யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Leaderboard

 1. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   208

  • Content Count

   46,050


 2. suvy

  suvy

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   135

  • Content Count

   16,073


 3. குமாரசாமி

  குமாரசாமி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   109

  • Content Count

   27,121


 4. Nathamuni

  Nathamuni

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   90

  • Content Count

   7,038Popular Content

Showing content with the highest reputation since 04/25/2019 in Posts

 1. 14 points
  வணக்கம் யாழ்கள உலககிண்ண கிரிக்கட் விளையாட்டுப் போட்டி மே மாதம் தொடங்கவிருப்பதால் யாருமே போட்டியை முன்னின்று நாடாத்த முன்வராததால் அரைகுறை அனுபவத்தோடு நானே 2019 போட்டியை நடாத்தலாமென்று யோசித்துள்ளேன்.இதற்கு நீங்கள் ஆதரவு தருவீர்களென்றால் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கலாம். இதுவரை இந்தப் போட்டியை நடத்த வேண்டுமென்று யாராவது நினைத்திருந்தால் தாராளமாக நடாத்தலாம்.எனக்கும் இதுக்கும் வெகு தூரமென்றாலும் யாராவது நடாத்தியே தீர வேண்டுமென்பதாலேயே முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்ட மாதிரி முன்வந்துள்ளேன். இனி உங்கள் ஆதரவு கண்டு தொடர்கிறேன்.
 2. 9 points
  2019 உலக கிண்ண கிரிக்கட் விளையாட்டுப் போட்டி இம்முறை இங்கிலாந்தில் மே 30இல் தொடங்கி ஜூலை 14 வரை நடைபெறுகிறது. இதில் 10 அணிகள் பங்குபற்றுகின்றன. அவையாவன: இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பங்காளாதேஷ், இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், மேற்கு இந்தியத்தீவுகள் ஆரம்பச் சுற்றுப் போட்டிகள் கீழே உள்ள ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும் வெற்றி (Win) - 2, தோல்வி (Loss)- 0, சமநிலை (Tie) - 1, முடிவில்லை (No Result) - 1 வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் சமநிலை அல்லது முடிவில்லை என்று குறிப்பிடவேண்டும். அதிக பட்சம் 90 புள்ளிகள் மொத்தமாகக் கிடைக்கலாம். 1) மே 30. இங்கிலாந்து எதிர் தென்னாபிரிக்கா 2) மே 31. மேற்கு இந்தியத்தீவுகள் எதிர் பாகிஸ்தான் 3) ஜூன் 1. நியூஸிலாந்து எதிர் சிறிலங்கா 4) ஜூன் 1. ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா 5) ஜூன் 2. தென்னாபிரிக்கா எதிர் பங்காளாதேஷ் 6) ஜூன் 3. இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான் 7) ஜூன் 4. ஆப்கானிஸ்தான் எதிர் சிறிலங்கா 8)ஜூன் 5. தென்னாபிரிக்கா எதிர் இந்தியா 9) ஜூன் 5. பங்காளாதேஷ் எதிர் நியூஸிலாந்து 10) ஜூன் 6. அவுஸ்திரேலியா எதிர் மேற்கு இந்தியத்தீவுகள் 11) ஜூன் 7. பாகிஸ்தான் எதிர் சிறிலங்கா 12) ஜூன் 8. இங்கிலாந்து எதிர் பங்காளாதேஷ் 13) ஜூன் 8. ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து 14) ஜூன் 9. இந்தியா எதிர் அவுஸ்திரேலியா 15) ஜூன் 10. தென்னாபிரிக்கா எதிர் மேற்கு இந்தியத்தீவுகள் 16) ஜூன் 11. பங்காளாதேஷ் எதிர் சிறிலங்கா 17) ஜூன் 12. அவுஸ்திரேலியா எதிர் பாகிஸ்தான். 18) ஜூன் 13.இந்தியா எதிர் நியூஸிலாந்து 19) ஜூன் 14. இங்கிலாந்து எதிர் மேற்கு இந்தியத்தீவுகள் 20) ஜூன் 15. சிறிலங்கா எதிர் அவுஸ்திரேலியா 21) ஜூன் 15. தென்னாபிரிக்கா எதிர் ஆப்கானிஸ்தான். 22) ஜூன் 16. இந்தியா எதிர் பாகிஸ்தான். 23) ஜூன் 17. மேற்கு இந்தியத்தீவுகள் எதிர் பங்காளாதேஷ். 24) ஜூன் 18. இங்கிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான். 25) ஜூன் 19. நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா. 26) ஜூன் 20. அவுஸ்திரேலியா எதிர் பங்காளாதேஷ். 27) ஜூன் 21. இங்கிலாந்து எதிர் சிறிலங்கா. 28) ஜூன் 22. இந்தியா எதிர் ஆப்கானிஸ்தான். 29) ஜூன் 22. மேற்கு இந்தியத்தீவுகள் எதிர் நியூஸிலாந்து. 30) ஜூன் 23. பாகிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா. 31) ஜூன் 24. பங்காளாதேஷ் எதிர் ஆப்கானிஸ்தான். 32) ஜூன் 25. இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா. 33) ஜூன் 26. நியூஸிலாந்து எதிர் பாகிஸ்தான். 34) ஜூன் 27.மேற்கு இந்தியத்தீவுகள் எதிர் இந்தியா. 35) ஜூன் 28. சிறிலங்கா எதிர் தென்னாபிரிக்கா. 36) ஜூன் 29. பாகிஸ்தான் எதிர் ஆப்கானிஸ்தான். 37) ஜூன் 29. நியூஸிலாந்து எதிர் அவுஸ்திரேலியா. 38) ஜூன் 30. இங்கிலாந்து எதிர் இந்தியா. 39) ஜூலை 1. சிறிலங்கா எதிர் மேற்கு இந்தியத்தீவுகள். 40 ) ஜூலை 2. பங்காளாதேஷ் எதிர் இந்தியா. 41) ஜூலை 3.இங்கிலாந்து எதிர் நியூஸிலாந்து 42) ஜூலை 4. ஆப்கானிஸ்தான் எதிர் மேற்கு இந்தியத்தீவுகள். 43) ஜூலை 5. பாகிஸ்தான் எதிர் பங்காளாதேஷ். 44) ஜூலை 6. சிறிலங்கா எதிர் இந்தியா. 45) ஜூலை 6. அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா. 46) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) 47) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுபவர்களுக்கு மேலதிக புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும் (அதிக பட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்) #1 - ? (3 புள்ளிகள்) #2 - ? (2 புள்ளிகள்) #3 - ? (1 புள்ளி) #4 - ? (0) 48) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! இறுதிச் சுற்றுப் போட்டிகள் 49) முதலாவதாகவும் நான்காவதாகவும் வரும் அணிகள் ஜூலை 9 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும். 50) இரண்டாவது மூன்றாவதாக வரும் அணிகள் ஜூலை 11 ம் திகதி விளையாடும். எந்த அணி வெல்லும்? சரியாக பதிலளிப்பவருக்கு 4 புள்ளிகள் வழங்கப்படும். 51) ஜூலை 14 கடைசி நாளில் எந்த நாடு உலக கிண்ணத்தைக் கைப்பற்றும்? சரியாக பதிலளிப்பவருக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும். 52) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் சிறந்த பந்து வீசுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 3 புள்ளிகள். 53) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள். 54) இந்தத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெறும் அணி எது? 3 புள்ளிகள். 55) இந்தத் தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியைச் சார்ந்தவர்? 4 புள்ளிகள். 56) இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள். 57) இந்தத் தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியைச் சேர்ந்தவர்? 4 புள்ளிகள். போட்டி விதிகள் 1) போட்டி முடிவு மே 29 இங்கிலாந்து நேரப்படி நள்ளிரவு 12 மணி 2) ஒருவர் ஒருமுறை தான் பங்கு கொள்ளலாம். 3) பதில் அளித்த பின்பு திருத்தம் ஏதாவது செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார். 4) ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால் முதலில் பங்குபற்றியவருக்கு முதலிடம் வழங்கப்படும்.
 3. 8 points
  ( உடற்பருமனாதல் பிரச்சினையின் மருத்துவ/உடற்றொழிலியல் தகவல்களை இலகுவான தமிழில் தரும் ஒரு குறுகிய முயற்சி - மூன்று பகுதிகளாக இடம்பெறும். இது இணையவனின் உடல் எடை குறைப்புத் தொடருக்கு போட்டியாக எழுதப் படுவதல்ல! இங்கே உடற்பருமன் அதிகரிப்பதன் மருத்துவ அறிவியல் அடிப்படையும், உடற்பருமனாதலை உருவாக்கும் காரணிகளும் மட்டும் சிறு குறிப்புகளாகப் பகிரப் படும்) உலகளாவிய ரீதியிலும், வளர்ச்சியடைந்த மேற்கத்தைய நாடுகளிலும் உடற்பருமன் அதிகரித்தல் (obesity) என்பது மூன்றிலொரு பங்கினரைப் பாதிக்கும் ஒரு ஆரோக்கியக் குறைபாடாக இருக்கிறது. ஒருவரின் உடலின் உயரத்திற்கேற்ப அவரது உடல் நிறை இருக்க வேண்டும். இதனாலேயே உடல் கொழுப்பதை வெறும் உடல் நிறையாக அளக்காமல், உடல் நிறையை உயரத்தின் வர்க்கத்தினால் வகுத்து வரும் உடற்திணிவுச் சுட்டி (body mass index- BMI) எனும் அளவீட்டை உடற்பருமனைக் குறிக்கப் பயன்படுத்துகிறார்கள். இதை வைத்துக் கொண்டு, வளர்ந்தோரில் BMI 25 முதல் 30 வரை இருந்தால், அவர்கள் உடல் எடை கூடியோர் (over weight) என்றும் 30 இலும் அதிகமாக இருந்தால் உடற்பருமனானோர் (obese) எனவும் மருத்துவ விஞ்ஞானம் வகைப் படுத்தி வைத்திருக்கிறது. உடலின் எடை இங்கே பங்களிப்புச் செலுத்துவதால் தசைகளைப் பெருப்பிக்கும் பயிற்சிகளால் பொடி பில்டர்களாகத் திகழுவோருக்கு இந்த அளவீடு சரியான ஆரோக்கியக் குறிகாட்டியாக இருக்காது. வளரும் குழந்தைகளிலும் இந்த உடற்திணிவுச் சுட்டி சரியான ஆரோக்கியக் குறிகாட்டியல்ல என்பதைக் கவனிக்க வேண்டும்.இன்னொரு பக்கம், உடற்திணிவுச் சுட்டி 25 இலும் குறைவாக இருக்கும் ஒருவர், ஏனைய கொழுப்புடன் தொடர்புடைய நோய்களால் பாதிக்கப் படும் வாய்ப்புகள் குறைவெனினும், முற்றாக அந்த நோய்களற்று இருப்பார் என்றும் உறுதியாகக் கூற இயலாது. இதன் காரணம், உடம்பு வாசி எனப்படும் genotype காரணமாக, உடலின் தோற்கீழ் கொழுப்புக் குறைவாக இருந்தாலும், இதயத்தின் இரத்தநாளங்களில் கொழுப்புப் படிவது சிலரில் தாராளமாக நடக்கிறது. இதுவே உடற்பருமன் அதிகமாக இல்லாத ஒல்லிப் பித்தான்களும் சில சமயங்களில் மாரடைப்பு, மூளை இரத்த அடைப்பு போன்ற இதய குருதிக் கலன் நோய்களால் பாதிக்கப் படுவதற்குக் காரணம். எனவே, சாராம்சமாக, உடற்திணிவு சுட்டி என்பது ஆரோக்கியமான உடல் எடையைப் பேண பெரும்பாலானோரில் உதவும் ஒரு குறிகாட்டி! ஆனால் முழுமையான ஆரோக்கியத்தைப் பேண இந்தக் குறிகாட்டியை மற்றைய பரிசோதனை முடிவுகளோடு இணைத்துப் பயன்படுத்துவது முக்கியம். உதாரணமாக, வருடாந்தம் உடற்பரிசோதனைகள் செய்யும் போது பெறப்படும் இரத்தக் கொழுப்பின் அளவு, கொலஸ்ரோலின் அளவு, குழூக்கோஸ் அளவு என்பனவும் ஒருவரின் அனுசேபத் தொழிற்பாட்டின் ஆரோக்கியத்தை (metabolic health) முழுமையாக அளவிடுவதற்குப் பயன்படுத்தப் பட வேண்டும். - தொடரும்
 4. 8 points
  பொயட், உங்கள் ஜப்னா முஸ்லீம் பதிவுகளை நானும் வாசித்தேன். தமிழர்களிலும், முஸ்லீம்களிலும் பலர் உங்களை போல் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும். ஆனால் யதார்த்தம் அப்படியில்லை. நீங்கள் எதிர்பார்க்கும் அளவில் பெரும்பாலான மக்கள் இரு பக்கத்திலும் இல்லை. ஒரே நில, நீர், ஆதார, அரசியல் வளங்களுக்காக ஆளை ஆள் தின்னும் அடிபிடி, வரலாற்று வன்மம், சமயக் குரோதம் இதுதான் கிழக்கின் இன்றைய யதார்த்தம். நீங்கள் ஏற்படுத்த விழையும் மாற்றம் இருபுறமும் ஏற்படாது என்பதே என் கணிப்பு. இது மிகவிரைவில் ஒரு பெரும் கலவரத்தில் முடியும் என்ற பயமும் எனக்குண்டு. சுருங்கச் சொல்லின், உங்கள் கருத்துக்கள் காலத்துக்கு ஒவ்வாதன. மன்னிக்கவும் ஆனால் இதுவே யதார்த்தம்.
 5. 8 points
