• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

ஆசாமி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  72
 • Joined

 • Last visited

Community Reputation

46 Neutral

About ஆசாமி

 • Rank
  புதிய உறுப்பினர்
 • Birthday 02/07/1980

Profile Information

 • Gender
  Male
 • Interests
  ஊடகம், வெட்டிப்பேச்சு
 1. ஊரில சரியான வெயிலாம்.வெக்கை தாங்க ஏலாதாம்.இப்ப ஊரில லஞ்சம்தான் மலிவாய் கிடைக்குதாம்.அம்மாவை இடைக்கிடை போய்ப்பார்க்கிறனான். நண்பன் கதைத்த இரு நிமிடங்களில் உளறியவை. நண்பனுக்கு ஊர்வேலைதான். முந்தியும் இப்பவும்.எங்கட மக்களில கொஞ்சப்பேர் இப்படி இருக்கினம்.இவர்கள் இருக்கிறதாலதான் சமூகம் வாழுது. பொதுவாய் எல்லோரும் தாங்களும் தங்கட குடும்பமும் என்று யோசிக்கினம் .விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள்தான் தங்கட நேரத்தை,உழைப்பை தங்கட நலன் கருதாமல் விடுகினம்.இதுக்குள்ளும் சிலர் தற்பெருமை பேசுகினம்.இதுகள் எல்லாம் பெரிய பிரச்சனை இல்லைத்தான். போனமாதம் எனக்கு தெரிந்த ஒருவர் ஊரில இறந்து போனார்.அவர் ஒரு சமூக சேவகர்.அவர் தன்னை முதன்மைப்படுத்தியவர் இல்லை.அவரது இறப்பும் நாலொடு ஐந்தாய் போய் முடிந்துவிட்டது.புலிகள் இருந்திருந்தால் நாட்டுப்பற்றாளர் கௌரவம் இருந்திருக்கும்.இப்படி சில நல்ல மனிதர்களின் இறப்புக்கள் கண்டும் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது . சுயநல மனிதர்களின் எண்ணிக்கை வீதம் நாளும் அதிகரிக்கிறது.சுயநல மனிதர்களின் சொகுசு வாழ்வின் ஈர்ப்பும் காரணமாய் இருக்கலாம்.யாரையும் குறை சொல்வது பொருத்தப்பாடற்றது. எதையும் கதைப்பதும்,எழுதுவதும் இலகுவானது.அப்படி வாழ்வதே உண்மையானது. தொடரும்
 2. எங்கட ஊரில மேதினம் கொண்டாட்டம் எல்லாம் நடக்குது ஒரு பக்கம் மகிழ்வு இருந்தாலும் இன்னொரு பக்கம் கவலையாயும் இருக்கு.மனச்சாட்சி சோரம் போன அடிவருடிகளும் மேதினக்கொண்டாட்டம் நடத்துதுகள்.அதுவும் விடுதலைக்காய் உயிரைச் சிந்தின மண்ணில. தாங்கள் தான் அபிவிருத்தி செய்வதாய் அரசாங்கமும் அடிவருடிகளும் சொல்லுயினம்.இவையும் ஆமியும் இல்லாமல் அரச சார்பற்ற நிறுவனங்களை சுயாதீனமாய் வேலை செய்யவிட்டால் இன்னும் நாலு மடங்கு அபிவிருத்தி தெரியும்.அங்கு முதல் தேவையாய் இருக்கிறது நிம்மதி.அது இருந்தால்தான் எதையும் அனுபவிக்கலாம் . அதைவிட்டிட்டு ஓட்டை சட்டிக்கை நீர் நிரப்பியினம் . தங்கட பொக்கற்றுகளுக்குள்ள காசை நிரப்பிக்கொண்டு. தன் சொந்த இனத்தை காட்டிக்கொடுக்க எவ்வளவு கீழ் மனம் வேணும் . மனிதனின் நாகரீகம் காலத்துடன் வளர்ந்தாலும் காக்கை வன்னியர்கள் பிழைப்புக்காக இரத்தம் உருஞ்சும் அட்டையாய் ஒட்டிக்கொண்டுதான் இருப்பார்கள். தொடரும்
