Leaderboard

 1. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   199

  • Content Count

   52,948


 2. உடையார்

  உடையார்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   177

  • Content Count

   7,180


 3. குமாரசாமி

  குமாரசாமி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   143

  • Content Count

   29,744


 4. போல்

  போல்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   140

  • Content Count

   6,013Popular Content

Showing content with the highest reputation since சனி 02 மே 2020 in Posts

 1. 19 points
  யாழ் இணையத்தினால் கடந்த வருடம் விளம்பரப்பகுதி ஒன்று தொடக்கப்பட்டு அந்த விளம்பரங்கள் மூலம் கிடைக்கப்பெறும் உதவிகள் அனைத்தும் தாயகத்திற்கே வழங்கப்படும் என அறிவித்திருந்தோம்.விபரம் இங்கே அந்த வகையில் கடந்த வருடத்திலிருந்து கிடக்கப்பெற்ற பணம் அனைத்தும் TNRA அமைப்பிற்கு நேரடியாக கிடைப்பதற்குரிய வழிவகையினைச் செய்திருந்தோம். ஆரம்பத்தில் கிடைக்கப்பெறும் பணம் ஒரு திட்டத்திற்குரியதாக போதுமானதாக வரும் போது அதை யாழ் இணையத்தின் பெயரில் ஒரு திட்டமாகச் செயற்படுத்திக் கொள்ள முடியும் என TNRA அமைப்புடன் கதைத்து முடிவு செய்யப்பட்டிருந்தது. எனினும் இன்றைய நெருக்கடி நிலையினைக் கருத்தில் கொண்டு மக்களின் உடனடித் தேவைக்கு கிடைக்கப்பெற்ற பணத்தின் ஒரு பகுதி உலர் உணவுப் பொருட்களாக வழங்கப்பட்டுள்ளது. யாழ் இணையத்திற்கு விளம்பரம் / அறிவித்தல் தந்த நிழலி, தொடர்ச்சியாக விளம்பரங்களைத் தரும் வல்வை சகாரா, உடையார் (விளம்பரத் தொகையுடன் மேலதிகத் தொகையும் வழங்கியிருந்தார்) மற்றும் மக்களுக்கான உதவி வழங்கவென துல்பன் 100USD, தமிழ்சிறி199USD வழங்கியிருந்தனர். இவர்களுக்கான நன்றிக் கடிதம் TNRA அமைப்பினால் எனக்கு தரப்பட்டுள்ளது. அவை இவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
 2. 12 points
  நீண்ட காலத்தின் பின்னர் குடும்பத்துடன் ஒரு நாள் இனிய மலை நடைபயணம் செய்ய கூடிய சந்ததப்பம் நேற்று கிடைத்தது. சுவிற்சர்லாந்தில் இருந்து வேறு நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை. நான் வசிக்கும் இடத்தில் இருந்து கிட்ட தட்ட 100 கி. மீ தூரத்தில் உள்ள Grindelwald என்னும் இடத்தை தெரிவு செய்தோம். கடல் மட்டத்தில் இருந்து 1030 மீற்றர் உயரமான பிரதேசம். நடந்து போகும் பாதை மிகவும் அழகான இயற்கை காட்சிகளை கொண்டதாக இருந்தது. மிக ரம்மியமான காற்றுடன் கூடிய காலநிலை பயணத்தை இன்பமூட்டியது. அல்ப்ஸ் மலை தொடரின் Wetterhorn, Eiger,Faulhorn, Mittelhorn, Mättenberg மலைகளின் சிகரங்களின் அழகான காட்சிகள் மனதிற்கு இதம் தருவதாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் அங்கு செலவிட்டோம். அங்கு எடுத்த படங்களை யாழ் கள உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறேன். சுவிற்சர்லாந்திற்கு வர சந்தர்ப்பம் கிடைத்தால் யாழ்கள உறவுக்கள் மலை நடைப்பயணத்திற்கு இந்த பிரதேசத்தை தெரிவு செய்யயலாம். மிக அழகான இயற்கை காட்சிக்கள் மனத்திற்கு மிகவும் சந்தோசத்தை கொடுக்கும். Bernerhighland ல் இருக்கும் Interlanken நகரத்தை அண்டியுள்ள இப்பிரதேசம் இயற்கை அழகு கொண்டது.
 3. 12 points
  இன்று வீட்டில், எல்லோரும் நிற்பதால்.... "பரோட்டா" செய்ய பிளான் போட்டிருக்கின்றேன், அது சரியாக... வர, நீங்களும், ஆண்டவனை பிரார்த்தியுங்கள் என்று, வேறு ஒரு, திரியில்... குறிப்பிட்டு இருந்தேன். யாழ்.கள உறுப்பினர்கள் எல்லோரும், பிரார்த்தித்து இருக்கிறார்கள் போலுள்ளது. நான் செய்த, பரோட்டா.... கடையில் வாங்குவதை விட, நன்றாக இருந்தது என்று, வீட்டில்... எல்லோரும், விரும்பி சாப்பிட்டார்கள். ஓகே... இனி, நான் "பரோட்டா" செய்த முறையை, பார்ப்போம்... வீட்டில், ஐந்து பேர் இருந்தால்.... மத்தியானமும், இரவும் சாப்பிட... பரோட்டாவுக்கு தேவையான பொருட்கள். இவை.... "பரோட்டா" மாவை, குழைக்க தேவையான பொருட்கள். கோதுமை மா. ------- இரண்டு, கிலோ கிராம். பால். -------- 750 மில்லி லீற்றர். பட்டர் --------- 10 மேசைக் கரண்டி. உப்பு. --------- 5 தேக்கரண்டி. சீனி. ---------- 5 தேக்கரண்டி. எண்ணை. ---------- 150 மில்லி லீற்றர். இளம் சூடான தண்ணீர். ---------- 500 மில்லி லீற்றர். உருட்டுக் கட்டை. --------- ஒன்று போதும். செய்முறை. 1) மாவை... (மாவை சேனாதிராஜாவை, அல்ல) ஒரு பெரிய, பிளாஸ்ரிக் சட்டியில் போடவும். 2) 750 மில்லி லீற்றர் பாலும், எண்ணையும் விட்டு... நன்றாக பிசையவும். 3) மைக்ரோ அவனில்... சாதுவாக சூடாக்கிய, பட்டரையும்.... உப்பையும், போட்டு, மேலும்... நன்றாக குழைக்கவும். 4) இப்போ... தண்ணீர் விட்டு, குழைக்க வேண்டிய, இறுதிக் கட்டத்துக்கு, வந்துள்ளோம். கொஞ்சம், கொஞ்சமாக.... தண்ணீர் விட்டு, பிசையும் போது.... மிகவும், அவதானமாக இருக்க வேண்டும். தண்ணீர் கூடினால்.. எல்லாம் பிழைத்துப் போகும். குழைத்துக் கொண்டிருக்கும் மா.... உங்கள் கையில் ஒட்டாமல், வந்தது என்றால், சரியான பதத்துக்கு... மாவை, குழைத்து விட்டீர்கள் என்று, அர்த்தம். கையில்... கனக்க, ஒட்டி இருந்தால்... இன்னும், கொஞ்ச மாவை போட்டு.... பதத்துக்கு... கொண்டு வாருங்கள். இனி.... குழைத்த மாவின் மேல், எண்ணை தடவி, அதே சட்டியில் வைத்து, 30 நிமிடங்கள் வரை, சாதுவான ஈரத் துணியால்.... மூடி விடுங்கள். மா... நன்றாக ஊறினால் தான், "பரோட்டா" மெதுமையாக வரும். சீனி.. போட விருப்பமில்லாதவர்கள், அதனை தவிர்க்கலாம். சீனியை... போட் டால், "பரோட்டா" நல்ல மண்ணிறத்துக்கு வரும். அரை மணித்தியாலம் ஆகி விட்டது.... அடுத்த, வேலைக்கு... போவோம். 1) ஒரு தோசைக் கல்லை..... எடுத்து, அடுப்பில் வைத்து, மெல்லிய சூட்டில் சூடாக்கவும். அடுப்பு.. எப்பவும், மெல்லிய சூட்டில்... இருக்க வேண்டும். இல்லையேல்... "பரோட்டா" வெளியில் கருகி, உள்ளுக்கு வேகமால் போய் விடும். 2) குழைத்த மாவை, தேசிக்காய் அளவு எடுத்து..... "குசினி" மேடையில் வைத்து, உருட்டுக் கட்டையால்.... மா, மெல்லிசாக... வரும் வரை உருட்டவும். 3) இப்போ... அதனை, ஒரு தட்டில், அல்லது கோப்பையில் வைத்து.... இரண்டு சென்ரி மீற்றர் அளவில், நீள வாக்கிற்க்கு கத்தியால், கீறி விடுங்கள். அவ்வப்போது, எண்ணையை.. பாவியுங்கள்.. 4) இனி... கீறிய மாக் கலவையை... குறுக்குப் பாட்டிற்கு மெதுவாக உருட்ட, "பாம்பு" போல், அந்த மா வந்திருக்கும். 5) இப்ப... அதனை, "நத்தை" மாதிரி.... உருட்டி, திரும்பவும்... உருட்டுக் கட்டையால், அதன் மேல், மெல்லமாக அமத்தி, வட்ட வடிமாக ஆக்குங்கள். 6) இனி... அதற்கு மேல், உருகிய பட்டரை... சாதுவாக தடவி, இளம் சூடான தோசைக்கல்லில் போட்டு, இரண்டு பக்கமும்.. உங்களுக்கு பிடித்த, மண்ணிறம் வரும் வரை, சூடாக்கி எடுங்கள். இப்போ... இனி செய்ய வேண்டும்? என கேட்கிறீர்காளா? குசினிக்குள் நின்ற படியே.... "பரோட்டா" ரெடி... என்று கத்துங்கள். எல்லாரும்... பாய்ந்தடித்து, சாப்பிட வந்து, சாப்பிட்டு விட்டு, அப்பா... உங்களில், இப்படி... ஒரு, திறமையா....? என்ற, பாராட்டை... கேட்கும் போது, மிகப் பெருமையாக இருக்கும். டிஸ்கி: "பரோட்டா" செய்ய, மூன்று மணி நேரமும், அடுப்பையும், பாத்திரங்களையும்... கழுவி வைக்க, ஒன்றரை மணி நேரமும், இந்தப் படங்களை, தரவேற்ற... இரண்டு மணித்தியாலமும், அதற்குத் தேவையான பொருட்களை வாங்க, ஒன்றரை மணி நேரமும் எடுத்தது. மொத்தத்தில்.... எட்டு மணித்தியாலம், குடும்பத்தில் செலவளித்தது... மிக்க மகிழ்ச்சியை, தருகின்றது.
 4. 11 points
  2017 2018 திருகோணமலையில்.... Kitchen 3D
 5. 11 points