  மர்மங்கள் சூழ்ந்த மட்டக்கிளப்பு ஷரியா கேம்பஸ் பொலன்னறுவைக்கும், மட்டக்கிளப்புக்கும் இடையேயான எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது புனாணை கிராமம். ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்த பகுதியில் இரண்டு தளங்களுடன் அமைந்து வருகிறது ஷரியா பல்கலைக்கழகம். இது கிழக்கு, சர்சைக்குரிய அரசியல்வாதி ஹிஸ்புல்லாவின் கனவு முயற்சி. உயர்கல்வி அமைச்சு அனுமதி இன்றி நாம் எவ்வாறு ஷரியா சட்டம் கற்க்கை நெறிகளை பாடத்திட்டத்தில் சேர்க்கமுடியும் என்கிறார் ஹிஸ்புல்லா. ஆனாலும், அவ்வாறான அனுமதி கொடுக்கப்படவில்லை என்று சொல்கிறது உயர்கல்வி அமைச்சு. ஆயினும் அந்த அமைச்சுக்கு அனுப்பப் பட்ட விண்ணப்ப படிவத்தில் ஷரியா மற்றும் இஸ்லாமிய சட்டம் உள்ளடக்கிய 5 வகை கற்க்கை நெறிகளை கொண்டுள்ளதாக தெரிகிறது. சவுதி அரேபியாவில் இருந்து வந்த பெரும் நிதியுடன், அரசு சார்பில்லாத தனியார் நிறுவனம் ஒன்று ஷரியா மற்றும் இஸ்லாமிய சட்டம் குறித்த கற்க்கை நெறிகளை வழங்குவது குறித்த கரிசனைகள் கல்வியாளர்கள் மத்தியில் உண்டாகி உள்ளது. இத்தகைய தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும், பேராசிரியர் சாண ஜெயசுமண, சட்ட பீடத்தின் கீழ் சட்டம் படிப்பதாக அனுமதியை வாங்கி, அதன் கீழ், ஷரியா மற்றும் இஸ்லாமிய சட்டம் குறித்த கற்க்கை நெறிகளை வழங்குவது தான் திட்டம் என்கிறார். இது குறித்து முழு விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என்கிறார். Batticaloa Campus (Pvt) Ltd நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் ஹிஸ்புல்லா. அவர் கிழக்கு கவர்னர் ஆனதும், தனது மகனை தலைவர் ஆக்கி உள்ளார். ஷரியா மற்றும் இஸ்லாமிய சட்டம் படிப்பிக்கப் படும் என்பது பச்சை பொய் என மறுக்கிறார் ஹிஸ்புல்லா. உயர்கல்வி அமைச்சின், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி இன்றி எவ்வாறு அதை செய்ய முடியும் என்கிறார் அவர். உயர்கல்வி அமைச்சின், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி இந்த தனியார் பல்கலைக்கழகத்துக்கு கிடைத்து உள்ளதா என்ற கேள்விக்கு இல்லை என்ற பதிலே கிடைக்கின்றது. முன்னாள் உயர் கலவி அமைச்சர் விஜயதாச ராஜபக்சே, தனது காலத்தில் அவ்வாறான அனுமதி இன்னும் வழங்கப் படவில்லை என்கிறார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் மாயாதுன்னா, IT சிஸ்டம் குறித்த மதிப்பீடுகளுக்கே விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றார். ஆயினும், குறித்த பல்கலைக்கழகம் ஏப்ரல் 30ம் திகதி, Information Technology, Management, Agriculture and Education ஆகிய துறைகளில் கற்க்கை நெறிகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இது தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது. நிறுவனத்தின் முகாமையாளர் முகம்மது தாஹிர், இன்னும் ஒருவருட காலத்தில் சகல கட்டுமான வேலைகளையும் முடிந்து விடும் என்கிறார். தாஹிர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள், பல்கலைக்கழகத்துக்கு வந்து பரிசீலனை செய்து சென்றதாக சொல்கிறார். ஆயினும் இதனை மறுக்கிறார் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உதவி செயலாளர் விஜேசிங்க. நாம் நாட்டின் அரச பல்கலைக்கழகங்களையே ஒழுங்கு படுத்துகிறோம். இது தனியார் நிறுவனம். ஆகவே இது உயர்கல்வி அமைச்சின் கீழே வரும் என்கிறார் அவர். நிறுவனத்தின் முன்பகுதி, மொகலாய, மேற்கு ஆசிய (சவூதி) கட்டிட கலைகளை பிரதிபலிப்பதாக பிரமாண்டமாக உள்ளது. வகுப்பறைகள் மிக நவீன வசதிகள் கொண்டதாக உள்ளன. இந்த காணி உள்ள நிலம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையிடம் இருந்து குத்தகைக்கு பெறப்பட்டுள்ளது. இங்கே நீச்சல் தடாகமும், கால்பந்து மைதானமும், பல நவீன விளையாட்டு வசதிகளும் கொண்டதாக இருக்கும் என நிறுவனத்தின் youtube பதிவு சொல்கிறது. இதற்க்கான பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி ஹிஸ்புல்லாவிடம் முன்வைக்கப் பட்டது. சவீதியில் உள்ள ‘Ali Al-Juffali Trust’ இடம் இருந்து 24 மில்லியன் டாலர் கடன் பெறப்பட்டுள்ளது. இது இந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கின் ஊடாக வந்தது என்கிறார் அவர். மலேசியாவில் உள்ள Universiti Teknologi Petronas (UTP) என்கிற தனியார் பல்கலைக்கழகத்தின் மாதிரியை கொண்டே இந்த பல்கலைக்கழகத்தினை அமைகின்றார் அவர். இதற்காக 2016 -17 காலப்பகுதியில் அங்கே சென்று இருக்கிறார் ஹிஸ்புல்லா. சோலார் ஓடுகளுடன் கூடிய கூரைகளுடன் கட்ட பட்டுக்கொண்டிருந்த இந்த பல்கலைக்கழகத்தின் லைப்ரரி வேலைகள், கடந்த வார குண்டு வெடிப்புகளுக்கு பின் நிறுத்தப் பட்டுள்ளன. யாழுக்காக எனது மொழிபெயர்ப்பு. sundaytimes.lk
 6. 7 points
  கப்பல் சிறிதாக இருந்தாலும் கடற்பயணம் மனதில் பேருவகையை ஏற்படுத்தியது. மத்தியதரைக் கடலில் கலக்கும் சிறிய கடற்பகுதிக்கு மிருடன் கடல் என்று பெயர். ஆனால் அவர்கள் கப்பல் மத்தியதரைக் கடலில் செல்வதாகவே எமக்குக் கூறினர். இந்தச் சிறிய கடலே இத்தனை பெரிதாக இருக்கிறது. பெருங்கடல்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கவேண்டும் என்ற ஆசையும் கூடவேபயமும் எழுந்தது. முதலில் எம்மை கைட்றா என்னும் அழகிய தீவில் இறக்கிவிட்டனர். நாமாகவே சென்று இடங்களைப் பார்த்துவிட்டு இரண்டு மணி நேரத்தில் திரும்ப கப்பலுக்கு வந்துவிட வேண்டும்.பக்கத்தில் எல்லோரும் போகிறார்கள் என்று நாமும் போனால் ஒரு பழைய தேவாலயம். சரி அதையும் பார்த்துவிடுவோம் என்று பார்த்துவிட்டு பலரும் போய்க்கொண்டிருந்த ஒரு வீதியைத் தெரிவு செய்தோம். ஆரம்பத்தில் அவை சிறிய வீதிகளாக முழுவதும் வெண்கற்களால் நிலம், வீதி வீடுகள் எல்லாமே வெள்ளையாகத் தெரிந்தன. கழுதை போன்ற ஒன்றைக்கொண்டுவந்து குதிரையில் போகப் போகிறீர்களா என்று ஒருவன் கேட்கிறான். உயரம் குறைவாக இருக்க ஏறிப் பார்ப்போமா என எண்ணி மனிசனிடம் கேட்க பாவம் கழுதை என்று மனிசன் காலை வாருகிறார். சிலர் அதில் ஏறிச் செல்வதை பெருமூச்சுடன் பார்த்துவிட்டு நடக்கத் தொடங்குகிறேன். தொடர் வீடுகள். வீதியிலே வாசல்கள் இருக்கின்றன.கொஞ்சம் ஏற்றமாக இருக்கிறது. கடும் வெய்யில் என்றாலும் கடற்காற்றில் நன்றாக இருக்கிறது.தொடர்ந்து நடக்க நடக்க மழைக் குன்றுகள் தான் தெரிகின்றன.தொட்டம் தொட்டமாக வீடுகள். பாதை உயர உயரச் செல்கின்றது. கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் நடக்க ஒரு உணவு விடுதி வருகிறது . நேரம் பத்தரை என்பதனாலும் கப்பலில் கொண்டுவந்த காலை உணவைக் கப்பலில் உண்டதாலும் பசி இல்லை. ஆனாலும் நடந்து களைத்ததனால் கோப்பி அருந்திவிட்டுச் செல்வோம் என்று அங்கே அமர்ந்து கோப்பியும் அவர்களின் கேக்கும் உண்டுவிட்டு எழுந்து மீண்டும் நடக்கிறோம். வெட்டை வெளிகளையும், மரம் செடி, கொடிகளையும் பார்த்துக்கொண்டிருக்க நேரம் போய்விட்டது. மீண்டும் திரும்ப வருகிறோம். இன்னும் ஒரு பத்து நிமிட நடையில் கப்பலை அடைந்துவிடலாம். இருந்தாற்போல் பெரிய குழல் ஊதுவதுபோல் எமது கப்பலில் இருந்து சத்தம் வருகிறது. கப்பல் புறப்பட ஆயத்தமாகி அதன் பாதையை பூ ட்டிடத்தொடங்கிவிட்டனர். நெஞ்சு பாதை பதைக்க stop என்று கத்தியபடி ஓடி வருகிறோம் நாம் இருவரும். எடுத்த கப்பலை நிறுத்தி மீண்டும் எமக்குப் பாதையைத் திறந்து விடுகின்றனர். மனதில் பெரிய நின்மதியும் கூடவே வெட்கமும் எழுகின்றது. மன்னியுங்கள் என்று அதில் நின்றவரிடம் கூறிவிட்டு உள்ளே சென்று அமர்கின்றோம். பன்னிரண்டரை முதல் ஒரு ஒன்றரை மணி வரை கப்பலிலேயே மதிய உணவு என்று எமது வழிகாட்டி கூறியிருந்தார். பபே என்பதனால் எதற்கும் முதலே உண்பது நல்லது என்று எண்ணி மேலே செல்லாது காத்திருக்கிறோம். நேரம் நெருங்க கதவைத் திறந்துகொண்டு சென்றால் சனம் நெருக்கி அடித்தபடி நிற்கின்றனர். ஒருவாறு இடம்பிடித்து அமர்ந்து உணவை உண்ண ஆரம்பித்தோம். இந்திய உணவுகளும் மீன் வகைகளும் மரக்கறிகளும் செய்துவைத்திருந்தனர். சுவையாகவே இருக்க இரசித்து உண்டுகொண்டிருக்க என்ன குடிக்கிறீர்கள் என்று ஒருவர் வந்து கேட்டார். கணவர் கோலா சொல்ல நான் எனக்கு கலந்த பணம் வேண்டும் என்று ஒரேன்ஜ் வித் ginger என்று ஓடர் செய்தேன். சிறிது நேரத்தில் வந்த பணியாள் தோடம் பழம் இல்லை என்று கூறி எலுமிச்சையில் இஞ்சி போட்டு வேறு ஒரு சிரப் விட்டுத் தருகிறேன் நன்றாக இருக்கும் என்றான். சரி கொண்டுவா என்றுவிட்டு பார்த்துக்கொண்டு இருந்தால் அழகாக அலங்கரித்துக் கொண்டு வருகிறான். வாயில் வைத்துக் குடிக்க ஒரு கசப்புத் தெரிகிறது. குளிர்பானங்களுக்குத் தனியாக நாம் பணம் செலுத்தவேண்டும் என்று கூறி பில்லையும் தர வாங்கிப் பார்த்தால் கோலா 5 யூரோஸ் எனது பணம் 7யூரோஸ் என்று இருக்கு. அனியாயக் காசு என்று மனிசன் புறுபுறுக்க அந்தாளின் திட்டுக்குப் பயந்து எதுவும்சொல்லாமல் மிச்சம் வைப்போமோ என்று நினைத்த யூஸைக் குடித்து முடிக்கிறேன்.
 7. 7 points
  ஓமண்ணை கவனிக்கவில்லை .மன்னிச்சுப்போடுன்கோ ...அப்போ இதையும் படித்துவிட்டு தானோ ஹிஜாபுடன் அல்லது நிகாப்புடன் வரப்போகினம் என்று புளங்காகிதம் அடைகிறோம். அவர்கள் விரும்பியது ஹிஜாபுடன் பாடசாலை போவது அல்ல ஹிஜாபை வைத்து பாடசாலை மாறுவது. அதற்க்கு வலு ஆப்பு ஒன்றை மனோ கணேசன் போட்டுவிட்டார், அவர்கள் எதோடு வேண்டுமானாலும் வரட்டும் ,வச்ச குண்டுக்கு அவர்களுக்கு ஏழரை ஆரம்பிச்சிட்டு சிங்களவன் செமையாக பக்குவமாக பல்லுப்படாமல் செய்யுறான் ,வேடிக்கை பார்ர்கிறதை விட்டுவிட்டு அவர்கள் ஹிஜாபோடு வரப்போகிறார்கள் நிக்காப்போடு வரப்போகிறார்கள் என்று நாம் ஏன் குத்தி முறிவான் , அவர்கள் எதோடு வேண்டுமானாலும் வரட்டும் ஏன் ஆடையே அணியாமல் வேண்டுமென்றாலும் வரட்டும் , அது அவர்களது பிரச்சினை ,இது தான் எனது அபிப்பிராயம் ....நமக்கெதுக்கு வெற்றி ...இதுல வெற்றியடைந்து ...இப்போ தமிழன் கழுவுற மீனில் நழுவுற மீன். முடிஞ்சா சிங்களவனுடன் சொருகிவிட்டுவிட்டு வேடிக்கை மட்டும் பார்த்தால் போதும்
 8. 7 points
  பிள்ளையாரும் துர்க்கை அம்மனும் துணை. கரணவாய் மத்தி கரணவாய் 30.06.1983 அன்புள்ள ஆசை அத்தான் அறிவது! நான் இங்கு நல்ல சுகம். அது போல் நீங்களும் சுகமாக இருப்பீர்கள் என நம்புகின்றேன். உங்கள் பல கடிதங்கள் கிடைத்தது. பதில் எழுத என் உள்மனம் இடங்கொடுக்கவில்லை. அத்தான்! நீங்கள் ஏன் அவர்களுடன் நின்று தோளின் மேல் கைபோட்டுக்கொண்டு போட்டோ எடுத்தனீங்கள்? அந்த உரிமை எப்படி உங்களுக்கு வந்தது? உங்கள் மீது என் மூச்சு மட்டுமே படவேண்டும். நீங்கள் எனக்கு மட்டுமே சொந்தம்.அப்படியிருக்கும் போது நீங்கள் அந்த வெள்ளைக்காரியின் படத்தை எனக்கு அனுப்பி எதிர்காலம் என்று ஒரு சொல்லு எழுதியிருந்தீர்கள். அது என் இதயத்தை முள்ளாக குத்தி விட்டது. அதிலிருந்து நான் இன்னும் மீளவேயில்லை. உங்களுக்கு விசா பிரச்சனையாயின் திரும்பி இங்கே வாருங்கள் நான் வேலைக்கு போய் உங்களை கடவுள் போல் வைத்திருப்பேன். அத்தான் நீங்கள் குடிப்பது போல் ஒரு போட்டோவும் அனுப்பியிருந்தீர்கள். அது என்ன சாராயமா? கெட்ட பழக்கமெல்லாம் பழக வேண்டாம் அத்தான். சொண்டு கூட கறுத்துப்போய் இருக்கு. சிகரெட்டும் பத்துறியளோ? தனிய இருந்து எல்லா ஊத்தைப்பழக்கங்களையும் பழகிறியள் போலை இருக்கு. காலைச்சாப்பாடாய் என்ன சாப்பாடு சாப்பிடுறியள் அத்தான். காலைச்சாப்பாடு முக்கியம் அத்தான். ஏனெண்டால் நீங்கள் 11,12 மணிக்குத்தான் நித்திரயாலை எழும்புவன் என எழுதியிருந்தீங்கள்.8 மணிக்கு எழும்பி தேத்தண்ணி குடிச்சு சாப்பிட்டுட்டு பிறகு நித்திரை கொள்ளலாம் தானே அத்தான். உடம்பை கவனியுங்கோ. வெள்ளைக்காரியளோடை உங்களுக்கு தொடர்சல் வேண்டாம்.கடியன் கந்தையாவின்ரை மகளை கண்டனீங்களோ? அவள் இஞ்சையே சரியில்லாதவள். நீங்கள் கவனமாய் இருக்க வேணும் அத்தான். பிள்ளையார் கோயில் குருபூசைக்கு நானும் வசந்தியும் போனனாங்கள். உங்கடை அம்மாவும் வந்திருந்தவ. ஐயர் திருநீறு தரேக்கை உங்கடை அம்மா வாங்கி என்ரை நெற்றியிலை பூசி விட்டவ.இதை டிப்போவின்ரை மனுசி சரசுவதி ஒரு மாதிரி பார்த்தார். இதை கண்ட உங்கடை அம்மா என்ரை பிள்ளை நல்லாய் இருக்கோணும் நல்லாய் இருக்கோணும் எண்டு என்ரை சொக்கிலையும் கழுத்திலையும் திருநீறு பூசிவிட்டவா. அத்தான் நீங்கள் கோட் சூட் போட்டு ஒரு போட்டு எடுத்து அனுப்புங்கோ. என்ரை குஞ்சு அத்தானுக்கு ஒரு குறையும் வரக்கூடாதெண்டு எங்கடை மருதடி வைரவரை ஒவ்வொரு நாளும் கும்புடுவன். இனி நான் தொடர்ந்து கடிதம் போடுவேன். கவனம் வெள்ளைக்காரியள். விசா பிரச்சனை எண்டால் இஞ்சை வாங்கோ.நான் உங்களை என்ரை மடியிலை பிள்ளை போலை வைச்சு பாப்பன். நீங்கள் இனிமேல் எங்கடை வீட்டுக்கே கடிதம் போடுங்கோ அத்தான். ஏகாம்பரம் ஐயாவிட்டை அனுப்ப வேண்டாம்.அவர் பின்னேர வெறியிலை எங்கடை ஐயாவிட்டையும் உங்கடை ஐயாவிட்டையும் எல்லாத்தையும் சொல்லுறார் போலை இருக்கு. வேறு என்ன அத்தான் பதில் கடிதம் போடுங்கோ. போட்டு மறக்க வேண்டாம். அத்தான் எனக்கு உங்களை நினைக்கும் போதெல்லாம் பல்லு கூசும். உங்களுக்கு???? இத்துடன் முடிக்கின்றேன் அத்தான் அன்பு பரிமளம்
