Jump to content

Our Picks

Top content from across the community, hand-picked by us.

corona-world-map.JPG

நினைவுத்தூபி அழிப்பு: அறத்தின் மீதான ஆக்கிரமிப்பு

-புருஜோத்தமன் தங்கமயில்

போர் வெற்றி வாதத்துக்கு எதிராக முளைக்கும் சிறிய புல்லைக்கூட, விட்டு வைத்துவிடக் கூடாது என்பது ராஜபக்‌ஷர்களின் ஒரே நிலைப்பாடு. 

அதுபோல, பௌத்த சிங்கள மேலாதிக்க மனநிலையைக் கேள்விக்கு உள்ளாக்கும் எந்தவோர் அம்சத்தையும், நாட்டின் எந்தப் பாகத்திலும் அனுமதித்துவிடக் கூடாது என்பது, தென் இலங்கையின் குறிக்கோள். 

அப்படியான நிலையில், இறுதிப் போர் கொடூரங்களை நினைவுறுத்திக் கொண்டு நிற்கும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி(கள்), தென் இலங்கையின் கண்ணில் விழுந்த பெரிய துரு(க்கள்). அந்தத் துருக்களை அகற்றிவிட வேண்டும் என்பதற்காக சாம, தான, பேத, தண்டம் என்ற நான்கு வழிகளையும், தென் இலங்கையும் அதன் ஆட்சியாளர்களும் கையாள்வார்கள். அதுவும், ‘பேத, தண்ட’ முறைகளில் அதிக ஈடுபாடுள்ள ராஜபக்‌ஷர்கள், எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள் என்பதற்கும், முள்ளிவாய்க்காலின் இறுதி நாள்களே பெரிய சாட்சி.
 • 0 replies

No to UoJ, but Yes to USJ nd WYB. Is The UGC of Sri lanka a political party of MR nd GR gang. ??!!

சிறி, இப்பவும் லைக், நன்றி போன்றவை இல்லை. எடிட்டும் பண்ணமுடியாமல் இருக்கு. யாரிடம் இதைப்பற்றி கதைக்கலாம்? 

கொவிட் 19 அல்லது கொரானோ பலருக்கு பதட்டம். சிலருக்கு உயிர்க்கொல்லி. நமக்கு விளையாட்டு.
  • Thanks
  • Like
 • 11 replies

கோவிட் 19: மாறும் வைரசும், மாறாத மனிதர்களும்!
கோவிட் 19: மாறும் வைரசும், மாறாத மனிதர்களும்!

தென்கிழக்கு இங்கிலாந்தின் நகரங்களில் புதிதான நிலை 4 கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப் பட்டிருக்கின்றன. இதற்குக் காரணமாக, புதிதாக விகாரமடைந்த நவீன கொரனா வைரஸ் அங்கே இனங்காணப் பட்டிருப்பது சொல்லப் பட்டிருக்கிறது. இதைப் பற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

வைரசுகளுக்கு மாற்றமே வாழ்க்கை!

வைரசுகள் ஆர்.என்.ஏ (RNA) அல்லது டி.என்.ஏ (DNA) எனப்படும்  நியூக்கிளிக் அமிலங்களால் ஆக்கப் பட்டவை. ஆர்.என்.ஏ வைரசுகள் இயற்கையாகவே பெருகும் போது விகாரமடைந்து புதிய விகாரிகளை உருவாக்கும் தன்மை கொண்டவை. தடுப்பூசி இது வரை கண்டு பிடிக்கப் படாத எயிட்ஸ் வைரசான எச்.ஐ.வி (HIV) வேகமாக விகாரமடைவதில் பிரபலமான ஒரு வைரஸ் குடும்பம். இன்னொரு வேகமாக மாறும் தன்மை கொண்ட ஆர்.என்.ஏ வைரசு வருடா வருடம் எம்மைத் தாக்கும் இன்ப்ளூழுவன்சா ஏ வைரஸ். இதனால் தான் இன்புழுவன்சாக் காய்ச்சலுக்கான தடுப்பூசியை ஒவ்வொரு ஆண்டும் புதிதாக தயாரித்துப் போட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

