யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Leaderboard

 1. குமாரசாமி

  குமாரசாமி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   199

  • Content Count

   26,865


 2. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   166

  • Content Count

   45,555


 3. suvy

  suvy

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   152

  • Content Count

   15,841


 4. ஈழப்பிரியன்

  ஈழப்பிரியன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   107

  • Content Count

   6,619Popular Content

Showing content with the highest reputation since 03/18/2019 in Posts

 1. 17 points
  பாலைவன தடங்கள் ................................... 2003 உயர்தர பரீட்சை ஒரு படியாக 2 கொடியுடன் கையில் சேர்ந்தது. எப்பவும் விளையாட்டுத்தான் உனக்கு என ஏச்சும் பேச்சும் காதை நிறைத்த வண்ணம் வீட்டில் ஓயாத ரேடியோ பெட்டி போல எந்த நேரமும் ஒலித்துக்கொண்டிருந்தது. காரணம் விளையாட்டில் அதிக மோகம் ஒரு பைத்தியம் போல இருந்துவிட்டேன் அதனால் என்னவோ சமாதான காலத்தில் கிளிநொச்சி வரைக்கும் சென்று விளையாடி வர சந்தர்ப்பம் கிடைத்தது . 2004ல் சமாதான காலம் வெள்ளைப்புறா சிறகடித்து பறந்து திரிந்த காலம் அது. அதன் சிறகுகள் மெல்ல மெல்ல களையப்பட்டு , வேட்டையாட காத்துக்கொண்டிருந்தது மாவிலாறு பகுதியில் சமாதான புறா மெதுவாக இறக்க ஆரம்பிக்க வெள்ளைவான் ஊர்வலம் வரத் தொடங்கியது கிழக்கு வீதிகளில். யார் யார் உலா வருகிறார்கள் என்று தெரியாமல் கண்டம் விட்டு கண்டம் பாய்வது போலும் ஊரை விட்டு அயல் முஸ்லீம் ஊர்களில் ஒழித்துக்கொள்வோம் பகல் , இரவு வேளைகளில் அந்த நாட்களில் . (காலத்தில்) இப்படி இருக்க வேண்டாம் எங்கேயாவது போய்விடு என்று அம்மா சொல்ல கடனையும் வாங்கி ,இருந்த நகைகளையும் வித்து மத்திய கிழக்குக்கு போக தயாராகுகிறேன் . மெடிக்கல் , பாஸ்போட் என எல்லாம் கொழும்பில் வைத்து எடுத்து பயணம் 2004 ... . ....ல் ஆரம்பமாகிறது போகும் இரவு நேரத்தில் மட்டக்களப்பை தாண்டியதும் வெடியோசைகள் காதை கிழிக்க ஆரம்பித்தது என்னவோ ஏதோ? என மனது அடித்துக்கொண்டாலும் உயிரை தப்பித்துக்கொள்ள எங்கேயாவது ஓடிடு என்ற குரல் மட்டும் ஒலித்துக்கொண்டிருந்தது மனதுக்குள் எல்லா சோதனைகளை தாண்டி அதிகாலை கொழும்பை அடைந்ததும் மட்டக்களப்பில் சண்டைகள் அரங்கேற்றப்பட்டு இருந்தது என்று அறிய முடிந்தது . விமான நிலையம் போக பஸ்ஸை தவற விட்டு ஆட்டோ ஒன்றை பிடித்தாலும் விமான நிலையம் இருக்கும் அந்த பாதையோ மிக வாகன நெருசல் மிக்க தாக இருந்தது விமான நிலய அருகாமையில் இருக்கும் சோதனை சாவடியில் வைத்து என்னை மட்டும் இறக்கி நீ யாருடைய ஆள் என வினாக்கள் தொடுக்கப்பட்டது பிரபாகரன் ஆளா? அல்லது கர்ணா ஆளா என?. என்னடா எனக்கு வந்த சோதனை என முழுசிக்கொண்டு இருந்தன் . பிறகே நான் யாருடைய ஆளும் இல்லை படித்து முடித்து விட்டேன் ஊர்பக்கம் பிரச்சினை அதுதான் வெளிநாடு செல்ல போகிறேன் என்றேன் அவனும் ஒரு மணி நேரம் வரை வைத்துவிட்டு நாட்டை விட்டு செல்வது அவர்களுக்கு நல்லதென்று பட்டுதோ என்னவோ சரி போ என தூரம் வைத்திருந்த அப்பா, சித்தப்பாவிடம் அனுப்பினார்கள் . அந்த நேரம் விமான நிலையம் கண்ணாடி பொருந்த்தப்படவில்லை வெறும் பலகைகளாலும் மட்டைகளாலும் வைத்து மறைக்கப்பட்டிருந்தது , அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் கையை அசைத்துவிட்டு புறப்படலாகினேன் . அங்கேயும் போகும் வழியில் ஒரு நன்றாக தமிழ் தெரிந்த புலனாய்வு துறை ஒருவர் வந்து மீண்டும் கூட்டிக்கொண்டு விசாரித்தார் எந்த ஊர்? எந்த ஏரியா என? அவர் எங்கள் பகுதியில் இருந்திருப்பார் என்னவோ தெரியாது! சகல இடங்களையும் விசாரித்து விட்டு விலாசத்தையும் மனதுக்குள் முணுமுணூத்து பார்த்துவிட்டு விட்டு விட்டார் அவர் தமிழ் தெரிந்த சிங்களவர் அல்ல அவர் ஒரு தமிழர் என்பது அவர் பேசிய மொழி பாஷையில் அறிய முடிந்தது எனக்கு . தொடரும்.....
 2. 17 points
  உ சிவமயம் பெர்லின் மேற்கு ஜெர்மனி 15.10.1982 அன்புள்ள என்ரை செல்லக்குட்டி பரிமளம் அறிவது! நான் நல்ல சுகம். அது போலை நீங்களும் நல்ல சுகமாய் இருக்க அரசடி பிள்ளையாரை வேண்டுறன் நான் புதன்கிழமை விடியப்பறம் ஜேர்மனிக்கு வந்து சேர்ந்தேன். என்னோடை வந்த இரத்தினத்துக்கு தெரிஞ்ச ஆக்கள் வீட்டிலை இப்ப நிக்கிறன். எப்பிடியும் வாறகிழமையளவிலை பரீசுக்கு ரிக்கற் எடுத்து தல்லாம் எண்டு வீட்டுக்காரர் சொன்னவர். சரியான குளிராய் இருக்கு.....வீட்டுக்குள்ளை கீற்ரர் போட்டுத்தான் இருக்க வேணும்.சாப்பாடுகள் பரவாயில்லை.சொண்டு வெடிச்சுப்போச்சுது. குளிருக்கு வெடிக்குமெண்டு இஞ்சை சொன்னவை. இஞ்சத்தையான் குளிருக்கு மெத்தையிலை போர்த்து மூடிக்கொண்டு படுக்க நல்ல சுகமாயிருக்கு.என்ரை செல்லம் ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம். எனக்கு விலாசம் கிடைச்சவுடனை தெரியப்படுத்துறன். உங்களுக்கு நான் கடிதம் போட்டதை என்ரை வீட்டுக்கு சொல்ல வேண்டாம். அவையைப்பற்றி தெரியும் தானே. என்ரை செல்லம் ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம். இப்படிக்கு அன்பு அத்தான் குமாரசாமி அடுத்த கடிதம் வரும்......
 3. 16 points
  வணக்கம் போர் முடித்து வைக்கப்பட்ட பின்னரும் ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது படும் துயரங்களை அவ்வப்போது அறிந்து கொள்வதும் அவர்களுக்கு உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பதும் பின்னர் அவை அப்படியே தொடர்ச்சியாக விடுபட்டுக் கொண்டிருப்பதுவுமாகத் தான் நடைமுறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த காலங்களில் ஒரு சில அவசர உதவிகளுக்காக உறவுகளுடன் கேட்டு அவர்கள் நிறையவே உதவிகளும் செய்து அந்த உதவிகளும் உரியவர்களுக்குப் உரிய நேரத்தில் போய்ச் சேர்ந்திருந்தது. யாழ் இணையம் மூலம் நேரடியாக தொடர்ந்தும் தாயக மக்களுக்கு உதவி செய்ய விரும்பினாலும் அது பல்வேறு சட்டச் சிக்கல்களும் நிர்வாகச் சிக்கல்களும் உள்ள ஒரு விடயமாக உள்ளபடியால் யாழ் இணையம் மூலம் விளம்பர சேவைகளை வழங்கி அதன் மூலம் கிடைக்கப்பெறும் பணத்தினை ஏதாவது ஒரு அமைப்பிற்கு நேரடியாக வழங்குவதன் மூலம் தாயகத்தில் உள்ள மக்கள் பயன் பெறுவார்கள் என்பதுடன் நாம் சட்டச்சிக்கல்களையும் தவிர்த்துக் கொள்ள முடியும். அந்த வகையில் யாழில் விளம்பரங்கள் மூலம் கிடைக்கப்பெறும் பணம் TNRA அமைப்பிற்கே போய் சேரும் வகையில் விளம்பரப் பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. யாழ் கள உறுப்பினர்களிடம் இருந்து கேட்பது என்னவெனில் உங்கள் பகுதிகளில் இருந்து விளம்பரங்களை யாழில் இணைப்பதற்கு உங்களுக்குத் தெரிந்தவர்கள் நண்பர்களிடம் இது பற்றிக் தெரியப்படுத்துங்கள். விளம்பரங்களையாழ் இணையத்தின் மூலம் பிரசுரிப்பதன் மூலம் அத் தகவலினை உலகமெங்கும் வசிக்கும் உறவுகள் தெரிந்து கொள்ள வழியேற்படும் என்பதுடன் கிடைக்கும் பணம் நல்நோக்கத்திற்கே பயன்படப்போகின்றது என்பதையும் தெரியப்படுத்துங்கள். இன்னமும் என்ன செய்யலாம் என்ன மாதிரி செய்யலாம் என்பதையும் கள உறுப்பினர்கள் ஆலோசனைகளாக இங்கு வைக்க முடியும். உங்கள் பகுதிகளில் இதற்கு என விளம்பரங்களை பெற்றுத் தர நீங்கள் இணைய விரும்பினால் சேவை அடிப்படையில் இணைந்து கொள்ள முடியும். https://yarl.com/order/ எனும் முகவரியில் விளம்பரங்களை இணைத்துக் கொள்ள முடியும்.
 4. 16 points
  கணனியில் அதிகம் பயிற்சி எடுத்த களம் என்றால்.. அது யாழ் களம் தான். குறிப்பாக தமிழ் விசைப்பலகையில் ஆரம்பித்து... தமிழ் யுனிக்கோட் எழுத்துரு உருவாக்கத்தில்... ஆரம்ப காலத்தில்... நண்பர்களுடன் இணைந்து பணியாற்றியது ஈறாக.. வலைப்பூக்கள் அமைப்பு.. படங்களை மீள் வடிவமைத்தல்.. அசைவியக்க படங்கள் உருவாக்கம்.. தமிழ் மூல.. வின்டோஸ் அப்பிளிகேசன் மென்பொருள் பாவனை என்றும்.. கணணி வன்பொருள் அறிவு பெற்றமை.. கணனிக்குரிய பகுதிகளை வாங்கிப் பொருத்தி சொந்தமாக கணனி.. உருவாக்குதல் என்று.. போய்.. யாழுக்கு அப்ஸ் உருவாக்கும் வரை என்று நிறைய கணணி சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ள யாழ் இடமளித்திருக்கிறது கடந்த பல ஆண்டுகளாக. இந்தப் பின்னணிகள் மற்றும் கல்வியிடங்களில் பெற்ற கணனி அறிவு.. மற்றும்.. வேலையிடங்களில் பெற்ற கணணி மென்பொருள் அறிவு எல்லாத்தையும் கலந்தடித்து சமர்ப்பித்ததன் அடிப்படையில்.. பிரிட்டிஷ் கம்பியூட்டர் சாசைட்டி.. The British Computer Society.. BCS இல்.. நிரந்தர அங்கீகாரங்களில் ஒன்றான.. AMBCS நிலை அண்மையில் கிடைக்கப் பெற்றது. கணணி சார் பட்டப்படிப்பு எதனையும் கொண்டிராத நிலையில்.. இந்த தகுதி நிலையை அடைவதற்கு இடையறாது.. கணணி பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆர்வம்.... இந்த அங்கீகாரத்துக்கான அடிப்படையாகும். அதுக்கு யாழும் உதவி புரிந்துள்ளது. The benefits of Associate (AMBCS) membership Associate membership delivers a range of services designed around the professional needs of today’s competent IT practitioners. Professional recognition Tools to gain recognition within the industry include post nominal letters AMBCS, and a defined path to Chartered status via Professional membership. Career development To plan and track progression, members use our Personal Development Plan (PDP), the CPD portal and gain full access to Browse SFIAplus, the online tool that allows them to explore the industry framework for IT skills, training and development. Networking Top people, great ideas and the latest thinking locally, nationally and online - our global networking opportunities are unrivalled and include branches, specialist groups and the Member Network. Knowledge and best practice From the latest industry news to our massive online library, the Institute’s information services keep members up to date with best practice, and at the cutting edge of IT. Exclusive discounts and offers Adding even more value to membership, our discounts and free services enable members to enjoy savings both at work and at home. Upgrading to Professional (MBCS) membership At any time during their free year’s membership, candidates who are eligible can upgrade to Professional (MBCS) membership. (MBCS subscription payment is required). யாழில் எழுத ஆரம்பித்த ஆர்வத்தின் மிகுதியால் கிடைக்கும் இரண்டாவது அங்கீகாரம் இதுவாகும். முன்னர் விஞ்ஞானச் செய்திகளை.. ஆக்கங்களை படித்து.. மொழிபெயர்த்து வெளியிட்டு வந்தமைக்கும் ஒரு அங்கீகாரம் கிடைத்தது. அது Royal Society of Biology வாயிலாகக் கிடைத்தது. இவை போக.. தமிழகத்தில்.. ஆனந்த விகடனில்.. யாழில் எழுதி வந்த விஞ்ஞான ஆக்கங்களை... எளிமையான மொழிபெயர்ப்புக்களை.. கொண்டு வந்த எங்கள் வலைப்பூவும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருந்தது. இவை போக.. யாழிலிலும் பகிர்ந்து கொள்ள என்று பிடிக்கப்பட்ட இரண்டு.. உயிரியல் சார்ந்த படங்கள்.. The Biologist என்ற இரு மாதங்களுக்கு ஒரு தடவை வெளியாகும் ஏட்டிலும் இரு வேறு படங்கள்.. இரு வேறு தடவைகள்.. பிரசுரமாகியுள்ளன. யாழ் ஒரு பொழுதுபோக்கு களம் என்பதற்கும் அப்பால்.. பலரும் பல்வேறு நிலை விருத்திக்குப் பயன்படுத்திய.. படுத்தக் கூடிய.. நுண்மைகள் பொருந்திய இடமும் கூட. இவற்றையும் யாழின் 21 ஆண்டு கால சாதனைகளில் சேர்ந்துக் கொண்டமைக்கு யாழுக்கும் யாழை உருவாக்கி.. நிர்வகித்து நடத்துவோருக்கும்.. செந்நன்றிக்கடனாக்கிக் கொள்கிறோம்.
 5. 15 points
  அழியாத கோலங்கள். புலம்பெயர்ந்து ஒரு தசாப்தமாயிற்று. காலவோட்டத்தில் நிற்காமலேயே நாட்கள் மின்னி மறைந்துபோயின. இளமைக்காலங்களில் அனுபவித்து மகிழத் தவறிய சந்தர்ப்பங்கள் குறித்த ஏக்கங்களும், ஆற்றாமைகளும், சிறியகாயங்களும் அவ்வப்போது வந்துபோயினும் புலம்பெயர்ந்த செயற்கை வாழ்க்கை இது எதையுமே நினைக்க விடவில்லை. வந்துவிட்டோம், வாகனமும், வீடும், வேலையும் சமூக அந்தஸ்த்தும் தேடித் தேடியே நாட்கள் தொலைந்துதான் மிச்சம். இடையிடையே கவலைகள் மனக்கசப்புகள் வேதனைகள், ஆற்றாமைகள், கோபங்கள், ஏமாற்றங்கள், வெறுப்புகள், விரக்திகள் என்று வாழ்க்கை தெருக்களிலெல்லாம் சிந்திக்கொண்டே போயிருக்கிறது. மறக்க விரும்பிய கணங்கள், நினைக்கத் தோன்றா தருணங்கள், மிண்டும் வாழ்ந்துபார்க்க விரும்பும் பொழுதுகள் என்று எத்தனையோ கணங்கள் வந்து போய்விட்டன. எவை வந்துபோயினும் கூடவே இழையோடியிருக்கும் ஒரு வெறுமை. எதுவென்று சொல்லத் தோன்றாத ஒரு ஏக்கம். நிறைவடையாத மனது. முடிவில்லாத தேடல்கள். இப்படி ஏதோவொன்று தொடர்ந்தும் என்னுடன் வந்துகொண்டிருக்கிறது. நீ அடைந்திருப்பவை எதுவுமே நீ தேடுபவை அல்ல என்று எனக்குச் சொல்கிறது. எனது தேடல்களின் இறுதி எதுவென்று எனக்குத் தெரியாது. பொருள்சார்ந்த தேடல்களில் எனக்கு எப்போதுமே விருப்பு இருந்ததில்லை. ஆனால், மனிதர்களில் இதுவரையில் தோழமையுடன் வந்தவர்கள் வெகு சிலரே. வந்தவர்களும் பாதியிலேயே விட்டகல வெறும் தனிமைதான் கூட வருகிறது. உறவுகள் இறுதிவரையென்றாலும், தனிமனித விருப்பு வெறுப்புகள் அவற்றையும் தேடல்களின் பட்டியலிலிருந்து நீக்கிவிடுகின்றன. அதனால் எனது தேடல் இன்னமும் தொடர்கிறது.
 6. 12 points
  உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பது பலருக்கு ஆவலாக இருந்தாலும் அதற்கான முயற்சியில் இறங்குவது கடினமானது. உடல் எடையைக் குறைக்கப் பல விதங்களாக முயன்று பார்த்திருப்பீர்கள். உணவின் அளவையும் கலோரிகளையும் கட்டுப் படுத்தி உடலையும் மனதையும வருத்தி மெலிய வைப்பது கடினம். எமது உடல் மிகவும் புத்திசாலியானது. உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும்போது தனக்குக் கிடைக்கும் சொற்ப உணவைக் கொழுப்பாக மாற்றி உடலில் சேமிக்க முயலும். இவ்வாறு சேமிக்கப்பட்ட கொழுப்பை மீண்டும் கலோரிகளாக மாற்றி இலகுவில் பாவிக்க முடியாது. நீண்டநேர உடற்பயிற்சி நல்ல பலனைத் தரும். கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் எடை மீண்டும் ஏறிவிடும். முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் கொழுப்பைக் கொழுப்பால் கரைக்கும் முறை தற்போது மேலை நாடுகளில பரவி வருகிறது. நானும் இதனை முயன்று பார்க்கலாமே என்ற மூன்று மாதங்கள் இந்த முறையை பின்பற்றிய எனது அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நான் மருத்துவ நிபுணர் கிடையாது, வாசித்துக் கேட்டு அறிந்து கொண்டவற்றைக் கொண்டு பரீட்சித்துப் பார்த்து அந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே இதனை எழுதுகிறேன். இதன் கருப் பொருளில் உறுதியாக இருந்தாலும் சில குறிப்புகளின் தவறுகள் இருக்கலாம். மருத்துவம் தெரிந்தவர்கள் அவற்றைத் தாராளமாகச் சுட்டிக் காட்டலாம். எச்சரிக்கை இம் முறையைப் பின்பற்றுபவர்கள் இக் கட்டுரையை முழுமையாகப் படித்தபின் முடிவெடுங்கள். இணையத் தளங்களிலும் இது பற்றிய ஏராளமான தகவல்கள் உள்ளன. இது பற்றி முழுமையான புரிதலின்பின் முயற்சி செய்யுங்கள். கொலஸ்ரரோல் நீரிழிவு தைரொயிட் போன்றவற்றிற்கு மருந்து பாவிப்பவர்கள் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றுங்கள். குறிப்பு சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் உணவு முறை இன்றுள்ளதை விடத் முற்றிலும் மாறுபட்டதாக இருந்துள்ளது. அதாவது 20-40 வீதமாக இருந்த காபோஹைதரேற்றின் அளவு இன்ற 55 வீதத்தைத் தாண்டியுள்ளது. அதிலும் தமிழரின் உணவில் சுமார் 60 வீதத்துக்கு மேல் காபோஹைதரேட் உள்ளது. மனித வரலாற்றில் இதுவரை இந்த அளவு சீனி, மா, அரிசி போன்றவற்றை நாம் உண்டதில்லை என்றே தோன்றுகிறது. எனது பாட்டனார் தனது வாழ்நாள் முழுவதும் சாப்பிட்ட மொத்தச் சீனியை இன்று எனது பிள்ளை 7 வயதுக்குள் சாப்பிட்டு விடுகிறது. உடலுக்குப் பிரதான எதிரி சீனியே தவிர கொழுப்பில்லை. உடலுக்கான சக்தியின் தேவை பிரதானமாக இரண்டு வழிகளில் எமது உடல் தனக்குத் தேவையான சக்தியைப் பெற்றுக் கொள்கிறது. 1. முதலாவது காபோஹைதரேட் இதற்குள் அரிசி கோதுமை போன்ற தானியங்கள், சீனி மற்றும் பழங்களில் உள்ள இனிப்பு (fructose), பால் (lactose) போன்றவை பிரதானமானவை. இவை தவிர மரக்கறி வகைகளிலும் கணிசமான அளவு உண்டு. சுருக்கமாகச் செமிபாட்டினை விளக்குவதானால், காபோஹைதரேட்டின பெரும் பகுதி செமிபாட்டுத் தொகுதியால் குளுக்கோசாக மாற்றப்பட்டு இரத்தத்தில் ககலக்கப்படுகிறது. இரத்தத்திலிருந்து ஒரு பகுதி குளுக்கோசை ஈரல் சேமித்து வைத்திருக்கும். மீதியானவை தசைகளில் சேமிக்கப்படும். அளவுக்கு மிஞ்சிய குளுக்கோஸ் உடலுக்கு நஞ்சு போன்றது. இரத்தத்தில் அதிகமான சீனி ஈரலைப் பாதிக்கும். ஈரலுக்கு அதிக வேலைப்பளவைக் கொடுக்கும். அத்தருணத்தில் இன்சுலின் சுரக்கப்பட்டு மிதமிஞ்சிய குளுக்கோள் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமிக்கப்படும். சேமிக்கப்பட்ட இந்த வகையான கொழுப்ப்பபினை உடல் மீண்டும் சக்தியாக்கிப் பாவிக்கப் பஞ்சிப்படும். குறிப்பாக வயிற்றுப் பகுதியில் சேமிக்கப்படும் கொழுப்பால் தொந்தி ஏற்படும். ஒரு கிராம் காபோஹைதரேட் ஒட்சிசனோடு சேர்ந்து 4 கிலோ கலோரி (கி.கலோரி) சக்தியை வெளியிடுகிறது. 2. இரண்டாவது கொழுப்பு. முளுக்கோஸ் இரத்தத்தில் தீர்ந்துபோகும் தருணத்தில உடல் வேறு வழிகளில் சக்தியைத் தேடவேண்டிய தேவைக்குத் தள்ளப்படுகிறது. அப்போது உடலில் தங்கியிருக்கும் கொழுப்பு அமிலங்கள் இரத்தத்தில் கலக்கத் தொடங்கும். இரத்தம் மூலம் இக் கொழுப்பு மூலக்கூறுகள் ஈரலைச் சென்றடைய அங்கு ஈரல் அதனை ketone கூறுகளாகப் பிரித்துவிடும். ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்பதுபோல் குளுக்கோஸ் இல்லாமல் சக்திக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் உடல் ketone கூறுகளைச சக்திக்காகப் பயன்படுத்த ஆரம்பிக்கும். ஈரல் கொழுப்பை உருக்கும் கருவியாக மாறிவிடும். ஒரு கிராம் கொழுப்பு 9 கி.கலோரி சக்தியினை வெளியிடும். வரலாற்றுக் குறிப்பு ரோமர் காலத்தில் சில சிறுவர்கள் பேய் அறைந்ததுபோல் இருந்தார்கள். அவர்களுக்குப் பேய் பிடிப்பதாகவே கருதப்பட்டது. பேயை அகற்றுவதற்காக அவர்களைகக் கூண்டில் அடைத்து வைத்துப் பட்டினி போடுவார்கள். சில நாட்களில் பேய் தானாகவே அகன்றுவிட அச் சிறுவர்கள் குணமடைந்தனர். 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் Russell Wilder என்ற வைத்தியர் இவ்வாறு பேய் பிடித்தவர்களை ஆய்வு செய்து பட்டினி போடாமல் பலவிதமான பரிசோதனைகளுக்கு உட்படுத்தினார். அவ்வாறு ஒரு சாராருக்குக் கொழுப்பு உணவை மட்டும் கொடுக்கப்பட்டது. கொழுப்புணவை மட்டும் உட்கொண்டவர்கள் கணிசமான அளவு குணமடைவதை அவதானித்தார். குளுக்கோஸ் மூலம் இயக்கப்படும் மூளைக்கு குளுக்கோஸ் சரியான முறையில் வழங்கப்படுதலில் ஏற்படும் தடையால் epileptics என்ற இந்த நோய் உருவாகிறது. குளுக்கோசுக்குப் பதில் ketone மூலம் மூளைக்குப் போதுமான சக்தி கிடைத்ததும் மூளை சரியாக இயங்கத் தொடங்குகிறது. இன்று கூட குளுக்கோஸ் இல்லாமல் மூளை இயங்க முடியாது என்று பலரும் தவறாகக் கருதுகின்றனர். சில உறுப்புக்களுக்குக் குளுக்கோஸ் அத்தியாவசியமானது. அது முற்றாக இல்லாதபோது தேவையான சிறிதளவ குளுக்கோசினைப் புரதத்திலிருந்து உடல் தானாகவே உருவாக்கிக் கொள்கிறது. ஒப்பந்தம் கொழுப்பு மூலம் கொழுப்பைக் குறைக்கும் நுட்பம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். குளுக்கோசைத் தராது கொளுப்பை மட்டும் கொடுத்து உடலை ketone மூலம் மட்டுமே இயங்கப் பழக்கி விட்டால் பிரதான சக்தி வழங்கியாகக் கொழுப்பு மாறிவிடுகிறது. ஆகவே உடலில் சேமிக்கப்பட்டுள்ள கொழுப்பை உடல் தேவைப்படும்போது தானாகவே எடுத்துக் கொள்ளும். இதன் மூலம் இலகுவாக எடையைக் குறைக்கலாம் அல்லவா ? இதன் மூலம் அனுகூலங்களும் தீமையும் உண்டு. அதனால்தான் இது பற்றிய பூரண அறிவு தேவை. என்ன வகையான உணவுகளைச் சாப்பிடலாம் எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். உடலைக் ketone நிலைக்கு மெதுமெதுவாகக் கொண்டு செல்ல வேண்டும். பெரும்பாலும் 2 மாதங்கள் இந்த நிலையில் இருப்பது போதுமானது. சிலர் நிரந்தரமாக இதனைப் பின்பற்றுகின்றனர். 