 9. 7 points
 10. 7 points
  பேருந்து இரண்டு மூன்று இடங்களில் நின்றும் நாம் இறங்கவில்லை.முதலில் அக்றோபொலிஸ் என்னும் மலையில் எதெனா என்னும் பெண் தெய்வத்துக்காக கடத்தப்பட்ட கோவிலைத்தான் முதலில் பார்க்கவேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். எம்மைக் கொண்டுபோய் அந்த மலையின் அடிவாரத்தில் ஓரிடத்தில் இறக்கினார்கள். அனைத்து வாகனங்களும் அதற்கும் அங்கால் போகாது. நாம் சென்ற நேரம் விடுமுறையைக் கழிக்க எக்கச்சக்கமான சனங்கள் வந்தும் போய்க்கொண்டும் இருந்தார்கள். மேலே சென்று கோயிலைப் பார்ப்பதற்கு ஒருவருக்கு 10 யூரோக்கள். கடும் ஏற்றமாக இல்லாமல் ஒரு பாதையும், ஒற்றையடிப் பாதை போன்று ஒரு பாதாயும் இருக்க நாம் ஆடிப்பாடி சீரான பாதையால் நடந்து சென்றோம். ஒரு ஐந்து பாகை குறைவாக இருந்தாலே குளிர்வதுபோல் இருந்திருக்கும. அன்றைய வெப்பநிலை 19 O செல்ஸியஸ் என்பதனால் எந்தவித சலிப்பும் இன்றி மகிழ்வாக இருந்தது. இடையேயும் சிறு கட்டட இடிபாட்டுடன் கூடிய பிரமாண்டமான மதில்கள் பார்ப்பதற்கு ஆச்சரியத்தைத் தந்தன. பெருமரங்கள் என்று சொல்வதற்கு எதுவுமே காணப்படவில்லை. இடையிடையே புதிதாக நடப்பட்ட சில மரங்களும் ஒலிவ் மரங்களும் காணப்பட்டன. உச்சியில் ஏறினால் பிரமாண்டமான கோயில் ஒன்று இடிபாடுகளோடு காணப்பட்டாலும் வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்பதனால் வாய் பிளந்து பலரும் அதை பார்ப்பதுபோல் நாமும் சுற்றிவந்து பார்த்துப் பரவசமடைந்தோம். பல பாரந்தூக்கிகளை வைத்து இடிபாடுகளை புனரமைத்துக்கொண்டிருந்தார்கள் பலர். ஒரே வெள்ளை நிறக் கற்களில் பலவற்றை ஒன்றன்மேல் ஒன்று அடுக்கி செதுக்கிய உயரமான தூண்கள் பல சிதறித் துண்டு துண்டாகி பரவலாய் விழுந்து கிடந்தன. புதைந்து போய்க் கிடந்தவற்றையும் எடுத்துக் பொருத்திக் கொண்டிருந்தார்கள். பார்க்கவே எனக்கு களைப்பாக இருந்தது. ஏனெனில் அத்தனையையும் பொருத்தி முடிக்கவே பல ஆண்டுகள் ஆகும். எமது கட்டடக்கலைக்கும் சிற்பங்களும் எவையும் ஈடாகமுடியாதுதான் எனினும் அவர்களின் கட்டடக்கலையையும் சாதாரணமான ஒன்றல்ல என்று புரிந்தது. அவற்றின் பிரமாண்டம் மலைக்கவைத்தது. இதனை பெருங்கற்களை இந்த மலையில் எடுத்து வந்து இத்தனை பெரிய கோவிலைக் கட்டிமுடிக்க எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும்.? எத்தனை பேரை வேலை வாங்கியிருப்பார்கள். இடையில் நின்று பார்த்தபோது கீழே இந்த அரங்கு தெரிந்தது. கீழே அக்றோபொலிஸ் பற்றி எழுதியிருப்பவர் திரு வாசுதேவன். நான் கிரேக்கத்தின் படங்களைப் போட்ட போது அவர் என் முகநூலில் எழுதியதை இதில் இணைக்கிறேன். ஐரோப்பாவில் முதன் முதலாக நிறுவப்பட்ட பிரமாண்டமான நகரம் எதென்ஸ் ஆகத்தான் இருக்க முடியும். எதென்ஸில் தான் முதலில் ஜனநாயகம் பிறந்தது. பெரிக்கிளீஸ் தான் எதென்ஸ் நகரின் காரணகர்த்தா. எதென்ஸ் நகரும் அதன் மக்களும் பெரிக்கிளீஸின் நிர்வாகத்தில் செழிப்பை அனுபவித்தார்கள். பெரிக்கிளீஸால் எல்லோருக்கும் பல உரிமைகள் வழங்கப்பட்டன. சிற்றரசுகளாகப் பரிமாணம் கொண்டிருந்த கிரேக்கத்தில் பெரிகிளீஸின் இராணு நிர்வாகமே பாதுகாப்பு வழங்கியது. இராணுவப் பாதுகாப்புக்குப் பதிலாக மற்றைய சிற்றரசுகளிமிருந்து பெறப்பட்ட வரியை முதலாக்கி பெரிக்கிளீஸ் பாரிய கடற்படையையும் உருவாக்கினான். பாரிய கட்டுமானங்களைச் செய்தான். ஏதென்ஸ் நகரத்தைச் சுற்றி பாரிய பாதுகாப்பு மதிலைக்க கட்டினான். அக்றோபொலிஸ் மலைப்பீடத்தில் எதெனா தேவதைக்கு உலமே வியக்கும் வண்ணம் ஆலயம் கட்டினான். பின்னால், இரண்டாயிரம் வருடங்கள் கடந்தும், டாவின்சியும்அக்கட்டடக்கலையை விதந்துரைத்தான். * வருடத்திற்கொருமுறை மக்களால் தெரிவு செய்யப்படும் தலைவனாக இருபத்தொன்பது தடவை தெரிவு செய்யப்பட்டான். அத்தனை செல்வாக்குள்ள தலைவனாக விளங்கினான் பெரிக்கிளீஸ். புத்திஜிவிகளுக்கு பாரிய உதவிகளை வழங்கினான். அவர்களின் வளர்ச்சிக்கு வித்திட்டான். எதென்ஸ் நகரை விஸ்தரிந்து புதிய நகரங்களை உருவாக்கினான். * ஆனால், எதெனிய அரசியல்வாதிகள் அவனில் பாரிய பொறாமை கொண்டிருந்தார்கள். பெரிக்கிளீஸின் நெருங்கிய நண்பர்கள் சிலரைச் சதியால் கொன்றார்கள். ஸ்பாட்டா சிற்றரசு தொடர்ச்சியாக எதென்ஸ் படைகளுக்கு அஞ்சிய வண்ணமிருந்தது. இருப்பினும் ஸ்பாட்டா அரசு தரைப்படையில் மிகுந்த பலத்தைக் கொண்டிருந்தது. கடல்படையில் மிகவும் பலவீனமாக இருந்தது. ஸ்பாட்டா எதென்ஸ் க்கு எதிராகப் போர் தொடுத்தபோது பெரிக்கிளீஸீன் படைகள் அவற்றைத் தோற்கடித்தன. ஒரே வருடத்தில் பத்துத் தடவைகள் போர்தொடுத்தன. எதென்ஸ் நகரைத் தோற்கடிக்க முடியவில்லை * இருப்பினும் -430 ல் பெருநோயொன்று எதென்ஸ் நகரைத்தாக்கியது. எதென்ஸ் நகர அரசியல்வாதிகள் பெரிக்கிளீஸின் நடத்தை காரணமாகவே அவ்வாறு நோய் உருவாகியது என்று குற்றம் சுமத்தினார்கள். எது எப்படியிருப்பினும் பெரிகிளீஸ் அந்நோயாலேயா மாண்டான். எதென்ஸ் நகரம் எதிரிகளின் கைகளில் வீழ்ந்து இழிவடைந்தது. * எவ்வாறோவெல்லாம் மாறியது. தேவதை அத்தெனாவின் ஆலயம் பின்னொருகால் கிறிஸ்தவ தேவாலயமாகியது. பின்னர் ஒஸ்மானியர்கள் அதை கைப்பற்றியபோது அது பள்ளிவாசலாக இருந்தது. வெனிசியர்கள் அதைத் தாக்கியழித்தார்கள். சரிந்தது. * இன்னமும் அக்ரோபொலிஸ் குன்றின் முகட்டில் நிமிர்ந்து நிற்கும் எதெனா தேவதையின் ஆலயத்தின் உயர்ந்த தூண்கள் பெரிக்கிளீஸின் வெற்றியின் சின்னம். * பெரிக்கிளீசுகள் கிரேக்கத்தில் மாத்திரம் முளைப்பதில்லை. அவர்கள் கிரேக்கத்தில் மாத்திரம் வீழ்வதில்லை. பெரிக்கிளீசுகளை நான் நேசிக்கிறேன். எதென்ஸ் நகரம் என்னை அழைக்கிறது - 22
 11. 6 points
 12. 6 points
  தெய்வமே ! என்ன இப்படி சொல்லிப் போட்டீங்கள்....... நான் உங்களைத்தான் நம்பி இருக்கிறன். எனக்கு நான் கடைசியாய் வந்தாலும் பரவாயில்லை நீங்கள் கிருபனுக்கு முன்னால் வந்தாலே போதும்.......! இந்த விளையாட்டை மாற்றும் காரணிகள் பல உள்ளன......! ---- காலநிலை குழப்பி விடும்......! ---- நடுவர்கள் விளையாடி விடுவார்கள்......! ---- எதிர்பார்க்கும் வீரர் முதல் பந்திலேயே போய் விடுவார்.....! ----- சில சமயம் மேலே இருப்பவர்கள் விளையாடி விடுவார்கள்....! ---- பிட்சுகள் சொதப்பி விடும்......! இப்படி ஏகப்பட்ட விடயங்கள் இருக்கு....... இதெல்லாம் சும்மா லாட்டரீ போலத்தான் , கொப்பி அடிச்சால் கூட வேலைக்கு ஆகாது. தயங்காமல் பங்கு பற்றவும். தினமும் மனிசிமாரிடம் தோற்றுப்போகிறம் அதுக்கு நண்பர்களிடம் தோற்றால் பரவாய் இல்லை.....!
 13. 6 points
  அன்று.. புட்டுக்கும் தேங்காய் பூவுக்கும் கொழுவல்.. பரிகாரம் சொந்த மொழி பேசிய சொந்தவனை எதிரி என்று வரிந்து பொது எதிரியை நண்பனாக்கி காட்டிக் கொடுத்தோம் வெட்டிக் கொன்றோம் துரத்தி அடித்ததோம் கள்ளமாய் காணி பிடித்தோம்.. கிழக்கின் பூர்வகுடிகளை அகதியாக்கினோம் வடக்கில் பள்ளிவாசல்களில் ஆயுதங்கள் குவித்து ஆயத்தமானோம். அதற்குள்.. வரிகளுக்கு விளங்கிவிட கூட்டோடு காலி பண்ணி விட்டது அசைவது அசையாதது இழந்து புத்தளத்தை அடைந்தோம். அல்லாவின் நவீன தூதன் அஷ்ரப்பின் உதவியுடன் அடிப்படைவாத வெறிக்குள் மூழ்கினோம்.. ஹிஸ்புல்லாவின் வழியில் ஊர்காவல் படை அமைத்தோம்... மிச்ச சொச்ச சொந்த மொழி பேசும் சொந்தங்களையும் குந்த விடாமல் குதறித்தள்ளினோம்.. சிவன் பிள்ளைகளை அல்லாவின் சிஷ்யைகள் ஆக்கினோம்.. எங்கள் பிள்ளைகளுக்கு காசும் கல்யாணமும் செய்து வைத்தோம். குடித்தொகையை அளவு கணக்கின்றி பெருக்கித்தள்ளினோம். முள்ளிவாய்க்கால் என்பது பெருந்துயர் என்கிறார்கள் நாங்கள் பாட்டாசு போட்டவர்கள் கூட்டத்தில் பாற்சோறு உண்டோம். கூடிக் களித்தோம்.. கொண்டாடி மகிழ்ந்தோம். எமது காட்டிக் கொடுப்பை உளவுப் பணி என்றோம் சிறீலங்கா மாதாவுக்கான சீரிய கடமை என்றோம் எம்மை நாமே மெச்சி நின்றோம்.. பெரும் மானுடத் துயரை சிம்பிளாய் கடந்து போனோம். காலச் சக்கரம் கடந்து போனது.. எங்கள் உண்மை முகம் வெளியில் வந்தது.. அல்லாவுக்கும் அந்நோனியாருக்கும் கொழுவல் போட்டோம்.. மீண்டும் சொந்த மொழி பேசியவனை கொன்று குவித்தோம். புனிதப் போரின் அத்தியாயம் இஸ்லாமிய அரசின் கீழ் என்றோம். எங்கள் இரத்தமும் அவன் இரத்தமும் ஒன்றே என்பது மறந்தோம்.. எங்கள் தோலும் அவன் தோலும் ஒன்றே என்பது தொலைத்தோம்.. எங்கள் ஆடையும் அவனின் ஆடையும் ஒன்றே என்பது வெறுத்தோம்.. எங்கள் மொழியும் அவன் மொழியும் ஒன்றே என்பதை கிடப்பில் போட்டோம்.. அராபிய எடுபிடிக்குள் எண்ணெய் வள செல்வச் செழிப்புக்குள் இஸ்லாமிய அடிப்படைவாதத்துள் எம்மை மூழ்கி எடுத்தோம் வார்ப்புக்களை வளர்த்து விட்டோம். இன்று.. நிம்மதி தொலைத்தோம். செய்த பாவத்தின் பலனை அனுபவிக்கிறோம்.. நாமே நம்மை இஸ்லாமிய ஆட்சியின் குடிகளாகச் சூடிக் கொண்டதும் வெறுப்பை வளர்த்ததும் தான் மிச்சம்.
 14. 6 points
  ஒரு வாளும் சில கூரிய ஆயுதங்களும் வீசியது பெரிய செய்தி இல்லையென்று ஒட்டாமல் விடுவோமா என்று நினைத்தேன். அவர் முஸ்லிம் இளைஞராக இருந்தது திரியை பத்திவிட்டிருக்கின்றது! என்னதான் பழைய வரலாறுகளைச் சொல்லி முஸ்லிம்களை வெளியேற்றியது நியாயம் என்று கதைத்தாலும் அது நியாயமில்லை. அது போல இப்போது முஸ்லிம்களை அடக்குகின்றோம் என்று சிங்களப் படைகள் சோதனை என்ற பெயரில் செய்யும் அடக்குமுறைகள் தமிழர்களுக்கும் சேர்த்துத்தான் என்பதை அறியாமல் சந்தோஷப்படுவதும் நல்லதில்லை. திலீபனின் படம், அன்ரன் பாலசிங்கம் படம் வைத்திருப்பதே கைதாகும் நிலையைத் தோற்றுவிக்கின்றது என்பது சிங்கள அரச இயந்திரங்கள் தமிழர்கள், முஸ்லிம்கள் என்று பேதம் பார்க்காமல் அடக்குமுறை செய்கின்றன என்பதைத்தானே கூறுகின்றன. இலங்கை சிங்களவர்களுக்கு மட்டுமே என்ற இலட்சியத்தை துரிதமாக அடைவதற்கான ஊக்கியாகத்தான் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத்தாக்குதல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
 15. 6 points