  "கொரோனா" கற்றுத் தந்த பாடங்களில்.... இதுகும், ஒன்று. எனக்கு எப்பவும், வேலை காலை.. 7:30 மணிக்கு தான், வேலை ஆரம்பிக்கும் என்றாலும்.... நான், அதிகாலை... மூன்று மணிக்கே, எழும்பி.... எனது அலுவல்களை, முடித்து... குசினி, குளியலறை.... எல்லாவற்றையும்... ஒரு, நோட்டம் விட்டு... மீண்டும்... ஒரு, முறை துடைத்தெடுத்த பின்தான்... மனதிற்கு, .அமைதி கிடைக்கும். என்ற மன நிலையில்.. வாழ்கின்ற சாதாரண மனிதன். அது, என்ன... வருத்தமோ... தெரியவில்லை, எனக்கு... அப்படிச் செய்யா விட்டால், "விசர்" பிடித்த மாதிரி வந்து விடும். அதுக்குப் பிறகு, எனக்குப் பிடித்த... இஞ்சி தேனீரை, அல்லது எலுமிச்சை தேனீரை தயாரித்து.... வேலைக்கு கொண்டு போக வேண்டிய.... இரண்டு சோடி, பாணுக்கு.... தடவ வேண்டியதை.... தடவி, முடிக்க, 4:30 மணி காட்டும். 4:45 ற்கு.... மகன் / மகள், எழும்பி... வேலைக்குப் போக ஆயத்தமாவார்கள். அதற்கிடையில்... நான், படாரென்று... "சேவ்" எடுத்து, பல்லு விளக்கி, முகம் கழுவி, கிரீம் பூசி, சாமி.... கும்பிட்டிட்டு வந்து, எனது.... கணணியை திறந்து, யாழ். களத்தை பார்க்கும் உற்சாகத்திற்கு... எல்லையே... இல்லை. இப்ப... இந்தக், கொரோனாவால்.... எனது, எல்லா.... நிகழ்ச்சி நிரல்களும், பாதிக்கப் பட்டுள்ளதால், வித்தியாசமாக... ஒன்றை, செய்வோம் என்று, இந்த "மீம்ஸை" .... தயாரித்துள்ளேன். எனது முதல், "மீம்ஸ்" சை .... தயாரிக்க, "தீனி" போட்ட.... சம்பந்தன் ஐயாவுக்கும், மகிந்த மாத்தையா, கோத்தா மாத்தையா.... சகோதரர்களுக்கும் நன்றி. உங்களைப் போன்றவர்கள், இருப்பதால்... தான், எமக்கும்... பொழுது போவதுடன், "விசர்" வராமல் இருக்கின்றோம். என்பதையும் கூறிக் கொண்டு, அடுத்த, "மீம்ஸில்" சந்திப்போம்.
 6. 10 points
  கனகரிடம் கிளாசை கொடுத்து " அண்ணே எடுங்கோவன் என்றேன்", "லட்சுக்கு சொல்லாமல் வந்திட்டேன் இரு போனில் சொல்லிபோட்டு வாரேன்" ,கனகர் அந்த காலத்தில காதலிச்சு கலியாணம் செய்த மனிதன் இன்றும் அதே காதலுடன் தான் இருக்கிறார்.மனைவியின் விசயலட்சுமி என்ற பெயரை சுருக்கி லட்சு என்று அழைக்கிறார் இன்றுவரை என்றால் பாருங்கோவன் ஐபோனை எடுத்தார் போன் ஸ்கிர்னில் லட்சுவின் இளமை போட்டோவை ஒர் சின்ன தட்டு தட்டினார் "ஹலோ " "லட்சுயம்மா நான் சுதா வீட்டை நிற்கிறேன் ,கொஞ்சம் லெட்டாத்தான் வருவன் தேடாதையும்" போனை கையால் பொத்திக்கொண்டு "லட்சுக்கு பொர் அடிக்குதாம் என்ன செய்ய" என்றார் . அவவையும் வரச்சொல்லுங்கோவன் என்றேன். "நான் சொன்னா வரமாட்டா ,சுதாவிட்ட சொல்லு கூப்பிடசொல்லி" "சுதா!! மாமியை வரச்சொல்லி சொல்லும் மாமா தேடுகிறார்" "மாமா தேடவில்லை உங்களுக்கு தண்ணியடிக்க பாட்னர் அதுக்கு எங்கன்ட மாமாவை பயன்படுத்த்றீயள் என்ன" என செல்லமா அதட்டியபடி மாமாவின் கையிலிருந்த போனை வாங்கி "ஹலோ மாமி புட்டு அவிக்கிறேன் வீட்டை வாங்கோ நான் உங்களை கூப்பிட இருந்தனான் அதுக்குள் மாமா கொல் எடுத்திட்டார் ,வெளிகிடுங்கோ நான் வந்து பிக்கப் பண்ணுகிறேன்" மாமி வாரவாம் என்று சொல்லியபடி மாமாவிடம் போனை கொடுத்து விட்டு ... "மாமி வாரா இரண்டு பேரும் பார்த்து பாவியுங்கோ" என்று கூறியபடி காரடிக்கு சென்றாள் சுதா. "உவள் வந்து கிளாஸ் கணக்கு கேட்க‌ முதல் இரண்டு பெக் அடிச்சு போட வேண்டும்" போதலை திறந்து தனது இஸ்டத்திற்கு அருந்த தொடங்கினார். "டேய் நீ உந்த பன்டமிக்கை பற்றி என்ன நினைக்கிறாய்" என்னை டேய் என்று அழைக்க தொடங்கிற்றார் என்றால் மாமா அடுத்து உலக நடப்பு தான் கதைப்பார் அதுதான் அவருடைய வழமை. "உவன் அமெரிக்கன் தான் உந்த வைரஸை பரப்பி போட்டு இப்ப சீனாக்காரனை பிழை சொல்லுறான்" " ஏன் அப்படி சொல்லுறீயள்" வீட்டு வாசலில் கார் சத்தம் கேட்டவுடன் "வந்திட்டாளவையள் போல, இந்த கிளாஸுக்குள் கொஞ்சத்தை ஊற்றிபோட்டு போத்தலை ஆங்கால கொண்டுபோய் வை" அவர் சொன்னமாதிரி செய்து போட்டு .. ""அண்ணே அப்ப நீங்கள் சொல்லுறீயள் அமெரிக்கன் தான் செய்திருக்கிறான் எண்டு ,நான் நினைக்கிறேன் உவங்கள் சப்பட்டைகள்தான் செய்திருப்பாங்கள்" "இஞ்ச உந்த பட்ட பெயர் சொல்லி ஆட்களை விழிக்கிறதை நிறுத்து உது எல்லாம முதலாளித்துவ சிந்தனையுள்ள உன்னை போல ஆட்களுக்கு கை வந்த கலை" "சரி அண்ணே மன்னியுங்கோ, ஏன் அமெரிக்கன் தன்ட மக்களை கொல்லப்போறான்" "அது முதலாளித்துவ சிந்தனை தான் ,சீனா வல்லரசாக மாறப்போகுது என்ற பயத்தில தன்னட மக்களை கொல்கின்றான் அத்தோட உந்த கொரானாவுக்கு வக்சின் என்று மருந்தை கண்டுபிடிச்சு நல்ல வியாபாரம் செய்யபோறாங்கள்..." "அண்ணே எதற்கு எடுத்தாலும் சும்மா முதலாளித்துவத்தையும் அமெரிக்காவையும் குற்றம் சாட்டாமல் உங்கன்ட மாவோ சிந்தனையையும் மீள்பரிசீலனை செய்யுங்கோ" "டேய், டேய் நீ ஒரு முதலாளித்துவ அருவருடி உன்னோட எங்கன்ட புனித தாலிவர் மாவோவின் சிந்தனையை பற்றி கதைக்கிறது வேஸ்ட்" "சரி அண்ணே ,உங்களுக்கு தெரியுமோ ஜெ.வி.பி காலத்தில ஒரு கதை அடிபட்டது ஜெ.வி.பி ஆட்சி அமைத்தால் வயோதிபர்களை கொலை செய்துவிடுவார்கள் எண்டும் அதற்கு ரோகணா விஜயவீர விடுதலையான பின்பு ...,எனது பெற்றோர்களை நான் கொல்வேனா என மறுப்பு தெரிவித்ததும்" "இப்ப ஏன் அதை இதுக்குள்ள கொண்டுவாராய்...." "இல்லை இப்ப கொரானாவில் இறந்தவர்களில் 90% வயோதிபர்கள் தானே மாவோ சிந்தனையின் ஒரு வடிவமோ" "டேய் டேய்" மாமாவின் குரல் கொஞ்சம் உயர தொடங்கியது "என்ன சத்தம் அங்க‌ ,சாப்பாடு ரெடி வாங்கோ இரண்டு பேரும்" மாமியின் குரல் கேட்டவுடன் மனுசன் பெட்டி பாம்பாகிவிட்டார். இவரின்ட சத்தம் வீட்டுக்குள்ள தான் போல எண்ணிகொண்டிருக்கும் பொழுது "இஞ்சயப்பா மாமாவையும் கூட்டி க்கொண்டு வாங்கோ சாப்பிட இனி காணும்" உடனே கையிலிருந்த கிளாசை மேசையில் வைத்து விட்டு நானும் மாமாவை பின் தொடர்ந்தேன். மேசையில் சாப்பாடு தயாராக இருந்தது.மாமி சாப்பிடுவதற்காக கையை கழுவிக்கொண்டிருந்தார். "ஹலோ மாமி" என்றேன் எனது மனைவி என்னை பார்த்து முழுசினார்,வழ‌மையாக மாமியை அக்கா என அழைப்பேன் ,என்னை விடமூன்று வயது தான் அதிகம் ..மனைவிக்கு தெரியும் நான் உறவு சொல்லி அழைக்க தொடங்கி விட்டேன் என்றால் பாவனையின் எல்லைக்கு வந்திட்டார் என நினைத்து கிளாஸ் போத்தல் எல்லாம் மாயமாக மறைய தொடங்கிவிடும் அதுவும் அவர்களது உறவுகள் இருந்தார்கள் என்றால் எனது பாவனைக்கு பல வித தடைகள் போடப்படும். " "ஹலோ மாமி என்ன முதுகில புத்தர் இருக்கிறார் ,கவனம் சிறிலங்காவுக்கு போட்டுக்கொண்டு போய்விடாதையுங்கோ " "ஒன்லைனில ஒடர் கொடுத்து இந்தியாவிலிருந்து எடுப்பிச்சனான் அவன்கள் இப்படி தைச்சு போட்டாங்கள்" "ஏன்டா சிறிலங்காவுக்கு போட்டுகொண்டு போக ஏலாது புத்தர் அவங்கன்ட கட‌வுள்தானே" என மாமா கேட்டார் "கடவுளை கோவிலில்தான் வைக்கவேணுமாம் சீலையிலயும் ,பிளவுஸிலயும் வைக்கூடாதாம்" "இஞ்சயப்பா மாமி உடுத்திறக்கிற சீலையும் ஒன்லைனில் தான் ஒர்டர் பண்ணி எடுத்தவ வடிவா இருக்கு என்ன?" "நீரும் ஒவ்வோரு மாதமும் எடுக்கிறனீர்தானே" "ஒமப்பா ஆனால் மாமியின்ட கடையில் விதம்விதமா கன‌ செலக்சன் இருக்கு" "நாளைக்கு ஒடர் பண்ணி எடும்" "ஏன் நான் நாளைக்கு மட்டும் வெயிட் பண்ண வேணும் இப்பவே ஒன்லைனில போக வேண்டியான் மாமியும் நிற்கின்றா சூஸ் பண்ண இஸியாக இருக்கும்" மேசையில் சாப்பிட்டபடியே கதைத்துகொண்டிருந்தோம் . "என்ன மாமி இன்றைக்கு ஸ்டைலா எங்கன்ட வீட்டை வெளிகிட்டுக்கொண்டுவந்திருக்கிறீயள்" "இன்றைக்கு பேத்தியின்ட பேர்த்டெ " "நீங்கள் போகவில்லையா ? இங்க நிற்கீறியள்" "பின்னேரம் ஸ்கைப்பில கெக் வெட்டினவையள் அதுக்கு வெளிக்கிட்டனான் அப்படியே இரவு வெஸ்புக்கில் முருகனையும் பார்ப்போம் என்று தான் இருந்தனான் அதுக்குள்ள இவர் இங்க கூப்பிட்டு போட்டார் இங்க இருந்து முருகனை பார்ப்போம்" "வெஸ்புக்கில் முருகனை பார்க்க இவ்வளவு அலங்காரம் தேவையே மாமி" "நீங்கள் ஏன் மாமியை போட்டு அறுக்கிறீயள்" "சீ சீ நான் அறுக்கவில்லை சும்மா கேட்டனான்" "கண்ணா முருகனை வெஸ்புக்கில் பார்க்க வெளிக்கிட தேவையில்லை ஆனால் முருகனுக்கு ஸூமில் பஜனை பாடவேணும் அது தான் வெளிகிட்ட படியே நிற்கின்றேன்" "ஏன் நீ எனக்கு முதலே சொல்லவில்லை இரு நானும் வெஸ்டியை சுற்றி போட்டு வாரன் ,கண்ணா வெஸ்டி ஒன்று எடுத்து தாடா" மாமா உற்சாக வெளிக்கிட ஆயத்தமானார்,மாமி தன்னுடைய காளிமுகத்தை காட்ட தொடங்கிவிட்டார். "நான் சொல்லவில்லையோ? நேற்று காலம்பிற கத்திகத்தி சொன்னான் பஜனை ஸூமில் செய்யப்போகினம் என்று நான் சொல்லுறதை கேட்கிறதில்லை பிறகு சொல்லுறது நான் சொல்லவில்லை என்று இந்த மனுசனுக்கு இதே வேலயா போச்சு" " கண்ணா நீ வெஸ்டியை எடு" " தண்ணியை அடிச்சு போட்டு சாமிக்கு பஜனை