Jump to content

karu

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    2069
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Everything posted by karu

  1. மிகுந்த நன்றி புங்கையூரான். தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி குமாரசாமி.
  2. இன்று தாய்மொழி்தினம். எம் உயிரினுமினிய தமிழன்னைக்காக 2020 பெப்ரவரி 21 இல் நானெழுதிய அருட்புகழ் கீழே தரப்பட்டுள்ளது.
  3. மிக்க நன்றி நுணாவிலான். நன்றி ஈழப்பிரியன்.
  4. மிக்க நன்றி சுவி. முயற்சிக்கிறேன்.
  5. View of our Earth from Mars மனிதா உன்னைத்தான்! வானப்பரப்பினிலெம் மண்ணோர் சிறுபுள்ளி காணவும் கூடாக் கடுகு. - எதற்காக உன்னையே எண்ணி உள்ளம் கலங்குகிறாய். செவ்வாய்ப் பரப்பிருந்து, சிற்றொளியைக் காலுகிற பூமியை நோக்குகையில் புழுதிமணியாக, தோற்றமளிக்கிறது தோற்றமற்றும் போகிறது. உன்னை நீ எண்ணிப்பார் உலகத்தில் எத்தனைபேர் சாதியென்றும் சமயமென்றும் தம்வாழ்வை வீணாக்கி நீதியறியா நீசர்களாய்த் தம்முள்ளே மோதியழிகின்றார், மூடர்களாய்ச் சாகின்றார். எம்மினிய சந்ததியே எண்ணிப்பார் இத்துயரை. மண்ணில் எதற்காக வாழ்வைக் கெடுக்கின்றோம். தூசினும் தூசாய் தூலமற்ற சூனியத்தில் ஞாலம் உதித்ததில் நாம் பிறந்து வாடுகிறோம். ஆசை பலகோடி அத்தனையும் தீராமல் காசு போருள் தேடி கணக்கற்ற வேதனைகள் பட்டுத் தவித்துப் பதறுகிறோம் ஆதலினால் விட்டுவிட முடியா விபரீத எண்ணங்கள் நெஞ்சை நிரப்பாது நிம்மதியை நீதேடு. கொஞ்சம் அமைதிபெறு குவலயத்திலே நீயோர் புழுதிமணி அஃதைப் புரிந்துகொள் எப்போதும்.
  6. சிறீலங்கா வங்குரோத்து நிலைக்கு வந்து விட்டதால் இராணுவ முகாம்களைப் பராமரிக்க முடியாத நிலைக்கும் வந்துவிட்டது. தலைவர் வேறு வரப்போறாராம் என்ன செய்யப் போறாங்களோ தெரியாது. புலம்பெயர் தமிழர்களின் அன்னிய முதலீடுகளைத் தற்போதைக்குத் தவிர்ப்பது நல்லது. அல்லாவிடில் பொல்லைக் கொடுத்து அடிவாங்கிய கதையில்த்தான் முடியும்.
