Jump to content

Leaderboard

  1. goshan_che

    goshan_che

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      15

    • Posts

      14943


  2. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      43268


  3. புரட்சிகர தமிழ்தேசியன்

    புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      15887


  4. ரஞ்சித்

    ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      8355


Popular Content

Showing content with the highest reputation on 02/27/23 in all areas

  1. வடக்கில் புலம்பெயர் தமிழரின் அழகிய பண்ணைத் தோட்டம் வட பகுதி யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் இயக்கச்சி எனும் இடத்தில் ReeCha எனும் பெரிய பண்ணை ஒன்றை எமது புலம் பெயர் தமிழர் ஒருவர் உருவாக்கியிருக்கிறார். 150 ஏக்கர் நிலப்பரப்பில் இதை அமைத்திருக்கிறார். இயற்கையாகவே இயற்கையில் நாட்டமுள்ள எனக்கு இந்த பண்ணையை பார்க்கும் சந்தர்ப்பம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை கிடைத்தது. இங்கே பலவிதமான பயன் தரும் மரங்களும், பலவகையான உயிரினங்களாகிய ஆடு, மாடு,கோழி, பன்றிகள், வாத்துக்கள், முயல்கள் போன்றனவும் வளர்க்கப்படுகின்றன. வடபகுதியில் உள்ள இந்தப் பண்ணையினை மிகவும் அழகாகவும்,நேர்த்தியாகவும் பராமரிக்கிறார்கள். 150 ஏக்கரையும் முழுமையாக பயன்படுத்துகிறார்கள். உள்ளே பண்ணைக்குரிய அடையாளங்களைத் தவிர சிறுவர்களை உற்சாகப்படுத்தும், மகிழ்வூட்டும் பலவகையான பொழுது போக்கு அம்சங்களும் நிறைந்திருக்கின்றன. Adventure rides, Roller coasters, fun rides,boat rides போன்றன காணப்படுகின்றன. இங்கே குழந்தைகள் மட்டும் அல்ல இறுக்கமான சமூக அமைப்பைக் கொண்ட எமது சமூகத்தில் உள்ள வயது வந்தவர்களும் தங்களை் மறந்து தங்களுக்குள் இருந்த குழந்தைத்தனத்துடன் சிரித்துக் கொண்டிருந்ததை பார்த்த போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எம்மவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டும் எனக்கு இது மிகவும் சந்தோஷத்தை அளித்தது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கோயில்களுக்கு பணம் வழங்கி கோயில்களை ஹோட்டேல் ஆக்குவபவர்கள் மத்தியிலும், மக்களுக்கு பணம் வழங்கி அவர்களை அடிமைகளாகவும், சோம்பேறிகளாகவும் உருவாக்கும் மக்கள் மத்தியில் இந்த பண்ணையின் உரிமையாளர் எனக்கு அதிசயப் பிறவியாக தெரிந்தார். கிட்டத்தட்ட 200 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியிருக்கிறார். தாயக நிலத்தை சரியான முறையில் பயன்படுத்துகிறார். இதன்மூலம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார். Organic விளைச்சல்களை ஊக்குவிப்பதுடன் Organic பொருட்களை பெறக்கூடிய வாய்ப்பையும் அளிக்கிறார்.மற்றவர்களை சந்தோஷப்டுத்துகிறார் போன்றவற்றிற்காக இவரது முயற்சிக்கு பெரியதொரு பாராட்டை தெரிவித்தே ஆகவேண்டும். இப்படி சமூகமாக முன்னேற்றுபவர்களை ஆதரிப்போம்.உற்சாகப்படுத்துவோம். -கலைச்செல்வி https://vanakkamlondon.com/world/srilanka/2023/02/185932/
    6 points
  2. நாங்கள் இலங்கையில் வாழவே முடியாது. உயிராபத்து. இனவாத ஒடுக்கல். ஆமியும் கொடுமை. புலியும் ஆள்பிடிக்குது. என்று வெளிநாட்டில் வந்து கையை தூக்குவம். பிறகு ஒரு இருபது வருசம் வெளிநாட்டில் தும்படிச்சு காசை சேர்தபின், இரெட்டை குடியுரிமை யும் எடுத்து கொண்டு, அதே இனவாதம் கொஞ்சமும் மாறாத இலங்கையில் போய் நிண்டு… இதுவல்லவோ பூலோக சொர்க்கம் என்போம்.
    4 points
  3. திரும்பும் வரலாறு -பாகம் 4 போர்மேகமும் இடிமுழக்கமும் நாசி ஜேர்மனி 1938 இலேயே அயல் நாடுகளை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விட்டதை முன்னைய பாகத்தில் பார்த்தோம். இந்த ஆக்கிரமிப்புக்கள் பாரியளவு எதிர்ப்புகளின்றி நிகழ்ந்தன. முதலில் ஆஸ்திரியா பின்னர் செக்கோஸ்லோவாக்கியாவின் எல்லைப் பகுதிகள் என்பன வீழ்ந்தன. இந்த நாடுகளின் இயற்கை வளங்களை நாசி ஜேர்மனி தன் இராணுவ மயப்படுத்தலுக்கும், பொருளாதாரப் பலத்திற்கும் பயன்படுத்திக் கொண்டது. அதே வேளையில், ஜேர்மனியின் யூதர்களுக்கெதிரான கொள்கைகளும் ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்குப் பரவின. ஐரோப்பாவில் யூத மக்களுட்பட்ட ஆரியல்லாத மக்களுக்கு எதிர்காலம் கேள்விக் குறியானது. இருண்ட எதிர்காலத்தை எதிர்கொள்ள முடியாத யூதர்கள் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டார்கள். இன்னும் பல்லாயிரம் பேர், அத்திலாந்திக்கைத் தாண்டி அமெரிக்கக் கண்டத்து நாடுகளில் அடைக்கலம் தேடினர் - எல்லோருமே இந்த விடயத்தில் அதிர்ஷ்டசாலிகளாக இருக்கவில்லை. உதாரணமாக, கியூபாவை நோக்கியும், கனடாவை நோக்கியும் யூத அகதிகளை ஏற்றிக் கொண்டு சென்ற கப்பல்கள் சில திருப்பி விடப் பட்டன. அந்தக் கப்பல்களில் இருந்து இறக்கப் பட்ட யூத அகதிகள் வதை முகாம்களுக்கு அனுப்பப் பட்டனர், அவர்களுள் பலர் உயிரோடு மீளவில்லை! யூத அகதிகளுக்கு நடந்த இந்த அவலம், மீள நிகழாமல் இருக்க பிற்காலத்தில் ஐ.நா எடுத்துக் கொண்ட முயற்சிகளில் ஒன்று தான் ஐக்கியநாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் (UNHCR) என்ற பதவியின் உருவாக்கம். இந்த அமைப்பினால் பயனடைந்தவர்களுள் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களும் அடங்குகின்றனர். அதே வேளை ஈழத்தமிழர்கள் போல அதிர்ஷ்டம் கிட்டாத றோஹிங்கியா அகதிகளும் கூட ஓரளவுக்கு இந்த அமைப்பினால் தான் பாதுகாக்கப் படுகின்றனர். (இன்னொருவரின் கல்லறையின் மீது கட்டியெழுப்பப் பட்ட சமூகக் கட்டமைப்புகள் தான் இன்று எங்களுக்கு நிழல் தருகின்றன என்பதை புலம்பெயர் ஈழவர்கள் உணர்ந்தாலே இந்தத் தொடரின் பாதி நோக்கம் நிறைவேறி விடும்!) ஹிற்லரைக் குளிர்வித்தல்! ஏற்கனவே சுட்டிக் காட்டப் பட்டது போல, ஹிற்லர் , நாசிகள் அவர்கள் கொள்கைகள் என்பன உடனடியாக உலகத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பவில்லை. உதாரணமாக, அமெரிக்கா நாசி ஜேர்மனிக்குத் தான் கொடுத்த கடன்களை எப்படிப் பவ்வியமாகத் திருப்பி வசூலிப்பதென மட்டும் யோசித்தது. இந்த நோக்கத்தை நிறைவேற்ற, ராஜதந்திர அனுபவமில்லாத ஆனால் ஜேர்மன் மக்கள் மீது அபிமானம் கொண்ட ஒரு வரலாற்றுத் துறைப் பேராசிரியரை தன் தூதுவராக பேர்லினில் நியமித்தது. நாசி ஜேர்மனியை எதிர்க்கும் வலுவுடன் எஞ்சியிருந்தவை மூன்று நாடுகள்: பிரிட்டன், பிரான்ஸ், சோவியத் ஒன்றியம். பிரான்ஸ், மஜினோ லைன் என்ற ஒரு எல்லைக் கோட்டை பாதுகாப்பு அரண்களுடன் அமைத்து விட்டு போர் வரும் போது பார்க்கலாம் என்று காத்திருந்தது. பிரிட்டனில் ஆட்சியில் இருந்த நெவில் சம்பர்லின் போரை விரும்பவில்லை. "ஹிற்லர் மரியாதையை எதிர்பார்க்கிறார், அதைக் கொடுத்து விட்டால் அடங்கி விடுவார்" என்று நினைத்த பிரிட்டன் அரசியலாளர்களுள் ஒருவராக இருந்த சம்பர்லின், 1938 இல் ஜேர்மனி சென்று ஹிற்லரை நேரடியாகச் சந்தித்து ஒரு ஒப்பந்தம் போட்டு விட்டு வந்தார். மியூனிக் (Munich) ஒப்பந்தம் எனப்பட்ட அந்த ஒப்பந்தம், ஜேர்மனியும் பிரிட்டனும் இனி ஒரு போதும் யுத்தத்தில் எதிரிகளாக இருக்க மாட்டா என்றிருந்தது. இத்தகைய "சர்வாதிகாரி எதிர்பார்ப்பதைக் கொடுத்தால் சமாதானம் நிலைக்கும்" என்ற கொள்கையை "குளிர்வித்தல் கொள்கை" (appeasement policy) என்று அழைப்பர். இன்றும் ரஷ்யாவின் புட்டின் கேட்பதைக் கொடுத்தால் உக்ரைனில் அழிவு நிற்கும் என்போர் இதே குளிர்வித்தல் கொள்கையையே வேறு சொற்களில் வெளிப்படுத்துகின்றனர். ஆனால், ஹிற்லர் மியூனிக் உடன்படிக்கை உருவாகி சில மாதங்களிலேயே முழு செக்கோஸ்லோவாக்கியாவையும் ஆக்கிரமித்து குளிர்வித்தல் சரிப்பட்டு வராத ஒரு கொள்கையென நிரூபித்தார். இவ்வளவு நிகழ்ந்த பின்னும் ஹிற்லரை நம்பிய உலக நாடுகளும் தலைவர்களும் இருந்தனர், அவர்களுள் ஒருவர் சோவியத் ஒன்றியத் தலைவர் ஸ்ராலின். ஏற்கனவே பிரான்சுடன் ஒரு எதிர்கால ஒத்துழைப்பை உறுதி செய்யும் ஒப்பந்தத்தை ஸ்ராலின் செய்து, நாசி ஜேர்மனியை எதிர்க்கக் கூடிய அணியில் சோவியத் ஒன்றியத்தை வைத்திருந்தார். ஆனால், 1939 ஆகஸ்ட் மாதம், மின்னாமல் முழங்காமல் நாசி ஜேர்மனியோடு ஒரு பகைமை தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஸ்ராலின் செய்து கொண்டார். மொலரோவ் - றிப்பன்ட்ரொப் உடன்படிக்கை என்ற பெயர் கொண்ட இந்த உடன்பாடு பகைமை தவிர்ப்பு ஒப்பந்தமாக இருந்தாலும், அது உண்மையில் ஐரோப்பாக் கண்டத்தைப் பங்கு பிரித்துக் கொள்ளும் ஒரு ஒப்பந்தமாக இருந்தது. இந்தப் பங்கு பிரிப்பு ஆரம்பித்தது போலந்தில். 1939, செப்ரெம்பர் 1 ஆம் நாள் ஜேர்மனி போலந்தின் மீது ஆக்கிரமிப்பை முடுக்கி விட்டது. அதிகாலை 4.45 மணிக்கு, நாசி ஜேர்மனியின் பீரங்கிக் கப்பலில் இருந்து போலந்தின் வட கரையோர நகரான டான்சிக் (Danzig, தற்போதைய பெயர் கடைன்ஸ்க் - Gdansk) மீது ஏவப்பட்ட முதல் குண்டு தான், இரண்டாம் உலகப் போரின் முதல் வெடியெனக் கருதப் படுகிறது. இரண்டு வாரங்கள் கழித்து, ஸ்ராலினின் சோவியத் ஒன்றியம் போலந்தின் கிழக்குப் பாதியைப் படையெடுத்து ஆக்கிரமித்தது. ஹிற்லர் ஸ்ராலின் கூட்டின் முதற்பலி போலந்து! போலந்தின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, எஞ்சியிருந்த நாசி எதிர்ப்பு நாடுகளான பிரான்சும், பிரிட்டனும் நாசி ஜேர்மனி மீது போர்ப் பிரகடம் செய்தன. ஆனாலும், அடுத்த சில மாதங்களில் நாசி ஜேர்மனியின் இராணுவ வலிமையை இந்த இரு நாடுகளின் தரை, வான், கடற்படைகளால் மழுங்கடிக்க இயலவில்லை. 1940 ஏப்பிரலில், மீண்டும் ஒரு சுற்று ஆக்கிரமிப்பை ஆரம்பித்த நாசி ஜேர்மனி சடுதியாக நோர்வே, டென்மார்க், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளை ஆக்கிரமித்திருந்தது. 