2 மாதங்களின்பின்னர் படிப்படியாகக் கொழுப்பைக் குறைத்துப பழைய நிலைக்கு மீண்டும் வராமல் கொழுப்பு / சீனி விகிதாசாரத்தை அரைவாசிக்குக் கொண்டு வந்தால் ஆரோக்கியமாக வாழலாம். சமன்பாடு கொழுப்புச் சாப்பிட்டால் உடல் பெருக்கும் என்ற நம்பிக்கை பொதுவாக உண்டு. உண்மையில் கொழுப்பை விட காபோஹைதரேட்டே உடல் எடையை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. ஒரு நாளைக்கு ஒருவருக்கு 2000 கி,கலோரி தேவைப்படும் என்று எடுத்துக் கொண்டால், அவரின் மதியச் சாப்பாடு பின்வருமாறு இருப்பதாக எடுத்துக் கொள்வோம். ஒரு கோப்பைச் சோறு 350 முதல் 400 கிராம் = 500 கி.கலோரி 150 கிராம் கோழி = 350 கி.கலோரி ஏனைய மரக்கறிகள் (தாழித்த எண்ணை உட்பட) = 250 கி.கலோரி ஒரு நேரச் சாப்பாட்டிலேயே 1000 கி.கலோரிகள் தாண்டப்பட்டு விட்டன. இதில் சாப்பாட்டுக்குப் பின்னர் ஒரு பழம் அல்லது இனிப்புப் பலகாரம் ஒன்றைச் சாப்பிட்டால் கணக்கு எங்கோ போய்விடும். மேலதிகமான ஒவ்வொரு 90 கி.கலோரிகளும் 10 கிராம் கொழுப்பாக உடலில் சேமிக்கப்படுகிறது. இதுவே காபோஹைதரேட் தவிர்ந்த உணவாக இருந்தால் 1000 கி,கலோரியை எட்டுவது கடினம். உடலுக்குத் தேவையான மிகுதி சக்திக்காகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்பு உருக்கப்படுகிறது. மேலதிகமாகத் தேவைப்படும் ஒவ்வொரு 90 கி.கலோரியும் 10 கிராம் எடையைக் குறைக்கும். அதனால்தான் கொழுப்பு உணவை உட்கொண்டால் கலோரிகளை எண்ண வேண்டிய கவலை இல்லை. கண்ணை மூடிக் கொண்டு வயிறு நிறையச சாப்பிடலாம். அத்துடன் சிறிய உடற்பயிற்சி ஒன்றையும் செய்வீர்களாக இருந்தால் இரடிப்பு லாபம். ஒரே நாளில் உடலிலிருந்து சுமார் 100 கிராம் கொழுப்பு வரை வெளியேற்றலாம் . அனுகூலங்கள் கொழுப்பு உண்பதால் வேறு பல நன்மைகளும் உள்ளன. நன்றாகச் சாப்பிட்டுக் கொண்டே உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம் கலோரிக் கட்டுப்பாடு தேவையில்லை இரத்தத்தில் கொழுப்பின் அளவு குறையும் (triglycerides) இரத்தத்தில் சீனியின் அளவு குறைந்து விடுவதால் இன்சுலின் சுரப்பிக்கு அதி வேலை இல்லாமல் போகிறது மேலே சொன்ன epileptics நோய் கட்டுப்படுத்தப் படுவதுபோல் குளுக்கோஸ் வழங்கல் தடையால் ஏற்படும் அல்சைமரின் ஆரம்ப நிலையிலும் இதனைக் கட்டுப்படுத்தலாம். சில வகையான புற்றுநோய் மேலும் பரவாமல் தடுக்கப்படலாம். ஏனைய உடல் கலங்கள் போல் புற்றுநோய்க் கலங்கள் புதுப்பிக்கப்படுவதும இல்லை இறப்பதும் இல்லை, இவை பெரும்பாலும் குளுக்கோசினால்தான் உயிர்வாழ்கின்றன, குளுக்கோஸ் இல்லாத கட்டத்தில் புற்றுநோய்க் கலங்கள் நலிவடைந்து மேலும் பரவாமல் தடுக்கபொபடுகிறது சில வகையான கட்டிகள் வீக்கம் போன்றவை குறைந்து விடும் ஈரல் வேலைப்பளு குறைந்து இலகுவாகச் செயல்படும். இன்னும் பல… தீமைகள் உடலில் நீர்த்தன்மை குறையும். தினமும் போதுமான அளவு நீர் அருந்த வேண்டும் நார்ப்பொருள் குறைவாக உட்கொள்ளப்படுவதால் மலச்சிக்கல் ஏற்படலாம். போதுமான அளவு கீரை பச்சை மரக்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும் கொழுப்பு உணவில் சில விற்றமின்களும் கனியுப்புகளும் குறைவாக இருக்கும், அதற்கேற்றவாறு உணவுகளைத் தெரிவு செய்ய வேண்டும். படிப்படியாகக் காபோஹைதரேட்டைக் குறைத்து keto diet இன் உச்ச நிலைக்குச் செல்லும்போது சிலருக்குக் களைப்பு போன்ற உணர்வு அல்லது காய்ச்சல் போன்ற உணர்வு ஏற்படலாம், இதனை ketone காய்ச்சல் என்று சொல்வார்கள். எந்த ஆபத்தும் இல்லை இரண்டு மூன்று நாட்களில் இல்லாமல் போய்விடும். இனி keto diet இனை எப்படிச் செயற்படுத்துவது, எதை உண்பது, எதைத் தவிர்ப்பது என்பதையும் எனது அனுபவத்தினையும் எழுதுகிறேன். தயவு செய்து இதன் இரண்டாம் பகுதியையும் எழுதியபின் உங்கள் கேள்விகளை முன்வையுங்கள். தொடரும்.
 7. 12 points
  பிள்ளையார் துணை பிறேமன் மேற்கு ஜேர்மனி 19,10.1982 அன்புள்ள தேன் பரிமளம் அறிவது! நான் நல்லசுகம்.உங்கடை சுகங்கள் எப்பிடி? என்னையும் இன்னும் கொஞ்ச ஆக்களையும் நாங்கள் ரயிலிலை பரீஸ் போய்க்கொண்டிருக்கேக்கை பொலிசு பிடிச்சுப்போட்டார்கள்.நீங்கள் பொலிசு எண்டவுடனை கனக்க யோசிக்க வேண்டாம். அகதியாய் வந்தால் இஞ்சை இப்பிடித்தானாம்.எங்களை விசாரிச்சுப்போட்டு ஒரு பெரிய காம்பிலை விட்டிருக்கினம். இஞ்சத்தையான் பொலிசு நல்லவங்கள்.அடிக்கேல்லை.நல்ல அன்பாய் கதைக்கினம். காம்பிலை கனசனம் இருக்கினம்.எல்லாம் வேறை வேறை நாட்டுக்காரர். எங்கடை சனமும் கனபேர் இருக்கினம்.அதாலை ஒரு பயமும் இல்லை. கடியன் கந்தையாவின்ரை மூத்த பெட்டையும் இஞ்சைதான் நிக்குது. நான் திரும்பியும் பாக்கேல்லை.நான் இருக்கிற றூமிலை 8பேர் இருக்கிறம்.புங்குடுதீவு,அரியாலை,கொழும்புத்துறை,மானிப்பாய்,முல்லைத்தீவு,கொழும்பு,பூநகரி எண்டு எல்லாரும் வேறைவேறை இடத்து ஆக்கள்.பழகிறதுக்கு நல்லவை போலை கிடக்கு. இஞ்சை வரவர குளிர் கூடுது.குளிருக்கு பியர் நல்லதெண்டு அரியாலைப்பொடியன் ஈழக்குமார் சொன்னவர்.ஒரு சில ஆக்கள் பியர் ரின் வாங்கி குடிப்பினம்.நான் குடிக்கிறதில்லை.இஞ்சையெல்லாம் பியர் குடிக்கிறது கெட்டபழக்கம் இல்லையாம்.இஞ்சை காம்பிலை மூண்டு நேரமும் பெட்டிச்சாப்பாடு தருவினம்.மாதம் 75ருபாயும் கைச்செலவுக்கு தருவினமாம். நான் உங்களுக்கு கடிதம் போடுறது ஒருத்தருக்கும் சொல்லவேண்டாம்.பீயோன் ஏகாம்பரம் ஐயாவிட்டை எல்லாம் விபரமாய் சொல்லியிருக்கிறன்.அவர் இரகசியமாய்த்தான் கடிதங்களை கொண்டுவந்து தருவார்.நீங்கள் கடிதம் எனக்கு போடேக்கை அவரிட்டையே குடுத்து விடுங்கோ.அவர் முத்திரை ஒட்டி எனக்கு போடுவார்.என்ரை செல்லம் நீங்கள் ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம்.வேலை கிடைச்சவுடனை நான் எல்லாத்தையும் பாக்கிறன்.கொஞ்ச நாள் போக ஒவ்வொருத்தருக்கும் வீடடிச்சு விடுவினமாம்.அதுக்குப்பிறகு வேலை தேடி எடுக்கலாமாம்.இல்லாட்டி சுவீஸ் போகலாம் எண்டு கதைக்கினம். என்ரை வில்லன் அதுதான் உங்கடை பொடிகாட் கொண்ணர் என்ன செய்யிறார்? நான் இல்லாதது அவருக்கு ஒருசோலி முடிஞ்சிருக்கும் எண்டு நினைக்கிறன். நான் என்ரை மாம்பழம் உங்கடை நினைப்பிலை தான் இருக்கிறன்.அதை ஒருத்தராலையும் ஒண்டும் செய்யேலாது. சரி செல்லலம் கனக்க எழுதிப்போட்டன் போலை கிடக்கு. இப்ப இஞ்சை நேரம் இரவு ஒன்பதரை.மற்றவை காட்ஸ் விளையாடிக்கொண்டிருக்கினம்.நான் படுக்கப்போறன்.என்ரை தற்போதைய விலாசம் பின்பக்கம் எழுதிவிடுறன்.பதில் கடிதத்தை ஏகாம்பரம் ஐயாவிட்டை குடுத்து விடுங்கோ.உங்கடை பதில் கடிதம் காண வழிமேல் விழிவைத்து காத்திருப்பேன் அன்பே. என்ரை ராசாத்திக்கு ஆயிரம் முத்தங்கள். இப்படிக்கு அத்தான் குமாரசாமி
 8. 11 points
  நண்பரே இது ஒரு ஆணாதிக்க சிந்தனையாக இருந்தாலும் கூட அரைவாசி ஆண்கள் இதை மறுக்க மாட்டார்கள். ஆனால் யாழில் பெண்கள் ஒத்து வருவார்களா கத்தியால் குத்த வருவார்களா என்பதற்கு என்ன உத்தரவாதம். இதை நானோ நீங்களோ தீர்மானிக்க முடியாதுதானே..... சட்ட சிக்கல் வேற இருக்கு.....! ஆனாலும் முயற்சித்து கொண்டுதான் இருக்கின்றோம். சமீபத்தில் இம் முயற்சியில் நான் ஊர் போயிருந்தபோது, என்னை கண்டதும் அப் பெண் பின்னங்கால் பிடரியில் பட ஓடிவிட்டார்.....! (திவ்யதேசம்) எனது நண்பர் இதற்காக தனது மனைவியையும் அழைத்து கொண்டு ஊருக்கு சென்றபோது அவரது காதலி அவரை தெரியாது என்றே கூறிவிட்டார்.....!(கலா). இன்னொரு நண்பர் கடிதத் தொடர்பில் இருக்கிறார்.கதை முடியும்போதுதான் தெரியும் அவருக்கு என்ன மாதிரியான முடிவு என்று.....! ( அன்புள்ள பரிமளம். இன்னும் முடிவு த எட்டப்படவில்லை). இதற்கான ஆவணங்கள் யாழ் அக்காவை 21ல் காணக் கிடைக்கிறது. தேடித் பார்க்கவும்.....!
 9. 11 points
  "பல தடவைகள் தாயகம் சென்று வந்த சுரேஸுக்கு இந்த தடவை போவது ஒரு வித புத்துணர்ச்சியை அவனுக்கு கொடுத்தது.சில சமய‌ங்களில் அவனை அறியாமலயே சிரிப்பதும் உண்டு.ஏன் சிரித்தேன் என்று எண்ணும் பொழுது அவனுக்கே வெட்கமா இருந்தது. "இஞ்சாரும் ஊருக்கு போற நாள் வந்திட்டுது டிக்கட் அலுவல் எல்லாம் பார்த்தாச்சோ" "காசு டிரான்சவர் பண்ண வேணும் அதுக்கு இப்ப கனகாசு போகப்போகுது" "போகவெளிக்கிட்டால் காசு போகத்தானே செய்யும்" "என்ன இந்த முறை ஊருக்கு போறது என்றவுடன் என்னை விட நீங்கள் உசாரா இருக்கிறீயள் போல" "இஞ்சாருமப்பா இந்த தடவை சிறிலங்கா போகும் பொழுது கொழும்பில் ஒரு நாள் நின்று போட்டு அடுத்த நாள் ஊருக்கு போவம்" "இதென்ன புதுக்கதையா இருக்கு நீங்கள் தானே வழமையா . ஒரு கிழமைஅக்காவுடன் நிற்கவேணும் என்று சொல்லுறனீங்கள்" "போனவருசம் போய் நின்டனாங்கள் தானே,,திரும்பி வந்து நிற்க்கலாம் " "எனக்கு பிரச்சனை இல்லை எல்லோரும் தூரத்து சொந்தங்கள், கொழும்பில் ஒரு நாள் நிற்கிறதைப்பற்றி கவலை படுகிறீயள், இரண்டு கிழமை இந்தியாவில நிற்க வேண்டி வரப்போகுதே " "நான் சொன்னனான் அல்ல இந்தியாவுக்கு வரும் பொழுது போவம் என்று" " இந்தியாவில சொப்பிங் செய்து கொண்டு போனால் தானே,, உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க வசதியாக இருக்கும் " "இங்க வாங்கி கொண்டு போகலாம் தானே" "டோலரில் வாங்கி கொடுக்கிறதிலும் பார்க்க இந்தியன் ருப்பீஸ்ஸில் வாங்கி கொடுத்தால் மலிவா விசயம் முடிஞ்சுடுமல்ல" "அவுஸ்ரேலியாவில இருந்து போறனாங்கள் அவுஸ்ரேலியன் பொருட்களை கொடுத்தால் ந‌ல்லம் " "சும்மா போங்கப்பா உவங்க‌ளிட்ட என்ன கிடக்கு ,எல்லாம் சீனாக்காரனின்ட சமான்கள் ,அதுக்கு காசு கொடுக்கிறதிலும் பார்க்க ,அந்த காசில இந்தியாவில நல்ல சீலைகளை வாங்கி கொடுக்கலாம்" தொடர்ந்து மனைவியுடன் விவாத்தித்து வெல்ல முடியாது என நினைத்தவன் "நீர் நினைச்சதை தான் செய்து முடிப்பீர் ,என்னத்தையும் செய்து முடியும்" கலாவை வெகு சீக்கிரத்தில்ச‌ந்திக்க வேணும் என்ற ஆதங்கத்தில் இருந்தவனுக்கு அத‌ற்கு காலதாமத‌ங்கள் ஏற்படுகின்றது என்ற ஆத்திர‌த்தில் கையிலிருந்த தேத்தண்ணீர் கோப்பையை மேசையில் டமார் என சத்தம் வரும்படி வைத்தான். "இப்ப ஏன் கோவப்படுறீயள் " "நான் கோவப்பட‌வில்லை ,ஊருக்கு போவதற்கு தாமதமாகுது " "உன்னான எனக்கு விளங்கவில்லை வழமையாக ஊருக்கு போவது என்றால் பஞ்சிபடுவியள் இந்த‌ தடவை ஏன் அந்தரபடுறீயள்" "அதோ ,போனதடவை போய் ஒரு சின்ன வீடு செட் பண்ணி போட்டு வந்தனான் அதை பார்க்கத்தான்" "உந்த மூஞ்சிக்கு அது ஒன்றுதான்இல்லாத குறை " "இஞ்சாரும் என்ட மூஞ்சிக்கு வராட்டியும் அவுஸ்ரேலியன் பாஸ்போர்ட்டுக்கு சனம் லைனில வரும்" "ஓஓஒ ,உங்களுக்கு கலியாண வயசு சனம் லைனில வரப்போகுது" "சும்மா விசர் கதை கதையாமல் போற அலுவலை போய் கவனியும்" ம்ம்ம்ம் உதுல நின்று உங்களோட கதைச்சுகொண்டிருந்தால் ஊருக்கு போக முதல் டிவோர்ஸில் தான் முடியும் என புறு புறுத்தபடியே மேசையில் இருந்த தேத்தண்ணீர் கோப்பையை எடுத்துக் கொண்டு குசினிக்குள் சென்றவள் ,தனது கோபத்தை கொப்பைகள் மீது காட்டினால். குறைந்த செலவில் நிறைந்த இன்பம் என்ற கோட்பாட்டில் அவள் டிக்கட்களை எடுத்திருந்தாள். "எயர்போர்ட்டுக்கு டக்சியை புக் பண்ணி போவமோ" "என்ன புதுக்கதை வழமையா என்ட தம்பி அல்லது தங்கச்சி தானே கூட்டிக்கொண்டு போறவையள்" "அவயளுக்கு ஏன் கரைச்சலை கொடுப்பான் " "20 கிலோவும் கான்ட் லகேட்ஜ் ம‌ட்டும் தான் கொண்டு போகலாம்"என்றாள் உடனே சீனாக்காரனின்ட கடைக்கு ஒடிப்போய் ஒரு ஸ்கேலையை வாங்கி கொண்டு வந்தான் சுரேஸ்.ஒவ்வோருமுறையும் ஒரு ஸ்கேல் வாங்குவான் பயணம் முடிய அது உடைந்து விடும் ,ஐந்து டொலருக்கு ஏற்ற வேலையையத்தான் அதுவும் செய்ய முடியும்.எல்லோருடைய ல‌க்கேஜும் ச‌ரியா 20 கிலோ இருக்குமாறு செய்துவிட்டு கைப்பொதிகளையும் 7 கிலோ இருக்கும்மாறு ஒழுங்கு படுத்திவிட்டு சமான்கள் எல்லாம் வைச்சாச்சோ லொக்கை போடட்டோ என்றான். "ஏன் அந்தரப்படுறீயள் அப்பா" அவனது பிள்ளைகளும் மனிசியும் கோரசா குரல் கொடுத்திச்சினம் "அப்பாவுக்கு எல்லாத்திற்கும் டென்சனும் அந்தரமும்" "இப்பவே எல்லா லக்கேஜும் 20 கிலொ வ‌ந்திட்டு இனி எங்க வைக்கிறது "அப்பா உங்கன்ட உடுப்புகளை குறைச்சு போட்டு உதுகளை வையுங்கோவன், நீங்கள் அங்க போய் வாங்கலாம் தானே" "ம்ம்ம் கடைசில நான் தான் அதற்கும் தியாகம் பண்ணவேணும்" " சூவிட் அப்பாவல்லோ" இழுபறிபட்டு அவர்களது பயணம் தொடங்கினது.இரண்டு கிழமை(உந்த இர‌ண்டு கிழமையும் உவன் சுரேஸ் என்ன செய்திருப்பான் என்று பிறகு எழுதுகிறேன்) கழித்து சென்னையிலிருந்து கொழும்பு பயணம். "இஞ்சாரும் இந்தியாவில சீலைகள் எல்லோருக்கும் அளவா வாங்கினீறோ அல்லது எக்ஸ்ராவா ஒன்று இரண்டு வாங்கினீரோ" "ஒம் ஐந்தாறு எக்ஸ்ராவா வாங்கினனான் , ஏன்? என்னப்பா இந்த முறை உங்கன்ட போக்கு ஒரு மாதிரி கிடக்கு" "சும்மா கேட்டனான் ,ஊரில் சொந்த பந்தங்களுக்கு கொடுக்க" "உங்களுக்குத்தானே ஒருத்தருமில்லையே ,இருக்கிற சொந்தங்களுக்கும் நான் தான் பார்த்து கொடுக்கிறன் இப்ப என்ன புதுசா" "சும்மா கேட்டனான் அடிஆத்த" விமானப்பணிப்பெண் உங்களுக்கு என்ன குளிர்ப்பாணம் வேணும் என கேட்க தனக்கு பிடித்த குளிர்பானத்தை கேட்டு வாங்கி அருந்த தொடங்கிவிட்டான். கலாவுக்கு ஒரு சீலையை கொடுக்க வேணும் என்று நினைத்து அவன் சீலைகளின் எண்ணிக்கையை அறிந்தவன்,அதை எப்படி மனைவியிடம் கேட்பது என்ற தர்ம சங்கடத்திலிருந்தான் ... . பல தடவைகள் போய் வந்தமையால் விமானநிலையம் கொஞ்சம் பழக்கப்பட்டு விட்டது சுரேஸுக்கு. குடிவரவு திணைக்கள வேலைகளை முடித்து கொண்டு பொதிகளையும் எடுத்து சுங்க பரிசோதணையாளர்களை பார்த்து ஒரு புண்சிரிப்பை விட்டான் அவர்களும் தங்களது கடமையை சரியாக செய்வது போல அவனை அழைத்து எங்கேயிருந்து வாறீங்கள் என‌ கேட்டார்கள்,சென்னை என்று சொல்லாம் சிட்னி என்றான் ,நேராக வெளியே செல்லும்படி கையை காட்டினார்கள். வெளியே அவனது சகோதரி தனது மக‌னுடன் அவனுக்காக காத்திருந்தாள். "மாமா என்ன நல்லா மெலிந்து போனீங்கள்" நீ நல்லா வெயிட் போட்டிட்டாய் , உனக்கு அம்மாவின்ட சாப்பாடு ,எனக்கு மனிசியின்ட சாப்பாடு அதுதான்" "மாமி ,மாமா சொன்னது கேட்டதே" "ஒமடா உவர் உப்படி கணக்கா சொல்லுவார்,அங்க இவ்வளவு காலமும் காத்து தானே குடிச்சுக்கொண்டிருந்தவர்" "டேய் நாளைக்கு யாழ்ப்பாணம் போகவேணுமடா டிரெயின் புக் பண்ண ஏலுமோ" "இல்லை மாமா உடனே புக் பண்ணுறது கஸ்டம், வான் பிடிச்சு போங்கோ" "முதல் முல்லைதீவுக்கு போக வேனுமல்லோ அப்பா ....முதலே சொன்னான் அல்லேஉங்களுக்கு இப்ப எல்லாம் மறந்து போகுது டிமன்சீயா கிமன்சீயா வரப்போகுதோ தெரியவில்லை" "மறந்து போனன் அப்ப முல்லைத்தீவுக்கு டிரேயின் புக் பண்ணடா" என்றவன் கண்னை மூடிக்கொண்டு சீட்டில் சாய்ந்து விட்டான்.எல்லோருக்கும் புரிந்து விட்டது கிழவர் கொதியில் இருக்கிறார் என்று ஆகவே அமைதி காத்தனர் வாகனத்தில். சகோதரியின் வீட்டில் சமான்களை இறக்கி வைத்து விட்டு குளித்து உணவு உட்கொள்ள அமர்ந்தனர்.. "மாமா நாளைக்கு முல்லைதீவுக்கு வான் புக் பண்ணவே" "ஓம் புக் பண்ணு எவ்வளவு காசு என்று கேள்' "அப்பா வவுனியாவுக்கு போவம் அங்கயிருந்து முல்லைதீவுக்கு போக எங்கன்ட மச்சானை வானை கொண்டு வரச்சொல்லுவோம்" " அட கட‌வுளே இப்ப வவுனியாவிலும் நாலு நாள் நிற்கப்போறீரோ" "இல்லை சொந்தங்களின்ட வீட்டை டீ குடிச்சு கொண்டிருக்க முல்லை மச்சான் வானை கொண்டு வந்து எங்களை கூட்டிகொண்டு போவார்,தெரிஞ்ச ஆட்களோட அங்க போறது பயமில்லைத்தானே" " ம்ம்ம்ம் ..." அடுத்த நாள் காலை வானில் வவுனியா புறப்பட்டனர் அங்கு மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுதே முல்லை மச்சான் தனது வாகனத்துடன் வந்தார்.அவரும் விருந்தில் கலந்து கொண்டார் .பிள்ளைகளுக்கு அவர்களை அறிமுகப்படுத்தினாள் சுரேசின் மனைவி. மாமாவின் மகள்,சித்தாப்பாவின் மகன் என்று சொல்ல பிள்ளைகளுக்கு அடியும் விளங்கவில்லை நுனியும் விளங்கவில்லை எல்லோருக்கும் ஹாய் ஹாய் என்று சொல்லி விட்டு தமிழில் உறையாட தொடங்கிவிட்டனர்.நல்லா தமிழ் கதைப்பினம் போல கிடக்கு எப்படி?என்றனர் உறவினர். வீட்டில நாங்கள் தமிழில் கதைக்கிறனாங்கள் ,மற்றது நாங்கள் த‌மிழை ஒரு பாடமாக எடுத்னாங்கள் என்று அவையளின்ட தமிழ் புலமைக்கு விளக்கம் கொடுத்தனர். முல்லை மச்சான் வெளிக்கிடுவோமா என்று கேட்க எல்லோரும் நாங்கள் ரெடி என்றனர் . மீண்டும் பைகளை ஏற்றி கொண்டு முல்லை நோக்கி பயணமானார்கள் சுரேசுக்கு கலாவை சந்திக்க வேணும் என்ற ஆர்வம் மேலும் மேலும் அதிகரித்தது.போகும் பாதையில் உள்ள தமிழ் பாடசாலைகளை பார்த்த‌வுடன் இங்கு அவள் ஆசிரியராக கடமை புரிவாளோ என்று எண்ணதொடங்கி விடுவான்.அவள் பின்னால் அழைந்து திரிந்தவை எல்லாம் ஞாபக‌ம் வரத்தொடங்கிவிட்டது. "உங்களுக்கு முல்லை தீவில் யாழ்ப்பாணத்து டீச்சர்மார் யாரையும் தெரியுமோ" "இல்லை என்ட தங்கச்சி டீச்சர் அவளிட்ட கேட்டு பாருங்கோவன்" "இன்னும் ஒரு மணித்தியாலத்தில் போய்விடுவம் என்ன" "ஒம் ஓம் ,மச்சாளை பார்க்க வேணும் என்று சொன்னவள் தங்க‌ச்சி வீட்டை வந்து நிற்பாள் கேட்டு பார்ப்போம்" அந்த ஒரு மணித்தியாலம் ஒரு வருடம் போல தோன்றியது அவ‌னுக்கு வீடு போய் சேர்ந்தவுடனே சுகம் விசாரிக்க எல்லோரும் ஒன்று கூடிவிட்டார்கள்.பொதிகளை இறக்கி வைத்து விட்டு கிணற்றடியில் குளித்து விட்டு இருக்கும் பொழுது சுடச்சுட் தேனீருடன் டிச்சர் வந்தார். "டீச்சர் உங்கன்ட ஸ்கூலில் யாழ்ப்பாணத்து டீச்சர்மார் படிப்பிக்கினமே" "ஓம் அண்ணே ஐந்தாறு டீச்சர்மார் இருக்கினம்" அவ‌னுக்கு ஒரு நிமிடம் கலாவை கண்ட சந்தோசம் வந்து போனது தொடரும் (நாங்களும் டிராமா பார்க்கிறமல்ல)இன்னும் ஒரு பகுதியுடன் கிறுக்கல் முடிவடையும்... இந்த கிறுக்கல் 100 வீதம் யாவும் கற்பனை என்பதை சகல வாசகர்களுக்கும் அறியத்தருவதில் மற்றட்ட மகிழ்ச்சி யடைகிறேன் .
 10. 11 points