பாடப்போறீங்களோ?" "தண்ணி அடிச்சு போட்டு கோவிலுக்கு தான் போககூடாது சூமில் பஜனை பாடலாம் தானே என்ன கண்ணா?" "கண்ணா வேஸ்டியை கொடுக்காதே வயசு போக போக உந்த மனுசன் சொல்வழி கேட்கிதில்லை" "இரண்டும் பேரும் உங்கன்ட செல்ல சண்டக்குள்ள என்னை இழுக்காதையுங்கோ" "நான் பஜனை பாடஇல்லை நீங்களே பாடுங்கோ" என்று கதிரையை விட்டு வெகமாக எழுந்து போய் கொண்டுவந்திருந்த பூக்கள் நிரம்பிய தட்டை எடுத்து மாமாவிடம் கொடுத்து "இந்தாங்கோ முருகனை காட்டும் பொழுது இதை கொம்பூயுட்டருக்கு முன்னால‌ வையுங்கோ நான் வீட்டை போறன்" "லட்சு ,லட்சு கோபபடாதை நீ பஜனை பாடு நான் சும்மா சொன்னான்" ஒரு சில வினாடிகள் மெளனமாக இருந்த மாமி மீண்டும் சுதாகரித்துக் கொண்டு "கோவில்காரர் சூம் லிங் அனுப்பியிருக்கினமா என்று பார்" "இருங்கோ பார்த்து சொல்லுறன் " பார்த்துவிட்டு சொன்னாள் அனுப்பியிருக்கினம் இன்னும் பத்து நிமிசத்தில தொடங்கப்போயினம். "அடுத்த வெள்ளிக்கிழமை நீங்கள் பஜனை படுங்கோ நான் கோவில்காரரிடம் கதைச்சு வைக்கிறன் ஆனால் இவன் கண்ணனின்டவீட்டை வந்து கூத்தடிக்கிறதில்லை" சொல்லியபடியே மாமியும்,சுதாவும் கொம்பியூட்டர் மேசைக்கு போனார்கள். " என்ன மாமா மாமி இப்படிசொல்லுறா" "இந்த முப்பது வருசத்தில உப்படி எத்தனையை கண்டிட்டன்" "அது சரி அண்ணே உந்த ஒன்லைனில சாமி கூம்பிடுறதை பற்றி என்ன நினைக்கிறீயள்" "நான் கடவுளோட சேட்டை விடமாட்டேன்,நீ என்ன நினைக்கிறாய்" "இன்லைனில் கடவுளை வைக்க வேண்டிய சனம் ஒன்லைனில் வைச்சு கூத்தடிக்குதுகள்" "அதேன்ன இன்லைன்" "உள்ளக் கமலத்தில்"
 7. 10 points
  அநேகமாக புலம்பெயர்ந்து வாழும் பலருக்குள் இருக்கும் அவா. எங்களுடைய சந்ததியைத் தொடராத வேர்மடிக்கு ஏங்கும் வாழ்வு. எங்களில் பலருக்கு அவர்கள் விருப்புகள் பூர்த்தியடையாமலே விடுபடப்போகும் விதியாக அமைந்துவிட்டது தாய்நாட்டுவாழ்வு. விடாப்பிடியாக சிலருக்கு கடின வாழ்வில் அமைதியைத் தேடுவதும் கிடைக்கத்தான் செய்கிறது. நீண்ட காலமாக யாழ் இணையத்தில் இதுபற்றி பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். நேற்றைய காலத்தில் நாங்கள் தீர்மானித்த எதிர்காலத்திற்கு எதிர்ப்பக்கமாகவே காலம் உருண்டோடிக்கொண்டிருக்கிறது. சென்றடைய வேண்டிய இடத்தை அடையாமல் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்குள்ளேயே தேங்கவேண்டிய கட்டாயத்தால் பல புலம்பெயர்ந்தவர்கள் பின்வாங்கி தாயகம் சென்று வாழ்தல் பற்றியே பேசும் சக்தியற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையை எதிர் கொண்டும் ஊரில் வீடுகட்ட எத்தனிக்கும் சுமேயை பாராட்டாமல் நகர முடியவில்லை. வீடுகட்டுதல் என்பது அங்கு வாழாதபோது இலகுவானதல்ல. புலம்பெர்ந்த நாடுகளில் ஒவ்வொருவரும் வாழ்வைத் தொலைத்துத்தான் வளத்தை எடுக்கிறார்கள். முதுமை கோடிட்டபின்னர் இழந்த வாழ்வை எண்ணி ஏங்குவது அனைவருக்கும் பொருந்தும். இங்குதான் நமக்கான என்ற தேடல் தொடங்குகிறோம். இருக்கும் சொற்ப வளத்தைக் கொண்டு முதுமையை செதுக்க எத்தனிக்கிறோம். பல சந்தர்ப்பங்களில் ஏமாற்றமே பலருக்கும் மிஞ்சிவிடுகிறது. துணிந்து பெருங்காரியங்களில் இறங்க முடியாமை. மற்றவர்களில் தங்கியிருக்கும் நிலமை என நிலை மாறிவிடுகிறது. ஒரு விடயம் செய்ய எண்ணினாலும் சூழல் சாதகமாக அமைவதில்லை. இன்னும் சிறிது காலத்தில் சுமேயும் அந்நிலைக்குள் அகப்பட்டுவிடுவார். அதற்குப்பின்னர் சுமேயால் தன் சுய எண்ணங்களை ஈடேற்றுவது கடினம். இப்போது சுமேயால் முடியும். மேலே பல நண்பர்கள் நன்றையும் தீதையும் தத்தம் அநுபவங்களையும் எழுதி உள்ளார்கள். உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதன்வழி செல்லுங்கள். மனம் கொண்டதே மாளிகை. கடினவாழ்வு கண்டு அமைதி கிடைப்பது வரம். நாளை என்னுடைய பேரப்பிள்ளைகள் வேர்மடி தேடும்போது வெறுமையாகிவிடக்கூடாது என்பதற்காக நிலவேறிய கிழக்கு வான் என்வீட்டு மொடடைமாடியில் இருந்து அந்திசாயும் தெற்கு முகம் சூரியன் விடைபெறும் மேற்கு எல்லை
 8. 8 points
  5 க்கு 4.62 புள்ளிகள் பெற்று 100% சிறப்பான பேராசிரியர் என்று மாணவர்களால் புகழப்படும் கள உறுப்பினர் நில்மினிக்கு வாழ்த்துகள். பின்வரும் இணைப்பை பாருங்கள்: https://www.ratemyprofessors.com/ShowRatings.jsp?tid=2248908#ratingsList
 9. 7 points
  எனக்கு நீண்டநாட்களாக ஒரு ஆசை அடிமனதில் இருந்துகொண்டே இருக்கிறது. ஒரு பெரிய வளவு மொட்டை மாடியுடன் காற்றோட்டமாகக் கட்டப்பட்ட சிறிய வீடு. இயற்கையாக சுற்றிவர மரங்களும் செடிகளும். ஆண்டு முழுதும் குளிரற்ற காலநிலை. ........ ஒரு ஓட்டோ போதும் எங்கும் போய்வர. நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருந்தாலும் .... பென்ஷன் எடுத்தபிறகு எங்கட ஊரில போய் இருப்பம் என்று மனிசன் சொல்லுறார். இனிமேல் 68 இல் தான் பென்ஷன் என்று ஐரோப்பாவில் சட்டம். அதுக்குப் பிறகு அங்கு போய் என்ன செய்வது ??? போவதானால் உடலில் தெம்பு உள்ளபோதே போகவேண்டும். பென்ஷன் எடுத்த பிறகு என்றால் ஏதும் நோய் நொடி வந்துவிட்டால் எம் நாட்டில் செலவு அதிகமாக வருமே ........ ஏதாவது ஐடியா தாங்கோ யாழ் உறவுகளே!
 10. 7 points
 11. 7 points
 12. 7 points
  புலம்பெயர் தமிழர்கள் குடும்பத்துக்கு ஒரு வீடாவது தங்கள் தங்கள் ஊரில் கட்ட வேண்டும்.இல்லையேல் இருக்கும் வீடுகளையாவது புனரமைத்து பரமாரிக்க வேண்டும். எமது சந்ததிகளுக்கு சொந்த இருப்பிடம் ஒன்று நிச்சயம் வேண்டும்.இவர்கள் இங்கு பிறந்து வளர்ந்தாலும் இலங்கை எமது பூர்வீகம் என்று சொல்லாமல் எமது மண் என்று என்று சொல்ல வைக்க வேண்டும். நாளைய பொழுதும் உலகமும் எப்படி மாறுமென்று யாருக்கும் தெரியாது.
 13. 7 points
  நான் வடிவோ வடிவில்லையோ என்று உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை. நேற்றிரவு நான் எனது படமொன்றை Facebook இல் போட்டுவிட்டுப் படுத்து விட்டேன். இன்று காலையில் எழுந்து பார்த்த போது அந்தப் படத்துக்கு முந்நூறுக்கு மேல் லைக்ஸ். நூறுக்கு மேல் கொமென்ற்ஸ். உள் பெட்டியில் ஊருப்பட்ட செய்திகள். 'வடிவு, நீங்கள் நல்ல வடிவு' 'உங்களோடை கதைக்கோணும். போன் நம்பரைத் தாங்கோ' 'உங்களுக்கு ஒண்டு சொன்னால் கோவிப்பிங்களோ? நீங்கள் நல்ல வடிவு' 'உங்கடை வடிவாம்பிகை என்ற பெயரைப் போலயே நீங்கள் வடிவா இருக்கிறிங்கள்' 'மடம், பிளீஸ் போன் நம்பர் தாங்கோ' 'அக்கா, ஐ லவ் யூ" இப்படித்தான் அந்தச் செய்திகள் என்னை மயக்கும் எண்ணத்தில் எழுதப் பட்டிருந்தன. நான் Teenage இல் இருந்திருந்தால் அப்படியே பாசியில் வழுக்கி விழுவது போல வழுக்கி விழுந்து பிடரியை உடைத்திருப்பேன். நல்ல வேளையாக அதை எப்போதோ கடந்திருந்தேன். சிலர் நல்ல அழகான கவிதைகள் கூட எழுதியிருந்தார்கள். இன்னும் சிலர் நான் முதலே வாசித்த வேறு யாருடையதோ கவிதைகளை தங்களது கவிதைகள் போல எழுதியிருந்தார்கள். எல்லாம் என் வடிவையும் அதனால் அவர்களுக்கு என் மேல் எழுந்த காதலையும் வைத்துத்தான். அதுதான் எனக்குக் குழப்பமாக இருந்தது. வீட்டில் சண்டை வருகிற பொழுதெல்லாம் வடிவில்லாத என்னை தனது தலையில் கட்டி விட்டதற்காகவும் எனக்கு `வடிவாம்பிகை´ என்ற பெயர் வைத்ததற்காகவும் எனது கணவர், ஊரிலிருக்கும் எனது அம்மாவைத் தாறுமாறாகத் திட்டித் தீர்ப்பார். 