1940 மே மாதம் ஆரம்பித்த போது மேற்கில் பிரான்ஸ் மஜினோ எல்லையை நோக்கி நாசிகள் நகர்ந்து கொண்டிருந்தார்கள். முடிவிற்கு வந்த குளிர்வித்தல் கனவு ஹிற்லரின் சடுதியான இராணுவ வெற்றிக்கு சம்பர்லினின் குளிர்வித்தல் கொள்கை ஒரு காரணம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், 1939 இல் சம்பர்லின் மியூனிக் உடன்படிக்கை மூலம் போரை தற்காலிகமாக ஒத்தி வைத்தாரென சில வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உதாரணமாக, பிரிட்டனின் றோயல் விமானப் படை (RAF) 1939 இல் ஒரு போரை எதிர்கொள்ளக் கூடிய ஆள், தளபாட பலங்களோடு இருக்கவில்ல. ஆனால் 1940 இல் நாசிகள் பிரிட்டன் மீது தொடர் விமானத் தாக்குதல்களை நடத்திய போது, ஓரளவுக்கேனும் தாக்குப் பிடிக்கும் அளவுக்கு றோயல் விமானப் படை வளர்ந்திருந்தது. ஆனால், ஹிற்லரின் வளர்ச்சிக்கு வழி கோலி விட்டார், தொடர் தோல்விகளுக்கு தலைமையாக இருக்கிறார், ஆகிய காரணங்களால் சம்பர்லின் தொடர்ந்து பிரதமராக இருக்கத் தகுதியற்றவர் என்ற எண்ணம் ஓங்கியது. அவரும் உடல் நலக் குறைவால் பதவி விலக, வின்ஸ்ரன் சேர்ச்சில் பிரதமரானது 1940, மே 10 ஆம் திகதி. சேர்ச்சிலின் வரவோடு, சண்டைக்காரனைக் குளிர்விக்க வேண்டுமென்ற குரல்கள் பிரிட்டனில் அடங்க ஆரம்பித்தன. வின்ஸ்ரன் சேர்ச்சில் சேர்ச்சில் பற்றி மேலும் எழுதுவதற்கு முன்னர் அவர் அப்பழுக்கற்ற ஒரு பூரணமான அரசியல் தலைவர் அல்ல என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும் (அப்படி யாரும் இன்றும் இல்லை என்பதே உண்மை). பிரிட்டனின் காலனி நாடுகளுக்கு சுதந்திரம் வழங்குவதை எதிர்த்த பிரிட்டன் அதிகார மட்டத்தில் சேர்ச்சில் முக்கியமானவர். உள்ளூரில், அரசியல் கொள்கையை விட தனது அரசியல் முன்னேற்றத்தை ஒரு படி மேலே வைத்திருந்த சேர்ச்சில் ஓரிரு தடவைகள் கட்சியை மாற்றிக் கொண்டார். ஆனால், இந்தக் குறைபாடுகளைத் தாண்டி ஒரு இக்கட்டான காலகட்டத்தில் தலைமையேற்க அவசியமான பல பண்புகளுக்கு சேர்ச்சில் சொந்தக்காரராக இருந்தார். 1. சிறந்த பேச்சாளர், எழுத்தாளர் - இதனால் தன் கருத்துகளை இலகுவாக பகிரங்கப் படுத்த முடிந்தது, போர்க்கால இங்கிலாந்தில் இந்தத் தொடர்பாடல் மிகவும் பலன் தந்தது. 2. பிரிட்டன் கடற்படையில் பணியாற்றிய அனுபவமும், முதல் உலகப் போரில் நேரடியாகப் பங்கு பற்றிய அனுபவமும் சேர்ச்சிலிடம் இருந்தன. எனவே, பிரதமரான சேர்ச்சில் அது வரை இல்லாதிருந்த பாதுகாப்பு அமைச்சை புதிதாக உருவாக்கி, தன்னிடமே வைத்துக் கொண்டு நேரடியாக பிரிட்டனின் படை நடவடிக்கைகளைக் கண்காணித்தார். 3. சேர்ச்சில் இறுதி வரை ஒரு வரலாற்று மாணவனாகவே இருந்தார். கடந்த காலங்களின் போர் வரலாறுகளை வாசிப்பதிலும், சமகாலப் போர்களை வரலாறாகப் பதிவு செய்வதிலும் ஆர்வமாக இருந்த சேர்ச்சிலுக்கு, அவரது எழுத்துப் பணிக்காக பிற்காலத்தில் இலக்கியத்திற்கான நோபல் பரிசும் வழங்கப் பட்டது. நாசி விமானப் படை விமானங்களைத் தேடி தூரநோக்கிக் கண்ணாடியூடாக அவதானிக்கும் றோயல் விமானப் படைத் தொண்டர் - இப்படி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ரேடாருக்கு மேலதிகமாக பணியில் இருந்தனர் (பட உதவி: நன்றியுடன் அமெரிக்க அரசு ஆவணக்காப்பகம்) நாசிகளை எதிர்க்கும் முயற்சியில், சேர்ச்சில் சில உடனடி நடவடிக்கைளை எடுத்தார். இது வரை நாசிகளின் தாக்குதல் பாணி, செறிவான விமானக் குண்டு வீச்சுகள் , பீரங்கித் தாக்குதல்கள் மூலம் இலக்கைச் சிதைத்து விட்டு, பின்னர் தரைப் படையை அனுப்பி ஆக்கிரமிப்பது என்பதாக இருந்தது (blitzkrieg - அதிரடி அல்லது செறிவடி எனத் தமிழில் கூறலாம்). எனவே, நாசிகளின் விமானத் தாக்குதலில் இருந்து நாட்டைக் காக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப் பட்டன. பிரிட்டனின் கரையோரங்களில் ரேடார் நிலையங்கள் அமைக்கப் பட்டன. றோயல் விமானப் படைக்கென புதிய விமானங்களை உற்பத்தி செய்வதற்கு தனியான ஒரு அமைச்சு உருவாக்கப் பட்டது - அதன் தலைவராக செயல்திறன் மிக்க ஒருவர் நியமிக்கப் பட்டு, ஆயிரக்கணக்கான புதிய தாக்குதல் விமானங்கள் சில மாதங்களிலேயே பாவனைக்கு வெளிவிடப் பட்டன. பிரிட்டனின் அந்தக் கால விமான இயந்திரவியல் தொழில்னுட்பத்திற்குச் சாட்சியாக ஹரிகேன் (Hurricane), ஸ்பிற்fயர் (Spitfire) ஆகிய சிறந்த சண்டை விமானங்கள் உருவாக்கப் பட்டன. கடற்படையைப் பொறுத்தவரை, பிரிட்டனை விடப் பலம் வாய்ந்த கடற்படை பிரான்சிடம் இருந்தது, ஆனால் பிரான்ஸ் நாசிகளிடம் தோற்றால் அந்தக் கடற்படையே பிரிட்டனுக்கு ஆப்பாகும் என்பதையும் சேர்ச்சில் உணர்ந்திருந்தார். இதனாலேயே, பிரான்ஸ் சுதந்திரமாக இருக்க வேண்டிய அவசியத்தை அடிக்கடி பிரெஞ்சுத் தலைவர்களிடம் நினைவுறுத்தி வந்தார் சேர்ச்சில். வீழ்ந்தது பிரான்ஸ் இந்த இராணுவ நிலவரத்தை மறுகரையில் இருந்த நாசிகளும் உணர்ந்திருந்தனர். எனவே, சேர்ச்சில் பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்ற அன்றே பிரான்சை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையையும் நாசிகள் ஆரம்பித்தனர். பிரெஞ்சுப் படைத்தலைமை தனது மஜினோ கோட்டின் வலிமையை சற்று அளவுக்கதிகமாகவே நம்பியிருந்தது. ஆனால், இந்த மஜினோ எல்லை என்பது ஒரு தொடரான காவலரண் சுவர் அல்ல. தெற்கே பிரான்ஸ் - இத்தாலி எல்லையில் ஆரம்பிக்கும் இந்தக் காவலரண்கள் நிறைந்த கற்பனைக் கோடு, சுவிஸ் எல்லையில் முடிவுற்று, பின்னர் ஜேர்மனியின் எல்லையோடு மீள ஆரம்பித்து, வடக்கில் பெல்ஜியத்தின் எல்லையோடு முடிவுறுகிறது. இந்த பெல்ஜியம்- பிரான்ஸ் எல்லையில் இருக்கும் ஆர்டென் காடுகள் (Ardennes forest) மிக அடர்த்தியான, நதிகளால் நிறைந்த ஒரு கன்னிக் காட்டுப் பிரதேசம். பிரெஞ்சுப் படைகளுக்கு, மஜினோ லைனைத் தாக்குவதாகப் பாசாங்கு காட்டிய நாசிகள், தங்கள் தாங்கிப் படையினரை இந்த ஆர்டென் காடுகளூடாக அனுப்பி பிரான்சின் வட கிழக்குப் பகுதியில் நுழைந்தார்கள். இது வரை எந்தப் படையாலும் ஊடுருவப் படாத ஆர்டென் காட்டினூடாக நாசிகள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பின்றி இருந்த பிரான்ஸ், பாரிய இழப்புகளுடன் அடுத்த ஒரு மாதத்தினுள் நாசி ஜேர்மனியிடம் சரணடைந்தது. தற்போது பிரிட்டனின் நிலைஅபாயகரமானதாக மாறி விட்டது. நிச்சயம் பிரிட்டன் நாசிகளின் இலக்காக இருக்கும். "பிரெஞ்சுக் கடற்படையை தான் கைப்பற்றப் போவதில்லை" என ஹிற்லர் உத்தரவாதம் வழங்கியிருந்தாலும், அவ்வுறுதியின் நம்பகத் தன்மையை உலகம் அறிந்திருந்தது. எனவே, சேர்ச்சில், பிரான்சுக்கு வெளியே அதன் காலனிகளில் தரித்திருந்த பிரெஞ்சுக் கடற்படையினருக்கு மூன்று தெரிவுகளைக் கொடுத்தார். ஒன்று: பிரிட்டனுக்கு அல்லது பிரிட்டன் காலனிகளுள் ஒன்றுக்கு கப்பல்களோடு வந்து விடுங்கள், உங்களை இணைத்துக் கொள்கிறோம், இரண்டு: எங்களிடம் சரண்டையுங்கள், கப்பல்களை வைத்துக் கொண்டு உங்களை விட்டு விடுகிறோம், மூன்று: கரீபியன் தீவுகளுக்குச் சென்று அமெரிக்காவிடம் கப்பல்களை ஒப்படையுங்கள், அமெரிக்கா யுத்தம் முடியும் வரை கப்பல்களை வைத்திருக்கும். சில நாட்கள் அவகாசம் கொடுக்கப் பட்ட பிறகும் இந்த மூன்றில் ஒன்றுமே நடக்காமையால், பிரிட்டன் கடற்படை பிரெஞ்சுக் கடற்படையின் கப்பல்களைக் கைப்பற்றும் நடவடிக்கைளை எடுக்க ஆரம்பித்தது. இத்தகைய ஒரு நடவடிக்கையின் போது ஆயிரம் பிரெஞ்சுக் கடற்படையினர் அப்போது பிரெஞ்சுக் காலனியாக இருந்த மொரொக்கோவின் துறைமுகமொன்றில் பிரிட்டனின் தாக்குதலில் கொல்லப் பட்டனர். இந்தக் காலப்பகுதியில், ஹிற்லரும் அவரது உள்வட்டத்தினரும் அடுத்த கட்ட நகர்வுகளைத் திட்டமிட ஆரம்பித்து விட்டிருந்தனர். ஹிற்லர் இன்னும் பிரிட்டனை ஆக்கிரமிக்கும் உத்தரவை வழங்கவில்லை. இதற்கு ஒரு காரணம் இருந்தது. அந்தக் காரணத்தை அடுத்த பாகத்தில் நாம் பார்க்கும் போது, ஏன் சேர்ச்சிலும், 1940 களில் வாழ்ந்த பிரிட்டன் மக்களும் உலகத்தை பேரழிவிலிருந்து காத்த புண்ணியவான்கள் என்பது புலப்படலாம். -தொடரும்..
    3 points
  4. இரெண்டுமே பிரச்சனைதான் மீரா. 1. நீங்கள் சொன்னது போல் காசை மட்டும் வைத்து ஒன்றும் செய்ய முடியாது. காசை வைத்து வாங்க பொருள், சேவைகள் இருக்க வேண்டும். இந்த நிச்சயமற்றதன்மை இலங்கையில் முன்பு போர்க்காலத்தில் கூட இருந்ததில்லை. இது ஒரு காரணம். அரிசி இறக்குமதி தீர்ந்து விட்டது என்றால் £50 உலையில் வைத்து வடித்து சாப்பிட முடியாது. போனவாரம் ஒருவரை சந்திதேன். பள்ளி நண்பர். மத்திய கிழக்கில் வேலை. நிகர மாத வருமானம் வரி இன்றி பவுண்சில் 10K எடுக்கிறார். இலண்டன் வரும் போது எபோதும் சந்திப்போம். இலங்கையில்தான் இதுவரை வீடு, முதலீடு எல்லாம். இந்த முறை சந்திப்பின் போது கேள்வி எல்லாம் - எப்படி இங்கே குடும்பத்தோடு வருவது என்பதை பற்றியே இருந்தது. இது ஒரு பாஷன் அல்லது trend அல்ல. மிக கவனமாக தமதும், பிள்ளைகளினதும் எதிர்காலத்தை திட்டமிட்டு, இலங்கையில் பல முதலீடுகளை செய்தவர்கள் - இப்போ இப்படி யோசிக்கிரார்கள். நாங்கள் வெள்ளைகாரன் பண்ணை வைக்கிறான் எண்டு பேய் கதை கதைக்கிறம். இது ஒன்றும் புதிதல்ல, வெள்ளைகளில் ஒரு adventure தேடி போக கூடிய பலர் உள்ளார்கள். 1991-96 ஆண்டு கால காபூலில் கூட கடை போட்ட ஆங்கிலேயன் இருக்கிறான். 2. இன்னொரு காரணம் - சுதந்திரம் இன்மை. இலங்கையில் தமிழனாக பிறந்த ஒவ்வொருவரும் இதை அனுபவித்து இருப்பர். இன்றைக்கும் முகத்தை காட்டி பயமின்றி முக நூலில் நம்மாள் பிரித்தானிய படைகள் ஈராக்கில் போர்க்குற்றம் செய்தன என எழுத முடியும். முடிந்தால் ஓணாண்டி அப்படி இலங்கை படைகள் பற்றி எழுதட்டும் பார்ப்பம்🤣. அவர் மட்டும் அல்ல, நாம் யாழில் கூட முகம் காட்ட மறுப்பது கொலிடே போக வேணும் எண்டுதானே 🤣? நான் முன்பே சொல்லி உள்ளேன் நான் இலங்கை போவது ஒரு வெளிநாட்டினாகத்தான். அங்கே போய் அரசியல் கதைத்தால் என்ன நடக்கும் என்பது எனக்குத்தெரியும். நான் இலங்கையில் நிண்டால் யாழுக்கு கூட வருவதில்லை 🤣. வெளிநாட்டில் இருந்து திரும்பி போய் அங்கே வாழும் முழுப்பேரும் இப்படி அரசியல் விடயத்தில் வாயையும், சப்பாத்தையிம் பொத்தி கொண்டுதான் வாழ்கிறார்கள். அதில் பிழை இல்லை. சொந்த ஊரில் வாழ அவர்கள் கொடுக்கும் விலை அது. ஆனால் எனக்கு அந்த விலையை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. லண்டனில் கஞ்சி குடித்தாலும் சுதந்திரமாக குடிப்பேன். ஊர் விடாய்த்தால் - ஒரு மாசம் போய் “மூடிக்கொண்டு” இருந்து விட்டு வந்து விடுவேன்🤣.
