Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

karu

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  1,930
 • Joined

 • Last visited

 • Days Won

  1

Everything posted by karu

 1. வரவேற்புக்கு நன்றி தமிழ்த் தேசியன்.
 2. தீரா விடம் – சித்தி கருணானந்தராஜா தெள்ளுதமிழினுக்கு திராவிடமென்றொரு தீக் கொள்ளியை வைத்தாரடி கிளியே கொடுமை புரிந்தாரடி உள்ளத்தில் நாம் தமிழர் உண்மை அதை உணர்ந்தும் பள்ளத்தில் வீழ்ந்தோமடி கிளியே பற்றை இழந்தோமடி ஆரியச் சங்கரரும் ஆங்கிலக் கால்டுவெல்லும் பேரிதை வைத்ததனால் கிளியே பெருமையிழந்தோமடி ஆரிவர் எங்குளரென் றனைவரும் விழித்திடத் தா கூரும் அழைத்தாரடி கிளியே கூற்றிடம் வீழ்ந்தோமடி நாம்தமி ழர்கள் என்று நம்மினத் தார்க்கும் சொல்ல நாத்தடுமாறுதடி கிளியே நகைப்புக்குள்ளானோமடி ஏன் தமிழர்க்கு இந்த இழிநிலை என்றுலுகம் எம்மை இகழுதடி கிளியே இதுவென்ன மாயமடி சாதிகள் தன்னைக்கொண்டு சமத்துவம் என்னும் பேரில் மோதிட வைத்தாரடி கிளியே மூடராயானோமடி ஆதரவற்றிருந்த அடிமை நிலையொழிக்க யாதவர் செய்தாரடி? கிளியே நாம்குழி வீழ்ந்தோமடி ஈழத்தமிழர் கொடு இனக்கொலையால் மடிந்து பாழ்பட விட்டாரடி கிளியே பதவிக்கலைந்தாரடி தாழ்வுற்றுக் கொடுமையினால் தவித்துக் கிடக்கையிலே தலைமைக்கு நின்றாரடி கிளியே தகைமை இழந்தாரடி திராவிடம் என்று வாயாற் செப்பிடும் போதில் நாவில் அராவிடம் ஊறுதடி கிளியே அடிமைகளானோமடி விரைவினில் இத்துன்பத்தை மீட்டுத் துயர் துடைக்க உரியவர் வந்தாலன்றி கிளியே உள்ள மகிழ்வேதடி
 3. முன்பு எங்களூரிலிருந்து சென்ற ஒரு பாஉ ஒரு வார்த்தைக்குக் கூட வாயைத் திறக்கவில்லை. ஒரு தடவை இருமினாராம் இன்னொரு தடவை தும்மினாராம் என்று கேள்வி. அவர் சமீபத்தில் இறந்து விட்டார். இப்படிப் பலபேர் இருக்கிறார்கள். உங்களுக்குத் தெரியுமா உலகப்புகழ் பெற்ற இயற்பியல் விஞ்ஞானி சர் ஐசாக் நியூட்டனுக்குப் பிரபுக்கள் சபையில் கௌரவ உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அங்கு நடந்த விவாதங்கள் எதிலும் அவர் பங்குபற்றவில்லை. ஒரே ஒரு தடவை சம்மரின்போது ”கடும் புழுக்கமாயிருக்கிறது அந்த யன்னலைத் திறந்து விடுங்கள்.” என்றாராம்.
 4. இன்னும் ஐம்பது வருடம் வாழ நமக்குப் பிராப்தியில்லை. ஆனால் சிறீலங்காவில் பௌத்த பிக்குகள் காடுகளிலுள்ள சிலமரங்களின் முன் கொண்டு போய் நோயாளிகளை நிறுத்தி அவற்றுடன் தொடர்பாடலை ஏற்படுத்தி சில நோய்களைக் குணப்படுத்தும் முறையைக் கையாளுவதாக அறிகிறேன். இதுபற்றி நன்கு அறிந்தவர்கள் எழுதுங்கள்.