  கொல்வது கொலை விடிகாலை இருள் விலகும் தருணம். அந்தத் தென்னந்தோப்புக்குள் நிலை எடுத்தபடி அவள் அவதானமாக நகர்ந்தாள். கைகள் பிஸ்டலில் பதிந்திருக்க விழிகள் தூரத்தில் நாய்கள் குரைக்கும் திசை நோக்கி உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்ததன. ஒரு இராணுவப் படைநகர்வு பாரிய அளவில் முன்னெடுக்கப்படுவதற்கான ஆயத்த கூப்பாடுகள் அந்த விடிகாலை இருளைக்கிழித்தன. அரவம் காட்டக்கூடாது என்ற மேலிடத்துக்கட்டளை அவளை அசைவித்துக் கொண்டிருந்தது. பெக்கி சேர்ட், இலகுவாக ஓடுவதற்கும் தடை தாண்டுவதற்கும் ஏற்றாற்போல் பான்ட், இடுப்பிலே கட்டப்பட்டிருந்த பெல்டின் இடது பக்கம் பிஸ்டல் வலதுபக்கம் இரண்டு கிரனைட்டுகள் கழுத்தில் குப்பி. மிடுக்கான தோற்றம், பெண்மையை வெளிப்படுத்தாத பிரிதொரு கம்பீரம். விழிகளில் மருட்சி இல்லை, அவதானம் ,எச்சரிக்கை உணர்வு, நடுக்கமில்லாத மூச்சுக்காற்று, கத்தரிக்கப்பட்ட கூந்தல் தனி மிடுக்கைக் கொடுத்து மீள மீள அந்தப் பெண் போராளியை நோக்கத்தூண்டுவதாக அமைந்திருந்தது. எதிர்ப்புறத்தை நோக்கி கொண்டிருந்தவளுக்கு பின்பக்கமாக அசைவு தெரிய அந்த இருளில் அசையாமல் நிலத்தோடு ஒட்டிக்கொண்டாள். நாய்களின் குரைப்பொலி பின்பக்கம் கேட்காததால் நிச்சயமாக அது இராணும் இல்லை என்பதை உள்ளுணர்வு உணர்த்தியது. யாரோ நம்மாட்களாக இருக்கும் என்று எண்ணியபடி மெல்லத் திரும்பியவளின் முகத்தைத் தாக்கியது ஒரு கனமான பொருள். சட்டென ஒலியின்றி சுருண்டது அவள் தேகம். முனகலுடன் அவள் விழித்தபோது அவள் எதிரே அவன் இரண்டு கொங்கிரீட் கற்களை அடுக்கி அமர்ந்திருந்தான். அவனைக்கிரகித்து எழுவதற்கு முயன்றவளின் உடல் அசைக்க முடியாமல் வலித்தது. கைகால்கள் பின்புறமாகக் கட்டப்பட்டு இடுப்பில் கட்டியிருந்த பெல்ட் கழட்டி எடுக்கப்பட்டிருந்தது. ஏன் ? இவன் எதற்கு? ஏகப்பட்ட குழப்பங்களுடன் நிமிர்ந்தவளைப் பார்த்து புன்னகைத்தான் அவன். அவனை அவளுக்குத் தெரிந்திருந்தது. அவன் போக்கு சரியில்லை என்பதும் அவன் ஒழுக்கம் பற்றியும் அமைப்பிற்குள் அரசல் புரசலாக சில கதைகள் அண்மைகாலத்தில் அலைவதையும் அறிந்திருந்தாள். மற்றப்படி அவனை அவள் அதிகம் அறிந்திருக்கவில்லை. ஆனால் இப்போது அவன் அவளைத்தாக்கி இந்த இராணுவ நகர்வுப்பாதையில் கட்டிப்போட்டிருப்பது திகைப்பையும் அச்சத்தையும் உருவாக்கத்தவறவில்லை. அப்படியானால் இவன் ஒழுக்கந்தவறியதற்கு அப்பால் காட்டிக்கொடுக்கும் துரோகியா? அவன் அவளையே வைத்தகண் மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தான். எத்தனை காலமாக அவளைக் குறிவைத்திருந்தான். இப்போது மான் மாட்டியிருக்கிறது. இராணுவ நகர்வு அண்மித்துக் கொண்டிருந்தது. அவன் அச்சமின்றி அமர்ந்திருந்தான். அவனுடன் இன்னும் சிலர் அவனுக்கு பாதுகாப்பாக… அவர்களை இராணுவம் நகரும் திசைநோக்கி நகரச் சொல்லி இந்தப்பக்கம் இராணுவம் வராமல் இருக்க அவர்களைத் திசைமாற்றி குறிப்பறிவிக்கச் சொன்னான் எப்படியாவது அவளைத் தன்வலையில் வீழ்த்த இராணுவ நகர்வைப் பயன்படுத்திவிடவேண்டும் என்பது அவன் எண்ணம். அதுவரை இராணுவத்திடம் அகப்படாமல் அவளை வைத்திருக்கத் திட்டமிட்டு, அவள் வாயில் துணியை அடைத்தான். தென்னோலைகள் கொண்டு அவளை மூடி நகர்ந்தான். அவன் நினைப்பிற்கு மாறாக அவன் மீது சந்தேகப்பார்வையை படர விட்டபடி அந்த இராணுவப் பெண் கொமாண்டர் சுற்றிலும் நோட்டம் விட்டாள். வெறுப்புடனும் விருப்பமில்லா சிரிப்புடனும் அவனுக்கு கைகுலுக்கிக் கொண்டு அந்தப் பெண் கொமாண்டர் அவன் வந்த திசை நோக்கி நகர்ந்து முன்னேறினாள். அவள் விழிகள் கொடூரத்தன்மையை வெளிப்படுத்த இதழ்கடையில் குரூரமாக புன்னகைத்தாள். சட்டென்று அந்தத் தென்னந்தோப்புக்குள் சில இராணுவர்களுடன் நுழைந்து நோட்டம் விட்டாள் சற்று மேடாகத் தெரிந்த ஓலை அவளின் சந்தேகப்பார்வைக்குள் விழ தனக்கு அருகாமையில் இருந்த இராணுவனுக்கு கண்களால் ஆணையிட்டாள். சரசரவென ஓலைகள் அகற்றப்பட முக்கில் இரத்தம் ஒழுக, முகம் வீங்கிய நிலையில், கைகளும் கால்களும் பின்புறமாக அசையமுடியாதபடி கட்டப்பட்டிருந்த வாயில் துணி அடைக்கபட்டிருந்த போராளிப்பெண் குப்புறவாக கிடந்தாள். அருகே வந்த கொமாண்டர் அவள் வாயில் இருந்த துணியை அகற்றி அவளை வானம் பார்க்க நிமிர்த்திப் போட்டு விசாரிக்க ஆரம்பித்தாள். கொமாண்டரின் விசாரணைகள் எதற்கும் பதில் அளிக்காமல் இறுக்கமாக மௌனத்திற்குள் இருந்தாள் போராளி. கொமாண்டர் அவனைச்சுட்டிக்காட்டி அவன்போல் நீயும் எங்களுடன் சேர்ந்து விடு, உனக்கு வசதியான வாழ்க்கை அமைத்துத்தருகிறோம். இங்கு வாழ விரும்பாவிட்டால் இந்தியாவில் நீ அழகான வாழ்க்கை அமைத்துக் கொள்ளலாம் என்றாள். அப்பட்டமான துரோகத்தால் வீழ்த்தப்பட்ட அந்தப்பெண் போராளி ஆணித்தரமான மறுப்பை தலையை அசைத்து வெளிப்படுத்தினாள். இராணுவப் பெண்கொமாண்டருக்கு சினம் கூடியது. ஆத்திரத்துடன் கம்பி நறுக்கும் நீண்ட கொறடை எடுத்து போராளி அருகே வந்து அவள் கழுத்தில் வைத்து மிரட்டினாள். அவள் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் தன்னினத்திற்கே துரோகியாக மாறிய அவனை பார்த்தாள். “ஏய் என்ன அவனை முறைக்கிறாய்? எங்களோடு சேர் இல்லையென்றால் இந்தக்கட்டரால் உன் கழுத்தை அறுத்துவிடுவேன்” என்றாள். முடியாது என்று உரக்கக்கூறினாள் போராளி. அடுத்த கணம் கழுத்தில் இருந்த கட்டரை சற்று சாய்வாக்கி கழுத்தின் நரம்பை அறுத்தாள் கொமாண்டர். குபுகுபுவென்று இரத்தம் பாய்ந்தோட அந்தப்பெண் போராளி கைகால்கள் கூட அசைக்கமுடியாமல் கிடந்தாள். அவள் கண்கள் எதிரியை நோக்கவில்லை துரோகியை காறி உமிழ்ந்தது. கொமாண்டர் விலகி நடந்தாள். அவளுடன் சில இராணுவர் அகல, சிலர் கைகால்கள் கட்டப்பட்டு குற்றுயிராக கிடந்த அவளை நெருங்கினர். கை கால்களின் கட்டுகளை விடுவித்து ஆடைகளைக் கிழித்து நிர்வாணம் ஆக்கி குற்றுயிராய் கிடக்கும் அவள்மேல் சிறுநீர் கழித்து எங்களோடு சேராத உனக்கு இதுதான் தண்டனை என்று சொல்லி அவள் உடலெங்கும் சப்பாத்துக் கால்களால் மிதித்தனர். சற்றுத்தூரத்திலிருந்து அவன் பார்த்துக்கொண்டிருந்தான். ஆசைப்பட்டது தனக்கு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தைத்தவிர அவனுக்கு எதுவும் தோன்றவில்லை. அவள் அன்றே இறந்தும்போனாள். புழுதி படிந்த சாய்வு நாற்காலி, அதிகாரம் இழந்த ஆணவம், எல்லோராலும் ஒதுக்கப்பட்ட தனிமை, களையிழந்த முகம், ஒளி குன்றிய கண்கள், நடுத்தர வயதின் முடிவு நரையும் ,வழுக்கையும் போட்டியிடும் தலை, மனஉளைச்சல்களின் கதக்களியில் மூப்பெய்திய அவன். கேட்க ஒரு நாதியற்ற மானுட அவலத்தில்,……. நேற்றாடிய துரோகத்தால் இன்னும் அவன் உயிரோடு கிடந்தான். அவன் தனித்திருந்தான் சூழ இருந்த பலங்கள் காரியம் முடிந்ததும் காணாமல்போயின. , மெல்ல மெல்ல மன உளைச்சல் அவனிடத்தில் குடியேறி அவன் துரோகத்தை படிப்பினையாக்கி கொண்டிருந்தது. ஆண் என்ற ஆணவமும், வாழ்வேன் என்ற வன்மமும் புழுதி படிந்து அந்த சாய்வு நாற்காலியைப்போல்…. கூட இருந்தவர்களைத் துரோகத்தால் வீழ்த்திய வரலாறு பெருஞ்சாபமாய் தலையில் விடிந்தது. கைகால்கள் மரத்துக் கொண்டன. வாயில் நா ஒரு பக்கமாக இழுத்துக்கொண்டது. உடல் நிலத்தில் வீழ்ந்தது. நீண்ட நேரமாகியும் எவரும் வரவில்லை. ஒரு நாய் மட்டும் அருகே வந்து மணந்து தனது பின்னங்காலைத்தூக்கி சிறுநீர் கழித்துவிட்டு நகர்ந்து மறைந்தது. மூளை கிரகித்துக் கொண்டது. அசைய முடியாதபடி கைகால்கள் கட்டப்பட்டு கழுத்து நரம்பு அறுக்கப்பட்ட பெண்போராளி புன்னகையுடன் அவனை விழித்துப் பார்த்தாள்.
 11. 10 points
  பிடரிப்பகுதியிலே -எனக்குப் பெரியதாய் ஒரு தசைப்பிடிப்பு. ஆட்டிச் சொல்ல முடியுதில்லை- தலையை ஆம் என்றும், இல்லை என்றும். பின்னாலே பார்ப்பதற்கு நான் பிரள வேண்டும் பாதி வட்டம். முயன்றுதான் பார்த்தேன்- பல மருந்தும் முன்னேற்றம் மட்டும் பூச்சியமே. வாட்டி இழு எருக்கிலையை வலி மறையும் என்றார் பாட்டி. வாட்டி,வாட்டி இழுத்துப் பார்த்தேன் -பிடரி மயிரெல்லாம் எரிந்து போச்சு. வா வீ கியூ மணம் வருதே நானும் வரட்டா ஒரு பிடிபிடிக்க என மயிரெரியும் வாசனையை என் மச்சான் வா வி கியூ என நினைத்துக் கேட்டான். டைகிளோ பீனைல் போடு என ரை கட்டிய நண்பன் சொன்னான். போட்டுத்தான் பார்த்தேன் நானும் ம்கும் போகவில்லை தசைப்பிடிப்பு. பிசியோ தெரபி சிகிச்சை செய்யும் பிரிந்து போன பழைய காதலி சொன்னாள். செய்துதான் பார்த்தேன்- செலவாய்ப் போச்சு பெருமளவு. தலையணையை மாற்றுங்கள் அத்தான் தயவாய் எந்தன் மனைவி சொன்னாள். மாற்றினேன் தலையணையை-அதிசயம், மாயமாச்சு தசைப்பிடிப்பு. கட்டிப்பிடித்து உம்ம்ம்மா கொடுத்து காரணம் என்ன என்று கேட்டேன். தலையணைக்கும் மெத்தைக்கும் சரியான பொருத்தமில்லை, மற்றையவர் பொருந்தாட்டியும் நமக்கும் வலிகள் வரும். மனைவி சொன்னாள் இந்த உண்மை. மெத்தையை மாற்றுதற்கு மெத்தச் செலவு , அதனாலேதான்- தலையணையில் கையை வைத்தேன் தயங்காமல் இதையும் சொன்னாள். மனைவி சொல் மந்திரமாம் -மட்டுமில்லை மனைவி சொல் மருந்துமாகும். ஆதலினால் மனைவி சொல்லைக் கருத்தில் கொள்ளும் -அது உங்கள் துன்பம் போக்கும்,துயரம் தீர்க்கும் !.
 12. 10 points
  விமான நிலையத்தில் என்னுடன் சேர்ந்து ஒரு 30 பேர் செல்ல ஆயத்தமானார்கள் அவர்கள் எல்லோரும் என் வயதை ஒத்தவர்கள் அந்த நாட்டு காசு மாற்றி எல்லோரிடமும் வெறும் 50 திர்ஹம் மட்டும் இருந்தது. என்னைப்போலவே வயல்காணிகளையும் , வீடுகளையும் விற்று வந்தவர்ளும் மற்றும் பிள்ளை பிடித்தலில் இருந்து தப்பித்து வந்தவர்களும் படுவான்கரையைச் சேர்ந்தவர்கள் அவர்கள் எல்லோரும். விமான நிலைய உள்ளக சம்பவங்களை கண்டதும் நாங்கள் எங்களை மறந்து போனோம். விமானம் ஏர்லங்கா அழைப்பு கொடுக்கிறது அடிமாடுகளாய் செல்ல போகும் அடிமைகளே அனைவரும் வருக வருக என. வாருங்கள் வாருங்கள் உங்களை இன்னொரு நாட்டுக்கு விற்க ஆவலாக உள்ளோம் எனவும். எல்லோரும் உள்ளே சென்றோம் முதல் விமான பயணம் என்பதால் கொஞ்சம் பதட்டமாக இருந்தாலும். எல்லாச்சாமிகளும் ஒரு நிமிடம் மனதுக்குள் வந்து விளையாடிப்போனார்கள் . விமானம் பறக்க ஆரம்பமானது உச்சியை தொடும் வரை கொஞ்சம் நெஞ்சில் தண்ணீ இல்லை எல்லோருக்கும். பக்கத்தில் இருப்பவர்கள் என்ன செய்கிறார்களோ அதை கவனித்து அதன் பிறகு எல்லாம் தெரிந்தவர்கள் போல செய்து பல தடவை விமானத்தில் சென்று வந்தது போல காட்டிக்கொண்டோம் எல்லோரும் . விமானத்தில் சாப்பாடும் கொஞ்ச தண்ணீரும் சோடா பானங்கள் கொடுக்கப்பட்டது குடித்துவிட்டு அந்த விமான பெண்களை அழைக்கும் ஒரு சுவிட்ச் இருந்தது அதை அவர்களை அழைப்பதென்று தெரியாமல் இவனுகள் எல்லோரும் அவளை காண்பதற்க்காகவா? இல்லை தெரியாமல் அழுத்துகிறார்களா!!!! என்று தெரியாமலே அழைத்துக்கொண்டிருந்தானுகள் சிலர் அவளிடம் பியர் வாங்கி குடிப்பதற்க்காகவும் அழுத்திக்கொண்டே இருந்தானுகள். அவளோ சிரித்து வந்து ஏசிப்போனாள் மணித்தியாலங்கள் செல்ல செல்ல ஊரும் உறவினர்களும் ஞாபகத்திற்குள் வந்து விட்டார்கள் விமானம் தரை இறங்க உள்ளதால் சீட் பெல்ட்டை அணிய சொல்லி விமானி அறிவித்தல் கொடுக்க பட்டியை இறுக்கி யன்னல் வழியே எட்டிப்பார்க்க எல்லாம் மணல் தரைகளாகவும் மணல் குன்றுகளாகவும் கண்ணாடி கட்டிடங்களின் ஒளி பிளம்புகள் பளபளவவென மின்னல் வெளிச்சம் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது. விமானம் தரை இறங்கியதும் வெள்ளைக்காரன் போய் கெப்டனை (பைலட்டை) கட்டி அணைத்து நன்றி சொல்லி இறங்கி சென்றான் நானும் தங்கியூ கெப்டன் என்று சொல்லி விமானநிலையத்தினுள் உள் நுழைகிறேன் வெல்கம் துபாய் என்ற அழைப்பும் அரபு மொழியும் ஆங்கிலமும் கலந்து வரவேற்றது . ஆங்கிலம் புரிந்தது ஆனால் அரபியோ சுத்தமாக ஒன்றுமே புரியல. கண்ணிலிருந்து, கைரேகை வரைக்கும் பதிவு செய்து எல்லாம் சரி செய்த பின்னரே வெளியே விட்டார்கள் வெளியே வந்து பார்த்தால் சரியான வெயில் நம்ம ஊரில் பாண் செய்யும் போறணைக்குள் (பேக்கரி) இருக்கும் தணலில் தூக்கி போட்டமாதிரி இருந்தது. எங்களுக்கு என்னடா இப்படி வெயிலா இருக்கு என்று ஆளாளுக்குள் பேசிக்கொண்டாலும் எங்களை அழைத்து செல்ல நாங்கள் வந்த ஒப்பந்த கம்பனிகாரர்கள் வரவில்லை இரண்டு மணிநேரமாக காத்திருக்க போட்டு வந்த சேட் எல்லாம் வியர்வையால் (உருகி) நனைந்து நனைந்து ஈரமாகிகொண்டே இருந்தது. தொடரும்..........
 13. 10 points
  துர்க்கை அம்மன் துணை கரணவாய் சென்ரல் கரணவாய் 2.11.1982 அன்புள்ள ஆசை அத்தானுக்கு. நான் இங்கு நல்ல சுகம் அது போல் நீங்களும் சுகமாயிருக்க அம்மனை வேண்டுகின்றேன். உங்கள் பொன்னான மூன்று கடிதங்களும் என் கைக்கு கிடைத்தது. உங்கள் முத்து முத்தான முத்தங்களை அள்ளி பகிர்ந்தேன். உவ்விடம் கடுமையான குளிர் என எழுதியிருந்தீர்கள். நல்ல உடுப்புகள் வாங்கி போடுங்கோ. சாப்பாடுகள் எல்லாம் என்ன மாதிரி? கூடாத சாப்பாடுகளை சாப்பிட வேண்டாம். புட்டு இடியப்பம் எல்லாம் தருவார்களோ? உங்களுக்கு முட்டுக்காய் தேங்காய் துருவல் போட்ட புட்டு நல்ல விருப்பம் என்று உங்கடை அம்மா சொன்னவ . செவ்வாயும் வெள்ளியும் மச்சம் சாப்பிட வேண்டாம்.நான் இப்ப அம்மனுக்கும் முருகனுக்கும் விரதம் பிடிக்கிறன். சொண்டு வெடிச்சுப்போச்சுதெண்டு எழுதியிருந்தீர்கள்.டாக்குத்தரிடம் போய் மருந்து எடுங்கோ. உங்கை பாசைப்பிரச்சனை இல்லையோ? கடியன் கந்தையாவின்ரை மகள் கதை கேட்டாலும் கதைக்க வேண்டாம்.வேறு இடம் மாற முடியுமென்றால் இடம் மாறவும்.அவள் உங்கடை அறைக்கு பக்கத்திலையா இருக்கிறாள்? அய்யாவும் அம்மாவும் சுகமாய் இருக்கினம்.நீங்கள் சுகம் கேட்டதாய் சொன்னேன். சந்தோசப்பட்டினம். அய்யா உங்கடை அய்யாவோடை எங்கடை கலியாணத்தை பற்றி கதைக்கப்போறன் எண்டு சொன்னார். தங்கச்சி வசந்தி உங்களைப்பற்றியே நெடுக விசாரிச்சுக்கொண்டிருப்பாள்.நீங்கள் சுகம் விசாரிச்சதாய் சொன்னேன். அவளுக்கும் நல்ல சந்தோசம். அத்தான் என்னைத்தான் எண்ட பாட்டை நான் பாட அவளும் சேர்ந்து பாடுவாள். சின்னப்பிள்ளை தானே. நீங்கள் இருக்கிற அறையிலை எட்டுப்பேர் என எழுதியிருந்தீர்கள். எல்லாரும் உங்கடை வயதுக்காரார்களோ? எல்லாரும் குடிக்கிறவையோ? நீங்கள் கவனமாய் இருங்கோ.நீங்கள் கெட்ட பழக்கம் பழக என்ரை அம்மன் விடமாட்டா. இருந்தாலும் நீங்கள் கவனமாய் இருக்கவும்.பியோன் ஏகாம்பரம் நல்ல மனிசன்.அய்யாட்டை வாற சாட்டிலை உங்கடை கடிதத்தை என்னட்டை ஒருத்தருக்கும் தெரியாமல் தெரியாமல் தருவார். எனது அண்ணா சுகமாக இருக்கிறார்.அண்ணா எங்கள் காதல் விவகாரம் தெரிந்து உங்களை சைக்கிளால் தள்ளிவிட்டு அடித்ததை என் வாழ்க்கையில் மறக்க மாட்டேன். அதை நினைக்கும் போதெல்லாம் என் இதயம் வெடிக்கும்.எல்லாம் எனக்காகத்தானே தாங்கிக்கொண்டீர்கள்.வசந்தியும் என்னுடன் சேர்ந்து கவலைப்படுவாள். இப்பவும் நோகுதா அத்தான்? நான் எத்தனை முறை தடவினாலும் அந்த வலி ஆறாது என்பது எனக்குத்தெரியும் அத்தான். இதை எழுதும் போது என்மனம் அழுகின்றது அத்தான்.உங்களை கட்டிப்பிடித்து அழவேண்டும் போலிருக்கின்றது அத்தான். ஆயிரம் முத்தங்கள் என் அத்தானுக்கு. நீங்கள் எனக்கு கைச்செலவுக்கு தந்த பத்தாயிரம் ரூபாய் அப்பிடியே வைச்சிருப்பன்.அதை செலவழிக்க மாட்டன்.உங்களுக்கு சொந்தமான 85 ஏக்கர் முரசுமோட்டை வயலை உங்கடை தங்கச்சிக்கு எழுதினதை ஊரிலை பெரிசாய் கதைக்கினம். அண்ணா என்றால் இப்படித்தான் இருக்கோணுமாம். பளையில் இருக்கும் தென்னம் தோப்புகளை என்ன செய்யப்போகின்றீர்கள். அதையும் தங்கச்சிக்கு எழுதி விடுறது நல்லது என நான் நினைக்கின்றேன். அத்தான் உடம்பை கவனியுங்கோ.நேரத்துக்கு சாப்பிடவும். உங்களை காணாதது எனக்கு ஏதோ விடியாதது மாதிரி இருக்கின்றது.இத் துடன் முடிக்கின்றேன். உங்கள் பதில் கடிதம் கண்டதும் முத்த மழை பொழிவேன். அன்பு ஆசை அத்தானுக்கு அளவில்லா முத்தங்கள். இப்படிக்கு உங்கள் அன்பு வருங்கால துணைவி பரிமளம்
 14. 9 points
  ம்ம் நிட்சயமாக் கருத்துக்கு நன்றி சகோ மிக்க நன்றி ரதி அந்த நிறுவன முதலாளி கூப்பிட்டிருந்தார் பயந்து போய் நின்றேன் போட்டுக்கொடுத்தவர் ஈரான் நாட்டை சேர்ந்தவன் ஏன் கார் கழுவுகிறாய் உனக்கு என்ன வேலை!!! என்ன செய்கிறாய் நீ ?......... என...... .நான் பதில் பேசாமல் நின்று விட்டு மன்னிக்கவும் சேர் வீட்டில் சரியான கஸ்ரம் எல்லோரும் அகதிகள் முகாமில் இருக்கிறார்கள் சுனாமி அடிச்சதால. எனக்கு கம்பனி தரும் சம்பளம் போதாது அதற்குத்தான் கார் கழுவினேன் தொழும் நேரம் என்பதால் எனக்கும் வேலை இல்லை அதானலதான் என்றேன். முழுவிபரங்களை கேட்ட அவர் பரிதாபப்பட்டார் சரி அப்படியென்றால் நமது நிறுவன கார்களையும் சேர்த்து கழுவி விடு அதற்கு செக் தருகிறோம் நாங்கள் என்றார். எனது சம்பளம் 800 +1000( கார் ) =64000 இந்த கார் கழுவுவது கம்பனிக்கு தெரியாது தெரிந்தால் பிரச்சினை உடனே வேறு இடத்துக்கு மாற்றிவிடுவார்கள் அதுபோக அடிக்கடி வந்து செக் பண்ணிவிட்டு செல்வார்கள் எங்களை. பொலிசுக்கும் தெரியக்கூடாது தெரிந்தால் பிடிச்சி போய் விடுவார்கள் இப்படி இருக்க எங்க மேனேஜரோ பொலிசுக்கும் மேலாக இருந்தவர் அவர். இப்படி நல்ல மனிதரா என நினைத்தாலும் அவரிடம் போட்டுக்கொடுப்பது மற்ற நாட்டுக்காரன்கள் ஈரானி, மிசிறி (எஜிப்ற்) சூடானி , எத்தியோப்பியா, இவனுகள் போய் அவரிடம் கோள் சொல்வது வழமைதானாம் என்று சொன்னார்கள் மற்றவர்கள். எங்களுக்கு அங்கு வேலை காலை 7.30 ற்கு ஆரம்பமாகி பகல் 2.30 ற்கு முடிந்து விடும் அதிகாலை நேரத்துடன் வேலைக்கு வருவதால் அந்த நிறுவன கார்களை நேரத்துடனே கழுவி விட்டு பகலில் எங்களது நிறுவனத்தில் வேலை செய்யும் அரபி பெண்களின் கார்களையும் கழுவிக்கொள்வேன். அதற்கும் காசு தருவார்கள் மாதா மாதம் எனது வேலையையையும் திறமையையும் பார்த்த அவர்களுக்கு பிடித்து போக நானும் அங்கே ஓர் நம்பிக்கை மிகுந்த ஓர் சேவையாளன் ஆனேன். (காலையில் டீ, அரபி கோப்பி வகைகள் எல்லாம் போட்டுக்கொடுத்து விட்டு , புத்தகம் கட்டுவது , அங்கு வரும் அரபிகளுக்கு சகல வேலைகளையும் (போட்டோ கொப்பி, வைன்டிங்) செய்து கொடுத்து ஹிந்தி ,ஓரளவு அரபி விளங்கி கொள்ளும் பேச வராது ஆங்கிலம் ஓரளவுக்கு பேச கற்றுக்கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தேன். மேனேஜருக்கும் அரபி பெண்களுக்கும் பிடித்தவனானேன் என்னை விடமாட்டார்கள் போல் ஆகிவிட்டது காரணம் களவு இல்லை வேலை தரமாக இருக்கும் ஒர் வேலை சொன்னால் அது எத்தனை மணியானாலும் செய்து முடிப்பது அதனால் ஆண்களை விட அரபி பெண்களுக்கு மிகவும் பிடித்து போனது. ஹிந்திப்படம் பார்ப்பார்களாம் அரபி பெண்கள் அதில் ராஜா என்ற பெயரில் சாருக்கான் வருவராம் சாருக்கான் மிகவும் பிடிக்குமாம். இன்று வரை பிடித்த நாடு துபாய்தான் சுரண்டல்கள் இல்லாமல் இருந்தால் ஊழியர்களும் வாழ்வார்கள் அவர்கள் சிந்தும் வியர்வைக்கும் சரியான கூலி கிடைக்கும். மற்ற நாட்டுக்கார்கள் வேலைசெய்யவும் விடமாட்டார்கள் வேலை செய்யவும் மாட்டார்கள் மெனேஜரை. இதனால் மேனேஜரோ வெள்ளிக்கிழமையும் வந்து காலையில் வேலை செய்து விட்டு போவார் வெள்ளிக்கிழமை எனக்கு வேலைவரும் காரணம் செக்கியுருட்டி லீவு எடுத்துக்கொள்வான் அங்கே பரீட்சியம் ஆன ஆள் என்ற படியால் வெள்ளிக்கிழமையும் நான் வேலை செய்வது இதனால் எனக்கு விடுமுறை இல்லை ஓவர் டைம் வழங்கப்படும். இப்படி இருக்க கணணியில் ஊர் செய்திகளை ஆவல் கொண்ட எனக்கு இணையத்தளங்களை பார்க்க பழகி அதை பிரின்ட் எடுத்து எங்கள் தங்குமிடங்களில் போட்டோ கொப்பிகள் அடித்து அதை பத்திரிகை போல எல்லா றூம்களுக்கும் அனுப்பிவிடுவேன் ஏனென்றால் ஊர் செய்திகளை படிக்க ஆவலாக இருப்போர் அதிகம் (சண்டைகள் ஆரம்பம்) அத்தனை பேரும் விலகி வந்தவர்களும் ஓடிவந்தவர்களும். இயக்கத்தை விட்டு அந்த இணையத்தளங்களை பார்க்கும் போது முதல் தடவையாக தட்டும் போது பரீட்சியமானதுதான் யாழ் இணையம். 2.30 ற்கு பிறகு எங்கள் நிறுவனத்தை கிளின் பண்ண ஆட்கள் வருவார்கள் அவர்களுக்கு எல்லா கதவுகளையும் (றூம்களையும்) திறந்து கொடுத்து விட்டு செய்திகள் பார்ப்பேன் படிப்பேன். கணணி பற்றி பெரிதாக தெரியாது 6 மாதம் பயின்ற கொஞ்ச அனுபவத்தை வைத்து புரட்டலானேன் யாழ் இணையத்தில் விவாதங்கள் ,கதைகள் , கவிதைகள் பிடித்துப்போக ஏன் நானும் இணையக்கூடாது என இணைந்துகொண்டேன் முனிவர் ஜீ என அந்த பெயருக்கும் ஓர் காரணம் எனது ரூமில் இருப்பவர் ஒருவர் கல்யாணம் கட்டவில்லை வயது வந்தும் அவருக்கு நாங்கள் வைத்த பெயரை அப்படியே நான் புனைப்பெயராக மாற்றிக்கொண்டேன். யாழை திறக்கும் போது முள் உள்ள பலாப்பழம் போல தான் இருந்தது உள்ளே நுழைந்ததும் அதன் சுவை அறிந்தேன் நான். (2008)ம் ஆண்டு ஓர் நாள் ராஜவன்னியன் என்று அறிமுகமான சேகர் அண்ணையிடமும் தொலைபேசியில் கதைக்க முடிந்தது ஆனால் சந்திக்க நேரம் கிடைக்கவில்லை துபாயில் மன்னிக்கணும் அண்ண வேலைப்பழு அப்படி மேனேஜர் (லீவு நாளில் வெள்ளிக்கிழமை) வேலைக்கு வரும் போது எனக்கும் சேர்த்தும் சாப்பாடு வாங்கி வருவார் போகும் போது காசும் தந்து விட்டு செல்வார். வெள்ளிக்கிழமை. எல்லோருக்கும் லீவு என்பதால் வாகனம் வராது என்னைச் ஏற்றி செல்ல டிரைவருக்கும் விடுமுறை. என்னுடைய காசை கொடுத்தே பஸ்ஸில் செல்வேன் ஆனால் மாலை ஆறு மணிக்கு பஸ்தரிப்பிடத்துக்கு சென்றால் அன்றைய நாள் விடுமுறையென்பதால் பஸ்லில்கூட்டம் அதிகமாக இருக்கும் அதனால் சாரதி ஏற்றிகொள்ளமாட்டான் காரணம் பஸ்ஸில் நின்று கொண்டு செல்ல முடியாது 10 ற்கு மேற்பட்டோர் சட்டம் அப்படி 10 மணிக்கு ஓரளவு கூட்டம் குறைய பஸ்ஸில் ஏறி தங்குமிடம் செல்ல 11.30 மணி ஆகும். நான் வேலைசெய்யும் அரச நிறுவனத்தில் ஓர் எகிப்து நாட்டுக்காரன் எங்கள் நிறுவனத்துக்கு சாப்பாடு கொண்டு வரும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண்மணியை கூட்டிக்கொண்டு வந்தான். விடுமுறை நாளில் வந்த அவனோ அவளை றூமுக்குள் வைத்து விட்டு என்னிடம் யாருக்கும் சொல்லாத என்று சொல்லிவிட்டு என்ன செய்தான் என்பது அந்த நாலு சுவருக்கே வெளிச்சம். தொடரும்.....................
 15. 9 points
