Jump to content

Leaderboard

  1. goshan_che

    goshan_che

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      14919


  2. இணையவன்

    இணையவன்

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்


    • Points

      6

    • Posts

      7240


  3. ஈழப்பிரியன்

    ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      15593


  4. பிழம்பு

    பிழம்பு

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      4

    • Posts

      11428


Popular Content

Showing content with the highest reputation on 02/02/23 in all areas

  1. முன்குறிப்பு இந்தக் கட்டுரை எழுதியதன் நோக்கம் எனது திட்டத்திற்கான உங்கள் ஆலோசனை உதவிகளைப் பெறுவதும் தகவல்களைப் பரிமாறுவதன் மூலம் வேறு யாராவது பயனடையலாம் என்பதே. புலம்பெயர்ந்த சாதாரண தமிழனுக்கே இக் கட்டுரை பொருந்தும். யாரையும் புண்படுத்தும் நோக்கமும் இல்லை. இதில் குறிப்பிட்டவைகளை 100 வீதம் பின்பற்றுவேன் என்ற உறுதி இப்போது கிடையாது. எழுத்தாழுமை இல்லாமல் கட்டுரை எழுத வெளிக்கிட்டுள்ளேன். பந்திகளைச் சரியான முறையில் கோர்த்து எழுதுவதும் நினைப்பதை எல்லோருக்கும் புரியும் வகையிலும் எழுத முடியவில்லை. புரிதாதவற்றைக் குறிப்பிடுங்கள். எழுத்து, இலக்கணப் பிழைகளை மன்னியுங்கள். *** எனது பாதை எங்கு செல்கிறது? சிறுவனாக இருந்தபோது வெளிநாட்டு மோகம் மனதில் விதைக்கப்பட்டது. வெளிநாடு போய்வந்தவர்களின் புழுகல்கள் மூலமாக கனவுகளை வளர்த்துக் கொண்டேனே தவிர யதார்த்தமான நிலமையைச் சிறிதளவேனும் கற்பனை செய்து பார்க்கக்கூட முடியாத நிலமை. பட்டப்படிப்பில்லாமல் எங்கோ எப்படியோ நுளைந்து சுமாராக முன்னேறியிருந்தாலும் தற்போதைய வாழ்க்கையைக் கனவிலும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. பிள்ளைகள் வளர்ந்து விட்டதால் அவர்கள் படிப்பில் நேரடியாகத் தலையிடுவதில்லை. படிப்பு என்பது முதலில் எமது அறிவை வளர்த்துக் கொள்ளவே, வேலை இரண்டாம் பட்சம் என்றே கருதுகிறேன். அவர்கள் பிற்காலத்தில் ஓரளவு வசதியாக வாழக்கூடிய வகையில் சொத்து சேர்த்துவிட்டேன் என்று நினைக்கிறேன். இனி என்ன பிரச்சனை? எதுவும் இல்லையே ! நான் குறைந்தது 5 வருடங்களாவது திட்டமிட்டு செயற்படுவது வழக்கம். ஆனாலும் பல தடவைகள் இலக்குகள் மாறி வேறு விதமாக அமைந்து விடுகிறது. எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து நான் எதிர்பார்த்த/எதிர்பாராத விதமாக வாழ்க்கை நகர்ந்தாலும் அன்று முதல் என்னுள் மாறாமல் இருப்பது நான் தமிழன் என்ற பெருமை மட்டுமே. நான் மேலே குறிப்பிட்டதுபோல் எனது உழைப்பில் தேடிய சொத்தினை (அது சிறிதாக இருந்தாலும்) எனது பிள்ளைகள் அனுபவிக்கப் போகிறார்கள். அவர்கள் ஓரளவு தமிழ் பேசுவார்கள். எழுத்துக்கூட்டி வாசிக்கவும் முடியும். இலங்கையில் எமது உறவினர்களுடன் நெருக்கமான தொடர்பினைக் கொண்டுள்ளனர். மற்றப்படி எமது பழக்கவழக்களோடு ஒன்றியிருந்தாலும் அவர்களின் தமிழ் கலாச்சாரம் என்பது பொலிவூட், சாமத்தியவீடு போன்ற கொண்டாட்டங்களுடனேயே மட்டுப்படுகிறது. இதையெல்லாம் நியாயப்படுத்தி அவர்களைத் தமிழர்கள் என்று சொல்ல முடியாது. பிரெஞ்சுக்காரர்கள். சில பெற்றோரைப்போல் தமிழர்களுக்குள் தமது பிள்ளைகளைத் திருமணம் செய்து வைத்துத் திருப்திப் பட்டாலும் கூட அடுத்த சந்ததி என்னவாகும் என்பது நிச்சயமில்லை. 80-90 களில் வந்தவர்களே இன்று வெள்ளைக்காரப் பேரப்பிள்ளைகளுடன் இருக்கும் நிலையில் எனது உழைப்பினை எனது பிள்ளைகளுக்குப் பின் வெள்ளைக்காரர்களே அனுபவிக்கப் போகிறார்கள். புலம்பெயர்ந்த பெரும்பாலான தமிழர்களின் நிலை இதுவாகத்தான் இருக்கும். இக் கருத்தினை வைத்து என்னை இனவெறியனாகக் கருத வேண்டாம். தொடர்ந்து படியுங்கள். *** முதுமையும் தாழ்வும் மனித நாகரிகம் தோன்றிய முற் பகுதிகளில் மக்கள் வீடு கட்டுவதும் விவசாயம் செய்வதுமாகவே பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்தன. இதற்கான காரணம் பெற்ற அனுபவத்தினை இலகுவாக அடுத்த சந்ததிக்குக் கடத்த முடியாததாக இருக்கலாம். இலகுவான எழுத்து வடிவங்கள் தோன்றியபோது மனித வளர்ச்சி வேகமடைய ஆரம்பித்தது. சில நூற்றாண்டுகள் இடைவெளியில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. 20 ஆம் நூற்றாண்டில் சமுதாயத்தில் வயது முதிர்ந்தவர்களின் ஆலோசனைகளும் முடிவுகளும் அவர்கள் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கணணி, தொலைத்தொடர்பு வருகைக்குப் பின் வயது வித்தியாசமின்றி எல்லோராலும எல்லாத் தகவைகளையும் இலகுவாகப் பெற்றுக் கொள்ளவும் அலசி ஆராயக் கூடியதாகவும் உள்ளது. வீட்டில் 70 வயதானவரை விட 20 வயதான ஒருவருக்கு அதிகமான தகவல்கள் தெரிய வாய்ப்புள்ளதால் வயதானவர்கள் முடிவுகளை எடுக்கும் திறன் குறைந்து போகின்றது. சென்ற வருட ஆரம்பத்தில் (2022) நான் வேலை செய்யும் நிறுவனத்தில் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. பலர் வேலையை விட்டு விலகும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர் அல்லது வேறு நிறுவனங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். நான் விளிம்பில் தப்பிப் பிழைத்திருந்தேன். இந்த வயதில் இதுபோன்ற வேலை தேடி எடுப்பது கடினம். வருட முடிவில் எல்லோருக்கும் தமது வேலைகளில் ஜனவரி முதல் தகமைகளை மேம்படுத்த முயல வேண்டும் என்ற அறிவுரையை வழங்கியுள்ளனர். அதாவது புதிய தகமைகளைப் படிக்க வேண்டும். நான் மீண்டும் படிக்கும் மனநிலையில் இல்லை. ஆனாலும் முயற்சி செய்து ஏதாவது படித்து ஒரு சான்றிதளாவது பெற முயற்சிக்க வேண்டும். ஆரம்ப வாழ்வு முதல் தகமைகளையும் அனுபவங்களையும் கடும் முயற்சியில் பெற்றுக் கொள்கிறோம். ஆரம்பப் படிப்பில் பரீட்சையில் அதிக புள்ளிகள் பெற வேண்டிய நிர்ப்பந்தத்தை மேற்படிப்பு உருவாக்குகிறது. மேற்படிப்பின் எல்லை தொழிலை நோக்கி உள்ளது. தொழிலிலும் தொடர்ந்து இறுதிவரை முன்னேற வேண்டும். எல்லா முயற்சிகளின் பெறுபேறுகளுக்கும் அனுபவங்களுக்கும் ஓய்வூதியத்தை எட்டியதும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு தொலைக்காட்சி நாடகங்களுக்கு முன்னால் மீதி வாழ்க்கையைத் தொடர வேண்டியுள்ளது. என்னைச் சுற்றியுள்ள பலரின் வாழ்க்கை இப்படித்தான் உள்ளது. ஏன் இந்த நிலமை ? வாழ்நாள் முழுவதும் பெற்ற விலைமதிப்பற்ற அனுபவங்களை என்ன செய்வது ? *** எனது தேசியம் 2006 இலும் பின்னர் 2012 இலும் இலங்கை சென்றிருந்தேன். 2012இல் கொழுப்பிலிருந்து யாழ் நோக்கி பிரயாணம் செய்துகொண்டிருந்தேன். கிளிநொச்சிப் பகுதியை A9 ஊடாக வாகனத்தில் கடந்து சென்றபோது எனது மனதில் ஏற்பட்ட சோகம் கோபம் இயலாமை ஏமாற்றம் தோல்வி எல்லாமே கலந்த உணர்ச்சிகளை வார்த்தைகளில் எழுதிவிட முடியாது. அதன்பின் இலங்கையில் எனக்குடனான தொடர்பு அங்குள்ள உறவினர்கள் மட்டுமே என்று தோன்றியது. நான் பிறந்த நாட்டில் எனக்கு மறுக்கப்பட்ட உரிமைகளையும் சுதந்திரத்தையும் பிரான்ஸ் எனக்குத் தந்துள்ளது. இனிமேல் பிரான்ஸ்தான் எனது நாடு என்று முடிவு செய்திருந்தேன். காலம் எல்லாவற்றையும் மாற்றுகிறது. என்னைப்பொறுத்தவரை எமக்கான தீர்வு என்றாவது கிட்டும் என்ற நம்பிக்கையில் வாழ்வதை விட இனி எதுவுமே கிடைக்காது என்ற சிந்தனையிலிருந்து பாதையை வகுப்பது புத்திசாலித்தனம். பிரான்ஸ் தேர்தலின்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அரசியல் வேட்பாளர்களின் கலந்துரையாடலின் ஒரு பகுதியைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. அதில் வேட்பாளரிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. ‘பிரெஞ்சுக்காரன்(ரி) என்றால் என்ன?’ என்பதே அக் கேள்வி. அவரது இவ்வாறு பதிலளித்திருந்தார். பிரெஞ்சுக்காரன் என்பவன் : தன்னை உருவாக்கிக் கொள்வான் (கல்வி, அறிவு) எதிர்காலத்தை நோக்கி நகரத் தலைப்படுவான் (திட்டமிடல், உழைப்பு) சொத்துக்களை உருவாக்குவான் இந்த மூன்றாவது விடயம் சொத்துகள் தனியே பணம் பொருள போன்றவை மட்டுமல்ல. ஒருவர் தனது வீட்டு முற்றத்தைத் துப்பரவு செய்து பூமரங்கள் நட்டுப் பராமரிப்பதும் சொத்துத்தான். இவ்வாறு பலரும் செய்தால் அந்த ஊரே அழகாகிவிடும் அல்லவா. இந்த வரைவிளக்கம் என்னுள் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் அடிப்படையில் அடுத்த 9-13 வருடங்களில் ஓய்வுபெற்றபின்னான வாழ்க்கைக்கு இப்போது அத்திவாரமிடப் போகிறேன். மீதி இரண்டாம் பகுதியில் தொடரும்.
    2 points
  2. தெய்வ வழிபாட்டின் வழியே உருவான கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களின் ஆக்டோபஸ் கரங்கள் பெண்ணை அடக்கியாள ஆணுக்கு கொடுத்திருக்கும் துணிச்சலை ‘அயலி’ எதிர்க்கும் விதம்தான் ஒன்லைன். 90-களில் விரியும் கதை புதுக்கோட்டையின் பின்தங்கிய வீரபண்ணை கிராமத்தில் தொடங்குகிறது. பருவமெய்தும் பெண்களுக்கு உடனே திருமணம் என்கின்ற விநோத நடைமுறையால் அங்கிருப்பவர்கள் பலிகாடாவாகின்றனர். அத்துடன் இலவச இணைப்பாக பருவ வயதை எட்டிய பெண்கள், கோயிலுக்குள் நுழையவோ, பள்ளிக்கூடத்திற்கு செல்லவோ, ஊரைத்தாண்டி கூட அடியெடுத்து வைக்கவோ கூடாது போன்ற பழமைவாதத்தில் ஊறிக்கிடக்கிறது கிராமம். அந்த மண்ணின் மாணவி தமிழ்ச்செல்வி தான் வயதுக்கு வந்ததை மறைத்து மருத்துவராக வேண்டும் என்ற கனாவுடன் களமாடுகிறார். அவரின் அந்தப் போராட்டம் வென்றதா? ஊர் திருந்தியதா? அந்த ஊர் பெண்களின் நிலை என்ன? என்பதை 8 எபிசோடுகளின் வழியே கிட்டத்தட்ட 4.30 மணிநேர நீளத்தில் சொல்ல முற்பட்டிருக்கும் படைப்புதான் ‘அயலி’. ஜீ5 ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது. 2023-ம் ஆண்டு ‘அயலி’யின் வருகையைப்போல தமிழ் வெப்சீரிஸ்களுக்கு வளர்ச்சியை தந்துவிட முடியாது. காரணம், இன்னும் பருவமடையாத தமிழ் இணையத்தொடர்கள் யாவும், த்ரில்லர் வகையறாக்களில் மாட்டிக்கொண்டு முழிக்கும் நிலையில், ‘அயலி’யின் பாதை தனித்துவமானது. ராஜேஷ்குமார் நாவலைப் போன்றிருந்த தமிழ் வெப் சீரிஸ்களை, மண்ணின் கதைகளை பேசவைக்கும் இடத்திற்கு ‘அயலி’ நகர்த்திருக்கிறாள். தொடரின் இயக்குநர் முத்துகுமாருக்கு பாராட்டுகள். ‘கோயில இடிச்சிட்டா பொண்ணுங்கள எப்படி கட்டுப்படுத்துவீங்க’ என்ற புள்ளியிலிருந்து மொத்த தொடரையும் அணுகலாம். அடிப்படையில் ஒரு பெண்ணைக் கட்டுப்படுத்த கடவுளின் பெயராலான மூடநம்பிக்கையும், பண்பாடும், கலாச்சாரமும் போதுமானது என்பதையும், இதனை ஆண்கள் எப்படி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதையும் அழுத்தமாக பேசுகிறது தொடர். "உங்க குடும்ப கௌரவத்தை ஏன் எங்க காலுக்கு இடையில தேடுறீங்க?", "அப்படி குடும்ப மானம் முக்கியம்னா, அதை நீங்களே தூக்கிச் சுமக்கவேண்டியதுதானே? அதை ஏன் பொம்பளைங்கக் கிட்ட தர்றீங்க?" போன்ற வசனங்கள் மேற்கண்ட கட்டுப்படுத்துதலுக்கு தகுந்த பதிலடி சேர்க்கின்றன. பெண்கள் ஒடுக்கப்படுவதற்கான க்ரவுண்ட் ரியாலிட்டியை பதிவு செய்துகொண்டிருக்கும் அதேவேளையில், மற்றொருபுறம் அதற்கு தீர்வான பெண் கல்வியை முன்வைக்கும் இடத்தில் மொத்த தொடரின் கனமும் கூடுகிறது. இப்படியான திரைக்கதை அமைப்புக்குள் பள்ளிக்குச் செல்லும் தமிழ்ச்செல்வியும், அவள் வயதையொத்த மற்றொரு பெண்ணின் நிலையையும் காட்சிப்படுத்திருக்கும் விதம் எடுத்துக்கொண்ட கதைக்கருவை இன்னும் ஆழப்படுத்துகிறது. ஒருக்கட்டத்தில் கட்டுப்பாடுகளுக்கு பழகும் பெண்கள் தங்கள் மகள்களை சென்டிமென்ட் ப்ளாக்மெயில்கள் மூலமாக ஆணாதிக்க சிந்தனைக்கு பழக்குவது போன்ற காட்சி அமைப்புகள் யதார்த்தம். ‘உன் அறிவுக்கு எது சரின்னு படுதோ அத செய்’, ‘நம்ம வாழ்க்கையும் சேர்த்து ஆம்பளைங்க தானே வாழ்றாங்க’, ‘ஆம்பளைங்க சேலையத்தான் கட்டணும்’ என சொல்லும்போது, ‘கட்டிக்க.. பொறக்கும்போதே வேட்டியோடவா பொறந்த..’ போன்ற வசனங்கள் ‘நச்’ ரகம். தான் வயதுக்கு வந்ததை மறைத்து நடைபோடும் தமிழ்ச்செல்வியின் அந்த நடையும், பேருந்து பயணத்தில் வெளியுலகை ரசிக்கும் அவரது தாயின் எண்ண ஓட்டங்களும் இரு வெவ்வேறு வெளிகளை அடையாளப்படுத்துகின்றன. தமிழ்ச்செல்வியாக அபி நக்‌ஷத்ரா. மாதவிடாய் ரத்தத்தை மறைக்க சிவப்பு இங்குடன் நடந்து வரும் காட்சியிலும், அம்மாவிடும் பேசும் உறுதித்தோய்ந்த உடல்மொழியிலும், ஊரை எதிர்த்து பேசும் காட்சிகளிலும் தனித்து தெரிகிறார். யதார்த்தமான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டுகிறார். அவரது அம்மாவாக அனுமோல், அப்பாவாக அருவி மதன் தேர்ந்த நடிப்பில் அழுத்தம் சேர்க்கின்றனர். சிங்கம் புலி, லிங்கா, வில்லன் கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்ய, அவர்களை ஓவர் டேக் செய்து கவனிக்க வைக்கிறார் டி.எஸ்.ஆர் தர்மராஜ். யூடியூப் புகழ் ஜென்சன் நடிப்பு கவனிக்க வைக்கிறது. தனது டைட்டில் இசையிலிருந்தே ரேவா கவர்கிறார். பரந்துவிரிந்த நிலப்பரப்பையும், அச்சுபிசகாத அதன் சாயலை ஆன்மா குறையாமல் காட்சிப்படுத்தியிருக்கும் விதத்தில் ராம்ஜியின் ஒளிப்பதிவு கவனிக்கவைக்கிறது. எடிட்டர் கணேஷின் படத்தொகுப்பு சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறது. அழுத்தமான பிரச்சினையை மையப்படுத்தி நகரும் இந்தத் தொடர், ஒரு கட்டத்தில் ஹீரோயிச தன்மைக்குள் அடைபடும் எண்ணத்தை கொடுத்துவிடுகிறது. மொத்த ஊரையும், அங்கிருக்கும் பெண்களின் எழுச்சிக்கும் காரணமாகும் தமிழ்ச்செல்வி கதாபாத்திர சித்தரிப்பு மீட்பர் வகையறா அல்லது ஹீரோயிசத்துக்குள் சுருங்கிவிடுகிறது. அவருடன் மற்றொரு பெண்ணும் குரல் எழுப்புவதாக காட்டப்பட்டிருக்கும் காட்சியிலும் கூட, அவரையும் தமிழ்ச்செல்வியே இயக்கியிருப்பார். மொத்தமாகவே தமிழ் செல்வி எனும் ஒரு கதாபாத்திரம் பெற்றுத்தரும் விடுதலையாக தொடர் நிலைத்துவிடுகிறது. சோகத்தை பிழியும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகளின் தொடர் அணிவகுப்பு அயற்சியை ஏற்படுத்தாமலில்லை. மொத்தத்தில் ‘அயலி’ தமிழ் இணையத் தொடர்களில் ஆக்கபூர்வமான புது வருகை. எடுத்துக்கொண்ட கருவுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் சமரசமின்றி உருவாகியிருக்கும் இப்படைப்பு காணக் கூடியது மட்டுமல்ல உரையாடக் கூடியதும் ‘அயலி’ விமர்சனம்: தமிழ் இணையத் தொடர்களில் ஆக்கபூர்வமான புது வருகை! | muthukumar directorial Ayali web series review zee 5 ott - hindutamil.in
