Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Leaderboard

 1. goshan_che

  goshan_che

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   262

  • Posts

   8,647


 2. குமாரசாமி

  குமாரசாமி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   235

  • Posts

   35,603


 3. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   190

  • Posts

   60,378


 4. suvy

  suvy

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   186

  • Posts

   21,310


Popular Content

Showing content with the highest reputation since திங்கள் 23 ஆகஸ்ட் 2021 in Posts

 1. வணக்கம் உறவுகளே! என் பல வருடக் கனவு இது. இன அழிப்புப் போரில் நாங்கள் பட்ட இன்னல்களை எங்கள் இளந்தலைமுறைக்குச் சொல்ல ஏதாவது வழி உண்டா என்று தேடிய போது எனக்குத் தெரிந்த "கதைகூறல்" மொழியில் "எறிகணை" நாவலைப் படைத்துள்ளேன். இந்த இணைப்பில் சென்று நீங்கள் புத்தகத்தை எளிதாக வாங்க முடியும்! ஈழத்தில் உள்ள நண்பர்கள் பலர் கேட்டவாறு உள்ளார்கள். பொது முடக்கம் முடிந்ததும் விரைவில் அனுப்பி வைப்பதற்கான சூழ்நிலைகளைப் எதிர்பார்த்தவாறு உள்ளோம். வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் வகை: நாவல் ஆசிரியர் : தியா விலை.ரூ.180 "கொண்டாட்டமும் பண்பாடும் என வாழ்ந்த ஓர் ஈழக் குடும்பத்தைத் துரத்துகிறது ‘எறிகணை’! வழிநெடுகிலும் சிந்தப்படுகிற குருதியும், தொலைக்கப்படுகிற உயிர்களும் அதிர்வை உண்டு பண்ணுகின்றன. ஈழப் போர் தொடங்கி முடியும் காலம் முழுவதும் பரவிச் செல்கிற இந்தக் கதை, போரின் நெடுக்குவெட்டு முகத்தையும் காண்பிக்கிறது. எளிய மொழியில், எளிய கதையாக உருப்பெற்றுள்ள இந்த நாவல் ஏற்படுத்துகிற தாக்கமோ உக்கிரமானது. ஈழ நிலத்தில் இனஅழிப்புப் போரினால் ‘சனம் பட்ட கதை’யைச் சொல்வதில், ‘எறிகணை’ முக்கியத்துவம் வாய்ந்த நாவலாக நிலைத்திருக்கும்." -தீபச்செல்வன்- https://play.google.com/store/apps/details?id=com.bookpalace
  14 points
 2. பொறுப்பு துறப்பு இந்த திரியில் பகிரப்படும் எந்த தகவலுமே நிதி ஆலோசனை (financial advice) அல்ல. இவை வெறும் கருத்துக்கள் மட்டுமே. உங்கள் முதலீட்டு முடிவுகளுக்கு நீங்களே 100% பொறுபானவர்கள். நோக்கம் யாழில் பங்கு வர்த்தகம் பற்றிய ஒரு திரியை திறந்து அதில் உரையாடலை தொடர்வது, எதிர்காலத்தில் புலம்பெயர் சமூகம் ஒரு நிதிப் பலம் பொருந்திய கட்டமைப்பாக மாற உதவும் என்பது உறுப்பினர் @Maruthankerny யின் மனதில் உதித்த எண்ணம். அவர் இப்போ களத்துக்கு வருவது இல்லை என்பதால் - நான் இந்த திரியை திறக்கிறேன். @vasee @Kadancha @பிரபா சிதம்பரநாதன் @Elugnajiru போன்றவர்களின் கருத்துக்கள் அவர்களுக்கும் இதில் ஆர்வம், அறிவு, அனுபவம் இருப்பதை உணர்த்துகிறது. ஆகவே விடயங்களை பகிர்ந்து கொள்ளும், வினாக்களை எழுப்பும் ஒரு திரியாக இதில் நாம் ஒன்றிணைவது சாலப்பொருத்தம் என கருதி இந்த திரியை திறக்கிறேன். மேலே சொன்னோர் மட்டும் அல்ல இன்னும் பலர் இதில் ஆர்வம், அறிவு, அனுபவம் உள்ளவர்கள் நிச்சயம் இருப்பீர்கள். ஆகவே, பங்கு? வா பங்கு ஒரு கை பார்க்கலாம். பயனுள்ள கருத்துக்கள் பரிமாறப்பட்ட திரிகள் சில கீழே:
  10 points
 3. ஐநாவுக்கு சம்பந்தன் ஐயா எழுதிய கடிதத்தை உடான்ஸ்சாமியார்.கொம் என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது. கடிதவிபரம், வீடியோ கீழே. ——————————- ஐநா அன்போட சம்பந்தன் நான்நான் எழுதும் letter ச்சி மடல் இல்ல கடுதாசின்னு வெச்சுக்கலாமா? வேணாம் கடிதம்னே இருக்கட்டும், படி? ஐநா அன்போடு சம்பந்தன் நான் எழுதும் கடிதமே. பாட்டாவே படிச்சிட்டியா அப்போ நானும்மொதல்ல ஐநா சொன்னேன்ல இங்க நைனா போட்டுக்க.நைனா, ஜெனிவாவில் சௌக்கியமா நான் இங்க சௌக்கியம். நைனா ஜெனிவாவில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே. முள்ளிவாய்காலை நெனச்சு பாக்கும்போது அழுகை மனசுல அருவி மாறி கொட்டுதுஆனா அத எழுதனும்னு உக்காந்தா அந்த எழுத்து தான் வார்த்த… முள்ளிவாய்க்காலை நினைக்கையில் அழுகை கொட்டுது(அதான்) அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது(அதே தான்) ஆஹா பிரமாதம் கவித கவித, படி! ஐநா அன்போடு சம்பந்தன் நான் எழுதும் கடிதமே. நைனா ஜெனிவாவில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே. முள்ளிவாய்க்காலை நினைக்கையில் அழுகை கொட்டுது(அதான்) அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது(அதே தான்). லா ல லா…ல..லா…லா ல லா…ல..லா எமக்குண்டான யுத்தவடு அது தன்னால ஆறிடும்அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல தமிழனுக்கு சொரணையே வாறதில்ல… இதும் எழுதிக்க, நடுல நடுல நீதி, பொறிமுறை, பொறுப்புகூறல் இதெல்லாம் போட்டுக்கணும். இதோ பாரு தமிழருக்கு என்ன அநியாயம் நடந்தாலும் இந்த உலகம் தாங்கிடும்.ஆனா இலங்கைக்கு ஒன்னுனா சீனா தாங்குமா, தாங்காது ஐநா, நைனா, சீனா…. அதையும் எழுதணுமா? ம்ஹம் இது…… கையாலாகாததனம். எம் பிரச்சனை என்னனு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது,ஆனா நான் அழுது என் சோகம் கொழும்பை தாக்கிடுமோ அப்படினு நினைக்கும்போதுவர்ர அழுகை கூட நின்னுடுது. தமிழர் உணர்ந்து கொள்ள இது தமிழர் அரசியல் அல்ல ...அதையும் தாண்டிப் பைத்தியகாரத்தனமானது! உண்டான விசாரணை இங்கே தன்னாலே காணாமல்போன மாயம் என்ன ஐநாவே, சீனாவே. என்ன சோகம் ஆன போதும் தமிழினம் தாங்கிக் கொள்ளும், கொழும்பு வர்க்கம் தாங்காது செந்தேனே. யுத்த குற்றம் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது. எந்தன் சோகம் கொழும்பை தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது. தமிழர் உணர்ந்து கொள்ள இது தமிழர் அரசியல் அல்ல அதையும் தாண்டிப் பைத்தியகாரத்தனமானது… ஐநாவே நித்திரை-சாமியே நாந்தானே தெரியுமா சீனாவே கொழும்பில் நீயும் பாதியே அதுவும் உனக்கு புரியுமா…. சுப லாலி லாலி லாலி லாலி ஐநா லாலி லாலி லாலி (பாடல் முடிவில் ஐநாவும், சம்பந்தன் ஐயாவும் நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்தனர்).
  9 points
 4. பின்னேரம் புகைக்கூட்டடியில ஆணியில தொங்கிக்கொண்டிருந்த சுளகை எடுத்து அதில ஒட்டியிருந்த காய்ஞ்சு போன பழைய மாவை தட்டி சுரண்டிப்போட்டு , சாடையா நுனி கருகின நீத்துப் பெட்டியை கழுவி அம்மம்மா எடுத்து வைக்கேக்க அண்டைக்கு புட்டுத்தான் எண்டு தெரியும் . மூடி போட்ட பிளாஸ்டிக் பக்கட்டில இருந்து மூண்டு சுண்டு மா. பிளாஸ்டிக்கிற்கு முன்னைய காலம் சருவச்சட்டிலையும் அதுக்கு முந்தி மண் பானையிலும் தான் அரிசி மாவை போட்டு வைக்கிறது . ஒரு சுண்டு எண்டுறது பழைய ரின்பால் பேணி , சிலர் அளக்கிற பேணி எண்டும் சொல்லுறவை. சோறு எண்டால் அப்ப ஒரு சுண்டு மூண்டு பேருக்கு தான் காணும், புட்டுக்கு எண்டா இரண்டு பேருக்கு தான் சரி. ஆனால் இப்ப dieting எண்டு வந்தா பிறகு doctors advise பண்ணினம் carbohydrates cut பண்ணட்டாம். ஆனால் என்னத்தை சாப்பிட்டாலும் யாழ்ப்பணத்தானுக்கு இரவு புட்டும் குளம்பும் சாப்பிட்டாத்தான் நித்திரை வரும். அதிலயையும் மொட்டைக்கறுப்பன் அரிசிமாப்புட்டு புட்டுக்கே தனிச்சிறப்பு தரும். தட்டார் சந்தீல இருக்கிற வைத்திலிங்கம் மரக்காலை தான் ஏரியா எல்லாருக்கும் விறகு , மரம், பலகை supply . துலாபாரம் படத்தில வாற பெரிய தூக்குத்தராசு தான் விறகு நிறுக்கிறது . தூக்கு கணக்கு தான் விறகுக்கு . 4 படி ஒரு பக்கம் வைப்பினம் ஒண்டு 54 றாத்தல் , 216 றாத்தல் ஒரு தூக்கு . விறகிலும் பாக்க பிறவெட்டு மலிவு ஆனால் வாங்கேக்க வெறும் பட்டை மட்டும் வாங்காமல் கொஞ்சம் விறகுத்துண்டும் இருந்தாத் தான் நல்லா எரியும். கொத்தின விறகில்லாமல் முழு விறகை வாங்கி வீட்டை கூலிக்கு கொத்திறது தான் லாபம், அதோட கொத்தேக்க வாற சிராகையையும் பாவிக்கலாம். சின்ன சிராகையை தணல் மூட்டி புகைச்சட்டிக்குள்ள வைச்சு வேப்பமிலையை வைச்சுத்தான் நுளம்பு விரட்டிறது . குவிச்சு வைச்ச உமிக்குள்ள இரண்டு சிராகையை தணல் மூட்டி வைச்சிட்டா அடுத்த நாள் பல்லு மினுக்க கரி ready . விறகு கொத்தேக்க ஏலாமல் விட்ட வைரமான விறகான மொக்கை ( மொக்கு விறகை - கொமர்ஸ்காரன்கள் எல்லாம் வரிஞ்சு கட்டப்போறாங்கள்) வைச்சு பிறவெட்டையும் அடுக்கி அடீல வைச்சு தென்னம் மட்டை , சிரட்டை , பொச்சு மட்டை எல்லாம் அடுக்கி பெரிய கிடாரம் முட்டத் தண்ணி விடவேணும் . தண்ணி கொதிக்க முதல் பத்தாயத்தில இருக்கிற நெல்லை கடகத்தில கொண்டு வந்து கிடாரத்தின்டை கழுத்து வரைக்கும் நெல்லைக் கொட்டீட்டு கலக்க, பதர் மிதக்கும் அதை அள்ளி எறிஞ்சிட்டு விறகை உள்ள தள்ள அடுப்பு தகதகக்கும். நெல்லு புழுங்கலாக மாற நல்ல ஒரு மணம் வரும் , இரண்டு நெல்லை எடுத்து கையால நசிச்சா அவியாத சோறு மாதிரி நசிஞ்சால் பதம் சரி. கிடாரத்தின்டை வளையத்துக்கால உலக்கையை கொழுவி அடுப்பில இருந்து இறக்கி கொண்டு போய் பரவச்சரி. கொழும்பில intern செய்யேக்க Co House officer Jayamal க்கு you know அரிசி is புழுங்கிங் எண்டு அவனுக்கு புழுங்கல் அரிசி எண்டால் என்ன எண்டு நான் விளங்ஙகப்படுத்த அவனும் பாவம் “ஹரி ஹரி“ எண்டு ஏதோ விளங்கின மாதிரி தலையாட்டினது, நான் நொந்து போன தருணம் . அவிச்ச புழுங்கலை மழை நனையாம காய விட்டு முள்ளு விறாண்டியால இழுத்து இழுத்து சீராப் பரவி பிறகு ,எடுத்து சாக்கில கட்டி வைச்சு குத்தி அரிசியாக்கிறது ஒரு பெரிய procedure . என்ன தான் mill இல அரிசியை குத்தினாலும் மண்வாசனை படத்தில வாற மாதிரி உரல்ல குத்தி வாற கைக்குத்தரிசி taste mill அரிசில வராது . வீட்டை இரண்டு கல் உரலும் ஒரு மர உரலும் இருந்தது . மர உரல் எங்கடை வீட்டை சீயாக்காய் அரப்பு இடிக்கவும் ,அக்கம் பக்கம் எல்லாம் செத்த வீட்டுக்கு சுண்ணம் இடிக்க போய் வாறது . அகண்ட வாய் கல்லுரல் நெல்லுக்குத்தவும் மாவிடிக்கவும் பாவிக்கிறது, ஒடுங்கின வாய் அரிசியை பதத்திக்கு தீட்டவும் மாவிடிக்கேக்க அரிச்சு வாற கப்பியை மாவாக்கவும் பாவிக்கிறது. இந்தக்கப்பியை கஞ்சியா காய்ச்சி உழுந்தோட தோசை மாவுக்கு சேத்தால் நல்ல soft ஆக தோசை வரும் . செந்தாவும் நாங்கள் எள்ளுப்பாகு இடிக்கிறதும் ஒடுங்கின உரல் எண்டு சொல்லுறது கேக்குது. ( இப்படி உரலுக்க தான் புது மாப்பிளை தலையை விட்ட கதை நடந்தது எண்டு ஆச்சி சொல்லிறவ) . புட்டு taste அதன் மாவிலும் குழைக்கிற பதத்திலும் தான் இருக்கு . நெல்லை குத்ததேக்க சரியா தீட்ட வேணும். Mill இல நெல்லை குத்தி அரிசியை தீட்டேக்க முதல்ல அரிசி வந்தாப்பிறகு அவங்கட்டை அண்ணை தவிடும் வேணும் எண்டு சொல்லேக்க ,வேண்டா வெறுப்பா ஒருக்கா பாத்திட்டு அந்த blade ஐ எடுக்க தவிடு ,அரிசி வந்த அதே ஓட்டையால வரும் . ஆனால் உமி எண்டால் பின்னால போய் பிறம்பா அள்ள வேணும் . மனோகரா சந்தி செல்லையா mill ல நெல்லுக் குத்தி , அரிசியை தீட்டேக்க பார்த்து கொஞ்சமா தீட்ட சொல்லாட்டி வீட்ட வந்தா அம்மா புறுபுறுப்பா. குத்தின அரிசி தனி உர பாக்கிலேம் , உமி தவிடு தனித்தனி பாக்கிலேம் கட்டி போட்டு , bag கொண்டு போகாட்டி ,அரிசிக்கு மேல harbajan Singh ன்டை கொண்டை மாதிரி தவிட்டை கட்டிக்கொண்டு வாறனாங்கள். கடைசீல அவங்கடை mill காசை கட்டப்போனா அவன் தானே பொக்கற்றுக்க கைய விடப் பாப்பான் காசுக்கு? . ஒரு மாரி அதிலையும் தப்பி , பின் கரியரில அரிசியும் முன்னால தவிட்டு பாக்கையும் உமி பாக்கையும் வைக்க ஆரையும் உதவிக்கு கேட்டு சைக்கிளை உழக்க தொடங்க கொஞ்சம் balance தடுமாறும் . எல்லாத்தையும் சமாளிச்சுப் போய் கொண்டு இருக்கேக்க திடீரெண்டு பண்டிக்கோட்டு பிள்ளையார் கோவலடியால ஏதாவது வாகனம் வந்து ,cycle brake ஐ பிடிச்சா சரி, ஒண்டு முன் bag விழும் இல்லாட்டி பின்னான் சரியும். ரோட்டுக் கரையில் cycle நிப்பாட்டி திருப்பி weight balance எல்லாம் செஞ்சு வீட்டை வந்தா அம்மா உடன கணக்கு கேப்பா . முதலே கள்ளக்கணக்கு சரியாப் பாத்து கவனமா களவா காசை எடுத்து வைச்சிட வேணும் , இல்லாட்டி எப்படி பிடிக்குமோ தெரியாது மனிசி, டக்கெண்டு கண்டு பிடிச்சிடும் . Shorts pocket எல்லாம் Indian army மாதிரி full checking நடக்கும் .எனக்கு அண்ணா தான் போட்டுக் குடுத்ததெண்டு இப்பவும் doubt . கொண்டந்த உமி மரத்தூளோடு சேந்து தூள் அடுப்புக்க போகும் ( மரத்தூள் அடுப்பும் சிக்கனச் சமையலும் தனியா எழுத வேண்டிய subject ), தவிட்டை பால் கொண்டு வாற பாலன் கொண்டு போவான் . ( பனை மாதிரி நெல்லும் எல்லாப் பாகமும் மனிதனுக்கு பயன் தான் ) . அரிசியை ஊறப்போட்டு வடிச்சு வீட்டை கல்லுரலில மா இடிக்கிறது Mill க்கு முற்பட்ட (IPKF க்கு உட்பட்ட) காலம். அரிசி மாவை வறுத்து பதம் சரியா கொஞ்சம் Reddish brown ஆக வரேக்க அடுப்பை நிப்பாட்ட வேணும் . ஆனா கோதம்ப மா வறுக்கேக்க மணம் நல்லா தூக்கும் . கைவிடாம வறுத்து ஒரு golden colour ம் மணமும் வரேக்க இறக்க சரியா்இருக்கும் அந்த மணம் அரிசி மாவில இல்லை. அரிசி மாவை வறுத்து அரிச்சு பானைக்க போட்டு வைச்சா கொஞ்ச நாளைக்கு பாவிக்கலாம் , இது கோதம்ப மா மாரி வண்டு வராது. வறுத்த மாவை அரிக்கேக்க வாற அரிசி மா கட்டைக்கு தேங்காப்பூ சீனி போட்டு சாப்பிட்டால் சும்மா…..அப்பிடி இருக்கும். அரிசி மாப்புட்டுக்கு குழைக்க பதம் எடுக்கத் தெரியாத மனிசி மார்டை புதுப்புது கண்டு பிடிப்புகள் தான் அவிச்ச கோதம்ப மாவும் ஆட்டாமாவும் mix பண்ணிறது ( தனி அரிசி மா 24 கரட் தங்கம் அதில செப்பு பித்தளை எல்லாம் சேர்க்க கூடாது) . Experience ஆக்கள் நேர சுளகிலயே புட்டைக் குழைப்பினம் இல்லாட்டை சட்டீல குழைச்சு பிறகு சுளகில போட்டு கொத்த வேணும் . மாவை போட்டு மேல சுடுதண்ணி விட்டு குழைச்சு, கட்டி உப்பு சிரட்டையில கரைச்சு வைச்சு தெளிச்சுத் தெளிச்சு புட்டுக் குழைக்கிறது ஒரு கலை . ரின்பால் பேணியால இல்லாட்டி விளிம்பில்லாத பித்தளை தேத்தண்ணி பேணி யால கொத்தி கையால பினைஞ்சு சரியான பதத்தை எடுக்க வேணும். அப்பிடி மாவை கொத்திச் சுளகில கொழிச்சா வாற புட்டு அப்படியே ஓரே size ஆ இருக்கும். புட்டு கொஞ்சம் சின்ன size ஆ வர vertical movement ஐ நிப்பாட்டி மெல்லக் கொழிக்க segregation சரியா வரும் . நுனியல இருக்கிற உதிர்நத மாவை திருப்பி அள்ளி அடியில இருக்கிற கட்டியோட சேத்து குழைக்க வேணும் . சிலர் கையாலயே சின்னன் சின்னனா உருட்டியும் புட்டு செய்வினம் . எப்படி தட்டில போட்டு கொத்திற taste சட்டீல வறுக்கிற கொத்து ரொட்டீல வராதோ அதே போல் சுளகில கொத்திற புட்டு taste எதிலேம் வராது . சுளகின்டை நடுவில இருக்கிற பதமான size புட்டை நீத்துப் பெட்டீலயோ புட்டுக் குழலிலயோ கையால மெல்லமா ,love பண்ணிற காலத்தில முதல் முதலா மனிசியை தொடுறமாதிரி பட்டும் படாமலும் அள்ளிப்போட்டு , அதோட புட்டுக்கு தேங்காய் பூவை Mix பண்ணுறதும் ஒரு கலை தான் . சுளகிலேயே தேங்காய் பூவை mix பண்ணலாம் , இல்லாட்டி நீத்துப்பெட்டீக்க போடேக்க கலந்து போடலாம் , இல்லாட்டி தனிய புட்டை அவிச்சிட்டு பிறகும் தேங்காய் பூவை கலக்கலாம் . ஒவ்வொண்டிலேம் ஒவ்வொரு taste வரும் . தேங்காய் கொஞ்சம் முட்டுக் காய் எண்டா முதலிலேயே கலக்கிறது தான் நல்லம் . என்னதான் Machine scrapers வந்தாலும் . நல்ல பாரமான செத்தல் தேங்காயை ( அடப்பாமான ) உடைச்சு திருவலையில ஆழமாத் திருவினா ஒவொரு பூவும் இரண்டு inch நீளத்திற்கு வரும் . இது தான் கறுத்த புட்டு மாப்பிளைக்கு ஏத்த வெள்ளை பொம்பிள்ள . இரண்டையும் கலந்தால் வாறதும் ஒரு கலவி இன்பம் தான் . எனக்கெண்டால் ஆய கலகளில் சிறந்த கலை புட்டவிக்கிற கலை எண்டும் அடுத்தது அதை சாப்பிடுற கலை எண்டும் தான் சொல்லுவன் அவிச்ச் புட்டை எப்படி சாப்பிடுறது எண்டு தனிய எழுதோணும்…. Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்
  9 points
 5. அந்த ஒளிப்பதிவில் B இன் Credit default நிகழ்தகவு 1-4 வீதம், 8% அளவினை எட்டினாலே ஆபத்து என கூறுகிறார், தற்சமயம் இலங்கையின் அளவு 27% என்று புளூம்பேர்க் இணையத்தளம் கூறுகிறது. இதுவரைக்கும் இலங்கை அத்தியாவசியங்களை நிரல்படுத்தவில்லை, ஒன்றில் அரசிற்கு நிலமையின் தீவிரம் புரியவில்லை அல்லது ஏதாவது திட்டம் அரசிடம் இருக்கலாம். அந்நிய செலாவணி நிலுவை என்பது ஏற்றுமதி (பொருள்கள் சேவைகள்) இறக்குமதி, தேறிய உல்லாசப்பிரயாணம் மற்றும் கல்வி சேவைகள் ஆகியவற்றின்நிலுவை ஆகும். இலங்கை அரிசியைக்கூட வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறது, கொரோனா பாதிப்பினால் உல்லாசப்பிரயாணமும் பாதிக்கப்பட்டுள்ளது, இலங்கைக்கு எவ்வாறு அந்நிய செலாவணி வரும் வெறும் செலவு மட்டுமுள்ளது. ஐ எம் எப் கடன் தீர்வல்ல, அது இலங்கைக்கு கால அவகாசத்தை மட்டுமே கொடுக்கும். இப்போது இலங்கை கடன் வாங்கி வட்டி கட்டுகிறது, ஒரு கட்டத்தில் கடன் சுமை அதிகரித்து கடன் செலுத்த முடியாமல் போகும் (Credit default), அதன் பின் இலங்கை கடனை திருப்பிக்கொடுக்காது. அரசின் வரவு செலவுத்திட்டத்தில் பாதிப்பு ஏற்படும். (வருமான இடைவெளியை வெளிநாட்டு உள்நாட்டுக்கடன் ஈடு கட்ட முடியாது) அரசு செலவுகள் பல, அரசியல்வாதிகளின் ஊழல் நோக்கத்திற்காக செய்யப்படும் தேவையற்ற செலவுகள் உதாரணமாக கடற்கரை கிராமம் ஒன்றில் நீச்சல் குளம் கட்டுவது.பொதுவாக மொத்த தேசிய உற்பத்தியில் 7% மேலான அரசின் செலவுள்ள நாடு உருப்படாது என்பார்கள் இலங்கை 20%, மொத்த தேசிய உற்பத்தியில் கால் பங்கை அரசே செலவே விழுங்கிவிடும். அரசின் முதலீட்டு செலவுகள் குறைய வருமானம் ஈட்ட முடியாத தொழில்த்துறைக்கு முக்கியமான வீதிப்புனரமைப்பு போன்ற அடிப்படை கட்டுமானப்பணிகள் தடைப்பட்டு ஒரு சங்கிலித்தொடர் பாதிப்பை நாட்டிற்கு ஏற்படுத்தலாம்
  9 points
 6. கறிச்சட்டி/கரிச்சட்டி ஆய்வு! உலக ரீதியில் பஞ்சம், பட்டினி, போசணைக் குறைபாடுகள் உயிர்கொல்லிகளாக ஒரு இருபது ஆண்டுகள் முன்பு வரை இருந்திருக்கின்றன. இன்றும் சில பிரதேசங்களில் இவை பிரச்சினைகளாக இருக்கின்றன. ஆனால், கடந்த 40 ஆண்டுகளில் உருவாகியிருக்கும் இன்னொரு ஆரோக்கியப் பிரச்சினை மிகைப் போசணையால் விளையும் அதிகரித்த உடற்பருமனாதல். உலகின் 180 இற்கு மேற்பட்ட நாடுகளுள் அனேகமானவற்றில் இன்று மரணத்தின் முதன்மைக் காரணங்களாக இருப்பவை: இதய நோய், உயர் குருதி அமுக்கம், நீரிழிவு ஆகிய மூன்றும் தான்!. இந்த மூன்று நோய்களோடும் நேரடியான தொடர்பு அதிகரித்க உடற்பருமனுக்கு இருக்கிறது. எனவே உடல் மெலியவும் அதனோடு சேர்ந்த ஆரோக்கியத்தைப் பேணவும் காலத்திற்குக் காலம் புதிய உணவு முறைகள் பலரால் கண்டறியப் பட்டு பிரபலமாக்கப் படுகின்றன. இவ்வாறு பிரபலம் பெறும் எல்லா உணவு முறைகளும் பயன் தருவதில்லை -ஏனெனில் பல உடல் மெலிய வைக்கும் உணவு முறைகளுக்கு உறுதியான உயிரியல்/மருத்துவ ரீதியான ஆதாரங்கள் இல்லை! பேலியோ உணவு முறையென்பது அடிப்படையில் குகை வாழ் ஆதி மனிதனின் உணவு முறை. எங்களுடைய வரலாற்றில் ஏறத்தாழ 12,000 ஆண்டுகள் முன்பு வரை எம் மூதாதையர் ஒரு இடத்தில் தங்கியிருந்து, தோட்டம் செய்யவோ, கால்நடைகள் வளர்க்கவோ ஆரம்பிக்கவில்லை. அவ்வாறு எம் மூதாதையர் தங்கிப் பயிர் செய்து வாழ ஆரம்பித்த காலம் கற்காலத்தின் இறுதிக் கட்டத்தின் நியொலிதிக் காலத்தோடு பொருந்தி வருகிறது. பேலியோ உணவின் அடிப்படை, இந்த கடந்த 12,000 சொச்ச ஆண்டுகளில் எங்கள் உடலை இயக்கும் ஜீன்கள் இந்த நியோலிதிக் கால உணவு முறைக்கேற்ப தகவமைத்துக் கொள்ளவில்லை, இதனால் தான் நாம் கொழுப்பை விலக்கினாலும் எமக்கு உடற்பருமன் சார்ந்த நோய்கள் குறையாமல் இருக்கின்றன என்பதாகும். எனவே பேலியோ உணவு முறை, எங்கள் மூதாதையர் 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் சாப்பிட்டதாகக் கருதிய , சிவப்பு இறைச்சியையும், கடலை வகைகளையும் உள்ளடக்கப் பரிந்துரைக்கிறது. அதே வேளை, அந்த 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்திருக்காது என்று கருதிய பாலுணவுகள், தீட்டிய மாப்பொருட்கள், மாச்சத்துள்ள தாவரங்களையும் கிழங்குகளையும் ,தானியங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வலியுறுத்துகிறது. இந்தப் பரிந்துரைகளுள், தாவர நார்கள், கடலை என்பன நல்ல விடயங்கள். தீட்டிய மாப்பொருட்களைத் தவிர்ப்பதும் ஆரோக்கியமானது. ஆனால், சிவப்பிறைச்சியில் பிரச்சினையுண்டு. பாலுணவு தவிர்த்தல் ஏ, டி ஆகிய முக்கியமான விற்றமின்களின் குறைபாட்டை ஏற்படுத்தும். இவையெல்லாம் உயிரியல் ரீதியில் ஆதாரமுள்ள தகவல்கள் - ஆனால் நாம் இந்தப் பதிவில் பார்க்கப் போவது, முன்னோர் சாப்பிட்ட பேலியோ உணவு என்பதே இப்போது கேள்விக்குள்ளாகியிருக்கிறது என்பதை மட்டும் தான்! தொல்லியல் ஆய்வாளர்களுள் ஒரு சிறு தொகையினர் எங்கள் முன்னோர் தங்கிப் பயிர் செய்ய ஆரம்பிக்கும் முன்னரே காட்டுத் தானியங்களையும் , தீட்டிய தானியங்களையும் உணவில் சேர்த்துக் கொண்டிருப்பதாக நம்புகின்றனர். இந்தச் சிறுபான்மை எடுகோளை நிறுவ அவர்கள் தேர்ந்து கொண்ட முறை தான் கறிச்சட்டி ஆய்வு! சாதாரணமாக ஒரு தொல்லியல் ஆய்வில் முன்னோர்கள் வேட்டையாடிய, உணவாகக் கொண்ட விலங்குகளின் எலும்புகள் மிக இலகுவாகக் கண்டு பிடிக்கப் படக் கூடியவையாக இருக்கும் - இதன் காரணம் எலும்புகள் உக்கி முற்றிலும் அழிவது அசாத்தியம். ஆனால், தானியங்கள், தாவரங்களின் பகுதிகள் மிக இலகுவாக சூழலில் அழிந்து கலந்து மறைந்து விடும். இதனால் தான் இது வரை ஆராயப் பட்ட எல்லா முன்னோர் வாழ்விடங்களிலும் மிருக எலும்புகள் தாராளமாகக் கிடைத்தன (எனவே முன்னோர் பிரதானமாக இறைச்சியுண்டதாக முடிவும் செய்யப் பட்டது!). இது வரை புறக்கணிக்கப் பட்ட தானிய எச்சங்கள் தற்போது புதிய தொழில் நுட்பங்கள் மூலம் கல்லாயுதங்கள், மட்பாண்டங்கள், மனிதப் பற்கள் என்பவற்றிலிருந்து அடையாளம் காணப்படும் போது தான் பேலியோ உணவென்பது இறைச்சி மட்டுமல்ல என்பதற்கு சான்று கிடைக்கிறது. தொல்லியல் அகழ்வுகளில் கறிச்சட்டிகளையும், அடிப்பிடித்த கரிச்சட்டிகளையும் தேடுவதற்கு முன்னர், இந்த ஆய்வு ஆரம்பித்தது கோபெக்லி ரெபா (Gobekli Tepe) எனப்படும் 11,600 ஆண்டுகள் பழமையான ஒரு அகழ்வாய்வு மையத்தில். துருக்கி- சிரிய எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த தொல்லியல் எச்சங்கள், ஒரு புராதன வழிபாட்டிடமென நம்பப் படுகிறது. கட்டிட எச்சங்களுக்கப்பால் காணப்பட்ட பாரிய கல்லுருளைகள் தானியங்களை அரைக்கவும் சுத்திகரிக்கவும் பயன்படுத்தப் பட்ட உரல்கள் என்ற தகவல், அந்தக் கற்களில் ஒட்டியிருந்த தானிய எச்சங்களை ஆராய்ந்த பின்னரே தெரிய வந்தது. ஓரிடத்தில் தரித்து வாழ ஆரம்பித்த முதல் நூற்றாண்டுகளிலேயே தானியங்களை அரைக்கவும் ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது புதிய கண்டு பிடிப்பு. ஆனால், இவ்வாறு மாச்சத்து நிறைந்த பொருட்களை, கிழங்குகளை சாதாரண உணவாக எடுக்கும் பழக்கம் 120,000 ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் முன்னோரிடமிருந்திருப்பதாக தென்னாபிரிக்காவில் காணப்படும் அகழ்வாய்வு மையங்களில் கிடைக்கும் தகவல்கள் உறுதி செய்திருக்கின்றன. இது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? பேலியோ உணவு முறையை முன்னிறுத்துவோரின் முக்கியமான வாதங்களில் ஒன்று: நவீன மனிதனின் உடல், மாச்சத்து நிறைந்த உணவுகளை சமிபாடடையச் செய்யவும், கிரகிக்கவும் கடந்த 12,000 ஆண்டுகளில் இசைவாக்கம் அடையவில்லை என்பதாகும்! 120,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மாச்சத்து நிறைந்த உணவுகளை முன்னோர் எடுத்து வந்திருக்கின்றனர் என்பது இந்த வாதத்தை அர்த்தமற்றதாக்கி விடுகிறது. இந்த பேலியொ உணவு முறையின் வாதத்தை மறுக்கும் நேரடியான இன்னுமொரு தகவல், எங்கள் ஜீன்களை ஆராய்கிற போது கிடைக்கிறது. எங்கள் உடலில் இருக்கும் ஜீன்கள் பெரும்பாலானவை ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகளாகக் காணப்படுகின்றன. மாச்சத்தை சமிக்கச் செய்யும் நொதியங்களைப் பொறுத்த வரையில், நவீன மனிதனில் சுமார் இருபது வரையான ஜீன் பிரதிகள் அந்த நொதியங்களை உற்பத்தி செய்கின்றன. ஆனால், மனித இனத்தின் மூதாதையரான குரங்குகளிலோ இரண்டே இரண்டு ஜீன் பிரதிகள் தான் மாச்சத்தைச் செமிக்கச் செய்யும் நொதியங்களை உற்பத்தி செய்கின்றன. எனவே, மாப்பொருட்களைக் கையாளும் இசைவாக்கத்தை மனித இனம் கூர்ப்பின் வழியே விருத்தி செய்து வந்திருக்கிறது என்பதற்கு வலுவான ஆதாரம் இருக்கிறது. எனவே, மொத்தமாகப் பார்த்தால், கறிச்சட்டி ஆய்வுகளின் படி, பேலியோ உணவு முறை என இன்று பரிந்துரைக்கப் படும் உணவுமுறை, முன்னோரால் பின்பற்றப் பட்டதாக ஆதாரங்கள் இல்லை. முன்னோர், தாவரங்கள், மாப்பொருட்கள் நிறைந்த உணவுகள், இறைச்சி ஆகியவை கொண்ட உணவுகளையே உண்டு வந்திருக்கிறார்கள் - இந்த உணவுகளை உண்டு வந்த காலத்தில், தினசரி மைல்கணக்காக நடந்தும், ஓடியும் கலோரியை எரித்தும் இருப்பார்கள் என நான் நம்புகிறேன். இத்தகைய உணவு முறை முன்னோரில் இதய குருதிக் கலன் நோய்களை அதிகரித்திருக்குமா அல்லது குறைத்திருக்குமா என்பதும் தெரியாது. கீழ் இணைப்பிலுள்ள கட்டுரையின் தழுவல்: https://www.nature.com/articles/d41586-021-01681-w - ஜஸ்ரின் சொற்பட்டியல் நொதியம் - enzyme அகழ்வாய்வு - excavation தொல்லியல் - archaeology