  இரண்டரை மணிநேரத்தின் பின்பே நாங்கள் வந்த விசா பொறித்த வான் ஒன்று வந்தது வந்த அந்த வானில் இருந்து ஒருவர் இறங்கி வந்தார். ஸ் ரீ லங்காவில் இருந்து வந்த நீங்களா? என கேட்டு அத்தனை பேரிடமும் முதலில் பாஸ்போட்டை பறித்துக்கொண்டார். பறித்துக்கொண்ட பின்பே அதனை ஒவ்வொன்றாக சரிபார்த்துவிட்டு வாகனத்தினுள்ளே ஏற்றினார். வாகனம் குளிரூட்டப்பட்டிருந்தது நிம்மதியான பெருமூச்சு விட்டு எல்லோரையும் மீண்டும் எண்ணி சரிபார்த்து வாகனம் புறப்பட்டது. நகர்களை பார்த்தால் எல்லாம் கண்ணாடிகளால் ஆனதாகவே இருந்தது வானுயர்ந்த கட்டிடங்கள் அழகிய கானல் நீர் கரை புரண்டு ஓடும் தார் சாலைகள் இரு மருங்கிலும் அழகான பூ மரங்களென மிக அழகாகவும் பிரமிப்பாகவும் இருந்தது. அந்த பாலைவனத்தில் மிளிரும் துபாய் நாடு. சுமார் ஓர் மணி நேரம் சென்ற பிறகு எங்கோ ஓர் தூரத்தில் நகர்கள் மொதுவாக மறைந்து செல்ல செல்ல மணல் மேடை ,மணல் குவியல்கள் சூழ்ந்த சிறிய பாலைவனச் செடி நிறைந்த ஒட்டிய பகுதியில் இருந்த கம்ப் (Camp) ஒன்றிக்கு கொண்டு சென்றார்கள். அங்கே இறக்கிவிட்டு ஒரு தமிழர் (இந்தியர்) இவர்களுக்கு றூமை கொடு என்று சொல்லிவிட்டு என்ன வேலை? எத்தனை மணிக்கு வரவேண்டும்? எந்த தகவலும் சொல்லாமல் வான் பறந்தது. அவர்தான் அந்த விடுதிக்கு காப்பாளரும் கூட வந்த களைப்பில் ஒருவன் கால் கை மேலை கழுவித்து வருகிறேன் என குளிக்கும் அறைக்கு போனவன் ஓடிவருகிறான் ஐயோ அம்மா , அப்பா காப்பாற்றுங்க காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என நாங்களும் பயந்து என்ன நடந்ததோ ஏது நடந்ததோ என விசாரிக்க அவனால் சொல்ல முடியவில்லை உடம்பில் நீர் மட்டும் ஊற்றப்பட்டு இருந்த்து. சிறிது நேரம் கழிந்த பின்னர் அழுகையை நிறுத்திவிட்டு முதுகை பார்க்க சொன்னான் அவனது முதுகு தோல் மெதுவாக உரிய ஆரம்பித்தது என்னடா நடந்தது? என விசாரிக்க தண்ணீரை திறந்து முதுகை காட்டினேன் சுடுதண்ணி வந்து ஊற்றுப்பட்டதென கூறினான் அவன். உடனே அந்த கம்ப்(Camp) காவலரிடம் சென்று கேட்க இப்ப ஜீலை மாதம் தண்ணி கொதிநீராகத்தான் வரும் நீங்கள் கேன்களில் பிடித்து குளிக்க வேண்டும் என்று சொன்னார் நாங்களும் அவனுக்கு சிக்னலை (பற்பசை) எடுத்து பூசிவிட்டு கொஞ்சம் இருடா என ஆளை இருத்தி விட்டு. ஒரு ரூமுக்கு எட்டு எட்டு பேராக பிரிக்கப்பட்டு அறை வழங்கப்பட்டது. நான்கு கட்டில்கள் ஒரு கட்டிலில் இருவர் இருக்கலாம் கீழும் மேலும். ஏசியை போட்டு அறையை குளிராக்கி அவனையும் அழைத்துக்கொண்டு அமர்ந்து கொண்டோம். கையில் இருந்த காசை கொண்டு கம்ப் எதிரே இருந்த மலையாளியின் கடைக்கு சென்று ஒரு ரெலிபோண் காட்டை வாங்கி ஊருக்கு அழைத்து நான் இங்கு வந்து விட்டேன் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லிவிட்டு நான் அழுது கொண்டேன் . கையில் இருந்த காசில் 20 திர்ஹம் காட் அந்த காட் முடிந்து விட்டது நான் அடுத்தமாதம் தான் இனி எடுப்பன் என கடைசி வார்த்தை சொல்லிவிட்டு மீதி இருந்த 30 திர்ஹம்(ரூபா) க்குள் எப்படி காலத்தை கடத்துவதென தெரியாமல் முழுசிக்கொண்டு இருந்தேன் . நேரம் மாலை 6 மணியாக காகங்கள் கூடு வந்து சேர்வது போல எல்லா வேலையாட்களும் கவலையுடனும் வேலைக் களைப்பில் வருவதும் அவதானிக்க முடிந்தது முதலில் நேபாள் காரர்கள் வந்து எட்டிப்பார்த்து விட்டு செல்ல , பிறகு வங்களாதேஷ், ஆந்திரா, கர்னாடகா, சிங்களவர்களும் களும் வந்து பார்த்துவிட்டு செல்கின்றனர் கடைசியில் நம்ம பொடியங்கள் தமிழ் பொடியங்கள் வந்திருக்கிறார்கள் என பல நூறு பேர் பொடியங்கள் ,நடுத்தர வயதானவர்கள் வந்தார்கள் எல்லோரும் என்னுடன் வந்தவர்களுக்கு பரீட்சியமானவர்கள் ஊரீல் இருந்து கொண்டு வந்த தீன் பண்டங்களையெல்லாம் மேய்ந்து விட்டு. ஊர்நிலமைகளை கேட்டார்கள் நிலமையை சொல்ல ஓர் தலைவனின் வழிநடத்தலில் வந்தவர்களது அறைக்கு வேறொரு நாள் சென்ற போதே பார்க்க முடிந்தது அத்தனை பேரின் அறைகளிலும் தலைவர் நிமிர்ந்து நின்றது இப்பவும் கண்ணுக்குள் இருக்கிறது . சாப்பிட்ட அவர்கள் இங்க கவனமாக இருக்க வேண்டும் களவு எடுக்க கூடாது தனியாக செல்லக்கூடாது எல்லாவற்றையும் சொல்லிவிட்டு அவர்களுக்கு தெரிந்த பொடியங்களுக்கு அவர்களும் 50 ரூபா கொடுத்துவிட்டு போனார்கள் செலவுக்கு எனக்கோ அங்கே யாரையும் தெரியாது எங்க ஊர் பொடியங்கள் அங்கு யாரும் இருக்க வில்லை போகும் போது இந்த கம்பனி கூடாது சம்பளம் குறைவு நாங்களெல்லாம் ஊருக்கு போக முடியாது என்ற காரணத்திற்க்காகதான் இங்கே வேலை செய்கிறோம் என்று சொல்லி விட்டு. அந்த இந்த வேலையை செய்ய சொன்னால் செய்ய கூடாது உங்களுக்குரிய அடையாள அட்டை வரும் வரைக்கும் உங்களை மேய்ச்சு போடுவாங்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் சொன்னானுகள். கம்பனியில் ஒருவன் இருக்கிறான் அவந்தான் எல்லாமே அவனுக்கு ஒட்டுமொத்த பேரும் நடுங்குவானுகள் நம்ம பயத்தை காட்டினால் அவன் நமக்குமேல் ஏறிவிடுவான் எனவும் அவன் பெயர் இடிஅமின் என்று சொல்லி போனார்கள் சுமார் 2000 பேர் இருந்தார்கள் அந்த கேம்பில்(Camp) அடுத்த நாள் காலை .............. தொடரும்
 16. 9 points
  தென் ஆப்பிரிக்காவின், சிங்கத்தாய் (Lion Mamma) நேரம் நள்ளிரவை தாண்டி விட்டது. அந்த தாய் வேலை முடித்து வந்த அசதி.... அவரது ஒரே மகள், தனது நண்பிகள் வீட்டுக்கு சென்று இருந்தார். அங்கே தங்கி மறுநாள் தான் வருவதாக சொல்லி இருந்தார். போன் அலறுகிறது.... திடுக்கிட்டு எழுகிறார். அழைப்பது...மகள் இல்லையே. கிராமத்தில் 500மீட்டர் தூரத்தில் இருக்கும் மகளின் நண்பி பேசுகிறார்.... பதட்டத்துடன். உன் மகளை... சில குடி கார இளைஞர்கள் ... பாலியல் வன்புணர்வு செய்கிறார்கள்..... அவள் போடும் கூச்சல் எனக்கு கேட்கிறது. அவரிடம் கேட்டாலும் உதவிக்கு போக மாட்டார்கள்... காரணம்.. பயம்.... கேட்பதில் பயனில்லை. பயம்... அதிர்ச்சி.... கோபம்.... நண்பிகள் எங்கே... அவள் மட்டும் என்றால் எப்படி? இரண்டு அறை வீடு. ஒன்று சமையல் அறை.... அங்கே செல்கிறார். கையில் கிடைத்தது.... காய்கறி வெட்டும் கத்தி.... போலீசாரை அழைக்கிறார். அவர்கள் அந்த கிராமத்துக்கு வந்து சேர முன்னர், மகள் இறந்து விடக் கூடும். அவர்களும் ஓடி விடக்கூடும். வெளியே ஓடுகிறார்.... கும் இருட்டு... போனில் உள்ள டார்ச் லைட்டின் வெளிச்சத்தில் ஓடோடி செல்கிறார். கிராமத்தின் ஒரு மூலையில்... நான்கு வீடுகள். அதில் ஒரு (நண்பியின்) வீட்டில் தான் இவரது மகள் தூங்கிக் கொண்டிருந்தார். மணி 1.30. அவளை எழுப்ப விரும்பாத நண்பிகள், வெளியே இயற்கை அழைப்பினால் சென்றிந்தார்கள். அவர்கள், கதவை பூட்டாமல் போனதை, அவதானித்த மூன்று, குடிகார இளைஞனர்கள் உள்ளே புகுந்து கொண்டு, அந்த பெண்ண தாக்க ஆரம்பித்திருந்தார்கள். நல்ல வேளையாக ஒரு பெண்ணிடம் இருந்த போன் மூலம் அந்த தாய்க்கு தகவல் போனது. இதோ அந்த (சிங்க) தாய் ஓடி வருகிறார். அருகில் செல்லும் போது.... மகளின் அவலக் குரல் கேட்கிறது. பயம், கோபமாக மாறுகிறது. குரலை தொடர்ந்து செல்கிறார். உள்ளே, கையில் இருந்த வெளிச்சத்தில், மூவர்.... ஒருவர்... அலறிக் கொண்டிருக்கும் மகளை.... வன்புணர்வு செய்து கொண்டிருந்தார். அடுத்த இருவர்களது காலாடை, முழுங்காலளவுக்கு இறங்கி இருக்கிறது.... தமது முறைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர் என புரிந்தது. இருட்டில், வருவது யார் என்று தெரியவில்லை.... வெளியே போன பெண்களோ..... மப்பில்.... தீர்க்கமாக பாய்ந்து வந்தனர், இருவரும்..... சில கணங்கள் தான்... அவர்கள் கையில் இருந்த வெளிச்சத்தினை பாச்சிய போனினை தட்டி விடலாம், அவரையும் தாக்கலாம்... கையில் இருந்த கத்தி..... எழுந்தது.... ஒருவர் ஐயோ என்று அலறி வீழ்ந்தார்... அடுத்தவர் குத்து வாங்கிய வாறே யன்னலோடு பாய்ந்து, வெளியே விழுந்து காயத்துடன் ஓடினார்.... மகளை தாக்கியவரோ.... என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ளவில்லை எனினும்.... எழுவதற்கு முன்னரே.... முதுகில் கத்தி பாய்ந்தது. ஒருவர் கொலை.... இருவர் படுகாயம். ***** போலீசார் வந்தனர்.... அந்த தாய் கைதானார்... மகள் வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டார். அன்று பகல் முழுவதும் போலீஸ் நிலையத்தில்..... தவித்துக் கொண்டிருந்தார் மகளை நினைத்து. ஆனால் வெளியே... தென் அப்பிரிக்காவே ஆர்த்தெழுந்திருந்தது. உலகின் மிக மோசமான பாலியல் வன்புணர்வுகள் நடக்கும் ஒரு நாடு தென்னாபிரிக்கா. அங்குள்ள சட்டப்படி.... அந்த தாயின் பெயரை நீதிமன்றம் சொல்லும் வரை வெளியே சொல்ல முடியாது. ஆனால் குட்டியை கவ்வி செல்லும் பெண் சிங்கம் ஒன்றின் படத்தினை போட்டு, சிங்கத்தாய் என்ற அடைமொழியில் அவரது கதையை வெளியே சொன்னன தென் ஆப்பிரிக்க பத்திரிகைகள். அந்தப் பெயரே நிலைத்து விட்டது. போலீசாருக்கும், அரசுக்கும் எதிராக பெரும் எதிர்ப்பு கிளம்பியது. விளைவாக, சிங்கத்தாய் பிணையில் விடுவிக்கப் பட்டு, மகளை கவனிக்க வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். 18 மாதங்களின் பின்னர் வழக்கு நீதிமன்றம் வந்தது. தென் அப்பிரிக்காவில் பணம் இருந்தால் தான் சிறந்த வழக்குரைஞர்...நீதி. ஆனாலும், மக்கள் பெரும் நிதியை சிங்கத்தாய்க்கு அளித்தனர். மிகவும் திறமையான வழக்கறிஞர்கள் இலவச சேவை வழங்க தாமே வந்து நின்றார்கள். அவர் செய்தது, தனது, தனது மகளை காப்பத்துக்குமான கைமோசக் கொலை என்று கூறி, நீதிமன்றம் அவரை விடுவித்து விட்டது. இந்த தாக்குதலினால் பேசும் சக்தியை இழந்து விட்ட, அவரது மகள், நீதிமன்ற தீர்ப்பினைக் கேட்டு புன்முறுவல் செய்தார். காயங்களுடன் தப்பி ஓடிய இருவரும், 30 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப் பட்டு உள்ளனர். https://www.bbc.co.uk/news/stories-47726967
 17. 9 points
  அன்புள்ள என்ரை செல்லம் அறிவது! நான் நல்ல சுகம். உங்கடை சுகத்துக்கும் கடவுள் அருள் புரிவாராக. நான் போன கிழமை ஒரு கடிதம் போட்டனான்.கிடைச்சிருக்குமெண்டு நம்புறன். இப்ப நான் பேர்லினை விட்டு மேற்கு ஜேர்மனியிலை நிக்கிறன். சுவீஸ் இல்லாட்டி கொலண்டுக்கு போனால் நல்லது எண்டு இஞ்சை எங்கடை ஆக்கள் கனபேர் கதைக்கினம்.எனக்கும் என்ன முடிவெடுக்கிறதெண்டு தெரியேல்லை. பாப்பம். உங்கை வீட்டிலை எல்லாரும் சுகமாய் இருக்கினமோ? எல்லாரையும் சுகம் கேட்டதாய் சொல்லுங்கோ. தோட்டப்பக்கம் போனனியளோ? பக்கத்து தோட்டக்காரன் சந்திரனோடை கவனம். அவன் என்ன கேட்டாலும் ஒரு பதிலும் சொல்லக்கூடாது. அவன் ஒரு மாதிரியானவன் தெரியும் தானே.கொய்யா கொம்மாவை சுகம் கேட்டதாய் சொல்லவும். தங்கச்சி அதுதான் உங்கடை அன்புத்தங்கச்சியையும் நான் விசாரிச்சதாய் சொல்லவும். வேறை என்னதை எழுத....பிறகு விரிவாய் எழுதுறன். எனக்கு விலாசம் கிடைச்சவுடனை அனுப்புறன். இப்படிக்கு அத்தான்
 18. 9 points
  புறாத்தீவு மிகவும் சிறிய தீவாக இருந்தது.மாமியைத் தவிர மற்றைய எல்லோரும் தண்ணீருக்குள் இறங்கினார்கள்.தண்ணீருக்குள் இறங்கினால் கால் வைக்க முடியாது.அந்தளவு கல்வெட்டு போன எல்லோருக்கும் காலில் வெட்டுக்காயம். நல்லவேளையாக பிள்ளைகள் கால்சப்பாத்து கண் வாய்க்கு போட என்று வாடகைக்கு எடுத்திருந்தார்கள்.அவர்கள் தங்கள் பாட்டில் போயிருந்தனர்.இடையில் நாங்கள் நின்ற இடத்துக்கு வந்து கண்ணாடியை ஒருக்கால் போட்டுப் பாருங்கோ என்றார்கள்.நானும் போட்டுக் கொண்டு தண்ணீருக்குள் பார்க்க மிகவும் அதிசயமாக இருந்தது. எனக்கு 15-20 யார் தூரத்துக்கு நீந்தத் தெரியுமே தவிர அதிக தூரம் நீந்த முடியாது.இருந்தாலும் அவர்கள் போட்டிருந்த சினோகில் என்றதை எப்படி போடுவது என்று கேட்டு போட்டுக் கொண்டு சினோக்கில் போட்டு நீந்துவதற்கென்று போட்ட இடத்துக்கு போனேன். வழமையாக நீந்துவதை விட சினோக்கிள் போட்டிருந்தால் சுலபமாக நீந்தலாம்.நானும் போட்டுக் கொண்டு அந்த இடத்துக்குப் போக தண்ணீருக்குள் தலை இருந்ததால் நிமிர்ந்தே பார்க்கவில்லை.அலைக்கு அடித்து அடித்து நான் தனியே மற்றவர்கள் நின்ற இடத்திலிருந்து தனியே மிகவும் ஆழமான இடத்துக்கு போய்விட்டேன். நான் போகபோக மகளுக்கு ஏதொ நடக்கப் போகிறதென்று தெரிந்துவிட்டது.தண்ணீருக்குள் தலை அமிழ்ந்திருந்ததால் கூப்பிட்டதும் கேட்கவில்லை.கீழேயுள்ள பவளப்பாறைகள் விதவிதமான நிறங்களுடன் பார்க்க பார்க்க மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் போல இருந்தது.இதனால் எங்கே நிற்கிறேன் என்று கூட அறிய முற்படவில்லை. வாயால் மூச்செடுத்துக் கொண்டு இன்னும் கொஞ்சம் தலையை தண்ணீருக்குள் விட்டிருக்கிறேன் போல மூச்சை உள்வாங்கும் போது மூச்சுக்கு பதிலாக உப்புத் தண்ணீர் குடித்து பிரக்கேறி தெரிந்த நீச்சலும் போய் தாழத் தொடங்கிவிட்டேன்.பிரக்கடித்ததோடு சினோக்கிளையும் கழற்றிவிட்டேன்.நீந்த முயற்சிக்கிறேன் உடம்ப சோர்ந்து கொண்டு போகிறது.பக்கத்தில் உதவ யாருமே இல்லை.என் வாழ்வு கடேசி நிமிடங்களே தெரிகிறது.ஏற்கனவே ஏதோ ஒரு விபரீதம் நடக்கப் போவதை உணர்ந்து மகள் நான் நின்ற இடம் நோக்கி வந்திருக்கிறார்.நான் தாண்டு தாண்டு எழும்ப மகள் மேலே மேலே தள்ளி சினோக்கிளைப் போடுங்கோ என்கிறாள்.என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை.சரி ஒன்றும் செய்ய வேண்டாம் பயப்படாதைங்கோ யாரையும் பிடிச்சுப் போடாதைங்கோ என்று நான் தாளத் தாள மேலே தள்ளித் தள்ளி ஒரு மாதிரி கரை சேர்ந்தோம்.எட்டக் கூடிய தண்ணீரில் கூட என்னால் நடக்க முடியவில்லை.இதுகளை கரையிலிருந்து எமதுறவுகள் துடிதுடிப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.நிறைய உப்புத் தண்ணி குடித்திட்டார் தண்ணி போத்திலை எடுத்துக் கொண்டு வாங்கோ நிறைய தண்ணி குடிக்க வேணும் என்று மகள் சொல்ல ஒரு போத்தலை எடுக்க 4-5 பேர் ஓட்டம். தள்ளாடித் தள்ளாடி கரைக்கு வர மனைவியும் ஓடி வாற.நானும் ஏதோ என்னைத் தான் பிடிக்க வாறாவாக்கும் என்று பார்த்தா வந்த மனுசி இத்தனை பேர் நிக்கினம் நீங்களொராள் தான் இவ்வளவு தூரம் போயிருக்கிறியள் சுதி காட்டுறதுக்கும் ஒரு அளவில்லையோ என்று நுள்ளி எடுத்துப் போட்டா.எல்லோர் முகங்களிலும் கோபமும் சோகமும்.இதற்கு மேல் அங்கிருக்க எவருக்குமே மனசில்லை.அத்தோடு புறப்பட்டு வீடு வந்து சேர்ந்தாலும் ஒவ்வொரு தடவையும் என்னைப் பார்க்கும் போதும் சோகமாக பார்க்கிறார்கள்.எவருக்கும் எதையும் ரசித்து செய்ய மனமில்லை.ஏறத்தாள எல்லோர் கண் முன்னேயும் போய்வந்த உயிரல்லவா.நான் எங்கே போனாலும் எனக்கு பின்னால் யாராவது ஒருத்தர்.ஒன்றுக்கு போனால் கூட 4ம் வகுப்பு படிக்கும் பெறாமகன் நானும் வாறதா என்று கேட்கிறான்.எனக்கு அது பாசமா?கேலியா என்று தெரியவில்லை.பாசமாகவே எடுத்துக் கொண்டேன்.இதை எழுதும் போது கூட கண்கள் கலங்குகின்றன. தொடரும்.
 19. 8 points
  “வந்துட்டான்யா வந்துட்டான் எழுதியே கொல்லப் போறான் “ என்ற மைன்ட் வொய்ஸ் நல்லாவே கேட்குது. சீ சீ அப்படி செய்வேனா என்ன? இது ஒரு உண்மைக்கதை.சின்னக்கதை. ஆனாலும் பிரபல்யமான கதை. இது சுவியின் ஊரவர் என்றபடியால் அவரும் தெரிந்ததை விபரமாக எழுதலாம். இதை அறவே மறந்தே போனேன்.இருந்தாலும் சைக்கிள்கடை என்று சிறி கேள்வி எழுப்பத் தான் ஞாபகத்துக்கு வந்தது. யாழ் இந்துவில் மழைக்கொதுங்கிய வேளை எட்டாம் வகுப்பிலேயே ஒரு பாடம் இரண்டு பாடம் என்று நாளடைவில் அரைநாள் முழுநாளாக மாறிவிட்டது.யாரிடமாவது சைக்கிள் இரவல் வாங்கிறது.இரண்டு மூன்று பேர் சேர்ந்து கீரிமலை சேந்தாங்குளம் பண்ணை வெள்ளைக் கடற்கரை இப்படி எங்காவது திரிவது. ஒரு தடவை புறப்பட்டு கொஞ்ச நேரத்திலேயே சைக்கிள் முன்வளையம் வழைந்துவிட்டது.பாடசாலை முடிவதற்கிடையில் திருத்தி கொடுக்க வேண்டும்.யாரிடமும் திருத்த பணம் இல்லை.மதியநேரம் யாரிமாவது கடன் வாங்கலாம் என பொறுத்திருந்தோம்.சைக்கிளை தூக்கிவந்து மைதான வைரவகோவிலுக்கு பக்கத்தில் வைத்துவிட்டு இடைவேளை விட்டதும் ஆளாளுக்கு அலைந்து திரிந்தோம்.ஐஸ்பழத்துக்கும் கடலைக்கும் காசு சேர்ந்ததே தவிர போதுமான காசு சேரவில்லை. நீராவியடி கோவிலுக்கு பக்கத்திலுள்ளவர் எனது வகுப்பு.அவர் மதியம் வீடு போய் சாப்பிட்டு வர அவரிடம் யாரிடமாவது சொல்லி இந்த சைக்கிளைத் திருத்தி தா நாளை காசு தருகிறோம் என்று அவரை கெட்டியாக பிடித்துக் கொண்டோம். சரி இந்து மகளீர் சந்தியில் எனது அண்ணன் சைக்கிள்கடை வைத்திருக்கிறார் பெயர் அப்பு நான் சொன்னதாக சொல்லுங்கோ என்றார்.அந்த நேரம் இந்த ராங்ஸ் நன்றி யார் தான் சொல்லுவது.தூக்கிக் கொண்டு அங்கே போய இஞ்சை அப்பு அண்ணை என்றதும் அவர் இன்னும் கொஞ்ச நேரத்தில வருவார் என்று நின்றவர் சொன்னார். கொஞ்சநேரத்தில் அவரும் வந்து இறங்கினார்.உன்னைத் தான் பார்த்துக் கொண்டிருக்கினம் என்று நின்றவர் சொன்னார்.அப்பு அண்ணையும் வளைந்த ரிம்மையும் எங்களையும் பார்த்திட்டு 2-3 ரூபா வரப் போகுது என்ற சந்தோசத்தில உள்ளுக்கு கொண்டு வாங்கோ என்றார்.இப்போ ஆளையாள் பார்த்து முழுசாட்டம்.காசு இப்ப இல்லை என்று சொல்லித் தொலைக்க வேண்டுமே. அப்புஅண்ணை எங்களை விட 6-7 வயது மூத்தவராக இருப்பார்.நான் தான் மெல்ல மெல்ல மசிந்து மசிந்து அண்ணை இப்ப காசில்லை உங்கடை தம்பி முத்துகுமாரு தான் இஞ்சை அனுப்பினவர்.கோபப்படப் போகிறார் என்று எதிர்பார்த்தா பெலத்து சிரித்துக் கொண்டு அதுதானே அங்கையிருக்கிற கடையெல்லாம் விட்டுட்டு இஞ்சை கொண்டாந்திருக்கிறாங்களே என்று பார்த்தேன். சரி சரி கொண்டு வாங்கோ என்று திருத்தித் தந்தார்.(கூலி சரியாக நினைவில்லை ஓரிரு ரூபா தான்) அடுத்த நாளே அவருக்கு காசைக் கொடுத்துவிட்டோம்.அங்கேயே சைக்கிள் வாடகைக்கு விடுவதாக சொன்னார்.பிற்பாடு தேவையான நேரங்களில் அவரிடமே வாடகைக்கு சைக்கிள் எடுப்போம்.இதுவே நாளடைவில் அங்கேயே ஒரு எக்கவுணட்டும் திறந்தாச்சு. நாள் போகப் போக அண்ணையாக இருந்த அப்பு ஒருமையில் கதைக்கப் பழகிக் கொண்டேன்.எனது 90 வீதம் நண்பர்கள் என்னைவிட 2 வயதுக்கு மேற்பட்டவர்களாகவே இருந்தனர்.எத்தனை வயது கூடு என்றாலும் எல்லோருடனும் ஒருமையிலேயே கதைக்கப் பழகிக் கொண்டேன்.இதை எனது தகப்பனார் பல முறை எச்சரித்திருந்தார். ஒருநாள் பாடசாலை போன போது சிஐடி வந்து நாலு பேரை பிடித்துக் கொண்டு போட்டாங்கள்.அதில ஒராள் லேடிஸ் கொலிச் சந்தியில் சைக்கிள்கடை வைத்திருக்கிறார்.சைக்கிள்கடைக்குள் கைக்குண்டுகள் இருந்தாம் என்று சொன்னார்கள்.பின்னர் தான் தெரிந்தது யாழ்ப்பாணமே இந்த கைதால் அதிர்ந்து போனது. மெதுவாக முத்துக்குமாரிடம் அப்புவாடா என்று கேட்க கண் கலங்கிவிட்டார்.அண்ணை அண்ணை என்று அழைத்த அப்பு அண்ணை இப்போ வெறும் அப்பு என்றே அழைப்பேன்.இப்போது தான் அவரது முழுப்பெயர் அமரசிங்கம் என்று தெரியவந்தது. இவர் வேறு யாருமல்ல மாவை சேனாதிராஜா வண்ணை ஆனந்தன் இன்னொருவர் பெயர் ஞாபகம் இல்லை இவர்களுடன் பிடிபட்ட அமரசிங்கம் என்ற அப்பு தான். இந்த நால்வரும் 6-7 வருடம் சிறையிருந்தார்கள்.பின்பு எப்படி விடுதலையானார்கள் என்று தெரியவில்லை.70 களின் பின்பகுதியில் கூட்டணி மேடைகளில் பார்த்தா வெள்ளை வேட்டி வெள்ளைச் சேட்டுடன் இவர்களை இருத்தி வைத்திருப்பார்கள்.இவருக்கு மேடைப் பேச்சு அறவே வராது.வண்ணை ஆனந்தன் தான் இலுப்பைப்பழம் பழுத்துவிட்டது.முன் வரிசையில் இருப்பவர்களிடம் இலுப்பைப்பழம் பழுத்தால் என்ன வரும் வெவ்வால் வரும்.வெவ்வால் வரும் போது சும்மா வராது காலில் துவக்கு கொண்டு தான் வரும் என்றால் விசிலடிச் சத்தம் நிற்கவே ஓரிரு நிமிடமாகும். மேடையில் இருக்கிற அமரசிங்கம் என்ற அப்பு என்னோடு வாடா போடா என்று நெருங்கி பழக என்னோடு சேர்ந்தவர் சேராதவர் எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம்.அடுத்தடுத்த கூட்டம் எங்கே என்று கேட்டு என்னைக் கூட்டிக் கொண்டு போவார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த நால்வரும் மேடைக்கு வந்ததும் இரண்டு மூன்று பேர் ஊசியுடன் நிற்பார்கள்.பின்னால் இரத்ததிலகம் இடுவதற்கு வரிசையில் நிற்பார்கள்.எனக்கு ஒரே சிரிப்பு.என்ன மாதிரி இருந்த அப்பு இப்ப பாரடா.அட சிறை சென்றவனுக்குத் தான் அந்த மரியாதை என்றால் அவருடன் நெருங்கி பழகியதால் எனக்கு வேறை.கூட்டம் என்றால் என்னைக் கூட்டிக் கொண்டு போகவென்றே அலைவார்கள். அந்த நால்வரில் நல்ல புத்திசாலித்தனமாக நடந்து மாவை சேனாதிராஜா நல்ல இடத்துக்கு வந்திட்டார்.மற்றவர் என்னவானார்களோ தெரியாது. முற்றும். ஈழப்பிரியன்.
 20. 8 points
  பிச்சைக்காரன் தனது புண்ணைக்காட்டிப் பிச்சையெடுப்பது போலவே.....சிங்களம்...தமிழனைக்காட்டிக் காட்டிப் பிச்சை எடுத்துத் தன்னை வளர்த்தது தானே....சுனாமி...காலம் தொடக்கம் நடக்குது!
 21. 7 points
  அதே ஆட்கள் மட்டும் தான் வெள்ளையும் சொள்ளையும் பக்கா குப்பைகள் நன்றி அண்ணை எனக்கே வாழ்கையே வெறுத்த காலம் அது ஏழையாக இருந்திடக்கூடாது என ஆனால் வாழ்க்கை யாரைத்தான் விட்டது அதன் வட்டத்தில் சுழலத்தானே வேண்டும் ஓம் ஓம் இது கனபேருக்கு புரிய வேண்டும் நன்றி அக்கா கருத்துக்கு உள்ளே என்ன நடந்தது எனக்கும் தெரியாது ஆனால் கொஞ்ச ரிசு பேப்பரை அள்ளி ரொய்லெட்டில் போட்டு விட்டு சென்றான் அவன் சென்ற ரூமை திறக்க முடியாது ஏனென்றால் நம்பர் லாக் பண்ணிருப்பார்கள். அந்த நம்பர் தெரிந்திருக்க வேண்டும் அடுத்த நாள் காலை மேனேஜர் வந்து என்னைக்கூப்பிட்டு நேற்று என்ன நடந்தது என்று கேட்க (அவர் எங்கோ இருந்து பார்த்திருப்பார் போல இவன் அவளை உள்ளே கூட்டி வந்ததை) நான் விபரங்களை சொன்னேன் ஏன் நீ எனக்கு முதலில் சொல்ல வில்லை என்று கேட்க?? அவர் என்ன செய்தார் என்று நான் என் கண்ணால் பார்க்கவில்லை அப்படி இருக்க எப்படி பொய் சொல்ல முடியும் அவர் ஒர் பெண்ணைக்கூட்டி வந்தது தெரியும் அதை உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது சொல்லலாம் என்று நினைந்திருந்தேன் எனவும் சொன்னேன். நிறுவனத்தில் அந்த எஜிப்ற் நாட்டுக்காரன் பயங்கர மேட்டர்க்காரன் என்பது அவர்களுக்கும் ஏன் எனக்கும் தெரியும். அவனுக்கு ஆப்பு அடிக்கப்பட்டது வேலையில் இருந்து மாற்றப்பட்டான் . மீண்டும் நம்பிக்கைக்கு ஆளான நான் மேனேஜரின் ரூம் நம்பரும் எனக்கு மட்டுமே கொடுப்பட்டது வேற யாரும் உள் செல்ல முடியாது ஏனென்றால் அவர் துபாயில் மிகவும் முக்கிய புள்ளிகளில் ஒருவர். ஒரு மனிதாபிமானம் உள்ள நேர்மையான மனிதரும் கூட மதம் பார்க்காதவர். மற்றவர்கள் எங்கள் மதத்துக்கு வா உன்னை இங்கே எல்லோருக்கும் பிடிச்சிருக்கு இங்கே வசிக்க விசாவும் தருவார்கள் நல்ல சம்பளம் , இருக்க றூம் எல்லாம் தருவார்கள் என்று சொல்ல நானோ உங்களுக்கு என் வேலை மட்டும் தானே வேண்டும் அதை நான் இங்கு இருக்கும் வரைக்கும் செய்கிறேன் ஆனால் மதம் மாற என்னால் முடியாது என்றேன். என்னுடன் இருந்தவர்களில் வங்காளிக்கு விசா கிடைத்தது மற்றவன் மட்டக்களப்பு அவனோ தான் ஒரு கிறிஸ்டீன் என பொய் சொல்லி விசா எடுத்தான் நான் மட்டும் விரும்பல காசுக்காக மதத்தையெல்லாம் விட்டுச் செல்ல முடியாது என கூறிவிட்டேன். ஆனால் அங்கிருந்த ஒரு லெக்சர் ஒருவர் என்னை அழைத்து அந்த மெனேஜரிடம் கூட்டிச்சென்று இவனுக்கும் விசா கொடுத்து இங்கே வைத்துக்கொள்ளுங்கள் என சொல்ல மெனேஜரும் ஓ நல்ல விடயம் என கூறி ஒரு எஜிப்ற் நாட்டுக்காரரிடம் இவருடைய விளக்கத்தை சரிபார்த்து கம்பனியிடம் கதைத்து முடிவு எடுங்கள் என்றார் . இப்படி பல வருடங்கள் ஓடியது அவனும் அவர் முன் தலையாட்டிவிட்டு மந்தமாகவே இருந்தான் ஏனென்றால் அவனுக்கு மதம் முக்கியமாக இருந்தது நான் இதைப்பற்றி கவலைப்படவில்லை எத்தனை வருடத்துக்கு இங்கே இருப்பது?? நான் நாட்டுக்கு செல்ல வேண்டும் நினைத்தாலும் நல்ல சம்பளம் அரச வேலை ஆர்வமும் இருந்தது இப்படி வருடங்களும் சென்றது 2009 தங்கைகு கல்யாணம் என அழைப்பு வர நான் நாட்டுக்கு போக தயாரானேன் என் வேலைக்கு பதிலாக இன்னுமொரு வங்களாதேஷ் காரன் வந்தான் அவன் கொஞ்ச நாள் வேலை பழக்கியதும் நான் ஊர் செல்ல ஆயத்தமானேன் அந்த அலுவலகத்திலிருந்த அனைவரும் காசு சேர்த்து தந்தார்கள் அரபி பெண்களோ போய் வந்துடவேண்டும் வராமல் விட்டால் கொன்று விடுவோம் என்றும் சொன்னார்கள். ஊர் வந்து தங்கையின் திருமணத்தை) செய்து) கல்யாணமும் சிறப்பாக முடித்து விட்டேன் ஒருவரது (வளவு வாங்கி வீடு கட்டி அதன் மேலதிக வேலைகளயெல்லாம் நான் துபாயி இருக்கும் போது செய்துவிட்டன்) ஊர் சென்ற போது பொலிஸில் சேர இன்றவியுவிக்கு சென்றேன் அங்கே எனது ரிசேல்ட்ஸ், விளையாட்டுச் செட்டிபிகேட் எல்லாவற்றையும் பார்த்து விட்டு கொஞ்சம் வெயிட் பண்ண சொன்னார்கள் உயரத்தை பார்த்துவிட்டு 5.5 அடி பார்போம் நீங்கள் 5.3 அடி இருக்கிறீர்கள் அடுத்த வருடம் முயற்ச்சி செய்யுங்கள் என்று அனுப்பி வைத்தார்கள் , ரயில்வே ஊழியராக இன்றவியுக்கு சென்றேன் வவுனியாவில் அல்லது கிளிநொச்சியில் வேலை வரும் போவீர்களா போவேன். எனக்கூறிவிட்டு வந்தேன்ஆனால் வேலை கிடைக்கல அடுத்தது நில அளவை உதவியாளர் சகலதும்கேட்டார்கள் பார்த்தார்கள் ஆனால் வேலையென்பது குதிரைக்கொம்பாக இருந்தது. இப்படி இருக்க அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் ஆட்கள் சென்றது அதிகம் அந்த வருடம் சரி இலங்கையில் வேலை கிடைக்காது நமக்கு இனியென்ன படகேறுவோம் என நினைத்து இருந்தேன் . ஆனால் நீ படகேறினால் அங்கு செல்கிறாயோ இல்லையோ இங்கே இருவர் இறந்து கிடப்பார்கள் என அம்மா அப்பா சொல்ல அதையும் கைவிட்டேன். விடுமுறை கழியும் தறுவாயில் இருக்க மீண்டும் விமானமேறினேன் அதே இடத்துக்கு செல்ல அங்கே நான் வேலை பழக்கிய வங்காளிக்கு விசா கொடுத்து அழகு பார்த்தான் அந்த எஜிப்ற்காரன் எனக்கு அங்கு இருக்க பிடிக்கல ஊருக்கு போய் வந்ததனாலும் சொந்தங்களும் பழகிவிட்டு வந்ததாலும் மேனேஜரிடம் போய் ஏன் எனக்கு விசா கொடுக்கல இத்தனை வருடமாக வேலை செய்கிறேன் என சொல்ல எனக்கு ஒன்றும் தெரியாது ராஜா நான் அவரிடம் தானே சொல்லி இருந்தேன் என அவர் கூற அந்த எஜிப்ற் நாட்டுக்காரன் உள்ளே வர மேனேஜர் கேட்கிறார் என்ன நடந்ததென அவரோ நான் இருவருக்கு அப்பிளே பண்ணினேன் அவருக்கு கிடைத்தது இவருக்கு கிடைக்கல என்று சாதரணமாக சொன்னார். மேனேஜரோ உனக்கு வேலை நான் தருகிறேன் என அவர் காரில் ஏற்றி சென்றார் (இதுவரை யாரையும் அவர் காரில் ஏற்றியதில்லை அவர் காரின் பின்பே பல கார்கள் செல்லும் முக்கியமானவர்) பயத்தில் பின்சீட்டில் இருக்க எனக்கு நீ முதலாளியா முன்னுக்கு என் அருகில் வா என கூட்டிக்கொண்டு அந்த வாகனம் பறந்து சென்றது. அங்கே ஓர் கடையில் நிறுத்தினார் நல்ல சம்பளம் நீ இங்கே வேலை செய் என்றார் அங்கே கடையில் நின்றவர்கள் எல்லாம் பெண்கள் எனக்கு பிடிக்கல யோசித்து சொல்கிறேன் சேர் என மீண்டும் காரில் ஏறி வந்துவிட்டேன் வந்த நான் அம்மாவுக்கு உடல் நலமில்லை நான் நாட்டுக்கு போகபோகிறேன் என கூறி கேன்சல் செய்துவிட்டுவர ஆயத்தமானேன் கணக்கு எல்லாம் பார்கப்பட்டு பிடித்து வைத்த காசயெல்லாம் கொடுத்தது கம்பனி நானும் ஊர் புறப்பட தயார் ஆனேன் 2010 ம் ஆண்டு அப்பாவும் ஊரில் 5 ஏக்கர் வயல் எடுத்தவர் நானும் போணைப்போட்டு நானும் வருகிறேன். இன்னும் 5 ஏக்கர் வயல் மேலதீகமாக எடுங்கள் என்று சொல்லியும் ஊருக்கு வந்து விட்டேன். வயல் எடுத்து செய்ய அறக்கொட்டியும் , வெள்ளைக்கதிரும் நோயும் அடித்து மொத்தமாக நஷ்டம் வெள்ளாமை வெறும் மரமாக நின்றது கொண்டு வந்த காசும் மொத்தமாக செல்ல 5 லட்சத்துக்கு மேல் நட்டமும் அப்பாவுக்கு காட் அட்டக் வர என்ன செய்வதென்று தெரியாமல் உதவி யாழ் இணையத்திடமும் கேட்டிருந்தேன் நேசக்கரம் ஊடாக சிறிய உதவி மிக பெரியதாக இருந்தது. எப்பவும் சொல்லிக்கொள்வேன் இரண்டு வருடங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கூலி வேலைகளெல்லாம் செய்தேன் . வேலைக்கு இண்டவியுக்கு கூட்டி சென்றார் ஒருவர் பல கேள்விகள் கேட்கப்பட்டது எனது பதில் சரியாக இருக்கும் ஆனால் வேலை கிடைக்காது என்ற நிலையில்தான் நான் இருந்தேன் அதிஸ்ரம் கிடைத்ததா என்று தெரியவில்லை வேலை கிடைத்தது , ஒருவருடத்தில் பதவி உயர்வும் கிடைத்தது மீண்டும் முகாமைத்து உதவியாளருக்கு (M.A) பரீட்சை எழுத காத்துக்கொண்டிருக்கிறேன். மறக்க முடியா சம்பவங்கள் மனதிலிருந்து இறக்கி வைத்து இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது வாசித்த கருத்துகூறிய அனைவருக்கும் நன்றிகள்.
 22. 7 points
  நிரந்தரம் என்று எதுகும் இல்லை உறவுகளோ நண்பர்களோ உன்னை வெறுப்பதாய் இருந்தால் விட்டு விலகிவிடு அவர்கள் வேண்டாம் என்று போன பின் நீ அன்பு வைப்பதில் அர்த்தமில்லை இந்த உலகில் நிரந்தரமானது என்று எதுகும் இல்லை அன்பு பாசம் எல்லாமே ஒரு மேடை நாடகமே சுயநலத்துடன் சுளரும் பம்பரம் போலே வேசம் கலைந்தபின் விட்டு விலகிவிடுவார்கள் ஒன்றை மட்டும் உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன் என்னோடு எப்பவுமே பொய்மைகள் உறங்குவதில்லை என் மனச்சாட்சியுடன் நான் இப்போ மௌனமான மொழியை கற்றுக்கொண்டு விட்டேன் அதனோடு வாழவும் பழகிவிட்டேன் என் அருகில் அழகிய வாழ்வு இருக்கும்பொழுது நான் தனியனே போதும் என் படை அசையாமல் நகரும் பா .உதயகுமார் /Oslo
 23. 7 points
  வன்னியில் வறுமையால் கல்வியில் கீழ் மட்டத்திற்கு போயிட்டுது என்று சொன்னால் நம்பலாம் யாழ்ப்பாணத்தில் வறுமையா?...அளவுக்கு மிஞ்சிய பணம்,ஜூட் சொன்ன மாதிரி வெளிநாட்டு பணம்,இணையங்களின் வளர்ச்சி,தொலைபேசி,மு.புத்தகம் அதில குந்திட்டு இருக்கிறது,கண்ட,கண்ட குப்பைகளை பார்த்து கெட்டுப் போறது,,,சிறு வயதிலேயே ஆண் /பெண் நண்பர்களை தேடிக் கொள்வது,மதுபானம்,போதைவஸ்து எல்லாவற்றையும் விட ஒருத்தருக்கும் பயமில்லாமை...கஷ்டப்பட்டு படிக்காமல் இலகுவாய் எப்படி பணம் சம்பாதிப்பது என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள்
 24. 7 points
  காலையில் எழுந்து கோவிலுக்கு போவோமென்றால் ஆக்கள் கூடினால் அவர் குளிக்கட்டும் இவர் குளிக்கட்டும் என்று ஆளையாள் சாட்டி வெளிக்கிட்டு போகவே நேரம் போய்விட்டது. கோவிலில் நிறைய கூட்டம்.வெக்கை வேற பிள்ளைகள் களைப்பாக இருக்கிறது போவோம் என்றார்கள்.விரைவாகவே வந்துவிட்டோம்.அடுத்தடுத்த நாள் பயண ஏற்பாடும் உறவினர்களின் பிரியாவிடையுடன் கொழும்பு வந்து இருநாட்கள் கொழும்பில் நின்று சுற்றி பார்த்துத்தோம்.கொழும்பில் நின்ற காலத்தில் யூபர் கணக்கு பிள்ளைகளிடம் இருந்ததால் அதிலேயே எல்லா இடமும் போனோம்.ஏறத்தாள ஆட்டோவுக்குண்டான கட்டணம் தான் இதற்கும்.ஏசி போடுவார்கள் பாதுகாப்பானதுமாக இருந்தது. ஊரில் நின்றவேளைகளில் நான் தான் மாடு மேச்சலுக்கு கொண்டுபோய் வாறது.ஒருநாள் நான் மாடு கொண்டுவர போகிறேன் என்று மருமகனும் கொண்டுவந்தார்.அவர் மாடு மேய்க்கும் படத்தைக் கண்டதும் தான் இதை எழுத தூண்டியது. எப்படித் தான் 70 நாட்கள் போனதோ தெரியவில்லை.அவர்கள் சன்பிரான்சிஸ்கோவுக்கும் நாங்கள் நியூயோர்க்குக்குமாக வெவ்வேறு விமானங்களில் புறப்பட்டு பிறந்த ஊரிலிருந்து புகுந்தவீடு வந்து சேர்ந்தோம். இத்தனை நாளாக பச்சை புள்ளிகளாலும் பின்னூட்டங்களாலும் சில உறவுகள் கட்டாயம் ஊக்கம் கொடுக்க வேண்டுமென்றும் உற்சாகப்படுத்தி இதனை எழுதி முடிக்க ஒத்தாசையாக இருந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். வணக்கம். முற்றும்.
 25. 7 points
  ..............(16). துரையப்பா ஸ்ரேடியத்தை தற்காலிகமாக பெரிய பந்தல்கள் போட்டு நிறைய கதிரைகள் எல்லாம் போட்டு அலங்கரித்திருக்கிறார்கள்.மணமக்கள் ஐயர் மற்றும் பெண்களின் பெற்றோர் பாட்டி எல்லோரும் வந்து விட்டார்கள். நடுநடுவே நாலு இடங்களில் வெள்ளித்திரை அமைத்து திருமணத்தை நேரடியாக காண ஏற்பாடுகளும் செய்திருக்கிறார்கள். ரவீந்திரன் ஆரவ் அவர்களுடைய கைபேசியில் வாழ்த்துக்கள் வந்து குவியுது. மரியா தனது போனை பாட்டியிடம் குடுத்து விட்டாள் கவனமாய் வைத்திருக்கும்படி. கிழவியும் அதை வாங்கி கொட்டைப் பெட்டியில் பத்திரப் படுத்திக் கொண்டாள். மேடை முழுதும் சாம்பிராணி புகை நிறைந்திருக்கு. ஐஞ்சாறு வான் நிறைய உணவுவகைகள் சுடச்சுட வந்து காத்திருக்கு. சக போலீசார் எல்லோரும் அவர்களது குடும்பத்தினருடன் வந்து குழுமி இருக்கின்றனர். தற்காலிகமாக பொலிஸாரின் கடமையை செய்வதற்கு இராணுவம் அழைக்கப் பட்டிருக்கு. ஆயினும் என்ன சுமார் முந்நூறு பேர்வரைதான் அங்கிருக்கின்றனர். மிச்ச கதிரைகளுக்கு இடையால முத்தவெளி மாடுகள் இடறுப்பட்டுக் கொண்டு அங்கும் இங்கும் திரியுது. காஞ்சனா ரவீந்திரனையும் ஆரவ்வையும் பார்த்து கேட்கிறாள் என்ன ஆயிரக்கணக்கானவர்கள் வருவினம் என்று சொன்னீங்கள் கொஞ்ச பேர்தான் வந்திருக்கினம் என்று......! படுபாவிகள் எல்லோரும் போனிலேயே வாழ்த்து சொல்லிக்கொண்டு இருக்கிறாங்கள் என்று போனைக் காட்டுகிறான்.நான் எங்கட ப்ரண்ட்ஸை அழைக்கவா என்று கஞ்சனா கேட்க தாராளமா அழைத்து கொள் என்று ரவீந்திரன் சொல்கிறான்.உடனே அவள் தனது போனில் ஒரு மெசேஜ் தட்டிவிட்டு பேசாமல் இருக்கிறாள். என்ன யாரோ ஒருவருக்கு சொல்லவா இவ்வளவு பில்டப் குடுத்தனி என்று ஆரவ் நகைக்கிறான். சற்று நேரத்தில் ஒருவர் இருவராக ஆட்கள் வந்து குவியத் தொடங்குகிறார்கள்.மாடுகள் எல்லாம் அப்பால் போக கதிரைகள் நிரம்புகின்றன. என்னடி இவ்வளவு பேரா என்று ரவீந்திரன் கேட்க இல்லை இவர்கள் எல்லாம் முன்பு எங்களுடைய சேல்ஸ்மென் ஆட்கள்தான். இன்னும் கஸ்ட்டமர்ஸுக்கு சொல்லவில்லை, அவர்களையும் அழைக்கவா என்று கேட்க, வேண்டாம் தாயே இவ்வளவும் போதும் எங்கள் மானத்தை காப்பாற்றினாய் என்று இருவரும் கோரஸ்ஸாய் சொல்கிறார்கள்.இந்த களேபரத்துடன் கெட்டி மேளம் ஒலிக்க ஜாம் ஜாம் என்று இருவரும் தாலி கட்டுகிறார்கள். மாலையில் கேக் வெட்டுறதும் இரவு நடன நிகழ்ச்சிகளும் உண்டு என அறிவிக்கிறார்கள். எல்லோரும் தம்பதிகளுடன் சேர்ந்து படங்களும் வீடியோக்களும் எடுக்கின்றனர். மகேசன் கிளாரிடாவுடன் வந்து படம் எடுக்கும்போதுதான் காஞ்சனாவை பார்க்கிறார். உடனே ரவீந்திரனிடமும் கிளாரிடாவிடமும் இந்தப் பெண்தான் அன்று அந்த சிவமூலிகை வைத்து கட்டுக்கு கட்டு கட்டி விட்டவ என்று சொல்ல கிளாரிடாவும் ஏய் காஞ்சனா அந்த சிகரெட் இன்னும் இருக்கா என்று ரகசியமாய் கேட்கிறாள்.காஞ்சனாவும் இல்லை என்று உதட்டைப் பிதுக்குகிறாள்......! ஒலிபெருக்கியில் பாட்டுக்கள் அமர்க்களப் படுகுது.அப்போது ரவீந்திரன் மைக்கை வாங்கி ஒரு முக்கிய அறிவிப்பை சொல்கிறார்.......! இங்கு பெருந்திரளாக வந்திருக்கும் கஞ்சாக் கனவான்களே ,கஞ்சா சீமாட்டிகளே போலீஸ் உங்களின் நண்பன் என்பதை புரிந்து கொள்ளுங்கள். விதிவிலக்காக இன்று உங்களை யாரும் இன்று கைது பண்ண போவதில்லை. நீங்கள் உங்களிடம் வைத்திருக்கும் கஞ்சா பொட்டலங்கள்,சிகரெட்டுகள் யாவற்றையும் நீங்களாகவே முன்வந்து மேடைக்கு அருகில் இருக்கும் பெட்டியில் சேர்ப்பித்து விடுங்கள் இது இந் நாட்டுக்கும் வீட்டிற்கும் நீங்கள் செய்யும் மகத்தான தொண்டு அது மட்டுமல்ல இவையே நீங்கள் எங்களுக்கு தரும் திருமணப் பரிசாக நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம் என்று சொல்கிறார்.எல்லோரும் வரிசையில் நின்று முகத்தை மறைத்து கொண்டு வரும்போது அவன் மீண்டும் யாரும் முகத்தை மூடத் தேவையில்லை.இந்த மைதானம் முழுதும் அறுபத்திநாலு கமராக்கள் தொடர்ந்து படமெடுத்து கொண்டிருக்கு என்று சொல்ல ......அவர்களும் தைரியமாக சிரித்துக் கொண்டு வந்து அவற்றை அங்கு குடுத்து விட்டு வந்தமர்கின்றனர்......! உடனே மகேசன் அங்கு வந்து தன் மனைவி கிளாரிடாவையும் அங்கிருந்த ஒரு பெண்ணையும் அழைக்கிறார்.உன் பேர் என்னம்மா........! ஸ்னேகா சேர் ......ஓ நல்ல பெயர். நீயும் கிளாரிடாவுமாக சேர்ந்து இந்த கஞ்சா பெட்டியை தூரத்தில் கொண்டுபோய் எரித்து விடுங்கள் என்கிறார்.....! அவர்களும் சந்தோசமாக அதை ஓரமாக இழுத்து சென்று தங்களுக்கு கொஞ்சம் கொஞ்சம் கஞ்சாவும், சிகரெட்டும் எடுத்துப் பத்திரப் படுத்திக் கொண்டு பெட்டியை கோட்டை அகழிக்குள் தள்ளி விட்டு எரித்து விடுகின்றனர்......! கிழவி எழுந்து வந்து காஞ்சனாவிடம் பிள்ளை எனக்கு தலை இடிக்குது நான் பஸ்ஸில வீட்ட போறன் என்று சொல்ல அவளும் கிழவியுடன் படமும் வீடியோவும் எடுத்து விட்டு அனுப்புகிறாள்.கிழவி வெளியே வர ஒரு சிகப்பு வோக்ஸ்வேகன் அவளருகில் வந்து நிக்கிறது. ஏறுங்கோ பாட்டி நான் உங்களை வீட்டில் விடுகிறன் என்று ஸ்னேகா சொல்லி கதவைத் திறந்து விட கிழவியும் ஏறிக் கொள்கிறாள்.அவளை கந்தர்மடத்தடியில் அவள் வீட்டில் இறக்கி விட்டு ஸ்னேகா வேகமாக போகிறாள்.....! வந்திருந்த எல்லோரும் வரிசையாக சென்று மணமக்களை வாழ்த்துகின்றார்கள்......! மகேசன் கனகுவிடம் பெருமையாக பார்த்தியா கனகு வந்த படகும் திரும்பி போய் விட்டது.இந்த அறிவிப்பு மூலம் குடாநாட்டில் இருந்த மிச்ச சொச்ச கஞ்சாவும் வந்து சேர்ந்து விட்டது என்கிறார்.தற்சமயம் குடாநாட்டில் யாரிடமும் கஞ்சா இல்லை என்று சொல்ல யெஸ் சேர் என்று அவனும் அதை ஆமோதிக்கிறான்......! எல்லோருக்கும் திருமண விருந்து தடபுடலாக நடந்து கொண்டிருக்கு.....! காஞ்சனா வீட்டில் கிழவியின் கொட்டைப் பெட்டிக்குள் இருந்து மரியாவின் போன் ஒலிக்கிறது. கிழவி அதை எடுத்து ஹலோ என்கிறாள்.....! நீங்கள் மரியாவா, மரியா நீங்கள் இப்ப கஞ்சா விக்கிறதில்லையாமே, ப்ளீஸ் எனக்கு ஒரேயொரு பொட்டலம் மட்டும் தர முடியுமா ப்ளீஸ் மரியா கெஞ்சுகிறான்....! அடி செருப்பால, ஆரடா சொன்னது கஞ்சா விக்கிறேல்லை என்று. நீ வா நான்தாறன்.ரகசியம் யாருக்கும் சொல்லிபோடாதை, உன்ர கூட்டாளிகளுக்கு மட்டும் சொல்லு. போனை பக்கத்தில் வைத்துவிட்டு எழுந்து இறப்புக்குள் (கூரைக்குள்) இருந்த கஞ்சா பெட்டியை எடுக்கிறாள். (அன்று அந்த மழைநாளில் ரவீந்திரன் காஞ்சூண்டியை மாற்றி வைத்து விட்டு ப்ரிட்ஜில் இருந்த கஞ்சாவை மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து விட்டு உள்ளே போக கிழவி எடுத்து இறப்புக்குள் வைத்துப் போட்டுது). ஒரு வாழையிலையை வெட்டி வந்து பிறப்பக்கமாய் தணலில் வாட்டி விட்டு அதை சதுரம் சதுரமாய் வெட்டி பெட்டிக்குள் இருந்து எல்லிப்போல கஞ்சாவை எடுத்து இலையில் வைத்து மடித்து வாழைநாரால் கட்ட அவன் வருகிறான்.அவனிடம் இரண்டு பொட்டலம் குடுத்து போட்டு காசை வாங்கி கொட்டைப்பெட்டிக்குள் பத்திரப் படுத்துது.....! ..................வளராது.......! யாவும் கற்பனை.....! யாழ் 21 அகவைக்காக....! ஆக்கம் சுவி .....! (இதுவரை ஆக்கமும் ஊக்கமும் தந்த அனைத்து உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்).
 26. 7 points
  வணக்கம் சோழர்கள் காலம் வரலாற்றில் ஒரு நிகழ்வாக இருக்கும். சோழரும் பாண்டியரும் சேரரும் தமக்குள் அடிபட்டு அழிந்து போகாமல் இருந்திருந்தால் அக்காலம் இன்று நீட்சியாக இருந்திருக்கும். இவர்கள் மூவரும் சேர்ந்து ஒரு தேசத்தை உருவாக்கியிருந்தால் அதுவே தமிழனுக்கு நிரந்தர அடயாளமாக இருந்திருக்கும். பலமான தேசங்களும் குறிப்பாக தமது சுயநலன் சுரண்டலுக்காக சிறு இனக் குழுமங்களை அழிப்பது உலகில் புதியதல்ல. ரசியாவை பின்தள்ள முஜாகுதீன்களை அன்று அமரிக்க உருவாக்கியது இன்றய ஐஎஸ்எஸ் சிரியப் போராளிகளை உருவாக்கியது. பல மில்லியன் மக்களின் சாவும் மில்லியன் குழந்தைகள் அநாதைகளாதலும் அகதியாதலும் என தொடர்கின்றது, இதையே பாகிஸ்தான் உளவுத்துறை காஸ்மீரில் செய்கின்றது. இவ்வாறான அணுகுமுறையைத்தான் இந்தியாவும் இலங்கைப் போராளிகள் விசயத்தில் செய்தது. இலங்கை அரசும் மதம் கிழக்கு பிரதேசவாதம் மற்றும் படித்த புத்திஜீவிகளை வைத்து நிறைய விசயங்களை தனக்கு சாதகமாக்கியது. நாம் இவற்றுக்கெல்லாம் பலியாகக் கூடிய நிலையில் இருந்தோம் இன்னும் இருக்கின்றோம் என்பதுதான் எமது அழிவினதும் அடயாளங்களை இழப்பதின் சுட்சுமமே தவிர எல்லா பழியையும் தூக்கி புலிமீது போட்டுவிட்டு நாம் யோக்கியர் என்பதும் எமது சமூகத்தில் இருந்து தோன்றி மறைந்த புலிகளை எமது சமூகத்திற்கு அப்பாற்பட்ட இடத்தில் வைத்து விமர்சிப்பதும் சாத்தியம் என்றால் அதன் பொருள் நாம் ஒரு சமூகமாக கூட என்னும் வளர்ச்சியடையவில்லை என்பதே, இந் நிலையில் நாம் இனம் என்றும் அதற்கு விடுதலையும் சுதந்திரமும் வேண்டும் என்கின்றறோம். உண்மையில் சோழர் காலத்திலும் சரி இப்பவும் சரி எமது அடயாளம் சாதியாக மதமாக பிரதேசமாக மட்டுமே முன்நிற்கின்றது. ஆனால் இவை இன்றும் எமக்குள் இருந்தாலும் இனமாக புற உலகத்தினர் எம்மை நோக்க இன்றய காலத்தில் புலிகள் பிரதான காரணமாக அமைந்தார்கள்.
 27. 6 points
  மலரும் நினைவுகள் .. கள உறவுகள் தாங்கள் தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் , குழந்தை பருவத்தில் இருந்த போது அன்றாட வாழ்க்கையில் பின்னி பிணைந்த பொருட்கள்,பொருளாதார , உலக மயமாக்கல் காரணிகளால் தற்போது வழக்கொழிந்து புகைப்படங்களாகவும் நினைவலை களாக மட்டுமே இருக்கும் வாகனங்கள்/பொருட்கள் /தின்பண்டங்கள் மேலும் பலதை படங்களாக , குறிப்புகளாக இணைக்க அன்புடன் வேண்டுகிறேன். நன்றி..!
 28. 6 points
  வணக்கம் உறவுகளே! உங்களுக்காக கடலை வடையும் பக்கோடாவும் நானே செய்து காட்டியுள்ளேன்.
 29. 6 points
  பகுதி 9 அதுக்குப்பிறகு இரண்டு ஆண்டுகளாக தினேஸ் வீட்டுப்பக்கம் இரண்டுதடவை வந்திருந்தாலும் எங்கள் வீட்டில் தங்கவில்லை. அவருக்கு என்மேல் விருப்பம் என்ற செய்தி மாமி மூலமாக என்றுதான் நினைக்கிறேன் வெளியே பரவிவிட்டது. உதயன் கூட இரண்டு தடவை “தினேஸ் எண்டு உங்கட வீட்ட வாறவனுக்கு உம்மில நல்ல விருப்பமாம். உமக்கு அவன் ஐ லவ் யூ சொல்லேல்லையோ? “ என்று கேட்க சத்தியமா அவர் என்னிடம் ஒருக்காக் கூட அப்பிடிச் சொன்னது கிடையாது என்று உதயனுக்குச் சத்தியம் செய்தாலும் அதன் பின் அவர்பற்றிய எண்ணமே எனக்கு எழவில்லை. அதன்பின் தினேசும் சொந்த மச்சாளைத் திருமணம் செய்துவிட்டதில் என் மனமும் நின்மதிகொண்டது. நாம் புலம்பெயர்ந்து யேர்மன் நாட்டுக்கு வந்தபின் என் வீட்டில் திருமணம் ஆகாத என் அன்ரிதான் வசித்தார். அப்போது தினேசின் அக்காவின் மகள் வேம்படியில் படிப்பதற்காக எங்கள் வீட்டில் கொண்டுவந்து விடப்பட்டார். எங்கள் ஒன்றுவிட்ட சகோதரன் அந்தப் பெண்ணைக் காதலித்து சகோதரனின் பெற்றோரின் எதிர்ப்போடு திருமணம் செய்து இருவரும் யேர்மனிக்கு வந்துவிட அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. என் கணவரும் பக்கத்தில் இருக்க அந்தப்பிள்ளை மாமா உங்களைப்பற்றிய விசாரிச்சவர் என்கிறார். எனக்குள் ஒரு பதைப்பு ஏற்பட, என் கணவர் கேட்கிறார் என்ன விசாரித்தவர் என்று. நிவேதா எப்பிடி இருக்கிறா? எத்தனை பிள்ளைகள் என்றெல்லாம் கேட்டவர். மேற்கொண்டு அவர் எதுவும் கதைக்காமல் இருக்க தினேசும் தங்கையும் கலியாணம் கட்டிவிட்டினமா எத்தனை பிள்ளைகள் என்று எதுவும் தெரியாத்துபோல் கேட்கிறேன். நல்ல காலம் அவரின் கணவர் என் கணவருடன் வேறு கதை கதைக்கத் தொடங்க மனம் நின்மதியாகிப் போனது. இடப்பெயர்வுன் போது தினேசும் அவர் குடும்பமும் எமது வீட்டில் தான் தங்கியிருந்தனர். அவர் சகோதரியின் முதற் குழந்தை கூட எமது வீட்டிற்தான் பிறந்தது என்று அன்ரியோடு போனில் கதைத்தபோது கேட்டதுதான். ஆனால் மறந்தும் கூட என் கணவருக்கு முன்னால் கதைத்ததில்லை. இம்முறை நான் இலங்கைக்கு என் நூல் வெளியீட்டுக்குச் சென்றபோது எதிர்பாராத ஒரு விடயம் நடந்தது. நானே தனியாளாக அத்தனை வேலைகளையும் பார்த்துக்கொண்டிருந்தேன். நூல் வெளியீட்டுக்கு வரும் அனைவருக்கும் உணவு கொடுக்கவேண்டும் என்பது என் ஆசை. நீ வெளிநாட்டில இருந்து வந்து குடுத்திட்டுப் போயிடுவாய். மற்றவையிடமும் சனம் சாப்பாட்டை எதிர்பார்க்கும். வடையும் றோள்ஸ்சும் ரீயும் கொடுத்தால் போதும் என்று அன்ரி ஏச, சரி எல்லாருக்கும் வேண்டாம். வாற முக்கியமான ஆட்களுக்கும் நெருங்கின உறவினர் கொஞ்சப்பேருக்கும் நானே சமைத்துக் குடுக்கவேணும் என்று என் ஆசை என்றேன். சரி ஆனால் என்னைச் சமைக்கக் கூப்பிடாதை என்ற அன்ரியிடம் நீங்கள் வந்தாலும் நான் விடமாட்டேன் என்று கூறியபடி சமையலுக்கு வேண்டிய பொருட்களைப் பட்டியலிட்டு வாங்குவதற்குச் சந்தைக்கு வெளிக்கிட்டேன். ஆட்களை எண்ணினால் ஒரு முப்பதுபேர் வரை வந்தார்கள். அதில் சிலர் மரக்கறிக்கார்ர். அதனால் அவர்களுக்குக் கத்தரிக்காய் பொரியல் கறி, வாழைக்காயும் பயிற்றங்காயும் பொரித்துப் பிரட்டல், பருப்பு, சொதி, பொன்னாங்காணி வறை என்று முடிவுசெய்து இறைச்சியும் மற்றைய எல்லாப் பொருட்களும் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வர, என் கணவனின் தங்கையும் மகளும் நிற்கின்றனர். நாங்கள் மூவரும் சேர்ந்து இறைச்சியை வெட்டிக்கொண்டிருக்கிறோம் அன்ரியின் போன் அடிக்கிறது. அன்ரி நெற்வேக் கிளியர் இல்லை என்று வெளியே போய் கதைத்துவிட்டு சிரித்தபடி வருகிறா. யார் அன்ரி போனிலை என்று கேட்க, தினேசும் மகளும் மாலை 5 மணிக்கு அங்கிருந்து வருகினமாம் என்றவுடன் ஒருவித மகிழ்ச்சி மனதில் பரவுகிறது. கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு முன் பார்த்தது. ஆனாலும் நீங்கள் சொன்னீர்களா நான் வந்திருக்கிறேன் என்று கேட்கிறேன். நான் சொல்லவில்லை. அவரின் மகளுக்கு நாளை செமினார் ஒன்று இருக்காம் யாழ்ப்பாணத்தில். அதுதான் வருகிறார் என்கிறா அன்ரி. அப்ப சமைக்க வேணுமோ அவைக்கு என்கிறேன். ஓம் இடியப்பம் அவித்து இறைச்சியும் வைத்தால் தினேசுக்கு விருப்பம் என்கிறா அன்ரி. வாறவை வேறொருநாள் வந்திருந்தால் நல்லா இருந்திருக்கும். இண்டைக்கு இந்த வேலையோட இனி அவைக்குச் சமைக்கிற வேலை என்று வெளியே போலியாகச் சலித்துக்கொள்கிறேன். ஏனெனில் என் மச்சாளும் மகளும் நிக்கினம் இறைச்சி வெட்டியபடி. உடனே மச்சாள் தூர இருந்து வாறவைக்கு உப்பிடியோ சொல்லுறது என்றுவிட்டு தன் மகனைக் கூப்பிட்டு ஓடிப்போய் அண்ணா பாமில ஒரு கோழி வாங்கிக்கொண்டு வாடா என்கிறார். ஏன் ஆட்டுறைச்சியையே காய்ச்சினால் என்ன என்றதற்கு அவர் நாளை நிற்பார் தானே. நாளை ஆட்டிறைச்சியை சாப்பிட்ட்டும். இண்டைக்குக் கோழியைக் காய்ச்சுங்கோ என்கிறார். இறைச்சிகளை எல்லாம் வெட்டி பிறிச்சில் வைத்துவிட்டு கோழியில் ஒரு பிரட்டல் வைத்து பருப்பும் சொதியும் இடியப்பமும் செய்து வைத்துப்போட்டுப் பார்த்துக்கொண்டிருந்தால் இரவு ஒன்பதாச்சு தினேசையும் மகளையும் காணவில்லை. அன்ரி யோசனையோடு அவருக்கு போன் செய்து என்ன இன்னும் காணவில்லை என்றதும் பாதர் ஒருவரை சந்திக்கப் போனோம். இன்னும் அரை மணித்தியாலத்தில வந்திடுவம் என்கிறார் மகள். எனக்கு தூக்கமும் கண்ணைச் சுளற்றுகிறது. வந்தவுடன என்னை எழுப்புங்கோ என்றுவிட்டு படுத்தவுடன் தூங்கிவிட்டேன். மோட்டார்சைக்கிள் சத்தம் கேட்டதும் அன்ரி எழுப்பாமலேயே எழுந்து வெளியே போகிறேன். என்னைக் கண்டவுடன் மோட்டசைக்கிளைத் தள்ளியபடி வந்தவர் என்னைக் கண்டதும் நிவேதா.... எப்ப வந்தனீர்.... ஏன் எனக்குச் சொல்லேல்லை என்று அன்ரியைப் பார்த்துக் கேட்கிறார். ஆனாலும் முகத்தில் அத்தனை சந்தோசம். இவள் மட்டும்தான் வந்தவள். உவ்வளவு தூரத்தில இருக்கிறியள். உங்களை அலைக்கழிக்கிறதோ எண்டுதான் உமக்குச் சொல்லேல்லை என்றுவிட்டு பார்க்க அவர் நகராமல் அப்படியே நிற்பதைப் பார்த்ததும் உத நிப்பாட்டிப்போட்டு வாருமன் என்கிறா அன்ரி. இவதானா உங்கள் மகள் என்று நான் கேட்கிறேன். ஓம் எங்கே உதயன் பிள்ளைகள் வரவில்லையா என்கிறார். நான் தனியத்தான் வந்தனான் என்று அன்ரி சொன்னதை நான் திரும்பவும் சொல்கிறேன். முகம் மட்டும்அப்படியே இருந்தாலும் உடல் பெருத்து பெரிய மலை போல் ஐந்துமாதக் கற்பிணிபோன்ற வயிற்றுடன் நின்ற தினேசைப் பார்த்து நல்ல காலம் இவர் எனக்கு ஐ லவ் யூ உதயனுக்கு முதல் சொல்லேல்லை என மனம் ஆறுதலடைய மறுபுறம் நூ மட்டும் கொடியிடையோடா இருக்கிறாய் என்று யாழ்கள உறவுகள் கேட்பதுபோல் மைன்ட் வொய்ஸ் கேட்க எனக்குள்ளே சிரித்துக்கொள்கிறேன். இரவு உணவை எல்லாரும் சேர்ந்து பம்பலாய் உண்டுவிட்டு குடும்பம் , பிள்ளைகள், உறவுகள் என்று எல்லா விடயங்களும் கதைத்துவிட்டுப் படுக்க 11 மணி. ஒரு அறையில் தினேஸ் படுக்க அற்ராச் ரொயிலற் பாத்றூம் உள்ள அறையில் நானும் தினேசின் மகளும் படுக்க, இன்னொரு அறை இருந்தும் அன்ரி எங்கள் அறைக்கு முன்னால் வந்து பாயை விரித்துப் படுக்க, ஏன் அன்ரி நிலத்தில் படுக்கிறீர்கள் உங்கள் அறையில் படுக்காமல் என்றதற்கு சரியான புழுக்கமாய்க் கிடக்கு என்றார் அன்ரி.
 30. 6 points
  ஜஸ்டின், ஏன் நோயுற்றதாக கருதுகிறீர்கள்? இந்த வகை உணவு முறைகளில் கலோரி கட்டுப்பாடுகள் தேவையில்லை. இதில் எனது அனுபவத்தை பகிர்கிறேன். இந்த உணவு பழக்கத்துக்கு மாறிய பின் நான் கார்போஹைட்ரட் இற்கு பதிலா அதிகளவு saturated கொழுப்பு, அதாவது கெட்ட கொழுப்பு என்று காலங்காலமாக சொல்லப்பட்ட கொழுப்பை மாற்றீடாக சேர்த்து கொண்டேன். தானிய வகைகள் கிட்டத்தட்ட சேர்ப்பதே இல்லை. மரக்கறி. மீன், bacon , கொழுப்பு கூடிய இறைச்சி வகைகள், organ meat , முட்டை (மஞ்சள் கரு தவிர்ப்பதே இல்லை) போன்றவை பிரதானமாக இருக்கும். நெய், பட்டர், ஒலிவ் ஆயில் , heavy கிரீம் பால் போன்றவையும் தேவையை பொறுத்து இருக்கும். கலோரி அளவில் பார்த்தால் இலகுவாக 2500-3000 கலோரிகள் தாண்டிவிடும். முறைப்படி நிறை கூட வேண்டும் ஆனால் நிறை குறைந்தது. ஆரம்பத்தில் அதிக கொழுப்பின் தயக்கத்தில் proteinஐ அதிகமாக சேர்த்ததுண்டு, பிறகு அது தவறு என்று தெரிந்து மாற்றிவிட்டேன். தற்பொழுது உடல் கலோரி எரிக்கும் முறை நாம் சாதாரணமாக கணிக்கும் முறையில் இல்லை என்று சிலர்/சில ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன. முதல் இரண்டு கிழமைகள் கொடூரமானவை, அதன் பிறகு பழகிவிடும், வயிறு எப்பவுமே நிறைந்தது போல ஒரு உணர்வு இருக்கும். நோயுற்ற உணர்வு இருப்பதில்லை. இதை இங்கே பகிருவதில் எனக்கு தயக்கம் இல்லை. எனக்கு குறைந்த வயதில் sugar பிரச்னை வந்துவிட்டது (அப்பா, அம்மா இருவரது familyயிலும் உள்ளது). கொலஸ்டரோலும் ஓரளவுக்கு எகிறியிருந்தது. ஆரம்பத்தில் இந்த diet இல் தயக்கம் இருந்தது, மூன்று மாதங்களுக்கு பிறகு எனது முதலாவது blood reportஇல் markerகள் நம்ப முடியாத அளவுக்கு controlஇற்கு வந்தது. இதற்கு பிறகு sugar மாத்திரையை நிறுத்த முடிந்தது, அடுத்த மூன்று வருடங்களுக்கு இந்த diet இல் குழப்பம் வரும் வரைக்கும் எதுவித மாத்திரைகளும் தேவைப்படவில்லை. வெறும் உணவு பழக்கத்துடன் , சிறிதளவு உடற்பயிற்சியுடன் சாதாரணமாக இருக்க முடிந்தது. நான் எதிர்பார்க்காத சில இன்ப அதிர்ச்சியும் உண்டு. முன்பு சிறிது மந்தமாக இருக்கும் நிலை போய், மிகவும் தெளிவாக இருக்கும். இந்த dietஐ சில சூழ்நிலைகளால் என்னால் கட்டுப்பாட்டுடன் தொடர முடிந்ததில்லை. ஆனாலும் இப்போதும் carb நிறைய சாப்பிடுவதில்லை. மீண்டும் தொடரவேண்டும் என்ற உத்வேகத்தை இணையவனின் இந்த பதிவு தருகிறது. நீங்கள் இது ஒரு backup mechanism, பக்க விளைவுகள் இருக்கும் என்ற தொனியில் எழுதியுள்ளீர்கள். இது ஆராய்ச்சியில் முழுமையாக நிரூபிக்கப்படாதவை என்று நினைக்கிறன் (பழைய புரிந்துணர்வு, myth என்கிறார்கள்). தற்போதைய சில ஆராய்ச்சிகளில், ஒரு உதாரணத்துக்கு Alzheimer’s disease சம்பந்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் , ketonகள் மூளையின் "preferred" energy source ஆக அறியப்பட்டுள்ளது. நான் அறிந்த வரையில் மாச்சத்து ஒரு essential nutritionஆக அறியப்படவில்லை. இந்த வகை diet இல் வரும் ketonகள் சிறுநீரில் அமிலத்தன்மையை அந்த அளவுக்கு அதிகரிக்க போதாது என்று சொல்கிறார்கள். அது ketoacidosis (இந்த diet இற்கு சம்பந்தம் இல்லாதது) என்ற நிலையிலேயே வரலாம் என்கிறார்கள். இதைப்பற்றி உங்கள் கருத்தை/நிலைப்பாட்டை அறிய ஆவல். உங்களை challenge பண்ணும் நோக்கத்தில் எழுதவில்லை. நான் ஒரு மருத்துவன் கிடையாது, இது எனது வாசித்த, பின்பற்றிய அனுபவம் மாத்திரமே. பின்பற்ற விரும்புபவர்கள் மருத்துவர்களில் ஆலோசனைகளை பெறுவது சிறந்தது. இணையவனின் இந்த பதிவு, மீண்டும் இதை பின்பற்றவேண்டும் என்ற ஒரு ஊக்கத்தை தருகிறது. அவரது அனுபவத்தையம் அறிய அடுத்த பாகத்துக்கு காத்திருக்கிறேன். தமிழர்களில் இந்த வகை diet பயன்படுத்துபவர்கள் அரிது , கனடாவில் இருந்து வந்த ஒரே ஒருவரை மாத்திரமே இதுவரை சந்தித்து, உரையாடி உள்ளேன்.
 31. 6 points
  Copyright Global Tamil News Read more at: http://globaltamilnews.net/2019/118197/ அன்பே சிவம் என்பர். கடவுளின் பெயரால் கோவில்களுக்கு கொட்டி,அள்ளி, கிள்ளிக் கொடுக்கின்றவர்களை விட, இறையின் பெயரால், மதத்தின் பெயரால் இவ்வாறான செயல்களை செய்கின்றவர்களை வணங்கி வாழ்த்தி பாராட்டு தெரிவிக்க வேண்டும். ஊருக்கு போகும் ஒவ்வொரு தடவையும் தெருக்களில் விட்டேத்தியாக திரியும் நாய்களை கூட்டம் கூட்டமாக காணலாம். சும்மா இருக்காமல் தெருவில் போகும் வாகனங்களையும் தம் எல்லை வரை விரட்டிக் கொண்டு வந்து தாமும் அடிபட்டு, வாகனங்களையும் விபத்துக்குள்ளாக்கி இவை செய்யும் சேட்டைகள் கனக்க. மாடாகவோ ஆடாகவோ பேட்டுக் கோழியாகவோ போன்ற பெறுமதிமிக்க உயிரினமாக இல்லாமல் மனுசருக்கு வெறுமனே நன்றியை தவிர வேறோன்றையும் தராத இந்த அப்பாவி உயிரினங்களுக்காக காப்பகம் ஒன்றை திறந்த சிவபூமி அமைப்பினருக்கு அன்பும் பாராட்டுகளும் நன்றியும். Copyright Global Tamil News Read more at: http://globaltamilnews.net/2019/118197/
 32. 6 points
  எமது ஏக்கங்களும் நிறைவேறாத ஆசைகளும் எமக்கு கொண்டுவந்து சேர்த்தவை எவை என்பதுபற்றி அங்கலாய்க்கிறேன். தனிமை ஒன்றென்று சொல்லமுடியுமா? எம்மைச் சூழ்ந்த உலகமெலாம் எம்மைப் புரிந்துகொள்ளாதது எமக்குப் புரியும்போது தனிமையில் அழுவதைத்தவிர எமக்கு எதுவுமே இருப்பதில்லை. எவர்மீதும் நம்பிக்கை இல்லாமல்ப் போக எவருடனும் பேசாமல், தனியே ஒதுங்கிவிடுவது மேலென்று நினைக்கிறோம். சுற்றியிருந்த தொடர்புகள் சிறுகச் சிறுகத் துண்டிக்கப்பட எமது உலகமும் எம்மைச் சுற்றிச் சுருங்கிவிடுகிறது. வெறும் காற்றில்லாத வெறுமைக்குள் எம்மை அமிழ்த்திக் கொள்கிறோம். இந்த தனிமையான வாழ்க்கையில் அவ்வப்போதுஎமது கடந்த கால நினைவுகள் பசுமையுடன் உலாவரும்போது, அவை ஏன் இல்லாமல்ப் போனதென்று வினவுகிறோம். காரணம் எமக்குள்ளேயே இருந்தாலும், அதை நாம் ஏற்கப்போவதில்லை. அதை ஏற்காமலிருப்பதற்கான நியாயங்களை நாம் வலிந்தே தேடிக்கொள்கிறோம். எவருமே தொடர்பில்லாமலிருக்கும்போது கிடைக்கும் அமைதியை வேண்டுமென்றே வரிந்துகொண்டு இன்னுமின்னும் எமக்கு நாமே சுமைகளாகி விடுகிறோம். வாழ்வின் வசந்தங்கள் கருகிவிட்டதான பிரமையை உண்மையெனாறு நம்பும் நாம், அதுதொடர்பாக எதுவுமே செய்வதில்லை. பிரமை உண்மையாகிவிடுகின்றபொழுது நாம் நெடுந்தூரம் வந்திருப்பது புரிகிறது. முற்றுப்பெறாத எமது கனவுகளுக்காக உளரீதியாகவும், உடல்ரீதியாகவும் நாம் வேண்டுமென்றே எம்மை வருத்துகிறோம். தேவையறிந்து சிலர் சொல்லும் அறிவுரைகளும் எமக்கு இப்போது எரிச்சலாகிட, மனதிற்குள் ஓர்மம் மட்டுமே மிஞ்சிக் கிடக்கிறது. ஆற்றோட்டத்தின் குறுக்கே கிடக்கும் பாறையை நீரலைகள் சுற்றிச் செல்வதுபோல , வாழ்வின் தடைகளுடன் மோதுவதைக் காட்டிலும், சுற்றிச் செல்வதே சிறந்தது என்று நாம் என்றோ கூறிய அதே வார்த்தைகள் எம்மைப் பார்த்து கேலியாக சிரிக்க, மனம் மட்டும் வைராக்கியத்துடன் கேட்க மறுக்கிறது. கண்கட்டிய குதிரைகள் போல இருட்டில் தெரியா வழிதேடித் தொலைந்துவிடத் துடிக்கும் எமக்கு, கூட வந்து உதவும் உறவுகள் கூட வேண்டா வெறுப்பாகிவிடுவது நடக்கிறது. இப்போதைக்கு எமது துயர்களே உலகின் பெரிதாகத் தோன்ற, அவற்றை நீக்கும் மருந்து எமது வாழ்வின் முடிவாக இருக்க விரும்பிக்கொண்டு தவணை குறித்து காத்திருக்கிறோம்..........
 33. 6 points
  "கலா என்ற பெயரில் யாராவது படிப்பிக்கின‌மே" அவள் யோசித்துவிட்டு அந்த பெயரில் ஒருத்தரும் இல்லை அண்ணே என்றாள். "அவ‌ருக்கு எத்தனை வய‌சு இருக்கும் அண்ணே " "அவருக்கு அவ்வளவு வயசு இருக்காது என்னோட படிச்சவா" "உங்களுக்கு வயசு ஆகவில்லை என்று சொல்ல வாறீயள் அது சரி உங்களுக்கு எத்தனை வயசு" "கி கி எனக்கு ஐம்பத்தெழு அவவுக்கும் அந்த வயசு தான் இருக்கும்" "அப்ப அவ ரிட்டையர் ப‌ண்ணிபோட்டு நேர்ஸிங்கோமில் தான் இருப்பார் வெளிநாட்டுக்காரர் போல மினிக்கிக்கொண்டு திரியமாட்டினம்" சிரித்தபடியே கூறினாள்.எல்லோரும் அவளது கிண்டலையும் கேலியையும் ர‌சித்தனர் . அங்கு படிப்பிக்கும் யாழ்ப்பாணத்தார் எல்லாம் ஐம்பது வயசுக்குள் தான் இருப்பினம் அவர்களிடம் கேட்டு பார்க்கலாம் ,கலாவின் முழுப்பெயர் என்ன என்று தெரியுமோ என‌ கேட்டாள் "கலாதேவி ..அப்பாவின் பெயர் விஸ்வலிங்கம்,அம்மாவின் பெயர் பூபதி இருவரும் டீச்சர்மாரக இருந்தவை பிறகு விஸ்வலிங்கம் அதிபராக இருந்தவர் ....புருசனின்ட பெயர் தெரியவில்லை" "நாளைக்கு ஸ்கூலுக்கு போயிட்டு யாழ்ப்பாணத்தாரிட்ட கேட்டு பார்ப்போம்" மாலை பாடசாலையால் திரும்பிவந்தவள் சொன்னாள் அங்கு கலாவை தெரிந்தவர்கள் ஒருத்தரும் இல்லை என்று. வற்றாப்பளை அம்மன் கோவில் ,ஊற்றங்கரை பிள்ளையார் கோவில் என்று எங்கு போனாலும் அவன் கலாவை தேடாமல் இல்லை.. நாலு நாட்கள் முல்லை மண்னை தரிசனம் செய்த பின்பு யாழ்ப்பாணம் நோக்கி கலாவின் நினைவுகளுடன் பயணமானான்.சகல வாகனங்களும் பூனகரி பாலத்தினூடாகவே செல்கின்றன‌, .ஆனையிறவு பாதையை தவிர்க்கின்றனர் பல காரணங்களை சொல்லுகின்றனர். பூனகரியோ,கிளாலியோ ஆனையிறவோ எதுவும் மனதில் நிற்கவில்லை கலாவின் நினைவை தவிர.... பருவங்களின் கோளாறுகளை நினைத்தபடி மனைவியை திரும்பி பார்த்தான் அவளும் இயற்கையை ரசித்தபடியிருந்தாள் . "என்னப்பா எதாவது பழைய ஞாபகங்களை இரைமீட்கின்றீரோ" "உங்களை மாதிரி கற்பனையில நான் இருக்க முடியோ எங்களுக்கு எவ்வளவு வேலை கிடக்கு ஊருக்கு போய் அடுத்து என்ன செய்ய வேணும் என்று யோசிக்கிறேன்" "உதுக்கு போய் தலையை உடைக்கிறீர் நான் ஏற்கனவே பிளான் போட்டிட்டேன்" "டவுனுக்கு 12 மணிக்கு போய்விடுவோம் அவையளின்ட வீட்டை சமான்களை வைத்து சாப்பிட்டுவிட்டு எங்கன்ட ஊர் கோவிலுக்கு போவம்,அப்படியே இரண்டு மூன்று என்ட் பெடியள் இருக்கிறாங்கள் பார்த்து போட்டு வருவம்" "கோவிலுக்கு போனால் வீட்டை திரும்பி வரவேணும் யாரின்ட வீட்டையும்போககூடாது' "வெளிக்கிட்ட இடங்களில் உதுகள் ஒன்றையும் பார்க்க ஏலாது' தொடர்ந்து பேச்சைகொடுக்காமல் இருந்து விட்டாள் வீடு போய்ச் சேரும்வரை. சுரேஸ் நினைத்தபடி 12 ம‌ணிக்கு முதலே உறவினர் வீட்டை வந்து சேர்ந்தனர் .ஒரு மணிக்கு கோவில் பூட்டி போடுவார்கள் பிறகு ஐந்து மணிக்குத்தான் திறப்பார்கள் என உறவினர் சொன்னதும் சுரேஸ் தனது திட்டம் பிழைத்து விட்டதே என கவலைப் பட்டான். அடுத்த நாள் கோவிலுக்கு போனார்கள் அங்கும் கலா வருவாளா என ஏக்கத்துடன் பார்த்து கொண்டிருந்தான். கோவில் தரிசனம் முடித்து விட்டு கலா வாழ்ந்த பழைய வீட்டுக்கு நேராக சென்றான் .அவனை யாழ்நக‌ரின் காவல் தெய்வங்கள் ஆரவாரம் பண்ணி வரவேற்றன. "அவளை போய் பார்க்கிற சுதியில உந்த நாய்களின்ட கடிவாங்கி போடாதையுங்கோ" "நாயின்ட கடியை விட உம்மட கத்தல் தான் பயமா இருக்கு" என்று சொல்லிய படி ,திறந்திருந்த படலையை மூடிய பின்பு வீட்டுக்காரார் என குரல் கொடுத்தான் . ஒம் வாரன் யாரது என்று கேட்டபடியே வீட்டுக்கார அம்மா வந்தார். "அதிபர் விஸ்வலிங்கத்தின்ட வீடு இது தானே" " இல்லை தம்பி அவையளிட்ட இந்த வீட்டை நாங்கள் வாங்கி போட்டோம்" " அவையள் இப்ப எங்க இருக்கினம் என்று தெரியுமோ அம்மா" " ஐந்தாறு வீடு தள்ளித்தான் இருக்கினம்" " சரியா விலாசத்தை சொல்லுங்கோ வீட்டு நம்பர் என்ன என்று சொல்ல முடியுமோ" "இங்க அங்க‌த்தைய மாதிரி நம்பர்கள் இல்லை , ஐந்தாவது வீடு ,கலா பவனம் என்று போர்ட் போட்டிருக்கு..." ஊர்சனம் எப்படித்தான் வெளிநாட்டுக்காரரை கண்டு பிடிக்குதுகளோ தெரியவில்லை என நினைத்த படி மனைவியிடம் ஒடிப்போய் சொன்னான் "இஞ்சாரும் இவள் கலா ஐந்தாவது வீடு தள்ளித்தான் இருக்கிறாளாம்,ஒருக்கா டக்கெண்டு பார்த்திட்டு போவம் வாரும்" அவளின் பதிலுக்கு காத்திருக்காமல் ,தம்பி வானை எடும், ஐந்தாவது வீட்டடியில் நிற்பாட்டும்" "நீர் வானுக்குள் இருக்கப்போறீரோ ,அல்லது உள்ள வாறீரோ" "நானும் வாரன் ,என்ன வெறும் கையோடய போரது" "ஒரு சீலையை கொண்டு வந்திருக்கலாம்" " என்னது சீலையையோ....நான் பார்த்து பார்த்து வாங்கி வைக்க நீங்கள் உங்கன்ட பழசுக்கு .....வாயில வருது" அப்பொழுதுதான் அவன் உணர்ந்தான் வாய் தடுமாறி மனதில் இருந்த எண்ணத்தை உளறினதை.. . "கோபிக்காதையுமப்பா, நான் சும்மா பகிடிக்கு சொன்ன‌னான் சரி சரி வாரும்" கலா பவனம் போர்ட்டை பார்த்தவுடனே அவ‌னுக்கு கலாவை சந்தித்தமாதிரியிருந்தது.... கேற்றை தட்டினான் மீண்டும் காவல் தெய்வங்கள் குரைத்து கொண்டு ஒடிவந்தது,உள்ளே இருந்து ஜிம்மி சட்டாப் என்ற அதிகார‌ குரலுடன் ஒரு அறுபது வயது மதிக்கக்கூடிய‌ பெண் வந்தாள் . "ஹலோ டீச்சர் என்னை தெரியுதோ நான் சுரேஸ் " "எந்த சுரேஸ்'" என யோசிக்க தொடங்கினாள் "நீங்கள் பூபதி டிச்சர் தானே அதிபர் விஸ்வலிங்கம் சேரின்ட வைவ்." "கோபிக்காதையுமப்பா, நான் சும்மா பகிடிக்கு சொன்ன‌னான் சரி சரி வாரும்" கலா பவனம் போர்ட்டை பார்த்தவுடனே அவ‌னுக்கு கலாவை சந்தித்தமாதிரியிருந்தது.... கேற்றை தட்டினான் மீண்டும் காவல் தெய்வங்கள் குரைத்து கொண்டு ஒடிவந்தது,உள்ளே இருந்து ஜிம்மி சட்டாப் என்ற அதிகார‌ குரலுடன் ஒரு அறுபது வயது மதிக்கக்கூடிய‌ பெண் வந்தாள் . "ஹலோ டீச்சர் என்னை தெரியுதோ நான் சுரேஸ் " "எந்த சுரேஸ்'" அவள் யோசிக்க தொடங்கினதை தெரிந்து கொண்ட சுரேஸ் "நீங்கள் பூபதி டிச்சர் தானே அதிபர் விஸ்வலிங்கம் சேரின்ட வைவ், உங்கன்ட மகள் கலாவோட படிச்சனான்" "நான் பூபதி டீச்சர் இல்லை நான் தான் கலா உள்ளே வாங்கோ இருங்கோ" "இவா என்ட வைவ்" இருவரும் ஹலோ சொல்லி கொண்டனர் "என்ட அம்மா போன வருடம் தவறிப்போயிட்டா" "சோறி டு கெயர்" உங்களை கண்ட ஞாபகமா இருக்கு ஆனால் முகம் நினைப்பில வருதில்லை உங்களுடன் படிச்ச வேறு போய்ஸின்ட பெயர் சொல்லுங்கோ... "குகன் ,விமல்,ராஜ்,...சுதாவை தெரியும் தானே" "ஓமோம் அவள் லண்டனிலிருப்பதா கேள்விப்பட்டேன்" "போனவ‌ருடம் சுதா அவுஸ்ரேலியா வந்தவர் நானும் குகனும் மீட் பண்ணினனாங்கள் "விமல் லோட அதிகம் நீங்கள் தானே சைக்கிளில் வாரனீங்கள் விமல் இப்ப என்ன செய்கின்றார்" " ஓமோம் நான் தான்' "இப்ப ஞாபகம் வருகின்றது" "விமல் எங்க இருக்கின்றார்" "நாங்கள் 72 கிளப் என்று வட்சப் வைச்சிருக்கிறோம் அதில் நீங்கள் ஜொன்ட் பண்ணுங்கோவன்" "விமலும் அந்த வட்சப் குறூப்பில் இருக்கின்றாரோ" " ஒமோம் கனடாவில் இருக்கின்றான்" "அதென்ன 72 கிளப்" "72 ஆம் ஆண்டில் ஆறாம் வகுப்பு படிக்கதொடங்கினோம் அது தான்" "விமலுடன் கதைத்தால் நான் விசாரித்ததாக சொல்லுங்கோ" "வட்சப்பில் ஜொன்ட் பண்ணினால் எல்லோருடனும் நீங்களும் கதைக்கலாம் "ஹஸ்பனிட்டதான் நல்ல போன் இருக்கு அவர் வந்த பிறகு கேட்டு சொல்லுறேன்... தேனீரும் சிற்றூண்டியும் அருந்திவிட்டு விடைபெற்றனர். அடக்கி வைத்திருந்த சிரிப்பை படலை தாண்டியவுடன் சிரித்தாள் "ஏன் இப்படி சிரிக்கின்றீர்" "சீலையை நினைச்சேன் சிரிச்சேன்,காணதா விமலை சுகம் விசாரிக்கின்றாள் கண்ட உங்களை யார் என்று கேட்கிறாள்" கலாவின் பக்கத்துவீட்டு ரேடியோவிலிருந்து " .
 34. 6 points
  சிறீலங்கன் விமான நிறுவனம் வாங்குவார் இல்லாமல் தவிக்கிறது. முறையான நிர்வாகம் இல்லாமல் தடுமாறுகிறது. மக்களின் வரிப்பணத்தில், நம்ம ஊர் வழக்கில் சொல்வதானால் 'ரிம்மில்' ஓடுகின்றது. விமான நிறுவனங்கள் இன்றைய நிலையில், அரசுகள் கையில் லாபகரமாக இயங்க முடியாது. அதுவும் இலங்கை போன்ற ஊழல் மிக்க நாடுகளில். அரசு வாங்குவார் இல்லாமல் தவிக்கிறது. எமிரேட்டை வெளியே அனுப்புவதில், மகிந்தா முன்னர் செய்த அடாவடியால், வெளியார் யாருமே வாங்க மறுக்கிறார்கள். லைக்காமுதலீட்டினை எதிர்த்தால், கடன் சுமையில் தள்ளாடும் நாட்டின் வரிப்பணத்தில் இப்படியே போனால், வேறு வழியில்லாமல் ஸ்ரீலங்கன் இழுத்து மூடப்பட்டு, இந்த தொழில் சங்கங்கள் வேலையிழப்புகளுக்கு பதில் சொல்ல வேண்டிவரலாம். ஆகவே அவர்கள் போராடுவார்கள் என்பது சும்மா பீலா. அதேவேளை வாங்கும் எந்த வெளி நிறுவனமும், அநியாயத்துக்கு குந்தி இருந்து சம்பளம் எடுக்கும் பலரை வெளியே அனுப்பியே தீரும். அந்த கோஸ்டிகள் தான் போராட்டத்தில் முன்னிலை வகிப்பார்கள். இவர்கள் அரசியல்வாதிகளானால் வேலை கொடுக்கப் பட்டவர்கள். லைக்கா வாங்குவதானால், தமிழர் அல்ல, பிரித்தானியா நிறுவனமே முதலிட்டு வாங்குகிறது என்று பொருள். அதன் பொருள், பிரித்தானிய அரசு, இலங்கை அரசிடம், பிரித்தானிய நிறுவனத்தின் முதலீடு தொடர்பில் சில உத்தரவாதங்களை பெறும். காரணம், லைக்கா முழு முதலீடும் செய்ய கூடிய பெரிய நிறுவனம் அல்ல. ஆனால் முன்னிலை வகித்து, புலம் பெயர் மக்களிடம் பங்குகள் வாங்க முடியும். இந்த பிரித்தானிய அல்லது புலம் பெயர் மக்களின் பங்குகள் வாங்கும் காரணத்தினால், இலங்கை அரசு உத்தரவாதம் கொடுக்க வேண்டி வரலாம். ஆகவே தமிழர் என்ற வகையில் இந்த முதலீட்டினை செய்து, இந்த நிறுவனத்தினை கையகப் படுத்தி, தமிழர் பணபலத்தினை காட்டிட வேண்டும். ஆயுபோவனுடன், வணக்கமும் சொல்ல வைக்க வேண்டும். அது கேட்டுப் பெறுவதிலும் பார்க்க, உத்தரவு போட்டு பெற வேண்டும். இலங்கை உல்லாச பயணத்துறை பெரும் அபிவிருத்தி அடைந்து உள்ளதால் உண்மையில் ஸ்ரீலங்கன் நிறுவனம் சரியான நிர்வாகத்தில் லாபத்தில் இயங்க முடியும். இஸ்ரேலியர்கள், பணத்துடன் பாலஸ்த்தீனதில் விளையாடிய அதே விளையாடு செய்ய நேரம் வந்து விட்டது. நாம் இதற்கு முழு ஆதரவு தர வேண்டும்.
 35. 6 points
  தபால் கந்தோர் கரணவாய் 14.04.1983 தம்பி குரு அறிவது! யான் நலம் வேண்டுவதும் அதுவே. தம்பி உங்கள் சுகங்கள் எப்படி? நீங்கள் இவ்விடமிருந்து புறப்படும் போது ஊர்ப்புதினங்களை அவ்வப்போது அறியத்தாருங்கள் என்பதற்கிணங்க இந்த மடலை வரைகின்றேன். ஊர் கோவில் திருவிழாக்கள் எல்லாம் தொடங்கிவிட்டது. வெய்யிலும் பரவாயில்லை.சங்கக்கடை தலைவராக திருப்பியும் சின்னையாவையே தெரிவு செய்திருக்கின்றார்கள்.இது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. சாதாரணமாக பஞ்சாட்சரம் வாத்தியார்தான் வரவேண்டியவர்.அதோடை சின்னையாவின் கடைசி மகள் சுந்தரத்தின்ரை பெடியனோடை ஓடீட்டுதெண்டு கதைக்கின்றார்கள். கடைக்கார மணியத்தின்ரை மனுசி பொலிடோல் குடிச்சு காலமாகிவிட்டார்.மணியத்துக்கும் இடும்பன் கந்தசாமியின்ரை மூத்த மகளுக்கும் ஒரு இது இருந்தது தெரியும் தானே. பிள்ளையார் கோவிலில் குருபூசை நடந்தது..அம்பலவாணர் குடும்பம் பத்துவிரலுக்கும் மோதிரம் புலிப்பல்லு சங்கிலியோடை நிண்டு பந்தா காட்டி அன்னதானம் குடுத்தினம்.அம்பலவாணர்ரை மனைவி வரவில்லை.4மாதம் சுகமில்லாமல் இருக்கிறதாய் கேள்விப்பட்டன். கல்லு ரோட்டு ராசா மாமரத்தாலை விழுந்து புக்கை கட்டிக்கொண்டு திரியுறார்.உங்கடை தென்னங்காணியில் எல்லாம் இரவிலை கள்ளர் தேங்காய் புடுங்கிக்கொண்டு போறதாய் உங்கடை ஐயா சொன்னார். முந்தியிருந்த கள்ள விதானையை ஆரோ இரவு நேரம் பார்த்து அடித்து விட்டார்களாம். தியாகராசாவின் மகனும் வேலுப்பிள்ளையின் இரு மகன்மாரும் கனடாவுக்கு ஏஜென்சி மூலம் போய்விட்டார்களாம். சில நாட்களுக்கு முன் பரிமளத்தை நல்லதண்ணி கிணத்தடியில் சந்தித்தேன்.உங்களைப்பற்றி சும்மா விசாரித்தேன். ஏன் கடிதம் போடுவதில்லை என்று கேட்டேன்.7,8 கடிதம் போட்டும் ஏன் பதில் எழுதவில்லை என்றும் கேட்டேன். அண்ணை அங்கத்தையான் பண்டி இறைச்சியை திண்டு திண்டு போட்டு அவருக்கும் பண்டிக்குணம் வந்திட்டுது எண்டு கோபமாய் சொன்னார்.எண்டாலும் அங்கை தனியவெல்லே இருக்கிறார் குரு பாவம் என்று நான் சொல்ல அங்கையிருந்து காயட்டும் என்று சொன்னார். இல்லை பிறதேசம் சூழ்நிலையளும் ஆக்களை மாத்தீடும் கவனமாய் இருக்கோணும் என்று சிறு ஆலோசனை சொன்னேன். அதற்கு அவர் ஏகாம்பரம் ஐயா அப்பிடி ஏதாவது நடந்தால்....... அவர் அங்காலை இஞ்சாலை மாறுவாரெண்டால் .......நான் இஞ்சையிருந்து ஜேர்மனிக்கு போய் வெட்டுவன்.ஆரெண்டு நினைச்சுக்கொண்டிருக்கிறார் எண்டபடி கிணத்து வாளியை கிணத்துக்குள் தொம் என்று போட்டார். அப்போது சைக்கிளை எடுத்து மிதித்த நான் கரணவாய் கந்தோரில் வந்து நிறுத்தினேன். தம்பி குரு கவனம். வசந்தியும் வெளிநாடு போக விருப்பமாய் இருக்கென்று சொன்னார்.உங்களுக்கு இது பற்றி கடிதம் போட்டாரா? வேறு என்ன தம்பி....இன்னும் விடயங்கள் இருக்கின்றது. அடுத்த கடிதத்தில் தொடர்கின்றேன். இப்படிக்கு... ஏகாம்பரம்
 36. 6 points
  பிள்ளையார் துணை முன்ஸ்ரர் மேற்கு ஜேர்மனி 16.04.1983 அன்புள்ள வசந்தி அறிவது! நான் நல்ல சுகம். உங்கடை சுகங்கள் எப்படி? உங்கடை கடிதம் வந்தவுடனை எனக்கு இனி இல்லையெண்ட சந்தோசமாய் இருந்தது. நீங்கள் கடிதம் எழுதுவியள் எண்டு நான் எதிர்பாக்கவேயில்லை. வேலையெல்லாம் எப்படி போகுது.போக்குவரத்திலை கவனமாயிருங்கோ.சண்முகத்தின்ரை மூத்தவனும் மூண்டாவதும் கனடாவுக்கு வெளிக்கிட்டு இடையிலை பிடிபட்டு போச்சினம் எண்டு கேள்விப்பட்டன் உண்மையோ? எனக்கு இஞ்சை விசா பிரச்சனை இறுகிக்கொண்டு போகுது.சுவீசுக்கு போகலாமெண்டால் அங்கையும் இப்ப திருப்பி அனுப்ப வெளிக்கிட்டுட்டாங்களாம். பரீஸ் போடர் இப்ப கஸ்டமெண்டு இஞ்சை கதைக்கினம்.நான் வேலை செய்யிற இத்தாலி முதலாளி சொன்னான் உனக்கு ஏதும் பிரச்சனை எண்டால் சொல்லு நான் உன்னை இத்தாலியிலை கொண்டுபோய் விடுறன் அங்கை ஒரு பிரச்சனையுமில்லை எண்டான். எனக்கு இப்ப என்னத்துக்கடா ஊரைவிட்டு வெளிக்கிட்டன் எண்டிருக்குது. உங்கடை தலைவி அதுதான் அன்பு அக்கா பரிமளம் என்ன செய்யிறா?கடிதத்துக்கு மேலை கடிதம் போட்டும் ஒரு பதிலுமில்லை.நான் ஒண்டும் அவவிட்டை வித்தியாசமாய் கேக்கேல்லை. விசா பிரச்சனை இருக்கிறதாலை இப்பிடியும் ஒரு ஐடியா இஞ்சை இருக்குது எண்டு படத்தையும் அனுப்பினன். அதுக்குப்பிறகு பதில் எதுமில்லை.நான் விளக்கமாய் எல்லாம் எழுதி விளங்கப்படுத்தி விட்டன். இதுக்கு மேலை என்னாலை ஒண்டும் செய்யேலாது. ஒரேயொரு வழி நான் ஊருக்கு திரும்பி வாறதுதான். நீங்கள் அமைதியாய் யோசிச்சு முடிவெடுப்பீங்கள்.உங்கடை அக்கா அப்பிடியில்லை. உடனை கோபம் வரும்.அவ முடிவெடுத்தால் கடவுளாலையும் மாத்தேலாது.இது எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே. நீங்கள் வேலை செய்யிற இடத்திலை நீங்கள் கதைக்கக்கூடியமாதிரி ரெலிபோன் வசதி இருந்தால் நம்பரை தரவும். இத்துடன் முடிக்கின்றேன். அன்புடன் குரு
 37. 6 points
  மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 20ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2019) 21ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. எமக்கு பலமாக இருக்கும் யாழ் இணைய உறவுகளுக்கும், யாழ் செழிப்புற வேண்டும் என பல்வேறு வகையில் ஆலோசனைகளைத் தந்து கொண்டு இருப்பவர்களுக்கும் மற்றும் காலநேரம் பாராது பல்வேறு சுமைகளுக்கு மத்தியிலும் களத்தினை வழிநடத்தும் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். யாழ் இணையம் 21 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் இந்நாளினைச் சிறப்பிக்கும் முகமாக முன்னைய வருடங்கள் போன்று யாழ் இணைய உறவுகள் பலரும் மிகவும் உற்சாகமாகச் சுயமான ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்துள்ளனர். எல்லோருக்கும் பாராட்டுக்களுடன் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். கடந்த காலங்களில் கூறியது போன்றே எமது மண்ணோடும், எமது மக்களோடும் நாம் என்றும் இணைந்திருப்போம். உறுதுணையாய், துணையாய் ஒற்றுமையாய் பயணிப்போம். கூட்டுமுயற்சியினால் கடந்த காலத்தில் ஒரு சில விடயங்களை தாயக மக்களை நோக்கிச் செய்திருந்தோம். எதிர் காலத்திலும் எம்மக்களின் துயர் துடைக்க ஒரு சிறு துளியாகினும் பொருளாதார ரீதியில் கைகொடுப்போம். அந்த வகையில் தாயக மக்களின் துயர்துடைக்க எம்மால் இயன்ற சிறு பங்களிப்பினை செய்வதற்காக அறிவித்தல் பகுதியினை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றோம். இதன் மூலம் கிடைக்கப்பெறும் பணம் அனைத்தும் தாயகத்திற்கே பயன்படும். இது தொடர்பான விபரங்களை இங்கே பார்வையிட முடியும். இதற்கு உங்கள் ஒத்துழைப்பினையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கின்றேம். "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி யாழ் இணைய நிர்வாகம்
 38. 6 points
  இந்த நிலை வந்துவிட்டால் மீதி தன்னால் நிகழும். பெரும்பான்மையானோர் நீங்கள் சித்தரிக்கும் நிலையினை அடையாதே இறந்து போய்விடுகின்றனர். நமது சமூக்தில் மட்டுமல்ல உலகில் பெரும்பான்மையானோர், ஏதோ ஒரு பெறுமதியினை எடுத்துக் கொண்டு (அது பணம், அழகு, கல்வி இப்படி என்னவாகவேனும் இருக்கலாம்) அந்தப் பெறுமதியில் தம்மை விடக் குசறைவானவர்களாகத் தாம் கருதும் ஒரு வட்டத்தை அமைத்துக்கொண்டு அந்த வட்டத்திற்குள் தாம் றாஜாக்களாக மந்தை வளர்த்துக் கொண்டிப்பார்கள். தமது வட்டம் தமக்குப் பொன்னாடை போர்த்திக்கொண்டிருக்கும் வரை, தமது அகங்காரம் திருப்த்தியடைவதாக உணர்ந்துகொள்வார்கள். நீங்கள் குறிப்பிடும் வெறுமையினை உணர்வதற்கு முதற்படி தமக்குத் தாம் உண்மையாக இருப்பது அவசியம். தமது நிறைகுறைகள் சார்ந்தும் உணர்வுகள் இச்சைகள் தேடல்கள் சார்ந்தும் தமக்குள் தெளிவு அவசியம். பலர் இதனை அனுமதிப்பதில்லை. இதை இப்படிப் பார்க்கலாம். உடலில் ஏதோ ஒரு நோவு ஏற்படுகிறது என்றால் உடனடியாக நோவுநீக்கி மாத்திரை இரண்டினை முழுங்கி விடல் ஒரு வழி. ஏன் நோவு ஏற்படுகிறது என்ற அடிப்படையினை ஆராய்ந்து அந்த அடிப்படைப் பிரச்சினைக்கு ஏதேனும் பரிகாரம் உண்டா என்று தேடுவது பிறிதொரு வழி. முதலாளித்துவ சமூகம் எப்போதும் முன்னையதையே தேர்ந்தெடுக்கும். ஏனெனில் நீங்கள் நோவு நீக்கி மாத்திரையினை முழுங்கிவிட்டுஆசைப்படுதல்களத் தொடர்ந்தால் தான் சந்தைக்கு ஆதாயம். சுருக்கமாக, நீங்கள் சித்தரிக்கும் நிலையினை நீங்கள் உணர்ந்த மாத்திரத்தில், அந்த உணர்வுக்குச் செவிகொடுத்தலை முதல் பெறுமதி ஆக்கிக்கொள்ளுங்கள், மீதி தன்னால் நிகழும். இவை தொடர்பில் மற்றயைவருடன் உரையாடுவதோ, மற்றயையவரை மாற்ற முயல்வதோ வினைத்திறன் அற்ற தேர்வுகள். நீங்கள் உங்களுடன் இயன்றவரை அமைதிக்குள் வாழக் கற்றுக்கொள்ளுவது, இன்னுமொரு விதத்தில் சொன்னால் சும்மாயிருக்கக் கற்றுக்கொள்ளுவது பெரும் பயன் தரும். மொத்தத்தில் நீங்கள் குறிப்பிடும் வெறுமையினை நீங்கள் பெற்றதைக் கொண்டாடுங்கள். மிக அவசியமான ஆரம்பம்.
 39. 6 points
  பொதுவா பெற்றோர் கல்யாணம் பேசும் போது பெடியன் படித்திருக்கிறானா,நல்ல வேலையில் இருக்கிறானா அல்லது வெளி நாட்டில் இருக்கிறானா,எவ்வளவு சம்பளம் எடுக்கிறான் என்பதை மட்டுமே பார்க்கிறார்கள். மறு பக்கத்தாலே பெட்டை வடிவாய் இருக்கோணும்,நிறைய சீதனம் கொண்டு வரோணும்,..நல்ல வேலையில் இருக்கோணும் அல்லது வசதியை பார்த்து செய்கிறார்கள்..இதில் இரு பக்கத்தாலும் மனப் பொருத்தம் பார்ப்பதில்லை. ஆணுக்கும் சரி,பெண்ணுக்கும் சரி தங்களுக்கு வர போகும் கணவன்,மனைவி இப்படித் தான் இருக்க வேண்டும் என்ட ஒரு எதிர் பார்ப்பு இருக்கும்...அந்த எதிர் பார்ப்பு நெருங்கும் போது வாழ்க்கை சூன்யமாகின்றது. வாழ்க்கையில் ஒரு அளவுக்கு வரைக்கும் தான் ஒருவரால் விட்டுக் கொடுக்க முடியும்..ஒருவரே தொடர்ந்து விட்டுக் கொடுத்தால் வாழ்க்கை இனிக்காது... இருவரும் வளர்ந்த சூழ்நிலைகள் வித்தியாசமானவையாக இருக்கும்..இருவரது பழக்க வழக்கங்கள் வித்தியாசமாய் இருக்கும் ..சிலவற்றை கொஞ்ச,கொஞ்சமாய் மாத்தலாம்..எனக்கு கிரைம் படம் பார்க்க விருப்பம்,எனது கணவருக்கு காதல் படம் தான் பிடிக்கும்..இது போன்ற சில விடயங்களில் இருவரும் சமாளித்து போகலாம்..இது பெரிய விடயமில்லை...ஆனால், பெண்ணுக்கு ஓவராய் கட்டுப் பாடுகள் போடுவது,அவளை வீட்டுக்குள் முடக்கி வைத்திருப்பது அல்லது பெண்கள்,தங்களோடு படுப்பதற்கும்,வீட்டு வேலைகள் செய்வதற்கும்,உழைப்பததற்கும் தான் என்று நினைப்பவர்களோடும் ....பெண்ணுக்கும் ஒரு மனசு இருக்கும்,ஆசை இருக்கும். அதை புரிந்து கொள்ள நினைக்காத ஆண்களோடும் விட்டுக் கொடுத்து வாழ முடியாது மறு புறத்தே ஆண்கள் தங்கள் சொல்வதை மட்டும் தான் கேட்க வேண்டும்...அவரது பெற்றோர்,சகோதரிகளுக்கு உதவக் கூடாது...தன்னையும்,தன குடும்பத்தையும் மட்டும் கவனித்தால் போதும் என்று நினைக்கின்ற பெண்களோடும் வாழ முடியாது. இவை எல்லாவற்றையும் விட இருவரது மனங்களும் பொருத்தி வர வேண்டும்...இருவருக்கும் மனப் பொருத்தம் ஓரளவுக்கேனும் இல்லாவிடின் எவ்வளவு தான் அனுசரித்து,விட்டுக் கொடுத்துப் போனாலும் வாழ்க்கை இனிக்காது இருமனத்தின் சங்கமம் தான் திருமணம்..அப்படி திருமணம் செய்தோர் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருப்பர். என்னைப் பொறுத்த வரை குறைந்த அளவினரே இப்படியான கல்யாணம் கட்டினோர்
 40. 6 points
  உண்மை தான். அந்த காலத்தில் Assembly,GWBasic, Pascal, FORTRAN, Prolog, COBOL, RPG 400 (AS 400 Languages) இல் எழுதுவதற்கும், இப்போது C#, Java இல் எழுதுவதற்கும் இடையில் எங்கையோ எதையோ இழந்த உணர்வுகள். இருந்தாலும் Python மீண்டும் C/C++ இல் எழுதும் உணர்வுகளை தருகிறது. 2020 காலங்களில் Machine Learning/AI and Data Scientist/Data Mining தான் உலகத்தை ஆளும். வாழ்த்துக்கள் நெடுக்ஸ். உங்கள் வளர்ச்சி மேலும் தொடர வாழ்த்துக்கள். யாழின் தொழினுட்ப களத்தில் எம்மவர்களின் பங்களிப்பை அதிகபடுத்தவேண்டும். எங்கள் அடுத்த தலைமுறை தொழினுட்பத்தால் உலகை ஆளவேண்டும். RPA(Robotic Process Automation) சம்பந்தமாக UiPath/BluePrism பற்றி ஏதாவது எழுதுவம் என்று இருக்கிறேன். நிச்சயமாக எங்கள் அடுத்த தலைமுறைக்கு உதவும் என்று நம்புகிறேன்.
 41. 6 points
  உணர்வுகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தாயகத்தில் போர் நிகழும் போதும்கூட நிகழ்ந்திராதவகையில் வெறும் அமெரிக்க அரசியல் பேசி நண்பர்கள் இன்று பிரிந்து போகிறார்கள். யாரும் யாரிலும் தங்கியில்லை. எவரையும் எவரிற்கும் பேணத்தேவையில்லை. தன்னைத் தான் பார்க்கவிரும்பும் உயரத்தில் இருந்து பத்துமடங்காவது அதிகப்படி உயரத்தில் வைத்துப் பிறரிற்குத் தன்னைக் காட்டவேண்டிய கட்டாயம் பலரிற்குள் உணரப்படுகிறது. இது காலாதிகாலமாக இருந்த வரட்டுக்கவுரவம் தான் என்று கொள்ளினும், ஒரு சிறு, ஆனால் மிகமுக்கிய வித்தியாசம் இன்று முனைப்பெடுக்கிறது. அதாவது, மற்றையவன் தன்னைப் பார்;பது பக்கவிளைவு, தான் நினைக்கும் உயரத்தில் தான் இருந்தே ஆகவேண்டும் என்ற சமாதானப்படுத்தமுடியா அடம் சுயத்தின் முனைப்பு என்றாகியுள்ளது. இது சுயத்தின் முனைப்பு என்று சொல்கையில் அது ஒரு சாதகமான முன்னேற்றமான விடயம்போல் தோன்றுகிறது. இருப்பினும் இந்த முனைப்பு திட்டமிட்டு நடுத்தரவர்கத்தினர் மீது விளைவிக்கப்படுகின்றது. முதலாளித்துவம் உயிர்வாழ்வதற்கு கடன் பிராணவாயு. கடன் வாழ்வதற்கு ஆசை அத்தியாவசியம். அனைவரும் எப்போதும் அறி;ந்த ஆனால் என்றைக்கும் விளங்கிக்கொள்ளாத விடயம், வறியோர்க்கும் செல்வந்தர்க்கும் ஆசை அந்நியம். இருவரிற்கும் அதற்கு நேரமில்லை. அதாவது வறியவர்க்கு என்னத்திற்கு ஆசைப்படலாம் என்று றூம் போட்டு யோசிக்க நேரமில்லை, அவர்களது ஆசைகள் அவர்களது ஊர் எல்லைக்குள் விரிவன—சந்தைக்கு அவற்றால் பாரிய சகாயமில்லை. செல்வந்தர்க்கு ஆசைப்படமுதல் வாயில் தோசை என்பதால் இல்லாமை உணர அவகாசமில்லை. இதனால் இடைப்பட்ட வர்க்கத்தில் சந்தை ஆசை வேளாண்மை செய்கிறது. இன்னுமொரு விதத்தில் பார்ப்பின், பெரும் செல்வந்தர் வேண்டாம், ஒரு பத்து மில்லியன் டொலரைக் கையில் வைத்துக் கொண்டு பார்த்தால், 3 வீத உறுதிப்படுத்தப்பட்ட முதலீடு சர்வசாதாரணம். அதாவது 3 லட்சம் வருட வருமானம் உறங்கியபடி எந்த ஆபத்தும் இன்றி உறுதிப்படுத்தப்படலாம். 3 லட்சம் நடுத்தர வர்க்கத்தின் ஊதியம். ஒரு படி மேலே சென்று 100 மில்லியன் உள்ளவரைப் பார்த்தால் அதே 3 வீத முதலீடு அவரிற்கு 3 மில்லியன் பொக்கற் மணி என்றாகிறது. பொதுவாகச் செல்வம் செழிப்பாக இருக்கையில் பணவீக்கத்தை வெல்லும் முதலீடுகளட் மட்டும் போதும் என்று; திருப்த்தியளிப்பினும் ஆறு வீதம் மிக இயல்பான களியாட்டக் காசிற்கான முதலீடு. ஆக 3 தொடக்கம் 6 வீதம் மிகக்குறைந்த ஆபத்தில் வருமானம் ஈட்டும் முதலீடுகள் செல்வந்தரின் பொக்கற் மணிக்கான குறியாகின்றன (பெரும்பணமீட்டும் வியாபாரங்களும் முதலீடுகளும் இன்ன பிற. வெறும் களியாட்டத்திற்கு மேற்படி போதுமானது). இப்போ எங்கிருந்து இந்த 3 தொடக்கம் 6 வீத வருமானம் ஈட்டப்படுகிறது என்று பாhத்தால் பெரும்பாi;மையாக மஞ்சள் தண்ணி தெளித்தபடி நிற்கும் நடுத்தர வர்க்க ஆடுகளே தென்படும். வீட்டுக் கடன். வாகனக் கடன் முதற்கொண்டு நுகர்வுப் போதைக்கு அடிமைப்பட்ட நடுத்தர வர்க்கத்தில் தலையில் செல்வந்தரின் களியாட்டம். ஆக, ஆசை நடுத்தரவர்கத்தில் வேளாண்மை செய்யப்படுகிறது. ஆனால், தாங்கள் மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்பட்ட ஆடுகள் என்பது என்றைக்கும் நடுத்தர வர்க்கத்திற்குத் தெரிந்திடக்கூடாதென்பதற்காய் எத்தனையோ உத்திகள் காலாதிகாலமாய்க் களமிறக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவெனில், மேற்படி உத்திகளை அமுல் படுத்துவதில் தான் செல்வந்தர் பெருஞ்செல்வந்தராகும் அடிப்படை இருக்கிறது (விளம்பரம், மருத்துவம், மாத்திரை. இன்னபிற). அந்த வகையில் செல்வந்தரின் விளைநிலங்களாக மாடாய் உழைத்து விளைந்தவற்றையும் செல்வந்தரின் சாகுபடியாக்கி நடுத்தரவர்கம் முளித்தபடி சிரிக்க முனைகிறது. எவரையும் பேணாது, பழையவரின் தேடல்களில் பிறந்த பாரம்பரிய பெறுமதிகளையும் புறந்தள்ளி, சுயமுனைப்பில் மிதப்பதாய் நம்பியபடி அடிமைப்படுத்தப்பட்டு, அகங்காரம் புற்றுநோய் கடந்த பயங்கரமாகி, நல்லது கெட்டது எடுத்துச் சொல்ல உண்மையான உறவுகள் என்று யாருமற்று, இயக்கத்தில் தூங்கியபடி தனித்தீவுகளாகத் தம்மை உருவாக்கிக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கம் உணரத் தவறுவது யாதெனில்: மேற்படி மந்தைக்குள் மாடாக கூட்டத்தில் தீவாகப் பாரம்பரிய லாபங்களையும் தொலைத்துத் திரியும் நிலை எதேச்சையானதொன்றல்ல—திட்டமி;ட்டுச் செய்யப்படும் வேளாண்மை. அடிமை என்பது மனதின் நிலை. ஒருவன் பிறிதொருவனை அடிமைப்படுத்துவது என்பது ஆயுதங்களால் சாத்தியப்படாதது. மனதில் விளையும் களைகள் இன்றி அடிமை என்ற தழை சாத்தியமில்லை. மனதில் விதைக்கப்பட்ட களைகளைக் கவனித்துக் கொண்டிருக்கையில், மனதில் களையின்றி வேறேதும் சாத்தியமா? என்ற கேள்வி பிறக்கும். அந்தப் புள்ளியில் விடுதலை வேண்டும் ஆன்மீகத் தேடல் ஆரம்பமாகும்.
 42. 6 points
  மல்லிகையை காதுக்குள் வைத்தால் மான். கொண்டையில் வைத்தால் வுமன்.
 43. 6 points
  அரை முதல் ஒரு புள்ளி அதிகமாக பெற்று வாழும் நாட்டிலிருந்து இங்க பாருங்கப்பா, சாரோட அலப்பறையை..? இந்தியாவ பத்தி யாருங்கோ கவலைப்பட்டா..? தமிழ்நாடு, வளமா, மகிழ்ச்சியா இருந்தால் போதும் சாமி..!
 44. 6 points
  திருகோணமலை நோக்கி பயணம் தொடங்கிய போது எல்லோரும் மிகவும் களைப்படைந்து ஆளாளின் தோள்களில் சரிந்துவிட்டனர்.சாரதி வானிலேயே இருந்தபடியால் அவர் உற்சாகமாக இருந்தார். எனக்கும் அலுப்பாக இருந்தாலும் மிகவும் கஸ்டப்பட்டு சாரதியுடன் பேசிக் கொண்டே போனேன்.இடையில் நாங்கள் தங்குமிடத்திற்கு தொடர்பு கொண்டு இரவு சாப்பாடு பற்றி கேட்ட போது என்ன வேணுமென்று சொன்னால் எல்லாம் வாங்கி செய்து வைத்திருப்பதாக சொன்னார்கள்.சோறும் கடலுணவும் எல்லோரும் விரும்பினார்கள். வழியில் சுடுதண்ணி கிணறு பார்த்தோம்.ஆனாலும் யானை பார்க்க போன இடத்தில் வாகனத்தில் இருந்து களைத்து விட்டதால் யாரும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.அங்கிருந்து நேராக தங்குமிடம் போனோம். பெரியதொரு மாடிவீடு.கடற்கரை.போய் இறங்கியதும் பொறுப்பாக ஒரு சிங்களவரும் சமையலுக்கு ஒரு இளம் தமிழரும் இருந்தார்கள்.இவர் மலையகத்தை சேர்ந்தவர்.நீண்டகாலமாக இங்கிருக்கிறார்.சமையலில் மிகவும் கெட்டிக்காரன்.போனவுடன் சுடச்சுட தேநீர் வடை சம்பல் அருமையாக இருந்தது.கடற்கரையில் குளிப்பு.வந்திருந்து அடுத்தநாள் திட்டம்.ஏற்கனவே எங்கெங்கே என்னஎன்னன செய்ய வேண்டுமென்பதை மருமகனும் மகள்மாரும் திட்டம் போட்டிருந்தனர். அவர்கள் எங்கே போனாலும் ஆழ்கடல் போய் முதுகில் சுவாச சிலிண்டர் கட்டி தண்ணீருக்கடியில் போய் பார்த்தால்த் தான் சந்தோசம்.அதற்காக பயிற்சி எடுத்து சான்றிதழும் வைத்திருந்தார்கள்.இங்கும் சுழியோடி பார்க்க கூடிய இடங்களை தெரிவு செய்திருந்தனர்.இரவு இருந்து கதைக்கும் போது அங்கே போனால் நீங்கள் மட்டும் தான் அனுபவிக்கலாம்.புறாத்தீவு PIGEON ISLAND என்று ஒரு தீவு இருக்கிறது.திருகோணமலை வரும் எவரும் இங்கு போகாமல் போவதில்லை என்று சொல்லச் சொல்ல எல்லோருக்கும் அந்த தீவைப் போய் பார்க்கலாம் என்று சொல்லி பிள்ளைகளின் முடிவை மாற்றிவிட்டார்கள்.காலை சாப்பாடு முடிந்ததும் தானே கூட்டிப் போவதாக சொன்னார். இரவு சாப்பாட்டுக்கு இறால் மீன் பருப்பு அப்பளம் மிளகாய் பொரியல் சோறு என்று எல்லோரையும் அசத்திவிட்டார்.எல்லோரும் மீண்டும் மீண்டும் போட்டு அனுபவித்து சாப்பிட்டார்கள்.அவரின் ஒத்தாசையைப் பார்த்து அவருக்கு கொடுக்க இருந்த பணத்தை விட கூடுதலாக கொடுக்க வேண்டும் என்று பிள்ளைகள் முடிவு எடுத்திருந்தனர்.இரவு விடை பெற்று அவரின் இருப்பிடத்துக்கு போக வெளிக்கிட கூப்பிட்டு பணத்தைக் கொடுத்தேன்.மிகவும் சந்தோமடைந்தார். அடுத்த நாள் காலை நாங்கள் எழும்ப முதலே வந்து இடியப்பம் மீன்கறி சொதி பருப்பு சம்பல் என்று அசத்தியிருந்தார்.இங்கு வேலையில்லாத நாட்களில் ஆட்டோ ஓட்டுகிறார்.மிகவும் துடிதுடிப்பானவர்.புறாத்தீவுக்கு போவதற்கு தனது நண்பர்கள் மூலமாக சகல ஒழுங்குகளும் செய்திருந்தார். புறாத்தீவு பார்க்க போக வெளிநாட்டவருக்கு 4000ரூபாவும் உள்ளூர் வாசிகளுக்கு 100 ரூபா (சரியாக நினைவில்லை).அங்கே போய் இறங்கியதும் ஒருவரும் வரவேண்டாம் என்று ரிக்கற் எடுக்க இவர் போனால் எல்லோரையும் கூட்டிக் கொண்டு வரச் சொல்லிவிட்டார்கள்.எல்லோரும் போனவுடன் அடையாள அட்டைகளைக் கேட்டார்.இவர் பாய்ந்துவிழுந்து என்னையா கடலுக்கு போகும் போது யாராவது இதுகளைக் கொண்டு வருவார்களா சிங்கள ஆட்கள் என்றா ஒன்றும் கேட்க மாட்டீர்கள் தமிழாக்கள் என்றபடியால் அதைத் தா இதைத் தா என்று கரைச்சல் வேறை என்று சத்தம் போட தொடங்கிவிட்டார்.உள்ளே இருந்தவரும் எல்லோரையும் வடிவாக பார்த்து விட்டு அரைகுறைத் தமிழில் எனது மூத்த மகளை கூப்பிட்டு எங்கே படிக்கிறீர்கள் என்று அரைகுறை தமிழில் கேட்டார். மகளும் இது தான் சாட்டென்று நான்படித்து முடித்து கோப்பாய் ஆஸ்பத்திரியில் வேலை செய்கிறேன்.வந்த நேரத்திலிருந்து கரைச்சல் தாறீங்கள் என்ன பிரச்சனை என்றதும் உள்ளிருந்தவர் புரிந்துதோ என்னவோ தமிழில் இப்படி கதைத்தவுடன் கொஞ்சநேரம் தறுபுறு என்று முழிசிவிட்டு ரிக்கட்டைத் தந்துவிட்டார். ஏற்கனவே ஒழுங்கு செய்திருந்த வள்ளக்காரரிடம் கண்ணாடி மூச்செடுக்கிற சாமானுகள் கால் சப்பாத்து எல்லாம் வாடகைக்கு எடுத்துக் கொண்டு இரண்டு வள்ளத்தில் புறப்பட்டோம் .இத்தனை சாமன்களும் அவர்கள் கொண்டுவந்த பொதியில் இருந்தது.தவறுப்பட்டபடியால் வாடகைக்கு எடுக்க வேண்டியாயிற்று.வள்ளத்தில் ஏறப் போனால் மாமியை ஏற்றுவதில் பிரச்சனை.ஒரு மாதிரி மாட்டேன் மாட்டேன் என தூக்கி ஏற்றியாச்சு.இரண்டு வள்ளங்களும் புறாத்தீவு நோக்கி போகிறது. அங்கே வரவேற்பதற்கு இயமன் பாசக்கயிறுடன் நிற்கிறான். தொடரும்.
 45. 6 points
  மனிதரின் தேவைகள்தான் படைப்புக்களாகவும் வடிவங்களாகவும் படைக்க படுகின்றன. புலிகளின் எழுச்சி வளர்ச்சி என்பது எமது இனத்தின் தேவையாக இருந்தபோதே தோன்றியது சாண்டமாருதன் கூறிய அனைத்து பிரிவினையும் கொண்ட ஒரு இனத்தின் வழிகாட்டியாகவும் படகோட்டியாகவும் வரும்போது புலிகளின் கடும்போக்கு தேவையானதாக இருந்தது. என்னையே சுடுவதுக்கு புலிகள் கொண்டு சென்று வைத்திருந்தார்கள் பின்பு எங்கள் எல்லோரையும் விடுதலை செய்தார்கள். நானும் உங்களைப்போல போராடத்தானே போனேன் எனும் ஒருபக்க நியாயம் என்னிடமும் முன்பு இருந்தது புலிகள்மேல் வெறுப்பு பகைமை எல்லாம் எனக்கும் அப்போது இருந்தது. தமிழ் ஈழ விடுதலை என்று வரும்போது புலிகள் செய்தது மிக சரியான செயல் மட்டும்மல்ல செய்த நேரம் தான் மிகவும் சரியான நேரம். புலிகள் கொஞ்சம் தாமதித்து இருந்தால்கூட முள்ளிவாய்க்கால் போல் ஒரு பெரிய அழிவை நாம் ஒருவரை ஒருவர் வெட்டி கண்டிருப்போம். இயக்க மோதல் என்பது தொடராகத்தான் தொடர்ந்தது ....... சொந்த இயக்கத்தவரையும் ஏனைய இயக்கததவரையும் சுட்டும் வெட்டியும் கொல்லும் போக்கு புளட்டின் கொள்கையாக மாறி இருந்தது. 7 டெலா எனும் அமைப்பின் தலைவரையும் (பிரான்சிஸ்) போராளிகளையும் சுட்டு கொன்றார்கள் பின்பு 8 புலி ஆதரவாளர்களை சுதுமலை எனும் இடத்தில் கொன்று புதைத்தார்கள். யாரும் கேட்கவில்லை. வீணான அழிவு வரும் என்பதால் புலிகள் பொறுமை காத்தார்கள்.( நிறைகுடம் தளம்பாது). பின்பு எமது சொந்த இயக்கமான டெலோ எங்களுக்கு தலைவராக அவரைத்தான் தெரியும் தாஸை சுட்டு கொன்றார்கள் (இவர் புலிகளின் தளபதியான கிட்டுவின் நெருங்கிய நண்பன்). பின்பு பேச்சுவார்த்தை நடத்த வந்த புலிகளின் இன்னொரு தளபதியான லிங்கத்தை கொன்றார்கள். புலி பதுங்குவது பாய்வதுக்குத்தான் என்பது கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் போல ... அவர்கள் எங்கள் முகாம் வாசலில் வந்து நின்றபோதுதான் காலம்தாழ்த்தி புரிந்தது. அப்போது கூட மிகவும் நேர்த்தியாக ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து தங்களிடம் வந்து சரண் அடையும்படி நேர அவகாசம் தந்துதான் பின்பு கைது செய்ய வந்தார்கள். கைதுசெய்ய பட்டவன் எனும் அவமானம் எனக்குள் இருந்தாலும் .... ஒரு தமிழனாக புலிகளின் வீரத்தையும் தன்னம்பிக்கையையும் கொள்கை உறுதியையும் பாராட்டியே தீர வேண்டும். காரணம் அப்போது ஆள்பலத்திலோ ஆயுத பலத்திலோ மேல் ஓங்கி நின்றவர்கள் நாம். பொற்கோவிலில் இந்திராகாந்தி சீக்கியரிடம் இருந்து எடுத்த ஆர்பிஜி , எ கே எல்லாம் எங்களுக்குத்தான் தந்தார்கள். வீரம் தவிர்த்து அவர்களிடம் வேறு எதுவும் இருக்கவில்லை. இப்போது தில்லுமுல்லு செய்துகொண்டு இருந்த ஈ பி ஆர் எல் எப் எனும் அமைப்பின் தலைவரான பட்பநாபா அவர்களுக்கு ஒரு உண்மை தெளிவாக புரிந்தது. டெலோவுக்கும் புலிகளுக்குமான சண்டையில் கூடிய எண்ணையை ஊற்றி புலிகளை அழித்ததால் தான் தனிக்காட்டு ராஜாவாகலாம் என்ற எண்ணம் தோண்றியது. ஆயுதங்களை இறக்கி ஏத்துவது டெலோ போராளிகளை வேறு வேறு இடங்களில் ஒன்று சேர்ப்பது என்றும் தலைவர் சிறீசபாவை இந்தியா கொண்டு சென்று போரை புதுப்பித்து கொள்ளலாம் என்று களமிறங்கினார்கள். ஈ பி வாகனங்களை பல இடங்களில் புலிகள் டெலோ போராளிகளுடன் வழிமறித்தார்கள் வாய்த்தர்க்கம் நடந்தது .... புலிகள் தமக்கு பயந்து விடுகிறார்கள் என்ற பெருமிதத்தில்தான் அப்போது ஈ பி ஊருக்குள் கதை அளந்தார்கள். எங்கள் மேல் கை வைத்தால் தெரியும் இவர்களுக்கு என்று எமது ஊரிலேயே சொன்னார்களாம். காரணம் அப்போது ஆள்தொகையில் அவர்கள்தான் கூடுதலாக இருந்தார்கள். புலிகள் யார் போராடுவான் என்று பார்த்துதான் ஆள் சேர்ப்பார்கள்... இவர்கள் ரோட்டில் நின்ற எல்லோரையும் ஏற்றி செல்வார்கள். இரண்டு இயக்கத்துடன் ஒரே நேரத்தில் சண்டையை அவர்கள் சாணக்கியமாக தவிர்த்துக்கொண்டு வந்தார்கள். இந்த வாய்தர்க்கமும் முரண்பாடும் நாளும் நாளும் கூடியது தப்பி இந்தியா போனவர்கள் இந்தியாவில் இருந்த டெலோ உறுப்பினர்கள் திடீர் திடீரென யாழ்ப்பாணம் ஈ பி முகாமில் தென்பட்டார்கள் ..... புலிகள் பல முறை பேசினார்கள் வாய்த்தர்க்கம் வரும் சென்று விடுவார்கள். இவர்கள் எம்மில் கை வைத்தால்தான் புலிகளுக்கு தெரியும் என்று பெருமிதம் கொள்வார்கள். பின்பு ஒருநாள் உண்மையிலேயே ஒலிபெருக்கியுடனும் அறிவிப்புடனும் வந்துவிடார்கள். டெலோவுடன் சில இடங்களில் நேரடி மோதல் துப்பாக்கி சண்டை நடந்ததால் புலிகள் கடும்போக்கில் இருந்தார்கள் புலிகளுக்கும் இது புது அனுபவம் எப்படி கையாள்வது என்பதோ அல்லது திட்டம் போட்டு நடந்ததோ இல்லை. ஈ பி ஒரு கேளிக்கை விளையாட்டாக இருந்தது ... காரணம் அதில் இருந்த பெரும்பான்மை இளைஞர்கள் அப்பாவிகள் பல பேர் ஆயுதங்களை கண்ணால் கண்டதுகூட இல்லை. எமது ஊரில் இருந்துதான் படகில் ஏற்றி இந்தியா அனுப்பினோம் ஓடி ஓடி வந்துகொண்டே இருந்தார்கள். புலிகளுக்கும் தெரியும் தெரிந்துதான் விட்டார்கள். பின்பு புளட் ... 90 வீதம் பேச்சுவார்த்தை மூலமே முடிந்து விட்ட்து. இது புலிதான் என்பது தெரிந்தபின்பு அவர்களகாவே வாலை சுருட்டிக்கொண்டு பேசுவது உத்தமம் எனும் முடிவுக்கு வந்தது வரவேற்க கூடியது. இதுதான் இயக்க மோதலின் சுருக்கம் தனி தனியே ஊருக்கு ஊர் ஒரு கதை உண்டு. இதில் சில சம்பவங்களில் இத்தனை வருடம் தாண்டியும் நியாய படுத்த முடியாத சில சம்பவங்களும் தவறுகளும் சில புலி போராளிகள் மேல் உண்டு. புலிகளும் அதை நியாய படுத்த ஒருபோதும் முனைந்ததில்லை. சில போராளிகளை தண்டித்தார்கள் சிலபேரை பதவி நீக்கம் செய்தார்கள். ஏமாற்றம் நம்பிக்கையீனம் என்பது எப்போதும் மனித இனத்தில் வருவதுதான் எமக்கு ஒரு பெருத்த பலவீனம் நிலப்பரப்பு தீவாக அமைந்துவிட்டது கடலை கட்டுப்படுத்தினால் எம்மை கட்டிவிடும் சாத்தியம் எதிரிக்கு கிடைத்த வரப்பிரதாஸம். இப்போதைய துரோகிகளின் அரசியல் மேடை இனத்தை விற்கும் போக்கு என்பதை நான் பாசிட்டிவ் ஆகவே பார்க்கிறேன். இப்போதைய இளைய சமுதாயத்துக்கு புலிகளின் தியாகம் பெரிதாக புரியவில்லை ... இவர்க்ளின் துரோகங்களும் அன்றாட ஏமாற்றங்களும்தான் அவர்களுக்கு சிந்தனையை கொடுக்கிறது. அடுத்தது எமக்கு கிடைக்க கூடியது பொருளாதார போர்தான் வெற்றி பெற கூடிய அனைத்து சாத்தியங்களையும் நான் பார்க்கிறேன். தொலைநோக்கு உடையவர்கள் நகர்ந்துகொண்டு இருக்கிறார்கள். எதிரி இன பரம்பலை உருவாக்கி எமது பிரதேச அங்கீகாரத்தை தகர்க்க திட்டம் போட்டு நகருகிறான் .... இதை கொஞ்சம் நிறுத்தி வைக்க எமக்கு ஒரு அரசியல் பலம் அங்கு தேவை உள்ளது ....... அதை விடுத்து இனி வரும் போர் ... பொருளாதார போர் வெளியில் இருந்தே இலகுவாக செய்து வெல்ல கூடியது. மீண்டும் எழுவோம் எனும் நம்பிக்கை எனக்கு இப்போது உண்டு. உலக பொருளாதார போக்கு பாரிய மாற்றம் காண்கிறது உலக வங்கிக்கு சமமாக சீன வங்கி மூன்றாம் உலகுக்கு கடன் கொடுக்கிறது. டாலரில் வணிகம் கிரெடிட் கார்டு போன்றவைக்கே ஆப்பு வரும் அளவுக்கு எலெட்ரோனிக் பணம் வளர்கிறது. எமக்கு புலிகள் போல வழிகாட்ட ஒரு நேர்த்தியான தலைமை மட்டும் வேண்டும். இதை காலம் உருவாக்கும்.
 46. 6 points
  ஆயுதப்போராட்ட காலத்தைப் பற்றிய விமர்சனங்கள் ஒரு குறுகிய வட்டத்துள் என்னும் நிற்கின்றது அவற்றைக் கடந்து எம்மால் இன்னும் சிந்திக்க முடியவில்லை. ஒரு விதத்தில் சிந்திக்கவும் முடியாத பலவீனமான இனக் குழுமம்தான் நாம். ஆயுதப்போராட்டத்திற்கு முற்பட்ட எமது சமூகம் ஆரோக்கியமான ஒற்றுமையான சமூகமாக இருந்ததிற்கான எந்த ஒரு வரலாறும் இல்லை. இனம் தேசீயம் என்ற பொது உணர்வற்ற சமூகமாக இருந்தது. கீழ்சாதிப் பிணங்கள் மேல்சாதித் தெருக்களில் எடுத்துப்போவதற்கு எதிராக வன்முறையில் இறங்கிய சமூகம். இதற்காக தனது புத்திஜீவிதத்தை கோட்டிலும் வழக்கிலும் பயன்படுத்திய சமூகம். சாதி மதம் பிரதேசவாதம் புரையோடிப்போன சமூகம். இவற்றைக் கடந்து சிங்கள பேரினவாதம் எம்மை இனமாக பெயரிட்டு அடித்தபோதே அதற்கு எதிர்வினையாற்ற சில இளைஞர்கள் முயன்றார்கள். அந்த இளைஞர்களை இனம்கண்டு பல்வேறு பிரிவுகளாக ஆயுதப்பயிற்சியளித்து வளர்த்து விட்டது இந்திய மத்திய அரசு. ஆயுதப்போராட்டம் தொடர்ந்தது பின்னர் முடிந்தது. அதன் பிறகு ஒரு தசப்பதம் முடிந்த இன்றை நிலையில் மனனாரில் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் மோதல், யாழில் ஆயுதங்களுக்குப் பதிலாக வாள்கள், கசிப்புக்கு பதிலாக கஞ்சா கிழக்கில் இஸ்லாமியர் இந்துக்கள் முறுகல். சாதி மத பிரதேசவாத பிரச்சனை ஆயுதப்போராட்ட காலத்துக்கு முன்பு எப்படி இருந்ததோ அப்படியே என்னும் இருக்கின்றது. இனி ஒரு போதும் சிங்களவர்கள் எம்மை இனமாக அணுகிய தவறை செய்ய மாட்டார்கள். மதமாக பிரதேமாக தேவைப்பட்டால் சாதிவாரியாக அணுகுவார்கள். இன அடிப்படையில் நாம் ஒன்றுபட்டு தேசிய எழுச்சிபெற்று இனவிடுதலைக்கான அரசியல் ஆயுதப்போராட்டத்திற்கான எந்த அவசியமும் இனி ஏற்பட வாய்ப்பில்லை. புலியும் ஏனைய இயங்கங்களும் எமது வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் எமது சமூகத்தில் தோன்றி மறைந்தவர்கள் தவிர வேறு சமூகத்தை சேர்ந்த அந்நியர்கள் இல்லை. நேற்றும் இன்றும் நாளையும் பானையில் உள்ளதே அகப்பையில் வரும்.
 47. 5 points
  அதற்க்கென்ன தனி கொடுத்தால் போச்சு .... புலவரே நாங்கள் இருவரும் கிழக்கர்கள் தான் ,அருகருகே அடிக்கடி சந்தித்துக்கொள்வதுமுண்டு . நாய்ப்பிட்டி ,நாய்ப்பட்டி இரண்டுமே தவறு, இந்த இடத்தின் பெயர் நெற்பிட்டிமுனை அதாவது ஒருகாலத்தில் விவசாயத்தில் செழித்து நெற்குவியல்கள் பிட்டிகளாக குவித்துவைக்கப்பட்டிருந்ததால் இந்த பெயர் வந்தது பின் காலப்போக்கில் மருவி நற்பட்டிமுனையாகி நாய்ப்பட்டியில் வந்து நிற்கிறது
 48. 5 points
 49. 5 points
  பகுதி 6 வீட்டுக்கு வந்து சேர்ந்தபிறகும் என் கோபம் ஆறவேயில்லை. கள்ளப்பயல் எனக்கும் றூட் போட்டபடி மாமிக்கும் லேஞ்சி வாங்கிக் குடுத்திருக்கிறானே என்று படங்களில் வாற வில்லன் போல் அவர் தெரிஞ்சார். ஒருவாரமா மாமியோடும் கதைக்கேல்லை. அவை வீட்டுப்பக்கம் எட்டியும் பாக்கேல்லை. என்ர கவலையை ஆருக்கும் சொல்லவும்முடியாமல் தவிச்சுக்கொண்டிருந்த நேரத்திலதான் ரஞ்சிமாமி ஒருநாள் மாலை வீட்டுக்கு வந்தா. "என்னடி உன்னை வீட்டுப்பக்கமே காணேல்லை. வருவாய் எண்டு பாத்துக்கொண்டிருந்தனான்" எண்டா. "ஏன் என்ன அலுவல். எனக்கு படிக்கநிறைய இருக்கு என்றேன்." "நாங்கள் வந்து ஒரு கிழமையாகேல்லை. அதுக்குள்ள கனநாள் ஆனமாதிரி இருக்கு. ஆனா அவர் பொறுக்கேலாமல் எனக்குக் கடிதம் போட்டிருக்கிறார் என்றா". எனக்கு உடனே சந்தேகம் எழ "என்ன துணிவில எழுதினவர்? தற்செயலா உங்கட அம்மா அப்பா கையில சிக்கியிருந்தால் "?? என்றேன் நான். நான் இந்த வருசம் வீட்டிலதானே நிப்பன். அப்பா வேலைக்குப் போவிடுவர். அம்மா குசினீக்குள்ளதானே இருப்பா. நான்தான் அவருக்குக் கடிதம் போடச் சொன்னனான் என்றுவிட்டு என்னைப்பார்க்க முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டக்கூடாது என்று ஓ என்றேன். ஆனாலும் என் முகம் காட்டியதோ அல்லது சும்மா கேட்டாவோ ஏனடி உன்ர முகம் ஒரு மாதிரி இருக்கு என்று. "ஏன் ஒரு மாதிரி. என்ர நோமலாத்தான் இருக்கு. உங்களுக்குத்தான் இப்ப எல்லாம் மாறிமாறித் தெரியுது" என்றுவிட்டு நான் அப்பால் போய்விட்டேன். என்னை நினைக்க எனக்கே கேவலமாய் இருந்துது. ஏன் இப்பிடி என்னை ஏமாற்றினவர் என்று எண்ணியெண்ணி மாய்ந்துவிட்டு, அவர் என்னட்டைக் காதலைச் சொல்லேல்லையே. நானாக்க் கற்பனை செய்தேனோ என்றெல்லாம் ஏதேதோ எண்ணி மனம் குமைந்துவிட்டு திடமாக அவரைப்பற்றி இனி நினைத்தே பார்ப்பதில்லை என முடிவெடுத்து அதன்படி நடக்கத் தொடங்கினேன். நான் ரஞ்சி மாமியுடன் கதைக்காததை அவதானித்த அம்மா ஏன் உவள் ரஞ்சியோட நீ கதைக் கிறேல்லை. உங்களுக்குள்ள ஏதும் பிரச்சனையோ என்று கேட்க, எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று சிரித்து மழுப்பிவிட்டுச் சென்றுவிட்டேன். இரண்டுமாதம் போனபின் திரும்பவும் மாமி நான் நிக்கிற நேரமா வீட்டை வந்து "எடி அவர் அஞ்சாவது கடிதம் போட்டிருக்கிறார்" என்று முடிக்க முதல் "அவர் அஞ்சாவது போட்டாலென்ன பத்தாவது போட்டால் என்ன. எனக்கு இனிமேல் வந்து சொன்னியள் எண்டா அம்மாட்டைச் சொல்லிப்போடுவன்" என்றவுடன் மாமி வெலவெலுத்துப்போய் ஒண்டும் சொல்லாமல் போட்டா. அதுக்குப் பிறகு ஆறு மாதமா மாமியும் என்னோட கதைக்க வரேல்லை. நானும் எல்லாத்தையும் மறந்து என்ர அலுவலைப் பாக்கத்தொடங்கீட்டன். எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு ரியூட்டறி. என் நண்பியின் அத்தான் தான் கணித ஆசிரியர். என் அங்கு என் நண்பியையும் வந்திருந்து படிக்கும்படி அத்தான் காறன் சொல்ல அத்தனை பெடியளுக்குள்ளும் தனி ஒருத்தியாய் படிக்க வெட்கப்பட்டுக்கொண்டு எடி நீயும் வாடி என்று கரைச்சல் தர நானும் கணிதபாடத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் ரியூசனுக்குப் போகப்போறன் என்றேன். எங்கே என அம்மா கேட்க நான் உதுல பக்கத்திலதான் என்று விபரம் சொன்னேன். அம்மாவும் உடனே ஓம் எண்டிட்டா. OL லுக்குப் பிள்ளை நல்லாத்தான் படிக்குது எண்டு அம்மாட எண்ணம். நானும் அவளும் படிக்கத் தொடங்கினபிறகு இன்னும் மூண்டுபேர் எங்களோட சேர முன் வாங்கில போய் இருப்பம் எண்டு சொல்லி படிப்பில கவனத்தோட இரண்டுநாள் இருக்க, முன் வாங்கு வேண்டாமடி. பெடியள் பின்னால இருந்து குறுகுறுவென்று பாக்கிறாங்கள் போல முதுகு கூசுதடி என்று சொல்ல நாங்கள் பின் வாங்கை நிறைத்துக்கொண்டம். 5-6 மணிவரை கணிதம். 6-7 மணிவரை விஞ்ஞானம். ஏழுக்கு வீட்டை. வீட்டில் தங்கை தம்பியுடன் என்னதான் செய்யிறது. அதனால அம்மாவுக்கு ரியூசன் எட்டுமணிவரை என்று சொல்லிப்போட்டு பெட்டையள் சிலர் கதைத்துக்கொண்டிருந்துவிட்டு எட்டு மணிக்கு AL பெடிபெட்டைகளின் ரியூசன் முடிய வீட்டை போறதை வளக்கமாக்கிக்கொண்டம். என்ர வீட்டுக்கு சுத்திப் போக ஏழு நிமிட நடை. பக்கத்து ஒழுங்கையால போக மூன்று நிமிடங்கள் போதும். ஆனால் கும்மிருட்டு. எனக்குத் தனிய உதுக்குள்ளால போகப் பயமாய் இருக்கு. என்னை கொண்டுபோய் விடடி எண்டு சொல்ல அவள் திரும்பத் தனிய வர தனக்குப் பயமாய் இருக்கு என்று சொல்ல அத்தான் காறர் சொன்னார் எடேய் உந்தப் பெற்றோல் மக்ஸ்சைக் கொண்டுபோய் பிடிச்சுக்கொண்டு நில்லுங்கோ நிவேதா போகுமட்டும் என்றார். அன்றிலிருந்து யாராவது ஒருவர் பெற்றோல்மக்ஸ்சைப் பிடித்துக்கொண்டு நிற்க நான் ஓட்டமும் நனையும் வீடுபோய்ச் சேர்ந்திடுவன். எங்கட ரியூசன் முடிஞ்சு வெளியே வர ஒரு மூண்டுநாலுபேர் நிண்டு கதைச்சுக்கொண்டு நிப்பினை. அன்று பார்த்து புதிசா ஒருத்தர் அவர்களுடன் நிக்க, ஆரெடி இவன் புதிசாய் இருக்கு என்றேன் நண்பியிடம். கிளிநொச்சியில் இருந்தவை இத்தனைநாளும். தகப்பன் இப்ப மாற்றலாகி இங்க வந்திருக்கினை என்றும் இதே ஊரவைதான். உதில முன்னுக்குத்தான் வந்திரிக்கினை, புதிசா வந்ததால் ஒரு பிறெண்சும் இல்லை. அதுதான் இவங்களோட வந்து கதைச்சுக்கொண்டு நிக்குது ஆள் என்கிறாள். நான் சாதாரணமாக ஊரப்பெடியளைக் கணக்கிலையும் எடுக்கிறேல்லை. அவங்களும் பலரும் அம்மா அப்பாட்டைப் படிச்சபடியால் என்னைப் பார்த்துப் பல்லைக் காட்டுவதில்லை. ஆனால் பகிடிவிட்டுக் கதைப்பாங்கள். ஒருமாதமாப் பாக்கிறன் புதியவர் வகுப்புத் தொடங்க முதலும் முடியவும் வந்து பெடியளோட கதைச்சுக்கொண்டு நிக்கிறார். ஆனால் அவரைத் திரும்பியும் பார்ப்பதில்லை. அன்று ஏலெவல் ஆட்களின் வகுப்பு முடிய நான் வீட்டை போக வெளிக்கிட ஒருத்தன் பெற்றோல்மக்சைத் தூக்கிக்கொண்டு வாறான். மூண்டுநாலு பெடியள் வெளியில நிக்கிறாங்கள். நான் ஒழுங்கைக்குள்ள அப்பதான் காலெடுத்து வைக்கிறன். உங்களுக்கு வேற வேலை இல்லையோடா இவவுக்கு ஒவ்வொருநாளும் விளக்குப்பிடிக்கிறதுக்கு??? சுத்திப்போனால் தேஞ்சிடுவாவோ? என்று புதியவரின் குரல் என் காதுகளில் நாராசமாய் விழ எரிச்சலும் கோபமும் ஒருங்கே வர " ஏன் உங்களையே விளக்குப் பிடிக்கச் சொன்னனான். உதில நிண்டு தூங்காமல் போய் பாக்கிற அலுவலைப் பாரும்" என்கிறேன். உடனே அவர் " சரிதான் போடி வாயை மூடிக்கொண்டு என்கிறார். நீ வாயை மூடிக்கொண்டு போடா என்றுவிட்டு நான் ஒரே ஓட்டமாக ஓடி வீட்டுக்குள்ளே போக " ஏன் இப்பிடி ஓடி வாறாய்என்ற அம்மாவுக்கு நாய்க்குப் பயந்து ஓடி வந்தனான் என்றுவிட்டு முகம் கழுவச் செல்கிறேன். எல்லோரும் கொல்லென்று சிரித்த சிரிப்பொலி அடிக்கடி காதில் ஒலித்தபடி இருக்க நெஞ்சில் ஒரு பயமும் ஏற்பட்டது.
 50. 5 points
  என்னத்தை சொல்ல? படமெல்லாம் அனுப்பினனான் வன்னியர். போதாக்குறைக்கு சறம் கட்டிக்கொண்டு வெறும் மேலோடை சாமியை கும்புடுறமாதிரி ஒரு படம் எடுத்து அனுப்பச்சொல்லி அதுவும் அனுப்பினனான் கண்டியளோ. ஜேர்மனிக்கு போனவுடனை நல்ல வெள்ளையாய் வந்துட்டியள் எண்டு சந்தோச கடிதமும் வந்தது பாருங்கோ. நீங்கள் கேட்டபடியாலை இன்னுமொரு விசயத்தையும் சொல்லுறன் கேளுங்கோ.......அவள் பாவியை(பரிமளம்) பிரிஞ்சு இருக்கிற கவலையிலை தாடியும் வளர்த்து தலையும் வளர்த்து இவங்கடை சவக்காலையுக்கை கையிலை ஒரு ரோசாப்பூவோடை நிண்டு ஒரு படமும் எடுத்து அனுப்பினனான் கண்டியளோ....போட்டோ பின்பக்கத்திலை பாட்டு வசனம் வேறை.... நான் ஒரு ராசியில்லா ராஜா! என் வாசத்திற்கில்லை இதுவரை ரோஜா! ஆயிரம் பாடட்டும் மனது! என் ஆசைக்கு இல்லை உறவு! நான் ஒரு ராசியில்லா ராஜா! என் வாசத்திற்கில்லை இதுவரை ரோஜா!
யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு