Leaderboard

  1. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      210

    • Content Count

      47,515


  2. ஈழப்பிரியன்

    ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      115

    • Content Count

      7,335


  3. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      112

    • Content Count

      27,584


  4. Rajesh

    Rajesh

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      85

    • Content Count

      1,319



Popular Content

Showing content with the highest reputation since 07/19/2019 in Posts

  1. 11 points
    ஆம்ஸ்டர்டாமில் ஓர் அட்வெஞ்சர்! எனது பிறந்தநாள் சம்மர் பாடசாலை விடுமுறைக் காலத்தில் வருகின்றது. நான் பிறந்தநாள் அன்று வேலைக்கு விடுப்பு எடுத்து ரிலாக்ஸாக ஓய்வில் இருப்பதை ஒரு கொள்கையாகவே வேலை செய்ய ஆரம்பித்த காலத்தில் இருந்து விடாமல் வருடாவருடம் தொடர்வதால், பல மாதங்களுக்கு முன்னரே ஒருவார விடுமுறையை விண்ணப்பித்து அனுமதி பெற்றிருந்தேன். குளிர்காலம் எப்போதும் மப்பும் மழையும் காதுமடல்களை விறைக்கச் செய்யும் கடுங்குளிர்காற்றுமாக இருப்பதால், சம்மரில் பிரகாசிக்கும் வெயிலில் எங்காவது செல்ல மனம் ஏங்கும். பாடசாலை விடுமுறையில் வீட்டில் நிற்கும் பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிக்க எனது இணையும் இதே வாரத்தில் விடுமுறை எடுத்திருந்தார். விடுமுறையைக் கழிக்க எங்கே போவது என்பதில் ஒரு முடிவை எடுக்கமுடியவில்லை. Humans are explorers என்று சொன்னாலும் பிள்ளைகளுக்கு தெரியாத இடங்கள் எல்லாம் போய் பார்க்கவேண்டும் என்பதில் ஆர்வம் கிடையாது. வீட்டில் இருந்து பிளேஸ்ரேசனின் games விளையாடவும், cousins உடன் சேர்ந்து வெட்டியாகப் பொழுதைப் போக்கவும்தான் நாட்டம் அவர்களுக்கு. ஆனால் கனடாவுக்கு போவதென்றால் மட்டும் அங்கிருக்கும் cousins உடன் கும்மாளம் அடிக்கலாம் என்று எப்போதும் முன்னுக்கு நிற்பார்கள்! சம்மரில் விமான ரிக்கற் ஏறும் விலைக்கு அடிக்கடி அதிகம் செலவழித்து கனடா போகவும் மனம் ஒப்பவில்லை. ஒருவார விடுமுறை என்பதால் நல்ல வெய்யில் கொளுத்தும் மால்ராவுக்குப் போகலாமா, சுவிற்சலாந்துக்கு காரில் போய்ச்சுற்றலாமா, உள்ளூர் வேல்ஸில் போய் செம்மறியாடு, மாட்டு மந்தைகளையும், பச்சைப்புல்வெளிகளையும் பொடிநடையில் பார்க்கலாமா என்றெல்லாம் விவாதித்து, எகிறும் செலவையும், கடும்வெய்யில் அல்லது கடும் மழை வந்து குழப்பும் என்ற தயக்கத்திலும் நாலு நாட்கள் ஒல்லாந்து தேசம் மட்டும் போய் ஆம்ஸ்டர்டாம் நகருக்குள்ளால் ஓடும் கால்வாய்களையும், ரொட்டர்டாமுக்கு அண்மையிலுள்ள காற்றாலைகளையும் பார்த்து வரலாம் என்று தீர்மானித்தோம். பிள்ளைகளுடன் போவதால் ஆம்ஸ்டர்டாம் சிவப்பு விளக்குப் பகுதி விலக்கப்பட்ட வலயத்திற்குள் வந்துவிட்டது. ஆனாலும் பகலிலாவது ஒரு தடவை தனியே போய் எட்டிப்பார்க்கலாம் என்று மனம் குறுகுறுத்தது! முதல்நாள் பிரகாசமான வெயில். ஆனால் சுட்டெரிக்கும் அளவிற்கு வெப்பம் இருக்கவில்லை. கால்வாய்களினூடான சுற்றுக்கு ரிக்கற்றை வாங்கிவிட்டு நேரம் வரும்வரை கால்வாய்கள் நிறைந்துள்ள தெருக்களில் வேடிக்கை பார்த்துக்கொண்டு திரிந்தோம். எமது படகுக்கான நேரத்திற்கு 15 நிமிடங்கள் முன்னதாகவே வரிசைக்குப்போனால் எமக்கு முன்னர் ஒரு வயதுமுதிர்ந்த தம்பதியினர் மாத்திரமே நின்றிருந்தனர். வந்த படகொன்றில் ரிக்கற்றைக் காட்டி ஏறி நகரின் அழகான பகுதிகளூடாக பயணித்துக்கொண்டிருந்தோம். இரண்டாம் உலக யுத்தக் காலத்தில் நாஜிகளிடம் பிடிபடாமல் ஒளிந்திருந்த ஆன் ஃப்ராங் எனும் பதினான்கு வயது யூதச் சிறுமியின் டயறி எனும் நூலை 90 களில் படித்திருந்தேன். அவர் ஒளிந்திருந்த வீட்டினை தற்போது காட்சியகமாக்கியுள்ளனர். அதைப் பார்ப்பதும் எமது itinerary இல் இருந்தது. அதனருகே படகு வந்தபோது எமது ரிக்கற்றைக் காட்டி அங்கு வெளியேறி மீண்டும் பிற்பகலில் படகுப்பயணத்தைத் தொடரலாமா என்று கேட்டேன். ரிக்கற்றை வாங்கிப் பார்த்த படகோட்டி நாங்கள் பிழையான படகில் உள்ளதாகச் சொல்லி, எங்களை ஏறிய இடத்தில் திரும்பவும் விட்டுவிடுவதாகச் சொன்னார். அவர் சரியாக ரிக்கற்றைக் கவனிக்கவில்லை என்பதால் தன்னில்தான் தவறு என்று எங்களைத் தொடர்ந்தும் படகில் இருக்க அனுமதித்தார். அவரின் நல்லெண்ணத்தில் அந்த கால்வாய்ச் சுற்றுப் பயணம் எமக்கு இலவசமாகக் கிடைத்தது! நாம் வாங்கிய ரிக்கற் சற்று விலைகூடிய கால்வாய்ச் சுற்றுலாவுக்கானது. எனவே மீண்டும் ரிக்கற் வாங்கிய இடத்திற்குப்போய் நாம் சுற்றித் திரிந்ததால் படகைத் தவறவிட்டுவிட்டோம்; அடுத்த படகில் இடம் இருந்தால் போகமுடியுமா என்று கவுண்டரில் இருந்த அழகான டச்சுப் பெண்ணிடம் கேட்டேன். இல்லை என்று கதைக்க ஆரம்பிக்கும்போதே, நாம் செலுத்திய விலை அதிகம் என்பதால் தயவு பண்ணுங்கள் என்று அப்பாவி வேடம் போட்டு அவளின் மனத்தை மாற்றி அடுத்த படகுப் பயணத்திற்கு அனுமதி வாங்கினேன். முன்னர் போன கால்வாய்களினூடாகப் போகாமல் நகரின் மிகவும் அழகான பகுதிகளினூடாக படகோட்டியின் நேர்முக வர்ணனையுடன் படகுச் சவாரி நன்றாகவே அமைந்தது. கொடுத்த பணத்திற்கு கிடைத்த மகிழ்ச்சியில் பயணம் திருப்தியாகவும் இருந்தது. இரண்டாவது நாள் ஜூலை 31. ஆடி அமாவாசை என்று அக்கா மெசஞ்சரில் தகவல் முன்னதாகவே அனுப்பியிருந்தார். எனவே, காலை உணவிற்கு பிள்ளைகளை இணையோடு அனுப்பிவிட்டு ஆறுதலாக குளித்து முழுகிப் போகத் தீர்மானித்தேன். சாமி, விரதம் என்று நம்பிக்கைகள் இல்லையென்பதால் திவசம் எல்லாம் கொடுப்பதில்லை. ஆனாலும் பெற்றோர்களுக்கு நீர்க்கடன் செலுத்தவேண்டும் என்பதை மறுப்பதில்லையாகையால் அம்மாவுக்காக சித்திரைப் பெளர்ணமியிலும், அவரது திதி நாளான வைகாசி பெளர்ணமி அன்றும், அப்பாவுக்காக அவரது திதியன்றும், ஆடி அமாவாசையிலும் விரதம் இருப்பதும் மச்சம் சாப்பிடாமல் இருப்பதும் வழமை. எங்களூர் விரதப்படி தோய்ந்த பின்னர் ஒரு கப் சூடான தேநீர் அல்லது கோப்பி குடிக்கலாம். அதற்குப் பின்னர் நீர்க்கடன் செலுத்தி, உணவு படைத்த பின்னர்தான் சாப்பிடலாம். இடையில் எதுவும் குடிக்காமலும் சாப்பிடாமலும் இருக்கவேண்டும். கோப்பி குடிக்கலாம் என்று கீழே போனால் அங்கு ஹொட்டேல் பணியாளர்கள் ஆணும் பெண்ணும் இருவராக இணையுடன் ஃபோனைப் பார்த்தவாறு மிகவும் சீரியஸாக உரையாடிக்கொண்டிருப்பது தெரிந்தது. இணை பதற்றமாக கதைத்துக்கொண்டிருந்தாலும் அவர்களுக்கு முன்னால் இருந்த பிள்ளைகளின் முகத்தில் பதற்றத்திற்கான எதுவித அறிகுறிகளும் இல்லை. அவர்கள் இருவரும் வெளியிடங்களையும் தங்கள் வீடுபோன்று பாதுகாப்பான இடம் என்று பொருட்களை கவனமாகப் பார்ப்பதில்லை என்பதால் மூத்தவனைப் பார்த்து ‘உனது ஃபோன் தொலைந்துவிட்டதா?’ என்று கேட்டேன். ‘இல்லை. அம்மாவின் handbag தான் களவுபோய்விட்டது. அதற்குள் அவரது ஃபோனும் இருந்ததால் அது எங்குள்ளது என்று எனது ஃபோனில் உள்ள Life360 app மூலம் track பண்ணிக்கொண்டு இருக்கின்றார்கள்’ என்று சாதாரணமாகச் சொன்னான். நிலைமையின் விபரீதம் உடனடியாகவே புரிந்தது. - தொடரும்
  2. 11 points
    ஜேர்மனியில், நான் வேலை செய்யும் இடத்தில்... எனது மனேஜரும் சம்பந்தரின் சாணக்கிய செய்தியை... பார்த்து இருப்பார் போலுள்ளது. காலையில்... என்னிடம் வந்து... "தமிழ்சிறி... நீர், தமிழ் ஆளோ என்று கேட்டார்" நான்... "ஓம்.... ஏன் அப்பிடி, கேட்கிறியள்" என்று வினவிய போது.... என்னை கட்டிப் பிடித்து.... முத்தமிட்டு.... இவ்வளவு பெரிய பக்கா அரசியல்வாதி உள்ள, தமிழ் இனத்தில் இருந்து வருகின்ற நீங்கள், இங்கு வேலை செய்து கஸ்ரப் பட வேண்டாம்.பென்சன் எடுக்கும் மட்டும், தாங்களே... முழு சம்பளத்தையும் வீட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறினார். இப்ப எனக்கு... சம்பந்தன் ஐயாவால், வீட்டில் காலாட்டிக் கொண்டிருக்க சம்பளம் வர போகுது. ஜாலி....