  8 points
 7. “ தடை தாண்டிய பயணங்கள் “ ஆடி அமாவாசை விரதம் எண்டா அப்பா எப்படியும் வீட்ட வந்திடுவார் . எங்களுக்கு தெரிஞ்சு அப்போதிக்கரி அப்பா வெளி மாவட்டங்களில மட்டும் தான் வேலை செஞ்சவர் . கலியாணம் கட்டினாப்பிறகு தான் எனக்கும் ஏன் அப்பாக்கள் வெளி மாவட்டங்களில வேலை செய்ய விருப்பப்பட்டவை எண்டு விளங்கினது . ஆனால் அப்பா நான் நெச்ச மாதிரி இல்லை , கஸ்டபிரதேசத்தில வேலை செய்தா allowance வரும் எண்டதால தான் அப்பிடி வேலை செயதிருக்கிறார். லீவில வாற அப்பா யாழ்ப்பாணம் வந்து சேரேக்க அநேமா இருட்டத் தொடங்கீடும். கடிதத்தில முதலே date தெரியும் எண்ட படியா கிட்டத்ததட்ட நேரம் பார்த்து சிவலிங்கப்புளியடி bus stand ல நிண்டு ஒவ்வொரு பஸ்ஸா பாத்து பாத்து ( காத்திருக்கும் சுகம் காதலிகளுக்காக மட்டும் அல்ல) , அப்பா இறங்கின உடன ஓடிப்போய் ,அப்பாவின்டை bagகை வாங்கிறதுக்கும் கையை பிடிக்கிறதுக்கும் அடிபட்டு நாங்கள் அப்பாவோட வர ,அம்மா ஒழுங்கை முடக்கில சோட்டிக்கு மேல சீலையை கட்டிக்கொண்டு நிக்க எல்லாரும் அப்பாவோட மாப்பிளை ஊர்வலமே வைக்கிறனாங்கள். அப்ப நிறைய Government Servants எல்லாம் இப்பிடித்தான் வெளி மாவட்ங்களில தான் வேலை செய்தவை . ஊரில எப்பிடியாவது ஒரு அரசாங்க உத்தியோகத்தரை மகளுக்கு கட்டிக் குடுத்திடுவினம் . இவையில வெளி இடங்களில வேலை செய்யிறவையின்டை வாழ்க்ககையில் தாம்பத்தியம் என்பது கடிதத்தில் தான் நடக்கும். வெளி இடங்களில வேலை செய்யிறவை வருசத்தில மூண்டு நாலு தரம் தான் வந்து போவினம் . இந்த போக்கு வரத்தோட நாலு பிள்ளையும் பிறந்திடும் . பிள்ளைய படிப்பிக்க வளக்க எண்டு அவையின்டை priorityயும் மாறீடும் . பெத்தது எல்லாம் அக்கரை சேர , retire பண்ணினா பிறகு தான் இரண்டு பேரும் வாழ்க்கைச் சந்தோசத்தை வாழத்தொடங்குவினம் . அவங்கடை வாழ்க்கை மட்டும் அல்ல ஒவ்வொரு முறை வீட்டை போற பயணங்களும் பிரச்சினையானது தான். அப்பா புல்லுமலையில இருந்து வரேக்கேயும் இப்பிடித்தான். ஒரு நாளைக்கு ஒருக்கா மட்டும் மட்டக்களப்பில இருந்து வாற பஸ்ஸில மட்டக்களப்பு town க்கு வந்து . ஆற்றேம் வீட்டை இரவு தங்கி காலமை யாழப்பாணம் வெளிக்கிட்டிட்டு போய் பேப்பரை பார்த்தால் ஹபறணையில தமிழ் ஆக்களை இறக்கி வெட்டினது எண்டு தலையங்கம் இருக்கும். மூத்தவன்டை school concertக்கு வாறன் எண்டனான் போகாட்டி அவன் பாவம் பிள்ளை, போன முறையும் போகேல்லை எண்டு தனக்கு ஒண்டும் நடக்காது எண்டு நம்பிக்கையோட ஒவ்வொரு முறையும் அப்பாக்களின் பயணங்கள் இருக்கும். கிடைச்ச ஒரு கிழமை லீவில மட்டக்கிளப்புக்கு வந்து யாழ்ப்பாண பஸ் ஏற ஒரு நாள் போயிடும். பஸ் வேற ஓடுறதிலும் பார்க்க check point இல நிக்கிற நேரம் கூட. கடைசி நேரம் ticket book பண்ணினா seatம் கிடைக்காது , எண்டாலும் ஆராவது இடைக்கிடை மாறி விடுவினம் . நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் தான் வீட்ட வாறது . ஆனையிறவு தாண்ட ஊர் பேர் சொல்லி சந்திகளில பஸ்ஸை நிப்பாட்டுவினம் . Drivers ம் பாவம் எண்டு அவரவர் சொல்லிற இடத்தில இறக்குவாங்கள். இவ்வளவு தூரம் வந்த பஸ் ஆனையிறவு தாண்டினாப்பிறகு சரியான slow ஆ போற மாதிரி இருக்கும் . அம்மான்டை சாப்பாடு , பிள்ளைகளின்ட school prize giving , பிள்ளையார் கோவில் திருவிழா, கைதடி கலியாணம் எண்டு மனதில ஒவ்வொண்டையும் நெச்சுக் கொண்டு வர ஒருமாதிரி பஸ் town க்கு வந்திடும் . பெட்டி எல்லாம் இறக்கி , பஸ் மாறி பயணம் மீண்டும் வீட்டை நோக்கி தொடர்ந்து ஒரு மாதிரி வீட்டுக்க வர அம்மம்மா பொரிக்கிற நல்லெண்ணை முட்டைப்பொரியலும் புட்டும் மணக்க அப்பாவுக்கு இப்ப தான் பசிக்கத் தொடங்கும். வீட்டை வந்து சாமாங்களை பிரிச்சுக் குடுத்திட்டு அப்பா தோஞ்சு சாப்பிட்டுட்டு வர பாய் விரிச்சு அப்பாவின்டை இரண்டு பக்கமும் வயித்தலை காலை போட்டுக்கொண்டு நாங்கள் படுக்க அம்மா அங்காலை தள்ளிப் படுப்பா. வெளி ஊரில வேலை செய்த யாப்பணீஷ் எல்லாரும் அந்தந்த ஊரில ஒரு network வைச்சிருந்தவை ( சத்தியமா அந்த ஊருக்குள்ள இல்லை) . அந்தக்காலத்து சத்திரம் மாதிரி இவைக்கும் சில தங்குமடங்கள் இருந்தது . இரண்டு இல்லாட்டி மூண்டு பேர் Share பண்ணிற room ,common toilet , பின்னேரம் cards ,carrom விளையாடிட்டு அரட்டைஅடிக்க ஒரு hall, இது தான் அவர்களது அரண்மனை. அநேமா இருக்கிற இடத்தில கோயில்ல ஒரு திருவிழாவும் செய்வினம் . எப்படியும் கைக்காசை போட்டு ஊரில இருந்து நாலு கூட்டம் மேளத்தையும் கூப்பிடுவினம் . எல்லாருமே அப்ப தங்கடை தமிழின அடையாளங்களை காப்பத்தவும் நிலை நிறுத்தவும் நிறைய பாடுபட்டவை . Transfer ல மாறிப்போனாலும் வாழையடிவாழையாக அந்த அறைகளும் புதுசா வாற ஊரக்காரனுக்கு கை மாறிப்போகும் . ஆரும் ஊரில இருந்து வந்தால் தேடி வந்தவரின் rooms mate adjust பண்ணி இடம், பாய் தலணி எல்லாம் குடுத்து வந்தவருக்கு இடமும் சுத்திக்காட்டி அனுப்பிவினம். எல்லாரும் ஊரில மாமன் மச்சான் , ஊர் , சாதி எண்டு சண்டை இருந்தாலும் , ஊரை விட்டு வந்தால் அநேமா சண்டை கிண்டை வாறேல்லை. சிங்களவன்டை அடி வாங்கினதால வந்த ஒற்றுமையோ தெரியாது. அநுராதபுரம் , காலி, நீர்கொழும்பு பக்கம் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியர்களும் இருந்தவை. இவை எல்லாரும் இங்கிலீசும் , சிங்களமும் வெளுத்து வாங்குவினம் . அது மட்டுமில்லை வேலை எண்டு வந்தா எல்லாரும் வெள்ளைக்காரர் தான். கிழமைக்கு ஊருக்கு ஒரு கடிதம் கட்டாயம் வரும் . அதோட அநேமா Rotation ல அங்க இருக்கிறாக்கள் மாறி மாறி வருவினம் . அப்பிடி வரேக்க ஒட்டின envelope ல காசு, கடிதம் , அடுத்த மாசம் birthday வாற பிள்ளைக்கு ஒரு உடுப்பு அதோட அந்த ஊர் சாமானில ஏதாவதும் வரும். அப்பா அனுப்பிற காசுக்கு budget போட்டு செலவளிக்கிறது அம்மா தான் . காராளி கடைக்கு மாதம் மாதம் சாமான் வாங்கிற கொப்பிக்காசு் தான் முதல் குடுக்கிறது . கொப்பி , இந்த credit card க்கு நாங்கள் தான் முன்னோடி , ஊரில அநேமா எல்லாரும் local கடையில கொப்பிக்கு தான் சாமான் வாங்குவினம் , bank மாதிரி ஆனால் வட்டியும் இல்லை ,guarantor கைஎழுத்தும் இல்லை. திகதி குறிச்சு , Doctor’s prescription மாதிரி விளங்கியும் விளங்காமலும் விவரங்கள் எழுதி இருக்கும். ஆனாலும் சதம் கூட பிழைக்காது . கடைக்காரர் வாய்விட்டு கேக்க முதல் மாசக்கடைசீல காசு போயிடும் . Moratorium எண்டால் என்னெண்டு இப்ப கொரோனா வந்தாப்பிறகு தான் bank காரருக்கே தெரியும் ஆனா எங்கடை கடைக்காரர்களுக்கு அப்பவே தெரியும் அப்பாட்டை இருந்து காசு வரேல்லை கடைக்கு காசு குடுக்க நேரத்துக்கு குடுக்க ஏலாமல் போனால் , வீட்டை tiffin ல இருந்து சாப்படு வரை, soap ல இருந்து paste வரை limited supply தான். நாலைஞ்சு நாள் கடை பக்கம் போகாமல் விட , அந்தாள் கூப்பிட்டு, தம்பி அம்மாட்டை சொல்லுங்கோ சாமான் கொஞ்சம் தட்டுப்பாடு வரும் , தாண்டிக்குளம் பூட்டின படியால் வந்து மாசச் சாமானை வாங்கி வைக்கச்சொல்லி. அதொட தெரியும் ,அப்பான்டை காசும் வந்திருக்காது, காசை பற்றி யோசிக்க வேணாம் ,அதை அடுத்த மாசம் சேர்த்து எடுக்கலாம் எண்டும் சொல்லுங்கோ எண்டார் அந்தக்கடைக்காரர் . பால்காசு, சீட்டுக்ககாசு , tuition காசு எண்டு குடுக்க வேண்டியதை எல்லாம் குடுத்திட்டு வரப்போற கோயில் திருவிழாவிற்கும் இடம் பெயர்ந்தா தேவைக்கும் எண்டு எடுத்து வைக்கிற அம்மாவின் சமப்படுத்தல் ஒருநாளும் பிழைக்கிறதில்லை. எங்க தான் commerce படிச்சாவோ தெரியேல்லை. நான் வாற சனிக்கிழமை திரும்பிப் போவன் ஏதும் குடுத்து விடுற எண்டால் தாங்கோ எண்டு அப்பான்டை கடிதம் கொண்டு வந்த அங்கிள் (அநேமா இந்த uncle மாருக்கு எல்லாம் காரண பெயர்கள் தான் இருக்கும், வேலைக்கு ஏத்த மாரி bank மாமா, Dispenser மாமா , இடத்தின்டை பேரோட அக்கோபுர மாமா) சொல்ல milk toffee இல்லாட்டி ஏதாவது ஒரு பலகாரம் ரெடியாகும்( ஒரு பெரிய பைக்கற்றும் , சின்னது ஒண்டும்) . பெரிய பாரம் இல்லை எண்டு ஒரு இரண்டு மூண்டு கிலோவை வடிவா pack பண்ணி குடுக்க , இல்லை பரவாயில்லை எண்டு அவரும் கொண்டு போவார் . இப்படித்தான் அப்ப courier service நடந்தது . நிக்கிற இந்த ஐஞ்சு நாளில் கோயில் விசேசம் , சொந்தத்தில ஒரு நல்லது கெட்டது , யாரோ ஒரு வீட்டு பஞ்சாயத்து எல்லாம் முடிச்சு எங்களுக்கும் time ஒதுக்கி ஒரு படம் , super market shopping , கலியாணி special ice cream எண்டு ஒரு Day out ம் இருக்கும் . திரும்பிப்போற நாள் காலமை பஸ் ஸ்ராண்ட் கொண்டு போய் விடேக்க அப்பா இருபது ரூபா தந்து சொல்லுவார் அவசர தேவைக்கு பாவியுங்கோ எண்டு. அப்ப போக்குவரத்து கொஞ்சம் கஸ்டம். பஸ்களும் கனக்க இல்லை . அநேமா இ. போ.ச பஸ் மட்டும் தான் . அரசாங்க வேலைகாரர் warrant வைச்சிருந்ததால கூடுமானவரை இரயில் பயணங்கள் தான் . எங்கடை ஆக்கள் கனபேர் railway departmentல அப்ப வேலை செய்தவ , அவசரம் ஆபத்தெண்டால் ticket எடுக்க உதவியும் செய்வினம் . கொழும்பில இருந்து வாற எல்லாருக்கும் ஊருக்கு வாறதெண்டால் train தான் . யாழ் தேவி , mail train எல்லாம் famous ஆ வந்ததுக்கு காரணம் இந்த out station Government Servants தான் . ஊரில செத்த வீடு எல்லாம் அநேமா மத்தியானத்தில தான் எடுப்பினம் . அதுக்கு பேய் பிசாசு பஞ்சமி எண்டு கன காரணம் இருந்தாலும் யாழ் தேவி பார்த்து எடுக்கிறது தான் வழமை . தந்தி போனோன்ன வெளிமாவட்டங்களில வேலைசெய்தவை வெளிக்கிட்டு கட்டாயம் வருவினம். Train க்கு வைச்சுப் பாக்காத வேளைக்கு எடுத்தால் , செத்த வீட்ட ஒரு பிரளயமே வரும் . எம்டன் மகன் வடிவேலு மாதிரி பிரச்சனை பண்ணித்தான் விடுவினம். ஆடி அமாவாசைக்கு ஊருக்கு வாறவை நல்லூர் கொடியேத்தம் பாக்காம ஒரு நாளும் போக மாட்டினம் . அப்பா அங்கால பக்கம் போக நாங்களும் நல்லூரான் தரிசனத்துக்கு போக ரெடியாகீடுவம் … ( 1983 க்கும் 1990 க்கும இடைப்பட் காலத்தில் நடந்த அப்பாக்களின் தடை தாண்டிய பயணங்கள்) Dr.T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்
  8 points
 8. அதுதான் தெளிவாக சொல்லிவிட்டேனே 58 லிருந்து ஆயுத போராட்டத்தில் தமிழ் இளைஞர்கள் குதிக்கும் காலம்வரை, வெறும் கையுடன் நின்ற ஒரு இனத்தின்மீது ஆயுதங்கள், காடையர்களை ஏவிவிட்டு சிங்களம் என்று வீரவித்தை காண்பித்ததோ அன்றே இலங்கையில் பயங்கரவாதம் ஆரம்பித்துவிட்டது. பின்னாளில் அது இனங்களுக்கிடையிலான போராக விரிந்தது, ஆயுதங்களை கொண்டு ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும்போது கண்டிப்பாக அங்கே போர் குற்றங்கள் இருந்தே ஆகும், ஆனால் அந்த நிலையை ஒரு இனத்தின்மீது திணித்தது யார்? ஆரம்பித்தது யார்? வெளிநாட்டில் இருவர் மோதலில் இறங்கி காவல்துறையை அழைத்தால் முதலில் இந்த தகராறை ஆரம்பித்தவர் யார் என்பதே அவர்களின் கேள்வியாக இருக்கும், புலிகள் சும்மா இருந்தவனை அடிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு இயக்கமல்ல, அடித்தவனை திருப்பி அடிக்கவே இயங்கிய இயக்கம், கண்டிப்பாக அவர்கள் பக்கமும் போர் குற்றங்கள் ஒரு சில இருந்தே ஆகும். ஏனெனில் அவர்கள் மோதியது தலையணையால் எம்மை தாக்கியவர்கள்கூட அல்ல. ஒருநாட்டுக்குள் பேசாமல் ஒன்றாய் வாழ்ந்த ஒரு இனத்தை என்னமோ அந்நியநாட்டுக்காரனை அடித்து விரட்டுவதுபோல் தெற்கிலிருந்து வடகிழக்கிற்கு கொன்றும் ரத்தம் சொட்ட சொட்டவும் காலம் காலமாக அனுப்பி வன்முறையை தமிழர்கள் கையில் எடுக்க வைத்துவிட்டு இன்று தமிழர்கள் போர் குற்றம் புரிந்தார்கள் என்று சொன்னால், எம் புத்திக்கு சரி பிழை தெரிந்தாலும் கண்டிப்பாக வலிபட்ட மனசு அதை ஏற்காது. முன்னாளில் கையறு நிலையில் நின்ற ஒரு இனத்தை கலவரம் என்ற பெயரில் கொன்று குவித்துவிட்டு பின்னாளில் பள்ளிகள் தேவாலயங்கள் கோவில்கள் அங்காடிகள் குடிமனைகள் என்று எங்கு பார்த்தாலும் முப்படைகள் கொண்டு ஒரு இனத்தை கொத்து கொத்தாக கொன்றுவிட்டு அவர்கள் உறவுகள் தலையில் அடித்து கதறிக்கொண்டிருக்கும்போதே , 100, 200 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள் என்று வானொலி தொலைக்காட்சியில் அறிவித்து போர் வெறியை தூண்டிவிட்டு... இந்த பரந்த உலகிலிருந்து எமது சின்னஞ்சிறு பிரதேசத்தை தனிமைபடுத்தி அதன் கழுத்தை இறுக்கி பொருளாதாரதடை மருத்துவதடை அத்தியாவசிய பொருட்களுக்கு கட்டுப்பாடு என்று எம் மூச்சு திணற திணற சாகடித்த ஒரு அரச பயங்கரவாததுக்கு எதிராக வேறுவழியின்றி எதிர் போர் செய்ய புறப்பட்டுபோன எம்மினத்தின் பிரதிநிதிகளை போர் குற்றவாளிகள் என்று கூற நான் ஒருபோதும் தயாராக இல்லை, ஏனென்றால் அந்த போரை ஆரம்பித்தது அவர்கள் இல்லை. அவர்கள் இருக்கிறார்கள் இவர்கள் இல்லையென்பதன் அர்த்தம் சப்பைகட்டு அல்ல, அவர்கள் இல்லையென்று சொன்னது நான் அல்ல, தமிழர்பகுதியில் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்காய் இறந்தவர்களுக்கு அஞ்சலி செய்வதற்கு அழுவதற்கு தடை செய்துவிட்டு,அதே தினத்தில் தெற்கே பிரமாண்டமாய் ஒவ்வொரு வருடமும் சிரித்துக்கொண்டு யுத்தவெற்றி கொண்டாடும் சிங்கள பயங்கரவாதமே சொல்லிகொள்வது. மேடைகளில் முழங்கி கொள்வது. ஒரு சர்வதேச விசாரணையின்போது அரச தரப்பினால் போரில் முற்றுமுழுதாய் ஒரு அமைப்பை அதன் தலைமைபீடத்தை அதனை வழிநடத்தியவர்களை அழித்துவிட்டோம் என்று கூறப்படும் , அந்த அமைப்பின் பக்கத்து சாட்சியத்தை ஐநா எங்கிருந்து பெறும் என எதிர் பார்க்கிறார்கள்? ஒருவர் இல்லாதவிடத்து அவர்கள்மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு ஒருபக்க சார்பானதாகவே அமையும்.இதனால்தான் இறந்தவர்கள்பற்றி பேசகூடாது எங்கிறார்கள் ஏனில் அவர்கள் எழுந்துவந்து தம் பக்க நியாயத்தை கூற முடியாது என்பதால்தான், அதற்காக அவர்கள் பக்கம் தவறே இருக்க வாய்ப்பில்லை என்று அர்த்தமல்ல. இதனை புரிந்துகொள்ள சப்பை அறிவோ, அல்லது அதி புத்திசாலிதனமான கணித விஞ்ஞான புவிசாஸ்திர ஞானமோ பாண்டித்தியமோ தேவையில்லை, ஆயுதபோர்களின் முன்னர்சொத்துக்கள் சூறையாடப்பட்டும், கொதிக்கும் தார்பீப்பாய்க்குள் தூக்கி போடப்பட்டும் பெட்ரோல் ஊற்றப்பட்டும் கண்டதுண்டமாக வெட்டிகொல்லப்பட்டும் படமாய் தொங்கும் எம் கடந்த தலைமுறையின் வலிகள் போர் குற்றம் எங்கிருந்து ஆரம்பித்தது என்று சொல்ல போதும்.
  8 points
 9. மேற்குலகத்தில் குழந்தைகள் இல்லையெனில் நிம்மதியான வாழ்வு ஆகும் என்று கருதுகின்றனர். தெற்காசிய நாடுகளில் குழந்தைகள் இல்லாவிட்டால் நிம்மதியில்லாத வாழ்வு என்று ஆகிவிடும் என்று கருதுகின்றனர். எமது பிராந்தியங்களில் முதலில் சமூகத்தின் ஏளனம் வசைபாடல்களை குழந்தையற்ற தம்பதிகள் எதிர் கொள்ளவேண்டும். ஆண்களை ஆண்மையில்லாதவன், ஒம்பது என்று நெஞ்சில் ஈரமில்லாமல் ஏளனம் செய்வார்கள், பெண்களை மலடி, மங்கல நிகழ்வுகளுக்கு முன்னால் வர தகுதியில்லாதவள் என்று அழை வைப்பார்கள். குழந்தை இல்லாத தம்பதிகள் பல நல்ல காரியங்களுக்கு முன்னால் போக முடியாது அவர்கள் அபசகுனத்தின் அடையாளம் என்று கருதபடுகின்றனர். மேற்குலகத்தினர் உனக்கு குழந்தையில்லையென்றால் நீ லக்கி என்கிறார்கள். தெற்காசியநாடுகளில் குழந்தை பெறுவது என்பது வயசான காலத்தில் தம்மை கவனிக்க ஒரு வாரிசு வேண்டுமென்பது மிக முக்கியமான குறிக்கோள்களில் ஒன்றாக இருக்கிறது. மேற்குலகத்தில் அரசாங்கமே வயதானவர்களை ஆஹா ஓஹோ என்று பார்த்துக்கொள்ளும் என்பதால் வாரிசுகளின் தேவை அவ்வளவு முக்கியத்துவம் இல்லாத ஒன்றாகி போய் விடுகிறது. எப்படியோ மேற்குலகமும் ஏனைய உலகின் பகுதிகளும் பொருளாதார சிக்கல், குழந்தை வளர்ப்பின் சிரமம் கருதி குழந்தைகளை பெற்றுக்கொள்ளூம் அளவை கட்டுக்குள் வைத்திருக்கிறது. இதை பயன்படுத்தி இந்த இரண்டிற்கும் இடையில் சைக்கிள் கேப்பில் லொறி ஓட்டி இந்த ஒன்றே இஸ்லாமிய சமூகத்திற்கு வாய்ப்பாக போய்., ஆளுக்குபத்து பிள்ளை பெற்று உலகில் அதிவேகமாக அவர்கள் சமூகம் ஏனைய இன மக்களைவிட வளர வாய்ப்பாய் போய்விட்டது, அதுமட்டுமில்லாமல் அவர்கள் மதமே உலகமெங்கும் ஆளவேண்டும் என்ற வெறியில் உலகின் நிம்மதிய கெடுக்கவும் , உலகத்தை நாங்கள்தான் ஆள போகின்றோம் என்று அவர்கள் சொல்வதற்கு வசதியும் ஏற்படுத்திகொடுத்துவிட்ட ஒன்றாகி போய்விட்டது.
  8 points
 10. 1980 ன் முற்பகுதிகளில் தென் பகுதிகளில் வியாபாரம் செய்த, வசித்த, படித்த பலரும் சரளமாக சிங்களம் பேசுவார்கள்.(எழுத்து படிக்கத் தெரியாவிட்டாலும்)......அதேபோல் வடக்கில் வாழ்ந்த சிங்களவர்களும் கொச்சையாக வேணும் தமிழ் பேசுவார்கள்.....சலுசல, மண்டைதீவு வானொலி, போலீஸ் உத்தியோகத்தவர்கள், சில கராஜ்கள்,பாண் பேக்கரிகள், சிங்கள பாடசாலை என்று கணிசமானவர்கள் வாழ்ந்து வந்தார்கள்......! பின் அரச உத்தியோகத்தவர்கள் சிங்களம் படித்தால் கூடுதலான போனஸ் + சம்பள உயர்வு போன்றவை மென்மையான முறையில் சட்டபூர்வமாக அறிவிக்கப் பட்டதுடன் நிக்காமல் அதற்குரிய தகுதியான ஆசிரியர்களும் ஏற்பாடு செய்யப் பட்டதோடு வேலை நேரத்திலேயே ஒரு மணித்தியாலம் ஒதுக்கியும் குடுக்கப் பட்டது......(அதாவது அவர்கள் அறிவித்து விட்டு வாளாவிருக்கவில்லை.அதற்கான முயற்சிகளையும் உடனேயே மேற்கொண்டார்கள்). அப்புறம் இயக்கங்கள் உருவாக்கி அரச யந்திரங்கள் ஆங்காங்கே ஸ்தம்பிக்கிற நிலைகள் ஏற்பட்டதும் இவையாவும் உறங்கு நிலையில் இருந்தன..... பின் 2009 இன அழிப்பின் உச்சம் தொட்ட வருடம்......உலகின் பெரும்பான்மையான நாடுகளின் பங்களிப்புடன் இவ்வளவு நேரத்துக்குள் இதனை முடித்திட வேண்டும் என்னும் காலக்கெடுவோடு வெற்றிகரமாக அழித்து முடித்து விட்டன..... அமெரிக்க ஜனாதிபதி கூட வெள்ளை மாளிகையில் இருந்து இதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்...... அன்று பாதுகாப்பு அமைச்சராக இருந்து பெண்களை எடுத்து கொள்ளுங்கள் ஆண்களை கடலில் வீசுங்கள் என்றவர்தான் இன்றைய ஜனாதிபதி........இந்த ஜனாதிபதி ஜனாதிபதியாக வந்த வழியில் ஒரு தமிழனோ அன்றி முஸ்லீமோ ஜனாதிபதியாக வர முடியுமா........இப்பொழுது உறங்கிக் கிடந்த திட்டங்கள் எல்லாம் "சோம்பி"யாக எழுந்து ஒவ்வொன்றாய் வருகின்றன.....! இப்ப சொல்லுங்கள் வாழ்வுரிமைக்கே கையேந்தி நிற்கும் நிலையில் மொழியுரிமையை எப்படி எதிர்பார்க்க முடியும்......அதைவிட அவலமான விடயம் அன்று எம்மை அழிக்க அனுசரணை புரிந்த நாடுகளிடம்தான் இன்று அகதியாக அந்தஸ்து பெற்று பதவியுயர்வு போல் வதிவிட உரிமை பெற்று அவர்களிடம் நீதி இருக்கு, நியாயம் இருக்கு, ஜனநாயகம் இருக்கு என்றெல்லாம் புகழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்......இது உலக அரசியல்....தூரதிஷ்டவசமாக நாமும் அதில் சிக்குண்டு நகர்ந்து கொண்டிருக்கிறோம்.......அவர்களுக்கு அவசியம் என்றால் நள்ளிரவில்கூட எம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கலாம்...... ஹிட்லரில் இருந்து கடாபிவரை தொடர்ந்து கொண்டிருக்கும் எவ்வளவு பேரின் அழிவுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.......! உங்களில் சிலராவது ஜெயமோகனின் "வெள்ளையானை" கதை (அது கதையல்ல அன்றைய நிஜம்) படித்திருக்கலாம்.....அல்லது அதை படிக்காதவர்கள், படிக்க நேரமில்லாதவர்களுக்காக இதை இணைக்கிறேன்.......சிறிது சிறிதாகவாவது பார்த்து அல்லது படுக்கும் போதாவது கேட்டுக் கொள்ளுங்கள்.......!
  8 points
 11. பல உடல் சார்ந்த பிரச்சனைகள் பிரகாஸ் எதிர்கொண்டதைப் போலவே நாங்களும் எதிர்கொண்டுள்ளோம். ஆனால் அவன் குழந்தையாக இருக்கும்போதே பாதிக்கப்பட்டுவிட்டான். பிரகாஸ் துணிச்சல்காறன், பயந்து பயந்து வாழ்வதை விட துணிந்து போராட்டங்களில் பங்கெடுத்திருக்கிறான். பலவிதமான வைத்தியங்களுக்கு நோய் மாறவேண்டும் எனும் ஆவலில் சென்றிருக்கிறோம். பிரகாஸ் எழுத ஆரம்பித்த வாழ்க்கை கதையை சிறிது சிறிதாக யாழில் நாங்கள் எழுதுவோம் ஒரு வரலாறாக.
  8 points
 12. சுமந்திரனுக்கு தன் வேலை பகுப்பு என்ன என்பதில் ஆரம்பம் முதலே தடுமாற்றம். நீங்கள் நீதிபதி அல்ல சுமந்திரன். நாம் தேர்வு செய்து அனுப்பிய எம்பி. அதாவது நம் தரப்பு வக்கீல். எமது வக்கீலாக நீங்கள் எங்கள் தரப்பு நியாத்தை மட்டும்தான் கதைக்க வேண்டும். முஸ்லீம்கள், சிங்களவர் தரப்பு நியாயத்தை அவர்கள் தரப்பு வக்கீல்கள் போதிய அளவு கதைப்பார்கள். இல்லை நான் எல்லா தரப்பு நியாயத்தையும் கதைப்பேன் என்றால் - நீங்கள் தமிழர் தரப்பின் வக்கீல்/பிரதிநிதி என்ற பதவிநிலைய (எம்பி) துறந்து விட்டு, ஒரு சட்ட வல்லுனராக கருத்து சொல்லுங்கள்.
  8 points
 13. போய் அண்ட் கேர்ள்ஸ், உந்த சீனியை பற்றி நீங்கள் சொல்லுவது எல்லாம் உண்மை. ஆனால் ஒரு ஆறுமாதம் சீனியை முற்றாக விட்டுட்டால் பிறகு வாயில் வைக்கவே ஒரு மாதிரி இருக்கும். நான் இப்ப சீனியை முற்றாக தவிர்த்து வெற்றிகரமான 17வது வருடம். எப்பவாச்சும் ஒரு கேக்கை வாயில் வைத்தால் அதி மதுரம் சாப்பிட்ட பீலிங். சீனி என்பது ஒரு சுவையூட்டிதான். அதை அந்தளவுக்கு நாம் பாவித்து, உடலை இயைவாக்கி வைத்துள்ளோம். முன்னம் சுவீட்னர் எடுப்பேன் இப்ப இப்ப அதுவும் வலு குறைவு. ஊரில் மட்டும் அல்ல, இங்கேயும் கூட சீனி வேண்டாம் எண்டு சொன்னால் ஏதோ தீராதா நோயால் பீடிக்கப்பட்டு நாளைக்கு சாக போறவனை பார்ப்பது போல் ஒரு பார்வை பார்ப்பார்கள். இதுக்கெல்லாம் கவலைபட்டால் ஏலுமே? ஊரில் சொல்லியும் கேளாமல் ஆரும் சீனி போட்டுத்தந்தால் அப்படியே வைத்து விட்டு வந்து விடுவேன். கோவிச்சால் கோவிக்கட்டுமென். இன்னொரு விசயம், சீனிக்கும் ஆண்மைக்கும் ஒரு லிங்கை வேறு கொடுத்து வைதுள்ளார்கள். அரைகுறை புரிதலால். இதனாலேயே சீனி வேண்டாம் எண்டு சொல்ல பயந்து போய் சேர்ந்த கோஸ்டிகள் கனக்க. சீனி கட்டுப்பாடு இல்லாமல் இருந்தால் இரத்த ஓட்ட பிரச்சினைகள், ஆண்மை குறைபாடுகள் வரலாம். அதை தடுக்கதான் சீனியை குறையுங்கோ எண்டுறது. ஆனால் சீனியை குறைத்தாலே ஆள் அவுட் எண்டு எங்கட சனம் நினைக்கிறது. ஆகவே சீனியை போட்டு அடித்து, உண்மையிலேயே அவுட் ஆகிவிடுவினம். யூகேயில் கிட்டதட்ட 2 மில்லியன் கண்டுபிடிக்க படாத டயபிடிஸ்காரர் உண்டாம். பெரும்பாலும் தென்னாசியர்தானாம். ஒரு தெரிஞ்ச பழசு. பழசென்ன, வெறும்64 வயசு. எப்ப “எத்தனை சுகர் டீக்கு” எண்டு கேட்டாலும், “நான் என்ன சலரோகியே, 3 முழு கரண்டி” என்பார் கெத்தா. கோவிட் அள்ளி கொண்டு போட்டுது. ஆஸ்பத்திரியில் இருக்கும் போதுதான் நாட்பட்ட டயபடிஸ் என்பதும் தெரிய வந்தது. ஆனால் இன்னொரு பிள்ளை, என்ர வயசுதான், பிறந்த நாள் தொட்டு இன்சுலின் எடுக்கிறது, ஆனால் நல்ல கொண்டிரோல், “எப்ப பூஸ்டர் வக்சீன் வரும்” எண்டு காத்து நிக்கிது. இப்படி கண், கால் எண்டு கனக்க பிரச்ச்னையள் வரும். டயபிடிஸ், pre டயபிடிஸ், சும்மா ஆக்கள் எல்லாரும் சீனியை விடுவதே சிறப்பு. இண்டைக்கு ஒன்றும் இல்லை, 5 வருடத்தில் ப்ரி டயபிடிஸ், 7 வருடத்தில் டயபிடிஸ் அவ்வளவுதான். ஆகவே இப்பவே சீனியை குறைக்க தொடங்கலாம். எங்கட மூளை, நியாபகம் இதர தொழில்களுக்கு சீனி அவசியமாம். இரத்தத்தில் எப்பவும் ஓரளவுக்கு கீழ சீனி குறையகூடாது. குறைஞ்சால் ஹைபோ ஆகி, கோமாவும் ஆகலாம். ஆகவே சீனி பதார்த்தங்களை, இனிப்புகளை தவிர்த்து, சாதாரண உணவில், பழங்களில் உள்ள சீனியை எடுத்தாலே போதும். சுகர் அற்ற வாழ்வே சுகம். பிகு. உந்த 1st word problem எண்டு கேள்வி பட்டனியலே? அதுதான் இந்த திரில நாங்கள் கதைச்சது. எல்லாரும் ஊரிலயும், இங்கயும் நல்ல வசதியா தேவைப்பட்டளவு சீனி வாங்கி சாப்பிட்ட ஆக்கள். பல பாவப்பட்ட சனங்கள் எப்பவும் போல இப்பவும் ஒரு கேத்தல் டீக்கு இரெண்டு கரண்டி சீனிதான். அவர்கள் வீட்டுக்கு போனால் டீ இனிக்காது, ஆனால் உபசரிப்பு இனிக்கும்.
  8 points
 14. சர்வதேச அளவில் புலிகளை பயங்கரவாதிகளாக காண்பித்து அவர்களை தடை பட்டியலில் சேர்க்க அரும்பாடு பட்ட சிங்கள வெளிவிவகார அமைச்சர்கள் வரிசையில் கதிர்காமருக்கு அடுத்த இடத்தில் இருந்தவர். ஐரோப்பிய ஒன்றியத்தின் புலிகள்மீதான தடைக்கு மிகபெரும் பங்காற்றியவர். கதிர்காமர் புலிகள் பயங்கரவாதிகள் என்றார் இவர் ஒருபடி மேலே சென்று புலிகள் தமிழருக்கும் எதிரான பயங்கரவாதிகள் என்று ஓயாமல் முழங்கினார். இறந்துபோவதால் எல்லோருமே புனிதமானவர்களாகிவிட முடியாது உங்கள் இறப்பு எனக்கு எந்த வருத்தையும் தரவில்லை ஏனெனில் உங்கள் அரசபயங்கரவாத விசுவாசத்தால் நாங்கள் சந்தித்த இறப்புகள் பல்லாயிரம். அவர் பிரிவினால் துயருற்றிருக்கும் உங்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