    2 points
  3. ஒன்றுமே சரிவராதென்று... தமிழீழப் பிரகடனம் செய்ததை மறந்திட்டீங்கள். உலகில் தமிழீழத்தை பிரகடனம் செய்தது வரதராஜப் பெருமாள் தலைமையிலான ஈபிஆர் எல் எவ் தான் என்றால் அது தவறில்லை. ஆனால்.. தவறான வழியில் செய்ததால்.. அது இவர்கள் அடிவருடிய.. ஹிந்தியாவால் கூட காப்பற்றப்படவில்லை. நீடிக்கவில்லை.
    2 points
  4. இவர் என்ன சொல்ல வருகிறார் மக்களைப் பிளவு படுத்துவது சரி அது என்ன அரசியல் அமைப்பு விடையத்தில் குழப்பம் விளைவிக்கிறது. இவர் எந்த நாட்டில் வாழ்கிறார் எந்த நாட்டின் அரசியல் அமைப்பு விடையம் இலங்கைத் தீவு என்றால் அங்கு தமிழர்க்கான அரசியல் அமைப்பு என ஏதாவது இருக்குதா அவர் அடிமையாக வாழ்ந்து பழகிப்ப்போய் அதுவே தமக்கான அரசியல் அமைப்பு என நினைக்கிறாரா அதையே மற்றவர்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறாரா?
    2 points
  5. ஈழ‌த்து அர‌சிய‌லில் 50வித‌ம் த‌ன்னும் த‌மிழ‌க‌த்தை ஒட்டியே இருக்கு இத‌ற்க்குள் நாம் மூக்கை நுழைக்காம‌ இருந்தா எங்க‌ட‌ இந்த‌ த‌லைமுறையோட‌ த‌மிழீழ‌ க‌ன‌வும் முடிந்து போய் விடும் புல‌ம்பெய‌ர் நாட்டில் வ‌சிக்கும் பிள்ளைக‌ள் ரிக்ரொக் காம‌ கூத்துக்குள் மூழ்கி போய் இருக்கின‌ம்............நூற்றில் 20 வித‌ புல‌ம்பெய‌ர் நாட்டு பிள்ளைக‌ள் ஈழ‌ உண‌ர்வோடு ப‌ய‌ணிக்கின‌ம் மீத‌ம் உள்ள‌வை கார்த்திகை மாத‌ம் 27மாவீர‌ நாளுக்கு போனால் த‌ங்க‌ளின் க‌ட‌மை முடிந்து விட்ட‌தா உண‌ருகின‌ம் த‌மிழ‌க‌ இளைஞ‌ர்க‌ள் ஈழ‌த்து இளைஞ‌ர்க‌ள் ந‌ல்ல‌ ந‌ட்பை பேனி ப‌ழ‌குவ‌து அடுத்த‌ க‌ட்ட‌த்துக்கு ந‌ல்ல‌ம் க‌த்தி இன்றி ர‌த்த‌ம் இன்றி ஈழ‌ம் அமைவ‌து தான் சிற‌ப்பு.................இத்த‌னை ஆயிர‌ம் மாவீர‌ர்க‌ளின் தியாக‌த்தை நிறைவேற்றாம‌ த‌மிழின‌ம் கை விட்டா நாம் அவ‌ர்க‌ளுக்கு செய்யும் துரோக‌மாய் போய் விடும் முடிந்த‌ அள‌வு எம‌து கால‌த்தில் ஒற்றுமையாய் செய‌ல் ப‌டுவோம் முடிய‌ வில்லை என்றால் அடுத்த‌ ச‌ந்த‌தி பிள்ளைக‌ளுக்கு க‌ட‌த்தி விட்டு போவோம் அவ‌ர்க‌ளால் கூட‌ முடிய‌ வில்லை என்றால் த‌மிழின‌ம் தோல்வி க‌ண்ட‌ இன‌ம் என்று வ‌ர‌லாற்றில் எழுத‌ ப‌டும் எம் போராட்ட‌த்தை ப‌ற்றி இப்ப‌ அதிக‌ம் பேசுவ‌து த‌மிழ‌க‌த்தில் தான் அதுக்குள் நாம் மூக்கை நுழைக்க‌ கூடாது என்று சொல்லுவ‌து ச‌ரி என்று ப‌ட‌ வில்லை தாத்தா...................
    2 points
  6. 13 பிளஸ் நியாபகம் இருக்கா? சமஸ்டி? எல்லாத்திலையும் இருந்து இழுத்து கொண்டு கீழே வந்து - சட்டத்தில் இருக்கும் 13 ஐயே நீக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள். சர்வதேச உத்தரவாதம் (தனியே இந்தியா மட்டும் அல்ல) இல்லாத எந்த தீர்வும், எழுதிய மை காயமுன்னம் கிழித்து வீசப்படும். ஆகவே நாங்கள் இதில் உத்தரவாதிகளாக மேற்கை இழுத்து வருவதே சிறப்பு. அவர்களுக்கும் அதற்கான தேவை உண்டு. இந்தியா + ஈயூ + கனடா+ யூகே இதில் சம்பந்த பட்டால் மட்டுமே நாம் புலம்பெயர் சக்தியை பாவித்து கொஞ்ச அளுத்தமாவது கொடுக்கலாம். கஜன் தரப்பு சீனாவுடன் ஒரு தொடர்பாடல் வழியை திறக்ககலாம்.
    2 points
  7. „எனக்கு எது தேவையோ அது தான் அழகு“ „உங்க அறிவுக்கு எது சரின்னு படுதோ அத செய்ங்க“
    2 points
  8. யாழ்ப்பாணம் வலி. வடக்கு பிரதேசத்தில் கடந்த 33 வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டில் காணப்பட்ட 108 ஏக்கர் காணி 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட செயலரிடம் இராணுவத்தினரால் கையளிக்கப்படவுள்ளது. காங்கேசன்துறை மத்தி , ஜே/ 234 கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட , வெளிச்ச வீட்டில் இருந்து துறைமுகம் வரையிலான 40 குடும்பங்களுக்கு சொந்தமான 26 ஏக்கர் காணியும், இதே கிராம சேவையாளர் பிரிவில், இராணுவத்தினரின் பொறியியல் பிரிவு அமைந்திருந்த 45 குடும்பங்களுக்கு சொந்தமான 24 ஏக்கர் காணியும், மயிலிட்டி வடக்கு ஜே / 246 கிராம சேவையாளர் பிரிவில் 17 குடும்பங்களுக்கு சொந்தமான 16 ஏக்கர் காணியும் , அன்றோனிபுரம் பகுதியில் 13 ஏக்கர் காணியும், நகுலேஸ்வரம் ஜே/ 226 கிராம சேவையாளர் பிரிவில் 20 குடும்பங்களுக்கு சொந்தமான 20 ஏக்கர் காணியும் நாளைய தினம் ஒப்படைக்கப்படவுள்ளது. வலி வடக்கில் 33 வருடங்களின் பின் 108 ஏக்கர் காணி விடுவிப்பு! | Virakesari.lk சுதந்திரத் தினத்தில் தமிழர்களுக்கு மகிழ்ச்சி செய்தி யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் யுத்தத்தின் போது பாதுகாப்புப் படையினர் வசமிருந்த சுமார் 109 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு, 197 குடும்பங்களிடம் நாளை (3)கையளிக்கப்படவுள்ளது. இராணுவத்தினர் வசமிருந்த ஐந்து காணிகளும் கடற்படையினர் வசமிருந்த ஒரு காணியுமே இவ்வாறு மக்களிடம் கையளிக்கப்பட உள்ளன. இலங்கையின் 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வடக்கிலுள்ள காணிகளை விடுவித்து அவற்றை உரிமையாளர்களிடம் கையளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பாதுகாப்புத் துறையின் முழு கண்காணிப்புடன் இந்த காணி விடுவிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. Tamilmirror Online || சுதந்திரத் தினத்தில் தமிழர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
    1 point
  9. பாதிக்கப்பட்ட தன் மகளுக்காக ஆதிக்க சாதியை எதிர்த்து தந்தை ஒருவர் நடத்தும் நீதிக்கான போராட்டத்தில் தீர்ப்பும் நீதியும் வெவ்வேறாக இருந்தால் அதுதான் ‘பொம்மை நாயகி’. நுனிநாக்கு ஆங்கிலத்தில் தன் மகள் பேசுவதைக் கண்டு, ‘ஏம்பொண்ணு’ என பெருமைகொள்ளும் வேலு (யோகிபாபு) சாதாரண டீ மாஸ்டர். அன்றைக்கான கூலியில் நாட்களைக் கடத்தும் வேலு, மனைவி கயல்விழி (சுபத்ரா), மகள் பொம்மை நாயகி (ஸ்ரீமதி)யுடன் மகிழ்ச்சிக்கு குறைவில்லாத வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். டீக்கடை உரிமையாளர் அதனை விற்கும் நிலைக்கு வரும்போது, வேலுவுக்கு வேலை பறிபோகிறது. சொந்தமாக கடையை வாங்கலாம் என எண்ணி பணம் திரட்டிக்கொண்டிருக்கும்போது, அவரது மகள் பொம்மை நாயகி திருவிழா ஒன்றில் திடீரென காணாமல் போகிறார். தன் மகளைத் தேடிச் செல்லும் வேலு, மயக்கமடைந்த நிலையில் பொம்மை நாயகியை மீட்டெடுக்க, அவரை அந்த நிலைக்கு தள்ளியது யார்? என்ன நடந்தது? குற்றவாளிகளுக்கு தண்டனை கிட்டியதா? - இதையெல்லாம் சமூகத்தின் சாளரமாய் சொல்லியிருக்கும் படைப்புதான் ‘பொம்மை நாயகி’. உருவகேலி, அசால்ட் கலாய், டைமிங் காமெடி, இப்படியான எந்த டெம்ப்ளேட்டிலும் சிக்காத ஒரு யோகிபாபுவை வார்த்தெடுத்திருக்கிறார் இயக்குநர் ஷான். ‘பொம்மை நாயகி’யின் யோகிபாபு அற்புதக் கலைஞனாக வடிக்கப்பட்டு செதுக்கப்பட்டுள்ளார். வறுமை நிழலாடும் முகம், கவலை தோய்ந்த உடல்மொழி, சிரிப்பில் வறட்சி என யதார்த்த நடிப்பில் அடித்தட்டு தந்தையை கண்முன் காட்டும் யோகிபாபு குலுங்கி அழும் இடத்தில் நம்மையும் கலங்க வைத்துவிடுகிறார். அவரது மனைவியாக சுபத்ரா நடிப்பில் அழுத்தம் கூட்ட, குழந்தை நட்சத்திரமான ஸ்ரீமதி தேர்ந்த நடிப்பால் தனித்து தெரிகிறார். அவர் வசனம் பேசும் இடங்களும், அதுக்கான டைமிங்கும் பார்வையாளர்களுக்கு எமோஷனல் டச். குறிப்பாக ‘நான் எதும் தப்பு பண்ணிடேனாப்பா’ என அவர் பேசும் இடம் உருகவைக்கின்றன. காவல் துறையை எதிர்த்து நிற்கும் கம்பீரமான கம்யூனிஸ்ட்டாக ஈர்க்கிறார் ஹரி (மெட்ராஸ் ஜானி). தவிர, ஜி என் குமார், அருள்தாஸ், ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி யதார்த்த நடிப்பால் கவனிக்க வைக்கின்றனர். வறுமையோடியைந்த வாழ்வை கடக்கும் ஒருவனின் பகற்பொழுதின் அத்தனை அம்சங்களையும் அடுக்கி அடுக்கி அவரின் உலகத்திற்குள் நம்மை நுழைக்கிறார் இயக்குநர் ஷான். தன்னை ‘பாரத மாதா’ என பாவித்துக்கொள்ளும் ‘பொம்மை நாயகி’ கயவர்களால் காவு வாங்க முற்படும்போது, ‘பாரத மாதா’ என பெண்கள் பெயரால் போற்றப்படும் நாட்டில் பெண்களின் நிலைமை என்னவாக இருக்கிறது என்பதை அப்பட்டமாக பேசுகிறது படம். அதனை வைத்து இறுதியில் சொல்லப்படும் வசனமும் கச்சிதமான முடிவுக்கு வழிவகுக்கிறது. படத்தின் இடையிடையே வரும் பாட்டி கதாபாத்திரம் அதன் எம்ஜிஆர் பாடல்களும் மெட்ராஸ் ஜானி கதாபாத்திரத்தை நினைவூட்டுகின்றன. கதையோடு பயணிக்கும் முஸ்லிம் கதாபாத்திரம், வழக்கறிஞராகவும், காவல் துறை உயரதிகாரியாகவும் காட்சிப்படுத்தப்படும் பெண்கள் நீதியின் பக்கம் நிற்பது, கம்யூனிஸ்ட் கட்சியினரின் நீதிக்கான போராட்டங்கள், ஊர் -சேரி பிரிவினை என படம் அயற்சியில்லாமல் எங்கேஜிங் திரைக்கதையுடன் கடப்பது பலம். ‘ஒரு சமூகத்துல ஒரு பொண்ணு படிச்சா அந்த சமூகமே படிச்ச மாதிரி’, ‘சட்டமும் நீதிமன்றமும் நல்லதும் பண்ணுது கெட்டதும் பண்ணுது’, ‘அவன் உன்ன அடிமைன்னு நெனைக்கும்போது நீ அவனை எதிர்க்கிற ஆயுதமா மாறணும்’, ‘தீர்ப்பு கொடுத்ததுக்கு அப்றம் நீதியும் தரவேண்டியிருக்கு’, ‘போற உசுறு போராடியே போகட்டும்’ போன்ற வசனங்கள் ஈர்ப்பு. குறிப்பாக நீதிபதியிடம் ஸ்ரீமதி பேசும் இடம் கைதட்டலை பெறுகிறது. மானம், கௌரவம் என்ற பெயரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்படுபவர்கள் மிரட்டப்படுவதையும், அதிலிருந்து மீள வேண்டிய தேவையையும், பெண் கல்வியின் அவசியத்தையும் பதிய வைக்கும் இடங்களுக்காக பாராட்டுகள். சுந்தரமூர்த்தி இசையில் ‘அடியே ராசாத்தி’ பாடலில் ‘எல்லோரும் 10 மாசம் தாண்டா இதுல சாதி சண்ட ஏன்டா’ போன்ற வரிகளும் பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது. அதிசயராஜின் சிறு லென்ஸின் வழியே விரியும் பெருங்கடலும், யோகிபாபு - ஸ்ரீமதியின் ஈரத்தடங்களும் காட்சிப்படிமங்களாக தேங்குகின்றன. ஒருகட்டத்தில் படம் முடிந்துவிட்டது என நினைக்கும்போது, அது தொடர்ந்து மற்றொரு க்ளைமாக்ஸுக்காக நீளும்போது அயற்சியும் நீள்கிறது. கூடவே பிரசார நெடியும். இறுதியில் யோகிபாபு செய்யும் செயல்கள் செயற்கை. எதிர்மறை கதாபாத்திரம் ஒன்று திடீரென திருந்துவதற்கான அழுத்தமான பின்புலமில்லை. எனினும், ஒட்டுமொத்தமாக கவனிக்கும்போது, ‘பொம்மை நாயகி’ பார்த்து அனுபவிக்கும் எங்கேஜிங்கான திரையனுபவம்! பொம்மை நாயகி Review: ஓர் எளிய தந்தையின் போராட்டமும், திகட்டாத திரை அனுபவமும்! | Bommai Nayagi movie review - hindutamil.in
    1 point
  10. நீங்களே பிளவுகளை தூண்டிவிட்டுட்டு.. பிறர் பிளவை ஏற்படுத்துவதாக பாசாங்கு செய்வது அசிங்கம். உங்களுக்குள் சொந்த இனத்திற்காக ஒற்றுமையாக இருக்க முடியவில்லை.. சுயநல அரசியல் ஆதாயம் தான் முக்கியம் என்றிருக்கும் நிலையில்... ஒருவர் மற்றவரை சாட்டுச் சொல்லி உங்களை நீங்களே காட்டிக்கொடுக்காதீர்கள். மக்கள் உங்களை எல்லாம் பார்த்துக் காறித்துப்பும் நிலையில் இருக்கிறார்கள்.
    1 point