  பெண் பாவம் வேண்டாம்! கிராமமும் இல்லாத, நகரமும் இல்லாத இடைப்பட்ட ஊரில் திருமணம் ஒன்றுக்கு நானும் என் தோழியும் கிளம்பினோம். பெண்ணின் தாயார் எங்களின் தோழி. திருமண ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தன. வரவேற்பு இனிதாக நடந்து முடிந்தது. மறுநாள் விடிந்ததும் திருமணம். எல்லோரும் உற்சாகமாகப் பேசிவிட்டுப் படுத்தோம். விடிகாலை மாப்பிள்ளை வீட்டார் இருந்த பகுதியில் ஒரே களேபரம். மாப்பிள்ளையின் தாய் மாமா இரவு படுத்தவர் எழுந்திருக்கவேயில்லை. மாஸிவ் ஹார்ட் அட்டாக். தூக்கத்திலேயே உயிர் போய்விட்டது. மணப்பெண் குளித்து பாதி அலங்காரத்தில் இருக்கிறாள். சமையல் வேறு பாதியில் நிற்கிறது. அரசல் புரசலாக பெண்ணின் ராசி பற்றி விமர்சனம் எழுகிறது. என் தோழியின் குடும்பத்தினர் கையைப் பிசைந்து கொண்டு செய்வதறியாது கலங்கி நிற்கிறார்கள்! அப்போது இறந்து போனவரின் மனைவி எங்களை அழைப்பதாகக் கூறினார்கள். நாங்கள் போனோம். ஏற்கனவே மாப்பிள்ளையின் குடும்பம் அங்கு இருந்தது. அந்த அம்மா பொதுவாகப் பார்த்து, ‘‘கல்யாணம் நிச்சயித்தபடி நடக்கட்டும். அவருக்குக் கல்யாண சாவுதான். துள்ளாம துடிக்காம நிம்மதியா சேர்ந்துட்டார். இந்தக் கல்யாண வேலையை முன்னின்று செய்தது அவர்தான். அது நின்று போறத அவர் விரும்ப மாட்டார். இது நடக்கலைன்னா எல்லோரும் கல்யாணப் பொண்ணைத்தான் வாய்க்கு வந்தபடி பேசுவாங்க. பெண் பாவம் வேணாம். நான் அவரோட கிளம்பறேன்’’ என்று கும்பிட்டார். பெண்ணின் தாயார் அவர் காலடியிலே விழப் போக, அவர் பதறிப் போய் தடுத்து விட்டார். போன உயிர் எல்லோருக்கும் திரும்பி வந்தது. மாப்பிள்ளை வீட்டாரும் மேற்கொண்டு எதுவும் சொல்லவில்லை. அமைதியாக திருமணம் முடிந்தது. என்ன... கல்யாண கலகலப்புகள்தான் மிஸ்ஸிங். ஆனாலும், அந்த அம்மாவை எல்லோருமே வணங்கினர். அவர்கள் கொஞ்சம் சுணங்கியிருந்தாலும் கல்யாணம் நடந்திருக்குமா? தன்னுடைய பேரிழைப்பைக்கூட பெரிதாக எண்ணாமல் இன்னொரு பெண்ணின் வாழ்வை நினைத்த இவர் போன்ற மனித நேயமிக்கவர்களால்தான் பூமி இன்னும் தன் அச்சிலிருந்து பிறழாமல் சுழல்கிறது போலும். - ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை. #AnupavaAdvise #NamthozhiMagazine #SakthiMasala
 16. 6 points
  தபால்கந்தோர் கரணவாய் 24.06.1983 தம்பி குரு அறிவது! யான் நலம் வேண்டுவதும் அதுவே. நான் முன்னர் ஒரு கடிதம் போட்டிருந்தேன் கிடைத்திருக்குமென்று நம்புகின்றேன். நீங்கள் கன நாட்களாக கடிதம் எதுவும் போடவில்லை. ஏன் ஏதும் பிரச்சனையா? வசந்தியிடமும் விசாரித்தேன். அவர் பதிலேதும் சொல்லாமல் சிரித்து விட்டு சென்றார். பரிமளத்தையும் குளத்தடியில் கண்டேன். எப்பிடி சுகமாய் இருக்கிறியளோ பிள்ளை எண்டு சுகம் விசாரிச்சன். ஓமண்ணை இப்ப அது மட்டும்தான் குறைச்சல் எண்டு வெடிச்சு விழுந்தா.....நான் அதுக்குப்பிறகு வாயே திறக்கேல்லை. சிவத்தின்ரை மூத்த பெட்டை சதாசிவத்தின்ரை பெடியனோடை ஒரு தொடர்பு இருந்ததெண்டு உங்களுக்கு தெரியும் தானே. இப்ப பெட்டை க்கு 7மாதமாம். சதாசிவத்தின்ரை பெடியன் அது தனக்கில்லையெண்டு ஊர்முழுக்க சொல்லிக்கொண்டு திரியிறானாம். பாவம் பெட்டை கலியாணம் கட்டாமல் அவசரப்பட்டுட்டு இப்ப அழுதுகொண்டு திரியுது. பெட்டிசத்துக்கு மேலை பெட்டிசம் போட்டு தவறணையை வயல்கரைக்கு அங்காலை கொண்டு போட்டாங்கள்.சரியான தூரம். எண்டாலும் வாடிக்கையாளர் எக்கச்சக்கம் எண்டபடியாலை இப்பவும் களைகட்டுது.பெட்டிசம் போட்டது முழுக்க விநாயகத்தான் எண்டது எல்லாருக்கும் தெரியும்.தம்பி நீங்கள் இஞ்சை இருந்திருந்தால் விநாயகத்தானுக்கு கட்டாயம் இருட்டடி விழுந்திருக்கும் எண்டு எனக்கு நல்லவடிவாய் தெரியும். வட்டி வீரகத்திக்கு எட்டாவதும் பொம்புளைப்பிள்ளை தான் பிறந்திருக்கு. போனமாதம் தான் வீரகத்தியின்ரை மூத்த பிள்ளைக்கும் பொம்பிளைப்பிள்ளை பிறந்தது.கைலாயபிள்ளையின்ரை பெடியன் கள்ளக்கரண்டு எடுக்கேக்கை கரண்ட் அடிச்சு செத்துப்போனான்.அவனுக்கும் இப்ப 21 வயதாகுது. பரமானந்தம் வாத்தியார் அங்கை பள்ளிகூடத்திலை ஆரோடையோ சேட்டை விட்டவராம். அவங்கள் அரோ அடி அடியெண்டு அடிச்சுப்போட்டாங்களாம். முகத்திலையும் கையிலையும் சரியான காயத்தோடை திரியுறார். மனுசி விசாலாச்சி அவர் சைக்கிளாலை விழுந்துதான் காயமெண்டு சொல்லிக்கொண்டு திரியிறாவாம்.ஆனால் ஊர்ச்சனம் முழுக்களுக்கும் உள்ள விசயம் தெரியும். ஆறுமுகத்தார்ரை கடைசிக்கு லண்டன் மாப்பிளையை பேசி வைச்சிருக்கினம். சீதனம் எக்கச்சக்கம் எண்டு கேள்விப்பட்டன். லண்டன் மாப்பிளை எடுக்கிறது கஸ்டம் தானே. போனவருசம் தான் மாப்பிளை லண்டனுக்கு போனவராம். நல்ல இடத்திலை வேலை செய்யிறார் எண்டு கேள்விப்பட்டன். வேறு விடயங்கள் இல்லை. உங்களிடமிருந்து எனக்கு ஒரு உதவி வேண்டும்.கேட்பது சரியோ பிழையோ தெரியவில்லை.நீங்கள் குறை நினைக்க மாட்டீர்கள் என நினைக்கின்றேன். எனக்கு கொஞ்ச பண உதவி வேண்டும்.பனங்காட்டுக்கு பக்கத்திலை இன்னொரு வீடு கட்டினனான் உங்களுக்கு தெரியும் தானே. வீடு ஒரளவுக்கு கடவுளே எண்டு கட்டி முடியுது. கையோடை கையாய் கிணறும் கட்டி விட்டால் நல்லது .அதுக்கு கொஞ்சம் பண உதவி செய்தால் நன்றிக்கடனோடை இருப்பேன்.கட்டாயமில்லை. முடிந்தால் உதவி செய்யுங்கோ குரு.இல்லையென்றாலும் சாந்தோசம். இத்துடன் முடிக்கின்றேன்.பதி கடிதம் போட மறக்க வேண்டாம். இப்படிக்கு ஏகாம்பரம்
 17. 6 points
  இந்தியாவுக்கு போனால் அதிகமாக கோவிலுக்கு போவது வழமை நான் ஒரு கோவிலுக்கு போவம் என்று நினைத்தால் என்ட பெட்டர்காவ் நாலு கோவிலுக்கு போகவேணும் என்று சொல்லுவார்.அது மட்டுமல்லாது இந்த மனித சாமிமார் அவர்களின் ஆச்சிரமம் அது இது என்று போவதும் வழக்கம். முதல் தடவையாக புட்டபத்திக்கு போனேன் .காரில் போகும் பொழுதே சாரதி இது சாய் பல்கலைகழகம் ,இது சாய் சங்கீதபாடசாலை,சாய் மருத்துவமனை,சாய் விமான நிலையம் என ஒரு பெரிய நகரத்திற்க்கு தேவையான சகல கட்டமைப்புக்களும் இருப்பதை காட்டிக்கொண்டே வந்தார் .ஒரு தனிநபரால் எப்படி இது சாத்தியம் என்று மனதில் கேள்வி எழுந்தது ,நான் அந்த கேள்வியை கேட்டிருந்தால் நிச்சமாக‌ சாரதியின் பதில் அவர் கடவுள் அவரால் இதுவும் செய்யமுடியும் இதற்கு மேலும் செய்ய முடியும் என்ற பதில் தான் வந்திருக்கும். அதைவிட பின்னுகிருந்த மனிசிட்ட "உங்களுக்கு எங்க போனாலும் குறுக்குபுத்தியும் லொள்ளும்,என்று திட்டு வாங்க வேணும்" பயணம் போன இடத்தில ஏன் வம்பு என்று போட்டு சாரதி சொல்லுவதற்கெல்லாம் ஆச்சரியமாக கேட்பது போல‌ நடித்துகொண்டு பயணித்தேன். வெளிநாட்டவர்க‌ள் பதிவு செய்து தங்குவதற்கு என ஒர் க‌ட்டிடம் உண்டு அங்கு போய் பதிவு செய்தேன் ,படம் பிடித்தார்கள் மற்றும் விரல் அடையாளங்களையும் பெற்று கொண்ட பின்பு பயணப்பொதிகளை எக்ஸ் ரெ பண்ணும் பெல்டில் போடும் படி கேட்டார்கள் அதை செய்து போட்டு, குளித்து வேஸ்டியை கட்டிக்கொண்டு தரிசனம் பூஜை போன்றவை நட‌க்கும் மண்டபத்திற்க்கு போனேன்.. எனக்கு புது இடம் என்றபடியால் மண்டபத்திற்கு முன்னால் நின்று மனைவியுடன் உரையாடிகொண்டிருக்கும் பொழுது, வெள்ளை காற்சட்டையும் செர்ட்டும் அணிந்த ஒருவர் "சாய்ராம்"என்று சொன்னபடி அருகே வந்து ஹிந்தியில் என்னவோ சொன்னார் நாங்கள் முழித்துகொண்டு நிற்கவே ஆண்களும் பெண்களும் இதில் நின்று கதைக்க வேண்டாம் பெண்கள் இந்த பக்கம் போகவும் ஆண்கள் மற்ற பக்கம் போகவும் என்றார். கூம்பிட்டு முடிந்தவுடன் மொபைலில் கொல்பண்ணுங்கோ என்று மனைவி பிள்ளைகளிடம் சொல்லிவிட்டு, நான் ஆண்களுக்குரிய லைனில் போய் நின்றேன் .மொபைல் போன் உள்ளே கொண்டு செல்ல தடை என அறிவிப்பு பலகையில் இருந்த அறிவிப்பை அப்ப தான் பார்த்தேன். மொபைல் மற்றும் கை பைகள் உள்ளே கொண்டு செல்ல முடியாது ,காரியாலயத்தில் கொண்டு போய் பாரப்படுத்துங்கள் என்று ஒரு சாய்ராம் காவலாளி சொல்ல மீண்டும் பொருட்கள் பாரப்படுத்தும் லைனில் போய் நின்றேன் ,எனது முறை வரவே கையிலிருந்த மொபைல் மற்றும் கைப்பையை கொடுத்து டொக்கனெடுத்து மீண்டும் வந்து ம‌ண்டபத்திற்க்கு போகும் வழியில் நின்றேன் ,எனது முறை வந்தது மெட்டல் டிடெக்கடர் ஊடாக உள்ளே வா என்றார் நானும் போனேன் இரு இளைஞர்கள் கீழே சப்பாணிகட்டிகொண்டு இரு பக்கமும் இருந்தார்கள் .எனது கால்களை வேஸ்டிக்கு மேலால் தடவி உள்ளே மறைத்து சொந்த ஆயுதத்தை தவிர வேறு ஆயுதங்கள் இருக்கா என சோதனை போட்டார்கள் ,சாய்ராம் என்ற சொல்லை மீண்டும் சொன்னார்கள், இதை தாண்டியவுடன் இன்னோரு காவலாளி சாய்ராம் என்று சொன்னபடி சேர்ட்டுக்கு மேலால் மேல் உடம்பை தடவிபார்த்துவிட்டு உள்ளே செல்ல அனுமதி தந்தார். உந்த செக்யுரிட்டு செக் எனக்கு பிடிக்கவில்லை என்ன செய்யிறது என்று போய் உள்ளே இருந்தேன். நான் போன மாதம் டிசம்பர் என்றபடியால் கிறிஸ்மஸ் பெருநாளுக்காக மண்டபம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது...மண்டபத்தினுள் புத்தர்,சிவன்,ஜேசு உருவங்களும் இஸ்லாத்தை அடையாளப்படுத்த பிறையும் வைக்கப்பட்டிருந்தது....இவர்கள் எல்லா மத சின்னங்களையும் வைத்து வணங்குகிறார்கள் இவரை மற்ற மதத்தவர்கள் வைத்து கும்பிடுவார்களா என்ற குறுக்கால போன புத்தி எனக்கு வந்திட்டு... வழிபாடு முடித்துவிட்டு வெளியே வந்து டோக்கனை கொடுத்து மொபைலையும் கைபையையும் வாங்கி கொண்டு விடுப்பு பார்த்து கொண்டிருந்தேன்... மனைவியும் பிள்ளைகளும் வந்தார்கள்.. இஞ்சாரும் நாளைக்கு நான் வரமாட்டன் நீர் வேணும் என்றால் வாரும்,எனக்கு உந்த செக் பண்ணி சாமி கும்பிடுற விளையாட்டுகள் சரி வராது...சிட்னி முருகனிட்ட போனால் எவ்வளவு டிசன்டா கும்பிட்டு போட்டு வரலாம்... இந்த இந்தியாவில தான் பழணி யாண்டியை தரிசிக்க போற‌து என்றாலும் செக்கியுரிட்டி செக்.... what a shame வேலையால் வந்தவள் இஞ்சாருங்கோ சிறிலங்கா நியுஸ் பார்த்தனீங்களோ ,செர்ஜ்யில் குண்டு போட்டிட்டாங்களாம் இப்ப விளங்குதோ ஏன் இந்தியாவில கோவில்களிலும் தேவாலயங்களிலும் செக்குயுரிட்டி செக் அதிகம் எண்டு ஓஓ உதுக்குத்தானோ....
 18. 6 points
  எழுஞாயிறு, மனோகணேசனின் பேச்சை தவறாக புரிந்து கொண்டார் என்றே கருதுகின்றேன். சசிவர்ணத்தின் கருத்துடன் உடன் படுகின்றேன். மனோகணேசன், அமைச்சராக இருந்து கொண்டு அப்படித்தான் பேசமுடியும். இதனை தமிழில்... "வஞ்சக புகழ்ச்சி" என்று சொல்வார்கள். அதாவது அரசை புகழ்ந்து விட்டு... தமிழர்களுக்கு நடந்த தவறுகளையும், இப்போது... செய்து கொண்டிருக்கும், தவறுகளையும் சொல்லிக் காட்டியுள்ளார்.
 19. 5 points
  இங்கு இருக்கும் சிலர் நாம் தமிழர் மீது திமுக காரர் அளவுக்கான காழ்ப்புணர்வை கொண்டிருக்கிறார்கள் என கருத்துக்களை பார்க்கும் போது தெரிகிறது.. நான் கூட சீமானை நண்பர்களிடத்தில் ஓட்டோ ஓட்டென ஓட்டுவேன்..அதற்காக கண்முன் தெரியும் அவரின் கட்சியின் வளர்ச்சியினை மறுதலிப்பது நேர்மையற்ற அணுகுமுறை ..சீமான் கட்சி வெற்றி பெறவில்லை வளர்ச்சி இருக்கிறது ..இது அவர்களின் இரண்டாவது தேர்தல் ..கமலின் ஜனவசியத்துடன் சீமானை ஒப்பிட முடியாது இருந்தும் கமலின் கட்சி வாங்கிய மொத்த ஓட்டுகளை விட சீமானின் கட்சியினர் கிட்டத்தட்ட 1 லட்சம. வாக்குகள் அதிகம் சீமான் கட்சியில் நின்றோர் எவரும் 10ஆயிரத்திற்கு குறைவான வாக்குகள் இல்லை கமல்கட்சியில் ஆக்க்குறைந்த வாக்கு எண்ணிக்கை இருக்கு.. சீமானிற்கு முட்டும் கொடுக்க வேண்டாம் அவர்மேல் காழ்ப்பணர்வும் வேண்டாம் நாங்கள் பார்வையாளர்கள் தானே அவர்களின் அரசியலில் பங்காளர்கள் இல்லையே.. ஆரம்பத்தில் எல்லோரும் பிழை விடுவது உண்டு காலம்செல்ல செல்ல அவர்களாகவே திருந்தவும் சந்தர்ப்பம் உண்டு தானே.. சீமானையோ அவரின் கட்சியினையோ தவிர்த்து அல்லது தோற்கடித்து விட்டு தமிழக மக்கள் என்ன ஆபிரகாம் லிங்கனையோ அல்லது லீ குவான் யூ வையா கொண்டுவரப்போறார்கள்