  3. 8 points
    இந்த நெத்தலி கருவாட்டை மிகவும் ருசியாகவும் சுலபமாகவும் செய்யலாம். நான் செய்த முறை. அரை இறாத்தல் நெத்தலி (நான் வாங்கியது தலையில்லாதது) பெரிய வெண்காயம் 3. தக்காளி 1 தேவையான உப்பு கொஞ்சம் இஞ்சி சிறிது உள்ளி. தேசிக்காய் 1 3 கரண்டி மிளகாய்த் தூள். செய்முறை:- ஓரளவு சுடுநீரில் நெத்தலியை 30 நிமிடத்திற்கு ஊற வைக்கவும்.அந்த இடைவெளியில் 3 பெரிய வெண்காயத்தையும் அரிந்து இரும்பு சட்டி அல்லது ஒட்டாத சட்டியில் போட்டு அரைவாசி வேகும் வரை வதக்கவும். அடுத்து தக்காளி சிறிதாக வெட்டி உள்ளி இஞ்சி கறிவேப்பிலை எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு வதக்கவும். ஊறப்போட்ட நெத்தலியை 3-4 தடவை கழுவி எடுத்து அதையும் சட்டியில் போட்டு வதக்கவும்.இதற்கு தண்ணீர் இல்லாதபடியால் கொஞ்சம் கூடுதல் எண்ணெய் தேவைப்படும்.ஒட்டாத சட்டி என்றால் நிறைய எண்ணெய் தேவைப்படாது.ஒரேயடியாக எண்ணெயை விடாமல் வத்தவத்த தேவைக்கேற்ப விடவும்.தூள் உப்பையும் தேவைக்கேற்க போடவும்.அடிப்பிடிக்காமல் அடிக்கடி பிரட்டவும். தூள் அவிந்த பின் சுவையைப் பார்த்து இறக்கி ஆறிய பின்னர் 1 தேசிக்காய் விடவும். வீட்டில் சிறியவர்கள் இல்லை என்றால் பச்சை மிளகாய் வெண்காயத்தோடு சேர்த்து வதக்கலாம். சோறு புட்டு இடியப்பம் பாண் எதோடு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.. நன்றி.
  4. 7 points
    இலங்கை முழுக்க இருந்த ஈச்சரங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி நல்லுரையும் யாழ்ப்பாணத்தையும் தமிழர்களின் கலலாச்சார இடங்கள் என்று தமிழர்களின் வரலாற்றையும் வாழ்வையும் தமிழர்களின் தன்னினத்துக்குள் இரைதேடும் ஆதிக்க மனப்பான்மையே சுருக்கியது. ஐக்கியப்பாட்டிற்காக எந்தக்காலத்திலும் முயன்ற சரித்திரம் தமிழர்களிடம் இருந்ததில்லை. போரில் இறந்த ராணுவத்தில் கணிசமானளவு சிங்கள இராணுவத்தினர் முன்னொருகாலத்தில் தமிழர்களே. இன்றை சிங்களமக்களில் கணிசமானளவினர் முன்னர் தமிழர்களே. நீர்கொழும்பு புத்தளம் போன்ற பகுதிகளில் இந்தமாற்றங்களை இப்போதும் வெளிப்படையாக காணமுடியும். தமிழர்களின் அழிவு தொன்றுதொட்டு தமிழர்களின் தன்னினத்துக்குள் இரைதேடும் குணத்தினால் தொடர்ந்து வருகின்றது. கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம் செய்வதுபோல் இந்த முனைப்புகள். இறுதி யுத்ததில் பெண்களை நிர்வாணமாக இழுத்துச் செல்லுகையில் கூப்பிடு தூரத்தில் கெலியில் பூத்தூவி தேரிழுத்து திருவிழா கொண்டாடிவிட்டு பின்னர் எங்காவது பார்க்கில் ரெண்டு காதலர் ஒன்றாக இருப்பதை படமெடுத்து இணையதளங்களில் போட்டு ஒலாச்சாரம் கெட்டுவிட்டது என்று கூப்பாடு போடும் கூட்டம். இப்போது அல்லேலூயா கூட்டத்தோடு முரண்பட்டு எதையோ புடுங்க முற்படுகின்றது.
  5. 7 points
    த‌லைவ‌ரின் ம‌ணைவி (அம்மா ம‌திவ‌த‌னி ) அவாவின் பெற்றோர்க‌ளுட‌னும் ம‌ற்றும் அவாவின் த‌ம்பியுட‌னும் சிறு பிள்ளையாய் இருந்த‌ போது எடுத்த‌ ப‌ட‌ம் / இந்திய‌ன் ஆமியுட‌னான‌ நேர‌டி மோத‌லின் போது வீர‌ச்சாவு அட‌ந்த‌ த‌ன‌து த‌ம்பியின் பெய‌ரை தான் த‌ன‌க்கு பிற‌ந்த‌ க‌ட‌சி ம‌க‌னுக்கும் வைச்ச‌வா ( பால‌ச்ச‌ந்திர‌ன் என்று )
  6. 6 points
    வ‌ண‌க்க‌ம் யாழ் உற‌வுக‌ளே / பிரான்ஸ் நாட்டில் வ‌சிக்கும் என‌து ஊரை சேர்ந்த‌ ஒரு அண்ணா த‌மிழ் க‌டையில் வேலை செய்கிறார் , மாச‌ம் 400 ம‌ணித்தியால‌ வேலை ச‌ம்ப‌ள‌ம் 1200 இயுரோ ( மிருக‌ வ‌தை ) என்ர‌ ந‌ண்ப‌னுக்கு அந்த‌ அண்ணாவை ந‌ல்லா தெரியும் , என்ர‌ ந‌ண்ப‌ன் அவ‌ரின் வேலையையும் ம‌ணித்தியால‌த்தையும் ச‌ம்ப‌ள‌த்தையும் சொல்ல‌ என்ன‌டா கொடுமை இது என்று என‌க்கு தோனிச்சு , அந்த‌ 1200 இயுரோவில் தான் பேருந்து க‌ட்ட‌ன‌மும் க‌ட்ட‌னும் , ஊரில் அவ‌ரின் ம‌னைவி பிள்ளைய‌லுக்கு மாச‌ம் 400 இயுரோவை அனுப்பி மீத‌ம் உள்ள‌ காசில் தான் சாப்பாடு வீட்டு வாட‌கை / என்ர‌ ம‌ச்சான் அவ‌னும் இங்கை உண‌வ‌க‌ம் வைச்சு ந‌ட‌த்துறான் , அவ‌னுக்கு சொன்னேன் எங்க‌ட‌ ஊரை சேர்ந்த‌ அண்ணா பிரான்ஸ்சில் இப்ப‌டி க‌ஸ்ர‌ ப‌டுறார் என்று / உட‌ன என்ர‌ ம‌ச்சான் சொன்னான் , ம‌ச்சி அந்த‌ அண்ணாவை த‌ண்ட‌ க‌டையில் வ‌ந்து வேலை செய்ய‌ சொல்லு தான் 1600 இயுரோ மாச‌ம் குடுக்கிறேன் , அவ‌ர் 100 ம‌ணித்தியாள‌ம் வேலை செய்தாலே த‌ன‌க்கு போதும் என்று என்ர‌ ம‌ச்சான் உட‌ன‌ சொன்னான் , அதோடு அந்த‌ அண்ணாவுக்கும் சாப்பாடும் தான் குடுக்கிறேன் என்று / 100ம‌ணித்தியால‌ வேலைக்கு 1600 இயுரோ ச‌ம்ப‌ள‌ம் குடுக்கிறேன் என்று சொன்ன‌ என்ர‌ ம‌ச்சானின் ம‌ன‌சு எங்கை , 300 ம‌ணித்தியாள‌ம் மிச்ச‌ம் அதோடு 400 இயுரோ ச‌ம்ப‌ள‌ம் கூட‌ , ( உன்ர‌ ந‌ல்ல‌ ம‌ன‌சுக்கு நீ நீடூழி வாழுவாய்டா ம‌ச்சி ) 400 ம‌ணித்தியால‌ம் வேலை வாங்கி போட்டு 1200 இயுரோ குடுக்கும் அந்த‌ ம‌னித‌ர்க‌ள் எங்கை ( மிருக‌ வ‌தை பிரான்ஸ் நாட்டில் எம்ம‌வ‌ர்க‌ள் சொந்த‌ இனத்த‌வ‌ர்க‌ளுக்கு செய்யிற‌து / ப‌திவு பைய‌ன்26 /
  7. 6 points
  8. 5 points
  9. 5 points
    வண‌க்க‌ம் யாழ் உற‌வுக‌ளே புல‌ம் பெய‌ர் நாட்டில் என‌க்கு தெரிந்த‌ அண்ணா 2009ம் ஆண்டு இறுதி க‌ட்ட‌ போரில் பாதிக்க‌ ப‌ட்ட‌ 10 குடும்ப‌த்துக்கு ( மாத‌ம் ஒரு குடும்ப‌த்துக்கு 10000 ஆயிர‌ம் ரூபாய் ப‌டி ப‌த்து குடும்ப‌த்துக்கு த‌ன் சொந்த‌ ப‌ண‌த்தில் உத‌வி செய்திட்டு இருக்கிறார் / 10 குடும்ப‌த்துக்கும் இல‌ங்கை காசுக்கு மாச‌ம் ஒரு ல‌ச்ச‌ம் ப‌டி / அண்ணாவை 2000ம் ஆண்டில் இருந்து என‌க்கு தெரியும் , அண்ணாவின் ம‌னைவி டாக்ட‌ர் , அண்ணாவுக்கு மூன்று வீடுக‌ள் இருக்கு , அதில் இர‌ண்டு வீட்டை வாட‌கைக்கு விட்டு இருக்கிறார் / அவ‌ரின் ம‌னைவியின் வ‌ருமான‌ம் மாச‌ம் 4500 இயுரோ / த‌ங்க‌ளின் சொந்த‌ காசில் போரால் பாதிக்க‌ ப‌ட்ட‌ 10 குடும்ப‌த்துக்கு உத‌வின‌ம் / இப்ப‌டியும் ந‌ல்ல‌ உள்ள‌ம் ப‌டைச்ச‌ ம‌னித‌ர்க‌ளை க‌ண்ணால் காண்ப‌து அரிது / சின்ன‌னில் என் மேல் காட்டின‌ அதே அன்பு பாச‌மும் இப்ப‌வும் காட்டுவார் / அவ‌ருக்கும் எங்க‌ள் நாட்டில் காசு சேர்க்கும் ஆட்க‌ளை க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது , ஏன் என்றால் அவ‌ர்க‌ள் இட‌த்தில் நேர்மை இல்லை , மாவீர‌ நாளுக்கு காசு சேர்க்க‌ வ‌ந்தா 100இயுரோவை குடுத்து அனுப்பி விடுவ‌ர் / வீட்டுக்கை வாங்கோ இருங்கோ என்று கூட‌ சொல்ல‌ மாட்டார் காசு சேர்க்க‌ வார‌ ஆட்க‌ளுக்கு / நான் அவ‌ரின் த‌ம்பி என்ர‌ முறையில் எல்லாத்தையும் ம‌ன‌ம் விட்டு சொல்லுவார் , த‌லைவ‌ர் ம‌ற்றும் மாவீர‌ர்க‌ள் மேல் உள்ள‌ ப‌ற்றால் தான் மாவீர‌ நாள் செய்ய‌ காசை குடுக்கிறேன் ம‌ற்ற‌ம் ப‌டி உவையை விட்டு த‌ள்ளி நிப்ப‌து ந‌ல்ல‌ம் என்பார் / அண்ணாவின் உள் கோவ‌த்தை என்னால் புரிந்து கொள்ள‌ முடியுது / 2009ம் ஆண்டு எவ‌ள‌வு காசை பொய் சொல்லி ஆட்டைய‌ போட்ட‌வை / அப்ப‌ நாங்க‌ள் சின்ன‌ பிள்ளைக‌ள் / நானும் என‌து வ‌ய‌து இர‌ண்டு ந‌ண்ப‌ர்க‌ளும் இன்னொரு மாமாவும் சேர்ந்து இல‌ங்கை காசுக்கு 30 ல‌ச்ச‌ம் ரூபாய் குடுத்தோம் / காசு குடுத்து ஒரு மாத‌ கால‌த்துக்கை ஆயுத‌ம் மெள‌வுனிக்க‌ ப‌ட்ட‌து என்று போராளிக‌ள் அறிவிச்சிட்டின‌ம் / புல‌ம் பெய‌ர் நாட்டில் காசு சேர்த்த‌வேண்ட‌ பிராட்டு த‌ன‌ம் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் வெளியில் வ‌ர‌ ஆர‌ம்பிசிட்டு அந்த‌ நாட்க‌ளில் / 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு நான் மாவீர‌ர் நாளுக்கு கூட‌ போன‌து இல்லை , போனா உந்த‌ பிராடுக‌ளை பார்த்தா அதிக‌ கோவ‌ம் வ‌ரும் என்ர‌ ப‌டியால் / ( இறுதி போரில் பாதிக்க‌ ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு புல‌ம் பெய‌ர் நாட்டு எம் உற‌வுக‌ள் இன்னும் ந‌ல்ல‌ உத‌விக‌ளை செய்து இருப்பின‌ம் , போராட்ட‌த்துக்கு காசு சேர்த்த‌ பிராடுக‌ள் செய்த‌ வேலையால் , ம‌க்க‌ள் குழ‌ம்பி போய் உள்ள‌ன‌ர் / ஊருக்கு போனால் பாதிக்க‌ ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு தானே நேரா போய் உத‌வுறேன் என்று என‌து ம‌ச்சான் சொன்னான் , அவ‌ன் பெரிய‌ உண‌வ‌க‌ம் வைச்சு இருக்கிறான் , அவ‌னுக்கும் உந்த‌ புல‌ம் பெய‌ர் நாட்டில் காசு சேர்ப்ப‌வ‌ர்க‌ளை க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது / ( மாவீர‌ர் சிந்தின‌ வேர்வையில் இர‌த்த‌தில் காசை ஒரு போதும் கொள்ளை அடிக்க‌ கூடாது , அந்த‌ பாவ‌ம் அவ‌ர்க‌ளை சும்மா விடாது ) நான் எழுதின‌தில் ஏதாவ‌து குறை இருந்தா சுட்டி காட்ட‌வும் / ப‌திவு பைய‌ன் 26
