• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Leaderboard

 1. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   62

  • Content Count

   50,230


 2. குமாரசாமி

  குமாரசாமி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   35

  • Content Count

   28,493


 3. போல்

  போல்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   34

  • Content Count

   5,474


 4. Kavi arunasalam

  Kavi arunasalam

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   32

  • Content Count

   654Popular Content

Showing content with the highest reputation since 01/17/2020 in Posts

 1. 5 points
  இஞ்சையொரு வீட்டிலை அவையள் ஒரு கையிலை ரிவி ரிமோட். மற்றக்கையிலை ரெலிபோன். டெய்லி காலை மாலை ஐஞ்சு கண்டத்துக்கும் ரெலிபோன் எடுத்து பஞ்சபுராணம் பாடுவினம். ஆனால் அந்த அப்பாவி அதாவது அந்த ஆண்சிங்கம் எப்பவாவது ரெலிபோன் எடுத்தால் இல்லாட்டி அந்த சிங்கத்துக்கு வீடுதேடி ரெலிபோன் வந்தால்......பூட்டியிருந்த கதவை திறந்து விடுவினம். அடுத்த றூமிலை வேலை செய்து கொண்டு தங்கடை ஏரியலை ரெலிபோன் கதைக்கிறவர்ரை பக்கம் திருப்பி விடுவினம். அண்டையான் பொழுது அந்த அப்பாவி சிங்கத்துக்கு துலைஞ்சுது.கேள்விக்கணைகள் விண்னை பிளக்கும். 1) ஆர் ரெலிபோன்லை 2) ஆர் ரெலிபோன் எடுத்தது 3) என்னவாம் 4) அதேன் இப்ப ரெலிபோன் எடுத்தவர் 5) கொஞ்ச நேரம் கதைக்காமல் கேட்டுக்கொண்டே இருந்தீங்கள் என்ன சொன்னவர் 6) இடக்கிடை ஓமோம் எண்டு சொல்லிக்கொண்டிருந்தியள் என்னவாம் 7) இடையிலை பெரிசாய் சிரிச்சியள் ஏன் என்னத்துக்கு 8 )மனிசி எங்கை வேலைக்கு போட்டாவாமோ 9) ஒருக்கால் ஓ...மேனகாவோ எண்டியள் ஆரது 10) உங்களுக்கு ஊரார்ரை கதையள்ள் ஒண்டும் வேண்டாம் பேசாமல் இருங்கோ இன்னும் கனக்க.......
 2. 3 points
  மீரா ...அவர்கள் கைக்கூலிகள் என்பது உங்கள் அனுமானமா ? அல்லது ஏதாவது நம்பக்கூடிய ஆதாரங்கள் , உரையாடல் , நடவடிக்கைகள் எதுவும் இருக்கிறதா? அப்படி எதுவும் இருந்தால் நீங்கள் எழுதியதில் தவறில்லை. உண்மையை சுட்டிக்காட்டுகிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். இல்லை, அப்படி எதுவுமே இன்னும் இல்லை, என்றால் அது இப்போதைக்கு வெறும் கற்பனை, அல்லது ஊகம் மட்டுமே. எங்களை விட அவர்களுக்கு தகுதிகள் அதிகம், அனைத்தும் துறந்து போராடியவர்கள், சிறையில் கிடந்தது சின்னாபின்னப்பட்டவர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக தலைவரால் வளர்க்கப்பட்டு, வழிகாட்டப்பட்டவர்கள். (பலர் வழி மாறி எமக்கு எதிராக திரும்பியவர்களும் இருக்கிறார்கள்) ஆனாலும் எல்லோரையும் அதே கண்ணோட்டத்தில் பார்ப்பது சரியா? இந்த மன நிலை எமக்கு ஒரு மாற்று அரசியல் சக்தியை வளர விடாமல் முலையோடு கிள்ளி எரியும் செயலாக கூட இருக்கலாம் அல்லவா? பரந்த நோக்கோடு சில காரியங்களை பார்ப்பது கூட காலத்தின் தேவை தான். அவர்கள் ஜனநாயக அரசியலுக்கு தானே வருகிறார்கள்.
 3. 3 points
  வாழ்க்கை கனவுகள் நிறைந்தது. சிலசமயம் அது மெய்யாகிறது முன்னொரு காலத்தில் நடந்தது. கட்டிட திணைகளத்தில் வேலை கிடைத்த செய்தியோடு கடிதம் ஒன்று வீடு தேடி வந்தது. முதன்மை பொறியியளாரரை(chief engineer - ce) கண்டி அலுவலகத்தில் பார்த்தேன் . படிப்புக்கும் வேலைக்கும் பெரிய இடைவெளி இருப்பதை சொன்னார். வில்கமுவவில் புதிதாக முளைக்கிற கட்டிடத்துக்கு தள பொறியாளர்(site engineer)வேலை. பயணத்துக்கு அரசாங்க வாகனம் தரமுடியாது என்றார். தங்கியிருந்து வேலை செய்தாக வேண்டும். தங்குமிடம் தரமுடியாது என்றார். முதல் வேலையில் எல்லாவற்றுக்கும் தலையாட்ட வேண்டும் என்கிற எழுதப்படாத விதி தெரியும். அப்படியே செய்தேன். நியமன கடிதம் கைக்கு வந்தது. முடிந்தவரை தெரிந்தவர்களுக்கு வேலை கிடைத்த கதையளந்தேன். கண்ணில் படாதவர்களுக்கு நல்ல காலம். தப்பித்தார்கள். கண்டியில் மகியங்கனை பஸ் ஏறினால் மூன்று மணிநேரத்தில் வில்கமுவ வந்து சேரும். சாரதிக்கும் நடத்துனருக்கும் இடையில் வேறு சோலியிருந்தால் நாலோ ஐந்து மணித்தியாலமாக மாறினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. பதினெட்டு வளைவுகளோடு நீள்கிற மகியங்கனை வீதியில் முதன்முதலாக பயணிப்பது திகில் அனுபவம். 180 பாகையில் திரும்புகிற வளைவுகள் கூடவே குத்தென இறங்கும். சாரதிகள் சாகசம் செய்வார்கள். பயணிகள் கடவுளை கூப்பிடுவார்கள். பயணித்தவர்களுக்கு புரியும். மற்றவர்கள் கூகில் மாமாவை கொஞ்சம் கேட்டுப்பாருங்கள்- Daha ata wanguwa (18 Bend Road). வில்கமுவ தனி சிங்கள கிராமம். மருந்துக்கும் தமிழ் கிடையாது. அங்கு ஆமத்துருவுக்கும் கடவுளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. தபால்காரனும் கிராமசேவகரும் விரும்பிய நேரத்தில் வேலை செய்வார்கள். குளிப்பதற்கு குளம் இருந்தது. மரவள்ளி கிழங்கும் கட்ட சம்பலும் காலை சாப்பாடானது. இரவு முழுக்க நுளம்பு காதுக்குள் ரீங்காரமிடும். விரும்பினால் இடைக்கிடை கடித்தும் பார்க்கும். என்ன செய்வது. முதல் வேலை. எல்லாவற்றையும் பொறுத்தாக வேண்டும். விடிந்ததும் வேலைக்கு போனால் படித்ததில் பத்து வீதமும் வேலையில் உதவாது. பண்டாரவையும் செனிவரட்ணவையும் மேய்பதே பெரும்பாடு. பண்டார முப்பது வருடங்களுக்கு மேலாக கட்டுமானதுறையில் இருப்பவன். எடுபிடியாக வேலைக்கு சேர்ந்து மேஸ்திரியாகி இப்போது சுப்பவைசராக இருப்பதில் அவனுக்கு பெருமை. எனக்கு கொடுமை. வேலை சூக்குமங்களை அனுபவம் சொல்லிகொடுத்திருந்தது. யாரையும் பெரிதாக மதிக்கமாட்டான். இன்ஜினியர்மார் புத்தகபூச்சிகள் என்பது அவன் எண்ணம். சிலசமயங்களில் அதில் கொஞ்ச உண்மையும் இருந்தது. வரைபடத்தை பார்த்து தூணுக்குள் வருகிற கம்பியின் அளவை சொல்வேன். பண்டார சிலசமயங்களில் பார்காமலே சரியாக சொல்வான். பிறகு என்னை பார்த்து சிரிப்பான். சிரிப்பில் நக்கல் தெரியும். முதல் வேலை பொறுத்தாக வேண்டும். சந்தர்ப்பம் கிடைத்தால் தூக்க வேண்டியவர் பட்டியலில் முதலாக இருந்தான். செனிவரட்ன இன்னொரு வகை. பண்டாரவுக்கு நேர்எதிர். ஒவ்வொரு வசனத்துக்கும் மாத்தையா சொல்லுவான். சொன்னதை மட்டும் செய்வான். அடிக்கடி சொன்ன வேலையில் சந்தேகம் கேட்பான். வேலையில் நேர்த்தி இருக்காது. இருந்தாலும் நிறைய மரியாதை தருவான். அவன் எல்லா மேலதிகாரிகளுக்கும் நல்ல பிள்ளை. தூக்கவேண்டியவர் பட்டியலில் இல்லை. அன்றைக்கு ce க்கு காட்டு இறைச்சி சாப்பிடுகிற ஆசை வந்திருக்ககூடும். வில்கமுவுக்கு அறிவிக்காமல் வந்தார். அன்றைய பின்னேரம் ce யுடன் நிறைய இறைச்சியும் கொஞ்ச தண்ணீரும் சேர்ந்து குடித்தேன். பழைய பேராதனை கதைகள் பேசி சிரித்தார்.சில பேராசியர்களின் பெயர்களை கேட்டார். கிடைத்த இடைவெளியில் பண்டார வேலைக்கு சரிபட்டுவராது என்றேன் . சிரித்துக்கொண்டு உனக்கு அனுபவம் போதாது என்றார். கட்டிடத்தின் பிரதான ஒப்பந்தக்காரர் அமைச்சரின் நண்பர் என்பது தெரியுமா எனக் கேட்டார். பண்டார ஒப்பந்தகாரரின் ஒரு கை என்றார். படிக்க நிறைய இருப்பது புரிந்தது. பண்டாரவும் செனிவரட்ணவும் தொடர்ந்து வேலை செய்தார்கள். சைட் இன்ஜினியர்கள் அடிக்கடி மாறினார்கள். பின்னாளில் வேலையும் வேலையிடங்களும் மாறினாலும் முதல் வேலையும் வில்கமுவ கிராமும் பண்டாரவும் செனிவரட்ணவும் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறார்கள். https://marumoli.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D/
 4. 3 points
 5. 3 points
  அகநானூற்றின் காட்சி ஆவுடையார் கோயில் சிற்பத்தில்..! செந்தமிழ் நாட்டுச் சிரோர் நம்மவர் சிறப்புடன் வாழ்ந்த செய்தியைச் சொல்லும் அகநானூறு எனும் நெடுந்தொகை உன்னதப் பண்பாட்டை உலகுப் பறைசாற்றிய நன்னகம் எனப் பெயர் பெற்றது நமது தமிழகம். கற்கண்டின்பாகும் கனிமூன்றின் சாறும் போல் சொற்கொண்டு எழுந்தது நம் புலவர்களின் கவிதைகள். தமிழர்தம் கலைகளைத் தமதென உரிமை கொண்டாடும் தறுதலை அயலவர்கள் நமது கலைகளை, கலைப்பெருஞ்செல்வங்களை… மருத்துவத்தை… அறிவியலை அதன் மகத்துவத்தைத் தமதெனக் கொண்டார்கள். நம் தமிழ் மக்கள் இதையெல்லாம் மறந்து அறியாமையில் மூழ்கிப் போனார்கள்!. உண்ணவும், உடுத்தவும், படிக்கவும், படுக்கவும் அந்நியர்களிடம் அடிபணிந்து நிற்கும் அவலநிலை ஏன்? இன்று, வலைதளத்தில் வார்செருப்புக்காகக் கையேந்தி நிற்கிறோம். கால் செருப்பைக் கூடக் கை நேர்த்தியாய்ச் செய்ய உலகுக்குக் கற்றுக் கொடுத்தவன் நம் தமிழன். தொடுதோற் கானவன் சூடுறு வியன் புனம், கரி புறம் கழீஇய பெரும் பாட்டு ஈரத்து, தோடு வளர் பைந் தினை நீடு குரல் காக்கும் ஒண் தொடி மகளிர்க்கு ஊசலாக ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய குறும்பொறை அயலது நெடுந் தாள் வேங்கை, மட மயிற் குடுமியின், தோன்றும் நாடன் உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலைக் குரங்கு அறிவாரா மரம் பயில் இறும்பில், கடி சுனைத் தௌந்த மணி மருள் தீம் நீர் பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடி, பல் நாள் உம்பர்ப் பெயர்ந்து, சில் நாள் கழியாமையே வழிவழிப் பெருகி, அம் பணை விளைந்த தேக் கட் தேறல் வண்டு படு கண்ணியர் மகிழும் சீறூர், எவன்கொல் வாழி, தோழி! கொங்கர் மணி அரை யாத்து மறுகின் ஆடும் உள்ளி விழவின் அன்ன, அலர் ஆகின்று, அது பலர் வாய்ப் பட்டே? இச்சிற்பமானது ஆவுடையார் கோவில் (திருப்பெருந்துறை) அருள்மிகு ஆளுடைய பரமசாமி (ஆத்மநாதர்) கோவில் தூணில் உள்ளது. இஃது அகநானூறில் 368ம் பாடலில் வரும் காட்சி. இதனை மதுரை மருதனிள நாகனார் பாடியுள்ளார். தலைவனுக்குத் தோழி கூறுவதாக அமைந்த பாடல். மாலைப் பொழுதின் மயக்கத்தில் உறவாடி காளையும், கன்னியும் களிக்கின்ற காலம். கடிமணம் புரிய அவன் காதில் படக் கூறுகின்றாள் தோழி. காலிற் செருப்பணிகின்ற கானவன். அவன் சுட்டெரித்த தினைக்கொல்லைக் கரிக்கட்டைகளை சட்டென்று மழை பெய்து கழுவிச் செல்லும். அதன் ஈரத்திலே தினை பசுமையாய் விளைந்துவிடும். கதிர்களுக்கு மகளிர் காவலிருப்பர். தினைக் காவல் மகளிர் ஊசல் (ஊஞ்சல்) ஆடக் காத்திருக்கும் வேங்கை மரங்கள் பூத்திருக்கும், மயிலின் கொண்டைபோல் தோன்றும், அப்படியான மலைக்குச் சொந்தக்கார மலைநாடன் நம் தலைவன். காந்தள் மலர் விளைந்த சோலை. குரங்குகளும் ஏறமுடியா உயர் மரங்கள். ஆனைதன் பிடியுடன் ஆடிய போலே தேனருவியிலேயே திரிந்தோம் பல நாள் கூடி. வேற்றுப்புலம் பெயர்ந்த தலைவனால் வேதனை பெருகியது. மூங்கிலில் விளைந்த முதிர்தேன் கள்ளின் தேறலை, வண்டுகள் மொய்க்கும் கண்ணி களணிந்து (மலர்மாலைகள்) உண்டு மகிழ்கின்றனர் ஊர்மக்கள். அந்த ஊறு வாயற்களால் நம்மைப் பற்றி அலர் பேசப்படுகின்றது. கொங்குநாட்டுக் கூத்தர்கள் இடுப்பிலே மணிகள் இசைக்க ஆடும் “உள்ளித்திருவிழா”வில் கூட நம்மைப் பற்றி நாலுவிதமாகப் பேசப்படுகின்ற அலர் அவர் காதுகளில் விழவில்லையோ? என்னேடீ !...தோழி! இது! காலில் செருப்பணிந்த காளை, நம் மனம் நோவதை கால்நோகுமென்று மறந்தும் இருந்தானோ? என்று கூறுவதாக அமைந்த காட்சியைக் காண்கிறோம். தமிழ்ப் பண்பாட்டைப் பேணி வளர்ப்போம் ! தமிழர்களாக வாழ்வோம்! உள்நாட்டுப்பொருட்களையே வாங்குவோம்!. வாழ்க தமிழ்! வளர்க தமிழகம் ! - பனையவயல் முனைவர் கா.காளிதாஸ் http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/39406-2019-12-31-05-48-03
 6. 2 points
  (Broadway shows) ப்ரோட்வே தியேட்டர்ஸ் நிகழ்ச்சிகள் மேட்குலகில் வசிப்பவர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். நான் மிகவும் ரசித்து பார்த்த சில நாடகங்கள் இருக்கின்றன. எல்லாமே ஒரு கனவுலகில் நடப்பது போல மிக மிக பிரமாண்டமாக இருக்கும். லயன் கிங் , ரிவர் டான்ஸ் , பந்தோம் ஆஃ ஓப்ரா , மிஸ் சைகோன் , புக் ஆஃ மோர்மன் இவை நான் பார்த்த சில மேடை நாடக நிகழ்ச்சிகள். பல வருடங்களுக்கு முன்னர் American Express இல் வேலை செய்ததால் கிடைத்த ஒரு சலுகை . ஏ.ஆர் ரஹ்மான் கூட அன்றூவ் லோயிட் வெபருடன் (Andrew Lloyd Webber) சேர்ந்து ஒரு ப்ரோட்வே நிகழ்ச்சி செய்திருந்தார். இனிவரும் காலங்களில் ஏ.ஆர் ரஹ்மான் இது மாதிரியான நிகழ்ச்சிகளில் தான் கூடுதல் கவனம் எடுக்கப்போவதாக பேட்டி ஒன்றிலும் கூறியிருந்தார். இப்போது கூட டொரோண்டோவில் "ஷென் யூன்" Shen Yun என்னும் ஒரு ப்ரோட்வே நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. சுமார் 650 மேற்பட்ட கலைஞர்கள் பங்குகொள்ளும் மிக பிரமாண்டமானதொரு நிகழ்ச்சி இது. வசதியும், சந்தர்ப்பமும் கிடைத்தால் குறைந்தது ஒன்றையாவது கண்டிப்பாக ஒவொருவரும் பார்க்கவேண்டிய நிகழ்ச்சிகள் இவை.
 7. 2 points
  இப்படியானவற்றிற்கு குத்தி முறியப்போவதில்லை,
 8. 2 points
  சில நேரங்களில் சில மனிதர்கள் இருக்கும் போது போற்றுவதும் இல்லாதபோது தூற்றுவதுமாய் சில நேரங்களில் சில மனிதர்கள். இருக்கும் போது வருவதும் இல்லாதபோது மறப்பதுமாய் சில நேரங்களில் சில மனிதர்கள். நல்லவர் போல் நடித்து நம்மை கீழே போட கதைப்பதுமாய் சில நேரங்களில் சில மனிதர்கள். பழைய கோத்திரம் பாடி பகிடியாய் ஏதோ சொல்லி எமை மிதிப்பர் சில நேரங்களில் சில மனிதர்கள். அவர்களை தெரியும் எமக்கு அவர்கள் அந்த இடத்து ஆட்கள் என்பர் சில நேரங்களில் சில மனிதர்கள் வாழும் போது தூற்றி விட்டு வாழ்வு போன பின் வந்து வையத்தில் வாழ் வாங்கு வாழ்ந்தார் என்று பொய் உரைத்து போற்றுவார்கள் சில நேரங்களில் சில மனிதர்கள் எல்லோருக்கும் உபதேசம் செய்வர் பின்பு படிப்பது தேவாரம் இடிப்பது கோவில் என்பது போல் இருப்பார் சில நேரங்களில் சில மனிதர்கள். கட்டி வந்த பொட்டலங்களோடு இருந்துகொண்டு மாற்றம் ஒன்றே மாறாதது என்பர் சில நேரங்களில் சில மனிதர்கள். அவருக்கு என்ன தெரியும் அரசியல் தெரியாத செல்லாக்காசு என்பர் சோக்கிரட்டீஸ் உடன் படித்தவர் போல் சில நேரங்களில் சில மனிதர்கள். உதவிகள் மட்டும் கேக்க வருவார் அடுத்த நாள் கண்டால் யார் இவர் என்பார் சில நேரங்களில் சில மனிதர்கள். தற்பெருமை பேசி தம்மையே புகழ்வர் சில நேரங்களின் சில மனிதர்கள். தேடிப் பார்க்கிறேன் மனிதர்களை எங்கேயும் கண்ட மாதிரி இல்லை. பா.உதயன்.
 9. 2 points
 10. 2 points
  இன்னும் சிரிச்சு முடியலடா சாமி வின்னர் படத்தில் வடிவேலுவின் தொடைநடுங்கி கையாள் பாட்டிமாவை காட்டி “தல போட்டுரவா?” என்பார். உடனே வடிவேலு “ சை போ... நாளைக்கி சாகப்போற கிழவிய இன்னிக்கு கொல்லப் போறியா” என்பார். அப்படிதான் இந்த “வீர”விளையாட்டும். சிங்கம், புலிய கூட்டியாந்தா ‘வீரர்கள்’ எல்லாரும் வெளிக்கு போய்டுவாங்க. விளையாட்டு என்பது இரு சமநிலையுள்ள தனியாட்கள் அல்லது குழுக்களிடையே நடப்பது. சிந்திக்கும் ஆறறிவுள்ள மிருகங்கள் பல கூட்டாக சேர்ந்து ஒரு ஐந்தறிவு மிருகத்தை துன்புறுத்துவது விளையாட்டல்ல, கொடுமை. பிகு: ஜல்லிகட்டை கலாச்சார அடையாளமாக, மிகுந்த கட்டுப்பாட்டு அடிப்படையில் அனுமதிக்க வேண்டும் ஏனேன்றால் பெரும்பான்மை தமிழக மக்கள் விரும்புவதை அதைத்தான். அதுதான் ஜனநாயகம், மாநில சுயாட்சியின் மாண்பு. ஆனால் இதில் வீரமும் இல்லை விளையாட்டும் இல்லை.
 11. 2 points
  புரிந்துணர்வுக்கும் அனுமதிக்கும் நன்றி சுமே. கஸ்டபட்டு நீங்கள் எழுதும் திரியில் நான் வந்து படங்களை இணைப்பது சரியா என யோசித்தேன். ஆனாலும் உங்களைப் போல சுவாரசியமாக எழுத எனக்கு ஆற்றலும் இல்லை பொறுமையும் இல்லை. இப்படி ஒரு பயணக்கட்டுரையை நான் எழுதபோவதுமில்லை இந்த படங்களை மற்றைய உறவுகள் பார்க்கப்போவது இல்லை. எனவேதான் இதில் இணைத்தால் எல்லாரும் பார்க்கலாம் என்பதால் இணைத்தேன். உங்களின் படங்களில் நான் கோட் செய்துள்ள 3 படங்களை பற்றிய துணுக்குகள். 1. இது ஒருவகை நாட்காட்டியாம். வரிசைக்கு இருக்கும் இந்த கதவுகள், தாழ்வாங்கள் வழியே வரும் சூரிய ஒளியின் படி கணிக்கப்படும்மாம். இதற்கு மேல் எனது வழிகாட்டிக்குகும் விபரம் தெரியவில்லை. 2. இந்த மரமேறிய கோவில்களை இந்திய அரசு பாரமெடுத்து மராமத்து பணிகள் செய்கிறதது. 3. இது புதிதாக கட்டிய பகுதி என நினக்கிறேன். அங்கொவட்டில் எனக்கு பிடிக்காத ஒரே விடயம் இந்த வகை புதுப்பித்தல். சீமேந்தை கொண்டு ஆனால் பழைய கல்களை போல் வடிவமைத்து புதுபிக்கிறார்கள். கொஞ்சம் காலம் ஓடி மழை பெய்தபின், புதிசு எது பழசு எது என தடுமாறும் அழவுக்கு தத்ரூபமாக புதிப்பிக்கிறார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. ரோம் நகரில் இருப்பது போல், இடிபாடுகளை அதே வடிவில் (மேலும் கெடாமல்) பாதுகாக்கும் முறையே உண்மையான தொல்லியல் மரபு காத்தலாக இருக்க முடியும்.
 12. 2 points
  புதிதாக அவர்களின் கதையைக் கட்டமைக்க எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார்கள். கீழடி ஆய்வுக்கு நிதி ஒதுக்காத அவர்கள், குஜராத்தில் அகழ்வாய்வுக்கு சில ஆயிரம் கோடிகள் ஒதுக்குகிறார்கள். இல்லாததை வைத்து எடுக்க வேண்டுமல்லவா ? கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர், அவர்களின் கதையைக் கந்தலாக்கி விடும் எனத் தெரிந்து கொண்டார்கள். சீதை கோயில் மூலமாக இலங்கையில் இந்துத்துவா 'பராக், பராக்' என் அறிவிக்க நினைக்கிறார்களோ, என்னவோ ? சிங்கள பௌத்தத்திற்கும், தமிழ் இஸ்லாத்திற்கும் எதிராக தமிழ் இந்துத்துவம் என்ற மாற்று அரசியலுக்கான விதையைத் தூவ நினைக்கலாம். அடுத்த தலைமுறைக்கான திட்டமிடுதலுடன் செயல்படுபவர்கள் RSS காரர்கள். இலங்கைத் தமிழர்கள் ஏமாறுவார்களா என்று தெரியவில்லை. யார் கண்டார்கள்? மதம் உலகின் மிக மோசமான கருவி. மதம் கொல்லும். மதம் எதுவும் செய்யும். தமிழர்க்கான விடுதலை என்ற கோஷத்துடன் இலங்கை அரசியலில் ஒரு காலத்தில் RSS பார்ப்பனியம் வேறு பெயருடன் நுழையலாம். எச்சரிக்கை ! அதீத கற்பனையாகத் தோன்றுகிறதோ?
 13. 1 point
  அது மட்டுமல்ல ஆண் பெண் பாகுபாடின்றி இயற்கையான சிவலிங்கத்தை தொட்டு பூஜிக்கின்றார்கள்.
 14. 1 point
 15. 1 point
  யாழ்ப்பாணத் தமிழர், மட்டக்களப்புத் தமிழர், இப்படி மட்டக்களப்பில் வாழும் பூர்வீகத் தமிழர் என்றுமே வேறுபாடு காட்டியதில்லை, செயற்பட்டதும் இல்லை. வேறுபாடு காட்டிச் செயற்பட்ட அனைவருமே மட்டக்களப்புக்கு முலில்வந்து குடியேறிய யாழ்ப்பாணத்தவர்கள். பின்வந்தவர்கள் தங்களை மிஞ்சி வளர்ந்துவிடாதிருக்க பிரதேச வாதத்தை கையில் எடுத்திருந்தார்கள். மட்டக்களப்பில் பிதேசவாதம் பேசுபவர்களை ஆராய்ந்தால் நிச்சயம் அவர்கள் பூர்வீகம் யாழ்பாணமாக இருக்கும்.
 16. 1 point
  சரணடைந்தவர்களே பெரும்பாலும் காணாமல் ஆக்கப்பட்டனர்! [Wednesday 2020-01-22 08:00] இறுதிப்போரின்போது காணாமல் போனவர்கள் இறந்து விட்டதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்த கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மறுத்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போதே இதை தெரிவித்தார். போரின் இறுதி கட்டங்களில் காணாமல் போனவர்களில் பெரும்பாலோர் இராணுவத்திடம் சரணடைந்தனர். எனவே பொறுப்புக்கூறலையும் நீதியையும் நிலைநாட்ட வேண்டும். மேலும் இறுதிப் போரின்போது பலர் இராணுவத்தில் சரணடைந்ததற்கான சான்றுகள் உள்ளன. இது வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் பிற அமைப்புகளினால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. போர்க்குற்ற விவகாரங்களுக்கு எதிர்வரும் ஜெனிவா அமர்வில் முறையான தீர்வொன்று கிடைக்கப்படாவிட்டால், உலகில் நிராகரிக்கப்பட்ட இனமான தமிழினம் மாற்றமடையும் என்றும் அவர் கூறினார். https://www.seithy.com/breifNews.php?newsID=239551&category=TamilNews&language=tamil
 17. 1 point
 18. 1 point
  இந்த அரசால் இவர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு, பாராட்டப்பட்டு, லண்டன் தூதரகத்தில் கழுத்தறுப்பதில் வல்ல பிரியங்காவின் வேலைக்கு அமர்த்தப்படுவார் என்று நம்பலாம். ஒரே இடத்தில தான் உதைக்குது. செத்தது சிங்களப் பிள்ளை ஆச்சே.
 19. 1 point
  இதனைக் கூறி தாங்கள் புளகாங்கிதமடைவதை நான் கலைக்க விரும்பவில்லை கனம் நீதிபதியவர்களே. மீராரா மிகவும் திருகுதாளம் செய்பவர் என்று கூறினால் ஆதாரமெல்லாம் கேட்கக் கூடாது சரிதானே ?
 20. 1 point
  இப்போது நீங்கள் தமிழர்களுக்குத் தான் எதிரிகளாகச் செயற்படுகிறீர்கள்.
 21. 1 point
  சகோ நீங்கள் எழுதும் விடயங்கள் நாம் அறியாததல்ல. இது போன்ற அமைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்ட போதெல்லாம் மக்களின் வரவேற்பை பெறமுடியவில்லை. காரணம் சந்தேகமும் இன்றைய சூழ்நிலையும் இவர்களுடைய செயற்பாடுகளும் தான். எனவே இவர்கள் ஆரம்பத்திலிருந்து மக்கள் பணியை ஆரம்பிப்பதே வரவேற்கத்தக்கது. புலிகளின் பெயரைப்பாவிப்பதோ அவர்களின் அடுத்த கட்டமாக செயற்படுதோ புலிகளின் மரியாதையை இழக்கவும் தமிழ்மக்கள் புலிகளை வெறுக்கிறார்கள் என்பதை சிங்களத்துக்கும் சர்தேசத்துக்கும் பறை சாற்றுமே தவிர எந்த நன்மையுமில்லை. டொட்.
 22. 1 point
  நான் பிரதேச வாதம் கதைக்கவில்லை। Tulpen எழுதியதுபோல யதார்த்தத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியாவிடடால் நான் ஒன்றும் செய்யமுடியாது। யாரிடம் பிரதேசவாதம் ஊறியிருக்கிறது என்று இப்பொழுது உங்களுக்கு சொல்லுகிறேன்। நீங்கள் சொல்லுகிற மக்கள் வன்னி தமிழர்களையோ, கிழக்கு தமிழர்களையோ தமிழர்களாக நினைப்பதில்லை। யாழ்ப்பாணத்துக்கு அபிவிருத்திகளை அல்லது மற்றைய தேவைகளை கொண்டுசெல்லும்போது ஏன் வன்னி கிழக்கு மக்களை புறக்கணிக்கிறீர்கள்। எத்தனை தடவைகள் வெளி நாட்டு தூதுவர்களை, வெளிநாட்டு பிரதிநிதிகளை , முதலீட்டர்களை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து செல்லுகிறீர்கள்। ஏன் வன்னி கிழக்குக்கு அழைத்து செல்வதில்லை। அத்தி பூத்தாப்போல எப்பவாவது ஒரு தடவை இது கிழக்கில் நடக்கும்। கடந்தகாலங்களில் எப்படியும் யாழ்ப்பாண அதிகாரிகளே வன்னி , கிழக்கில் முதன்மை உத்தியோகத்தர்களாக இருக்கவேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தார்கள்। வன்னி கிழக்கு பிரதேசத்தவர்கள் அப்படியான பதவிக்கு வருவதை அவர்கள் விரும்பியதே இல்லை। உங்களுக்கு உதாரணத்துக்கு சிலவற்றை சொல்லுகிறேன்। மட்டுவில் அரச அதிபராக திரு மோனகுருசாமி அவர்கள் இருந்தார்கள்। அவர் அந்த பிரதேசத்தை சேர்ந்தவர்க இருந்ததால் சிலருக்கு அதில் விருப்பமிருக்கவில்லை। எனவே புலிகள் மூலமாக காய் நகர்த்தினார்கள்। இறுதியாக அவர் காயப்பட்டு செயட்பட முடியாமல் போனது। இவர் எனது ஆசிரியராகவும் இருந்தார்। பின்னர் SLAS பரீட்ச்சை மூலமாக நிர்வாக சேவைக்குள் உள்ளேற்கப்படடார்। வேறு சில காரணங்களை கூறினாலும் அவர் மடடக்களப்பை சேர்ந்தவர் என்பதுதான் முக்கிய காரணம்। அடுத்தது வவுனியாவில் அந்த நாட்களில் ஒரு சங்கம் இருந்தது। அதுதான் யாளகற்றி சங்கம்। யாழ்பாணத்தவரை அங்கிருந்து அகற்றுவது। இவர்கள் எங்கு குடியேறினாலும் அங்குள்ள மக்களுக்கு அது பிரச்சினையாக இருந்தது। இருந்தாலும் அது சரியோ பிழையோ என்று சொல்லமாடடேன் , நீங்களே நிதானித்துக்கொள்ளுங்கள்। அடுத்தது மன்னார் அரச அதிபராக இருந்த மன்னரைசேர்ந்த திரு மரியதாசன் குரூஸ் அவர்கள்। இவர் அரச அதிபரானது அங்குள்ள யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து குடியேறியவர்களூக்கு பிடிக்கவில்லை। எனவே அவர்கள் அவர்களது பாராளுமன்ற உறுப்பினர்களூடாக இவரை மாற்ற முயட்சித்தார்கள்। அது முடியாமல் போனபோது புலிகளை வைத்து காய் நகர்த்தினார்கள் । இவர்மீது பிழையான குற்றச்சாட்டுக்களை வைத்து மரணதண்டனை நிறைவேற்ற புலிகளை கங்காரு நீதி மன்றுக்கு கொண்டு செல்லப்பட்ட்து। அந்த நீதிமன்றில் ஐந்து பேர் இருப்பார்கள்। அவரர்களுக்கு தலைமை நீதிபதியாக அப்போது சலீம் (இயக்க பெயர்)என்னும் புலிதான் இருந்தார்। அங்கு இரண்டுக்கு இரண்டு என்னும் அளவில் இருந்ததாம் ஐந்தாவது இருப்பவரின் கைகளில்தான் முடிவு இருந்தது, இப்போது இவர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை ) அதட்கு எதிராக வாக்களித்துவிடடார்। அவர் அரச அதிபருக்கு தெரிந்தவரும் , அறிந்தவருமாக இருந்தபடியால் அதட்கு சம்மதிக்கவில்லை । இல்லாவிடடால் மண்டையில் போட்டிருப்பார்கள் । இத்துடன் விடவில்லை। அவரது சாரதிக்கு பணம் கொடுத்து புலிகள்மூலமாக குண்டுகளை அவரது வாகனத்தில் கொழும்புக்கு அனுப்பி சதி செய்தார்கள் । இருந்தாலும் இறைவன் தன்னை காப்பாற்றியதாக கூறினார் । அவர் இரண்டு மாதம் போலீஸ் காவலில் இருக்க நேரிட்ட்து । அதன் பின்னர் இது வரைக்கும் யாழ்ப்பாணத்தவரே அந்த கதிரையில் அமர்ந்திருக்கிறார்கள் । மன்னாரில் எத்தனையோ தகுதியானவர்கள் இருந்தாலும் அவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை ।இப்போது இவர் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கியில் ஆலோசகராக கடமை புரிகிறார்। இதைப்போல இன்னும் எத்தனையோ எழுதலாம்। இனியாவது யார் பிரதேச வாதம் பேசுகிறார்கள் என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்। இங்கு நான் பெயர்கள் குறிப்பிடடதான் நோக்கம் உண்மையை வெளிப்படுத்துவதட்கே। மத்தபடி சம்பந்தனோ, சுமந்திரனோ, விக்கியோ எவர் வந்தாலும் எல்லாம் ஒன்றுதான்।
 23. 1 point
  கைக்கூலி என்கின்ற சொல் உங்களுக்கு நியாயமானதாக தெரிகிறதா ? மனச் சாட்சியுடன் பதிலிடுங்கள்.
 24. 1 point
  கீழே உள்ள அட்டவணையை பாருங்கள். 10 ஆண்டுகளில் தமிழர் சனத்தொகையை இரண்டு மடங்காக்குவது சாத்தியமில்லை. https://en.m.wikipedia.org/wiki/Demographics_of_Sri_Lanka இந்த அட்டவணை இலங்கை சனத்தொகை வளர்ச்சியை காட்டுகிறது. இலங்கை சனத்தொகை இறுதியாக இரண்டு மடங்காக அதிகரிக்க எடுத்துக் கொண்ட காலம் 49 வருடங்கள் ( 1963 - 2012) . ஆகவே, 10 ஆண்டுகளில் தமிழர் சனத்தொகையை இரண்டு மடங்காக்குவது சாத்தியம் இல்லை. ஆனால், சிவாஜிலிங்கம் சொல்லுவது இதனிலும் அதிகமான தமிழர் தொகை குறையும் வீதம் பற்றிது. அடுத்து வரும் ஆண்டுகளில் தமிழர் பெருமளவில் சிங்களவராகவும், கனேடியர், பிரெஞ்சுக்காரர் ஜேர்மானியர் போன்ற வேறு இனங்களுக்கும் மாற உள்ளதால், மேலும் தமிழர் சனத்தொகை குறைவடைய போகிறது. இலங்கைத் தமிழரின் அழிவுக்கு பெரும் காரணம் ஆதாரமோ, ஆய்வுகளோ இல்லாமல் எழுந்தமானமான கருத்துக்களை ஒருவர் முன்வைக்க, மற்றவர்கள் அந்த கருத்துக்களை நம்பி முடிவெடுத்து செயற்படுவதாகும்.
 25. 1 point
  இப்போ.... மூன்று வருட தீர்ப்புடன், இந்த அடிபிடி தீர்ப்பும் சேர்ந்து... சிறையில் இருந்து வெளியே வர, தலைமுடி நரைத்து... படிக்கின்ற கலாமும் கடந்திருக்கும். ம்ம்ம்.... வாழ்க்கையை, வீணாக்கி விட்டார்கள்.
 26. 1 point
  இப்படித் திமிராக் கதைக்கும் கோட்டாவை எதிர்கொள்வதற்கு சுயநலமற்ற தமிழ் தலைமையை ஈழத்திலுள்ள புலத்திலுள்ள தமிழர்களெல்லாம் ஒன்று சேர்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும் அதற்குரிய முயற்சியாகவே வேரோரு திரியில் ஒரு healthy debate ஐ பற்றிய கருத்தை வைத்தேன் பலர் வந்து கருத்து வைத்தார்கள் ஆனால் நான் எதிர்பார்த்தது போல் எல்லோரின் பங்களிப்பும் இல்லை ஒரு நண்பர் கருணாவைத் தெரிவு செய்திருந்தார். ஒரு வகையில் அது சரியாக்கூட இருக்கலாம். இப்படியான ஆனாதரவாக இருக்கும் நேரத்தில் தமிழர்கள் எதிரிகளை கூட்டாமல் நண்பர்களை அதிகரித்து கோட்டா மகிந்த கும்பலை வெல்ல ஒரு வழியமைப்போம்
 27. 1 point
 28. 1 point
  சுமந்திரன் தொடர்பில் மண்டையன் குழுவின் கூற்று 100க்கு 10000000 உண்மையானது.
 29. 1 point
  வர வர கிழக்கு ஒரு மார்க்கமா தான் போகுது. பிரதேசவாதத்தில ஊறி குளிர்காஞ்சது லேசுல விடுபடாது.
 30. 1 point
  தெற்கில் வரையப்படும் ஓவியங்களை பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை, ஏனெனில் அவற்றை எங்களால் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் வடக்கில் வரையப்படும் ஓவியங்களைப்பற்றி, அவை எப்படி இருக்கவேண்டும் என ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. அரசியல் அலசலில் நிலாந்தன் என்பவரின் ஒரு கட்டுரை “ யாழ்ப்பாணத்தின் புதிய சுவரோவியங்கள்” தலைப்பில் உள்ளது. கட்டுரையில் இந்த முயற்சியும், அதில் ஈடுபடுபவர்களின் எண்ணங்கள் பற்றியும், சில ஊர்களில் மக்கள் ஒன்றாக கூடி கூட்டு தீர்மானத்தின் அடிப்படையில் ஒவியங்கள் பற்றி முடிவு எடுப்பதையும் கூறப்பட்டுள்ளது. நல்லதொரு எடுத்துக்காட்டு. சில முயற்சிகளின் பலன்களை உடனடியாக எதிர்பார்க்கமுடியாது ஆனால் ஏதோ ஒரு வகையில் அது தாக்கத்தை ஏற்படுத்தும்
 31. 1 point
 32. 1 point
  ஆமை நீண்டகாலம் வலுவாக வாழக்கூடியது...... 100 வயதெல்லாம் அதுக்கு மனிதனின் 35/40 வயது போன்றது....அதை அங்கு இன்னும் கெத்தாக டூயட் பாட விட்டிருக்கலாம்......என்பது என் கருத்து....! அப்பாடா இனி எனக்கும் சாப்பிட்டது செமித்திடும்.....!
 33. 1 point
  லைக் போட்டாச்சு தோழர் .. அதென்ன பெயின்ற் கொண்டு எழுதுவது ? .. நாங்கள் வரலாற்றில் இடம் பெற கல்லில் செதுக்குவம்.. அதிலும் ஆகாதவன் பெயர் "S" ல் ஆரம்பித்தால் 8 ஆக மாற்றுவதும் "Y" இல் ஆரம்பித்தால் நாமம் போட்டு விடுவதும் .. அது ஒரு கனா காலம்..
 34. 1 point
  ஆக.. 5000. அறிவாளிகள் தான், தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.
 35. 1 point
 36. 1 point
  தமிழ் பிராமணியத்தின் மனசாட்சிக்கு - சுப. சோமசுந்தரம் இந்தத் தலைப்பில் என்னிடம் உள்ள கருத்துக்கள் பல காலமாகவே என்னுள் உறைபவையாயினும், இவற்றை எழுத்தில் பதிவு செய்யுமுன் சிறிது யோசித்தேன்; சற்றே தயங்கினேன். அதற்குக் காரணங்கள் சிலவுண்டு. எனக்கு வாய்த்த சிறந்த பிராமண நண்பர்கள், பிராமணர்கள் பேசுவதற்கும் பழகுவதற்கும் பொதுவாக இனிமையானவர்கள் என்னும் என் கருத்து, அவர்களோடு உணர்வுப்பூர்வமாக நான் ஒன்றிய நினைவுகள் – இவ்வாறு அடுக்கலாம். இவற்றையெல்லாம் மீறி எங்கோ பதிவு செய்தே ஆக வேண்டும் என்ற உந்துதல். முடிவெடுத்த பின் எழுதித்தானே ஆக வேண்டும் ! பெரும்பான்மைத் தமிழ்ச் சமூகத்திடமிருந்து அநேகமாக அனைத்து விடயங்களிலும் அவர்கள் வேறுபட்டு நிற்பது, இம்மண்ணில் அவர்களது வேர்கள் இல்லை என்பதற்குச் சான்று. ஏன், நம்மில் பெரும்பாலானோர் கூட கலப்பின வந்தேறிகளாக இருக்கலாம். இங்குள்ள காணியர், தோடர் முதலிய பழங்குடியினரின் டி.என்.ஏ வுடன் நமது டி.என்.ஏ ஒத்துப் போகும் வாய்ப்பு மிகக் குறைவு. ஆனால் தமிழ்ப் பிராமணர்கள் இந்நிலத்திற்கு வந்தேறிகள் என்பதற்கு டி.என்.ஏ சோதனையெல்லாம் தேவையில்லை. முதலில் அவர்களில் பெரும்பான்மையோரின் தோல் நிறத்தில் இம்மண்ணிற்கான கூறு இல்லை. இரு தரப்புகளிலும் – பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதார் – வண்ணம் மாறிய காட்சிகள் உண்டே ! நான் ஏற்கனவே சொன்ன ‘கலப்பினச்’ செய்தியையும், இராமானுஜர் என்ற பிராமணப் பெரியார் இங்குள்ள சிலரையும் பிராமணராக்கிப் புரட்சி செய்த செய்தியையும் இன்ன பிறவற்றையும் அலசி ஆராய்ந்து தலைப்பிலிருந்து பெரிய அளவில் விலக விரும்பவில்லை. அவர்களுக்கென்று தனித்துவமான பழக்க வழக்கங்கள், மரபுகள் பற்றிப் பேசுவதானால், இம்மண்ணில் (அவர்களால் ஏற்படுத்தப்பட்ட?) சாதிகளுக்குள் வேற்றுமைகள் உண்டே, அதுபோல்தான் இதுவும் என்று தட்டிக் கழித்து விடலாம். ஏனையோர் சிறுதெய்வ வழிபாடுகளிலும் ஈடுபட, பிராமணர்கள் தாம் கொண்டு வந்த பெருந்தெய்வ வழிபாடுகளில் மட்டும் வழங்கி வருவது, குறித்துக் கொள்ள வேண்டிய ஒன்று. சமீப காலங்களில் புதிதாக அவர்களில் சிலர் சிறுதெய்வ வழிபாட்டிற்குள் வருவது, அந்தப் பழமையான சந்தையையும் பிடிக்க ஏதோ திட்டமிட்ட சதிதானோ என்று எண்ணத் தோன்றுகிறது. சுடலையை சிவனின் வடிவாக்கியதும், அந்தந்த வட்டாரங்களில் வழங்கிய பெண் தெய்வங்களை ‘யட்சி’ என இவர்கள் பெயரிட்டுப் பின்னர் தமிழன் அதனை ‘இசக்கி’ ஆக்கியதும் முன்பே அவர்கள் ஆரம்பித்த நடைமுறைகள். மொழி வேற்றுமை பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். பொதுவாக ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு வழக்கு உண்டு. ஒரு வட்டாரத்திற்குள்ளும் சமூகம் சார்ந்து சிறிய வேற்றுமைகள் இருக்கலாம். உதாரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில சமூகங்களில் மட்டும் பாட்டியை ‘ஆச்சி’ என்று அழைக்கும் வழக்கம் உண்டு. நாட்டுக்கோட்டை செட்டியார்களில் பெண் பிள்ளைகளைக் கூட