Leaderboard

 1. விவசாயி விக்

  விவசாயி விக்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   12

  • Content Count

   5,561


 2. போல்

  போல்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   8

  • Content Count

   5,261


 3. நிழலி

  நிழலி

  கருத்துக்கள பொறுப்பாளர்கள்


  • Points

   7

  • Content Count

   12,299


 4. பையன்26

  பையன்26

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   6

  • Content Count

   7,936Popular Content

Showing content with the highest reputation on 11/14/2019 in Posts

 1. 8 points
  4. சந்தி சந்தடி "அத்தான் ஊர்ல நாலு மோதிரம் மூண்டு சங்கிலி போட்டு படங்காட்ட வேண்டாம். ஓட்டோவில வந்து சாப்பாடுக்கு காசில்லை என்று அழுவினம். வெளிநாட்டுக்காரரை அவையள் வங்கி இயந்திரம் போல தான் பார்ப்பினம் " மச்சினன் அறிவுரை. அடுத்த நாள் காலை எழும்பி காகம் கரைவதை கேட்டு மகிழ்ச்சியுடன் அசைவு போடுகிறேன். எங்கள் வீட்டில் ஒரு குடும்பம் குடியிருப்பதால் எனது இன்னொரு கனடா மாமனார் வீட்டில் தங்கினோம். குளிரூட்டி, துவைப்பி, வெளிநாட்டு கழிவறை என்று வீடு நவீனமாக இருந்தது. குளிரூட்டி அறை காற்றோட்ட ஓட்டைகளை அடைத்திருந்தாலும் தம்பிரான் கோவிலில் பாட்டு பிலத்து கேட்டது. மேளமும், நாதசுவரம் விடிய ஆறு மணிக்கே முழங்கியது. எழுந்து குளித்து காற்சட்டையை கொழுவி செருப்பை கொழுவிக்கொண்டு வீட்டை விட்டு கிளம்பினேன். விடிய வெயில் சூடு கொளுத்தியது. எனக்கு வேர்த்து ஒழுகியது. ஆனாலும் ஒரு மகிழ்ச்சி. அதற்குள் துணைவி வீட்டிலிருந்து குரலிடடார். "மாமி சம்பல் இடிச்சு வைச்சிருக்கிறா. றோஸ்ட் பாண் வாங்கி வாங்கோ" சந்திக்கு போக ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. பிள்ளைகள் நேர மாற்றத்தால் நித்திரையால் எழும்ப வில்லை. அப்படியே தம்பிரான் கோவில் பக்கம் நடை கட்டினேன். அப்போது என்னை கூசி பார்த்து கொண்டு சித்தி ஒருவர் வந்தார். எனக்கு அவரை தெரிந்தது ஆனால் அவர் என்னை யாரெண்டு கண்டு பிடிக்க முயன்றார். என்னை தொடர்ந்து கோவில் பக்கம் வந்தார். முந்தி இருந்த பாலர் பாடசாலை முருகன் கோவில் கல்யாண மண்டபம் ஆகியிருந்தது. பக்கத்தில் ஒரு வீடு பாலர் பாடசாலை ஆகி இருந்தது. முருகன் கோவில் விளமபர சுவரில் ஆசிரியர் தேவை விண்ணப்பிக்கவும் என்று எழுதி இருந்தது. இந்த பாலர் பாடசாலையில் தான் தாஸ் குரூப் தங்கிய ஞாபகம் வருகிறது. தம்பிரான் கோவிலில் ஒரு பத்து பேர் கும்பிட்டு இருந்தார்கள். ஐயர் மந்திரம் சொல்லி ஓமம் வளர்த்து கொண்டிருந்தார். முன்பு நாங்கள் விளையாடிய பூவரசம் மரங்கள் அப்படியே இருந்ததில் மகிழ்ச்சி. கோவில், பாம்பு புற்று என்று படங்களை கைபேசியில் தட்டினேன். சித்தி மடடுபிடிக்க முடியாமல் "தம்பி யார் நீங்கள்?" நான் யாரின் பிள்ளை மற்றும் பேரன் என்று கூறினேன். கண்களில் பிரகாசம். "டேய் நான் யாரென்று தெரியுதா? நீ முடக்காட்டில எங்கட வீடடை வந்து கொய்யா களவெடுக்கிறனீ" பிலத்து எனது பெருமை சொல்லி சிரித்தார். அப்போது கோவிலுக்கு வந்த இன்னும் சில சொந்தங்கள் பூராயத்தை கேட்டு என்னை சுற்றி வலயம் போடடார்கள். "தெரியும் சித்தி" வழிந்து கொண்டு சொன்னேன். ஒவ்வொருவரும் தன்னை தெரிகிறதா என்று கேடடார்கள். நான் கனடா முகங்களுடன் ஒப்பிட்டு சிலரை சரியா சொன்னேன். நான் கோவில் பூசையை பார்ப்பதை பார்த்து "இது உங்கட கனடாவில் இருந்து பாமதி வந்து ஒவ்வொரு வருசமும் பத்து நாள் திருவிழா நடத்துறா" சொன்னார்கள். "நல்ல விசயம்" "அக்கா வந்திருக்கிறாவோ?" கேடடார்கள். "ஓம் மாமி வீட்டை நிக்கிறா" அப்படியே என்னையும் தம்பிரானையும் கைவிட்டு சொந்தங்கள் மாமி வீட்டை படையெடுத்தார்கள். நான் புளிய மரத்தை நோக்கி சென்று ஏமாந்தேன். புளிய மர காணியில் கத்தரி தோட்டம் இருந்தது. தோட்டத்தை பார்த்ததில் உற்சாகம் வந்து சில படங்களை தட்டி விட்டு சொந்தக்காரர் வீடுகளை நோடடம் விடடவாறு நடந்தேன். ஓவ்வொரு முடக்கிலும் தெருநாய்கள் ஆனால் முன்பு போல் இல்லாமல் கொழுத்திருந்தன. தாமும் தம் பாடாக திரிந்தன. விசர் நாய்களை காணாததில் திருப்தி. முன்பு கடி வாங்கி பதினாறு ஊசி குத்திய ஞாபகம் வந்து உடம்பு ஒருக்கால் சிலிர்த்தது. எதற்கும் நாய்களிடம் ஒரு கண் வைத்திருந்தேன். திரும்பி முருகன் கோவில் வந்து ஒழுங்கையால் மகாத்மா தியேட்டர் தெருவிற்கு வந்து நெல்லியடி சந்தி நோக்கி நடந்தேன். எனக்கு இன்னும் வேர்வை கூடி மேற்சட்டை தோய்ந்திருந்தது. வேர்வையை வழித்து சுண்டி எறிந்துவிட்டு உற்சாகத்துடன் சந்தி வந்தேன். எங்கும் பீப் பீப் என்று ஓலி ஓட்டோவும், வாகனங்களும், உருளுந்துகளும் சீறி ஓடின. துவிச்சக்கர வண்டிகள் ஒரு சிலதையே காணக்கூடியதாக இருந்தது. நான் தெருவை கடந்து சுபாஸ் வெதுப்பக்கத்திற்கு போக காவல் நின்றேன். ஒருத்தரும் சடடை செய்யாமல் தம் போக்கில் போனார்கள். பக்கத்தில் இருந்த கைபேசி கடையில் இரு இளைய இராணுவத்தினர் எதையோ வாங்கினார்கள். அவர்களிடம் துப்பாக்கி இருக்கவில்லை. நான் பொறுமை இழந்து கையை காட்டிக்கொண்டு குறுக்கால ஓடி மற்ற பக்கம் சென்றேன். வாடிக்கையாளருக்கு இரு பக்கமும் நடை பாதை இருந்தது. ஒவ்வொரு கடையா பார்த்து கொண்டு சுபாஸ் கடை நோக்கி நடந்தேன். எனக்கு முன்னால் ஒரு துரு பிடித்த துவிச்சக்கர வண்டி வந்து திடீர் என்று நின்றது. ஒரு இளையவர் சிரித்து கொண்டே "நீங்கள் வெளிநாட்டில இருந்து வந்திருக்கிறதா உங்கட முன் வீடு காரர் சொன்னவை. உங்களை பார்க்க தான் வந்தனான். சந்திக்கு போனதா சொல்லிச்சினம். நான் ஒரு போராளி காலை இழந்து விட்டேன்" காலை உற்று நோக்கினேன் அவர் சாரத்தை சற்றே தூக்கி காட்டினார். கால் பிளாஸ்டிக்கால் செய்தது. எண்ணெய் போட்டு துடைத்திருக்க வேண்டும். பளபளத்தது. "எனக்கு சொக்ஸ் தேவை. எனக்கு உங்களை கேட்க வெட்கமாக இருக்கு ஆனால் நான் செய்யும் வேலை குடும்பத்திற்கு மட்டுமே போதும். வாங்கி தருவீர்களா?" நான் சாந்தி அக்காவுடன் சேர்ந்து உதவிய போராளி கண்முன் வந்து போனார். நான் தயங்குகிறேன் என்று நினைத்து "சில வருடத்திற்கு முதல் ஐந்து வெளிநாட்டுக்காரர் எனக்கு ஒரு இலட்ச்சம் தந்தவை. அதை வைச்சு ஒரு பெட்டிக்கடை வல்வெட்டி துறையில் வைச்சிருக்கிறன்" என் மாமாவின் முன் வீட்டில் தங்கியிருப்பவர்கள் வல்வெட்டி துறையை சேர்ந்தவர்கள். எனக்கு மச்சினனின் அறிவுரை இந்த விடயத்தில் சரி பட்டுவராது என்று தெரிந்தது. இவர் ஒருவர் தான் காலையில் பார்த்ததில் துவிச்சக்கரவண்டி ஓட்டிய மிக சிலரில் ஒருவர். எமக்காக கால் இழந்தவன் பிச்சை எடுப்பதை பார்க்க கண் கட்டியது. அவரும் வெட்கத்தில் தலையை மீண்டும் மீண்டும் கோதி கொண்டிருந்தார். "எவ்வளவு தேவை?" முகம் இறுக கேட்டேன். "ஒரு இரண்டாயிரம் ரூபா போதும் அண்ணா" சொன்னார் . "இஞ்சால வாங்கோ தம்பி" ஓரங்கட்டினேன். கொத்துரொட்டி ஒரு கட்டு தொள்ளாயிரம் ரூபா ஆனால் இவன் இரண்டாயிரம் கேட்கிறான். நான் ஒரு காற்சட்டை பையில் சில்லறை தாளுகளையும் மற்றைய பையில் ஐந்தாயிரம் தாள்களையும் வைத்திருந்தேன். "உனக்கு வருசத்துக்கு எவ்வளவு சொக்ஸுக்கு முடியும்?" கேட்டேன். " பத்தாயிரம் கிட்ட முடியும் அண்ணா அதை போட்டு தான் செயற்கை கால் போடலாம். இப்ப உள்ளது கிழிந்து சிராய்த்து போய் கிடக்கு" இன்னும் சாரத்தை தூக்கி இரத்த கறையை காட்டினார். எனக்குள் குப்பென்று ஒரு சூடு தொடக்கி இன்னும் வேர்த்தது. புலி சாப்பாட்டு பொதி கேட்டு துன்புறுத்தினம் என்று பொய் சொல்லி அகதி உரிமை பெற்றவர்கள் சொகுசு கார்களும் மில்லியன் டொலர் வீடுகளிலும் வாழ்ந்து ஆங்கிலத்தில் பீட்டர் விடுவது மனதில் வந்து கோபம் இன்னும் கூடியது. "இந்தா தம்பி இதில முப்பதாயிரம் இருக்கு. பத்தாயிரம் சொக்ஸ் வாங்க. இருபதாயிரம் ஒரு புது துவிச்சக்கர வண்டி வாங்க. இந்த கறல் பிடித்த வண்டியை தூக்கி ஏறி. நான் அடுத்த வருசமும் வருவன் அப்ப முன் வீட்டு அக்காவிற்கு சொல்றன்" ஒருவித பதட்டத்தோடு சொன்னேன். "ஐயோ அண்ணா இரண்டாயிரம் போதும்" அவன் கண்களில் ஆசை இருந்தாலும் அவனது மானம் அதை தடுத்தது. அண்ணர் போராளிகளை நல்லா வளர்த்திருக்கிறார் என்று தெரிந்தது. "இல்லை தம்பி வைச்சிரு." காசை கையில் திணித்தேன். அவர் தலை கோதுவதை விட்டு எனது கையை இறுக்கி பிடித்திருந்தார். எனக்கு அவருடன் நிற்க ஏனோ பிடித்திருக்கவில்லை. மன உளைச்சல் கூடியது. " தம்பி நல்லா இரு. முயற்சியை கை விடாதே" சொல்லி விட்டு திரும்பி பார்க்காமல் சுபாஸ் கடை நோக்கி நடந்தேன். அவன் அங்கு நின்று என்னை பார்ப்பது கழுத்தின் மயிர்கள் உணர்ந்தது. சுபாஸ் வெதுப்பக்கத்தில் ஒரு பெரிய கூட்டமே நின்றது. அங்கு வரியில் நின்று வாங்கும் பழக்கம் இன்னும் இல்லை என்றதை கண்டேன். அடித்துபிடித்து பாண் வாங்கி வெளியில் வந்தேன். இந்த முறை சந்திக்கு போய் சுற்றி போக திட்டம். செல்லமுத்தூஸ் கடையில் வந்து என் பழைய நண்பரை தேடினேன். அங்கு காசும் மாத்தலாம். முதலாளி வர நேரம் எடுக்கும் என்று வேலை செய்த இளையோர் கூறிவிட்டு கடையை திறக்கும் பரபரப்பில் இருந்தார்கள். பல கடைகள் எல்லா வகையான பொருட்களும் அங்கிருந்தன. திருமகள் புத்தகசாலை, மற்றும் சேனாந்தை சந்தை பழைய நினைவுகளை கிளறியது. அங்கு அங்காடி வைத்திருந்த என் குடும்பத்தினர் இந்திய இராணுவத்துடன் இயங்கிய கைக்கூலிகளால் இலஞ்சம் கேட்டு சுடப்பட்ட இடத்தை பார்க்கிறேன். முழங்காலில் கையெடுத்து கும்பிடும் போது வாய்க்குள்ள சுட்டார்கள் என்று நினைவு வந்தது. தொண்டையில் ஏதோ கட்டியது. கார்பெட் தெரு என்றாலும் அதில் இரத்த கறை தெரிந்தது. பேருந்து நிலையம் பெரிதாக கட்டியிருந்தது. ஆனால் அதற்கு முன்னாள் சுடப்பட்டு தப்பிய லண்டன் மாமா ஞாபகம் வந்தார். ஆனால் மரணித்த மற்றைய 21 பல்கலை மாணவர்கள் ஞாபகம் வரவில்லை. நிலைய சுவரில் இரத்த கறைகள் தெரிந்தன, என் மனதில். சமிக்ஞை விளக்கில் சிங்கள காவல் துறையினர் நின்று வாகனங்களை ஒழுங்கு படுத்தினர். அவர்கள் சைகைக்கு காவல் நிற்கும்போது பக்கத்தில் நிண்ட ஐயாவை கேட்டேன் "சந்தை இப்பவும் இங்க தானோ?" "இல்லை தம்பி அது பெட்ரொல் ஸ்டேஷன் பக்கம். இப்ப இங்க சின்ன அங்காடிகள் இருக்கு. இதை பெரிய பேருந்து நிலையமாக கட்டிட போயினம்" சொன்னார் ஐயா. நானும் அவரும் ஒரு சிலரும் தான் நடைவாசிகள் மற்றோர் எல்லாரும் வாகனங்களில் எங்கேயோ அவசரமாக சென்றார்கள். நான் இடது பக்கம் திரும்பி கடைகளை பார்த்து கொண்டு முருகன் கோவில் தெருவை நோக்கி நடந்தேன். நகை கடைக்குள் யாரோ விடிய வெள்ளனை நகை பாரத்திருந்தார்கள். அப்படியே தண்ணி கடை தாண்டி திரும்பினேன். சிகை அலங்கார கடைக்கு வெளியால் பல இளையோர் உருளுந்துகளில் நின்று சல்லாபித்தார்கள். அதற்கு முன் உள்ள புகைப்பட கடையில் மும்முரமாக ஒரு இளையவர் கணனியில் வேலை செய்திருந்தார். அவர்கள் என்னை பார்க்க நான் புன்முறுவலிட்டு தலையை மேலும் கீழும் ஒரு தடவை ஆட்டினேன். அவர்களும் திரும்ப மரியாதைக்கு தலையாட்டி தந்தார்கள். முடக்கில் ஒரு ஐந்து நாய்க்கூட்டம் படுத்திருந்தது. அவர்களை கண்டும் காணாமல் தாண்டி சென்றேன். அதில் இரண்டு பாண் வாசத்தை கண்டு என்னை தொடர்ந்தன. நான் செக்கிழுக்கும் ஆலை ஒழுங்கையால் விழுந்து வேகமா நடந்தேன். நாய்களும் வேகமெடுத்தன. அங்கு மாடுகள் இப்பவும் செக்கிழுக்கும் சத்தம் கேட்டது. நல்லெண்ணெய் வாசம் தூக்கியது. மாமனார் கோவிலுக்கு பூ பறித்துக்கொண்டிருந்தார். கல்லெடுப்பது போல் குனிந்தார் எனது தொடராளிகள் தெறித்து ஓடினார்கள். "எப்படி சந்தி?" பெருமையாக கேடடார். "கண்டுபிடிக்க முடியவில்லை அவ்வளவு வளர்ச்சி. ஒரு பக்கம் தான் பார்த்தனான் பின்னேரம் இன்னொரு சுற்று போக இருக்கு" உற்சாகமாக சொன்னேன். "ம்ம் பார்த்து நட இடிச்சுப்போட்டு போயிடுங்கள் இந்த சனம்." சொல்லி வாய் மூட முதல் உருளுந்தில் யுவதி ஒருவர் பீப் பீப் என்று முடக்கில் சத்தமெழுப்பி வேகத்தை குறைக்காமல் விரைந்து சென்றார். மற்ற பக்கத்தில் இருந்து துவிச்சக்கர வண்டியில் வந்த முதியவர் தெருவில் இருந்து நகர்ந்து மணலுக்குள் வண்டியை விட்டு தப்பினார். "இந்த பொடியளை திருத்த முடியாது" சபித்து கொண்டே போனார். உரலில் இடித்த சம்பலுடன் முப்பது வருடத்தின் பின் பாண் சாப்பிடும் ஆவலில் மாமி வீடு நோக்கி மாமனாருடன் விரைகிறேன்.