  11. பழ .கருப்பையாவின் இந்தப் பேச்சை வேறு பகுதியில் போட நினைத்தேன் ஆனால் பலர் தவற விட்டு விடுவார்கள் என்பதினால் இங்கு இணைக்கின்றேன்......அருமையான பேச்சு.....நன்றாக சிரிக்கலாம்.....! 😂
    1 point
  12. 1 point
  13. புலிகள் மாத்திரமல்ல சம்பந்தன் தொடங்கி EPRLF தவிர்ந்த சகல இயக்கங்களுமே இதை நிராகரித்திருந்தன. பின்னர் வரதராஜப்பெருமாளின் EPRLF கூட இது நமக்கு சரிவர மாட்டாதென்று முதலமைச்சர் பதவியையும் விட்டுவிட்டார்.
    1 point
  14. 4/1/2021ல் தான் அவுஸ்ரேலிய தேசிய கீதத்தில் இருந்த “ we are young and free“ என்ற வரியை “ we are one and free” என மாற்றினார்கள். ஏனெனில் அவுஸ்ரேலியா பூர்வீக குடிகளைக் கொண்ட பழைய தேசம் என்பதால்.. அதுபோல இந்த தினமும் ஒரு நாள் மாறும்☺️
    1 point
  15. எவ்வளவுக்கு தமிழரை கொல்கிறார்களோ அவ்வளவுக்கு பதவி, பதக்க தொகை அதிகரிக்கும்.
    1 point
  16. 'அயலி' போன்ற தொடர்களை கொண்டாட வேண்டும். பலரையும் பார்க்கத் தூண்டவேண்டும்.
    1 point
  17. அதுதான் சிங்களவன் அங்க இருக்கான் ... நாங்கள் பெட்டியை டிக்கிக்கு கீழே அமுக்கிவிட்டு விசுக்கோத்து சாப்பிடத்தான் லாயக்கு
    1 point
  18. சரத் வீரசேகர என்கிற விசரன் இன்று தெரிவித்த கருத்து. புலம்பெயர் தமிழரின் முதலீடுகளுக்காக நாட்டை காட்டிக்கொடுக்க முடியாதாம். முதலீடு செய்யுங்கள் என்று வலிந்திழுத்த ஒருவரை தேடுகிறேன். இலங்கை மீது உண்மையான பற்று இருந்தால் முதலீடுகளை செய்யலாம் ஆனால் அதிகாரங்களை தரமுடியாது. அதிகாரமற்ற அடிமைகள் நாட்டை முன்னேற்ற வேண்டும் என்று கேட்க இதுக்கு வெட்கம் இல்லையா? சிங்கள பவுத்தநாடு என முரசு கொட்டுபவர்கள் முன்னேற்றி பாக்கட்டும். சுற்றவர கைநீட்டி, பிச்சை யார் போடுவாரென காத்திருக்கிறார்கள் அதற்குள் திமிர்பேச்சு வேறு. போடுகிறவனையும் கடுப்பேத்தி அல்லாடப்போகிறார்கள். உண்மையிலேயே பதின்மூன்றை எதுவும் குறைபடாமல் நிறைவேற்றுபவர் ரணிலாக இருந்தால்; இந்த விசரை பிடிச்சு பத்துநாள் உள்ளே போடட்டும் பாப்போம்! நிஞாயத்தை கேட்ட மாணவரை உள்ளே போட முடியுமென்றால், ஏன் இது முடியாது? குறைந்தது மனநல காப்பகத்துக்கு என்றாலும் அனுப்பி பாக்கட்டும்! எல்லா இனவாதியையும் குரைக்க விட்டிட்டு, பதின்மூன்றை இல்லாதொழிக்கிற ஆலோசனையையும் சொல்லி ஒரு குறைப்பிரசவம் நடந்தேறப்போகிறது. அதற்கு இவ்வளவு ஆலாபனை, நிபந்தனை. வெளிநாடுகள் பங்குபற்றினால் ஒன்றும் வெருட்டல், உருட்டல், ஏமாற்றல் செய்ய முடியாது. சுதந்திர தினத்துக்கு இந்த ஏமாந்ததுகளை அழைத்து, சர்வதேசத்துக்கு படம் காட்டி, நாங்கள் எல்லோரும் ஒன்று பிச்சை போடுங்கோ என்று தட்டு நீட்ட எண்ணிவிட்டார் போலும்.
    1 point
  19. பையா இந்திய தேர்தலை பணம் தான் தீர்மானிக்குது. அதையும் மீறி ஆதரவு வர வேண்டுமென்றால் இன்னும் பல இடங்களிலும் பலருக்கும் வடக்கினரால் அடி விழணும். கூட்டங்களிலே வரும் சனத்தைப் பார்த்து நானும் ஆகா ஓகோ என்று எண்ணிய நாட்களும் உண்டு. ஆனாலும் நிலவரம் அப்படியல்ல என்பதை புரிந்து கொண்டேன்.
    1 point
  20. ச‌ரியா சொன்னீங்க‌ள் நானும் சோச‌ல் மீடியாக்க‌ளை பார்த்து வ‌ருகிறேன் ப‌ல‌ ஆயிர‌ க‌ண‌க்கில் ஆத‌ர‌வு க‌ருத்தை வெளிப் ப‌டுத்தின‌ம் இன்று புதிய‌த‌லைமுறையிலும் ந‌ல்ல‌ பேட்டி இதே வீரிய‌த்தோடு ப‌ய‌ணித்தால் வெற்றிய‌ நெருங்க‌லாம் அண்ணா ❤️🙏
    1 point
  21. இதை விட அப்பனான பிளானை எல்லாம் முன்னர் அடித்து நூத்திருக்கு இந்த நரி. 1. இவர்கள் ஆடுவதே ரணில் சொல்லித்தான். ஆளுநரை இப்போ ரணில் தூக்கி எறியலாம். இதைவிட ராஜபக்சக்கள் விரும்பாத பலதை, ஜனாதிபதி ஆனபின் செய்துள்ளார் நரியார். 2. இவர்களை வைத்து ஒரு அளவுக்கு மேல் போனால் தெற்கில் பூகம்பம் வெடிக்கும், இன கலவரம் வெடிக்கும் என சொல்லி, மேற்கை ஒரு வழிக்கு கொண்டு வந்து விடுவார். 3. பின்னர் இந்தியா, மேற்குக்கு, புலம்பெயர் தமிழருக்கு நான் 13 ஐ தருகிறேன் என விபூதி அடிப்பார். இப்போ வீரசேகர பகுதி கூச்சல் உச்ச ஸ்தாயியை அடையும். 4. இதை காரணம் காட்டி, 13 கொடுத்த கொஞ்ச நஞ்ச காணி, பொலிஸ் அதிகாரத்தையும், தேசிய ஆணைகுழுக்கள் மூலம் மீண்டும் பறித்து கொள்வார். 5. பிறகு என்ன 13 என்ற பெயரில், யானை தின்ற விளாம்பழமாக சதை எதுவும் இல்லாத ஒரு கோதை தமிழர் தலையில் கட்டி விட்டு, நோபல் பரிசையும் தட்டி செல்வார் நரியார். 6. அதிகார துஸ்பிரயோகம், காணி உரிமை, கல்வி கொள்கை, என நாம் இத்தனை காலம் போராடிய அத்தனை உரிமைகளும் பெயரளவில் உள்ள, ஆனால் எந்த நிஜ அதிகாரமும் அற்ற ஒரு மாகாணசபையை நாம் கட்டி அழுவோம். அரச காணி மறுபங்கீடு என்ற முகமூடியில் குடியேற்றம், தமிழர் நிலத்தை தமிழர் நிலமல்லாதது ஆக்கும் செயல்திட்டம் வேகம் பெறும். இது என் கணிப்பு.
    1 point
  22. ஓமோம். அம்மா தாயே நம்ம ஊரம்மா. ரொம்ப வெருட்டாதேங்கோ.
    1 point
  23. போன கிழமை யாழில் ரணில் 13 ஐ அமல் செய்வேன் அன்றில் நீக்குங்கள் என காட்டம் என்ற ரீதியில் ஒரு செய்தி வந்த போது, பல கருத்தாளர் ரணில் 13 ஐ தரப்போகிறார் எனவும், இன்னும் சிலர் ஒரு படி மேலே போய், யாரின் மத்தியஸ்தமும் இன்றி சிங்களவருடன் பேச வேண்டும் எனவும் எழுதினார்கள். நரி பேய்காட்டுகிறது என எழுதினேன் - யாரும் அதை சட்டை செய்யவில்லை. இன்று - ரணில் உத்தரவிட்டால் மறு நொடி பதவியை இழக்க கூடிய கிழக்கு ஆளுனர் மகாசங்கத்திடம் இப்படி கூறியுள்ளார். அப்போ இதை தூண்டி விடுபவர் யார் ? இத்தனை காலத்துக்கு பின்னும், பழுத்த தேசியவாதிகள் கூட ரணிலை/சிங்களத்தை புரிந்து கொள்ளவில்லை.
    1 point
  24. திமுக மைதானாத'டதில் ஆட்டநாயகன் சீமான்தான் சமுக ஊடகங்கள் எல்லாம் வைராலாகிறது சீமானின் பேச்சு.இதுவரை சீமானைக்காட்ட மறுத்த ஊடகங்களை அவர்களின் இட்த்திலேயே போய் சீமான் சிறப்பான சம்பவம் செய்திருக்கிறார்.திமுக எதிர்க்க எம்ஜியார் ஜெயலலிதாவுக்குப் பிறகு சீமான்தான் என ஆதிமுகவின் இரத்தத்தின் இரத்தங்கங் நினைத்தால் எல்லாம் தலைகீழாக மாறும்.
    1 point
  25. வாசித்து இணைத்தது நானுங்கோ! யான் ஜெ.மோவினதும், ராஜன் குறையினதும், ஷோபாசக்தியினதும் இன்னும் பலரினதும் எழுத்துக்களைப் படிப்பேன். ஆனால் எவரினதும் முகாமிலும் இல்லை.😎 மேலும் காந்தியின் சத்திய சோதனையை பதின்ம வயதில் படித்த பின்னர் அவர் மீது பிடிப்பும் இல்லை. அது வளரவளர வேறு சித்தாந்தங்களைப் பயின்று இன்னும் அதிகமாகியதுதான் உண்மை. இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்கமுயன்று, இப்போது இந்துத்துவ முகத்துடன் பிற மதத்தினரை ஒடுக்கும் வலதுசாரி பரப்பியத்தை வளர்த்துக்கொண்டுள்ளது. மோடி அதன் உந்துவிசையாக இருக்கின்றார்.
    1 point
  26. இது ஒரு மிகவும் தேவையான வேண்டுகோள். ரஷ்யா, புதினை பற்றி பொய்கள் புரட்டு கதைகளாலே இலங்கை தமிழர்கள் பலர் மூளை சலவை செய்யபட்டு மேற்குலகத்தில் வாழ்கிறார்கள். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கிய போது கோஷான் சே ஆச்சிரமத்தில் இருந்த காரணத்தால் எழுத முடியவில்லை. ரஞ்சித் அண்ணா தான் அப்போது எழுதி விளங்கபடுத்தினர். பின்பு அவர் வந்து எழுத தொடங்கினார். விசுகு அய்யாவும் இணையவன் அண்ணா நல்ல விளக்கங்களை தருகின்றனர். பலருக்கு உண்மைகளை தெரிந்து கொள்ளவும், சரியாக நேர்வழி சிந்திகவும் குழப்பமான தமிழ் உலகில் இவை உதவும். 💯✅ ஹிற்லர் நல்லவர், புதின் உத்தமர் என்பதால் உலகமே அவரை போற்றுகிறது, காந்தியை இந்தியர்களே மதிப்பதில்லை 😭
    1 point
  27. க்ரைம், த்ரில்லர் என்று அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்த தமிழ் வெப் தொடர்களை பார்த்து வெறுத்துப் போயிருந்த எனக்கு அயலி நல்லதொரு மாற்றாக வந்தது. கனதியான, ஆழமான கதையை மெலிதான நகைச்சுவை இழையோட எடுத்து இருக்கின்றார்கள். பெண்களின் கால்களுக்கிடையே குடும்பத்தின், இனத்தின், மதத்தின் கெளரவத்தை தேடும் ஆண்களாலான உலகுக்கு அயலி முன் வைத்திருக்கும் கேள்விகள் பல. இதில் 500 வருடங்களாக புழங்கும் பழக்கம் என்று காட்டப்படும் சில வழக்கங்களை இன்றும் கனடா போன்ற தேசங்களுக்கு வந்த பின்னும் காவித் திரிகின்றோம்.
    1 point
  28. அனுபவ ரீதியாகவா? கந்தர்மடத்தில் காதர் பாயா🤣
    1 point
  29. இதற்கு அனுபவரீதியாகவும் விஞ்ஞானரீதியாகவும் விளக்கமளிப்பதற்காக அறிவியலாளர்கள் @குமாரசாமியும் @தமிழ் சிறியும் விஞ்ஞானி @goshan_che அவர்களும் உங்களுக்கு விளக்கமளிப்பார்கள். இணைப்புக்கு நன்றி ஏராளன்.
    1 point
  30. அண்ணாமலையின் போராட்டமெல்லாம் வேடிக்கையான விஷயம் - சீமான் | Seeman | Kalaignar Pen Statue
    1 point
  31. அலரி மலரும் ஆயுதமும் அருகருகே…பார்வைக்கு மட்டும்..
    1 point
  32. மைத்திரி, மன்னிப்பு… என்றஒரு வார்த்தையை கூற, தேர்தல் என்ற ஒன்று வரவேண்டி உள்ளது. அரசியல்வாதிகள் எல்லோரும், கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகள்.
    1 point
  33. Last in first out என்ற முறையில் முதலில் இலங்கை தமிழர் உட்பட்ட தென்னாசியர் வெளியேற வேண்டும். பலஸ்தீனருக்கு யூதர் செய்வதும், அபர்ஜினிகளுக்கு தமிழர் உள்ளிட்ட குடியேறிகள் செய்வதும் ஒன்றுதான். ஈழதமிழ் பலஸ்தீன நண்பர்கள் சம்மேளனம் ரஷ்யாவின் இந்த நீதியான தீர்மானத்தை நான் கடுமையாக பரிந்துரை செய்கிறேன்.
    1 point
  34. அவுஸ்ரேலியாவை அடாத்தாக பிடித்து வைத்திருக்கும் வெள்ளை ஆங்கிலோ-சக்ஸன்🤣, ஐரோப்பிய வம்சாவழியினர், அவுஸ்திரேலியாவை அபர்ஜினிகள் கையில் கொடுத்து விட்டு வெளியேற வேண்டும்🤣. Last in first out என்ற முறையில் முதலில் இலங்கை தமிழர் உட்பட்ட தென்னாசியர் வெளியேற வேண்டும். பிறகு சீனர். கடைசியாக ஐரோப்பியர். பலஸ்தீனருக்கு யூதர் செய்வதும், அபர்ஜினிகளுக்கு தமிழர் உள்ளிட்ட குடியேறிகள் செய்வதும் ஒன்றுதான். இவ்வண். ஈழதமிழ் பலஸ்தீன நண்பர்கள் சம்மேளனம் மாஸ்கோ இரஸ்யா கிளைகள்: ரியாத், காபூல், பியொங்யாங், டெஹ்ரான்
    1 point
  35. ONE WAY – ஷோபாசக்தி அய்ரோப்பாவில் வசிக்கும் ஓர் ஈழத் தமிழருக்கு இலங்கையிலிருந்து அதிகாலையில் தொலைபேசி அழைப்பு வந்தாலே, அது மரணச் செய்தியை மட்டுமே கொண்டுவரும் என்பது புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆழமான நம்பிக்கை. அதனாலேயே, நான் இரவில் அலைபேசியை அணைத்து வைத்துவிட்டுத்தான் தூங்குவேன். நம்முடைய அன்புக்குரியவர்களின் மரணங்களைத் தள்ளிப்போடுவதற்காக, நாம் கோயில்களில் அர்ச்சனை செய்வது போல, மாந்திரீகத்தின் மூலம் கழிப்புக் கழிப்பது போல, அலைபேசியை அணைத்து வைப்பதும் மரணத்தைத் தடுத்துவிடும் என்றொரு நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டுவிட்டது. ஒரு வருடத்திற்கு முன்பாக, ஒரேயொரு இரவில் நான் அலைபேசியை அணைத்து வைக்க மறந்து தூங்கிவிட்டேன். அதிகாலை நான்கு மணிக்கு என்னை அலைபேசி அலறி எழுப்பி, அப்பாவின் மரணச் செய்தியை எனக்குச் சொல்லிற்று. என்னுடைய அப்பா கொஞ்சம் கோணல் புத்திக்காரர். அப்பாவித்தனத்தால் மட்டுமே நிரப்பப்பட்டுள்ள என்னுடைய அம்மா, ஒரு கிறுக்குத் தீவிரவாதியிடம் சிக்கிக்கொண்ட பணயக் கைதியைப் போலத்தான் அப்பாவிடம் சிக்கியிருந்தார். ஆனால், நான் அப்பாவை இலேசாக முறைத்தாலோ, வார்த்தையைச் சிதற விட்டாலோ அப்பாவுக்கு ஏவம் கேட்டு அம்மா என்னுடன் சண்டைக்கே வந்துவிடுவார். தன்னுடைய கணவர் ஓர் அருமையான புத்திசாலி, சுத்த வீரர் என்றெல்லாம் சொல்லி அம்மா என்னை எச்சரிப்பார். அவர்களுக்குக் கல்யாணமான புதிதில், அம்மாவை ‘அன்பே வா’ திரைப்படம் பார்ப்பதற்காக அப்பா அழைத்துப் போயிருக்கிறார். இடைவேளையின் போது, திரையரங்கில் இருந்த ஒரு வாலிபன் அம்மாவைப் பார்த்துச் சிரித்திருக்கிறான். அவன் தன்னுடன் பள்ளிக்கூடத்தில் அய்ந்தாம் வகுப்பு வரை – அம்மா அவ்வளவுதான் படித்திருக்கிறார் – ஒன்றாகக் கற்றவன் என்பதால் அம்மாவும் பதிலுக்குப் புன்னகைத்திருக்கிறார். இதைக் கவனித்த அப்பா உடனேயே அம்மாவைத் திரையரங்கை விட்டு வெளியே அழைத்துச் சென்று, நடுவீதியில் வைத்து அம்மாவின் கன்னத்தைப் பொத்தி அறைந்துவிட்டு “யாரடி அவன்?” என்று கேட்டிருக்கிறார். அத்தோடு முடிந்திருந்தால் இந்த நிகழ்ச்சியை நான் உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியமேயில்லை. ஆனால், எண்பத்தொரு வயதில் அப்பா இறந்துபோவதற்குச் சில நாட்களுக்கு முன்பாகக் கூட, அம்மாவின் கன்னத்தில் அறைந்துவிட்டு “யாரடி அவன் உன்னைத் தியேட்டரில் பார்த்து இளித்தவன்?” என்று கேட்டிருக்கிறார். தொடர்ந்து அய்ம்பது வருடங்களாக தோன்றும் போதெல்லாம் அப்பா இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டேயிருந்திருக்கிறார். கோணல் புத்தியிருந்தாலும் அப்பா