மரியாதையுடன் ‘ஆச்சி’ என்று அழைப்பார்கள். ஆனால் பிராமண சமூகத்தில் மட்டும் வட்டார எல்லைக்கு அப்பாற்பட்டு தமிழகம் முழுவதும் ஒரே வகையான தமிழ் வழங்குவதைக் காணலாம். அது ‘தேவபாடை’யை அதிகம் தூக்கித் திரியும் மொழி. மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர் போன்ற சான்றோர்தம் முயற்சியால் வடமொழி ஆதிக்கத்திலிருந்து ஓரளவு மீட்டெடுக்கப்பட்ட தமிழை இன்னும் சிறைப்படுத்தியிருக்கும் மொழி பிராமணர்தம் மொழி. அதற்கு அக்காலத்தில் ‘மணிப்பிரவாள நடை’ என்று சிறப்பான பெயர் வேறு. ஷ, ஹ, ஸ இன்றி பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பதே பாவம் என்று அனைத்துத் தரப்பினரும் எண்ண ஆரம்பித்த பின், மொழிச் சிதைவுக்கு பிராமணர்களை மட்டும் குறை சொல்வானேன்? ஆயினும் தமிழகத்திலும் தமிழகத்திற்கு அப்பாலும் அவர்கள் வேறுபாடின்றி ஒரே மொழி (தமிழ்தான்) பேசுவது, அவர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஒட்டு மொத்தமாகவும், பின்னர் பல கால கட்டங்களில் வெவ்வேறு குழுக்களாகவும் வடக்கிருந்து வந்து பரவிய ஒரே இனக்குழு என்பதை மேலும் வரையறுக்கிறது. ஒரு நிலத்தில் வந்தேறியானது குற்றமோ குறைவோ இல்லை. மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியது உண்மையானால், மற்ற அனைத்துப் பகுதிகளிலும் வாழ்பவர்கள் வந்தேறிகள்தாம். வரலாறு அறியாக் காலத்தில் வந்து அந்த நிலத்திற்குத் தொன்மையையும் தொன்மத்தையும் தந்தவன் அந்நிலத்திற்கு உரியவனாகிறான். அவ்வாறே இந்நிலத்திற்கு உரியவன், தான் கட்டமைத்த தலைசிறந்த நாகரிகத்தை, தான் வாழ்ந்து பார்த்த ஒரு பெருவாழ்வினைப் பொற்காலமாக்கி ஒரு காலகட்டத்தில் சங்க காலமாக என் கண்ணில் காட்டினான். அதற்கு முன்னரும் அப்பெருவாழ்வினை அவன் வாழ்ந்திருக்க வேண்டும். அவன் ஓலையில் எழுதி வைத்த வரைதானே என்னால் பார்க்க முடியும் ! தமிழ் மண்ணில் பெருமளவில் வந்து சேர்ந்த வேற்று மொழியினர் என்ற வரிசையில் சுமார் ஈராயிரம் ஆண்டுகளாக வடக்கிருந்து வந்த பிராமணர்களும், விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்திலும் திருமலை நாயக்கர் காலத்திலும் வந்த தெலுங்கர்கள் மற்றும் சௌராட்டிரர்களும் பட்டியலிடப் படலாம். சமீப காலங்களில் வாணிக நிமித்தமாக வந்த மார்வாடிகள், இராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் ஒரு காலும் இங்கொரு காலுமாக வாழ்வதால் அவர்களைத் தற்போது நமது விவாதத்தில் புறந்தள்ளி விடலாம். கோவை, சௌகார்பேட்டை போன்ற இடங்களில் வேட்பாளரின் வெற்றியைத் தீர்மானிக்கும் பலமே அவர்களிடம் உண்டு என்பது தனிக்கதை. தெலுங்கர்கள் தமிழ் கூறும் நல்லுலகில் கரைந்து போனார்கள். யாரும் தம் அடையாளங்களை இழந்து தன்னில் கரைந்து போக வேண்டும் என விடயம் அறிந்த தமிழன் விரும்புவதில்லை. தன் அடையாளத்தை அழிக்க நினைப்பவர்கள் மீதுதானே அவன் கோபம் எல்லாம் ! இருப்பினும் நடப்பதைச் சொல்லித்தானே ஆக வேண்டும் ? ஏதோ உடைந்த தெலுங்கைத் தம் வீடுகளில் பேசி, தமிழ்ச் சமூகத்தில் வெவ்வேறு சாதிக் குழுக்களானார்கள். அவ்வாறே சௌராட்டிரர்களும். குறிப்பாக தமிழில் தம் மொழியைக் கலந்துவிட்டுப் பாதகம் செய்யவில்லை இவர்கள். இவர்கள் மொழிக் கலப்புப் பாதகம் செய்யவில்லை என்று வேற்றுப் பொருள் வைப்பாக நாம் சொல்ல வருவது தெளிவு. இப்பாதகம் பெருமளவில் செய்தவர்கள் பிராமணர்களே. நாம் அவர்கள் மீது வைக்கும் முதற் குற்றச்சாட்டும் இதுவே. இதற்கு முன், ஏனைய இனக்குழுக்களைப் போல் எவ்வாறு வேறுபட்டு நின்றார்கள் என்பதையே சுட்டிக் காட்டினோம். அது அவர்கள் பிழையன்று. பெருமளவில் ‘தேவபாஷை’க் கலப்பும் ‘நீச பாஷை’ச் சிதைப்பும் அவர்களது முதற் பிழை. ஒரு காலகட்டத்தில் அவர்களே பெரும்பாலும் படித்தார்கள் ஆதலின், வடமொழிக் கலப்பே சமூகத்தில் உயர்வென்னும் பிம்பத்தை ஏற்படுத்த ஏதுவாயிற்று – தற்காலத்தில் ஆங்கிலக் கலப்பு சான்றாண்மையாய் அடையாளங் காட்டப்பெறுவதைப் போல. கூட்டம் போட்டுத் தீர்மானம் கொண்டு வந்தா இதனைச் செய்தார்கள் என்று கேட்கலாம். குழு மனப்பான்மை (Mass mentality) என்பது மறுக்க முடியாத எதார்த்தம். நாம் வளர்ந்து வரும் சூழலே நம்மைச் செதுக்கும். அப்படியில்லாமலா ஷேக்ஸ்பியர் போன்ற அறிஞர் பெருமக்களே யூதர்களை ஒட்டுமொத்தமாக விமர்சித்தார்கள்? எந்த சாதிக் குழுவையும் விமர்சிக்காத பெரியார், அம்பேத்கர் போன்ற பகுத்தறிவாளர்கள் பிராமணர்களை மட்டும் காரணமில்லாமலா விமர்சித்தார்கள்? எங்கும் விதிவிலக்குகள் உண்டு. விதிவிலக்கு என்றாலே விதி யாது என்பது தெளிவு. இதுவரை பிராமணர்களைப் படர்க்கையில் எழுதிய நான் அவர்களை முன்னிலையில் விளித்தால் இன்னும் உணர்வுப்பூர்வமாய் இருக்கும் என எண்ணுகிறேன். நான் முன்பே கூறியது போல் என் நட்பு வட்டத்திலும் அவர்கள் உண்டே! அதிகார மையத்திலோ அல்லது அம்மையத்திற்கு அருகிலேயோ எப்போதும் அமர்ந்திருக்க வேண்டும் என்ற உந்துதல் சரியானதுதானா, தோழர் ? அது ஏனையோரிடமும் உண்டே என்று கேட்கிறீர்களா? இருக்கலாம். ஆனால் உங்களிடம் நீக்கமற நிறைந்திருப்பதை உங்களால் மறுக்க முடியுமா? ‘பிராமணர்களுக்கு அதிகாரமே உணவு’ என்று சான்றாண்மை மிக்க ஒருவரின் எழுத்தை வாசித்திருக்கிறேன். அந்த உந்துதலும் முனைப்பும் தவறானதா? தவறானதுதான். நான் சொல்லவில்லை. நம் காலத்து அறிஞன், (ஆகவே) சமூகச் சிந்தனையாளன் சார்லி சாப்ளினிடம் கேளுங்களேன் : “தீமை செய்ய நினைத்தால் மட்டுமே அதிகாரம் வேண்டும். நன்மை செய்ய அன்பு ஒன்றே போதும்” (You need power only when you want to do something harmful, otherwise love is just enough to get everything done). உங்கள் அதிகாரப் பசியால் தீமை என்ன நிகழ்ந்தது என்ற வினாவிற்கு என் வினாவெதிர் வினாவையே விடையாக அளிக்கத் தோன்றுகிறது, “தீமையைத் தவிர வேறென்ன நிகழ்ந்தது?” அம்பேத்கர் சுட்டியதைப் போல, ‘நீங்கள் கற்றவர்கள்; சான்றாண்மை மிக்கோர் இல்லை’ என்பதைத் தொன்று தொட்டு நிரூபித்து வருகிறீர்கள். சேர, சோழ, பாண்டியர்களை மூளைச் சலவை செய்து பிரம்ம தேயங்கள், சதுர்வேதி மங்கலங்கள், அகரங்கள் முதல் பிராமண போஜனம் வரை அனைத்துச் சலுகைகளையும் பெற்றுக் கொண்டது மற்றவர்களுக்குப் பிரச்சனையில்லை. அம்மன்னர்கள் காலத்தில் மனுதர்மத்தைக் கோலோச்ச வைத்தீர்களே? பிராமணருக்கும், பாதி பிராமணரான வேளாளருக்கும் ஒரு நீதி, ஏனைய ‘கீழ்ச் சாதியினரு’க்கு வேறு நீதி என்ற முறைமை கல்வெட்டுக்களில் காணக் கிடைக்கின்றன. ‘மனுநெறி தழைக்க’, ‘மனுவாறு செழிக்க’ என்ற தொடர்கள் அக்கல்வெட்டுகளில் பரவலாகக் காணலாம். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் “தென்னிந்தியக் கல்வெட்டுகள்”, தொகுதி 6,22,26ல் காண்க. ஆட்சியதிகாரத்தில் நீங்கள் கொண்ட செல்வாக்கைக் கூற, தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 5, கல்வெட்டு 1409 போதும். குந்தவை நாச்சியாரின் ‘நந்தா விளக்கு’ இறைப்பணிக்காக எண்பத்து மூன்றரையே மூன்றுமான அரைக்காணி நிலத்தை சிறு நில உடைமையாளர்களிடம் இராசராச சோழன் ஆணைப்படி வலுக்கட்டாயமாக விலைக்கு வாங்கிய தரகு வேலையை பிராமண சபையினர் (ராஜ சேகர சதுர்வேதி மங்கல சபையார்) பார்த்தமை தெளிவு. நாம் பழங்காலக் கதைகளை மேம்போக்காகச் சொல்லவில்லை என்பதற்குச் சான்றாகவே கல்வெட்டுக் குறிப்புகள். உங்களைப் பெரிதும் ஆதரித்தவன் அல்லது உங்களிடம் பெரிதும் ஏமாந்தவன் இராசராச சோழன் என்பதாலோ என்னவோ, சமீப காலத்தில் அப்’பொன்னியின் செல்வ’னைப் பெரிதும் கொண்டாட ஆரம்பித்திருக்கிறீர்கள். அவன்தான் தமிழன் என்று ஆர்ப்பரித்து அவன் பிறந்த நாளைக் கொண்டாடும் அளவுக்கு வளர்ந்திருக்கிறீர்கள். மன்னர் காலத்தில் உங்கள் அதிகாரப் போக்கினை விரிவாகக் காண, சிறந்த ஆய்வாளரான பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் எழுதிய ‘பிராமண போஜனமும் சட்டிச் சோறும்’ (என்.சி.பி.எச் வெளியீடு) எனும் நூலில் கல்வெட்டு ஆதாரங்களுடன் காணலாம். பழங்கதையைக் கிளறியது, கருவின் குற்றம் பற்றிக் கூறத்தான். அக்காலத்தில் நீங்கள் அரசுகளையும் மக்களையும் கடைப்பிடிக்க வைத்த மனுநீதி, வர்ணாசிரமம், சனாதனம் அனைத்தையும் ஒரு இயக்கமாக எதிர்த்துப் போராட எத்தனை நூற்றாண்டுகள் காத்திருப்பு ! பெரியாரும் அம்பேத்கரும் இன்ன பிறரும் பிறந்து வர வேண்டியதாயிற்று. அக்காலத்திலேயே உங்களுக்கு எதிர்ப்பு இல்லாமல் இல்லை. சைவமும் பௌத்தமும், சமணமும் உங்கள் வேதாகமத்திற்கு எதிராகத் தோன்றியவையே. திருமூலரின் ‘பேர்கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால் போர் கொண்ட நாட்டுக்குப் பொல்லா வியாதியாம் பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம்என்றே சீர் கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே’ என்ற பாடல் நீங்கள் கோயில் நிர்வாகத்தில் புகுந்ததை எதிர்த்து எழுந்த கலகக் குரலே. ‘பேராசைக்காரனடா பார்ப்பான்’ என்று உங்களில் தோன்றி வளர்ந்த பாரதி கண்கூடாகக் கண்டு சொன்னானே ! மக்களுக்காகவே வாழ்ந்த தந்தை பெரியாரையே, உங்களை வசை பாட வைத்தீர்களே ! இன்றளவும் நூலுடை சான்றோர் உங்களைத்தானே விமர்சிக்கின்றனர் ! மக்கள் குழுக்களில் ஒருவருக்கொருவர் வெறுப்பினை உமிழ்வது நடந்தேறினாலும், சான்றோர் பெருமக்களால் தூற்றப்பெறும் பேறு உலகளவில் யூதர்களுக்கு அடுத்து உங்களுக்கேதான் ! உங்களில் சிலர் தமிழ்ச் சமூகத்திற்கு ஆற்றிய தொண்டினை ஈண்டு நினைவு கூர்தல் நன்றியறிந்த தமிழர்தம் கடமையே ! வள்ளுவத்தைப் போதித்த பரிமேலழகரையும், தமிழ்ச் செல்வங்களை வெளிக்கொணர்ந்த தமிழ்த் தாத்தா சாமிநாத ஐயரையும், தமிழாகவே வாழ்ந்த பரிதிமாற் கலைஞரையும் இன்ன சிலரையும் நினையாதவன் தமிழனா என்ன ! இதில் முதல் இருவர் தேவபாடையைத் தூக்கிப் பிடித்தமை தமிழர்க்கு நேர்ந்த சிறு அவலம் எனலாம். பாரதியை இதில் விட்டது, அவரை ‘உங்கள்’ எனும் பட்டியலில் தமிழன் வைப்பதில்லை, நீங்களே வைப்பதில்லை என்பதால். ஏதோவொரு விலங்கினமோ புள்ளினமோ பூவினமோ அழியும் செய்தியால் மனம் வலிக்கிறதே ! ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசும் அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்தின் கடைசி மனிதன் இறந்தான் எனும் செய்தியைப் பத்திரிக்கையில் வாசித்த நாள் முழுவதும் நெஞ்சில் ஏதோவொரு ஓலம் ! நம் காலத்தின் இந்த அடையாளங்களைப் பேணிக் காக்க முடியாத ஒரு கையாலாகாத்தனம் நம்மைச் சுடுகிறதே ! ஆனால் (அறியாமையால் அல்லது ஏமாந்ததால்) உங்களை வாழ வைத்த தமிழினத்தின் அடையாள அழிப்பில் உங்களுக்குக் குற்றவுணர்வு இல்லாமல் போனது எப்படி ? மொழிக் கலப்பு, சங்க காலம் முதலான அவனது தலைசிறந்த பண்பாடு நிராகரிப்பு போன்று காலங்காலமாய் நீங்கள் நிகழ்த்தி வரும் தாக்குதல்களும் அவன் ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்பதும் ஒரு புறம் இருக்கட்டும். அவன் தன்னைக் காக்க, தன் மண்ணைக் காக்க நிகழ்த்தும் எந்தவொரு போராட்டத்திலும் நீங்கள் அவனுடன் நிற்பதில்லையே ! மொழிப் போர், மரபு காக்கும் சல்லிக்கட்டு, அழிவு தரும் அணுசக்திக்கு எதிரான போராட்டம், தன் நிலம் காக்க ஹைட்ரோ கார்பன் மற்றும் எட்டு வழிச் சாலைக்கு எதிரான போராட்டங்கள், ஸ்டெர்லைட் போராட்டம் என்று அனைத்திலும் வளர்ச்சித் திட்டங்கள் என்னும் பெயரில் அவனுக்கு எதிராகத்தானே நிற்கிறீர்கள் ? அவனது போராட்டங்கள் உங்கள் இனத்திற்கானவை அல்ல என்பதாலா? இலங்கைத் தமிழின அழிப்பில் கூட சிங்களவனுடன் கை குலுக்கும் உங்கள் துரோகத்துக்கு என்று தோழர் முற்றுப்புள்ளி வைப்பீர்கள்? உங்களில் சிலர் அங்கும், சிலர் இங்குமாக நின்றால் கூட எங்களால் புரிந்து கொள்ள முடியும். அதெப்படி ஒட்டு மொத்தமாக நீங்கள் தமிழனுக்கு எதிராக? தமிழன் உணர்ச்சி வயப்பட, நீங்கள் மட்டும் அறிவார்ந்த சமூகம் என்று முடிவெடுத்துக் கொண்டீர்களோ? அறிவார்ந்த மனிதன் பாதிக்கப்படும் மக்களுடன்தான் நிற்பான். பிரம்ம தேயங்களையும், கல்வெட்டுக்களில் அவன் பொறித்துக் கொடுத்த ‘சட்டிச் சோறு’ உரிமைகளையும் நினைத்தாவது குறைந்த பட்சம் தமிழனிடம் ‘செஞ்சோற்றுக் கடன்’ என்ற சொல்லின் பொருளைப் படித்திருக்கலாமே ! உலகத்துக்கே நாகரிகம் சொல்லித் தந்த சங்க காலத் தமிழன் உங்களுக்குத் தமிழ் சொல்லித் தர மாட்டானா, என்ன? தந்தை பெரியார் வெறுத்துப் போய் கையறு நிலையில்தானே உங்களையும் பாம்பையும் வைத்துத் திட்டினார்? நீங்கள் திருந்தாத ஜென்மங்கள் என்ற முடிவுக்கு வந்த பெரியாரின் கூற்றைப் பொய்யாக்க என்றாவது முயற்சித்தீர்களா? இந்துத்துவா என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி நீங்கள் மீண்டும் கொணர நினைப்பது வர்ணாசிரமப் பார்ப்பனியம் அல்ல என்று உங்கள் நெஞ்சில் கை வைத்துச் சொல்ல முடியுமா ? திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் உங்களைத் தட்டி வைத்த வரைக்குதானே அடங்கி இருந்தீர்கள்? காலத்தின் அலங்கோலத்தில் , மத்தியில் ஒரு இந்துத்துவா அரசு