய்ப்பாலை தானமாகப் பெறும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்கிறார் சக்திபிரியா. https://www.bbc.com/tamil/articles/c80v02d5x84o
    1 point
  28. அந்த மனிசனை விடுங்கோ....அந்தாள் செவ்வாய் கிரகத்துக்கே போய் ஆராய்ச்சி செய்யுதுட்டு வந்த ஆள் மாதிரி கதைப்பார் கண்டியளோ
    1 point
  29. Google : எந்தெந்த விஷயங்களைத் தேடுவது சட்டப்படி குற்றமாகும்? நம் டிஜிட்டல் வாழ்க்கையில் எல்லா சந்தேகங்களுக்கும் கூகுளில் தான் பதில் தேடுகிறோம். ஒரு நாளுக்கு சராசரியாக 8.5 பில்லியன் தேடல்கள் கூகுளில் நடக்கிறது. உலகம் முழுவதுமிருக்கும் மக்களுக்கு தகவல்களை வழங்கி வருகிறது கூகுள். தேடப்படும் தகவல்கள் அனைத்தும் நல்ல விஷயங்களுக்காக தான் தேடப்படுகிறதா என்றால் நிச்சயம் இல்லை. ஒவ்வொரு நாளும் பல சட்டத்துக்கு புறம்பான தகவல்களும் கூகுளில் தேடப்படுகின்றன. சில விஷயங்களை கூகுளில் தேடுவது குற்றமாக கருதப்படுகிறது. அவை என்ன எனப் பார்க்கலாம். வெடி குண்டு அல்லது துப்பாக்கி தயாரிப்பது எப்படி? சுயாதீனமாக ஆயுதங்கள் தயாரிப்பது சட்ட விரோதமாக கருதப்படுகிறது. கூகுளில் சில தளங்கள் இதற்கான வழிமுறையை கொடுக்கின்றன. இதனால் பல அசம்பாவிதங்கள் அரங்கேறுகிறது. அரசாங்கம் ஆயுதங்கள் குறித்த தேடல்களை கண்காணித்து வருகிறது. இவை குறித்து தேடுபவர்கள் குற்ற நடவடிக்கைகாக சந்தேகிக்கப்படுகின்றனர். குழந்தைகள் தொடர்பான குற்றங்கள் கூகுளில் அதிகம் தேடப்படும் இணையத்தளங்களில் முதல் 10 இடங்கள் ஆபாசப்படங்களுக்கான வலைத்தளமாக இருக்கிறது. குழந்தைகள் தொடர்பான ஆபாசப்படங்களைத் தேடினாலோ அல்லது பகிர்ந்தாலோ சட்டப்படி தண்டனை கிடைப்பது நிச்சயம். பைரஸி புதிய படங்கள், பாடல்கள் வெளியானதும் அவற்றை சட்டத்திற்கு புறம்பாக பதிவிறக்கம் செய்வது குற்றமாக கருதப்படுகிறது. பைரஸி செய்யும் வலைத்தளங்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. திரைப்படங்களை வெளியிடுவது மட்டுமின்றி தரவிறக்குவதும் சட்டத்துக்கு புறம்பானது தான். ஹேக்கிங் தொழில்நுட்ப உலகில் ஹேக்கிங் குறித்து தெரிந்துகொள்ளும் ஆர்வம் நம் அனைவருக்குமே இருக்கிறது. இந்த ஆர்வம் காரணமாக நீங்கள் ஹேக்கிங் தொடர்பானவற்றை கூகுளில் தேடினால் கண்காணிக்கப்படுவீர்கள். இவை தவிர பல தேடல்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சட்ட விரோத செயல்களுக்கு துணை செல்வது போன்ற தேடல்களில் ஈடுபடுபவர்கள் சைபர் கிரைமில் தண்டனை பெறுவது நிச்சயம். https://thinakkural.lk/article/217849
    1 point
  30. எழுதும் போது, நினைத்தேன். வந்து இப்படி எழுதுவீர்கள் எண்டு... 😁 உங்கை ஒருத்தர், மிளகுக்கே DNA செய்வினை, சூனியம் செய்யனுமாம் எண்டு ஐடியா சொல்லுறாரே... 😜
    1 point
  31. கையை எங்க வைச்சார்? மூக்கை தானே விட்டு வாசம் பிடித்தார்?