 20. 5 points
  கோயில் என்பது எல்லோரும் வழிபடும் பொதுவான இடம். சாதிக்கொரு கோவில் கட்டலாம் என்று தீர்வு சொல்வது சாதீயத்தை தொடர்ந்து தக்க வைக்கவே சொல்லும் சாட்டு. சுப்பன் கோவில், குப்பன் கோவில் என்று தனியாரின் கோவில்கள் அமைவது மதவுணர்வை வளர்க்க அல்ல. பிரிவினைகளை வளர்க்கத்தான். இவையெல்லாம் 1960, 70 களில் நடந்த சாதீய அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை நினைவுபடுத்தும் சிவா சின்னப்பொடியின் “நினைவழியா வடுக்கள்” என்ற நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அது வரலாறு என்று நினைத்தேன். ஆனால் அது இப்போதும் நிகழ்வதும் அடுத்தடுத்த சந்ததிகளுக்கு காவப்படுவதும் மிகவும் கேவலமானது.
 21. 5 points
  கடந்த ஆண்டு சித்திரையில் நானும் கணவரும் வரலாற்றுத் தொன்மை மிக்கதும் கடல் வணிகத்துக்குப் பெயர் போனதுமான கிரேக்கத்தின் தலைநகரான எதென்சுக்குச் சென்றோம். கிரேக்கரின் இடிபாடுகளுடன் காணப்படும் கட்டடங்களை தொலைக்காட்சிகளில் பார்க்கும்போதெல்லாம் கட்டாயம் அங்கு செல்ல வேண்டும் என்ற என் ஆசை கடந்த ஆண்டே நிறைவேறியது. ஆனாலும் ஒருவித பயம் இருந்துகொண்டே இருந்தது. அங்கு பார்க்கக்கூடிய இடங்களைப் பட்டியலிட்டு அதற்கு அண்மையில் உள்ள ஒரு தங்குமிடத்தையும் ஒழுங்கு செய்துகொண்டோம். ஒரு நாளுக்கு இருவர் தங்குவதற்கு 70 பவுண்ஸ்கள் மட்டுமே. காலை உணவு ஒருவருக்கு 5 யூரோஸ். எனவே அதையும் சேர்த்து பதிவுசெய்தாகிவிட்டது. இணையங்களில் தேடித் பார்த்தபோது பெரிதாகக் களவுகள் இல்லை என்றாலும் இரவில் தனியாகத் திரிவது ஆபத்து என்று போட்டிருந்தார்கள். மேலும் தேடியதில் விமான நிலையத்தில் இருந்து எதென்ஸ் செல்வதற்கு டாக்சியில் செல்வதற்கு அதிகமான பணம் வசூலிப்பார்கள். விமான நிலையத்துக்கு முன்னாலேயே தொடருந்துத் தரிப்பிடம் உள்ளது. அதில் செல்வது மலிவு என்று போட்டிருந்தார்கள். லண்டனில் இருந்து எதென்ஸ் செல்ல நான்கு மணி நேரம். இங்கு காலை எட்டுமணியளவில் புறப்பட்டு பகல் 12.30 க்கு அங்கு போய் நானும் கணவரும் இறங்கிவிட்டோம். வெளியே வந்து பார்த்தால் விமான நிலையம் சும்மா ஒரு கட்டடம் போல் நின்றுகொண்டிருந்தது. தொடருந்து நிலையம் சென்று பயணச்சீட்டை எடுத்துக்கொண்டு அங்கேயே ஒரு எதென்சின் வரைபடத்தையும் வாங்கிக்கொண்டு வெளியே வந்து காத்திருக்கிறோம். கிரேக்க மொழியிலும் ஆங்கிலத்திலும் வரைபடத்தில் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது நின்மதியாக இருந்தாலும் சரியான தொடருந்தைப் பிடித்துச் சரியானஇடத்துக்குப் போய்ச் சேர வேண்டுமே என்று மனதில் ஒரு படபடப்பு ஒட்டிக்கொண்டே இருந்தது. தொடருந்து வர இன்னும் அரை மணிநேரம் இருக்கிறது. காவிருக்கைகள் இருக்கும் இடங்கள் எல்லாம் ஆட்கள் இருக்கின்றனர். வேறுவழியில்லாமல் ரெயின் வரும் வரை நிக்கத்தான் வேணும் என்கிறேன். நாலுமணித்தியாலம் இருந்து தானே வந்தனாங்கள் அரை மணித்தியாலம் நில்லன் என்று கூறிவிட்டு மனிசன் பிராக்குப் பார்க்க வேறுவழி யில்லாது நானும் தண்டவாளத்தின் பலகைகளையாவது எண்ணிக்கொண்டிருப்போம் என்றால் அந்தத் தொடருந்துத் தடத்துக்கு பலகைகளைக் காணவில்லை. என்னப்பா இது இங்க பாருங்கோ பலகையளைக் காணேல்லை என்று நான் சொல்ல, எனக்கு உதைப்பற்றித் தெரியாது. என்னைக் கேட்காதை. வேறை ஏதும் டெக்னோலஜி பாவிச்சிருப்பான்கள் என்கிறார் மனிசன். தொடருந்து வருவதாக அறிவிக்க, இது சரியான தொடருந்துதானா என்ற சந்தேகம் எழ, பக்கத்தில நிக்கிறவனிட்டைக் கேளுங்கப்பா என்கிறேன் மனிசனிடம். மனிசன் கேட்க அவனுக்கோ ஆங்கிலம் விளங்கவில்லை. கொஞ்சம் தள்ளி இன்னொரு பெண்ணும் நிற்கிறார். அவளிடம் கேளுங்கோ என்கிறேன். இந்த நாட்டில தெரியாத ஆட்களிடம் பெண்கள் கதைப்பார்களோ தெரியாது. எதற்கும் நீ போய்க் கேள் என்கிறார் மனிசன். நான் போய் கேட்டதும் அவளுக்கும் விளங்கவில்லை. தூரத்தே தொடருந்து வருவது தெரிகிறது. நான் வரைபடத்தில் இறங்கவேண்டிய இடத்தைக் காட்டி தொடருந்தையும் கை காட்டுகிறேன். அவளுக்கு விளங்கியதோ இல்லையோ. ஓம் என்று தலையை இங்குமங்கும் ஆட்டுகிறாள். சரி தொடருந்தை விட ஏலாது. முதல்ல ஏறுவம். பிறகு உள்ள ஆரிட்டையாலும் கேட்பம் என்கிறேன். இதுவாய்த் தான் இருக்கும். சும்மா பயந்து என்னை டென்ஷன் ஆக்காதே என்றபின் நான் எதுவும் கதைக்கவில்லை. தொடருந்து வந்து நின்றதும் பார்த்தால் நிறையச் சனம். இருக்கவும் இடம் கிடைக்காது போல என்று விசனத்துடன் நிக்க, நிறையப்பேர் எதென்சில் இறங்க மனிசன் விரைவாக ஏறி எனக்கும் தனக்குமாக இடம் பிடிச்சிட்டார். சரியாக ஒரு மணி நேர பயணத்தில் எதென்ஸ் போய் இறங்கியாச்சு. வரை படத்தைப் பார்த்துப் போனால் இடம் பிடிபடவில்லை. வீதிகளை பார்க்க பாழடைந்துபோய் பலகாலம் பயன்படுத்தாத மூடிய கடைகளும் புழுதியான வீதிகளும்.... என்னடா இது உதவாத இடத்தில் தங்குமிடத்தை எடுத்துவிட்டோமோ என்று புழுக்கத்துடன் போனால் வீதியின் மறுபுறம் நல்ல சுத்தமாக இருக்க, மனதில் ஒரு நின்மதி ஏற்பட்டது. வரவேற்பிடத்தில் போய் எம் பதிவைச் செய்துவிட்டு லிப்ரில் ஏழாம் மாடியை அடைந்து எமது அறையைத் திறந்து குளியலறையையும் திறந்துபார்த்தபின் தான் நின்மதியானது மனது. காலநிலையும் 20 பாகை செல்சியஸ் என்பது வருமுதலே அறிந்ததுதான் எனினும் இதமான காலநிலை மனத்துக்குஒரு மகிழ்வைத் தர பால்கனியில் போய் நின்று பார்க்க மேலே உயரத்தில் ACROPOLIS OF ATHENS என்னும் இடிபாடுகளுடைய கோவில் தெரிகிறது. அதை நாளை பார்க்கப் போகிறோம் என்றதுமே மனதில் ஒருவித பரவசம் வந்து சேர்க்கிறது. விமானத்தில் தந்த உணவுக்குப் பின்னர் எதுவும் உண்ணாததால் பசிக்கிறது. நேரம் மாலை நான்குமணி. கீழே சென்று உணவுவிடுதியைப் பற்றிக் கேட்க, ஆறு மணிக்குத்தான் திறப்பார்கள். ஒருவருக்குப் 10 யூரோஸ் என்கிறாள் வரவேற்புப் பெண். இனி வெளியே சென்று உணவகம் தேடி உண்பதிலும் இங்கேயே உண்பது என முடிவெடுத்து, அங்கு பார்க்கும் இடங்கள்பற்றி விசாரிக்க இன்னொரு தெளிவான வரைபடத்தைத் தருகிறாள் அவள். ஐந்து நிமிடம் நடந்து போனால் பஸ் தரிப்பிடம் வரும் அங்கே மஞ்சள் உடையுடன் ஒருவர் நிற்பார். அவர் உதவுவார் என்கிறாள். மேலே அறைக்குச் சென்று ஒருமணிநேரம் படுத்திருந்துவிட்டு எட்டாம் மாடியில் உள்ள உணவகத்துக்குச் சென்றால் நாம் மட்டும் தான் அங்கே. விதவிதமான சலாட்டுகள், ஒலிவ் பழங்கள், பழங்கள் என்று அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அன்றைய இரவு முதன்மை உணவு மாட்டிறைச்சியும் உருளைக்கிழங்கும் அல்லது கோழியும் உருளைக்கிழங்கும் அத்தோடு Spaghetti உம் என்று கூற நாம் மாட்டைத் தெரிவுசெய்துவிட்டு சலாட், ஒலிவ் போன்றவற்றை எடுத்துவந்து உண்ணவாரம்பிக்கிறோம். Goldan City Hotel தொடரும்
 22. 5 points
  அவர்கள் யுத்தத்தின் மூலம் எம் விடுதலை போராட்டத்தை வெல்லவில்லை. இனப்படுகொலை ஒன்றின் மூலமே அவர்கள் எம் விடுதலை போராட்டத்தினை நசுக்கினர். வாழும் உரிமைக்காக தம் பூர்வீக மண்ணில் வாழ்வதற்காக உலகில் வாழும் ஏனைய மக்களுக்கு இருக்கும் சாதாரண உரிமைகளை தம் பாரம்பரிய மண்ணில் பெற்று தம் பிள்ளைகளுடனும் சந்ததியுடனும் நிம்மதியாக வாழ்வதற்காகவே போராடினோம், ஆயினும் படுகொலைகள் மூலம் தோற்கடிக்கப்பட்டு போனோம்... நாம் எம் மீதான இனப்படுகொலை ஒன்றின் மூலமே தோற்கடிக்கப்பட்டோம் என்பதை உரத்து சொல்வோம்.. நேரடி யுத்தத்தினால் அல்ல, பெரும் இனவழிப்பு ஒன்றின் மூலமே தோற்கடிக்க பட்டோம் என எம் சந்ததிக்கு சொல்வோம்.. இரசாயன ஆயுதங்கள் மூலமும் கொத்து குண்டுகள் மூலமும் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் ஆன்மாக்களின் இறுதி அலறலின் குரலில் சொல்வோம்.. விடுதலை கேட்ட நாம் இனப்படுகொலை மூலமே மவ்னிக்கப்பட்டவர்கள் என்று.. சரணடைந்த ஆயிரக்கணக்கான போராளிகளையும் மக்களையும் சிதைத்து விட்டுத்தான் எம் தோல்வியை அவர்கள் கொண்டாடுகின்றனர் என சொல்வோம்.. போராளிகள் மீதல்ல பொது மக்கள் மீதான அரச பயங்கரவாதத்தின் மூலமாகவே அவர்கள் வெற்றியை பெற்றனர் என உரத்து உரத்து சொல்வோம்.. இந்த இனப்படுகொலை க்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் என இந்த இனப்படுகொலை யின் பத்தாம் ஆண்டில் மீள உறுதி கொள்வோம்! எமக்கான ஒரு காலம் கண்டிப்பாக வந்தே தீரும் எம் தலைவனின் கனவும் ஒரு நாள் நனவாகும்
 23. 5 points
 24. 5 points
  நீங்கள் “தலைவர் பிரபாகரன்” பற்றி நான் எழுதிய விடயத்தில் தான் ஒத்துப்போகவில்லை என நினைக்கிறேன். நீங்கள் அவரை ஆதரிக்கிறீர்களோ இல்லையோ அதில்லை இங்கு பிரச்சினை. நான் கூற வந்தது அன்று சர்வதேச நாடுகள் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தலைமைக்கு இருந்த power ஒரு காரணம். இன்று ஆயுதப்போராட்டம் அழிக்கப்பட்ட நிலையில் அதே power ஐ எதிர்பார்க்க முடியாது என்றாலும் தமிழர் தரப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து சர்வதேசம் பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய வகையில் ஒரு தலைமை இல்லை. இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு எதிரான போக்கை கொண்டிருக்குமானால் சர்வதேசம் தமிழர்களை பகடைக்காயாக உபயோகித்து இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக இயங்கி தனக்கு சார்பான அரசியல் இலங்கையில் வருவதற்கு களமிறங்கலாம். அதன் போது தமிழர்கள் சில நன்மைகளை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அதற்கும் வழியில்லை. காரணம் இலங்கை அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் இன்றும் ஒட்டாக உள்ளது. எமது அரசியல்வாதிகளும் இலங்கை அரசு எது சொன்னாலும் ஆமாம் போடும் ஆட்களாக உள்ளார்கள். அரசிடம் வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு கூட எழுத்து வடிவில் சம்மதம் பெறாமல் வாய்மூல சம்மதத்தை மட்டும் பெற்றுக்கொள்வர். இப்படியான நிலையில் நாம் என்ன செய்ய முடியும்? என்னை பொறுத்தவரை அரசியல் தீர்வு என்பது இப்போதைக்கு சாத்தியமில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்து அவர்களை மேம்படுத்துவதே சரி. மக்களை கவனிப்பாரற்று கைவிட்டு விட்டு தனியே தீர்வு தீர்வு என்று அலைவதால் எதுவித பிரயோசனமும் கிடைக்கப்போவதில்லை. ஆனால் அதை செய்யும் ஆற்றல் கூட எமது சுயநல அரசியல்வாதிகளுக்கு இல்லை என்பதே கசப்பான உண்மை.
 25. 5 points