'உன்ரை மூஞ்சைக்கும் முகரக்கட்டைக்கும் இந்தப் பெயரொன்றுதான் குறை" என்றும் சொல்லிக் கத்துவார். உண்மையில் எனக்கு வடிவாம்பிகை என்று பெயர் வைத்தது அம்மா இல்லை. அம்மாச்சிதான் நான் பிறந்த உடனேயே எனது வடிவைப் பார்த்து விட்டு `வடிவாம்பிகை´ என்ற பெயர் வைத்தாவாம். நான் இதைக் கனதரம் எனது கணவருக்குச் சொல்லி விட்டேன். ஆனாலும் மறந்து போனது மாதிரித் திரும்பத் திரும்ப அம்மாவைத் திட்டிக் கொட்டிக் கொண்டிருப்பார். நான் நினைப்பூட்டினால் 'காகத்துக்கும் தன்ரை குஞ்சைப் பார்த்தால் வடிவாத்தான் தெரியும்' என்று சொல்லி, கெக்கட்டம் விட்டுச் சிரிப்பார். அது மட்டுமே? வேறு பெண்களிடம் அவர் அசடு வழிகிற பொழுதெல்லாம் நான் கேட்டால் 'நீ வடிவா இருந்தால் நான் ஏன் வேறையாரையும் பார்க்கப் போறன்?' என்பார். நான் ஓடிப்போய் நான் வடிவோ அல்லது இவர் சொல்லுறது மாதிரி உண்மையிலேயே வடிவில்லையோ என்று கண்ணாடியில் பார்த்தேன். அந்த நேரம் பார்த்துத்தான் அந்த அழைப்பு வந்தது. யாரோ Facebook மெசஞ்சரின் ஊடாகத்தான் அழைக்கிறார்கள் என்பதைச் சத்தத்தின் மூலம் உணர்ந்து கொண்டேன். சாதாரணமாக நான் மெசஞ்சர் அழைப்பென்றால் பேசாமல் விட்டு விடுவேன். ஆனாலும் ஓடி வந்து யாரென்று பார்த்தேன். நம்பவே முடியவில்லை. டொக்டர் சுதர்சனின் அழைப்பு அது. டொக்டர் சுதர்சனை உங்களுக்கும் எப்பிடியும் தெரிஞ்சிருக்கும். சரியான நல்ல மனுசன். முள்ளிவாய்க்கால் பிரச்சனை நடக்கிற போது சுவிசிலிருந்து அங்கேயே போய் நின்று பாதிக்கப்பட்ட சனங்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்தவர். யாருக்குத்தான் அப்படியொரு துணிச்சலும், சேவை மனப்பான்மையும் வரும். அதுவும் அந்தப் போர் நேரம், உயிரைப் பணயம் வைத்து அங்கேயே நின்று... எனக்கு பயங்கர ஆச்சரியமாக இருந்தது. அவர் ஏன் எனக்குப் போன் பண்ணுகிறார்? இரண்டு கிழமைகளுக்கு முன்னர்தான் என்னோடு Facebook இல் நட்பானவர். அவரின் நட்புக்கான அழைப்பு வந்த உடனேயே கொஞ்சமும் யோசிக்காமால் நான் accept பண்ணி விட்டேன். இப்படியான ஒரு ஆளோடு நட்பாயிருப்பது எவ்வளவு பெரிய விசயம். பெருமையும் கூட. அவரது சேவையைப் பாராட்டி அவருக்கு விருது கூடக் கொடுத்திருக்கிறார்கள். நான் தயக்கமில்லாமல் தொலைபேசியை எடுத்து „வணக்கம்“ என்றேன். அங்கிருந்தும் „வணக்கம்“ வந்தது „நீங்கள் டொக்டர் சுதர்சன் தானே?“ „ஓமோம், அவரேதான்“ „உங்கடை சேவையளைப் பற்றியெல்லாம் அறிஞ்சிருக்கிறன். உண்மையிலேயே நீங்கள் பெரிய ஆள். உங்கடை நல்ல மனசை எப்பிடிப் பாராட்டிறதென்றே எனக்குத் தெரியேல்லை“ அவர் பதிலுக்குச் சிரித்தார். „எனக்கு உங்களோடை கதைக்கக் கிடைச்சது பெரிய சந்தோசமா இருக்கு. அது சரி, ஏன் என்னைத் தேடி போன் பண்ணினனீங்கள்?“ „நான் அங்கை உங்களிட்டை வரோணும். உங்களிட்டைத் தங்கோணும்“ „ஏன் இங்கையும் ஆருக்கும் ஏதும் உதவி செய்யப் போறிங்களோ?“ „ம்.. ம்.. அங்கை வந்திருந்துதான் ஆருக்காவது உதவி வேணுமோ எண்டு பார்க்கோணும்“ எனக்கு உடனடியாக ஒன்றுமே விளங்கவில்லை. யாருக்காவது உதவி தேவைப்படும் பட்சத்தில் அதற்காக வரும் ஒருவர் தங்குவதற்கு இடம் தேடுவது உண்டு. இது இங்கு வந்து தங்குவதற்காக யாருக்காவது உதவி செய்யத் தேடுவது... குழம்பினேன். எனது குழப்பம் அவருக்குப் புரிந்திருக்க வேண்டும். இப்போது தெளிவாகச் சொன்னார் „உங்களோடு தங்க வேண்டும்“ எனக்கு எதுவோ புரிந்தது. „ஓ... அது சாத்தியப்படாது. என்ரை வீட்டிலை தங்கிறதுக்கான எந்தச் சாத்தியங்களும் இல்லை“ „ஏன்.. ஏன்?“ அதிர்ச்சியோடு கேட்டார். „எனக்குக் குடும்பம் இருக்குது. கணவர் இருக்கிறார்“ „அதிலையென்ன? அவர் நாள் முழுக்க வீட்டிலையோ இருக்கப் போறார். வேலைக்கும் போவார்தானே“ „இல்லை, அது ஒரு போதும் சாத்தியப்படாது“ „ஏன் அப்பிடிச் சொல்லுறிங்கள். நினைச்சால் எதையும் சாத்தியப்படுத்தலாம்“ நான் ஆகாயத்துக்கு மேலால் உயரமாகத் தூக்கி வைத்திருந்த டொக்டர் சுதர்சனை வெடுக்கெனக் கீழே போட்டு விட்டேன். இந்தப் பூனையுமா? மனசு ஒருவித ஏமாற்றத்தில் வெட்கித்துக் கூசியது. „உங்களுக்கு எத்தினை வயசு?“ கேட்டேன் நான் அப்படிக் கேட்டதும், வளைகிறேன் என நினைத்தாரோ? மிகுந்த உற்சாகமாக தனது வயதைச் சொன்னார். „என்ரை மகனுக்கு உங்களை விட இரண்டு வயசு கூட. அது தெரியுமோ உங்களுக்கு?“ „அப்ப Facebookஇலை நீங்கள் போட்டிருக்கிற படத்திலை சரியான இளமையா இருக்கிறீங்கள்? வடிவாயும் இருக்கிறீங்கள்“ „அந்தப் போட்டோவைப் பார்த்திட்டோ இப்ப போன் பண்ணினனீங்கள்?“ „அதுவும் தான்… உங்கடை மற்றப் படங்களையும் பார்த்தனான்“ இழுத்தார். „போட்டோவை மட்டும் பார்த்திட்டு நான் வடிவு, இளமையெண்டெல்லாம் எப்பிடி நினைச்சனிங்கள்? நான் நேற்றுப் போட்டது பத்து வருசத்துக்கு முந்தி எடுத்த போட்டோ. மற்றது அதிலை பார்த்தால், நல்லா லைற் விழுந்து என்னை நல்ல வெள்ளை மாதிரிக் காட்டுது. ஆனால் நான் அந்தளவு வெள்ளையில்லை“ இப்போது அவரது கதைகளின் சுரம் குறைந்து கொண்டு போனது. ஆனாலும் நம்ப முடியாதவராய் சில கேள்விகள் கேட்டார். „நான் உங்கடை அம்மான்ரை வயசை ஒத்திருப்பன். சில வேளையிலை அதையும் விட அதிகமாகவும் இருப்பன்“ என்றேன். அவர் தடுமாறுவது வார்த்தைகளில் தெரிந்தது. „நீங்கள் இன்னும் கலியாணம் கட்டேல்லையோ?“ கேட்டேன். „கட்டீட்டன்“ „குழந்தையள்..?“ „இரண்டு பேர். இரண்டும் பொம்பிளைப் பிள்ளையள்“ „அப்ப ஏன் எனக்கு போன் பண்ணினனிங்கள்?“ „நீங்கள் வடிவு...“ இழுத்தார் „உங்கடை பெஞ்சாதி Facebookஇலை இருக்கிறாவோ?“ „ஓம்“ ஐடி சொன்னார். பார்த்தேன் . Facebook இல், புகைப்படத்தில் அந்த மனைவி மிக அழகாகச் சிரித்துக் கொண்டிருந்தார். மனைவியை அணைத்த படி டொக்டர் இருந்தார். கூடவே தேவதைகள் போல் இரு பெண் குழந்தைகள். 'ஐயோ இப்பிடி வடிவா இருக்கிறாவே! அவவையும் பிள்ளையளையும் அங்கை தனிய விட்டிட்டு சுவிசிலையிருந்து இங்கை அமெரிக்காவுக்கு இவ்வளவு தூரம் வரப் போறிங்களோ? அதுவும் ஆரெண்டே தெரியாத என்னட்டை…“ „ஹி.. ஹி.. ஹி..“ அதன் பிறகு 'நான் வடிவோ இல்லையோ?' என்ற கேள்வியோ, ஆயிரத்தெட்டுத்தரம் கண்ணாடியைப் பார்க்கும் எண்ணமோ எனக்குள் வரவில்லை. `இப்படியானவர்களின் மனசைப் பார்ப்பதற்குக் கண்ணாடி ஒன்றிருந்தால் நல்லாயிருக்கும்´ என்ற எண்ணம்தான் வந்து கொண்டேயிருக்கிறது. குழலி 30.04.2020
 14. 7 points
  போராட்டம் என்பது தொடஎச்சியான செயற்பாடு. இலக்கை அடையும்வரை போராட்ட முறைகள் மாறலாம், மாற்றமடையும். அதனைத் தனியே பிரித்து தந்தை செல்வா காலத்துப் போராட்டம், பிரபாகரன் காலத்துப் போராட்டம் என்று பிரிக்க முடியாது. அவ்வாறு பிரித்துப் பார்த்தால் சாத்வீகப் போராட்டத்திலும் எந்த ஒன்றையும் நாங்கள் பெற்றுக் கொள்ளவில்லை பிரபாகரன் காலத்திலும் ஒன்றையும் பெற்றுக் கொள்ளவில்லை என்றாகிவிடும். போராட்டமும் முடிந்துபோயிற்று என்றும் பொருள்படும் ஆகவே 1) ஆயுதப் போராட்டத்தால் எதனைப் பெற்றுக் கொண்டோம் என்பது பொருளற்ற கேள்வி. 2) போராடியவர்கள் வடக்கு - கிழக்கில் குடியிருந்த தமிழர். போராட்டத்தால் சாதித்தோமா இல்லையா என்பதை அவர்கள்தான் கூறமுடியுமே தவிர சுமந்திரனல்ல. நீங்கள் கேட்கலாம் சுமந்திரன் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்தானே. ஏன் அவர் கதைக்க முடியாதா என்று ? உண்மை. அவர் தெரிவு செய்யப்பட்ட (எந்த முறையிலென்றாலும்) பிரதிநிதிதான். ஆனால் இன்றுவரை அவர் வடக்கு-கிழக்கு மக்களின் மனநிலை அறிந்து அதனைப் பிரதிபலித்திருந்தாரென்றால் நீங்கள் கூறுவது சரியானதாக இருக்கும். ஆனால் அவர் அவ்வாறு பிரதிபலித்ததாக எனக்கு நினைவிலில்லை. எனவே எங்கள் போராட்டத்தை தீர்ப்பிடுவதற்கான தகுதி அவருக்கிலை என்பது என் கருத்து. அவர் இலங்கைப் நாடாளுமன்றில் சத்தியப் பிரமாணம் எடுத்தவர் என்கின்ற வகையில் அவர் பிரிவினையை வெளிப்படையாக ஆதரிக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் ஆகக் குறைந்த அளவிலாவது, மனச்சாட்சி உள்ள மனிதராக, அவர் சிந்தப்பட்ட இரத்தத்தைக் கொச்சைப் படுத்தாமலாவது இருக்கலாம். அந்தப் பக்குவம் அவருக்கில்லையெனில் அவரால் எங்களுக்கு ஆகப்போவது ஏதுமில்லை.
 15. 7 points
  அன்பு நண்பர்களே ஏற்கனவே குறிப்பிட்டது போல , கடந்த மாதம் முதல் எனது நண்பன் மற்றும் அவருடன் பணியாற்றும் பணியாளர்களை உள்ளடக்கிய தன்னார்வ குழுவுடன் இணைந்து வெற்றிகரமாக உலர் உணவுப்பொதிகளை விநியோகித்து வருகிறோம், இவர்கள் அனைவரும் நீர்ப்பாசனத்துறையை சார்ந்தவர்கள் ,இவர்களுடன் நீர்ப்பாசனத்துறை பொறியாளரும் எங்களுக்கு முற்றுமுழுதான ஆதரவையும் உதவியையும் அனுசரணையையும் வழங்குகின்றார் , இவர்களின் நல் மனதால் எங்களுக்கு ஊரடங்கிட்கு நடுவிலும் முழு வீச்சுடன் பொதிகளை விநியோகம் செய்ய முடிகிறது. எங்களது செயற்பாடு தொடர்பான சில புகைப்படங்களை கீழே இணைத்துள்ளேன், மேலதிக செயற்பாடுகளும் தொடர்ந்து இங்கே இணைக்கப்படும். ஏற்கனவே யாழ் கள உறவுகள் இருவர் அவர்களது ஆதரவு கரத்தை எமக்கு நீட்டியுள்ளனர் (நிழலி மற்றும் உடையார் ) இவற்றில் உடையாரின் பணஉதவி ஏற்கனவே கிடைக்கப்பட்டு குழுவிற்கு பரிமாற்றப்பட்டுவிட்டது. இந்த உறவுகளுக்கு பயனாளிகள் சார்பிலும் குழுவின் சார்பிலும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். எங்களது குழு பொதி விநியோகிப்பின் போது இவை நான் தத்தெடுத்திருக்கும் இருபது குடும்பங்களுக்கான பொதிகள் வெற்றிகரமாக இரண்டாவது மாத விநியோகமும் நடந்து முடிந்து விட்டது
 16. 6 points
 17. 6 points
 18. 6 points
  இந்த திரி முடிஞ்சிட்டுதா இந்த திரியை வாசித்தலில் புரிந்தது; எங்கட சனத்திற்கு உசுப்பேற்ற யாரும் இருந்து கொண்டேயிருக்கோணும். விசிலடித்தான் குஞ்சுகளாகவேயிருந்து பழகிட்டோம். இணையவனும், நுணாவும் சீமானிற்கு சப்போட் நிழலி இல்லை மோகன்
 19. 6 points
  நீங்கள் கூறுவது உண்மைதான் துல்பன். ஆனால், எமது சகோதரர்களை பயங்கரவாதி என்றும் இழிவானவர்கள் என்றும் கூறும்போது கை கட்டி வேடிக்கை பார்க்கச் சொல்கிறீர்களா ? நயவஞ்சகமாக வென்றவர்கள் சொல்வதையெல்லாம் சத்தமின்றி வேடிக்கை பார்க்க முடியாதுதானே. அதனால் எமது சகோதரர்களது வீரத்தைச் சொல்வது பிழையன்று.
 20. 6 points
  உங்கள் கருத்துடன் உடன் பட முடியவில்லை. இந்திய அரசும், அதன் ராணுவமும் எமது இளைஞர்களை உசுப்பேத்தி ஆயுதம் கொடுத்து, முள்ளிவாய்க்கால் அழிவு வரை கொண்டு வந்து விட்டது. அந்த நிலைமைக்கு காரணமானவர்களில், கருணாநிதியும் ஒருவர் என்று எமக்கு தெரியும். அதே நாட்டின் ஒருவர், குற்ற உணர்வில் எதுவும் பேசினால், அவர்கள் எம்மை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்று போட்டு தாக்குவது. செய்தார்கள், வைகோவும், திருமாவும், திருமுருகனும். ஏன் லண்டன் தமிழர்கள், பாலுவையும், ஸ்டாலினையும் கூட லண்டன் அழைத்து உபசரித்து பேசினார்கள். நம்புவர்கள் நம்பி விட்டு போகட்டும்.... நம்பாதவர்கள் நம்பாமல் போகட்டும்... அது அவரவர் உரிமை. அதுக்காக, உங்கள் விருப்பு, வெறுப்புகளை அடுத்தவர்கள் மீது திணிக்க வேண்டாமே. ஒரு கோஸ்ட்டி, கூட்டமைப்பினை சாடுகின்றது. இன்னோரு கோஸ்ட்டி கஜேந்திரகுமார் பின்னால் நிக்கும். மேலும் ஒரு கோஸ்ட்டி டக்லஸ் தான் பிதாமகன் என்று சொல்லும். கருணாவை விரும்பும் கோஸ்ட்டியோ, அவர் மூலமாக மகிந்தவை வளைத்து அலுவல் பார்க்கலாமே என்று சொல்லும். இன்னும் ஒரு கோஸ்ட்டியோ, சர்வதேசத்தினை நம்புவோம் என்று சொல்லும். அது அவரவர் விருப்பு வெறுப்பு. அனைவைரையும் நமது விருப்பு வெறுப்புக்குள் கொண்டுவரும் வேலை, ஒன்றுக்கும் பிரயோசனமில்லாத வேலை. கிருபனுக்கும், நந்தனுக்கும், உங்களுக்கும் பிடிக்கவில்லை. பையனுக்கு, நெடுகருக்கு, இசைக்கு, ஈழப்பிரியருக்கு, குமாரசாமியாருக்கு பிடிக்கிறது. ஆனால், வேண்டுமென்றே, பதிவினை போட்டு, அடுத்தவர்கள் பைத்தியக்காரர்கள், நாம் விண்ணாதி விண்ணர்கள் என்று காட்டிக்கொள்வதில் ஏதோ பெருமை. ஏதோ மனதில் தோன்றியதை எழுதினேன். யாரும் தொப்பியை எடுத்துக் கொள்ள வேண்டாம்.
 21. 6 points
  ஊரில் காணிபூமி வாங்கியோ இருக்கிற வீட்டையோ யாராவது புதிதாக்கி போயிருக்க அவர்களுக்கு ஆதரவாக இருங்கள்.எல்லாவற்றுக்குள்ளும் தமிழ்தேசியத்தை புகுத்தி கோவணத்தோடு தமிழனை அலைய விடாதீர்கள். வெளிநாடுகளில் பிறந்த பிள்ளைகள் அனேகமாக கோடை விடுமுறைக்கு போகிறார்கள் ஊர் சுற்றி பார்க்கிறார்கள்.பகலில் மாத்திரமல்ல இரவில் கூட நித்திரை கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.ஒரு பக்கம் வெக்கை மறு பக்கம் நுளம்பு.இதற்காகவே பலபேர் இரவுகளில் விடுதிகளில் போய் தங்குகிறார்கள். 75-80 லட்சம் செலவு செய்து வீடு கட்டும் போது ஓரிரு லட்சம் செலவு செய்து குளிரூட்டி போடுவது தவறல்ல. யாராவது வீடு கட்டிப் போகிறேன் திருத்தப் போகிறேன் என்றால் ஓரிரு அறைகளுக்காவது குளிரூட்டியை போடுங்கள்.அத்தோடு இன்னுமொரு 2 லட்சம் செலவு செய்து கமராவும் போடுங்கள்.அரசு மக்களை பாதுகாப்பது போல தெரியவில்லை.சிறிய பாதுகாப்பாவது எங்களுக்கு இருக்கட்டும். தமிழ்தேசியத்தை கதைப்பதற்கு சந்தோசம்.உங்க பெயரே சொல்ல கஸ்டமாக உள்ளது.தமிழில் ஒரு பெயரை வைக்க முயற்சி பண்ணுங்கள். நன்றி.
 22. 6 points
  வாலி உங்கள் மூலப்பதிவு யாழ்களத்தில் இப்போதும் உள்ளது. இணைப்பு .யாழ் களத்தின் பதிவுகள் அனைத்தும் 2 வருடத்திற்கு மேல் பதில்கள் எதுவும் வைக்கப்படாது விட்டால் archive செய்யப்பட்டுவிடும். களத்தின் வேகத்தினை அதிகப்படுத்தவே இச்செயற்பாடு இங்கு உள்ளது. அவ்வாறான பதிவுகளுக்கு பதில்கள் வைக்கமுடியாதே தவிர அவை எப்போதும் பார்வைக்கு இருக்கும். அவ்வாறான பதிவுகளில் பதிவுகள் வைக்க விரும்பினால் அதனை மட்டுறுத்துனர் archive பகுதியில் இருந்து மீள பதிலளிக்கும் நிலைக்கு கொண்டுவரவும் முடியும். இதை நீங்கள் எழுதியபின் உங்களிடம் நான் தொடர்பு கொண்டு சில மாற்றங்களுடன் பாவிக்க அனுமதி கேட்டு உங்கள் அனுமதியுடன் தான் 2010 ம் ஆண்டில் இருந்து இந்த வரிகள் இங்கு பாவிக்கப்படுகின்றது.
 23. 6 points
  அப்பாடா கடைசியாக ரோஸ்ட் பாணும் நீர்வேலியானின் புண்ணியத்தில் செய்தாச்சு. ஆனா நீர்வேலியானுடன் கொலை வெறியில் இருக்கிறேன். மகன் வந்து பார்த்துவிட்டு நல்ல மனவருகின்றது நாளைக்கு பாடசாலைக்கு கொண்டு போக செய்து தாருங்கள் என்றார். குமாரசாமி சொன்னது போல் கொஞ்சம் தேங்காய் எண்ணையை தூக்கலாக சேர்ந்தேன். சிங்கள அன்ரியின் விடீயோவில் உள்ளது போல் மாவும் தேங்காய் எண்ணையும் கலந்த பசையை பக்கங்களுக்கு பூசிவிட Crispy யாக வந்திச்சு. ஆனா பாண்களுக்கு இடையில் பேப்பர்கள் வைத்தேன் தமிழ் அன்ரி செய்தது போல். 30 நிமிடங்களிலுக்கு 200 பாகையில் தான் வைத்தேன், பின் எடுத்து 180 பகையில் பிரட்டி 15-20 நிமிடங்களில் எடுத்தேன்
 24. 5 points
  Salmon and broccolini சமையற்கட்டில் அதிகம் நேரம் செலவழிக்க விரும்பாதவர்களுக்கும்.. அதிகளவில், வகைவகையான உணவு செய்ய தேவையில்லாதவர்களுக்கும் ஒரு இலகுவான உணவு, அதே நேரம் சத்தான ஒரு உணவு. தேவையான பொருட்கள் Salmon மீன் - ஒரு சிறிய துண்டு Broccolini - ஒரு கட்டு Thickened cream - 300ml மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு, மிளகு ருசிக்கேற்ப உங்களது வீட்டிலிருக்கும் மசாலா தூள், அல்லது herbs mix அல்லது கறிதூள் இவைகளில் ஏதாவது ஒன்று, சிறிதளவு ஒலிவ் எண்ணெய், உப்பு, இவை மூன்றையும் கலந்து மீன் துண்டை பிரட்டி ஒரு மணித்தியாலம் ஊற வைக்கவும்.. பின்பு non stick fry panல் மீனை இரு பக்கமும் மாற்றிமாற்றி வைத்து சமைக்கவும்.. மீனின் தோல் கருகுமட்டும் அடுப்பில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.. மீன் அளவாக வெந்திருந்தாலே போதும்.. அடுத்து, broccolini கழுவி, தண்ணீர் வடிந்தபின், பாத்திரம் ஒன்றில் சிறிதளவு பட்டர்( விருப்பமென்றால்) சேர்த்து பச்சை நிறம் அதிகம் மாறும் முன்பு வேகவைத்து எடுத்து வைக்கவும்..உப்பு, மிளகுதூள் விரும்பினால் சிறிதளவு தூவி விடலாம் அதே பாத்திரத்திலேயே, இந்த thickened creamஐ ஊற்றி, விரும்பினால் அதற்குள் சிறிதளவு மஞ்சள், அல்லது கரம் மசாலா சேர்த்து, ஒரு தரம் கொதிக்கவைத்தபின்பு இறக்கிவைக்கவும்..இது ஒரு வகை creamy sauce உங்களுக்கு thick sauce விருப்பமில்லையென்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்தால் sauce thickஆக இருக்காது.. பின்பு ஒரு bowlல் சமைத்த மீன் துண்டு, வேகவைத்த broccolini அருகருகே வைத்து இந்த creamy sauce அவற்றின் மேல் ஊற்றியபின்பு சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்..தேவையென்றால் உப்பு மிளகுதூளை சேர்க்கலாம்.. மீனை ovenல் bakeபண்ணலாம்.. broccoliniற்கு பதிலாக asparagusஐ சேர்க்கலாம்..மசாலா, காரம் அவரவர் ருசிக்கேற்ப.. மிகவும் இலகுவான செய்முறை..
 25. 5 points
  படிப்பிக்கிறார்கள்! ஆனால், பெற்றோர்கள் வழிநடத்தலில் அதை மாணவர்களும் கூடுதல் கவனத்துடன் படித்தால் எதிரியை கையாளுவது இலகுவாக இருக்கும்.
 26. 5 points
  இன்றைய காலை ஸ்பெசல்.
 27. 5 points
  உண்மையாக மதங்களைக் கடைப்பிடிப்போர் மற்றைய மதங்களை நிந்தனை செய்வதில்லை. மதங்கள் மனிதர்களால் அதிகாரங்களைக் கைப்பற்ற ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது. அது அமெரிக்கா முதல் ஆரியகுளம் வரை ஒன்றே. இந்த உலகு முதலில் கடந்து செல்ல வேண்டியது மதவாதிகளையே. அன்றுதான் உலகில் அமைதியும் சமத்துவமும் தானாகத் தோன்றும். தன்தன் மதத்தை புனிதமெனக் கொண்டாடுவது போல் அடுத்தவர் மதத்தைக் கொண்டாட வேண்டாம். நிந்தனை செய்யாதிருந்தாலே உலகில் பாதிப் போர்கள் நின்றுவிடும். ஆனால் அதனைத் தடுப்பதிலும் தூண்டிவிடுவதிலும் ஆயுத தளபாட விற்பனையாளர்கள் திறம்படச் செயலாற்றி வெற்றிபெற்றே வருகின்றார்கள். கொரோனா ஒரு புதிய உலகைத் தேடும் சூழலைத் தந்தபோதும் உலகால் மாறமுடியவில்லை என்பதை உலகப் பெருநாடுகளின் நிகழ்கால உரையாடல்களும் நகர்வுகளும் சுட்டுகின்றன. ஆயிரம்போர்களும் கோடிக்கனக்கான மக்களின் அழிவுகள் சூழந்தாலும் சுரண்டாலிதிக்க சக்திகள் என்றும் மாறப்போவதில்லை. இதில் மதவாதிகள் இருந்துகொண்டேயிருப்பார்கள் என்பதும் நிதர்சனமானதே.
 28. 5 points
  வெளிநாட்டில் உழைப்பவர்கள், அங்கு காசை அனுப்பும் பொது. அதுவும் தொடர்ச்சியாக, ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. பலவழிகளில் அது உண்மையில் தீங்கில் முடிகிறது. அத்துடன், உழைப்பவரையும் பாரதூரமாக தாக்குகிறது. பொதுவாக அங்கிருக்கும் வெளிநாட்டில் உழைப்பவரின் பெற்றோர் கூட, உடனடியாக கிடைக்கும் வசதி வாய்ப்புகளையே உவக்கின்றனர். இங்கு உழைப்பவரின் நிலையை, எதிர் காலத்தை புறக்கணிக்கின்றனர். இதை நான் பொதுவாகா மிகவும் கண்டிக்கிது இங்கு எழுதி உள்ளேன். ஓர் பயனுள்ள தேவைக்காக, அது அநேகமாக முதலீடாகத்தான் இருக்கும், கல்வி தொழில் கல்வி கூட, மேற்கல்வி, அல்லது தொழில் முயற்சிற்கு அனுப்படுவது வேறு. ஆனால் அப்படி அனுப்பப்படுவத்து வெகு குறைவு. அனுப்புவது நின்றவுடன் எத்தனையோ பெற்றோர் கூட உறவில்லை என்று முறித்தது என்பதை நம்பவேண்டி உள்ளது. Housing economy ஐ முழுதும் அறியாதவராக இருக்கிறீர்கள். ஒருவர் தன் உழைத்த பணத்தில் காணியை வாங்கி அல்லது ஏற்கனவே இருக்கும் வெறுமையான காணியில் புதிதாக தான் உழைத்த பணத்தை கொண்டு வீடு கட்டப்படும் போது, அது பரந்த சமூகத்தில் ஏதோ ஓர் விதமாக productive economy ஐ, தற்காலிகமாகவேனும் உருவாக்கும். ஏற்கனவே தன்னிடம் இருக்கும் வீட்டை, சொந்த பணத்தில் புனருத்தாரணம் செய்யும் போதும், அது பரந்த சமூகத்தில் ஏதோ ஓர் விதமாக productive economy ஐ, உருவாக்கும். உழைத்த பணத்தில் செய்வது, ஒருவர் தான் அடையும் பலனால் (அதாவது வீட்டில் வசதிகளுடன் வசிப்பது மற்றும் மனத்திருப்தி போன்றவை ) அவரை மட்டுமின்றி, சமூகத்திற்கு தன்னாலான பொருளியல் பங்களிப்பு செய்து விட்டே பலனை அனுபவிக்கிறார் என்பதே பொருளியல் உண்மை. அப்படி அந்த வீட்டை (அல்லது எதுவாககட்டும்) கட்டும்போது அதற்கான பொருட்கள் (கட்டுமான பொருட்கள் மற்றும் finishing items) , அந்த வீடு உள்ள பகுதியில், வடகிழக்கில் (தமிழர்கலின் பொருளாதாரத்தை மட்டும் வைத்து பார்க்கும் போது), அல்லது இலங்கைத் தீவில் வாங்கப்பட்டால், அந்த பொருட்கள் இத்தாலியில் செய்யப்பட்டு வந்ததாயினும் (முகவர் அல்லது நேரடியாக), அது பரந்த சமூகத்தில் productive economic activity. இதனால் தான் housing boom (new construction, reconstruction, repairing and refurbishment, and as a result value rise) , சொந்த பணத்தால் மட்டும் ஏற்பட்டால், சமூகம் உண்மையான பொருளாதார அபிவிருத்தியும், வளர்ச்சியும், வாழ்க்கைத்தரமும் உண்மையில் உயரும். இதை ஒருவர் வங்கியிடம் இருந்து பணத்தை கடனாக பெற்று செய்வாராயின், பரந்த சமூகத்தையும் எதோ ஒரு விதமாக கடன் சுமையை சுமக்கச் செய்யும். அதனால், சொந்த பணத்தில் வீடு கட்டுவது, பரந்த சமூகத்திற்கு productive economy (as opposed to Rentier economic activities and practices, which is exploitative) ஐ சமூகத்திற்கு வழங்கும். Rentier economy இல் ஒரு பகுதி வளரும், மாரு பகுதி தேயும். வடகிழக்கில் பொதுவாக (அங்கிருப்பர்வர்களும், வெளிநாட்டில் இருப்பவர்களும்) தம்முடைய உழைத்த பணத்திலேயே கட்டுகிற படியால், அது அபிவிருத்தியாகவும், வளர்ச்சியாகவும், வளைக்கைத்தரம் உயர்வடைகிறது என்றே எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. ஆனால், எந்தவொரு economic system ஆலும் இதுவரை extreme poverty (dirt poor, இது கூட ஒப்பீட்டளவில்) ஐ நீக்க முடியவில்லை என்பதும் உண்மை. ஆனால், யுத்தத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிறுவனமயப்படுத்தப்பட்ட உதவிகள் தேவை என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். அதற்கு விக்கி மிகவும் முயன்றார் (முதலமைச்சர் நிதியம் மூலம் நேரடியாகவே வட மாகாண சபை சட்ட அடிப்படையில் நிதி பெறுவதத்திற்கு), சிங்களளம் தடுத்து விட்டது. ஆயினும், யுத்தத்தில் அகப்பட்டு மீண்டவர்கள், வேலை செய்யக் கூடியவர்கள், இத்தகைய பொருளாதார பங்களிப்பு மறைமுகமான உதவிகளை செய்யும், அதாவது productive economic activities பரந்த சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தின் ஊடாக. குறிப்பிட்ட ஓர் வீடு கட்டப்படும் போது வேண்டிய நாட்கூலி மூலம் மட்டும் 10000 உழைத்தார்களா என்று சொல்ல முடியாது, ஆனாலும் நான் அறிந்த வரையில், நாட்கூலி செய்பவர், ஆகக் குறைந்தது 15-20 நாட்கள் (நினைவில் உள்ளவரை 2015 க்கு முதல்) இற்கு வேலை செய்தால், 10000 க்கு மேல் உழைப்பார்கள். நாட்கூலியின் பெறுமதி அவ்வளவு ஏறி விட்டது. இலங்கையில் உள்ளவர்களும் வசதி இருந்தால், இப்படி வீடுகளை கட்டுகின்றனர். அதை பற்றிய உங்கள் கருத்து என்ன.
 29. 5 points
  இப்ப பூமியில் வீடு கட்டுவது பிரச்சனையா அல்லது ஊரில் கட்டுவது பிரச்சனையா. உங்களுக்கு பொறாமை & எரிச்சல் அங்கு இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட இடத்திலேயே குடியிருக்க சனம்இல்லை. மேற்கு நாடுகளில் நீங்கள் சுடுநீருக்காகவும் வீட்டை வெப்பமாக்கவும் உபயோகிக்கும் bioler இருந்து வெளியிடும் Co2 இனால் உங்கள் பூமித்தாய் நாசமடையாதா அதுமட்டுமல்ல உங்களது கார்களிலிருந்து வெளியிடும் Co2 இன் நிலை என்ன? ஏதோ தாங்கள் மட்டும்தான் பூமித்தாயில் அக்கறை என்டு பீலா காட்ட வேண்டாம். ஊரியேலே படித்து உழைத்து எத்தனையோ பேர் கோடிக்கணக்கான பெறுமதியில் வீடுகளை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு தெரிந்து Planning permission இல் ventilation ற்கு Air condition எல்லாம் போட்டு காட்டேலாது...எதிர் சுவர் அல்லது எல்லையிலிருந்து 5 அடி இடைவெளி. அத்தோடு air condition க்கு அனுமதி தேவையில்லை. சாதாராண உதவித் தொழிலாளிக்கு 1500/= நாள் சம்பளம். Slap concrete போடும் போது எல்லோருக்கும் 500/= கூடுதல். நகர சபையின் அனுமதி இல்லாமல் எதுவும் கட்ட ஏலாது அதிலும் 2000 சதுர அடிக்கு மேல் என்றால் Urban Development Authority அனுமதி. அவர்கள் planning permission இல் சதுரமா வட்டமா என்று பார்த்துதான் அனுமதிப்பார்கள். சதுரமாக கட்ட கூடாது என்று ஒரு தடையும் இல்லை....
 30. 5 points
  இஞ்சை பாருங்கோ கூத்தை..... வெள்ளை வடை சுடுது.
 31. 5 points
  அதிபர் ஆனந்தராஜா, ரஜனி திரணகம போன்றவர்களை எப்போதும் தூக்கிப் பிடிப்பதற்கான உண்மையான காரணம் என்ன ? சிங்கள அரசால் கொல்லப்பட்ட கல்வியியலாளர்களை, இந்திய அரசால் கொல்லப்பட்ட கல்வியாளர்களை இலகுவாக மறந்துபோவதற்கான (மறைத்து) என்ன காரணம் ?
 32. 5 points