காரியக்காரர் என்பதில் மறுப்பில்லை. புகையிலைத் தரகு வியாபாரத்தில் அவர் யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்குமாக அலைந்து திரிந்து, கொஞ்சம் கொஞ்சமாக எங்களது குடும்பத்தின் பொருளாதார நிலைமையைத் தூக்கி நிறுத்தினார். அவர் தரகு வியாபாரத்தில் சில மோசடிகளையும் செய்வார் எனப் பேச்சுண்டு. சில வழக்குகள் எங்களது வீடு தேடியே வந்துள்ளன. ஊருக்கு நடுவில் ஒரு பென்னம் பெரிய வெறுங் காணியை வாங்கி, அதைத் தென்னஞ்சோலையாக்கி, ஒரு வீட்டையும் கட்டியுள்ளார். முதலில் பிறந்தது நான்குமே பெண் குழந்தைகள் என்பதால், அவர்களுக்குக் கல்யாணம் செய்து வைப்பதற்காகக் கட்டுச்செட்டாகப் பணத்தைச் சேமித்து வைத்திருந்தார். அப்பாவின் முயற்சியோடு, எனது நான்கு அக்காமாருக்கும் அம்மாவின் அழகும் இயற்கையாகவே கிடைத்திருந்ததால், வெளிநாட்டு மாப்பிள்ளைகள் அக்காக்களைக் கொத்திக்கொண்டு போய்விட்டனர். முதலாவது அக்காவான திலகா பிரான்ஸுக்குப் போனதும், அவரது ஏற்பாட்டில் இரண்டாவது அக்காவான ரோகிணிக்கு மாப்பிள்ளை அமைந்தது. அக்காவை வழியனுப்பும் கொண்டாட்டத்தில் வீடே திளைத்திருந்தபோது தான், நான் சொல்லாமற்கொள்ளாமல் இயக்கத்திற்கு ஓடிப்போய், கொண்டாட்ட வீட்டை இழவு வீடு போல மாற்றிவிட்டேன். என்னுடைய அந்தச் செயலை அப்பா ஒருபோதும் மன்னிக்கவேயில்லை. கடைசி அக்காவான வேணி கல்யாணத்திற்காகப் பிரான்ஸுக்குக் கிளம்பியபோது, நான் சிறையில் இருந்தேன். வேணி அக்கா விமானம் ஏறுவதற்கு முன்பாக, அம்மாவோடு மகசீன் சிறைக்கு வந்து என்னைப் பார்த்துவிட்டே போனார். அப்போதெல்லாம் என்றாவது ஒருநாள் நான் சிறையிலிருந்து வெளியே வந்துவிடுவேன் என்று நானே நம்பவில்லை. எனக்கு எப்படியும் முப்பது வருடங்கள் சிறைத் தண்டனை கிடைக்கும் என்றுதான் எல்லோரும் சொன்னார்கள். அதுதான் அப்பா கோணல் புத்திக்காரரென்று சொன்னேனே… அவர் ஒரு தடவை கூட என்னைச் சிறையில் வந்து பார்க்கவில்லை. அம்மா தான் ஊரிலிருந்து யாராவது ஓர் உறவினரைத் துணைக்குக் கூட்டிக்கொண்டு, அவ்வப்போது வந்து என்னைப் பார்த்துவிட்டுப் போவார். அம்மா தன்னை வருத்திப் பிடித்த விரதங்களாலோ, கோயில் கோயிலாக வைத்த நேர்த்தியாலோ என்னவோ நான் சிறையிலிருந்து ஏழு வருடங்களிலேயே விடுதலையாகிவிட்டேன். வெளியே வந்ததும், பிரான்ஸிலிருந்த நான்கு அக்காமார்களும் ஆளுக்கொரு பங்கு பணம் போட்டு, பயண முகவர் மூலம் என்னைப் பிரான்ஸுக்கு அழைத்துக்கொண்டார்கள். நான் இங்கே வந்ததும், அவர்கள் ஒரே குரலில் எனக்கு ஒன்றைச் சொன்னார்கள்: “தம்பி! நாங்கள் உன்னுடைய வழக்குக்காக ஏழு வருடங்களாகப் பணம் செலவு செய்திருக்கிறோம். உன்னை இப்போது வெளிநாட்டுக்கும் அழைத்துவிட்டோம். அந்தப் பணத்தையெல்லாம் நாங்கள் உன்னிடம் திருப்பிக் கேட்கப் போவதில்லை. ஆனால், இனி அம்மாவையும் அப்பாவையும் கவனித்துக்கொள்வது உன்னுடைய பொறுப்பு.” நான் இயக்கமும் போராட்டமும் கசந்து போய்த்தான், என்னுடைய இருபத்தேழாவது வயதில் பிரான்ஸுக்கு வந்தேன். நான் சிறையிலிருந்த காலத்தில் இயக்கம் என்னை முழுமையாகக் கைவிட்டிருந்தது. என்னுடைய குடும்பமே என்னைக் காப்பாற்றிச் சிறையிலிருந்து மீட்டது. என்னுடைய மிகுதிக் காலத்தைக் குடும்பத்தின் நன்மைக்காகச் செலவழிப்பது என்ற எண்ணத்தோடு, நான் கடுமையாக உழைத்தேன். நான் பிரான்ஸுக்கு வந்து அய்ந்து வருடங்களான போது, பயண முகவர் மூலம் அம்மாவையும் அப்பாவையும் பிரான்ஸுக்கு அழைத்துக்கொள்ளுமளவிற்கு என்னிடம் பணம் சேர்ந்திருந்தது. அம்மாவையும் அப்பாவையும் அழைப்பதில் என்னுடைய அக்காமார்களும் ஆர்வமாகயிருந்தார்கள். ஆனால், கோணல் புத்திக்காரரான என்னுடைய அப்பா வெளிநாட்டுக்கு வர மறுத்துவிட்டார். “என்னால் உங்களைப் போல அகதியாக மானம் கெட்டு வாழ முடியாது. வேண்டுமானால் அம்மாவைக் கூப்பிட்டுக்கொள்ளுங்கள்!” என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். அப்பாவைத் தனியே விட்டுவிட்டு அம்மா வரமாட்டார் என்பதை விளக்கத் தேவையில்லை. அவர்களை அழைப்பதற்காகச் சேர்த்து வைத்திருந்த பணத்தில்தான், என்னுடைய மச்சாள் முறையான செவ்வந்தியை இலங்கையிலிருந்து பயண முகவர் மூலம் பிரான்ஸுக்கு வரவழைத்துத் திருமணம் செய்துகொண்டேன். என்னுடைய முழு வாழ்க்கையிலும் நான் செய்த ஒரேயொரு புத்திசாலித்தனமான செயல் அதுதான். கல்யாணங்களின் போது ‘இன்பங்களிலும் துன்பங்களிலும் ஒருவரையொருவர் பிரியோம்’ எனச் சாட்டுக்கு உறுதிமொழி எடுப்பார்கள். ஆனால், செவ்வந்தி மச்சாள் அந்த உறுதிமொழியை இப்போதுவரை தீவிரமாகக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறாள். அப்பா இறந்த போது, தூரத்து உறவினர் தான் அப்பாவுக்குக் கொள்ளி வைக்க வேண்டியதாகப் போய்விட்டது. கொள்ளியிட உரித்துள்ள நானும், அக்காக்களும் பிரான்ஸில் அகதி நிலையில் வசிப்பதால் எங்களிடம் இலங்கைக் கடவுச்சீட்டுக் கிடையாது. எங்களுக்கு பிரான்ஸ் அரசாங்கம் வழங்கியிருக்கும் அகதிகளுக்கான கடவுச்சீட்டில் <இலங்கைக்குப் பயணம் செய்ய அனுமதியில்லை> என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அய்ந்து பிள்ளைகளைப் பெற்றும் அப்பா பிள்ளைகுட்டி இல்லாதவரைப் போல அநாதையாக இறந்துவிட்டார். அம்மாவுக்கு இப்போது எண்பது வயதாகிவிட்டது. முதுமையின் கனியாகிய நோய்கள் அவரில் பூரணமாகப் படர்ந்திருந்தன. அப்பாவுக்கு ஏற்பட்ட கதிதான் அம்மாவுக்கும் ஏற்படும் என்ற பதற்றத்திலேயே நான் இரவுகளில் அலைபேசியை அணைத்து வைத்துவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தேன். ஆனால், பகலிலும் எனக்கொரு கெட்ட சேதி வந்தது. சமையலறைப் பானைக்குள் மறைந்திருந்த பாம்பு அம்மாவைத் தீண்டியதால், அவர் யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று பெரியக்கா எனக்கு அலைபேசியில் சொன்னதும், நான் உடனேயே அம்மாவின் அலைபேசிக்கு அழைத்தேன். அம்மா ஆஸ்பத்திரியிலிருந்து என்னிடம் பேசிய முதல் விஷயமே, தன்னை உடனடியாகப் பிரான்ஸுக்கு அழைத்துக்கொள்ள வேண்டும் என்பதாகயிருந்தது. அப்பா தவறிப் போன சில நாட்களிலேயே, பிள்ளைகள் நாங்களும் இதுபற்றி யோசிக்கத் தொடங்கியிருந்தோம். ஆனால், அம்மாவை பிரான்ஸுக்கு அழைத்துக்கொள்வதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருந்ததால் அது யோசனை அளவிலேயே நின்றுவிட்டது. இப்போது அம்மா அவராகவே வாய்விட்டுக் கேட்டுவிட்டார். அந்த நடைமுறைச் சிக்கல்களைப் பற்றிச் சொன்னால் உங்களாலேயே சரிவரப் புரிந்துகொள்ள முடியாத போது, படிப்பறிவற்ற, உலகமறியாத என்னுடைய அம்மா எப்படிப் புரிந்துகொள்வார் சொல்லுங்கள்! அகதிகளான நாங்கள் ‘ஸ்பொன்ஸர்’ செய்து அம்மாவை அழைக்க முடியாது. பயண முகவர் மூலம் அம்மாவைச் சட்டவிரோதமான வழிகளில் தான் பிரான்ஸுக்கு வரழைக்க முடியும். அதைத் தவிர வேறெந்த வழியும் எங்கள் முன் கிடையவே கிடையாது. ஆனால், இந்த வயதில் அம்மாவை எப்படி ஒரு சட்டவிரோதப் பயணத்திற்குள் நாங்கள் தள்ளிவிட முடியும். அந்தப் பயணத்தில் பல பனிப்பாலைகளையும் குளிராறுகளையும் கால்நடையாகவே கடக்க வேண்டியிருக்கும் அல்லது ஏதாவது ஒரு திருட்டுக் கடவுச்சீட்டிலோ, போலி விசாவிலோ அம்மா ஆகாய மார்க்கமாகப் பயணிக்க வேண்டியிருக்கும். வழியில் ஏதாவது ஒரு விமானநிலையத்தில் அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டால் சிறையில் போட்டுவிடுவார்கள். பெரியக்காவின் கணவர் ஒரு யோசனையைச் சொன்னார். ஒருமுறை சுற்றுலா விசாவுக்கு முயற்சித்துப் பார்க்கலாம். கிடைத்துவிட்டால், அம்மா பிரான்ஸுக்கு வந்ததும் இங்கே அகதியாகப் பதிவு செய்துவிடலாம். அம்மாவைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு முழுவதுமாக என்னிடமே கொடுக்கப்பட்டிருந்ததால், நான்தான் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தேன். அம்மா ஒரளவு உடல்நலம் தேறியதும், அவருக்குத் தெரிந்த ஒருவரின் உதவியோடு கொழும்புக்குச் சென்று, பிரஞ்சுத் தூதரகத்தில் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பித்தார். நேர்முக விசாரணையில் தூதரக அதிகாரி ஒரேயொரு கேள்விதான் கேட்டாராம்: “நீங்கள் முதியவராக இருக்கிறீர்கள். உங்களை அலையவைக்க நான் விரும்பவில்லை. உங்களுக்கு மூன்று மாதங்கள் விசா வழங்கிவிடலாம். ஆனால், மூன்று மாதங்கள் முடிந்ததும் நீங்கள் மறுபடியும் இலங்கைக்குத் திரும்பி வருவீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?” நான் இந்தக் கேள்வியை எதிர்பார்த்திருந்தேன். எனவே நேர்முக விசாரணைக்கு முன்பாகவே, நான் அம்மாவை இது விஷயமாக எச்சரித்திருந்தேன். எனவே அம்மா தூதரக அதிகாரியின் கேள்விக்குப் பதிலாக “ஊரில் நிலமும் வீடும் உள்ளன. அவற்றை விட்டுவிட்டு நான் பிரான்ஸிலேயே தங்கிவிடமாட்டேன்” என்றிருக்கிறார். அதற்கு அந்த அதிகாரி “யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏராளமான நிலங்களும், வீடுகளும் கைவிடப்பட்டுக் கிடக்கின்றன. அவற்றின் உரிமையாளர்கள் அய்ரோப்பாவுக்கும் கனடாவுக்கும் சென்றுவிட்டுத் திரும்பி வரவேயில்லை” எனச் சொல்லிவிட்டு, அம்மாவின் விசா விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டார். அந்த நிராகரிப்பு எனக்கு அம்மா மீதுதான் கோபத்தைக் கிளப்பிவிட்டது. பதினைந்து வருடங்களுக்கு முன்பே, நான் அழைத்தபோது அம்மாவும் அப்பாவும் கிளம்பி இங்கே வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். சட்டவிரோதப் பயண முகவர் மூலம் பயணம் செய்யுமளவுக்கு அப்போது அம்மாவுக்குத் தெம்பிருந்தது. இங்கே வரும் வழிகளும் அவ்வளவு கடினமாக இருக்கவில்லை. நிறையச் சனங்கள் பயண முகவர்கள் ஏற்பாடு செய்துகொடுத்த போலி விசாக்களோடு கொழும்பில் விமானம் ஏறி, பாரிஸ் விமான நிலையத்தில் இறங்கி அகதித் தஞ்சம் கேட்டார்கள். அது இலங்கையில் போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த காலம் என்பதால், இலங்கையிலிருந்து வரும் அகதிகளைப் பெரிய கெடுபிடிகளில்லாமல் பிரான்ஸ் ஏற்றுக்கொண்டிருந்தது. இப்போதோ அங்கே போரும் முடிந்துவிட்டது. அம்மாவும் பழுத்து முதுமையடைந்து நோயாளியாகிவிட்டார். ஒருநாளைக்குப் பன்னிரண்டு மாத்திரைகளைச் சாப்பிடுகிறார். பிரான்ஸின் பனிக்குள்ளும் குளிருக்குள்ளும் இன்னும் எத்தனை வருடம்தான் அவர் சீவித்துவிடுவார்? வெட்ட வெட்டத் தழைக்கும் வாழைமரத்தைக் கொண்டுவந்து நட்டால் கூட அது இந்தக் காலநிலையில் செத்துவிடுகிறதே. இலங்கையின் வெயிலும், இயற்கையோடு இணைந்த வாழ்க்கையும் அம்மாவுக்கு அதிக ஆயுளைக் கொடுக்கக்கூடும். இயலாமையால் என்னுள் எழுந்த தாழ்வுணர்ச்சியை விரட்டுவதற்காக, நான் இப்படிக் காரணங்களை வலிந்து தேடிக் கோபப்பட்டுக்கொண்டிருந்தேன். ஆனால், பிரான்ஸுக்கு வந்தே தீருவது என்பதில் அம்மா மிக உறுதியாகயிருந்தார். அதற்காக அவர் சொன்ன காரணங்களில் ஏதொன்றையும் என்னால் மறுத்துப் பேசிவிடவே முடியாது. “கவனமாகக் கேள் தம்பி! இந்த ஊர் காடாகி வருடங்களாகிவிட்டன. பாம்பும், பூரானும், விசர் நாய்களும்தான் இங்கே நாட்டாமை. ஊரில் பத்து வீடுகளைத் தவிர எல்லா வீடுகளும் பாழடைந்து கிடக்கின்றன. யுத்தத்தின் போது, இங்கிருந்து தப்பிச் சென்றவர்கள் ஊருக்குத் திரும்பி வரவேயில்லை. எங்களுடைய வீட்டைச் சுற்றி அரைக் கிலோமீற்றர் தூரத்திற்கு யாருமேயில்லை. மின்சாரம் இரவில் வராமல் பகலில் மட்டுமே எப்போதாவது வருகிறது. இந்த வீட்டில் நோயாளிக் கிழவியான நான் எப்படித் தனித்திருக்க முடியும்? கிழக்குத் தெருவில் என்னைப் போலவே தனியாக வசித்துவந்த கிழவியின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்கள். செய்தது கொள்ளையர்களா? ஆவா குறூப்பா? ஆர்மியா? நேவியா? என்று யாருக்குமே தெரியாது. கிழக்குத் தெருவுக்கும் மேற்குத் தெருவுக்கும் பெரிய தூரமா என்ன? எப்போது வேண்டுமானாலும் எனக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம்.” “அம்மா…நீங்கள் கொஞ்ச நாட்களுக்கு சொந்தக்காரர்கள் யாருடைய வீட்டிலாவது போய் இருக்கலாமே?” “யார் வீட்டுக்குப் போவது? உன்னுடைய அப்பா எல்லோருடனும் பகையைத் தேடி வைத்துவிட்டுத்தானே போயிருக்கிறார். ஆனால் ஒன்று… அவராகச் சண்டையை ஒருபோதும் தொடக்கியதில்லை. சரி… இப்போது நான் போய் யாராவது சொந்தக்காரர்களோடு இருந்தாலும், அவர்கள் என்னை நன்றாக வைத்துப் பார்ப்பார்களா? என்னிடம் காசு பிடுங்கத்தான் பார்ப்பார்கள். தம்பி! இது நீயிருந்த இலங்கையில்லை. எல்லோருமே வெளிநாட்டுப் பணத்தில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். “இப்போது இங்கே வருவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது அம்மா. சட்டங்களை இறுக்கிவிட்டார்கள்… உங்களுக்கும் வயதாகிவிட்டது.” “அதெல்லாம் ஒன்றுமில்லை. சென்ற மாதம்தானே செல்லையாவின் பெண்சாதியைப் பிள்ளைகள் கனடாவுக்குக் கூப்பிட்டார்கள். அவள் எனக்கு இரண்டு வயது மூப்பு. மனுசி சக்கர நாற்காலியில்தான் உலாவியது. எனக்கு இன்னும் இரண்டு கால்களிலும் தெம்புள்ளது. நான்தான் தனியாகக் கிணற்றில் தண்ணீர் அள்ளுகிறேன், வளவில் தேங்காய் பொறுக்கி வைக்கிறேன், மழை வெள்ளம் வீட்டுக்குள் ஏறும்போது, நான்தான் தனியாகவே சிரட்டையால் அள்ளி அள்ளித் தண்ணீரை வெளியேற்றுகிறேன். பஸ் பிடித்துப் பத்து மைல்கள் பயணம் செய்து பெரியாஸ்பத்திரிக்குப் போகிறேன். ஆனால், இன்னும் எத்தனை காலத்திற்கு என்னால் இப்படித் தனியாக இருக்க முடியும் தம்பி? எனக்குப் பதினைந்து பேரப் பிள்ளைகள்! ஒருவரது முகத்தைக் கூடத் தொட்டுப் பார்க்காமல் நான் செத்துப்போனால், என்னுடைய உடம்பு தான் வேகுமா? எனக்குக் கொள்ளி வைக்க நீ தான் வருவாயா?” அக்காமார்கள் முழுவதுமாக அம்மாவின் பக்கமே நின்றார்கள்: “தம்பி! அம்மா இதுவரை எங்களிடம் பணம் அனுப்பு என்று ஒரு ஈரோ கூடக் கேட்டதில்லையே. நாங்களாக அனுப்பும் பணத்தைக்கூட அவர் தாராளமாகச் செலவு செய்து அனுபவிக்காமல், சிக்கனமாகச் சேர்த்துத்தான் வைத்திருக்கிறார். அவருடைய கடைசிக்கால விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால், நாங்கள் அவருக்குப் பிள்ளைகளாக இருக்கத் தகுதியற்றவர்கள். தம்பி… உன்னிடம் பணம் போதாமலிருக்கிறது என்றால் நாங்களும் தருகிறோம். அம்மா வந்ததும் நீ தான் அவரை வைத்துப் பராமரிக்க நேரிடும் என்று தயங்காதே. நாங்கள் நான்கு பெண் பிள்ளைகள் இருக்க, மருமகளின் பொறுப்பில் அவரை விட்டுவிட மாட்டோம்.” அம்மாவை வரவழைப்பதற்கு நான்தான் ஏதோ முட்டுக்கட்டை போடுகிறேன் என்பது போலவே அக்காமார்கள் பேசியது எனக்கு இன்னும் கோபத்தைக் கூட்டியது. அந்த ஆத்திரத்தில் அன்றைக்கே ஒரு பயண முகவரைத் தேட ஆரம்பித்தேன். என்னுடன் இயற்கை உணவு அங்காடியில் வேலை செய்யும் கைலாசநாதன் உதவிக்கு வந்தார். அவரது நண்பரொருவர் கொழும்பில் பயண முகவராகயிருக்கிறார் என்று சொல்லித் தொலைபேசியில் அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த ஏஜெண்ட் கேட்ட தொகை மிக அதிகம் என்றாலும், நான் ஒப்புக்கொண்டேன். விமானப் பயணம்தான். ஏஜெண்டுக்கு முதலில் பாதிப் பணத்தைச் செலுத்துவதென்றும், அம்மா பிரான்ஸ் வந்து இறங்கியதும் மீதிப் பணத்தைக் கொடுப்பதென்றும் பேசிக்கொண்டோம். அக்காமார்களிடம் செப்புச் சல்லி வாங்கவும் நான் விரும்பவில்லை. என்னுடைய வங்கிக் கணக்கில் இருந்த பணத்தையெல்லாம் வழித்துத் துடைத்துப் பாதித் தொகையை ஏஜெண்டுக்குச் செலுத்தினேன். மீதித் தொகையைக் கட்டுவதற்கு செவ்வந்தியின் நகைகள் இருக்கின்றன. பணம் கிடைத்ததும், ஒரே வாரத்தில், அம்மாவை டெல்லிக்கு அழைத்துச் சென்ற ஏஜெண்ட் அங்கிருந்து அம்மாவைப் பாரிஸுக்கு அனுப்ப ஓர் இந்தியக் கடவுச்சீட்டைத் தயார் செய்தான். டெல்லியிலிருந்து பிரான்ஸுக்கு வரும் முதியவர்களால் நிரம்பப்பெற்ற சுற்றாலாக் குழுவுக்கு நடுவில் அம்மாவைத் தந்திரமாகக் கலந்துவிட்டான். இந்தத் தந்திரத்தை மிகப் பழமையானதும் எளிமையானதுமான மறு தந்திரத்தால் டெல்லி விமான நிலைய அதிகாரிகள் உடைத்துவிட்டார்கள். அவர்கள் அம்மாவிடம் ஒன்று…இரண்டு…மூன்று எனப் பத்துவரை விரல்விட்டு எண்ணிக் காட்டுமாறு கேட்டிருக்கிறார்கள். அம்மாவும் விரல்களை ஒவ்வொன்றாக மடக்கி எண்ணிக் காட்டியிருக்கிறார். இந்தியர்கள் இப்படி எண்ணும் போது, எங்களைப் போல விரல்களை ஒவ்வொன்றாக மடக்காமல், விரல்களை ஒவ்வொன்றாக விரித்தே எண்ணுவார்களாம். எனவே அம்மா இந்தியரல்ல என்பதை அதிகாரிகள் சுளுவாகக் கண்டுபிடித்துவிட்டார்கள். அம்மாவை டெல்லியிலுள்ள குடிவரவுச் சிறைக்கு அனுப்பிவிட்டார்கள் என்ற தகவலை ஏஜெண்ட் தயக்கத்தோடு தொலைபேசியில் என்னிடம் சொன்னபோது, நான் படு தூஷணத்தால் அவனைத் திட்டித் தீர்த்தேன். எண்பது வயது மூதாட்டியொருவர் மொழி தெரியாத நாட்டில், சிறையில் அடைக்கப்பட்டிருப்பதைச் சற்று எண்ணிப் பாருங்கள். உங்களுக்கு என்னைவிட அதிக ஆத்திரம் ஏற்படுகிறதா இல்லையா! அம்மா சிறையிலிருக்கும் செய்தியை நான் அக்காமார்களிடம் மறைத்துவிட்டேன். அவர்களால் இந்தச் செய்தியைத் தாங்கவே முடியாது. அவர்களது துக்கமெல்லாம், நான்தான் பயண ஏற்பாட்டில் கவனமின்றித் தவறிழைத்துவிட்டேன் என்பது போல என்மீதே கோபமாகத் திரும்பும். என்னுடைய மொத்தக் கோபமும் அந்த முட்டாள் ஏஜெண்டை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த கைலாசநாதன் மீது திரும்பியது. அவர் எனக்கு உதவி செய்ய முன்வந்ததால், என்னிடம் தும்பு பறக்க ஏச்சு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. எனினும் இனிமையான குணமுள்ள அந்த மனிதர் என்னுடைய கவலையையும் கோபத்தையும் புரிந்துகொண்டு, முட்டாள் ஏஜெண்டைப் பாடாகப் படுத்தி, அம்மாவை அய்ந்தே நாட்களில் சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்துவிட்டார். அம்மா சிறையிலிருந்து வெளியே வந்து, தொலைபேசி வழியாக என்னிடம் பேசும் போது, நான் உண்மையிலேயே குழறி அழுதுவிட்டேன். முட்டாள் ஏஜெண்ட் மறுபடியும் ஒரு முயற்சியை மும்பை விமான நிலையம் வழியாக எடுப்பதாகச் சொன்னான். “ஒரு மயிரும் வேண்டாம்! அம்மாவைப் பத்திரமாக ஊருக்கு அழைத்துச் சென்றுவிடுங்கள்” என்றேன். அப்படியானால் தனக்குக் கொடுத்த பாதிப் பணத்தைத் திருப்பித் தர முடியாது என்றான். “வேண்டாம்… அது எனக்கு வேண்டாம்! அம்மாவைப் பத்திரமாக இலங்கைக்கு அழைத்துச் சென்றால் போதும்” எனச் சொல்லிவிட்டேன். அடுத்த வாரம், அம்மா இலங்கையிலிருந்து தொலைபேசியில் அழைத்துப் பேசினார்: “தம்பி! இந்தியா வழியாக வருவது கொஞ்சம் கஷ்டம் போலல்லவா இருக்கிறது… இப்போது உக்ரேன் வழியாகத் தான் சனங்கள் பிரான்ஸுக்கு வருவதாக தொலைக்காட்சியில் சொல்கிறார்கள்…” “அம்மா… அங்கே கடுமையான சண்டை நடந்துகொண்டிருக்கிறது” என்றேன். “அது பரவாயில்லைத் தம்பி… நான் பார்க்காத சண்டையா! நீ வீணாகப் பயப்படாதே! நாளைக்கே சாகப்போகிற கிழவியான என்னை அவர்கள் ஒன்றும் செய்யமாட்டார்கள்” என்றார் அம்மா. அம்மா ஒவ்வொரு நாளுமே எங்கள் எல்லோரையும் வாட்ஸப்பில் கூப்பிட்டுப் பேசிக்கொண்டேயிருந்தார். தன்னால் ஒரு நிமிடம் கூட இலங்கையில் இருக்க முடியாது என்று திரும்பத் திரும்பச் சொன்னார். “காசு பணம் இருந்து என்ன பலன்? சாப்பாட்டுச் சாமான்கள் எதுவும் கிடைப்பதில்லையே! சனங்கள் இங்கே பஞ்சத்தில் சாகப் போகிறார்கள். சீனாக்காரன் கொடுக்கும் அரிசிப் பசையையும், குப்பையில் விளையும் கீரையையும் சாப்பிட்டே இங்கே வாழ வேண்டியிருக்கிறது” என்றார். இதைக் கேட்ட பின்பும் நிம்மதியாக ஒருபிடி சோறு தின்பதற்குப் பிள்ளைகளான எங்களுக்கு எப்படி மனம் வரும்! எனக்கு அங்காடியில் வேலை ஓடவேயில்லை. அம்மாவைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். நிராசையால் ஏங்கியே என்னுடைய அம்மா அநாதையாகச் செத்துவிடுவாரா என்றெல்லாம் யோசித்து எனது தலை கொதித்துக்கொண்டிருந்தது. நான் தட்டுத் தடுமாறிக்கொண்டிருப்பதை யூதரான முதலாளி கவனித்துக்கொண்டிருந்தார். என்னைக் கூப்பிட்டு, ஒலிம்ப் அம்மையாரிடமிருந்து அழைப்பு வந்திருப்பதாகச் சொல்லி, அம்மையார் கேட்டிருக்கும் இயற்கை உணவுப் பொருட்களை எடுத்துச் சென்று, அவரது வீட்டில் கொடுத்துவிட்டு வருமாறு சொன்னார். நான் பட்டியலிலுள்ள பொருட்களை எடுத்துத் தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளிவாறே ஒலிம்ப் அம்மையாரின் வீட்டை நோக்கி நடந்தேன். அங்கே போவதென்றாலே என்னிடம் ஓர் உற்சாகம் ஒட்டிக்கொள்ளும். இப்போது உற்சாகம் ஏற்படவில்லை என்றாலும் மனதிற்குச் சற்று ஆறுதலாகவேயிருந்தது. நான் இரண்டு வருடங்களுக்கு முன்பாக, இந்த யூதரின் அங்காடியில் வேலைக்குச் சேர்ந்த போது, என்னுடைய முதல் வேலையே ஒலிம்ப் அம்மையாரின் வீட்டுக்குப் பொருட்களைத் தள்ளுவண்டியில் எடுத்துச் செல்வதாகவே இருந்தது. அவரது வீடு அதிக தூரத்திலில்லை. நான் வேலைக்கு வந்து இறங்கும் ட்ராம் தரிப்பிடத்திற்கு, எதிரேயிருந்த சிறிய காணித் துண்டிலேயே அவரது பழமை வாய்ந்த வீடு இருந்தது. பிரஞ்சு – கோர்ஸிகா பெற்றோருக்குப் பிறந்த ஒலிம்ப் அம்மையாருக்குக் கிட்டத்தட்ட என்னுடைய அம்மாவின் வயதுதான் இருக்கும். அம்மாவைப் போலவே இவரும் தனிமையிலேயே வசிக்கிறார். சராசரி உயரம் உள்ளவர் என்றாலும், அவரது முதுகில் பெரிதாகக் கூன் விழுந்திருப்பதால், சிறிது குள்ளமாகத் தோற்றமளிப்பார். முகத்தில் இலேசாகத் தாடி மீசை அரும்பியிருக்கும். உச்சந்தலையில் சிறிதளவு வழுக்கையுமுண்டு. ஒலிம்ப் அம்மையார் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. உளவியலில் பட்டப் படிப்புப் படித்தவராம். அவரது வீடு முழுவதும் கருப்பு அட்டை போட்ட தடிமனான புத்தகங்கள் எல்லா இடங்களிலுமே அடுக்கப்பட்டிருக்கும். நான் ஒலிம்ப் அம்மையாரின் வீட்டுக்குச் சென்ற முதல் நாளிலேயே, அம்மையார் தன்னுடைய சாம்பல் நிறச் சிறிய கண்கள் ஒளிர என்னைப் பார்த்துவிட்டு, வீட்டினுள்ளே அழைத்து உட்காரவைத்துப் பேசினார். “அழகிய இளைய மனிதனே! நீ ஸ்ரீலங்கனா?” “ஆம்… அம்மா” என்றேன். அதன் பின்பு, நான் அங்கே பொருட்களை விநியோகிக்கப் போய்வரும் போதெல்லாம் ஒலிம்ப் அம்மையார் என்னிடம் சிறுகச் சிறுகச் சொல்லியது இவைதான்: “அதுதான் மகனே! அப்போது இரண்டாம் உலகப் போர் முடிந்து சில வருடங்களே ஆகியிருந்தன. பிரான்ஸ் நாசிப் படையிடமிருந்து விடுதலை பெற்றுச் செழிக்கத் தொடங்கிய காலம். அப்போதும் எங்களது குடும்பம் இந்த வீட்டில்தான் வசித்தது. என்னுடைய அப்பா போரில் இறந்துபோயிருந்தார். அம்மா முரடனான ஒரு கிரேக்கனைச் சிநேகிதம் செய்துகொண்டார். அப்போது எனக்குப் பதின்மூன்று வயது. எங்கிருந்து வந்ததெனத் தெரியாத ஓர் இலங்கைக் குடும்பம் இந்த ஊரில் குடியேறியது. அந்தக் குடும்பம் சிங்களக் குடும்பமா? தமிழ்க் குடும்பமா? அல்லது கலப்புக் குடும்பமா? என்பது கூட எனக்குத் தெரியாது. அந்தக் குடும்பத்தில் என்னுடைய வயதையொத்த ஒரு பையன் இருந்தான். அவன் எங்களுடைய பாடசாலையில்தான் தான் சேர்க்கப்பட்டான். அவனுக்கு ஆரம்பத்தில் ஒரு பிரஞ்சு வார்த்தை கூடத் தெரியாது. ஆனால், போர்த்துக்கேய மொழியை ஓரளவு பேசுவான். நானும் அதை ஓரளவு புரிந்துகொள்வேன். அவனுடைய பெயர் தோமஸ். நான் சீக்கிரமே வெட்க சுபாவமுள்ள அந்தக் கறுப்பு அழகனிடம் காதல் வயப்பட்டேன். அப்போது இந்த ஊர் ஒரு சிறு கிராமம். காடு பூத்துக் கிடக்கும். இப்போது போல் அல்லாமல் அப்போது நதியில் ஏராளமாக நீர் வரும். புல்வெளிகளில் குதிரைகள் நிதானமாக மேய்ந்துகொண்டிருக்கும். நானும் தோமஸும் காடுகளுக்குள்ளும் நதியிலும் விளையாடித் திரிந்தோம். ஒரு வேடிக்கையான விஷயம் சொல்லட்டுமா? தோமஸுக்கு முத்தமிடக் கூடத் தெரிந்திருக்கவில்லை. நான்தான் அதை அவனுக்குக் கற்றுக் கொடுத்தேன். எங்களுடைய உறவு அம்மாவுக்குத் தெரிய வந்தபோது, அவர் என்னைக் கடுமையாகக் கண்டித்தார். அவரது காதலனான கிரேக்கன் என்னை முரட்டுத்தனமாக அடித்தான். அப்போதும் நான் தோமஸைச் சந்திப்பதை நிறுத்தவில்லை. ஒருநாள் அந்த இலங்கைக் குடும்பமே இந்த ஊரிலிருந்து திடீரெனக் காணாமற் போய்விட்டது. இரண்டு மாதங்கள் மட்டுமே நீடித்த அந்த உறவை என்னால் எப்போதும் மறக்கவே முடியாது. என்றாவது ஒருநாள் நான் இலங்கைக்குச் செல்வேன் என்ற முட்டாளத்தனமான எண்ணமொன்று இந்தக் கிழவியின் மனதிற்குள் ஒளிந்து கிடப்பதை நான் உன்னிடம் மறைக்கத் தேவையில்லைத்தானே மகனே!” ஒலிம்ப் அம்மையாரின் வீடடில் இலங்கை சம்பந்தமான நூல்கள், படங்கள், சிலைகள், முகமூடிகள், வரைபடங்கள் எல்லாமே இருந்தன. இலங்கையைக் குறித்துப் புத்தகங்கள் வழியாக அவர் ஏராளமாகப் படித்திருந்தார். என்னிடம் பேசுவதால் அவருக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது என்பதை அவர் சொல்லிக்கொண்டேயிருப்பார். ஆனால், நான் வேலைக்குத் திரும்பாமல் ஒலிம்ப் அம்மையாரது வீட்டில் மெனக்கெடுவது என்னுடைய முதலாளிக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. நான் ஒலிம்ப் அம்மையாரை ஒருநாள் எனது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து, வகைவகையான இலங்கை உணவுகளைப் பரிமாறினேன். காரத்தால் அவருக்குக் கண்களில் நீர் கசிந்த போதும், தட்டில் வைத்த எதையும் மீதம் வைக்காமல் இரசித்துச் சாப்பிட்டு முடித்தார். அது பிரஞ்சுக்காரர்களின் வழக்கம். “அம்மா… நான் ஒருநாள் உங்களை நிச்சயமாக இலங்கைக்கு அழைத்துச் செல்வேன்” என்று நான் ஒலிம்ப் அம்மையாரிடம் அடிக்கடி சொல்வேன். அவர் சிறு குழந்தையைப் போலப் புன்னகைப்பார். எனக்கே இலங்கைக்குப் போக வழியில்லை என்பது ஒலிம்ப் அம்மையாருக்குத் தெரியாது. நான் தள்ளுவண்டியோடு ஒலிம்ப் அம்மையாரின் வீட்டுக்குள் நுழைந்ததுமே, அவர் கேட்ட முதல் கேள்வி “ஸ்ரீலங்காவில் உன்னுடைய அம்மா நலமாகயிருக்கிறாரா? கொழும்பில் ஜனாதிபதி மாளிகையை மக்கள் கைப்பற்றி விட்டார்களாமே. நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம், அடிதடி என்று பத்திரிகையில் படித்தேன். உன்னுடைய கிராமத்தில் பிரச்சினை ஏதும் இல்லையல்லவா?” நான் உங்களிடம் உண்மையை மட்டுமே சொல்கிறேன்! ஒலிம்ப் அம்மையார் ‘பிரச்சினை’ என்று சொன்ன அந்த விநாடியில்தான் என்னுடைய உள்ளத்தில் ஓர் எண்ணம் திடீரெனப் பளிச்சிட்டு ஓடியது. அதை ஒலிம்ப் அம்மையாரிடம் சொல்லலாமா வேண்டாமா எனக் கடுமையான மனப் போராட்டம் எனக்குள் நடந்துகொண்டிருந்த போதே, என்னுடைய பரிதாபத்திற்குரிய நாவு பேசிற்று: “அம்மா உங்களால் எனக்கொரு உதவி செய்ய முடியுமா?” “சொல்லு மகனே! நிச்சயம் செய்வேன்!” “இப்போது இலங்கையில் நிலைமை அவ்வளவு சரியில்லை. பஞ்சம் பரவிக்கொண்டு வருகிறது. மருந்துப் பொருட்களும் தட்டுப்பாடு. நோயாளியான என்னுடைய அம்மாவை பிரான்ஸுக்கு அழைத்து, கொஞ்ச நாட்களுக்கு என்னுடன் வைத்திருக்க விரும்புகிறேன் அம்மா…” “ஆம்… அதை நீ நிச்சயம் செய்தாக வேண்டும் மகனே. நான் உனக்கு எந்த விதத்தில் உதவ முடியும்?” “நீங்கள் ஒரு ஸ்பொன்ஸர் கடிதம் கொடுத்தால், என்னுடைய அம்மாவுக்கு விசா வழங்கிவிடுவார்கள் என்றே நினைக்கிறேன்…” “அவ்வளவு தானா! உன்னுடைய அம்மா பிரான்ஸுக்கு வந்துவிட்டார் என்றே வைத்துக்கொள்! அவரைப் பயணத்திற்குத் தயாராகச் சொல். நான் இப்போதே நகரசபை அலுவலகத்திற்குப் போய்த் தேவையான படிவங்களை நிரப்பிக் கொடுத்துவிட்டு, அவர்களிடம் ஸ்பொன்ஸருக்கான பத்திரத்தைப் பெற்று வந்துவிடுகிறேன். நீ வேலை முடிந்ததும் மாலையில் என்னை வந்து பார்!” நன்றியுணர்வால் எனக்குப் பேச்சு எழவில்லை. என்னுடைய கண்கள் கலங்கியதைப் பார்த்ததும், குழந்தைச் சிரிப்புடன் எழுந்துவந்து ஒலிம்ப் அம்மையார் என்னைக் கட்டியணைத்துக்கொண்டார். நான் வேலையில் இருந்த போது, அங்காடிக்குத் தொலைபேசியில் அழைத்த ஒலிம்ப் அம்மையார் என்னுடைய அம்மாவின் பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விபரங்களை என்னிடம் கேட்டார். அப்போது ஒலிம்ப் அம்மையார் நகரசபை அலுவலகத்தில் இருந்தார். ஆயிரம் கேள்விகள் மனதிற்குள் குத்திமுறிய, நான் மாலையின் ஒலிம்ப் அம்மையாரின் வீட்டுக்குச் சென்றேன். அவர் என்னை அவரது படிப்பு மேசையின் முன்னே உட்காரவைத்துவிட்டு, அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்து அய்ந்து பத்திரங்களை என்னிடம் கொடுத்தார். “கேள் மகனே! முதலாவது பத்திரம் உன்னுடையை அம்மாவை நான் விருந்தினர் விசாவில் மூன்று மாதங்கள் பிரான்ஸில் தங்க வைப்பதற்கான நகரசபையின் ஒப்புதல் பத்திரம். இரண்டாவது என்னுடைய வங்கிக் கணக்கு விபரம். மூன்றாவது என்னுடைய பிரஞ்சுத் தேசிய அடையாள அட்டையின் பிரதி. நான்காவது உன்னுடைய அம்மாவை என்னுடைய விருந்தினராக வருமாறு கேட்டு நான் அவருக்கு அனுப்பும் கடிதம். அய்ந்தாவது பத்திரம் உண்மையிலேயே அவசியமற்றது… ஆனால், அதுவே மிக முக்கியமானது என்று நகரசபையில் சொன்னார்கள். மூன்று மாதங்களுக்குள் விருந்தினர் பிரான்ஸிலிருந்து வெளியேறாவிட்டால், உள்துறை அமைச்சு என் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நான் ஒப்புதல் தெரிவிக்கும் பத்திரம். இவற்றை எடுத்துக்கொண்டு போய் உன்னுடைய அம்மா கொழும்பிலிருக்கும் பிரஞ்சுத் தூதரகத்தில் விண்ணப்பித்தால், நிச்சயமாக விசா கொடுத்துவிடுவார்கள். உன்னுடைய அம்மாவைச் சந்திக்க நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். நானே அவரிடம் வருவேன்!” ஒலிம்ப் அம்மையார் என்னிடம் கொடுத்த ஒவ்வெரு பத்திரத்தின் அடியிலும் நடுங்கும் கையால் ஒலிம்ப் அம்மையார் இட்ட கையெழுத்து இருந்தது. கிறுக்கலான கையெழுத்து என்றாலும், பிரஞ்சுக் கையெழுத்துக்கு ஒரு மதிப்பிருக்கத்தான் செய்கிறது இல்லையா! கொழும்பிலிருக்கும் பிரஞ்சுத் தூதரகத்தில் விண்ணப்பித்த பத்து நாட்களுக்குள்ளேயே, அம்மாவுக்கு மூன்று மாதங்களுக்கான விருந்தினர் விசாவைக் கொடுத்துவிட்டார்கள். இந்தச் செய்தியை அறிந்ததும் என்னுடைய அக்காமார்கள் பூரித்துப்போய், என்னை அலைபேசி வழியே கொஞ்சித் தள்ளிவிட்டார்கள். அதன் பின்பு, அம்மாவை என்னுடைய வீட்டில் நான்தான் வைத்துக்கொள்வேன், நான்தான் வைத்துக்கொள்வேன் என்று அவர்களிடையே கடும் போட்டி தொடங்கிவிட்டது. எப்போதும் போலவே இந்தப் போட்டியிலும் தன்னுடைய விட்டுக்கொடுக்காத பிடிவாதத்தால் என்னுடைய மூன்றாவது அக்காவான மலரே வெற்றிபெற்றார். அவர்கள் மகிழ்ச்சியில் தத்தளித்துக்கொண்டிருந்த போது, என்னுடைய உள்ளம் கொந்தளிப்பில் மூழ்கியிருந்தது. பிரான்ஸுக்கு வரும் அம்மா நிச்சயமாக மூன்று மாதங்களில் இலங்கைக்குத் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும். தன்னுடைய அய்ந்து பிள்ளைகளையும், பதினைந்து பேரக் குழந்தைகளையும் விட்டு, மறுபடியும் அவர் தனிமையை நோக்கித் திரும்ப வேண்டியிருக்கும். ஆனால், நான் அம்மாவிடம் அதைச் சொல்லத் துணியவில்லை. அது பிரான்ஸுக்கு வரும் அவரது மகிழ்ச்சியில் நிச்சயமாகவே மண்ணையள்ளி எறிந்துவிடும். பிரான்ஸுக்கு வந்ததும், அதைப் பக்குவமாக அவரிடம் எடுத்துச் சொல்லி, அவரைத் தேற்றித் திருப்பி அனுப்பிவிடலாம் என்றே நினைத்தேன். இன்னொன்றும் நடக்கக் கூடும். சீக்கிரமே வரவிருக்கும் கடுங்குளிர் காலத்தாலும், இங்குள்ள அடைத்த அடுக்குமாடிக் குடியிருப்புகளாலும், சமைத்த உணவைக் குளிர்பதனப் பெட்டிக்குள் வைத்திருந்து, ஒரு வாரம் வரை உண்ணும் உணவுப் பழக்க வழக்கங்களாலும் அம்மாவே சலிப்புற்று இலங்கைக்குத் திரும்பிச் செல்ல விரும்பலாம். இருபது வருடங்களாக இங்கேயிருக்கும் எனக்கே இலங்கைக்கு எப்போது போகலாம் என மனம் தவித்துக்கொண்டிருக்கிறதே! அம்மா அவ்வாறாக விருப்பப்பட்டு இலங்கைக்குத் திரும்பிச் சென்றால் எல்லாமே மகிழ்ச்சியாக முடிந்துவிடும். பேரக் குழந்தைகளைப் பார்த்த திருப்தியில் ஊர்ச் சுடலையிலேயே அவர் நிம்மதியாக நீறாவார். அம்மா பிரான்ஸுக்கு வந்த மூன்றாவது நாளே, நான் ஒலிம்ப் அம்மையாரை அழைத்துக்கொண்டு, மலர் அக்காவின் வீட்டுக்குச் சென்றேன். ஒரு ‘மிமோஸா’ பூங்கொத்தோடு வந்த ஒலிம்ப் அம்மையார் அங்கிருந்து கிளம்பும்வரை, என்னுடைய அம்மாவின் கையைப் பற்றிப் பிடித்தபடியே இருந்தார். அப்போது, என்னுடைய நான்கு அக்காக்களுமே அங்கிருந்தனர். அவர்கள் ஆரவாரமாக ஒலிம்ப் அம்மையாரை வரவேற்றாலும், அம்மையார் இந்த நேரத்தில் ஒரு வேண்டப்படாத விருந்தாளி என்பதைப் போலவே தங்களுக்குள் சாடை பேசிக்கொண்டிருந்தார்கள். இன்னொருநாள் அம்மா என்னிடம் சொன்னார்: “தம்பி! ஊரில் காணியையும் வீட்டையும் கவனித்துப் பார்க்க ஆட்களில்லை. யாராவது அயலவர்கள் கள்ள உறுதி முடித்துக் காணியையும் வீட்டையும் கைப்பற்ற முன்பாக நாங்கள் வீட்டை விற்றுவிட வேண்டும். அதொன்றும் பெரிய பணம் இல்லைத் தான். கைவிடப்பட்டுக் காடாகியிருக்கும் அந்த ஊரில் ஒரு பரப்புக் காணி ஓர் இலட்சத்திற்குக் கூட விலை போகாது. காணியையும் வீட்டையும் ஒரு பாதிரிமார் சபை விலைக்குக் கேட்டுக்கொண்டிருக்கிறது. அதை விற்று முடிப்பதற்கான வேலையை நாங்கள் சீக்கிரமே செய்ய வேண்டும்.” “அம்மா… அது நாங்கள் பிறந்து வளர்ந்த வீடு. எங்களது குடும்பத்திற்கு இலங்கையில் இருக்கும் ஒரே அடையாளம் அந்தக் காணிதான். அது அதுபாட்டிற்கு இருந்துவிட்டுப் போகட்டுமே…” “இருந்து? நாங்கள் யாருமே அங்கே திரும்பிப் போகப் போவதில்லை. கள்ளர் அனுபவிக்கவா அந்தக் காணியை உன்னுடைய அப்பா தேடி வைத்தார்? விற்கிற வேலையைப் பார் தம்பி.” அம்மாவுக்குப் பிரான்ஸ் இவ்வளவு பிடித்துப் போகும் என்று நான் உண்மையிலேயே எதிர்பார்க்கவில்லை. பனியையும் குளிரையும் ஒரு குழந்தையைப் போலல்லவா அவர் அனுபவிக்கிறார். ஒருநாள், நான் மலர் அக்காவின் வீட்டுக்குப் போயிருந்தபோது, அம்மா தரைக் கம்பளத்தின் மீது அமர்ந்திருந்து பேத்தியிடம் பிரஞ்சு மொழிப் பாடம் கேட்டுக்கொண்டிருந்தார். “அம்மா! தரையில் உட்காராதீர்கள்…குளிர் ஏறிவிடப் போகிறது” என்றேன். “சீச்சி… குளிர்தான் என்னுடைய நோய்க்கு நல்ல மருந்தென்று நினைக்கிறேன். இங்கே வந்ததிலிருந்து எனக்குக் காய்ச்சல், தடிமன் கூட வந்ததில்லையே… வாழப் போகும் நாட்டின் பாஷையில் கொஞ்சமாவது தெரிந்து வைத்திருப்பது நல்லதுதானே தம்பி. அதுதான் கொஞ்சம் பிரஞ்ச் படிக்கத் தொடங்கியிருக்கிறேன். உன்னுடைய அப்பாவுக்குச் சிங்களம் தெரிந்திருந்ததால் தானே கொழும்பு வரைக்கும் போய்க் கெட்டித்தனமாக வியாபாரம் செய்தார்” என்றார் அம்மா. அம்மா பிரான்ஸுக்கு வந்து இரண்டரை மாதங்கள் கழிந்துவிட்டன. மலர் அக்காவின் வீட்டில் அம்மா தங்கியிருந்தாலும், மற்றைய பிள்ளைகளின் வீடுகளிலும் அவ்வப்போது ஒன்றிரண்டு நாட்கள் தங்கி அம்மா எப்போதுமே ரவுண்ட்ஸில் இருந்தார். நடுவில் அம்மாவை அழைத்துக்கொண்டு பெரியக்கா குடும்பம் லூட்ஸ் மாதா கோயிலுக்கும் சென்று வந்தது. பாரிஸையும் அதன் புறநகரங்களையும் அம்மா சுற்றியடித்து, எல்லாச் சைவக் கோயில்களுக்கும் போய்விட்டு வந்துவிட்டார். பேரப் பிள்ளைகளோடு நதிக்கரைக்குச் சென்று விளையாடிவிட்டு வந்து “ச்சா… என்னவொரு சோக்கான நாடு! ஒரு பூச்சியிருக்கா பூரானிருக்கா பாம்பிருக்கா?” என்று வியந்துகொண்டிருந்தார். நடுநடுவே, ஊரிலிருக்கும் காணியையும் வீட்டையும் விற்க வேண்டும் என்று என்னிடம் சொல்லியவாறேயிருந்தார். அம்மாவின் விசா முடிவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. நான் பெரியக்காவைத் தொலைபேசியில் அழைத்துச் சொன்னேன்: “பெரியக்கா… நீங்கள்தான் அம்மாவிடம் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். அம்மா முப்பதாம் திகதி இலங்கைக்குத் திரும்ப வேண்டும்.” “தம்பி… என்ன விசர்க் கதை கதைக்கிறாய்? படாத பாடுபட்டு அம்மாவை இங்கே கூப்பிட்டுவிட்டு, திருப்பி அனுப்புவதா? அந்த மனுசி இலங்கைக்குப் போய் என்ன செய்யும்? அம்மா உயிரோடு இருக்கப் போவதே இன்னும் ஒன்றோ இரண்டோ வருடங்கள்தான். அவர் இங்கேயே இருக்கட்டும். இனி நீ கஷ்டப்பட வேண்டாம். நானே அம்மாவுக்குத் தேவையானவற்றைச் செய்கிறேன். விசா முடிந்த அடுத்த நாளே, அம்மாவைக் கூட்டிப்போய் பொலிஸில் அகதியாகப் பதிவு செய்து விடுகிறேன்.” “அக்கா…நான் உங்களுக்கு முதலிலேயே சொல்லியிருக்கிறேன் அல்லவா? அப்படிச் செய்ய முடியாது. அம்மா திரும்பிப் போகாவிட்டால் ஸ்பொன்ஸர் செய்து வரவழைத்த ஒலிம்ப் அம்மையார் சட்டச் சிக்கலில் மாட்டிக் கொள்வார்.” “நல்ல ஒலிம்பும் பிளிம்பும்! அந்தக் கிழவி ஏதாவது பணம் கேட்டால் கொடுத்துவிடலாம். ஆனால், அம்மாவைத் திருப்பி அனுப்ப முடியாது.” “இங்கே பெரியக்கா.. இது ஒலிம்ப் அம்மையார் பணத்திற்காகச் செய்த காரியமில்லை. எங்கள் மீதுள்ள அன்பால் செய்தது. நம்பிக்கையால் செய்தது. அவருக்கு எங்களது அம்மாவை விட வயது அதிகம். இந்த வயதில் அவரை நீதிமன்றத்திற்கு அலைய வைக்க முடியுமா? ஒருவேளை அவர் சிறைக்குக் கூடச் செல்ல வேண்டியிருக்கலாம்…” “பேய்க்கதை கதைக்காதே தம்பி. இங்கே எவ்வளவு சனங்கள் ஸ்பொன்ஸரில் வந்துவிட்டு இங்கேயே அகதித் தஞ்சம் கேட்டுத் தங்கிவிடுகிறார்கள். ஏதாவது பிரச்சினை நடந்ததா? நீ பயப்படுவது போல எதுவும் நடக்காது.” “இல்லை பெரியக்கா… என்னால் ஒலிம்ப் அம்மையாருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ய முடியாது. அம்மா திரும்பிப் போகத்தான் வேண்டும்!” நான் மூன்றாவது அக்காவான மலரைத் தொலைபேசியில் அழைத்தேன். அதற்குள் பெரியக்கா மலர் அக்காவை அழைத்து விபரம் சொல்லியிருக்கிறார். மலர் அக்கா தன்னுடைய இயல்புப்படியே எடுத்ததும் என்மீது சீறி விழுந்தார்: “ஆமோ! அப்படியோ!! என்னுடைய அம்மாவை நீ எப்படித் திருப்பி அனுப்புகிறாய் என்று நானும் பார்க்கிறேன். இப்போதே அம்மாவின் பாஸ்போர்ட்டை எடுத்துக் கிழித்து அடுப்பில் போட்டுவிடுகிறேன்” என்று மலரக்கா ராங்கி காட்டினார். “அது முடியாது மலரக்கா… அம்மாவின் பாஸ்போர்ட் என்னிடம்தான் இருக்கிறது.” “உன்னுடைய இயக்கத்துக் குறுக்கு மூளையைக் காட்டிவிட்டாய் தம்பி. உனக்கு அம்மாவை விட அந்த வெள்ளைக்காரக் கிழவி முக்கியமாகப் போய்விட்டாள் தானே! அம்மாவிடம் மட்டும் ஊருக்குத் திரும்பிப் போகவேண்டும் என்று தயவுசெய்து சொல்லிவிடாதே! ஏங்கி இப்போதே செத்துவிடுவார். பழியைச் சுமக்காதே!” ஆனாலும், நான் கடைசியில் பழியைச் சுமக்கவே நேரிட்டது. ஒரு வாரமாகவே ஒலிம்ப் அம்மையாரிடமிருந்து எங்களது அங்காடிக்கு அழைப்பு ஏதும் வரவேயில்லை. ஒருமுறை அவரது வீட்டுக்குச் சென்று பார்க்கவும் எனக்கு மனம் ஏவவில்லை. அம்மாவின் விசா பிரச்சினை என்னைக் கடுமையாகக் குழப்பிக்கொண்டேயிருந்தது. மாலையில் வேலை முடிந்து செல்லும் போது, ஒலிம்ப் அம்மையாரின் வீட்டைக் கவனித்தேன். வெளியே பூட்டுப் போடப்பட்டிருந்தது. கதவின் இடுக்குகளில் விளம்பரப் பத்திரிகைகள் குப்பையாகச் செருகப்பட்டிருந்தன. ஒவ்வொரு நாளும் நான் இந்த ட்ராம் தரிப்பிடத்திலிருந்து ஒலிம்ப் அம்மையாரின் வீட்டைப் பார்க்கிறேன். இதை எப்படிக் கவனிக்கத் தவறினேன்? என்னையறியாமலேயே ஏதோவொரு கள்ள எண்ணம் என்னுடைய உள்ளத்தில் புகுந்துவிட்டது என்று எனக்குத் தோன்றியதும், வாயில் ஊத்தை எச்சில் ஊறி வந்தது. அதை வீதியில் உமிழ்ந்தேன். வீதியைக் கடந்து சென்று, ஒலிம்ப் அம்மையாரின் பக்கத்து வீட்டுக்காரரின் அழைப்பு மணியை அழுத்தினேன். அந்த இத்தாலியரிடம் எனக்கு ஓரளவு பழக்கமுண்டு. அவருக்கும் நான் தான் பொருட்களை எடுத்து வருபவன். ஒலிம்ப் அம்மையார் மூச்சுத் திணறல் பிரச்சினையால் மத்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று இத்தாலியர் சொன்னார். நான் ட்ராம் தரிப்பிடத்திற்குத் திரும்பவும் சென்று, எனது வீட்டுக்குச் செல்வதற்கான ட்ராம் வண்டிக்காகக் காத்திருக்கலானேன். என்னுடைய சின்ன மூளைக்குள் கட்டெறும்புகளைப் போல ஆயிரம் எண்ணங்கள் புற்றெடுத்துச் சுற்றிக்கொண்டிருந்தன. வீட்டுக்குச் செல்லும் வழியில், மத்திய மருத்துமனைத் தரிப்பிடத்தில் ட்ராம் நின்றபோது, என்னுடைய கால்கள் என்னை அறியாமலேயே ட்ராம் வண்டியிலிருந்து கீழே இறங்கின. ஏதோ ஒரு கிலோ போதை மருந்தைத் தின்றவனைப் போலத்தான் நான் நடந்து சென்றேன். மருத்துவமனையின் வரவேற்புப் பகுதியிலிருந்த பெண்ணுக்கு முன்னால் நான் தளர்ந்து போய் நின்றிருந்தபோது, நான் ஆஸ்பத்திரியில் சேர வந்த நோயாளி என்று கூட அந்தப் பெண் நினைத்திருக்கக் கூடும். அவளிடம் ஒலிம்ப் அம்மையார் அனுமதிக்கப்பட்டிருக்கும் அறை எண்ணை விசாரித்துத் தெரிந்துகொண்டு உள்ளே சென்றேன். லிஃப்டில் கூட ஏறாமல், மாடிப் படிகளில் நடந்தே ஏறிச் சென்றேன். ஒலிம்ப் அம்மையாரின் கண்களைச் சந்திக்கும் தருணத்தை நான் கூடியவரை ஒத்திப்போட்டுக்கொண்டிருக்கிறேன் என்பதுதான் உண்மை. படுக்கையில் கிடந்த ஒலிம்ப் அம்மையாரின் கண்கள் மூடியே இருந்தன. முகத்தில் மூடியிட்டு பிராணவாயு செலுத்தப்பட்டுக்கொண்டிந்தது. முழங்கால்கள் வரையிருந்த நீல ஆடைக்குள் ஒரு பொம்மை போல ஒலிம்ப் அம்மையார் அசைவற்றுக் கிடந்தார். நான் அங்கிருந்த தலைமைத் தாதியிடம் விசாரித்த போது “இந்த அம்மையாரின் உடல் நிலை மிகவும் மோசமாகிக்கொண்டே போகிறது… இவரது உடல் நிலை குறித்து எதையும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது” என்று அவள் இயந்திரம் போல என்னிடம் சொன்னாள். அதுவரை அலைவுற்றுக்கொண்டிருந்த என்னுடைய ஆன்மா மெதுவே தணிவதை உணர்ந்தேன். என்னுடைய நாவில் ஊத்தை எச்சில் கொத்தாகச் சுரந்தது. அதை வாய்க்குள் அடக்கியபடியேதான் நான் வீடுவரை வந்தேன். நான் வீட்டுப் படியில் கால் வைக்க முன்பே, என்னுடைய கடைசி அக்கா வேணியிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. நான் வாய்க்குள் எச்சிலை வைத்துக்கொண்டே பேசினேன். “என்னடா தம்பி… நீ உண்மையில் அம்மாவைத் திருப்பி அனுப்பத்தான் போகிறாயா?” என்று வேணி அக்கா கேட்டார். “எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது” என்றேன். நான் சொன்னது வேணி அக்காவுக்குப் புரிந்ததோ தெரியாது. அடுத்து வந்த நான்கு நாட்களும், நான் தவறாமல் மருத்துவமனைக்குச் சென்று ஒலிம்ப் அம்மையாரின் படுக்கையைக் கவனித்தேன். அவர் கண்களை மூடி அசைவற்றுக் கட்டையாகக் கிடந்தார். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் நான் அங்கே செல்வதால், அந்தத் தாதி எனக்குப் பழக்கமாகிவிட்டாள். என்னைத் தவிர வேறு யாருமே ஒலிம்ப் அம்மையாரைப் பார்க்க வருவதில்லை என்று அந்தத் தாதி சொன்னபோது, நான் என்னுடைய அம்மாவை நினைத்துக்கொண்டேன். என்னுடைய அம்மா இலங்கைக்குத் திரும்பிப் போகவேயில்லை. * https://vanemmagazine.com/one-way-ஷோபாசக்தி/
    1 point
  36. குரூரமும் கயமையும் துரோகமும் எம்மை விட்டு அதிக தூரத்தில் இருப்பதில்லை. எமக்குள்ளேயே தூங்குவது மாதிரி நடித்துக்கொண்டு எப்போதும் விழித்துக்கொண்டே இருக்கும். கதையின் ஓட்டத்தில் என் மனதில் எமது சமூகத்தின் நிர்வாணம் சகிக்கமுடியாமல் என் மனதில் தோன்றுவதை என்னால் தவிர்க்கமுடியவில்லை. ஊத்தை எச்சிலை துப்பவும் இடமில்லை, நானே மென்று விழுங்கினேன். நானும் தமிழன் தானே. இணைப்புக்கு நன்றி @கிருபன்
    1 point
  37. மரக்கறி & பயன் தரு மரங்களையும் சேர்த்து நட்டால் நன்று👍, நல்ல தொடர், தொடருங்கள்
    1 point
  38. இணையவன், வயோதிப காலத்து பொருளாதார உடல் தகுதியை (Wealth and Health Conditions) பற்றி எப்போது சிந்திக்க தொடங்குகிறோமோ அப்பவே நாங்கள் இந்த மனித வாழ்க்கை பற்றிய புரிதலுக்குள் வந்துவிட்டோம் என்று அர்த்தம். இந்த நிரம்பு நிலையை அடைவதற்கு பொருளாதார நிரம்பு நிலை, குடும்ப நிரம்புநிலைகளை அடைந்திருந்தால் மட்டுமே இந்த எண்ணங்களுக்கு சாத்தியம். சிலர் ஓய்வு பெறும்வரை அடையமுடியாமல் போனதற்கு அதுவே காரணம். பொருளாதார நிரம்புநிலை செலவீனத்துக்கு மேலதிகமான சம்பளத்தை ஊதாரித்தனமாகவோ, ஏமாந்தோ அழிக்காமல் சேமிப்பதன் மூலமோ, பொருளாதார முகாமைத்துவ ஆலோசகர்களின் வழிகாட்டலுடனோ Wealth Management Consultants (அதிகரித்த மாதாந்த முதலிடலில் 10 வருடங்களில் அடைய முடியும்). அதேவேளை குடும்பத்தை ஒரு குறிப்பிட்ட செல்வீனத்துக்குள் வாழப்பழக்குதலும் முக்கிய வழிமுறையாகும். இது Passive income இற்கு வழிவகுக்கும். அத்தோடு நாளாக நாளாக உங்கள் வேலை சதவீதத்தை குறைத்து (உங்கள் வேலைத்தளத்தில் உங்கள் முக்கியத்துவம் நம்பிக்கையை பொறுத்து மாறுபடும்) உடல் தகுதியான நிலையில் ஓய்வுக்கு மாறுதல் (50-55 வயது) ஆயுள் காப்புறுதி, நோய்க்கான காப்புறுதிகளை சரியாக பேணி உங்கள் குடுபத்தை உங்களுக்குபின் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றுதல். வீட்டுக்கடனில் வட்டியை மட்டும் கட்டும் முறைக்கு மாற்றி சரியான தருணத்தில் நீண்டகால நிலையான குறைந்த வட்டி விகிததில் நிலை நிறுத்தி வீட்டை கடனிலேயெ உங்கள் பிள்ளைகளுக்கு கையளித்தல். (அப்போது வீட்டுக்கடன் வீட்டின் விற்பனைப்பெறுமதியில் 50% வீதம் கூட வராது அதுவே நாங்கள் பிள்ளைகளுக்காக கொடுக்கும் முதலீடு) மனைவியை பிள்ளைகளை நேரம் இருக்கும்போது சிறுக சிறுக பொருளாதார முகாமைத்துவ நுணுக்கங்களை பரிமாறி பொருளாதார வெளிப்படைத்தன்மையை பேணுதல். குடும்ப நிரம்புநிலை இது கொஞ்சம் கடினமானதும் 30 களில் திட்டமிட வேண்டியதுமான நிலை. மனைவி - உங்கள் வயோதிப கால திட்டமிடலை கொஞ்சம் கொஞ்சமாக விளங்கப்படுத்தி தயார்படுத்தல். இதற்கு மனைவி வரமாக அமைந்திருக்க வேண்டும். பிள்ளைகள் - பெறும் பிள்ளைகளின் எண்ணிக்கை, வயதுகளை கணிப்பில் எடுத்து பிள்ளைகளை பெறுதல். உங்களுக்கு 50 வயதாகும் போது அவர்கள் 18 வயதை தாண்டி இருக்குமாறு பார்த்துக்கொள்ளுதல். அது பெற்றோர் சார் பிள்ளைகள் நிலையில் இருந்து உங்களை தள்ளி வைக்கும். அவர்களை வளர்க்கும்போதும் வெறும் பொருளாதார சார்பு பெற்றோராக நடத்தாது அவர்களை தனி முடிவெடுக்கும் திறனுக்கு படிப்படியாக வளர்த்து பரிசோதனைகளும் செய்து பார்க்கவேண்டும். பிள்ளைகளின் சமய தேசிய மொழி நிலைகள் பெற்றோரை பொறுத்தது. அவர்களின் 16 வயதுகளின் உங்களின் வயோதிப கால திட்டங்களை கலந்தாலோசித்து அவர்களை வழிநாடாத்தும் (100%) கடைசி வயதெல்லையை தீர்மானிப்பது. இதில் பிள்ளைகளின் கல்வித்தகமை உடற்தகைமையும் அடங்கும். உடற்தகமை- வயோதிப காலத்தை (என்னைபோறுத்தவரை 50+) அனுபவிக்க முக்கியமானதொன்று உடற்ககமை. உங்களுக்கு நிச்சயமாக வரக்கூடிய பரம்பரை நோய்களை கண்டறிந்து முன்கூட்டியே மாப்பொருட்களை எண்ணைப்பொருட்களை தவிர்த்தல். உணவு நேரத்திட்டமிடல், உடற்பயிற்சி, ஓய்வு. தனி மனித ஒழுக்கம் - இது உங்களுக்கு தேவையற்ற அழுத்தங்களை குறைக்கும் சரி இப்போ கேள்வி இவ்வளவும் செய்து பிற்காலத்தை வாழ்வதற்கு இப்பவே வாழ்ந்திட்டு போகிறோம். இப்படி வாழ்ந்த ஆட்களில் ஒரு உதாரணம் தான் இணையவனின் மூன்றாவது உதாரணம். திட்டமிடலுடன் வாழ்பவர்கள் வாழ்க்கையை வாழவில்லை என்று நினைப்பது தவறு. அவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலத்தையும் முறையாக அனுபவித்து சாகும் வரை மகிழ்வாக வாழ்கிறார்கள். வயதுடன் மாறும் சந்தோசத்தை நிலையானது என்று நினைக்காதீர்கள். அந்தந்த வயதில் அளவோடு அனுபவித்து கடந்து செல்லுங்கள். எட்டு எட்டாக பிரிப்பதும் பத்து பத்தாக பிரிப்பது உங்கள் உரிமை. நான் அனுபவித்து சரியென்று பட்ட என் கருத்தை மட்டுமே உங்கள் முன் வைத்திருக்கிறேன். சரி பிழை இருக்கலாம். ஆக்கபூர்வமாக யதார்த்தமாக விவாதிப்போம். வாழ்க்கை வாழ்வதற்கே..!!! குறிப்பு: பொருளாதாரத்துக்கு வேலை செய்யும் எண்ணத்தில் இருந்து மனசுக்கு பிடித்ததை ( அந்த வேலை என்ன என்று தெரியாது மாடு வளர்பதாக இருக்கலாம், வைன் செய்யும் தொழிற்சாலை நிறுவுவதாக இருக்கலாம், வயோதிப மடம் வைப்பதாக இருக்கலாம்) செய்யும் நிலைக்கு மாறுவதற்கான பொருளாதார நிலைக்கு 40 களில் வந்துவிட்டதால் என் கருத்தியலின் சில ஒவ்வாமை இருக்கலாம். இந்த வருட முதல் காலாண்டுக்கான கருத்தாடலில் நான் எனது வேலையை 80% ஆக்கும் எண்ணத்தை எனது முதல்நிலை நிர்வாக இயக்குநருக்கு தெரியப்படுத்த இருக்கிறேன். இந்த திரியில் நான் கண்ட மகிழ்ச்சி ஒரே நேர்கோட்டில் அல்லது அலைவரிசையில் சிந்திப்பதற்கும் புரிதலுக்கும் எம் இனத்திலும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது மட்டுமே.
    1 point
  39. வயோதிப வாழ்க்கை என்பது நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதல்ல. எமக்கு ஏற்றவாறான வாழ்கை முறையை ஒருங்கமைத்து வாழ முடியும். ஏறத்தாள மொத்த வாழ்வில் மூன்றில் ஒரு காலப் பகுதியை இது அடக்குகிறது. சிலர் ஏற்கனவே திட்டமிட்டும் சிலர் காலப்போக்கில் எடுத்த முடிவாலும் இன்னும் சிலர் சில நிர்ப்பந்தங்களுக்காகவும் தமது வழிகளைத் தேடிக் கொள்கின்றனர். எனக்குத் தெரிந்த மூன்று வித்தியாசமான நபர்களின் சிறு உதாரணங்களைத் தருகிறேன். இவர் ஐரோப்பியர். ஓரளவு வசதியானவர். என்ன செய்வதென்று தெரியாமல் ஓய்வூதியத்தில் சில வருடங்களைக் கழித்து விட்டார். ஒரு நாள் வீட்டில் உடைந்துபோன மரக் கதிரை ஒன்றைத் திருத்த முயன்றார். நுட்பமான வேலைகள் எதையும் முன்னர் செய்திருக்கவில்லை. எப்படித் திருத்துவது என்று எதுவுமே தெரியாமல் பல முயற்சிக்குப் பின் ஒருவாறு திருத்திவிட்டார். அன்றிலிருந்து அதில் ஆர்வம் ஏற்பட, தனது உறவினர் வீடுகளில் பழுதான தளபாடங்களைத் திருத்த வெளிக்கிட்டார். சிறிது சிறிதாக உபகரணங்களையும் வாங்கி தனது பிள்ளைகளின் வீடுகளுக்குத் தேவையான தளபாடங்களைப் புதிதாகச் செய்யும் அளவுக்கு முன்னேறிவிட்டார். செய்து முடிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வாராயினும் யாரும் அழுத்தம் தராதபடியால் மெதுவாகச் செய்வார். வீட்டிற்கு வருபவர்களிடம் பிள்ளைகள் இவரது ஆக்கங்களைக் காட்டிப் பெருமைப் படுவார்கள். இவரும் ஐரோப்பியப் பெண். ஒரு பெண் பிள்ளை திருமணமாகிச் சென்றுவிட, கணவனும் இறந்துவிட, பரிஸ் புறநகர் அடுக்குமாடி வீடொன்றில் தனிமைப் பட்டார். சில வருடங்களின் பின் திடீரென ஒரு முடிவைத் தானாகவே எடுத்தார். தான் இருந்த வீட்டை விற்றுவிட்டு ஒரு கிராமத்தில் சிறு வீடு ஒன்றை வாங்கிக் குடியேறினார். அக் கிராமமோ அங்கிருப்பவர்களோ அவருக்கு ஏற்கனவே தெரிந்தவர்கள் அல்ல. அங்கு சென்றது கிராம மக்களோடு பழக ஆரம்பித்தார். தினமும் கிராமத்தைச் சுற்றி வந்து அவர்களோடு பேசுவார். இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். தமிழ் மூதாட்டி. 