  சும்மா சும்மா நம்மவர்கள் "அரேபிசத்தை" இஸ்லாமாக காட்ட முனைபவர் கூட்டத்துக்கு வக்காலத்து வாங்குவதை பார்க்க கவலையாக உள்ளது. நானும் இஸ்லாம் மதத்து மக்களோடு பின்னிப்பிணைந்து, பள்ளி சென்று, அவர்கள் வீட்டில் படுத்து உருண்டு, ஒரே தட்டில் சாப்பிட்டு , அவர்கள் பெண் பிள்ளைகளோடு ஒரே கட்டிலில் தூங்கி எழும்பியவன் தான் (சின்ன வயதில்) . குரானை ஓரளவுக்கு வாசிக்கும் தேர்ச்சியும் , ஸலவாத்து , கிராத் , துவா , ஹதீஸ் இப்படி எல்லாவற்றையும் சின்ன வயதில் கற்றவன் தான். அன்றைய முஸ்லீம்கள் தமிழில் ஆர்வம் கொண்டவர்கள், கோயில் திருவிழாவுக்கு வருபவர்கள், வில்லுப்பாட்டும் பார்த்து ரசிப்பவர்கள், காவடி ஆட்டத்திற்கு கைதட்டுபவர்கள், எங்கள் வீட்டு சமையல் கட்டில் அவர்கள் வீட்டு கறியை வைத்து சமைப்பவர்கள்... அவர்கள் வீட்டில் தண்ணீர் இல்லை என்றால் எங்கள் வீட்டில் வந்து குளிப்பவர்கள்... எம்மை போலவே அழகாக உடை அணிந்தவர்கள் ... தேவரின் திருவருள் படத்தையும், பழைய தசாவதாரம் படத்தையும் 5 முறை பார்த்து கைதட்டியவர்கள், வெசாக் கூடு தங்கள் வீட்டிலும் கட்டி அழகு பார்த்தவர்கள்... என்ன கொஞ்ச கொஞ்சமாக சவூதிக்கும், குவைத்துக்கும் வேலைக்கு போன பணிப்பெண்கள் திரும்பி வரும் பொழுது முக்காடையும் , முழு நீல மக்க்ஷி ஆடையும் அறிமுகப்படுத்தி....காலப்போக்கில் எதோ முழுமையாக அரேபியனை போல ஹிஜாப் ,நிக்காப், பர்தா, அபாயா அணிவது வரையிலும் வந்து நிக்கிறது. இது இஸ்லாம் அல்ல.... இது "அரேபிஷம்" எனும் விஷம். இது ஒரு குறிப்பிட்ட தேசத்து மக்களின் ஆடை!! அரேபியர்களை எதோ மேல்சாதி காரன் என்றும், தாங்கள் எதோ அவர்களை விட குறைந்தவர்கள் என்ற எண்ணத்தின் அடிப்படையிலும் கொஞ்ச கொஞ்சமாக தங்களை மாற்றிக்கொண்டு "படம் காட்ட" நினைத்த மக்களின் மடைமை இன்று அவர்களை அதி தீவிர மதவாதிகளாய் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. ஆகா மொத்தத்தில் அன்றைய நாட்களில், இலங்கை முஸ்லீம்கள் இயல்பாக இப்படி இருந்ததில்லை... ஆகையினால் சொல்கிறேன் ... இஸ்லாத்தில் இல்லாத கண்றாவியை கடன் வாங்கி "படம் காட்டுபவர்களுக்கு" யாரும் கவலை கொள்ள தேவை இல்லை. எது எப்படியோ... தமிழன் சந்து பொந்தெல்லாம் புகுந்து தான் நடுநிலைவாதி என்பதை நிலை நாட்டுவான்... தன் இனம் நாடு ரோட்டில் தவிப்பது கண்ணுக்கு தெரியாமல்... யா அல்லாஹ் நான் என்னத்தை செல்ல!!!
 26. 5 points
  படித்ததில் பிடித்தது ‘‘அம்மா! நான், பாப்பா, உங்க மருமக மூணு பேரும் ஷாப்பிங் மால் போறோம். நீங்க வீட்டை பார்த்துப்பீங்கதானே?’’ ‘‘சரிப்பா! நான் எங்கே அங்க எல்லாம் வரமுடியும்? வயசாயிடுச்சு இல்ல. கால் வலி வேற படுத்தி எடுக்குது. எனக்கு மாலுக்கு வர்றதுக்குப் பிடிக்காது. நீங்க எல்லாம் போயிட்டு வாங்க!’’ ‘‘ஏன் பிடிக்காது? பாட்டியும் ஷாப்பிங் மாலுக்கு வரணும்’’ என பேத்தி அடம் பிடித்தாள். ‘‘பாட்டியால அங்க எல்லாம் ஏறி இறங்க முடியாதும்மா. எஸ்கலேட்டர்ல ஏறத் தெரியாது அவங்களுக்கு! அது இல்லாம, அவுங்க பார்த்து சந்தோஷப்படுறதுக்கு அங்கே பெரிசா ஒண்ணுமில்ல. அவுங்களுக்கு கோயிலுக்கு போறதுதான் பிடிக்கும்’’ என மருமகள் சொன்னார். பாட்டியும், ‘‘ஆமாம்’’ என்று ஆமோதித்தார். ‘‘பாட்டி வரலைன்னா நானும் மாலுக்கு வரலை!’’ பத்து வயதுப் பேத்தி அடம்பிடித்தாள். பாட்டி விருப்பமில்லை என்று சொன்னாலும், பேத்தி கட்டாயப்படுத்திக் கொண்டே இருந்தாள். ஒரே பேத்தி தொடர்ந்து அடம் பிடித்ததால், அவள் விருப்பத்துக்கு ஏற்ப பாட்டியும் ஷாப்பிங் மால் வர ஒப்புக் கொண்டார். பேத்தி துள்ளிக் குதித்தாள். அப்பா அனைவரையும் புறப்படச் சொன்னார். பேத்தி சீக்கிரம் உடை உடுத்திக் கொண்டு வந்தாள். பாட்டியும் தயாராய் இருந்தார். அப்பாவும் அம்மாவும் புறப்பட ரெடியாகும்போது பேத்தி பாட்டியை அழைத்துக்கொண்டு முன்னறைக்கு வந்தாள். சாக்பீஸால் ஒன்றரை ஜான் அகலத்துக்கு இரண்டு கோடுகள் போட்டாள். ‘‘பாட்டி... இங்க பாருங்க. இது ஒரு விளையாட்டு. இப்ப நீங்க ஒரு கொக்கு. சரியா? இந்த இரண்டு கோடுகளுக்கும் நடுவுல உங்க வலது காலை வைத்து, இடது காலை லேசா மூணு இஞ்ச் தூக்கினா போதும். செய்ங்க!’’ ‘‘இது எதுக்கும்மா?’’ ‘‘இதுதான் கொக்கு விளையாட்டு பாட்டி. நானும் செய்யறேன்’’ என்று செய்து காட்டினாள். பாட்டியும் பேத்தி கண்டுபிடித்த கொக்கு விளையாட்டை விளையாடிப் பார்த்தார். பையனும் மருமகளும் வர, ஷாப்பிங் மாலுக்கு ஆட்டோ பிடித்துப் போனார்கள். அங்கே நகரும் படிக்கட்டுகள் நகர்ந்து கொண்டிருந்தன. ‘இதில் எப்படி பாட்டி ஏறுவார்’ என்று மகனும் மருமகளும் யோசிக்கும்போது பேத்தி மட்டும் பாட்டியை நகரும் படிக்கட்டு முன்னால் செல்லமாக இழுத்து வந்தாள். ‘‘பாட்டி! இதுல பயப்பட எதுவுமில்லை. இப்ப நீங்க கொக்கு விளையாட்டு விளையாடுங்க’’ என்றாள். பாட்டி கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு, வலது காலை நகரும் படிக்கட்டில் வைத்து இடது காலை மூன்று நான்கு இஞ்ச் மேலே தூக்கினார். மேலே நகர்ந்தார். பின் இடது காலையும் வைத்து இரண்டு காலால் நின்றார். எஸ்கலேட்டரில் அம்மா பூப்போல நகர்வதை மகனும் மருமகளும் பார்த்து வியந்தனர். பாட்டி உற்சாகமாகிவிட்டார். அடுத்த அடுத்த எஸ்கலேட்டர்களில் மகிழ்ச்சியாகக் குதித்துக் கொண்டே ஏறினார். அதைப் பழகிக்கொள்ளவே பாட்டியும் பேத்தியும் கீழே இறங்கி மறுபடி ஏறினார்கள். சினிமா பார்க்கப் போனார்கள். குளிராக இருந்தது. பேத்தி தன் பையில் வைத்திருந்த சால்வையை பாட்டிக்குக் கொடுத்தாள். ‘‘இதை எப்போ கொண்டு வந்தே?’’ என்று பாட்டி கேட்டதற்கு, ‘‘ஆல் டீடெய்ல்ஸ் ஐ நோ பாட்டி’’ என்றாள் குறும்பாக. படம் பார்த்த பிறகு உணவகம் சென்றார்கள். ‘‘அம்மா, உங்களுக்கு என்ன ஆர்டர் பண்ணட்டும்?’’ என்றான் மகன். உடனே பேத்தி மெனு கார்டைப் பிடுங்கி, ‘‘ஏன்? பாட்டிக்கு படிக்கத் தெரியாதா? அவுங்க கிட்ட மெனு கார்டைக் கொடுங்க. பிடிச்சதை அவுங்க ஆர்டர் பண்ணுவாங்க’’ என்றாள். பாட்டி மெனுவைப் பார்த்து ஆர்டர் செய்தார். பேத்தியும் பாட்டியும் ஆர்வமாக சாப்பிட்டார்கள். பின் மாலில் வீடியோ கேம் விளையாட்டுகளையும் பாட்டியும் பேத்தியும் விளையாடினார்கள். வீட்டுக்குக் கிளம்பும் நேரத்தில் பாட்டி டாய்லெட் சென்றார். அப்போது மகளைப் பார்த்து, ‘‘என் அம்மாவைப் பத்தி என்னைவிட உனக்கு நிறைய தெரிஞ்சிருக்கே செல்லம்’’ என்று சொல்லி அப்பா சிரித்தார். ‘‘அப்பா! அதோ பாருங்க... குட்டிப் பாப்பாவை அந்த ஆன்ட்டி கூட்டிட்டு வரும்போது எவ்வளவு ஏற்பாடுகள் செய்துட்டு வர்றாங்க. பால் பாட்டில், துடைக்க துண்டு, டயபர்ஸ் இப்படி எவ்ளோ ஏற்பாடுகள். நீங்க குழந்தையா இருந்தப்போ, பாட்டியும் இப்படித்தான் செய்திருப்பாங்க. அது மாதிரி பாட்டியை வெளிய கூட்டிட்டு போகும்போது பாட்டியை கவனிக்க நீங்க அக்கறை எடுங்க. அதை ஏன் செய்றதில்லை? எல்லோருக்கும் ஷாப்பிங் மால் பாக்க ஆசையாதான் இருக்கும். நீங்களாவே ‘வயசானவங்க கோயிலுக்குதான் போவாங்க. ஜாலியா இருக்க மாட்டாங்க’ன்னு நினைச்சிக்காதீங்க. அவுங்க வரலண்ணாலும் மனசுக்குள்ளே ஆசை இருக்கும். நீங்கதான் வற்புறுத்தணும் அப்பா’’ என்றாள். தன் பத்து வயது மகளிடம் புதிதாகக் கற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் அப்பா நெகிழ்ந்திருந்தார்.
 27. 5 points
  திருகோணமலை சண்முகாவில் ஆசிரியை மூடிய ஹபாயாவுடன் வந்த போது பாடசாலை நிர்வாகம் அதை தடை செய்தது .முற்றாக மூடிவர வேண்டாம் என சொல்ல . அதைக்கண்டித்து திருகோணமலையில் பாடசாலைக்கும் சேலைக்கும் ஆர்ப்பாட்டம் நடந்தது அப்போது சேலை ஆபாச உடையென பலர் கூச்சலிட்டனர் பேனர்கள் கட்டினர் , காட்டினர் தற்போது அரசே தடை செய்து விட்டது நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்
 28. 5 points
  சிறித்தம்பி! எங்கடை சைவசமயத்திலை இருந்துதான் கனபேர் மதம் மாறீனம் எண்டதுக்காக சொல்லுறன். சைவம் எதிலையும் மற்றவன்ரை சோலி சுரட்டுக்கு போனதில்லை. மற்ற மதங்களை நக்கலடிச்சதில்லை. கூடாமல் பார்த்ததுமில்லை. மற்ற மதங்களைபேய் மதம் பிசாசு மதம் எண்டு வர்ணிச்சதுமில்லை....இயற்கை உனக்கு கடவுள் என்று போதிச்ச மதம்.மூட்டைப்பூச்சி தொடக்கம் எந்த உயிரையும் கொல்லாதே என்று சொல்லும் மதம்.புலால் உண்ணாதே என்று சொல்லும் மதம். இப்போதைக்கு அவ்வளவுதான்.
 29. 5 points
  இதே நெடுக்கரை ஒரு எட்டு வருசத்துக்கு முன் யாழில் பார்த்ததிற்கும், இப்பொழுது பார்ப்பதற்கும் மலைக்கும் மடுவிற்குமுள்ள வித்தியாசமல்லவா இருக்கு..? சந்தோசம்..! ஒரு ஆணின் வாழ்க்கையில், பெண் வந்ததும் இத்தனை மாற்றங்களா..?
 30. 5 points
  இராசவள்ளிக் கிழங்குக் களி......!
 31. 5 points
 32. 5 points
  நானும் யோசித்தேன். ஆனால் ஒவ்வொரு நாளும் நேரம் கிடைக்குமோ தெரியாது. கேள்விக்கொத்து தயாரிக்க உதவி தேவையென்றால் சொல்லுங்கள். Schedules: https://www.icc-cricket.com/cricket-world-cup/fixtures ICC WORLD CUP 2019 30 May ENG vs RSA 2:30pm 31 May WI vs PAK 2:30pm 01 June NZ vs SL 2:30pm 01 June AFG vs AUS 5:30pm 02 June RSA vs BD 2:30pm 03 June ENG vs PAK 2:30pm 04 June AFG vs SL 2:30pm 05 June RSA vs IND 2:30pm 05 June BD vs NZ 5:30pm 06 June AUS vs WI 2:30pm 07 June PAK vs SL 2:30pm 08 June ENG vs BD 2:30pm 08 June AFG vs NZ 5:30pm 09 June IND vs AUS 2:30pm 10 June RSA vs WI 2:30pm 11 June BD vs SL 2:30pm 12 June AUS vs PAK 2:30pm 13 June IND vs NZ 2:30pm 14 June ENG vs WI 2:30pm 15 June SL vs AUS 2:30pm 15 June RSA vs AFG 5:30pm 16 June IND vs PAK 2:30pm 17 June WI vs BD 2:30pm 18 June ENG vs AFG 2:30pm 19 June NZ vs RSA 2:30pm 20 June AUS vs BD 2:30pm 21 June ENG vs SL 2:30pm 22 June IND vs AFG 2:30pm 22 June WI vs NZ 5:30pm 23 June PAK vs RSA 2:30pm 24 June BD vs AFG 2:30pm 25 June ENG vs AUS 2:30pm 26 June NZvs PAK 2:30pm 27 June WI vs IND 2:30pm 28 June SL vs RSA 2:30pm 29 June PAK vs AFG 2:30pm 29 June NZ vs AUS 5:30pm 30 June ENG vs IND 2:30pm 01 July SL vs WI 2:30pm 02 July BD vs IND 2:30pm 03 July ENG vs NZ 2:30pm 04 July AFG vs WI 2:30pm 05 July PAK vs BD 2:30pm 06 July SL vs IND 2:30pm 06 July AUS vs RSA 2:30pm 09 July 1st semi-final 2:30pm 11 July 2nd semi-final 2:30pm 14 July CUP FINAL 2:30pm
 33. 5 points