    3 points
  5. பையா... இந்த மகளிர் போட்டியில்... ஸ்ரீலங்கா, இந்தியா ஒன்றும் பங்கு பற்றவில்லையா. அடுத்தமுறை இந்த ஐசிசி மகளிர் போட்டி நடக்கும் போது... @குமாரசாமி தாத்தாவையும், அமெரிக்கன் @ஈழப்பிரியன் தாத்தாவையும் யாழ்களத்திலும் ஒரு போட்டி நடத்த சொல்லுங்கோ. 😂
    2 points
  6. பல ஆண்டுகளுக்கு முன்னர், குறிப்பாக, 2008 வங்கிகள் தள்ளாடும் முன்னர், வீடுகள் வாங்குவது மிக எளிது. அப்படி பல இந்தியர்கள் இங்கே குடும்பத்துக்கு சொல்லாமல் அல்லது பிறகு சொல்லிக்கொள்ளலாம் என்று வீடுகளை வாங்கி, அவைகளை நிர்வகிக்க முகவர்களிடம் கொடுத்து விடுவார்கள். 30, 40 முதல் 120 வீடுகள் வைத்திருந்த இந்தியர்கள் இருந்தார்கள். நாளைடைவில் பணம் பெருமளவில் வந்ததால், ஊருக்கு போய் நீண்ட நாள் தங்கி இருக்க தலைப்பட்டார்கள். இப்படி போன பலர், கொலையாகி இருக்கிறார்கள். பெரும் வன்முறை இல்லாமல், உணவில் விசம், விழுந்து இறத்தல், அல்லது வாகனத்தில் மோதி என்று மேலே போய் கொண்டிருந்தார்கள். இந்திய போலீசுக்கு காரணம் தெரியவில்லை அல்லது அக்கறை இல்லை. பிரிட்டிஷ் போலீசும், போன இடத்தில் இறந்து விட்டார் என்று முடித்து விட்டுக்கொண்டிருந்தார்கள். நூறு பேர் வரை இப்படி இல்லாமல் போய் கொண்டிருந்தார்கள். ஒரு பிரிட்டிஸ் பத்திரிகை இதை இந்தியாவில் உயிரிழக்கும் மில்லாலியனெயர் லாண்ட் லோட்ஸ் என கட்டுரையாகப் போட்டது. இது குறித்து ஒரு அனுபவமிக்க முகவரிடம் பேசும் போது, சிரித்த வாறே சொன்னார். பிரிட்டிஷ் சட்டப்படி, உரிமையாளர் வாடகை வாங்காவிடில், 15 வருடத்தின் பின்னர் அவர் உரிமை கொண்டாடி வரமுடியாது. இதனை இலங்கையில், ஆட்சி உரித்து என்பார்கள். ஆக, சிம்பிளால பல வீடுகளை வாங்கி, வாடகைக்கு விட்டிருக்கும் ஆளை, அங்கேயே முடித்து விட்டால், அந்த வீடுகள் முகவருக்கு சொந்தமாகிவிடும். தமிழரிடையே ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், தென் லண்டனில், ஒரு கோயில் தனி முதலாளி. உண்டியல் காசில் மொத்தம் 72 வீடுகள் அவர் பெயரில். மேலும், உறவினர்கள் பெயரில் பல வீடுகள். அவர் கோவிலுக்கு வந்த மொரிசியஸ் பெண்ணை இந்தியாவுக்கு தள்ளிக் கொண்டு போய், ரகசிய கலியாணம் செய்து, சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, வழியில்தமிழகத்தில், விபத்தில் இறந்து போனார்கள். திருப்பி வந்திருந்தால், சகலமும், அந்த பெண்ணுக்கே போயிருக்கும் அல்லவா. அதேபோல, ஜெயலலிதா காலத்தில், லண்டனில் தமிழ் கடை வைத்திருந்த ஒரு தமிழ் தம்பதி தமிழக யாத்திரை போன இடத்தில், அவருடைய கடையில் வேலை செய்த ஒருவன் செய்த வேலையால் தமிழகத்தில் கடத்தப்பட்டு, பணம் கப்பமாக கோரி, கடைசியில், லண்டன், தமிழக போலீசாரின் வேலையால் மீட்கப்பட்டு, சகலரும் உள்ளே போனார்கள். ஆகவே, அந்த வகையிலே என்ன சொல்ல வருகிறேன் என்றால், இப்ப, இந்த வியாதி உழைத்து, ஓய்வு பெற ஊருக்கு திரும்பும் எம்மவர் மேலும் நடக்கிறது. புரிஞ்சு, ஊருக்கு போனால், பந்தா காட்டாமல், நம்ம உடான்ஸ் சாமியார் மாதிரி, துன்னூரை அள்ளி பூசிக்கொண்டு, 'சச்சிதானந்தம், நீலகலகண்டம்' என்று இருங்கோ. ஓணாண்டியார் மாதிரி, கார், கார் ஓட்டுனர், வேலைக்காரி என்று இராதீங்கோ. (ஓணாண்டி, இதை கோசன் தான் திண்ணையில சொன்னவர். எனக்கு தெரியாது)
    2 points
  7. உண்மை தான் இதனால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அமெரிக்காவுக்கு. தேவையில்லாத ஆணியை புடுங்கினதும் 😂 புடுங்கினவனை இதை வைத்து போட்டு முடித்ததும் ஆக.....😂
    2 points
  8. நிதர்சனமான கருத்து. கோசான் நிறைய பேர் இப்பொழுது நாட்டை விட்டு வெளியேருகின்றார்கள். படிக்கவோ, வேலை வாய்ப்புக்னெவோ. பணம் உள்ளவர்களும் வசதியாக சொத்துக்களுடன் வாழ்பவர்களும் நாட்டை விட்டு வெளியேருகின்றார்கள். பலர் நல்ல தகவல்களுடன் யூ ரிப் வீடியோக்களை வெளியிடுகின்றார்கள். இங்கிலந்தில் இப்பொழுது வேலை அனுமதி இலகுவாக நிறைய கிடைக்கின்றது, சாதரண கடை வைதிருப்பவர்கள் கூட தங்களுக்கு விருபமானவர்களை எடுக்கலாம் என இந்த வீடியோவில் கூறுகின்றார்கள். என்னுடைய நண்பர்கள் 4 அல்லது 5 பேர் வ்ரை இந்த‌ 2 வருடங்ளில் (50 வயதில்) கனடா சென்றவர்கள். திழர்கள் இந்த நாட்டை விட்டு போவதே நல்லது. ஆம் மேலும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மிக இலகுவாக குடியுரிமயும் எடுக்கலாம். இலங்கை போலாவே இந்த நாடுகளின் கால நிலையும் இருக்கின்றது.
    2 points
  9. சன்சொனி ஆணைக்குழு 1978 ஆவணியில் யாழ்ப்பாணப் பொலீஸார் மேற்கொண்ட அட்டூழியங்களை விசாரிக்கவென சன்சொனி ஆணைக்குழுவை ஜெயவர்த்தனா அமைத்தார். ஆனால், விசாரணைகளின் முடிவில் ஆணைக்குழுவினரால் கண்டறியப்பட்டதாகக் கூறப்பட்ட பல விடயங்கள் தமிழ் மக்களை கடுமையாக ஏமாற்றி விட்டிருந்தன. பாராளுமன்றத்தில் ஆவணி 18 ஆம் திகதி அமிர்தலிங்கம் செய்த முறைப்பாட்டின் பின்னர் பொலீஸாரின் அடாவடித்தனத்தை விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை ஜெயவர்த்தனா அமைக்கப்போவதாக அறிவித்தபோது தமிழர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். ஆவணி 22 ஆம் திகதி பறங்கி இனத்தைச் சேர்ந்தவரும், மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டவருமான ஓய்வுபெற்ற முன்னாள் பிரதம நீதியரசர் சன்சொனியை ஜே ஆர் அணுகி யாழ்ப்பாணத்திலும் பின்னர் நாடு முழுவதும் தமிழ் மக்களுக்கெதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் தொடர்பான விசாரணைகளுக்குத் தலைமை தாங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது தமிழர்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகியது. ஒற்றை நீதிபதியின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்த விசாரணை ஆணைக்குழு மூன்று விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. 1. இலங்கையில் 1977 ஆவணி மாதம் 13 ஆம் திகதியிலிருந்து புரட்டாதி மாதம் 15 வரையான காலப்பகுதியில் நடைபெற்ற வன்முறைகளுக்கான மூல காரணம் மற்றும் வன்முறைகள் நடைபெறுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கியிருந்த புறக் காரணிகளைக் கண்டறிதல். 2. தனிநபரோ, அல்லது ஒரு குழுவோ அல்லது ஒரு அமைப்போ இந்த வன்முறைகளின் பின்னால் இருந்துள்ளதா என்று கண்டறிதல். 3. வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புணர்வாழ்வு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் இவ்வாறான வன்முறைகள் இனிமேல் நடவாதிருப்பது ஆகியவற்றிற்கான பரிந்துரைகளை மேற்கொள்வது. தனது முதலாவது அமர்வினை 1978 ஆம் ஆண்டு மாசி மாதம் 8 ஆம் திகதி ஆரம்பித்த ஆணைக்குழு இறுதியாக 1979 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 10 ஆம் திகதியுடன் தனது விசாரணைகளை பூர்த்தி செய்துகொண்டது. யாழ்ப்பாணம், அநுராதபுரம், கொழும்பு, கண்டி, திருகோணமலை ஆகிய இடங்களின் இந்த விசாரணைகளுக்கான அமர்வுகள் இடம்பெற்றன. விசாரணைகள் சாட்சியங்களூடு பூரணப்படுத்தப்பட்டிருந்தது என்று கூறலாம். விசாரணைகளின் இறுதி அறிக்கை 1980 ஆம் ஆண்டு ஆடி 22 ஆம் திகதி ஜெயவர்த்தனவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதே வருடம் கார்த்திகை 4 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆணைக்குழுவின் பிரதான குறிக்கோளாக இருந்தது வன்முறைகளுக்கான மூல காரணத்தையும், சூழ்நிலைகளையும் கண்டறிதல் மற்றும் வன்முறைகளின் பின்னாலிருந்த தனிநபர்கள் அல்லது அமைப்புக்களைக் கண்டறிதல் என்றே கூறப்பட்டிருந்தது. சுமார் 277 பக்கங்களைக் கொண்ட தனது அறிக்கையில் வன்முறைகளுக்கான மூல காரணம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் தலைமைப்பீடமே என்று தீர்க்கமாக வரையறை செய்துகொண்டே தனது அறிக்கையினைச் சமர்ப்பித்திருந்தார். வன்முறைகள் உருவாவதற்கான சூழ்நிலையினை நாட்டில் உருவாக்கியது முன்னணியினர் தான் என்று குற்றஞ்சாட்டிய சன்சொனி, வன்முறைகளைச் செய்தவர்கள் யாரென்பதை எவ்விடத்திலும் குறிப்பிட்டிருக்கவில்லை. தனிநாட்டிற்கான கோரிக்கையினை தமிழ்த்தலைவர்கள் முன்வைத்து வந்தமையும், தமிழ் ஆயுத அமைப்புக்களை ஊக்குவித்து வந்தமையுமே சிங்கள மக்களின் ஒரு பிரிவினரை இதற்கெதிரான பழிவாங்கல் நிலைக்குத் தள்ளியிருந்ததாக சன்சொனி குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு கூறியதன் மூலம் ஒரு நாட்டில் சிறுபான்மையின மக்கள் தமக்கும் சம அந்தஸ்த்துக் கோரும்போது, அது பெரும்பான்மையின மக்களைக் கோபப்படுத்துமிடத்து, சிறுபான்மையின மக்களுக்கெதிரான வன்முறைகளில் பெரும்பான்மையின மக்கள் இறங்கலாம் எனும் புதிய சட்டத் தேற்றத்தை உருவாக்கியிருந்தார். இதனை இன்னும் சுருக்கமாகக் கூறினால், "நீங்கள் பெரும்பான்மைச் சமூகத்தை கோபப்பட வைத்தால் அதன் விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பாளிகள்" அல்லது "பெரும்பான்மைச் சமூகத்தைக் கோபப்படுத்தியதால் உங்களுக்கு நீங்கள் கேட்டது கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று பொருள். சன்சொனி மேலும் கூறுகையில், "இலங்கையின் மொத்த மக்களையும் பொறுத்தவரையில் தனிநாடு என்பது வெறுக்கத்தக்க ஒரு விடயமாகும். அதனை பெரும்பான்மையின மக்கள் இறுதிவரை எதிர்ப்பார்கள். வன்முறைகளோ, அல்லது வன்முறைகளுக்கான ஊக்கப்படுத்தல்களோ மேலும் மேலும் வன்முறைகளையே கொண்டுவரும் என்பதை நாம் மறக்கக் கூடாது. 1977 ஆவணியிலும் புரட்டாதியிலும் இடம்பெற்ற சம்பவங்கள் எங்களுக்குக் கற்றுத்தரும் பாடங்கள் இவைதான்" என்று கூறினார். இந்த அறிக்கையினை ஆராய்ந்த பலர் சன்சொனி கூறியிருப்பது 1977 ஆம் ஆண்டு ஆவணி 18 இல் பாராளுமன்றத்தில் ஜெயவர்த்தன நிகழ்த்திய தமிழர்களைச் சீண்டும் விதமான ஆணவப் பேச்சிற்குச் சற்றும் சளைத்தது இல்லை என்று கூறியிருந்தனர். பாராளுமன்றத்தில் அமிர்தலிங்கத்தின் அறிக்கைக்குப் பதிலளித்துப் பேசிய ஜெயவர்த்தன பின்வருமாறு பேசியிருந்தார், "நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்களுக்கு இந்தப் பாராளுமன்றத்தில் இருக்கும் உறுப்பினர்களைப் போன்று, குறிப்பாக முன்வரிசயில் அமர்ந்திருக்கும் அதிகாரம் மிக்க உறுப்பினர்களுக்கு இருக்கின்ற பொறுமையோ சகிப்புத்தன்மையோ கிடையாது. தனியான நாடொன்றினை அமைக்கப்போகிறார்கள் என்று மக்கள் கேள்விப்படும்போது அவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை. இந்து சமுத்திரத்தின் திறவுகோல் திருகோணமலையென்று நெப்போலியன் ஒருமுறை சொன்னானாம், ஆகவே தமிழர்கள் தமது தனிநாட்டிற்குத் திருகோணமலையை தலைநகராக்கப் பார்க்கிறார்களாம். " "எது எப்படியிருந்தாலும், நீங்கள் தனிநாட்டுக்கான அறிக்கைகளை விடும்போது பத்திரிக்கைகள் அதனை நாடு முழுதும் கொண்டு செல்கின்றன. நீங்கள் வன்முறையினை விரும்பவில்லை என்று கூறிக்கொண்டே எதிர்காலத்தில் வன்முறையினைப் பாவிக்கலாம் என்று கூறும்போது, இலங்கையில் வாழும் மற்றைய மக்கள் என்ன செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்? உங்களுக்குப் போர் வேண்டும் என்றால், போர் செய்துபார்க்கலாம். உங்களுக்குச் சமாதானம் வேண்டுமென்றால், சமாதானம் செய்து பார்க்கலாம்" என்று ஜெயவர்த்தனா முழங்கியபோது அவரது கட்சியினர் பலத்த கரகோஷம் செய்தனர். கரகோஷங்களுக்குப் பின்னர் தொடர்ந்து பேசிய ஜெயவர்த்தன, "இதனை நான் சொல்லவில்லை, எனது மக்களே சொல்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் நடக்கும்போது, சிங்களவர்கள் தாக்கப்படும்போது, அவர்களது கடைகள் எரிக்கப்படும்போது, அங்கிருந்து தப்பி ரயில்களில் ஏறி தென்பகுதிக்கு வரும் சிங்களவர்கள் தமக்கு நடந்தவற்றைச் சொல்கிறார்கள். இதன் விளைவாகவே பல தமிழ் உயிர்களும், முஸ்லீம் உயிகளும் பலியாகின. இவை நடந்திருக்கத் தேவையில்லை. அவை நடந்ததற்காக நான் வருந்துகிறேன்" என்று கூறி முடித்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கெதிராக கடுமையான விமர்சனங்களை தொடர்ச்சியாக முன்வைத்துவரும் ராஜன் ஹூல் என்பவர் சன்சொனியின் அறிக்கை பற்றிக் கூறும்போது, பாதிக்கப்பட்ட 952 பேரின் சாட்சியங்களை 298 அமர்வுகளில் விசாரித்தும், பாதிக்கப்பட்ட 275 வாக்குமூலங்களை விசாரணை செய்தும் முடிக்கப்பட்ட அறிக்கையினை ஒருவர் படிக்கும்போதும், இந்த அமர்வுகளைத் தொடர்ச்சியாக பார்த்தும் வரும் போதும், 1977 ஆம் ஆண்டில் ஜெயவர்த்தனவின் ஆக்ரோஷமான பேச்சினை உறுதிப்படுத்தும் வகையில் அறிக்கயினை வெளியிடவேண்டும் என்கிற அழுத்தம் சன்சொனி மீது பிரயோகிக்கப்பட்டிருந்தது என்பது இலகுவாகப் புரியவரும் என்று கூறுகிறார். சன்சொனி தனது அறிக்கையின் முழுவதிலும் தனிநாட்டிற்கான கோரிக்கையும், அதனை நோக்கிய வன்முறைகள் அல்லது வன்முறைகளுக்கான ஊக்கப்படுத்தல்களே இனவன்முறைக்குக் காரணமாக அமைந்தன என்று கூறிவந்தார். தம்மீது நடத்தப்பட்ட சிங்களக் காடையர்களின் தாக்குதல்களுக்கு தமிழர்களே பொறுப்பெடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். "வன்முறைகளுக்கான சூழ்நிலையினை நீங்களே உருவாக்கினீர்கள், அதனையே நீங்கள் பெற்றுக்கொண்டீர்கள் " என்று அவர் தமிழர்களைப் பார்த்துக் கூறினார். இதுதான் அவரது தீர்ப்பு. அவர் சொல்லாது விட்ட ஒரு விடயம் தான், "வன்முறைகளுக்கு நீங்கள் தகுதியுடையவர்கள் தான்" என்பது. "தமிழர்களுக்குச் சரியான பாடம் ஒன்றினைப் புகட்ட வேண்டும்" என்பதும் "தமிழர்கள் தாக்கப்படும்போது, மற்றையபக்கம் பார்த்துக்கொண்டு நில்" என்று பொலீஸாருக்குக் கட்டளையிடுவதுமே சுதந்திர இலங்கையில் அரசியல் இலட்சணமாகிவிட்டது. தமிழர்களால் முதன் முதலாக முன்னெடுக்கப்பட்ட அகிம்சை வழியிலான போராட்டத்திற்கும் சிங்களவர்கள் கொடுத்த பதில் இதுதான். 