  8 points
 15. கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதல் நடந்த காலத்தை முன்வைத்துத்தான் இந்த செய்தி நான் குறிப்பிட்ட இணையத்தில் வெளியாகியிருந்தது. இதற்கு முன்னர் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சிவிலியன்கள் மீதான தாக்குதல்கள் பற்றி இக்கட்டுரை அலசவில்லை. அதற்காக அவை நடைபெறவில்லையென்று நான் வாதிடுவதாக அர்த்தமில்லை. இத்தாக்குதலினை அரசு எவ்வாறு தனக்குச் சார்பாகப் பாவித்தது என்பதைப்பற்றியே இக்கட்டுரை அலசுகிறது. சிலவேளை முழுவதுமாக வாசித்தால் நீங்கள் ஆச்சரியப்படமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். உங்களுக்கு இன்றிருக்கும் புலிகள் மீதான வெறுப்பும் விமர்சனமும் 2009 இற்கு முன்னர் எப்படி இல்லாமல் இருந்தது என்பது ஆச்சரியம்தான். ஏனென்றால், புலிகளின் படுகொலைகளை விமர்சிப்பதே உங்கள் நோக்கம் என்றால், 2009 வரை நீங்கள் காத்திருக்க வேண்டிய தேவையில்லை. வன்னியில் உங்களின் நண்பரோ உறவினரோ சொல்லும்வரை புலிகள் சிவிலியன்கள் மீது தாக்குதல்களை அதற்கு முன்னர் நடத்தவில்லை என்று நம்பியிருக்கிறீர்கள் போலத் தெரிகிறது, அதனாலேயே கேட்டேன்.
  7 points
 16. வணக்கம் நிர்வாக உறுப்பினர்களுக்கு, நான் சில மாதங்கள் யாழுக்கு வரவில்லை. அதற்கு உடல், உள காரணங்கள் இருக்கின்றன. ஒரு மாதத்துக்கு முன்னர் ஒருமுறை வந்தபோது என்னால் யாருக்கும் கருத்து எழுத முடியவில்லை. எரிச்சல் தாங்க முடியாது நிப்பாட்டிப் போட்டுப் போய்விட்டேன். இரு கள உறவுகள் என்னிடம் கேட்டபோது நான் காரணத்தைக் கூறிவிட்டு வராமல் எங்கே போவது வருவேன் என்றேன். நேற்று வந்து ஒரு பதிவுக்குக் கருத்து எழுதும்போது கவனிக்கவில்லை. இன்று வந்து பதில் எழுதிவிட்டுப் பார்க்கும்போது எனது படத்துக்குக் கீழே பிங்க் நிறத்தில் பார்வையாளர் என்றும் மற்றவர்களுக்கு நீலத்தில் உறுப்பினர்கள் என்றும் இருந்தது. இது என்ன கோமாளித்தனம்????? நாம் சிலமாதம் வாராதுவிட்டால் எங்களை நீங்கள் கருத்துக்கள உறவிலிருந்து தூக்கிவிடுவீர்களா ?????? நாம் என்ன சின்னப் பிள்ளைகளா ??? நீ குழப்படி செய்தால் நான் சொக்ளற் தரமாட்டேன் என்று சிறுவர்களுக்குக் கூறுவது போலல்லாவா இது இருக்கு. இதை நான் யாழ் இணையத்திடம் எதிர்பார்க்கவில்லை. வரவர உங்கள் செயல்கள் பலரை இங்கு வரவிடாது செய்யுமேயன்றி வேறொன்றுமில்லை.
  7 points
 17. இப்படியான ஆபத்துகளை தடுப்பதற்குத் தான் வேலையில் எவ்வளவு busy என்றாலும் தேங்காய் திருவிக் கொடுத்து சரணடைவது...
  7 points
 18. எனது வீடு சுற்றி வெறும் வளவுகள் வீடுகள் என்றபடியால் இவை வரும் தீன் பொறுக்கி தின்ன உடையாயர்
  7 points
 19. தற்கொலை ஒரு முடிவல்லத்தான். மாணவர்களுக்கு தெம்பூட்ட வேண்டும்தான். ஆனால் இது சாதாரண பரீட்சைக்கு, பரீட்சை ரிசல்டுக்கு பயப்படும் மாணவர் மன பிரச்சனை அல்ல. அதை விட கொடிய சாதி, தீண்டாமை, வர்க பின்ணணி கொண்டது. நீட்டுக்கு முன் தமிழ்நாட்டின் மருத்துவ கல்வித்தரம் என்ன அதளபாதாலத்திலா இருந்தது ? அப்போதே லண்டனில் இருந்து தமிழ்நாடு போய் சிகிச்சை செய்தோரை எனக்கு தெரியும். நீட்டுக்கு பின் அது என்ன பல மடங்கு முன்னேறி விட்டதா? இந்திய அரசியல் சட்டமும், தமிழ்நாட்டில் அமல்படுத்தபட்டுள்ளதுமான இட ஒதுக்கீட்டை பின் வழியால் இல்லாமல் செய்யும் திட்டத்தின் ஓரங்கமே நீட். இவ்வாறு ஒரு இலகு சமன்பாட்டை போட எப்போதும் முடியாதாகினும், ஏழைகள் அநேகர் தாழ்த்தபட்ட சமூகத்தை சார்ந்தவர்கள். ஆனால் நீட் தேர்வானது - அதன் முறையானது - தொடர்சியான கோச்சிங், பயிற்சி பரீட்சைகள், அதி உச்ச தயார்படுத்தல் மூலமே வெற்றி கொள்ள தக்கதாக இருக்கிறது. ஒரு முறை தயார் படுத்த 5-10 லட்சம் தேவை படும் என்கிறார்கள். எத்தனை திறமையாக இருந்தாலும் எவ்வளவு புள்ளிகள் எடுதாலும் ஏழைகள் இந்த கோச்சிங் இல்லாமல் இதில் பாஸ் பண்ணுவது கடினம். கிட்டதட்ட முடியாது. இதை முன்னர் தமிழ் நாட்டில் இருந்த சிஸ்டர்துடன் ஒப்பிடும் போது - அதில் கோச்சிங், பிரத்யோக வகுப்புகளால் அதிக தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. சுருங்க சொல்லின், தமிழ் நாட்டின் முன்னைய சிஸ்டம் hard work ஐ அடிப்படையாக கொண்டது. நீட் smart work ஐ அடிப்படையாக கொண்டது. பழைய சிஸ்டத்தில் கடும் உழைப்பை போட்டு தேறலாம். ஆனால் நீட்டில் எப்படி சுளிப்பது என்பதை யாராவது சொல்லி தந்து, தொடர் பயிற்சியும் தரவேண்டும். அதற்குத்தான் 5 லட்சம். இதில்தான் ஏழைகளும், தாழ்தப்பட்டவர்களும் தள்ளி வைக்கப்படுகிறார்கள். இரெண்டுமே வித்தியாசமான பரீட்சை முறைகள். தவிர ஒன்று நல்லது மற்றையது சரியில்லை என்பதல்ல. அப்படி என்றால் நீட்டுக்கு முன் தமிழ்நாட்டு வைத்தியர்களும், வைத்திய துறையும் மோசமானதாக இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லை. இந்தியாவில் எப்போதும் வைத்தியத்தில் முதன்மை மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. இதுதான் நீட் ஏன் தமிழ்நாட்டுக்கு உகந்ததல்ல என்பதன் விளக்கம். அடுத்து - கல்வி ஆரம்பத்தில் மாநில பட்டியலில் இருந்தது. ஏனென்றால் இந்தியா ஒரு ஒன்றியம். ஆனால் 42ம் சட்ட திருத்தம் மூலம் இது பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இது மாநில சுயாட்சி தத்துவத்துக்கு எதிரானது. தமிழ் நாட்டில் இருப்பது ஒரு மாநில அரசு. மாகாண சபை அல்ல. அது தனது கல்வி கொள்கையை தீர்மானிக்கும் வல்லமை உடையதாக இருக்க வேண்டும். குறிப்பாக - மாநில அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையை மத்திய அரசின் நீட் மூலம் நீர்த்து போக செய்ய முயலும் போது. அடுத்து - அரசியல் (நினைவில் இருந்து எழுதுகிறேன், தவறு இருந்தால் சுட்டவும்). இது காங்கிரஸ்(திமுக கூட்டணி) காலத்தில் முயற்சித்து பின் கைவிடப்பட்டது. ஆனால் பின்னர் பாஜக ஆட்சியில் நிறைவேறியது. 2016இல் இந்த சட்டம் ராஜ்யசபாவில் நிறைவேறும் போது, திமுகவிற்கு அங்கே சீட் இல்லை. ஆனால் லோக்சபாவில் எதிர்த்து வாக்களித்தது. அப்போ பாஜக விற்கு ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லை. அதிமுக எதிர்த்து வாக்களித்திருந்தால் சட்டம் ராஜ்யசபாவில் தோத்திருக்கும். ஆனால் அதிமுக வெளிநடப்பு செய்ததால் - சட்டமூலம் சட்டமாகியது. முடிவாக, இது வெறும் சோதனை பெயிலான மாணவர் தற்கொலை செய்யும் விடயம் அல்ல. இதிலே அரசியல் இருக்கிறது. இட ஒதுக்கீட்டை மறைமுகமாக தோற்கடிக்கும் சதி இருக்கிறது. ஏழைகள் டாக்டருக்கு படிக்கமுடியாது தடுக்கும் வர்க நலன் இருக்கிறது. மாநிலங்களின் உரிமைகளை பறித்து, ஒற்றை இந்தியாவக்கும் சங்பரிவாரின் திட்டமும் இருக்கிறது. ஆகவே இது எதிர்கப்பட வேண்டியது.
  7 points
 20. முகப்புத்தகத்தில் ரம்மியா கிருஷ்ணன் மாதிரி உட்கார்ந்திருந்த நேரம் அவ்வப்போது இங்கால வந்து எட்டிப் பார்த்துட்டு போயிருந்தால் இந்த துன்பம் ஒன்றும் இல்லயே.. பின் குறிப்பு சத்தியமா எனக்கு ஜெலர்ஸ் இல்லை.
  7 points
 21. வறுமைகோட்டின்கீழ் உள்ள நாடுகளில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் மூன்று வேளையும் உண்பதில்லை, உண்ண அவர்கள் வருவாய் இடம் கொடுப்பதில்லை, இலங்கை ஒரு வறுமைகோட்டின்கீழ் உள்ள நாடு ஏற்கனவே பல்லாயிரம் குடும்பங்கள் இரண்டுவேளைதான் உண்டிருப்பார்கள் , இப்போ அவர்கள் நிலமை பட்டினி சாவின் விளிம்பில் இருக்கும். தமிழர்கள் ஓரளவு பரவாயில்லை சனதொகையும் குறைவு வெளிநாட்டில் பத்து குடும்பங்களில் ஒருத்தராவது இருப்பார்கள் நெருக்கடியை சமாளித்து கொள்வார்கள், அதற்காக தமிழர்களில் வறியோர் இல்லையென்று அர்த்தமல்ல, ஒப்பீட்டளவில் அவர்களைவிட குறைவு. சிங்களவர்களின் நிலை அப்படியல்ல, இதனால் அதிக பாதிப்படைவது சிங்கள குடும்பங்களே, எம்மைவிட சில மடங்கு சனதொகை அதிகமாக உள்ள அவர்களில் கிராமபுறங்களில் வாழும் பல லட்சம் சிங்களவர் ஒரு றாத்தல் பாணும் பருப்போடும் ஒரு நாளை ஓட்டியவர்கள், அந்த வறுமையின் காரணமாகவே ஆமிக்கும் போனார்கள். உலக யுத்தங்களின் போதும், பெரும் பஞ்சத்தின் போதும் அரசுகள் தமது குடிமக்களை அளவாக உண்ணும்படி வேண்டுகோள் விடுத்ததாக அறிந்திருக்கிறோம், உலகின் ஏழைநாடுகள் பலவே பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் இலங்கையவிட எங்கோ போய்விட்ட இக்காலத்தில் இலங்கையின் பொருளாதாரம் பங்களாதேசத்திடம் கடன் வாங்கும் நிலையில் போய் நிற்கிறது. ஒரு காலம் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் பங்களாதேச காரருக்கு நம்மவர்கள் ஐரோப்பியர் ரேஞ்சுக்கு விலாசம் காட்டியிருப்பார்கள் .இப்போ வங்காளிகள் எங்கு இலங்கையரை கண்டாலும் நாங்கள் உங்கள் நாட்டுக்கு கடன் கொடுத்திருக்கிறோம் என்று விரட்டி விரட்டி சொல்வார்கள், அவர்கள் பழக்க வழக்கம் அப்படித்தான். அருகாமையில் உள்ள உலகின் அதிக சனதொகையை கொண்ட இந்தியா சீனாகூட இப்படி ஒரு கோரிக்கையை தமது குடிமக்களுக்கு விடுத்ததாக நினைவில் இல்லை, மேற்குலகமும் இந்தியாவும் பெரிதாக உதவாமல் ஒதுங்கி கொண்டன இனிமேல் ஆட்சி மாற்றம் ஒன்று இலங்கையில் நிகழும்வரை கண்டுகொள்ளவே மாட்டார்கள். இன்னும் எத்தன காலம் பயங்கரவாதம், புலிகள், யுத்த வெற்றியை வைத்து சிங்களவர் மத்தியில் வண்டி ஓட்டுவீர்கள், இனி அதுபற்றி பேசினால் சிங்களவர்களே கடுப்பாவார்கள். ராஜநாகத்தின் வாலை பிடித்து இழுத்தால் அது திரும்பி நம்மைவிட உயரத்திற்கு எழுந்து படம் எடுத்து வந்து கொல்லவரும், அதுபோல்தான் சேர்த்த பழிபாவம் திரும்பி வந்து உங்களைவிட உயரமாய் எழுந்து நிற்கிறது அது இனி உங்களை ஆட்சி கட்டிலில் ஒருபோதும் அமரவிடாது.
  7 points
 22. நான் முன்பும் ஒருதரம் எழுதியுள்ளேன். சுமந்திரன் ஒரு நல்ல வக்கீலா என்பதில் எனக்கு டவுட் உண்டு, ஆனால் அவர் ஒரு கெட்டிகார அரசியல்வாதி இல்லை. எதையும் பேசுவதற்கு இடம், பொருள், ஏவல் உண்டு. அமெரிக்கா செய்த மனித உரிமை மீறல்கள் பற்றி எந்த அமெரிக்க ஜனாதிபதியாவது, மனம் திறந்து on the record ஆக உண்மையை பேசுவார்களா? இல்லை. இதுதான் அரசியல். ஒரு அரசியல்வாதிக்கு இந்த பண்பு அவசியம். சுமந்திரன் ஒரு loose cannon. அவர் பெட்டி வாங்கினார், சிங்கள ஏஜெண்ட் இவை எல்லாம் பொய்யாகவே இருக்கட்டும், ஆனால் ஒரு அரசியல்வாதியாக he is not fit for purpose.
  7 points
 23. இங்கையின் பொருளாதாரம் படு மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது. ஒரு நாடு -ஒரு சட்டம் – நாட்டைத் தட்டி நிமித்துகிறேன் எனப் பதவிக்கு வந்த ராஜபக்சக்களால் நாட்டைச் சீனாவிடம் அடைக்கலம் வைக்க முடிந்ததே தவிர நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப முடியவில்லை. ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் போன்றவற்றில் பெரும் வெற்றி ஈட்டிய ராஜபசக்களின் செல்வாக்கு தற்பொழுது தேய்ந்து போய்க்கொண்டிருக்கின்றது. இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, அந்நிய செலவாணியின் வீழ்ச்சி, என ஓட்டுமொத்த பொருளாதாரமே வீழ்ச்சி அடைந்துள்ளது. எரிபொருள், உரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. வெளிநாடுகளில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் திணறுகிறது இலங்கை. இந்து சமுத்திரத்தின் முத்து இப்போது கடனில் தாண்டுவிடும் முத்தாகி விட்டது. இலங்கை கடன் கொடுக்க முடியாது திவாலாகும் நிலை சாத்தியம் என கூறப்படுகிறது. முதலில் மஹிந்த ராஜபக்ச நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வார் என்றார்கள். அதன் பின்னர் கோத்தபாய கொண்டு செல்வார்கள் என்றார்கள். இப்பொழுது பசில் நாட்டின் பொருளாதாரத்தை நிமித்தப் போகிறார் என்கிறார்கள். இவர்கள் எவரிடமுமே மக்கள் சார்பான நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கான அரசியல் பொருளாதாரக் கொள்கை இல்லை. இனத்துவேசத்தை வளர்த்து விடுவதை அரசியல் கொள்கையாவும் -சீனாவிடம் கடனை வாங்குதலை பொருளாதாரக் கொள்கையாகவும் மட்டுமே கொண்டிருக்கின்றனர். பசில் அல்ல அதன் பின்னர் நாமல் வந்தாலும் இந்தப் பாதையில் பயணித்து நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப முடியாது. கொரோனாவைக் கட்டுப்படுத்த ,சரிந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசிடம் எந்த விதமான காத்திரமான வேலைத்திட்டமும் இல்லை என்பதே நிதர்சனம். பசில் நிதியமைச்சர் ஆனவுடன் பங்குச் சந்தை ஆகா ஓகோ என வளரப் போகிறது என்றெல்லாம் ஆருடம் கூறினார்கள். பசில் நிதியமைச்சர் ஆன தொடக்கம் பங்கு சந்தையில் எதுவித மாற்றமும் நிகழவில்லை. ஆக இவர்கள் இல்லாத ஒன்றை ஊதிப் பெருப்பித்து இருப்பது போல் காட்டுகின்றனரே தவிர உண்மையான பொருளாதார வளர்ச்சி ஏற்படவில்லை. அண்மையில் இலங்கை மத்திய வங்கி வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு அதிகளவான பணத்தை அச்சிட்டுள்ளது. அண்மையில் 20845 கோடி ரூபா பெறுமதியான , பணம் அச்சிடப்பட்டுள்ளது. இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியையே அரசின் இந் நடவடிக்கை எடுத்துக் காட்டுகின்றது. அரச வருமானம் அரசின் அன்றாட நடவடிக்கைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத அளவுக்கு உள்ளது தமது அதிகாரத்தை நிலை நிறுத்தி வைத்துக் கொள்ளுதலே – குடும்ப ஆட்சியை விஸ்தரித்தலே, ராஜபக்ச குடும்பங்களின் நோக்கமாக உள்ளது. அடுத்த 2024 ஜனாதிபதி தேர்தலிலும் கோட்டா, தானே போட்டியிடுவது அல்லது பசிலை நிறுத்துவது, அதன் பின் வரும் ஜனாதிபதி தேர்தலில் நாமலை நிறுத்துவது என தமது அதிகாரத்தை தக்க வைப்பதிலேயே ராஜபக்ச குடும்பம் மும்முரமாக நிற்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் பி திஸநாயக்க , பிரியங்கர ஜயரத்ன போன்றோர் தம்மால் சுயாதீனமாக இயங்கமுடியவில்லை என வெளிப்படையாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்கள். ராஜபக்ச குடும்ப அரசு அனைத்து அதிகாரத்தையும் தமக்குள் வைத்துக்கொண்டு இருக்கின்றது என்பது இதிலிருந்து புலனாகின்றது மறுபக்கத்தில் பொருளாதார நெருக்கடியில் திணறும் இவ்வரசைக் கவிழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் மும்முரமாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கு ஆளும் கட்சியும், ஆட்சியை கைபற்றிக் கொள்வதற்கும் எதிர்கட்சியும் என இரு கட்சிகள் போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றன. தலையணையை மாற்றினால் தலைவலி தீராது என்பது போல், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் பிரச்சனை தீர்க்கப்படப்போவதில்லை. இங்கு மக்கள் பிரச்சனை என்பது இரண்டாம் பட்சமே. நாட்டின் தேசிய வளங்கள் ஒவ்வொன்றும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு கொண்டு வருகின்றது. கொழும்புத் துறைமுக நகர் சீனாவுக்கு ,திருகோணமலை துறைமுகம் மற்றும் எண்ணெய் குதங்கள் இந்தியாவுக்கும் , கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையம் அமெரிக்காவிற்கும் என மோடிக்கு நிகராக நாட்டை கூறு போட்டு விற்கின்றனர். தமது சொந்த சொத்துக்கள் போல் வளங்களை விற்பனை செய்வதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய பாதிப்பு உருவாக்கி உள்ளது. சீனா அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகள் தமது அரசியல் அதிகாரப் போட்டியை நடத்தும் களமாக மாறிக்கொண்டிருக்கின்றது இலங்கை. தனது தலையை வெட்ட தானே தலையைக் கொண்டு போய்க் கொடுக்கும் ஆடு போல் செயற்படுகின்றது தற்போதைய கோத்தபாய அரசு சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து அண்மையில் 70 கோடி டொலர் கடனாகப் பெற ஒப்பந்தம் கைச்சாத்தானது. அது தவிர மேலும் பல கோடி டொலரை கடனாகப் பெற இலங்கை அரசு உத்தேசித்துள்ளது. அது தவிர ஏற்கனவே வறுமை நாடான பங்களாதேஷிடமிருந்து கூட 20 கோடி டொலரை கடனாகப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. உலகம் முழுக்க கடனுக்கு கையேந்தும் நிலைக்கு சென்றுவிட்டது இலங்கையின் பொருளாதாரம். ‘யாழ்ப்பாண மக்களின் கருத்து என்ன என்பது குறித்து எனக்கு அக்கறையில்லை. அவர்களைப் பற்றி நாம் இப்போது சிந்திக்க முடியாது’ என 1983 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்த்தன டெலிகிராப் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். ஜே ஆரின் பாணியைப் பின்பற்றும் கோத்தபாயவும் சிறிய மாற்றத்துடன் இதே கருத்தை தான் கொண்டிருக்கின்றார். அதாவது ஜே ஆர் யாழ்ப்பாண மக்களைப் பற்றி மட்டும்தான் கருத்திற்கொள்ளவில்லை கோத்தபாயவோ ஒரு படி மேலே சென்று ஒட்டு மொத்த இலங்கை மக்களைப் பற்றியே கருத்திற் கொள்ளவில்லை என்பது அவரின் அரசியல் பொருளாதார நடவடிக்கைகள் மூலம் வெளிப்படுகின்றது. இவ்வரசை நம்பி வாக்களித்த 69 லட்சம் மக்களை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இலங்கை மக்களையும் இவ் அரசு ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. கொரோனா பெரும்தொற்று பரவும் இந்த மோசமான காலகட்டத்தில் கூட அதிகாரத்தைக் கைப்பற்றுவதையும் தமது குடும்பத்தை விஸ்தரிப்பதையும் மட்டுமே நோக்காக கொண்டு இயங்கும் இவ்வரசை மக்கள் இனியும் நம்பிக்கொண்டிருக்காமல், மக்கள் சார்பான அரசியல் பொருளாதாரக் கொள்கைகளுடன் இயங்கும் அமைப்புகளுடன் இயங்கி தமக்கான உரிமைகளை பெற்றுக்கொள்ளவேண்டும். https://ethir.org/?p=6883
  7 points
 24. Rabies ஐ த் தான், அங்கு விசர் நாய் கடித்து விட்டது என்று கதைக்கும் போது சொல்லப்படும். உண்மையில், அது Rabies என்று ஏறத்தாழ அனைவருக்கும் (மருத்துவர்களை தவிர) தெரியாது. எனது நேரடி அனுபவத்தால், இந்த நோயைப் (Rabies) பற்றி அங்கிருக்கும் போதே தெரிய வேண்டி வந்தது. அனால், Rabies இன் பரவல், தாக்கம் காலநிலையாலும் வேறுபாடும் போல வெளிப்பார்வைக்கு இருக்கிறது. பொதுவாக, அங்கு (இலங்கை போன்ற வெப்ப வலய நாடுகளில்) முதல் அறிகுறி நாய்களில் தெரிந்ததும் (பொதுவாக சூரிய வெளிச்சச்த்தை அவை தவிர்க்கும், தெரிந்தவர்களை கண்டும் வெறுக்கும், வெருளும் அல்லது பயப்படும்), ஓரிரு நாட்களில் வாயால் வீணி வடிக்க தொடங்கும். அப்படி எனது வளர்ப்பு நாய் என்னை தவிர்த்த பொது தான், அருகில் சென்று என்ன பிரச்னை என்பதை அறிய முயலும் போதே பல்லை நெறுமி கடித்தது. அதன் பின் ஒரு நாள் விட்ட பின், அந்த நாயின் வாயால் வீணி வெளிப்படத் தொடங்கியது. அத்துடன் முடிவு எடுத்தது, நிரந்தர உறக்கமே அந்த நாயின் வேதனை குறைவான முடிவு என்று. எந்த சிறு காயம் காயம் வந்தாலும், எனது வீட்டில் ஓர் பழக்கம், Hydrogen Peroxide ஆல் கழுவி, பின் Dettol ஆல் துடைத்து, சிறு இரத்த கசிவு இருந்தால் பிளாஸ்டர் அல்லது பெரிதாக இருந்தால் பஞ்சை வைத்து கட்டுவது முதலில் (கோசான் இணைத்த மருதத்துவ குறிப்பும் இதை சொல்கிறது) . இதை செய்துவிட்டே, மருத்துவரிடம் சென்றோம். அவரே, ஓர் ஊசியை போட்டு விட்டு, நாயின் அறிகுறியை ஓரிரு நாட்கள் கவனித்து சொல்லும்படி சொன்னார். அதை தொடர்ந்து, அந்த மருத்துவரே, 21 ஊசிகள் ஆனா தடுப்பு மருந்தை பெறுவதற்கு யாழ் மருத்துவமனைக்கு என்னை அனுப்பி வைத்தார். ஆனால், இங்கு மேற்கு நாடுகளில், அறிவுரையும், விழிப்பு உணர்வு, கவன ஈர்ப்பும் மிகவும் முக்கியம், ஏனெனில் இங்கு இது வெளிப்படையாய் இல்லை. இதனால், விழிப்பு உணர்வு இல்லை. மற்றது, மேற்கில், எந்த வளர்ப்பு பிராணியும்( சிலவற்றை தவிர) வேறு நபர்களை கண்டு வெருளுவதோ, பயப்படுவதோ இல்லை. என்னக்கு தெரிந்தவர்களுக்கு, இதை சந்தர்பார்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சொல்வது, இந்த விழிப்புணர்வுக்காக.
  7 points
 25. லண்டனில் 6 பிள்ளைகள் என்றால் சட்டபடி 4 பெட் ரூம் வீடாவது வேண்டும். யார் கொடுப்பார்? வேறு யார் சோசல்தான். 4 பெட் ரூம் வீடு அநேகமாக ஒரு தரமான இடத்தில்தான் கிடைக்கும், 6 பிள்ளைகளுக்கும் பெனிபிட். காலாட்டி கொண்டு இருக்கலாம் அல்லது கையில காசுக்கு வேலை செய்து வட்டிக்கு விடலாம். ஊரில் இதுவா நிலமை? முஸ்லீம்கள் வறுமைபடும் போது அவர்களை தூக்கி விட பல அமைப்புகள் இருக்கிறன, நமக்கு? மனைவியை, தன்னை குடிவெறியில் எரிக்கும் வெறிக்குட்டி 10 பிள்ளைகளை மனைவியின் முழு சம்மததுடன் பெற்றிருக்குமா என்பது நியாயமான கேள்விதான். Martial rape என்பதே இல்லை என்பது போல் கதைக்க கூடாது. தமிழினத்தை வளர்க்க இங்கே எழுதும் எத்தனை பேர் - 10 பிள்ளைகள் பெற்றீர்கள்? 10 வேண்டாம் 5? வெளிநாட்டில் இருந்தே பெறவில்லை. ஏன்? ஏனென்றால் ஊருக்குத்தா உபதேசம்.
  6 points
 26. “மணியண்ணை ரைட்“ திரும்பி பளிச் எண்டு சாயத்தோட சப்பின வெத்திலையை பூவரசு மரத்தடீல துப்பிப்போட்டு ,காலாலை மண்ணை தள்ளி மூடீட்டு , மூடி வெட்டின ரின் பால் பேணியால தண்ணியை அள்ளி வாயை கொப்பிளிச்சிட்டு, அந்த பழைய யானை மார்க் சோடாப் போத்தலில இருக்கிற பிளேன் ரீயை சூடோட விழுங்கிப்போட்டு, மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளம் போல, பாதி உடைஞ்ச அரி கல்லுக்கு மேல ஆச்சி திருப்பி வந்து இருந்தா. முன்னால கவிட்டு வைச்ச பக்கீஸ் பெட்டிக்கு மேல விரிச்சு வைச்ச வீரகேசரி , சில வேளை அதுக்கும் மேல பழைய பொலித்தீன் இருக்கும். வரேக்க மறக்காம புடுங்கிக் கொண்டு வந்த பூவரசம் கொப்பால இலையானை கலைச்சு கொண்டு தண்ணியை தெளிச்சிட்டு கும்பலா இருந்த ஒட்டியை பக்க வாட்டில அடுக்கி , வாங்கின கணக்கு , அள்ளுற கையில குத்து மதிப்பான நிறை , அன்றைய சந்தை விலை எல்லாம் மனதில வைச்சு கும்பல் கும்பலா மீனை பிரிச்சு வைச்சு கொண்டு அடுத்த வாடிக்கையாளருக்காக ஆச்சி பாத்துக்கொண்டிருந்தா. “எணை ,பொயிலை காம்பு துண்டொண்டு தாவன்” எண்டு மீன் பெட்டியை தூக்கிக் கொண்டு வந்த பெடி கேக்க , வலது பக்கத்து இடுப்பில இருந்த வெள்ளி லக்ஸ்பிறே bag ஐ தூக்கி குடுத்திட்டு இடது பக்கத்து சீலைத்தலப்பை கொஞ்சம் இறுக்கி செருகினா ஆச்சி . அவனும் “பொயிலைக் காம்போட இரண்டு சீவலும் கொஞ்ச சுண்ணாம்பும் எடுத்தனான்”எண்டு திருப்பிக் குடுத்தான். எல்லா வீட்டையும் மீன் வாங்க எண்டு தனி ஒரு bag இருக்கும் . ஒரு பழைய வயர் bag , கிழிஞ்ச ஓட்டைகளில பழைய துணியால ஒட்டுகள் போட்டு இருக்கும் . அதோட அதுக்குள்ள கசங்கிப் போன இரண்டு சொப்பிங் bag (ஏதோ கழிச்சுவிட்ட சாமானை வாங்கப் போற மாதிரி). மீன் வாங்கினாப்பிறகு “தம்பி bag வேணுமோ” எண்டு ஆச்சி கேக்க, சும்மா தாறாங்களாக்கும் எண்டு ஓம் எண்டால் bagல போட்டு தந்திட்டு , போகேக்க முன்னால bag காசு இரண்டு ரூபா குடுத்திட்டு போங்கோ எண்டுவா ஆச்சி. சந்தை வாசலில பழைய காலத்திலசீமெந்து bag பிறகு சொப்பிங் bagம் கறுத்த பெரிய கொஞ்சம் பாரம் தாங்க கூடிய Tulip எண்டு எழுதின bagம் விக்க இருக்கும். மீன் வாங்க சந்தைக்குள்ள போகேக்க பளுவேட்டையார்களை ஞாபகப்படுத்தும் உருவங்களை தாண்டி ஆச்சி மாரிட்ட போறது கொஞ்சம் பேசி கீசி வாங்கலாம் எண்டு. ஆனால் என்ன ஆச்சி கூடச்சொல்லிறியள் , மீனை பாத்தா நாறலா இருக்கு எண்டு ஏதாவது தேவேல்லாமல் சொல்லீட்டமோ அவ்வளவு தான் . நல்ல தமிழ் மணம் , மீன் சந்தையையும் தாண்டி மணக்கும். அந்த அவமானத்துக்கு பயந்து சொல்லிற காசுக்கு மீனை வாங்கீடுவம் . எண்டாலும் போகேக்க இந்தா பிடி எண்டு இரண்டு extra மீனை bagகுள்ள போட்டு விட்டிட்டு நெஞ்சுக்குள்ள இருந்து கொட்டைப் பெட்டிய எடுத்து தாற மிச்சக்காசை வாங்கி பொக்கற்றுக்க வைக்காம அப்படியே கையில பொத்திக்கொண்டு திரும்பி வீட்டை வாறனாங்கள். பத்து மணி தாண்ட பக்கத்தில திரும்பி இதையும் கொஞ்சம் பார் எண்டிட்டு போய் , வீட்டை இருந்து இரவு இரண்டு மணிக்கு கடலுக்குப் போன அந்தாளுக்கு செஞ்சு குடுத்ததில மிச்சம் இருந்த உழுத்தங்களியை கட்டிக் கொண்டந்து தண்ணியோட விக்க விக்க உருட்டி விழுங்கீட்டு வந்து மீண்டும் அரட்டையும் வியாபாரமும் ஒண்டா தொடர்ந்தா ஆச்சி. அப்ப ஆச்சிமார் மட்டுமே செய்யிற வியாபாரங்கள் சிலதுகள் இருந்தது. நல்லூரில இருந்து நாலு சந்தி வரை கடலைக் கடை எல்லாம் ஆச்சிமார் தான் . கடலைக்கடை ஆச்சிமார் எல்லாரும் காதிலும் பார்க்க பெரிசாக் கிழிஞ்ச ஓட்டை , அதில கிழிஞ்சு விழுறமாதிரி பித்தளை பாம்படத்தோடு , பவுண் மூக்குத்தி ,சுருங்கின நெத்தீல மூண்டு குறி , நல்ல வட்டமா பெரிய குங்குமம் எண்டு அம்சமாவகவே இருப்பினம் . சந்தியில கடை வைச்சிருக்கிறவை வீட்டை இருந்தே கச்சான் வறுத்துக் கொண்டு வருவினம். நெஞ்சளவு உயர வாங்கில பனையோலை தட்டிப்பெட்டீல குவிச்சு வைச்ச கச்சானும் சோளனும் வைச்சிருப்பினம் . பள்ளிக்கூடம் முடிஞ்சு வாற மத்தியானம் வெய்யிலுக்க நிண்ட படியே கச்சான் விப்பினம். ஆனால் நல்லூர் திருவிழா மூட்டம் set up மாறும் ,கொஞ்சம் அகலமான வாங்கில இரண்டு பெட்டீல கச்சான் , ஒண்டில சோளம் , ஒரு போத்ததில்ல பட்டாணி இருக்கும் . ஒரு பக்கம் மண்ணைப் போட்டு கச்சானை வறுத்துக் கொண்டே வியாபாரமும் செய்வினம் . ஆக்கள் வந்தால் விறகை வெளீல இழுத்திட்டு , சுடு கச்சான் இரண்டை சாப்பிடக் குடுத்திட்டு , வியாபாரம் முடிஞ்சோன்ன விறகைத் திருப்பி தள்ளீட்டு திருப்பியும் வறுக்கத் தொடங்கீடுவினம். வறுத்த கச்சானை சுளகில பிடைச்சட்டு சாக்கில போட்டு கட்டீட்டு , உள்ள போன சனத்தின்டை கணக்கை கொண்டு புது மூட்டையை அவிப்பினம். கச்சான் விக்கிறதோட இலவச செருப்பு பாதுகாப்பு சேவை செய்வினம் , எப்படியும் செருப்பு எடுக்க வரேக்க கச்சான் வாங்குவினம் ஒரு நம்பிக்கையில. ஆனால் செருப்பு திருப்பி எடுக்கேக்க கச்சான் வாங்காட்டியும் ஒண்டும் கேக்கவும் மாட்டினம். குடும்பமாப் போய் தனித்தனிய கும்பிட்டிட்டு திரும்பி வாறாக்களுக்கு , “அம்மா அப்பவே போட்டா, வரேக்க நாளைக்கு மரக்கறியும் வாங்கிக்கொண்டு கெதியா வரச்சொன்னவ “ எண்டு information நிலையமாகவும் இருந்தவை. சரி இவ்வளவு சொல்லுதே எண்டு இரண்டு ரூவாய்க்கு கச்சான் கேட்டா , லாபம் தானே எண்டு பாக்காம அம்மாவும் வாங்கிக்கொண்டு போனவ எண்ட பதில் வரும் . அந்தந்த ஊரில இருக்கிற , விளையிற சாமாங்களோட வீடு வீடா போய் ஆச்சி குறூப் ஒண்டும் இருந்தது. வெங்காயம் , புளி , நல்லெண்ணை, எள்ளு, எள்ளுப்பாகு, ராச வள்ளிக் கிழங்கு, கரணைக்கிழங்கு ஊர் முட்டை எண்டு கொண்டு திரிஞ்சு விக்கிறவை . காலமை பஸ் ஏறி முன்னுக்கு டிரைவர் சீட்டுக்கு எதிரா இருப்பினம் அங்க தான் கடகத்தை வைக்க இடம் இருக்கும், பின்னால சீட்டில் வைச்சால் கொண்டக்டர் புறுபுறுப்பார்.