நவீன கொரனா  வைரசும் ஒரு ஆர்.என்.ஏ வைரஸ். எச்.ஐ.வி அல்லது இன்புழுவன்சா போல வேகமாக விகாரமடையா விட்டாலும், விகாரமடையக் கூடிய வைரஸ் தான் இந்த நவீன கொரனா  வைரஸ். கடந்த வருடம் கண்டறியப் பட்டதில் இருந்து 4000 வரையான விகாரங்கள் நவீன கொரனா வைரசில் அடையாளம் காணப் பட்டிருக்கின்றன. 

ஏன் மாற்றங்களும் விகாரங்களும்?

"மாறாததெல்லாம் மண்ணோடு" என்ற கோச்சடையான் வரிகள் தான் இந்தக் கேள்விக்கு ஒரு வரிப் பதில். வைரசுகளின் வாழ்க்கை என்பது ஏனைய சிக்கலான உயிர்கள் போன்றது அல்ல. வைரசுகளின் வாழ்வுக்கு ஒரே நோக்கம் "நிலைத்திருப்பது" தான்!. அப்படி நீண்ட காலம் நிலைத்திருக்க இரண்டு வேலைகள் செய்ய வேண்டும்:

ஒன்று - தாம் தங்கிப் பெருக்கக் கூடிய உயிர்களைத் தேடி அடைய வேண்டும்.

இரண்டு: அப்படியான ஒரு உயிர் கிடைக்கும் போது வேகமாகப் பெருக வேண்டும். 

இந்த இரண்டாவது வேலையை ஆர்.என்.ஏ வைரசுகள் செய்யும் போது, ஒரு சிக்கல் ஏற்படுகிறது. வேகமாக பெருகும் அவசரத்தில், தங்கள் ஆர்.என்.ஏ மூலக் கூறுகளைப் பிரதி செய்வதில் சில தவறுகளை விடுகின்றன. இது நாம் பார்த்தெழுதல் போட்டியில், வேகமாக எழுதும் போது சில எழுத்துப் பிழைகள் விடுவது போன்ற ஒரு நிலைமை. மேலே நாம் பார்த்த நவீன கொரனா வைரசின் 4000 விகாரங்களில் பெரும்பகுதி இப்படியான தவறுகள் தான். 
  • Like
 • 4 replies

பூமியியல்

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கருத்துக்களம் இன்று (11.08.2011) புதிய பதிப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் பின்னர் பல்வேறு வகையான பிரச்சனைகளை உறுப்பினர்கள் எதிர்கொள்வதால் இங்கு அவற்றினைக் குறிப்பிடுவதன் மூலம் அதற்கான தீர்வு நிர்வாகமோ அல்லது தீர்வினைத் தெரிந்த உறுப்பினரே தெரிவிப்பதன் மூலம் பலருக்கும் உதவியாக அமையும். பிரச்சனைகளைக் குறிப்பிடும் போது விளக்கமாகவும் முடிந்தால் screen shot ஒன்றினை இணைப்பதும் விளங்கிக் கொள்ள இலகுவாக இருக்கும்.
 • 1,408 replies

ஆம்பலின் இதழில் துளிரும் வெட்கம்

செல்லக் குழந்தையின்  சிணுங்கல்

ஓய்ந்த ஆழியின் நிசப்தம்

இருண்ட வெளியில் தொலைந்த ஒளிக்கீற்று

மாற்றத்தைத் தேடும் மருண்ட விழிகள்

பூரணம் உணர்வாய்

- இத்தீண்டலில் பெண்ணே!
  • Like
 • 2 replies

அசோலா வளர்ப்பில் சாதிக்கும் முன்னாள் போராளி

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைவேலி எனுமிடத்தில் அமைந்துள்ளது செல்வபாக்கியம் பண்ணை. முன்னாள் போராளி தம்பதிகளான நாகலிங்கம் கனகசபாபதி நேசன்  மற்றும் அவரின் துணைவியார் வசந்தி ஆகியோர் அதனை திறம்பட வினைத்திறனுடன் நிர்வகித்து வருகின்றனர். 

கொரோனா காலப்பகுதியான இப்போது மாடுகளுக்கான அடர்தீவனங்களுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதுடன் அதன் விலைகளும் தாறுமாறாக அதிகரித்துள்ளன. இந்நிலையில் தனது பண்ணையில் மாடுகளுக்கு பெருமளவில் அசோலா தீவனத்தை உற்பத்தி செய்து குறிப்பிடத்தக்களவு தீவனத் தேவையை ஈடு செய்து வருவதுடன் நிறைவான பால் உற்பத்தியையும் பெற்று வருகிறார். 

அசோலா வளர்ப்பு மற்றும் தீவன முகாமைத்துவம் தொடர்பில் எம் பண்ணையாளர்களிடையே சரியான புரிதல் இல்லாத நிலையில், அசோலா தொடர்பிலான பல்வேறு விளக்கங்களையும் தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார். 

* அசோலா பாசி ஓர் அறிமுகம் 
* அசோலா தொட்டி அமைப்பது எப்படி? 
* அசோலா தொட்டி பராமரிப்பு முறைகள் 
* அசோலா தீவன மேலாண்மை

 
  • Thanks
  • Like
 • 6 replies

பெண்டாட்டி ஊருக்கு போய்ட்டா..!
பெண்டாட்டி வீட்டில் இல்லையெனில் ஆண்களுக்கு சில நாட்கள் கொண்டாட்டம்தான்.. அப்புறம் சலித்து, வெறுமையாகி மனம் ஏங்க ஆரம்பித்துவிடும்..

இந்த உணர்வுகள் எல்லோருக்கும் இருப்பதுதான்.. இந்தக் காணொளியும் அதையே பிரதிபலிக்கிறது..

 

 
 • 3 replies

மதுரை மரிக்கொழுந்து வாசம்..!
மதுரையின் சிறப்பையும், மீனாட்சி அம்மன் கோவில் வரலாற்றையும் விலாவாரியாக மிக அருமையாக விளக்கும் காணொளி..

மதுரை மாநகரை வான்வெளியிலிருந்து பார்க்கும் காட்சி அற்புதமாக உள்ளது..! 
 

 
  • Like
 • 1 reply

மகனைக் கண்டது முதல் சரணடைதல் வரை (VIDEO)

Selvaraja Rajasegar on August 30, 2020

 


 

2009 மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் வழியாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வந்த இந்தத் தாய், தன்னுடைய 33 வயதான மகனை இராணுவத்திடம் கையளித்திருக்கிறார். விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தமையால் தான் இராணுவத்தினரால் துன்புறுத்தப்படலாம் என்று இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரமறுத்த போதிலும் தாயார் அவரை வற்புறுத்தி அழைத்து வந்திருக்கிறார். அவ்வாறு அழைத்துவந்த மகனை விசாரணையின் பின்னர் விடுவிப்பதாகக் கூறி தன் கண்முன்னே அழைத்துச் சென்ற இராணுவத்தினர், 11 வருடங்களாகியும் விடுதலை செய்யவில்லை.

மகனைத் தேடி நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று களைத்துவிட்டார். மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று வைத்தியரும் கூற, படுக்கையில் இருக்கும் தன்னுடைய தாய்க்கு பணிவிடை செய்வதே முழுநேர வேலையாக மாறிவிட்டது அவருக்கு. இருந்தாலும் எங்கு போராட்டம் நடந்தாலும் அந்த இடத்தில் ஆஜராகிவிடுவார்.

உக்கிரமாக போர் இடம்பெற்றபோது மகனை கண்ட இடத்திலிருந்து இராணுவத்திடம் கையளித்த இடம்வரை பயணம் செய்து அன்று நடந்த சம்பவத்தை எம்முடன் பகிர்ந்துகொண்டார்.

இன்று அனுஷ்டிக்கப்படும் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு அவரைப் பின்தொடர்ந்து பதிவுசெய்த காணொளியை இங்கு தருகிறோம்.

 

 

https://maatram.org/?p=8720
 • 4 replies

வேண்டும் ஒரு கூட்டமைப்பு
  • Thanks
  • Like
 • 2 replies

நாடாளுமன்றில் பலகுரல்களில் பேசுதல்: சாத்தியங்களும் சவால்களும்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஓகஸ்ட் 16

தமிழ் நாடாளுமன்ற அரசியல் பெரும்பாலும் ஏதோவோர் அந்தத்திலேயே இயங்கி வந்திருக்கிறது. ‘ஏக பிரதிநிதித்துவம்’, ‘கூட்டான மக்கள்தெரிவு’, ‘வலுவான பேரம்பேசல் சக்தி’ என்று காலகாலத்துக்குப் பெயர்களும் கோரிக்கைகளும் மாறினாலும் கடந்த இருபது ஆண்டுகளில் மக்கள் தொடர்ச்சியாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கே வாக்களித்து வந்துள்ளார்கள். ஆனாலும் மாற்றுக் குரல்கள் தொடர்ந்து ஒலித்த வண்ணமே இருந்தன. அவை இணக்க அரசியலை ஒருபுறமும் எதிர்ப்பு அரசியலை மறுபுறமும் கொண்டதாக இருந்து வந்திருக்கிறது. இம்முறை நாடாளு மன்றில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் அவ்வாறல்ல.

தமிழ் மக்கள் எக்குரலுக்கும் வஞ்சனை செய்யாமல் அனைவரையும் நாடாளுமன்றம் அனுப்பியுள்ளார்கள். இது முக்கியமான மாற்றம். இந்த மாற்றம் வரவேற்புக்குரியதா இல்லையா என்பதை அடுத்துவரும் 5 ஆண்டுகள் தீர்மானிக்கும். அம்பாறையில் கருணா (விநாயகமூர்த்தி முரளிதரன்) வென்றிருந்தால் தமிழ் மக்களது நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ வரிசை முழுமையடைந்திருக்கும். அது நடக்கவில்லை.

ஆனாலும் இம்முறை நாடாளுமன்றில் களம் காணும் தமிழ்ப் பிரதிநிதிகளைப் பார்த்தால் அதன் பன்மைத்துவம் விளங்கும். சம்பந்தன், சுமந்திரன், கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன், டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான் (சிவனேசத்துரை சந்திரகாந்தன்), சித்தார்த்தன், அங்கஜன் மற்றம் வியாழேந்திரன். இவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு அரசியல் செல்நெறியில் பயணிப்பவர்கள். ஒவ்வொரு குரலில் பேசுபவர்கள். இந்தப் பன்மைத்துவம் வரவேற்கப்பட வேண்டியதா என்ற வினா பலர் மனதில் உண்டு. மொத்தமாக அனுப்பி எதைக் கண்டோம் என்ற பதில் கேள்வியும் எழாமல் இல்லை.

இம்முறை தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கியுள்ள முடிவை அனைவரும் ஏற்றாக வேண்டும். தமிழ்த்தேசியவாதிகள் இந்த முடிவை ஏற்பதாகத் தெரியவில்லை. ஒரே குரலில் பேசிப் பழகிப் போனவர்களுக்கு மக்களின் தெரிவுகள் சங்கடமானவை. தமிழ்த்தேசியத்தை உரத்துப் பிடிப்போரே மூன்று அணிகளாக இருக்கிறார்கள். அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்ய விரும்புபவர்களும் மூன்று அணிகளாக இருக்கின்றார்கள். அடுத்த தேர்தலில் மக்கள் தங்கள் அரசியல் சாய்வை சிக்கலின்றி எட்டுவதற்கு இந்தப் பன்மைத்துவம் பயனுள்ளதாக இருக்கும்.
 • 0 replies

இலங்கைத் தமிழர் வரலாற்றில் 1983 ஜூலை 23ஆம் திகதி ஒரு திருப்பத்தை எற்படுத்திய நாள். தமிழர்களை அழித்தொழிக்கும் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்ட நாள் .

இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் சிங்களவர்களுடன் தமிழர்கள் இணைந்து வாழ்ந்த பகுதிகள் எங்கும் ஓடிய தமிழர்களின் குருதியும் பறிக்கப்பட்ட உயிர்களும் இதயங்களை உறைய வைத்த கதறலும், கண்ணீரும் காடைக் கும்பல்களால் கூட்டாக வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட தமிழ் பெண்களின் அபயக் குரல்களும் இலங்கை வீதிகளை நிறைத்த அந்த நாளை எப்படி மறக்க முடியும்?

கறுப்பு ஜூலை என வர்ணிக்கப்படும் அந்த தமிழினப் படுகொலை நடந்து எதிர்வரும் 23 ஆம் திகதியுடன் 37 ஆண்டுகள். வாகனங்களில் சென்ற தமிழர்களை வழிமறித்து உயிரோடு எரித்துக் கொன்று நடனமாடிய சம்பவங்கள், வாக்காளர் பட்டியலை வைத்துத் தமிழர்களை அடை யாளம் கண்டு வீடுகளிலிருந்து இழுத்தெறிந்து வெட்டித் துண்டாடிய காட்சிகள், பெற்றோருக்கு முன்பாக மகள்களும் கணவர்களுக்கு முன்பாக மனைவிகளும் சகோதரர்களுக்கு முன்பாக சகோதரிகளும் இக்காடைக்கும்பல்களினால் நிர்வாணமாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்ட,வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட கொடூரங்களும் கடைகளில் தமிழனின் கறி கிடைக்கும் என பலகையில் எழுதி வைத்து எக்காளமிட்ட கோரங்களும் இன்று நினைத்தாலும் உடல் நடுங்க வைத்து விடும்.
 • 0 replies

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்புக்கான எச்சரிக்கை அறிகுறிகள் என்ன தெரியுமா?,
அறிகுறிகளைக் கண்டறிவது,  சிறுவர்கள், குழந்தைகளின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை எவ்வாறு செய்வது என்பதை அறிய முயற்சிப்போம்.


சிறுவர் துஷ்பிரயோகம் என்பது வெறும் கண்களைசுற்றியுள்ள காயத்தை மட்டும் பற்றியது அல்ல. உடல் ரீதியான துஷ்பிரயோகமும் அது விட்டுச்செல்லும் காயங்களை பார்க்கும் போது அதிர்ச்சியளிக்கும் அதே வேளையில், அனைத்து சிறுவர் துஷ்பிரயோக அறிகுறிகளும் வெளிப்படையாக தெரிவதில்லை.

குழந்தைகளின் தேவைகளைப் புறக்கணிப்பது, மேற்பார்வை செய்யப்படாத, ஆபத்தான சூழ்நிலைகளில் வைப்பது, பாலியல் சூழ்நிலைகளுக்கு அவர்களை அம்பலப்படுத்துவது அல்லது பயனற்றதாக அல்லது முட்டாள்தனமாக உணர வைப்பது ஆகியவை குழந்தை துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பின் வடிவங்களாகும் - மேலும் இவை குழந்தைகள் மீது ஆழமான, நீடித்த வடுக்களை விடக்கூடும்.
  • Thanks
  • Like
 • 5 replies

யாழ் நூலக எரிப்பு : உண்மைகளும் மாயைகளும் நினைவுக் குறிப்புகள் – நிலாந்தன்..

June 7, 2020


கடந்த முதலாம் திகதி யாழ் நூலக எரிப்பு நினைவு கூரப்பட்டது.  எதிரியை எங்கே தாக்கினால் நிலை குலையச் செய்யலாமோ அந்த இடத்தில் தாக்குவதுதான் பொதுவான இயல்பு. இன்னும் கூர்மையாக சொன்னால் எதிர்த்தரப்பின் உயிர்நிலை எதுவோ அங்கே தாக்குவது. ஈழத் தமிழர்களின் உயிர் நிலை அல்லது குறிப்பாக யாழ்ப்பாணத்தவர்களின் உயிர் நிலை கல்விதான் என்று கருதிய காரணத்தினாலேயே யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தவர்களின் உயிர்நிலை கல்விதானா என்ற கேள்விக்கு உரிய விடையைத் தனியாக ஆராய வேண்டும்.ஆனால் சிங்கள அரசியல்வாதிகள் அப்படித்தான் நம்பினார்கள். அதனால்தான் யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. இந்த அடிப்படையில் கூறின் அது ஒரு பண்பாட்டு ரீதியிலான இனப்படுகொலை எனலாம். இது முதலாவது. இரண்டாவது நூலகத்தை எரிப்பதற்குரிய அரசியல் பின்னணி. தமிழ் மக்களுக்கு ஒரு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று சிங்களத் தலைவர்கள் ஒரு பொருத்தமான தருணத்துக்காக காத்திருந்தார்கள். வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றிய தமிழ் தலைவர்களுக்கும் அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் மறக்க முடியாத ஒரு பாடத்தைக் கற்பிப்பது அவர்களின் நோக்கம்.

ஏற்கனவே 1977இல் நிகழ்ந்த இன வன்முறையின் போது தமிழர்களுக்கு கொடுத்த அடி போதாது என்று தென்னிலங்கையிலிருந்த இனவாத சக்திகள் சிந்தித்தன. அதைவிட நோகக்கூடிய ஒரு அடி அதுவும் இதயத்தில் அல்லது உயிர் நிலையில் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் ஒரு தருணத்துக்காக காத்திருந்தார்கள். அப்படிப்பட்ட ஒரு தருணத்தை மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல் களம் திறந்துவிட்டது. இது இரண்டாவது உண்மை.

மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல் களம் எனப்படுவது தமிழ் தலைவர்களின் குத்துக்கரணத்தின் விளைவு. 1976இல் வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு மக்கள் ஆணையைப் பெற்ற தமிழ் தலைவர்கள் 1981இல் மாவட்ட அபிவிருத்தி சபைக்கு கீழிறங்கி வந்தார்கள். ஏன் அப்படிச் சறுக்கினீர்கள் என்று கேட்டபோது அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சொன்னார் ‘மாவட்ட அபிவிருத்தி சபை ஒரு தங்குமடம்’ என்று.

வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு மக்களிடம் ஆணையைப் பெற்ற தலைவர்கள் மாவட்ட அபிவிருத்தி சபை என்ற தங்குமிடத்தை ஏற்கத் தயாரானார்கள்.
  • Like
 • 0 replies

தடம் அழியா நினைவுடன் …
தடம் அழியா நினைவுடன் … மே-13
‘டமார்’ என்ற ஒரு பேரோலி, அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த என்னை திடுக்கிட்டு விழிக்க வைத்தது. பொலுபொலு என்ற சத்தத்துடன் எறிகணைத் சிதறல்கள்  ஆங்காங்கே தகரத்தில் பட்டுத்   தெறித்தன. எறிகணைத் துண்டொன்று மண்மூட்டைக்கு மேல பட்டிருக்க வேணும் , சொர சொர என்று கழுத்துக்கு நேரே மண்ணைக் கொட்டியது. வாய் மூக்கு எல்லாம் ஒரே மண் சடாரென்று எழுந்து முகத்தைத் துடைத்துக் கொண்டேன்.
  • Like
 • 16 replies

மறக்க முடியாத ஓராயிரம் வலிகளின் பதிவு…. !
மறக்க முடியாத ஓராயிரம் வலிகளின் பதிவு…. !

On May 25, 2020
தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டின் மே மாத நாட்கள்; வாழ்வில் மறக்கமுடியாத கொடூர நாட்களாகப் பதிவாகி இருக்கின்றன. ஒவ்வொரு தமிழ் நெஞ்சங்களிலும் எரிமலை பிழம்புகளாக அந்த நினைவுகள் சுடர்விட்டெரிந்து கொண்டே இருக்கின்றன. அந்த உணர்வுகளுடன் உலகில் எந்த மூலையிலிருந்தாலும் மே மாதம் 18 ஆம் திகதி உணர்வு ரீதியாக அனைவரும் ஒன்றாக இணைகின்றோம். அழுகின்றோம், புலம்புகின்றோம் ஓராயிரம் வலிகளை பதிவு செய்கின்றோம்.
  • Like
 • 1 reply

கொரோனா வைரஸ் ஊரடங்கால் மீண்டும் உயிர் பெற்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள்


இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தாலும் நோய் தொற்று பரவாமல் இருக்க மக்கள் ஆரோக்கியமான சில வழி முறைகளை கடைப்பிடித்து வருகின்றனர். 

அதே போல குழந்தைகளை நாள் முழுவதும் வெளியில் அனுப்பாமல் வீட்டிலேயே இருக்க வைப்பதும் பலருக்கு பெரிய சவாலாக உள்ளது. எனவே அவர்களை நீண்ட நேரம் ஒரு விளையாட்டில் ஈடுபடுத்த முடிவு செய்து குடும்பத்துடன் ஒன்று கூடி தாயம் விளையாட துவங்கி விடுகிறார்கள்.

தாயம் விளையாட துவங்கினால் பல மணி நேரம் அந்த விளையாட்டில் குழந்தைகளை ஈடுப்பாடுடன் வைத்திருக்க முடியும், மேலும் குடும்பத்தில் உள்ளவர்கள் அணிகளாக பிரிந்து விளையாடுவதால் அணியை வெற்றி பெற வைப்பதில் ஆர்வம் அதிகரிக்கும். 
  • Like
 • 1 reply

முதலாம் ஆண்டு ராகிங்..!
பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு ராகிங்..!
  • Haha
  • Like
 • 63 replies

நில்மினியின்  மருத்துவ  ஆலோசனைகள்
தைரொய்ட்  குறைபாடும்  அதற்கான நிவர்த்திகளும் 

தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும் தேவையானது.மூளையில் உள்ள கபச்சுரப்பியின் TSH (ஹோர்மோன் ) உத்தரவுப்படி செயல்படும். சிலவேளைகளில்  TSH போதிய அளவு இருந்தாலும் தைரொய்ட் சுரப்பி தேவையான அளவு தைரொக்ஸினை சுரக்காது. இதற்கு முக்கிய காரணம் மரபு அணு சம்பந்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி செயல்பாடாகும். Autoimmune என்று சொல்லப்படும், எமது வெண்குருதி  கலங்கள் தமக்கு கொடுக்கப்பட்ட நோய்  எதிர்ப்பு வேலையை செய்யாமல் எமது உடலின் பல பாகங்களையும் தாக்கும். அந்த வழியில் தைரொய்ட் சுரப்பியையும் தாக்கும். அதனால் தைரொக்சின்  அளவு குறைந்து எமது உடல் செல்கள் சில முக்கிய வேலைகளை செய்ய முடியாமல் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஒவ்வொருவருக்கும் இந்த விளைவுகள் மாறுபடும். பொதுவாக சோர்வு, நித்திரைஇன்மை, மனச்சோர்வு, உடல் பருமனடைதல், தோலில் சொறிவு , முடி உதிர்வு, குரல் மாற்றம் இவைகள் பொதுவானவை. சிலருக்கு ஐயோடின் குறைபாடால் சுரப்பி பெருக்கும் . ஐயோடின் supplement, சத்திர சிகிச்சை மூலம் இதனை குணப்படுத்தலாம்.தைரொக்சின் எமது உடலை அடிக்கடி திருத்தி நல்ல நிலையில் வைத்திருக்கும். உணவை எரித்து சக்தியும் வெப்பத்தையும் தரும். இதனால் தான் தைரொக்சின் குறைபாட்டால் குளிர் உணர்வு, உடல் பருமனாதல் , சோர்வனவு ஏற்படுகிறது. கொலெஸ்டெரோல் அளவும் கூடும். நன்றாக உடல் பயிற்சி செய்து, புரத சத்து அதிகமான உணவுகளை உண்டு selenium நிறைந்த உணவுகளான sardine, tuna, Brazil nuts , முட்டை,  எல்லாவிதமான தானியங்கள்  மற்றும் zinc நிறைந்த உணவுகளான  நண்டு, கணவாய், றால், கோழி இறைச்சி , அன்னாசி பழம் , கல்லுப்பு , ஹிமாலயன் உப்பு, மீன் சாப்பிட்டு வந்தால் தைரொய்ட் சுரப்பிகள் மேலும் பழுதடையாமல் பாதுகாக்கலாம். ஆனால் கட்டாயம் மருத்துவ உதவி பெற்று Leveothyroxine  வகையான மருந்தை ஒவ்வொரு  நாள் அதிகாலையில் எடுக்க வேண்டும். இது மற்ற மருந்துகளுடன் ஒத்துபோகக்கூடியது. அதனால் சேர்த்து எடுக்கலாம்.