அமைந்ததும், மத்தியிலும் மாநிலத்திலும் அரை வேக்காடான உங்கள் ஆட்களின் கொக்கரிப்பு உங்களுக்கே சகிக்கிறதா? ஏன், தமிழகத்தில் வாட்ஸ் அப் குழுமங்களிலும் முகநூலிலும் உங்களின் ஆரவாரங்கள் பெரியாரின் கூற்றை மெய்ப்பிக்கின்றனவா, இல்லையா? எத்தனை காலத்திற்கு இந்த ஆர்ப்பரிப்பு சாத்தியம் என்று நினைக்கிறீர்கள்? சக்கரம் சுழலத்தானே வேண்டும் ! உங்கள் மனதுடன் நான் பேச நினைத்தது இவ்வளவுதான். உங்கள் அடையாளத்துடன் வாழ உங்களுக்கு முழு உரிமை உண்டு. உயிரைக் கொடுத்தேனும் தமிழனின் அடையாளத்தைக் காக்கும் கடமையும் உங்களுக்கு உண்டு. போனது போகட்டும். “நின்னைச் செற்றனன் என்னைச் செற்றனன் தீயரே ஆயினும் உனக்கு உற்றனன் எனக்கும் உற்றனன்” என்று கம்ப நாடன் சொன்னது போல் நீங்கள் தமிழினத்திடம் கொள்ளும் உறவே மனித நீதியாக அமைய முடியும். தமிழனுடன் நில்லுங்கள், தோழர் ! அவன் என்றும் உங்களைத் தாங்கி நிற்பான். வந்தாரை வாழ வைப்பதே அவன் கண்ட அறம்.
 37. 1 point
  பாலகுமார் அவர்கள் சொன்னது போல தலைவர் என்பவர் நல்லவராக மட்டுமில்லாது வல்லவராகவும் இருக்க வேண்டும். சம்பந்தருக்கு அந்த தகமை உள்ளதா என்பது (வல்லவர்) கேள்விக்குரியது.
 38. 1 point
 39. 1 point
 40. 1 point
  ஆறுமுகம் தொண்டமான் போன்ற கழிசடை அரசியல்வாதிகள் மலையக மக்களின் தலைவர்களாக இருந்தால் சிங்கள-பௌத்த அரசியல்வாதிகள் இப்படித் தான் ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள். இலங்கையில் கடந்த 6 வருடங்களில் ஏற்பட்ட சம்பள அதிகரிப்புகளுக்கு ஏற்ப, பெருந்தோட்ட தொழிலாளர்கள் 2020 இல் நாளாந்த சம்பளமாக குறைந்தது ரூ 1200/- பெற வேண்டும்.
 41. 1 point
  கறுப்பு தொதல். சுவை அபாரமாய் இருக்கும். செய்வதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். செய்தால் சொல்லி வேல இல்லை.....!
 42. 1 point
  இளையராஜா பாட்டுக்கு வரி வசூலிப்பது போல வடிவேலுவும் தனது படங்களை தரவேற்றுகிறவர்களுக்கு வரி வசூலிக்க வேண்டும். கள்ளன் கொலைகாரனிலிருந்து எல்லோரும் இதைத் தான் சொல்கிறார்கள். யாரை நம்புவது?
 43. 1 point
  1) காமதேனுவின் முத்தம் இன்று தான் படித்து முடித்தேன் கோவூர் எனும் கிராமத்தில் பெரியவீட்டுகாரர் என அழைக்கப்படும் குடும்பத்தில் கற்பிணிப்பெண்களின் கண்ணில் காம தேனு காட்சிகொடுக்கும் அக்கற்பிணிப்பெண்களுக்கு காமதேனு அம்சம் உள்ள பெண்குழந்தை பிறக்கும் அதன் பின் உள்ள மர்மங்கள் பற்றிய கதை காலசக்கரம் நரசிம்மா எழுதியது 2) ரோலெக்ஸ் வாட்ச் - சரவணன் சந்திரன் 3) மாயப்பெருநிலம் - சென் பாலன் 4) 5 முதலாளிகளின் கதை - ஜோதியி 5) வஜ்ரவியூகம் 6)சாம்ராட் 7) மஹாபாரதத் தேடல் அலெக்ஸாண்டர் இரகசியம் 8)வெண்முரசு ( பாரதப்போரின் துரியோதனன் இறப்பு வரையான பகுதிகள் (கார்கடல்..இருட்கனி.மற்ற பகுதிகளின் பெயர் நினைவில்லை) 9)கௌரவன் ( இன்னும் முடிக்கவில்லை பாதியில் நிக்கிறது ) 10)லீ குவான் யூ ( தமிழ் பாதியில் நிக்கிறது ) 11) நீ நதி போல ஓடிக்கொண்டிரு (பாரதி பாஸ்கர்) 12) குருதி தேடும் இயந்திரங்கள் ( கௌசிகன் ) நீங்கள் படித்தவற்றையும் பகிருங்கள்
 44. 1 point
  நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம். ஆனால், கொழும்பில் வரையப்படும் சுவரோவியங்களைப் பார்த்தீர்களா? சிங்கள மொழியும், அதன் கலாசாரமும், இவையிரண்டும் பெளத்தத்தோடு எப்படிப் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பதைக் காட்டும் முகமாகவே பெரும்பாலான ஓவியங்கள் வரையப்படுகின்றன. ஒரு ஓவியத்தில் 2009 யுத்தவெற்றியும், அருகில் தமிழ்த் தாய் ஒருவரைச் சுமந்துவரும் துப்பாக்கி ஏந்திய சிங்களச் சிப்பாயும் வரையப்பட்டிருக்கிறது. சிங்களவரின் மனநிலை மாறப்போவதில்லை. எம்மையும் அது மாவீரர் நினைவுகளையோ, தமிழர் சரித்திரத்தையோ மீட்க விடப்போவதில்லை. பார்க்கலாம்.
 45. 1 point
 46. 1 point
  ஆறாம் வகுப்பு என்று நினைக்கிறேன்....! ஆய்வு கூடத்து உதவியாளர் என்று நினைவு...! அவ்வப்போது ரியூசனும் குடுப்பார்..! என்ன பாடம் என்றில்லை.., எல்லாப் பாடத்திலும்...ஆள் ஒரு புலி..! ஒரு நாள் கேட்டார்...! உனக்கு உரிமை இருக்கா எண்டு...? என்னடா இது புது வில்லண்டம்? வில்லங்கத்தை அவர் அப்படித் தான் சொல்லுவார்..! அப்போது புரியவேயில்லை...! ஆறாம் வகுப்பு முடிஞ்சு ..., அட்வான்சு லெவல் வந்த போது.., எல்லாமே புரிஞ்சது...! நடு ஆற்றில் தத்தளித்தவனுக்கு.... ஒரு மரக்கட்டை கிடைச்சது...மாதிரி....! கிழக்கு வானம் கொஞ்சம் கொஞ்சம் வெளிச்சது மாதிரி...! மப்பும் மந்தாரமும்...கொஞ்சம் அகல்வது போல...! குட்டக் குட்டக் குனிந்தவன் கொஞ்சம் ...நிமிர்வது போல...! அடித்தவனுக்குத் திருப்பிக் கொடுக்க..., அட ...அவனுக்கும் வலித்திருக்க வேண்டும்...! எத்தனை...விமரிசனங்கள்....? இது நியாயமா.....இது சரிதானா? எதுவுமே....காதில் விழவில்லை...! எல்லோரும்....தலைவராகத் துடிக்கும்..., இனத்தில்.....இப்படியும் ஒரு இயக்கம்...! எவ்வாறு சாத்தியமானது? சகுனிகள் முளைத்தார்கள்...! ஒன்றல்ல.....இரண்டல்ல..., ஆயிரம் சகுனிகள் உதித்தார்கள்...! எதிரிகளாக....அல்ல..., நண்பர்களாக..! சூரியன்களாக ஒளிர்ந்தார்கள்..! அந்தப் பிரகாசத்தில்..., உண்மைச் சூரியன்.....மறைந்து போனது..! சகுனிகள்..., இன்னும் பிரகாசிக்கிறார்கள்...! இன்னுமொரு..... சூரியன் உதிக்கும் வரை...., சகுனிகள் பிரகாசிப்பார்கள்..!
 47. 1 point
  என்ன இப்படி சொல்லுறீங்கள், கோதுமையில்தான் பசைத்தன்மை நிறைய இருக்கு. அதாலைதான் போஸ்ட்டர் எல்லாம் சுவர்களில் ஓட்டுறது. நகரத்து மாடுகள் எல்லாம் அந்த போஸ்ட்ரை பசையுடன் சாப்பிட்டே நிறைய பால் கொடுக்கின்றன தெரியுமா.....!
 48. 1 point
  நெத்தலியில் இருப்பது unsaturated fat . இது ரத்தத்தில் இருக்கும் கூடாத கொழுப்பை ஈரலுக்கு கொண்டு சென்று அகற்றும். என்றபடியால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. உப்பு இருப்பதால் கொதி தண்ணீரில் நன்றாக கழுவி சமைத்தால் சரி
 49. 1 point
  முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அறிக்கையால் சுமந்திரன் போன்று கபட நாடகம் ஆடும் திருட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்கள் பீதியடைந்து உளறுகிறார்கள்!
 50. 0 points
  இது, எப்படி இருக்கு? அந்த மோட் டார் சைக்கிளில்... வந்தவர், முன்பே திட்டமிட்டு.. செல்போனை பறிக்கவில்லை. அவரை பறிக்கும் மனநிலையை... தூண்டியவர்கள் இவர்களே...