  10. 5 points
    எல்லா விஞ்ஞானிகளும் நம்மட ஊருல இருந்தா.. பாவம் வெள்ளையள் என்ன செய்வினம்..
  11. 5 points
    யுத்ததின் பின்னரான காலப்பகுதியில் சிக்கி சின்னாபின்னமாகி யாருமற்ற அரசியல் அநாதைகளாய் எம் மக்கள் வாழும் இந்த சூழ்நிலையில், தமிழர்களான இவர்கள் அங்கவீனமுற்ற ஆயிரக்கணக்கான போராளிகள் பொதுமக்கள் வாழ்வை மேம்படுத்த ஏதாவது செய்திருந்தால் அவர்களை பெருமையுடன் தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ளலாம். வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கி திணறும் தாயபகுதியின் படித்த/படிக்காத இளைஞர் யுவதிகளுக்கு அவர்களால் முடிந்த அளவு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க முயன்றிருந்தால் தமிழர்கள் என்று பெருமைபடலாம், சக தமிழர்களின் இந்து கடவுளை சிங்களவர்களும் முஸ்லீம்களும் அவமதித்தபோது நாங்களும் தமிழர்கள் என்று இந்த மதமாற்ற கோஷ்டிகள் எதிர்த்திருந்தால் இவர்களும் எங்கள் தமிழர்கள் என்று ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால் தமிழர்களாய் அவர்கள் இருப்பதால் தமிழர்களுக்கு இவர்கள் செய்யகூடிய ஒரே சேவை மதம் மாற்றுவது ஒன்று மட்டும்தானா? தற்போது தமிழர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் தீர்வு மதமாற்றம் ஒன்றுதானா? யாழ்நகரில் தமிழ்பேசும் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள் எங்கே அவர்கள் வீட்டுக்கதவை தட்டி இயேசு அழைக்கிறார் என்று செய்தி சொல்லும் தைரியம் இந்த தமிழ்பேசும் மதமாற்ற கிறிஸ்தவர்களுக்கு உண்டா? அதெப்படி இந்தியாவிலும் இலங்கையிலும் இந்துமத மக்களை மட்டும்தான் இயேசு அழைக்க ஆசைப்படுகிறார்? அது ஏன் என்று உங்களிடம் ஏதாவது விளக்கம் இருந்தால் பகிருங்கள் அறிய என்னைபோல் பலர் ஆவலாய் இருக்கலாம். சுயவிருப்பின்பேரில் மதம் மாறியவர்களுக்கு எதிராய் தாயகத்தில் எவரும் போர்கொடி தூக்குவதில்லை, பிறர் விருப்பை கணக்கில் கொள்ளாது தமது மதத்தை திணிப்பவர்பவர்களின்மீதே வெறுப்பு உண்டாகிறது என்பதை நீங்கள் மறைத்து பேசுவதாய் நீங்கள் உணரவில்லையா? பாரம்பரிய இந்து கிறிஸ்தவர்களாய் வாழும் தமிழர்களுக்கிடையில் மத பேதங்கள் மோதல்கள் இருந்ததில்லை, ஆனால் இனிமேல் அது உருவாகும் ,அதற்கு காரணம் இந்த மதமாற்ற கோஷ்டிகள். இஸ்லாமியரும் சிங்களவர்களும் தமது மதங்கள் சார்ந்த அரசியலை தமிழர்கள்மேல் திணித்ததனால்தான் காலம் முழுவது ம் இனபூசல் அவர்களுக்கும் தமிழர்களுக்குமிடையில் தொடர்கிறது, அதையே நீங்கள் சொல்லும் தமிழர்கள் எனப்படுவோர் தமிழர்கள்மீது செய்யலாம் தவறில்லை என்ற தொனியில் கூற வருகிறீர்கள்போலும். எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இதுபோன்ற செயல்கள் எதிர்காலத்தில் இந்து தமிழர்கள் கிறிஸ்தவ தமிழர்களுக்கும் நீண்டகால மோதல் என்ற மிக ஆபத்தான எதிர்காலமொன்றை இந்த மதமாற்ற கோஷ்டிகள் உருவாக்குவார்கள். அப்போதும் புலிகள் இருந்திருந்தால் இந்த மதமாற்ற கோஷ்டிகளால் இப்படி நடந்திருக்காது என்று இதே வசனத்தை ஒரு எழுத்து பிழைக்காமல் பகிர்வீர்கள். இயேசு பாவங்களை கழுவுவார் என்று அங்குள்ள மக்கள் விரும்பாத ஒன்றை திணிக்கும் இந்த கோஷ்டிகளுக்கு, ஒன்று புரியவில்லை ஒற்றுமையாய் வாழும் ஒரு இனத்தை மதத்தின் பெயரால் உடைத்துவிடுவதுதான் உலகிலேயே மிக பெரிய பாவம் .
  12. 5 points
    ரதி , பாசுமதி, மற்றும் தீட்டிய அரிசிகளை விடவும் தீட்டாத குத்தரிசி, மொட்டைக்கறுப்பன் அரிசிகள் ஆரோக்கியமானவை. (ஆனால் இவற்றையும் கூட அதிகமாக உட்கொண்டால் அது மிகையான மாச்சத்தை உள்ளெடுப்பதாகவே அமையும்). தீட்டாத அரிசிகளில் இருக்கும் முக்கியமான நன்மைகள்: 1. நார்த்தன்மை அதிகம் என்பதால் சமிபாடடைய அதிக நேரம் எடுக்கும். இதனால் உடலில் குளூக்கோஸ் உடனடியாக அதிகரிக்காது, இதனால் நீரிழிவு நிலைமைகள் ஏற்படாது. மாச்சத்துள்ள உணவுகள் எவ்வளவு வேகமாக குளூக்கோசை அதிகரிக்கின்றன என்று கணிக்கும் அளவீட்டை கிளைசீமிக் இண்டெக்ஸ் (Glycemic Index - GI) என்று அழைப்பர்.GI 55 இற்குக் கீழ் உள்ள மாப்பொருட்கள் நீரிழிவு வரும் வாய்ப்பைச் சிறிது குறைக்கின்றன. தீட்டிய வெள்ளை அரிசியின் GI 79, தீட்டாத அரிசியின் GI 55. வெள்ளை பாஸ்மதி அரிசியை விட பிறவுண் நிறமான தீட்டாத பாஸ்மதி அரிசி GI ஐப் பொறுத்த வரை ஆரோக்கியமானது. அதுவும் ஏறத்தாழ GI 55 தான். 2. தீட்டாத அரிசியில் இருக்கும் நார்த்தன்மை உணவோடு சேர்ந்து எமக்குள் உள்நுழையக் கூடிய நச்சுத் தன்மையான பொருட்கள் குடலினால் உறிஞ்சப் படுவதைக் குறைக்கும். இதனால் பெருங்குடல் புற்று நோய் (colon cancer) போன்ற நோய்கள் வரும் வாய்ப்புக் குறையும். நார்த்தன்மை குறைவான உணவுகளோடு அதிகம் இறைச்சியையும் உண்பதால் மேற்கு நாடுகளில் பெருங்குடல் புற்று நோய் ஒரு பரவலான புற்று நோயாக உருவாகி வருகிறது. 3. இது இன்னும் ஆய்வில் இருக்கும் ஒரு விடயம்: நார்த்தன்மையான உணவுகளால் குடலில் இருக்கும் சில பற்றீரியாக்கள் பெருகி நன்மையடைவதால் எங்கள் உடலின் பல்வேறு உறுப்புகளிலும் விளைவுகள் ஏற்படும். அனேகமாக நன்மையான விளைவுகளே! Probiotic yogurt என்று வெளிநாடுகளில் விற்கிறார்கள். அதில் இருப்பது இப்படியான நல்ல விளைவுகள் தரும் குடல் பக்ரீரியாக்கள் தான். நார்த்தன்மையான தீட்டாத அரிசியும் ஏனைய மரக்கறி பழ வகைகளும் போதியளவு உட் கொண்டால் probiotic yogurt அவசியமில்லை. ஆனால் நீங்கள் சொல்வது போல, வெள்ளை அரிசி சாப்பிடும் அதே அளவில் குத்தரிசி சாப்பிட முடியாது! என் அனுபவத்தில் பாஸ்மதியின் மூன்றிலொரு பங்கு குத்தரிசி சாப்பிட்டால் வயிறு நிரம்பி விடும். அது நல்லதும் தானே? முயற்சி அதிகமற்ற உணவுக் கட்டுப் பாடு!
  13. 4 points
    அனைத்து கணவன்மாரும் இவரிடம் இருந்து பாடம் படியுங்கோ
  14. 4 points
    இந்து மதமல்லாத பிற மதங்களைப் பற்றியும் எழுதவேண்டிய காரணத்தைக் கேட்போருக்கு: இந்து மத மூடநம்பிக்கையை எதிர்ப்பதாக இவ்வாறான பல திரிகள் முன்னரும் ஆரம்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. இது இங்குள்ள பலருக்கும் தெரியும். இத் திரிகளுக்கு கருத்து எழுதுபவர்கள் ஒட்டுமொத்தமாக இந்து மதத்தில் இருக்கும் வேறு பல நம்பிக்கைகளையும் அனாவசியமாகக் கேலி செய்கிறார்கள் என்று திரிகளை முழுவதுமாக வாசித்தவர்களுக்குப் புரியும். இவ்வாறு அவர்கள் வீண் வம்பிழுக்கும்போது நாமும் தலைப்பை விட்டு விலகி அவர்களின் கருத்துக்கு மறு கருத்து எழுதவேண்டிய நிலை உள்ளது. மற்ற மதங்்களிின் குறைகளை எழுதுவதன் நோக்கம் 'எல்லா மதங்களிலும் குறைகள் உண்டு தான். அதற்காக இந்து மதத்தை இலக்காக வைத்து நடாத்தப்படும் அனாவசிய தாக்குதல்களை வேடிக்கை பார்க்க எனது மனம் ஒப்பவில்லை. கூடவே ஏனைய மதங்களின் குறைகளை மறைக்கும் போது அதைச் சுட்டிக் காட்டி குறைகள் எங்கும் உண்டு எனப் புரியவைக்கத் தான். ஏனைய மதங்களை கிண்டவடிக்கும் திரிகளை நானாகவே ஆரம்பித்ததும் கிடையாது. அவ்வாறான திரிகளில் நான் அநாவசியமாக மூக்கை நுழைப்பதும் இல்லை. இங்கு ஒரு படத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வர முடியாது. சம்பந்தப்பட்ட பெற்றோரை விசாரித்தால் அல்லது அந்த இடத்தில் இருந்தோரைக் கேட்டால் தான் இதற்கான தெளிவான பதில் கிடைக்கும். பெரிய பதவியில் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய பாதிரியார்கள் செய்த பாலியல் தவறுக்கும், இந்தப் படத்திற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. முன்னுதாரணமாக இருக்க வேண்டியோரை முதலில் திருத்தலாமே!