  சிங்களவர்கள் மீதோ சிங்கள மொழிமீதோ எமக்கு விரோதம் இல்லை எமது மண்ணில் அழிக்கப்படும் தமிழ் மொழியும் தமிழ் உயிர்களும்தான் எமக்கு அடிப்படை பிரச்சனை. எமது மாவீர்கள் சிந்திய குருதியின் மணத்தை அதில் வாழும் மனிதர்கள் மறந்தாலும் அந்த மண் ஒரு போதும் மறக்கபோவதில்லை. அது வெறும் மண்ணாக மட்டும் இல்லை எமது பாதி உயிராகவும் இருக்கிறது. ஆக்கிரமிப்பாளர்கள் சிங்களவர்களோ? அமெரிக்கர்களோ? எக்காலத்திலும் மாறப்போவதில்லை ஒரு சாரர் கொஞ்சம் மனம் மாறி கொள்வார்கள் அதுவும் தமது வாழ்வை நிவர்த்தி செய்யும் ஒரு சுயநல போக்குதான். அவர்கள் சிங்கள ஆதிக்கத்தையோ வெள்ளையின வெறியையோ பெரிதாக எதிர்க்க போவதில்லை காரணம் அவர்களுக்கு அதில் லாபம் என்று ஏதும் இருக்க போவதும் இல்லை. இப்போதைய அமெரிக்க வெள்ளையின துவேஷிகள் எல்லாம் எங்கிருந்து வருகிறார்கள்? டிராம் அதிபராக வரும் முன்பும் அவர்கள் இங்குதான் இருந்தார்கள் இப்போது வெளிப்படையாக வெளியில் வருகிறார்கள் அவளவுதான். உணர்வுகளை கொலைசெய்துவிட்டு வாழ்வது என்றால் ஏன் அங்கு போகவேண்டும் அதை இங்கேயே செய்துகொண்டு வாலாமே? சிங்கள ஆதிக்க வெறியாலும் துரோகங்களாலும் எமது மண்ணும் மொழியும் நாளும் நாளும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இங்கிருந்தும் ஒன்றும் வெட்டி புடுங்க போவதில்லை அங்கு போய் நாலு சிங்களவருக்கு எடுத்து சொல்லி அவர்களாவது புரிந்துகொண்டால் பெரும் வெற்றி என்று நீங்கள் எண்ணுவதும் சரியானதுதான். வலிகள் என்பது எவ்வளவு அடிபட்டோம் என்பதை பொறுத்தது குட்டிமணியின் கண் உயிருடன் பிடுங்கப்பட்ட போது எல்லா தமிழ் கண்ணுக்கும் ஒரே மாதிரி வலித்திருந்தால் ...... எமது நாடு இன்று வேறு விதமாக இருந்திருக்கும் என்பதுதான் இவ்வளவு உயிர்களை பறிகொடுத்து நாம் புரிந்துகொண்டது.
 33. 5 points
 34. 5 points
  வணக்கம் மக்களே மகாஜனங்களே....! பணிகின்றேன். உலகத்திலை இப்ப இந்த கொரோனா பிரச்சனையாலை எல்லாம் தலைகீழாய் போச்சுது. கொரோனா கொஞ்சம் கொஞ்சமாய் குறைஞ்சாலும் எல்லாம் நோர்மலுக்கு வர இந்த வருசம் காணாது எண்டு கதைக்கினம். பள்ளிக்கூடங்கள் ஒழுங்கில்லாமல் போச்சுது.திட்டமிட்ட கலியாணவீடு சாமத்திய வீடு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எல்லாம் குழம்பிப்போய் கிடக்கு.வங்கியிலை எடுத்த கடன் வட்டியெல்லாத்தையும் கொஞ்சம் தள்ளி வைச்சிருக்கினமாம். இப்ப நான் என்ன சொல்ல வாறனெண்டால்..... இந்த 2020ம் ஆண்டை வாற வருசத்திலை இருந்து புதிசாய் தொடங்கினால் என்ன? இல்லாட்டி 2020 a எண்டு தொடங்கினால் என்ன? எனெண்டால் வருசங்கள் தேதி நாள் மணி நேரம் எல்லாம் மனிசரால் உருவாக்கப்பட்டவைதானே...? மனிசன் என்னென்னத்தையெல்லாம் மாத்தி அமைக்கேக்கை இதையும் மாத்தி அமைச்சால் என்ன? இப்படிக்கு பணிவன்புடன் ஐடியா ஐயாத்துரை
 35. 5 points
  தாயக மக்களின் மேம்பாட்டிற்காக, யாழிணையம் ஊடாக TNRA அமைப்பிற்கு பையன்26 $349,00 USD பணம் அனுப்பியுள்ளார். அவருக்கு எமது நன்றிகள்.
 36. 5 points
  விவசாயபீட dean எமது நண்பர் ( சூரியகுமார் கிருஷ்ணபிள்ளை) அவருடன் இதைப்பற்றி கட்டாயம் கதைக்கிறேன்
 37. 5 points
  கட்ட்டயம் செய்து பாருங்கள். எப்படி வந்தது என்று நாங்களும் பார்க்கலாம்.. நேற்று பாண், ரோஸ்ட் பாண், கருவாடு எல்லாம் செய்தேன் முதல் செய்ததை பாக்க நல்லா வந்தது.
 38. 4 points
  இந்தியா என்ற மாயைக்குள் சிக்கியிருக்கும் இந்தியர்கள் உலகமே தெரியாத முட்டாள்கள் என்பதற்கு இக்காணொளியும் ஓர் உதாரணம்.
 39. 4 points
  ஜேர்மனியில் கிறிஸ்தவ தேவாலயத்தில் தொழுகையில் ஈடுபட முஸ்லிம்களுக்கு அனுமதி! ரமலானை முன்னிட்டு முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடுவதற்கு உதவ, ஜேர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்று முன்வந்துள்ளது. பெர்லினில் உள்ள தார் அஸ்லாம் மசூதியில் இட நெருக்கடியால் முஸ்லிம்களால் சமூக இடைவெளியை பின்பற்ற முடியவில்லை. இதனால், அங்குள்ள மார்தா லூதேரன் கிறிஸ்தவ தேவாலயத்தில் முஸ்லிம்கள் சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மே 4ஆம் திகதி ஜேர்மனி மத சேவைகளை மீண்டும் தொடங்க அனுமதித்தது. ஆனால் வழிபாட்டாளர்கள் 1.5 மீ (5 அடி) தூரத்தை கடைபிடிக்க வேண்டும். இதன் விளைவாக, நகரின் நியூகால்ன் மாவட்டத்தில் உள்ள தார் அஸ்லாம் மசூதி அதன் சபையின் ஒரு பகுதியை மட்டுமே தொழுகைக்காக வைத்திருக்க முடியும். குறிப்பாக 50 பேரை மட்டுமே அனுமதிக்க முடியும். இந்தநிலையில், க்ரூஸ்பெர்க்கில் உள்ள மார்த்தா லூத்தரன் தேவாலயம் நெருக்கடியால் சிக்கியுள்ள முஸ்லிம்களுக்கு அரபு மற்றும் ஜேர்மன் மொழிகளில் தங்களது தொழுகையினை மேற்கொள்ள இடமளித்துள்ளது. புதிய சமூக தொலைதூர விதிகளின் கீழ் முஸ்லிம்கள், தற்போது கிறிஸ்தவ தேவாலயத்தில் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு மதத்தின் இன்னொரு மதத்தினருக்கு இவ்வாறு உதவுவது, ‘ஒற்றுமையின் அற்புதமான அடையாளம்’ என்று உலகநாடுகளால் பாராட்டப்பட்டுள்ளது. http://athavannews.com/ஜேர்மனியில்-கிறிஸ்தவ-தேவ/
 40. 4 points
  நெல்லியான் - இதுதான் எங்கள் ஊர், அப்பையா அண்ணையின் வீடும் அதில் ஒன்று, தலைவரை அவர் வீட்டில்தான் பார்த்தேன் சிறுவயதில். எங்கள் கிராமம் இப்ப இல்லை சுழிபுரம் இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்திலே, வட்டுக்கோட்டைத் தொகுதியிலே, வலிகாமம் மேற்குப் பிரிவிலே உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூர் ஏழு அரைச் சதுர கிமீ பரப்பளவு கொண்டது. இதன் கிழக்கு எல்லையில் பண்ணாகம் என்னும் ஊரும், வடக்கெல்லையில் பண்டத்தரிப்பும், மேற்கெல்லையில் இந்தியப் பெருங்கடலும், தெற்கெல்லையில் தொல்புரம், பொன்னாலை, நெல்லியான் முதலிய ஊர்களும் சூழ்ந்து உள்ளன. இவ்வூரில் பெரும்பான்மையானோர் சைவ சமயத்தவர்களே ஆவர். இக்கிராமத்தின் முக்கிய தொழில்களாக விவசாயமும், மீன்பிடியும் விளங்கினாலும் பல தொழில்களையும் புரியும் மக்களும் இங்கே வாழ்கிறார்கள். வானம் பார்த்த பூமியாக இக் கிராமம் இருந்தபோதும் மாரிகாலத்து நீரை வீண்போகாவண்ணம் குளங்கள், வாய்க்கால்கள் அமைத்து விவாசாயத்தை மேற்கொள்ளுகின்றனர். கோடைகாலத்தில் உப உணவு உற்பத்தியிலும் இக் குளங்களின் துணைகொண்டு ஈடுபடுகின்றனர். இவ்வூரின் தொன்மை வாய்ந்தவைகளாக திருவடிநிலைக் கடலையும், ஜம்புலிங்கேஸ்வரர் ஆலயத்தையும், சம்பில்துறையையும், சின்னத்தம்பிப் புலவரால் பாடப்பெற்ற விநாயகர் ஆலயத்தையையும் கூறலாம். https://ta.wikipedia.org/wiki/சுழிபுரம்
 41. 4 points
  தமிழ் நாட்டில் சீமானின் அரசியல் கருத்துக்களுக்கு பதில்கருத்து வைக்க துப்பற்ற கூட்டம் ஆமைக்கறி இட்லிக் கறி ஏகே 74 என்பதை வைத்து நாம் தமிழர் கட்சியை பலவீனப் படுத்த முனைகின்றது. கடந்த ஐம்பது ஆண்டுகள் வரையிலான திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் சாராய உற்பத்தி மற்றும் வியாபாரம்,. செர்லைட் தொடக்கம் மீதேன் ஈதேன் அணு உலை ஒப்பந்தம் நீட் தேர்வு தமிழர் அல்லாதோருக்கு தமிழ்நாட்டில் அரசு பணிகள் , மணற்கொள்ளை தொடக்கம் நீர் நில வளச் சுரண்டல் , ஆறு குளம் குட்டைகள் அழிப்பு என அனைத்தும் திராவிடக் கட்சிகளின் ஒப்புதலுடனேயே நடந்தது. இத்தோடு மேலும் ஒன்று மாநிலத்தில் தி மு க ஆட்சி மத்தியல் தி மு க கூட்டணி காங்கிரஸ் ஆட்சியிலேயே முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நிகழ்ந்தது. இவற்றை எல்லாம் அம்பலப் படுத்தும் சீமானின் அரசியலுக்கு எதிர்க்கருத்து தமிழகத்தில் வைக்க முடியாது. ஆமாம் நாங்கள் இவற்றை செய்தோம் என்று திராவிடக் கட்சிகளால் சொல்லவா முடியும் ? அதனால் ஆமைக் கறி இட்லிக் கறி போன்ற அற்தமற்ற விசயங்களை கையில் எடுப்பதை தவிர வேறு வழியில்லை. சீமான் முனனெடுககும் பல அரசியல் பிரச்சரங்களில் ஒன்று தான் ஈழ இனவழிப்பு குறித்த விசயம். ஆனால் நம்வருக்கு சீமான் ஈழத்தை பற்றி மட்டும் பேசி அரசியல் செய்வதாக ஒரு பிரமை.. ஈழத்து இலக்கிய புடுங்கிகள் புத்திஜீவி புடுங்கிகள் மற்றும் போராட்ட முடிவுக்கு பின்னர் புலிகள் போராட்டம் புலிக்கொடி மாவீரர்கள் போன்ற அடயாளங்களை குத்தகைக்கு எடுத்த புடுங்கிகளுக்கு வேறு எவரும் பேசக் கூடாது. ஏனெனில் இவர்கள் பேச விரும்பாத விசயத்தை வேறு எவரும் பேசக் கூடாது. புலிகள் ஆயுதம் தூக்கியது தவறு, சிங்களவருடன் சேர்ந்து வாழ்வது அதிஸ்டம் என்று கூத்துமைப்பு பிதற்றுவதும், போராட்டம் முடிந்த கதை என்று தி மு க போன்ற கட்சிகள் பேசுவதும் இவர்களுக்கு போதுமான அரசியல். தற்போதைக்கு ஈழத்தில் நடந்த கெடுமையும் இனவழிப்பும் தொடர்ந்து பொதுவெளியில் உயிரப்புடன் வைத்திருப்பதில் நாம் தமிழர் கட்சியை பங்கை போல் வேறு அரசியல் கட்சிகளை சுட்டிக்காட்ட முடியாது. புலிகள் இயக்கத்தில் இருந்த பின்னர் கொரில்லா நாவல் மூலம் இலக்கியத் தளத்திற்கு இந்திய ஊடகங்கள் நகர்த்தியது. அவ் அடயாளத்தில் இருந்து பின் வருவது போல் பல பதில்கள் தேவைப்பட்டது. அவைகள் எல்லாம் போராட்ட காலத்தில் இடது சாரி