இப்படி திரியிற ஒரு ஆச்சீன்டை கடகத்துக்குள்ள தான் மணியண்ணை ரைட் கியரைப் போட்டவர். போற வீட்டில எங்கேயும் தேத்தண்ணி சில வேளை சாப்பாடும் கிடைக்கும் ஆன படியால் கண்டபடி காசை வீணாக்க மாட்டினம். இந்த வியாபாரம் பரம்பரை பரம்பரையாக தொடருறதும் இருக்கு. இந்த ஆச்சி மார் எல்லாம் எனக்கெண்டால் ஒரே மாதிரித்தான் இருந்ததாக ஞாபகம் . பச்சை, சிவப்பு, ஊதா எண்டு ஒரு மூண்டு கலரில தான் சீலை அதுவும், கைத்தறிச் சீலை தான் கட்டி இருப்பினம். நடக்க வசதியா சீலையை கொஞ்சம் குதிக்காலுக்கு மேல உயத்திக் கட்டியிருப்பினம் . கச்சை அணியாத கைநீட்டு வெள்ளை பிளவுஸ் ஆனாலும் கசக்கிக் கட்டின கந்தலோட தான் வருவினம். வெத்திலைப் பை , கொட்டைப் பெட்டி , சுருக்குப் பை எல்லாம் இருக்க வேண்டிய இடத்தில இருக்கும் . சீலை சுத்தின திருகணை , அகண்ட கடகம், கடகத்துக்குள்ள விக்கிற சாமாங்கள் , காறாத்ததல் , அரைறாத்தல் ஒரு றாத்தல் எண்டு மூண்டு படியோட ஒரு திராசு இது தான் கொண்டு திரியிற சாமாங்கள். தம்பி ஒரு கை பிடிச்சு விடு எண்ட கேக்கிற முகத்தில நிறைய அமைதி , கடைவாயில வெத்திலைச் சாறு , anaemia வில வெளிறின சொண்டு, வலது கை சுண்டு விரல் நுனீல சுண்ணாம்பு இது தான் அந்த உருவம் . திருகணை இல்லாட்டி சீலைத்தலைப்பை சுத்தி தலையில வைச்சிட்டு மேல கடகத்தை வைப்பினம. Head Balance எடுக்ககிறதுக்கு வைச்ச கடகத்தை மேல ஒரு எத்து எத்திப்போட்டு தோளை குலுக்கி இறங்கிற கடகத்தின்டை Centre of gravity ஐ சரியா பாத்து உச்சீல இறக்கிக் கொண்டு நடக்கத் தொடங்கிவினம். ஒரு கை கடகத்தை பிடிக்க மற்றது சும்மா வெத்திலை வாய்க்கு சுண்ணாம்பு தீத்திக் கொண்டு இருக்கும். சத்தியமாச் சொல்லுறன் இடை பெருத்த எந்த ஆச்சியையம் அப்ப காண ஏலாது. வித்துக் கொண்டு போய் தலையின்டை சுமை குறைய அகண்ட கடகத்தை அந்த ஒடுங்கின இடுப்புக்கு மாத்தி கொண்டு வீட்டை போவினம் . . அதோட seasonal ஆச்சி மாரும் இருக்கினம் , மாசீல பனங்கிழங்கு , வைகாசீல பாலைப்பழம் , ஆவணீல மாம்பழம் , புரட்டாதீல பனங்காய் பணியாரம் , ஐப்பசீல நாவல் பழம் , கார்த்திகையில விளாம்பழம் எண்டு part time வேலை செய்யிற ஆச்சிகள் இவை. வீட்டில ஏதாவது வேலைக்கும் முதலே சொல்லி வைச்சா இரண்டு ஆச்சி மார் வருவினம் . மாசம் மாசம் மாவிடிச்சு நெல்லுக்குத்த , விசேசங்களுக்கு பலகாரம் சுட , சமைக்க எண்டு பல குறூப்பா இருப்பினம் . வெத்திலை கூறு, இரண்டு நேரம் பிளேன்ரீ , மத்தியானம் மரக்கறி சாப்பாடு முடிஞ்சு போகேக்க காசோட சுட்ட பலகாரம் இல்லாட்டி மிஞ்சின சோறும் கறியும் கட்டிக்குடுக்க வேண்டாம் எண்டு சொல்லாமல் வாங்கிக் கொண்டு போவினம் . நாங்கள் ஆச்சி எண்டு கூப்பிட்டாலும் இவை அவ்வளவு oldies இல்லை . ஐம்பதை எட்டிற வயசு . பத்து பதினைஞ்சு வயசு வித்தியாசத்தில கட்டினவர் அநேமா குடிச்சே போய் சேந்திருப்பார் . கரைசேக்க இரண்டு குமர் , சொன்னா கேக்காத கழிசறை இரண்டு , கட்டினதைப் பெத்த உண்மையான கிழவி ஒண்டு , எண்டு எல்லாத்தையும் இவை தான் பா(மே)க்கிறவை.வீட்டு இறுக்கம் இவையில கொஞ்சம் வெளீலேயும் தெரியும். எல்லாப் பள்ளிக்கூட வாசலிலும் கடகம் ஒண்டோட ஒரு ஆச்சி மார் இருந்தவை. பரியோவானில பள்ளிக்கூட நேரம் எவருக்கும் போய் வர அனுமதி இல்லாத strict ஆன principal மார் காலத்திலும் , ஐஸ்கிறீம் சிவகுருக்கும் கச்சான் ஆச்சிக்கும் விசேட பாஸ் இருந்தது. தண்ணி டாங்குக்கு கீழை interval time ஆச்சி சேவிஸ் நடக்கும் . கச்சான் , சோளம் , மாங்காய் , பினாட்டு, பட்டுப்புளி எண்டு கட்டி கொண்டந்து வைச்சு விப்பா . ஆச்சிட்டை கூட்டமாப் போய் தள்ளி விழுத்தீட்டு களவெடுக்கிறதும் நடக்கிறது , அவவும் கோவம் வந்தா கடகத்தை மூடி வைச்சிட்டு சனம் குறைய திருப்பியும் விக்கத் தொடங்குவா , ஒரு நாளும் complain பண்ண மாட்டா. எல்லாரிட்டை favorite ஆகவும் அதேபோல் அப்பப்ப அம்மாட்டை பேச்சு வாங்கவும் பல வீட்டில ஒரு ஆச்சி இருந்தவ. இவைக்கு வேலையே வெளி ஆச்சிமார் வந்தா அவயை மேக்கிறது தான். வீட்டை இருந்த ஆச்சி மாருக்கும் வீட்டுக்கு வாற ஆச்சி மாருக்கும் நடக்கிற கதையை வைச்சு 4 வருச episodes சீரியலே எடுக்கலாம் . வேலை முடிச்ச ஆச்சி சில்லாலை பஸ்ஸில ஏற, மணியண்ணை ரைட் எண்ட பயணம் மீண்டும் தொடர்ந்தது. எல்லாருக்கும் வீட்டு ஆச்சியோ வெளி ஆச்சியோ , ஆச்சி ஒரு special தான் . ஆச்சி எண்டது உருவப் பெயர் அல்ல உருவகப் பெயர், உணர்வுகளின்.. Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்
  6 points
 27. மிகவும் சரியாக கூறியிருக்கிறீர்கள் சிலர் எங்கள் இனம் அழிகிறது சனத்தொகை குறைகிறது என்பதோடு சரி.. அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்பது வேறுவிடயம். இன்னொன்று சுதந்திரம், சுகாதார சமூக பொருளாதார வசதிகள் உள்ள மேற்கத்தைய நாட்டிலேயே எங்களவர்கள் 3 அல்லது 4 பிள்ளைகளுக்கு மேல் பெறுவதில்லை..அரசும் உதவி தொகை(daycare allowances) கொடுத்துமே 4ற்கு மேல் போகாது.. இந்த நால்வரும் கூட 2 அல்லது 3 மேல் பெறமாட்டார்கள்.. இது யதார்த்தம், ஆனால் அதைப்பற்றி கதைக்கமாட்டார்கள்.. ஆனால் ஊரில் வறுமையில் வாடுவதுடன் விரும்பியோ விரும்பாமலோ பிள்ளை பெற்றும், குடிகார கணவனால் பலாத்காரப்படுத்தபட்டும்,கலைக்கவும் முடியாமல் பெற்று வளர்க்கவும் முடியாமல் கஷ்டப்படும் குடும்பங்களின் நிலையை பார்த்து அவர்கள் நடைமுறையில் சாத்தியமானவற்றை சிந்தித்து இருக்கலாம் எனக் கூறினால் மட்டும்தான் எங்கள் சனத்தொகை குறைகிறது.. இனம் அழிகிறது.. ஓரளவிற்கு பொதுவான/ஸ்திரமான நிலையிலிருந்து பார்த்திருந்தால் - ஒழுங்கான வருமானமும் இல்லை, குடிகார கணவனுடன் வாழும் ஒரு பெண் மனநிலையில் இருந்து பார்த்திருந்தால்- நான் கூறுவது விளங்கும். வருமானமும் இல்லை, குடிக்கு அடிமையான கணவன்.. பிள்ளைகளை பெற்றுவிட்டு வளர்ப்பது எப்படி என கட்டாயம் யோசித்திருப்பார்கள். ஆனால் குடிகார கணவனுக்கு இதெல்லாம் தலையில் ஏறியிருந்தால் இந்தளவு நிலையும் வந்திருக்காது.. இப்பொழுது தாயினதும் நீங்கள் கூறுவது போல மூத்த ஆண்பிள்ளையிலும் தான் பொறுப்பு வந்துவிழுந்துள்ளது.. அந்த மூத்த பிள்ளையின் வயதினைப்பொறுத்து அந்தப்பிள்ளை எதிர்நோக்கப்போகும் கஷ்டங்களின் சுமையும் வலியும்.. இதுவே மூத்தபிள்ளை பெண்ணாக பிறந்திருந்தால்? இவர்களைப்போல பல குடும்பங்கள் வாழ்கிறது, இல்லையென்பதை மறுக்கவில்லை.. அதற்காக அவர்களது வாழ்க்கையும் இப்படி வறுமையுடன் போகவேண்டும் என விரும்பவும் இல்லை.. தந்தை குடிகாரன் பிறகு கொஞ்ச நாட்களில் மகன்/மகள் சிறுவயதில் திருமணம், சிலசமயங்களில் சட்டரீதியான திருமணங்களும் இல்லை. வாழ்வாதாரத்திற்கு தினக்கூலி என்ன வருகிறதோ அது, பின் உடம்பு அலுப்பு தீர குடி, பின் பிள்ளைகள். அவர்களின் வாழ்க்கை படிப்பு? வேலை? திரும்பவும் அதே வாழ்க்கைவட்டம். பின் தங்கிய கிராமங்களில் நிகழும் கதைகள் .. சில வருடங்களுக்கு முன் ஏழாலையில் உள்ள மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள குடும்பங்கள் அவர்களின் வாழ்க்கை, பழக்கவழக்கங்கள்(சிறு வயது திருமணம், கசிப்பு கஞ்சா பாவனை, சுகாதார பழக்கவழக்கங்கள்) அதனால் ஏற்பட்ட பிரச்சனைகளைப்பற்றி செய்திகள் வந்ததை கேள்விப்பட்டிருப்பீர்களோ தெரியாது.. எனது நண்பர்கள் சிலர் field officers ஆக இந்த மாதிரியான இடங்களில் பணியாற்றி உள்ளார்கள்.. சில இடங்களில் விதிவிலக்குகள் இருந்தாலும் இந்த வறுமைக்கோட்டுக்கும் சாதியாலும் ஒடுக்கப்பட்டவர்களின் நிலையை பாருங்கள்.. எத்தனை வீதம் முன்னேறியுள்ளார்கள்? அவர்களின் வாழ்க்கைத்தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா? இல்லை. அதிலும் இந்த COVID பாதிப்பினால் வருமானமும் இன்றி படிப்பையும் கைவிட்ட பிள்ளைகள் எத்தனை! உதவி கோரி வந்திருக்கும் தகவல்களைப்பார்த்தால் தெரியும்.. அவர்களது வாழ்க்கைதரம் இன்னமும் பின்னோக்கி போயுள்ளது.. வருமானமில்லை, கடன் தொல்லை, குடும்ப சுமை அதனால் தற்கொலை. இந்த செய்தியில் உள்ள குடும்பமும் இதற்குள் அடங்கும்.. வருமானத்திற்கு ஏற்பவே பிள்ளைகளை பெறவேண்டும் என்பதில்லை ஆனால் சிந்தித்து நடந்திருக்கலாம்.. அதனால்தான் பிள்ளை மட்டும் பெற்றால் போதாது அவர்களை பாதுகாப்பாகவும் அவர்களுக்கான சாதராண அடிப்படை வசதிகளான (உணவு, உடை உறையுள் மற்றும் கல்வி) கொடுக்கவேண்டும் இல்லாவிடில் உணர்ச்சிக் கொந்தளிப்பிலும் சமூகத்தின் பாராட்டுக்காகவும் பிள்ளைகளை பெற்றுவிட்டு, அவர்களை விற்பதால் அல்லது கொல்வதால், அவரகளது உரிமைகளை மறுப்பதாலும் குற்றமே செய்கிறார்கள்.. நான் அவுஸ்ரேலிய வருமுன் வறுமையாலும் குடிகார கணவனாலும் துன்புறுத்தப்பட்ட பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், குடும்ப தலைவன் காணாமல் ஆக்கபட்ட பெண்கள் வரை, அவர்கள் உடல்உளவள தாக்கங்கள் அவர்களது பிரச்சனைகள் வரை கருத்துகளை கேட்டும் அவர்களுடன் பழகிய அனுபவங்கள் உள்ளது.. இன்னமும் அவர்களது வாழ்க்கையில் அதிகளவு மாற்றங்கள் இல்லை.. சமூகத்தின் எண்ணங்களிலும் மாற்றமில்லை.. உங்களுக்குதான் ஊர் நிலவரம் என்னைப்பற்றி அதிகம் தெரியும் ஆனாலும் எனக்கு தெரிந்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.. அந்தப்பிள்ளைகளை நினைத்து மட்டும் மனம் வருந்துகிறேன்.. பிள்ளைகளின் உலகம் வண்ணத்துப்பூச்சியை போன்றது.. அவ்வளவுதான்..
  6 points
 28. வெந்ததும் வேகாததுமாய் வாய்க்குள்ள போட்டுகொண்டு, குருட்டுப்பூனை விட்டத்திலே பாய்ந்ததுபோல் பாய்ந்து ஓடி உழைக்க நண்டும் சிண்டுமாய் மூண்டு நாலு வந்திடும், அதையெல்லாம் செட்டில் பண்ணி மூச்சு விட நாற்பது வந்திடும்.......பின்புதான் குடும்பத்தை ரசித்து விராட்கோலி மாதிரி நிறுத்தி நிதானமாய் சதம் அடிக்கிற காலம் இந்த நாற்பதுக்கு பின்னான பொற்காலம்.......சும்மா புரியாமல் புலம்பக்கூடாது.....!
  6 points
 29. சின்னப்பன்றி: அகரன் அதிசயமாக அன்று காலை இயல் என்னை எழுப்பினாள். நாம் எழும்புவதற்கு கால் மணி நேரம் இருந்தது. கண்கள் அதிசயிக்கும்படி தானாகவே குளித்து, தன்னை அழகு படுத்தி, தனக்கு பிடித்த ‘அனா’ சட்டையை அணிந்திருந்தாள். காதுகள் அதிரும்படி பிரெஞ்சு மொழியில் ‘’Petit cochon réveille-toi’’என்றாள். (சிறிய பன்றி கண்விழி) எனது வாழ்வில் என்னை ‘சின்ன பன்றி’ என்று அழைத்தது, நான்கு வயதை நிறைத்துக் கொண்டிருந்த என் இயல். நான் பதறிப் போனேன். அவள் ‘பெரிய பன்றி’ என்றிருந்தால் பதட்டத்தின் அளவு குறைந்திருக்கும். பொதுவாக தமிழில் பன்றி, எருமை, குரங்கு, நாய் என்று ஊரில் திட்டு வேண்டியதால் அவை ‘கெட்ட’ வார்த்தைகள் என்று என்னிடம் படர்ந்திருந்தது. ஒரு இருட்டு மேகம் போல முகத்தை மாற்றி ‘’ இதை யார் உனக்கு சொல்லித் தந்தார்கள் ? ‘’ என்றேன். அவள் மீண்டும் ஒருமுறை அதை சொல்லிச்சிரித்தவாறு ‘என் நண்பி கிளாரா ‘ என்றாள். என்னை வெற்றி கொண்டு விட்டதான முகச் சாயலில் ஒரு படி மேல் சென்று ‘’ réveille-toi papa grenouille ‘’ (அப்பா தவக்கிளையே ! எழுந்திரு.) என்றாள். எனது மனதெங்கும் பஞ்சில் ஊறும் இரத்தம் போல் வேதனை படர்ந்தது. ‘’மகளே அந்த வார்த்தைகள் சொல்லக் கூடாது ! அது மகிழ்ச்சியற்ற வார்த்தைகள். மீண்டும் சொன்னால் அப்பா கவலைப்படுவேன்’’ என்றேன். அவள் ‘’ இல்லை அப்பா ! இது கெட்ட வார்த்தை இல்லை’’ என்றாள். என்னால் ஒருபோதும் அதை நம்ப முடியாது. இரண்டு வருடமாக பள்ளிக்குச் செல்லும் இயல் ஒரு போதும் இப்படி வார்த்தையை பயன்படுத்தவில்லை. அதைவிட நாளை அவளுக்கு இரண்டாவது ஆண்டில் முடிவுக்கான பெரிய விடுமுறை ஆரம்பிக்கிறது. இந்த நேரம் பார்த்து கிளாரா கெடுத்து விட்டாள் என்று நினைத்துக் கொண்டேன். எனது பெயரை பிரான்சில் முழுமையாக ‘’முத்துலிங்கம் தயாளநேசன்’’ என்று உச்சரிக்கும் இயலின் ஆசிரியரான எமிலியிடம் இயல், கொடும்சொல் சொல்லப்பழகியதை பேசிவிட வேண்டும் என்று தீர்மானித்து பள்ளிக்குச் செல்லத் தயாரானேன். நிறைந்து வழியும் இளமையும், நிறுத்தாத புன்னகையும், மெல்லிய சங்கிலிகள் போன்ற கட்டம் கட்டப்பட்ட அளகமும், வைத்திருந்தாள் எமிலி. பார்ப்பவர் எல்லோரையும் பாடாய்ப்படுத்தும் அழகு. இடியமீன்கள்கூட சின்ன மீன்குஞ்சுகள் போல ஆகிவிடுவார்கள். இளங்கோ அடிகள் இவளைப்பாடி இருந்தால் ‘’ புரிகுழல் அளகத்து நகை !’’ என்றிருப்பார். தமிழ்ப்பெண்களின் நீண்ட கருங்குழல் பேரழகென்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் பொன்போன்று மினுங்கும் முடியை வைத்திருப்பவளுக்கு ‘பொன்நகை’ தேவையற்றுப் போய்விடுகிறது. கம்பர் எமிலியைக் கண்டிருந்தால் ‘’ கஞ்சா இருக்கும் மலர்க்கூந்தல்’’ என்றிருப்பார். என்ன செய்வது ? இளங்கோ, கம்பர், இன்னும் பெண்களை ஆராதித்த புலவர்பெருமக்களுக்கு வாய்த்தது அவ்வளவுதான் ! அவர்கள் மேற்குநாடுகளுக்கு ஏதிலியாகியிருந்தால் எத்தனை புதுச்சொற்கள், அழகுப்பாடல்களை தமிழ் கண்டிருக்கும் ? . எமிலியிடம் பேசுவதில் ஒரு ஆபத்து இருந்தது. இயலைக் கண்டதும் ‘mon cœur’ (என் இதயமே) ஓடி வா’ என்று அவளை அணைத்து விட்டு என்னைப் பார்த்து உலகின் அற்புதமான சிரிப்பை உற்பத்தி செய்வாள். ஒரு கவிதை சொல்வது போல நளினமாக ‘முத்துலிங்கம் தயாளநேசன் çava ? (நலமா ?) என்பாள். நான் பேச நினைத்ததை எல்லாம் மறந்துவிடுவேன். பள்ளி வாசலில், எல்லாப்பிள்ளைகளும் திரும்பி திரும்பி தாய்க்கோ, தந்தைக்கோ கைகாட்டி உதடுகளில் வலது கையை வைத்து முத்தங்களை அனுப்புவார்கள். பெற்றோரும் அனுப்புவார்கள் எனக்கு அந்த வாய்ப்பு வருவதில்லை. இயல் எமிலியை கண்டதும் என்னை முழுவதுமாக, மறந்து விடுவாள். ஒருபோதும் திரும்பிப் பார்ப்பதில்லை. மற்றப் பிள்ளைகளின் முத்தங்களை இரவல் வேண்டி இயலி முதுகை நோக்கி முத்தத்தை அனுப்புவேன். அது திரும்பி வராது. எதிர்காலத்தில் அவள் ‘சின்னப் பன்றி’ என்ற வார்த்தையை எல்லோருக்கும் முன்னால் அனுப்பாமல் இருந்தால் போதும் என்று நினைத்து கொண்டேன். அந்தப்பள்ளியில் எல்லோருக்கும் தெரிந்தவளாக இயல் இருந்தாள். அவளது நிறம் அங்கு புதுமையாக இருந்தது. வீட்டைவிட பள்ளியை விரும்பும் ஒருத்தியாகவும் இயல் இருந்தாள். பள்ளியில் இருந்து ஒவ்வொரு மாலையும் 04 மணி 30 நிமிடத்துக்கு அழைத்துப் போவேன். எல்லா பிள்ளைகளும் பெற்றோரிடம் பசுவைத்தேடும் கன்றாக கண்களை நிமிர்த்தி காத்திருப்பார்கள். இயல் மட்டும் எமிலியிடம் ஏதேதோ கேட்டுக் கொண்டிருப்பாள். இறுதியாக எமிலி ‘’ உன் அப்பா வந்துவிட்டார், அங்கேபார்’’என்ற பின்னரும் என்னை பார்த்துவிட்டு எமிலியுடன் பேச்சை நீட்டிக்கொண்டிருப்பாள். எமிலி என் கரங்களில் இயலைத்தரும்போது ‘’ உங்கள் மகள் என்னோடு வந்துவிடுவாள்போல் இருக்கிறது’’ என்பாள். நான் எமிலிக்காக சிரிப்பேன். என்னிடம் நடுக்கடலில் தத்தளிக்கும் அகதியின் மனநிலை இருக்கும். அன்று எந்தத்தடைகளுமற்று சூரியன் வந்த காலையில் எமிலியிடம் இயலை கொடுத்ததும் ‘’எமிலி உங்களிடம் இரண்டு நிமிடம் இருக்குமா ? பேசவேண்டும் ! ‘’ என்றேன். ‘’என்னவிடயம்பற்றி முத்துலிங்கம் தயாளநேசன் ? என்று என்பெயரை பாடிக்கொண்டிருந்தாள். ‘’இயல் இன்றுகாலை ’Petit cochon réveille-toi’’, réveille-toi papa grenouille என்ற வார்த்தைகளை கூறுகிறாள். அதிர்ச்சியாக இருக்கிறது இந்த வார்த்தைகள்.. ‘என்று முடிக்க முதல் இரண்டு நிமிடம் முடிந்து விடும் என்ற அவசரத்தில் ‘’ஓ.. நேசன் அது ஒரு செல்ல வார்த்தை. அன்பானவர்களை பிரஞ்சு மொழியில் அப்படி அழைப்பது வழக்கம். நீங்கள் பயப்படத்தேவையில்லை ‘’ என்றாள். என்னால் இரண்டு வெட்கங்களைத் தாங்கவேண்டி இருந்தது. சிரித்துக்கொண்டே வேலைக்குச் சென்றேன். என் எதிரே சென்றவர்கள் தனியே சிரிப்பதை கடைக் கண்ணால் பார்த்துச் சென்றார்கள். சிரிப்பது வீதியில் அதிசயமாகத் தான் இருந்தது. எனக்கும் இது புது வகை பழக்கமாக தோன்றிவிட்டிருந்தது. சொல்லிச் சிரிக்க யாரும் இல்லாததால் தனியே சிரிப்பது ஒன்றும் தவறில்லை. ஆனால் எல்லை தாண்டினால் வைத்தியசாலை செல்ல வேண்டி வரலாம். அவ்வளவுதான். எனது வேலை நேரத்தை அந்த நிறுவனம் இரண்டாக வெட்டித் தந்திருந்தது. அது ஒரு மகளை வைத்திருக்கும் எனக்காக செய்த விதிவிலக்கு. காலை 10 மணியிலிருந்து மாலை 3 மணி வரை. பின்னர் மாலை 07 மணியிலிருந்து இரவு 11 மணி வரை. இயலை பள்ளியில் விடவும் பின்பு அழைத்து வந்து பணிவிடைகளையும் உலகத்தின் உன்னத பொறுமையை எனக்குக் கற்றுத்தந்த உணவூட்டும் பணியையும் செய்ய அது பொருத்தமாக இருந்தது. மாலை 6 மணிக்குப் பின்னர் அந்த தீப்பெட்டி போன்ற வீட்டில் நான் செய்வது சட்டப்படி குற்றமானது. ஒரு குழந்தையை தனியே விட்டு விட்டு செல்வது. ஆனால் என்னிடம் வேறு தீர்வு இருக்கவில்லை. அந்த நகரத்தில் அறிந்த தமிழர்களோ, இரவில் பிள்ளையைப் பார்க்கும் பணியாளர்களோ இல்லை. பணம் கொடுத்து பிள்ளையை பார்க்கும்படி வங்கி நிலுவையும் இல்லை. கோடைகால கிணறு போல் மாத முடிவில் ஆழம் சென்றிருக்கும். இயல் தான் பிறந்து பதினோராவது நாளில் இருந்து எனக்கு இந்த விடயத்தில் முழுமையான ஒத்துழைப்பை தருகிறாள். அவள் இரண்டு வயதை தொட்ட போது ஒரு நாள் மட்டுமே என்னை அதிரச் செய்தாள். அன்று மாலை வேலைக்குச்சென்றபோது வீட்டுக்கதவை பூட்டாமல் சென்றுவிட்டேன். இரவு 11 மணி கடந்து நான் வீட்டை அடைந்த போது, அவள் வீட்டை விட்டு வெளியேறி படிகளில் இறங்கிக் கொண்டிருந்தாள். (யாரும் பார்க்கவில்லை.) வாரி அணைத்து அறையில் சென்று அவளுக்கு மொழி புரியாத போதும் பேசிக்கொண்டே இருந்தேன். அவள் என் கண்களை தடவி நீரைத் தொட்டு விளையாடினாள். அன்றிலிருந்து இரவு பசித்தால் குடிக்க அருகே அவளது பால்புட்டியும், உறவினர்களான பூனைப்பொம்மை, மிக்கிமௌஸ், க்கோன், டெடிபியர், நூனூஸ்பொலர், பேர்நுவல், புலி, யானைக்குட்டி, என அவளுக்கு மட்டும் பெயர் தெரிந்த இன்னும் பல பொம்மைகளையும் கட்டில் அருகில் வைப்பேன். இயல் பேசி, பாடி, பாடம்சொல்லி, தூங்க அவர்கள் துணை வேண்டும். கடவுளுக்கு கொடுக்க வைத்திருந்த முத்தத்தையும் கொடுத்த பின்னர் கதவை பூட்டி விட்டு சிலநிமிடம் கதவில் காதுவைத்து கேட்பேன். தன் பொம்மைகளுக்கு கட்டளையிடும் சத்தம் கேட்கும். இந்தச் சீதையை கடத்த எந்த புட்பக விமானமும் வரமுடியாதென்று நினைப்பேன். இவள் இராவணன் வளர்க்கும் சீதை ! என்று எனக்குள் நம்பிக்கை ஊட்டிவிட்டு வேலைக்குச் செல்வேன். இரவு 11 மணி கடந்து வரும்போது பால் புட்டி தீர்ந்திருக்கும். பொம்மைகள் இயலுக்கு மேலும் அருகிலும் தூங்கியிருப்பார்கள். இயல் ஒரு இளவரசியின் தோரணையில் தூங்கியிருப்பாள். நான் ஒவ்வொரு இரவும் சில நிமிடங்கள் அந்த காட்சியை தினமும் குடித்து விட்டுத்தான் குளிக்கச் செல்வேன். எனக்கு எந்த விதத்திலும் துன்பத்தை தராமல் தனிமையில் இரவின் பாதியைக் கழித்து வளரும் இயல் ஓர் இரும்பு பெண்ணாக கரும்புபோல் வளர்வாள் என எண்ணிக்கொள்வேன். அவள் எனக்கு சசியை நினைவூட்டிக்கொண்டே வளர்ந்தாள். சசியின் வயிற்றுக்குள் இயல் வளர்ந்தபோது தமிழ் பெயர்தான் வைக்க வேண்டும் என்று நான் பிரசங்கம் செய்துகொண்டிருந்தேன். ஆனால் என்னால் ஒரு பெயரைக்கூட தேடிப்பெற முடியவில்லை. ஒருநாள் மாலை 14 ம் லூயி மன்னன் கட்டிய சிலுவைக் குளத்தினருகே இருவரும் புல்வெளியில் இருந்தபோது « ‘இயல்’ என்ற பெயரை வைப்போமா ? » என்று இயல்பாகக் கேட்டாள். அதிகமாக பேசிக்கொண்டு கனவுகளில் வாழ்ந்து கொண்டு நான் இருப்பேன். சசியோ செயல்களிலேயே எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருப்பாள். நான் வேலைக்கு போகும் போது வாசலில் ஒரு பவுத்த புன்னகை நிறைத்து பார்த்துக் கொண்டிருப்பாள். இயல் பிறந்து பதினோராவது நாள் அந்த நதி தீர்ந்தது. இரவு 11 மணிக்கு ஆவலோடு வீடு வந்தேன். இயலை மடியில் வைத்து சசி காத்திருந்தாள். ‘’இயலை பிடியுங்கோ எனக்கு ஏதோ செய்கிறது.’’ என்றாள். ‘’ எனக்கு தலை சுற்றுகிறது’’ என்று விட்டுச் சென்றாள். முழுமையாக மணிக்கூட்டின் பெரிய கம்பி ஒருமுறை சுற்றிவர முதல் ஒரு அலறல் சத்தம் கேட்டது. யுத்தம் நடந்த நிலத்தில் இருந்த எனக்கு ஒரு போதும் கேட்டிராத கதறலாக அது இருந்தது. ச….. சி என்று மனமெங்கும் மிரண்டிருக்க கதவை திறந்தேன். சசி இரத்தத்திற்கு மேல் இரண்டாக மடிந்து கிடந்தாள். சசிக்கு தலைவலிப்பு வந்து தூக்கி வீசியதில் அந்த மலசலகூடத்தின் வெள்ளைமாபிள் மேல் விழுந்ததால் அவள் முறிந்துவிட்டாள். ‘ஐ..யோ…ஓ..’ என்ற நீண்ட ஒலியைமட்டும் எழுப்பிவிட்டு நான் அமைதியாகி போனேன். எதிர் வீட்டு ‘கினே’ என்ற நாட்டைச் சேர்ந்த அரேபியாவும், சிண்டாவும் அந்த அறையில் இருந்து சசியை தூக்க முயன்றார்கள்,. முடியவில்லை. பின்னர் அவசர வைத்திய உதவியை அழைத்தார்கள. ஒரு சிவப்பு நிற வைத்திய அவசர வண்டியில் வந்தவர்கள் கடும் முயற்சியில் கதவை கழற்றியபின்னர்தான் சசியை வெளியே எடுத்து பெரும்படைசூழ கொண்டு சென்றார்கள். நான் இடியேறு விழுந்த தென்னை போல மடியில் இயலுடன் சரிந்து இடந்தேன். அப்படித்தான் நானும், இயலும் வாழ ஆரம்பித்தோம். இயலுக்கு ஏதும் தெரிந்திருக்காது. அவள் எதிர்காலத்தில் அறிவாள். சசியின் அம்மா மட்டக்களப்பில் இருந்து பேசும் போது அடிக்கடி சொல்வார்- ‘ஒரு கரைச்சலும் உங்களுக்கு தராத இயல் தெய்வக்குழந்தை, சின்ன வயதில் பெரியவள் போல் வளர்கிறாள்’ என்று. நான் நினைப்பேன், குழந்தைகள் எல்லாம் தெய்வமாக பிறக்கிறது. நாம் ஏன் மனிதராக மாற்றுகிறோம் ? அன்று வழமைபோல மாலை இயலை அழைத்து வரச் சென்றேன். இயலின் முகம் முற்றாக இருட்டியிருந்தது. மூன்று மாதம் பள்ளி இல்லை என்ற தகவல் அவள் மகிழ்ச்சி உலகத்தை குலைத்திருந்தது. எமிலி தன் குழந்தையை பிரிவது போல பல நிமிடங்கள் இயலைக் கட்டி அணைத்துக் கொண்டிருந்தாள். எமிலி முகத்திலும் முதன்முதல் சிரிப்பைக் காணமல் இருந்தேன். இயல் படலை தாண்டிய போதும் மீண்டும் ஓடிப்போய் இரு கைகளாலும் இதயத்தை செய்து காட்டினாள். எமிலியும் பதிலுக்கு செய்தாள். அந்த இதயங்களை பார்க்க மட்டுமே முடிந்தது. இயல், தொட்டால் கலைந்துவிடும் தேன்கூடு போல முகத்தை வைத்திருந்தாள். நான் பேச்சை தொடுக்கவில்லை. பாதி வழியில், தன்னால் நடக்க முடியாது, கால் வலிக்கிறது என்றாள். அவளை தூக்கித் தோள் மீது இருத்தினேன். என் தலையைப் பிடித்தபடி ‘papa on peut retourner à l’école’ என்றாள். நான் வந்த பாதையில் மீண்டும் பள்ளிக்கு சென்றேன் எல்லோரும் சென்று சென்றுவிட்டிருந்தார்கள். பள்ளி தனித்திருந்தது. தோளில் இருந்தவாறு பள்ளிப்படலையை பிடித்தவாறு ‘ஏமிலி.. ஏமிலி.. ‘என்று தன் ஆசிரியரை அழைத்தாள். பள்ளி பதிலளிக்கவில்லை. மழை திடீரென வந்து சேர்ந்தது. என்னிடம் குடை இல்லை. என் தோளில் இயலும் நானும் நனைந்து கொண்டே வீடு வந்தோம். அந்த மழை எனக்கு வசதியாக இருந்தது. இயலுக்கும். குளிப்பு தொட்டியில் இயலை இறக்கி தோயவார்த்தேன். தலை துவட்டி கட்டிலில் இருத்தினேன். பொம்மையை மடியில் இழுத்து வைத்து அதன் தலையைத் தடவினாள். ‘இயல் அப்பா தோய்ந்துவிட்டு வருகிறேன் இருங்கோ’ என்றேன். பொம்மையை பார்த்தவாறு தலையை ஆட்டினாள். தோய்ந்து விட்டு வந்து சூடாக்கிய பாலுடன் இயலின் கட்டிலை நெருங்கினேன். சசி யாழ்பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற புகைப்படம் ஒன்று தான் வீட்டில் தொங்கியது. அதை இறுக கட்டியவாறு தன் தாயைப் பார்த்துக் கொண்டிருந்தாள் இயல். çva va (நலமா ?) இயல் ? என்றேன். தலையைத் தடவியவாறு ‘papa je veux maman’(அப்பா, எனக்கு அம்மா வேணும் ! ) என்றாள். Mon ‘petit cochon’ je veux toi ! ’(என் சின்னப்பன்றியே ! எனக்கு நீ வேண்டும் !) என்றேன். எமிலியை கட்டி அணைத்ததுபோல பாய்ந்து என்னை இறுகக் கட்டி அணைத்தாள். மழைபெய்த வானம் தூர நின்றது. வெள்ளை முகில்கள் பிய்ந்து அலைந்தது. கிழக்கில் கருமேகங்கள் திரண்டு கொண்டிருந்தன, மேற்கில் சூரியன் பின்வாங்கிக் கொண்டிருந்தது. விடுபட்ட இடமெல்லாம் நீலம் நின்றது. இன்று மாலை வேலைக்குச் செல்வது என் வலுவுக்கு ஏற்றதில்லை என்று வானம் சொன்னது. அகரன் பிரான்ஸில் வசித்துவரும் எழுத்தாளர். அரசியல் தத்துவ இறுக்கமில்லாத, அழகியல் கற்பனைத் திறன்கொண்ட படைப்பிலக்கியவாதியாக விமர்சகர்களால் மதிப்பிடப்படுகிறார். https://akazhonline.com/?p=3572
  6 points
 30. பாரதியாரின் கடைசி நாள்கள் எப்படியிருந்தன? புகைப்படங்களும் விவரங்களும் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 30 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, பாரதியார் மகாகவி சி. சுப்பிரமணிய பாரதி மறைந்து நூறாண்டுகளாகிவிட்டன. 39 வயது கூட நிரம்பாத நிலையில், சென்னையில் காலமானார் அவர். பாரதியின் கடைசி சில நாட்கள் எப்படியிருந்தன என்பதை விவரிக்கிறார் பாரதி ஆய்வாளர் ரா.அ.பத்மநாபன். பாரதி ஆய்வாளரான ரா.அ. பத்மநாபன், பாரதியின் அரிய புகைப்படங்கள், அவரைச் சார்ந்திருந்தோரின் புகைப்படங்கள் ஆகியவற்றோடு வேறு யாரும் அறிந்திராத பல தகவல்களையும் சேர்த்துத் தொகுத்து, சித்திர பாரதி என்ற நூலை வெளியிட்டார். 1957ல் முதலில் வெளியான இந்த நூலில், பாரதியாரின் கடைசி சில தினங்கள் எப்படியிருந்தன என்ற தகவல்களை மிக நுணுக்கமாகத் தொகுத்திருக்கிறார் அவர். அதிலிருந்து சில பகுதிகள்: 1921ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஒரு பெரிய யானை இருந்தது. அதைக் கோவிலுக்கு வெளியே கட்டி வைத்திருப்பார்கள். பாரதி அந்த யானையை சகோதரனாக பாவிப்பார். கையில் எடுத்துச் செல்லும் பழம், தேங்காயை யானையிடம் தாமே நீட்டி, அது உண்பதைக் கண்டு மகிழ்வார். பாரதியின் வறுமை வாழ்க்கை எப்படி அமைந்திருந்தது? மதுரை தமுக்கம் மைதானத்தின் விரிவான வரலாறும், அதன் எதிர்காலமும் அந்த யானைக்கு ஜூன் மாதம் திடீரென மதம் பிடித்துவிட்டது. அதை சங்கிலியால் பிணைத்து கோவில் முன்பாகக் கட்டிப்போட்டிருந்தார்கள். வழக்கம்போல தேங்காய், பழத்துடன் யானையைத் தேடிக்கொண்டு வந்தார் பாரதி. "சகோதரா இந்தா பழம், தேங்காய்" என்று அன்புடன் நெருங்கி கையை நீட்டினார். யானை அதை வாங்கத்தான் வந்ததோ, மதத் திமிரில் தட்டிவிடத்தான் செய்ததோ தெரியவில்லை. தும்பிக் கையை வீசியது. அடுத்த கணம் பாரதி யானையின் காலடியில் மூர்ச்சித்துக் கிடந்தார். பட மூலாதாரம்,ரா.அ. பத்மநாபன் படக்குறிப்பு, யானை சம்பவத்திலிருந்து தேறிய பாரதி, கவலையடைந்திருந்த தனது நண்பர் பாரதிதாசனுக்கு அனுப்புவதற்காக எடுத்துக்கொண்ட படம். பிராட்வே ரத்னா கம்பெனியில் இந்தப் படத்தை எடுத்தவர் வி.எஸ். சர்மா. மக்கள் இன்னது செய்வதென்று தெரியாமல் தவித்தனர். 'யானை காலடியில் பாரதி கிடக்கிறார்' என்ற செய்தி திருவல்லிக்கேணி முழுவதும் தீப்போல பரவியது. எங்கோ இருந்த குவளைக் கண்ணன் காதிலும் விழுந்தது. ஓடோடி வந்த குவளைக் கண்ணன், யானை இருந்த இரும்புக் கிராதிக் கோட்டத்திற்குள் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தார். ரத்தப் பிரவாகத்தில் கிடந்த பாரதியை எடுத்து நிமிர்த்தி, தோளில் சார்த்திக்கொண்டு வெளியே கொண்டுவந்து சேர்த்தார். பாரதியை மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியார் மற்றும் சிலரும் ஒரு வண்டியில் வைத்து ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். பாரதிக்கு உடம்பெல்லாம் காயம். ஏற்கனவே பூஞ்சையான உடலில் மரண வேதனையை உண்டாக்கின. பாரதி சில நாட்கள் வலியால் அவதிப்பட்டார். ஆனால், விரைவில் குணமாகிவிட்டார். யானை சம்பவம் நடந்தது ஜூன் மாதத்தில். அதன் பின் பாரதி ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் சுதேசமித்திரனில் வேலைக்குப் போய்வந்துள்ளார். திருவல்லிக்கேணியில் தேசிய வீதி பஜனை நடத்தியிருக்கிறார். பொதுக் கூட்டங்களுக்குப் போயிருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக ஆகஸ்ட் மாதத்தில் வெளியூர்ப் பயணமும் மேற்கொண்டுள்ளார். ஈரோடு கருங்கல்பாளையத்தில் பேசிவிட்டுத் திரும்பிவந்து, தமது ஈரோடு விஜயம் குறித்து 'மித்திரனு'க்கு தாமே எழுதித்தந்துள்ளார். ஆகவே, பாரதியார் யானை அடித்து மரணமடையவில்லை. (பாரதியை அடித்த அந்த கோவில் யானையின் பெயர் அர்ஜுனன். வயது 40. இந்த சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1923 ஆகஸ்ட்டில் அந்த யானை இறந்துபோனது.) பட மூலாதாரம்,ரா.அ. பத்மநாபன் படக்குறிப்பு, திருவல்லிக்கேணி துளசிங்கப் பெருமாள் கோவில் தெருவில் பாரதியார் கடைசியாக வாழ்ந்து உயிர்நீத்த வீடு. டாக்டர் நஞ்சுண்ட ராவ் கட்டியது. 1921 செப்டம்பர் முதல் தேதி பாரதிக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. விரைவில் அது ரத்தக் கடுப்பாக மாறியது. பாரதியின் உடல் நலமின்மை பல நண்பர்களுக்கு தாமதமாகவே தெரிந்தது. தேசபக்தி நாளிதழில் வெளியான, தாம் எழுதாத தலையங்கத்திற்காக தண்டிக்கப்பட்டு சிறைக்குப் போய்க்கொண்டிருந்த வ.வே.சு. ஐயர், காவலர்கள் துணையுடன் செப்டம்பர் 11ஆம் தேதியன்று, பாரதியைப் பார்க்க வந்தார். பரிவுடன் சில நல்ல வார்த்தைகளைச் சொல்லிச் சென்றார். அதன் பின் பரலி சு. நெல்லையப்பர், நீலகண்ட பிரம்மச்சாரி, லக்ஷ்மண ஐயர் என்ற உறவினர் ஆகியோர் பாரதி வீட்டில் கவலையுடன் இருந்தனர். ஆந்திர கேசரி டி. பிரகாசத்தின் தம்பி ஒரு ஹோமியோபதி வைத்தியரை அழைத்துவந்தார். அப்போது நடந்ததை நீலகண்ட பிரம்மச்சாரி சொல்கிறார்: "மருத்துவர், பாரதியை நெருங்கி என்ன செய்கிறது என்று கேட்டார். பாரதிக்கு ஒரே கோபம் வந்துவிட்டது. "யாருக்கு உடம்பு சரியில்லை? எனக்கொன்றும் உடம்பு அசௌகரியம் இல்லை. உங்களை யார் இங்கே அழைத்தது? என்னைச் சும்மாவிட்டுப் போங்கள்" என்று இரைந்தார். வேறு வழியின்றி மருத்துவர் போய்விட்டார்." பாரதியின் உடல்நிலையை முன்னிட்டு நீலகண்டன், நெல்லையப்பர், லக்ஷ்மண ஐயர் மூவரும் இரவை பாரதி வீட்டில் கழிப்பதென்று தீர்மானித்தார்கள். செப்டம்பர் 11ஆம் தேதி இரவில் அங்கிருந்த நீலகண்ட பிரம்மச்சாரி கூறுகிறார்: "அன்றிரவு பாரதி தமது நண்பர்களிடம் 'அமானுல்லா கானைப் பற்றி ஒரு வியாசம் எழுதி அலுவலகத்துக்கு எடுத்துக்கொண்டு போக வேண்டும்' என்று சொல்லிக்கொண்டிருந்தார். அமானுல்லா கான் அப்போது ஆப்கானிஸ்தானின் மன்னராக இருந்தவர். பட மூலாதாரம்,ரா.அ. பத்மநாபன் படக்குறிப்பு, சென்னை மாநகராட்சி அளித்த பாரதியின் மரணச் சான்றிதழ். முன் இரவில் பெரும்பாகம் மயக்கத்திலிருந்த பாரதி இறப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்னால் சொன்ன இந்த வார்த்தைகளே அவர் பேசிய கடைசி வார்த்தைகளாகும்". "எங்களுக்குத் தூக்கம் வரவில்லை. அடிக்கடி எழுந்து, எமனுடன் போராடிக்கொண்டிருந்த பாரதியாரைக் கவனித்துக் கொண்டிருந்தோம். பின்னிரவில் சுமார் இரண்டு மணிக்கு பாரதியாரின் மூச்சு அடங்கிவிட்டது" என்கிறார் நெல்லையப்பர். பாரதி காலமானது சரியாக இரவு 1.30 மணி. இதனை நீலகண்ட பிரம்மச்சாரி, பாரதியின் தூரத்து உறவினர் வி. ஹரிஹர சர்மா ஆகியோர் தெரிவித்துள்ளனர். பாரதியின் மரணச் செய்தியை பொழுது விடிந்ததும் நண்பர்களுக்குச் சொல்லியனுப்பினார்கள். துரைசாமி ஐயர், வி. ஹரிஹர சர்மா, வி. சக்கரைச்செட்டி, கிறிஸ்தவப் பாதிரியாகப் புரசைவாக்கத்தில் ஒரு பங்களாவில் குடியிருந்த யதிராஜ் சுரேந்திரநாத் ஆர்யா, மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியார், எஸ். திருமலாச்சாரியார், குவளை கிருஷ்ணமாச்சாரியார் முதலானோர் வந்தனர். பாரதியார் குடும்பத்திற்கு எப்போதும் ஆதரவு புரிந்துவந்த துரைசாமி ஐயரே பாரதியின் கடைசி நாள் கிரியைகளுக்கும் உதவி புரிந்தார். "பாரதியாரின் உடலை காலை எட்டு மணிக்கு திருவல்லிக்கேணி மயானத்திற்கு கொண்டு சென்றோம். நானும் லக்ஷ்மண ஐயரும் குவளை கிருஷ்ணமாச்சாரியார், வி. ஹரிஹர சர்மா, ஆர்யா முதலியவர்களும் பாரதியார் பொன்னுடலை சுமந்துசெல்லும் பாக்கியம் பெற்றோம். பாரதியின் உடல் மிகச் சிறியது. அன்று தீக்கிரையான அவரது உடல் நிறை சுமார் 100 பவுண்டுக்கும் குறைவாகவே இருக்கும். இன்று உலகம் போற்றும் கவிச்சக்கரவர்த்தியுடன் அன்று அவரது கடைசி நாளில் திருவல்லிக்கேணி மயானத்திற்குச் சென்றவர்கள் சுமார் இருபது பேருக்கும் குறைவாகவே இருக்கலாம். பாரதியாரின் பொன்னுடலை அக்னிதேவரிடம் ஒப்புவிக்கு முன்னர் நண்பர் சுரந்திரநாத் ஆர்யா சிறியதோர் சொற்பொழிவு நிகழ்த்தினார்" என அந்த கடைசி நாளை நெல்லையப்பர் விவரித்திருக்கிறார். பாரதிக்கு ஆண் பிள்ளை இல்லாததால் யார் அவருக்கு கொள்ளியிடுவது என்ற பேச்சுவந்தபோது, யாரோ நீலகண்ட பிரம்மச்சாரி கொள்ளியிடலாமென்று சொன்னார்கள். உடனே அவர், "என்ன நானா? இந்தச் சடங்குகளில் எல்லாம் துளிகூட நம்பிக்கை இல்லாதவன் நான். என் தகப்பனாராக இருந்தாலும் நான் இந்தச் சடங்குகளைச் செய்ய மாட்டேன். அப்படியிருக்க பாரதிக்காக நான் செய்வேனென்று எப்படி நினைத்தீர்கள்?" என்று மறுத்துவிட்டார். முடிவில் பாரதியின் தூரத்து உறவினரான வி. ஹரிஹர சர்மா இறுதி காரியங்களைச் செய்தார். தென் தமிழ்நாட்டில் சித்திரபாநு கார்த்திகை 27ஆம் தேதி மூல நட்சத்திரத்தில் (1882 டிசம்பர் 11) தோன்றிய அந்த சித்த புருஷர், சென்னை திருவல்லிக்கேணியில் துன்மதி வருஷம் ஆவணி மாதம் 27ஆம் தேதி (1921 செப்டம்பர் 12) ஞாயிறன்று அதிகாலை 1.30 மணிக்கு புகழுடல் எய்தினார். அப்போது அவருக்கு வயது 39 கூட நிரம்பவில்லை. சரியாக 38 வயதும் 9 மாதங்களுமே ஆகியிருந்தன. (இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், படங்கள் அனைத்தும் ரா.அ. பத்மநாபன் எழுதிய சித்திர பாரதி நூலில் இருந்து எடுக்கப்பட்டவை.) https://www.bbc.com/tamil/india-58522543
  6 points
 31. நாம் சிறுவயதில் திருக்குறள் படிக்கும் போது அதில் ஓரிடத்தில் பொருட்பால் பற்றி படித்திருப்போம். அந்த பொருட்பாலில் உள்ள படைமாட்சி அதிகாரத்தில் உள்ள 767 ஆவது குறள் இவ்வாறாக வரும். "தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து." இதற்கு பரிமேலழகர் இவ்வாறாக ஓர் உரை எழுதியிருக்கின்றார்:- தலை வந்த போர் தாங்கும் தன்மை அறிந்து - மாற்றாரால் வகுக்கப்பட்டுத் தன்மேல் வந்த படையின் போரைவிலக்கும் வகுப்பு அறிந்து வகுத்துக் கொண்டு; தார் தாங்கிச் செல்வது தானை - அவர் தூசியைத் தன்மேல் வாராமல் தடுத்துத்தான் அதன் மேற்செல்வதே படையாவது. (படை வகுப்பாவது: வியூகம். அஃது எழுவகை உறுப்பிற்றாய், வகையான் நான்காய், விரியான் முப்பதாம். உறுப்பு ஏழாவன: உரம் முதல் கோடி ஈறாயின.வகை நான்காவன: தண்டம், மண்டலம், அசங்கதம், போகம் என இவை. விரி முப்பதாவன: தண்டவிரி பதினேழும், மண்டலவிரி இரண்டும், அசங்கத விரி ஆறும், போக விரி ஐந்தும் என இவை. இவற்றின் பெயர்களும் இலக்கணமும் ஈண்டு உரைப்பின் பெருகும், அவை எல்லாம் வடநூல்களுள் கண்டுகொள்க, இவை நான்கு பாட்டானும் படையினது இலக்கணம் கூறப்பட்டது.) இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ''உரம் முதல் கோடி ஈறாயின'' என்பதை அறிய பல வருடங்களாக நான் மிகவும் முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் என்னால் அறிய முடியவில்லை. பின்னர், கடந்த சில நாட்களிற்கு முன்னர்(கோராவில்தான் முதன்முதலில் எழுதினேன்) நான் செ.சொ.பே.மு. மற்றும் 'போரியல், அன்றும் இன்றும்' என்னும் நூல்களை வாசித்த போதுதான் இதற்கான விடையினை என்னால் முற்று முழுதாக அறிய முடிந்தது. நான் கண்டறிந்ததை உங்களோடு இங்கே பகிர்ந்துகொள்கிறேன். இவை பற்றி மேலும் அறிய:போரியல் அன்றும் இன்றும் என்னும் புத்தகத்தின் 5.2.6 ஐக் காணவும் . → இவை தான் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் 7 படையுறுப்புகள். தூசி, உரம், ஆக்கம், தலைத்தார், தார் & கொடிப்படை - முன்னணி தூசி (Mobile troops) - இவர்கள் எல்லா உறுப்புகளிற்கும் முன்செல்வர். இவர் எதிரிப்படைகள் பற்றிய முக்கிய செய்திகளை அறிந்து அவர்தம் தந்திரவழிவகை இடங்களை, ஆநிரைகளைக் கைப்பற்றி பின்வரும் படைகளின் பாதுகாப்பை உறுதிசெய்வர். இவர் ஏனைய படைகளினின்று பல கல் முன்னிருப்பர். உரம்/ ஆக்கம்(Point section) - உரம் - சமர்க்களத்தில் முதற்றாராய்(முதல்+தார்) நின்று ஆடி வீழ்ந்து வெற்றிக்கு உரமாவதால் வழங்கப்பட்ட பெயர் (முன்வரிசையில் நிற்பவர்கள் வீடு திரும்புதல் அரிது என்பது உலக வழக்கு) ஆக்கம் - போரை ஆக்கிவைப்பதால் எழுந்த பெயர் நெற்றி(Leading Platoon) - தார்ப்பகுதியின் முற்படையாம் தலைத் தாரின் முன்னுறுப்பு தலைத்தார்(Van guard) - தாரிற்கு முன்னே செல்வதும் தாரின் முற்பகுதியுமாகியது தலைத்தார் ஆகும் தார்(Advance guard) - தூசி முன்னே இருப்பினும் இல்லாதிருப்பினும் பேரணிக்கு முன்னே சென்று பெரும் காவலாக விளங்குபவை. கொடிப்படை(Main guard) - மேற்கண்ட அனைத்தையும் தன்னகத்தே கொண்டவை கொடிப்படை எனப்படும் நிரை(திவா.) - சமர்க்களத்தில் அடுத்தடுத்து வரிசையாக நிற்பவர்களைக் குறித்த சொல் . பேரணி (main body or centre of an army) - படையின் நடுவணி "பேரணியி னின்ற பெருங்களிறுகள் " (சீவக.277, உரை); அணி - பேரணி பலவாக பிரிக்கப்பட்டால் ஆகும் சிற்றணிகள் கை(Flank) - பேரணியின் இருபக்கவாட்டிலும் செல்லும் படைகள். கோடி/ கூழை (Rearguard) - பின்னணி கோடி - இன்றளவும் ஈழத்தில் வீடுள்ள காணியின் கடைப்பகுதியை குறிக்கும் சொல்லாக வழங்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இது தனிச்சொல்லாக வழக்கில் இல்லை. கூட்டுச்சொல்லாகவே பயன்பாட்டில் உள்ளது. அதுவும் மிக அரிதாகவே. தமிழ்நாட்டில் எங்கேனும் சிற்றுர்களில் வழக்கில் இருக்கிறதா என்பது அறியில்லை(Unknown). த.நா. வழக்கில் உள்ள கூட்டுச்சொற்கள் - தெருக்கோடி, கோடி வீட்டுப் பெண் | புலன கிட்டிப்பு(credit): Devasena கடைக்கூழை - கூழையினும் கடைநிலை அணி சிறகு(Wing) - முழுப் படையினையும் கிட்டத்தட்ட ஒரு பின்னமாகப்(fraction) பிரிக்கப்பட்டதால் வரும் ஒரு வித மாச்சதளம்(Big squad) போன்றது. இது தொடர்பாக நான் உருவாக்கிய ஒரு விளக்கப்படம். உசாத்துணை: குறள் 0767 - திறன் Wing vs Flank - What's the difference? செ.சொ.பே.மு. சூடாமணி - 184 வது பாடல் சூடாமணி நிகண்டு, சரஸ்வதி மகால், பக்கம் 590- 594 "தூசியுங் கூழையு நெற்றியுங் கையும் அணியு மென்ப தப்படைக் குறுப்பே. கூழை யென்பது பேரணி யாகும். தாரே முன்செல் கொடிப்படை யாகும்." (402-405) -பிங்கலம் "போரியல் அன்றும் இன்றும்" நூல் படிமப்புரவு:- நானே கணினியில் உருவாக்கியது தொகுப்பு & வெளியீடு நன்னிச் சோழன்
  6 points
 32. தமிழ்நாட்டில் தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்து தமிழ் பேசிவரும் தெலுங்கர்களை மலையாளிகளை கன்னடர்களை நாங்கள் தமிழர்களாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அந்த அடையாளத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் ஆயத்தமாக இல்லை. இவர்கள் தங்களை ஒருபோதும் தமிழர் என்ற அடையாளத்துக்குள் வர ஆயத்தமாக இல்லை. தமிழகத்தில் தொடர்ச்சியாக வாழ்ந்து வருவதால் தம் மொழிவாரி மாநிலங்களுக்குச் செல்லப்போவதும் இல்லை. தமிழகத்தை தங்கள் ஆட்சிக்குள் வைதிருப்பதற்கு திராவிடம் என்ற சொல் அவர்களுக்குத் தேவை. தமிழ் தான் திராவிடம் என்று வடமொழியில் சொல்லப்பட்டது என்றால் அதை தமிழ் என்றே சொல்லிவிட்டுப்போவதில் என்ன சிக்கல் இருக்கின்றது? அது நிற்க ஒரு நல்ல சித்தாந்தத்துக்கு திராவிடச் சித்தாந்தம் என்று பெயர்வந்து விட்டது வைத்துக்கொண்டாலும், அந்தச் சித்தாந்தம் ஒரு குடும்பம் மட்டுமே ஆட்சி செய்யும் அரசியலுக்குப் பயன்படுவதான் துயரம். இவர்கள் நினைப்பது போல உதய்ணா எல்லாம் தமிழகத்தின் முதல்வராகிவிட முடியாது. இப்படியே போனால் அடுத்த தலைமுறை திராவிடச் சித்தாந்தங்களில் இருந்து வெளியில் வந்துவிடும்.
  6 points
 33. எங்களுக்கு புரிந்துவிட்டது சாரே லட்சக்கணக்கில் வரிசையில் மக்களை நிற்கவைத்து பல கொரோனா கொத்தணிகளை உருவாக்கிய ஓடாவி வைத்தியன் தம்மிக்கவை கைதுசெய்து சங்கிலேயே மிதிக்காமல் அவனது பாணியை வாங்கிக்குடித்து இலங்கை சுகாதார அமைச்சர் ருசியில் மண்டையை ஆட்டியபோதே புரிந்துவிட்டது, எங்களுக்கு புரிந்துவிட்டது இன்னும் உங்களுக்கு புரியவில்லை
  6 points
 34. வெவ்வேறு மொழி பேசும் நிலங்களை இணைத்து ஒரு நாடாக்குவது பூகோள அடிப்படையிலான தேவை அல்லது தேர்வாக இருக்கலாம். அரசியல் அடிப்படையில் அது ஒரு புரிந்துணர்வு, ஒப்பந்தம் அவ்வளவே. அவ்வாறு அமைந்த/அமைத்த ஒரு நாட்டில் ஒவ்வொரு மொழி, அதன் அடிப்படையிலான பண்பாட்டு அடையாளங்களைக் காத்து நிற்பது அங்குள்ள அரசின் தலையாய கடமை. இவ்விதி இலங்கை, இந்தியா, ஸ்விட்சர்லாந்து எனப் பல நாடுகளுக்கும் பொருந்தும். பொது மொழியென ஒன்று வேண்டுமென்றால், அது அந்தந்த நாட்டைப் பொறுத்துத் தீர்மானிக்கப்பட வேண்டும். உதாரணமாக இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கு அவற்றின் அடிமை வரலாறு ஒரு இணைப்பு மொழியான ஆங்கிலத்தைத் தந்துள்ளது. அந்த அடிமை வரலாறுதானே பல்வேறு தேசிய இனங்களின் இணைப்பையும் தந்தது ! அந்த இணைப்பு மொழியைக்கூட ஒரே நிலப்பரப்பிற்குள் வாழும் பாமரர் அனைவரும் அறிய வேண்டிய அவசியமில்லை. ஒரு நிலப்பரப்பில் இருந்து வயிற்றுப் பிழைப்புக்காக இன்னொரு இடம் சென்று கூலி வேலை செய்யும் பாமரன் கூட குறுகிய காலத்தில் அங்குள்ள மொழியைப் பேசக் கற்றுக் கொள்கிறான். இதுதான் உலகெங்கும் நடைமுறை. எனவே வசதிக்காகத்தானே எனும் வாதம் கூட ஏற்புடையதாக இல்லை. மொழி வெறும் தகவல் பரிமாற்ற ஊடகமல்ல. இந்த நாட்டிலுள்ள ஒரு மொழியை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது கூட்டாட்சிக் கொள்கைக்கு எதிரானது. அது மொழி, இன, பண்பாட்டு அழிப்பிற்கான மறைமுக முயற்சி. ஒற்றுமை உன்னதமானது; ஒருமுகத்தன்மை பாசிசமானது. Unity is noble; Uniformity is fascist.
  6 points
 35. ஸ்வேதா தன் இரண்டு வயதாகப் போகும் குழந்தை இழுத்த இழுப்புக்கு மறுப்பேதுமின்றி முன்னே இருந்த வரபேற்பறைக்கு நகர்ந்தாள். அங்கு மிக நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த தன் விளையாட்டுப் பொருட்களைக் குழந்தை ஆழமாக ஊடுருவிப் பார்த்தது. அவற்றைப் பரபரவென விதம் விதமாக மாற்றியடுக்கி தன்னுடைய குழந்தை உலகை இன்னும் அழகாக்கி மகிழ்வடைந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு . பரசவத்தில் கைகளைக் கொட்டிச் சிரித்தது. ஸ்வேதா தன் மழலையின் உலகோடு தன்னை சேர்த்துக் கொள்ள முயன்று, தோற்றுப் போனவளாய் குழந்தைக்குப் பக்கத்தில் இருந்த கதிரையில் தன்னைச் சாய்த்துக் கொண்டாள். அன்று மதியம் தன் கணவனோடு நடந்த சம்பாசனையோடு அவள் மனசு தானாக ஒட்டிக்கொண்டது. "என்ர கார் திறப்பைக் கண்டனீங்களோ?" அவளைப் பார்த்துக் கதைக்க நேரமில்லாமல் அவன் தன் கண்களால் திறப்புக் கோர்வையைத் தேடியபடியே கேள்வியைத் தொடுத்தான். "இருங்கோ தேடிப் பார்க்கிறன்!" அவள் தன் கணவன் தன்னைப் பார்த்துப் பேசக்கூடும் என்ற நம்பிக்கையில் அவனைப் பார்க்க அவன் தனது பரபரப்புக்குள் அமிழ்ந்து போயிருந்தான். அவள் தன் ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டே அவன் வழமையாகத் திறப்பைத் தொலைக்கும் இடங்களைத் தேடிப்பிடித்து, அவன் திறப்புக் கோர்வையைக் கண்டு பிடித்தாள். "இந்தாங்கோ திறப்பு, நீங்கள் இருந்த கதிரையில தான் பின்னுக்கு விழுந்து போய் கிடந்தது.” “அப்ப கடையில இருந்து எத்தனை மணிக்குத் திரும்புவீங்கள்?" தொடர்ந்தும் அவள் அவன் மேலிருந்த தன் பாசத்தை வார்த்தைகளில்க் கொட்டினாள். அவள் கைகளிலிருந்து திறப்புக் கோர்வையை வாங்கியபடியே அவளுக்குப் பதில் எதுவும் சொல்லாமல் தொலைபேசி அழைப்பொன்றில் அவன் தொலைந்து போயிருந்தான். “கடையை இப்ப அரை மணித்தியாலத்தில திறந்திடுவன், எனக்கு உடனடியாய் பால், பாண் எல்லாம் தேவை! பிறகு நேற்றைக்கு மாதிரி பிந்தி வந்திட்டு தலையைச் சொறிஞ்சு கொண்டு நிக்கிறேல்லை!" யாருக்கோ ஆணைகள் பிறப்பித்தபடி, “கதவை உள்பக்கமாய் தாழ்ப்பாள் போட்டுக் கொள், போட்டு வாறன்!" என்ற தினமும் சொல்லும் வாக்கியத்தை இயந்திரகதியில் சொல்லியபடியே அவள் அன்புக்குரிய கணவன் வீட்டிலிருந்து தன் விலை உயர்ந்த காரில் பாய்ந்து ஏறிக்கொண்டான். அவள் தன் குழந்தையின் உலகில் புதைந்து, தன் ஏமாற்றத்தை மறைக்க முயன்று, தோற்றுப் போய், வெறுமனே தன் குழந்தையைப் பார்த்து ரசிக்கத் தொடங்கினாள். அந்தக் கொடுமையான தனிமையை அவள் வெறுத்தாள். வெளி உலகோடு தொடர்புகள் அறுந்து போன பொழுதுகள் அவளை வாட்டி வதைக்கத் தொடங்கியிருந்தன. அவளுக்கு அவள் காதலில் விழுந்து தவித்த நாட்கள் இதயத்தை அறுக்கத் தொடங்கியது. மெல்ல அரும்பிய காதல்! பாசமாய் மாறி, உறவுகளில் ஊறித் திளைத்திருந்த நாட்கள் நினைவில் மிதந்தன. அவனோடு சிரித்துப் பேசி மகிழ்ந்திருந்த தருணங்களை எப்படி, எப்போது இழந்தாள்? எதற்காக இழந்தாள் ? அவளால் மேற்கொண்டு சிந்திக்க முடியவில்லை. நினைவுகளின் வசீகரத்தில் இதயத்தில் சில்லென்ற தூவானம் தட்ட, தனது காதலனை பார்க்கத் துடித்த அவள் கண்களை வலிகள் தழுவிக்கொண்டன. 88888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 அவள் குழந்தை எதை எடுத்து எப்படிஆரம்பிப்பது என்று தீவிரமாக ஒரு நிமிடம் யோசித்தது. அதனுடைய சுருண்ட குழல்முடிகள் முகத்தில் வீழ்ந்ததை அதன் பிஞ்சுக் கைகள் பின்னே தள்ளி விட்டன. தனக்குப் பிடித்த புகையிரதப் பெட்டியை எடுத்துப் பொருத்தி அதனுள் இருந்த தனிப் பெட்டிகளை வெளியே எடுக்க முன்பு தன் அம்மாவை அன்போடு பார்த்து கைகளை நீட்டியது. ஸ்வேதாவின் கைகள் நடுங்கத் தொடங்கின. தன் தலையை அவள் தாங்கிப் பிடித்துக் கொண்டாள். தேகம் முழுவதும் வியர்த்துக் கொட்டத் தொடங்க அவள் மேசையை இறுக்கிப் பிடித்துக்கொண்டாள். கண்கள் இருண்டன. எங்கோ ஒரு இருண்ட பாதாளத்தின் அறையொன்று திறந்து அவளை உள்வாங்கத் தயாராக இருந்த வேளை திடீரெனக் கேட்ட மழழையில் எல்லாமே மறைந்து போய் அவள் சுய நினைவு திரும்பினாள். “ரா ரா டிரைன்!” குழந்தையின் குழி விழுந்த கன்னச்சிரிப்பு சலங்கை மணிகளாகச் சிதறி விழுந்தது அபிராமி என்ற பெயரில் இருந்த ரா சத்தத்துக்கு அம்மாவும் அப்பாவும் கொடுத்த அழுத்தத்துக்கு குழந்தை தன் காதில் விழுந்த ஒலிகளுக்கேற்ப தன் பெயரை ராரா என்று மாற்றி அமைத்துக் கொண்டது. “அப்பா? அப்பா? “ ரா ரா தேடியபடி அம்மாவை நிமிர்ந்து பார்த்தது. அம்மாவின் சிரித்த முகத்தில் திடீரென்று படிந்த சோகத்துக்கான காரணத்தை உணரக்கூடிய வயதில்லாவிட்டாலும் ரா ரா அம்மாவின் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டது. அவள் நிமிர்ந்து தன் திருமண நாளில் எடுத்த புகைப்படத்தை வாஞ்சையோடு உற்றுநோக்கினாள். அவள் கணவன், அவளுக்குப் பக்கத்தில் புன்னைகையுடன் நின்றிருந்தான் . அவள் பூச்செடிக்கு தண்ணீர் ஊற்றத் தொடங்கினாள். குண்டு மல்லிகைநேற்றுத்தான் மூன்றே மூன்று பூக்களை பிரசவித்திருந்தது. இரண்டு பூக்கள் ஒன்றை ஒன்று தழுவியபடி ஒரு கிளையிலும் இன்னொரு மல்லிகை தனியாக மற்றைய கிளையிலும் பிறந்திருந்தன. வரவேற்பறை எங்கும் மல்லிகையின் வாசனை பரவியிருந்தது. இதமான வாசனை நாசித்துவாரமெங்கும் தொட்டு இதயத்தை ஊடுருவிப் பார்த்தது. குழந்தை மீண்டும் தாயை நிமிர்ந்து பார்த்து கை கொட்டி சிரித்து, தான் பொருத்திய ரயில் தண்டவாளங்களை காட்டமுயற்சித்தது. அவள் கண்களில் குண்டு மல்லிகைகள் மட்டும் மணம் வீசின. தன்னந்தனியே பூத்திருந்த ஒற்றை மல்லிகை அவள் கண்களில் நிலைத்து நின்றது! “அம்மா! “ராரா மழலை பேசியது! ஸ்வேதாவின் கண்களில் மல்லிகைகளின் தழுவல். ராரா எழும்பி தாயை நோக்கி அடி எடுத்த போது அதன் ஒன்றரை வயதுப்பாதங்கள் லேசாகத் தள்ளாடின. அந்தத் தள்ளாடலில் திடுக்குற்றதில், அவள் இயல்புக்கு மாறினாள். அவள் கைகளில் இன்னும் நடுக்கம். குழந்தையைத் தாங்கிப் பிடித்தாள். குழந்தை வசீகரமாய் புன்னகைத்தது.. அவளையும் அப்புன்னகை வசீகரித்துக் கொண்டது. ராராவின் தண்டவாளங்கள் மிகத் திறமையுடன் பொருத்தப்பட்டு, வளைந்து நெளிந்துஓடிக் கொண்டிருந்தது. அதிலும் ஓடிக் கொண்டிருந்த மூன்று ரயில் பெட்டிகள் அந்த தண்டவாளங்களையும் நிஜமாக்கின. மிகத் தத்ரூபமாக இணைக்கப்பட்ட தண்டவாளங்களையும் புகையிரதப் பெட்டிகளையும் தன் தாய் தொட்டுப் பார்ப்பதை ராராவேடிக்கை பார்த்தது. ராரா பெட்டிகளை முன்னுக்குத் தள்ளி ஓடப் பண்ணியது. திடீரென ஒரு புகையிரதப் பெட்டி தனியாக நிற்க மற்றைய இரண்டும் சேர்ந்து ஒடத் தொடங்கின. தனியே நின்ற புகையிரதப் பெட்டியை மீண்டும் அவள் கண்கள் வேதனையோடு தள்ளி முன்னேகொண்டு வர முயற்சித்துத் தோற்றுப் போனது. “அம்மா!” மீண்டும் மழலை பேசியது ராரா. அவள் கண்களில் மீண்டும் இரண்டு ரெயில்பெட்டிகள். ஒற்றையாய் நின்ற ஒரு புகையிரதப் பெட்டி! ராராவின் கை வண்ணத்தில் தண்டவாளங்கள் நிலத்தில் இணைக்கப்பட்டு வரவேற்பறையை சுற்றி வந்து மீண்டும் இணைந்திருந்தன. தனியே நின்ற புகையிரதப் பெட்டியை திரும்பிப் பார்த்த ராரா ஒரு வினாடி காத்திருந்து, பின் சுதாகரித்து சேர்ந்திருந்த இரண்டு ரெயில் பெட்டிகளையும் ஒரு திறமை வாய்ந்த ஓட்டுனராய்த் தண்டவாளத்தில் செலுத்தத்தொடங்க அவள் திரும்பவும் கண்களால் அந்த ஒற்றை புகையிரதப் பெட்டியை முன்னே தள்ளிவிட முயன்று தோற்றுப் போனாள். சிறிது நேரத்தில் ராரா ரெண்டு பெட்டிகளையும் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே கொண்டு வந்து ஒற்றையாய் நின்ற ரெயில் பெட்டியின் பின்னே நிறுத்தியது. தனியாக நின்ற புகையிரதப் பெட்டியை முன்னும் பின்னும் தள்ளி மற்றைய ரெண்டு பெட்டிகளுடன் அவள் சேர்க்கப் பிரயத்தனப்பட்ட அந்தக் கணம் அவளுக்கு யுகங்களாய்த்தெரிந்தது. அவள் தன் குழந்தையுடன் தனித்துப் போனது எப்போது? காதலில் மயங்கிக் கிடந்த அவளும் அவள் காதலனும் அந்தக் காதலும் கூட மங்கிப் போன காட்சிகளாய் மனதில் ஒரு மூலையில் கிடந்ததை அவள் அறிந்த போது அவளுக்கு அயர்ச்சி மேலிட்டது. அவனை நினைத்து ஏங்கிய மனத்தைத் தேற்ற வழியின்றி ஸ்வேதா துவண்டு போனாள். கைத் தொலைபேசி அலறியது. அவள் நடுங்கிய கைகள் பதறித்துடிக்கத் கைத்தொலைபேசியை எடுக்க முயற்சித்ததில் அதில் தெரிந்த புகைப்படத்தையும், பின் தானே இணைப்பை அழுத்தி அதில் கேட்டகுரலையும் கிரகித்து, குழந்தை பாசமாய் மழலை பேசியது. ஸ்வேதா எழுந்து போய் தன் குழந்தையிடமிருந்து தொலைபேசியை வாங்கிக் கொண்டாள். "ஹலோ ஸ்வேதா!" அதே காந்தக்குரல். தொலைந்து போன அவள் காதலன்! "ஹலோ, காந்தன்!" ஸ்வேதாவின் குரலில் அவள் மனதில் புதையுண்டிருந்த அத்தனை காதலும் வயப்பட்டிருந்தன. அவள் தன்னை மறந்தாள். "நேற்றைக்கு நான் பாங்கில போட்ட ரெண்டு செக்கும் (cheque) துள்ளீட்டுதாம். இப்பிடியே போனால் என்ன செய்யிறதெண்டு ஒண்டுமாய் விளங்கேல்ல. நான் பின்னேரம் பாங்க் மனேஜரை சந்திக்கிறதுக்கு ஏற்பாடு செய்திருக்கிறன். என்னைப் பார்த்துக் கொண்டிருக்காமல் சாப்பிடு, ஆறுதலாய்க் கதைக்கிறன்." காந்தன் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டு அவளுக்காகக் காத்திராமல் தொடர்பைத் துண்டித்தான். ஒற்றை மல்லிகையும் தன்னந் தனியே நின்ற புகையிரதப் பெட்டியும் அவள் கண்களில் மீண்டும் நிழலாடின. அவள் திடீரென மின்சாரத்தில் தாக்குண்டவள் போல தன் திருமண புகைப் படத்தையும் தன் கைத் தொலைபேசியில் தெரிந்த படத்தையும் மீண்டும் ஒரு முறை பார்த்ததில் அவளுக்கு அவர்கள் இருவரையும் இப்போது நன்றாகப் புரிந்தது. இருவரும் ஒன்றேயாகினும், தொலைந்து போன தன் காதலனைக் காணாமல் ஸ்வேதா மீண்டும் தடுமாறத் தொடங்கினாள். நிஜங்களின் வலியில் அவள் துவண்ட நிமிடங்கள் யுகங்களாய் மாறத்தொடங்கின.