  15. 4 points
  16. 4 points
  17. 4 points
    மிக மோசமான பிற்போக்குத்தனமான தலைப்பு போட்டுள்ளார்கள். அத்துடன் பழைய செய்தியும் ஆகும். இதனால் தான் அநாமதேய தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதை தவிர்க்குமாறு நாம் கேட்பது.
  18. 4 points
    மனிதர்களிடையே collective learning என்பது உருவானதே ஹோமோ சேபியன்ஸ் உருவான பின்னர் தான். ஒரு 40 முதல் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தான் உருவாகியிருக்கலாம் என தொல்லியல் ஆய்வு சொல்கிறது. இப்படி இருக்க கடவுளரும் வழிபாட்டு முறையும் 1.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாக எந்த வகையான ஆதாரத்தை வைத்துக் கொண்டு சொல்கிறீர்கள்? புராணங்கள்? இதிகாசங்கள்? ஏனெனில் 1.2 மில்லியனுக்கு முந்தைய வாழ்க்கை முறையை ஆராயும் தொழில்னுட்பங்களே இன்னும் உருவாகவில்லை.
  19. 4 points
    கிழக்கில் ஆளுநரை மாற்ற சொல்லி பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடந்த்து காரணம் பக்க சார்பாக நடந்து கொண்டது கிழக்கு முஸ்லீம் அமைச்சரிடம் கொடுக்கப்பட்ட போது எல்லாம் இனம் சார்பாக நடந்தது இது கூத்தமைப்பு செம்புகளும் ஒத்துக்கொண்டுள்ளார்கள் முஸ்லீம்களை விட சிங்கள முதலமைச்சர் வந்தாலும் பரவாயில்லை தமிழரரை விட ஏதாவது அரசிடம் பேசி செய்வார் ஆனால் தமிழர் வந்தால் பேசுவார் செய்யமாட்டார் இது அன்றிலிருந்து இன்றுவரைக்கும் அரசியல் வாதிகளும் அப்படியே கல்முனையை இர் இனமும் விட்டுக்கொடுக்காது பேச்சு வார்த்தையில் 3 பிரதேச செயலகங்கள் பிரிந்தால் அங்கே நிலங்கள் ஊர்கள் அந்தந்த பிரதேச செயலங்களுக்குள் செல்லும் போது அவர்களுக்கு சாதகமே இன்று கல்முனைக்கு தமிழர்கள் கேட்க அவர்களோ மட்டக்களப்பிலும் , தோப்பூரிலும் தங்களுக்கு பிரதேச செயலகம் கேட்கிறார்கள் இதுதான் அவர்கள் நீங்கள் இன்னும் தோழர் தோழர் என்று தோள்கொடுத்துக்கொண்டே இருக்கிறீர்கள். நாங்கள் மிதிபட்டுக்கொண்டே இருக்கிறோம் எல்லோராலும் பாதைக்கு மேல் பாதையை போடுவதால் முன்னர் உள்ள பாதையை அழித்து விடலாம் என அவர்கள் நினைத்து தமிழர்கள் விடுக்கும்கோரிக்கைக்கு அவர்களும் கோரிக்கை விட்டுக்கொண்டே இருக்கிறார்கள் ஐயா இதை நீங்கள் புரிந்து கொள்ள இன்னும் நாள் எடுக்கும் என நான் நினைக்கிறன்
  20. 4 points
  21. 4 points
    நல்ல ரெசிப்பி . சூப்பர் டேஸ்ட்டாக இருந்தது. நன்றி
  22. 4 points
    தனுஷ்கோடி, ராமேஸ்வரம் எல்லாம் சேர்த்துவிடுங்கோ.. கேட்டால் அவை கொடுக்க மாட்டேன் என்டு சொல்ல போகினமா..?
  23. 4 points
    அவள் மரத்தடியில் நூல் நூற்றுக் கொண்டிருந்தாள்.. கைகள் தறியில் லயித்திருந்தாலும், மனம் முழுதும் மாறனே வியாபித்திருந்தான். உள்ளத்தில் அவன் நினைப்பு வர உதட்டில் புன்னகை அரும்பியது! பால்யவயதுத் தோழன் தான், எனினும் பருவ வயது வந்தவுடன் தான் அந்த மாற்றம் புரிந்தது! அவனைப் பார்த்ததும் எங்கிருந்தோ அவளுக்கு வெட்கம் வந்துவிடும், சொற்கள் இடம்மாறும்! கால்கள் தடுமாறும்!! பக்கத்து வீட்டு வள்ளி சொல்லித்தான் தெரிந்தது இது "அது" தான் என்று... கிட்டத்தட்ட 10 வருடங்கள்... 10 இன்பமயமான வருடங்கள்... அவனுக்காக காத்திருப்பதிலும், கதை பேசுவதிலும் அத்தனை இன்பம் அவளுக்கு...! இடையிடையே கைபிடிப்புகள், கட்டியணைப்புகளும் இடம்பெறத் தவறுவதில்லை. அரசகுமாரி அவள்.. அரண்மனை தோட்டகாரன் மகன் அவன்..! காதலுக்கு தெரியுமா சாதி பேதம்... மொட்டாகி முகிழ்ந்து மாலையாக காத்திருந்தது அவர்களது காதல்.... அன்றைய சந்திப்பு அதிவிசேசமானது! அவளது தந்தையிடம் அனுமதி பெறவென்று அவன் சென்றிருந்தான். தாயிடம் அவள் ஏலவே சொல்லியிருந்தாளாயினும் தந்தையின் கோபம் அவள் அறியாததல்ல.. மனம் படபடக்க காத்திருந்தாள்! ஆஹ் . அதோ இலை அசைகிறது, அவன் வந்து விட்டான் என எழுந்... அய்யோ அது வள்ளி அல்லவா.. வள்ளியின் நடையில் ஏன் அவசரம், கண்ணில் கலவரம்? நடக்கக் கூடாதது ஏதோ நடந்து விட்டது, " முருகா " ......... என்றவளின் குரல் முருகனுக்கு கேட்டிருந்தால் ஒருவேளை முள்ளிவாய்க்காலில் மூன்று லட்சம் பேர் இறந்திருக்க தேவையில்லாமல் இருந்திருக்கும்! அந்தோ,! இடியை இறக்கினாள் தோழி! அவள் மாறனின் தலை தந்தையின் வாள்வீச்சில் தனியாகி விட்டாதாம்... அதிர்ச்சியில் உறைந்தாள்.. அழுகை வரவில்லை.. உணர்ச்சிகள் திடீரென மரத்துவிட்டன அவளுக்கு... அடக்கிய உணர்ச்சிகள் யாவும் தந்தையின் மீதும், தன்னை வாழவிடாத அந்த ராஜ்ஜியத்தின் மீதும் அனலாய் திரும்பியது.. கண்ணகியல்லவே அவள் கனலாய் பொழிந்து அந்த மண்ணை அழிக்க.. காத்திருந்தாள்..! அன்றிலிருந்து சரியாக ஒரு மாதம் கழிந்து.... ******************** .... அவள் அந்த மரத்தடியில் நூல் நூற்றுக் கொண்டிருந்தாள்... தூரத்தில் வந்து கொண்டிருந்தது, அந்த இளவரசனையும், அவனது எழுநூறு தோழர்களையும் ஏற்றிய கப்பல்... அவனது பெயர் விஜயன்.!! பின்னுரை! மாறனின்_தலை_அவனது உடலிலேயே அன்று இருந்திருப்பின், இலங்கையின் இன்றைய சனாதிபதி சம்பந்தராகவும், பிரதமர் சுமந்திரனாகவும் இருந்திருக்கக் கூடும்!! ஆக்கம் பேரின்பராஜா சஜிதன் மூலம் முகப்புத்தகம் இந்த கதையை வாசிக்கவே கண்ணைக் கட்டுதே!
  24. 4 points
    இது யாருக்கும் எப்போதும் நடக்க கூடியதுதான். எவ்வாளவு பெரிய சுழியனாக இருந்தாலும் சிலசமயம், மேலோட்டபார்வைக்கே தெரியும் ஓட்டைகள் கண்ணுக்கு தெரியாமல் போய்விடும். அந்த நேரத்தில் அவரவர் இருக்கும் மனோநிலை, அவசர பணத்தேவை, அல்லது திரில் எதிர்பார்க்கும் போக்கு, அவர்கள் பேசும் விதம், பேராசை இப்படி ஒரு விநோதமான கலவை சில நேரங்களில் சிலரை ஒரு மாயவலையில் வீழ்தி விடும். நான் வழமையாக இப்படியான இடங்களில் வலு அவதானமாக இருப்பேன். ஆனால் ஒருமுறை ஒரு Pub இல் reverse auction எனும் ஒரு வகை சுத்து மாத்தில் £10 ஐ இழந்துள்ளேன். 10 ரூபாயை புத்தி கொள்முதல் என்று விட்டு விட்டேன். ஆனாலும், சே நம்மை முட்டாளக்கி விட்டனர் என்ற கடுப்பு ஒரு வாரத்துக்கு இருந்தது வெளிநாடுகளில் இப்படி பணத்தை இழப்பார்கள் ஏராளம். நைஜீரியா ஈமெயில், பங்கு சந்தையில் அடுத்த ஆப்பிள் போல அள்ளலாம், HMRC இல் இருந்து அழைப்பு இப்படி பலவகை. 20 வருடங்களுக்கு முன் 10 பவுண் கொடுத்து படித்த பாடம், இன்றுவரை என்னை காப்பாற்றி வருகிறது வெளிநாடுகளில் இப்படி பணத்தை இழப்பவர்களை victims என்றே பார்ப்பார்கள் ( கீழே இணைப்பை பாக்கவும்). நம் ஊரில் இயலாத பிள்ளைகளையே, மொக்கன், வலசு என்று இகழ்கிற ஆக்கள் நாங்கள். பாவம் இந்த அதிபர், பேஜ் தமிழ், யாழ் என செய்தியாகி, தோச்சு தொங்க விடப்படுகிறார் . பள்ளிகூடத்தில பொடியள் என்ன வாங்கு வாங்கப்போறாங்களோ? அவமானத்தில் தற்கொலைக்கு முயலாதவரை ஓகே. https://www.dailymail.co.uk/news/article-6824093/How-fake-taxmen-targeted-64-year-old-mourning-mothers-death-scam-19-000.html
  25. 4 points
    சுமந்திரன்.... ஒரு தவறை மறைக்க, பல பொய்களை... சொல்லி அம்பிட்டு விட்டார், என்பதை... மேல் உள்ள இரண்டு மேற்கோள் காட்டலிலும், தெட்டத் தெளிவாக தெரிகின்றது. தமிழர் பிரச்சினைக்கு ஒரு தமிழ் அமைச்சரான மனோ கணேசனின் அழைப்பை ஏற்று... இவர்களால்... போக, அவர்களின் தன்மானம் தடுத்துள்ளது என்பதே உண்மை. இப்படிப் பட்ட... கீழ்த்தரமான சுயநல அரசியல்வாதிகளை, இனம் காண வேண்டிய நேரம் இது. இதனை... "வைக்கோல் பட்டறை... ****" என்று, தமிழில் ஒரு பழமொழியில் சொல்வார்கள். அதாவது... தானும் செய்ய மாட் டார்கள், மற்றவர்களையும் செய்ய விடாமல், ஒன்றுக்கும் உதவாத, நொட்டை காரணம் சொல்லி, தப்பிக்க பார்ப்பார்கள்.
  26. 3 points
    உங்க நம்பிக்கை நீங்க உங்க பெற்றோர் மேல் வைச்சிருக்கும் உயர்ந்த மதிப்பை, பாசத்தை வெளிப்படுத்துகிறது. ஏதாவதொரு நம்பிக்கை இருந்தா தான் வாழ்க்கையும் அர்த்தமுள்ளதாக இருக்கும்!