 2. 6 points
  2015 இன் முடிவுகளின் பின் தென்னிலங்கையில், குறிப்பாக சிங்கள கடும்போக்காளர்கள், சிங்கள புத்திசீவிகள், பேராசிரியர்கள், பிக்குகள் மத்தியில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் மகிந்தவுக்கு வாக்களித்தும் அவர் வெல்ல முடியாமல் போனதன் காரணம் சிறுபான்மை இனங்கள் ஒன்று திரண்டு மகிந்தவுக்கு எதிராக வாக்களித்தமையால் தான் எனபதை ஜீரணிக்க முடியாமல் இருந்தனர். வெளிப்படையாகவே இதற்கு எதிராக தம் கருத்துகளை மிதவாத பத்திரிகளைகளான லங்காதீப போன்றவற்றில் கூட எழுதி வந்தனர். இது சிங்கள நாடு, இது சிங்கள பூமி, தமிழர்கள் சோனகர்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என மகாவம்ச கோட்பாட்டை அப்படியே நம்பும் அவர்களால் சிறுபான்மை இன மக்களின் ஒற்றுமை தம் ஒன்றுபட்ட தெரிவை நிராகரிக்கின்றது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த 4 வருடங்களில் அந்த ஒற்றுமையை ரிசாட், ஹிஸ்புல்லா, முரளிதரன் எனும் கருணா, அத்தாவுல்லா, அலிசாஹிர் மெளலானா, கல்முனை பிரதேச சபை, உள்ளூர் அரசியல்வாதிகள் போன்றோரின் ஆதரவுடன் சிறுக சிறுக அசைத்து விட்டு ஈற்றில் சஹ்றானைக் கொண்டு பாரியளவில் குலைத்து சின்னாபின்னமாக்கி விட்டனர். கோசான் ஒரு இடத்தில் குறிப்பிட்ட போன்று, மட்டக்களப்பு தேவாலயத்துக்கு குண்டு ஏன் கொண்டு கொண்டு வரப்பட்டது என்பதன் காரணம் இப்பொழுது எம் கண் முன் விரிகின்றது. கிழக்கு மக்கள் கோத்தா வந்தால் முஸ்லிம்களை அடக்கி ஆள அது தமிழர்களுக்கு சார்பாக அமையும் என நினைத்தால் அது மிகத் தவறான முடிவாகவே கண்டிப்பாக நூற்றுக்கு நூறு விகிதம் அமையும். கோத்தா + மகிந்த + விமல் வீரவன்ச +உதய கம்பல போன்ற கடும் இனவாத அணி தமிழர்களுக்கு சார்பாகவும் நடக்க போவதில்லை, முஸ்லிம்களுக்கு சார்பாகவும் நடக்கப் போவதில்லை. இரண்டையும் பிரித்து வைப்பதற்காக முன்னை விட இன்னும் அதிகமாகவே செயலாற்றும். இதில் அதிகம் பலியாகப் போவது கிழக்கு தமிழ் மக்கள் தான். ஏனெனில் முஸ்லிம்களுக்கு என்று கொஞ்சமாவது குரல் கொடுக்க இஸ்லாமிய நாடுகள் உள்ளன. அவற்றின் உதவிகளும் இலங்கைக்கு தேவை. வடக்கு கிழக்கு மக்களின் உண்மையான பிரிவு கோத்தாவின் வெற்றியுடனே ஆரம்பிக்க போகின்றது.
 3. 2 points
  இதை யாரும் கொண்டு வந்து இணைத்தார்களோ தெரியவில்லை...பார்த்து ரசியுங்கள்
 4. 2 points
  ஏனென்றால் அநேகமான தமிழர்கள் பார்வையாளர்களகவே இருந்தார்கள் அல்லது மதில் மேல் பூனையாக மட்டும்...? அதனுடன் பயணித்தவர்களுக்கு அந்த நேரம் கோத்தபாய யாரென்றே தெரியாது மகிந்த சண்டை விரும்பி என்றும் தெரியாது ரணிலின் நரித்தந்திரத்துக்குள்ளிருந்து விடுபடணும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாவித்து எதையாவது பெற்று விடணும் அவ்வளவு தான் அன்றைய நிலமை தேவையும் கூட.
 5. 2 points
  இன்று குர்திஸ் இன மக்களை சிரியா ரஸ்யா துருக்கி ஈராக் என்று வரிசை கட்டி அடிக்கிறார்கள். ஐ எஸ் எல் எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக பல உயிர் இழப்புகளுக்கு மத்தியில் இவர்கள்தான் போராடி பல இடங்களில் இருந்து அவர்களை விரட்டினார்கள். குர்திஷ் போராளிகளின் தவறு ( 2019இல் விட்ட) ? என்று கட்டுரை வடிக்க பல தமிழருக்கு அங்கே என்ன நடக்கிறது என்பதுகூட தெரியாதுதான் உண்மை நிலை. கொஞ்சம் என்றாலும் தெரிந்துகொண்டால் ..... விட்ட தவறை திருத்துகிறோம் ..... வரலாற்றில் இருந்து பாடம் படிக்க வேண்டும் என்று கிளம்பி விடுவார்கள். பிரபாகரன் பிடிவாதம் பிடிக்காமல் இருந்து இருந்தால் 87இல் இந்தியா சுதந்திரம் தந்திருக்கும் என்று பல இந்திய இராணுவ தளபதிகள் என்ன நடந்தது என்று புத்தகங்கள் எழுதிய பின்னும் ... கூச்சம் இன்றி எழுதுகிறார்கள். புலிகள் இல்லாவிட்டால் விடிவு வந்திருக்கும் என்று முணுப்பும் 2009தோடு காணவில்லை. புலிகளுக்கு எதிரி என்பது சிங்கள அரசு என்ற நிலையில்தான் இங்கே பலரும் தமது கருத்தை நிறுவ நிற்கிறார்கள். இப்படி ஒரு மனித பேரவலத்தை 2009 ஏப்ரலில் செய்ய கோத்தாவே தயங்கியதாகவும் சோனியாகாந்தி நிறுத்தவேண்டாம் என்று கூறியதாகவும் சில முக்கிய சிங்கள இராணுவ அரசியல் ஆட்கள் சொல்கிறார்கள். பின்பு 2005 தேர்தலில் இருந்து பின் நகர்ந்து ......... ராஜீவை கொன்றதால்தான் முள்ளிவாய்க்கால் வந்தது என்று தந்திரமாக 13-14 வருடம் பின்போவார்கள் .......... அதுக்கும் ஏதும் எழுதினால் ....... பிரபாகரன் 77இல் பஸ்ஸை கொளுத்தியதுதான் எல்லாத்துக்கும் காரணம் என்ற இடத்துக்குதான் பொய் சேருவார்கள். இப்படி நான் எழுதியதால் .... சிலர் உங்களை போன்றவர்களால்தான் முள்ளிவாய்க்காலே வந்தது என்று எழுதுவார்கள் இல்லை...... பலர் எழுதியே இருக்கிறார்கள். 2005 தேர்தல் புறக்கணிப்பு இல்லது இருப்பின் ரணிலை ஜனாதிபதியாக மாற்றியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. புற காரணிகளை எவ்வாறு மாற்றியிருக்கும்? எந்த இடத்தில் போர் முடிந்து இருக்கும்? ஏன் அந்த இடத்தில் முடிய வேண்டும்? என்ற எந்த கேள்வியும் அவர்களிடம் பதில் இருக்காது ..... ஆனால் இப்படி முடிந்திருக்காது என்று மட்டும் நம்புகிறார்கள். கடந்த 3000-4000 வருடமாக பில்லியன் கணக்கான மக்கள் கடவுள் மேலே இருக்கிறார் என்றுதான் நம்புகிறார்கள் ...... ஏன் இருக்கிறார்? ஏன் நாம் அவரை வணங்க வேண்டும் என்பதுக்கான பதில்கள் மட்டும் வெறும் சர்வாதிகார போக்காக இருக்கிறது... ஆனால் கருணை மிகுந்தவர் என்று இங்கே முரண்படுகிறார்கள்.
 6. 2 points
  இவர்கள் உலகின் உச்சத்தை தொட்ட அதிபர்கள் பதவிக்காலம் முடிந்தபின் பழைய வாழ்க்கைக்கு எளிதில் திரும்பி விடுகிறார்கள் ஆனால் நம்மவர்களோ ஒருமுறை பதவியை பிடித்துவிட்டால், ஆயுள்வரை தமக்கே சொந்தம் என்று கொண்டாடுவார்கள். Thiruvarudselvan Ampalavanar
 7. 2 points
  விக்னேஸ்வரன் ஐயா படிச்ச, தெளிந்த சிந்தனை உடைய ஆள் என்று நினைச்சுக் கொண்டிருந்த எல்லாருக்கும் பேரிடியாக இருந்தது மாணவர்கள் செய்த முயற்சியை பலவீனப்படுத்தும் வகையில் அவர் வெளியிட்ட அறிக்கை. முந்திரிக்கொட்டை மாதிரி விக்னேஸ்வரன் அறிக்கை வெளியிட்டு ஐயா ஒற்றுமையை சிதறிடித்தமை வரலாற்றில் இடம்பெற்றே ஆகும். ஏற்கனவே பல்கலைக்கழக மாணவர்கள் விக்னேஸ்வரன் விட்ட மாபெரும் வரலாற்றுத் தவறை தெளிவுபடுத்தியிருந்தனர். சம்பந்தன், சுமந்திரன், மாவை போன்ற ஆட்கள் வாக்களித்த மக்களை ஏமாற்றி பேரினவாதிகளுக்கு முட்டாட்களாக (முட்டு கொடுக்கும் ஆட்கள்), அடிமைகளாக சேவகம் செய்யும் சாக்கடை அரசியலை பல வருடங்களாக செய்து வருகின்றனர். அவர்களுக்கு போட்டியாக காலத்துக்கு காலம் காலை வாரும், ஒற்றுமையைக் குலைக்கும் சாக்கடை அரசியலிவாதிகளில் விக்னேஸ்வரனும் ஒருவர் என்று அவர் இந்த அறிக்கையில் தன்னை நியாயப்படுத்தியதன் மூலம் உறுதிசெய்துள்ளார். அவரது நொடிச்சாட்டுகளையும், விதண்டாவாத விளக்கங்களையும் யாரும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்பதை புரிந்துகொள்ள அவரது விக்னேஸ்வரனின் ஈகோ இடம்கொடுக்காது என்று அவரது இந்த அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. யானைக்கும் அடி சறுக்கும் என்று சொல்வாங்கள். விக்னேஸ்வரனும் அப்பிடி ஒரு தவறை செய்துபோட்டாரோ என்று நாங்க எல்லாம் யோசிச்ச வேளையில, இல்ல இல்ல நான் மிக நல்லா திட்டமிட்டுத் தான் காலை வாரினனான் என்று இந்த அறிக்கையில விக்னேஸ்வரன் உறுதி செய்திருக்கிறார். பெரிய மனிதர்கள் தெரியாமல் தவறு செய்திருந்தால் அதற்காக வருந்துவதும், தவறுகளை திருத்த முயற்சிகளை எடுப்பதுவும் அவர்களின் பண்பு. விக்னேஸ்வரனிடம் அந்த உயர்ந்த பண்பு அறவே இல்லை என்று தனது தவறை நியாப்படுத்தியதன் மூலம் விக்னேஸ்வரன் உறுதி செய்திருக்கிறார். அவர் மட்டுமில்லை அவர்றை கொள்கை பரப்பு செயலாளரான அருந்தவபாலன் என்ற சந்தர்ப்பவாதியும் நொடிச்சாட்டுகளையும், விதண்டாவாத விளக்கங்களையும் கூறி தன்னிடமும் எந்த நல்ல பண்புகளும் இல்லை என்று உறுதி செய்திருக்கிறார். உண்மைகளை மறைக்கும் இவர்களது ஏமாற்றல் நடவடிக்கைகள் மூலம் அவர்கள் மீது மக்கள் வைச்சிருந்த மதிப்பு, மரியாதை குறைஞ்சு கொண்டே போகுது. இதில பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரே ஆள் விக்னேஸ்வரன் ஐயா தான்.
 8. 1 point
  மீண்டும் யாழ்ப்பாணத்தில் ஈழநாடு! ( வெட்ட வெட்ட தழைக்கும் வாழை மரம் போன்று காலத்துக்குக் காலம் சோதனைகள் – வேதனைகளைச் சந்தித்தாலும் மீண்டும் மீண்டும் புத்துயிர்ப்புடன் மலர்ந்துகொண்டிருப்பதுதான் யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகை. இலங்கையில் அதிபர் தேர்தல் அமளிகளுக்கு மத்தியில் யாழ். ஈழநாடு பிரைவேட் லிமிட்டட் நிறுவன இயக்குநரும் டான் தொலைக்காட்சி குழுமத்தின் தலைவருமான மூத்த ஊடகவியலாளர் எஸ். எஸ். குகநாதன், இந்த வாரம் யாழ். ஈழநாடு வார இதழை யாழ்ப்பாணத்தில் வெளியிட்டுள்ளார். லண்டன் நாழிகை இதழ் ஆசிரியர் மாலி மகாலிங்கசிவம், அதிபர் தேர்தல் வேட்பாளர் சிவாஜிலிங்கம், ஈழநாடு ஸ்தாபக இயக்குநர் டொக்டர் சண்முகரட்ணத்தின் புதல்வர் எஸ். ரட்ணராஜன் ஆகியோருட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். முருகபூபதி எழுதி, அண்மையில் வெளியான இலங்கையில் பாரதி என்னும் ஆய்வு நூலில், முன்னைய ஈழநாடு குறித்து எழுதப்பட்டிருக்கும் கட்டுரை இங்கு பதிவாகின்றது. ) " கே.சி.தங்கராஜா, கே.சி.சண்முகரத்தினம் ஆகிய இரு சகோதரர்களின் உள்ளத்தில் முகிழ்த்த பிராந்தியப் பத்திரிகை ஒன்றின் உருவாக்கத்துக்கான சிந்தனை 1958 இல் யாழ்ப்பாணத்தில், கலாநிலையம் என்ற பதிப்பகமாக வித்தூன்றப்பட்டு, 1959 பெப்ரவரியில் முளைவிட்டு வாரம் இருமுறையாக “ஈழநாடு” என்ற பெயரில் வெளிவரத் தொடங்கி, நாளும் பொழுதும் உரம்பெற்று வளர்ந்து, ஈற்றில் 1961இல் முதலாவது பிராந்தியத் தமிழ்த் தினசரியாக சிலிர்த்து நிமிர்ந்தது. அன்று தொட்டு இறுதியில் யாழ் மண்ணில் தன் மூச்சை நிறுத்திக்கொள்ளும் வரை அதன் இயங்கலுக்கான போராட்டம் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றுடன் பின்னிப் பிணைந்ததாகவே நகர்ந்துவந்துள்ளது. ஜுன் 1981இல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தையும், பூபாலசிங்கம் புத்தகசாலையையும் கொழுத்திய பேரினவாதத்தின் கண்களுக்கு ஈழநாடு காரியாலயமும் தப்பிவிடவில்லை. அதன் பின்னர் ஈழப் போராளிகளின் குண்டுத் தாக்குதலுக்கும் இலக்காகி, 1988 பெப்ரவரியில் தன்னைக் காயப்படுத்திக் கொண்டது. பின்னர் தொடர்ச்சியான பத்திரிகைச் செய்தித் தணிக்கைகள், அச்சுறுத்தல்கள், பொருளாதார நெருக்கடிகள் என்று சுற்றிச் சூழ்ந்த நிலையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது." இவ்வாறு யாழ்ப்பாணத்தில் ஈழகேசரியின் மறைவிற்குப்பின்னர் உதயமாகிய ஈழநாடு பத்திரிகையின் தோற்றத்தையும் அஸ்தமனத்தையும் லண்டனில் வதியும் நூலகர் நடராஜா செல்வராஜா " ஈழநாடு என்றதோர் ஆலமரம்" என்னும் கட்டுரையில் உணர்வுபூர்வமாகவும் அறிவார்ந்த தளத்திலும் பதிவுசெய்துள்ளார். ஈழநாடு ஸ்தாபகர் கே.சி. தங்கராசா கிழக்கிலங்கை காகித ஆலைக்கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் சிறந்த பணியாற்றி நாடாளுமன்றில் முன்னாள் நிதியமைச்சர் கலாநிதி என்.எம்.பெரேராவால் பாராட்டப்பட்டவர். இவருடைய கொழும்பு இல்லமே ஈழநாடு பத்திரிகையின் தென்னிலங்கை அலுவலகமாக இயங்கியது. இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா , 1981 இல் யாழ்ப்பாணம் பொது நூலகம் தங்கள் பதவிக்காலத்தில் எரியூட்டப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்புக்கோரியிருந்தார். ஆனால், அக்காலத்தில் அதே அரசின் கூலிகளினால் ஈழநாடு என்ற ஆலமரமும் எரிக்கப்பட்டது என்பதை ஏனோ சொல்வதற்கு மறந்துவிட்டார். அதனை நினைவுபடுத்துவதற்கும் அங்கிருந்த தமிழ்த்தலைவர்கள் ஏனோ மறந்துவிட்டனர். ஈழத்தமிழர்களின் குரலாக ஒலித்த ஈழநாடு முதல் இதழ் 1958 இல் வெளியானதும் நேரே கொழும்புத்துறையிலிருந்த யோகர்சாமிகளிடம்தான் ஆசிபெறுவதற்கு சென்றார்களாம். அவர் அந்த இதழைப்பார்த்துவிட்டு, "ஏசுவார்கள் எரிப்பார்கள். துணிவுடன் தொடர்ந்து நடத்துங்கள் " என்றுதான் ஆசி கூறினாராம். அவரது தீர்க்கதரிசனம் பலித்தது. பாரதி இந்தியாவில் ஆசிரியராக இருந்த அனைத்துப்பத்திரிகைகளும் சுதந்திரவேட்கையையே வலியுறுத்தி வந்திருக்கின்றன. அவர் நடத்திய பத்திரிகைகளுக்கும் பிரிட்டிஷ் இந்தியாவில் தடைவந்திருக்கிறது. அவரும் நண்பர்களும் புதுவைக்கு தலைமறைவாக தப்பியோடியிருக்கிறார்கள். வெள்ளிவிழாக்கண்ட யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகையும் சோதனைகள் - தடைகள் பலவற்றையும் கடந்துதான் பயணித்து ஓய்வுற்றது. ஈழகேசரி 1958 இல் நிறுத்தப்பட்டதும் அங்கிருந்த ஆசிரியர் இராஜ அரியரத்தினம் ஈழநாடு வில் இணைந்தார். கே.பி. ஹரன் ஆசிரியரானார். அ.செ.முருகானந்தன், எஸ்.எம்.கோபாலரத்தினம், பெருமாள், சசிபாரதி, எஸ். எஸ். குகநாதன், காசிலிங்கம், சபாரத்தினம், மகாதேவா, அனந்த பாலகிட்ணர், ஈ.கே. ராஜகோபால், கே.வி.ஜே. திருலோகமூர்த்தி, ஐயா சச்சிதானந்தம், கே.கே. ஐயாத்துரை, எஸ்.திருச்செல்வம், ஏ.பி. சூரியகாந்தன், கா.யோகநாதன், எஸ். ஜெகதீசன், ஏ.என்.எஸ் திருச்செல்வம், பார்வதி நாதசிவம், கந்தசாமி , துரைசிங்கம் , மகாலிங்க சிவம் …. .இப்படிப்பலர் பணியாற்றிய பத்திரிகை ஈழநாடு. இவர்களில் சிலர் மறைந்து நினைவுகளாகிவிட்டனர். சிலர் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர். சென்றவிடத்திலும் விட்ட குறை தொட்ட குறையாக பத்திரிகைகளை நடத்தினர். சிலர் ஈழநாடு பத்திரிகை வாழ்க்கை குறித்த நினைவுகளை நூல்களாக வெளியிட்டனர். சிலர் ஈழநாடு பத்திரிகையில் பெற்ற அனுபவத்திலிருந்து கொழும்பில் வெளியான -- வெளிவரும் பத்திரிகைகளில் இணைந்தனர். சிலர் தாம் பெற்ற ஈழநாடு அனுபவத்திலிருந்து ஊடகத்துறையின் வேறு துறைகளான வானொலி, தொலைக்காட்சி சேவைகளுக்கும் சென்றனர். நூலகர் செல்வராஜா குறிப்பிடுவதுபோன்று ஈழநாடு ஆலமரம்தான். இந்த விருட்சத்தின் நிழலில் வாழ்ந்தவர்கள் அன்றைய வாசகர்கள். அதில் கூடுகட்டி வாழ்ந்தவர்கள் மேற்சொன்ன பத்திரிகையாளர்கள். 1981 இல் தீக்குளிக்கப்பட்ட சீதையாக ஈழநாடு மீண்டும் புதுப்பொலிவுடன் வெளிவரத்தொடங்கிய காலத்தில் இதன் ஆசிரியராக பணியாற்றிய ந. சபாரத்தினம் அவர்களின் ஆசிரியத்தலையங்கங்கள் எளிமையும் கருத்துச்செறிவும் மிக்கதாக விளங்கின. பத்திரிகையாளரான பாரதியும் எழுத்திலே எளிமையை கையாண்டவர். " எளிய பதங்களைக் கொண்டு எளிய நடையில் காவியம் செய்து தருவோன் தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான். தமிழா தெய்வத்தை நம்பு, பயப்படாதே. உனக்கு நல்ல காலம் வருகின்றது. உனது ஜாதியிலே உயர்ந்த அறிஞர்கள் பிறந்திருக்கிறார்கள். தெய்வங்கண்ட கவிகள், அற்புதமான ஸங்கீத வித்வான்கள், கைதேர்ந்த சிற்பர், பல நூல் வல்லார், பல தொழில் வல்லார், பல மணிகள் தோன்றுகிறார்கள். அச்சமில்லாத தர்மிஷ்டர் பெருகுகின்றனர். உனது ஜாதியிலே தேவர்கள் மனிதர்களாக அவதரிக்கிறார்கள். கண்ணை நன்றாகத்துடைத்துவிட்டு நான்கு பக்கங்களிலும் பார்" என எழுதியிருக்கிறார். யாழ்ப்பாணம் ஈழநாடு அன்றைய தமிழ்சமுதாயத்திற்கு பாரதியின் இக்கருத்துக்கு இசைவாகவே செய்திகளை வழங்கியது. வாழ்ந்தது. கொழும்பு பத்திரிகைகள் அங்கிருந்து முதல்நாள் இரவு தபால் ரயிலில் புறப்பட்டு வடபுலத்திற்கு மறுநாள் காலையில் வந்து சேர்வதற்கு முன்னர், ஈழநாடு சுடச்சுட செய்திகளுடன் மக்களிடம் சென்றுவிடும். மக்களின் நாடித்துடிப்பறிந்து பத்திரிகை வெளியிட்டவர் பாரதியார். பத்திரிகையில் உரைநடை எவ்வாறு அமையவேண்டும் என்று தமது அனுபவத்தில் இவ்வாறு சொல்லியிருக்கிறார்:" தமிழ் வசன நடை இப்போதுதான் பிறந்து, பலவருஷமாகவில்லை. தொட்டிற்பழக்கம் சுடுகாடு மட்டும். ஆதலால், இப்போதே நமது வசனம் உலகத்தில் எந்த பாஷையைக்காட்டிலும், தெளிவாக இருக்கும்படி முயற்சிகள் செய்யவேண்டும். கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது எனது கட்சி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம், எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்துவிட்டால் நல்லது. சொல்ல வந்த விஷயத்தை மனதிலே சரியாக கட்டிவைத்துக்கொள்ளவேண்டும். பிறகு கோணல், திருகல் ஒன்றுமில்லாமல் நடை நேராகச்செல்ல வேண்டும். உள்ளத்திலே நேர்மையும் தைர்யமும் இருந்தால், கை பிறகு தானாகவே நேரான எழுத்து எழுதும். தைர்யம் இல்லாவிட்டால் வசனம் தள்ளாடும். சண்டிமாடு போல ஓரிடத்தில் வந்து படுத்துக்கொள்ளும். வசன நடை கம்பர் கவிதைக்குச்சொல்லியது போலவே தெளிவு, ஒளி, தண்மை, ஒழுக்கம் இவை நான்குமுடையதாக இருக்கவேண்டும்." ஈழநாடு பத்திரிகை யாழ் மண்ணில் தோன்றியது முதல் அஸ்தமிக்கும் வரையில் பாரதியின் இச்சிந்தனையின் தாக்கத்துடன் வெளிவந்தமைக்கு அங்கிருந்த சமூக, அரசியல், பொருளாதாரக்காரணிகளும் முக்கியமானது. இலங்கை அரசியலில் தமிழ்த்தலைவர்களினால் யாழ்ப்பாணத்தில் 1961 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சத்தியாக்கிரகப்போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. சமூகத்திற்காக பேசுவதும் சமூகத்தை பேசவைப்பதுமே ஒரு பத்திரிகையாளனதும் படைப்பாளியினதும் கடமை. அக்கடமையை யாழ்ப்பாணம் ஈழநாடும் அதில் பணியாற்றியவர்களும் வெளியிலிருந்து அதில் எழுதிய எழுத்தாளர்களும் நிறைவேற்றியிருக்கிறார்கள். குறிப்பிட்ட சத்தியாக்கிரகம் தொடர்பான செய்திகளை மக்களிடத்தில் உடனுக்குடன் எடுத்துச்சென்றதனாலும் ஈழநாடு விற்பனை அதிகரித்ததாக அக்கால வாசகர்கள் சொல்லியிருக்கிறார்கள். அத்துடன் ஈழநாடு விற்பனை அதிகரிப்பதற்கு ஒரு முக்கியமான கொலைவழக்கும் காரணம் எனவும் சொல்லப்படுகிறது. அதுதான் கோகிலாம்பாள் வழக்கு. 1963 இல் இலங்கையில் தமிழர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்ட கிளிநொச்சி உருத்திரபுரம் பிள்ளையார் கோயில் அய்யர் கொலைவழக்கு. அந்த அய்யரின் மனைவி குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் நகரமண்டபத்தில் அமைந்திருந்த அசைஸ் நீதிமன்றத்தில் சுமார் மூன்று மாதங்கள் நடைபெற்றபொழுது, ஈழநாடு பத்திரிகையில் பக்கம் பக்கமாக செய்தி வெளியானது. தினமும் 20 ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியிருக்கிறது. என்னும் தகவலை குறிப்பிட்ட வழக்குச்செய்திகளை தொடர்ந்து ஈழநாடுவில் எழுதிய நிருபர் கா. யோகநாதன் தமது கட்டுரை ஒன்றில் பதிவுசெய்துள்ளார். ( பத்திரிகையாளன் - ஈழநாடு வெள்ளிவிழா சிறப்பிதழ் - 1984) ஈழநாடு இலங்கைத்தமிழ்ப்பேசும் மக்களின் அபிலாஷைகளுக்கு களம் அமைத்துக்கொடுத்தமைக்கு பாரதியின் அஞ்சாமை தாரக மந்திரமாக திகழ்ந்தது எனலாம். ஈழநாடுவில் ஆசிரியர் ந. சபாரத்தினம் எழுதிய ஆசிரியத்தலையங்கங்கள் சிலவற்றின் தொகுப்பு நூல் ஊரடங்கு வாழ்வு 1985 இல் தமிழியல் பதிப்பகத்தினால் வெளியானது. இதனை வெளியிட ஆக்கபூர்வமாக உழைத்தவர்கள் தற்பொழுது லண்டனில் வதியும் பத்மநாப அய்யர், மற்றும் 'அலை' அ. யேசுராசா ஆகியோர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. இலங்கையில் இவ்வாறு பத்திரிகை ஆசிரியத்தலையங்கங்கள் தனித்தனி நூல்களாக தொகுக்கப்பட்டு பின்னாளில் வெளிவந்தமைக்கு ந. சபாரத்தினம் அவர்களின் ஊரடங்கு வாழ்வு முன்னுதாரணமாகும். முன்னர் யாழ். ஈழநாடு பத்திரிகையில் பணியாற்றிய எஸ். எஸ். குகநாதன், பிரான்ஸ் சென்ற பின்னர், பாரிஸ் ஈழநாடு வார இதழை வெளியிட்டார். இலங்கையில் புதிய ஈழநாடு இணைய இதழையும் நடத்தியவர். டான் தொலைக்காட்சியை ஆரம்பித்தவர். காசிலிங்கம் - ராஜகோபால் ஆகியோர் இணைந்து லண்டனிலிருந்து தமிழன் இதழையும் பின்னர், ராஜகோபால் லண்டன் ஈழகேசரி , புதினம் ஆகியனவற்றையும் வெளியிட்டார். எஸ்.திருச்செல்வம் கனடா சென்று தமிழர் தகவல் என்னும் இதழை வெளியிடுகிறார். இவ்வாறு யாழ். ஈழநாடுவில் முன்னர் பணியாற்றியவர்கள் பாரதியின் தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்திடும் கனவை நனவாக்கி வருகின்றனர். இந்தப்பத்தியில், பாரதியின் அச்சமில்லாத தர்மிஷ்டர்கள் பெருகுகின்றனர் என்னும் ஒரு வரி தொடக்கத்தில் வருகிறது. இலங்கையிலும் ஒரு தர்மிஷ்டர் ஜே.ஆர். ஜயவர்தனாவின் உருவத்தில் வந்தார். அவரது பதவிக்காலத்தில்தான் யாழ்ப்பாணம் ஈழநாடு எரிந்தது. சுமார் மூன்று தசாப்தங்கள் கடந்து அவருடைய மருமகன் முறையானவர் நாடாளுமன்றத்தில் அதற்காக மன்னிப்புக்கோருகின்றார். "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தருமம் ஓர் நாள் வெல்லும்." என்றார் பாரதியார். வடபுலத்தில் எத்தனையோ எரியூட்டல்கள், எறிகணை வீச்சுக்கள், குண்டுத்தாக்குதல்கள் நிகழ்ந்தாலும், ஊடகவியலாளர்களும் பொதுமக்களும் இளம் தலைமுறையினரும் அழிக்கப்பட்டாலும் வெட்ட வெட்ட தழைக்கும் வாழை மரம்போன்று, மீண்டும் மீண்டும் தமிழ்ப்பத்திரிகைகள் வெளிவந்தவண்ணமே இருக்கின்றன. கணினியின் தீவிர பாய்ச்சலையடுத்து, இணைய இதழ்களும் பெருகிவிட்டன. https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5492:2019-11-13-06-55-27&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68
 9. 1 point
  வணக்கம் விவசாயி, அருமையான கட்டுரை. வாசிச்ச உடனே ஊர் விடாய்க்குது எனக்கு. முன்பு கருத்துக்களத்தில் நாம் பிடுங்குப்பட்ட காலத்தில் நான் யோசிப்பதுண்டு நீங்கள் ஊருக்கு போய் கனகாலமாக இருக்கும் என்று. ஆனால் 30 வருடம் எல்லாம் மிகப்பெரிய இடைவெளி. கிட்டத்தட்ட ஒரு அரை மனித வாழக்கை! அடிக்கடி பார்க்கும் எமக்கே ஊரில் பலவிடயங்கள் வியப்பைத்தரும்- உங்களுக்கு ஏற்பட்டிருக்க கூடிய cultural shock எப்படி இருந்திருக்கும்! தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் கோணத்தில் ஊரை பார்ப்பது ஒரு அலாதியான அனுபவம்.
 10. 1 point
  பிரித்தானியா முதலாம் தர நாடு இல்லை என்று விளம்பரம் செய்தால் வரும் அகதிகளின் எண்ணிக்கை குறையலாம் ஆனாலும், போலாந்துக்காரனும் ரூமேனியனும் விட மாட்டார்கள்.
 11. 1 point
  ஒரு கிழமைக்குள் இவ்வளவு சங்கதிகள் தொடரட்டும்
 12. 1 point
  நல்லவேளை இப்பொழுது வந்தீர்கள். உங்கள் பெயரை தான் மாறி தனி ஒருவன் என்று எழுதியிருந்தேன். இப்பொழுது மாற்றி விட்டேன். 12 மணித்தியாலத்தின் பின் வந்திருந்தால் மாற்ற முடியாமல் போயிருக்கும்.
 13. 1 point
  நன்றி அண்ணா. ஒரு கிழமை யாழில் நின்றாலும் ஏதோ பதினைந்து வருடங்கள் வாழ்ந்த அளவு நினைவுகளை கைப்பற்றினேன். இன்னும் இருக்கு
 14. 1 point
  தமிழர்தம் உடம்பொடு உயிரிடையென்ன வள்ளுவம் -சுப.சோமசுந்தரம் இப்போதெல்லாம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வள்ளுவம் தமிழர்தம் வாசிப்பில் கலந்ததோ என்னவோ, சுவாசிப்பில் கலந்தாற் போன்ற உணர்வு. இதற்கெல்லாம் தமிழ் உணர்வாளர்க்கு நன்றி சொல்ல வேண்டியதில்லை; அவர்கள் எக்காலத்தும் வாழ்ந்தவர்தாமே! நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களாய், திடீரென உறவாடிக் கெடுக்க நினைக்கும் உன்மத்தர்க்கே நம் நன்றி உறித்தாகுக! ‘ மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின் ’ (குறள்-280) என்ற வள்ளுவனுக்கே காவியுடுத்திப் பட்டை தீட்டினர் நயவஞ்சகத்தையே தொழிலாய்க் கொண்ட கூட்டத்தினர். குறுக்கு சால் ஓட்டித் தமிழ் நிலத்தில் காலூன்ற இவர்களுக்கு உலகப் பொதுமறையா கிடைத்தது? பொய்யே மொழியாய்க் கொண்டோர்க்குப் பொய்யா மொழியா? நிற்க. இவர்களின் எதிர்மறையை நேர்மறையாய்க் கொள்வோமே! கற்றார் எனக் காட்டிக் கொள்ளும் இவர்களையும் கல்வி அற்றாரையும் விடுத்து, ஏனைய நம்மிடம் வள்ளுவன் கொண்ட உறவும் பரிவும்தான் என்ன என்பதை இவர்கள் முன் அலசுவோமே! என்னைப் போல் உங்கள் அனைவர்க்கும் வாழ்வில் குறளனுபவம் வாய்க்கப் பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை. இப்போது இம்முனையில் எழுத்தாணி என் கையில். சற்று நேரத்திற்கு நான் மட்டும்தான் உங்களிடம் பேச முடியும்! இலக்கிய உலகில் உங்களில் பெரும்பான்மையினரைப் போல் நானும் எந்தப் பகுதியிலும் துறை போகியவன் இல்லை. அஃதாவது இலக்கியமே வாழ்வாகக் கொண்ட பேறு பெறவில்லை. ஆனால் அன்றாட நிகழ்வுகளில் போகிற போக்கில் வள்ளுவனை நினைத்தால், அது வாழ்வே இலக்கியமாகக் கொள்ளும் பேறுதானே! மதியம் ஒரு மணிவரை வகுப்பென்றால், சிலசமயம் சுமார் ஐந்து நிமிடங்கள் அதிகம் வகுப்பெடுக்கும் சூழ்நிலை வரலாம். அப்போது ஆசிரியனாகிய நான் வேடிக்கையாய் ‘ செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும் ’ (குறள்-412) என்று ஆரம்பகாலத்தில் சொல்லியிருக்கிறேன். இப்போதெல்லாம் அம்மாதிரி சூழ்நிலையில், “குறள் சொல்வோமா?” என நான் கேட்க மாணவர்களே ஒருமித்த குறலில் அக்குறளைச் சொல்லி முடிப்பது என் செவிக்கின்பம். பசி வயிற்றைக் கிள்ள அவர்கள் உள்ளுக்குள் என்னை வசை பாடுவது இதுவரை என் காதில் கேட்கவில்லை. மேற்கூறிய குறள் தொடர்பாக இன்னொரு நிகழ்வும் உண்டு. நிகழ்ச்சியொன்று கால தாமதமாகி மதியம் இரண்டு மணிக்கு நன்றியுரை சொல்ல நான் அழைக்கப்பட்டேன். “சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் எனும் தருணத்தில் நன்றி சொல்ல வந்துள்ள பரிதாப நிலை எனது” என்ற பீடிகையோடு ஆரம்பித்தேன். அந்நிகழ்ச்சி கீழடி ஆய்வும் அரசியலும் பற்றியது. அருமையானதொரு சொற்பொழிவு நிகழ்த்தி அமர்ந்திருந்தார் பேரா.கருணானந்தம். அவரது பொழிவுகளை ஏற்கெனவே இணையத்தில் பார்த்தும் கேட்டும் இருக்கிறேன். ஒவ்வொரு பொழிவும், நாம் எவ்வளவு அறியாமையிலிருக்கிறோம் என்பதை அவர் சொல்லாமலே நமக்கு உணர்த்தவல்லது. எனவே எனது நன்றியுரையில் ‘அறிதொறும் அறியாமை காண வைக்கும் சான்றாண்மை’ என அவரைப் பாராட்டினேன். நிகழ்ச்சி முடிந்ததும் தமிழுணர்வாளரான என் நண்பரொருவர் என்னைக் கிண்டலாகப் பாராட்டினார், “பலே ஆளுய்யா நீர்! காமத்துப்பாலில் வேறு எதற்கோ உவமையாகச் சொல்லப்பட்டதை இங்கு எடுத்து விட்டீரே!” காவிக் கூட்டம் மனம் போனவாக்கில் வள்ளுவனை இழுக்கும் போது, நானும் என் பங்கிற்கு இழுக்கக் கூடாதா, என்ன! ‘அறிதொறும் அறியாமை’ சொல்லும் குறள் ‘ அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு ’. (குறள்-1110) வேறொரு சமயம் மேடையில் வீற்றிருந்த சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்த நான், “அவர் நிரம்பிய நூலுடையார்” என அவர்தம் சான்றாண்மை பற்றிக் கூறினேன். நிகழ்ச்சி நிறைவில், அங்கு வந்திருந்த தமிழறிஞர் ஒருவர் என்னை மனந்திறந்து பாரட்டினார், “எனக்குத் தெரிந்து ‘நிரம்பிய நூலறிவுடைமை’ என்பதற்கு ‘நிரம்பிய நூலுடைமை’ என்னும் சொல்லாடல் வள்ளுவத்திலேயே அமைந்துள்ளது. குறள் தெரியாமல் நீங்கள் பயன்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. வாழ்த்துக்கள்”. அப்பாராட்டு இன்றும் என் உள்ளம் வருடும் தென்றல். ‘அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்’ (குறள்-401) என்று கல்லாமை பற்றிய குறளின் தாக்கமே என் சொற் பிரயோகம் என்பது நான் அறிந்தது. எப்போதோ படித்ததெல்லாம் வடிகட்டப்பட்டு நம் மனதில் தங்கி நிற்கும் என்பதும் நான் அறிந்தது. நூலறிவிற்கு நூல் ஆகுபெயராய் அமைந்த அக்குறிப்பிட்ட சொல்லுருவாக்கம் வள்ளுவனுக்கே உரியது என்பது நான் அறியாதது. கணித ஆசிரியன் என்ற முறையில் கல்லூரி மாணவர்களுக்கு வினாடி வினா (Quiz) நிகழ்ச்சிகள் நான் நடத்துவதுண்டு. பொது அறிவு வினாடி வினா நிகழ்ச்சி போல வினாவுக்கு வெறும் விடை மட்டும் சொல்லிச் செல்லும் வழக்கமில்லை. கரும்பலகையில் விடைக்கான விளக்கமும் தரப்படும். விடையைச் சொல்வதற்கு மட்டும் தான் ‘வினாடி’. ஒரு முறை முதற்சுற்று முடிந்ததும் அறிவித்தேன், “ஒரு சுற்றில் தோற்றவர்கள் அரங்கத்தை விட்டு வெளியேற வேண்டியதில்லை. இறுதி வரை பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்து கற்றுக் கொள்ளலாம். இந்த Quizன் நோக்கம் வெற்றி-தோல்வி அல்ல; கற்றுக் கொள்வது மட்டுமே. எனவே இந்த Quiz லும் தோற்றவர் வென்றார்”. இந்த Quizல் தோற்றவரும் வென்றார் என்பதற்குப் பதிலாக உம்மையை ஏன் மாற்றிப் போட்டேன் எனச் சற்று யோசித்தேன். என் நினைவில் ‘ஊடலில் தோற்றவர் வென்றார்’ என்று ஆரம்பிக்கும் குறளின் (1327) படிம நிலை என உணர்ந்தேன். இதனை அங்கு விளக்கவில்லை. ஏனெனில் பங்கேற்பாளர் மாணாக்கர்; குறள் காமத்துபாலில். அறிஞர் பெருமகனார் தொ. பரமசிவன் அவர்கள் பணியாற்றிய பல்கலைக்கழகத்திலேயே பணியாற்றும் பேறு பெற்றவன் நான். அவரது துறை தமிழியல்; எனது துறை கணிதம். எண்ணும் எழுத்தும் என அவருடன் நட்பு பாராட்டியது எனக்கு வாய்த்த சான்றோர் கேண்மை. அவர் உடல் நிலை காரணமாக விருப்ப ஓய்வு பெற்றார். “விருப்ப ஓய்வெல்லாம் வேண்டாம். ஓய்வு பெறும் வரை வந்து செல்லுங்கள். உங்கள் வகுப்புகளை மற்றவர்கள் கவனிப்பார்கள். உங்களிடம் தினம் பேசக் கிடைப்பதே எங்களுக்கான அரும்பெறல்” என்று பேராசிரியர்களும் ஏனைய பணியாளர்களும் வற்புறுத்தினர். அவர் ஏற்கவில்லை. அவரது பணிநிறைவு வாழ்த்துக்கான விழாவில் அவரது நண்பரான ஆங்கிலப் பேராசிரியர் இரவீந்திநாதன் சொன்னார், “இப்போது கூட தொ.ப. விருப்ப ஓய்வு பெறும் தம் முடிவை மாற்றிக் கொள்ள மாட்டாரா எனும் ஏக்கம் என்னிடம் உண்டு.” நான் பேசும் போது இதனைச் சுட்டி ‘செல்லாமை உண்டேல் எனக்குரை’ என ஆரம்பிக்கும் குறளை (1151) ஞாபகப்படுத்துவதாகக் கூறினேன். தலைவன் தலைவியை சிறிது காலம் பிரிய வேண்டிய சூழ்நிலை வருகிறது. உற்றார் உறவினரிடம் விடைபெற்று, தலைவியிடம் வருகிறான். அப்போது அவள், “நீ மனம் மாறி செல்லவில்லை என்றால் மட்டும் என்னிடம் சொல்” என்கிறாள். தொ.ப. தம் ஏற்புரையில், குறளிலேயே இக்குறளுக்கான பதிலையிறுத்தார் ‘வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டும் அஃதொப்பது இல்’ (குறள்-363) நான் பணி செய்யும் பல்கலைக்கழகத்தில் என் துறையல்லாத வேறு ஒரு துறையில் சில காரணங்களுக்காக சிலகாலம் துறைத்தலைவர் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. அங்கிருந்த பிரச்சனைகளுக்கு யாரையாவது பலிகடா ஆக்குவதில் நேரத்தை வீணாக்காமல், மாணவர்களுக்கு சுமூகமான தீர்வை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டேன். என் மீது நிர்வாகமும் ஆசிரியர் சங்கமும் வைத்த எதிர்பார்ப்பும் அதுவே. இப்பணியில் சில அதிகாரிகள் யார் மீதோ (என் மீதும்) கொண்ட வஞ்சினத்தால் எனக்கு இடைஞ்சல்களை அள்ளித்தந்தனர். அதில் ஒருவர் ஒருநாள் மாணவர் சார்ந்த கோப்புகளை நான் எடுத்துச் சென்றபோது என்னிடம், “அந்தத் துறை சார்ந்த விடயங்களை எடுத்துக் கொண்டு என்னிடம் வர வேண்டாம். கோப்புகளை எடுத்துச் செல்லுங்கள்” என்று கடுமையாகப் பேசினார். என்னிடம் பொதுவாக இல்லாத அளவு பொறுமையுடன், “நீங்கள் பேசியது என் காதில் ‘Get out’ என்று விழுகிறது. இப்போது போகிறேன். மீண்டும் வருவேன். என் தனிப்பட்ட விஷயங்களில் மட்டும் தான் என் தன்மானம் வேலை செய்யும். பொதுக் காரியங்களில் நான் மானம் பார்ப்பதில்லை” என்று சொல்லி வந்துவிட்டேன். நான் பேசியது அனைத்தும் பெரியாரை வாசித்ததில் எனக்குக் கிடைத்த பாடம். இந்நிகழ்வை அன்றே என் நண்பரும் ஆசானுமான தொ.ப. விடம் கூறினேன். அவர் பதிலாகக் குறள் மட்டுமே கூறினார் ‘குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானங் கருதக் கெடும்’. (குறள்-1028) பொருள்: சமூக வாழ்க்கையில் ஈடுபடுவோர் காலம், சோம்பல், மானம் பார்த்தால் அவர் எடுத்த காரியம் கெடும். இப்போது நீங்களே சொல்லலாம். வள்ளுவத்தோடு நாம் கொண்ட உறவு உடம்பொடு உயிரிடையென்ன அன்றி வேறென்ன? அதற்கும் வள்ளுவத்திலிருந்தே உவமை! மீண்டும் வேற்றுச் சூழலில் அமைந்த உவமை! ‘உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு’ (குறள்-1122)
 15. 1 point
  யார் வந்தாலும் (சிவாஜி ஒரு போதும் வரமுடியாது ) தமிழனுக்கு விமோசனம் இல்லை இதுக்குள்ளை எந்த நாய் வந்தால் என்ன எந்த நரி தோத்தால் என்ன . மகிந்த கொடுத்த மாளிகையில் இருந்து கொண்டு கிழட்டு கோட்டான் அலறுவது போல் மகிந்தவுக்கு எதிரா அலறுகிராறம் அதை நாங்கள் நம்பனுமாம் .
 16. 1 point
  மித்திரன் இப்பவும், 40 வருடங்களை கடந்தும் வெளியாகிக் கொண்டு தான் இருக்கின்றது. வீரகேசரி குடும்பத்தை சார்ந்தது மித்திரன் (Express newspaper Ceylon Ltd) அதன் இணைய முகவரி: http://mithiran.lk/
 17. 1 point
 18. 1 point
  சுற்றுசூழலை பாதிக்காத இது போன்ற கண்டுபிடிப்புகள்தான் எதிர்காலத்துக்கு அவசியமானவை..... குடுவையில் இருந்து நீர் ஒழுகுவதை சரி செய்ய வேண்டியது மிகவும் முக்கியம்......!
 19. 1 point
  உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்.....!
 20. 1 point
  40 வருடங்களாக தமிழினத் துரோகியாக இருந்துவரும் சம்பந்தனா இதை செல்றது? சம்பந்தனுக்கு என்ன தகுதி இருக்கு விளைவுகளை பற்றி கதைக்க? ஐக்கிய தேய்சிய கட்சிக்கு 5 வருஷமா முண்டு கொடுத்து ஏற்பட்ட விளைவுகளுக்கு, பாதிப்புகளுக்கு யார் பொறுப்பு? சம்பந்தன் இப்பிடி பொங்கியெழுந்து சொல்றதால சஜித்துக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழின இன துரோகத்திற்கு அளிக்கும் வாக்குகள் எனத் தான் எடுக்க வேணும்.
 21. 1 point
  பாமர மக்கள் என்றுமே பாமர மக்கள்தான். அவர்கள் மாறுவதும் இல்லை எதையும் மாற்றுவதுமில்லை. சிறீலங்காவைப் பொறுத்தமட்டில் பிக்குகள் எங்கு நிற்கிறார்களோ அவர்கள் பயன்படுத்தும் பாமர மக்களும் அங்குதான் நிற்பார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் சினிமா உலகம் எங்கு நிற்கிறதோ அங்குதான் பாமர மக்களும் நிற்பார்கள்.
 22. 1 point
  அந்த நாட்களில் முஸ்லீம் பெண்கள் சாரி உடுத்தி முக்காடு போடுவார்கள். இப்போ இவர்கள் ஏதோ அரபு நாடுகளில் இருந்து வந்தவர்கள்போல எல்லாம் மூடி உடுத்துகிறார்கள். தீவிரவாதிகள் பணத்தை அனுப்பி இங்குள்ளவர்களையும் பயங்கரவாதிகளாக மாத்துகிறார்கள். அந்த பணத்தில்தான் மதரஸாக்கள் ஷரியா பல்கலைக்கழகம் முஸ்லீம் குடியேற்றங்கள் எல்லாம் நடக்கின்றன. வன்னியில் றிஷாத்தும் கிழக்கில் ஹிபுள்ளவும் இதை தலைமை தங்கி நடத்துகிறார்கள். இலங்கை அரசாங்கம் இதட்கு ஒரு முடிவு கடட வேண்டும்.
 23. 1 point
  ஊடகவியலாளர்களைக் கண்டால் மாரித்தவக்கை போலக் கத்தியும், ஊடக அறிக்கைகளை விட்டும் சிற்றின்பம் காணும் வழக்கத்தை உடைய விக்கினேஸ்வரன் தனது கேவலமான மறுபக்கத்தை அவ்வப்போது காட்டத் தவறுவதில்லை. இம்முறை ஐந்து கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தனது ஊடக அறிக்கைப் பைத்தியத்தின் மூலம் குலைத்து ஒரு நம்பிக்கைத் துரோகியாக விக்கினேஸ்வரன் தன்னை அடையாளம் காட்டியுள்ளார். இது அவர் ஆரம்பித்துள்ள புதிய கட்சியின் வளர்ச்சியில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியே தீரும். அவரது சிறுபிள்ளைத்தனமான விளக்கங்களை யாருமே ஏற்றுக்கொள்வதாக தெரியவில்லை. ஒரு நம்பிக்கைத் துரோகியாக தன்னை வெளிப்படுத்தியுள்ள விக்கினேஸ்வரன் தனது சிறுபிள்ளைத்தனமான விளக்கங்களை நம்பி மக்கள் ஏமாந்து போவார்கள் என்று கனவு கண்டால் அது வெறும் பகல் கனவாகவே முடியும்!
 24. 1 point
  விவேகமாக சிந்திக்கும் தமிழர்களுக்கு உள்ள சிறந்தவழி முதலாவது வாக்கை சிவாஜிலிங்கம் அவர்களுக்கு வழங்குவதே!
 25. 1 point
  அதானே! சுமந்திரனவாது சிங்கள கொலைகாரர்களை தோற்கடிக்க முயற்சி செய்வதாவது. சஜித்துக்கு வாக்களிப்பதன் மூலம்தான் தமிழின அழிப்பை நாசூக்காக மேற்கொள்ளும் சிங்கள பேரினவாதிகளை வெற்றிகொள்ளச் செய்து அதன் மூலம் சுமந்திரன் உட்பட தமிழரசுக் கட்சியினர் அந்த சிங்கள பேரினவாதிகளுக்கு முண்டு கொடுத்து, சுமந்திரன் உட்பட தமிழரசுக் கட்சியினர் அந்த சிங்கள பேரினவாதிகளிடம் இருந்து பெருமளவு காசை பின்கதவு வழியா பெறமுடியும்! தமிழரசுக் கட்சியின் ஒரே நோக்கம் தமிழர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் சிவாஜிலிங்கத்துக்கு கிடைக்கும் வாக்குகள் மூலம் அவர் பலம் பெறுவதையும், அதன் மூலம் அவர் ஐ.நா. சபை போன்ற இடங்களில் தமிழர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதை பலவீனப்படுத்துவதுமே ஆகும்! கோத்தா பூச்சாண்டி காட்டி சஜித்துக்கு வாக்களிப்பவர்கள் வாக்களிக்க கோருபவர்கள் அனைவரும் தமிழரை பலவீனப்படுத்தும் கைங்கரியங்களில் தான் ஈடுபடுகின்றனர்.
 26. 1 point
  முயற்ச்சி செய்தோம். ஆனால் அது சரிவரவில்லை. ஏன் என்று ஒரு தொகுப்பில் விளக்குகிறேன். எல்லா பழியையும் வெளிநாடுககாரர் மேல் நானும் ஒரு காலத்தில் போட்டேன்.
 27. 1 point
  மருது அடுத்த முறை இவர் தான் ஜனாதிபதி வேட்பாளர்.
 28. 1 point
  மிகச் சுருக்கமாக தெளிவாக ஒரு கருத்தை சொல்லியிருக்கின்றீர்கள்.
 29. 1 point
  இனவாதம் -நடராஜா முரளிதரன்- தமிழ், சிங்கள இரு தரப்பினரும் தத்தமது நிலைப்பாடுகளை விட்டுக் காடுக்காத சூழ்நிலையிலே காணப்பட்ட போதிலும் ஒஸ்லோப் பேச்சுவார்த்தைகளுக்கான நோர்வே அரசின் முயற்ச்சியைப் புறந்தள்ள முடியாத கட்டத்திலேயே இரு தரப்பினரும் அங்கு சென்றதாகக் கருதிக் கொள்ளலாம். அங்கு நோர்வே எதிர்பார்த்தது நிகழவில்லை. அதன் விளைவுகளை மக்கள் வேறு கட்டங்கள் வாயிலாக அனுபவிக்கும் சூழ்நிலை உருவாகி வருகின்றது. தொடர்ந்து கொண்டிருக்கும் படுகொலைகள் நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கின்றது. குறுங் காலத்துக்குள்ளாகவே அல்லைப்பிட்டி, வங்காலை, பேசாலைப் படுகொலைகள் என நீட்சி பெற்று உச்சக் கட்டமாக கெப்பிற்றிக்கொலாவைப் படுகொலைகள் என நடந்தேறியுள்ளன.கெப்பிற்றிக்கொலாவையில் அரசியல் அதிகாரத்தில் எத்தகைய பாத்திரங்களையும் வகிக்காத 15 குழந்தைகள் அடங்கலாக 65க்கும் அதிகமான சிங்கள மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.இந்தக் கொலைக்குக் காரணமானவர்களை யாராலும் கண்டுபிடித்துவிட முடியாது. எனவே இவ்வாறான மனிதப் படுகொலைகளைப் பயன்படுத்தி அரசியல் லாபம் பெறுவதற்கான முயற்ச்சிகளையே அரசியல் அதிகாரத்தை அனுபவிக்கும் அதிகார சக்திகள் மேற்கொள்ளும். உலக வரலாறுகள் எங்கணும் மனிதப் படுகொலைகள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. இனத்தின் பேரால், மதத்தின் பேரால், மொழியின் பேரால், ஊரின் பேரால், உறவுகளின் பேரால் என இப் படுகொலைகள் நியாயப்படுத்தப்படுகின்றன. நாடுகள், இனங்கள், மக்கள் கூட்டம் போன்றவை பிறிதொரு ஆக்கிரமிப்பாளனால் ஆக்கிரமிக்கப்படும் போதும், பலம் பொருந்திய நாடுகள் பொருளாதாரச் சந்தை வாய்ப்புக்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்ற போதும் நிகழ்த்தப்படும் மனிதப் படுகொலைகள் மனித மாண்பினைச் சிதைக்கின்றன. காட்டுமிராண்டித்தனம் கட்டவிழ்த்து விடப்படுகின்றது.ஆகவேதான் நாகரீக சமுதாயங்கள் மனித உரிமைகளையும், மனித உயிர்களையும் காப்பதற்காகப் பல்வேறு உடன்படிக்கைகளை, யாப்புக்களை, சட்டங்களை இயற்றி வந்துள்ளன. ஆனாலும் ஆளுமை படைத்த சமுதாயங்களால் இத்தகைய சட்டங்கள் தங்கள் நலன் சார்ந்து வௌ;வேறு விதங்களில் பிரயோகிக்கப்படும் வழக்கத்தையும் இன்றைய உலகில் நாம் காணுகின்றோம்.இந்தச் சூழ்நிலையில் இன முரண்பாடு கூர்மையடைந்து முற்றிப் போயிருக்கும் இத் தருணத்தில் சராசரிச் தமிழ், சிங்கள மக்களிடையே இவ்வாறான மனிதப் படுகொலைகள் தீவிர இனவாதத்தையே மேலோங்கச் செய்யும். தமிழர் படுகொலைகளால் சிங்களவர்கள் மனம் மகிழ்வதும், சிங்கள உயிரிழப்புக்களால் தமிழர்கள் குதூகலம் அடைவதும் ஒப்பீட்டு அடிப்படையில் மேலோங்கி நிற்கும். எல்லா இனங்களையும் சேர்ந்த நல்ல மனிதர்கள் கூட இத்தகைய மனோபாவத்துள் ஆழ்ந்து, அமிழ்ந்து விடும் போது இனவாத அரசியல்வாதிகளுக்கு அரசியல் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வது சுலபமாகி விடுகிறது. சிங்கள இனவாதம் மேலும், மேலும் தீவிரம் அடைதல் தமிழ் மக்களுடைய தேசிய சுயநிர்ணய உரிமைப் போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும், சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் என்பதை வலுவான வாதமாகத் தமிழ் தேசியவாதிகள் கருதுகிறார்கள். ஆனால் சிங்களப் பேரினவாதமானது ஓர் எல்லைக்கு அப்பால் சர்வதேச சக்திகளைப் பகைத்துக் கொள்ளாது காலத்தை இழுத்தடித்தும், தந்திரோபாய காய் நகர்த்தல்களில் ஈடுபட்டும், அரைகுறைத் தீர்வுகளுக்கு இணங்கியும் தனது அரசியல் சித்து விளையாட்டுக்களைத் தொடரும் என்ற உண்மையை நாம் வசதியாக மறந்து விடுகின்றோம். “சர்வதேசப் பாதுகாப்பு வலைப்பின்னல்” புரிந்த ரணிலிடமிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்ற முற்படுகையில் கிணறு வெட்டப் பூதம் எழுந்த கதையாய் இன்னுமொரு இனவாதப் பூதம் மேலும் வலுவான நிலையில் சர்வதேசத்தைத் தனக்குத் துணையாக அழைத்துள்ளமையை இங்கு நாம் நோக்க வேண்டும். மேலும் இலங்கைத் தமிழர் விடயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடுதான் தமிழக அரசின் நிலைப்பாடுமாகும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி வெளிப்படையாகக் கூறியுள்ளார். தமிழ் நாட்டுக்கு இந்த வருடம் இது வரையில் 3500க்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள் சென்றுள்ளார்கள். கடந்த பல வருடங்களாகத் தமிழகத்திற்குச் சென்று தஞ்சமடைந்து முகாம்களில் வாழும் பல்லாயிரக் கணக்கான அகதிகளின் துயர் தோய்ந்த வாழ்வு சொல்லில் விபரிக்க முடியாதது. ஆயினும் இந்திய மத்திய அரசானது இலங்கையின் இறைமைக்குட்பட்டு இலங்கையின் தமிழ் தேசிய இனப்பிரச்சினையில் இலங்கை அரசுடன் முரண்படாது செல்கின்ற போக்கையே இன்று பட்டும் படாமலும் கடைப்பிடித்து வருகின்றது. எதிர்காலத்திலும் இதே உத்தியையே இந்திய அரசு கையாளும். அதே சமயத்தில் இந்திய அரசானது மறை முகமாக ஈழப் பிரிவினைக் கோரிக்கையைப் பலவீனப்படுத்தும் வகையில் இலங்கை அரசுக்குத் தேவையான சகல இராணுவ உதவிகளையும் வழங்கும். குறிப்பாகக் கடல் பிராந்தியத்தில் கூடுதல் உதவியை இந்தியா இலங்கைக்கு வழங்கும்.எனவே இன்றைய உலகச் சூழலும், இந்தியச் சூழலும் ஈழத்தமிழ் மக்களுக்குச் சாதகமாயில்லாத சூழலில் எதைத்தான் செய்வது? ஏன்ற கேள்வி எழுகின்றது. மேற்குலகின் நண்பன் என்று கருதப்படும் ரணில் ஈழத் தமிழ்; மக்களுக்குத் தீர்வை வழங்கியிருப்பார் என்பதை நான் நம்ப மறுத்தாலும் ரணில் அதிகாரத்தில் இருந்திருந்தால் நிலைமைகள் மேலும் சிறப்பாகத் தமிழர் தரப்புக்கு அமைந்திருக்கும் என்பதையே இங்கு நான் கூற விரும்புகின்றேன். ஜனாதிபதித் தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பாக மிலிந்த மொறகொட வழங்கிய பத்திரிகைப் பேட்டியில் “சர்வதேசப் பாதுகாப்பு வலைப்பின்னல்” என்ற பொறி தமிழர் தரப்புக்கு எதிராக அமைக்கப்பட்டதாகக் கூறியிருந்தார். அதன் விளை பொருட்களில் ஒன்றுதான் “கருணா” என்பதும் அப் பேட்டியில் உள்ளடங்கியிருந்தது. இதனால் எழுந்த சர்ச்சையே ரணில் விக்கிரமசிங்கா சூட இருந்த மகுடத்தைக் குப்புறக் கவிழ்த்தது. ரணிலின் “பாதுகாப்பு வலைப்பின்னலில்” நாடு துண்டாடப்படுவதிலிருந்து காப்பாற்றப்படும் என்ற உறுதி மொழி மேற்குலகினால் வழங்கப்பட்டிருக்கும் என்ற உண்மைக்கு அப்பால் தமிழர் தரப்பு அச்சப்படுவதற்குப் பெரிதாக ஏதும் இல்லையென்றே நான் எண்ணுகின்றேன். “கருணா” குறித்த மிலிந்த மொறகொடவின் கூற்றுக்கள் சிங்களப் பேரினவாதத்தைத் திருப்திப்படுத்த மொழியப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட கூற்றுக்களாக அமையும் வாய்ப்புக்களையும் ஒதுக்கித் தள்ள முடியாது. ஆனால் மறுபுறத்தில் ரணில் தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்தைக் கைப்பிடித்திருந்தால் தமிழர் தரப்பு சர்வ தேச மட்டங்களிலே இன்னும் ஆற்ற வேண்டியிருந்த அரசியல் பணிகளுக்கான கால அவகாசம் கிடைத்திருக்கும்.ஐரோப்பியத் தடை நிகழ்ந்திராது. உலகெலாம் புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கும், தாய் நிலத்துக்குமான உறவு அமைதிச் சூழல் காரணமாக அதிகரிக்கும் பயணப் போக்குவரத்துக்களினால் மேலும், மேலும் இறுக்கமடைந்திருக்கும்.சகல நிறைவேற்று அதிகாரங்களையும் ரணில் பெற்ற நிலையில் ரணிலை அம்பலப்படுத்துவதற்கான வாய்ப்பும் தமிழர் தரப்புக்குக் கிடைத்திருக்கும்.இதற்கும் அப்பால் இனவாதப் படுகொலைக் களங்களிலே தற்காலிக அமைதிக்கான கால இடைவெளி இன்னும் சிறிது நீண்டு விரிந்திருக்கும் http://nmuralitharan.blogspot.com/2006/07/blog-post.html
 30. 1 point
  எங்கள் ஊரில் பொது விசயம் என்றால் முன்மாதிரியா இருக்க எப்பவும் ஆட்கள் இருப்பார்கள
 31. 1 point
  ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன் கண்கள் குளமாகின. கதை? பற்றி பின்னர் எழுதுகிறேன்
 32. 1 point
  அவரின் முயற்சிக்கு பாராட்டுக்களும்,மனமார்ந்த வாழ்த்துக்களும் ...பெரியளவில் சாதிக்க வேண்டும்
 33. 1 point
  கவனிக்க; இந்தியா புகையிரத பாதை வடக்கில் அமைத்தது. வெளியுறவு அமைச்சகம் யாழில் திறந்தது. பலாலி வானூர்தி நிலையத்திற்கு சேவை தொடங்கியது. காங்கேசன்துறையை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. கொழும்பிலும் பல அடுக்கு மாடி மற்றும் விடுதிகள் கட்டுகிறது. நாடு முழுக்க இலவச வைத்திய வாகன சேவை தொடங்கியது. மற்றும் சம்பூர் ஆலையை அங்குள்ள இஸ்லாமிய அமைப்புகள் மூடி ஆயிரத்திற்கு மேற்படட தமிழரை கிளப்ப முனைகிறார்கள். அதற்கும் தடை. யாழிலும் பலாலி நிலையத்தில் 90% தொழில் யாழ் தமிழருக்கு வ்ந்திரு சட்டம் கொண்டுவந்தது. இந்தியாவிற்கு தமிழர் இல்லாவிட்டால் இலங்கையில் இடமில்லை என்று நல்லா தெரியும்.
 34. 1 point
  சரியோ பிழையோ எனக்குத்தெரியாது, ஆனால் ஈழத்தமிழருக்கு தனிநாடு பெற்றுக் கொள்வதட்குரிய எந்தத் தகுதியும் இல்லை. நாங்கள் தகுதி இல்லாத இனம் என்பதை 2009 மே க்கு பின்னான நிகழ்வுகள் மிகத் தெளிவாக கூறியது, கூறியபடி உள்ளது. மேற் குறிப்பிட்ட கேள்வி 14 வருடங்களின் பின்னரும் கேட்க வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம் என்பதுவே நாம் யார் என்பதற்கும் எங்கே நிற்கின்றோம் என்பதற்கும் மிகச் சிறந்த உதாரணம். நாங்கள் தகுதி இல்லாத இனம் என்பதை எங்களுக்கு, தங்களை அழித்து உணர்த்தியதற்க்காக விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைமைக்கும் நாங்கள் நன்றிகூற கடமைப்பட்டவர்கள். இப்படி ஒரு இனம் வாழ்ந்தால் என்ன அழிந்தால் என்ன ?
 35. 1 point