80 வயதாகிறது. தனது மகனின் குடும்பத்துடன் வசித்து வருகிறார். காலையிலிருந்து இரவு வரை வீட்டு வேலை செய்வதுதான் இவரது முழுநேர வாழ்க்கை. முதுகு வலியால் மிகவும் அவதிப் பட்டுக் கொண்டே சமையல் செய்வார். எப்போதும் பேரப் பிள்ளைகள் சாப்பிட்டார்களா பாடசாலைக்கு நேரத்துக்கு வெளிக்கிட்டார்களா என்பதே சிந்தனை. வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. இவர் வாழ்வது ஏனையவர்களுக்காகவே. - முதலாமவர் பெருமையோடு வாழ்கிறார். - இரண்டாமவர் தனது மகிழ்ச்சியைத் தேடிவிட்டார். - மூன்றாமவர் ஏனையவர்களுக்காக மட்டும் வாழ்கிறார். மூன்றாவது உதாரணத்தில் விருப்பம்போல் முதுமைக் காலத்தை நிர்ணயிப்பதில் புற காரணிகள் தடையாக இருந்துள்ளன. எமது தீர்மானத்தில் ஆதிக்கம் செலுத்தும் காரணிகளில் முக்கியமானவை: வாழ்க்கைத் துணை எடுக்கப்படும் முடிவிற்குக் கணவன் மனைவி இருவருடைய ஒத்துழைப்பும் விருப்பமும் அவசியம். அப்படி இல்லாவிடினும் அது ஒருவரைப் பாதிப்பதாக இருக்கக் கூடாது. உங்கள் துணையுடன் எதிர்காலம் பற்றிக் கலந்தாலோசியுங்கள். அவருக்கும் புதிய யோசனைகள் ஆர்வங்கள் இருக்கலாம். உடல் ஆரோக்கியம் நோய்கள் வராமல் முற்பாதுகாப்பாக இருப்பதே சிறந்தது. நல் உணவு, உடற்பயிற்சி, போதிய நித்திரை ஆகியன உடல் ஆரோக்கியத்தைப் பேண உதவும். பல தமிழர்களைப்போல் யூடியூப் மருத்துவத்தை நம்பாமல் நோய் அறிகுறிகள் தெரிந்தால் நல்ல மருத்துவம் செய்துகொள்ள வேண்டும். குடும்ப உறவுகள் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடன் பொழுதைக் கழிப்பது இனிமையானது. ஆனால் அதுவே முட்டுக்கட்டையாகவும் இருக்க வாய்ப்புண்டு. வசதியான நாடுகளில் முதியவர்களின் உதவி இல்லாமலே அவர்களால் வாழ முடியும். இருப்பிடம், பொருளாதாரம் போன்றவை இங்கு பெரிய பிரச்சனை இல்லை. வசதியாக வாழ வேண்டுமானால் உழைக்கும்போதே அதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம். இதுவரை - - சோர்வாக இருந்தாலும் தினமும் காலையில் சரியான நேரத்துக்கு எழுந்து வேலைக்கும் போக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் - வேலையில் தரப்படும் அழுத்தங்களை யோசித்துக் நிம்மதியற்ற தூக்கம் - பிள்ளைகளின் படிப்பு, மாலைநேர வகுப்பு, விளையாட்டு எல்லாவற்றையும் நினைத்துக் குழப்பம் - வீட்டுக் கடன், வருமானவரி, போகுவரத்து, சேமிப்புத் திட்டம், காப்புறுதி என்றெல்லாம் ஏகப்பட்ட சிந்தனைகள் இத்தனை காலமும் இன்னும் பல பிரச்சனைகளைத் தாங்கிவிட்டோம். முதுமையில் இவையெல்லாம் ஓய்ந்து சீராக வந்துவிடும். இனிமேல் எமக்குப் பிடித்த வழியில் அமைதியாக மகிழ்சியாகப் பயணிப்போம்.
    1 point
  40. 1947 இல் சுதந்திரம் அடைந்தபின்னர் இலங்கையில் தமிழர்கள் இருவகையான ஆபத்துக்களை எதிர்கொள்ள நேரிடும் என்று தந்தை செல்வா எச்சரித்திருந்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் பேசிய தந்தை செல்வா அவர்கள் அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலமும், ஒற்றையாட்சிக் கோட்பாட்டின் ஊடாகவும் இலங்கையில் தமிழர்களின் இருப்பிற்கு பாரிய அச்சுருத்தால் ஏற்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார். அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்களை "நில அபகரிப்பு" என்றும், ஒற்றையாட்சிக் கோட்பாட்டினை "தமிழருக்கான அதிகாரங்களைக் கொள்ளையிடல்" என்றும் அவர் விழித்துப் பேசினார். இவையிரண்டின் மூலம் தமிழர்கள் வெகு விரைவில் சிங்களவர்களுக்கு அடிமையாக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். மலையகத் தமிழர்களின் பிரஜாவுரிமைப் பறிப்பு இலங்கையிலிருந்து தமிழினத்தை முற்றாக அழித்துவிடும் முயற்சியின் ஒரு அங்கம்தான் என்றும் அவர் முழுமையாக நம்பியிருந்தார், அதையே மக்களிடம் கூறிவந்தார். சமஷ்ட்டி அடிப்படையிலான அரசியல்த் தீர்வொன்றே இலங்கையில் தமிழர்களின் சுதந்திரத்திற்கும் அவர்களைன் அடையாளத்திற்கும் பாதுகாப்பாக இருக்கும் என்று அவர் முழுமையாக நம்பினார். தனது இந்தக் கண்ணோட்டத்தை மக்களிடையே பரப்புவதற்காக சமஷ்ட்டிக் கட்சியென்று புதியதொரு அரசியல்க் கட்சியை அவர் ஆரம்பித்தார். தனது புதிய கட்சியினை 1949, மார்கழி 18 இல் ஆரம்பித்து வைத்துப் பேசிய தந்தை செல்வா அவர்கள் பல்லின, பல்கலாசார மக்கள் வாழும் இலங்கை போன்ற நாட்டிற்கு ஒற்றையாட்சி ஒருபோதுமே தீர்வாக அமையாதென்றும், இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களினதும் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கு சமஷ்ட்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வே மிகவும் சிறந்தது என்று அவர் கூறினார். அவர் மேலும் பேசுகையில், "ஒற்றையாட்சிக் கோட்பாட்டின் கீழ் நாம் முதலில் அரசில் தமிழருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய பங்கினை இழந்தோம். அடுத்ததாக தேர்தலில் எமது வாக்குப் பலத்தினைக் குறைப்பதற்காக இந்தியத் தமிழ்ச் சகோதரர்களின் பிரஜாவுரிமையினை அவர்கள் பறித்தார்கள். தமிழரின் பூர்வீக தாயகத்தைச் சிதைக்கும் நோக்குடன் அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்களை முடுக்கி விட்டிருக்கிறார்கள். ஆகவே, சமஷ்ட்டி அடிப்படையிலான அரசியல்த் தீர்வு தமிழருக்கு சட்டபூர்வமாகக் கிடைக்கவேண்டிய அரச அதிகாரத்தினைப் பெற்றுக்கொடுக்கும். இதன்மூலம், கட்டுபாடின்றி சட்டத்திற்குப் புறம்பான முறையில் தமிழர் தாயகத்தின் மேல் நடத்தப்பட்டுவரும் சிங்களக் குடியேற்றங்கள் முடிவிற்குக் கொண்டுவரப்படும்" என்று அவர் கூறினார். திட்டமிட்ட முறையில் அபகரிக்கப்பட்டு வந்த தமிழர் தாயகத்தைப் பாதுகாப்பதே தந்தை செல்வாவின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. அதனால், "சுவர் இருந்தால்த்தான் சித்திரம் வரைய முடியும்" எனும் சுலோகத்தினை அவர் முன்வைத்து வந்தார். தமிழர் தாயகம் அவர்களின் கைகளில் இருந்தால் மட்டுமே இனத்தையும், கலாசாரத்தையும் பாதுகாக்க முடியும் என்று அவர் தொடர்ச்சியாக வாதாடி வந்தார். கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப் பிரதேசமான பட்டிப்பளை கல்லோயா எனும் சிங்களக் குடியேற்றமாக அரசினால் கபளீகரம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தந்தை செல்வா மிகத் தீவிரமாக தமிழர் தாயகம் காக்கப்படல் வேண்டும் என்கிற கோரிக்கையினை முன்வைத்து பேசத் தொடங்கினார். இலங்கையின் இரு பிரதமர்களுடன் அவர் செய்துகொண்ட உடன்படிக்கைகளின் கருப்பொருளாக திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துவதே அமைந்திருந்தது. 1957, ஆடி 25 இல் பிரதமர் பண்டாரனாயக்கவுடன் அவர் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி, தமிழர் தாயகத்தில் இடம்பெறும் குடியேற்றங்களை நிர்வகிக்கும் அதிகாரம் பிரதேச சபைகளுக்கே வழங்கப்படவேண்டும் என்று அவர் கோரினார். அவ்வுடன்படிக்கையின் சரத்து "பி" இவ்வாறு கூறுகிறது, "புதிதாக மேற்கொள்ளப்பட்டும் குடியேற்றத் திட்டங்கள் அப்பிராந்திய அதிகார சபைகள் ஊடாகவே நிர்வகிக்கப்படவேண்டும் என்பது ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த குடியேற்றங்களை யார் யாருக்கு வழங்குவதென்கிற அல்லது யார் யார் இத்திட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்படுவர் என்கிற தீர்மானத்தினை இந்த பிராந்திய நிர்வாகங்களே தீர்மானிக்கும். தற்போது கல்லோயா திட்டத்தை நிர்வகிக்கும் கல்லோயா சபையின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்கப்படல் அவசியம்". அதேபோல 1965 , பங்குனி 24 இல் தந்தை செல்வா அவர்கள் அன்றைய பிரதமர் டட்லி சேனநாயக்கவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் தமிழரின் தாயகம் தமிழர்களினால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுவதற்கான அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று கோரியிருந்தார். அவ்வொப்பந்தம் பின்வருமாறு கூறுகிறது, சரத்து 4 ) நிலங்களை அபிவிருத்தி செய்வதற்கான அதிகாரச் சட்டம் சீர்திருத்தப்பட்டு இலங்கையின் குடிமக்கள் நிலங்களை உரிமையாக்கிக் கொள்ளும் அதிகாரம் வழங்கப்படும். மேலும் தந்தை செல்வாவின் கோரிக்கைகளுக்கு இணங்கிய டட்லி, குடியேற்றத் திட்டங்களின் மூலம் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்படும்பொழுது பின்வரும் விடயங்கள் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் கவனிக்கப்படுதல் அவசியம் என்றும் ஏற்றுக்கொண்டார். 1) வடக்குக் கிழக்கில் பகிர்ந்தளிக்கப்படும் நிலங்கள், இம்மாவட்டங்களில் வாழும் மக்களுக்கே முதலில் வழங்கப்பட வேண்டும். 2) இந்நிலங்கள் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மொழி பேசும் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும். 3) வடக்குக் கிழக்கிற்கு வெளியே வாழும் ஏனைய தமிழ் பேசும் மக்களுக்கு அடுத்ததாக முன்னுரிமை வழங்கப்படுதல் அவசியம். ஆனால், தமிழரின் தாயகத்தை காக்கவேண்டும் என்கிற நோக்கில் தந்தை செல்வா அவர்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் இந்த இரு ஒப்பந்தங்களையும் சிங்களவர்கள் தூக்கியெறிந்ததன் மூலம் உருக்குலைந்து போயின. இவ்வொப்பந்தங்களின் தோல்வியே சிங்களத் தலைவர்கள் தமது விருப்பத்திற்கு ஏற்ற வகையில் வடக்குக் கிழக்கில் தமிழரின் நிலங்களை கூறுபோட்டு அபகரிக்கவும், சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கவும் வழியமைத்துக் கொடுத்தன. இதன்மூலம் இப்பிரதேசங்களில் இருந்த தமிழருக்கான தேர்தல் பலமும் மிகப் பலவீனமான நிலைக்கு இழுத்து வீழ்த்தப்பட்டு, இப்பகுதிகள் சிங்களத் தேர்தல்த் தொகுதிகளாக மாற்றப்பட்டன. 1881 இலிருந்து 1981 வரையான நூற்றாண்டுக் காலத்தில் தமிழர் தாயகம் எவ்வாறு இனப்பரம்பல் மாற்றத்தை எதிர்கொண்டது என்பதை பின்வரும் அட்டவணை காட்டுகிறது. இதன்படி கிளிநொச்சி மாவட்டம் யாழ்ப்பாண மாவட்டத்திற்குள் அடங்கியிருந்தது. அத்துடன் 1965 இல் உருவாக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் சனத்தொகை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காகத் தனியே காட்டப்பட்டிருக்கிறது. அம்பாறை மாவட்டம் என்பது தமிழ்பேசும் மாவட்டமான மட்டக்களப்பிலிருந்து தனியே பிரித்து எடுக்கப்பட்டு சிங்கள மாவட்டமாக உருவாக்கப்பட்டதென்பது குறிப்பிடத் தக்கது. Table-1 Demographic Change in the North-East Province 1881- 1981 Year 1881 1946 1981 District Sinhalese Tamils Muslims Sinhalese Tamils Muslims Sinhalese Tamils Muslims Jaffna 0.3 98.3 1.0 1.07 96.3 1.3 0.60 95.3 1.7 Mannar 0.67 61.5 31.1 3.76 55.1 33.0 8.10 50.6 26.6 Vavuniya 7.4 80.9 7.3 16.6 69.3 9.3 16.6 59.9 6.9 Batticoloa 0.4 57.5 30.7 4.0 69.0 27.0 3.2 70.8 24.0 Ampara 18.24 30.0 50.4 16.7 28.3 54.9 37.6 20.1 41.5 Trincomalee 4.2 63.6 25.9 20.7 40.1 30.6 33.6 33.8 29.0 The most significant change was in the Amparai District. Table 2- Demographic Change in the Amparai District – 1911- 1981 Year Sinhalese Tamils Muslims 1911 4762 7.0% 24733 37% 36843 55% 1921 7285 25203 31943 1953 26459 39985 37901 1963 62160 29% 49220 23.5% 97990 45.6% 1971 82280 30.% 60519 22% 126365 47% 1981 146371 38.01% 78315 20% 126365 47% Next comes the Trincomalee district. Table 3- Demographic change in the Trincomalee district 1901-1981 Year Tamils Muslims Sinhalese Others 1901 17069 60% 8258 29.90% 1203 4.2% 1921 6.8% 1911 17233 57.8% 9714 32.6% 1138 3.8% 1700 5.7% 1921 18556 54.5% 12846 37.7% 1501 4.4% 1179 3.5% 1946 33795 44.1% 23219 30.6% 15706 20.7% 3501 4.7% 1953 37517 44.7% 28616 34.1% 15296 18.2% 2488 3% 1963 54050 39.1% 42560 30.8% 39950 28.9% 1600 1.2% 1971 71749 38.1% 59924 31.8% 54744 29.1% 1828 1.0% 1981 93510 36.4% 74403 29.2% 86341 33.4% 2536 1.10%
    1 point
  41. சுவிஸ்ஸில் கோர விபத்து !யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரே குடும்பத்தவர்கள் இருவர் உயிரிழப்பு சுவிஸ்லாந்தின் ஆறோ மாநில நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தையும், மகனும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் சுழிபுரம் கிழக்கை பூர்வீகமாகவும், தற்போது சுவிஸ்லாந்தின் சென்.கேலன் (St.Gallen) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் (கண்ணன்) எனப்படும் நபரும், அவரது மகனும் பயணித்த மகிளுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து நடைபெற்ற இடத்திலேயே அவரது மகன் உயிரிழந்ததுடன், வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவரது தந்தையும் தற்போது உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. https://www.thaarakam.com/news/d49be552-3e92-48ff-a546-cb3a37390a97
    0 points
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.