  அன்று முதல் நாள் என்றதனால் எல்லாவற்றையும் பார்த்துவிடவேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. ஆனாலும் இன்னும் நிறைய நாட்கள் இருக்கின்றன என்ற எண்ணத்தில் கால்போன போக்கில் நடப்போம் என்று நானும் கணவரும் கதைத்துக்கொண்டு நடந்து போக இன்னுமொரு இடிபாடுகளுடன் கூடிய கட்டடம் தெரிந்தது. மலையில் கட்டிய கோவிலுக்கு காவல் தெய்வத்துக்காக கீழேயும் ஒரு கோயில் கட்டப்பட்டது. அதுவும் பல தூண்கள் இடிந்து வீழ்ந்து பல புதையுண்டும், இன்னும் சில தூண்கள் திருடப்பட்டும் விட்டன என்றனர். தற்போழுது எதென்ஸின் முக்கிய வருமானம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளினாலேயே கிடக்கின்றது என்றும் அதை வைத்தே பல புனரமைப்புப் பணிகளை அரசாங்கம் மேற்கொள்கிறது என்றும் ஒருவருடன் உரையாடியபோது கூறினார். சுற்றுலாப் பயணிகளுக்காக பொருட்கள் விற்கும் கடைகளுக்குச் சென்றால் அதிக விலையே கூறுகின்றனர். மாலை ஐந்து மணிவரை கிரேக்க வீதிகளில் திரிந்தத்தில் கால்கள் எல்லாம் பயங்கர வலியெடுத்தது. அத்தோடு சாடையாக இருளவும் ஆரம்பிக்க மீண்டும் எமது தங்குமிடத்துக்குச் செல்வதற்கு பஸ் எடுத்தால் இருட்டுக்குள் நாம் எங்கே இறங்கவேண்டும் என்பதில் குழப்பம் உண்டானது. சாரதியிடம் சென்று வரைபடத்தில் நாம் தங்கியிருந்த இடத்தைக் காட்ட அவர் எம்மை சரியான இடத்தில் இறக்கிவிட்டார். வீதியால் நடந்து எமது கோட்டலுக்குச் செல்லும் வழியில் பார்த்தால் வீதிகளின் கரைகளில் காலையில் திறக்காத கடைகள் திறந்திருக்க ஆண்கள் பலர் மது அருந்திக்கொண்டும் தேநீர் அருந்திக்கொண்டும் இருக்கின்றனர். எனக்கு பயமாக இருக்கு என்று நான் சொல்ல நீ ஏன் அங்கே பார்க்கிறாய். பேசாமல் நடந்துவா என்கிறார் மனிசன். ஒருவாறு ஆறுமணிக்கு கிட்ட கோட்டலை அடைந்து அறைக்குச் சென்று குளித்துவிட்டு ஒரு மணித்தியாலம் களைப்புத் தீரப் படுத்துவிட்டு இரவு உணவுக்குச் செல்லுவோம் என்றுவிட்டு கட்டிலில் படுத்ததுதான். காலை கண்விழித்தபோது ஆறுமணி. நான் சென்று பல் தீட்டி முகம் கழுவிவிட்டு வந்து மனுசனை எழுப்ப மனிசன் என்ன விடிஞ்சிட்டுதோ என்று ஆச்சரியமாகக் கேட்கிறார். எனக்கு இரவு உண்ணாததும் சேர்ந்து பயங்கரப் பசி. ஏழுமணிவரை எதுவும் குடிக்காமல் இருக்க முடியாது என எண்ணி தொலைபேசியில் கீழே இருக்கும் வரவேற்பாளருக்கு போன் செய்து நாம் தேநீர் குடிப்பதற்கு எதுவும் இங்கில்லை என்கிறேன். அறைகளில் நாம் எதுவும் வைப்பதில்லை. நீங்கள் ஏழுமணிவரை பொறுக்கவேண்டும் என்கிறான்..அவன். சாதாரணமாக எல்லா கோட்டல்களிலும் தேநீர் ஊற்றுவதற்குத் தேவையான எல்லாம் வைத்திருப்பார்கள். இங்கு இல்லை. ஏழுமணியானதும் உணவகத்துக்குச் சென்று காலை உணவை முடித்துக்கொண்டு மீண்டும் பஸ் எடுக்கிறோம். இன்று ஒரு இருப்பது நிமிடத்தில மியூசியம் ஒண்டு தெரிய அதை அடுத்ததாகப் பார்ப்போம் என்று இருவரும் இறங்கியாச்சு. தொன்மையான பொருட்களை எல்லாம் அங்கே சேமித்து வைத்திருக்கின்றனர். தோண்டி அகழ்வாய்வு செய்து அவற்றை அப்படியே வைத்தபடி மேலே கண்ணாடியால் தளம் போட்டுக் கட்டியிருப்பது பார்க்க வித்தியாசமாக இருக்கு. உள்ளே சென்று பார்ப்பதற்கு ஒருவருக்கு 5 யூரோஸ். மட்பாண்டங்கள் வேறு பல பொருட்கள் எல்லாம் எமது போன்றே இருக்கிறன. மூன்று மாடிகள் முழுவதும் பிரம்மாண்டமாக கண்ணாடிகளால் நவீனமாக வடிவமைக்கப்பட்டு தொண்மப் பொருட்கள் பாதுகாக்கப்படுகின்றன. மூன்றாம் மாடியில் எதென்ஸ் நகரம் எப்படி அமைக்கப்பட்டது, எப்படி அழிக்கப்பட்டது என பெரிய திரையில் விவரணப் படம் ஒன்றைக் காட்டுகிறார்கள். அதையும் பார்த்துவிட்டு வெளியே வருகிறோம். எங்கு பார்த்தாலும் சனங்கள்.
 34. 5 points
  நடப்பது எல்லாம் நன்மைக்கே இத்தோடு கிழக்கு மாகாணத்தில் உள்ள அடாவடி முஸ்லிம்களது கொட்டம் அடக்கப் பட வேண்டும்
 35. 4 points
  ஈழத்தமிழரின் வலிமை என்பது தமிழகத்திலேயே உள்ளது. தனியே ஈழத்தமிழர் என்பது எங்கும் எடுபடாது குறிப்பாக புலிகளின் முடிவுக்குப் பின்னர் எடுபடாது. புலிகளின் முடிவு ஒரு அமைப்பின் முடிவு மட்டுமல்ல ஈழத் தமிழர்களின் அசியலின் முடிவும் அதுவே. ஒரு வலுவான அரசியல் இயங்குதளத்திற்குரிய நிலப்பரப்போ இல்லை மக்கள் தொகையோ அற்றவர்கள். இருக்கும் மக்கள் தொகைக்குள்ளும் சாதி மத பிரதேசவாதங்களால் பிளவுபட்டு இனத் தேசியத்தை இரண்டாம் மூன்றாம் நிலையில் வைதிருப்பவர்கள் ஈழத் தமிழர்கள்.. பாதுகாப்பு பொருளாதரா நலன்கள் சார்ந்து பாரம்பரிய நிலத்தை விட்டு குடிபெயர்வதில் ஈடுபடுபவர்கள். நாம் ஏற்கனவே குடிபெயர்ந:து தான் இதையும் எழுதுகின்றோம். அதிகமான நிலப்பரப்பும் அதிகமான மக்கள் தொகையும் கொண்ட தமிழகமே ஈழத்தமிழருக்கு தெரியும் நம்பிக்கை. தமிழகமும் இந்தியத்துக்குள் சிக்குப்பட்டிருப்பதால் அங்குள்ள அரசியலில் ஆர்வம் ஏற்படுகின்றது. நாம் ஈழத் தமிழர் என்பது ஒரு ஒப்பனைப் பேச்சு தவிர அதில் எந்த தனித்துவமும் கிடையாது. சற்று தனித்துவத்தை சுரண்டினால் யாழ்பாணி மட்டக்கிளப்பான் அந்த சாதி இந்த சாதி அந்த மதத்தவன் இந்த மதத்தவன் அல்லது அந்த இயக்கம் இந்ந இயக்கம் என்று வேறு எல்லைகளுக்குள் தனித்துவம் சென்றுவிடும். அதனால் இனத்துக்கென்று பொது அரசியல் கிடையாது. ஈழத்துக்கான அரசியல் என்பது ஆட்சியாளர்களை அண்டிப்பிழைத்தல் என்பது மட்டும் தான். அது ஒல்லாந்தரை அண்டிப் பிழத்தாலும் சரி பின்னர் ஆங்கிலேயர் இன்று சிங்களவர்களளை அண்டிப்பிழைத்தாலும் சரி இதுவே பாரம்பரிய அரசியல். புலிகள் இதற்கு விதி விலக்கு. அதனால் தான் புலிகளின் முடிவு இனத்துக்கான அரசியலின் முடிவாகின்றது. புலிகளின் முடிவுக்கு பின்னர் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி இனத்துக்கான அரசியலையும் நில வளங்களை பாதுகாக்கும் பரப்புரைகளையும் முடிந்தளவு செய்வதால் அதன் மீது ஆர்வம் ஏற்படுகின்றது. சோ கால் புத்திஜீவிகள் , தேசீயத்தை குத்தகைக்கு எடுத்துவர்கள் தேசீயத் தலைவரை குத்தகைக்கு எடுத்தவர்கள் சொட்டை நொட்டை நையாண்டிகள் செய்துகொண்டே இருப்பார்கள் தவிர யார் சரியானவர் அல்லது எது சரியான திசை என்பதை சுட்டிக்காட்ட மாட்டார்கள் ஏனெனில் சுட்டிக் காட்ட முடியாது. அவ்வாறு எதுவும் இல்லை. (இது உங்களுக்கான பதில் இல்லை, எனது கருத்துக்கு உங்கள் கருத்து வலிந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது)
 36. 4 points
  பலரும் நினைப்பது போல் தமிழக களம் கிடையாது. இந்த தேர்தலில் வென்று பிரதமர் ஆகும் எண்ணம் நாம் தமிழருக்கு இருக்கவில்லை. அவ்வளவு ஏன். வாக்கு எண்ணப்படும் முன்னரே 5% என நாம் தமிழர் கட்சிக்காரர்களே கணித்துவிட்டார்கள். யாருக்கும் ஏமாற்றம் இல்லை. இது ஒரு நீண்டதூர ஓட்டம். பலனை அறுவடை செய்யும் காலத்தில் ஒட்டுமொத்த தமிழருக்கும் அது நன்மை பயப்பதாக அது அமையும்.
 37. 4 points
  மினகெட்டு வெசாக் கூடு கட்டி தாமரை பூ கொண்டு போய் கையில் நூல் கட்டினது எல்லாம் வீணா போச்சு வாப்பா ..........................................
 38. 4 points
  இனப்பெருக்க அடிப்படையில் சமநிலை (Balancing ற்கு எனது சுமாரான மொழிபெயர்ப்பு) என்னும் அணுகுமுறையில், ஓரினச்சேர்க்கை விடயத்தில் நான் இன்னும் எனக்குள் கருத்தினை அமைத்துக் கொள்ளவில்லை. ஆனால் இயற்கைக்கு முரணான அல்லது ஒழுக்கக் கேடான என்னும் கோணத்தை நான் ஏற்கவில்லை. மனிதர்கள் தங்களுக்குள் பிரச்சினைகளைத் தவிர்த்து பரஸ்பர அன்புடனும் அமைதியுடனும் வாழ உறவு முறைகள் கொண்ட சமூகத்தையும் அதற்கான விதிகளையும் அமைத்தார்களே, அது இயற்கைக்கு முரண் இல்லையா ? ஆடை உடுத்தியது முதற்கொண்டு மனித நாகரிகமே இயற்கைக்கு முரண்தானே ? மேலும் வியப்பாக, சூழ்நிலை அடிப்படையில் விலங்குகளிடம் ஒருபால் உறவு நடவடிக்கைகள் காணப்பட்டுள்ளது. ஒழுக்கம் என்றால் அது இடத்தையும் காலத்தையும் பொருத்தது. உதாரணமாக 'ஒருவனுக்கு ஒருத்தி' என்பது எண்ணிக்கையில் பால்நிலைச் சமன்பாடு உள்ள சமூகத்திற்கானது (தங்கள் எண்ணிக்கையைப் பெருக்க இதில் சமயக் கோட்பாடுகள் வகுப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்பது வேறு விடயம்). பாலியல் விலகல்களில் (sexual deviations) Paedophilia (குழந்தைகளிடம் ஈர்ப்பு எனும் கயமை), Beastiality (விலங்குகளை நோக்கிய ஈர்ப்பு) , sexual sadism (உடலுறவில் மற்றவரைப் துன்புறுத்தல்) போன்றவற்றை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இவற்றில் அறியாதார்க்கும், வலிமை குறைந்தோர்க்கும் அநீதி இழைக்கப்படுவது தெளிவு. இத்தகைய பாலியல் விலகல் உணர்வுகள் சிலரிடம் இயற்கையாய்த் தோன்றினாலும் அவற்றை எதிர்த்துப் போராடத்தான் வேண்டும் - மனித நாகரிகத்தைப் போல. மற்றபடி காதல், அன்பு, புரிதல் இவையெல்லாம் வயதிலும் அறிவிலும் முதிர்ந்தோரிடையே ஏற்படின், அன்னார் எப்பாலினத்தவராயினும், அவர் உரிமையில் தலையிட சமூகத்திற்கு உரிமையுண்டா என்ன ? பரஸ்பர சம்மதத்தில் உறவு கொள்ளும் வயது வந்தோர் விடயத்தில் சட்டம் எனும் பெயரில் சாவித் துவாரம் வழியாகப் பார்க்கும் அநாகரிகத்தை மனித சமூகம் என்று கைவிடப் போகிறது?
 39. 4 points
 40. 4 points
  ஒரு நிமிடம் இவர் சொல்வதை கேளுங்கள்......!
 41. 4 points
  யாராவது கிழக்கு பக்கம் தெரிந்தவர்கள் இருந்தால் ஒரு கோல் எடுத்து கேட்கலாம் 83 கலவரம் பற்றி நான் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டியள் அம்பாறை ஹிங்குராணை சீனி தொழிற்ச்சாலைக்கு , திராய்க்கேணி, அட்டப்பள்ளம், ஆலங்குளம் அக்கறைப்பற்று. கல்முனை, காரைதீவு, போன்ற இடங்களை சேர்ந்தவர்கள் வேலைக்கு போய்வந்தவர்கள் இன்றுவரைக்கும் வீடு திரும்பல உங்களுக்கு அவர்களை யாழிலிருந்து விரட்டியதுதான் கஸ்ரமா இருந்திருக்கும் என நான் நினைக்கிறன் அது மட்டுமன்றி இலங்கை யென்றால் வடக்கு மட்டும்தான் நினைவில் இருக்கு போல கிழக்கை அவர்கள் மெதுவாக பிரிக்க உதவினாலும் கிழக்கில் அவர்கள் செய்தவை , படுகொலைகள் இப்பவும் தமிழ் மக்கள் மனதில் இருக்கு
 42. 4 points
 43. 4 points
  இங்கு என்னைப் போன்று Skill migration மூலம் வந்த என் பல நண்பர்கள் (பலர் IT / Software துறையில் இருப்பவர்கள்) நிரந்தரமாக ஊருக்கு போய் வாழ்வதற்கான பல ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்தனர். ஒருவர் தன் குடும்பத்துடன் அப்படி போய் அங்கு வாழவும் தொடங்கி இருந்தார். இப்ப அனைவரும் தம் திட்டங்களை கைவிட்டு விட்டனர். ஊரில் செட்டிலான நண்பனும் குடும்பத்துடன் மீண்டும் இங்கு வர ஆயத்தங்களை செய்கின்றான். இலங்கையின் அரசியலமைப்பில் பெரும் மாற்றம் வராமல் அங்கு நிரந்தரமாக அமைதி வராது. அப்படியான அரசியல் மாற்றத்தை கொண்டு வருவதற்கான ஒரு தலைமையும் அங்கு இல்லை. இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து ஆட்சி செய்யும் / செய்த அனைத்து சிங்கள தலைவர்களும் நாட்டை உருப்படுத்துவதை விட இனவாத ஆட்சி செய்து தம் இன மக்களையும் சீரழிப்பதில் தான் வெற்றி கண்டு கொண்டுள்ளனர். மகாவம்சக் கனவில் மூழ்கிக் கிடக்கும் சிங்கள சமூகத்தில் இருந்து எல்லா மக்களையும் அரவணைத்து செல்லக் கூடிய தலைமை ஒரு போதும் ஏற்படப் போவதில்லை. இலங்கையின் எதிர்காலம் பற்றி கதைக்க முதல், அதற்கு எதிர்காலம் ஒன்றே இருக்குமா என சந்தேகம் தான் வருகின்றது
 44. 4 points
