சில புதுப்பித்தல்களுக்காக இன்று ஐரோப்பிய நேரம் 21:00 ல் இருந்து சுமார் அரை மணிநேரத்திற்கு யாழ் தளத்தில் தடங்கல் ஏற்படும்

hasan

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    115
  • Joined

  • Last visited

  • Days Won

    2

hasan last won the day on January 22 2017

hasan had the most liked content!

Community Reputation

80 Good

About hasan

  • Rank
    உறுப்பினர்

Profile Information

  • Gender
    Male

Recent Profile Visitors

886 profile views
  1. 1977 இல் எமது பல்கலைக்கழக விரிவுரையாளரான ashley De Vos ஜெர்மனில் இருந்து வந்த மண்பாண்ட தொல்பொருள் ஆய்வாளர் ஒருவருடன் கள வேலை செய்வதற்கு யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவருக்கு உதவி செய்ய எங்களை அழைத்திருந்தார். அல்லைப்பிட்டியில் கட்டட வேலைகளுக்கு தேவையான மணல் தோண்டும்போது மிகப் பெரிய சிறிய வகையான சீன மண்பாண்டங்கள் வந்ததாகவும் அதை அறிந்து ஆய்வு செய்யவும் வந்திருந்தார்கள். இரண்டு வாரமாக மணலை தோண்டி நிறைய பாத்திரங்களின் பகுதிகளை சேர்த்து ஒருங்கிணைத்து அவற்றை ஜெர்மனிக்கு கொண்டு செல்ல முடியாத காரணத்தால் யாழ் நூதனசாலைக்கு வழங்கியிருந்தார். இது பற்றி எதுவும் குறிப்பிடாமல் எதோ இப்போதுதான் சீனாவில் இருந்து வந்து தோண்டி கண்டுபிடித்ததாக சொல்வது அபத்தம்.
  2. தலைப்பு தவறானதுதான். சிங்கள இனத்தின் ஒரு சாதியினரை கொண்டுவந்தது என்று வரவேண்டும். இந்த வரலாற்றை சொல்பவர்கள் சிங்களவர்கள்தான். அது ஏன் உங்களால் சகிக்கமுடியவில்லை என எனக்கு புரியவில்லை.
  3. உங்கள் அறியாமை உங்களுக்கு சிரிப்பை உண்டாக்குமானால் நீங்கள் அறியாமையில் இருப்பதே நன்று http://www.ft.lk/columns/The-Brahmin-footprint-in-Sri-Lankan-history/4-667051 https://www.facebook.com/278321265642331/posts/the-history-of-the-salagama-castesalagama-brahakmana-wanshaya-salagamahalagama-i/278328775641580/
  4. ஆளுநர் பேசியதை பற்றியதல்ல எனது கருத்து. தமிழ் வெறி இல்லாத மனிதகுலத்துக்கு பங்களித்த தமிழர்களை எந்தவித ஆய்வுமில்லாமல் தமிழ் துரோகிகளாக படடமளிப்பதை தயவுசெய்து நிறுத்திக்கொள்ளுங்கள். ஆனந்த குமாரசாமி தன்னை தமிழனாக நிறுவி அதில் தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டிய தேவை இல்லாத மாமனிதன்.
  5. அவர் பட்டியல் இட்ட ஒருவரை தமிழர்கள் அறிவது அவசியம். ஆனந்த குமாரசாமி இதுவரையில் அதிசிறந்த இலங்கையர். அவருக்கு இணையான இலங்கையர் என்னும் பிறக்கவில்லை என எண்பதுகளில் ஆங்கில பத்திரிகையில் ஒரு சிங்கள ஆய்வாளர் குறிப்பிட்டார். ஆனந்த குமாரசாமியை கற்காமல் ஒருவன் கலை துறையில் முழுமை அடையமுடியாது என எனது சிங்கள பல்கலைக்கழக ஆசிரியர் என்னை வலிந்து படிக்க வைத்தார். அவரது 'Medieval singhalese art ' என்ற நூல் இலங்கை புராதன கலைகளின் பைபிள் போன்றது. அவரது 'Dance of Siva' என்ற நூல் கீழைத்தேச கலைகளை மேலைத்தேசத்தவருக்கு அறிமுகப்படுத்தியது. இவர் பற்றிய ஒரு விபரணப் படத்தை எழுபதுகளில் ஜேர்மன் அரசு வெளியிட்டது. இவர் ஐநூறுக்கு மேற்படட கலை பற்றிய ஆய்வு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இத்தனைக்கும் இவர் ஒரு விஞ்ஞானி. இவர் கண்டுபிடித்த ஒரு கனிமப்பொருளுக்கு இவர் பெயரே உள்ளது. நான் வேலை செய்த வெளிநாட்டு அலுவலகத்தில் ஒரு சிறிய புத்தக அலுமாரி உள்ளது. ஒரு நூறு புத்தகம் கூட இல்லை. அதில் ஆனந்த குமாரசாமியின் ஒரு நூல் இருந்தது. அவர் எனது நாட்டவர் என சொல்லி நானும் பெருமைப்பட்டேன். அவரை பெற்றெடுத்த மண் அவரை அறியாமல் கேலிசெய்வது கவலைக்குரியது.
  6. இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று உங்களுடைய கருத்தை பண்பாகவும் கண்ணியமாகவும் சொல்ல கூடிய வல்லமை தமிழுக்கு நிறையவே உண்டு. அந்த மொழியை அவமானம் செய்யாதீர்கள். மனிதன் மொழி இல்லாமல் சிந்திக்க முடியாது. சிந்தனையின் வெளிப்பாடு அநாகரிகமாக இருந்தால் அந்த மொழியே அநாகரீகமானது என்ற அர்த்தம் வரலாம்.
  7. ஆனால் ஒரு விஷயம் நித்தியமானது. தமிழர்களின் உரிமை சிங்களவர்களிடம்தான் இருக்கிறதுஇ அவர்கள் அதை சரியாக உணரும் போதுதான் சமத்துவம் சாத்தியமாகும். சிங்களவர்கள் எதிரி என்ற தத்துவத்தில் இயங்கினால் விடிவு சாத்தியமில்லை. எனது மேலதிகாரியாக சிங்களவர் எப்போதும் கேட்பார் உங்கள் பிரச்சனை என்ன என்று. சாதாரண சிங்களவர்களுக்கு தமிழர் தரப்பு நியாயங்கள் எதுவுமே தெரியாது. சிங்களத்தில் உங்கள் உரிமைகளை சரியாக சொல்ல தெரிந்தவர் இருந்தால் உங்கள் உரிமைகளுக்கு சிங்களவர்களே போரிடுவர். ஆனால் நீங்களோ அவர்களை எல்லாம் எதிரிகள் பக்கத்தில் தள்ளிவிட்டிடுகிறீர்கள்.
  8. நீதிபதி மிகவும் மதிப்புக்குரியவர். ஆனாலும் பதட்டமான சூழலில் அவசரப்பட்டு அபிப்பிராயங்கள் சொல்லியுள்ளார். எந்த முட்டாளாவது நீதிபதியை கொல்ல திடடமிட்டு மக்கள் பார்க்கக்கூடிய இடத்தில் நீதிபதியின் பாதுகாவலரின் துப்பாக்கியை பறித்து நீதிபதியை சுட்டுவிட்டு தெருவில் போன ஒருவரின் பைக்கை பறித்து தப்பியோட திட்டமிடுவானா.
  9. பவுத்த மதத்தை இழிவு படுத்த தங்களுக்கு போட்டியாக மோடி வந்துவிடுவாரோ என்ற கவலை தேரருக்கு.
  10. தான் ஒரு முட்டாள் என அவர் மீண்டும் மீண்டும் வலிந்து நிரூபித்தாலும் பலர் நம்பத் தயாரில்லை. அவர் எப்படித்தான்நம்பவைப்பது.
  11. நான் பல்கலை கழக படிப்பை முடித்தபின் தனியார் துறையில் வேலை செய்தேன். பின்னர் அரச வேலை கிடைத்தவுடன் அதற்கு மாற விரும்பியபோது எனது முதலாளி கையாலாகாதவன்தான் கவர்மெண்த்தில் வேலை தேடுவான் என்று போதித்தர். ஆனால் தமிழில் கோழி மேய்த்தாலும் கோரணமேந்தில் மேய்த்தால்தான் மவுசு என்று பழமொழி உண்டு. யாழ் பட்டதாரிகளின் நிலை என்ன என்று விளங்கவில்லை. கையாலாகாதவர்களா அல்லது கோரணமேந்தில் மேய்ந்து கொழுத்த சீதனத்தை எதிர்பார்கிறார்களா.
  12. வரலாறு காணாத நிகழ்வு. உலகில் எந்த விடுதலை போராட்ட அமைப்பும் இத்தனை ஆடம்பரமாக இறந்த வீரர்களை நினைவுகூர்ந்தது கிடையாது. ஒரு மாபெரும் களியாட்டு நிகழ்ச்சிபோல அரங்கை நிர்மாணித் துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
  13. சரியான தலைப்பு 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'