 5. அப்படிப் பார்த்தால் யாரும் தங்கள் பெயருக்குமுன் இனிசியலைப் போடமுடியாது. இனிசியலில் இன்னும் எத்தனையோ பேர் இருப்பார்கள்.
 6. இரா என்பது இரண்டு அர்த்தத்தைக் கொண்டது. 1. அவரது பாட்டனார் தமிழரசுத்தலைவர் சி. மூ. இராசமாணிக்கம் பா.உ அவர்களையும் 2. சாணக்கியனின் தந்தை டாக்டர் இராசபுத்திரன் அவர்களையும் குறிக்கிறது. இதில் சங்கடப்பட என்ன இருக்கிறது.
 7. மிகப் பயனுள்ள ஒரு கட்டுரை. கைராசியென்று ஒரு விடயமிருக்கிறது. அது ஆராய்ச்சியின் மூலம் புள்ளிவிபர ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தில் ஒரு விரிவுரையின்போது ஆசிரியர் குறிப்பிட்டார். அதன்படி மரங்களை நடுபவர்கள் அல்லது விதைப்பவர்களைப் பொறுத்து, தாவர வளர்ச்சியில் அல்லது விளைச்சலில் வேறுபாடு இருக்குமாம். வீடுகளில் மக்கள் நடமாடும் பகுதிகளுக்கு அருகிலிருக்கும் மரங்கள் - குறிப்பாகத் தென்னை மரங்கள், தொலைவிலிருக்கும் மரங்களைவிட அதிகம் காய்ப்பதை நான் அவதானித்திருக்கிறேன். செடிகளிடம் அன்பு செலுத்தி அவற்றை அக்கறையோடு பராமரிப்பதால் அதிக பலனைப் பெறமுடியுமென்பது உண்மையே.
 8. வரவற்பதற்கு நன்றி தமிழ்த்தேசியன்.
 9. வளையற் குவியல் ஒன்றைக்காட்டி வல்லமை கேட்டதோர் கவிதை. என் நெஞ்சிலுதித்ததை அங்கு பகிர்ந்தேன். இது கவிதையல்ல ஓர் ஏழையின் குமுறல். அது கீழே. ஓர் ஏழையின் குமுறல் கைநிறையப் போடக் கலர்கலராக் குவிச்சிருக்கு பைநிறையப் பணமிருந்தாப் பார்த்துப் பார்த்து வாங்கிக்கலாம். ஏழைக நம்பளுக்கு எதுக்கிந்த வளையலெல்லாம் வாழ வழியில்லையாம் வளையலொரு கேடா புதுப் புள்ளத்தாச்சிக்குப் போடுவாங்க வளைகாப்பு எட்டு மாதப் புள்ளத்தாச்சி எம் பொழைப்பு கல்லுடைப்பு கல்லுடைக்கும் கைக்கு காப்பு சரிவருமா? நாட்கூலி வாங்கி நானூத்தும் கஞ்சிலதான் ஆத்தா மனம் மகிழும் அவவயிறும் குளிரும் சீக்காளி எம்புருசன் செதைஞ்சு கெடக்கையில காப்பு வந்து என்னோட கையிலதான் ஏறிடுமா வாணா எனக்கிந்த வளைகாப்பு ஆசையெல்லாம் வீணாச் செலவழிச்சு வீம்பு பண்ண ஏலாது.
 10. அரசியல் ஆதிகாலம் தொட்டு எம்மை ஆட்டுவிக்கும் அரசியல் வேதனைக்குள் மக்கள்தன்னை விட்டுவிட்ட அரசியல். சாதியென்ற சகதியுள்ளே தாழ்ந்து விட்ட பேயரை மோதவிட்டி லாபம்காண முயலுகின்ற அரசியல் கட்சியென்ற பேரில்சேரும் கள்வர்தம்மை ஆட்சியில் எச்சரிக்கை ஏதுமின்றி ஏற்றிவைக்கும் மக்களை உச்சநிலை வறுமைக்கேற்றி ஒன்றுமற்ற கையராய் பிச்சையேற்க வைத்திடும் பெரும்துரோக அரசியல் மதம்பிடித்த பொய்மைதன்னை வாய்மையென்று