  இந்தியா இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் இருக்குமென்று நான் நினைக்கவில்லை. தானே செய்ய எத்தனிக்கும் தாக்குதல் ஒன்றுபற்றி இலங்கை அதிகாரிகளுக்கு இந்தியா அறிவிக்க வேண்டிய நோக்கமென்ன? ஆகவே, இந்தியாவிற்கு இந்தத் தாக்குதல்களில் பங்கிருக்கின்றது என்பது அடிபட்டுப் போய்விடுகிறது. ஆனால், இந்த தாக்குதல்களுக்குப் பின்னரான நிலைமைகளை தனக்குச் சாதகாமகப் பாவிக்க இந்தியா முனைகின்றதென்பதை மறுப்பதற்கில்லை. இதன் ஒரு அங்கம்தான் தனது தேசிய பாதுகாப்புப் படையினரையும், புலநாய்வுத்துறையையும் இந்தியா களமிறக்கியிருப்பது. அதுமட்டுமல்லாமல், இந்தியாவின் தற்போதைய பங்களிப்புகளுக்கு அமெரிக்காவின் மறைமுக ஆசீர்வாதமும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இங்கே குறிப்பிடப்படவேண்டிய முக்கிய விடயம், இந்தியப் பிரஜைகள் இத்தாக்குதலில் தொடர்புபட்டிருப்பது. அண்மைக்காங்களில் இந்தியாவின் கேரளா மற்றும் தமிழ்நாட்டு முஸ்லீம் இளைஞர்களை நோக்கி பாக்கிஸ்த்தானின் புலநாய்வுப்பிரிவான ஐ. எஸ் . ஐ செயற்திட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றதனால் ஆகும். இந்த முஸ்லீம் இளைஞர்களுக்கு ஆளும் இந்துத்துவ பாரதீய ஜனதாக் கட்சிமீதிருக்கும் இயல்பான கோபத்தைப் பயன்படுத்தி இந்தியாவின் ஸ்த்திரத்தன்மையைக் குலைப்பதற்கு பாக்கிஸ்த்தான் முயன்றுவருவதாகக் கூறப்படுகிறது. பாக்கிஸ்த்தானின் திட்டங்களுடனும், சவுதி போன்ற மத்திய கிழக்கு சுன்னி இஸ்லாம் நாடுகளினதும் பண உதவியுடனும், சர்வதேசப் பயங்கரவாதிகளான ஐஸிஸ் கள் இலங்கை இந்திய முஸ்லீம் சமூகளுக்குள் ஊடுருவியிருக்கிறார்கள். சிரியாவில் நடந்த போரில் பங்களிப்பதற்கென்று இவ்விடங்களிலிருந்து சென்ற நூற்றுக்கணக்கான முஸ்லீம் தீவிரவாத இளைஞர்கள், சிலர் போரில் கொல்லப்பட, மீதமானோர் மீண்டும் நாடு திரும்பியிருக்கிறார்கள். இவ்வாறு நாடு திரும்பிய இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் ஊரிப்போன தமிழக - இலங்கை முஸ்லீம்கள் தமக்குள் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்கள். அதனாலேயே, தமிழகத்தில் தெளவீத் ஜமாத் அமைப்பிற்கும், இலங்கையில் தேசிய தெளவீத் ஜமாத் அமைப்பிற்கும் தொடர்புகள் உருவாகியிருக்கின்றன. இந்திய புலநாய்வுத்துறை தமது விசாரணைகளை கேரளாவில் ஆரம்பித்தபோதே இலங்கை அமைப்பிற்கும் இந்திய அமைப்பிற்குமான தொடர்பு வெளிப்பட்டு, இலங்கைக்கும் அறிவிக்கப்பட்டது. போரியல், நாசகாரத் தாக்குதல்கள், குண்டுதயாரித்தல், தற்கொலைத் தாக்குதல்கள் போன்றவற்றில் பரீட்சாயமானவர்களான இவர்களை பாக்கிஸ்த்தானிய - சவூதிக் கூட்டு பாவிக்கிறது. இதெல்லாவற்றையும் விட முக்கியமான விடயம், ஏன் இந்தத் தாக்குதல்கள் பற்றி இலங்கை எதுவுமே செய்யவில்லை என்பதும், மைத்திரி தெரிந்திருந்தும் ஏன் மறைத்தார் என்பதும். பார்க்கப்போனால், இத்தாக்குதல் பற்றி நன்கே தெரிந்திருந்தும், சிறுபான்மை தமிழ் மற்றும் சிறுபான்மைச் சிங்களக் கத்தோலிக்கர்கள் தானே என்கிற அசமந்தப் போக்கோ அல்லது நாட்டில் அசாதாரண நிலையொன்றினை ஏற்படுத்துவதன்மூலம் ஆட்சிமாற்றம் ஒன்றை ஏற்படுத்தலாம் என்கிற மைத்திரிபால சிறிசேன உற்பட்ட மகிந்த சார்பு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளினது செயற்பாடோதான் இத்தாக்குதல்களை ஏதுவாக்கியிருக்கின்றன.
 45. 4 points
  சுண்ணத்துச் செய்யப்படாத ரவைகளை நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவே எங்களுக்கும் அவைக்கும் எவ்விதமான சம்பந்தமும் கிடையாது.
 46. 4 points
  கோபுர தரிசனம் கோடி புண்ணியம் தரும்......அரோகரா
 47. 4 points
  கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் மேலே சுற்றிவிட்டு கீழே வந்தால் பயங்கரத் தாகம்.ஒரே ஒரு சிறிய கடை தான் அங்கு. சரியான விலை. ஆனாலும் வேறு வழியில்லை என்பதனால் அங்கே வாங்கிக் குடித்துவிட்டு ஏதாவது உண்ணலாமா என்று பார்த்தால் பெரிதாக எதுவும் இருக்கவும் இல்லை. சரி ஒரு உணவகத்தைத் தேடிப் பிடிக்கும்வரை உண்ணலாம் என ஒரு பிஸ்கற்றை வாங்கி வந்து உண்டுகொண்டே கீழே நடந்துவர நாம் செல்ல வேண்டிய பஸ் போய்க்கொண்டு இருக்கிறது. அங்கே நின்ற மஞ்சள் உடையணிந்த பெண்ணை கேட்க ஒரு பத்து நிமிடத்தில் அடுத்த பஸ் வரும் என்றாள். காலோ சரியான நோவெடுக்க இருப்பதற்கான இருக்கைகள் பக்கத்தில் எங்கும் காணவில்லை. சற்றுத் தூரத்தில் சீமெந்து இருக்கைகள் தெரிய அங்கே போய் இருப்பமோ என்று நான் கேட்கிறேன். சரியென்று போய் இருந்து கையில் வைத்திருந்த மிச்ச யூஸையும் குடித்து மிகுதி பிஸ்கற்றையும் சாப்பிட கொஞ்சம் களைப்பு அடங்குகிறது. மத்தியானம் எங்கேயப்பா சாப்பிடுவம் என்று கேட்க, இப்ப தானே பிஸ்கற் சாப்பிட்டு முடிச்சனி. அதுக்குள்ள சாப்பாட்டுக் கதை. கொஞ்சம் வயித்தைக் காயப்போடன். இன்னும் ஒரு இடத்தைப் பார்த்திட்டுச் சாப்பிடுவம். பட்டினி கிடந்தது பழக்கவேணும் எண்டு மனிசன் ஆரம்பிக்க, ஐயோ கடவுளே உது ஒவ்வொருநாளும் கேட்டுக் கேட்டுப் புளிச்சுப் போச்சு. கொலிடே வந்த இடத்திலயாவது நின்மதியா சாப்பிட விடுங்கப்பா என்றவுடன் மனிசன் வேறெதுவும் சொல்லாமல் போவோர் வருவோரைப் பார்த்துக்கொண்டு நிற்கிறார். கொஞ்சம் தள்ளி நிறைய மரங்கள் தெரிகின்றன. நான் மரங்களைப் பார்த்துவிட்டு வாறன். பஸ் வந்தால் கூப்பிடுங்கோ என்றுவிட்டு நான் சிறிது தள்ளிப் போய் பார்க்கிறேன். நிறைய மரங்களும் நடைபாதையும் கீழ்நோக்கிப் போகுது. உதில் நடந்து போய்ப் பார்த்தால் என்ன என்று எண்ணிக்கொண்டிருக்க, எங்கட பஸ் வந்திட்டுது ஓடிவா என்றபடி மனிசன் ஓடுறார். போய் எனக்கும் இடம் பிடியுங்கோ என்றபடி நான் பின்னால் நடக்கிறன். ஓடிப்போன மனிசனைப் பார்த்தா பஸ்ஸில ஏறாமல் கெதியா வரச்சொல்லி எனக்கு கை காட்டிக்கொண்டு இருக்கிறார். ஏன் இந்த எளிய மனிசன் ஏறாமல் நிக்கிது. இருக்க இடம் கிடைக்காமல் இருக்கப்போகுது என்றபடி நான் போய் சேர்ந்தால், நீ டிக்கற்றை வைத்துக்கொண்டு என்னை பஸ்ஸில ஏறு எண்டால் விடுவாங்களே என்றபடி மனுசனும் நானும் பஸ்ஸில் ஏறினால் எல்லா சீற்ரும் நிறைஞ்சு போய் கிடக்கு. வேறு வழியில்லாமல் கம்பியைப் பிடிச்சுக்கொண்டு நிக்கிறன். ஒரு பத்து நிமிடம் பஸ் ஓடியபின் Syntagma square என்னும் இடம் வந்ததும் சனக்கூட்டம் அதிகமாக இறங்க, இங்கே இறங்கி என்ன என்று பார்ப்போமா என்றேன். சரி என்று கூற இருவரும் இறங்கி நடந்தால் அங்கும் திருவிழா போன்று கூட்டம். பல பெரிய விற்பனை நிலையங்கள், உணவகங்கள் என்பனவும் அங்கேயிருந்தன. இங்கேயே சாப்பிட்டுவிட்டு மிகுதியைப் பார்ப்போம் என்று கூற இன்னும் கொஞ்சம் நடந்து பார்ப்போம். ஏதாவது புதிதாக இருக்கிறதா என்று கூறியபடி மனிசன் செல்ல நானும் செல்லவேண்டியதாகிவிட்டது. தூரத்தில் ஒரு அழகிய கட்டடம் தெரிகிறது. ஏதென்ஸின் பழைய பாராளுமன்றம் என்று மப்பில் போட்டிருக்கு. லண்டனில் Buckingham palace க்கு முன்னால் நிற்கும் இருவர்போல் இங்கும் இருவர் காவலர் போல் நிற்கின்றனர். அதில் நின்று படத்தை எடுத்துவிட்டு தொடர்ந்து எதிர்ப்புறம் உள்ள வீதியில் நடக்கிறோம். ஒரு சைனீஸ் உணவகத்தைக் கண்டதும் இங்கு மத்திய உணவை உண்போமா என்று கேட்டுவிட்டு நானே வேண்டாம் என்றேன். ஏனெனில் ஒரு ஐம்பதுபேர் இருக்கக்கூடிய பெரிய உணவகத்தில் ஒருவரைக்கூடக் காணவில்லை. அதனால் அதைக் கடந்து வேறு சில உணவகங்களை பார்த்துக்கொண்டு சென்றால் உணவுகள் எப்படி இருக்குமோ என்ற யோசனைவேறு. அடுத்த வீதிக்குச் சென்றால் பல சிறிய உணவகங்கள் வீதியோரமாக் இருக்க இளம் பெண்கள் நின்று போவோர் வருவோரை தமது உணவகத்துக்கு வரும்படிஅழைத்துக்கொண்டு நிற்க இரண்டு மூன்றுபேரைத் தவிர்த்துவிட்டு நான்காவதாக அழைத்த பெண்ணின் சிரிப்பு எனக்குப் பிடித்துவிட அங்கு உண்ணலாம் என்றேன். சரி என்று போனால் அங்கு ஒரு மேசையில் நான்கு கதிரைகளும் இன்னொரு சிறிய மேசையில் இரண்டு கதிரைகளும் இருக்க, அந்தப் பெண் எம்மைச் சிறிய மேசையில் அமரும்படி கூற நானும் கணவரும் எதிர் எதிராய் அமர்கிறோம். சூரியவெளிச்சம் என் முகத்தில் அடிக்கிறது. வெய்யிலாக இருக்கிறது அங்கு போய் இருக்கலாமா என்று அப்பெண்ணைக் கேட்க அது நான்குபேர் இருப்பது என்று கூறிவிட்டு நிற்கிறாள். நான் அந்தப்பக்கம் வாறன். நீ இங்கே வா என்கிறார் கணவர்.உங்களுக்கு மட்டும் வெய்யில் அடிக்காதோ என்றுவிட்டு எனக்கு இதிலிருப்பதில் விருப்பம் இல்லை. நாம் வேறு கடைக்குப் போகிறோம் என்றுவிட்டு இன்னும் நான்கு கடைகள் தள்ளி ஓர் கடையுள் செல்கிறோம். அங்கும் எமக்குக் காட்டிய மேசைக்கு அருகில் சிகரெட் பிடித்தபடி இருவர் இருக்கின்றனர். எனக்கு அதில் இருக்க முடியாது வேறு இடம் காட்டு என்கிறேன். அவள் வேறு இடத்தைக் காட்ட அதில் அமர்கிறேன். ஆனாலும் எனக்கு முழுத் திருப்தி ஏற்படவில்லை. அவள் மெனு காட்டைக் கொண்டுவந்து தர அதில் இறைச்சி வகைகளே அதிகம் இருக்கின்றன. குடிப்பதற்கு கோலா ஓடர் செய்துவிட்டு பார்த்தால் நெருப்பில் வாட்டிய பன்றி, ஆடு,கோழி மூன்றும் கலந்த உணவு ஒன்று, சலாட், அவித்த உருளைக்கிழங்கு இத்தனையும் 25 யூரோஸ் இருவருக்கு என்று இருக்க அதை ஓடர் செய்துவிட்டுக் காத்திருக்கிறோம். சலாட் முதலில்வருகிறது. பரவாயில்லை. வித்தியாசமான சுவை எதுவுமின்றி லண்டனில் உண்பதுபோலவே இருந்தாலும் பசிக்கு நன்றாகத்தான் இருக்கிறது. அவள் கொண்டுவந்த இறைச்சியைப் பார்த்ததும் பசி கூட எனக்கு இல்லாமற் போச்சு.புதிசாச் சுடச்சுட கொண்டுவரப்போறாள் என்று பார்த்தா பழசைச் சூடாக்கிக் கொண்டுவந்ததுபோல் சூடும் இல்லை. சுவையும் இல்லை. வேறை வழியில்லாமல் சாப்பிட்டுவிட்டு டிப்ஸ் கூட வைக்காமல் வந்திட்டம்.
 48. 4 points
 49. 4 points
  உங்க ளுக்கு ஆதாரம் ரொம்ப முக்கியமாக தேவைப்பட்டால், காத்தான்குடில போனைப் போட்டு கேளுங்க. வியாபாரிகள், விவசாயிகள் முடங்கிப்போய் உள்ளனர். ஆஸ்பத்திரி கூட போகப்பயப்படுகின்றனர். கதிகலங்கிப் போயுள்ளனர். மக்கள் அலறி விலகிச்செல்வதால், இஸ்லாமிய உடையுடன் பெண் வெளியே செல்ல முடியாத நிலை. வேலை செய்யுமிடங்களில், திடீர் சந்தேகம். இது போன்ற தாக்குதல்களின் பின், இப்போது ரஸ்ய, மாஸ்கோவின் வீதிகளில், முஸ்லீம் உடையுடன், தொப்பியுடன் யார் சென்றாலும் மக்கள் தாக்குவதால், தமது கலாச்சாரத்தை துறக்கவேண்டிய நிலை. அன்று தமிழர் பட்ட அவலத்தை, இந்த ஜிகாதிக் கூட்டம் முஸ்லிம் மக்களுக்கு கொடுத்துள்ளது. சிங்களவர் காத்திருந்த தருணத்தை இவர்களே தங்கத்தட்டில் கொடுத்துள்ளனர். நாட்டின், சிங்களவரும், தமிழர்களும் சேர்ந்தே வெறுக்கும் பேரவலம். அல்லாவின் பெயரால், இந்த ஜிகாதிகள் சபிக்கப்படுகிறார்கள். நீஙகள் ஆதாரம் கேட்கிறீர்கள். 🥵
 50. 4 points
  island பத்திரிகை ஆசிரிய தலையங்கம் எழுதியுள்ளது. மிக தெளிவாக சொல்கிறது. இவர்களை மூளைச்சலவை செய்தவர்கள் சமூகத்தில் இருந்து நீக்கப் படவேண்டும். அப்படி செய்யும் போது, உலகம் மீண்டும் யுத்த குற்றம் என்று நமது படைகளுக்கு தொந்தரவு தரக்கூடாது. என்ன சொல்ல வருகிறார்கள் என்று புரிகிறதா? ஆனாலும், நியூசீலாந்து நாட்டின் தாக்குதலுக்காக, சம்பந்தமே இல்லாமல் ஒரு மூன்றாம் உலக நாட்டில் அப்பாவி கிறித்தவ, சக மனிதர்களை கொல்ல திட்டம் தீட்டிய இவர்கள் மனித குலத்தின் எதிரிகள். அவர்களை, ரசிய புட்டின் சொன்னது போல, அல்லாவிடம் தான் அனுப்பி வைக்க வேண்டும். அடுத்தவரது மத உரிமைகைள கொடுமையாக நிராகரித்த இவர்கள், இந்த ஈன செயலை செய்து விட்டு, பௌத்தர்களும், இந்துக்களும், கிறிஸ்தவர்களும் சந்தேகத்துடன் பார்க்கும் நிலையில் நாளை பள்ளிக்கு எவ்வாறு சென்று நிம்மதியாக தொழுகை நடத்தப போகின்றனர். நீண்ட கால நோக்கில், முஸ்லீம் சமூகம் பெரும் நெருக்கடிகளை சந்திக்கப் போகின்றது என்பதே நிதர்சனம். காத்தான்குடியினுள் ராணுவம் முகாம் அமைவதும், அவர்களது இவ்வளவு கால கடும் உழைப்பும், உயர்வும் வீணாக்கப் போவதும் நிதர்சனமாக தெரிகிறது. இதனை எதிர்க்க முடியாத அளவில் அரசியல் பலமும் சிதைக்கப்படும். இவர்களது பொருளாதாரத்தினை சிங்களம் உலக நாடுகள் வேறு பக்கம் பார்க்கும் நிலையில் அழிக்கும் அல்லது பிடுங்கும். தமிழர்களுக்காகவாவது வெளிநாடுகள் தஞ்சம் தந்தன. பிழைத்துக் கொள்ள முடிந்தது. ஏழை முஸ்லிம்கள், இன்றைய நிலையில் எங்கே போக முடியும். எல்லா நாடுகளும் சந்தேகத்துடன் தானே பார்க்கின்றன. இவர்களது அடாவடி அரசியலால், தமிழர்கள் கூட இவர்கள் பக்கம் நிற்க முடியாமல் போயுள்ளது. வட இந்தியாவில், இதே போன்ற நிலையில், இந்துத்துவா எழுச்சி அடைந்ததும், முஸ்லிகள் உரிமைகள் மிக மோசமாக பறிக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக பெரும் வன்முறைகள் நடப்பதும் எதிர்த்தால், பாகிஸ்தான் போ என்று சொல்வதும் நிகழ்கிறது. இதே நிலை இலங்கையில் வரக் கூடாது என்பதே முஸ்லிகள் கவலையாக இருக்கும் என்று நினைக்கிறன்.
யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு