நல்ல தகவல்கள்..
ஒருமுறை 401 விரைவுச்சாலையில் கடவுப் பாதையில் (Passing Lane) ஒரு வாகனத்தை முந்தும்போது ஒரு சில்லில் காற்றுக் குறையத் தொடங்கிவிட்டது. நல்ல வேளையாக அந்த வாகனத்தை முந்தி மூன்று பாதைகள் கடந்து வலப்புற ஓரத்தில் நிறுத்த முடிந்தது..
பிறகு இழுவை நிறுவனத்தைத் தொடர்புகொண்டுவிட்டு அவர்கள் வருகைக்காகக் காத்திருந்தபோது, ஒரு காவல்துறை வாகனம் வந்தது. அந்த அதிகாரி எல்லாம் சரியா என்று கேட்டுவிட்டு, இருபது நிமிடங்களுக்குள் சேவை கிடைக்காவிட்டால் தான் அழைப்பை ஏற்படுத்தி வேறு சேவை வழங்குவதாகத் தெரிவித்தார்.
பிறகு இழுவை வாகனம் வந்தது. குளிர்காலம் ஆதலால், என்னை அந்த வாகனத்தினுள் அமருமாற