  27. 3 points
    உறவுகள் யாரும் தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம். தானாகவே விவாகரத்து எடுத்து இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்த படி முதல் மனைவி மீது விமர்சனம் வைக்கும் போது ???????
  28. 3 points
    'நேர் கொண்ட பார்வை' திரைப்படமானது சராசரியான தமிழ்த்திரைப்படங்களில் இருந்து எவ்வாறு வேறுபட்டு ஓர் தனித்துவமான படைப்பாகத் தரப்பட்டுள்ளது? பெண் சுதந்திரம், பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள் இவை பற்றி வெறுமனே ஓரிரு வரிகளில் / காட்சிகளில் மட்டுமே மேலோட்டமாகச் சொல்லாமல், ஒரு இரவில் மூன்று பெண்கள் எதிர்கொண்ட இவ்வாறான ஓர் சம்பவத்தின் விளைவுகளை உணர்வு பூர்வமான பல காட்சியமைப்புக்கள் மூலமாகச் சித்தரித்தமை ஒரு காரணம். அடுத்து, படத்தின் இடைவேளையைத் தொடர்ந்து வந்த தொடர்ச்சியான நீதிமன்றக் காட்சிகள் அச்சம்பவம் தொடர்பான ஆணாதிக்க மனோநிலை, பாதிக்கப்பட்ட பெண்களின் ஏக்கம், தயக்கம், ஏமாற்றம் இவற்றை இரு பக்க வக்கீல்களின் வாதங்கள், பாதிக்கப்பட்ட பெண்களின் தடுப்பு வாதங்கள் மூலமாக அக்கு வேறு ஆணிவேறாக எடுத்துரைத்தமை இன்னொரு பலமாக அமைந்தது. வெறுமனே சமூகத்துக்கான ஒரு வரி அறிவுரை/செய்தியாக இருக்காமல் நீண்ட நேர விரிவுரை போல அமைந்தது - ஒரு social message என்பது இவ்வாறு தான் மக்களுக்குச் சொல்லப்பட வேண்டும். ("அளவுக்கு அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அளவுக்கு அதிகமா கோபப்படுற பொம்பளையும் வாழ்க்கையில நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல" போன்ற சூப்பர்ஸ்டார் பஞ்ச் வசனங்கள் பாலாபிஷேகம் செய்யும் வெறித்தனமான ரசிகர்களைக் குஷிப்படுத்தலாம்; ஆனால், இது போன்ற பஞ்ச் வசனங்கள் பஞ்சு போலத் தான் - கனதியான செய்தி சொன்னதாகவும் சரித்திரம் இல்லை! இன்னொரு காரணம், அஜித்தின் பாத்திர வடிவமைப்பு, படத்தில் தேவையான அளவுக்கு மட்டுமே அதைப் பயன்படுத்தியமை மற்றும் அஜித் அதனைத் தனது ஆர்ப்பாட்டமில்லாத உடல் மொழி, வசனப் பிரயோகம் மூலம் மேலும் வலுச்சேர்த்தமை. அதிரடி நாயகனாக பஞ்ச் வசனம் பேசுவதை விட இந்த வேடம் நம்மை மிகவும் கவர்ந்தது. வயதுக்கேற்ற முதிர்ச்சி! கூடவே ஏனைய கதாபாத்திரங்கள் - குறிப்பாக அபிராமி, ஷ்ரத்தா, ஆண்ட்றியா ரறியாங் மற்றும் பாண்டே போன்றோரின் யதார்த்தமான நடிப்பும் குறிப்பிடத்தக்கவை. இவை தவிர, வலிந்து திணிக்கப்படாத, கதையின் ஓட்டத்துடன் செல்லும் பாடல் காட்சிகளும், பின்னணி இசை என்று நம்மைப் பிரித்து யோசிக்கத் தூண்டாத யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் அருமை. ஆரம்பக் காட்சியான club dance காட்சி நேரடி அனுபவம் போல் இருந்தது. அது போல் படத்தின் நிறைவாக படத்தின் மையக்காட்சியை CCTV camera காட்சி போல் தொகுத்தளித்ததும் அருமை. (ஒளிப்பதிவு: நிரவ் ஷா) இந்தித் திரைப்படமான 'Pink'இன் நேரடித் தழுவல் இது. இவ்வாறான திரைப்படங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. பெரிய நடிகர்களின் மசாலாப்படங்கள் சலிப்புத் தட்டுகின்றன என்று கூறியே சலித்துவிட்டது! Yes....! Yes means YES!!! இது அஜித் படமல்ல - எனினும் அஜித்துக்குப் பெருமை சேர்க்கும் இன்னொரு பரிமாணம் இது. அவர் நடித்ததால் இப்படம் சொல்லும் செய்தியும் பெறுமதியாகத் தெரிகிறது. நேர் கொண்ட பார்வை ~ இது ஓர் ஆழமான சமூகப் பார்வை; கூடவே, தல ரசிகர்கள் அவரைப் பார்க்க வேண்டிய புதிய பார்வை!
  29. 3 points
    ஓம் ....அஜித் ஹீரோயிஸம் எதுவும் காட்டவில்லை. இயல்பான ஒரு வக்கீல். அவரைவிட எதிர்க்கட்சி வக்கீல் அட்டகாசம்.நீங்கள் நேரில் அந்தப்படத்தை பார்க்க வேண்டும்.......! இன்றைய பிள்ளைகள் (ஆன்/பெண்) சர்வ சாதாரணமாக டேட்டிங் போகிறார்கள். சிறு வயதிலேயே நன்றாக படிக்கிறார்கள்.நல்ல வேலைகளுடனும் கை நிறைய சம்பளத்தோடும் இருக்கிறார்கள்.நாடு விட்டு நாடு கண்டம் விட்டு கண்டம் சென்று ஓட்டல்களில் தங்கிவிட்டு எதுவித குற்றவுணர்வும் இல்லாமல் வருகின்றார்கள்.அதை அந்தப்படமும் பிரதிபலிக்கின்றது. நான் மிகவும் குறைத்து சொல்லி இருக்கிறேன்.நீங்கள் பாருங்கள் புரியும். வளர்ந்த பிள்ளைகள் இருந்தால் மறக்காமல் அழைத்து செல்லுங்கள்.....!
  30. 3 points
    மதம் ஒரு ஆயுதம், அதை வைத்து இனத்தை, அரசியலை, வியாபாரத்தை என பலதை கட்டியெழுப்ப முடியும். மதத்தை பத்திசாலித்தனமாக கைளாயத் தெரியாதபோது அவற்றால் அழிவுகள் எற்படும். மிகச் சிறுபான்மை பிராமணர்கள் இந்திய அதிகாரத்தை இன்றுவரை தமது கையில் வைத்திருப்பதற்கு அன்று அவர்கள் மதத்தை புத்திசாலித்தனமாக கையாண்டார்கள். சில தலமுறைக்கு முன்பு மணியாட்டி பூசை செய்தவர்கள் தான் இன்று அரசியல் தலமைகள் நீதிபதிகள் அரச நிர்வாக தலமைகளாக இருக்கின்றார்கள். சிங்களமும் பொளத்த மதத்தை அடிப்படையாக வைத்து தேசீய இனத்தை கட்டியெழுப்பியது. மதம் மட்டுமில்லை மக்கள் சக்தி ஒருமிக்கும் அலகுகள் எல்லாம் சரியான முறையில் துரநோக்கோடு பயன்படுத்தப்படும் போது அவை பலனுள்ளதாக இருக்கின்றது. ஈழத்தை பொறுத்தவரை தொன்றுதொட்டு மதம் எம்மை நாமே அழிக்க சிதைக்க பயன்படுத்தப்படுகின்றது . எக்காலத்திலும் அதை ஆக்க சக்தியாக பயன்படுத்தியதில்லை கடவுள் இல்லை என்ற கருத்தில் வந்த திமுக வின் சண் ரிவி இன்று தொலைக்காட்சித் தொடர்கள் ஜோதிட பரிகாரங்கள் திருத்தல யாத்திரைகள் என்று பெரியார் எதை காட்டு மிராண்டி என்றாரோ அதை ஆயிரம் மடங்கு அதிகமாக செய்கின்றது. ஏனெனில் அது கோடிகள் புளங்கும் வியாபாரம். கடவுள் இலலை என்ற கருத்திலையும் சரி இருக்கு நம்பிக்கைகளையும் சரி சரியான முறையில் பயன்படுத்தி அரசியல் அதிகார பண வெற்றியை அடைகின்றார்கள். ஒரு விசயத்தை காட்டுமிராண்டித்தனம் என்பது அதை எப்படி பயன்படுத்துகின்றறோம் என்பதைப் பொறுத்துதான் இருக்கின்றது. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்"
  31. 3 points
    இந்து மதத்தில் அல்லது ஏதாவது ஒரு மதத்தில் தன் உடலை வருத்தி, இரத்தம் சிந்தி, ஊசிகளை ஏற்றிக் கொண்டு வழிபட்டால் கடவுள் அனுக்கிரகம் செய்வார் என்று சொல்லப்பட்டு இருக்கா? தன்னை வருத்தி (உண்ணாமல் இருப்பது, தோப்பு கரணம் இடுவது.,..) இறைவனுக்கு தன்னை அர்ப்பணிப்பது வேறு, தன்னை சித்திரவதை செய்து அதன் வலியை இறைவனுக்கு அர்ப்பணிப்பது வேறு. தன்னை சித்திரவை செய்வது காட்டுமிராண்டித்தனம். எல்லா மதங்களிலும் இப்படியான காட்டுமிராண்டித்தங்கள் இருக்கின்றன. இஸ்லாமியர்கள் பெண்களை முழுக்க மூடும் ஆடைகளை அணியச் செய்வதில் இருந்து, சிறுமிகளை மணம் முடித்து வைப்பது வரை பல காட்டுமிராண்டித்தங்கள் உள்ளன. அதே போன்று இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தியதை ஏனைய கிறிஸ்தவர்களின் பாவங்களை கழுவுவதற்காகவும் என நம்பப்படுவதும் காட்டுமிராண்டித்தனமே. பாவத்தில் இருந்து பிறந்த மதமாக கிறீஸ்தவம் இருக்கின்றது. அஹிம்சை மதம் என சொல்லப்படும் பெளத்தத்திலும் சிறுவர்களை புத்த பிக்குகள் ஆக்குவதில் இருந்து இனவழிப்பை நியாயப்படுத்தும் காரணிகளை கொண்டு இருப்பது வரைக்கும் காட்டுமிராண்டித்தனங்களே. என்னைக் கேட்டால் குகைகளில் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த மனித இனம் நாகரீகமடைந்த ஒரு இனமாக முற்றிலும் மாறுவதை தடுப்பது இப்படியான மத செயல் முறைகளே
  32. 3 points
    நீங்கள் அவரின் கருத்தை சரியாக புரியவில்லை என்று எண்ணுகிறேன் மரக்கட்டையை வைத்து வியாபாரம் செய்வது பொதுவாக எல்லா மதத்துக்கும் பொருந்தலாம். ஒரு குறிப்பிட்ட கொழுப்பெடுத்த சமூகமே தம்மை உயர்சாதி என்று கூறிக்கொண்டு ஒட்டுமொத்த சமூசாகத்தையும் சுரண்டிகொண்டு கொழுப்பெடுத்து வாழ்வது என்பது இந்திய இந்துமதவாதிகளிடம் மட்டுமே உண்டு. படுத்து கிடந்த அதே கட்டைதான் இப்போ சரித்து நிமிர்த்தி வைக்க பட்டுள்ளது இதுக்கு கூட போகும் கூட்டம் சொந்த புத்தியின்றி இந்த கொழுப்பெடுத்த சமூகத்தை சீராட்ட துடிப்பதை ஒரு சமூக விரும்பி தட்டி கேட்டுத்தான் ஆகவேண்டும். கடவுள் நம்ம்பிக்கை வேறு கடவுளை துதிப்பது வேறு கடவுளை காட்டி சமூகத்தை கொள்ளையடிப்பது தட்டி கேட்க வேண்டும். இந்த மர குத்திகளையும் பார்ப்பான கூட்டத்தையும் தூக்கி எறியும்வரை தமிழருக்கு விடிவில்லை.