1956 ஆம் ஆண்டு ஆனி 5 ஆம் திகதி, தமிழுக்கும் உத்தியோகபூர்வ மொழி அந்தஸ்த்தினை வழங்குங்கள் என்று அன்றைய பிரதமர் பண்டாரநாயக்கவைக் கோரி, காலிமுகத்திடலில் கால்களை மடித்து பிரார்த்தனையில் ஈடுபட்ட சுமார் 200 தமிழர்கள் மீது சிங்களக் காடையர்கள் மிருகத்தனமாகத் தாக்குதல் நடத்தியபோது, அருகிலிருந்து பொலீஸார் எதுவுமே செய்யாது வேடிக்க பார்த்துக்கொண்டிருந்ததுடன், பலர் வேறு திசையில் பார்த்துக்கொண்டிருந்தனர். சத்தியாக்கிரகம் தமிழ் மக்கள் மீதான "பாடம் புகட்டும் தாக்குதல்களும்" பொலீஸாரின் பாராமுகமும் அன்று கொழும்பிலும், மறுநாள் கல்லோயாவிலும் இடம்பெற்றன. 1958 ஆம் ஆண்டு இதே "பாடம் புகட்டுதல்களும்" பாராமுகமும் இன்னும் பெரிய அளவில் இடம்பெற்றன. 1961 ஆம் ஆண்டின் சமஷ்ட்டிக் கட்சியினர் செய்த சத்தியாக்கிரக போராட்டத்தைக் கலைப்பதற்கும் சிறிமா இதே அரசியல் கலாசாரத்தையே பாவித்தார். ஜே ஆரை பொறுத்தவரை வன்முறை என்பது ஆர்ப்பாட்டங்களை அடக்க தேவையானதும், வீரியம் மிக்கதுமாகக் காணப்பட்டது. ஆடி, 1977 ஆம் ஆன்டு தனது அரசியல் எதிரிகள் மீது, குறிப்பாக சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் மீது வன்முறையை ஏவிவிட்டார். தான் செய்யப்போவது குறித்து அவர் முன்னரே அறிவித்தும் இருந்தார். 1956 ஆம் ஆண்டின் சத்தியாக்கிரக நிகழ்வுபற்றி புத்தகம் ஒன்றினை எழுதிய எஸ் பொன்னையா, சிங்களவரின் அரசியல் கலாசாரம் வன்முறையினை அடிப்படையாகக் கொண்டது என்பதற்கான சாட்சியம் ஒன்றினை குறிப்பிட்டிருந்தார். 1956 ஆம் ஆண்டு, ஆனி 5 ஆம் திகதி, காலை 9:30 மணிக்கும் 10:00 மணிக்கும் இடையிலான நேரத்தில் பாராளுமன்றத்தில் தனது தனிச்சிங்களச் சட்டத்தினை பிரகடணப்படுத்த காரில் வந்துகொண்டிருந்தார் அன்றைய பிரதமர் எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்க. காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளோரைக் கண்டதும் தனது காரினை அவர் நிறுத்தினார். சத்தியாக்கிரகிகள் மீது சிங்களக் குண்டர்கள் சரமாரியாகத் தாக்குதல் நடத்துவதைப் பார்த்து சிரித்துக்கொண்டே சில நிமிடங்கள் அவர் அங்கே நின்றிருந்தார். அங்கு கடமையில் நின்ற சிரேஷ்ட்ட பொலீஸ் அதிகாரியொருவர் பண்டாரநாயக்காவின் காரின் அருகில் வந்து, "தாக்குதல் நடத்தும் குண்டர்களைக் கலைத்து விடலாமா?" என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த பண்டாரநாயக்கா, "இல்லையில்லை, அவர்களைக் கலைக்க வேண்டாம். தமிழர்களுக்கு ஒரு பாடம் புகட்டப்பட வேண்டும்" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். சிறிது நேரத்தின்பின்னர் தலையில் காயத்துடன் பாராளுமன்றம் வந்த அமிர்தலிங்கத்தைப் பார்த்து கேலியுடன் பேசிய பண்டாரநாயக்க, "போரில் ஏற்பட்ட விழுப்புண்களா?" என்று வினவினார். "தேர்தல்களின் பின்னர் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் பொலீஸாருக்கு விடுமுறை வழங்குங்கள்" 1977 ஆம் ஆண்டுத் தேர்தல்களின் பின்னர், அரச திணைக்கள வாகனங்களில் நாடு முழுவதும் பவனி வந்த ஜே ஆரின் ஆதரவாளர்கள் ஜே ஆரின் வெற்றியைக் கொண்டாடியதோடு, எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டனர். பொலீஸார் இவற்றைக் கண்டும் காணாததுபோல பார்வையை வேறு பக்கம் திருப்பிக்கொண்டனர். ஆவணி 77 இல் நடந்தவை இதற்குப் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளே. 1980 ஆம் ஆண்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்கள் மீதும் இதே பாணியிலான அரசியல் வன்முறைகளை ஜே ஆர் ஏவி விட்டார். தொழிற்சங்க தலைவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதோடு, பல தொழிற்சங்க உறுப்பினர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். 1981 இலும் 1983 இலும் தமிழர்களுக்கு மேலும் பல பாடங்கள் சிங்களவர்களால் கற்றுக்கொடுக்கப்பட்டன. 1984 ஆம் ஆண்டு, பிரதம நீதியரசரான ஹேமா பஸ்நாயக்கவுக்கும் பாடம் புகட்டப்பட்டது. ஜெயவர்த்தனவை விமர்சித்தார் என்பதற்காக அவரது உத்தியோகபூர்வ இல்லம் சுற்றிவளைக்கப்பட்டு காடையர்களால் தக்கப்பட்டு அவரும் அச்சுருத்தப்பட்டார்.
    2 points
  10. இன்று தாய்மொழி்தினம். எம் உயிரினுமினிய தமிழன்னைக்காக 2020 பெப்ரவரி 21 இல் நானெழுதிய அருட்புகழ் கீழே தரப்பட்டுள்ளது.
    1 point
  11. ஆராய்ச்சி படிப்பில் உயர்ந்து நிற்கும் தமிழ்நாட்டு பெண்கள் - முந்தைய அரசுகளின் பங்கு காரணமா? கட்டுரை தகவல் எழுதியவர்,இரா.சிவா பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES 2020-21ஆம் கல்வியாண்டிற்கான உயர்கல்வி குறித்த அகில இந்திய கணக்கெடுப்பு அறிக்கை சில வாரங்களுக்கு முன் வெளியான நிலையில், இந்திய அளவில் தமிழகத்திலேயே அதிக அளவு பெண்கள் ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த அறிக்கையில் உள்ள தகவல்களைக் கொண்டு பிற மாநிலங்களோடு தமிழகத்தை ஒப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். என்ன அறிக்கை? ஏஐஎஸ்ஹெச்இ (AISHE) எனப்படும் அகில இந்திய கணக்கெடுப்பு அறிக்கை மத்திய கல்வி அமைச்சகத்தால் ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படும். 2020-21ஆம் கல்வியாண்டிற்கான இந்த அறிக்கை 11ஆவது அகில இந்திய கணக்கெடுப்பு அறிக்கை. முதன்முறையாக இந்த அறிக்கை Web Data Capture எனப்படும் மின்னணு கோப்புகளில் இருந்து தரவுகளைப் பிரித்தெடுக்கப்படும் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், குறிப்பிட்ட ஒவ்வொரு கல்வியாண்டிற்கும் நாட்டில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மாணவர் சேர்க்கை விகிதம், பாலின அடிப்படையில் சேர்க்கை விகிதம், மாநில வாரியாக உயர்கல்வி சேர்க்கை உட்பட கல்வித்துறை குறித்த பல விவரங்கள் அடங்கியிருக்கும். நாட்டிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களிடமிருந்து பல்வேறு தரவுகள் சேகரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் புள்ளிவிவரங்களோடு உருவாக்கப்படும் விரிவான அறிக்கை என்பதால் இது பல ஆண்டுகளாக முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கையாகப் பார்க்கப்படுவதாக அண்மையில் வெளியான அறிக்கையின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது என்ன? தாய்மொழி ஏன் அனைவருக்கும் முக்கியம்?21 பிப்ரவரி 2023 தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், மாணவர்கள் வன்முறை அதிகரிக்க என்ன காரணம்?23 நவம்பர் 2022 "நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்3 பிப்ரவரி 2023 இந்த அறிக்கையில் பல்வேறு விவரங்கள் அடங்கியிருக்கும் நிலையில், அதில் தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பதிவாகியிருக்கும் எம்.ஃபில் மற்றும் பிஹெச்டி போன்ற ஆராய்ச்சிப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை விகிதங்கள் குறித்துப் பார்ப்போம். 2020-21 கல்வியாண்டில் தமிழ்நாட்டில் 34,411 பேர் பிஹெச்டி படிப்பில் சேர்ந்திருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது. இதில், 17,443 பேர் ஆண்கள், 16,968 பேர் பெண்கள். பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்திலேயே அதிக அளவிலான பெண்கள் பிஹெச்டி படிப்பில் சேர்ந்துள்ளனர். அதேபோல அதற்கு முந்தைய கல்வியாண்டில் 14,823 பெண்கள் சேர்ந்திருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. எம்.ஃபில் படிப்பில் தமிழகத்தில் 6,703 பேர் சேர்ந்திருக்கும் நிலையில், அதில் ஆண்கள் 1,696 பேர், பெண்கள் 5, 007 பேர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்தியாவிலேயே மொத்தம் 10,399 பெண்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இந்த அறிக்கை சில வாரங்களுக்கு முன்பே வெளியாகியிருந்தாலும், தற்போதுதான் சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது. தமிழகத்தில் பெண் கல்வி இந்த அறிக்கை தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் பெண் கல்வி மேம்பட்டிருப்பதை இந்த அறிக்கை காட்டுவதாகக் கூறினார். ``பெண்கள் படிக்க வேண்டிய அவசியமில்லை என்ற நிலைதான் இந்தியா முழுவதும் இருந்தது. 19ஆம் நூற்றாண்டில் மகாத்மா சாவித்ரிபாய் பூலேவும் மகாத்மா ஜோதிராவ் பூலேவும் பெண்கள் படிக்க வேண்டுமெனப் பேசுகிறார்கள் என்பதற்காக தங்கியிருந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. பெரும் போராட்டத்திற்குப் பிறகுதான் அவர்களால் பெண்களும், அனைத்து சமூகத்தினரும் சேர்ந்து படிக்கக் கூடிய பொதுப்பள்ளி முறையை மகாராஷ்டிராவில் உருவாக்க முடிந்தது. தமிழ்நாட்டில் எடுத்துக் கொண்டால் சுயமரியாதை இயக்கம் பெண் கல்வி குறித்துப் பெரிய அளவில் பேசியது. அதன் பிறகு வந்த அனைத்து அரசுகளுமே பெண் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தன,`` என்கிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு. படக்குறிப்பு, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு தொடர்ந்து பேசிய அவர், ``இன்று மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது நாம் முன் வரிசையில் இருக்கிறோம் என்றால் அதற்குப் பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட பெண் கல்வி ஊக்குவிப்பு நடவடிக்கைகள்தான் காரணம். தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் பூப்பெய்திய உடன் பள்ளிக்குச் செல்வதை பெரும்பாலான பெற்றோர்கள் நிறுத்தி வந்தனர். உடனே, 8ஆம் வகுப்பு முடித்தால் திருமணத்தின் போது ஐயாயிரம் பணம் வழங்கப்படும் என்று சமூக நலத்துறையின் கீழ் முதல்வராக இருந்த போது கருணாநிதி அறிவித்தார். அந்த நேரத்தில் இடைநிற்றல் வெகுவாகக் குறைந்தது. பின்னர், மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கி பெண் கல்வியை ஜெயலலிதா ஊக்குவித்தார். தற்போது அரசுக் கல்லூரிகளில் உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 பணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். பெண் கல்விக்காக தமிழக அரசு இப்படி பல்வேறு முன்னெடுப்புகளைத் தொடர்ந்து செய்து வருகிறது`` என்கிறார். அதிகரிக்கும் பிஹெச்டி ஆர்வம் பிஹெச்டி படிப்பில் அதிக அளவு பெண்கள் சேர்ந்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம்தான் எனக் கூறும் ஓய்வுபெற்ற பேராசிரியர் வே.பெருவழுதி, அதே நேரம் எம்.ஃபில் படிப்பில் பெரிய எண்ணிக்கையில் வித்தியாசம் இருப்பதற்குப் பிற மாநிலங்களில் எம்.ஃபில் படிப்பு நிறுத்தப்பட்டது அல்லது குறைக்கப்பட்டதே காரணம் என்கிறார். ``தற்போது உயர்கல்வியில் யூஜிசி விதிகள்தான் பின்பற்றப்படுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எம்.ஃபில். படிப்பை நிறுத்திவிட யூஜிசி முடிவெடுத்தது. ஆனால், கல்வி என்பது மத்திய மற்றும் மாநில அரசின் பொதுப்பட்டியலில் இருப்பதால் சில விஷயங்களில் மாநில அரசு முடிவெடுக்க முடியும். அந்த அடிப்படையில் தமிழகத்தில் எந்தெந்த பல்கலைக்கழகங்களுக்கு எம்.ஃபில் படிப்பு வேண்டுமோ அவர்கள் தொடரலாம் என தமிழக அரசு கூறியது. அந்த வகையில் தமிழகத்தில் சில பல்கலைக்கழகங்களில் இன்னும் எம்.ஃபில் படிப்பு தொடர்கிறது. ஆனால் தமிழக அரசு எம்.ஃபில் படிப்பைத் தொடருமா என்பது தெரியவில்லை`` என்கிறார் ஓய்வுபெற்ற பேராசிரியர் வே.பெருவழுதி. படக்குறிப்பு, ஓய்வுபெற்ற பேராசிரியர் வே.பெருவழுதி எம்.ஃபில் படிப்பு கட்டாயம் இல்லை என யூசிஜி அறிவித்துவிட்ட நிலையில், அந்தப் படிப்பை தமிழகத்தில் இத்தனை பெண்கள் தேர்வு செய்ததற்கு என்ன காரணம் என்று அவரிடம் கேட்டோம். ``தமிழகத்தில் உயர்கல்வி படிக்கும் பெண்களிடம் பிஹெச்டி படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. ஆனால், இன்றைக்கு பிஹெச்டி படிப்பிற்கு நுழைவுத்தேர்வு உட்பட நிறைய கட்டுப்பாடுகள் வந்துவிட்டன. அதனால் பிஹெச்டி வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை. எனவே அவர்கள் எம்.ஃபில் படிப்பைத் தேர்தெடுக்கின்றனர்`` என்றார் பேராசிரியர் வே.பெருவழுதி. கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் அனைத்துக் கல்லூரிகளிலுமே பெண்கள் சேர்க்கை அதிகம் இருப்பதைப் பார்க்க முடிவதாகக் கூறும் பேராசிரியர் வே.பெருவழுதி, தமிழகத்தில் பெண்கள் கல்வி கற்பதற்கான சூழல் சிறப்பாக இருப்பதாகக் கூறுகிறார். `பெண்களுக்கு கல்வி வேண்டும், கல்வியைப் பேணுவதற்கு` என்ற பாரதிதாசனின் வரிகளைச் சுட்டிக்காட்டும் பிரின்ஸ் கஜேந்திர பாபு, கடந்த காலங்களில் அரசு மட்டுமல்ல தமிழ் இலக்கியத்தளங்களிலும் பெண் கல்வியின் அவசியம் இதுபோல வெகுவாக வலியுறுத்தப்பட்டது என்கிறார். https://www.bbc.com/tamil/articles/c724kdy02vzo
    1 point
  12. 1 point
  13. காவோலை விழ குருத்தோலை சிரிக்குமாம்.....அது போல சம்சுங், அப்பிள் கொம்பனியளுக்கும் ஒரு வில்லன் வருவான். 😎
    1 point
  14. இவர்களே உருவாக்கிய கதையா அல்லது கதை தெரிந்தவர்கள் அங்கே இருந்தார்களா? அணிந்திருந்த தாலிக்கொடியை விட கொள்ளையடிக்கப்பட்ட தொகை பெரிது, அதில் கொள்ளையர்களுக்கு வெள்ளையடிப்பு வேற!