  தேர்தலை புறக்கணித்திருக்கா விட்டாலும் மகிந்த வென்றிருப்பார். அன்று இருந்த சூழலில்.. 2004 ம் ஆண்டு முரளிதரன் பிளவு.. சுனாமி.. ரணில் - பிரபா உடன்படிக்கை முழுமையாக அமுலாக்கப்படாமை.. சுனாமி நிதி முடக்கம்.. தாய்லாந்து.. ஜப்பான் பேச்சுத் தோல்வி என்பது மட்டுமன்றி.. விடுதலைப் புலிகள் மீது சர்வதேசப் பயணத் தடைகள் என்று வெளிநாட்டு அழுத்தங்கள் பல வழிகளில் சூழப்பட்டு இருந்தன. அதுமட்டுமன்றி.. விடுதலைப்புலிகளின் சர்வதேச விநியோகக் கப்பல்கள் பல சர்வதேசக் கடலில் வைத்து அழிக்கப்பட்டும் இருந்தன. இந்தச் சூழலில்.. விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியில்.. ஹிந்தியாவின் தலையீடு மீண்டும் ஈழப் போராட்டத்துக்குள் வருவதை விரும்பி இருக்கவில்லை. இதனை 2002 தீச் சுவாலை முறியடிப்போடு.. யாழ் நகர் நோக்கிய விடுதலைப்புலிகளின் முன்னெடுப்புக்கள் முடக்கப்பட்ட நிலையில்.. ஹிந்தியப் படைகளின் உதவியை அம்மையார் சந்திரிக்கா.. சொறீலங்காப் படைகளை மீட்க கோரி இருந்த நிலையில்.. புலிகள் எடுத்தனர். அந்தச் சூழலில் அது தவறே அல்ல. மேலும்.. விடுதலைப்புலிகள் விட்ட தவறு ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை தோல்வி குறித்து சிங்களத்துக்கு ஹிந்தியா உட்பட்ட சர்வதேசம்.. செய்து வந்த ஆலோசனைகளை கருத்தில் கொண்டு எதிர்கால இராணுவத் திட்டங்களை முறியடிக்க தம்மை தயார் செய்யாமையே. ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் பின்னடைவின் போதே.. வன்னியை கைப்பற்றும் மாற்றுத் திட்டங்கள் முன்மொழியப்பட்டன. அதில்.. வன்னியின் இரு பக்க கரையோரங்களையும் குறிவைத்து படை நகர்த்துவதே வெற்றிக்கு வழிவகுக்கும் என்று ஹிந்தியப் படை அதிகாரிகள் பகிரங்கமாகவே ஆலோசனை வழங்கினர். இறுதியில் நடந்ததும் அதே. விடுதலைப்புலிகள் தமது ஆளணி.. ஆயுத பலத்தைக் கூட்ட எடுத்த முயற்சிகள் வெற்றி அளிக்காததும்.. அவர்கள் போர்க்களத்தில் தோல்வி அடைய இன்னொரு காரணம். அதற்கு வன்னி மக்கள் நீண்ட போர் காலத்தை சந்தித்து போர் குறித்த சலிப்படைந்ததும் ஒரு காரணம். இப்படிப் பல பின்னணிகள்.. மத்தியில் அமைந்த ஒரு வெற்றியை வெறும் மகிந்த வெற்றியாகக் காட்ட முடியாது. அதனால்... தான் மகிந்த கும்பல் செய்த இனப்படுகொலையை கூட உலகம் மூடி மறைத்துக் கொள்ளவே விரும்புகிறது. ஏனெனில்.. இந்தக் கும்பலை பின்னணியில் இருந்து இயக்கியோர் பலர். அவர்கள் மீதும் குற்றச்சாட்டுக்கள் வரும் என்ற அச்சம் அவர்களுக்கு. அவர்களின் மனித உரிமை அக்கறையின் போலித்தன்மை வெளிப்பட்டு விடும் என்ற பயம்.. மட்டுமன்றி.. ஆளாளுக்கு இதனை சாக்கு வைச்சு ஆதாயம் தேடும் களமாக இலங்கையை சூதாட்டக் களமாக்குவதே அவர்களின் நோக்கம். அதை இன்று வெளிப்படையாகவே காண்கிறோம்.
 36. 1 point
  3. தெருவிளக்கு "ஆ ஆ அனுராதபுரம் கிட்ட வந்துடீங்களோ? அங்க மாங்கோ மாங்கோ எண்டு ஒரு சாப்பாடு கடை இருக்கு. நல்ல சாப்பாடு. ஓட்டுனருக்கு ஒரு கோப்பி வேண்டி குடுங்கோ" மச்சினன் வட்ஸ் அப்பில் கனடாவில் இருந்து நேரடி ஒலிபரப்பு செய்தான். தெருவில் விளக்குகள் இல்லை. விளக்கோ மற்றும் பிரதிபலிப்பான் இல்லாத துவிச்சக்கர வண்டியில் சென்ற ஒரு சிங்கள முதியவரை எம் ஓட்டுனர் சிராய்த்துக்கொண்டு போனார். பின் சிங்களத்தில் திட்டினார். "அவசரமில்லை துசார. பார்த்து போங்கோ" வாகனத்தின் வேகத்தை கட்டு படுத்தினேன். "மாங்கோ மாங்கோ இல சாப்பிட்டு போவம்." துசார கண்ணில் ஒரு உற்சாகம் தெரிந்தது. "அது நல்ல கடை. நல்ல சாப்பாடு" "ஏன் இவ்வளவு செலவில் தெருவை போட்டுவிட்டு தெருவிளக்கை போடவில்லை?" ஆதங்கத்தை கொட்டினேன். ஓட்டுனர் தனது தலைவரை குற்றம் சொல்ல விரும்பாமல் எதையோ முணுமுணுத்து சமாளித்தார். கடையில் இறங்கி எல்லோரும் மலசல கூடங்களை பாவித்தோம். நான் ஒரு மேசையை பிடித்து எல்லோருக்கும் நெஸ்கபே கோப்பி குழந்தைகளுக்கு நெக்ட்டோ சிங்கள நங்கியிடம் உத்தரவிடடேன். சாப்பாடு பட்டியலை துளாவினேன். பயங்கர பசி. "ஏன் இருக்கிறாய்? அங்க மாமி சாப்பாடு செய்துபோட்டு காவல் இருக்கிறா!" அவசரப்படுத்தினார்கள் மாமியும் மருமகளும். பசி சூடை கண்ணால் அவர்களுக்கு காட்டினேன். அவர்கள் அசட்டை செய்யாமல் கோப்பியை எடுத்துக்கொண்டு வாகனத்தில் ஏறினார்கள். நான் ஓட்டுனரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அவருக்கு ரோல்ஸ் வாங்கி கொடுத்து கிளம்பினோம். "இந்த பொம்பிளையளை யாழ்ப்பாணத்தில கழட்டிவிடோணும். இல்லையோ சுற்றுலாக்கு ஆப்பு தான்" பசி கோபத்தில் மனம் திட்டமிட்டது. வாகனம் அனுராதபுர சுற்று சந்தியில் சுற்றி எ9 தெருவில் தொடர்ந்தது. மதவாச்சி தாண்டி வவுனியா நோக்கி பயணம். "சுந்தரம் சித்தப்பா இப்பவும் வவுனியாவிலேயே?" தாயாரை வினவினேன். "ஓம் பிள்ளையும் இங்க தான் இருக்கிறா" தாயார். "சுந்தரம் இளைப்பாறிடடான். பிள்ளையிண்ட மனுசன் பள்ளிக்கூட அதிபரா இருக்கிறார்." "ம்ம்ம் பிள்ளையக்காவிண்ட கலியாணத்திற்கு 86 ஆம் ஆண்டு வந்தது ஞாபகம் இருக்கு. குரங்குகளுக்கு வெடி எறிஞ்சு கலைச்சனான்" பழைய நினைவுகளை சிரித்துக்கொண்டே சொன்னேன். "அப்பா தட்ஸ் சோ மீன். ஏன் அந்த பாவ மிருகத்தை துன்புறுத்தினீங்கள்?" ஆறு வயது மகள் பின்னிருந்து குரலிட்டாள். அவளின் பேரில் வனம் என்ற அர்த்தம் இருந்த படியால் வந்த பாசம் போல். "பேபி இல்லாவிட்டால் குரங்குகள் சோடனைகளை பிச்சு உதறியிருக்கும்" காரணம் சொன்னேன். "ஸ்டில் நீங்கள் அதை சூ என்று கலைச்சிருக்கலாம்" பிஞ்சு மனசு குரங்கிற்காக வாதிட்டது. தாயாரும் நானும் சிரித்தோம். "இது பகிடியில்லை" ஆங்கிலத்தில் அண்ணர்கள் தங்கைக்கு ஆதரவு தெரிவித்தார்கள். "ம்ம் வாங்கோ உங்களுக்கு எங்கட குரங்குகளை பற்றி சொல்லிதாறன். நீங்களும் அதுகளிண்ட சகோதரங்கள் எண்ட படியால் ஆதரவு குடுக்கிறியள்" சத்தமாக சொன்னேன். பின்னுக்கு இருந்து குரங்கு போல் கூச்சலிட்டு குழந்தைகள் நக்கலடித்தார்கள். வவுனியா சந்திக்கு வந்திருந்தோம். பல வியாபார தட்டிகள் சிங்களத்தில் உறுத்தி கொண்டிருந்தது. தமிழ் தட்டிகள் அரிதாக இருந்தது. பேருந்து நிலையத்தில் தார் எடுபட்டு மண் பள்ளம் திட்டியாக இருந்தது. ஓமந்தை தொடக்கம் மாங்குளம் வரை பல பெரிய தட்டிகள் சிங்களத்தில் தான் இருந்தது. "ஓமந்தை, தமிழ் பக்கம் தானே? தாயாரை கேட்டேன். "ஓம் ஆனால் இப்ப ஆர்மியும் அவன்களிண்ட குடும்பங்களும் தான் கூட" பின்னிருந்து குரல். தெரு பக்கங்களில் வங்கி, காப்புறுதி, வாகன தமிழ் பதாதைகள் கண் கூசும் வர்ணங்களில் ஒளிக்க தொடங்கி இருந்தது. "சிங்கள பக்கம் ஒண்டும் இப்படி பதாதைகள் இருக்கவில்லை" முணுமுணுத்தேன். இரவு 9 மணி என்றாலும் எ9 தெரு ஓய்வில்லாமல் வாகனங்கள் பறந்து கொண்டிருந்தது. பல சொகுசு பேருந்துகள் தெற்கு நோக்கி பறந்து கொண்டிருந்தது. "எல்லாம் வெள்ளவத்தைக்கு போகுது" துசார சொன்னார். சிங்கள பக்கங்களில் நீல நிற இபோச தட்டிவான் பேருந்துகள் தான் கூட. ஆனால் யாழை நோக்கி பல ஆடம்பர சொகுசு வாகனங்கள் சென்று வந்தன. "பொருளாதாரம் கொழும்பிற்கு பிறகு யாழ் பக்கம் தான் வீசுது." பிலத்து சொன்னேன். "எல்லாம் வெளிநாட்டு காசு" அம்மா பதிலளித்தார். இன்னொரு காங்கேசந்துறை கொழும்பு பேருந்து தெரு சட்டத்தை மீறி சீறி போனது. "எனக்கு எண்ட முதலாளி யாழிலும் திருகோணமலையிலும் பார்த்து ஓட சொன்னவர். உங்கட ஆக்கள் சட்டத்தை மீறி ஓடி விபத்துகள் கூட" ஓட்டுனர் சொன்னார். நானும் தலையாட்டி ஆமோதித்தேன். "இந்த வானொலி கோபுரத்தை தான் புலிகள் தகர்த்தவர்கள். புதுசா கட்டி இருக்கு" துசார சொன்னார். கோபுரம் தாண்டி முருகண்டி தாண்டி கிளிநொச்சி சந்தி வந்தடைந்தோம். நாலு தெரு சந்தி நடுவில் பல தெருவிளக்குகள் பளிச்சென்று தோற்றமளித்தது நகர். "எல்லாம் புலி கட்டிய கட்டுமானம்" அம்மா தமிழில் முணுமுணுத்தார். நான் ஒரு நாலு அங்காடி கட்டிடத்தை தேடினேன். அதை கண்டவுடன் "இந்த கட்டிடத்திற்க்கு கனடா தாய் வீடு பத்திரிகையில் விற்க விளம்பரம் செய்திருந்தார்கள். எவ்வளவு சொல்லுங்கோ பார்ப்பம்?"" கேட்டேன். "ஐம்பதாயிரம் டொலர்?" அம்மா சும்மா ஒரு எண்ணை எடுத்துவிடடார். "இல்லை. $940,000. கிட்டத்தட்ட மில்லியன் டொலர்" கூறினேன். ஓட்டுனரின் வாய் பிளந்து இருந்தது. "இங்க உள்ள கடைக்கு ஏன் கனடாவில விளமபரம் செய்யினம்? இந்த கடை அம்பது இலச்சம் தேறாது. வாடகை இரண்டு இலட்ச்சம் கிடைப்பதே பெரிய விசயம் " பேச்சுக்கள் குதித்தார் ஓட்டுனர். "ஆ அங்க உள்ள ஆட்களுக்கு விபரம் தெரியாது. நல்ல காசோட இருக்கினம். கடைல விற்பனை விளம்பரத்தை காணவில்லை. யாரோ வாங்கிவிடடார்கள்" பரந்தன் தாண்டி ஆனையிறவு நோக்கி பயணித்தோம். ஆனையிறவு சோதனை சாவடியில் நின்ற துருப்பு நமது வாகனம் வேகத்தை குறைக்க நிற்காமல் போகுமாறு சைகை செய்தார். "இது தான் புலி கொண்டுவந்த புல்டோசர்" என்று புலிகள் முகாமை தாக்க பயன்படுத்திய கனரக இயந்திரத்தை காட்டினார் ஓட்டுனர். "ம் தெரியும் நாங்கள் அப்ப யாழில் தான் இருந்தோம்" இறுக்கத்துடன் சொன்னேன். யாழுக்குள் 30 வருடம் கழித்து புகும் போது மனது ஆறுதல் அடைந்து எனக்குள் ஏதோ உருத்திய விடயம் சீரமைப்பான உணர்வு. தாய் நிலத்தின் மகிமையோ என்னவோ! இரவு 11 மணி ,கொடிகாமம் வந்தது , "கொடிகாம தெருவால் போனால் விரைவாக வீடடை போகலாம்" தாயாருக்கு என்னை நாள் பூரா பட்டினி போட்டது உருத்தியிருக்கும் போல. நானும் கூகிள் வரைபடத்தை பார்த்து வலது பக்கம் போக சொன்னேன். அத்தெருவில் வேலை நடந்துகொண்டிருந்தது. பள்ளங்கள் எல்லா இடமும் ஒரு நூறு அடி தாண்ட ஐந்து நிமிடம் எடுத்தது. "துசார வாகனத்தை திருப்பும் இந்த தெருவில் போனால் வீடு போய் சேரும்போது வாகனத்திற்கு சில்லு இருக்காது" வாகனம் திரும்பி எபி 32 எடுத்து வல்லை தெருவால் நெல்லியடி செல்ல திடடம். தெருவும் சீராக இருந்த படியால் வாகனம் வேகமா சென்றது. யாழில் காவல் துறை தடைகள் சிங்கள பக்கம் இருந்தது போல் இருக்கவில்லை. தெருவில் சின்ன சின்ன கோவில்கள் பல தென்பட்டன ஆனால் பனைகளை காண கிடைக்கவில்லை. வல்லை எபி 30 தெருவில் வலது பக்கம் திரும்பி ஊர் பக்கம் வேகமெடுத்தது. வல்லையில் பனைகளை காணவில்லை. இறால் நீர் தேக்கங்களையும் காணவில்லை. "வரம்புயர நீர் உயரும். வடமராட்சி வரவேற்கிறது." என்ற வளைவை தாண்டி வந்தோம். பல நெல் வயல்கள் தெரிந்தது. மழை பெய்த படியால் நீர் உயர்ந்திருந்தது. வல்வெட்டித்துறை 6 KM என்ற பதாகை தெரிந்தது. அதன் முன் தகரத்தால் கூரை மேய்ந்த இராணுவ முகாம் தெரிந்தத்த்து. வல்வெட்டித்துறை பெயரை பார்த்து என்னை நோக்கி சிரித்தார் ஓட்டுனர். தெரியும் என்று சிரித்தேன் நான். வாகனம் கரணவாய் வந்தது எங்கும் தெருவிளக்குகள் LEd வெளிச்சம். ஓட்டுனரை பார்க்கிறேன். அவர் வியப்போடு பார்த்தார். "இதெல்லாம் எங்கட ஆக்கள் தங்கட காசில போட்ட விளக்குகள். ஒன்று பத்தாயிரம் ரூபா மின் வாரியம் இலவசமாக மின்சாரம் கொடுக்கும்" சொன்னேன். ஒரு பிரமிப்போடு பார்த்தார் துசார. நெல்லியடி வந்தது. "எங்கே திரும்புவது?" ஓட்டுனர். "வாகன சமிக்ஞை விளக்கில் வலது பக்கம் போகோணும்" சொன்னேன். "எல்லா இடமும் தெருவிளக்கு இருக்கு இங்க. நாங்கள் நீர்கொழும்பில் வெளிக்கிடடதற்கு இங்க தான் முதல் சமிக்ஞை விளக்கு" வியப்படங்காமல் சொன்னார் சிங்கள ஓட்டுனர். பெருமிதத்தோடு வீடடை கண்டுபிடிக்க புகுந்து நோக்க தொடங்கினேன்.
 37. 1 point
  போர்க்குற்றவாளி கோத்தபாய இன்றுவரை காப்பாற்றப்பட்டது போலவே என்றும் காப்பாற்றபடோணும் என்டால் ஒரேவழி ஐதே.க. ஆட்சி தான். அதான் பலர் சஜித்துக்கு வாக்களிக்கோணும் என்டு ஒற்றைக்காலில நீக்கீனம்!
 38. 1 point
 39. 1 point
  நல்ல கற்பனை! ஆனால் உண்மை, ஒரு தமிழ் வேட்பாளரை, ஓடி ஓடி தமிழர் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்காமல் விட்டால் ஈழத்தமிழர் தம்மை தாமே அழித்து கொள்வதில் தலைசிறந்தவர்கள். அதன் இறுதிக்கட்டம் இப்போது ஆரம்பமாகிறது.
 40. 1 point
  அருந்தவபாலன் மாவையோட ஒரு டீல் செய்திருக்கார் என்டு ஆட்கள் பரவலா சொல்லீனம். விக்கியரை வைச்சு ஏதாவது ஒருதேர்தல்ல வென்று போட்டு, பிறகு எங்க கூட வருமானம் கிடைக்குதோ அங்க தாவுற திட்டத்தில ஆள் இருக்கிறாராம்! அருந்தவபாலன் எப்பிடியாவது விக்கியரின் தமிழ் மக்கள் கூட்டணியை வலுவிழக்கச் செய்வன் என்டு ஒற்றைக்காலில் நிக்கிறார் போலத் தெரிகிறது. இதிலையும் விக்கியர் நிறைய்ய பாடம் படிக்க வேண்டி இருக்கு!
 41. 1 point
 42. 1 point
  யாழ் நூலகம் எரிப்பு, 1983 கலவரங்கள், நில ஆக்கிரமிப்புக்கள், அப்பாவிகளை சிறைகளில் அடைத்து வைத்திருத்தல், வடமாகாணசபை செயற்பட முடியாது முடக்கி வைத்திருந்ததை, பல வாக்குறுதிகளைக் கூறி தமிழர்களை நீண்டகாலமாக ஏமாற்றியமை, ... போன்றவை எல்லாமே ஜனநாயகம், மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் போன்றவற்றை பேணும் நல்ல செயற்பாடுகள் என்று சம்மந்தன், சுமந்திரன் நம்புகிறார்கள்.
 43. 1 point
  இன அழிப்பு செய்தவர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் ; ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன அழிப்பு செய்தவர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்றால் தமிழ் மக்கள் தமது ஒருமித்த கருத்துக்களை தெரிவிப்பதற்கு எனக்கு வாக்ளிக்கவேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்பாடி விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்குமேலும் தெரிவிக்கையில் பொது வேட்பாளராக களம் இறங்கியிருக்கும் எனக்கு வாக்களிப்பதன் மூலம் சிங்கள தேசத்திற்கும், சர்வதேசத் திற்கும் எமது நிலைப்பாட்டைச் சொல்லுவோம். எங்களுடைய உரிமைகளை ஏற்றுக்கொள்ளாத உங்களுக்கு எங்களுடைய வாக்குகளைத் தரமாட்டோம் என்பதை உரத்துச் சொல்ல வேண்டும். இனப்படுகொலையாளர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்பதை உரத்துச் சொல்லவேண்டும் தற்போது ஏட்டிக்குப் போட்டியாக பிரச்சார நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. இதன் ஒரு கட்டமாக நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்தில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதிவேட்பாளர் கேத்தாபய மற்றும் மகிந் தராஜபக்ஷ தரப்பினர் பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கின்றனர். அவர்கள் தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்கிறார்களாம். தமிழ் மக்களை ஆண்டாண்டு காலமாக படுகொலை செய்தவர்கள் கடைசியாக ஆட்சிப்பீடத்தில் இருந்தபோதும் கூட தமிழ்மக்களைப் பற்றிச் சிந்திக்காதவர்கள் இன்று வந்து தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்கிறார்களாம் தமிழ் மக்களை கொத்துக்கொத்தாக கொன்றொழித்தவர்கள் இதுவரைக்கும் பிரச்சினைகளை தீர்க்கமுடியாதவர்களாக இருந்து விட்டு இன்று வந்து இவ்வாறு பேசுவது யாரை ஏமாற்றுகிறார்கள் இவர்கள் மட்டுமன்றி ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான வேட்பாளரும் எத்தகைய பேச்சுவார்த்தைக்கும் தயார் இல்லை என்ற சாரப்பட தமது கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில் தமிழ் மக்களுக்கு என்ன செய்வோம் என்பதை இரு பிரதான கட்சிகளும் தெரிவிக்காத நிலையில் தமிழ் மக்களின் வாக்குகளுக்காக இங்கு வந்து பிரச்சாரங்களைச் செய்ய வருகின்றார்கள். ஒருவர் தான் யுத்தத்தை நடத்தியவர் என்றும் மற்றொருவர் யுத்தத்தை நாங்களே நடாத்தி முடித்தோம் என்றும் கூறுகிறார்கள் அது மட்டுமன்றி இவ்வாறு கூறியவர்கள் இருதரப்பிலுமாக நின்று எங்கள் மக்களை அழித்தவர்கள் தான் அப்படிப்பட்டவர்கள் தமிழ் மக்களுக்கு என்ன செய்வோம் என்பதை முறைப்படியாகத் தெரிவிக்காது வாக்குகளுக்காக எம்மை நோக்கி வருகின்றார்கள். இது தொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டும் காலங்காலமாக எங்களை ஏமாற்றி வருகின்ற சிங்களத் தலைமைகள் எம்மை அழித்தவர்களுக்கு முறையான பாடம் கற்பிப்பதற்காகவும் சர்வதேச சமூகத்திற்கு இன அழிப்புச் செய்தவர்களை சர்வதேச நீதிமன்றில் முன்னிறுத்துவதற்காகவும் நாம் இந்த ஜனாதிபதித் தேர்தலை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். எமது வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வருபவர்கள் எம்மை அடக்கி ஆள்வதையே கொள்கையாகக் கொண்டு செயற்பட்டுவருகின்றார்கள். இத்தகையவர்களுக்கு நாங்கள் சரியான தீர்ப்பை வழங்கவேண்டும். சர்வதேச சமூகத்தின் பார்வை எம்மீதுள்ள நிலையில் இந்த ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் ஒரு சரியானதகவலை தெரிவிப்பவர்களாகவும் இதற்குத் தமிழ் மக்கள் ஒருமித்து நிற்கின்றார்கள் என்பதை காண்பிப்பதற்காகவும் இத் தேர்தலை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் குறிப்பாக 1987 ஆம் ஆண்டு முதல் இனப்படுகொலை கட்டவிழ்த்துவிட்ட நிலையில் 2009 ஆம் ஆண்டு வரை இனப்படுகொலையைச் சேய்தவர்கள் யுத்தத்தின் பின்னரான சூழலில் ஆயுதம் இல்லா யுத்தத்தை எங்கள் மீது திணித்து வருகின்றார்கள். இவ்வாறாக எம்மீது இன அழிப்பு செய்த அனைவரையும் சர்வதேச நீதிமன்றில் முன்னிறுத்தவேண்டும் என்ற தகவலை தமிழ் மக்கள் வழங்கவேண்டும் என்பதற்காக தமிழ் மக்கள் சார்பாக பொது வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எனக்கு வாக்களித்து நாங்கள் ஒருமித்து நிற்கின்றோம் என்பதை சர்வதேச சமூகத்திற்கு தெரிவிக்கவேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/67797
 44. 1 point
  சிலோனில் மட்டுமில்லை இந்தியாவிலும் ஊழல், திருட்டு, கொள்ளை, கொலை, பாலியல் இம்சை, .... போன்றவற்றில் வெற்றிகரமாக ஈடுபட்டு ஏதாவது குற்றச்சாட்டில் சிறை சென்றவர்கள் தான் தியாகி, தேசத்தின் தந்தை, ... ஆக முடியும்.
 45. 1 point
  இந்த ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் மாணவர்களின் முயற்சி மற்றும் வழிகாட்டல் இதுவரை மிகவும் விவேகமானதாக இருந்துள்ளது. காலத்துக்கு காலம் சூழ்நிலைகள்,தேவைகள் வேறுபடுவதுண்டு! தமிழ் கட்சிகள் 5 ஒன்றிணைந்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. சிங்கள-பௌத்த கொலைகாரக் கட்சிகள் இன்றுவரை நியாயமான அந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அதே 5 கட்சிகள் பகிஷ்கரிப்பு / புறக்கணிப்பு பயனற்றது என ஒருமித்து கருதுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நிலையில் சில பிற்போக்கு / மோட்டு / அடிமை மனோநிலையில் உள்ள சிலரால் மட்டுமே திட்டமிட்ட தமிழினவழிப்பை கடந்த 70 வருடங்களாக செய்துவரும் பேரினவாதிகளில் ஒருவற்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் அல்லது பகிஷ்கரிக்க வேண்டும் என்று புலம்பி வருகின்றனர். அதிலும் கையாலாகாத சம்மந்தன், சுமந்திரன், மாவை வகையறாக்களும் இவர்களின் விசிறிகளும் சிங்கள-பௌத்த கொலைகாரக் கட்சிகளில் ஒன்றான ஐ.தே. கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற நப்பாசையில் காலத்தைக் கடத்துகின்றனர். இந்தப் பின்னணியில் ஜனநாயக உரிமையான வாக்களிப்பை இம்முறை தமிழ் மக்கள் முடிந்தளவு பயன்படுத்துவதும் தமிழ் வேட்பாளராக களமிறங்கியிருக்கும் சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிப்பதுவும் அவசியமானதாக கருதப்படுகிறது.
 46. 1 point
  பெண்களுக்கு உதவிபுரியக் கூடிய வழிகள் 01)பெண்கள், பிள்ளைகள் சமுதாயத்தில் அனேகமாக துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவதினால் அவர்களுக்கு துன்புறுத்தலோ,பயமுறுத்தலோ ஏற்படாத வகையில் செயல்படுவது சமுதாயத்தில் ஒவ்வொருவரினதும் கடமையும் பொறுப்பும் ஆகும். 02)பெண்கள் பிரயாணம் செய்யும் போது அவர்களுக்கு சந்தேகம் ஏற்படும் வகையில் பிரயாணம் செய்வதை தவிர்க்கவும் உங்களால் எதுவிதமாக அசௌகரியங்கள் ஏற்படாத வகையில் பிரயாணத்தை மேற்கொள்வதற்கு வழிவகுத்துக் கொள்ளவும். 03)பெண்கள்,பிள்ளைகள் புகையிரதத்தில் அல்லது பஸ்ஸில் பிரயாணம் செய்யும் போது அவர்களுக்கு அசௌகரியமோ, துன்புறுத்தலோ ஏற்படாதவாறு செயல்படுத்தவும். பெண்களுக்கோ,பிள்ளைகளுக்கோ ஏதேனும் அசௌகரியம் ஏற்படுமாயின் அது சம்பந்தமாக ஈடுபடுதல் உமது பொறுப்பென உணர்ந்து கொள்ளவும். 04)வழிதவறிப் பெண்கள் அல்லது பிள்ளைகள் காணுமிடத்து உடனடியாக சந்தேகத்திற்கிடமில்லாது உதவி செய்யவும் இல்லாவிடின் சமுதாயத்தில் வேறு ஒருவர் இவ் இயலாத சந்தர்ப்பத்தை பிரயோகித்து துன்புறுத்துவதற்கு வழி வகுக்கும். 05)பாடசாலைப் பிள்ளைகள் பாடசாலைக்கு போகும்போதும், வரும்போதும் வேறு வகுப்புகளுக்குச் செல்லும் போது இயலுமானளவு தனியாக செல்வதைத் தவிர்க்கவும்.எந்தச் சந்தர்ப்பத்திலும் வேறு பிள்ளைகளுடன் அல்லது வயதுபோன ஒருவருடன் செல்வது மிகவும் சிறந்தது. 06)மேலதிக சிறுவர் துஷ்பிரயோகம் இனேகமாக காணப்படுவதினால் உங்கள் பிள்ளைகளுடன் நித்தமும் மேலதிக வகுப்புகளில் நடைபெறும். செயற்பாடுகள் சம்பந்தமாக கலந்து ஆலோசிக்கவும். அப்போது சில தகவல்களை பெற்றுக் கொள்ள முடிவதுடன் அதன் மூலம் மேலதிக நடவடிக்கை எடுக்க முடியும். 07)மேலதிக வகுப்புகளுக்கு அருகில் அமைந்துள்ள சட்டவிரோத விற்பனை சாலைகளில் பொருட்களினை வாங்குவதை தவிர்க்கவும்.இச்சட்ட விரோத விற்பனை நிலையங்களில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் அத்துடன் பிள்ளைகளை ஏமாற்றி இப் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளமையால் மேலதிக வகுப்புகளுக்கு செல்லும் பிள்ளைகள் சம்பந்தமாக பெற்றோர் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். உங்களுக்கு தீயசெயல் ஏற்படின் நீங்கள் செய்ய வேண்டியவை. ஒருவரின் தீயசெயலுக்கு நீர் உட்பட்டால் நீர் என்ன செய்ய வேண்டும்?அதைப் பற்றி சிந்திக்கவும் அந்த எதிர்பை பிரயோகிப்பவருக்கு எதிராக எதிர்ப்பை பிரயோகிக்க உம்மால் முடியுமா? முடியாவிடில் அவ்விடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு சென்று அதிகாரதுள்ள உத்தியோகஸ்தருக்கு அறிவிப்பீரா என்ற காரணம் சம்பந்தமான தீர்மானிக்க வேண்டியவர் நீரோ?இப்படியான சந்தர்ப்பத்தில் உம்மை தயார் படுத்ததுவதற்கு கீழ் கூறப்பட்ட காரணிகள் உமக்கு உதவும். 01.உமக்கு ஊறு விளைப்பதற்கே அல்லது அச்சுறுத்தல் புரிவதற்கு என்று காணுமிடத்து உடனுனே அவ்விடத்திலிருந்து விலகிச் செல்ல முயற்சிக்கவும். 02.அப்படி முடியாத சந்தர்ப்பத்தில் சத்தமிட்டு மற்றவர்களுடைய உதவியை நாடவும் இப்படிச் செய்வதினால் எதிர்ப்பாளர்கள் அவ்விடத்திலிருந்து ஓடிப் போவதற்கு இடமுண்டு. 03.இலங்கைச் சட்டத்தின் படி ஒருவருடைய உயிருக்கு அல்ல ஆதனங்களுக்கு சேதம் ஏற்படுமிடத்து அல்லது திடீர் பயம், திடீர் மரண அச்சுறுத்தல் ஏற்பட்டால் தன்னுடைய பலத்தை பிரயோகித்து தம்முடைய உயிரையும், உடமைகளையும்,பாதுகாப்பதற்கு சந்தர்ப்பம் உண்டு ஆனபடியால் பலத்தை பிரயோகிப்பதற்கு அச்சந்தர்ப்பத்தில் அச்சம் கொள்ள வேண்டாம்.எனினும் அவசியத்திற்கு தகுந்த பலத்தை மட்டுமே பிரயோகிக்கலாம்.அப்படியானா அச்சுறுத்தல் இல்லாத போது மேலதிக பலத்தை பிரயோகிக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். பெண்களும், பிள்ளைகளும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகாமல் பாதுகாத்தலும், அதற்கு உட்பட்டால் எடுக்க வேண்டிய நடைமுறைகளும்.. advertisement 01) குழந்தைகள் சிறுவயதினர் நடுத்தர வயதுடைய பெண் பிள்ளைகள் குற்றவாளியின் இலக்குக்கு ஆளாகக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம். அப்படியான துஷ்பிரயோகங்கள் எச்சந்தர்ப்பத்தில் ஏற்படும் என்று கூற முடியாது. இப்படியான சந்தர்பத்தில் இடமளிக்காது செயற்படுதல் முக்கியம். 02) ஆள் நடமாட்டமற்ற பாதை, இருளடைந்த பாதைகள் மது போதையில் உள்ளவர்கள் நடமாடும் இடங்கள், சண்டை சச்சரவுகள் உள்ள இடங்களை தவிர்ப்பது மிகவும் முக்கியமானது. 03)நீங்கள் அணியும் ஆடைகள் பற்றி மிகவும் கவனத்தை செலுத்த வேண்டும். உடல் உறுப்புகள் தெரியக் கூடிய உடைகள் , அணிந்துள்ள ஆபரணங்கள் தெரியக் கூடியதான அணியும் உடைகள் , பெண்கள், குழந்தைகள் இவ்வாறான துஷ்பிரயோகத்துக்குக் உட்படுத்தப்படுவது அதிகம். 04) மேற் கூறப்பட்ட கருத்துக்கள் சம்மந்தமாக உங்கள் அவதானத்தை செலுத்தவும். 05) முன்பின் அறிமுகம் அற்ற தெரியாதவர்களுடன் கதைப்பதோ, வாகனங்களில் செல்வதையோ தவிர்த்து கொள்ள வேண்டும். 06) பாதையில் செல்லும் போது பலதரப்பட்ட ஓசைகள், தேவையற்ற வார்த்தைகள் உமது காதில் கேட்குமிடத்து அதை பொருட்படுத்தாமல் உடனே அவ்விடத்தை விட்டு செல்வது சிறந்தது. அப்படியானவர்களுடன் கதைப்பதற்கு செல்லவேண்டாம். அவ்விடத்தில் நிற்க வேண்டாம். கோபம் கொள்ள வேண்டாம். 07) துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டால் அவ்விடத்தில் இருந்து தப்பி அருகில் இருக்கும் அதிகாரி ஒருவருக்கு அல்லது பொறுப்பு வாய்ந்த ஒருவருக்கு அறிவிக்கவும். 01. தான் முகம் கொடுத்த சம்பவத்தை தெளிவாக தெரிவிக்கவும். 02. உமக்கு இடையூறு விளைவித்தவரின் பெயர் அல்லது அவரைப் பற்றிய விபரம் தெரியுமாயின் அதையும் விபரமாக கூறவும். 03. பெயர் விலாசம் தெரியாவிடின் அவரை பற்றிய விபரம் தெரியுமாயின் அணிந்திருந்த ஆடையின் நிறம் தெரிந்து இருக்குமாயின் அவ் முழு விபரத்தையும் தெரியப்படுத்தவும். 04. ஆளை கண்டால் அடையாளம் காணமுடியும் என்பதை தெரியப்படுத்தவும். 05. இதற்கு முன் அவ் ஆளினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தால் அந்த காலப்பகுதியையும் தெளிவாக விபரிக்கவும். 06. வைத்தியசாலைக்கு செல்வதற்கு அவசியமாயின் அனுமதியை பெற்று வைத்தியருக்கும் நடந்த சம்பவத்தை அறிவிக்கவும் உங்களை வைத்தியப் பரிசேதனைக்கு உட்படுத்திக் கொள்ளுங்கள் 07. கற்பழித்தல் சம்பவமாயின் அணிந்திருந்தஆடைகள் எல்லாவற்றையும் விசாரணை செய்வதற்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கவும். 08. முதல் பரிசோதனை முடியும் வரை கற்பழித்தல் சம்பவத்திற்கு உட்டுத்தப்பட்டவராயின் வீட்டிற்கு சென்ற முகம் கைகால் கழுவுதல் குளித்தல் ஆகியவற்றில்இருந்து தவிர்க்கவும். 09. வாகனத்தில் வந்து தாக்கியவராயின் அவ்வாகனத்தின் நிறம், வர்க்கம் மற்றும் இலக்கம் ஆகியவற்றை விசாரணையாளருக்கு அறிவிக்கவும். 10. எல்லா சந்தே நபர்கள் சம்பவத்தைப் பற்றி தெரிந்தவர்கள் இதற்கு முன் நடைபெற்ற சம்பவம் யாவற்றையும் விசாரணயைாளருக்கு அறிவிக்கவும். 11. கற்பழித்தல் பாலியல் துஷ்பிரயோகம் நடைபெறுவது தெரியாதவர்கள் மட்டும் அல்ல தெரிந்தவர்களினாலும் இப்படி எல்லா சம்பவங்களும் விசாரணையாளருக்கு அறிவிப்பது அவசியம்.நீங்கள் குற்றம் புரிந்தவர் என்று பயப்பட வேண்டிய அவசியம் இல்லை . 12. காரியாலயங்களில் பெண்களுக்கும் பாடசாலைப் பிள்ளைகளுக்கும் பல தரப்பட்ட இப்படியான துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டலாம் பாலியல் சம்பந்தப்பட்ட படங்கள் புத்தகங்கள் பத்திரிகைகள் காரியாலயங்களில் உள்ளவர்களினால் அவர்களுக்கு காண்பிக்கப்படுவதினாலும் வாசிப்பதினாலும் அவர்களை தூண்டி திசைதிருப்பும் வழி வகுக்கின்றார்கள் அப்படியானவற்றை பார்த்தல் வாசித்தல் ஆகியவற்றிலிருந்து தவிர்த்தல் மூலம் இப்படியான துஷ்பிரயோகங்களை தடுக்க முடியும். 13. இப்படியான துஷ்பிரயோகம் வீட்டினுள் அல்லது தனது கணவரினால் செய்யப்படுமாயின் அப்படியான செயல் வீட்டினுள் துஷ்பிரயோகம் என கணிக்கப்படலாம். அப்படியான சம்பவங்களுக்கு உட்படும் பெண்கள் இந்நாட்டில் அதிகம் சரீர உடல் ஊறு , பாலியல் துஷ்பிரயோகம், தனது மனைவிக்கு ஆயினும் பிரயோகிப்பதற்கு கணவருக்கும் அதிகாரம் இல்லை எப்படியாயினும் குடும்ப சமாதானத்திற்கும் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டியுள்ளதால் அத் துஷ்பிரயோகத்தில் இருந்து விலகி இருத்தல் மிகவும் சிறந்ததாக கொள்ளப்படும்.அப்படியான துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவராயின் எந்தவொரு பொலிஸ் நிலையத்தில் உள்ள சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்யலாம். 14. வீட்டினுள் வெறுப்பு, மன நிலை கொடுமை ஏற்படுமாயின் கணவருக்கு அறிவுரை தேவைப்படின் அப்படியான உபதேசம் செய்யும் இடங்கள் அதிகம் உண்டு. இது சம்பந்தமாக விபரங்கள்சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பணியகத்தில் இருந்து பெற்று கொள்ள முடியும். 15. இப்படியான துஷ்பிரயோகங்கள் வெளியில் கூறாமல் இரகசியமாக வைத்து கொண்டு துன்பத்தை அனுபவிக்க வேண்டாம்.அப்டியாயின் இந்த நிலை மேலும் தீவிரம் அடையும்.பிரச்சினைகளுக்குட்பட்ட பெண்கள் தமது பெற்றோரிடம் அல்லது கிட்டிய இதை யாரிடம் அல்லது நம்பிக்கைக்குரிய அக்கம் பக்கத்தவரிடம் இது பற்றி அறிவித்து அதற்குரிய நடவடிக்கை என்ன என்று தெளிவாக திட்டம் தீட்டுங்கள்.எந்த சந்தர்ப்பத்திலும் வெட்கப்பட வேண்டாம்.சமுதாயத்தில் இப்படியானவர்களை பாதுகாப்பதற்கு உரிய நபர்களும் அமைப்புக்களும் பல உண்டு ஆகையினால் அச்சமின்றி அவர்களிடமிருந்து அறிவுறுத்தல்களை பெற்றுகொள்ளவும். http://www.tamilwin.com/women/01/125498?ref=home
 47. 1 point
  ‘தி இந்து’ வாசகர் திருவிழாவில் பேசுகிறார் ஐஏஎஸ் அதிகாரி சகாயம். வாசகர் திருவிழா 2016 | காஞ்சிபுரம் சமூக மாற்றம் ஏற்பட தமிழர்களின் அடிமை உணர்வு அகற்றப்பட வேண்டும் என்று காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்ற ‘தி இந்து’ வாசகர் திருவிழாவில் ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் வலியுறுத்தினார். ‘தி இந்து’ தமிழ் நாளிதழ், 4-ம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தின் முக் கிய நகரங்களில் வாசகர்களின் அமோக ஆதரவுடன் வாசகர் திருவிழா நடத்தப்பட்டது. இந்த ஆண்டு ஓசூர், புதுக்கோட்டை ஆகிய நகரங்களில் வாசகர் திருவிழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் வாசகர்களுக்கான ‘தி இந்து’ வாசகர் திருவிழா காஞ்சிபுரம் நக ராட்சி அலுவலகம் எதிரேயுள்ள அண்ணா கலையரங்கில் நேற்று நடைபெற்றது. பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இறைவணக்கமும், அதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தும் பாட, விழா இனிதே தொடங்கியது. ‘தி இந்து’ ஆசிரியர் கே.அசோகன் வர வேற்று அறிமுகவுரை ஆற்றினார். முதுநிலை பொது மேலாளர் வி.பாலசுப்பிரமணியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழா வில், தமிழக அரசின் அறிவியல் நகரம் துணைத் தலைவர் உ.சகாயம், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், திரைப்பட நடிகர் தம்பி ராமையா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். விழாவில் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பேசியதாவது: தலைவர்கள் தொண்டர் களுக்கு நடத்தும் விழா போல, ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கும், ஆட்சியாளர்கள் தங்கள் மக்களுக்கும் நடத்தும் விழா போல, ‘தி இந்து’ ஆசிரியர் குழு தங்களின் வாசகர்களுக்கு உணர்வுப்பூர்வமாக நடத்தும் விழாவாக இந்த விழா அமைந்துள்ளது. தேச விடுதலைக்காக தொடங்கப்பட்ட ‘தி இந்து’ நாளிதழ், தமிழ்ச் சமூகத்தின் சமூக இதழாக இருந்து வருகிறது. ‘நான் அளிக்கும் செய்தியை நீ படி’ என்ற நிலை இல்லாமல் ‘உனக்கு என்ன வேண்டும் நீயே சொல், நான் உனக்கு அதை தருகிறேன்’ என்ற உணர்வுடன் இருந்து வருகிறது ‘தி இந்து’ தமிழ் நாளிதழ். தலைமைப் பண்பு பயிற்சிக்காக பெங்களூரு சென்றிருந்தேன். மத்திய அரசு அதிகாரிகள், ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருப்பார்கள். திடீரென இந்திக்கு போய்விடுவார்கள். அப்போது நான் இந்தி புரியவில்லை என்று சொன்னேன். இந்தி தேசிய மொழிதானே நீங்கள் அதை படிக்கலாம் அல்லவா என்று அந்த அதி காரிகள் என்னிடம் தெரிவித்தபோது, ‘இந்தி தேசிய மொழி அல்ல. அது ஆட்சிமொழி; அவ்வளவுதான். எங்கள் தேசிய மொழி தமிழ்’ என்றேன். தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சரவணன், நான் இருக்கிறேன் என்று எனக்கு துணையாக பேசினார். நாங்கள் தமிழால் இணைந்தோம். தமிழ் எங்களை இணைத்தது. ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் தமிழர்களை இணைத்துள்ளது. நான் ஐஏஎஸ் அதிகாரியாக ஆகியி ருக்காமல், ஒரு நாளிதழின் ஆசிரியராக மாறியிருந்தால் இந்த தமிழ்ச் சமூகத்துக்கு என்னென்ன செய்திகளை, தகவல்களை கொடுக்க வேண்டும் என்று நினைத்திருப் பேனோ அவற்றை எல்லாம் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் வழங்கிக்கொண்டு இருக்கிறது. பத்திரிகைகள் செய்திகளை உண்மை யாகவும், தைரியமாகவும் வெளியிட வேண் டும். அந்த பணியை ‘தி இந்து’ சிறப்பாக செய்து வருகிறது. நம் நாட்டில் படித்த வர்கள், சிந்தனையாளர்களிடம் அறச்சீற்றம் ஏற்பட்டால் இந்த சமூகத்தையே புரட்டிப் போட்டுவிடலாம். ஆனால் படித்தவர்கள் சுயநலம் மிக்கவர்களாக, தைரிய மற்றவர்களாக உள்ளனர். தமிழர்களிடம் அடிமை உணர்வு இருக்கிறது. தமிழில் கையெழுத்து போட தயங்குகிறார்கள். சமூக மாற்றம் ஏற்பட வேண்டுமானால் தமிழர்களின் அடிமை உணர்வு அகற்றப்பட வேண்டும். இளைஞர்கள் அடிமை உணர்வில் இருந்து மீண்டெழ வேண்டும் என்று சகாயம் பேசினார். நிகழ்ச்சியில் முகவர்கள், துணை முகவர்கள் கவுரவிக்கப்பட்டனர். ‘தி இந்து’ வாசகர்கள் தங்கள் கருத்துகளையும் எண்ணங்களையும் பகிர்ந்துகொண்டனர். நிறைவாக, ‘தி இந்து’ சென்னை மண்டல பொதுமேலாளர் டி.ராஜ்குமார் நன்றி கூறினார். இந்த விழாவை ‘தி இந்து’வுடன் லலிதா ஜுவல்லரி, சேவல் மார்க் பட்டாசுகள், காஞ்சிபுரம் எஸ்எம் சில்க்ஸ், செங்கல்பட்டு வித்யாசாகர் கல்விக் குழுமம், ஹோட்டல் ஜெயபாலா இண்டர்நேஷனல், சப்தகிரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியவை இணைந்து வழங்கின. நிகழ்ச்சியில், எஸ்எம் சில்க்ஸ் உரிமையாளர் மனோகரனை ‘தி இந்து’ வணிகப் பிரிவு தலைவர் ஷங்கர் சுப்ரமணியம் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். மேலும், ‘மை’ டிவி உரிமையாளர் மூர்த்தி உள்ளிட்டோரும் கவுரவிக்கப்பட்டனர். விழாவில் பங்கேற்ற அனைத்து வாசகர்களுக்கும் தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. வாசகர் திருவிழாவை ஒட்டி ‘தி இந்து’ பதிப்பக நூல்கள் வாசகர்களுக்கு சிறப்பு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டன. ஏராளமான வாசகர்கள் நூல்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். வாசகர் திருவிழா நிகழ்ச்சி, காஞ்சிபுரம் மை டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. http://tamil.thehindu.com/opinion/reporter-page/சமூக-மாற்றம்-நிகழ்ந்திட-தமிழர்களின்-அடிமை-உணர்வு-அகற்றப்பட-வேண்டும்-காஞ்சிபுரம்-வாசகர்-திருவிழாவில்-ஐஏஎஸ்-அதிகாரி-சகாயம்-வலியுறுத்தல்/article9369896.ece?homepage=true&theme=true
 48. 1 point
  இலட்சம் மருத்துவர்களில் ஒருவர்! அவரின் ஆன்ம சாந்திக்கு பிரார்த்தனைகள்! மக்களின் இக்கட்டை வைத்து மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் தொழிலாக மருத்துவத் தொழில் மாறிவிட்டது. இப்படிப்பட்ட கொள்ளையடிக்கும் பல இலட்சக் கணக்கான மருத்துவர்களில் இவரைப் போன்றவர்கள் ஒருசிலர் தான் இன்று உள்ளனர்.
 49. 0 points
  நான் விளங்கிக்கொண்டன் கிழக்கு மகாணத்தில் விழும் வாக்குகள் அனைத்தும் கோட்டாவுக்கு தமிழரசுக்கட்சியின் அரசியல் வங்கு ரோந்தினாலே என்பதை சுட்டிக்காட்டுகிறேன்
 50. 0 points
  நாவலர் வீதி புகையிரதக் கடவை.... மக்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் உள்ளது. அதற்கு இன்னும், தானியங்கி பாதுகாப்பு கதவுகளோ... எச்சரிக்கை மணி ஒலிக்கும் கருவிகளோ... இல்லாமை மிகவும் வேதனைக்குரியது. அதுகும்.... ஒரு இளம் குடும்பத் தலைவரின் இறப்பு, ஒரு குடும்பத்தை... நிற்கதியாக்கி உள்ளது. இதுவே... கடைசி இறப்பாக இருக்கட்டும்.