வட்டம் இலக்கிய வட்டம் மதம் சாதி தலித்தியம் என பல கோணத்தில் தேவைப்பட்ட நீண்ட கதைகள். பாகிஸ்த்தான் மல்ரிபரல் போல இந்திய மல்ரிபரல் இது. சிங்களப் பேரினவாத அரசின் தொடர்ச்சியான ஒடுக்கு முறைகள் தான் விடுதலைப் புலிகளின் இருப்புக்கு காரணம் என்பதில் எனக்கு எதுவித மாற்றுக் கருத்தும் கிடையாது. அரச ஒடுக்கு முறைகள் தோற்றுவித்த ஒரு விடுதலை இயக்கத்தின் இன்றைய நிலை எவ்வாறு இருக்கிறது? இன்று விடுதலைப்புலிகள் முற்றுமுழுதான வலதுசாரிகளாக உருவெடுத்து இருக்கிறார்கள். அமெரிக்காவினதும் அய்ரோப்பிய யூனியனதும் ஒவ்வொரு உத்தரவுக்கும் அவர்கள் அடிபணிகிறார்கள். தங்களுடைய பொருளாதாரக் கொள்கை திறந்த பொருளாதாரக் கொள்கை தான் என்று புலிகளின் தலைவர் அறிவித்திருக்கிறார். வெட்கம்! பிரபாகரனின் இடம் இப்போது ஒரு விடுதலை இயக்கத் தலைவனின் இடம் அல்ல. அவர் ஒரு யுத்தப் பிரபு ( war lord) மட்டுமே. ஏனெனில் ஒரு மக்கள் விடுதலை இயக்கத்துக்குரிய எந்தப் பண்புகளும் L.T.T.E இயக்கத்திடம் அறவே கிடையாது. என் சமூகத்தில் நிலவும் கொடூரமான சாதியத்தை ஒழிக்கப் புலிகள் எந்தத் திட்டத்தையும் முன் வைக்கவுமில்லை நடைமுறைப்படுத்தவுமில்லை. இது தவிர காலம் காலமாக ஈழத்து தமிழர்களோடு இணைந்து வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் மீது அவர்கள் நடத்திய வன்முறையை மன்னிக்கவே முடியாது. வடபகுதியில் வாழ்ந்த அத்தனை முஸ்லீம்களையும் புலிகள் ஒரே இரவில் வடபகுதியை விட்டு வெளியேற்றினார்கள். அதுவும் எப்படி? முற்று முழுதாக முசுலீம்களின் சொத்துக்களைக் கொள்ளையிட்ட பின்பே விரட்டினார்கள். பரம்பரை பரம்பரையாய் அந்த மண்ணில் வாழ்ந்த இஸ்லாமிய மக்கள் தம்மோடு 500 ரூபாய்கள் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.
 42. 4 points
  இவ்வளவு காலம் நீங்கள் எழுதிய கருத்தில் மொக்கை கருத்து என்றால் இது தான் ...மன்னிக்கவும்
 43. 4 points
  கொத்து ரொட்டி தேவையான பொருட்கள் மா - 500 g ஜீஸ்ட் - 2 மே. கரண்டி உப்பு - 1 மே. கரண்டி தண்ணீர் - அளவானது இறைச்சிக் கறி / சோயாக்கறி பெரிய வெங்காயம் - 6 பச்சை மிளகாய் - 8 முட்டை - 6 / 8 எண்ணெய் - அளவானது செய்முறை வீடியோ இணைப்பில் பாத்திட்டுப் போகாமல் Like செய்து Subscribe செய்யுங்கோ உறவுகளே
 44. 4 points
  அது தொடரும் அண்ணை நிலமையை பொறுத்தே அரசு இன்று அனுமதி அளித்துள்ளது சில வேளை கொரானோ அதிகரிக்குமானால் தடைப்படலாம் அப்படி தடைப்படாவிட்டால் தனிக்காட்டுராஜாவும் காட்டுவழி பயணம் தொடருவார் பல லட்சத்தை தாண்டிச்செல்லும் பக்தர்கள். விவசாயி அவர்களே வருடா வருடம் சில நேரம் இந்தவருடம் குறைவாகலாம் இந்த கொரானோ வைரசின் தாக்கத்தினால் செல்ல முடிந்தால் படங்களை இணைக்கிறேன். கொழும்பிலிருந்து சிங்கள நண்பர்களும் வருவார்கள் உகந்தை வழியாக காட்டினூடாக செல்வதற்கு . சில நேரம் வெள்ளைக்காரர்கள் கூட வருவார்கள் காவியுடன் ஆரம்பகாலத்தில் அமெரிக்கர் ஒருவரே முன்னின்று வருவார் .
 45. 4 points
  ஒரு சிங்கள தளத்துக்கு போய்.... தேசத்தின் வீரர்களை நினைவு கூறும் அதேவேளை.... இந்திய அமைதி படை என்ற பெயரில், நாட்டின் சுதந்திரத்தை பறிக்க வந்தவர்களுடன் மோதி, துரத்தி, நாட்டின் சுதந்திரத்தை அந்நியர்களிடம் இருந்து காத்த, பிரபாகரனையும், புலி வீரர்களையும் இந்த நேரத்தில் நினைக்க கடமைப் பட்டுளோம்... என்று போட்டு விட்டேன்.... ஒருவர் கூட மறுதலிக்க வில்லை. முடிந்தால் சமே சைடு கோல் போடுங்கள்.
 46. 4 points
 47. 4 points
 48. 4 points
  அங்க போய் வெளிநாட்டில் இருந்து வந்தது என்ற பந்தா காட்டி வாழ முடியாது. சனம் ஓரிரு வாரங்களுக்கு அந்த பந்தாவை அங்கீகரித்தாலும்.. அது நிரந்தரமில்லை. மேலும்.. அங்கு போய் ஏதாவது ஒரு சமூக வேலைத்திட்டத்தோடு இருந்தால்.. காலம் போவது தெரியாது. எனது உறவினர் ஒருவர் இங்கிலாந்தில் மருத்துவ ஆலோசகர் நிலையில் இருந்தார். அவர் ஊரில் போய் தொண்டர் அடிப்படையில் ஒரு வருடங்கள் பணியாற்றினார். ஆரம்பத்தில் அவருக்கு பெரும் வரவேற்பிருந்தது. கடைசியில்.. அவரா.. ஒரு மோட்டார் சைக்கிலில்.. லோ லோ என்று அங்குள்ள புழுதி விழுந்த ஒழுங்கைகளுக்கூடாகத் திரிந்து கொண்டிருந்தார். ஆனால்.. அதை அவர் மகிழ்வாக எடுத்துக் கொண்டார். என்ன ஊரில்.. இருந்தால்.. நீங்கள் எதையோ தொலைத்த உணர்வு இருக்காது. கோவில் குளம் இருக்குது.. நினைச்ச நேரம் போகலாம். உங்களுக்கு எழுத்துப் பணி செய்ய நல்ல சூழல் உள்ளது. ஒவ்வொரு ஊராகப் போய் வரலாம். ஊர் மக்களைக் கொண்டு போருக்குப் பிந்திய எமது சமூகம் பற்றிய ஒரு சமூக ஆய்வைக் கூடச் செய்யலாம். இப்படி ஏதாவது உருப்படியான வேலைத்திட்டங்களை செய்ய வெளிக்கிட்டால்.. நிச்சயம்.. காலம் போவதே தெரியாமல்..போகும். வீட்டில்.. வீட்டுத் தோட்டம்.. மூளிகைத் தோட்டம் வைக்கலாம். நாய் வளர்க்கலாம்.. பறவைகள் ஒன்று கூடும் இடங்களை நிறுவலாம்.. இவை எல்லாம் நல்ல பொழுதுபோக்கும்.. எம்மால்.. இயலுவாகச் செய்யக் கூடியதும் ஆகும். ஆக.. அடுத்தவர் விடயங்களில் தலையிடாமல்.. நாம் நம் பாட்டுக்கு நம் பொழுதை அழகு படுத்திக் கொண்டிருந்தால்.. ஊரில் இருப்பது போல்.. பொன்னான வேளைகள் எதுவும் இருக்காது.
 49. 4 points
  முகநூல் வழியாக இப்படியான கிராபிக்ஸ் வீடுகள் பல உலா வருகின்றன. அதில் 70 இலட்சம் வீடு கட்ட வேணுமாம்... அதுவும் 7 இலட்சம் தள்ளுபடியின் பின். உண்மை பொய் தெரியாது. ஒருவேளை அக்கா அப்படியான கிராபிக்ஸ் வீடுகளை பார்த்திட்டு மயங்கி இருப்பா போல. நிச்சயமா நீங்கள் ஒன்றை கட்டலாம். ஆனால்.. கட்டும் செலவு.. இப்போ முன்னரை விட அதிகமாகலாம். ஊரில் வீடு கட்டும் போது ஒப்பந்த அடிப்படையில் கட்டுவது நல்லம். நாள் கூலி அடிப்படையில் கட்டினாலோ.. திருத்தங்கள் செய்தாலோ.. செலவு அதிகம் முடியும். மேலும் ஒப்பந்த அடிப்படையில் கட்டினாலும் கட்டி முடியும் வரை ஒரு நம்பிக்கையானவரின் அல்லது நம்பிக்கையானவர்களின் தொடர் கண்காணிப்பு அவசியம். மேலும் காசு கைக்கு போகாட்டில்.. அங்கு வேலை நடக்காது. எனவே காசைக் கையில் வைச்சுக் கொண்டு தான் வேலையை ஆரம்பிக்க வேண்டும். அதுவும் மொத்தக் காசையும் ஒரே தடவையில் கொடுத்தீர்கள் என்றாலும் வேலை நடக்காது. முடிக்கப்படும் வேலைக்கு ஏற்ப திட்டம் திட்டமாக காசு கொடுக்கப்பட்டால் நன்று. வீடு கட்ட மட்டும் 70 இலட்சம். இதில் இன்ன பிற பொருட்கள்.. தளபாடங்கள்.. அதிநவீன சாதனங்களுக்கு அவர்கள் பொறுப்பில்லை என்பார்கள். எனவே எல்லாவற்றையும் ஆரம்பத்தில் பேசிட்டு.. சரியான ஒப்பந்தக்காரரை தெரிவு செய்வதும்.. அந்த ஒப்பந்தக்காரர் தகுதியானவரா என்பதை அறிந்து கொண்டு செயற்படுவதும் மிக மிக மிக முக்கியம். ஊரில் இப்ப நிறைய ஏமாற்றுப் பேர்வழிகள். அதுவும் வெளிநாட்டில் இருந்து கொண்டு வீடு கட்டுகிறீர்கள் என்று தெரிந்தால்.. காசை நல்லாக் கறக்கலாம் என்று தான் வேலை செய்வார்கள். எனவே.. உள்ளூரில் இருந்து கொண்டு வீடு கட்டுவது போலக் காண்பிப்பது நல்லம்.
 50. 4 points
  தவறு முழுவதும் இரா.செல்வவடிவேல் உடையதே. முழு நடைமுறைகளையும் தெரிந்த ஒரு பிரஜை என்ற வகையில்.. இன்னொருவரின் வீடு தேடி போய் குடும்பமா நின்று கத்த வேண்டிய அவசியமில்லை. பிரச்சனையை பொது சுகாதாரப் பரிசோதகர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கலாம்.. அல்லது சொறீலங்கா காவல்துறையில் முறையிட்டு அவர்கள் மூலமா விடயத்தைக் கையாண்டிருக்கலாம். மேலும்.. சமர்ப்பிக்கப்பட்ட காணொளியின் பிரகாரம்.. செல்வவடிவேலின் மகன் தான் முதலில் தாக்குதல் நடத்தியது தெரிகிறது. கல்லால் அடித்த எந்த ஒரு காட்சியும் பதிவாகவில்லை அல்லது வெளியிடப்படவில்லை. செல்வவடிவேல்.. வீட்டு வளவுக்குள் நுழைந்து தாக்கியதற்கு முன் அவரின் மகனோடு தான் பண்ணை உரிமையாளர் கைகலப்பில் ஈடுபட்டார். அதன் பின்னரே செல்வவடிவேல் வெளியில் இருந்து உள்நுழைந்து வீட்டு வளவுக்குள் வைத்து பண்ணை உரிமையாளரை தாக்கினார். அதன் பின் அவரின் மகனும் வளவுக்குள் நுழைந்துவிட்டார். இவை அனைத்துமே.. செல்வவடிவேல் மற்றும் அவரின் குடும்பத்தினரின் தவறே ஆகும். குற்றச்சாட்டை சட்டத்துக்கு அப்பால் தன் கையில் எடுத்துக் கையாண்டது அவர்களின் மகா தவறு.