    1 point
  15. அட்ரா ச‌க்கை அம்ம‌ன் கோவில் புக்கை த‌மிழ் சிறி அண்ணா பார்த்திங்க‌ளா அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு இப்ப‌வும் பெரிய‌ நினைப்பு இள‌மை ஊஞ்ச‌ல் ஆடுது என்னு ஹா ஹா 🤣😁😂................
    1 point
  16. இன்னும் துடுப்பாட்டம் ஆடிக் கொண்டிருக்கும் இளைஞர்களைப் பார்த்து தாத்தா என்று அழைத்ததற்கு எமது அணியின் சார்பில் மிகுந்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது மைதானத்தில் பந்து பொறுக்கும் @பையன்26 க்கும் சேர்த்து தான்.
    1 point
  17. வற்றிய குளத்தை பறவைகள் தேடி வருவது கிடையாது. வாழ்க்கையில் துன்பம் வருகின்ற போது உறவுகள் கிடையாது.
    1 point
  18. ம்ம்ம்ம்ம். நம் பெரும் தலைவர்கள், கொள்கை குன்றுகள் இரத்த திலகமிட்டு எம்மை போகாத ஊருக்கு வழிகாட்டிய போது அங்க இந்த கள்ள அரசியல்வாதிகள் எவ்வளவு மொள்ளமாரித்தனம் பண்ணி இருக்கானுவோ.
    1 point
  19. ஆக, இந்திய இறக்குமதிக் கடவுள் ஐயப்பனால் தன் பிரதான குருசாமியைக் கூட வாள் வெட்டில் இருந்து காப்பாற்ற முடியவில்லை. அச்சோ அச்சோ...
    1 point
  20. தாக்குதலுக்குள்ளானவர் ரொரண்டோ ஐயப்பன் ஆலயத்தின் பிரதான குருசாமி என்று சமூக வலைத்தளங்களில் பரப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. ஆனாலும்,இத் தகவலை உறுதிப்படுத்தக் கூடியவாறு ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.
    1 point
  21. மீண்டும் மீண்டும் ரயில் கொள்ளையன் ரொனி பிக்ஸ் கதையை எழுத தூண்டுகிறீர்கள் 😀.
    1 point
  22. நாங்க அதிலும் விண்ணர்கள் அதனால் தான் புலத்தின் கடவுச்சீட்டையும் அத்துடன் மிகமிக முக்கியமாக மெடிக்கல் காட்டையும் எறிவதில்லை
    1 point
  23. 👏👏👏👏 பத்தரமுல்ல வில் மட்டுந்தான் “வெளிநாட்டுக் கடவுச்சீட்டிற்கு”ஓரளவுக்கு மனிதாபிமானம் காட்டுவார்கள். அங்கும் வெள்ளை வந்தால் அவர்களுக்கே முன்னுரிமை சலுகைகள்.
    1 point
  24. தலைவர்கள் உலகுக்கு தேவையான முடிவுகளை அவசரமாக சரியான நேரத்தில் எடுக்கணும். அதுவே இன்றைய தேவை. வாழ்த்துக்கள் டென்மார்க் அரசுக்கு.
    1 point
  25. வன்முறைக் கலாசாரத்தை நியாயப்படுத்திய நீதிபதி சன்சொனி சன்சொனி தனது விசாரணை அறிக்கையில் வன்முறைக் கலாசாரத்தை நியாயப்படுத்தியிருந்தார். விசாரணைகளின் இரு முக்கிய வினாக்களுக்கான பதிலை அவரால் இறுதிவரை கண்டறிய முடியாமற்போனதே அவரது விசாரணை முற்றாகத் தோல்வியடைவதற்குக் காரணமாகியது. ஆவணி 16 ஆம் திகதி அதிகாலை யாழ்ப்பாணச் சந்தைக்குத் தீ வைத்தது யாரென்பதையும், யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த தமிழருக்கெதிரான வன்முறைகள் பின்னர் நாடு முழுதிற்கும் எவ்வாறு பரவின என்பதற்கும் அவரால் காரணங்களைக் கண்டறிய முடிந்திருக்கவில்லை. ஆவணி 16 ஆம் திகதி காலை யாழ்ப்பாணம் பழைய சந்தைப்பகுதிக்குத் தீவைத்தது யார்? இது நடந்த சூழ்நிலையினை மீளுருவாக்கம் செய்வதற்கு சன்சொனியினால் சேகரிக்கப்பட்ட ஆதராங்களை நாம் முதலில் பார்க்கலாம்ம். ஆவணி 15 ஆம் திகதி, பிற்பகல் புத்தூர் சந்தியூடாக சைக்கிள்களில் பயணம் செய்துகொண்டிருந்த மூன்று இளைஞர்களை பொலீஸார் மறிக்கின்றனர். பொலீஸார் தம்மை மறிக்கவே, தாம் வந்த சைக்கிள்களை எறிந்துவிட்டு அந்த இளைஞர்கள் தப்பியோடிவிட்டனர். அப்படித் தப்பியோடிய இளைஞர்களில் ஒருவர் தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியினால் பொலீஸாரை நோக்கிச் சுட்டுவிட்டே ஓடியிருக்கிறார். இச்சம்பவத்தின்போது பொலீஸ் கொன்ஸ்டபிள் பண்டாரவின் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. ஆவணி 15 பிற்பகல் நடந்த இந்த சம்பவம் குறித்து யாழ்ப்பாணப் பொலீஸ் அத்தியட்சகர் ஏ எஸ் செனிவிரட்ணவை கொழும்பு டெயிலி சண் பத்திரிகைக்காக யாழ்ப்பாண நிருபர் எல் ஏ சவரிமுத்து பேட்டி கண்டிருந்தார். செனிவிரட்ண இச்சம்பவம் குறித்து மிகுந்த ஆத்திரத்துடன் காணப்பட்டார். செய்தியாளரிடம் பேசிய பொலீஸ் அத்தியட்சகர், அரச ஊழியரான பண்டார மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்காக தமிழ் மக்கள் பாரிய விலையைச் செலுத்தவேண்டி வரும் என்று எச்சரித்திருந்தார். தமிழ் பொலீஸ் கொன்ஸ்டபிளான சட்டநாதப்பிள்ளை வழங்கிய வாக்குமூலத்தில், "இச்சம்பவம் நடந்த ஆவணி 15 ஆம் நாள் இரவு தனது வாசஸ்த்தலத்தில் பொலீஸார் அனைவரையும் அழைத்த யாழ்ப்பாணப் பொலீஸ் அத்தியட்சகர் செனிவிரட்ண, கூட்டம் ஒன்றினை நடத்தியிருந்தார். இக்கூட்டத்தில் பேசிய அத்தியட்சகர் தமிழரை மிகவும் இழிவாகப் பேசியிருக்கிறார். சிங்களப் பொலீஸாரின் மீது சுடுவதென்பது இனிமேல் பொறுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று அவர் அங்கு பொலீஸாரின் முன்னிலையில் கூறியிருக்கிறார். அக்கூட்டம் முடிந்தபின் ஒரு தொகுதி பொலீஸார் தமது நடவடிக்கைப் புத்தகத்தில் புங்குடுதீவுக்குச் செல்கிறோம் என்று கூறிவிட்டு, யாழ்நகருக்குள் சென்று அங்கிருந்த பழைய சந்தைக்கு காலை 1:30 மணியளவில் தீவைத்தனர்" என்று அவர் கூறியிருந்தார். பொலீஸாரே யாழ்ப்பாணம் பழைய சந்தைக்குத் தீவைத்தனர் என்பதை அப்பகுதியில் வியாபார நிலையங்களை நடத்திவந்த வர்த்தகர்களும், ஏனையோரும் உறுதிப்படுத்தியிருந்தனர். அவர்களின் கூற்றுப்படி சுமார் 100 பேர் அடங்கிய பொலீஸ் குழுவொன்று வாகனங்களில் வந்திறங்கி சந்தைப்பகுதிக்குத் தீவைத்திருக்கிறார்கள். சந்தைக்குத் தீவைத்தவர்களின் தலைமுடி குட்டையாக வெட்டப்பட்டிருந்தது. அவர்கள் காக்கிக் காற்சட்டைகளை அணிந்திருந்தனர். அவர்களிடம் ஆயுதங்கள் இருந்தன. அவர்கள் சிங்களத்தில் தமக்குள் பேசிக்கொண்டார்கள். அவர்கள் பொலீஸ் வாகனங்களிலேயே வந்திறங்கியிருந்தார்கள். அவர்கள் வந்திறங்கிய பொலீஸ் வாகனங்கள் யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. அப்பகுதியில் வியாபார நிலையங்களை நடத்திவந்த பல வர்த்தகர்கள் இதுகுறித்து வழங்கியிருந்த வாக்குமூலங்களில் , சந்தைப்பகுதிக்கு பொலீஸார் தீவைக்கிறார்கள் என்கிற செய்திபரவியபோது, மக்கள் அப்பகுதிநோக்கி அணிதிரண்டதுடன், சந்தைக்குத் தீவைத்துக்கொண்டிருந்தவர்கள் மீது கற்களை வீசியும் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். பொலீஸார் சந்தையின் ஏனைய பகுதிகளுக்குள் நுழைந்து எரிப்பதை தடுப்பதற்கு மக்கள் வீதிகளில் டயர்களை எரித்து பொலீஸாரின் நடமாட்டத்தைத் தடுக்க முனைந்திருக்கிறார்கள். தமிழர்கள் அப்பகுதிக்கு அதிகமாக வருவதுகண்டு உசாரான பொலீஸார் தாம் வந்த வாகனங்களில் ஏறி பொலீஸ் நிலையம் நோக்கிச் சென்றிருக்கிறார்கள். ஆனால், இச்சட்சியங்களை முற்றாக மறுத்த சன்சொனி, "இவை போதுமானவையாக இல்லை, பொலீஸார் மீது வேண்டுமென்றே பழிசுமத்தும் நோக்கோடு கூறப்பட்ட குற்றச்சட்டுக்கள்" என்றும் கூறியிருந்தார். அப்படியானால் பழைய சந்தையினை எரித்தது யார்? உதவிப் பொலீஸ் மாதிபர நூர்டீன் தலைமையில் ஆதாரங்களைச் சேகரித்த குழு, யாழ்ப்பாணம் சந்தைப்பகுதியில் குழுவொன்று தீவைப்புச் சம்பவத்தில் ஈடுபடுவதாகத் தமக்குத் தகவல் கிடைத்ததாகவும், அதன்பின்னர் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்ட பொலீஸார் அங்கு சென்றதாகவும் கூறியிருந்தது. இதனையே சன்சொனி சாட்சியமாக ஏற்றுக்கொண்டார். சன்சொனி தனது அறிக்கையில், சந்தைப்பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட சமூக விரோதிகளை அடக்கவே பொலீஸார் அப்பகுதிக்குச் சென்றனர் என்று இதனை முடித்திருந்தார். சன்சொனி பல சாட்சியங்களை வேண்டுமென்றே உதாசீனம் செய்திருந்தார். மதிப்பிற்குரிய பிரமுகர்களான வைத்தியர் பாலசிங்கம், வர்த்த பெரும்புள்ளி எம் ஆர் ஜோசேப் ஆகியோர் கூறிய "பொலீஸாரின் அட்டூழியங்கள்" எனும் கருத்தை அவர் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஜோசேப் வழங்கிய வாக்குமூலத்தில் உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் தனது வாகனத்தில் யாழ்ப்பாணப் பேரூந்து நிலையம் நோக்கி வெகு வேகமாகப் பயணித்ததைக் கண்டதாகவும், அங்கு வன்முறைகளில் ஈடுபட்டிருந்த பொலீஸாரைப் பார்த்து, "அவர்களை நாய்களைப் போல் சுட்டுத் தள்ளுங்கள், நாங்களா அவர்களா என்று பார்த்துவிடலாம்" என்று கட்டளையிட்டதாகவும் கூறினார். சன்சொனி கேட்கமறுத்த கேள்விகளாவன, 1. வன்முறையில் ஈடுபட்ட குழு எதற்காக நகர்ப்பகுதியை அதிகாலை 1:30 மணிக்குத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது? 2. தமிழர்கள் தமது சொந்த நகரையே தீவைத்து எரிக்க வேண்டிய தேவை என்ன?
    1 point
  26. தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு என்பது போல் அவரவர்களுக்கு பிடித்ததை செய்வது அவரவர் சுதந்திரம்.😎
    1 point
  27. ஈரான் இதனை நிச்சயம் செய்யவேண்டும். அமெரிக்காவுக்குப் பாடம் புகட்டவேண்டும்.
    1 point
  28. இப்போது சிறுவர்கள் பெரியோர்கள் சுற்றுலா செல்லும் இடம்.
    1 point
  29. ஓம் ஆனால் பிரிமியர் லீக், லா லீகா, புண்டஸ்லீகா வில் ஏலாது…… ஏதாவது சவுதி லீக்க்கில் தூள் கிளப்பலாம்🤣 பிகு அது சரி உங்கட பேரன் @பையன்26 என்ன உக்கல் கலர்ல கொடி போட்டிருக்கிறார்?🤣
    1 point
  30. ஜப்பானியர்களும், ஆங்கிலேயரும் மட்டும் அல்ல, தெனமரிக்காவில் ஸ்பானியரும், கிழக்கிந்தியாவில் பிரான்ஸ், போச்சுகல், டச்சுகாரரும்…ஆபிரிக்காவில் பெல்ஜியம், ஜேர்மனியும், மத்திய ஆசியா, ஐரோபாவில், சொந்த மக்களின் மீதே ஸ்டாலினின் ரஸ்யர்களும் கொடூரத்தையே புரிந்தார்கள். ஆனால் நாஜிகள் மட்டும்தான் அதை யூதர் விடயத்தில் அங்கீகரிக்கப்பட்ட கொள்கை முழக்கமாக்கி செய்தார்கள். அத்தோடு அநீதி இழைக்கபட்ட இனமும் அதை மிக தெளிவாக தொடர்ந்தும் வலியுறுத்துகிறது. இதனால்தான் நாஜிகள் தனியாக பேசப்படுகிறனர். ஏனைவர்கள் சுரண்டும் இனவாதிகளாக இருந்தார்கள். நாஜிகள் யூத இனத்தை சுவடின்றி அழிப்பதை கொள்கையாக்கி செயல்பட்ட இன தூய்மைவாதிகளாக இருந்தார்கள்.