 3. எங்கட தங்கும் அறை சிறியது.அதுக்குள்ளே ஒரு கட்டில் இருக்கு.ஒரு மூலைக்குள்ள எங்கட சமையல் சாமான்களை அடுக்கி வைச்சிருப்பம். அடுத்த மூலைக்குள்ள சின்ன குக்கர்ல சமையல் . இரவில கட்டிலுக்கு பக்கத்தில சமாந்திரமாய் பாயை விரிச்சு நானும் மோகனும் படுப்பம்.கட்டிலில்ல டாவின் படுப்பான். எங்கட உடுப்பு பாக்குகள் கட்டிலுக்கு கீழ இருக்கும். அறைக்கு ஒரு பக்கம் கதவும் ,மற்ற பக்கம் யன்னலும் இருக்கு. இது மூன்றாவது மாடி . இப்படி ஆறு மாடியிலும் கன அறைகள் உண்டு. இரவு நாங்கள் பிந்தித்தான் படுத்தனாங்கள்.படுத்திருந்தும் மெதுவாய் கதைச்சுக்கொண்டிருந்தனாங்கள்.எத்தனை மணிக்கு நித்திரை ஆனம் என்று தெரியவில்லை. விடிய ஐஞ்சரை மணிக்கு ஒரு பெரிய அவலக்குரல் . திடுக்கிட்டு எழும்ப டாவின் உருண்டு மோகனுக்கு மேல விழுந்தான்.மோகனுக்கு வலது நெத்திப்புருவம் வீங்கிற்றுது.என்ன என்று விசாரிச்சாள். டாவின் கனவு கண்டிருக்கிறான் நாங்கள் போன படகு தாண்டுட்டுதாம்.அதுதான் கனவில கத்தி உருண்டு விழுந்திருக்கிறான்.எனக்கு மோகனை பார்க்க பரிதாபமாய் இருக்கு.மோகனோ விழுந்து விழுந்து சிரிக்கிறான்.இவன் இப்படி சிரிச்சதை ஒரு நாளும் நான் பார்க்கயில்லை.டாவினுக்கு இன்னும் திகைப்பு போகயில்லை.அதோட மோகனை குற்ற உணர்வோட பார்த்துக்கொண்டு இருக்கிறான். தொடரும்
 4. எங்கட ஐயா இறந்து இன்று மூன்று வருடங்கள்.ஐயா எங்கள் இரண்டு பேர்ல ஒராளாவது படிச்சு பட்டம் பெறோணும் என்று விரும்பினவர்.அது சாத்தியப்படவில்லை.தோட்டமும் வயலுமாய் நீண்ட அவரது வாழ்வில் போராட்டம் ஒரு முடிச்சாய் வீழ்ந்தது.அவரும் எல்லைப்படை பயிற்சிஎல்லாம் எடுத்தவர்.ஜெயசுக்குறு,ஓயாத அலைகள் மூன்று காலத்தில ஒரு ஆள் எல்லைக்கு போகோணும் இல்லாட்டி காசுக்கு ஒரு ஆளை அனுப்போணும் அவர் அனுப்பிப்போட்டு அவன் வரும்வரை நித்திரை இல்லாமல் திரிவார்.அவரும் போராட்டத்திற்கு சுமார் இருபது இலட்சம் வரை நிதியாய் கொடுத்திருக்கிறார்.ஊரில உழைச்சு இவ்வளவு காசு கொடுக்கிறதுக்கு ஒரு மனம் வேணும் அது அவரிட்ட இருந்தது. எங்கட வீட்டில உழைக்கிறது மட்டும்தான் அப்பா , காசை அம்மாவிட்ட குடுப்பார் . அம்மா மிச்சத்தை எல்லாம் பார்ப்பார்.