  33. 3 points
    இந்த விடயத்தை மதங்களுக்கிடையேயான மோதலாக மாற்றாமல் பேச உங்களால் முடியுமா? குமரிக்கண்டம் சிந்து வெளி நாகரீகங்கள் 1.2 மில்லியன் ஆண்டுகள் முன்பு இருந்தனவா? தமிழ் புராதனம் மிக்கது என்பது நிரூபிக்கப் பட்ட ஒன்று! ஆதாரமுள்ள தமிழ் புராதனத்தை விட்டு விட்டு, ஒரு குறிப்பிட்ட மதத்தின் பாற்பட்ட நம்பிக்கைகளோடு இணைத்து ஏன் புருடா விட வேண்டும்? அது தமிழுக்கோ ஈழத்திற்கோ என்ன நன்மையைக் கொண்டு வரும் என்று சொல்லுங்கள்?
  34. 3 points
    ஒட்டகத்துக்கு... இடம் கொடுத்த கதை தான் நினைவு வருகின்றது. -------- //முல்லா தனது ஒட்டகத்தின் மீதேறி தூரதேச பயணம் மேற்கொண்டார். சூரியன் மறைந்து இருட்ட ஆரம்பித்ததால், ஓரிடத்தில் இறங்கி தங்கி காலையில் பயணத்தை தொடர்வது என முடிவு செய்தார். இரவில் கடுமையான குளிர் இருக்கும் என்பதனால் சிறிய கூடாரம் அடித்து அதனுள் படுத்துக் கொண்டார். ஒட்டகத்தை கூடாரத்துக்கு அருகில் கட்டி வைத்தார். சிறிது நேரம் கழித்து யாரோ அழுவது போல் சத்தம் கேட்டது. முல்லா வெளியே எட்டி பார்த்தார். ஒட்டகம் தான் அழுது கொண்டிருந்தது. ஒட்டகத்தை பார்த்து ஏன் அழுகிறாய்? என்று கேட்டார். அதற்கு ஒட்டகம், வெளியே கடுமையாக குளிர்கின்றது. நீங்கள் மட்டும் கூடாரத்துக்குள் படுத்துக் கொண்டீர்களே. என்னை நினைத்து பார்ரத்தீர்களா? என்று பரிதாபமாக கேட்டது. அதன் பரிதாப நிலையை பார்த்த முல்லா, சரி சரி உன் தலையை மட்டும் கூடாரத்துக்குள் வைத்துக் கொள் என்று அனுமதித்தார். மகிழ்ச்சியடைந்த ஒட்டகம் உடனே தன் தலையை கூடாரத்துக்குள் நீட்டிக் கொண்டது. முல்லாவுக்கோ தான் ஒட்டகத்திற்கு உதவி செய்து விட்டோம் என்று பெருமை. கண்ணை மூடி தூங்க முயன்றார். திடீரென ஒட்டகம் பெருங்குரலில் கனைத்தது. கண்விழித்த முல்லா என்னவென்று கேட்டார். தலையை மட்டும் உள்ளே வைத்தால் போதவில்லை. கழுத்தையும் உள்ளே வைத்து கொள்ளட்டுமா? என்று பரிதாபமாக கேட்டது. கழுத்து தானே.. சரி வைத்துக் கொள் என்றார் முல்லா. தனது முழு கழுத்தையும் கூடாரத்துக்குள் கொண்டு வந்த ஒட்டகம்.. முல்லாவை பார்த்து.. என் முன்னங்கால்களையும் உள்ளே வைத்துக் கொள்ளட்டுமா? என்று கேட்டது. இரண்டு கால்கள் தானே.. சரி என்று பெருந்தன்மையாக சொன்னார் முல்லா. மறுபடியும் கண் மூடி தூங்க ஆரம்பிக்க.. ஒட்டகம் மறுபடியும் கனைத்தது. கண்ணைத் திறந்த முல்லா இப்போது என்ன பிரச்சினை? என்று சற்று கோபத்துடன் ஒட்டகத்தை கேட்க, ஒட்டகம் என் காலும் தலையும் உள்ளே இருந்தாலும் உடல் வெளியே இருப்பதால் குளிரை தாங்க முடியவில்லை. உடலையும் கூடாரத்துக்குள் வைத்துக் கொள்ளவா என்று கேட்டது. என் கூடாரம் மிக சிறியது. ஒருவருக்கு மட்டுமே இடம் இருக்கிறது. அதிலே உனக்கும் கொஞ்சம் இடம் கொடுத்து விட்டு நான் ஓரமாக தூங்குகிறேன். இப்போது உன் முழு உடலையும் உள்ளே எப்படி கொண்டு வருவாய்? என்று அப்பாவியாய் கேட்டார் முல்லா. அதற்கு ஒட்டகம் சொன்னதாம்.. நீ ஆறடி கூட இல்லாத சிறிய மனிதன். என் உருவமோ மிகப் பெரியது. அதனால் நீ போர்வையுடன் வெளியே படுத்துக் கொள் என்று திமிராக பதில் சொன்னதுடன் முல்லாவை இழுத்து கூடாரத்துக்கு வெளியே போட்டதாம். பிறகு முழு கூடாரத்தையும் தானே ஆக்கிரமித்துக் கொண்டதாம்.//
  35. 3 points
    க்ரவுட் பண்டிங் - மக்கள் முதலீடு இவ்வாறன முதலீடுகள் பொதுவாக வியாபாரம் இல்லை சமூகசேவை தொடர்புபட்டு இருக்கும். இதில் முதலீடு செய்பவர்கள் தமது முதலீட்டை இழக்கும் சத்தியமும் உண்டு. அதேவேளை, இலாபம் அடையும் சாத்தியங்களும் உண்டு. விரிவாக பார்க்கலாம். நான்கு வகையாக இதை பிரிக்கலாம். 1. முதலீடு மட்டுமே சார்ந்தது, 2. (நுண்)கடன் சார்ந்தது 3. நன்கொடை சார்ந்தது 4. வெகுமதி சார்ந்தது மேல்கூறப்பட்ட திட்டங்களை ஒரு நிர்வாகிக்கும் தளம் பல தவல்களுடன் நிர்வகிக்கும். பொதுவான ஒரு திட்டத்தை பார்ப்போம். இவை யாவும் கற்பனையே தளம் : yarlfirendsfunding.lk #1: சமூக உதவி திட்டம் : விதவைகளுக்கு ஒரு பசு மாடு மற்றும் இரண்டு ஆடுகள் வளர்க்க உதவும் திட்டம் மொத்தம் : 20 விதவைகள் முல்லைத்தீவில் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். தேவையான பணம் : ஒரு பெண்ணுக்கு 20000 ரூபா ஏற்கனவே சேகரிக்கப்பட்ட பணம் : 40000 ரூபா #2: முதலீட்டு திட்டம்: செயலி வடிவமைப்பு திட்ட விபரணம் : செயலி ஒன்றின் ஊடாக சந்தைப்படுத்தலை மக்களுக்கு எடுத்து செல்லல் திட்ட நோக்கம் : விவசாயிகள் தங்கள் பொருட்களை விலைக்கு சந்தைப்படுத்த உதவுதல். திட்ட வடிவமைப்பு : வன்னி டெக் எவ்வாறு பணம் பெறப்படும்: சந்தைகள், உதாரணத்திற்கு பண்டத்தரிப்பு சந்தை மாதம் 5000 ரூபாய்கள் கொடுக்கும். இவ்வாறு சந்தைகள் இணைக்கப்படும். சேகரிக்கப்பட்ட பணம் : 20,000 ரூபாய்கள் தேவையான பணம் : 3,80,000 ரூபாய்கள் வருமானத்தில் 40% முதலீடு செய்தவர்களுக்கு ஒவ்வொரு நான்கு மாதத்திற்கும் பகிர்ந்து அளிக்கப்படும். மிகுதி 60% மீண்டும் முதலிடப்படும்.
  36. 3 points
    மதம்/மார்க்கம் மாற விரும்புற சனம் தாங்களாகவே போய் மாறுவினம்.ஊர் ஊராய் போய் பிரசங்கம் வைக்க வேண்டிய அவசியமில்லை.பழைய பித்தளை பாத்திரத்துக்கு பேரிச்சம்பழம் விக்கிறவன் மாதிரி..... மதம் மாத்துற கோஷ்டியள் என்னென்ன திருகுதாளங்களையெல்லாம் புலம்பெயர்நாடுகளிலை செய்கிறார்கள் எண்டதை நேர்லையே பார்த்து துலைக்கின்றமே.அதாலைதான் சொல்லுறம் மதம் மாற்றுபவர்கள் கள்ளர்கள்.ஊரிலிருந்து அடித்து விரட்டப்பட வேண்டியவர்கள். பொன்னாலை மக்களுக்கு பாராட்டுக்கள். நான் சைவ சமயத்தவன். இதர எல்லா கடவுள்களையும் வணங்குபவன்.நம்புபவன்.ஏனைய மதத்தினரை மதிப்பவன். இந்த மதம் சரியில்லை எங்கள் மதத்திற்கு வாருங்கள் என்று கூவி அழைப்பவர்களை அடியோடு வெறுப்பவன்.
  37. 3 points
  38. 3 points
    பரம்பரை பரம்பரையாக இந்துக்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் வாழ்பவர்கள் நாங்கள் தமிழர்கள் என்பதை தவிர வேறு எந்த அடையாளங்களையும் சுமந்து வாழ்வதில்லை ,வேற்றுமைகள்பற்றி சிந்திப்பதும் இல்லை. அதனால்தான் தமிழர்களின் அரசியல் போராட்ட காலத்தில் ஒரு கிறிஸ்தவர் செல்வாவை தமிழர்கள் தமது தந்தை என ஏற்றுக்கொண்டார்கள். ஆயுதபோராட்டகாலத்தில் புலிகளின் முதல் தாக்குதல் தளபதி சீலனும் ஒரு கிறிஸ்தவராகவே இருந்தார். சலனமற்று தமிழர்களுக்கு இடையிலே மிஞ்சியிருந்த இந்த ஒரேயொரு ஒற்றுமையையும் குழிதோண்டி போட்டு புதைப்பது இந்த மதமாற்ற கோஷ்டிகளே. அம்மா அப்பாபோல மதமும் ஒரு மனிதனின் பிறப்போடு சம்பந்தப்பட்ட அடையாளம், அதை ஏன் மாற்ற முயற்சிக்கிறீர்கள், மாற்றவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? மதம் மாறினால் அனைத்து துன்பங்களும் நீங்குமென்றால் நீங்கள் குறிப்பிடும் மதத்தில் உள்ளவன் எல்லோரும் விடிய எழும்பி வேலைக்குபோகமாட்டான். எந்த மதத்தில் நீ இருந்தாலும் சொந்த கைகால்களும், சொந்த முயற்சியும் இல்லாதுபோனால் எந்த மதத்தவனும் ஏழையாகவும் நிம்மதி இல்லாதவனுமாகவே எப்போதும் இருப்பான், இறைவனுக்கு அவனிடம் ஒருபோதும் வேலை இருக்காது. மதம் என்பது ஒரு நம்பிக்கை வழிபாட்டுமுறையே அன்றி பொருளாதார ஆன்மீக சட்டமல்ல. என்னுடைய அப்பா இருக்கும்போது இன்னொருவரை என்னை பெற்ற தந்தையாய் எப்படி ஒரு மனிதன் ஏற்றுக்கொள்ளமுடியும்? அப்படி செய்தால் அது அநாகரிகம் அசிங்கம் மட்டுமல்ல ஆத்மார்த்தமான நம்பிக்கையும் அல்ல. நல்லது ஒரு மக்கள் கூட்டத்திற்கு செய்யவேண்டுமென்றால் மத மாற்றம் ஒரு மனிதனுக்கு அவசியமில்லை, மனமாற்றம் மட்டுமே தேவை. ஏற்கனவே மேய்ப்பனற்ற மந்தைகள்போல் அல்லாடிக்கொண்டிருக்கும் தாயக மக்களை மேலும் மேலும் குழப்ப நிலைகளுக்குள் தள்ளிவிடும் இந்த மதமாற்ற கூட்டங்கள் கொலைகாரர்களுக்கு சமம்,