    1 point
  31. சீட்டுக்காசு, கடைதிறத்தல், நிர்வகித்தல், ஊழியர்களின் செயற்பாடு, மேலாடையை எப்படி அளவெடுக்கும் தொழில் நுட்பம், ஊடல் கூடல் என ஒரு விறுவிறுப்பான திரைப்படத்தைப் பார்ப்பதுபோல் நகர்த்தியமை சிறப்பு. சுவியவர்களே பாராட்டுகள். யாழினது எழுதாற்றல் கொண்டோரில்,நீங்கள் மக்களது வாழ்வியலை படைப்பதில் தனித்தன்மையுடையவர். நன்றி
    1 point
  32. நீங்கள் same side goal போடுகிறீர்கள். இங்கு ஓணாண்டியார் உட்பட ஒரு சிலர் தான் சிறீலங்காவில் காசிருந்தால் பாலும் தேனும் ஓடும் என்கிறார்கள். காசிருந்தாலும் சிலவேளைகளில் உபயோகிக்க முடியாது என்று அனுபவம் கூறுகிறது. இது தான் வேறுபாடு
    1 point
  33. இந்த ஆய்வாளர் ஏதோ சொல்வதற்காக இந்த சம்பவத்தை எடுத்துக் கொண்டு எல்லாவற்றையும் முடிச்சு போடுகிறார். கொலை எந்த உருவில் வந்தாலும் கண்டிக்கப்படணும் என்பது எவ்வளவு சரியோ அதே அளவுக்கு சரியானது இது போன்ற கோர்த்து விடுதலையும் கண்டித்தல். ஆண் வர்க்கத்தை இச்சம்பவத்தில் காப்பாற்ற துடிக்கிறார்கள் என்றவர் இதன் உண்மையான காரணத்தையாவது இங்கே குறிப்பிட்டிருக்கணும். இல்லையெனில் இரண்டும் ஒன்று தான். ஆணவக்கொலை என்றவர் அதற்கான எந்த சாட்சியையும் முன்வைக்கவில்லை. கொலை கண்டிக்கத்தக்கது ஆனால் அந்த குற்றத்தை வேறு சம்பவங்களுக்கு துணையாக பாவிப்பதும் குற்றமே.
    1 point
  34. ப‌வ‌ர்பிலேக்க‌ தென் ஆபிரிக்க‌ ம‌க‌ளிர் அணி ஆமை வேக‌த்தில் ஆடின‌ ப‌டியால் தான் தோல்வி தொட‌ர்ந்து அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் அணியின‌ர் வெல்வ‌து சீ என்டு கிட‌க்கு இனி வ‌ரும் ம‌க‌ளிர் கிரிக்கேட்டில் இந்திய‌ ம‌க‌ளிர் அணியின‌ர் முன் நிலைக்கு வ‌ர‌க் கூடும்...............
    1 point
  35. உண்மையை சொல்ல போனால் தமிழ்சிறி நீங்கள் எழுந்து நடப்பீர்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை ...வேலைக்கு போவதையிட்டு மிக்க மகிழ்ச்சி ...உங்கள் தன்னம்பிக்கைக்கு ஒரு சபாஷ் ...உங்கள் குடும்பத்தினரும் உங்களுக்கு பக்க பலமாய் இருந்திருப்பார்கள் ...வாழ்த்துக்கள்
    1 point
  36. நான் இதை பணம், மனம் என பார்க்கவில்லை. நிகழ்ந்த இழப்புக்கு ஈடு அவசியம். விபத்துக்களின் பின் விழைவுகள் நீண்ட நாளின் பின்பும் தெரிவது உண்டு. அப்போ யோசித்து பயனில்லை அல்லவா? வேலையிட முகசுழிப்பு வரும் என்பது உண்மைதான். ஆனால் முதலாளியாக நான் இருந்தால், இப்படி இழப்பீடு கேட்கும் தொழிலாளியை முகம் சுழிக்கமாட்டேன். நல்லவேளை காப்புறுதி இருக்கிறது, அவர்கள் கட்டட்டும், இந்த மனிதருக்கும் போதிய ஈடு கிடைக்கட்டும் என்றே இருப்பேன். 👆🏼இதுதான் நல்ல மனம் என நினைக்கிறேன். அடுத்த வருடம் எனது பிறிமியம் கூடும்தான். ஆனால் அதுதான் தொழில் முனைவதன் ரிஸ்க்.
    1 point
  37. அனுபவியுங்கள் மகா ராஜாவே, நீங்கள் அதற்கு தகுதியுள்ளவரே!
    1 point
  38. நீங்கள் எப்போது சொன்னீர்கள் விபத்து நடந்தால் பொரும் தொகை பணம் கிடைக்கும் என்று? நான் உங்களை சொல்லவே இல்லை. சிறிஅண்ணா வேலை இடத்தில் நடந்த விபத்துக்கு நட்ட ஈடு கொடுக்கமாட்டார்கள் என்று சொன்னதை படித்த போது விபத்து நடந்தால் பொரும் தொகை பணம் கிடைக்கும் என்று சுலபமாக சொல்லி கொள்பவர்கள் நினைவிற்கு வந்தார்கள்.
    1 point
  39. வெள்ளைகாரன் நூறு வருசம் முதல் கட்டிய பாலத்துக்கு மாற்றுப் பாலமும் கட்டவில்லை. இருக்கும் பாலத்தை பராமரிக்கவும் முடியவில்லை. ஆனால் வாலரசு கனவுக்கு மட்டும் குறையில்லை🤣
    1 point
  40. ஒருங்கிணையும் சிங்கள இனவாதிகள் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் செயல்களை நியாயப்படுத்தி வாதிடுவதற்கென்று ஒரு சிறந்த பேச்சாளர் இருந்தார். அவரது பெயர் ஜி எம் பிரேமச்சந்திர. அவர் பாராளுமன்றத்தில் அரசுக்கு முன்வைத்த கோரிக்கையில் அனைத்து பிரிவினைவாத அமைப்புக்களையும் உடனடியாகத் தடைசெய்யவேண்டும் என்று கேட்டிருந்தார். சகல சிங்கள இனவாத அமைப்புக்களுக்கும் இதன்மூலம் செயற்படுவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. இவற்றுள் முக்கியமானது மூன்று நிக்காயக்களின் சங்க சபா என்றழைக்கப்பட்ட மூன்று முக்கிய பெளத்த பீடங்களின் பெளத்த பிக்குகளும் உள்ளடங்கிய பெளத்த இனவாத அமைப்பு. இவ்வமைப்பு அரசுக்கு விடுத்த கோரிக்கையில் சிங்களவர்களுக்கெதிராகவும், நாட்டிற்கெதிராகவும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பிரச்சாரம் செய்யும் அனைவருக்கும் எதிராக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டிருந்தது. இவ்வமைப்பைத் தொடர்ந்து நாட்டிலுள்ள அனைத்து சிங்கள பெளத்த இனவாத அமைப்புக்களும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைக் கண்டிக்கத் தொடங்கியதுடன் அமிர்தலிங்கத்தின்மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இவர்கள் சிலரின் தீர்மானங்கள் அமிர்தலிங்கத்தை "துரோகி" என்று விழித்திருந்தன. ஐக்கிய பெளத்த மண்டலய எனும் பெளத்த சிங்கள அமைப்பு தனிநாட்டிற்கெதிரான தீர்மானத்தினை நிறைவேற்றியது. அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்கர் பலிபான சந்தானந்த தேரரும், மல்வத்தை பீடத்தின் அனுனாயக்கரான ரம்புக்வல்ல சிறி சோபித தேரரும் இத்தீர்மானங்களுக்கு தமது ஆதரவினைத் தெரிவித்திருந்ததுடன், தனிநாட்டிற்கான கோரிக்கையினையும் வெகுவாகக் கண்டித்திருந்தனர். சிங்கள ஆங்கில நாளிதழ்கள் சிங்களவரின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டு வந்ததுடன் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் தமிழருக்கும் எதிரான செய்திகளையும் கருத்துக்களையும் தாங்கி வந்தன. சிங்களப் பத்திரிக்கைகள் தமது ஆசிரியர் தலையங்கத்தில் சிங்களவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு தமிழர்கள் செய்யவேண்டியவை என்ன என்கிற தலைப்பிலும் தமிழர்கள் தமது தனிநாட்டுக் கனவினை ஏன் கைவிடவேண்டும் எனும் தலைப்பிலும் வெளியிடப்பட்டன. அரச ஆதரவிலான டெயிலி நியூஸ் பத்திரிக்கை தனது ஆசிரியர்த் தலையங்கம் ஒன்றில் "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தமது தனிநாட்டுக் கனவினை தூக்கிக் குப்பையில் போடவேண்டும்" என்று கூறியிருந்தது. "பிரிவினவாதகளான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தமது தனிநாடான தமிழ் ஈழத்திற்கான கோரிக்கையினை முன்வைப்பதனை உடனடியாக நிறுத்த வேண்டும். பயங்கரவாத நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரிகளைக் கொல்லுதல், வங்கிகளைக் கொள்ளையிடல், அச்சுருத்தல்களில் ஈடுபடுதல் ஆகிய நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட வேண்டும்" என்றும் அது கூறியிருந்தது. தனது கட்டுப்பாட்டினை இழந்த அமிர்தலிங்கம் தமது அரசியல்த் தலைவர்களைப் போலவே சிங்களப் பத்திரிக்கையாளர்களும் தமிழர்களின் உணர்வுகளுக்கு எந்தவித முக்கியத்துவமும் கொடுக்க விரும்பவில்லை. அமிர்தலிங்கத்தை சிங்களவர்களின் நலன்களுக்கு அடிபணியவைக்கும் தமது முயற்சிகள் மொத்தத் தமிழ்ச் சமூகத்தின்மீது, குறிப்பாக தமிழ் இளைஞர்கள் மீது எவ்வகையான தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதனை அவர்கள் ஒருபோதுமே எண்ணிப்பார்க்க விரும்பியதில்லை. தமது அழுத்தங்களுக்கு அமிர்தலிங்கத்தைப் பணியவைக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகள் தமிழர்கள் முன்னால் அவரை கீழ்நிலைக்குத் தள்ளிவிடும் என்பதை அவர்கள் தெரிந்திருந்தும் வேண்டுமென்றே அதனைச் செய்தார்கள். 1978 ஆம் ஆண்டு தமிழ் இளைஞர் பேரவையின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பல பேச்சாளர்கள் அமிர்தலிங்கம் சிங்களவர்களுடன் மிகவும் மென்மையாக நடதுகொள்வதாக விமர்சித்திருந்தனர். கூட்டத்திற்குத் தலைமை வகித்த சந்ததியார் பேசும்போது "தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது தேர்தல் வெற்றிக்காகவே தமிழ் ஈழம் எனும் கோரிக்கையினை முன்வைக்கிறார்கள்" என்று குற்றஞ்சாட்டியிருந்தார். தனது பேச்சின் முடிவில்,"இனிமேல் தமிழ் இளைஞர் பேரவை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியிடமிருந்து பிரிந்து தனித்தே இயங்கும்" என்று கூறினார். மாவை சேனாதிராஜா இன்று தமிழ் இளைஞர் பேரவையின் இந்த தனித்தியங்கும் முடிவை தனது ஆதரவாளரான மாவை சேனாதிராஜாவைப் பாவித்துத் தடுத்துவிடலாம் என்று அமிர்தலிங்கம் நினைத்தார். சிங்களவர்களிடமிருந்து எழுந்து வந்த கடுமையான அழுத்தத்தினையடுத்து வன்முறைகளைக் கண்டிப்பதாகக் கூறிய அமிர்தலிங்கம், தமிழ் ஆயுத அமைப்புக்களிடமிருந்தும் விலகி நடக்கத் தொடங்கினார். இது, இளைஞர் அமைப்புக்கள் மீது அவருக்கிருந்த செல்வாக்கினை சிறிது சிறிதாக இழக்கக் காரணமாகியது. 1979 ஆம் ஆண்டின் முதற்பாதியில் டெலோ அமைப்பு வீரியமாகச் செயற்பட்டு வந்தது. மார்கழி 13 ஆம் திகதி தொண்டைமானாறு பகுதியைச் சேர்ந்த பொலீஸ் உளவாளி ஐயாசாமி சிவராஜாவை டெலோ இயக்கம் கொன்றது. மாசி 1 ஆம் திகதி பொலீஸ் கொன்ஸ்டபிள் ஞானசம்பந்தம் என்பவர் கொக்குவில்ப் பகுதியில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். பங்குனி 21 ஆம் திகதி இன்னொரு பொலீஸ் கொன்ஸ்டபிள் சிவநேசன் என்பவர் வல்வெட்டித்துறையில் கொல்லப்பட்டார்.ஆனி 30 ஆம் திகதி தொண்டைமனாற்றினைச் சேர்ந்த பொலீஸுக்குத் தகவல் வழங்கும் கணவன் மனைவியான சுவர்ணராஜா தம்பதிகளை டெலோ கொன்றது. மாவை சேனாதிராஜா தமிழ் இளைஞர் பேரவையினை தன்பக்கம் மெதுவாகத் திருப்பிக் கொண்டாலும்கூட, அவ்வமைப்பில் செல்வாக்கு மிகுந்தவர்களாக விளங்கிய பல உறுப்பினர்களை அவரால் தன்பக்கம் இழுத்துக்கொள்ள முடியாமற்போனது. இவர்களுள் சந்ததியார், இரா வாசுதேவா, இறைக்குமரன், யோகனாதன் போன்றோர் தனித்து இயங்கி வந்ததுடன் பின்னாட்களில் ஆயுத அமைப்புக்களின் தலைவர்களாகவும் மாறிப்போனார்கள். சிறிதுகாலம் தமிழ் இளைஞர் பேரவை - விடுதலை அணி என்கிற பெயரில் இயங்கிவந்த இவர்கள் உமாமகேஸ்வரன் 1981 ஆம் ஆண்டு புளொட் அமைப்பினை உருவாக்கியபோது அதில் தம்மையும் இணைத்துக்கொண்டார்கள். டெலோ அமைப்பினரது செயற்பாடுகள் ஜெயவர்த்தனவை ஆத்திரப்பட வைத்திருந்ததுடன், சிங்கள மக்களின் உணர்வுகளையும் வெகுவாகப் பாதித்திருந்தது. ஐரோப்பாவில் வசித்துவந்த இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் அமெரிக்காவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு செயற்பட்ட விதமும் சிங்களவர்களுக்கு எரிச்சலையூட்டியிருந்தது. இலங்கையில் பொது எழுதுவிளைஞர்கள் ஒன்றியத்தின் முன்னாள்த் தலைவரும், பின்னர் வழக்கறிஞராகி பிரித்தானிய மற்றும் இலங்கை வழக்காடு மன்றங்களில் வழக்குரைஞராகவும் பணிபுரிந்து ஒரு காலத்தின் சம்பியாவின் மாவட்ட நீதிபதியாக கடமையாற்றிய கிருஷ்ணா வைகுந்தவாசன் அவர்கள் அமெரிக்காவில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் மாநாட்டில் இங்கிலாந்தின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டிருந்தார். கிருஷ்ணா வைகுந்தவாசன் 1978 ஆம் ஆண்டு ஐப்பசி 5 ஆம் திகதி டெயிலி நியூஸ் பத்திரிக்கையின் வெளிநாட்டுச் செய்திப் பிரிவிற்கு வந்த உடனடிச் செய்தியொன்று மிகுந்த பரபரப்பாகப் பேசப்பட்டது. ரொயிட்டர்ஸ் செய்திச்சேவையூடாக ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து இலங்கையர்களுக்காக அனுப்பப்பட்ட செய்தி என்று தலைப்பில் அது வந்திருந்தது. சுமார் 150 நாடுகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஐக்கிய நாடுகள் சபையில், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேச எழுந்த தருணத்தில் இலங்கையின் சிறுபான்மைத் தமிழ் இனத்தைச் சேர்ந்த ஒருவர் தான் இலங்கையில் தமிழ் மக்கள் மேல் சிங்கள அரசு செய்துவரும் கொடுமைகளைக் கண்டிப்பதாக முழக்கமிட்டார். ஆனால், அவர் முழக்கமிடத் தொடங்கிய சில வினாடிகளில் அவரது ஒலிவாங்கியின் இணைப்பு மறுக்கப்பட்டதுடன் அவரைக் காவலர்கள் அங்கிருந்து அகற்றிச் சென்றனர். ஐக்கிய நாடுகள் சபையில் சபையில் கவனயீர்ப்பில் ஈடுபட்ட அந்த தமிழர் தன்னை கிருஷ்ணா என்று அறிமுகப்படுத்தியிருந்ததோடு, சுமார் 