Jump to content

Our Picks

Top content from across the community, hand-picked by us.

‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

கடந்த ஞாயிற்றுக்கிழமை, நிகர்நிலையில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில், பங்குகொள்ளக் கிடைத்தது. ‘பிளவுற்ற தமிழ்த் தேசத்தில் விடுதலைப் போராட்டம்’ என்ற தலைப்பில், நோர்வேயில் பிறந்து, வளர்ந்த மாணவியொருவர் தனது இளமானிப்பட்ட ஆய்வை முன்வைத்துப் பேசியிருந்தார்.   

அந்த மாணவி, நோர்வேயில் பிறந்து, வளர்ந்த இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்தவர். புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் இளந்தலைமுறையினர், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை, எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்கான ஓர் அடிப்படையை, அந்த உரையும் அதைத்தொடர்ந்த கலந்துரையாடலில் அந்த மாணவி முன்வைத்த கருத்துகளும் தந்தன.   
  • 254 replies

அநுராதபுரத்தில் வான்புலிகளின் குண்டுவீச்சில் சிங்கள வான்படையின் 'இரண்டு எம்.ஐ.-24 உலங்கு வானூர்திகள்' சேதம் 💪😍

 


 

 

 

-----------------------------------------------

 

 

 

 

மன்னாரில் வான்புலிகளின் குண்டுவீச்சில் சிங்கள வான்படையின் 'ஒரு எம்.ஐ.-24  & ஒரு பெல்  என இரண்டு உலங்கு வானூர்திகள்' சேதம் 💪😍

 


 

 

 
    • Thanks

பாம்பெண்ணை மருத்துவம்!


18 ஆம்  நூற்றாண்டு காலப்பகுதியில் ஐரோப்பிய, அமெரிக்க தேசங்களில் ஒரு புது வகையான தொழில் துறை கொடி கட்டிப் பறந்தது. குதிரை வண்டியில் ஊரூராகத் திரிந்து சகல வகையான நோய்களையும் தீர்க்கும் "பாம்பு எண்ணை" என்று பெற்றோலியத்தின் ஒரு பகுதியான கனிம எண்ணையை விற்பதே அந்தத் தொழில். இது ஏன் பாம்பு எண்ணை (snake oil) என அழைக்கப் பட்டது என்பதற்கு பல காரணங்கள் சொல்லப் படுகின்றன. ஆனால், இன்று ஆங்கிலத்தில் "பாம்பு எண்ணை" என்பது எந்தப் பலனுமற்ற போலி மருந்துகளைச் சுட்டப் பயன் படும் ஒரு சொல்லாகி விட்டது. போலி மருந்துகளை விற்கும் வியாபாரி "பாம்பெண்ணை விற்பவர் (snake oil salesman)" எனப் படுகிறார். 
  • 15 replies

இந்தியாவின் மாற்றமடைந்த கொரனா வைரஸ்:  கேள்விகளும் பதில்களும்

முன்கதை

விகாரமடைந்த நவீன கொரனா வைரசுகள் பற்றி ஒரு கட்டுரையை முதலில் எழுதிய போது உலகில் மூன்று பிரதான நவீன கொரனா வைரஸ் விகாரிகள் காணப்பட்டன. பிரிட்டன் விகாரி (B.1.1.7), பிரேசில் விகாரி (P1), தென்னாபிரிக்க விகாரி (B1.351) ஆகிய அந்த ஒவ்வொரு வைரசு வகைக்கும் ஒவ்வொரு சிறப்பியல்பு இருந்தது. பிரேசில், பிரிட்டன் வைரசுகள் ஆரம்பத்தில் பரவிய கொரனா வைரசை விட வேகமாகத் தொற்றுதலை ஏற்படுத்தக் கூடியவையாக இருந்தன நேரடியாக இது நோய்த்தீவிரத்தை அதிகரிக்கா விட்டாலும், மருத்துவ சேவைகள் மீது அதிக சுமைகளை ஏற்படுத்துவதன் மூலம் அதிக மரணங்களை ஏற்படுத்தியிருந்தன. தென்னாபிரிக்க விகாரிக்கு, தடுப்பூசிகளினால் உருவாகும் நோய்ப்பாதுகாப்பில் இருந்து தப்பும் இயலுமை இருப்பதால் "தப்பும் வைரஸ்" (escape mutant) என்று அழைத்தார்கள். ஆனாலும், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பயன்படுத்தப் படும் தடுப்பூசிகள், இந்த வைரசுகள் எல்லாவற்றிலும் இருந்து தீவிர நோயோ, மரணமோ ஏற்படாமல் தடுக்கக் கூடியவை எனச் சில ஆய்வுகள் சுட்டிக் காட்டின.  

இந்தியாவின் விகாரி வைரஸ்

இந்தியாவின் பல மாநிலங்களில் புதிய அலையோடு கண்டறியப் பட்ட B 1.617 என்பது தான் இந்தியாவின்  விகாரி வைரஸ். தற்போது இந்த விகாரியில் மூன்று வகையான உப வகைகள் - B1.617.1, B1.617.2, B1.617.3- இருப்பதாகக் கண்டறிந்திருக்கிறார்கள். இவற்றுள் சில விகாரங்கள் பொதுவாகவும், சில விகாரங்கள் தனித்துவமாகவும் இருக்கின்றன. ஆனால், மூன்றுமே பிரிட்டனின் விகாரி வைரசின் ஒரு மாற்றத்தைப் பொதுவாகக் கொண்டிருக்கின்றன. முன்னைய விகாரிகள் போலன்றி - இது இந்தியாவில் தோன்றியதாலோ என்னவோ- இந்த விகாரி பற்றிய ஆய்வுகள் மெதுவாகவே நடைபெறுகின்றன. தற்போது 12 நாடுகளுக்குப் பரவி விட்டதால் சில தகவல்கள் ஆய்வுகள் மூலம் வெளிவந்திருக்கின்றன.
  • 4 replies

வேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள்.

locakdown காலத்தில் முடங்கி இருக்கும் போது, சும்மா வெட்டியாக பொழுதை போக்காமல், உங்கள் skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள்.

இந்த ஜனவரி மாதம், நிலைமை கொரோனாவுக்குள் சிக்காமல் இருந்திருந்தால், போரிஸ் ஜான்சன் IT skills வேலைகளுக்கு தெரசா மே கொண்டு வந்திருந்த விசா தடைகளை நீக்கி இருப்பார். இந்திய IT  காரர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். கொரோன தடை போட்டுவிட்டது.
  • 110 replies

‘மரபுவழித் தாயகம்-சுயநிர்ணயம்-தமிழ் தேசியம்’: தமிழினத்தின் பேரெழுச்சியில் மீண்டும் பிரகடனம்!

வடக்கு கிழக்குத் தாயகம் முழுவதுமாக ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி இன்று பொலிகண்டியில் பேரெழுச்சியுடன் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், முன்னெடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் பேரணியின் நிறைவில் வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புக்களால் பிரகடனம் வாசிக்கப்பட்டது.
  • 0 replies

புனிதக்   கருமாந்திரம்                                                                               
ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு, தலையில் தூக்கிக் கரகம் வைத்துக் கொண்டாடி, மனம் உருகிக் கரைந்து, அப்படியே விட்டத்தைப் பார்த்தவாறே மோவாய்க் கட்டையைத் தடவி விட்டு, பழைய நினைவுகளைக் கிண்டுகிறது, கிளறுகிறது, கொத்துக்கறி போடுகிறது என ஓர் அட்டுப்பிடித்த flashbackல் மூழ்கி, …. - ‘96’ என்னும் திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போது அல்லது ஒவ்வொரு வருடமும் அந்த ‘அமரகாவியத்திற்கு’, ‘ஒப்பற்ற(!) ஓவியத்திற்கு’த் திவசம் கொண்டாடப்படும் போது நடப்பவையே மேற்கூறியவை. படம் blockbuster வெற்றி என்று பிளிறுவதும் யாரைப் பார்த்தாலும் திரும்பத் திரும்ப அதன் புகழ் பாடுவதும்… பொறுத்தது போதும் என எழுத்தாணியுடன் பொங்கி எழுந்து விட்டேன்.
  • 0 replies

இது முற்றிலும் பெண்களால் நிரப்பப்பட்ட நாவல். பெண்ணின் அகவுலகை ஆணின் பார்வையிலிருந்து பார்த்துப் பழகிய நமக்கு இதுவொரு புது அனுபவமாக இருக்கும். நாவலின் மையக்கருத்தை பின்னட்டையிலிருக்கும் குறிப்பிலிருந்து ஓரளவு அறிய முடிகிறது.
  • 8 replies

அட  கல்யாணமேதான் !

                                                                                                                   - சோம. அழகு

            அந்தச் சம்பவம் எனக்கும் இனிதே அரங்கேறியாயிற்று. அதான்… அந்த… ‘ஒரு தெரிவை தன்னை விட கொஞ்சமே வயது கூடிய ஓர் ஆண்மகனை முறைப்படி தத்தெடுக்கும் வைபவம் !’ கல்யாணம், திருமணம் என்றெல்லாம் கூட நீங்கள் பெயரிட்டு இருக்கிறீர்களே ! அதேதான் ! “ஓ ! என்னமோ ‘அட கல்யாணமே!’னு பகடியா கல்யாண ஆரவாரங்களைக் கிண்டல் செய்து ஒரு காலத்தில் எழுதின?
  • 5 replies

corona-world-map.JPG

நினைவுத்தூபி அழிப்பு: அறத்தின் மீதான ஆக்கிரமிப்பு

-புருஜோத்தமன் தங்கமயில்

போர் வெற்றி வாதத்துக்கு எதிராக முளைக்கும் சிறிய புல்லைக்கூட, விட்டு வைத்துவிடக் கூடாது என்பது ராஜபக்‌ஷர்களின் ஒரே நிலைப்பாடு. 

அதுபோல, பௌத்த சிங்கள மேலாதிக்க மனநிலையைக் கேள்விக்கு உள்ளாக்கும் எந்தவோர் அம்சத்தையும், நாட்டின் எந்தப் பாகத்திலும் அனுமதித்துவிடக் கூடாது என்பது, தென் இலங்கையின் குறிக்கோள். 

அப்படியான நிலையில், இறுதிப் போர் கொடூரங்களை நினைவுறுத்திக் கொண்டு நிற்கும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி(கள்), தென் இலங்கையின் கண்ணில் விழுந்த பெரிய துரு(க்கள்). அந்தத் துருக்களை அகற்றிவிட வேண்டும் என்பதற்காக சாம, தான, பேத, தண்டம் என்ற நான்கு வழிகளையும், தென் இலங்கையும் அதன் ஆட்சியாளர்களும் கையாள்வார்கள். அதுவும், ‘பேத, தண்ட’ முறைகளில் அதிக ஈடுபாடுள்ள ராஜபக்‌ஷர்கள், எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள் என்பதற்கும், முள்ளிவாய்க்காலின் இறுதி நாள்களே பெரிய சாட்சி.
  • 0 replies

No to UoJ, but Yes to USJ nd WYB. Is The UGC of Sri lanka a political party of MR nd GR gang. ??!!

சிறி, இப்பவும் லைக், நன்றி போன்றவை இல்லை. எடிட்டும் பண்ணமுடியாமல் இருக்கு. யாரிடம் இதைப்பற்றி கதைக்கலாம்? 

கொவிட் 19 அல்லது கொரானோ பலருக்கு பதட்டம். சிலருக்கு உயிர்க்கொல்லி. நமக்கு விளையாட்டு.
  • 11 replies

கோவிட் 19: மாறும் வைரசும், மாறாத மனிதர்களும்!
கோவிட் 19: மாறும் வைரசும், மாறாத மனிதர்களும்!

தென்கிழக்கு இங்கிலாந்தின் நகரங்களில் புதிதான நிலை 4 கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப் பட்டிருக்கின்றன. இதற்குக் காரணமாக, புதிதாக விகாரமடைந்த நவீன கொரனா வைரஸ் அங்கே இனங்காணப் பட்டிருப்பது சொல்லப் பட்டிருக்கிறது. இதைப் பற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

வைரசுகளுக்கு மாற்றமே வாழ்க்கை!

வைரசுகள் ஆர்.என்.ஏ (RNA) அல்லது டி.என்.ஏ (DNA) எனப்படும்  நியூக்கிளிக் அமிலங்களால் ஆக்கப் பட்டவை. ஆர்.என்.ஏ வைரசுகள் இயற்கையாகவே பெருகும் போது விகாரமடைந்து புதிய விகாரிகளை உருவாக்கும் தன்மை கொண்டவை. தடுப்பூசி இது வரை கண்டு பிடிக்கப் படாத எயிட்ஸ் வைரசான எச்.ஐ.வி (HIV) வேகமாக விகாரமடைவதில் பிரபலமான ஒரு வைரஸ் குடும்பம். இன்னொரு வேகமாக மாறும் தன்மை கொண்ட ஆர்.என்.ஏ வைரசு வருடா வருடம் எம்மைத் தாக்கும் இன்ப்ளூழுவன்சா ஏ வைரஸ். இதனால் தான் இன்புழுவன்சாக் காய்ச்சலுக்கான தடுப்பூசியை ஒவ்வொரு ஆண்டும் புதிதாக தயாரித்துப் போட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

நவீன கொரனா  வைரசும் ஒரு ஆர்.என்.ஏ வைரஸ். எச்.ஐ.வி அல்லது இன்புழுவன்சா போல வேகமாக விகாரமடையா விட்டாலும், விகாரமடையக் கூடிய வைரஸ் தான் இந்த நவீன கொரனா  வைரஸ். கடந்த வருடம் கண்டறியப் பட்டதில் இருந்து 4000 வரையான விகாரங்கள் நவீன கொரனா வைரசில் அடையாளம் காணப் பட்டிருக்கின்றன. 

ஏன் மாற்றங்களும் விகாரங்களும்?

"மாறாததெல்லாம் மண்ணோடு" என்ற கோச்சடையான் வரிகள் தான் இந்தக் கேள்விக்கு ஒரு வரிப் பதில். வைரசுகளின் வாழ்க்கை என்பது ஏனைய சிக்கலான உயிர்கள் போன்றது அல்ல. வைரசுகளின் வாழ்வுக்கு ஒரே நோக்கம் "நிலைத்திருப்பது" தான்!. அப்படி நீண்ட காலம் நிலைத்திருக்க இரண்டு வேலைகள் செய்ய வேண்டும்:

ஒன்று - தாம் தங்கிப் பெருக்கக் கூடிய உயிர்களைத் தேடி அடைய வேண்டும்.

இரண்டு: அப்படியான ஒரு உயிர் கிடைக்கும் போது வேகமாகப் பெருக வேண்டும். 

இந்த இரண்டாவது வேலையை ஆர்.என்.ஏ வைரசுகள் செய்யும் போது, ஒரு சிக்கல் ஏற்படுகிறது. வேகமாக பெருகும் அவசரத்தில், தங்கள் ஆர்.என்.ஏ மூலக் கூறுகளைப் பிரதி செய்வதில் சில தவறுகளை விடுகின்றன. இது நாம் பார்த்தெழுதல் போட்டியில், வேகமாக எழுதும் போது சில எழுத்துப் பிழைகள் விடுவது போன்ற ஒரு நிலைமை. மேலே நாம் பார்த்த நவீன கொரனா வைரசின் 4000 விகாரங்களில் பெரும்பகுதி இப்படியான தவறுகள் தான். 
  • 4 replies

பூமியியல்

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கருத்துக்களம் இன்று (11.08.2011) புதிய பதிப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் பின்னர் பல்வேறு வகையான பிரச்சனைகளை உறுப்பினர்கள் எதிர்கொள்வதால் இங்கு அவற்றினைக் குறிப்பிடுவதன் மூலம் அதற்கான தீர்வு நிர்வாகமோ அல்லது தீர்வினைத் தெரிந்த உறுப்பினரே தெரிவிப்பதன் மூலம் பலருக்கும் உதவியாக அமையும். பிரச்சனைகளைக் குறிப்பிடும் போது விளக்கமாகவும் முடிந்தால் screen shot ஒன்றினை இணைப்பதும் விளங்கிக் கொள்ள இலகுவாக இருக்கும்.
  • 2004 replies

ஆம்பலின் இதழில் துளிரும் வெட்கம்

செல்லக் குழந்தையின்  சிணுங்கல்

ஓய்ந்த ஆழியின் நிசப்தம்

இருண்ட வெளியில் தொலைந்த ஒளிக்கீற்று

மாற்றத்தைத் தேடும் மருண்ட விழிகள்

பூரணம் உணர்வாய்

- இத்தீண்டலில் பெண்ணே!
  • 2 replies

அசோலா வளர்ப்பில் சாதிக்கும் முன்னாள் போராளி

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைவேலி எனுமிடத்தில் அமைந்துள்ளது செல்வபாக்கியம் பண்ணை. முன்னாள் போராளி தம்பதிகளான நாகலிங்கம் கனகசபாபதி நேசன்  மற்றும் அவரின் துணைவியார் வசந்தி ஆகியோர் அதனை திறம்பட வினைத்திறனுடன் நிர்வகித்து வருகின்றனர். 

கொரோனா காலப்பகுதியான இப்போது மாடுகளுக்கான அடர்தீவனங்களுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதுடன் அதன் விலைகளும் தாறுமாறாக அதிகரித்துள்ளன. இந்நிலையில் தனது பண்ணையில் மாடுகளுக்கு பெருமளவில் அசோலா தீவனத்தை உற்பத்தி செய்து குறிப்பிடத்தக்களவு தீவனத் தேவையை ஈடு செய்து வருவதுடன் நிறைவான பால் உற்பத்தியையும் பெற்று வருகிறார். 

அசோலா வளர்ப்பு மற்றும் தீவன முகாமைத்துவம் தொடர்பில் எம் பண்ணையாளர்களிடையே சரியான புரிதல் இல்லாத நிலையில், அசோலா தொடர்பிலான பல்வேறு விளக்கங்களையும் தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார். 

* அசோலா பாசி ஓர் அறிமுகம் 
* அசோலா தொட்டி அமைப்பது எப்படி? 
* அசோலா தொட்டி பராமரிப்பு முறைகள் 
* அசோலா தீவன மேலாண்மை

 
  • 6 replies

பெண்டாட்டி ஊருக்கு போய்ட்டா..!
பெண்டாட்டி வீட்டில் இல்லையெனில் ஆண்களுக்கு சில நாட்கள் கொண்டாட்டம்தான்.. அப்புறம் சலித்து, வெறுமையாகி மனம் ஏங்க ஆரம்பித்துவிடும்..

இந்த உணர்வுகள் எல்லோருக்கும் இருப்பதுதான்.. இந்தக் காணொளியும் அதையே பிரதிபலிக்கிறது..

 

 
  • 3 replies

மதுரை மரிக்கொழுந்து வாசம்..!
மதுரையின் சிறப்பையும், மீனாட்சி அம்மன் கோவில் வரலாற்றையும் விலாவாரியாக மிக அருமையாக விளக்கும் காணொளி..

மதுரை மாநகரை வான்வெளியிலிருந்து பார்க்கும் காட்சி அற்புதமாக உள்ளது..! 
 

 
  • 1 reply

மகனைக் கண்டது முதல் சரணடைதல் வரை (VIDEO)

Selvaraja Rajasegar 



on August 30, 2020

 


 

2009 மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் வழியாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வந்த இந்தத் தாய், தன்னுடைய 33 வயதான மகனை இராணுவத்திடம் கையளித்திருக்கிறார். விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தமையால் தான் இராணுவத்தினரால் துன்புறுத்தப்படலாம் என்று இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரமறுத்த போதிலும் தாயார் அவரை வற்புறுத்தி அழைத்து வந்திருக்கிறார். அவ்வாறு அழைத்துவந்த மகனை விசாரணையின் பின்னர் விடுவிப்பதாகக் கூறி தன் கண்முன்னே அழைத்துச் சென்ற இராணுவத்தினர், 11 வருடங்களாகியும் விடுதலை செய்யவில்லை.

மகனைத் தேடி நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று களைத்துவிட்டார். மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று வைத்தியரும் கூற, படுக்கையில் இருக்கும் தன்னுடைய தாய்க்கு பணிவிடை செய்வதே முழுநேர வேலையாக மாறிவிட்டது அவருக்கு. இருந்தாலும் எங்கு போராட்டம் நடந்தாலும் அந்த இடத்தில் ஆஜராகிவிடுவார்.

உக்கிரமாக போர் இடம்பெற்றபோது மகனை கண்ட இடத்திலிருந்து இராணுவத்திடம் கையளித்த இடம்வரை பயணம் செய்து அன்று நடந்த சம்பவத்தை எம்முடன் பகிர்ந்துகொண்டார்.

இன்று அனுஷ்டிக்கப்படும் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு அவரைப் பின்தொடர்ந்து பதிவுசெய்த காணொளியை இங்கு தருகிறோம்.

 

 

https://maatram.org/?p=8720
  • 4 replies

வேண்டும் ஒரு கூட்டமைப்பு
  • 2 replies

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.