    1 point
  32. போங்க போய் பிள்ளைகளையாவது சொல்வதை புரிந்து கொள்ளமுடிபவர்களாக வளருங்கள். நன்றி 🙏
    1 point
  33. எது மக்களுக்கு தேவை இல்லை என கூகிள் நினைக்கிறதோ அவற்றை கூகிள் ஏன் பார்க்க அனுமதிக்கிறது? அல்லது வழங்கியில் இருந்து எடுத்து விட வேண்டியது தானே.
    1 point
  34. அது வேற வாய், இது நாற வாய். ஏழு வருடத்துக்கு முதல், காலிமுகத்திடல் போய்... காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டு... சுதந்திரதின அணிவகுப்பை ரசிக்கின்ற அழகோ அழகு. 43 வருடங்களின் பின்னர் தேசிய சுதந்திர தினத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு https://tamil.news.lk/news/sri-lanka/item/6018-43 ஏழு வருடத்துக்கு முதல், வந்த செய்தி இது. 👆 தமிழனின் மறதிக் குணம், அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பாக போய் விட்டது.
    1 point
  35. மொசாம்பிக் நாட்டில் காணப்படும், Taraco என்னும் பறவை.
    1 point
  36. இதே போல் தான் விடுதலைப்புலிகளின் போர்நடவடிக்கைகளை புலம்பெயர் தேசங்களிலிருந்து கண்டித்தார்கள். போரை முடித்து அழித்தார்கள்.இப்போது நாட்டில் வன்முறைகள் ஏதும் இல்லையென்றனர். ஆனால் புலம்பெயர் தேசத்து கண்டிப்பாளர்கள் போர் முடிந்த பின் தாங்கள் வாழும் நாடுகளிலேயே கோமா நிலைக்கு வந்து விட்டனர். போக மாட்டினமாம்
    1 point
  37. உங்கள் கண்டனத்திற்கு நன்றி சகோதரி. மேற்குலகு அகல கால்வைத்து பல இடர்களை சந்திக்கப்போகின்றது ..
    1 point
  38. ம‌ழை எப்ப‌ப‌ பெய்ய‌னுமோ அப்ப‌ப்ப‌ பெய்யுது ஜேர்மனியில் அதிக‌ம் பெய்தால் நாட்டுக்கு கேடு என்று இய‌ற்கைக்கு தெரியுது 🤣😁😂
    1 point
  39. சொர்க்கபூமி தஞ்சாவூரு · இளமை முறுக்கில் கசப்பாக இருந்தேன் எவரும் வர வில்லை.. கொஞ்சம் மெனகிட்டேன் இனிப்பாக மாறினேன் எல்லோரையும் கவர்ந்தேன் "வேப்பம் பழம்"
    1 point
  40. உக்கல் உக்ரைனுக்கு... அமெரிக்கா போர் டாங்கிகளை வழங்க எடுத்த முடிவை கண்டித்த, வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னின் சகோதரிக்கு பாராட்டுக்கள். 👋 உங்களை போன்ற துணிவு உள்ளவர்காளால்தான்... இந்த உலகத்தில் இன்னும் மழை பெய்கின்றது. உங்கள் நெஞ்சுரமும், துணிவும் மற்ற நாட்டு, தலைவர்களுக்கும் வர வேண்டும். 🙂 நெடுக... அமெரிக்காவின், சீலைத் தலைப்பில்... தொங்கிக் கொண்டு இருக்காமல் வெளியே வர வேண்டும். 😂 🤣
    1 point
  41. காட்ச் பிடிப்பதில் ஏமாற்றிய கில்லாடிகள்........! 😂
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.