25 லட்சம் மக்களைக் கொண்ட, இந்தியாவிற்கும் சிங்களவர்களின் நாட்டிற்கும் இடையில் அமைந்திருக்கும் தமிழ் ஈழம் எனும் தேசத்தை தான் பிரதிநித்துவம் செய்வதாகவும் கூறியிருந்தார். "தமிழர்கள் மேல் சிங்களவர்களின் தேசம் இனக்கொலையொன்றினைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது" என்று அவர் முழக்கமிட்டு முடியும்போது அவரது ஒலிவாங்கியின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது. ரொயிட்டர்ஸ் செய்தி நிறுவனம் இந்த சம்பவம் குறித்து தொடர்ச்சியாகச் செய்தி வெளியிட்டு வந்தது. அதன் இன்னொரு செய்தி பின்வருமாறு கூறியது, "இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் சாகுல் ஹமீட் பேசும்போது, "எனக்கு முன்னால் பேசிய பேச்சாளருக்கு முதலில் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர் எனது நேரத்தில் ஒரு பகுதியினை எடுத்துக்கொண்டாலும் கூட, சபையில் சலசலப்பை ஏற்படுத்தி எனது பேச்சிற்கான முன்னுரையை வழங்கிவிட்டுச் சென்றிருக்கிறார்" என்று அச்சம்பவத்தின் தக்கத்தை குறைக்க எத்தனித்தார்" என்று கூறியது. அச்செய்தியின் இறுதிப் பகுதி பின்வருமாறு கூறியது. "கவனயீர்ப்பில் ஈடுபட்ட அந்த நபரை விசாரித்தபோது அவர் இலங்கையைச் சேர்ந்த கே வைகுந்தவாசன் என்று அடையாளம் காணப்பட்டதாக ஐ நா பேச்சாளர் தெரிவித்தார். முன்னாள் நீதிபதியான அவர் தற்போது லண்டனில் பணிபுரிந்துவருந்துவருகிறார். அவரது வதிவிட விபரங்கள் தெரியவில்லை. சபையினுள் நுழையும்போது ஏனைய அதிதிகளுடன் அவரும் நுழைந்து வந்துள்ளதனால் அவர் தனது அடையாளம் தொடர்பான அனைத்துச் சோதனைகளும் மிகவும் நுட்பமாகக் கடந்து வந்திருக்கிறார் என்பது தெரியவருகிறது. ஐ நா வின் மாநாட்டு மண்டபத்தில் இராஜதந்திரிகளும் அவர்களது விருந்தினர்களும் அமரும் பகுதியில் அமர்ந்துகொண்ட அவர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேசுதற்கு அழைக்கப்பட்ட வேளை மேடையில் திடீரென்று ஏறி பேசத் தொடங்கியிருக்கிறார். ஐ நா சபையின் பேச்சாளர் கூறும்போது அவரை மண்டபத்திற்கு வெளியே அழைத்துச் சென்றதாகவும், இனிமேல் பிரவேசிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும் கூறியிருக்கிறார். மேலும், வைகுந்தவாசன் அமெரிக்காவில் செய்தியாளர் ஒருவருடன் பேசும்போது நியுயோர்க் நகரில் நடைபெறும் அமெரிக்க வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநாட்டில் பங்குபெற தான் வந்திருந்ததாகக் கூறிய அவர், தமிழரின் அவலங்களை உலகறியச் செய்து அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கவே ஐ நா சபையில் தான் அவ்வாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டதாகவும் கூறினார்". வைகுந்தவாசனின் பேச்சின் முழு வடிவம், "மதிப்பிற்குறிய தலைவர் மற்றும் உலக நாடுகளின் அதிபர்களே! அடக்குமுறைக்கு உள்ளான ஈழத் தமிழர்கள் போன்ற சிறுபான்மையின மக்களுக்கு இந்த உயரிய சபையில் தம்மை பிரதிநிதித்துவம் செய்ய முடியவில்லையென்றால், அவர்கள் எங்குதான் போவார்கள்? எனது பெயர் கிருஷ்ணா, நான் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே அமைந்திருக்கும் சுமார் இரண்டரை மில்லியன் தமிழ் மக்களைக் கொண்ட தமிழ் ஈழம் எனும் தேசத்திலிருந்து வந்திருக்கிறேன். தமிழ்த் தேசத்தை முற்றாக அழித்துவிடும் நோக்கில் ஒரு திட்டமிட்ட இனக்கொலையினை சிங்கள அரசு ஈழத் தமிழர்கள் மேல் ஏவிவிட்டிருக்கிறது". "தமிழர்களின் பிரச்சினை இந்திய பிராந்தியத்தின் அமைதியினைக் குலைக்கும் நிலைக்கு வளர்ந்திருக்கிறது. உலக நாடுகளின் தலைவர்களாகிய நீங்கள் உடனடியாக எமது பிரச்சினையில் தலையிட்டு ஒரு தீர்விற்கு உழைக்காவிட்டால் ஈழத் தமிழரின் பிரச்சினையும் மிக விரைவில் இன்னொரு பாலஸ்த்தீனமாகவோ அல்லது சைப்பிரஸாகவோ மாற வாய்ப்பிருக்கிறது. ஆகவே, நாங்கள் உங்களின் உதவியினை வேண்டி நிற்கிறோம். மிக்க நன்றி ! அனுமதியின்றி எனது பேச்சினை இங்கே நிகழ்த்தியதற்காக மன்னிப்புக் கோருகிறேன். நெடுநாள் வாழ்க தமிழ் ஈழம் !!!". இந்தச் சம்பவம் குறித்து வைகுந்தவாசனையும் சாகூல் ஹமீதையும் நான் தனித்தனியாகச் செவ்வி கண்டேன். என்னிடம் பேசிய வைகுந்தவாசன் தனது நோக்கமெல்லாம் தமிழரின் அவலங்களை உலகறியச் செய்வதுதான் என்றும், அதற்காக அதனை தான் மிகவும் திட்டமிட்டு நிகழ்த்தியதாகவும் கூறினார். ஹமீத் என்னிடம் பேசும்போது, அந்த அசாதாரண சூழ்நிலையினை தணிக்கவேண்டிய தேவை தனக்கு இருந்ததனால் தான் மிகவும் இயல்பாக நடந்துகொள்ள எத்தனித்ததாகக் கூறினார். தான் இயல்பாக நடந்துகொண்டமைக்காக பலராலும் கெளரவப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். ஆனால், கொழும்பு அரசாங்கமோ கொதித்துப் போயிருந்தது. வைகுந்தவாசனின் செயலை அமிர்தலிங்கம் வரவேற்றிருந்ததனால் தனது ஆத்திரம் முழுதையும் அவர்மீதே கொழும்பு அரசாங்கம் காட்டியது. அமிர்தலிங்கத்தின் அறிக்கை இவ்வாறு கூறியது, " திரு வைகுந்தவாசன் அவர்கள் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தமிழ் ஈழத் தனிநாட்டின் தேவையினையும், நவ காலணித்துவவாதிகளான சிங்களவர்களிடமிருந்து தமிழ்த் தேசத்தின் விடுதலைக்கான தேவையினையும் மிகச் சுருக்கமாக சர்வதேச அவையில் கொண்டுவந்திருக்கிறார். எம்முன்னால் உள்ள இன்றைய தேவை என்னவென்றால் சர்வதேசத்தின் முன்னால் தமிழர்களின் போராட்டம்பற்றி பிரச்சாரம் செய்வதுதான். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேசுவதற்கு முன் மேடையில் வைகுந்தவாசன் பேசியதன் மூலம் உலக வரைபடத்தில் தமிழ் ஈழத்தினையும் அவர் இடம்பெறச் செய்திருக்கிறார்" என்று அவ்வறிக்கை கூறியது. இந்த விவகாரத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவந்து விவாதித்த எதிர்க்கட்சியினர், இந்த சம்பவம் சிங்களவர்களின் அதிகாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறினர். உலகத்தின் கண்களில் சிங்களவர்கள் அடக்குமுறையாளர்களாக இதன்மூலம் காட்டப்பட்டிருப்பதாக அவர்கள் மேலும் கூறினார்கள். மசாசுசெட்ஸ் தீர்மானம் 1979 ஆம் ஆண்டு வைகாசி 10 ஆம் திகதி அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தின் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அமெரிக்க ஜனாதிபதியும், காங்கிரஸின் உறுப்பினர்களும் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பாவித்து இலங்கையில் தமிழர்களுக்கெதிராக சிங்கள அரசுகளினால் நிகழ்த்தப்பட்டுவரும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளையும், மனிதவுரிமை மீறல்களையும் உடனடியாக முடிவிற்குக் கொண்டுவரவேண்டும் என்று கேட்டிருந்தது. இதுவும் ஜெயவர்த்தனவையும் சிங்கள மக்களை வெகுவாக ஆத்திரப்பட வைத்தது. சமர்வில் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினரான மேரி இ ஹவீ என்பவரால் முன்வைக்கப்பட்ட இத்தீர்மானத்தில் சுமார் 8000 சதுர மைல்களைக் கொண்ட தமிழ் ஈழம் எனும் நிலப்பரப்பில் வாழும் சுமார் 30 லட்சம் தமிழ் மக்கள் இலங்கையில் சிங்களவர்களால் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டு வாழ்வதாகக் கூறியிருந்தார். மேலும் இலங்கையில் சரித்திர காலம் தொட்டு இரு வேறு இனங்களான தமிழர்களும் சிங்களவர்களும் தனித்துவமான மத, கலாசார, மொழிகளையும் கொண்டிருப்பதாகவும், வரையறுக்கப்பட்ட எல்லைகளைக் கொண்ட இவ்விரண்டு தேசங்களும் பிரிட்டிஷாரின் நிர்வாகத் தேவைகளுக்காக ஒன்றக்கப்பட்டதாகவும் அவர் விளக்கப்படுத்தியிருந்தார். அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டதன்படி பிரஜாவுரிமை, மொழி, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை உட்பட்ட பல விடயங்களில் தமிழர்கள் சிங்களவர்களால் வஞ்சிக்கப்பட்டு வருவதாகவும், 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளில் சிங்கள அரசுகளால் கொண்டுவரப்பட்ட யாப்புகளில் தமிழர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். அவரின் உரையின் முடிவில் அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் பின்வருமாறு அம்மாநில அவை கூறியிருந்தது, "இத்தீர்மானத்தினை ஏற்றுக்கொள்ளும் இந்த அவை, அமெரிக்க ஜனாதிபதியும், காங்கிரஸ் தலைவர்களும் தமது அதிகாரத்தினைப் பாவித்து தமிழர்மீது நடத்தப்பட்டுவரும் அநீதியான அடக்குமுறைகளையும், மனிதவுரிமை மீறல்களையும் உடனே நிறுத்தி தீர்வொன்றினை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறது" என்று கூறியதுடன் இதன் பிரதிகளை அமெரிக்க ஜனாதிபதி, காங்கிரஸின் தலைவர், நாடாளுமன்ற அவையின் பிரதிநிதிகள், அமெரிக்க அரசுச் செயலாளர், உலக வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் ஆகியோருக்கும் அனுப்பியிருந்தது. ஆளுநர் எட்வேர்ட் கிங் அத்தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து மசாசுசெட்ஸ் மாநிலத்தின் ஆளுநர் எட்வேர்ட் கிங் அவர்கள் 1979 ஆம் ஆண்டு, வைகாசி 22 ஆம் திகதியினை "தமிழ் ஈழம் நாள்" என்று பிரகடண்ம் செய்ததுடன், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவரும், நல்லூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான சிவசிதம்பரத்தையும் ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருக்கும் தமிழ் ஈழம் நாள் நிகழ்வில் பங்குபற்றுமாறும் அழைப்பு விடுத்திருந்தார். மசாசுசெட்ஸ் மாநில ஆளுநரால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் ஈழ நாள் பிரகடணத்தின் பிரதி சிவசிதம்பரத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் செயற்பாடுகள் சிங்கள மக்களின் உணர்வுகளை வெகுவாகப் பாதித்திருந்தது. ஆகவே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரைத் தடைசெய்யும் முயற்சிகள் மீளவும் முன்னெடுக்கப்படலாயின. ஆடி 3 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசிய பிரேமச்சந்திர மற்றும் சுனில் ரஞ்சன் ஜயக்கொடி ஆகியோர் இந்த விடயத்தை மீளவும் முன்வைத்துப் பேசினர். அதற்குப் பதிலளித்துப் பேசிய ஜெயவர்த்தனா விசேட சட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும், அதனைப் பயன்படுத்தி தீவிரவாதத்தை முழுமையாக அழித்தொழிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்றும், அச்சட்டம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறினார். தனது விசேட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்காகக் காத்திருக்கும் வேளையில், வவுனியா மாவட்டத்தில் சிங்களவர்கள் பெரும்பான்மையாகக் குடியேற்றப்பட்டு வாழ்ந்துவந்த பகுதிகளை அநுராதபுர மாவட்டத்துடன் ஜெயவர்த்தன இணைத்துக்கொண்டார். இதற்கெதிராக செயற்பாடுகளில் இறங்கிய முன்னணியினர் பாராளுமன்றத்தைலிருந்து வெளிநடப்புச் செய்தனர். தீவிரவாத எண்ணங்கொண்டிருந்த தமிழ் இளைஞர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பாராளுமன்றத்தின் அனைத்து குழுக்களிலிருந்தும் வெளியேறவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதற்குப் பதிலளித்த அரசாங்கம் பிரேமச்சந்திரவையும், ஜெயக்கொடியையும் பாவித்து இரு தீர்மானங்களை முன்வைத்தது. வன்முறைகளில் ஈடுபடும் அமைப்புக்களையும், தனிநாடு கோரும் அரசியல்க் கட்சிகளையும் தடைசெய்யவேண்டும் என்று பிரேமச்சந்திர முதலாவது தீர்மானத்தை முன்வைத்தார். இரண்டாவது தீர்மானத்தை முன்வைத்த ஜயக்கொடி தமிழ் ஈழத்திற்காகப் பிரச்சாரம் செய்வோர் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
    1 point
  41. 1 point
  42. @nilmini அக்கா அல்வாய், பருத்தித்துறையில் Hari Engineering என்ற நிறுவனம் வீட்டு கட்டுமானத்தில் ஓரளவு நல்லது. அவர்களின் Rate அதிகம் ஆனால் வேலைகளின் தரம் வெளிநாடுகளில் செய்வது போல் உள்ளது.
    1 point
  43. நன்றி அண்ணா. நிறைய இடங்களுக்கு போய் படங்கள் எடுத்தது வைத்திருக்கிறேன். இந்த கிழமை மடகாஸ்கர் பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன். ஜெர்மனி தமிழ் பேப்பர் ஒன்றுக்கும் கேட்டிருந்தார்கள். வீட்டு வேலை நான் நினைத்தது போல் இன்னும் முடிக்கவிலை. ஜூலை மாதம் செய்யலாம் என்று இருக்கிறேன்.