பிறகு அப்பாவிற்கு எவ்வளவு காசு இருக்குது என்றே தெரியாது.அது அம்மாவிட்டதான் காசாகவும் நகையாகவும் இருக்கும்.அப்பா கேட்கும் போதெல்லாம் அம்மா காசு கொடுப்பா.சில நேரம் நகையை அடைவு வைச்சும் கொடுப்பா.நாங்களும் எங்களுடைய தேவையை எல்லாம் அம்மாவிடம்தான் கதைப்பம் அப்பாவிற்கு கிட்டவும் போறதில்லை.சொல்லப்போனால் அப்பாவுக்கு பீச்சல் பயமும்தான்.அப்பா பார்த்தாலே ஆளாளுக்கு ஒரு பக்கத்தால போயிடுவம்.அப்பா சாக கொஞ்ச நாளுக்கு முதல் எங்கட குஞ்சி அப்புவிட்ட சொன்னவர் எனக்கு மகன் இல்லை என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும் தலைவன் இல்லை என்றதுதான் குத்தூசியாய் குத்துது என்றவர். அண்ணையோட போராளிகள் யாரும் வந்தால் சாப்பாடு குடுக்காமல் அனுப்பக்கூடாது என்றது அவருடைய கட்டளை.எனக்கு தெரியத்தக்கன இந்த கட்டளை எப்பவும் நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருந்துது. அண்ணாவின்ர வீரச்சாவு மூட்டம் மட்டும்தான் அவர் அழுததை நான் பார்த்திருக்கிறன்.அவருக்கு எப்பவும் அண்ணையில கொஞ்சம் மதிப்புக்கூடத்தான்.என்னில கொஞ்சம் மட்டுத்தான். அன்றும் ஒரு நாள் இரவு படுத்தவர் விடிய எழும்பவில்லை.முதல் நாளும் நான் சைக்கிள் காற்றுப்போய் சந்தி அடியால உருட்டி வந்தனான் .அவர் சைக்கிளில வந்தவர் தான் சைக்கிளை ஒட்டிக்கொண்டு வாறன் நீ தன்ர சைக்கிளை கொண்டு போ என்றார்.இல்லை நானே ஒட்டிக்கொண்டு போறன் என்றிட்டன். காசு இருக்கோ என்று பொக்கற்றால இரு நூறு ரூபாய் எடுத்துத்தந்தார்.இவங்கள் (ஆமி) எல்லாம் நிட்கிறாங்கள் கெதியில வந்திடு என்று சொல்லிப்போனதுதான் என்னோட கதைச்ச இறுதிக்கதையாய் போயிற்று. அம்மா சொல்லுவா அவர் அண்ணையோட இருக்கப்போயிட்டார் என்று.எனக்கும் சில நேரங்களில உந்த ஐமிச்சம் வரும். தொடரும்
 5. எதிர்காலத்தைப்பற்றி கனவுகள் இல்லை.நல்லாவந்தால் கனபேருக்கு உதவி செய்யோணும்.இட்லி தோசை,பிட்டு,இடியப்பம் சாப்பிட்டு கனநாள் எண்ணுறான் டாவின். உண்மைதான். நாங்கள் சின்னனில ஒரே புட்டும் சம்பலும்தான் காலமைச் சாப்பாடு.அம்மா புட்டுக்கு இளம் தேங்காய்(முட்டுக்காய்) போடுவா சம்பலுக்கு செத்தல் தேங்காய்தான்.வீட்டில நிறைய தென்னை மரம் நின்றதில அது சாத்தியமாய் இருந்திருக்கக்கூடும். அந்த பிட்டும் சம்பலும் ஒரு சுவைதான். நேற்று மாவை காலமையே இளனிவிட்டு கரைச்சு வைச்சிட்டு பின்னேரம் வெள்ளை மா தோசை சுட்டம் .சம்பலோட சாப்பிட பரவாய்இல்லை நல்லாயிருந்திது . இடத்திற்கு தக்கமாதிரி சமையலை மாத்திறம் அது ஓகே ஆக இருக்கு. எங்கட மண்ணை நினைத்தால் கவலை சொல்லாமல் கில்லாமல் வருகிறது.எதையும் தவிர்த்தும் போக மனிதமனம் இடம் கொடுக்குதில்லை.போராட்டத்துடன் போராளிகள் போலவும் முண்டு கொடுப்பவர் போலவும் நின்ற சிலரின் உண்மைமுகங்கள் / காட்டிக்கொடுப்புகள் போராட்டைத்தை கொச்சைப்படுத்த முயல்வது வேதனை தருகிறது.எல்லா இனத்திலும் இப்படியும் மனிதர்கள் இருப்பார்கள் என்று தவிர்த்துப்போக முடியாமலும் உள்ளது. இயக்கம் இல்லாத போதிலும் புலத்திலும்,களத்திலும், தமிழகத்திலும் மக்களின் ஜனநாயக எழுச்சி சிறு நம்பிக்கையை தருகிறது.சனல் நான்கின் காணொளிகள்,ஐ நாவின் அறிக்கை உலகை சிறிதளவாவது உழுப்பி விட்டிருக்கிறது. எங்கட பிரச்சனைகளை இயன்றவரை உலகத்திற்கு விளங்கப்படுத்தோணும் இதை ஒவ்வொரு தமிழரும் செய்யோணும்.உலகம் எப்பவும் தன்ர நலன்களிலதான் நிற்கும் இருந்தாலும் அடி மேல் அடி அடிச்சால் அம்மியும் நகரும் என்று சொல்லுவினம் . தொடரும்
 6. எப்ப கப்பல் வரும் ?எந்த தொலைபேசி வந்தாலும் அங்கிருந்துதான் வருகுதோ என்ற எதிர்பார்ப்பு இப்ப இல்லாமல் போகுது.எல்லாத்தையும் எழுத ஏலாது.எங்கட மட்டும் இல்லை கனபேற்றை பிரச்சனை.நெஞ்சு முட்ட கவலை இருந்தாலும் எந்த சுமையும் இல்லாத உணர்வு இருக்கு.அது ஏனோ தெரியவில்லை. எங்கட நேரமெல்லாம் கதையோடதான் போகும்.கதையில கைலாயம் போற கழுசறைகள் நாங்கள்.வேற என்னத்தைதான் செய்யுறது.நேற்று இரவு நாலு மணி மட்டும் கதைச்சம்.அறையில கதைச்சால் அடுத்த அறைக்காரன் வந்திடுவான்.அதனால வெளியால படிக்கட்டுல இருந்து கதைச்சம் . நேற்று வழக்கத்திற்கு மாறாய் மோகனும் வந்தான். நேற்று வழமை மாதிரி ஆகாயத்தில ஜெட் விடுற கதைதான்.நான் சொன்னன் ஏன் தமிழர் மனிதர் இப்ப வாழாத தீவு ஒன்றை வாங்கியோ / தானாயொ உத்தியபூர்வமாய் எடுக்கக்கூடாது.நாங்கள் இருக்கிற இந்த நாட்டிற்கு கிட்ட எல்லாம் தீவுகள் இருக்கு. அங்க மாவீரருக்கும்,விடுதலைப்போராட்டத்தில் உயிரிழந்த அனைத்து மக்களுக்கும், தனித்தனியாய் நினைவு மண்டபங்களை எழுப்போணும்.மாவீரர் நாளுக்கு அதிக எங்கட சனம் வரும்தமிழன் ஒன்றாக கூடி கதைக்க ஒரு இடம் வேணும். .அந்த இடத்தை புலம் பெயர் உறவுகள் நினைத்தால் குட்டி சிங்கப்பூர் ஆக்கலாம்.அதுக்காக எங்கட தாய் நிலத்தை மறக்கிறதென்று இல்லை.அத்தோடு மாவீரர்களின்ர பெயர் விபரங்களை முழமையாய் எடுக்கோணும்.விடுதலைக்காய் வீரச்சாவடைந்த அத்தனை போராளிகளையும் ஒன்றுவிடாமல் எடுக்கோணும்.இயக்கம் இல்லாததால பதிவிநிலை குடுக்கத்தேவை இல்லை. என்னடா இதுகளுக்கு தட்டிட்டுதோ என்று நினைக்கிறீங்களோ? உண்மையாய் எங்களுக்கு அறிவில்லை.ஒரு பிளேனைக்கூட ஒழுங்காப்பிடிச்சுப் போகத்தெரியாது.இது சாத்தியப்படாத விசயமென்றால் தயவு செய்து எங்களில கோவிக்காதையுங்கோ.பானையில இருக்கிறதுதானே அகப்பையில வரும். தொடரும்
 7. எங்கட மண் முந்தி கறையான் அரிச்சமாதிரித்தான் ஆக்கிரமிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. இப்ப வெளிச்சத்தில ஆக்கிரமிக்கப்படுகிறது.எங்கட அடிப்படை வாழ்வு ஆட்டம் காணத்தொடங்குகிறது. ஆனால் எங்கட அரசியல் வாதிகளில பலர் தங்கட ஈ கோ பிரச்சனைகளைத்தான் தீர்க்கிறதில கண்ணா இருக்கினம்.எங்கட பிரச்சனை ஒரு இனத்தினர பிரச்சனை.அனைவரும் ஏதோ ஒருவகையில இனத்தின்ர எதிர்காலத்தை காக்கவேணும் இல்லாட்டி அடுத்த அடுத்த சந்ததிகளிலேயே ஈழத்தில தமிழனின் அடையாளம் கேள்விக்குறியாயிடும். இவ்வளவு பிரச்சனைகளுக்குள்ளும் ஆக்கிரமிப்பாளனுக்கு வேலை செய்யிற தமிழ் ஆட்களும் இருக்கிறார்கள் .இது மிக துரதிஷ்ட வசமானது. இயக்கம் இல்லா இடைவெளியில் எங்களில் பலரின் சுயம் வெளித்தெரிகிறது. நேற்றும் டாவின் சொன்னான்.ஈழத்தை மீட்க இல்லாட்டியும் இந்த கோடரிக்காம்புகளை கவனிக்க ஒரு இயக்கம் உருவாகோணும். இது அவனின் முதிர்ச்சியற்ற கூற்றாய் இருக்கலாம்.ஆனாலும் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு கவலை. இங்க ஞாயிற்றுக் கிழமை என்றால் எல்லாம் ஓய்ஞ்சு போகும். எங்கட நாள் வழமை மாதிரி சந்தை பிறகு சமையல் பிறகு நடை எப்போதும் திருப்பி திருப்பி ஊரைப்பற்றி கதை.வெறும் கதையோடையே காலம் கழிக்கிற வெறுவாய் சப்பிகள் ஆகிற்று எங்கட வாழ்க்கை . பிள்ளைகளை பழி வாங்கிற புதிய அத்தியாயம் மகிந்தவால ஆரம்பிக்கப்பட்டது. காலம் இதுக்கு என்ன பதிலை கொடுக்கும்? இது இப்ப பதில் அளிக்க வேண்டிய கேள்வி. தொடரும்
 8. நேற்று டாவின் கொம்புயுட்டரில் இணையத்தை பார்த்துக்கொண்டிருந்தான். எங்களிடம் தொடர்ந்து நெற் பார்க்கிற வசதி இல்லை.திடீரென்று மோகனை கூப்பிட்டான் டாவின்.அங்கவீனமுற்ற முன்னாள் போராளிகள் நேரடியாய் உதவி கேட்கிற ஒரு வீடியோவை அரசோட இயங்கிற அரச சார்பற்ற இணையம் பதிவேற்றம் செய்திருந்தது.மோகனும் உன்னிப்பாய் பார்த்துக்கொண்டிருந்தான்.எனக்கும் போராளிகள் கதைக்கும் குரல் கேட்டது.இடையில் மோகன் அழத்தொடங்கிவிட்டான் .டாவினின் பாடு பெரும்பாடு ஆகிவிட்டது.சொறி மோகன் சொறி மோகன் என்றபடி இருந்தான்.சிறிது நேரத்தில் மோகன் நித்திரையாகிவிட்டான்.நேற்று என்ரபாடுதான் சமையல். மீனும் சோறும். ஒருகாலத்தில் உயிரை வைத்து போராடிய போராளிகளின் நேரடியாய் உதவி கோரும் குரல் நெஞ்சை இன்னும் பிசைகிறது. அவர்களுக்கு உதவி தேவை அங்கிருப்பவர்கள் அடையாளம் கண்டு அவர்கள் கேட்காமல் நேரடியாய் உதவும் நிலையை உருவாக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் அரசாங்க அரச சார்பற்ற நிருவனங்களுக்கூடாக உதவி அந்நிறுவனங்களை வளர்த்துவிடக்கூடாது . அரசாங்கம் ஏதோ ஒரு காரணத்திக்காய்த்தான் அதை உருவாக்கியுள்ளது. வெளிநாடுகள் மீள்குடியேற்றத்திட்கும், புனர்வாழ்விற்கும் கொடுக்கின்ற நிதி அரசாலும் ,அடிவருடிகளாலும் கொள்ளை அடிக்கப்படுகிறது.சிங்கள குடியேற்றமும் நடக்கிறது. எது எப்படி இருப்பினும் அந்த மனிதங்களுக்கு வேறு ஒரு வழியில் உதவி கிடைத்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும். தொடரும்
 9. எனக்கு தங்களது வசதி வாய்ப்புகளுக்காக( சோரம் போய்) கொள்கையை மாற்றி எழுதுபவர்களை பிடிக்காது.மற்றப்படி எனக்கு ஒவ்வாத எழுத்துக்களையும் தங்கள் கொள்கையில் நின்று எழுதுபவர்களை ஏற்றுக்கொள்கிறேன்
 10. போன கிறிஸ்மஸ் இற்கு இரண்டு கிழமைக்கு முதல் திடீரென எங்களுக்கு எங்கன்ர முகவரிட்ட இருந்து அழைப்பு வந்துது.போறத்துக்கு ஆயுத்தமாய் வாங்கோ . நாங்களும் அறையை எல்லாம் ஒப்படைச்சிட்டு எங்களிட்ட இருந்த குசினிச் சாமான்களை டாவினின்ர நண்பனுக்கு கொடுத்துட்டு வெளிக்கிட்டம்.வெளிக்கிடையிக்க டாவின் சொன்னான் உயிரோட நாங்கள் இருந்தால் பிறகு ஒரு தடவையாவது மூன்று பேரும் பிளேன்லை மீண்டும் இந்த நாட்டுக்கு வந்து ஹோட்டல்ல தங்கோனும் என்று.நானும் எல்லா இடத்தையும் கடைசியாய் பார்க்கிறமாதிரி பார்த்துட்டுப்போனன்.இரண்டு நாள் கடக்கரையில தங்கி இருந்திட்டு வந்தம்.வரையிக்க டாக்ஸி பிடிச்சு வந்தம்.இங்க டாக்சி எல்லாம் ஓடுற கிலோமீட்டருக்குத்தான் காசு.அவன் சுத்தி சுத்தி வந்து இரண்டு மடங்கு காசு வாங்கிட்டான்.ஒவ்வொரு கிலோமீட்டரும் கூடக்கூட நெஞ்சு பக் பக் என்று அடிச்சுக்கொள்ளும் , அவனோட கதைக்க மொழி தெரியாதே/புரியாதே.பனையால வீழ்ந்தவனை மாடு ஏறி உலக்கின மாதிரி.வந்த உடன் அறை எடுக்க கஷ்டமாய்ப்போயிற்று . எல்லாம் சி என்று போச்சு. தொடரும்
 11. என்னற்றையும் மோகனிற்றையும் கொஞ்ச உடுப்புகள் தான் இருக்கு.ஆனால் எப்போதும் மரவள்ளி கிழங்கை சீவி பொரிச்சு வைத்திருப்போம்.நாங்கள் வெளிக்கிடையிக்கை அதைத்தான் கொண்டுபோவதாய் உள்ளோம்.இப்ப நாட்கள் மாதங்களாகி ஆறு தடவை பொறித்து சாப்பிட்டுட்டம்.ஆனால் இப்பையும் பொரிச்சு வைச்சிருக்கிறம். ஒரு தடவை எங்கள் மூன்று பேரையும் காய்ச்சல் விழுத்திட்டுது. அப்பவும் அந்த மரவள்ளிப் பொரியல்தான் எங்கட தஞ்சம்.அந்த நேரம் மிகக் கஷ்டமாய் இருந்தது.அநாதை போல் அகதி போல் அது இருந்திருக்கக்கூடும்.இந்த இடங்களில நோய் வரக்கூடாது.யாராவது ஒராள் இறந்தால் அதை எப்படி அடக்கம் செய்யிறது என்று கூட யோசித்தோம்.டாவினுக்கு தீர்வு இருந்திருக்கும். மரவள்ளிப் பொரியலை தயாரிக்கிற பொறுப்பு மோகனுக்குத்தான்.நாங்களும் உதவி செய்வோம்.இப்பவும் நானும் டாவினும் பொரியலோட பிளேன்றி அடிச்சு அரசியல் கதைத்துக்கொண்டிருக்கிறம் . வழமைமாதிரி மோகன் வானத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறான்.இன்றைக்கு மழை குறைவு.ஆனாலும் வானம் இருட்டி இருக்கு. தொடரும்
 12. எழுதி வாழ வேண்டிய தேவை பலருக்கு இருக்கும். அது தவிர்க்க முடியாதது. ஆனால் இனத்தை காட்டிக்கொடுக்க எழுதக்கூடாது.போராட்டத்தை உந்த போராட்ட காலத்தில் பலர் எழுத்து மூலமும் பங்களித்தனர்.ஊடகம் மூலமும் பங்களித்தனர்.அதே காலத்திலேயே போராட்டத்தை வலுவிழக்கச் செய்ய எழுதிய தமிழரும் உண்டு.இது ஒரு இனத்தின் சாபக்கேடு.இன்றும் சிங்கள ஆதிக்கத்திற்கு எதிராய் எழுத்தினை பயன்படுத்தும் பங்காளிகள் உண்டு.இன்றும் சிங்களத்திற்கு நேரிடையாயும் மறைமுகமாயும் முண்டு கொடுக்கும் கோடரிக்காம்புகளும் உண்டு. காலம் எல்லாவற்றையும் குறிப்பெடுக்கும். தொடரும்
 13. இன்றைக்கு புது வருஷம் ஆனால் எதுவும் புதிதாய் இல்லை.நாங்கள் இன்றைக்கு அவுசு சமைச்சம் . மரக்கறி சோற்றுக்குழையல் அது மிளகாயிப்பொரியல் உடன் சாப்பிட நல்லா இருக்கும்.இன்றைக்கு இனிப்பில்லா புது வருஷம்.இந்த வருசத்திலயாவது எங்களுக்கு விடியாட்டியும் எங்கட மக்களுக்கு விடியோனும்.அந்த மக்கள் நிம்மதியாய் வாழோணும் . போராட்டத்திட்காய் உழைத்தவர்கள் நொய்ந்து போனார்கள்.ஆனாலும் அவர்கள் அவர்களாய் மெல்ல மெல்ல எழுவார்கள். அடிவருடிகளை தவிர்த்து ஏனைய தமிழர்கள் ஒன்றாக எழவேண்டும்.