  6 points
 36. தமிழர் பகுதிகளில் தமிழ் நிர்வாகம் மற்றும் தொடர்பாடல் பிரதான மொழி. ஒரு உள்ளூர் செய்தியாளர் உள்ளூரில் பணியாற்றுவதற்கு பிரதான சிங்கள மொழி எதற்கு அவசியம்? ஒரு சிங்கள ஊடகவியலாளர் சிங்கள பகுதியில் செய்தி சேகரிக்கவேண்டுமென்றால் அவருக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டியது அவசியமா? முற்றுமுழுதாக தமிழர் வாழும் ஒரு மாகாணத்தில் நிர்வாக கடமையாற்றும் காவல்துறை அறிந்து வைத்திருக்க வேண்டியது சிங்களத்தையா தமிழையா? உலகில் எங்காவது முழுக்க முழுக்க ஒரு மொழி பேசும் மக்கள் வாழும் பிரதேசத்தில் கடமையாற்றும் பொலிசார் அந்த மொழியை தெரியாது காவல்துறை நிர்வாகம் செய்வது உண்டா? அங்கு வாழும் மக்களுக்கு தமது மொழி தெரியவில்லை என்று விதண்டாவாதம் செய்தது உண்டா? நியாயத்தை கதைப்போம் என்று பெயர் வைத்துக்கொண்டு ஒரே அநியாயமா கதைக்கிறீர்களே சித்தப்பு.
  6 points
 37. சேர்! என்னைக் கல்யாணம் கட்டுங்கோ. உங்களை நான் கவனமாகப் பார்த்துக் கொள்வேன்! கனடா ஈழ….. ஒரு காலத்தில் இந்த வார்த்தைகளைச் சொன்னவளைத் தான் கணவன் பிள்ளைகள் மாமன் மாமி என்று ஒரு கூட்டமாக இன்று கனடா பெரிய பிள்ளையார் கோவிலில் காண்கிறான் சத்யா. அவனுக்கு அது அதிர்ச்சியாக இருக்கவில்லை. எனக்கே கல்யாணம் கட்டும் வயதில் பிள்ளைகள் இருக்கும் போது நான் காதலித்தவளுக்கு இருக்காதா என்ற எண்ணமே அவன் மனம் முழுவதும் வியாபித்து இருந்தது. கோவில் உட்பிரகாதத்தை சுற்றி வரும் போது அவள் மூன்று முறை திரும்பிப் பார்த்துவிட்டாள் கூட வந்தவர்களுக்குத்; தெரியாமல். அவள் கதைக்க விரும்புகிறாள் என்பதை இதழ் ஓரத்தில் தோன்றி மறைந்த புன்னகை இருமுறை சொல்லிக் காட்டிவிட்டது. ஆனால் அந்தப் புன்னகையைத் தொடர்ந்து ஓரக் கண்கள் பயத்துடன் கணவனையும் பார்த்துக் கொண்டதையும் சத்யா கவனிக்கத் தவறவில்லை. அவன் எழுந்து வரமாட்டான் என்று சத்யாவுக்குத் தெரியும். முச்சக்கர வண்டியில் இருந்து கொண்டு தாயுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தான் அந்தக் கணவன். கால் பழுது பட்டிருக்க வேண்டும். கவலையோடு மகனின் காலைத் தடவிக் கொண்டிருந்தாள் அந்த அம்மா. அவர்கள் கவலை அவர்களுக்கு. நீங்கள் சத்யன் மாஸ்டர் தானே? என்னை உங்களுக்குத் தெரிகிறதா நான் மேகா. நீலமேகலா. உங்களிடம் எண்பதாம் வருடம் வன்னியில் இருந்து வந்து தமிழ் படிச்சனான் மாஸ்டர். பெருமாள் சன்நிதியின் பின் புறத்தில் யாரும் காணாத ஒதுக்குப் புற ஒற்றை வழியில் எவரும் வராத போது எதிர்ப்புறமாக வந்து தயக்கத்துடன் கேட்டாள் அவள். எங்கள் காதல் பக்கங்களில் முக்கியமானவற்றைக் கிழித்து விட்டு வெறும் முகவரி பற்றி மட்டும் அவள் பேச நினைக்கிறாள் என்பது சத்யாவுக்குத் தெரிகின்றது. தெரியும். தெரியுமா? அப்ப ஏன் நான் பார்த்தும் பார்க்காமல் இருந்தீர்கள்? எனக்கு உங்களைக் கண்டதும் கூப்பிட்டுக் கதைக்க வேண்டும் போல இருந்தது. கூட வந்தவை ஏதாவது நினைச்சாலும் என்ற பயத்தில் தான் தெரியாதது போல இருந்தேன். இவ்வளவு காலம் போயும் அப்படியே தான் இருக்கிறீங்கள் மேகா. பேச்சின் திசையை மாற்றினான் சத்யா. உண்மைதான். எவ்வளவு காலம் போனாலும் எல்லாம் குத்திய முள்ளுப் போல அப்படியே தான் இன்னமும் இருக்கிறது மாஸ்டர். நான் சொல்வது மனசிலே. அவள் தலை கவிழ்ந்து சொன்னாள். தலைமேல் கூப்பிய கையோடு தேவாரம் பாடிக்கொண்டு வந்த ஒரு ஆச்சி தம்பி கொஞ்சம் விலகப்பா அங்காலே போவதற்கு என்றாள். அது தான் அவர் விலகிட்டாரே. இனி எங்கே விலகுவது? என்று அந்த ஆச்சிக்குச் சொல்லிச் சிரித்துக் கொண்டு திரும்பிப் போனாள்; மேகலா. காதலில் தோற்பது ஒரு கவலை என்றால் அந்தக் காதலியை திரும்பவும் காண்பது அதைவிடக் கவலை என்று தான் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் விட தாங்க முடியாத கவலையொன்று காதலிலே உண்டு. அது அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும். அது தான் காதலித்தவள் கண்ணுக்கு முன்னாலே தன் கணவனுக்கு செய்யும் பணிவிடைகளைக் காண்பது. அதைப் பார்த்து ஒரு பொறாமை வருமே அது தான் காதலில் தோற்ற மனங்களைச் சுட்டுத் தகனம் செய்கிற மிகப்பெரிய துன்பம். ஆறாத ரணம். மனதிலே அன்பைக் கலைத்துவிட்டுக் காமம் புகுந்துவிடும் நேரம் அது. சத்யா பார்த்துக் கொண்டிருக்க முழங்கால்களில் கணவனுக்கு முன்னால் மண்டியிட்டு பாயில் இருந்து கொண்டு கணவனின் நெற்றியில் விபூதியைப் பூசிவிட்டு அவனின் கண்களைத் தன் ஒரு கையால் பொத்திக்கொண்டு உதடுகளால் நெற்றியை ஊதினாள் மேகலா. அவளின் மறு கை மடிக்கப்பட்டு முழங்கை மட்டும் அவனின் மடியிலே ஊன்றப்பட்டு இருந்தது. தாவணிச் சேலை மட்டும் நிலத்திலே சரிந்து அவன் கால் விரல்களோடு கதைபேசிச் சிரித்தது. இனியும் கோவில் நின்றால் தற்கொலை தான் செய்து கொள்ள வேண்டிவரும் என்று நினைத்துச் சத்யா புறப்படத் தயாரான போது மாஸ்டர் என்றாள் மேகலா இப்போது தான் முதலில் கண்டவள் போல. எழுந்து நின்று சிரித்தாள். சத்தியனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. எனக்குப் படிப்பித்த மாஸ்டர் மாமி என்று என்று அவள் அறிமுகப் படுத்தவும் எப்படி மோனே இருக்கிறாய் என்று கேட்டாள் அந்தத் தாய். அதற்குள் அந்தக் கணவனும் கைகூப்பி வணங்கி வரவேற்றுவிட்டான். இருக்கிறேனம்மா. என்ன இவர் காலிலே. என்னத்தைச் சொல்லுறது மோனை. செல் வெட்டினது தான். உன்னைப் போலத்தான் இவனும் பள்ளிக் கூடத்திலே படிப்பிச்சவன். இப்ப தள்ளிக்கொண்டு திரியுறம். எங்கே பெண்சாதி பிள்ளையள் வரல்லையா? தனிய நிக்கிறாய் தம்பி. இல்லையம்மா. நான் தனியத்தான் வந்தனான். இன்றைக்கு என்னுடைய பிறந்தநாள். மனுசி வீட்டிலே சமைக்குது. பிள்ளைகளுக்கு டியூசன். அது தான் ஓ! பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாஸ்டர் என்று ஆங்கிலத்தில் சொன்ன அந்தக் கணவன் மேகலாவைப் பார்த்து படிக்காத அம்மா கூட நல்லா இரு மோனை என்று சொல்லுறா. மேகா நீர் படிப்பித்த மாஸ்டருக்கு ஒரு வாழ்த்துச் சொல்லாமல் நிற்கிறீர். என்ன பழக்கம் இது என்றான். நான் கவனிக்கவில்லை. பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாஸ்டர் என்றாள் மேகலா. சத்யா நன்றி சொல்வதற்குள் இவள் பிள்ளையும் யாழ்ப்பாணத்திலே படிக்கும் போது யாரோ உயிர்ச் சினேகிதியாம். வருத்தம் வந்து செத்துப் போச்சாம். அதின்ரை பிறந்தநாளும் இன்றைக்குத் தான் கட்டாயம் கோவிலுக்கு போக வேண்டும் என்று சொல்லி கால் ஏலாதவனையும் இழுத்துக் கொண்டு வந்து விட்டாள். வருசா வருசம் அந்தப் பிறந்தநாளுக்கு கோவிலுக்கும் போகாமல் இருக்க மாட்டாள். நாள் முழுவதும் சாப்பிடவும் மாட்டாள். ஊர் உலகத்திலே இல்லாத அப்படியொரு சினேகிதம் வைச்சிருக்கிறாள் என்றாள் மாமி.. சத்யா திகைத்துப் போனான். அவனுக்கு அந்த நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வந்தது. அன்று அவனுக்குப் பிறந்த நாள். யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து படித்த வீட்டுக்காரரிடம் டியூசன் முடிய நேரமாகும் என்று அறிவித்து விட்டு வந்த மேகலாவுடன் அந்த மாலை வேளையில் கொட்டடி மீனாட்சி அம்மன் கோவில் முன் மண்டபத்தில் பண்ணைக் கடலைப் பார்த்தபடி அமர்ந்திருந்து பேசிக் கொண்டிருந்தான் சத்யா. களைத்துச் சிவந்து போய் கடலிலே கொஞ்சம் கொஞ்சமாக மறையும் சூரியனை அந்தக் கோவிலில் இருந்து பார்ப்பதே ஒரு தனி அனுபவம். அருகே மனதுக்குப் பிடித்த காதலியும் இருந்துவிட்டால் அங்கே சொர்க்கம் நிர்மானிக்கப்பட்டு விடுகின்றது. வரும் போது நாவலர் சந்தியில் சினிமாச் சுவரொட்டிகளைத் தின்றுவிட்டு ஒரு மாடு போட்டிருந்த சாணியில் வழுக்கி மோட்டார்ச் சைக்கிளோடு விழுந்து முழங்கையில் கல்லுத் தேய்த்த காயத்தை அவளுக்கு இன்னும் காட்டவில்லை சத்யா. சொன்னால் கவனமில்லை என்று ஏசுவாள் அழுவாள் என்று பயம். பிறந்த நாள் பரிசாக ஒரு மொண்டியா மணிக்கூட்டைக் கையில் கட்டிவிட்ட போது தான் காயத்தை அவள் பார்த்துவிட்டாள். கத்தினாள். உங்களுக்கு ஒன்று என்றால் நான் என்ன செய்கிறது என்று அழுதாள். பின்பு சொன்னாள். இது வேறு ஒன்றுமில்லை. காலையிலே பிறந்த நாளுக்கு முட்டை போட்ட கேக் வாங்கி யோசிக்காமல் இரண்டு பேரும் சாப்பிட்டோம் இல்லையா? அது தான் கடவுளுக்குப் பொறுக்கல்லை. உடனேயே காட்டிப் போட்டுது. நான் இந்தக் கோவில்லே இப்பவே சத்தியம் பண்ணுறேன். இனி உயிர் உள்ள வரைக்கும் உங்கள் பிறந்த நாள் அன்றைக்கு எதுவும் சாப்பிடாமல் விரதம் இருப்பேன். ஏதாவது ஒரு கோவிலுக்கு போட்டு வந்து தான் தேத்தண்ணீர் கூடக் குடிப்பேன் சரியோ. பொறுங்கோ வருகிறேன் என்று சொல்லிலிட்டு சத்யா கீழே ஓடினான். இரண்டு தட்டிலே பிரசாதம் வாங்கிக் கொண்டு வந்து அம்மா செத்துப் போன உறவுக்காக சாப்பிடாமல் இருக்க வேண்டாம் என்று உங்களுடைய மருமகளுக்கு சொல்லுங்கோ அம்மா. கடவுள் இனிக் கோவிக்க மாட்டார். இதைச் சாப்பிடச் சொல்லுங்கோ என்றான் சத்யா. இல்லை நான் இன்றைக்குச் சாப்பிட மாட்டேன். விரதம். நான் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவள். என் சினேகிதிக்காக அம்மனுக்கு முன்னாலே செய்த சத்தியம் இது. சினேகிதி தான் என்னோடு இல்லாமல் போனாலும் அவள் தொடக்கி வைத்த நினைவுகள் இன்னமும் என் மனதுக்குள்ளே ஈரமாகத் இருக்குது. கோவிக்காதையுங்கோ மாஸ்டர். அது சொல்வழி கேளாது மோனை. தான் பிடிச்சது தான் சரியென்று நிக்கும்;. நீ அதிலே எனனுடைய பேத்திகள் இரண்டு பேரும் நிக்கினம். அவையைச் சாப்பிடச் சொல்லிக் குடு தம்பி. அதுகளுக்குப் பசிக்கும். சத்யா அந்தப் பிள்ளைகளிடம் தட்டுகளைக் கொடுத்துவிட்டு வந்தான். நான் தப்புப் பண்ணிவிட்டேன் என்று மனம் அழுதது. சரி மாஸ்டர் நாங்கள் போயிட்டு வாறோம். மனைவி பிள்ளைகளைக் கேட்டதாகச் சொல்லுங்கோ. உங்களுடைய பிள்ளைகளுக்கும் என்னுடைய பிள்ளைகள் வயது தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஒருவேளை கூடவோ தெரியாது. கவனமாகப் படிப்பியுங்கோ. உங்களைக் கண்டது சந்தோசம் என்ன என்று சொல்லிச் சிரித்தாள் மேகலா. அவள் என்ன கேட்கின்றாள் என்று சத்யாவுக்குத் தெரியும். என்னை விட்டு ஓடிப்போய் உடனேயே சந்தோசமாகக் கல்யாணம் பண்ணிப் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டு விட்டீர்களா என்பதைத்தான் ஒருவேளை கூடவோ தெரியாது என்று அவள் ஒரு வார்த்தையை வயதோடு சேர்த்துக்கொண்டாள் என்பது சத்யாவுக்கு மட்டும் தெரியும். இல்லை எனது பிள்ளைகளுக்கும் இவர்களுடைய வயது தான் இருக்கும் என்ற பதிலின் மூலம் உம்மை நான் முந்திக்கொண்டு ஓடவில்லை என்று மறைமுகமாகச் சொன்னான் சத்யா. அதை விளங்கிக் கொண்டு புன்னகைத்தாள் மேகலா. சத்யாவுக்கு வருத்தம் தான். இவ்வளவு தூரம் பேசிக் கொண்ட பிறகு கூட ஒரு சம்பிரதாயத்துக்காக என்றாலும் ஒரு நாளைக்கு மனைவி பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு வீட்டுக்கு வாங்கோ மாஸ்டர் என்று இவள் கேட்காமல் போகின்றாளே சரி அதுதான் வேண்டாம் போன் நம்பரையாவது தந்து கதையுங்கோ என்று சொல்லியிருக்கலாம் எதுவுமே சொல்லாமல் போகின்றாளே என்று துடித்தான் சத்யா. பொறுக்க முடியாமல் அம்மா உங்களை எனக்கு நல்லாகப் பிடிச்சிருக்கு. ஒரு நாளைக்கு மகனையும் மருமகள் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வாங்களேன் என்று மாமிக்குத் தூண்டில் போட்டுப் பார்த்தான் சத்யா. உங்களுக்கு மாமியை விருப்பம் என்றால் இப்ப வேண்டும் என்றாலும் கூட்டிப் போங்கோ எங்களுக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை. ஒரு கிழமை உங்கள் வீட்டிலும் மாமி இருந்து பார்க்கட்டும் என்ற தன் பதிலால் உன் வீட்டுக்கு நான் வர மாட்டேன் என்று அறிவித்துவிட்டு திரும்பினாள் மேகலா. மாஸ்டர் எனக்கு காலிலே பிரச்சனை வந்த பிறகு நல்ல மனுசரை சந்தித்தது மிகவும் குறைவு. அதிகம் வெளியிலும் நான் போவதில்லை. உங்களைப் போல படித்த வர்க்கத்திலே நட்பு இருந்தால் நல்ல விசயங்களைக் கதைக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் மேகாவின்ரை செல் நம்பரை வாங்கிக் கொண்டு போங்கோ. எனக்குப் போன் இல்லை. அது தேவையுமில்லே. மேகா மாஸ்டருக்கு உமது நம்பரை எழுதிக் கொடுமப்பா நில்லுங்கோ மாஸ்டர் அருச்சனை அலுவலகத்திலே ஒரு பேனை வாங்கி எழுதிக் கொண்டு வாறேன் என்ற மேகலா சற்று நேரத்தில் எழுதி வந்து தந்துவிட்டு விடை பெற்றாள். கடவுளே எனது இன்றைய பிறந்த நாளுக்குத் தான் மிகப் பெரிய உறவுப் பரிசு ஒன்றைத் தந்திருக்கின்றாய். நான் தொலைத்த உறவை திரும்பவும் தேடித் தந்திருக்கின்றாய்! என்னவளோடு நான் என்றுமே பேசிக்கொண்டு இருக்க வேண்டும். அவளோடு பேசிக் கொண்டு இருக்கும் போதே செத்தும் விட வேண்டும். மேகா எழுதித் தந்த துண்டை சட்டைப் பையில் வைத்துக் கொள்ள விரும்பவில்லை சத்யா. அருச்சனை செய்த சந்தணம் குங்குமம் தேங்காய் இருந்த பையிலே கவனமாக வைத்துக் கொண்டு காரில் ஏறினான். அவன் மனம் முழுவதுமே மேகலா வியாபித்திருந்தாள். யாழ்ப்பாணத்துக் கல்வி உலகத்துக்கு அவன் மனம் சென்று பழைய நினைவுகளை ஒவ்வொன்றாகத் தேடத் தொடங்கியது. மாஸ்டர் உங்களை இரண்டு பிள்ளைகள் வந்து தேடிக் கொண்டு போகினம் என்று அறிவித்தாள் அந்தத் தனியார் கல்வி நிலையத்தின் வரவேற்பு அறைக்குப் பொறுப்பான பெண். என்னையா யாரது என்று கேட்டான் சத்யா. அடேய் அந்த இரண்டாவது ஓ. எல் வகுப்பிலே வடிவான உயரமான வெள்ளைப் பிள்ளை ஒருத்தி இருப்பாளடா. வன்னியிலே இருந்து படிக்க வந்தவள் அவளும் மற்றது அந்த வாயாடி ஸ்ரெலா அவளும் தானடா வந்து தேடிக் கொண்டு போறாளவை. ஏதாவது பிரச்சனை என்றால் ஸ்ரெலாவின்ரை ஆட்கள் சுறாவுக்கு குத்துற மண்டாவால தான் ஏத்துவான்கள் கவனமாக இரு என்று அடுத்த அறையிலிருந்த ஆசிரிய நண்பன் சொல்லிச் சிரித்தான். சேர் இன்று காலை வகுப்பிலே ஒரு பையனை நீங்கள் படிக்கவில்லை ஏசினீங்களே அப்போது நீங்கள் சொன்ன கதை உண்மையாக நடந்ததா? நீங்கள் படிக்க கஸ்டப்பட்டீங்களா? என்று கேட்டாள் நீலமேகலா சத்யாவிடம் தனிமையில். உண்மைதானம்மா. படிக்கக் காசில்லாமல் நான் பட்ட கஸ்டம் கொஞ்சமல்ல. கற்பூரக் கம்பனியிலே வேலைக்குப் போய்த்தான் நான் படிக்கக் காசு சேர்த்தேன். இவன்களுக்குப் படிக்கச் சொல்லிப் பெற்றார் காசை அள்ளி இறைச்சாலும் படிக்கிறான்கள் இல்லை. அது தான் கோபம் வந்தது. சேர் சின்ன வயசிலே நீங்கள் பட்ட கஸ்டம் போகட்டும். நீங்கள் என்னைக் கல்யாணம் கட்டுங்கோ. வன்னியிலே எங்களுக்கு நிறைய வயல் இருக்குது. திருகோண மலையிலும் வவுனியாவிலும் கடை இருக்குது. நான் உங்களைக் கவனமாகப் பார்த்துக் கொள்வேன். சத்யாவின் பதிலுக்குக் காத்திராமல் தானே ஒரு முடிவைச் சொல்லி விட்டு மேகலா போய் விட்டாள். அதன் பின்பு யாழ்ப்பாணத்து உறவினர் வீட்டில் தங்கிப் படித்த நேரத்தை விட மேகலா சத்யாவுடன் இருந்த நேரம் தான் அதிகம் என்று சொல்லும் அளவுக்கு அந்த உறவு மலந்து இருந்தது. எங்கள் வீட்டிலே யாழ்ப்பாணத்துப் பையன் என்றால் மறுக்க மாட்டினம். உங்கள் வீட்டிலே தான் வன்னி அது இது என்று ஏதாவது பிரச்சனை வருமோ தெரியாது. நான் பார்த்த அளவிலே யாழ்ப்பாணத்தாருக்கு சரியான கொழுப்பு இருக்கு என்பாள் மேகலா. உமக்கு அப்படி ஒரு பயம் இருந்தால் இப்பவே உம்மை எங்கள் வீட்டுக்குக் கூட்டிப்போய் அவர்கள் வாயாலேயே நீ தான் எங்கள் மருமகள் என்று சொல்ல வைக்கட்டுமா இல்லை இல்லை அதெல்லாம் வேண்டாம். நான் உங்களை நம்புறன். நீங்கள் சொன்னால் சரிதான். பல காதல்கள் சாதியாலே அழிந்தன. பல காதல்கள் சாத்திரத்தால் அழிந்தன. பல காதல்கள் பணத்தாலே அழிந்தன இன்னும் பல காதல்களைப் பெற்றார் அண்ணன் தம்பிகளே அழித்து ஒழித்தனர் யாழ்ப்பாணத்தில்! ஆனால் இவை எதுவும் இல்லாமல் நன்றிக் கடனுக்குப் பிராயச்சித்தமாக தனது காதலைத் தியாகம் செய்ய வேண்டிய காலம் ஒன்று வரும் என்று சத்யா எதிர்பார்த்து இருக்கவில்லை. சத்யா ஏ.எல் படித்துவிட்டு வேலையில்லாமல் வீட்டிலே இருந்த உம்மை இன்றைக்கு யாழ்ப்பாணத்தின் முன்னணி ஆசிரியர்களில் ஒருவர் ஆக்கியது நாங்கள். பட்டி தொட்டியெல்லாம் உமது பெயரைச் சுவரொட்டியாக ஒட்டிப் பிரபலப்படுத்தியது நாங்கள். அதுக்கு நீர் செய்யும் நன்றிக் கடனா இது? உம்முடைய கதை வெளியே பரவினால் எவன் எங்களை நம்பிப் பொம்பிளைப் பிள்ளைகளைப் படிக்க அனுப்புவான் என்று சொல்லும் பார்ப்போம். தயவு செய்து இந்தக் காதல் கத்தரிக்காய் ஒன்றும் உமக்கு வேண்டாம். இந்த டியூட்டரியை நம்பித்தான் எங்கள் எல்லோருடைய வாழ்க்கையும் இருக்கு. நீர் ஒரு ஆளாலே அத்தனை பேரும் கஞ்சிக்கு அலைய வேணும் என்று நினைக்கிறீரா. உம்மை எவ்வளவு உயர்வாக நினைத்திருந்தோம். இப்படிப் பண்ணியிருக்கிறீரே. இப்ப நினைச்சாலும் உம்மை நீக்கிவிட்டு வேறு ஆளைப் போட முடியும். அது பிரச்சனையைத் தீர்க்காது என்ற படியால் தான் உம்முடைய காலிலே விழுந்து கெஞ்சிக் கொண்டிருக்கின்றோம். தயவு செய்து நாங்கள் சொல்வதைக் கேளும். உங்களுக்கு என் காதல் தான் பிரச்சனை என்றால் நான் மேகலா படிச்சு முடித்த பின்பு வன்னியிலே போய் பேசிச் செய்து கொள்கிறேன். அது வரைக்கும் நான் அவளைப் பார்க்கல்லை சரியோ இல்லை நீர் யாரை வேண்டும் என்றாலும் கட்டும். ஆனால் இங்கே படித்த பிள்ளைகள் வேண்டாம். எவ்வளவு காலம் போனாலும் அந்த அவப் பெயர் எங்களைப் பாதிக்கத்தான் செய்யும். இந்த நிலையத்தை நாங்கள் எதிர் காலத்தில் மிகப்பெரிய கல்லூரி ஆக்கும் கனவோடு இருக்கின்றோம். அந்தக் கனவைக் கெடுக்காதையும். யாழ்ப்பாணக் கல்வி உலகத்துக்கு நீர் செய்யும் மிகப்பெரிய உதவியாக இதை நினைத்து எல்லாவற்றையும் கையை விடும். சரி உங்களுக்கு நான் இப்ப என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள் சத்யா நிர்வாகத்தைக் கேட்டான். நீலமேகலாவை நாங்கள் டியூட்டரியை விட்டு வெளியே அனுப்புறம். நீர் அவளோடை இனி ஒரு தொடர்பும் வைக்கக் கூடாது. அவள் வன்னிக்கே போகட்டும். மார்கழியில் பரீட்சை வரப் போகுதே இடையிலே படிப்பைக் குழப்பி அனுப்பினால் பாவம் அல்லவா அதை அவள் முதலிலே யோசித்து நடந்திருக்க வேணும். நீரும் தான்! சத்யா எதுவும் பேசவில்லை. சில நாட்கள் வகுப்புக்கு அவன் வரவுமில்லை. அன்று சத்யா வகுப்புக்கு வந்தான். வகுப்பிலே மேகலா இல்லை. ஸ்ரெலா மட்டும் அவனை ஒரு முறை முறைத்துப் பார்த்துவிட்டுத் தலை குனிந்து இருந்தாள். நீ எல்லாம் ஒரு மனுசனா என்று கேட்பது போலிருந்தது அந்தப் பார்வை. தம்பி யாழ்ப்பாணத்தவனுக்கு அந்தப் பிள்ளையைக் கட்டித்தரக் கூடாது என்ற சுயமரியாதை தலை தூக்கக் கூடியதாக அதின்ரை அப்பனோடு பண்பு தவறிக் கதைத்துப் போட்டினம் உம்முடைய டியூட்டரி ஆட்கள். அவன் படிக்காதவன் என்றாலும் மானஸ்தன். வசதியானவன். அவன் என் நண்பன். அவன் கண் கலங்கியதை முதன் முதலாக நான் அன்றுதான் பார்த்தேன். உம்மைக் காதலித்த ஒரு தப்புக்காக அந்தப் பிள்ளை இந்த முற்றத்திலே அப்பனிட்டை வாங்கின அடிகள் கொஞ்சமல்ல. நாங்கள் மறித்திருக்காவிட்டால் செத்திருக்கும். உன்னை நம்பிப் பிள்ளையைப் படிக்க விட்டால் அவள் என்ன ஏது செய்கிறாள் என்று நீ பார்க்க மாட்டியா? உன்னையும் அவளுக்கு ஒரு அப்பன் என்று நினைத்துத் தானே உனது வீட்டிலே இருந்து படிக்க விட்டேன். நீயும் சேர்ந்தா இந்தக் கூத்தெல்லாம்? என்று கேட்டான் தம்பி அவன். அதுகள் போட்டுதுகள். சரி நீரும் இனி உம்முடைய வேலையை போய்ப் பாருமன். இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் காட்டிவிட்டுத் தெருப்படலையைச் சாத்திக் கொண்டு போனார் மேகலா இருந்து படித்த வீட்டுக்காரப் பெரியவர். இன்றைய கம்பியூட்டர் போன் வசதிகள் எதுவுமே இல்லாத ஒரு காலத்தில் அந்த வீட்டின் முன்னால் நீண்ட நேரம் நின்றான் சத்யா ஏனப்பா ஏதாவது பிரச்சனையே நான் சமைத்து வைத்துவிட்டு பார்த்துக் கொண்டிருக்கிறன். கோவிலாலே வந்து காராலே இறங்காமல் இருக்கிறியள் என்றாள் மனைவி ஜன்னலால் எட்டிப் பார்த்து. சாப்பாட்டைப் போடும் வாறன் என்று சொல்லிவிட்டு அருச்சனைப் பையில் இருந்து மேகலா தந்த துண்டுச் சீட்டை எடுத்து விரித்தான் சத்யா. அவன் ஆவலோடு எதிர்பார்த்த போன் நம்பர் அதிலே காணப்படவில்லை. மரங்கள் என்றால் நிழல் கொடுக்கும் பண்பு அதற்கு இருக்க வேண்டும். ஆனால் அந்த மரங்களே தங்களுக்கு நிழல் தேடி அலைந்தால் அவைக்கு யார் எதனால் எந்த நிழலை எத்தனை தடவைகள் கொடுத்துவிட முடியும்? இன்று இன்னொரு மரத்தினைச் சுற்றிக் கொண்டு வாழும் ஒரு கொடியின் போன் நம்பர் நிழல் கொடுக்குமா? இல்லையே! அதனாலே அதை நான் தரவில்லை. என்ற வாக்கியத்தை மட்டும் தான் அதிலே கண்டான் சத்யா. Rasiah Gnana கனடா ஈழநாடு பத்திரிகையில் நேற்று (15.1.2021) வெளியான சிறுகதை
  6 points
 38. வடக்கு மக்கள் எப்பவும் போர்க் கால சூழலில் வாழ்ந்து பழகியதால் எதையும் சமாளிக்க பழகி விட்டார்கள் ...இப்பவும் புதிதாய் விடு காட்டும் போது கூட குசினியில் விறகு அடுப்பு வைத்து சமைக்க என்று இடம் ஒதுக்குகிறார்கள்...பெரும்பாலும் அவர்கள் காஸ் அடுப்பை நம்பி இருக்கவில்லை ...ஆனால் மட்டு நகரில் இருப்பவர்கள் பெரும்பாலும் காஸ் அடுப்புத் தான் பாவிப்பார்கள் .....அவர்கள் தான் அங்கர் இல்லை ,சீனி விலை கூடி விட்டது என்று அதிகம் அழுகிறார்கள் ...போக ,போக பழகி விடும் நான் தேனீர் ,கோப்பி சீனி இல்லாமல் குடிக்க பழகி விட்டேன் ...மா சாப்பாடும் அதிகளவு குறைத்து விட்டேன் ...ஆனால் சாப்பிட்டவுடன் எனக்கு கட்டாயம் கேக்கோ ,சொக்கிட்டோ வேண்டும்
  6 points
 39. இராணுவ வீரர்.... ஒருவரின் வீட்டுக்குச் சென்று இருந்தேன்... அவரது வரவேற்பறையில் இரண்டு கைகளின் புகைப்படம். யாரோ ஒரு புனிதரின் கைகளாக இருக்கக்கூடும் என்று நினைத்து, அதைப்பற்றிக் கேட்கவே இல்லை. அவரோடு காரில் பயணம் செய்யும்போது, அதேபோன்ற கைகளின் புகைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். ஆவலில் அது யாருடைய கைகள் என்று கேட்டேன். அவர் புகைப்படத்தைக் கையில் எடுத்துப் பார்க்கும்படியாகச் சொன்னார். புகைப்படத்தை அருகில் தொட்டுப் பார்த்தபோது, அது வயதான ஒரு பெண்ணின் கைகள் என்பதைக் கண்டுகொண்டேன். முதுமையின் ரேகை படிந்த நீண்ட விரல்கள். நகங்கள் சுத்தமாக வெட்டப்பட்டு இருக்கின்றன. நரம்புகள் புடைத்துத் தெரிகின்றன. யாராக இருக்கும் என்று மனது..... ஏதேதோ துறவிகளை, ஞானிகளை நினைவுபடுத்தி கொண்டே இருந்தது... அவர் அந்தக் கைகளைப் பெருமூச்சுடன் பார்த்து.... ஆதங்கமான குரலில் அது என் அம்மாவின் கைகள் என்று சொன்னார்... ஆச்சர்யமாக இருந்தது. "எதற்காக அம்மாவின் கைகளை மட்டும் புகைப்படமாக வைத்திருக்கிறீர்கள்?" என்று கேட்டேன். "அந்தக் கைகள்தான் என்னை வளர்த்தன. என் நினைவில் எப்போதுமே அம்மாவின் கைகள்தான் இருக்கின்றன. அம்மாவின் முகத்தைவிட, அந்தக் கைகளைக் காணும்போதுதான் நான் அதிகம் நெகிழ்ந்துபோகிறேன். அம்மா இறப்பதற்குச் சில மணி நேரம் முன்பாக இந்தப் புகைப்படத்தை எடுத்தேன். இந்தக் கைகள் இப்போது உலகில் இல்லை. ஆனால், இதே கைகளால் வளர்க்கப்பட்டவன் உங்கள் முன்னால் உட்கார்ந்திருக் கிறேன். என் அம்மா எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஓய்வு எடுத்ததே இல்லை. அப்பா பொறுப்பற்ற முறையில், குடித்து, குடும்ப வருமானத்தை அழித்து 42 வயதில் செத்துப் போனார். அம்மாதான் எங்களை வளர்த்தார். நாங்கள் மூன்று பிள்ளைகள். அம்மா படிக்காதவர். ஒரு டாக்டரின் வீட்டில் பணிப் பெண்ணாக வேலைக்குச் சேர்ந்தார். பகல் முழுவதும் அவர்கள் வீட்டினைச் சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, நாய்களைப் பராமரிப்பதுபோன்ற வேலைகள். மாலையில் இன்னும் இரண்டு வீடுகள். அங்கும் அதேபோல் சுத்தம் செய்யும் வேலைதான். எத்தனை ஆயிரம் பாத்திரங்களை அம்மாவின் கைகள் விளக்கிச் சுத்தம் செய்து இருக்கும் என்று நினைத்துப்பார்க்கவே மனது கஷ்டமாக இருக்கிறது. இரவு வீடு திரும்பிய பிறகு, சமைத்து எங்களைச் சாப்பிடவைத்து... உறங்கச்செய்துவிட்டு... அதன் பின்னும் அம்மா இருட்டிலேயே கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டு இருப்பார்கள். சமையல் அறையில்தான் உறக்கம். அப்போதும் கைகள் அசைந்தபடியேதான் இருக்கும். எங்கள் மூவரையும் பள்ளிக் கூடம் அழைத்துப் போகையில்... யார் அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடப்பது என்பதில் போட்டியே இருக்கும். அந்தக் கைகளைப் பிடித்துக்கொள்வதில் அப்படி ஒரு நெருக்கம், நம்பிக்கை கிடைக்கும். அதுபோலவே உடல் நலம் இல்லாத நாட்களில் அம்மாவின் கைகள் மாறி மாறி.... நெற்றியைத் தடவியபடியே இருக்கும். அம்மா நிதானமாகச் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை... தனது சகலச் சிரமங்களையும் அம்மா தன் கைகளின் வழியே முறியடித்து எங்களை வளர்த்தபடியே இருந்தார்.... மருத்துவரின் வீட்டில் அம்மா ஒருநாள் ஊறுகாய் ஜாடியை உடைத்துவிட்டார் என்று... அடி வாங்குவதைப் பார்த்தேன். அம்மாவின் கன்னத்தில் மருத்துவரின் மனைவி மாறி மாறி அறைந்துகொண்டு இருந்தார். அம்மா அழவே இல்லை. ஆனால், நாங்கள் பார்த்துக்கொண்டு இருப்பதைத் தாங்க முடியாமல்,.... விடுவிடுவென எங்களை இழுத்துக்கொண்டு அந்த வீட்டில் இருந்து வெளியேறினாள்.... வழியில் பேசவே இல்லை. அம்மாவை எந்தக் கைகளும் ஆறுதல்படுத்தவோ, அணைத்துக்கொள்ளவ ோ இல்லை. அவள் கடவுள் மீதுகூட அதிக நம்பிக்கைகொண்டு இருந்தாள் என்று தோன்றவில்லை... வீட்டில் சாமி கும்பிடவோ, கோயிலுக்குப் போய் வழிபடவோ, அதிக ஈடுபாடு காட்டியதே இல்லை. வேலை... வேலை... அது மட்டுமே தன் பிள்ளைகளை முன்னேற்றும் என்று அலுப்பின்றி இயங்கிக்கொண்டு இருந்தார். சிறு வயதில் அந்தக் கைகளின் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொள்ளவே இல்லை. ஆசையாகச் சமைத்துத் தந்த உணவைப் பிடிக்கவில்லை என்று தூக்கி வீசி இருக்கிறேன். கஷ்டப்பட்டுப் பள்ளியில் இடம் வாங்கித் தந்தபோது படிக்கப் பிடிக்கவில்லை என்று போகாமல் இருந்திருக்கிறேன். கைச் செலவுக்குத் தந்த காசு போதவில்லை என்று அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டில் திருடி இருக்கிறேன். மற்ற சிறுவர்களைப்போல சைக்கிள் வாங்கித் தர மாட்டேன் என்கிறாள் என்று கடுமையான வசைகளால் திட்டி இருக்கிறேன். அம்மா எதற்கும் கோபித்துக்கொண்டதே இல்லை. அம்மா கஷ்டப்படுகிறாள் என்று தெரிந்தபோதும்..... யார் அவளை இப்படிக் கஷ்டப்படச் சொன்னது என்றுதான் அந்த நாளில் தோன்றியது.... கல்லூரி வயதில் நண்பர்களோடு சேர்ந்து சுற்றவும், புதுப் புது ஆடைகள் வாங்கவும் குடிக்கவும் எத்தனையோ பொய்கள் சொல்லி இருக்கிறேன். என் அண்ணனும் தங்கையும்கூட இப்படித்தான் செய்திருக்கிறார்கள். ஆனால், அம்மா அதற்காக எவரையும் கோபித்துக் கொள்ளவே இல்லை. கல்லூரி இறுதி ஆண்டில் மஞ்சள் காமாலை வந்து, நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் அம்மா. அப்போதுதான் அவர் எங்களை எவ்வளவு அக்கறையோடு, ஆதரவோடு காப்பாற்றி வந்திருக்கிறார் என்று புரிந்தது. அதன் பிறகு, என்னைத் திருத்தி கொண்டேன்.. தீவிரமாகப் படிக்கத் துவங்கி, ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்து. . கடுமையாக உழைத்துப் பதவி-உயர்வு பெற்றேன். அம்மாவை என்னுடனே வைத்துக்கொண்டேன். நான் சம்பாதிக்கத் துவங்கியபோதும்,.. அம்மா ஒருபோதும் எதையும் என்னிடம் கேட்டதே இல்லை.... நானாக அவருக்கு எதையாவது வாங்கித் தர வேண்டும் என்று நினைத்து,.... தங்க வளையல் வாங்கித் தருகிறேன் என்று அழைத்துப் போனேன். முதிய வயதில் அம்மா மிகுந்த கூச்சத்துடன், 'எனக்கு ஒரே ஒரு வாட்ச் வேண்டும். சின்ன வயதில் வாட்ச் கட்டிக்கொண்டு வேலைக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அது நடக்கவே இல்லை. அதன் பிறகு, எனக்குள் இருந்த கடிகாரம்.... ஓடு... ஓடு... என்று என்னை விரட்டத் துவங்கியது. அலாரம் இல்லாமலே எழுந்துகொள்ளப் பழகிவிட்டேன். இப்போது வயதாகிவிட்டது. சில நாட்கள் என்னை அறியாமல் ஆறு மணி வரை உறங்கி விடுகிறேன். இரவு உணவை ஏழு மணிக்குச் சாப்பிட்டுவிடுகிறேன். ஒரு வாட்ச் வாங்கித் தருவாயா?' என்று கேட்டார்..... அம்மா விரும்பியபடி ஒரு வாட்ச் வாங்கித் தந்தேன். ஒரு பள்ளிச் சிறுமியைப்போல அதை ஆசையாக..... அம்மா எல்லோரிடமும் காட்டினாள். அதை அணிந்து கொள்வதில் அம்மா காட்டிய ஆர்வம் என்னை நெகிழ்வூட்டியது. அதன் பிறகு அம்மா, நான் திருமணம் செய்து டெல்லி, பெங்களூரு என்று வேலையாக அலைந்தபோது கூடவே இருந்தார். டெல்லியில் எதிர்பாராத நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நான் கூடவே இருந்தேன். 'நாங்கள் ஏமாற்றியபோது எல்லாம் ஏன் அம்மா எங்களை ஒரு வார்த்தைகூடத் திட்டவே இல்லையே..?' என்று கேட்டேன். அம்மா, 'அதற்காக நான் எவ்வளவு அழுதிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாது. ஆனால், அன்று நான் கோபப்பட்டு இருந்தால், என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போயிருப்பார்கள்' என்று சொல்லி, தன் கையை என்னுடன் சேர்த்து வைத்துக்கொண்டார். அப்போதுதான் அந்த முதிய கைகளைப் பார்த்தேன். அது எவ்வளவு உழைத்திருக்கிறது. எவ்வளவு தூய்மைப்படுத்தி இருக்கிறது. எவ்வளவு அன்பைப் பகிர்ந்து தந்திருக்கிறது. அதை ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பிறகு ஒருநாள், எனது கேமராவை எடுத்து வந்து, புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.... இன்று அம்மா என்னோடு இல்லை.... ஆனால், இந்தக் கைகள் என்னை வழி நடத்துகின்றன.... ஒவ்வொரு நாளும் நான் எப்படி வளர்க்கப்பட்டேன் என்பதை இந்தக் கைகள் நினைவுபடுத்துகி ன்றன. இதை வணங்குவதைத் தவிர, வேறு நான் என்ன செய்துவிட முடியும்?" என்றார். ராணுவ அதிகாரியினுடைய முகம் தெரியாத அந்தத் தாயின் கைகளை நானும் தொட்டு வணங்கினேன். அந்தக் கைகள் யாரோ ஒருவரின் தாயின் கைகள் மட்டும் இல்லை.... உலகெங்கும் உழைத்து ஓய்ந்துபோன தாயின் கைகள்..... யாவும் ஒன்றுபோலத்தான் இருக்கின்றன. அவை எதையும் யாசிக்கவில்லை..... அணைத்துக்கொள்ளவும், ஆதரவு தரவும், அன்பு காட்டவுமே நீளுகின்றன. அதை நாம் புறந்தள்ளிப் போயிருக்கிறோம். அலட்சியமாகத் தவிர்த்து இருக்கிறோம். இலக்கு இல்லாத எனது பயணத்தில் யார் யார் வீடுகளிலோ தங்கியிருக்கிறேன். சாப்பிட்டு இருக்கிறேன். எனது உடைகளைத் துவைத்து வாங்கி அணிந்து இருக்கிறேன். அந்தக் கைகளுக்கு நான் என்ன நன்றி செய்து இருக்கிறேன். ஒரு நிமிடம் என் மனம் அத்தனை கைகளையும் வணங்கி, தீராத நன்றி சொன்னது. 'கை விரல்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது.... இன்னொரு கைகள் நம்மோடு சேர்ந்துகொள்ளத்தான்' என்று எங்கோ படித்தேன். அதை நிறைய நேரங்களில் நாம் உணர்வதே இல்லை. நம் மீது அன்பு காட்டும் கைகளுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்...?? முடிவு நம்மிடமே இருக்கிறது...! படித்ததில்_சிலிர்த்தது அம்மாவின் கைகள்
  6 points
 40. மிகவும் பிந்திய பதிவுகளில் இருந்தே ஆரம்பிக்கிறேன். imf இன் SDR விளைவுகளை பின்பு பார்போம், ஏனெனில், SDR ஐ உடனடியாக பாவிக்க முடியாது. விஜேவர்த்தனே இந்த முழு பேட்டியையும் கவனமா கேட்டீர்களா? குறிப்பாக, அந்த உரையாடலில், 36 - 40 நிமிட நேர இடைவெளியில். விஜேவர்த்தனே சொல்வதின் படி ஏற்கனவே உத்தியோகபூர்வ முறையில் (உத்தியோக பற்றற்ற அறிவிப்பால்) SD ஆகி விட்டது என்று நினைக்கிறன். இதை இங்கு எல்லோருக்குமாக சற்று விளக்கமாக எழுதுகிறேன். இங்கே, அவ்வப்போது சொல்லி இருக்கிறேன், சிங்கள அரசின் மத்திய வங்கி அதன் மீது இருக்கும் உண்மையான கடன் தொகையை மறைக்கிறது என்று. இப்பொது சிங்கள அரசின் மத்திய வங்கி, மறைக்கப்பட்டது என்ற கடன் தொகையயை, written off பண்ணி இருக்கிறது, நகைப்பபிலும் கேவலமான கணக்கியல் பதிவின் மூலம். அதை எப்படி என்று விஜேவர்த்தனே விளக்குகிறார் அந்த உரையாடலில், 36 - 40 நிமிட நேர இடைவெளியில். முதலில் தனிமனித உதாரணத்தை வைத்து சுருக்கமாக சொல்கிறேன். பின்பு விஜேவர்த்தனே சொல்வதை சுருக்கமாக சொல்கிறேன். £200, 000 வங்கியில் (lender or creditor) இருந்து கடன் எடுத்து தனி நபர் ஒருவர் (debtor) வீடு வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். 2 வருடங்களின் பின் வீட்டின் விலை (கேள்வி) £100,000 க்கு குறைந்து விடுகிறது. அப்போது கடன் எடுத்தவர், கடன் எடுத்த மொத்த தொகையான £200, 000 இல் £10, 000 கடனை கட்டி முடித்து இருக்கிறார் என்றும் வைத்துக் கொள்வோம். கடன் எடுத்தவருக்கு (debtor) நிலுவையில் இருக்கும் கடன் இப்பொது, £190, 000. கடன் எடுத்து வீடு வாங்கியவர் (debtor) சொல்ல்கிறார், வீட்டின் £100,000 க்கே விலை போகும் (கேள்வி உள்ளதால் ) என்பதால், கடன் எடுத்தவரன் (debtor) நிலுவையில் இருக்கும் கடன் £100, 000 மட்டுமே . இந்த கணக்கியல் , வங்கிக்கே (lender) சரியும் பொருத்தமானதும்.. ஏனெனில், வங்கியின் (lender) இன் பார்வையில் இப்பொது அறவிடக் கூடியது (வீட்டை கடனாளியிடம் இருந்து எடுத்து விற்றபத்தின் மூலம்) £100, 000 மட்டுமே. அதாவது, கடன் கொடுத்தவருக்கான கடன் பத்திரத்தை (loan instrument) , வங்கி (lender), அந்தப loan instrument ஐ வாங்க விரும்பும் வேறு எந்த (சட்ட அங்கீகாரமுள்ள) நிறுவனத்திற்கு £100, 000 க்கு மேல் விற்க முடியாது. கடன் எடுத்தவர் (debtor) இந்த கணக்கியலை (தனி நபர் ஆக) சொன்னால், கடன் எடுத்தவர் பகுதியாக கடன் பொறுப்பில் இஇருந்து வழுவி (default ) விட்டார். சிங்கள அரசின் மத்திய வங்கியும் இந்த அடிப்படையிலான கணக்கியல் விளக்கத்தையே தான் வாங்கிய கடனுக்கு (international sovereign bonds) சொல்கிறது. அதாவது, கடனாளியான (debtor) சிங்கள அரசு, கடன் கொடுப்பவரின் (lender அல்லது creditor ) கணக்கியலை சொல்கிறது. அதாவது, சிங்கள அரசின் international sovereign bonds இன் கடன் எடுக்கும் போது இருந்த கடன் முறியின் விலை விலை (மதிப்பு, face value,), $14.5 பில்லியன், இது ஏறத்தாழ கடன் வாங்கிய தொகைக்கு சமனாக அல்லது சற்று மதிப்பு கூடாவாக இருக்கும் (கூடவாயின் அந்த தொகை கடனாக எடுக்கப்பட்டு இருக்கலாம்). கடன் எடுக்கும் போது face value ஐ, நிதி சந்தைகளே தீர்மானிப்பதால், கடன் எடுக்கும் போது face value உம், market value உம் வேறுபாடு இருக்க முடியாது. இப்பொது, சிங்கள அரசின் இறைமை கடன் தராதரம் (sovereign credit rating) குறைந்துள்ளதால், அதே கடன் முறியின் மதிப்பு $7.5 billion (இற்கு குறைந்துள்ளதாக) நிதி சந்தைகள் மதிக்கின்றன. அதாவது, கடன் எடுக்கும் போது அந்தக் கடன் முறிக்கு இருந்த கேள்வி (demand) இப்போது ஏறத்தாழ பாதியாக குறைந்து விட்டது (தனி நபர் உதாரணத்தில் வீட்டின் கேள்வி, பெறுமதி £100, 000 க்கு குறைந்தது போல). ஆனால், கடனாக பெறப்பட்ட தொகை, அதாவது நிலுவையில் இருக்கும் கடன் இப்போதும் $14.5 பில்லியன். சொறி சிங்களத்தின் மத்திய வாங்கி சொல்கிறது, அதே கடன் முறியின் மதிப்பு $7.5 billion இற்கு சந்தையில் குறைந்துள்ளதால் (தனி நபர் உதாரணத்தில் வீட்டின் கேள்வி, பெறுமதி £100, 000 க்கு குறைந்து இருப்பது போல), சிங்கள அரசின் நிலுவையில் உள்ள கடன் தொகையும் $7.5 billion !!!! அதாவது, கடனாளியான (debtor) சிங்கள அரசு, கடன் கொடுத்தவரின்(lender அல்லது creditor ) கணக்கியலை பதிவிட்டு, ஏறத்தாழ $7 billion ஐ நிலுவையில் உள்ள கடன் இல் இருந்து நீக்கி விட்டது (written off). இப்படி சொறி சிங்கள அரசின் சொறி மத்திய வங்கி பகிரங்கமாக செய்யம் போது, 1) நிதி (மற்றும் ஏனைய ) சந்தைகள் எல்லாமே பூட்டப்பட்டு விட்டது சொறி சிங்கள அரசுக்கு. 2) வேறு நாடுகள் கொடுத்தாலும், (சீன போல) வேறு பிணைகள் இல்லாமல் கொடுக்காது. 3) இனி, IMF வந்தாலும், முதலில் இந்த $14.5 billion ஐ எவ்வாறு தீர்ப்பது என்பதே பிரச்சனை. IMF, சந்தையையும், தனியார் நிறுவனங்களுக்கும் பக்க சார்பாக நடப்பதாக குற்றசாட்டு இருந்தாலும், சொறி சிங்களம் செய்ததால், IMF சந்தைகளையும், தனியார் நிறுவனங்களையும் கடனை தள்ளி போடுமாறு கேட்க முடியாது. இவை எல்லாவற்றிலும் மிகப் பெரிய தாக்கம், எல்லா சந்தைகளும் (markets), தனியார் நிறுவனங்களும் சொறி மத்திய வங்கி மீது கொண்டுள்ள மதிப்பையும் (credibility), நம்பிக்கையையும் (trust) இழந்து விட்டன. அதனால் சொறி சிங்கள அரசாலோ அல்லது மத்திய வங்கியாலோ நிலைமைகளை வாயால் சொல்லி சமாளிக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியாது. முன்பு, சந்தைகளையும் (markets), தனியார் நிறுவனங்களையும், சொறி மத்திய வங்கி வலி நடத்த கூடியதாக இருந்தது. இனி, சந்தைகளும் (markets), தனியார் நிறுவனங்களும் சொறி சிங்கள அரசையும், மத்திய வங்கியையும் வழி நடத்தும். இப்போதுள்ள கறுப்பு சந்தையே இதன் யதார்த்தம், அதாவது விலைகட்டுப்பாடுகள் இருப்பது தெரிந்தும், கருப்பு சந்தை பகிரங்கமாக அதை புறக்கணித்து, விலைகளை நிர்ணயிக்கிறது, அதற்கு கேள்வியும் (demand) இருக்கிறது.
  6 points
 41. மும்பையில் நடந்த ஒரு வங்கிக் கொள்ளையின் போது கொள்ளையா்கள் துப்பாக்கியுடன், அனைவரையும் மிரட்டினா்."இந்தப் பணம் #அரசுக்கு_சொந்தமானது, ஆனால் உங்கள் உயிர், உங்களுக்குச் சொந்தமானது. அதனால், யாரும் எங்களை எதிர்க்க வேண்டாம்..!அனைவரும் அசையாமல் கீழே படுங்கள்" என்று மிரட்டியவுடன், படுத்துவிட்டார்கள்.மனதை மாற்றும் முறை என்பது இதுதான் . "This is called 'Mind Changing Concept' Changing the conventional way of thinking." அங்கே ஒரு பெண், கொள்ளையர்களின் கவனத்தைத் திருப்ப அநாகரிகமாக நடந்தாள். அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன், "இங்கு நடக்க போவது கொள்ளை.. பாலியல் வல்லுறவு அல்ல.." என்று மிரட்டி, அவளை அமர வைத்தான்.இதைத்தான், செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறோம் " Being Professional & Focus only on what you are trained" கொள்ளையடித்து விட்டு வீட்டிற்கு வந்தவுடன், கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான். "வாருங்கள்.. சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்.." என்று.மற்றொருவன் சொன்னான், "பொறு, அவசரம் வேண்டாம். பணம் நிறைய இருக்கிறது. நேரம் அதிகம் செலவாகும். நாம் எவ்வளவு கொள்ளை அடித்தோம் என்று அரசே நாளைய செய்திகளில் சொல்லி விடும். இதைத்தான், படிப்பை விட அனுபவம் சிறந்தது என்போம்..! "This is called 'Experience' Nowadays, experience is more important than paper qualifications..!" கொள்ளை நடந்தபோதே, வங்கியின் மேலாளா் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்த போது, அவருடைய உயர் அதிகாரி தடுத்து அவரிடம் கூறினார்."வங்கியில் கொள்ளை போனது 20 கோடி தான். நாம் மேலும் 30 கோடி எடுத்து பங்கு பிரித்துக் கொள்வோம். மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்" என்றார். "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்" என்பது இது தான். "This is called Swim along with the tide.... Converting an unfavourable situation to yours." இதை கேட்ட மற்றொரு அதிகாரி " வருடம் ஒரு கொள்ளை, இவ்வாறு நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..??!!" என்றார்.இதுதான் சுயநலமான உலகம்..! "This is called Killing boredom World. Personal happiness is much more important than your job." மறுநாள் செய்திகளில், வங்கியில் 100 கோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கப்பட்டது. அமைச்சர் போட்ட உத்தரவு அப்படி. ஏனென்றால் அவர் பங்கு 50 கோடி.. கொள்ளையா்கள் மிரண்டு போனார்கள். பணம் எண்ணும் மிஷின் வாங்கி வந்து, பணத்தை எண்ணத் தொடங்கினர் .எவ்வளவு எண்ணியும், அவா்களால் இருபது கோடிகளுக்கு மேல் ,போக முடியவில்லை. கொள்ளையா்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து, "நாம் உயிரைப் பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம். ஆனால் இந்த வங்கி அதிகாரிகளும், அமைச்சரும் சிரமம் இல்லாமல், 80 கோடி கொள்ளை அடித்து விட்டனர். படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழுது_ இதற்குத் தான் படித்திருக்க வேண்டும்.."என்றான். "True. Knowledge is nowadays very important than money in this world." நம்_நாடு இப்படிப்பட்ட திருடர்களாலும், அமைச்சர்களாலும் தான் ஆளப்படுகிறது..!#பாவம்_மக்கள்..! -படித்ததில் பிடித்தது-
  6 points
 42. ஊரில் அநேகம் பேர் இந்த லொக் டவுனில் தோட்டம் செய்தல்,கோழி ,ஆடு வளர்த்தல் போன்ற வேலைகளில் இறங்கி விட்டார்கள் ...இதை முதலிலே செய்திருந்தால் பொருளாதாரம் ஓரளவுக்கு தன்னிறைவு அடைந்திருக்கும்
  5 points
 43. 3.39 ஆவது நிமிடத்தில் இருந்து பார்க்கவும். அப்ப இவர் ஓகேயா? ஆரோ அன்ரன் பாலசிங்கமாம். ஏதோ விடுதலை புலிகள் என்ற ஏதோ ஒரு பத்திரிகையில் எழுதினாராம். ஆனால் புலிகள் சாதியை அடக்கவும் இல்லை ஒழிக்கவும் இல்லை என்று நாம் வாழும் காலத்திலேயே யாழில் வந்து எழுதுத ஒரு முரட்டு கெத்து தேவைதான் . உங்களை சொல்லி குற்றமில்லை. உங்களை பற்றி இன்னும் விளங்காமல் சாமரம் வீசுவோரை சொல்லணும். ————- சாதியமும் புலிகளும் Jan 1, 1991 | Articles (Tamil) விடுதலைப் புலிகள் பத்திரிகை தை 1991 காலங்காலமாக, தமிழீழ சமூகத்தின் உணர்வுடன் கலந்திருந்த – வெறுக்கத்தக்க – ஒடுக்குமுறையாகிய சாதியப் பேய் இன்று தனது பிடியை இழந்து வருகின்றது. எமது 18 வருட கால ஆயுதப் போராட்டம் இதைச் சாதித்துள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டம் முனைப்படைந்து வர வர, சாதியத்தின் முனையும் மழுங்கி வருகின்றது. அப்படியிருந்த பொழுதிலும் சாதிய ஒடுக்குமுறையின் வெளிப்பாடுகளைச் சிற்சில இடங்களில் இன்றும் காணக்கூடியதாகவே உள்ளது. அவ்விதம் நாம் சந்தித்த ஒரு முக்கிய சம்பவத்துடன் கட்டுரை ஆரம்பமாகின்றது. சாதியம் தொடர்பான புலிகளின் கருத்தை இக்கட்டுரை தொட்டுச் செல்கின்றது. யாழ்ப்பாண நகருக்குச் சமீபமாக ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் ஒரு நல்ல தண்ணீர்க் கிணறு இருக்கிறது. அந்தக் கிணறு அமைந்திருக்கும் காணி ஒரு தனிநபருக்குச் சொந்தமானது. அந்த மனிதர் தன்னை ஒரு ‘உயர்சாதிக்காரர்’ என எண்ணிக் கொள்பவர். அந்தக் கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் எனப்படும் ஒரு மக்கள் பிரிவும் இருக்கிறது. இந்த மக்களுக்குக் குடிதண்ணீர் வசதியில்லை. இவர்கள் இந்த நல்ல தண்ணீர்க் கிணற்றிற்கு வருகிறார்கள். தண்ணீர் அள்ளுவதற்கு முயற்சிக்கிறார்கள். இதைக் கண்டதும் கிணற்றுக் காணியின் சொந்தக்காரர் ஓடி வருகிறார். தண்ணீர் எடுப்பதற்குத் தடை விதிக்கிறார். தாழ்த்தப்பட்டோர் தனது கிணற்றைத் தீண்டக்கூடாது என்கிறார். இதேபோன்று வடமராட்சியில் ஒரு சம்பவமும், காரைநகரில் ஒரு சம்பவமும் நடக்கிறது. பாதிக்கப்பட்ட அந்த ஏழை மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் வந்து முறையிடுகின்றார்கள். விடுதலைப் புலிகள் அந்த ‘உயர்சாதிக்காரர்’ என்பவரை அழைத்து நியாயம் கேட்கின்றார்கள். சமூகநீதி – சமத்துவம் பற்றி விளக்குகின்றார்கள். மாறும் உலகத்தைப் பற்றியும் – மனித நாகரீகத்தைப் பற்றியும் பேசுகின்றார்கள். கிணற்றுச் சொந்தக்காரர் இலகுவில் மசிவதாக இல்லை. தனது காணி, தனது கிணறு, தனது சாதி என அகம்பாவம் பேசுகின்றார். உழுத்துப்போன சமூக மரபுகளை நியாயமாகக் காட்ட முனைகின்றார். இவை உண்மையில் நடந்த சம்பவங்கள். இப்படிச் சில சம்பவங்களை யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் இன்றும் சந்திக்கின்றார்கள். சாதிவெறி என்ற பிசாசு எமது சமூகத்திலிருந்து இன்னும் ஒழிந்துவிடவில்லை என்பதற்கு இந்தச் சம்பவங்கள் நல்ல உதாரணம். ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் சாதிப்பேய் கோரத்தாண்டவம் ஆடியது. அதுதான் சமூக நீதியாகவும் பேணப்பட்டு வந்தது. பின்னர் அதற்கெதிராக நியாயம் கேட்டு அடக்கப்பட்ட மக்கள் போர்க்குணம் கொண்டார்கள். ‘அடங்காத் தமிழர்’ ஒரு புறமும், அடக்கப்பட்ட தமிழர்கள் ஒரு புறமுமாகக் களத்தில் இறங்கினார்கள். தாழ்த்தப்பட்டோர் எனப்படும் மக்களுக்குக் கோவில்கள் திறந்துவிடப்பட வேண்டும். தேனீர்க் கடைகளில் பாகுபாடு காட்டப்படக்கூடாது என்பதுதான் இந்தச் சாதிய எதிர்ப்புப் போராட்டத்தின் குறிக்கோள். இதற்காக மோதல்கள் நடந்தன. இரத்தம் சிந்தப்பட்டது. உயிர் இழப்புக்களும் நடைபெற்றன. இது அன்றைய காலகட்டத்தின் ஒரு முற்போக்கான போராட்டமாகும். அடக்கப்பட்ட அந்த மக்களின் போர்க்குணம் புரட்சிகரமானது. ஆனால் தீண்டாமையைக் கடைப்பிடிப்போரின் மனம் திறபடாமல் கோவில்களைத் திறப்பதிலோ, தேனீர்க் கடைகளில் சமவுரிமை கிடைப்பதிலோ சாதியம் ஒளிந்துவிடப் போவதில்லை. அதே சமயம் ‘தீண்டாமை ஒழிப்பு’ என்ற பெயரில் சாதிய ஒழிப்பிற்காகக் கூட்டணித் தலைவர்கள் நடாத்திய போராட்டம் கேலிக்கூத்தானது மட்டுமல்ல, சாதியத்திற்கு எதிரான அடக்கப்பட்ட மக்களின் போர்க்குணத்தைத் தமக்கே உரிய ‘புத்திசாதுரியத்துடன்’ மழுங்கடிக்கும் ஒரு சதிச்செயலுமாகும். இவர்கள் நடாத்திய ‘சமபந்திப் போசனம்’ என்ற நாடகம் தங்களை ‘உயர்சாதிக்காரர்’ எனத் தம்பட்டம் அடித்து விளம்பரப்படுத்தத்தான் பயன்படுத்தினார்கள். கூட்டணியினரின் இந்தப் போராட்டங்கள் அரசியல் இலாபங்களுக்காக நடாத்தப்பட்ட விளம்பரங்களேயல்லாமல் சாதிய முரண்பாட்டை அழித்துவிடும் புரட்சிகர நோக்கத்தைக் கொண்டதல்ல. ‘சாதியம்’ என்பது காலம் காலமாக எமது சமுதாய அமைப்பில் வேரூன்றிக் கிடக்கும் ஒரு சமூகப் பிரச்சினை. வேதகால ஆரிய நாகரீகத்தின் வர்ணகுல அமைப்பிலிருந்து சாதிப் பிரிவுகள் தோற்றம் கொண்டன என்றும், பின்னர் திராவிட சமுதாயத்தில் சாதியம் வேரூன்றிப் பரவியது என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். பிராமணர்கள் வேத நூல்களை எழுதினார்கள். மனுநீதி சாஸ்திரங்களைப் படைத்தார்கள். இவற்றில் எல்லாம் பிராமணரை அதி உயர்ந்த சாதியாகக் கற்பித்துச் சாதிய அமைப்பை இறைவனின் படைப்பாக நியாயப்படுத்தினார்கள் என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன. சாதியத்தின் மூலத்தை ஆராய்ந்தபடி செல்வது இங்கு அவசியமில்லை. எங்கிருந்தோ, எப்படியோ இந்த சமூக அநீதிமுறை தமிழீழ சமுதாயத்திலும் வேரூன்றி, விருட்சமாகிவிட்டது. தமிழீழ மக்களின் சமூக உறவுகளுடனும், சம்பிரதாயங்களுடனும், பொருளாதார வாழ்வுடனும், கருத்துலகப் பார்வையுடனும் பின்னிப் பிணைந்ததாகச் சாதியம் உள்ளது என்பது யதார்த்த உண்மை. சாதிய முறை, தொழிற் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டதால் பொருளாதார உறவுகளிலிருந்து எழுகிறது. மத நெறிகளும், சித்தாந்தங்களும், சட்டங்களும் சாதிய முறையை நியாயப்படுத்தி வலுவூட்ட முனைகின்றன. கிராமியப் பொருளாதார வாழ்வை எடுத்துக் கொண்டால் தொழிற் பிரிவுகளின் அடிப்படையில் சாதிய முறை அமையப் பெற்றிருப்பதைக் காணலாம். ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு சாதி என்ற முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. ஒரு தொழில் உன்னதமானது. மற்றைய தொழில் உன்னதம் குறைந்தது, அல்லது இழுக்கானது என்ற மூடநம்பிக்கையின் அடிப்படையில் தொழில் செய்து வாழும் மக்கள் சாதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்தத் தொழிற் பிரிவுகளிலிருந்தும், அவற்றிற்குக் கொடுக்கப்பட்ட பொய்யான அந்தஸ்துக்களிலிருந்தும் ‘உயர்சாதி’, ‘தாழ்ந்த சாதி’ என்ற மூடத்தனமான சமூக உறவுகளும், அவற்றைச் சூழவுள்ள சடங்குகள், சம்பிரதாயங்களும் தோற்றம் கொண்டுள்ளன. செய்யும் தொழில் எல்லாம் உயர்ந்தது. உழைப்பில் உன்னதமானது, இழுக்கானது எனப் பாகுபாடு காட்டுவது மூடத்தனம். தொழிலின் மகத்துவத்தை சாதியம் இழிவுபடுத்துகிறது. உழைக்கும் வர்க்கத்தை, உண்மையான பாட்டாளி வர்க்கத்தைத் தாழ்த்தப்பட்டோர் என்றும், தீண்டாதார் என்றும் அவமானப்படுத்துகிறது. மனித அடிமைத்தனத்திற்கும், படுமோசமான ஒடுக்குமுறைக்கும், சுரண்டல் முறைக்கும் சாதியம் காரணியாக இருந்து வருகிறது. நீண்ட காலமாக எமது சமுதாயத்தில் நிலவி வந்த சாதிய வழக்குகளையும், சம்பிரதாயங்களையும் தொகுத்து, அந்நிய காலனித்துவ ஆட்சியாளர் அதனைச் சட்டமாக்கினார்கள். இதுதான் தேச வழமைச் சட்டம் எனப்படும். இச் சட்டங்கள் சாதியப் பிரிவுகள் பற்றியும், சாதிய வழக்குகள் பற்றியும் விளக்குகின்றன. சாதியத்தை நியாயப்படுத்தி வலுப்படுத்த முனைவதோடு, ‘உயர்சாதிக்காரர்’ எனக் கருதப்படும் ஆளும் வர்க்கத்தின் அபிலாசைகளைப் பேணும் வகையிலும் இந்தச் சட்டத் தொகுப்பு அமைந்திருக்கின்றது. பிரித்து ஆளும் கலையில் கைதேர்ந்த அந்நிய காலனித்துவவாதிகள், மூடநம்பிக்கைகளிலிருந்து பிறந்த சமூக வழக்குகளை சட்டவடிவமாக்கிச் சாதிய முரண்பாட்டை வலுப்படுத்தினார்கள். சாதியத்தால் பயனடைந்த ‘உயர் சாதியினர்’ எனப்படுவோர் சாதியத்தை எதிர்க்கவில்லை. இந்தப் பழைய, பிற்போக்கான ஆளும் வர்க்கம் அரசியல் அதிகாரத்தை நாடியதே தவிர எமது சமூகத்தில் நிலவும் அநீதிகளையும், ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடத் துணியவில்லை. பதவிகளைக் கைப்பற்றிக் கொள்வதற்காகக் காலத்திற்குக் காலம் சாதிய எதிர்ப்புப் போராட்டம் என்ற போர்வையில் சில கேலிக்கூத்துக்களை நடாத்தி, அப்பாவிகளான பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவுகளைப் பெற்றுப் பதவிக் கட்டில் ஏறினார்கள். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தோற்றமும், வளர்ச்சியும், அவர்கள் முன்னெடுத்த தேசிய விடுதலைப் போராட்டமும், தமிழீழ சமுதாயத்தில் ஒரு யுகப் புரட்சியை உண்டு பண்ணியது எனலாம். அரச பயங்கரவாத அட்டூழியங்களும், அதனை எதிர்த்து நின்ற ஆயுதம் தரித்த விடுதலைப் போராட்டமும், எமது சமூக அமைப்பில் என்றுமில்லாத தாக்கங்களை விழுத்தின. பழமையில் தூங்கிக் கொண்டிருந்த எமது சமுதாயம் விடுதலை வேண்டி விழித்தெழுந்தது. வர்க்க, சாதிய காழ்ப்புணர்வுகளுக்கு அப்பால் தேசாபிமானப் பற்றுணர்வு தோன்றியது. தமிழீழ மக்கள் ஒரே இன மக்கள் என்ற இனவுணர்வும் பிறந்தது. சாதிய வேர்களை அறுத்தெறிந்து எல்லாச் சமூகப் பிரிவுகளிலிருந்தும் சகோதரத்துவத்தின் அடிப்படையில் ஒரு தேசிய விடுதலை இராணுவத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் கட்டி எழுப்பியது. ஒரு தேசிய விடுதலை இயக்கமாகப் புலிகள் கண்ட வளர்ச்சியும், அவர்களது புரட்சிகர அரசியல் இலட்சியங்களும், சாதியத்திற்கு ஒரு சவாலாக அமைந்தன. தேசிய சுதந்திரத்தை மட்டுமன்றி, சாதியம் ஒழிக்கப்பட்ட ஒரு சமதர்ம சமுதாயத்தைக் கட்டி எழுப்பும் உறுதியான கொள்கையில் எமது இயக்கம் செயற்பட்டு வருகின்றது. புலிகள் இயக்கத்தின் தோற்றமும், வளர்ச்சியும், அவர்களது இலட்சியப் போராட்டமும், சாதிவேறுபாட்டிற்கு அப்பாற்பட்ட புலிகளின் செயற்பாடுகளும் சாதிய அமைப்பின் அடித்தளத்தில் ஒரு பெரிய உடைவை ஏற்படுத்தியிருக்கின்றன. இது சமூக உணர்வுகளிலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று சாதி குறித்துப் பேசுவதோ, செயற்படுவதோ குற்றமானது என்பதைவிட அது வெட்கக் கேடானது, அநாகரீகமானது என்று கருதும் ஒரு மனப்பாங்கு எமது சமூகத்தில் உள்ளது. இது சாதியம் தொடர்பாகக் காலம் காலமாக இருந்து வந்த சமூக உணர்வில் ஏற்பட்ட பிரமாண்டமான மாற்றமாகும். இருந்தாலும் சாதியப் பேயை எமது சமூகத்திலிருந்து முற்றாக ஓட்டிவிட முடியவில்லை. சாதிய வழக்குகள் இருக்கத்தான் செய்கின்றன. சாதிய வெறியர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். சாதியப் பிரச்சினைகளையும் நாம் சந்திக்கத்தான் செய்கின்றோம். காலம் காலமாக எமது சமூகத்தில் வேரூன்றி வளர்ந்து, மக்களின் ஆழ்மனதில் புரையோடிவிட்ட ஒரு சமூக நோயை எடுத்த எடுப்பில் குணமாக்கிவிடுவதென்பது இலகுவான காரியமல்ல. அப்படி நாம் அவசரப்பட்டுச் சட்டங்கள் மூலமாகவோ, நிர்ப்பந்தங்கள் வாயிலாகவோ சாதியப் பேயை விரட்ட முனைவதும் புத்திசாலித்தனமானது அல்ல. இன்றைய நிலையில் இந்தப் பிரச்சினைகளை நாம் இவ்விதமாகப் பார்க்கலாம். உயிர் வாழ்வுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களில் சாதி வெறிகாட்டி, அடக்கப்பட்ட மக்களைச் சாவின் விளிம்புக்கு இட்டுச் செல்ல வைத்தல். இது கொடூரமானது; அனுமதிக்க முடியாதது. மற்றையது சாதி ரீதியான ஏனைய முரண்பாடுகள். இவற்றை அதனதன் தன்மைகளுக்கு ஏற்றவிதத்தில் பல்வேறு அணுகுமுறைகள் மூலம் கால ஓட்டத்தில் செயலிழக்கச் செய்யலாம். புலிகளின் விடுதலைப் போராட்டமும், அதனால் எழுந்த புரட்சிகரப் புறநிலைகளும் சாதிய அமைப்பைத் தகர்க்கத் தொடங்கியிருக்கிறன. எனினும் பொருளாதார உறவுகளிலும், சமூகச் சிந்தனைகளிலும் அடிப்படையான மாற்றங்கள் நிகழாமல் சாதியம் முற்றாக ஒழிந்து விடப் போவதில்லை. எனவே சாதிய ஒழிப்புக்குச் சமுதாயப் புரட்சியுடன், மனப்புரட்சியும் அவசியமாகிறது. பொருளாதாரச் சமத்துவத்தை நோக்கமாகக் கொண்ட சமுதாயப் புரட்சியை முன்னெடுப்பது விடுதலைப் புலிகளின் அடிப்படையான கொள்கைத் திட்டமாகும். தேசிய விடுதலையைப் பெற்று, ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னரே இந்தக் கொள்கைத் திட்டத்தைச் செம்மையாகச் செயற்படுத்த முடியும். ஆயினும் விடுதலைக்கு முந்திய காலத்திலிருந்தே கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் புரட்சிகரமான பொருளாதாரத் திட்டங்களைச் செயற்படுத்தி, கூட்டுத்தொழில் முயற்சிகளை அமுல்படுத்தி, சாதிய உறவுகளைப் படிப்படியாக உடைத்தெறிவது சாத்தியமானதொன்று. சமூகச் சிந்தனையில் அடிப்படையான மாற்றத்தைக் கொண்டு வருவது சாதிய ஒழிப்புக்கு அத்தியாவசியமானது. ஏனெனில் சாதிய வழக்குகளும், சம்பிரதாயங்களும் மூட நம்பிக்கைகளில் தோற்றம் கொண்டிருக்கின்றன. இந்த அறியாமையைப் போக்க மனப்புரட்சி அவசியம். மன அரங்கில் புரட்சிகரமான விழிப்புணர்வு ஏற்படுவது அவசியம். இங்குதான் புரட்சிகரக் கல்வி முக்கிய இடத்தைப் பெறுகிறது. எமது இளம் பரம்பரையினருக்குப் புரட்சிகரக் கல்வி போதிக்கப்பட வேண்டும். பழமையான, பிற்போக்கான கருத்துக்கள், கோட்பாடுகள், மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு, புதிய முற்போக்கான உலகப் பார்வையைப் புதிய இளம் பரம்பரையினர் பெற்றுக்கொள்ள வேண்டும். அறியாமை இருள் நீங்கிப் புதிய விழிப்புணர்வும், புரட்சிகர சிந்தனைகளும் இளம் மனங்களைப் பற்றிக் கொண்டால் சாதியம் என்ற மனநோய் புதிதாகத் தோன்றப் போகும் புரட்சிகர சமுதாயத்திலிருந்து நீங்கிவிடும். https://antonbalasingham.com/சாதியமும்-புலிகளும்/
  5 points
 44. கதையைக் கேட்டியேடி கமலா மாமி கந்தையற்ற பொடியன் கணக்கில பெயிலாம் பொன்னையா வாத்தியின் கடைசிப் பொட்டை பொடியனைப் பிடிச்செண்டு ஓடிற்றாளாம் யாருக்குத் தெரியும் இவ்வளவு காசு எப்படி வந்ததெண்று இந்தப் பெரிய வீடு கட்டுகினம் மல்லிகா டீச்சரின் மகள் இத்தினை வயசாப் போச்சு இன்னும் இருக்கிற கட்டாமல் ஏழிலை செவ்வாயாம் என்னமோ நடக்குது ஒன்றும் சொல்லுகினம் இல்லை கன பேர் வந்து போகினம் அவளுக்கு வாய் கூட விட்டிட்டு இருக்கிறாளாம் வெளியில தெரியாமல் ஏதோ பெரிசா கதைக்கினம் எப்ப வந்தது இவைக்கு எல்லாம் இவை எந்த ஊர் எந்தப் பேர் வழி என்று எங்க போய் விழுந்தவை எங்களுக்கு தெரியாதா அடுத்த வீட்டு அம்பிகா அக்காவின் பிள்ளை ஆட்ஸ்சாம் ஏதோ அரசியல் படிக்கப் போறாவாம் என்ர மகள் மருத்துவம் படிக்கப் போறாள் அடுத்த வீட்டுக்காரன் கதை என்றால் அலுவா தின்னும் உருசி போல எம்மவர் பலருக்கு ஏனோ தெரியவில்லை அவர்கள் அப்படித் தான் இவர்கள் இப்படித் தான் என்பார்கள் ஆனால் தங்கள் பிழைகளை மறைத்து புத்தர் போல போதனை செய்வார்கள் இன்னும் சிலர் இருக்கிறார்கள் தம்மை மட்டும் அறிவாளிகள் போல் காட்டிக் கொள்வார்கள் என்ன இவருக்கு தெரியும் என்று தன்னை பெரியார் போல பேசிக்கொள்வார்கள் இதை விடக் கொடுமை ஒரே வயிற்றில் கிடந்த உறவுகள் நடத்தும் பாகப்பிரிவினை அதை விடக் கொடுமை அண்ணன் தம்பி அக்கா தங்கை ஆளுக்கு ஆள் திட்டித் தீர்த்து அவர் ஒரு கதை இவர் ஒரு கதையாய் எதுகுமே புரியாத கதையாய் வன்மமும் வக்கிரமாய் மாற்றம் இல்லாமல் மனிதன் வாழ்ந்தால் அவன் வாழும் வாழ்வில் அர்த்தம் ஏது. பா.உதயன் காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும் -எழுத்தாளர் ஜெயகாந்தன்
  5 points
 45. ஒரு மக்கள் கூட்டம் தம்மை எவ்வாறு அழைப்பது என்பதை அன்றைய அரசியலே தீர்மானிக்கிறது. ஒரு கால கட்டத்தில் திராவிட அரசியல் தேவையானதாக இருந்திருக்கலாம்.இப்போதும் அது தேவையா என்பதை மக்களே தீர்மானிப்பார். இதில் எது தமிழ் எது திராவிடம் என்பது அர்த்தம் அற்ற தேடல். மொழி மாறும் மக்கள் சமூகம் தொடர்ச்சியான குடிப்பரம்பலையும் கலப்பையும் கொண்டிருக்கும். இன்றைய அரசியல் தமிழ்த் தேசிய அரசியல் தான். ஈழ விடுதலைப் போரும் இனப்படுகொலையும் தமிழ் நாட்டு மக்களை தமிழ்த் தேசிய அரசியலை நோக்கி தள்ளி உள்ளது. யார் யார் தம்மை தமிழராக அடையாளப் படுத்துகிறார்களோ அவர்கள் எல்லோரும் தமிழர்களே. சாதிய அடையாளம் ஒழிந்து எல்லோரும் தமிழரே என்னும் நிலை வர வேண்டும்.
  5 points
 46. இது வேலை செய்யாது கோஷான். பேசுவதற்கு வேண்டுமானால் இவை அழகான சொற்றொடர்களாக இருக்கலாம். நிதர்சனத்தில் பயன்படாது. காஷ்மீரிலும், திபெத்திலும், பலஸ்த்தீனத்திலும் நீதி கேட்டுப் போராடும் மக்களின் உண்மையான கோரிக்கைகளை அந்த ஆக்கிரமிப்பாளர்கள் புரிந்துகொள்ளாமல் விட்டதாலேயே இன்றுவரை அம்மக்கள் அவலப்படுகிறார்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லது சிங்களவர்களுக்கு தமிழரின் கோரிக்கைகள்தான் புரியவில்லை என்று நினைக்கிறீர்களா? அவர்களுக்கு நாம் கேட்பது என்னவென்பது நன்றாகவே தெரியும், அதன் நியாயத்தன்மையும் புரியும். இவை எதுவுமே தெரியாமலா சந்திரிக்காவும் ரணிலும் புலிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள்? இது தெரியாமலா பண்டாரநாயக்காவும், சேனநாயக்காவும் தமிழரசுக் கட்சியுடன் ஒப்பந்தம் செய்தார்கள்? நிச்சயமாக இல்லை. நாம் கேட்பது என்னவென்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அவர்களுக்கு அதனைத் தர விருப்பமில்லை. நாங்கள் சிங்களத்தில் அதைக் கேட்டாலென்ன, தமிழில் கேட்டாலென்ன, விடை எப்போதுமே ஒன்றுதான். 1948 இலிருந்து ஆயுதப்போராட்டம் ஆரம்பித்த காலம் வரைக்கும் எமது தமிழ்த் தலைவர்கள் இதைச் செய்யவில்லை என்று சொல்கிறீர்களா? காலிமுகத் திடல் சத்தியாக்கிரகத்திற்கு என்ன நடந்தது என்பதை மறந்துவிட்டீர்களா? 1977 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைத் தீர்மானம் கூறியதை சிங்களவர்கள் ஏற்றுக்கொண்டார்களா? சரி, இதையெல்லாம் விட்டு விடுங்கள். தாமே தருவதாகக் கூறிய தீர்வுகளையாவது தந்தார்களா? சிங்களவர்களுக்கு நாம் புரியவைப்பதற்கு மீதம் ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எம்மால் முடிந்த அனைத்து வழிகளிலும் அதைச் செய்து காட்டி விட்டோம். இனி வேறு முறையில் சொல்வதற்கு புதிதாக எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் சிலவேளை நாம் எமது முன்னைய வேண்டுகோள்களை எல்லாம் கைவிட்டு, "இந்நாடு சிங்களவர்களுக்கு உரியது, நாம் வந்தேறிகள், சிங்களமும் பெளத்தமும் இந்நாட்டின் அதியுச்ச சக்திகள். உங்களுக்கு எதைத் தர வேண்டும் என்று விருப்பம் இருக்கிறதோ, அதைத் தாருங்கள்" என்று கேட்டுப் பார்க்கலாம். அப்போதுகூட எமக்கு எதுவுமெ கிடைக்கும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை. நாம் சொல்வதை அவர்கள் கேட்கப்போவதில்லை. மாறாக தாம் கேட்க விரும்புவதை நாங்கள் சொல்லவேண்டும் என்றே விரும்புகிறார்கள். சுதந்திரத்தின் பின்னரான 73 வருடகால சிங்களவர்களுடனான தமிழரின் சரித்திரத்திலிருந்து நான் புரிந்துகொண்டது இதனைத்தான்.
  5 points
 47. நீங்கள் சந்தர்ப்பங்களை தவறவிட்ட அசந்தர்ப்பவாதி என்ற கவலை இருப்பது நியாயம்தான். 2009 மேயில் அப்படியான மாற்றம் நிகழ என்ன காரணமாக இருந்திருக்க கூடும்? என்ன நடந்தாலும் நாம் மாறமாட்டோம், எமது தவறுகளையும் திருத்தமாட்டோம், இப்படியே இருந்து நாமும் அழிந்து மற்றவர்களையும் அழித்துவிடுவோம் என்று நீங்கள் பிடிவாதம் பிடிப்பதன் காரணம் என்ன?
  5 points
 48. தமிழீழம் கேட்கமுதல் ஈழத்தமிழர் வெளிநாடுகளுக்கு வரவில்லையா? வெளிநாடுகளில் வேலை செய்ய வில்லையா? அது சரி தாங்கள் எந்த அடிப்படையில் வெளிநாட்டிலிருந்து கடலை வறுக்கின்றீர்கள்?
  5 points
 49. சீமான் சொல்வது சரிதான். எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க எதுக்கு இருவரின் தனிப்பட்ட இரகசிய விடயங்கள் பற்றி கேள்வி கேட்கணும்?? ராகவன் மட்டும் அல்ல ஒவ்வொருவரது தனிப்பட்ட விடயங்களை நோண்ட தொடங்கினால் அது மற்றவர்களுக்கு அசிங்கம் தான். அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல.
  5 points
 50. இயல் வழி நாடகம் - சுப. சோமசுந்தரம் வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா என அடுக்கி முறையே செப்பலோசை, அகவலோசை, தூங்கலோசை, துள்ளலோசை என்று ஓசைநயம் பகரும் முறையே சொல்கிறது இயல் வழி இசையுண்டு என்று. காணாததற்கு மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை எனப் பண்வகைகள் வேறு. குறிப்பாக மரபுப் பாடலெதுவும் இசையின்றி இயங்குவதில்லை. இக்கட்டுரை இங்கே பேச வந்தது இயல் வழி நாடகம் பற்றி. மேலும் இங்கு நாம் இயல் எனக் குறித்தது மரபுப் பாடலேயாம். உள்ளார்ந்த நாடகம் (Implicit Drama) அனைத்து மரபுப் பாடலிலும் அமையலாம். உள்ளார்ந்த நாடகமாக ஒரே பாடல் வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு காட்சியமைப்பை அளிக்கலாம். இது காண்போர் திறம் பற்றியது. எடுத்துக்காட்டாக "அகவன் மகளே அகவன் மகளே மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல் அகவன் மகளே பாடுக பாட்டே இன்னும் பாடுக பாட்டேஅவர் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே" -------------ஔவையார் (குறுந்தொகை – 23) எனும் பாடலை எடுத்துக் கொள்ளலாம். இக்கட்டுரையின் இலக்கு ஓரளவு வாசிப்பு உள்ளோர் அனைவரும் என்றமையால், மேற்கோளாய்ச் சொல்லும் பாடல் அனைத்திற்கும் ஓரளவு பொருள் விளக்கம் தருவது இன்றியமையாததாகிறது. மேற்கூறிய பாடல் காட்சி : குறிஞ்சி நிலத் தலைவி தலைவனைக் காணாத ஏக்கத்தில் மெலிதல் போன்ற உடல் மாற்றங்களுக்கு உள்ளாகிறாள். எனவே தாயும் செவிலித்தாயும் கலக்கமுற்று, குறிசொல்லும் கட்டுவிச்சியை அழைத்துக் காரணம் அறிய முற்படுகிறார்கள். உடனிருக்கும் தலைவியின் தோழி அக்கட்டுவிச்சியிடம் கூறும் அகவலோசைப் பாடலே இஃது. குறி சொல்லுபவளை 'அகவன் மகளே' என விளிக்கிறாள் தோழி. சங்குமணி(மனவு)யால் தொடுக்கப்பட்டதைப் (கோப்பு) போன்ற நல்ல நெடிய கூந்தலையுடைய (நன்னெடுங் கூந்தல்) அகவன் மகள் என அவளது வெண்மையான நீண்ட கூந்தலைக் குறிப்பிட்டு, அதன் மூலமாய் வயதில் சற்று மூத்த கட்டுவிச்சியை நம் மனக்கண் முன் நிறுத்துகிறாள் தோழி. குறி சொல்லுகையில் கட்டுவிச்சி தனது நன்னெடுங்குன்றத் தலைவன் சேயோனைப் பாடும்போது, அந்நெடுங்குன்றத்தைச் சார்ந்தவனே தனது தலைவன் என்பதால் தலைவியின் முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சியைத் தோழி கவனித்திருக்க வேண்டும். எனவே 'அவர் நன்னெடுங்குன்றம்' பற்றிக் கட்டுவிச்சி முதலில் பாடிய பாட்டை மீண்டும் பாடச் சொல்லுகிறாள் தோழி. இதில் தோழியின் நாநலம் தெற்றென விளங்கும். 'அவர்' எனக் குறித்ததால் 'எவர்?' எனும் ஐயமும், பாடலைக் கேட்கும்போது தலைவியின் முகமலர்ச்சியும் தாய்க்கும் செவிலிக்கும் தலைவியின் காதலை உணர்த்தும். தானும் தலைவியின் ஒத்த வயதினள் என்பதால் தன்னால் நேரிடையாக அவர்களுக்கு உணர்த்த முடியாத தலைவியின் காதற் பொருளை அந்த அகவன் மகளின் மூலமாக மறைமுகமாக உணர்த்த முற்படுகிறாள் தோழி. இதில் கதை மாந்தர் ஐவரும் நம் முன் நிற்க, தோழி கையசைப்போடும் (தாயிடமும் செவிலித்தாயிடமும் மறைத்த) கண்ணசைப்போடும் அகவன் மகளிடம் பேசுவது ஒரு உள்ளார்ந்த நாடகமாய் நம் மனக்கண்ணில் விரிகிறது. எனவே யாதொரு பாடலிலும் உள்ளார்ந்த நாடகமொன்று அமைதலின், அவற்றை வாசிப்போர்தம் கற்பனைக்கே வழிவகுக்கு முகமாக மேற்கூறிய ஒரு மேற்கோளுடன் நிறுத்திக் கொள்வதே பொருத்தமாய் அமையும். இனி நாடக மேடை போல வெளிப்படையான காட்சி அமைப்புடன் இயற்றமிழில் வந்து நிற்கும் நாடகம் (Explicit Drama) பற்றிச் சற்று விரிவாகப் பார்ப்பது, 'இயல் வழி நாடகம்' என நாம் கையிலெடுத்த தலைப்பிற்கு வலு சேர்ப்பது மட்டுமின்றி பொருந்தி அமைவதுமாம். இது தொடர்பில் நாம் முதலில் எடுப்பது மாணிக்கவாசகரின் திருக்கோவையாரில் வரும் காட்சி. தலைவனும் தலைவியும் உடன்போக்கு எனும் மேதகு ஒழுக்கம் பூண்டு சென்றுவிட்டனர். அவர்களைத் தேடிச் செல்லும் செவிலித்தாய் எதிரில் அதேபோல் உடன்போக்கு மேற்கொண்டு வரும் வேறொரு இணையைத் தூரத்தே கண்ணுற்று, தான் தேடிச்செல்லும் இணையரோ என்று முதலில் மயங்கிப் பின் தெளிந்து அவர்களுடன் உரையாடுகிறாள் : " மீண்டார் என உவந்தேன் கண்டு நும்மை இம்மேதகவே பூண்டார் இருவர் போயினரே புலியூரெனை நின்று ஆண்டான் அருவரை யாளிஅன் னானைக் கண்டேனயலே தூண்டா விளக்கனையாய் என்னையோ அன்னை சொல்லியதே". ----- திருக்கோவையார், பாடல் 244. உரையாடல் வருமாறு : செவிலித்தாய் : உம்மைக் கண்டதும் (கண்டு நும்மை) மீண்டனர் (எனது மகளும் அவளது தலைவனும்) என மகிழ்ந்தேன். இம்மேதகு ஒழுக்கம் (உடன்போக்கு) பூண்ட இருவர் முன்னால் போயினரே ! எதிர் வந்த தலைவன் (செவிலித் தாயிடம்) : திருப்பாதிரிப்புலியூரில் நின்று எனை ஆட்கொண்ட இறைவனது (ஆண்டான்) அரிய மலையின் (அருவரையின்) யாளி போன்ற கம்பீரத் தோற்றமுடையவனைக் கண்டேன். எதிர்வந்த தலைவன் (தன் தலைவியை நோக்கி) : தூண்ட வேண்டாத விளக்கினைப் போன்றவளே! அவனது அருகில் (அயலே) சென்றவளைப் பற்றி அன்னை (செவிலித்தாய்) சொல்லிய விவரம் பொருத்திக் கூறுவாயாக ! மேற்கூறியவற்றில் நம் உரைநடை யார், யாரிடம் சொல்கிறார் என்ற முன்னறிவிப்பபுடன் திகழக் காணலாம். நாடக மேடையில் எந்த அறிவிப்பும் இன்றி ஒவ்வொரு கதாபாத்திரமும் தன் பங்களிப்பைச் செய்யும். அவ்வாறே மேற்கூறிய பாடலில் ஒரு நாடக நிகழ்வைப் போல் முன்வைக்கப்படுகிறது. யார் யாரிடம் உரையாடுகிறார் என்பது தானே விளங்கி நிற்கிறது. அந்நாடக நிகழ்வு மணிவாசகரால் வெற்றிகரமாய் நம் கண்முன் அரங்கேற்றப்படுகிறது. இத்தலைவன் அத்தலைவனை மட்டுமே கண்டதும், இத்தலைவி அத்தலைவியை மட்டுமே கண்டதும் காற்றுவாக்கில் புலவன் எடுத்தியம்பும் பண்பாட்டுத் திறம். மேலும் இது அகத்திணை சார்ந்த பக்தி இலக்கியம். இறைவனைத் (இங்கு சிவபெருமான்) தலைவனாகவும் புலவன் தன்னையே தலைவியாகவும் உருவகித்து நாயகன்-நாயகி பாவத்தில் அமைந்த பாடல். ஆன்மாவாகிய தலைவி இறைவனாகிய தலைவனைச் சென்றடையும் குறியீடு என்பர். இக்குறிப்புகள் இங்கு நமது கருதுகோளுக்குப் புறத்தே அமைந்திடினும், இவற்றைக் குறிக்காது கடந்து செல்லுதல் அத்துணை எளிதல்ல. திருக்கோவையார் எட்டாம் திருமுறையில் அமைய, பதினொன்றாம் திருமுறையில் வரும் திரு ஏகம்பமுடையார் திருவந்தாதியின் 73வது பாடல் இதே காட்சி அமைப்புடன் திகழக் காணலாம் : "துணையொத்த கோவையும் போலெழில் பேதையும் தோன்றலுமுன் இணையொத்த கொங்கையொ டேயொத்த காதலொ டேகினரே அணையத்தர் ஏறொத்த காளையைக் கண்டனம் மற்றவரேல் பிணையொத்த நோக்குடைப் பெண்ணிவள் தன்னொடும் பேசுமினே". திருக்கோவையாரில் "இம்மேதகவே பூண்டார் இருவர் முன் போயினரே" என்று முடியும் செவிலியின் கூற்று, இங்கு "ஒத்த காதலொடு ஏகினரே" என்று முடியக் காணலாம். அங்கு "யாழி அன்னானைக் கண்டேன்" என்று செவிலித் தாயை நோக்கி எதிர் வந்த தலைவன் கூறுவது, இங்கு "ஏறொத்த காளையைக் கண்டனம்" என்று கூறக் கேட்கலாம். "என்னையோ அன்னை சொல்லியதே" என்று எதிர் வந்த தலைவன் தன் தலைவியிடம் கேட்பதாய் திருக்கோவையாரில் வருகிறது. இது மட்டும் சற்று மாறாக "பெண்ணிவள் தன்னொடும் பேசுமினே" என்று மீண்டும் செவிலித்தாயிடமே தலைவன் கூறுவதாய் திரு ஏகம்பமுடையார் திருவந்தாதியில் வருகிறது. ஆனாலும் ஒரே செய்திதான். பேசும் இடம் மட்டும் இறுதியில் சற்று மாறியது. நாடகக் காட்சியமைப்பும் ஒன்றுதான். அடுத்து நாம் காட்சிப்படுத்த நினைப்பது மீண்டும் மணிவாசகரின் நாடகத்தை. இம்முறை திருவெம்பாவைக் காட்சி (திருவெம்பாவை பாடல் 4) : "ஒள் நித்தில நகையாய், இன்னம் புலர்ந்தின்றோ வண்ணக் கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ எண்ணிக் கொண்டு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்து உள்ளம் உள் நெக்கு நின்று உருக யாம் மாட்டோம் நீயேவந்து எண்ணிக் குறையில் துயில் ஏல் ஓர் எம்பாவாய்". மார்கழியில் பாவை நோன்பு மேற்கொண்ட பாவையர் பாவை ஒருத்தியைத் துயில் எழுப்புகின்றனர். "ஒளி பொருந்திய முத்தினைப் (நித்தில) போன்ற சிரிப்பினை உடையவளே! இன்னும் உனக்குப் புலரவில்லையா?" எனப் பாவையர் கேட்க, உள்ளே உறங்கிக் கொண்டிருந்த பாவை, "வண்ணக்கிளி மொழியினுடைய எல்லோரும் (தோழியர்) வந்து விட்டார்களா?" என்று வினாவெதிர் வினாவினைக் கூவுகிறாள். தோழியர், "அவ்வளவும் எண்ணிக் கொண்டு தான் வந்தோம். உள்ளதைத் தான் சொல்கிறோம். தூங்கி வீணில் காலத்தைப் போக்காதே ! விண்ணுலகினர்க்கு அமுதம் போன்றவனை, வேதத்தின் உண்மைப் பொருளானவனை, கண்ணுக்கு இனியனானவனைப் (சிவபெருமானை) பாடிக் கசிந்துருகும் நாங்கள் பொய் சொல்லோம். நீயே வந்து எண்ணிக்கொள். (எண்ணிக்கை) குறைந்தால் மீண்டும் துயின்று கொள், எம் பாவையே !" என்று பதிலிறுக்கின்றனர். நாடகப் பாங்கில் உரையாடலில் யார், யாரிடம் பேசுகின்றனர் என்பது தானே விளங்கி நிற்கக் காணலாம். திருவெம்பாவையில் உள்ளவாறே இக்காட்சி திருப்பாவையில் (திருப்பாவை பாடல் 15) : "எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன் வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை எல்லோரும் போந்தாரோ போர்ந்தார் போர்ந்து எண்ணிக்கொள் வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்" திருவெம்பாவையில் "வண்ணக்கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ" என்றது திருப்பாவையில் "எல்லாரும் போந்தாரோ" எனவும், அங்கு "நீயே வந்து எண்ணிக் குறையில் துயில்" என்றது இங்கு "போந்தார் எண்ணிக் கொள்" எனவும் மொழி மாறியது. காட்சி மாறவில்லை. இயலில் இசை தெளிவெனச் சுட்டினோம்; இயலில் நாடகம் தெளிவாகக் காட்டினோம். ஒவ்வொன்றிலும் ஏனைய இரண்டும் விரவி நிற்கக் காண்பர் தமிழர். இகல் கொண்டோர் நிலத்தைப் பிரிக்க எண்ணுவர்; நீரைப் பிரிக்க எண்ணுவர். முத்தமிழில் எத்தமிழைப் பிரிக்க எண்ணுவர் ?
  5 points
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.