காட்டியே நிதம்நிதம் கொலைக்களத்தில் நின்று ஆடும் நீசரை வதம்புரிந்து உலகநீதி வாழ வைத்திடாமலே அதர்மமே நிலைக்க வைக்கும் ஆற்றலற்ற அரசியல் நடிகனுக்கு மிங்குதீய கொடியனுக்கு மரசியல் நாட்டைவிற்று ஊழல்செய்ய நாடுவோர்க்கு மரசியல் அடிமைவாழ்வைப் போக்கிமக்கள் அடையவேண்டி விடுதலை, அரசியல் செய்வோர்க்கு மட்டும் ஆவதொன்று மில்லையே. சித்தி கருணானந்தராஜா.
 11. காணாமல் போனாலும் இலகுவில் கண்டுபிடிக்க முடியாதவாறு அமைத்துள்ளார்கள்.
 12. தங்கள் இலக்கிய ரசனையோடு கூடிய விளக்கத்துக்கு மிக்க நன்றி சோமசுந்தரம்.
 13. கேள்விக்கு நன்றி கடஞ்சா. பிளேனில் ஓட்டுனர் இருந்து வேலை செய்யுமிடத்தை கொக் பிற் என்பார்கள். அதனை சேவற் குழியென்று தமிழ்ப்படுத்தினால் புதிருக்கு விடை கிடைத்துவிடும்.
 14. கருத்துக்கு நன்றி பெருமாள். இது மிகவும் வெயிலெறித்த ஒரு கோடையில் எழுதியது. தற்போதுதான் யாழில் பதிவிட்டேன். வரவேற்புக்கு நன்றி தமிழ்த்தேசியன்.
 15. மறைந்த ஈழத்துப் பெருங்கவிஞர் மகாகவியவர்கள் நானறிந்தவரை குறும்பாக்களை தமிழில் முதன்முதல் அறிமுகம் செய்தவர். அவரைப்பின்பற்றிப் பலரும் பின்னர் குறும்பாக்களையெழுதத் தொடங்கினார்கள். குறும்பா என்பது குறுகியா பாவாகவும் அதேவேளை குறும்பு கலந்ததாகவும் இருந்தாலேயே குறும்பா இலக்கணத்துக்கு உட்படும். எமது ஈழக்கவிஞர் மகாகவியைப் பின்பற்றி நானெழுதிய தற்போதைய யுகே காலநிலைக்கேற்ற குறும்பாவை இங்கு தருகிறேன். நண்பர்களும் இதை முயற்சித்துப்பார்க்கலாம். நாற்படையுங் கொண்டுயர்ந்த நாடு -யுகே நாணா நவமாதர் வீடு காற்தொடையின் கவடுவரை காரிகையர் கவுணுயரும் காலமிங்கு சம்மர் கடுஞ் சூடு
 16. மிக்க நன்றி வாத்தியார் அவர்களே! என்னால் உங்களை யூகித்தறிய முடியவில்லை, மன்னிக்கவும்.
 17. இதில் பிரமாதமாகச் சொல்ல என்ன இருக்கிறது? மெல்லிய கோடுகளால் திருவள்ளுவரை வரைந்துவிட்டு அக்கோடுகளின்மேல் தமிழ் எழுத்துக்களை எழுதியிருக்கிறார்.
 18. சாணக்கியன் எம் பி. இதில் கலந்து கொள்ளவில்லையா? அவரது ஊரில்தானே சந்திப்பு நிழ்ந்தது.
 19. அந்தச் சமபவத்திற்குக் காரணமாயிருந்தவர்கள் கைதாகி இதுவரை தண்டனைக்குள்ளாக்கப்படவில்லை. ஒரு நீதிபதிக்கே இந்த நிலையென்றால் சாதாரண மனிதர்களின் பாதுகாப்புக்கு இலங்கையில் என்ன உத்தரவாதம் இருக்கப் போகின்றது?
 20. நன்றி பாஞ்ச். எனக்கு அந்த நேரம் அப்படி வாயில் வரவில்லை. அதனால் உணவுப்பொதியென்று போட்டுவிட்டேன். ஆஹா வாய்க்கரிசியே சிறப்பான உவமை.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.