  7. அஷ்வ கோசரின் புத்தசரிதம் - ஆங்கில மூலத்திலிருந்து. சிலவருடங்களுக்கு முன் இந்திய தத்துவஞானி அஷ்வகோசரின் புத்த சரிதம் என்னும் நூலைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அந்த சமஸ்கிரத நூலை எட்வாட் B. கொவெல் என்னும் ஆங்கில அறிஞர் எடிட் செய்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தார். அதில் புத்த பெருமானின் பிறப்பு வரையான பகுதிகளை மொழிபெயர்த்துப் பார்த்தேன். கம்பியூட்டரில் தொலைந்துபோன அந்தப்பகுதி தற்போதுதான் கையிற் கிடைத்தது. அதை எனது தவறுகளுடன் சேர்த்து 2023 இல் தற்போது முகநூலில் வெளியிடுகிறேன். பிடித்தவர்கள் வாசித்துவிட்டுத் தங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள் அது மேற்கொண்டு அந்த நூலை மொழிபெயர்த்து முடிக்க மிகவும் உதவியாயிருக்கும். புத்தர் பிறப்பு - ஆங்கில மூலத்துடன் 1. That Arhat is here saluted, who has no counterpart, — who, as bestowing the supreme happiness, surpasses (Brahman) the Creator, — who, as driving away darkness, vanquishes the sun, — and, as dispelling all burning heat, surpasses the beautiful moon. பேரானந்தம் தன்னைப் பெரிதுவந்து பரிசளிக்கும் ஆருகதன் ஒளிரும் ஆதித்யனோடழகு சேரும் மதியும் ஒரு சேரத் தோற்றோடும் யாரும் நிகரில்லா நம்பி இருளகற்றும் கூர் மதியோன் பிரமன் கூட நிகராகா தேரனை இங்கு சிரம்தாழ்த்தி யாம்பணிவாம். 2. There was a city, the dwelling-place of the great saint Kapila, having its sides surrounded by the beauty of a lofty broad table-land as by a line of clouds, and itself, with its high-soaring palaces, immersed in the sky. ஞானத்துயர்ந்த கபிலன் வசிப்பிடமாய் நாற்புறமும் மேகங்கள் சூழ மணிமாடங்கள் வானத்துள் ஆழும் வகையே தனியழகு காட்ட நகரொன்று கண்முன்னேதான் பரவி ஓங்கியுயர்ந்து ஒளிகாலி நிற்கிறது. 3. By its pure and lofty system of government it, as it were, stole the splendour of the clouds of Mount Kailāsa, and while it bore the clouds which came to it through a mistake, it fulfilled the imagination which had led them thither. ஆட்சியுயர்வின் அழகால் அதே திசையில் காட்சியளிக்கும் கைலாசத்தின் நேர்த்திதனை மௌ;ளக் கவர்ந்து விரைந்தோடும் மேகத்தின் உள்ளார்ந்து தங்கள் உயர்வை வெளிப்படுத்தும் மாடங்கள் கைலை மலையின் முகடுகளோ என்று தவறாய் எமையெண்ண வைத்துவிடும். 4. In that city, shining with the splendour of gems, darkness like poverty could find no place; prosperity shone resplendently, as with a smile, from the joy of dwelling with such surpassingly excellent citizens. அந்தநகரில் அழகுமிகு ரத்தினங்கள் சிந்துமொளியால் சேர இடமின்றி வறுமை இருளுக்கு வாழ்வில்லை செல்வமே முந்தியொளிர்ந்து முறுவலிக்கும். மாந்தர்கள்தம் சிந்தனையில் என்றும் சிறக்கும் மகிழ்ச்சியினால் அந்தமிலா இன்பமதுவே நிறைந்திருக்கும். 5. With its festive arbours, its arched gateways and pinnacles, it was radiant with jewels in every dwelling; and unable to find any other rival in the world, it could only feel emulation with its own houses. வாயில் வளைவுகளில் வரவேற்கும் மலர்ப்பந்தல் கோயிற் கலசமெலாம் குவிந்த நவரத்தினங்கள் வாழிடங்கள் எங்கும் வகைவகையாய் ஆபரணம் சிந்தி ஜுவலிக்கும் சீருக்கு பூதலத்தில் முந்தி நிற்க யாதும் முயலா முழுமையினால் அந்த நகர் மனைகள் அவற்றுக்குள் போட்டியிடும். தொடரும்......... 