• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ragavaa

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Content Count

    166
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

About ragavaa

  • Rank
    உறுப்பினர்

Profile Information

  • Gender
    Male
  1. கனடாவில். என்னிடம் இருக்கிறது. Lion's lookout என்னும் இடத்துக்கு அண்மித்த பகுதியில் எடுக்கப்பட்டது. பார்த்த இடமோ?
  2. கலைஞா இதைவிட என்னிடம் நல்ல ஐடியா இருக்கு - படிக்கவேண்டிய புத்தகத்தை மிக்ஸியில் போட்டு தண்ணீர்விட்டு அரைத்து குடித்தால் மிகச்சிறப்பான புள்ளிகளை பெறலாம்.
  3. சின்னா போடாத ஆட்டமா? http://www.jibjab.com/starring_you/receipt/314792 http://www.jibjab.com/starring_you/receipt/314682
  4. தோழ்வி நிலையென தோழ்வி நிலையென - 1
  5. நன்றி ஈழவன் எனது படைப்பை இங்கு பதிந்தமைக்கு. ஈழவன் சொல்வது போல பாடலுக்கு ஏற்றமாதிரி காட்சிகள் வெட்டி ஒட்டப்பட்டதுதான். டப் செய்யப்படவில்லை. மற்றும் கருத்து பகிர்ந்தவர்களுக்கும் நன்றி.
  6. மகாபாரதம் என்றொரு மெகாபொய் மகாபாரதம் உண்மையாக நடந்த வரலாறு என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் கிடைத்து உள்ளதாக உ.பி. அரசு தெரிவித்துள்ளது. பாக்பத் - பர்னாவா இடையேயான 60 கி.மீ. தூரம் இப்போது மகாபாரத காலத்தை நினைவூட்டும் வகையில் இருந்து வரு வதைக் கண்கூடாகக் காணலாம். இருபுறம் திறந்த நிலையில் இப்போதும் நீண்ட குகை மகாபாரதம் கதையல்ல; நிஜம் என்பதை விளக்குவதாக இருக்கிறது. ஆதாரம் கிடைத்தனவாம்! 12.6.2005 நாளிட்ட 'தினமலர்' - நாளிதழில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது. "மகாபாரதம் கற்பனையல்ல; வரலாறு. ஆதாரங்களுடன் உ.பி. அரசு உறுதி இவ்வாறு உ.பி . அமைச்சர் கோகல் ஹமீத் கூறியுள்ளார். இதுதான் 'தினமலர்' செய்தியின் சில பகுதிகள். முதன்முதலாகப் பார்த்தபோது. இப்பொழுது, நாம் மகாபாரதம் கற்பனைக் கதையா? வரலாறா? என்பதுபற்றி ஆய்வு முறையில் அலச இருக்கிறோம். இந்த மகாபாரதமானது முதலில் அஸ்வலாயனா என்பவரின் 'கிருஹ்ய சூத்ரம்' என்னும் நூலிலும், பாணினியின் 'அஷ்டத்யாயி' என்னும் நூலிலும் குறிக்கப்பட்டுள்ளது. முழுமையாக, மகாபாரதம் என்ற பெயரானது, முதல் தடவையாக குப்தர் காலக் கல்வெட்டில் தான் பொறிக்கப்பட்டுள்ளது. கண்ணன் இறந்த காலம்: மகாபாரதப் போர், துவாபர யுகத்தின் இறுதியிலும், கலியுகத்தின் தொடக்கத்திலும் நடந்ததாகக் கூறி, இந்நிகழ்வு 5000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்று பழம்பெருமை பேசப்பட்டு வருகிறது. இவ்வாறு, மகாபாரதம் : ஆதிபர்வம் : அத்தியாயம் - 2; சுலோகம் 10 கூறுகிறது. இந்தக் கலியுகம் எப்பொழுது தொடங்கியது? கண்ணன் இறந்த அந்த நாளில்! கண்ணன் இறந்தது எப்பொழுது? மகாபாரதப் போர் முடிந்து, 36 ஆண்டுகளுக்குப் பின் கண்ணன் மடிந்தான். இவ்வாறு ஸ்ரீமத் மகாபாகவதம்: முதல் °கந்தம்: அத்தியாயம் - 15, சுலோகம் - 36 கூறுகிறது. கலிகாலப் பிறப்பு:கலியுகம் தொடங்கி இப்பொழுது எத்தனை ஆண்டுகள் ஆகின்றன? ஏதாவது ஒரு பஞ்சாங்கத்தை எடுத்துப்புரட்டி பார்த்தால் கலியுகம் தொடங்கி 5107 ஆண்டுகள் ஆகின் றன எனத் தெரிந்து கொள்கின்றன. இந்த 5107-லிருந்து 36 ஆண்டுகளைக் கழித்தால் வருவது 5071. ஆக, இதிலிருந்து 5071 ஆண்டு களுக்கு முன் மகாபாரதப் போர் நிகழ்ந்தது என்பதாகப் பாகவதம் பகர்கிறது. ஆனால், மகாபாரதக் கணக்குப்படி கண்ணன் உயிருடன் இருந்து மகாபாரதப் போரில் அர்ச்சுனனுக்குத் தேரோட்டியாய் அதாவது பார்த்த சாரதியாய் இருந்தபோது கலியுகம் பிறந்து விட்டது என்கிறது மகாபாரதம். இரண்டில் எது சரி? எது சரி அன்று? அந்த வியாசருக்குத்தான் வெளிச்சம்! வேறுபாடு வரலாமா? மகாபாரத நூலையும், பாகவதம் உள்ளிட்ட 18 புராணங்களையும் பாடியவர் இந்தப் பராசரப் புத்திரர் வியாசர்தானே? ஒருவரே, தாம் எழுதிய இரண்டு நூல்களிலும் கணக்கில் வித்தியாசம் வரும்படி எழுதலாமா? வேதம் வகுத்த வியாச முனிவருக்கு கணக்கில் கலக்கமான அறிவா? தப்புக்கணக்கு போடுபவர் வேத வியாசர் என்று அழைக்கப்படும் தகுதியுடையவர் ஆவாரா? ஒத்த கருத்து உண்டா?மகாபாரதப் போர் ஸ்ரீமத் மகாபாகவதப்படி கி.மு. 3007 வாக்கில் நிகழ்ந்தது. அது இருக்கட்டும், இந்தக் கலியுகம் தோன்றியது எப்போது என்பது பற்றிய செய்தியிலிருந்து வடமொழி அறிவாளர் களிடை ஒத்தக் கருத்து உண்டா? "கி.மு. 3102 பிப்ரவரி 18 ஆம் நாள் வெள்ளிக்கிழமை கலியுகம் தோன்றியது" என்கிறார். கி.பி. 476இல் பிறந்த ஆரியப்பட்டர் என்கிற வானியலார். "கலியுகம் கி.மு. 2449 ஆம் ஆண்டில்தான் தொடங்குகிறது" - என்கிறார் வராகமிஹிரர் என்னும் மற்றொரு வானியலார். ஆக, மகாபாரதம் - கலியுகம் பற்றி இத்துணை குளறுபடி இருக்கையில் மகாபாரதம் வரலாறு என்பது பொருந்துமா? என்ன கணக்கு, இந்தக் கணக்கு?குருச்சேத்திரத்தில் நிகழ்ந்த மகாபாரதப் போரில் கவுரவரின் 11 அக்ரோணி சேனையும் பாண்டவரின் 7 அக்ரோணி சேனையும் ஆக மொத்தம் 18 அக் ரோணி சேனை ஈடுபட்டதாக மகாபாரதம் கூறுகிறது. ஓர் அக்ரோணி படை என்பது, 21870 தேர்கள்; 21870 யானைகள்; 65610 குதிரைகள்; 109350 காலாட்படைகள் அடங்கியது ஆகும். 18 அக்ரோணி சேனைகள் என்றால், 21870 ஒ 18 = 393660 தேர்கள் (ரத) 21870 ஒ 18 = 393660 யானைகள் (கஜ) 65610 ஒ 18 = 1180980 குதிரைகள் (துரக) 109350 ஒ 18 = 1978300 காலாட்கள் (பதாதிகள்) அடங்கியது என்பதாகிறது, தேர் ஒன்றுக்கு 1 வீரர் என்ற முறையில் பார்த்தால் 3,93,660 தேர்ப்படை வீரர்கள்; யானை ஒன்றுக்கு 1 வீரர் என்ற முறையில் பார்த்தால், 3,93,660 யானைப் படை வீரர்கள்; குதிரை ஒன்றுக்கு 1 வீரர் என்ற முறையில் பார்த்தால், 11,80,980 வீரர்கள். இத்தோடு, காலாட்படை வீரர்கள் 19,78,300 வீரர்கள். இவற்றைக் கூட்டினால் மொத்த நாற்படை வீரர்கள் 39,46,540 எண்ணிக்கையாகிறது. போரில் பங்குபெற்ற நாற்படை வீரர்கள் ஏறத்தாழ 40 இலட்சம் பேர்; யானைகள் 4 இலட்சம்; தேர்கள் 4 இலட்சம்; குதிரைகள் 1 1/4 இலட்சம்; நம்பமுடியவில்லை, இல்லை!எந்த ஒரு நாட்டிலும் இவ்வளவு படை வீரர்கள், யானை, தேர், குதிரைகள் நிறுத்தி வைக்க இவ்வளவு பெரிய மைதானம் இருக்க வாய்ப்பு உண்டா? அவற்றை மோதுமான இடைவெளியில் அணி வகுத்து நிறுத்த இடம் இருக்க முடியுமா? நிறுத்தி, அணிவகுத்து நிற்கவே இடமிராது என்றால் அப்படையினர் அங்கும் இங்கும் பாய்ந்து திரிந்து ஓடிப் போரிட அத்தனை பெரிய போர்த்திடல் இருக்க வேண்டுமே? அதற்கு வாய்ப்பு உண்டா? இல்லையே! இத்துணை எண்ணிக்கை நம்பும்படியாக இல்லை; இல்லை; இல்லவே இல்லை!! எல்லாம் ஒரே 'கப்ஸா' ஆகவல்லவா இருக்கிறது? இவ்வெண்ணிக்கை, உண்மையாக இருக்க வேண்டும் எனில், படைவீரர்களுக்கும், மொத்த மக்கள் தொகைக்கும் இயல்பான விகிதாசாரப்படி மக்கள் தொகை 20 கோடியாக இருக்கவேண்டும். இது எவ்வகையிலும் சாத்தியமே இல்லை! எல்லாம் இல்லை மயம்!மகாபாரதம் பற்றி, வரலாற்று அறிஞர் பெருமகன், டி.டி. கோசாம்பி முதலியோர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்துள்ளனர். அவற்றுள் சிலவற்றைக் கீழே காண்போம். 1. கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரையிலான எந்த இலக்கியத்திலும் மகாபாரதம், மகாபாரத யுத்தம் பற்றிய செய்திகளே இல்லை! 2. மகாபாரத யுத்தம் எப்போது நடந்தது? என எவராலும் வரையறுத்துக் கூறப்படவில்லை! 3. இன்றைய அஸ்ஸாம் என்று கருதப்படுகிற மகாபாரத 'பிரஜியோதிஷா' மன்னனைப் பற்றி அஸ்ஸாமிய இலக்கியம், வரலாறு எவற்றிலும் எந்தக் குறிப்புகளும் இல்லை ! 4. போரில் கலந்துகொண்ட படைவீரர்கள் எண்ணிக்கை நம்பவே முடியாத கற்பனையாகும். 5. எல்லாவற்றிற்கும் மேலாக, யுத்தத்தில் பயன்படுத்தப் பட்டதாகக் கூறப்படும் பல ஆயுதங்களைச் செய்வதற்கு, பெருவாரியான இரும்பு தேவைப்பட்டிருக்கும். ஆனால், மகாபாரதம் நடந்ததாகச் சொல்லப்படும் காலத்தில் இரும்பு அரிதாகவே இருந்திருக்கிறது. (உலகின் இரும்புக் காலம் என்பது, 3300 ஆண்டுகளுக்கு முன், அதாவது கி.மு. 1300 ஆண்டுகளுக்கு முன்). இந்தக் காலகட்டத்தில்தான் இரும்பை உலகில் மனிதன் இனம் மிகுதியாகக் கையாளத் தொடங்கியது என்பது மனித இன வரலாற்றுச் செய்தி. மகாபாரத காலம் எனக் கூறப்படுவதோ கி.மு. 3000 வாக்கில் - (ஆதாரம்: 'சண்டே', 5-11, ஜூன் 1988) வரலாற்று அடிப்படையற்றது:வரலாற்று ஆய்வு அறிவாளர்களின் கருத்து இவ்வண்ணம் இருக்க, உத்திரபிரதேச அமைச்சர் பெருமகன் மான்புமிகு ஹமீத் பாக்பத் - பர்னாவா இடையேயான 60 கி.மீ. தூரம் இப்போதும் மகாபாரத காலத்தை நினைவூட்டுவதாக இருந்து வருவதாக எதன் அடிப்படையில் இயம்புகிறார்? தலைமுறை தலைமுறையாக:ஏதோ ஒரு சமயம் குருச்சேத்திரம் எனப்படும் பகுதியில், பாண்டவர் என்பவர்களுக்கும் கவுரவர் என்பவர் களுக்கும் இடையே பங்காளிச் சண்டை என்று சிறிய அளவில் நிகழ்ந்திருக்கலாம். இம்மாதிரியான சண்டை எங்கும் நடப்பது தான்! இயல்பானதுதான்! ஆனால், ஒவ்வொரு தலை முறையினரும், இந்தச் சண்டை நிகழ்ச்சியை அடுத்த தலைமுறையினருக்கு விவரிக்கும்போது பல, புதிய, புதிய தகவல்களைக் காலப் போக்கில் கற்பனை வளம் மிளிர சேர்த்திருக்கின்றனர். வளர்த்த கலை மறந்துவிட்டாய் ஏனடா, கண்ணா?"முதன் முதலாக, வியாசர் எழுதிய மகாபாரதக் காவி யத்தில் 8000 செய்யுள்களே இருந்தன. இதற்கு 'ஜெய பாரதம்' எனப் பெயர்! இதுவே, காலப்போக்கில், 24 ஆயிரம் செய்யுள் களையும், பின்னர், 1 லட்சம் செய்யுள்களையும் கொண்ட 'மகாபாரதம்' ஆக வளர்ந்துவிட்டது. உண்மை ஒருநாள் வெளியானால்?இதுவரை, ஜெயபாரதம் நமக்குக் கிடைக்கவில்லை! அதைப் படித்தால், ஒருவேளை பாரதக் கதையின் உண்மை உருவத்தை நாம் தெரிந்து கொள்ள வழியிருக்கிறது?" என்கிறார், குருச்சேத்திரப் பல்கலைக் கழகத்துத் தொல் பொருள் ஆய்வுத் துறைப் பேராசிரியர் டாக்டர் உதய்வீர் சிங் அவர்கள். இவர், மகாபாரத ஆய்வுப் பணியில் பல்லாண்டுகளாக ஈடுபட்டு வருபவர். கேள்வி (கேலி)க் குறி:"40 இலட்சம் பேர் கொண்ட பெரிய படைகள் இந்தக் குறுகிய இடத்தில் போரில் எப்படிப் பங்கு கொண்டன? என்பது கேள்விக் குறியான விஷயமாக இருக்கிறது! இத்தனை பெரிய எண்ணிக்கை, கவியின் கற்பனை யாக இருக்கலாம்" - என்று குறிப்பிட்டுள்ளார் டாக்டர் உதயவீர்சிங். ஒன்றும் காணவில்லை!அவர் மேலும் கூறுகிறார்: "குருச் சேத்திரத்திலிருந்து, சுற்றிலும் மேட்டுப் பகுதிகள் இருக்கின்றன. இங்கிருந்து 2 கல் தொலைவில் அஸ்திபூர் என்று ஓர் இடம் இருக்கிறது. இங்குதான், பாரதப் போரில் உயிரிழந்த போர்வீரர்களின் உடல்கள் எரிக்கப் பட்டன - என்பது அய்தீகம். இப்போது, இந்த அஸ்திபூருக்குப் போனால் ஒரு அஸ்திக்குன்றைக் கூட (எலும்புச் சாம்பல் மேடு)ப் பார்க்க முடியாது" - (தகவல்: நூல் - 'கண்ணனைத் தேடி' - டி.கே.வி. இராஜன்) எதுவும் கிடைக்கவில்லையே? "மகாபாரதத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் அரசர்களின் கல் வெட்டுகளோ, செப்பேடுகளோ, காசுகளோ இதுவரை எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை!" - என்கிறார், மய்ய அரசுத் தொல் பொருள் துறையின் மேனாள் டைரக்டர் ஜெனரல் பேராசிரியர் பி.