    1 point
  44. தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........( 11). அப்போது அங்கு கபிரியேல் வருகிறான். என்ன நீங்கள் இருவரும் சிரிக்கிறீர்கள், சொன்னால் நானும் சிரிப்பேன். மிருதுளா அவனிடம் சீ .....போடா அதெல்லாம் லேடீஸ் மேட்டர் என்கிறான். அவனும் பதிலுக்கு அவளிடம் நீ போடி என்று சொல்லி விட்டு அவர்களை பார்த்து அங்கு ஒரு லூசு லூசு என்று வந்திருக்கு வந்து பாருங்கோ என்று சொல்லி மேலே போகிறான்.இருவரும் வரும்போது சுமதி மிருதுளாவிடம் என்னடி இவன் போடி என்கிறான், லூசு என்கிறான் என்று கேட்க, அதொன்றுமில்லை மேடம் ரேணுகாதான் அவனுக்கு தமிழ் டீச்சர்.தமிழில் இருக்கும் தூய தமிழ் வார்த்தைகள் எல்லாம் அவனுக்கு அத்துப்படி.முகபாவத்துடன் சொல்லுவான்.இப்ப நிறைய தமிழும் கதைக்கிறான். பிரேமாவுடன் பிரெஞ் கதைப்பதைவிட தான் தமிழ் படிச்சு தமிழில் கதைப்பது பெட்டராம். சுமதி சிரித்துக் கொண்டே வருகிறாள். மேலே ஒரு வாடிக்கையாளர் வந்திருந்தார். அவரைப் பார்த்ததும் ஓ......நீங்களா வாங்கோ என்ன விடயம் ....அது வந்து சுமதி நாளைக்கு மாலை ஒரு பிறந்தநாள் விழாவுக்கு போக வேண்டும், இந்த ப்ளவுசை கொஞ்சம் லூசாக்கித் தரவேண்டும், அத்துடன் இந்த சாறிக்கு ஏற்றதுபோல் ஒரு உள் பாவாடையும் தைத்துத் தரவேண்டும். சரியென்று மிருதுளா அவரைக் கூட்டிச்சென்று அளவுகள் எடுத்து விட்டு "நாளை மதியத்துக்கு பின் வாங்கோ" என்று சொல்லி அனுப்பி வைக்கிறாள். பின் சுமதியிடம் இது இரு மாதங்களுக்கு முன் நாங்கள் தைத்துக் கொடுத்த சட்டைதான் மேடம். இப்போது கொஞ்சம் சதை போட்டு குண்டாகி இருக்கிறாள். நான் அப்பவே உள்ளே சிறிது துணி கூட விட்டுத்தான் தைத்தது.கெதியா சரிபண்ணிடலாம் என்கிறாள். அப்ப இவன் லூசு என்று சொன்னது இந்த லூசைத்தான் போல. இதையாடா லூசு என்று சொன்னனி என்று அவனிடம் கேட்க அவனும் ம்....என்று தலையாட்டுகிறான். கபிரியேலையும் கூட்டிக்கொண்டு தனது அறைக்கு வந்த சுமதி அவனிடம் கபிரியேல் இந்த வாரத்துடன் உனது வேலை ஒப்பந்தம் முடிவடைகிறது. இது உனது புது ஒப்பந்தம் படித்துப் பார்த்துவிட்டு உன் அபிப்பிராயத்தை சொல்லு. கடிதத்தை வாங்கிப் படித்த கபிரியேல் தனது வேலை ஒப்பந்தம் மேலும் ஆறு மாதங்கள் நீட்டித்திருப்பதை பார்த்து விட்டு சுமதியிடம் இந்த ஒப்பந்தத்தில் ஒரு பிரச்சினையும் இல்லை சுமதி ஆனால் நான் சமீபத்தில் இரண்டு லொறிக் கம்பெனிகளில் சாரதிக்கான நேர்காணலுக்குப் போயிருந்தேன். அவர்கள் எந்நேரத்திலும் எனக்கு பதில் அனுப்புவார்கள் என்று காத்திருக்கிறேன்.அப்படி அழைப்பு வந்தால் நான் உங்களிடம் சொல்லி விட்டு அங்கு செல்லலாம் என்றிருக்கிறேன். --- ஏன் கபிரியேல் உனக்கு இந்த வேலை பிடிக்கவில்லையா, அல்லது சம்பளம் குறைவு என்று நினைக்கிறாயா, அல்லது நிரந்தரமான வேலை ஒப்பந்தம் போட்டுத் தரவா என்று சொல்கிறாள். --- ஓ......நோ .....அப்படியொன்றும் இல்லை மேடம். லாரிகள் ஓட்டுவதென்பது ஒரு ஜாலியான வேலை. 1000 / 1500 கி.மீ. லாரி ஒட்டிக் கொண்டு போவதும் வழியில் ஏனைய லாரி சாரதிகளுடன் வயர்லெஸ்சில் உரையாடிக் கொண்டு செல்வதும் இடத்துக்கு இடம் வித விதமான உணவுகள் தங்கும் ஹோட்டல்கள் எல்லாம் சொல்லி வேல இல்லை சுமதி, அந்த சுகம் அனுபவிக்கனும் அப்ப புரியும். கதைக்கும் போதே கனவுகளில் மிதக்கிறான்.பிரெஞ் இளைஞன் அல்லவா அவனது உணர்வுகள் அவளுக்குப் புரிகிறது. --- சரி கபிரியேல் நீ விரும்பியதுபோல் எப்போது வேண்டுமானாலும் போகலாம், வரலாம். ஒரு நல்ல நண்பர்களாக உன்னுடன் வேலை செய்யும் இந்த நாட்கள் என் வாழ்வில் என்றும் மறக்க முடியாதவை.இருவரும் படியேறி மேலே கடைக்கு வருகிறார்கள். சரி .....மிருதுளா நாளைக்கு நீ எட்டரைக்கு வந்து கடையை திறந்து விடு. அந்நேரம் கதீஜாவும் வந்து விடுவாள். இருவருமாக கடையைப் பார்த்துக் கொள்ளுங்கள். வழக்கம்போல் 13:00 மணிக்கு கபிரியேல் வரட்டும் சரியா.....! --- சரி மேடம். உங்களுக்கு மிக்க நன்றி. --- ம்....இன்னும் ஒன்று, இப்ப வேலைகள் நிறைய வருகின்றன, கதீஜாவும் இருப்பதால் ஆபிரிக்கன்ஸ் அல்ஜீரியன்ஸ் ஓடர்களும் கொஞ்சம் வரலாம் அதனால் நான் வேறு ஆட்களை எடுக்கும் வரை நீயும் அவளும் விரும்பினால் வேலை அதிகம் இருக்கும் நாட்களில் கூடுதலாக இரண்டு மணித்தியாலங்கள் வேலை செய்து விட்டுப் போகலாம். அதற்குரிய பணத்தை நான் தனியாக உங்களின் கைகளில் தந்து விடுகிறேன். --- சரி மேடம். ஆறுமாதங்கள் பின் கடை ஒரு பிரச்சனையும் இல்லாமல் நன்றாக ஓடிக் கொண்டிருக்கு. கபிரியேல் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு ஒரு டிரான்ஸ்போர்ட் கொம்பனியில் வேலை எடுத்துக் கொண்டு போய் விட்டான். கடைக்கு மேலும் ஒரு ஆணும் பெண்ணுமாக இரண்டு ஆட்களை மூன்று மாத ஒப்பந்தத்தில் வேலைக்கு எடுத்திருந்தார்கள். கதீஜாவுக்கு கீழ் அறையில் ஒரு பக்கம் ஒதுக்கிக் கொடுத்திருக்கு. அங்கு அவள் ஆபிரிக்கன் பெண்களுக்கு தலை அலங்காரம் ஒப்பனைகள் செய்வதுடன் மேலே கடையில் குறிப்பாக ஆபிரிக்கன் ஆடைகள் விற்கும் பகுதியிலும் அவர்களுக்குரிய ஸ்பெஷல் திருமண ஆடைகள் போன்றவை தைத்துக் கொடுப்பதிலும் தகுதி பெற்றவளாக சிறப்பாக வேலை செய்து கொண்டு இருக்கிறாள். மேலும் சிறுமிகளுக்கும் குமரிகளுக்கும் தலை பின்னுவதில் கிடைக்கும் பணத்தை கதீஜாவே எடுத்துக் கொள்ளுமாறு சுமதி சொல்லியிருந்ததால் அவளுக்கு அந்தப் பணத்துடன் சுமதி தரும் சம்பளப்பணமும் கிடைப்பதால் மிகுந்த மகிழ்ச்சி. அன்று "லக்கி டெய்லரிங் & டெக்ஸ்டைல்ஸ்" மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கு. அப்போது அங்கு சேகர் வருகிறான்.சுமதி அவனை வரவேற்று என்ன சேகர் இந்தப் பக்கம், நீ சும்மா வரமாட்டாயே என்கிறாள். --- அதொன்றுமில்லை அக்கா, வாரமாதம் ஒரு புது சீட்டு ஒன்று தொடங்கிறன். இந்தமுறை தொகையும் கொஞ்சம் அதிகம். அதுதான் ஒரு சீட்டுக்கு உங்களையும் சேர்க்கலாம் என்று சொல்ல ...... சுமதிக்கு "இனிமேல் நீ சீட்டுகள் போடக் கூடாது என்று சுரேந்தர் சொன்னது ஞாபகத்தில் வந்து போகுது. ஆனாலும் மனம் இந்த சீட்டைப் போட்டு கழிவு குறைவாய் வரும்போது எடுத்தால் " லா கூரினேவிலும்" (தமிழர்களும், ஆபிரிக்கங்களும் செறிந்து வாழும் ஒரு இடம்) ஒரு தையல் கடை திறக்கலாம் என்று கணக்குப் போடுது. சரி சேகர் என்னையும் ஒரு சீட்டுக்கு சேர்த்துக்கொள் என்று சொல்கிறாள். சேகர் போகிறான். --- மனம் சொல்லுது, நீ பாட்டுக்கு சீட்டுக்கு சொல்லி விட்டாய், நாளைக்கு சுரேந்தர் கேடடால் என்ன செய்வாய். --- நீ சும்மா இரு, எனக்கெல்லாம் தெரியும். அந்தாளுக்கு சமயம் பார்த்து சூடாக ஒரு பிரியாணி போட்டு விட்டால் எல்லாம் சரியாயிடும்.........! சுபம். யாவும் கற்பனை.....! யாழ் அகவை 25 க்காக ........! ஆக்கம் சுவி........! 🙏 🙏 🙏
    1 point
  45. சொறியிறது சொகம் எண்டால்.... கனடாவிலை நிண்டு சொறிஞ்சால் என்ன...? அமெரிக்காவிலை நிண்டு சொறிஞ்சால் என்ன...? பெரிய பிரித்தானியாவிலை நிண்டு சொறிஞ்சால் என்ன...? பிரான்ஸ்லை நிண்டு சொறிஞ்சால் என்ன...? ஜேர்மனியிலை நிண்டு சொறிஞ்சால் என்ன...? டென்மார்க்கிலை நிண்டு சொறிஞ்சால் என்ன...? நோர்வேயிலை நிண்டு சொறிஞ்சால் என்ன...? அவுஸ்ரேலியாவிலை நிண்டு சொறிஞ்சால் என்ன...? ஏன்....கியூபாவிலை நிண்டு சொறிஞ்சால்த்தான் என்ன? எல்லாம் ஒண்டு தானே?
    1 point
  46. நல்ல நிலைக்கு வந்தபின்னர் சிறீ லங்கா சொறி லங்கா ஆகிவிடும்.
    1 point
  47. தமிழர்கள் பொறுமையிழந்த காலம் 1961 இல் நடத்தப்பட்ட சத்தியாக்கிரக நிகழ்வு தமிழ் சிங்கள இனங்களிடையிலான உறவில் ஒரு பாரிய திருப்புமுனையாக அமைந்தது. தமிழர்கள் அரசியல் ஞானம் பெற்றவர்கள் என்பதும், அரசியல் ரீதியாக தீவிரமாகச் செயற்படக் கூடியவர்கள் என்பதனையும் இந்நிகழ்வு சுட்டிக் காட்டியது. அதுவரை காலமும் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருந்த இளைஞர்களையும், மாணவர்களையும் தீவிரமான அரசியலில் ஈடுபட இந்த நிகழ்வு உந்தித் தள்ளியிருந்தது. அன்றிலிருந்து இளைஞர்கள் அரசியல் ரீதியான கேள்விகளைத் தமது தலைவர்களிடம் முன்வைக்கத் தொடங்கியதோடு, தமது கோரிக்கைகளுக்கான செயற்பாடுகளை ஆரம்பிக்க தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்கவும் தலைப்பட்டனர். டட்லி சேனநாயக்கவின் தேசிய அரசாங்கத்தில் பங்கெடுப்பதன் மூலம் தமிழர்களுக்கான உரிமைகளை வென்றுவிடலாம் என்கிற தந்தை செல்வாவின் முயற்சி தோற்றுப்போனதையடுத்து, தமது உரிமைகளுக்காக தாமே போராடவேண்டும் என்கிற மனநிலைக்கு இளைஞர்கள் அபோது வந்திருந்தனர். 1970 இல் டட்லியின் அரசைத் தொடர்ந்து சிறிமாவின் அரசு ஆட்சிக்கு ஏறிய தருணமே தமிழர்கள் தமது போராட்ட வழிமுறையினை மாற்றிக்கொள்ளவேண்டிய தேவையினை ஏற்படுத்திக் கொடுத்தது. தமிழர்கள் வெகுவாகக் காயப்பட்டுப் போன உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றில் சிறிமாவின் அரசு வேண்டுமென்றே தமிழர்களைக் மேலும் மேலும் காயப்படுத்தும் நோக்கில் மாற்றங்களைக் கொண்டுவந்தது. அரச வேலைவாய்ப்பிற்கு கட்டாயமாக சிங்களம் தெரிந்திருக்க வேண்டும் என்கிற சட்டத்தினை உருவாக்கியதன் மூலம் தமிழர்கள் தமது பிரதேசங்களில்க் கூட அரச வேலைகளைப் பெற்றுக்கொள்வதை சிறிமாவோ அரசு முற்றாகத் தடுத்தது. அதுமட்டுமல்லாமல் மொழி அடிப்படையிலான தரப்படுத்தல்களை பல்கலைக்கழக அனுமதிக்கு கட்டாயமாக்கியதன் மூலம் பெருமளவு தமிழ் இளைஞர்களின் பல்கலைக்கழக தகுதியினை இல்லாமலாக்கியது. தமது கல்வியில் பாரிய தாக்கத்தை சிங்கள அரசு ஏற்படுத்தியமை தமிழ் மாணவர்களை சிங்களவர்களிடமிருந்து அந்நியமாக்கியதுடன், தமது தமிழ் அரசியல்த் தலைமைகளிடமிடுந்து அந்நியப்பட வைத்தது. தரப்படுத்தலின் பாதிப்புப் பற்றி தமிழ் அரசியல்த் தலைமைகள் காட்டிய அசமந்தப்போக்கும், அதன் தாக்கம் குறித்த போதிய அறிவின்மையும் தமிழ்த் தலைமைகளை இளைஞர்களிடமிருந்து அந்நியப்படுத்தக் காரணமாகின. தமிழர்களில் பலர் சமஷ்ட்டிக் கட்சியின் ஆதரவுடன் அரச அதிகாரிகளாக, ஆசிரியர்களாக பதவிவகித்து வந்தனர். பல தமிழர்கள் சமஷ்ட்டிக் கட்சியில் இணைவதன் மூலம் தமது வேலைவாய்ப்பு வசதிகளைப் பெற்றுக்கொண்டனர். அதுமட்டுமல்லாமல், சமஷ்ட்டிக் கட்சியின் செயற்குழு தரப்படுத்தல்பற்றி அதிக்க அக்கறைப்படாமல் இருந்ததுடன், தமிழர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களில் அது ஆறில் ஒன்று மட்டுமே என்கிற நிலைப்பாட்டிலும் செயற்பட்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், தமது அரசியல்த் தலைவர்களைக் கைவிட்டு தமக்கான பிரச்சினைகளை தாமே தீர்க்கும் முடிவிற்கு வந்தனர். அதன் முதற்படியாக தமிழ் மாணவர் பேரவை எனும் அமைப்பு இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வமைப்பின் தலைவராக பொன்னுத்துரை சத்தியசீலன் தெரிவுசெய்யப்பட்டார். மேலும் இவ்வமைப்பின் முக்கிய பொறுப்புக்களில் பிரபாகரன், சிறிசபாரட்ணம், சிவகுமாரன் ஆகியோரும் செயற்பட்டனர். பின்னர் இவ்வமைப்பு தமிழ் இளைஞர் பேரவை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.