6. There the sun, even although he had retired, was unable to scorn the moon-like faces of its women which put the lotuses to shame, and as if from the access of passion, hurried towards the western ocean to enter the (cooling) water. அரவிந்த மலர்நாணும் அரிவையரின் மதிவதனமதனை வெல்ல ஆசையுற்றுச் செங்கதிரோன் நிறைவேறாது மறைவாக மேற்கடலின் குளிர்நீர்தன்னில் வந்தாழ்ந்து இளைப்பாறல் வழக்கம் ஆங்கு. 7. Yonder Indra has been utterly annihilated by the people when they saw the glories acquired by the Sakyas,’-uttering this scoff, the city strove by its banners with gay-fluttering streamers to wipe away every mark of his existence. மகிமைபெற்ற சாக்கியரின் பெருமை சொல்லி மடமடெனச் சிறகடிக்கும் பதாகையெல்லாம் நகரமதில் பறப்பதனைக் காணுமாந்தர் நகைத்திடுவர் இந்திரனைப் பெரியோன் என்றால் 8. After mocking the water-lilies even at night by the moonbeams which rest on its silver pavilions, — by day it assumed the brightness of the lotuses through the sunbeams falling on its golden palaces. இரவுமதி விளயாடி நீர் ஆம்பலோடு இளைப்பாறும் நகர வெள்ளி மைதானங்கள் விரவு மொளிக் கதிராலே தாமரையின் பொலிவை மேவி; அழகூட்டுவன பொன்மாடங்கள் 9. A king, by name Śuddhodana, of the kindred of the sun, anointed to stand at the head of earths monarchs, — ruling over the city, adorned it, as a bee-inmate a full-blown lotus. 10. சுத்தோதனனெனனும் சூரியவம்சத்தான் துலங்ககு நகர் தனக்கழகு கூட்ட முடிசூடி இத்தரையின் மன்னர்களின் தலைவனெனச் சீரோ(டு) இருக்கின்றான் தாமரைவாழ்ந்திசை பரப்பும்;; வண்டாய். 10. The very best of kings with his train ever near him, — intent on liberality yet devoid of pride; a sovereign, yet with an ever equal eye thrown on all, — of gentle nature and yet with wide-reaching majesty. அமைதிநிறைந் தருள் பரவும் ஆட்சியதனாலும் அனைவருக்கும் சமமான பார்வையதனாலும் சுமைதெரியாச் சுதந்திரத்தின் பெருமையதனாலும் சுற்றவுள்ள மன்னரெலாம் அவன் நண்பரானார். தொடரும்...... அஷ்வ கோசரின் புத்தசரிதம் - தொடர்ச்சி-ஆங்கில மூலத்திலிருந்து. 11. Falling smitten by his arm in the arena of battle, the lordly elephants of his enemies bowed prostrate with their heads pouring forth quantities of pearls as if they were offering handfuls of flowers in homage. பகைவர்களின் வேழங்கள் போர்க்களத்தில் பலவகையாய் முத்துதிர்க்கப் பாய்ந்து குத்தும் தகைமையினால் அவன்மீது யானைக்கூட்டம் தாழ்ந்து மலர் தூவிடுதல் வழமைக் காட்சி 12. Having dispersed his enemies by his preeminent majesty as the sun disperses the gloom of an eclipse, he illuminated his people on every side, showing them the paths which they were to follow. கதிரினொளி கிரகணத்தைக் கலைத்தல் போலும் எதிரிகளை ஓடோடச் செய்யும் வண்மை அதனொளிரும் பிரபையினால் மக்கள் செல்லும் வழிப்பாதை தெளிவடைந்து காட்சி நல்கும் 13. Duty, wealth, and pleasure under his guidance assumed mutually each other’s object, but not the outward dress; yet as if they still vied together they shone all the brighter in the glorious career of their triumphant success. கடமை திரு மகிழ்வெல்லாம் ஒன்றையொன்று கண்காணித்தவன் வழியில் ஒன்று சேரும் தடையெதுவுமின்றி வரும் வெற்றிதன்னால் தம் பிரபை தனைக்கூட்டி ஒளியைச்சேர்க்கும். 