  39. 3 points
    அற்புதமான போதனைகள் நிறைந்த கிருத்துவ மதத்தை மதமாற்றும் மதவெறிபிடித்த சிலர் நடைபாதை, தெருவோர, பெட்டிக்கடை வியாபாரப் பொருளாக மாற்றுவது, விற்பனையாகாத பொருட்களை கூவி விற்பது போல வியாபாரப் பொருளாக மாற்றுவது, கிருத்துவ போதனைகளை உணர்ந்தவர்களின், கிருத்துவ போதனைகளை உண்மையாக கடைபிடிப்பவர்களின் மனதையும் கடுமையாக வேதனைப்படுத்தும் என்பது தான் உண்மை.
  40. 3 points
  41. 3 points
    பார்க்கும் போது வாங்க முடியாததும் வாங்கும் போது பார்க்க முடியாததும்.
  42. 3 points
    அவர்கள் அப்படித்தான் அதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை, ஆனால் அதனை சுட்டிக்காட்டும் நீங்கள் எப்படி ஊருக்குள் ரொம்ப யோக்கியமோ? பிரபாகரன் ஒரு கொலைகாரன், புலிகளின் உயிர் கொடைகளை தியாகம் என்றெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது, புலிகள் ஆயுதங்களை கைவிட்டு ஜனநாயக வழிக்கு திரும்பினால் நான் அரசியலைவிட்டு ஒதுங்க தயார் என்று காலம் முழுவதும் கூவி கூவியே வயிற்று பிழைப்பு அரசியல் செய்தவர் நீங்கள் , நீங்கள் ஒருகாலம் ஆசைப்பட்டபடி இப்போது புலிகளும் இல்லை, ஆயுதங்களும் இல்லை நீங்கள் ஏன் அரசியலைவிட்டு ஒதுங்கவில்லை செயலாளர் நாய்அகம் அவர்களே? பிரேமதாஸ காலத்திலிருந்து மஹிந்த காலம்வரை ..விடுதலை போராட்டம் என்ற ஒன்றை சிங்களவர்களுடன் தோளோடு தோள் நின்று பயங்கரவாதமாக காண்பித்ததற்கு கையூட்டாய் பெட்டி பெட்டியாய் பணமும், மது மாது என்று காலம் முழுவதும் கை நீட்டி எச்சில் சோறு வாங்கி தின்று ஏப்பம் விட்டவர்கள் நீங்கள், உங்களுக்கு மட்டும் புலிகள் பற்றியும் அதன் தலைவர் பற்றியும் அவர்கள் அழிவுபற்றியும் நெகிழ்ந்துபேசும் யோக்கியதையை யார் தந்தது? நீங்கள் ஒருகாலம் ஆசைப்பட்டபடி இப்போது புலிகளும் இல்லை, ஆயுதங்களும் இல்லை நீங்கள் ஏன் அரசியலைவிட்டு ஒதுங்கவில்லை செயலாளர் நாய்அகம் அவர்களே? புலிகள் பற்றியும் அவர்கள் போராட்டம்,தலைமை,தியாகம்பற்றி பேச இன்று இலங்கையில் தமிழர் சார்பில் அரசியல் செய்யும் எவருக்கும் உரிமையில்லை நீங்களுட்பட. காலம் சிறிது நகர்ந்து சென்றால் எப்படியெல்லாம் பிணம் தின்னி கழுகுகள் மயில் வேஷம் போட்டு தங்களை அழகாக காண்பிக்க முயற்சி செய்கின்றன. என்ன செய்வது அதனையும் நம்புவதற்கு நம்மில் நாலுபேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
  43. 3 points
    ஐயா ஏன் இன்னும் ஹரிசிடம் சாய்ந்தமருத்துக்கு ஏன் ஒரு பிரதேச செயலகம் அமைத்து கொடுக்க வில்லையென நீங்கள் கேட்கணும் அவரிடம் ஹரிஸ் என்பவர் அரசியல் வாதிதான் உங்களுக்கு நண்பராக இருக்கலாம் அரசியலில் அவர் ஓர் நரிதான் கல்முனை தனி பிரதேச செயலகம் அமைந்தால் தன் வாக்கு வங்கி குறைந்து விடும் என்பதாலும் தமிழர்களிடம் தங்கள் கடைத்தொகுதிகள் நில நிர்வாகம் சென்றும் விடும் என்பதாலும் அவர் அதை கொடுக்க முட்டுக்கட்டையாக இருக்கிறார் என்பது உங்கள் நட்புக்கு அப்பால் பட்ட உண்மை அது போக கல்முனை நகரமாக்கல் திட்டம் சூழ்ச்சிகள் நிறைந்த திட்டங்கள் இன்னும் இருக்கு
  44. 3 points
    எனக்கென யாரும் இல்லையே.... ஏன் இல்லை? நான் இருக்கிறன் செல்லம்.....வாடா என்ரை செல்லம்.
  45. 3 points
    இவ்வாறு வருவதற்கு இரட்டிப்பு திறமையும் (காரணம் எமது தோல் நிறம்), நிறைந்த பேச்சாற்றலும், மற்றையவர்களை வசீகரிக்கும் குணமும், மேலாக 'புறக்கணிக்கப்படும் பொழுது' மனத்தை தளரவிடாத முயற்சியும் கூடவே வேண்டும் என கருதுகின்றேன்.
  46. 3 points
    இலங்கை கிரிக்கேட் அணியும் தமிழீழ தேசியத் தலைவரின் திட்டங்களும் 15:16 - By ம.தி.சுதா 0 இப்பதிவு சற்றுப் பெரியது தான் ஆனால் கிரிக்கேட் பற்றிப் பேசும் ஒவ்வொருவரும் அறிய வேண்டிய வரலாறுகள் சிலதை உள்ளடக்கியிருக்கிறேன். தமிழிழம் உருவாக்கப்பட்டால் அதற்கான கட்டமைப்புத் திட்டங்கள் நூலாகவே வெளியிடப்பட்டிருந்தமை அனைவரும் அறிந்ததே. ஆனால் நூலிற்கப்பால் அத்தேசம் சர்வதேசங்களுக்கு நிகராக நிற்பதற்குரிய கனவுகளும் பெரிதாகவே இருந்தது. அதில் ஒன்று தான் கிரிக்கேட் அணியாகும். யுத்தகாலத்தில் கிளிநொச்சியில் மட்டும் 14 கடினப்பந்து கழகங்கள் போட்டிகளில் பங்கு பற்றிக் கொண்டிருந்தன. அதை விட பாலிநகரில் எனது ஆரம்ப கால குருவான தவராஜா சேரால் ஒரு அணியும் முல்லைத் தீவில் சென்யூட் மற்றும் வித்யா அணிகள் பலம் வாய்ந்தவையாக இருந்தன. தேசிய மட்டத்தில் இடம்பெறும் மிக முக்கிய போட்டிகளாக 50 ஓவர்களைக் கொண்ட ஒருநாள் போட்டியான சங்கர் கிண்ணமும் 20 ஓவரைக் கொண்ட T20 போட்டியான ரமணன் கிண்ணமும் மற்றும் NEC இன் T20 போட்டித் தொடரும் அடங்கும். கிளிநொச்சியில் 2007 இன் ஆரம்பங்கள் வரை இளந்தென்றல் அணியே கொடிகட்டிபறந்தது அதன் நிர்வாகப் பொறுப்பை புலனாய்வுத்துறையின் தலமைச் செயலகத்தைச் சேர்ந்த பிரசன்னா கவனித்துக் கொண்டார். அவர்களது பலத்தின் காரணமே கர்ண கொடூரமான ஆரம்ப வேகப்பந்து விச்சாளர்கள் தான். 1) செந்தாமரை (எ) செந்தா 2) ராஜ்குமார் (புலிகளின் குரல் செய்திவாசிப்பாளரான அன்பரசியின் கணவர்) அதே 2007 காலப்பகுதியில் தான் எமது மருத்துவக்கல்லூரி அணி வைத்தியராக இருந்த அமுதனால் ஒருங்கிணைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு பொருட்கள் சேகரிப்பதற்கு மும்முரமாக இருந்தது சிவதரண்ணா தான். மென்பந்து அணியாக இருக்கும் போது கற்கைகளுக்காக நான் அணித்தலைமையில் இருந்து விலத்திய பின் சிவதரண்ணா தான் அணியை வழி நடத்தினார் பின்னர் கடினப்பந்தான பின் என்னிடமே ஒப்படைக்கப்பட்டது. ஆரம்பப் போட்டிகளிலேயே இளந்தென்றல் அணியை வெல்லாவிடினும் அவர்களுக்கு அச்சுறுத்தலாகப் போராடினோம். எங்கள் ஆட்டம் எமது தலைமை மருத்துவரும் கிரிக்கேட் வெறியருமான சுஜந்தன் டொக்ரரை கவர எமது அணியை நிரந்தரமாக்குவது என்றும் அணி வீரர்களின் கடமைகளுக்கு பிரதியீடாக ஏனையவரை அனுப்புவதும் என முடிவாகிறது. அதற்கு கற்கை நேரங்களை மாற்றியதுடன் வாமன் டொக்ரரும் மலரவன் டொக்ரரும் தமது கடமை தவிரந்த ஏனைய நேரங்களில் எங்களோடு செலவிட்டார்கள் பிற்பகுதியில் தூயவன் டொக்ரரும் இசைவாணன் டொக்ரரும் இணைந்து கொண்டனர். நட்புரீதியான ஆட்டம் ஒன்றில் இளம்தென்றல் அணியை வெல்கிறோம் அந்த வெற்றி மேல்மட்டங்கள் வரை கடத்தப்பட எம் நிகழ்வு ஒன்றுக்கு வந்த தமிழ்ச்செல்வன் அண்ணை மேலிடத்தின் வாழ்த்தை நேரடியாகப் பரிமாறிச் சென்றார். காலை , மாலை என தொடர் பயிற்சிக்கு நேரம் அளிக்கப்பட்டாலும் இடை நேரத்தில் கற்கையும் அது தவிர்ந்த நேரத்தில் மருத்துவக் கடமைக்கும் என ஒரு சுற்றுவட்டத்தில் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தோம். காரணம் அக்காலப்பகுதியில் பள்ளமடுப் பகுதியிலும் முகமாலையிலும் மணலாறிலும் உக்கிர சண்டை நடந்து கொண்டிருந்த நேரமாகும். கிளிநொச்சி முத்தவெளி விளையாட்டு மைதானத்தில் சங்கர் கிண்ண ஒருநாள் போட்டிகளின் தெரிவு அணிக்கான கிளிநொச்சி மாவட்ட இறுதிப் போட்டியில் இளந்தென்றல் அணியை எதிர் கொள்கிறோம். நிச்சயம் வெல்வோம் என்ற நம்பிக்கையில் எல்லோரும் எதிர்பார்த்திருந்த நேரமது. அதை வென்றால் தேசிய மட்டப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் இரண்டாவது அணியான வித்தியாவை எதிர் கொண்டு இலகுவாக இறுதிப் போட்டிக்கு வரலாம். ஆனால் 8 ம் இலக்க துடுப்பாட்ட வீரராக வந்த தர்சண்ணா அடித்த அரைச்சதத்தால் அப் போட்டி தோற்கிறோம். அணித்தலைவரான நான் தோல்விக்கான முழுக் காரணத்தை ஏற்றாலும் அன்று அமுதன் டொக்ரரிடம் வாங்கிய தண்டனை என்பது மிகுதி 10 பேருக்குமான ரோசத்தைக் கிளறுவதற்காகவே எனக்கு வழங்கப்பட்டது. அடுத்த ஒருவாரத்தில் சென்யூட் உடனான அந்த அரையிறுதிப் போட்டியில் மோத இருக்கிறோம். முல்லைத்தீவின் சம்பியன் அணியான சென்யூட் ஐ வென்றால் தான் இறுதிப் போட்டியாகும். அதன் தலைவர் ஹாட்லிக் கல்லூரியின் தலைவராக