பி. வால் அவர்கள். பானை ஓடும், பாரத காலமும்:தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்த ஆதாரங் களை வைத்துக் கொண்டு பார்க்கும் போது, அஸ்தினா புரத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பானை ஓட்டின் காலம் கி.மு. 1100 எனக் கணக்கிடப் பட்டுள்ளது. எனவே, இப்பானை பாரத காலத்தைச் சேர்ந்ததில்லை என்று தெரிய வந்துள்ளது. மகாபாரத காலம் கி.மு. 3000 வாக்கில் - என்பது முன்னர்க் குறிப்பிட்டுள்ளோம். ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே! மகாபாரதக் கதை நிகழ்வு பற்றிய எந்தத் தடயங்களும் உ.பி. அமைச்சர் கூறும், குருச்சேத்திரப் பகுதியில் அதாவது புதுடில்லியிலி ருந்து 150 கி.மீ. வடமேற்கில் கிடைக்கவில்லை! இந்நிலையில், உ.பி. அமைச்சர் ஹமீத் அவர்கள் எதை ஆதாரமாக வைத்துக் கொண்டு பாக்பத் - பர்னாலா இடையிலான 60 கி.மீ. தூரம் மகா பாரத காலத்தினை நினைவூட்டுவதாக, ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! - என்று கூறுகிறார் என்பது நமக்குத் தெரியவில்லை! உங்கள் விருப்பம்! "நீண்ட குகை அப்பகுதியில் இருப்பதால் மகா பாரதம் நிஜம்" என்கிறார் அமைச்சர். அது, மெய்ப் பிக்கப்பட வேண்டாமா? மெய்ப்பிக்கப்பட்டதா? அந்தக் குகை, கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று ஏதேனும் வரலாற்று அறிவியல் ஆய்வு கூறியுள்ளதா? ஒரு பகுதியில், குகை ஒன்று இருப்பதாலேயே, 'பார், பார்! அது மகாபாரத காலக் குகை!' என்று எப்படிக் கூறலாம்? வெறும் கற்பனை, யூகத்தை, தன் விருப்பத்தை உண்மை - என்று அவர் எப்படிக் கூறலாம்? இது என்ன 'உங்கள் விருப்பமா'? கற்பனையின் விற்பனை! வரலாற்று ஆய்வு முடிபுகளிலிருந்து மகாபாரதம் 'நிஜம்' அல்ல; வரலாறு அன்று; கற்பனைக் கதை என்றுதான் கூறமுடியும். கற்பனையை வரலாறு என்று விற்பனை செய்யலாமா? இது தகுமா? முறையா? சரியா? காரணம் புரிகிறதா? "இந்துத்வா என்ற பெயரில் உ.பி.யிலும், மத்தியி லும் ஆட்சி நடத்திய தே.ஜ. அரசு செய்யாத இந்த முயற்சியை சமாஜ் வாடி அரசு செய்ய முன் வந்துள் ளது குறிப்பிடத்தக்கது" - என்று 'தினமலர்'க்காரர் புல்லரித்துப் போய் எழுதுகிறாரே? என் செய்ய? நமது சமுதாயம் ஏன், பிற்படுத்தப்பட்டு தாழ்த்தப் பட்டுப் போய்க் கிடக்கிறது? என்பதற்கு சமாஜ்வாடிக் கட்சி அரசின் செயல்பாடு உலகுக்குத் தெரிவித்து நிற்கிறதே? இப்படிச் 'சூத்திர' அரசு இந்துத்வாவுக்கு வெண்சாமரம் வீசலாமா? இதைக் கண்டு நாம் வெட்கப்படுகிறோம்! வேதனைப்படுகிறோம்! வேறு என்ன செய்ய? - நன்றி: மறுமலர்ச்சி
  7. Right click here and select Save Target As..