14. He, the monarch of the Śākyas, of native pre-eminence, but whose actual pre-eminence was brought about by his numberless councillors of exalted wisdom, shone forth all the more gloriously, like the moon amidst the stars shining with a light like its own. சந்திரனின் பிரபையதால் உடுக்கள் எங்கும் தம்பிரபை காட்டுதல்போல் அவனைச் சூழ்ந்த மந்திரிகள் சாக்கியரின் மதிப்பைக் கூட்டி வாழ்கின்றார் உயர் மதியின் மகிமையோடு. 15. To him there was a queen, named Māyā, as if free from all deceit (māyā) — an effulgence proceeding from his effulgence, like the splendour of the sun when it is free from all the influence of darkness, a chief queen in the united assembly of all queens. அவனுக்கோர் அருள்வடிவாய் மாயா என்னும் அழகு மயில் மனைவியென வாய்த்தாள் அன்னாள் சிவனுக்குப் பார்வதிபோல் சிறந்தாள் எல்லா தேசத்து ராணிகட்கும் தலையாய் நின்றாள். தொடரும்..... புத்த சரிதம் தொடர்ச்சி ....அஷ்வகோசரின் ஆங்கில மூலத்திலிருந்து. 16. Like a mother to her subjects, intent on their welfare, — devoted to all worthy of reverence like devotion itself, — shining on her lord’s family like the goddess of prosperity, — she was the most eminent of goddesses to the whole world. அன்னை தன் புதல்வர்க்கெல்லாம் நன்மையே நினைத்தல் போலும் அவளது அர்ப்பணிப்பு அனைவர்க்குமாயிற்றம்மா உன்னதக் குடும்பம்தன்னில் உதித்ததோர் தேவி அன்னாள் உலகமே மதிக்கும் தெய்வ உருவினளாக வாழ்ந்தாள் 17. Verily the life of women is always darkness, yet when it encountered her, it shone brilliantly; thus the night does not retain its gloom, when it meets with the radiant crescent of the moon. மாதர்க்கு இருண்ட வாழ்வு வழமையே இருந்தும் துன்பம் யாதும் வந்தவளைச் சேரின் நலமதாய் மாறும் வானில் சோதியாய் மிளிரும் அந்தச் சுடர்மதி இருளைத் தூர மோதியே துரத்தல் போலத் துன்பமும் அகல வாழ்ந்தாள் 18. This people, being hard to be roused to wonder in their souls, cannot be influenced by me if I come to them as beyond their senses,’ - so saying, Duty abandoned her own subtile nature and made her form visible. இலகுவில் அதிர்ந்து போகாத மக்களிடம் அவர்களின் புலன்களால் அறியப்படாமலேயே நான் சென்றடைந்தாலும் பாதிப்படையார் என்று சொல்லி கடமை தன் சுய உருவை வெளிப்படுத்தாமல் இருப்பாள். 19. Then falling from the host of beings in the Tuṣita heaven,1 and illumining the three worlds, the most excellent of Bodhisattvas suddenly entered at a thought into her womb, like the Nāga-king entering the cave of Nandā. அரவரசன் தன்குகையுள் நுழைதல் போலும் அழகொளிர மூவுலகும் துசித சுவர்க்கம் அதிலிருந்து இறங்குகியுயர் போதிசத்வன் அவளுதரம் தனில் வந்து பள்ளி கொண்டான். 20. Assuming the form of a huge elephant white like Himālaya, armed with six tusks, with his face perfumed with flowing ichor, he entered the womb of the queen of king Śuddhodana, to destroy the evils of the world. வெண்கைலை நிகர்த்த அறு கொம்பு வேழம் விரிந்த முகம் சுரக்குநறு மணத்தினோடு தண் பொய்கை சேர்ந்ததென சுத்தோதன்னன் தன் மனைவி உதரத்தில் பிள்ளை சேர்ந்தான். தொடரும்.......... புத்த சரிதம் தொடர்ச்சி ....அஷ்வகோசரின் ஆங்கில மூலத்திலிருந்து. 21. The guardians of the world hastened from heaven to mount watch over the world’s one true ruler; thus the moonbeams, though they shine everywhere, are especially bright on Mount Kailāsa. அகிலத்துக் காவலர்கள் சுவர்க்கத்தினின்று அவனிக்கோர் அருளாளன் அழகுதனைக்காண முகில் தட்டும் மலைவிரைய எங்குமொளிகாலும் முழுமதியும் கைலைக்குப் பேரழகை நிறைத்தான் 22. Māyā also, holding him in her womb, like a line of clouds holding a lightning-flash, relieved the people around her from the sufferings of poverty by raining showers of gifts. மின்னற் கீற்றொளிதன்னை மேகங்கள் புதைத்து மேவியொளி காலுதல்போல் வறுமையிலும் நிறைவாய் முன்வந்து மக்கள் பொழிந்திட்ட பரிசுகளால் மாயா தன் கருவறையில் அவனை நிறைத்திட்டாள் 23. Then one day by the king’s permission the queen, having a great longing in her mind, went with the inmates of the gynaecium into the garden Lumbinī. ஓர் நாள் தன் அரசனவன் அனுமதியினோடு உள்ளத்தே பெருமாசை உற்பவிக்க ஊரின் திருவான லும்பினியென்றினிய பெயர்கொண்ட தேமலர்க்கா நோக்கித் தோழியரோடு போனாள் 24. As the queen supported herself by a bough which hung laden with a weight of flowers, the Bodhisattva suddenly came forth, cleaving open her womb. மலர்க் கொத்தின் பாரத்தால் வசைந்திருந்தோர் கொம்பை வளைத் தெடுக்க அரசி முயற்சித் திட்ட போது அசைந்திட்ட போதிசத்வன் அவழுதரத்திருந்தே அவனிதனில் பிறப்பெடுக்க ஆயத்தமானான் 25. At that time the constellation Puṣya was auspicious, and from the side of the queen, who was purified by her vow, her son was born for the welfare of the world, without pain and without illness. அன்றந்தக் கணத்தினிலே அமைந்தது நல் மூகூர்த்தம் அரசியவள் பிரார்த்தனையால் அழகு மகன் பிறந்தான் சென்றொழிய நோய் நொடிகள் தீமை துயர் யாவும் சேயவனின் திருவருளால் சேர்ந்தது மெய்ஞானம். புத்த பகவானின் பிறப்புப் பற்றிய பகுதி நிறைவடைகிறது.
  8. பெருமாள்! சாணக்கியன் யார்? அவர் பூர்விக கிராமம் எது? அவரது தாத்தா அதாவது அப்பப்பா யார் என்பதெல்லாம் ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்த விடயம். அவர் சுத்தமான தமிழரசுக்கட்சிக் குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதைக் கருத்திலெடுப்பதை விட்டுவிட்டு எப்படியாவது அவர்மீது களங்கம் கற்பிக்கவே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சீமானை மலையாளி என்பது போலத்தான் இதுவுமொன்று. இத்தாலிய ராகுல், அமெரிக்காவின் பராக் ஓபாமா, யுகேயின் ரிஷி என்று எத்தனையோ பேர் வந்துவிட்ட பின்பும் இன்றும் பிற்போக்குத்தனமான பிரதேச வாதத்தின் துணையுடன் அரசியல் மேதாவிகளாகத் தம்மை முன்னிறுத்த முனைபவர்களைக் கண்டும் காணாமல் விடுவது நமது இனத்துக்கு நாமே செய்யும் துரோகமென்பதால் இந்தப் பதிவில் சற்று முனைப்பாகப் பதிலிடுகிறேன். சாணக்கியனைச் சுற்றியுள்ள இந்தத் தேவையற்ற பிரதேசவாதப் பொறாமைவலையைப் பிய்த்தெறிவதற்கு இன்னும் கூரிய ஆயுதங்கள் தேவையாயிருக்கிறது. தற்போது நீங்களும் சேர்ந்திருக்கிறீர்கள் கூடியவரை உங்களைப் போன்றவர்களின் முகமூடிகளைக் களைவேன். தற்போதைக்கு எனக்கும் அதிகம் வேலைகளில்லை.