இருந்த கோகுலன் ஆவார். தோற்ற எம் அணி மைதானத்தை விட்டு வெளியேறக் கூடாது என்ற தண்டனையும் அளிக்கப்படுகிறது. பயிற்சிக்குரிய இன்னொரு சோடி உடைகளும் பாடப்புத்தகங்களும் அளிக்கப்படுகிறது. குளிப்பதற்கும் கழிவுக் கடன் கழிப்பதற்கு மட்டும் விளையாட்டுத்துறையின் அலுவலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் 3 நேரச் சாப்பாடும் மைதானத்துக்கு தரன் மூலம் வரும். காலை 6-11 வரையும் பிற்பகல் 3-6 வரையும் பயிற்சி இடை நேரத்திலும் இரவிலும் மைதானத்தில் தான் கற்கை. இத்தண்டனைக்குரிய காரணம் எமக்காக கடமையேற்ற சக மாணவருக்கு நாம் கொடுத்த பரிசான தோல்வி என்பதை எவரும் ஜிரணிக்கவில்லை. ஆனால் அடுத்தவார அரையிறுதியில் சென்யூட் அணியை வெல்கிறோம். ஆனால் மறுபக்கம் தேசிய இறுதிப் போட்டிக்கு மீண்டும் இளந்தென்றல் வந்தாலும் சென்யூட் உடனான வெற்றி எம்மை மைதானத்தில் இருந்து விடுதலை செய்கிறது. அவ்வெற்றிக்கும் மேலிடத்தில் இருந்து பாராட்டுக் கிடைக்கிறது. இறுதிப் போட்டியில் இளந்தென்றலை வென்று அவர்களிடம் இருந்த கிண்ணத்தை பெறுகிறோம். NEC இன் T20 இன் தொடரின் ஆரம்பத்தில் எனக்கு காலில் ஏற்பட்ட என்பு வெடிப்பால் உதவித் தலைவராக இருந்த நிரோஷ் அணியை வழி நடத்த ஆரம்பிக்கிறான். அந்நேரம் எங்களுக்கு ஒரு பரிசு கிடைக்கிறது. திருகோணமலையில் இருந்து இலங்கை A அணியின் குழுவுக்குத் தெரிவாகி பின் போராட்டத்தில் இணைந்திருந்த அருண் அண்ணையை அணிக்குள் அனுப்பவுதற்கான அனுமதியை தலைமைச் செயலகம் கொடுக்கிறது. அணியின் பலம் அதிகரிக்கிறது. அதன் பின் ரொசான், பார்த்தி , அமலன் என புதிய வீரர்கள் உள்வாங்கப்பட அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த பல வீரர்கள் வெளியேறி மருத்துவக் கடமையில் இணைந்து கொள்கிறார்கள். (சிவதரன் அண்ணை , கிரி , அரவிந்தன் , மயிலழகன் , சபேஷ் , ஜெயசீலன் , அசோக் என ஒரு பட்டியலே உள்ளது) அதன் பின் NEC இன் T20 இன் லீக் ஒன்றிலும் இறுதிப் போட்டியிலும் இளந்தென்றலை வெல்கிறோம். அவ் இறுதிப் போட்டிக்கு அணி மீண்டேன் ஆனா அவ் இறுதிப் போட்டிக்கு எந்த அணியிலுமே நடக்காத ஒன்று நடந்தது. இருவர் அணித்தலைவராக செயற்பட்டோம். அந்த போட்டியில் நான் எடுத்த 4 கடுமையான பிடிகளுக்காகவும். இறுதி விக்கேட்டான சதீசை மட்டும் வைத்துக் கொண்டு செந்தா அண்ணா வீசிய போட்டியின் இறுதிப் பந்தில் 6 ஓட்டத்தைப் பெற்று அணியை வெற்றி பெற வைத்ததற்காகவும் சிறந்த ஆட்டக்காரராகவும் தெரிவு செய்யப்பட்டேன். மருத்துவப்பிரிவின் பொருப்பாளரான ரேகா அண்ணை தலைமையின் பாராட்டுடன் நேரடியாக வருகிறார். அவர் ஒதுக்கிய பணத்திலேயே அன்றைய ஐஸ்கிரீம் விருந்து வீரர்களுக்கு கொடுக்கப்பட்டாலும். ஒத்துழைத்த கல்லூரி மணவர்களுடன் A9 விடுதியில் பெரிய விருந்தளிக்கப்படுகிறது. எமது அணிக்கு இந்தளவு முன்னுரிமை கொடுக்கப்பட்டதற்குக் காரணம் எல்லோரும் சராசரி 22 வயதை கொண்டவர்கள். அதில் 8 வேகப்பந்து வீச்சாளர்கள். 9 பேர் சகலதுறை வீரர்கள். இந்த அணி தமிழீழ தேசிய அணியல்ல ஆனால் அப்படி ஒன்று உருவாகுவதற்கு இதில் உள்ளவர்களின் பயமே இல்லாத அந்தத் துணிவு முன்னுதாரணமாக இருக்கும் என நம்பினர். காரணம் பயிற்சியின் போது சுஜந்தன் டொக்ரர் இதைத் தான் சொல்வார். ”லேதர் போல் என்பது ரவுண்ஸ் அல்ல அதனால் உங்களைத் துளைக்க முடியாது அதால பயப்படாதிங்கோ” இந்த வார்த்தையில் அப்படி என்ன இருக்கிறது என இப்ப புரியாது ஆனால் சண்டைக்குள் குண்டு துளைக்கும் என தெரிந்தே இருப்பவர்களுக்கு இந்த துளைக்காத குண்டில் என்ன பயம் வந்துவிடப் போகிறது. இவை எல்லாம் வரலாறுக்காக கூறினேன். இனி சொல்வது தான் மேலிடத்தின் தூர நோக்காகும். கேணல் ரமணன் கிண்ணத்திற்கான போட்டித் தொடர் ஆரம்பிக்க இருந்த நிலையில் இராணுவம் ஒரு பக்கம் மல்லாவிக்கும் முழங்காவிலுக்கும் வந்து விடுகிறது. அதனால் போட்டித் தொடரை நிறுத்துவதற்கு விளையாட்டுத்துறைப் பொறுப்பாளரான ராஜா அண்ணா தலைமைச் செயலகத்துக்கு அறிவிக்கிறார். ஆனால் அங்கிருந்து கிடைத்த பதில் நாட்டிற்கு இதுவும் தேவையானது தான் போட்டித் தொடர் நடக்கட்டும் என்பதே. ஆனால் கடமைகளுக்காக நானும் , கேசவனும் , சதீசும் சண்முகராஜா டொக்ரரால் முள்ளியவளை அழைக்கப்பட்டோம். அருண் அண்ணை சண்டை அணிக்குள் போன இடத்தில் வீரச்சாவடைந்து விடுகிறார். மற்றவர்களும் வெவ்வேறு பக்கம் கடமை நிமித்தம் சென்று விட போரும் உக்கிரமாக அந்த கனவு அணி உடைந்து போகிறது. அதன் பின் அமலனும் தலையில் ரவை ஒன்று பாய்ந்து இறந்து போகிறான். இலங்கை தேசிய அணியில் தமிழருக்கு இடம் கொடுக்கவில்லை என்ற ஆதங்கம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் ஏன் தலைவரின் சிந்தனையை பின்பற்ற தவறுகிறோம். எம் மாவட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அணியை உருவாக்கி போட்டிகளை வைத்து ஒரு மாகாண அணியை உருவாக்குவோம் அதைக் கொண்டு அத்தனை சிங்கள கழகங்களுக்கும் அடிப்போம். ஏன் வெளிநாட்டுக் கழகங்களுக்கும் போய் அடித்து எம்மை நிருபிப்போம். அயர்லாந்தைச் சேர்ந்த இயான் மோகனையும், இந்தியாவைச் சேர்ந்த நசீர் குசைனையும் அணித்தலைவராக்கிய இங்கிலாந்து அணி ஒரு ஈழத்தவனை அணிக்கு எடுக்காதா ? துரை சிங்கத்திற்கு இடம் கொடுத்த கனடா அணி எம்மவருக்குக் கொடுக்காதா ? எல்லாவற்றுக்கும் முதல் சென் பற்றிக்ஸ் இல் மட்டும் புல்தரை ஆடுகளத்தை வைத்துக் கொண்டு தேசிய அணிக்கு ஆசைப்படும் நாம் எம் வீரர்களை மெட்டிங் இல் இருந்து புற்தரை ஆடுகளத்துக்கு மாற்றி விட்டு எம் கனவுகளைக் காணலாம் காரணம் மெட்டிங் இல் ஆடும் ஒருவரால் புற்தரைக்கு பழக்கமாகவே நீண்ட காலம் எடுக்கும். தீர்வுப் பொதிக்காக மட்டும் மேசைக்கு மேலால் போராடிக் கொண்டிருக்கும் எம் அரசியல் தலமைகளை எம் அடையாளங்களுக்காகவும் கொஞ்சம் போராடச் சொல்லுவோமாக ? குறிப்பு - (அவர்களில் செந்தா அண்ணை சண்டை ஒன்றில் இறந்து விட்டார் அந் நேரம் சிறந்த வீரர்களாக இருந்த நவநீதன் , அச்சுதன் போன்றோர் இப்போதும் இப்போதும் இருக்கிறார்கள். இவர்களை விட சோலைக்கு விளையாடிய கீரன் மிகச்சிறந்த சகலதுறை வீரர்.) தொடர்ந்தும் என் பதிவுகளுடன் இணைந்திருக்க இந்தப் பக்கத்தை like செய்து இணைந்திருங்கள் https://www.facebook.com/mathisuthaofficial/ http://www.mathisutha.com/2019/07/tamileelam-cricket.html
  47. 3 points
    அநேகர் எதிர்த்து வலியுறுத்தும் ஒரு கருத்து தான் இந்த "மதம் மாற்றம்", "தேவையற்ற மத பிரச்சாரம்". எமது சைவ தொண்டு அமைப்புகள், கோயில்கள் சரியான படி மக்களை அரவணைத்து எங்கள் சைவ, தமிழ் பாரம்பரியங்களை நிலைநிறுத்தினாலேயே இந்த சபைகளுக்கும், மிஷனரிகளுக்கும் கிராக்கி இருக்காது. எது எப்படியோ, இங்கே யேசுநாதரையும் அவர் போதனைகளையும் இழித்து கருத்தாடுவது முறையல்ல. தனிப்பட்ட ஒரு கூட்டத்து செயல்களை கண்டியுங்கள். அதுவே சரியானது.
  48. 3 points
    காங்கிரஸ் ஆனாலும் பாஜக ஆனாலும் தமிழர்க்கு எதிரிதான். அதிலும் பார்ப்பனிய பாசிச பாஜக அரசு மிக மோசமான எதிரி. லட்சக்கணக்கில் மக்களைக் கொன்று குவித்ததை காந்தியின் தேசம் கொண்டாடுகிறது. மஹிந்த ராஜபக்சவுக்கு சு.சாமி, குருமூர்த்தி, இடதுசாரிப் போர்வையில் இந்து ராம் என ரசிகர் பட்டாளம் உண்டு. தமிழரைத் தட்டி வைத்து விட்டான் மஹிந்த என ஆர்ப்பரிக்கிறது இக்கூட்டம். ஈராயிரம் ஆண்டுகளாக இவர்களது மொழி, பண்பாட்டுத் தாக்குதலையும், தொன்று தொட்டு கடல் கோள்களையும் மீறி எழுந்து நிற்கும் ஒரு ஃபீனிக்ஸ் பறவை தமிழினம் என்பது இவர்கள் அறியாததா என்ன !
  49. 3 points
    அவ்வளவு இதுக்குள்ளயும் புருஷனுக்கு தண்ணீரும்,சாப்பாடும் கொண்டு வந்துகொடுக்கிறா
  50. 3 points
    இந்தமுறையில் சமைக்கலாம்.... வத்தல் இறைச்சியில் மண் இருக்கலாம், கவனமாய் பார்த்து கழுவ வேண்டும். ஏற்கனவே வாட்டிய இறைச்சி என்பதால் அதிகம் அவிய விடத்தேவையில்லை. ருசி பார்த்து இறக்கினால் போதும்.....!