இது மரபு வழி சம்பந்தப்பட்டது. உங்கள் குடும்ப உறுப்பினருக்கு இருந்தால் உங்களுக்கும் வர சந்தர்ப்பம் அதிகம். எனவே சோர்வு, உடல் பருமனடைதல், மனச்சோர்வு , முடி உதிர்தல் இருந்தால் கட்டாயம் ரத்த பரிசோதனை செய்து பாருங்கள். மருந்து ஒவ்வொரு நாளும் அதிகாலையில் தவறாமல் எடுக்க வேண்டும். முக்கியமாக அன்னாசி, நண்டு, கணவாய் , றால், கோழி , அவரைக்காய் , nuts , முட்டை , tuna  சாப்பாட்டில் சேர்க்கவும். மரக்கறி மட்டும் உண்பவர்கள் நிறைய தானியம், Brazil nut சேர்த்து சாப்பிடவும்
  • Thanks
  • Like
 • 385 replies

ஊரடங்கின் பசிப்பிணியை எதிர்க்கும் களப்போராளிகள்
அன்பு நண்பர்களே 
ஏற்கனவே குறிப்பிட்டது போல , கடந்த மாதம் முதல் எனது நண்பன் மற்றும் அவருடன் பணியாற்றும் பணியாளர்களை உள்ளடக்கிய தன்னார்வ குழுவுடன் இணைந்து வெற்றிகரமாக உலர் உணவுப்பொதிகளை விநியோகித்து வருகிறோம், இவர்கள் அனைவரும் நீர்ப்பாசனத்துறையை சார்ந்தவர்கள் ,இவர்களுடன் நீர்ப்பாசனத்துறை பொறியாளரும் எங்களுக்கு முற்றுமுழுதான ஆதரவையும் உதவியையும் அனுசரணையையும் வழங்குகின்றார் , இவர்களின் நல்  மனதால் எங்களுக்கு ஊரடங்கிட்கு நடுவிலும் முழு வீச்சுடன் பொதிகளை விநியோகம் செய்ய முடிகிறது. 
எங்களது செயற்பாடு தொடர்பான சில புகைப்படங்களை கீழே இணைத்துள்ளேன், 
மேலதிக செயற்பாடுகளும் தொடர்ந்து இங்கே இணைக்கப்படும்.
ஏற்கனவே யாழ் கள உறவுகள் இருவர் அவர்களது ஆதரவு கரத்தை எமக்கு நீட்டியுள்ளனர் (நிழலி மற்றும் உடையார் )
இவற்றில் உடையாரின் பணஉதவி ஏற்கனவே கிடைக்கப்பட்டு குழுவிற்கு பரிமாற்றப்பட்டுவிட்டது.
இந்த உறவுகளுக்கு பயனாளிகள்  சார்பிலும் குழுவின் சார்பிலும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

 
எங்களது குழு 

பொதி விநியோகிப்பின் போது 


 

 இவை நான் தத்தெடுத்திருக்கும் இருபது குடும்பங்களுக்கான பொதிகள் 

வெற்றிகரமாக இரண்டாவது மாத விநியோகமும் நடந்து முடிந்து விட்டது 

 
  • Thanks
  • Like
 • 21 replies

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.