Our Picks

Top content from across the community, hand-picked by us.

விசித்திரமான கனவொன்று இடையிலே குழம்பி அதிகாலை அலாரச்சத்தம்  கேட்டுத் திடுக்கென விழித்தெழுந்தான் வசந்தன். சில வினாடிகள் மட்டுமே நீடித்த அக்கனவை அவனால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை; காட்சிகளும் நினைவில் இல்லை. மிகவும் பிரயத்தனப்பட்டு மீண்டும், மீண்டும் யோசித்து என்ன கனவு என்று யூகிக்க முனைந்தான். எனினும் 'தாயகத்தில், அவனது ஊரில் அவனுக்கு ஏதோ ஒரு புதையல் ஒன்று எதிர்பாராத விதமாகக் கிடைக்கப்போகிறது' என்பதை மட்டும் அந்தக் கனவில் கண்டதாக உணர முடிந்தது. 

இவ்வாறு அவன் சிந்தித்துக்கொண்டிருக்கையில், குளியலை முடித்துவிட்டு அவனிடம் படுக்கையறைக்கு வந்த அவன் மனைவி கல்யாணி "என்னப்பா விடிய எழும்பினதும் கையுமா யோசிச்சுக்கொண்டு இருக்கிறீங்கள்? நேரம் 6:10 ஆச்சு. வேலைக்குப் பிந்தப் போகுது. ஓடிப்போய் குளியுங்கோ" என்றாள். உடனே அவளுக்குத் தான் கண்ட கனவை விபரித்தவனை "ஊர்ல  உங்களுக்குப் புதையலாம். முப்பாட்டன், பேர்த்தி காலக் கதை போல எல்லா இருக்கு" என்று பரிகாசித்தாள் கல்யாணி. "சும்மா பகிடி விடாதையும். அதிகாலைக் கனவு பலிக்கும் என்று சொல்லுவாங்கள். மற்றவங்களுக்குப் பலித்திருக்கோ, இல்லையோ எனக்கு நிறையப் பலித்திருக்கு; இங்க அவுஸ்திரேலியாவில சிட்னிக்கு வருவேன் எண்டும், எனக்கு அடுத்த நாள் வேலை கிடைக்கும் என்றும் இப்படி நிறையக் கனவுகள் பலித்திருக்கு" என்று சொன்னவனை, "என்னைத் தவிர மற்றதெல்லாம் உங்களுக்குக் கனவில வரும்" என்று இடைமறித்துச் சிரித்தாள் கல்யாணி.

"இல்லை கல்யாணி, இந்தக் கனவும் அதிகாலையில் கண்ட கனவு; நிச்சயமாக இதில ஏதோ செய்தி இருக்கு. புதையல் எண்டது பழங்கால விஷயம் தான். ஆனாலும் இந்தக் கனவை நான் நம்புறன். முந்தி பிரச்சினை காலத்தில எங்கட பாட்டி பின் காணிக்க புதைச்சு வச்ச நகையா இருக்குமோ?, அல்லது ஏதும் ஏன்ர அப்பா முந்தி யாருக்கோ கொடுத்த கடன் பணம் திரும்ப அவர் இல்லாத காலத்தில இப்ப எனக்கு கிடைக்கப் போகுதோ?, வேறு ஏதும் சொத்தோ?. இப்படி பல மாதிரி பல அர்த்தம் எடுக்கலாம் தானே?" என்றவனை "ஊர்ல ஒண்டும் வேண்டாம் எண்டு தானே உதறித்தள்ளிவிட்டு என்னையும் கூட்டிக்கொண்டு வந்தனீங்கள். 1999இல இங்க வந்ததுக்கு திரும்ப ஊருக்குப் போகவே இல்ல. இப்போ ஊரோட பெரிசா ஒரு தொடர்பும் இல்லை, உங்கட சித்தியைத் தவிர. சரி, அதைப் பற்றி பின்னேரம் பேசலாம். இப்போ போய்க் குளித்து வேலைக்கு வெளிக்கிடுங்
 
  • Thanks
 • 58 replies

மூச்சுக்காற்றை நிறுத்தும் உலகிலேயே பெரிய விமானம் - ஏர்பஸ் 380 !
மூச்சுக்காற்றை நிறுத்தும் உலகிலேயே பெரிய விமானம் - ஏர்பஸ் 380 !

 


 

உலகிலேயே மிகப் பெரிய விமானம் என்ற பெருமையுடன் உள்ள "ஏர்பஸ் ஏ-380" தனது கடைசி மூச்சை விடவுள்ளது. அதாவது இந்த விமானத்தின் உற்பத்தியை ஏர்பஸ் நிறுவனம் நிறுத்தவுள்ளதாம்.

மிகப் பெரிய ராட்சத விமானம் என்பதாலும், விலை மிக மிக அதிகம் என்பதாலும் இதை வாங்க யாரும் வருவதில்லை. இதனால்தான் உற்பத்தியை நிறுத்தப் போகிறதாம் ஏர்பஸ். 10 வருடங்களுக்கு முன்புதான் இந்த சூப்பர்ஜம்போ விமானத்தை அறிமுகப்படுத்தியது ஏர்பஸ். 500 பேருக்கும் மேல் இந்த விமானத்தில் பயணிக்க முடியும். இந்த விமானத்தை அதிகம் பயன்படுத்துவது எமிரேட்ஸ் நிறுவனம்தான். அந்த நிறுவனம் தான் கொடுத்திருந்த ஆர்டரை ரத்து செய்து விட்டதால் ஏர்பஸ் நிறுவனம் இதன் உற்பத்தியை நிறுத்தும் முடிவுக்கு வந்து விட்டது.

3500 பேருக்கு வேலை போகிறது

ஏர்பஸ் நிறுவனத்தின் இந்த முடிவால் கிட்டத்தட்ட 3500 பேருக்கு வேலை போகிறது. சூப்பர் ஜம்போ விமானத்தால் ஏர் பஸ் நிறுவனம் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 764 மில்லியன் டாலர் அளவுக்கு பெரும் நஷ்டத்தை சந்தித்தது என்பது நினைவிருக்கலாம்.

போயிங் நிறுவனம் குஷி

 ஏர்பஸ் நிறுவனத்தின் இந்த முடிவால் போட்டியாளரான போயிங் நிறுவனம் குஷியாகியுள்ளதாம். தனது தயாரிப்புகளுக்கு நிலவி வந்த பெரிய சவால் விடை பெறுவதை போயிங் நிறுவனம் உள்ளூர மகிழ்ச்சியுடன் பார்க்கும் என்று தெரிகிறது. ஏர்பஸ் நிறுவன முடிவால் பிரான்சின் டல்ஹவுஸ் நகரில் உள்ள அதன் தலைமையகம் சோகமாக காணப்படுகிறதாம்.

சூப்பர் ஜம்போ வருகை

அதேசமயம், எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கும் கூட இந்த முடிவு பெரும் பின்னடைவு என்று சொல்கிறார்கள். காரணம் இந்த சூப்பர் ஜம்போ விமானம் வந்த பிறகுதான் அந்த நிறுவனத்தின் பொலிவு மேலும் கூடிப் போனது. துபாய் விமான நிலையத்திற்கும் இந்த சூப்பர் ஜம்போ விமானத்தின் வருகையால் மவுசு கூடிப் போனது.

ஒப்பந்தம் ரத்து

ஆரம்பத்தில் ஏர்பஸ் நிறுவனத்துடன் எமிரேட்ஸ் நிறுவனம் 23.4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான ஒப்பந்தம் போட்டிருந்தது. புதிய ஏ380 மற்றும் ஏ350 சூப்பர் ஜம்போ விமானங்களையும், சிறிய ரக ஏ330 விமானங்களையும் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் இது. இதைத்தான் தற்போது ரத்து செய்துள்ளது எமிரேட்ஸ்.

இதனால்தான் ஏர்பஸ், தனது சூப்பர் ஜம்போ உற்பத்தியையே நிறுத்தும் முடிவுக்கு வந்துள்ளது..😢

தமிழ் குட்ரிட்டர்ன்ஸ்

 


 

 

 

டிஸ்கி:

நான் சில தடவை ஏர்பஸ் - 380 யில் துபாயிலிருந்து சிங்கப்பூருக்கும், இங்கிலாந்திற்கும் பிஸினஸ் வகுப்பில் பயணம் செய்துளேன்..

ஒரே வரியில் சொல்லலாமெனில், இதில் பயணம் செய்த அனுபவங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதவை..!

கனிவான உபசரிப்பு, ஒவ்வொரு இருக்கைக்கும் தனியாக சிறிய வளைவு தடுப்புகள், சிறிய கூல் பார், பெரிய டிவி திரை, முழுவதும் காலை நீட்டிப்படுக்க படுக்கையாக மாறும் இருக்கை, போரடித்தால் தனியாக செயல்படும் உணவகத்திற்கு சென்று அரட்டையடித்து சாப்பிட இருக்கைகள், விலையுயர்ந்த மதுகளுடன் பார் வசதிகள்... என பல்வேறு சிறப்பம்சங்கள்..

மிக முக்கியமாக விமானத்தினுள்ளே சத்தம் மிகக் குறைவு..

அவசியம் ஒருமுறை இதில் பயணித்துப் பாருங்கள்..!  

 


 
  • Haha
 • 8 replies

இந்தத் தென்னைகளே சாட்சி.. பல வீடுகளுக்கு குண்டுகள் வைத்து தகர்த்தவன் யார் என்பதற்கு. 


 

அயராத மக்கள் இன்னும் ஊரில் இருக்கிறார்கள். புகையிலை தோட்டம்.


தொண்டமனாறுக்கு குறுக்கே பாலம். செல்வச்சந்நிதி.


ஈஸ்டாமில் ஒரு குட்டி எஸ்ரேட் ஏஜென்ட் வைச்சிருந்து  எப்படியோ செல்வம் திரட்டி.. வேலணை சாட்டியில் உல்லாச விடுதி நடத்தும் ரில்கோ. 


செங்கரங்கள் நீட்டி.. பனைக் கறுப்பிகள் கூந்தல் தடவி..  ஒளித்து விளையாடும்.. சூரியன். வேலணை சாட்டி.. அந்திசாயும் வேளை. 


யாழ்ப்பாண கடைசி தமிழ் மன்னனின் சமாதி என்று சொல்லப்படுகிறது. சுற்றி நிற்பதை யமுனா ஆறு என்கிறார்கள்.


தமிழரின் வாழ்வு போல் சிதைந்து நிற்கும் சங்கிலியனின் சரித்திரம். விட்டால்.. இன்னும் கொஞ்ச நாளில்.. புத்தர் விகாரையின் சாயல் என்று இடித்துப் புத்தர் விகாரை அமைந்தாலும் வியப்பில்லை. 


செம்பருத்தியின் அழகு. செவ்வரத்தை. 


தலைதொலைத்தது.. தமிழர்கள் மட்டுமல்ல.. தமிழர் நிலம் வாழ் பனைகளும் தென்னைகளுமே.


நல்லூரான் அன்றும் இன்றும் என்றும் பொலிவோடு.  பணக்காரக் கந்தனிடம் அர்ச்சனை ரிக்கெட் 1 ரூபா.


அன்னதானக் கந்தன்.. கதிர்காமத்தின் காபன் கொப்பி..செல்வச்சந்நிதியான்.


பறவைகளின் உல்லாச புரி. பண்ணை.


இன்னும் யாழ் நகரை காத்து நிற்கும்.. கண்டல் தாவரங்கள்.


பண்ணையில் மீன்பிடி. மரபுவழியோ...?! 


வடக்கில் மட்டுமல்ல.. மத்தியிலும் மாஓயாவை அண்டி மணல் அள்ளும் அரசியல் ஆசாமிகள்.


அமைதியாக ஓடும் மாஒயா. 


வெளிநாடுகளில்.. பல பத்து பவுன்கள் செலவழிச்சு வளர்க்கும் தாவரங்கள்.. மத்திய இலங்கையில்.. காடுபத்தி. 


மூங்கில் உரசல்.


மத்திய இலங்கை. பச்சைப்பசேள் என்று. இவ்வளவு வளமிருக்க எதுக்கு தமிழரின் நிலத்தை பிடிக்கனும் என்ற பேராசை. 


பலாக் காடு.


தானே வளரும் வெற்றில்லை - மத்திய இலங்கை. 


அழகிய.. கண்டல் தாவரங்களை நிறைந்த.. புங்குடுதீவு - நயினாதீவு நெடும் வீதி... உல்லாசப் பயணிகளின்.. பிளாஸ்ரிக் குப்பைக்கூடம். 


நயினாதீவை இன்னும் தமிழர்களதும் என்றாக்கி நிற்கும் அம்மாளாச்சி. 


அழகிய பண்ணைக் கடற்கரை. செயற்கையாக ஒதுக்கிய பணங்களும்.. வசதிகளும்.. பராமரிப்பற்று.. உடைந்து போய். படகுச் சவாரி கூட நின்று போய். ஆனால்.. இயற்கையான வளங்கள் மட்டும் இன்னும் கடற்கரையை அழகுபடுத்திய படி. தூரத்தே கடல்நடுவே உல்லாச விடுதி. அமைத்தோர் யாரா இருக்கும்..??!
  • Like
 • 31 replies

மனிதர் ஒவ்வொருவருக்கும்  ஓர் அடையாளம் உண்டு; அந்த அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமே நமது தனித்துவமாக உலகிற்கு தோன்றுகிறது. நமது அடையாளத்தில் மிதமிஞ்சி கவனம் செலுத்தும்போது அங்கே ஆணவம் ஊற்றெடுக்கிறது. அப்போது தான் மற்றவர்களின் தனித்துவத்தை அலட்சியம் செய்யும் மனப்பான்மை உருவாகிறது.


சக மனிதர் யாவரினதும் அடையாளத்தை நாம் அடையாளம் கண்டு புரிந்துகொள்ளும் தருணம் அவர்களை மதிக்கவும், அங்கீகரிக்கவும் ஏதுவாகின்றது; அவர்களின் 'குறைகள் என்று ஏனையோரால் சொல்லப்படுபவை' குறைகளாகத் தோன்றாது; முழுமையான மனிதராக அவர்கள் காட்சியளிப்பர். எனினும் அவர்கள் மீது பொறாமை ஏற்படாது. 
மற்றவர்களின் அடையாளத்தை புரிந்து கொள்ளும்/புரிய முயற்சிக்கும் மனது அன்பின் ஊற்றாகிறது. ஒருவர் தனது அடையாளம் எது என்று தெரியாமல் தவிக்கையில், அதைக் கண்டறிய வழி காட்டுபவர் நல்ல ஆசானாகிறார்.

இவ்வாறாக ஒருவரின் அடையாளத்தை மதித்தலும், அதற்கான வழிகாட்டுதலும் ஆகிய குணங்கள் ஒரு சமூகத்தில் பரவும்போது அச்சமூகம் ஆரோக்கியமான, நல்லிணக்கமான சமூகமாக வளம்பெறும். அன்பெனும் இன்ப ஊற்று தனி ஒருவரின் தாகத்தை மட்டுமல்ல ஒரு பெரிய சமூகத்தின் தாகத்தையும் தணிக்கவல்லது. எதற்கான தாகத்தை? ஒவ்வொருவரினதும் தனித்துவம் / அடையாளம் புரிந்து கொள்ளப்படாதா என்ற தாகத்தைத் தான். 

இவ்வாறு ஏனையோரின் அடையாளங்களை புரிந்து கொள்ளும் தன்மையானது குடும்பம், நிறுவனம், வகுப்பறை உள்ளடங்கலாக பல்வேறு வகையான சூழல்களில் பயனுள்ளதாக அமையும். இது இலகுவான ஒரு பண்பு அல்ல; சவால்கள் வரலாம். எனினும், இறுதியில் நமக்கும், நம்முடன் பழகுவோர்க்கும் இடையான உறவை மேலும் மேன்படுத்த உதவும். ☺️
  • Like
 • 27 replies

1988 ஆடி மாதம் சனிக்கிழமை.
வேகமாக துவிச்சக்கரவண்டியில் வந்த சங்கரை மறித்தான் கோபால். 
 
என்ன மச்சான் கிளாசுக்காப் போகிறாய்?

ஓமோம் சோதியற்ற பிஸிக்ஸ். உமக்கு ? 

எனக்கு பொருளியல் கிருஸ்ணானந்தான் ஆசிரியரின் கிளாஸ். 

அங்க பார் ஆமிக்கார்கள், எல்லோரையும் மறிக்கிறாங்கள். இன்றைக்கு கிளாசுக்கு போனபாடுதான்.

சங்கர் க.போ.த உயர்தரம் கணிதபிரிவில் கல்வி கற்கிறான். பொறியிலாளராக வேண்டும் என்ற விருப்பம். கோபால் யாழ்மத்திய கல்லூரியில் வர்த்தகதுறையில் உயர்தரம் படித்துக்கொண்டிருக்கிறான் .  நன்றாகப் படித்து பல்கலைக்கழகம் சென்று கற்று தனது சகோதரிகளை கரைசேர்க்கவேண்டும் என்று விரும்பினான். கோபாலின் அப்பா ஒரு சட்டத்தரணி. பலருக்கு பல்வேறு விதமாக உதவும் எண்ணம் கொண்டவர். தகப்பனைப்போல கோபாலும் சமுகத்தின் மீது பற்றுள்ளவன். எல்லோருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். கோபாலுக்கு ஈரோஸ் இயக்கத்தில் பல நண்பர்கள் இருந்தார்கள். அவர்களுடன் அடிக்கடி திரிவதுண்டு.

மல்லாகச் சந்தியில் இருந்து சுன்னாகம் போகும் வழியில் வலதுபக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் உள்ள மரத்தின் கீழ் பலர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். சுன்னாகச் சந்தையில் மரக்கறி வாங்கி வந்தவர்கள், தனியார் கல்லூரிகளில் கல்வி கற்கும் மாணவர்கள் உட்பட வயது வேறுபாடின்றி ஆண்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு காவலாக இந்திய இராணுவத்தின் சீக்கியர்கள் துப்பாக்கி ஏந்தியவண்ணம் இருந்தார்கள். இராணுவத்துக்கு வழிகாட்டியாக இருந்த ஈபிஆர் எல் எவ் அமைப்பினர், தடுத்து வைத்திருப்பவர்களை விசாரித்துக் கொண்டிருந்தார்கள். சங்கரின் பாடசாலை நண்பர் சிவனேசனை கறுத்த மெல்லிய சுருள்முடியுடன் இருந்த இளைஞன் ஒருவன் விசாரித்துக் கொண்டிருந்தான். 

எந்த ஊர்? 
 
குப்பிளான்.  

  • Like
 • 13 replies

திருமண உறவு - எப்பாடு பட்டாவது தக்கவைக்கப்பட வேண்டியதொன்றா ?

இதுபற்றி நாம் அதிகம் பேசுவதில்லை.

 கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் என்று தமது கழுத்தை நீட்டிய ஆணுக்கே தன் வாழ்க்கை முழுதையும், சாகும்வரை அர்ப்பணித்துவிட்டுச் சாகவேண்டும் என்கிற பெண்களின் நிலையைச் சித்தரிக்க, அவளின் அவல நிலையை எடுத்துரைக்கப்  பாவிக்கப்பட்டு வரும் ஒரு சொற்பதம்.  திருமண உறவென்பது, எக்காலகட்டத்திலும், எந்தவிலையைக் கொடுத்தாயினும் காப்பற்றப்படவேண்டும் என்கிற அழுத்தத்தம் பெண்களின் மீது திணிக்கப்பட்டுள்ளதை ஆமோதிக்கின்ற, நியாயப்படுத்துகின்ற ஒரு சொற்பதமாக இது பாவிக்கப்பட்டு வருகிறது. இயல்பாகவே ஆணாதிக்கச் சிந்தனையில் உலவும் எமது சமூகம், பெண்கள்மீது மிக இலகுவாக இத்திணிப்பை மேற்கொண்டுவிட்டு, குடும்பத்தை தொடர்ந்தும் ஒரு கூரையின்கீழ் வைத்திருக்கும் மிகப்பெரிய பொறுப்பையும் சுமத்திவிடுகிறது.

சரி, இதன் மறுபக்கம் என்ன? பெண்களைப்போன்றே, ஆண்களுக்கும் தமது திருமண உறவு நிலைத்திருக்கவேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறதா? அவ்வாறு விருப்பப்படாத வாழ்க்கையொன்றில் ஆண்களை தொடர்ந்தும் வைத்திருக்க அழுத்தம் கொடுக்கும் காரணிகள் என்ன? உண்மையாகவே இக்காரணிகள் செல்வாக்குச் செலுத்தும் அளவிற்கு ஆணின் வாழ்க்கை விட்டுக்கொடுக்கப்பட வேண்டுமா? 

  • Like
 • 5 replies

கடவுள் படைக்காத மனிதர்கள்! 

அமெரிக்காவில் ட்ரம்ப் ஜனாதிபதியாக வரும் முன்னர் சில ஆண்டுகள் முன்பிருந்தே அடிப்படை வாதக் கிறிஸ்தவர்களின் (evangelical Christians) கை கொஞ்சம் கொஞ்சமாக ஓங்க ஆரம்பித்து விட்டது. இவர்களின் பழமை வாதக் கொள்கைகளும் அக்கொள்கைகளை மதச் சார்பின்மையுடய அமெரிக்க சட்டத்தினுள் குறுக்கு வழிகளில் புகுத்தி மற்றவர்களின் நம்பிக்கைகளைத் தாங்கள் தீர்மானிக்கும் தீவிரமும் இவர்களை நான் "கிறிஸ்தவ தலிபான்கள்" என்று அழைக்கக் காரணங்கள். இந்தப் பழமை வாதக் கிறிஸ்தவர்களின் நீண்ட கால இலக்குகளில் ஒன்று டார்வினின் கூர்ப்புக் கோட்பாடு (theory of evolution). 1859 இல் சார்ள்ஸ் டார்வின் உயிரியல் உலகின் மிக முக்கியமான முன் மொழிதலான "உயிரினங்களின் கூர்ப்பு" எனும் தியரியை ஒரு நூலாக வெளியிட்டார். "கடவுளின் சாயலாக மனிதன் ஒரே நாளில் படைக்கப் பட்டான், அதன் பிறகு கடவுள் மனிதனுக்குப் பயன்படும் வகையில் மற்றைய உயிரினங்களைப் படைத்தார். இவையெல்லாம் ஏழே நாட்களில் நடந்து முடிந்தன" என்று பைபிள் கூறுகிறது. இந்த பைபிள் நம்பிக்கை மீது விழுந்த முதல் பாரிய அடியாக டார்வினின் கூர்ப்புக் கொள்கை இருந்தது. 

டார்வினின் கூர்ப்புக் கொள்கையை, வேறும் சில விஞ்ஞானக் கருது கோள்கள், அவதானங்களோடு இணைத்துப் பார்த்தால் பின்வரும் உயிர்களின் பயணச் சுவடு தெரிகிறது: ஒரு ஒற்றைக் கல உயிரினமாக ஆதிக் கடலில் உருவான முதல் உயிர், பல கலங்களாக மாறி, பின் முள்ளந்தண்டு உருவாகி, நுரையீரல் வளர்ந்த போது, தரையில் ஊர்வனவாக மாறியது. இந்த ஊர்வன பின்னர் குட்டி போட்டுப் பால் கொடுக்கும் நிலை கொண்ட பாலூட்டிகளை உருவாக்கின. இந்தப் பாலூட்டிகளில் சில மரத்தில் தொங்கி திரிந்து வாழ ஆரம்பித்த போது  மந்திகள் உருவாகின. மந்திகளில் சில தொப்பென்று தரையில் விழுந்து அரைவாசி நிமிர்ந்த நிலையில் ஆதிப் புல் வெளிகளில் அலைந்து திரிய ஆரம்பித்த வேளையில் ஆதி மனிதர்கள் உருவானார்கள். இந்தப் பயணச் சுவட்டின் இன்றைய உச்சம், ஹோமோ சேபியன்ஸ் (Homo sapiens) எனப்படும் நாங்களாக இருக்கிறோம்.

ஒரு அறிவியல் கொள்கை மத நம்பிக்கையை அச்சுறுத்தும் போது நிகழும் எல்லாம், டார்வினின் கூர்ப்பியலுக்கும் நிகழ்ந்தன. ஆனால், கூர்ப்பு நிகழ்ந்திருப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்று நிரூபிக்கும்  சான்றுகள் கடந்த 150 ஆண்டுகளில் ஏராளமாக வெளிவந்து விட்டன. ..
 • 13 replies

திவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம்......!


                                                                                                                                                                   சிவமயம்.

 

                                                                                                                                          திவ்ய தேசத்தில்  திருத்தல தரிசனம்.

                                                                                 

                                                                                                           

 

                                                                                                                   "வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்"

 

அன்புறவுகளுக்கு ,

                                        நான் கடந்த ஆவணி மாதம் மனைவி மற்றும் மகனுடன் ஊருக்கு போய் இருந்தேன். அதை ஒரு பயணம் என்று சொல்வதைவிட கோவில் சுற்றுலா என்பது பொருந்தும். ஆவணி மாதத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கும் பெரும்பாலான ஆலயங்களில்  உற்சவங்கள் நடைபெறும்.ஊர் முழுவதும் ஒரே கோலாகலமாக இருக்கும். கோவில்கள் எல்லாம் புதிதாக வர்ணங்கள் பூசி மிக அழகாக இருந்தன.நானும் பல வருடங்களின் பின் அங்கு சென்றதால் ஒருவித பரவச நிலையில் இருந்தேன் . அந்த நெகிழ்ச்சியான அனுபவங்களை யாழ் இணையத்தின் 21 வது அகவையில்  உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.

நானும் மனைவியும் இரு மகன்களும்தான் செல்வதாக ஏற்பாடு. ஆனால் கடைசி நேரத்தில் சின்ன மகனுக்கு (கவனிக்கவும் கடைசி என்று குறிப்பிடவில்லை.  நாளை நடப்பதை யார் அறிவார்). கடைசி நேரத்தில் அவரது படிப்பு சம்பந்தமானதும், இஷ்டமானதுமான பொறியியலாளர் வேலை கிடைத்தது. அதனால் அவர் வரவில்லை. பயணசீட்டையும் ரத்து செய்ய வேண்டியதாய் போய் விட்டது. அவர் இங்கு பிறந்தவர். ஊரைப் பார்க்க மிகவும் ஆவலுடன் இருந்தார்.கொஞ்சம் பிசகி விட்டது.

யாத்திரை தொடரும்.......!
  • Like
 • 92 replies

"லண்டனிலிருந்து சுதா வந்திருக்கிறாள் வீ க்கென்ட்  பின்னேரம்  வாறீயா போய் சந்திப்போம்"

"யார் மச்சான் சுதா"

"டேய் டேய் சும்மா பம்மாத்து விடாத முந்தி நீ சுழற்றிகொண்டு திரிஞ்சாய் கலா,   அவளோட போவள் 'இரட்டை பின்னல்'  அவளைத்தான் சொல்லுறன்"

"கலா ...."

" டேய் நீ எனக்கு விசரை கிளப்பாதை"

"யாரப்பா போனில் சுதா,கலா என்று  முழுசிக்கொண்டிருக்கிறீயள்"

 

"மச்சி வைடா மனிசி வாராள் பிறகு ,நான் எடுக்கிறன்"

"குகன் எடுத்தவன் யாரோ கலாவின்ட பிரண்டாம் சுதா லண்டனிலிருந்து வ‌ந்திருக்கிறாளாம், மீட் பண்ண வரட்டாம்."

"போய் மீட் பண்ணுங்கோவன்"

"மீட் பண்ணலாம் , சுதா யார் என்று யோசிக்கிறன்"

"என்ன உங்களுக்கு டிமஞ்சியா கிமஞ்சியா எதாவது வந்திடுதே"

" ஏனப்பா அப்படி கேட்கிறீர்"

"பின்ன என்ன கலியாணம் கட்டின புதிசில ஒரு நாள் நித்திரையில் புலம்பினீங்கள் 'சுதா பிளீஸ் கலாவிட்ட கேட்டு சொல்லும் என்று'

அதுகளா தான் இருக்கும்"

"ஓமடியாத்த ஞாபக‌ம் வருது நீர் இன்னும் மறக்கவில்லை,அப்ப போய் மீட் பண்ணிவிட்டு வாரன் இரும் குகனுக்கு சொல்லுவம் சனிக்கிழமை சந்திக்க வாரன் என்று"

"மச்சி நான் வாரன் என்ன கொண்டு போவம்? போத்தலை வாங்கி கொண்டு போவமோ"

"இல்லை மச்சி தனியா வந்திருக்கிறாள்"

"அப்ப நான் கட்டாயம் வாரன்"

 

"சனிக்கிழமை உமக்கு எதாவது புராகிராம் இருக்கோ டாலிங்"

" இல்லை நானும் உங்களாட‌ வாரது என்றால் வாரன்"

"அவள் தனியா வ‌ந்திருக்கிறாளாம் ,குகனும் தனியத்தான் வாரானாம்"

"யாருடன் வந்து நிற்கிறாளாம்"

"அவளின்ட அக்கா சிட்னியில் இருக்கிறாளாம் அங்க தான்"

"பின்ன சரி நீங்கள் அவளை போய் சந்தியுங்கோ நான் என்ட அக்கா வீட்டை போய்யிட்டு வாரன்"

சனிக்கிழமை எழுந்தவுடன் மனைவியடமும் சொல்லாமல் சலூனுக்கு சென்றான்.

"ஐயா வாங்கோ ,வழமையா வெட்டுறமாதிரி  நல்லா ஒட்ட‌ வெட்டிவிடவோ"

"சீ சீ மீடியத்தில வெட்டிவிடும் தம்பி"

வெட்டி முடிந்தவன் கண்ணாடியை பின்னுக்கு வைத்து

"இந்த வெட்டு சரியோ"

"அளவு சரி ,ஆனால் நரை நல்லாய் தெரியுது போல கிடக்கு"

"டை அடிச்சு விடட்டே"

"அடிச்சுவிடடா தம்பி, இந்த மீசையையும் டிரிம்ப் பண்ணி அதுக்கும் உந்த சாயத்தை பூசி விடு"

"என்ன ஐயா வழமையா உதுகளை நீங்கள் செய்யிற இல்லை என்ன விசேசம்"

"அடுத்த கிழமை கலியாணவீட்டை போகவேணும் அதுதான்"

"இப்ப எங்கன்ட ஆட்களின் கலியாண சீசன் முடிஞ்சுதே ஐயா ....
  • Like
 • 33 replies

பழைய நினைப்புடா பேராண்டி..!
சென்னை வீட்டில், பரண் மீது துழாவியபோது, கல்லூரியில் படிக்கும் காலத்தில்(1976) விரும்பிக் கேட்ட "டினா சார்ல்ஸ்" பாடிய இந்தப் பாடல் காசட் கிட்டியது..

'பனாசோனிக்' காசட் ப்ளேயரில் சுழலவிட்டேன்..

அதன் பிரதிபலிப்பு, கீழே ஒளியாக..

 

 
  • Like
 • 1 reply

கள தோழர்கள் தங்கள் நாடுகளில் , தாயகத்தில் வீதி உலா செல்லும் போதும்  அல்லது தாங்கள் ரசித்த/ருசித்த உணவு அல்லது சிற்றுண்டி தயாரிக்கும் காட்சிகளை , படங்களை இணைக்க கனிவுடன் வேண்டுகிறேன்

டிஸ்கி :

இது தேவையான பொருட்கள் , கால் கிலோ உளுந்து.. 2 ஸ்பூன் கடுகு போன்றது அல்ல ..

எ.கா

இது இரண்டாம் நிலை செய்முறை..

யாழ் தேத்தண்ணீர் கடை ரீ மாஸ்ரர் லாவகம்  ..

புரோட்டா மாஸ்ரர் ஸ்ரைல் ..

.. அல்லது

இதை போல தாங்கள் ரசித்தது / ருசித்தது ..

http://www.kadalpayanangal.com/2017/01/blog-post_30.html?m=1

நன்றி !
  • Haha
 • 432 replies

அடுத்து என்ன நடக்கிறது என்று கண்காணிப்போம் – ஐ.நா

சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்று கண்காணிக்கப் போவதாக, ஐ.நா தெரிவித்துள்ளது.

நியூயோர்க்கில் சற்று முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக்கிடம், சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது குறித்தும், நெருக்கடிகள் மீண்டும் மோசமடைவது குறித்தும் இதுதொடர்பாக ஐ.நாவின் நிலைப்பாடு தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “சிறிலங்காவின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக எமக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

வழக்கமான அரசியலமைப்பு நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று நாங்கள் நிச்சயம் நம்புகிறோம். அதற்குப் பின்னர் என்ன நடக்கிறது என்று நாங்கள் கண்காணிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/11/10/news/34218

 
  • Like
 • 3 replies

மாவீரர்கள்.
மாவீரர்கள் எங்கள் மனங்களில் நிறைந்தவர்கள் எங்கள் வாழ்வோடு இணைந்தவர்கள் வரலாற்றில் நிலைத்தவர்கள். என்றும் எங்கள் உயிர் மூச்சாய் இயங்கிக் கொண்டிருப்பவர்கள், இவர்களின் சுவாசக்காற்றில் நாம் உயிர்தெழுகிறோம் எங்கள் சுவாசங்கள் இவர்களின் உணர்வுகளை உள்வாங்கி நிமிர்கின்றது.  

1. நீலக் குறிஞ்சி

 

 

மதியம் அவள் கார்லிக் சிக்கன் சாப்பிட்டிருப்பாள் என்று தோன்றியது.

(தொடரும்)

By பா. ராகவன் 

http://www.dinamani.com/junction/yathi/2018/mar/19/1-நீலக்-குறிஞ்சி-2881855--2.html
  • Like

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் புது தந்திரம் அம்பலம்
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் புது தந்திரம்  அம்பலம் ..

 முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், ஏதாவது தொல்லை கொடுக்க வேண்டும் என்பதுதான் கேரள அரசின் ஒரே நோக்கமாக உள்ளது. அதற்கு சமீபத்திய உதாரணம் தான், உச்ச நீதிமன்றத்தில் அம்மாநில அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம்.புதிதாக கட்டிய இடுக்கி அணைக்கு போதிய நீர் செல்லாததால் மின்சார உற்பத்தி பாதிக்கப்படுவதை கண்டு எரிச்சல் அடைந்த கேரள அரசு, முல்லைப் பெரியாறு அணையை எப்படியாவது தகர்த்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டி திரிகிறது.

...

https://tamil.oneindia.com/news/tamilnadu/kerala-plays-dirty-politics-mullaiperiyar-dam-issue-328189.html
  • Like
 • 10 replies

ஒய் திஸ் கல்லி..வல்லிdi..?
ஒய் திஸ் கல்லி வல்லிdi..?

பல வருடங்களாக குப்பை கொட்டுவதால் சில அரபி வார்த்தைகள் புரிந்தாலும், பட்டான்களின் கலாச்சாரத்தில் இந்த தமிழ் உல்டா பாடலுடன் அவர்களின் ஆட்டம் சிரிப்பை வரவழைக்கிறது..

 

 
 • 0 replies

என்ன என்ன வார்த்தைகளோ..!
எப்பொழுது கேட்டலும் சலிக்காத பாடல்களில் முதன்மையானது, இந்தப் பாடல்..!
 
  • Like
 • 12 replies

மனிதநேயம் பேசும்
   மகாத்மாக்கள் இங்கு அதிகம்!
மதவெறியை பிரசவிக்கும்
   ஜாதிக்கட்சிகள் இங்கு ஏராளம்!
மக்களாட்சியைப் பேசும்
   மன்னராட்சிக் கட்சிகள் இங்கு ஏராளம்!
க‌வர்ச்சி காட்டி பணமீட்டும்
   கலர்ஃபுல் சேனல்கள் இங்கு ஏராளம்!

பெண்களைத் துர‌த்தும்
   நடுநிசி நாய்கள் இங்கு ஏராளம்!
அன்னையின் கருவறையில் நசுக்கப்படும்
   பெண் சிசுக்கள் இங்கு ஏராளம்!
பெற்றோரை முதியோர் இல்லம் சேர்க்கும்
    கார்ப்பரேட் காலர்கள் இங்கு அதிகம்!
ஏழையின் செந்நீரை உறிஞ்சும்
   இலட்சாதிபதிகள் இங்கு ஏராளம்!
இவைய‌னைத்தும் அழிய‌ வேண்டிய‌ அவலங்களே !!!  

 

 
 • 0 replies

IMAX என்றால் என்ன..?
'IMAX' என்றால் என்ன?

தமிழில் ஐமேக்ஸ் தொழில் நுட்பத்தின் சிறிய விளக்கம்..
 

 

 

சினிமாஸ் கோப்பில் திரைப் படங்களை பார்ப்பவர்கள் 70 எம்.எம் தியேட்டரில் படம் பார்க்கும்போது மிரண்டு போவார்கள்.

ஆனால், 70 எம்.எம்மில் படம் பார்த்தவர்களே ஐமேக்ஸ் திரையரங்கில் படம் பார்க்கும்போது பிரமாண்டத்தின் உச்சிக்கே சென்றுவிடுவார்கள்.

அப்படிப்பட்டதொரு பிரமிப்பை தரும் ஐமேக்ஸ் திரையரங்கம் (IMAX Theatre) இப்போது சென்னைக்கு வந்திருக்கிறது. இந்த ஐமேக்ஸ் தியேட்டரில் அப்படி என்ன விசேஷம்?

Image Maximum என்பதன் சுருக்கமே ஐமேக்ஸ். இது கனடாவைச் சேர்ந்த நிறுவனம். இது வரை உலகில் 66 நாடுகளில் மொத்தம் 1008 ஐமேக்ஸ் தியேட்டர்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன.

இந்த 'ஐமேக்ஸ்' தொழில்நுட்பம் ஏற்கனவே இந்தியாவின் பல பெரிய நகரங்களில் அறிமுகமாகி விட்டன. ஹைதராபாத்துக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது இந்த ஐமேக்ஸ்.

 சென்னையில் 'ஐமேக்ஸ்'!

சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் இந்த ஐமேக்ஸ் தியேட்டர் திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு டிக்கெட் விலை 360 ரூபாய். ஆன்லைனில் முன்பதிவு கட்டணம் 30 ரூபாய்.

சென்னை வடபழனியிலுள்ள ஃபோரம் மாலிலும் தற்பொழுது ஐமேக்ஸ் திரையரங்கம் செயல்பட துவங்கியுள்ளது

டிக்கெட் கட்டணம் அதிகம் என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை. மும்பையில் உள்ள ஐமேக்ஸ் தியேட்டரில் 480 மற்றும் 680 ரூபாயும், பெங்களூரில் 680 ரூபாயும் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

 இதுவே வெளிநாட்டில் உள்ள ஐமேக்ஸ் தியேட்டரில் ஆயிரம் ரூபாய்க்கு மேல்தான் கட்டணமாக உள்ளது.

 என்ன தான் இருக்கு?

 ஐமேக்ஸ் தியேட்டர்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப வசதிகள் மற்ற சாதாரண திரையரங்குகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கும்.

ஐமேக்ஸ் தியேட்டரில் மிக துல்லியமான படத்தை வழங்கும் வகையில் சிறந்த லென்ஸ்கள் பயன்படுத்தப்படும். இது சாதரண கருவியை விட துல்லியமான மற்றும் பெரிதான படத்தினை வழங்கும்.

ரசிகர்கள் அமரும் சீட்டுக்களில் எந்தப்பக்கம் உட்கார்ந்து பார்த்தாலும் படம் ஒரே மாதிரியாகத் தோன்றும் வண்ணத் திரைகள் அமைக்கப்பட்டிருக்கும். சவுண்டு சிஸ்டமும் துல்லியமாக ரசிகர்களுக்குக் கேட்கும்.

 ஐமேக்ஸில் 3D படம்!

 வழக்கமான திரையைவிட பல மடங்கு பெரிய திரையில் துல்லியமான ஒலி, ஒளியில் திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை அதுவும் பிரமாண்டமாக இருக்கும்.

அதுவும் குறிப்பாக அகன்ற திரை கொண்ட இந்த ஐமேக்ஸ் தியேட்டர்களில் 3D படம் வித்தியாசமான அனுபவத்தை பெறுவார்கள். 

ஐமேக்ஸ் தியேட்டர் அனுபவத்தை நேரடியாக அனுபவிக்க வேண்டுமெனில், ஒரு முறையாவது அந்த திரையரங்குக்கு போய்வருவதை தவிர வேறு வழியில்லை.

 

இதந்தி
  • Thanks
 • 2 replies

காதாலே பேசிப் பேசி கொல்லாதே..!
ஏறக்குறைய கடந்த ஆறு வருடங்களாக சாம்சுங் கேலக்சி S3 கைப்பேசியை பயன்படுத்தி வந்தேன்..
கடந்த மாதம் "அட.. இன்னாப்பா..! என்னையே பிடித்து தொங்குறாய், கொல்லாதே..!! ஆளை விடு..!!" என என்  சாம்சுங் கேலக்ஸி S3 திடீரென உயிரை விட்டுவிட்டது..
கைப்பேசி இல்லாமல், உடுக்கை இழந்தவன் கைபோல் ஆனேன்.. !

உடனே அருகிலுள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்று விசாரித்து பார்த்தபொழுது, எந்த கைப்பேசியும் அவ்வளவாக மனதைக் கவரவில்லை.

மனதிற்கு பிடித்த ஐபோன் 10 வாங்கலாமென்றால், நம் சொத்தையே எழுதிக் கேட்பார்கள் போலிருந்தது..!

வெறுப்புடன் கைப்பேசிகளின் பிரிவுகளிலிருந்து வெளியேறும் சமயம், தற்செயலாக ஹுவாய் (HUAWEI) கைப்பேசிகளின் பிரிவை கடந்தபோது இந்த HUAWEI P20 Pro கைப்பேசி கண்ணில் பட்டது..!

உடனே அதன் சிறப்பம்சங்களை விசாரித்து அறிந்துவிட்டு, ஐபோன் 10 ஐயும் ஹுவாய் P20 Pro வையும் அருகில் வைத்து ஒப்பிட்டேன்.. ஆப்பிள் போனில் உள்ள தரத்திற்கு மிக அதிக விலை கொடுத்து வாங்குவதை விட, ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டையாக, இந்த HUAWEI P20 Pro கைப்பேசி என்னை கவர்ந்தது.

40 மெகா பிக்சல் லைக்கா(Leica) காமிரா, 6 ஜிபி மெமரி, 128 ஜிபி சேமிப்பு, ஃபேஸ் டிடக்சன், புத்தம் புதிய ஆன்டிராயிட் 8.1 என சமீபத்திய அம்சங்கள்..

மிக முக்கியமாக அதன் ஜொலிக்கும் இரு வண்ண வடிவமைப்பு..

என்னை மிகவும் கவர்ந்ததால் HUAWEI P20 Pro கைப்பேசியை உடனே சுட்டுட்டேன்..!

அதாங்க.. வாங்கிவிட்டேன்..!! 

 
 • 1 reply

திருமண உறவில் வன்புணர்வு: பெண்களுக்கு என்ன தீர்வு?
திருமண உறவில் வன்புணர்வு: பெண்களுக்கு என்ன தீர்வு?

 கணவனுக்கு தேவைப்படும்போது எல்லாம் மனைவி பாலியல் உறவுக்கு தயாராக இருக்கவேண்டும் என்பது திருமணத்துக்கான அர்த்தம் அல்ல' - இதை கூறியிருப்பது டெல்லி உயர் நீதிமன்றம்.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி கீதா மிட்டல் மற்றும் சி. ஹரி ஷங்கர் அடங்கிய நீதிமன்ற அமர்வு இந்த கருத்தை தெரிவித்துள்ளது.

ரிட் ஃபவுண்டேஷன் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய அமைப்புகள் திருமண உறவில் வன்புணர்வு தொடர்பான சட்டம் வேண்டுமென டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்திருந்தன.

இந்த பொதுநலன் வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டதன் நோக்கம் பற்றி ரிட் ஃபவுண்டேஷனின் தலைவர் சித்ரா அவஸ்தியிடம் பிபிசி கேட்டறிந்தது.

.....
  • Like
 • 25 replies

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? 
-என்.கே.அஷோக்பரன்
இலங்கைத் தமிழ் அரசியல் வரலாற்றில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தோற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். 1948இல் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தோடு 'எதிர்வினை - ஒத்துழைப்பு' அடிப்படையில் ஆதரவளித்து, பின்னர் அரசாங்கத்தில் இணைந்துகொண்டார் ஜி.ஜி.பொன்னம்பலம். இது அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸில் பிளவை உருவாக்கக் காரணமாகியது. பல ஆய்வாளர்களும், கட்டுரையாளர்களும் இந்தப் பிளவுக்கு வௌ;வேறு வியாக்கியானங்கள் கூறினும், சில அம்சங்கள் இந்தப் பிளவில் முக்கியத்துவம் பெறுகிறது.
தொடரும்...
- See more at: http://www.tamilmirror.lk/152667#sthash.pPQmD2sZ.dpuf
 • 195 replies

ஒலித்துண்டுகளின் தொகுப்பு..
யாழ் களத்தில் என்னால் பதியப்படும் ஒலித்துண்டுகளின் (Sound Cloud Tracks) தொகுப்பை கீழேயுள்ள இணையத்தை சுட்டினால் கேட்டு ரசிக்கலாம், வேறெங்கும் இணைக்கலாம்...

 

 
 • 0 replies

சுப்ரபாதம் பாடல்
இன்று தொடங்கும் நவராத்திரி கொலுவிற்கு இந்த பாடல் உபயோகமாக இருக்குமென எண்ணுகிறேன்..

 

 
 • 0 replies

இளங்காற்று வீசுதே...!
இளங்காற்று வீசுதே... 
இப்பாடலை கேட்கும்போதெல்லாம் அரசுப்பணியின் ஆரம்ப காலங்களில், தேனி மாவட்டத்தில் கம்பம், போடி, வருசநாடு, உடங்கல், பெரியகுளம் போன்ற மலையடிவாரப்பகுதிகளில், இளங்காளையாய் சக அலுவலர்களுடன் திட்டப்பணிகளுக்காக சுற்றித் திரிந்த பசுமையான நினைவுகளை மீட்டுச் செல்லும்..

இப்பகுதிகளைப் பார்த்து இப்போ பல வருசமாச்சுது..

போடி, கம்பம் பள்ளத்தாக்குகளின் சுழல்காற்றின் வாசத்தில், இவ்விளங்காற்றும் தவழட்டும் இனிமையாய்..! 
 
 • 2 replies