  9. அன்ரன் பாலசிங்கம் கிழக்கு மாகாணத்து மண்டூரைச் சேர்ந்தவர். சிறுவயதில் அவர் வாழ்ந்த இடம் சொறிக்கல்முனை என்னும் படுவான்கரைக் கிராமம். பின்னர் அவர் பெற்றோர்களால் வடக்குக்குக் கூட்டிச் செல்லப்பட்டு அங்கேயே வாழ்ந்தார் படித்தார். இன்றும் அவரது இரத்த உறவுகள் மண்டூரில் வாழ்கிறார்கள். இவையெல்லாம்தான் உண்மைகள். நீங்கள்தான் கொஞ்சம் ஓவராயிருக்கிறீர்கள். மண்டூர் தமிழரசுக்கட்சியின் தலைவர் மறைந்த திரு சின்னப்பு மூத்ததம்பி இராசமாணிக்கத்தின் - அதாவது சாணக்கியனின் அப்பப்பாவின் சொந்த ஊர். சும்மா வீட்டுப்படலையைக் கடந்து சப்பாத்துப்போட்டு லண்டனில் அல்லது புலம்பெயர் தேசத்திற்கு நேரே வந்து இறங்கியவர்களுக்கு தெரிந்ததுதான் உண்மையென்று எண்ணி விடாதீர்கள்.
  10. இது தெரியாமல் இவ்வளவு காலமும் இருந்திருக்கிறீர்களே குமாரசாமி.
  11. டியர் சாத்தான்! சும்மா ஊகங்களை முன்வைத்து அரசியல் அலம்பல்களைச் செய்யாதீர்கள். ஏதாவது உருப்படியான கருத்துகள் நிரூபணங்களிருந்தால் அதை முன்வைத்து சாணக்கியன்மீது பழிபோடுங்கள். முன்பும் இவ்வாறே அன்ரன் பாலசிங்கம் அண்ணரைச் சில அரை வேக்காடுகள் அவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவரென்பதால் பழிபோட முற்பட்டார்கள். ஆனால் தேசியத்தலைவரிடம் இத்தகைய குறுகிய மனப்பான்மை கிடையாததால் அவர்களின் பழிபோடல்கள் செல்லாக்காசாகிப் போய்விட்டன.
  12. சும்மா ஏதோ காழ்ப்புணர்ச்சியில் பெரிய அரசியல்வாதி யென்ற எண்ணத்தில் குரைக்கிறீர்கள். புனைபெயருக்குள் ஒழிந்துகொண்டு உங்கள் பொறாமை பிடித்த அரசியல் வெறிக்குத் தீனி தேடுகிறீர்கள். தக்க உதாரணங்கள் காரணங்களோடு சாணக்கியன் தமிழர்களுக்கு இழைத்த துரோகங்களைப் பட்டியலிடுங்கள். சாணக்கியனின் ஆதரவாளர்கள் அதற்குப் பதில் கூறுவார்கள். சாணக்கியனுக்கு இருக்கும் செல்வாக்கு அவரது செயற் திறனால் ஏற்பட்டது. ஊரில் வைத்து மட்டுமல்ல உலகத்திலும் இக்கருத்தை முன்வைக்கலாம். உங்கள் எழுத்தே உங்கள் பிரதேச வாதத்தை வாந்தியெடுக்கிறது. அதை உங்கள் ஊரோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.
  13. சும்மா ஏதோ காழ்ப்புணர்ச்சியில் பெரிய அரசியல்வாதி யென்ற எண்ணத்தில் குரைக்கிறீர்கள். புனைபெயருக்குள் ஒழிந்துகொண்டு உங்கள் பொறாமை பிடித்த அரசியல் வெறிக்குத் தீனி தேடுகிறீர்கள். தக்க உதாரணங்கள் காரணங்களோடு சாணக்கியன் தமிழர்களுக்கு இழைத்த துரோகங்களைப் பட்டியலிடுங்கள். சாணக்கியனின் ஆதரவாளர்கள் அதற்குப் பதில் கூறுவார்கள்.
  14. சாணக்கியன் அரசியலுக்குள் நுழைந்த ஆரம்ப காலத்தில் தமிழர் தரப்பிலிருந்த பலர் அவருக்கு வழிவிடாது குறுக்கே நின்றார்கள் அதனால் அவரால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் நுழைய முடியவில்லை. ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சி இதைச் சாதகமாக்கி அவரை உள்ளிழுத்தது. அதனால் இளம் அரசியல் வாதியான அவர் தவிர்க்க முடியாமல் அவர்களுடன் இணைந்து சிலகாலம் செயலாற்ற வேண்டியிருந்தது. மக்கள் மத்தியில் உரிய செல்வாக்கை அவர் தனது முயற்சியினால் தேடிக்கொண்ட போது, சம்பந்தர் போன்ற தமிழ் தேசியத் தலைவர்கள் அவரின் தகுதியையுணர்ந்து தமக்குள் உள்வாங்கிக் கொண்டார்கள். சாணக்கியன் குடும்பம் பல தியாகங்களைச் செய்த குடும்பம். அவரின் பெரியப்பா சக்கரவர்த்தி இராசமாணிக்கம் இந்திய அமைதிப் படையினரால் அனியாயமாகக் கொல்லப்பட்டார். தனது மனைவியுடன் அநாகரிகமாக நடக்க முற்பட்ட இந்திய இராணுவச் சிப்பாயைத் தாக்கித் தடுக்கமுற்பட்ட குற்றத்திற்காகவே அவர்மீது அந்தக் கொலைவெறித் தாக்குதல் கொடிய இந்தியப் படையினரால் மேற்கொள்ளப்பட்டது. சும்மா கிழக்கைச் சேர்ந்தவர் என்ற காழ்ப்புணர்வில் சாணக்கியன்மீது பலர் ஏதாவது ஒரு சாக்கை வைத்து மலத்தையள்ளி வீசமுற்படுகிறார்கள். ஆனால் இன்றுள்ள இளந்தலைவர்களுள் மிகவும் தகுதிவாய்ந்த தமிழ் அரசியல்வாதி சாணக்கியனாவார். மக்கள் செல்வாக்கு அவருக்கு இருக்கும்வரை எந்த பொறாமை பிடித்த பிரதேச வெறியர்களாலும் அவரை அசைக்க முடியாது. சும்மா குரைத்துவிட்டுப் போகவேண்டியதுதான்.
  15. என்னது? சாணக்கியன் பிள்ளையனுடன் சேர்ந்து கொலைக்களமாடினாரா? எங்கே எப்போது. கையிருப்பதற்காக மலத்தையள்ளிப் பிறரில் வீசலாமா. சாணக்கியன் தமிழ்த்தேசியப் பரம்பரையில் வந்தவர். அவரது பாட்டனார் தந்தை செல்லவாவுடன் இணைந்து தமிழரசுக் கோட்பாட்டை வளர்த்தெடுத்தவர். சிலருக்குச் செக்கும் தெரிவதில்லை சிவலிங்கமும் தெரிவதில்லை. எல்லாவற்றுக்கும் யாழ்ப்பாணத்திலிருந்துதான் ஆட்களைக் கொண்டுவரவேண்டுமா?
  16. சோல்பரி பிரபு வந்து 60 க்கு 40 பிரதிநிதித்துவும் தருகிறோம் கூட்டாக ஆளுங்கள் என்றார். ஜிஜி பொன்னர் போன்றோர் குழப்பியடித்தார்கள். பண்டாரநாயக்காகூட அப்படிச் செய்ய ஒத்துக்கொண்டாராம் என்றெல்லாம் சொல்கிறார்கள். பிறகு உவர்கள் சரிவர மாட்டார்கள் என்று புரிந்து கொண்டு சர்வஜன வாக்கெடுப்பைப் பரிந்துரைத்துவிட்டுப் போய்விட்டார். தற்போது அணிலேறவிட்ட நாய்களாக அண்ணாந்து பார்த்துக்கொண்டு நிற்கிறோம். அதற்கு அந்த மனுசி என்னசெய்யும். 96 வயது வரை வாழ்ந்து காமன் வெல்த்தைத் தனது செல்வாக்கால் கட்டிக்காத்த மனுசி. இன்றும் பலருக்கு அ தைவிட்டுப் பிரிய மனமில்லை. சும்மா ஒரு 20 லட்சம்பேரில் ஒரு சிலர் அந்தப் பெரிய சாம்ராச்சியத்தைப்பார்த்துக் குரைத்துக் கொண்டிருப்பதில் என்ன அறிவு ஜீவித்தனம் வெளிப்படுகிறதோ தெரியவில்லை. இப்போதும் அவர்களிடம்தானே கெஞ்சிக்கொண்டு நிற்கிறார்கள். ஆங்கிலேயனில்லாது எதுவும் சரிவராது தம்பிமாரே! வாயைத் திறந்தால் ஆங்கிலம் அதற்குள் பெரும் சவடால். உலகமே யந்த மனுசிக்காக இரங்குகிறது. இது என்னடாவென்றால் செக்கும் தெரியாமல் சிவலிங்கமும் தெரியாமல் நக்கி முகர்வதனால் நயமென்ன வந்துவிடும்.
  17. ஆண்ட ஆங்கிலேயன் கைவிட்டுப் போனான், ஆட்சியைப் பிடித்துக் கொண்டவன் அடிமையாக்கினான். இது புரியாமல் இருக்கிறீரே நண்பா.
  18. வடக்கத்தையாருக்கும், தெற்கத்திச் சிங்களவருக்கும் அடிமைகளாக வாழப் பழகாமல், அடிமைகளாக ஆக்காமல் உரிய மதிப்புத்தந்து ஆதரிக்கும் பிரித்தானிய சாம்ராச்சியத்திற்கு விசுவாசமாக இருந்து அதன்அரசி 2ம் எலிசபத்தின் மரணத்தில் துயருறுதல் மேலானதாகப் படுகிறது.
  19. சிங்களவருக்கும், இந்துத்துவ வடக்கத்தையாருக்கும் அடிமைகளாக வாழ்ந்து தத்தளித்துக்கொண்டிருக்கும் எங்களைப்போன்றோர் ஆங்கிலேயன் தந்த அகதியென்னும் பேரோடு சிறிதளவாவது விடுதலைக்காற்றைச் சுவாசிக்க உதவியிருக்கும் பிரித்தானிய சாம்ராச்சியத்தின் அரசியான மூதாட்டி 2ம் எலிசபத்தின் மறைவையிட்டுக் கவலையடைவதில் சற்றும் தவறு இல்லை நண்பரே! துக்கம் வந்தால் கொண்டாடுங்கள் அல்லாவிடில் குதூகலித்து மகிழுங்கள். எங்கள் மனம் இப்படி, சகலதுமறிந்த அறிவாளிகளான நீங்கள் அப்படி.
  20. "C:\Users\Karu\OneDrive\Desktop\Queen Elisabeth.jpg" அன்னை எலிசபெத் இன்னுயிர் நீத்தனள் அன்னை இரண்டாம் எலிசபத் தன்னைக் கவர்ந்தனன் காலன் ஐக்கிய ராச்சிய அரசியாக ஆண்டுகள் எழுபதைக் கடந்து முக்கிய உலகத் தலைவியாக முடியுடன் வாழ்ந்தவள் அன்னை அநீதிகள் நிறைந்த உலகினில் தன்றன் ஆற்றலால், அன்பினால் பலத்தால் தனிப்பெரும் சிறந்த தலைவியாய் மிளிர்ந்த தாயவள் எலிசபத் அரசி இனியொரு தலைமை இங்கிலாந்திற்கு இப்படியமையுமா அறியோம் இறைவனின் தயவால் இவ்வுலகிருந்த இனியதாய் மறைந்தனள் அந்தோ பொதுநலவாயத் தலைமையை ஏற்று பொறுப்புடன் கடமைகள் ஆற்றி அதிகரித்திட்ட அகதிகட்குதவி ஆற்றிய சேவைகள் பலதாம் விதியது முடிய அமைதியைத் தேடி விண்ணுலகடைந்தனள் அன்னை பதியொடுமிணைந்து பரமனின் நிழலில் பக்தியோடின்புற வாழ்க.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.