சுயநலங்கள் போதும் . எங்களுக்குள் உள்ள சிறு பிரச்சனைகளை பெரிது படுத்தாமல் , ஒருவரை ஒருவர் மதித்து விடுதலைக்கான ஒவ்வொரு முயற்ச்சிக்கும் எமது ஆதரவை வழங்கவேண்டும். எழுதுவது சுலபமானது எதையும் செய்து காட்டுவது அவ்வளவு சுலபமில்லை. இன்று செய்து காட்டுபவர்களைப்பற்றி எழுதுபவர்கள் எழுதித்தள்ளுகிறார்கள்.இதை யாரிட்ட சொல்லி அழுவது? யாரையும் விமர்சிக்க முன் அவர்களது போராட்ட பங்களிப்பையும் ஒப்பிட்டு பார்க்கவேண்டும்.என்னைப்போல் எழுதும் பலருக்கு பெரிய போராட்ட பங்களிப்புகள் இல்லை.நான் என்னை நினைத்து வெட்கம் கொள்கிறேன்.இறுதி போராட்டத்துடன் உரிய பங்களிக்காத சில வேஷதாரிகள் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இருந்து தப்பி வந்து இன்று அடிவருடிகளுடன் இணைந்து உள்ளனர். அவர்கள் இன்றும் இயக்கத்தை வைத்து பிழைப்பு நடத்துகின்றனர். தொடரும்
 14. நாளைக்கு வருஷம் பிறக்கப்போகுது.இன்றைக்கு எங்கட மண்ணில வித்தியாசமான குதுகலம் இருக்கும் . இங்க எல்லாம் ஒரே மாதிரித்தான்.இணையத்தில எங்கட மண்ணில என்ன நடக்குது என்று பார்ப்பமென்றால் உதயன் காரியாலம் தாக்கப்பட்ட செய்திதான் கிடக்கு.நானும் ஊடகத்தில வேலை செய்ததால எனக்கு இன்னும் ஒருதடவை நெஞ்சில குத்திச்சு.முழு இராணுவ ஆட்சி நடக்கிற மண்ணில வேற என்னத்தை எதிர்பார்க்க முடியும்? இதுக்குள்ள கொஞ்சப்பேர் (அடிவருடிகள்) அபிவிருத்தி என்று பேப்பே காட்டினம்.அரசாங்கத்தின்ர அராஜகத்தை மறைக்க நாடகம் ஆடினம்.சர்வதேசம் வழமை மாதிரி பார்வையாளராய் மட்டும் இருக்கு. இந்த நாட்டில இலங்கையை மாதிரி இரண்டு மடங்கு சனம் இருக்கு ஆனால் இலங்கையை விட அமைதி இருக்கு. நாங்கள் தங்கி இருக்கிற இடம் நாட்டுப்புரமும் இல்லை டவுனும் இல்லை. இங்கையும் கன ஆம்பிளைகள் மோட்டச்சையிக்கில்லில கூட ஆக்களை காசுக்கு ஏத்தி இறக்குவினம்.பொம்பிளைகள் இரவில எல்லாம் தனிய திரியுங்கள்.போலீஸ் காரங்கள் சரியான இறுக்கம். இந்தியா ஆட்கள் கடை வைச்சிருக்கினம்.எங்களுக்குரிய சாமான்கள் அங்க வாங்கலாம் .பருப்பு ,பப்படம், மிளகாய்த்தூள் அப்பிடியான சாமான்கள்.இன்றைக்கு அங்க போற பிளான் இருக்கு.டாவினும் வாற என்டவன் அதால அவனை பார்த்துக்கொண்டு இருக்கிறம்.நேற்று மழை பெய்தது.மீனும் விழுந்தது.சின்ன மீன் எங்கட ஊரில பார்த்த மீனுகள் மாதிரி இல்லை.ஆனால் சந்தையில எல்லா மீனும் வாங்கலாம்.இன்றைக்கு ஒடியல் மா வாங்கிற நோக்கம் இருக்கு. தொடரும்