யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Paanch

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  4,812
 • Joined

 • Last visited

 • Days Won

  15

Paanch last won the day on January 17

Paanch had the most liked content!

Community Reputation

1,447 நட்சத்திரம்

1 Follower

About Paanch

 • Rank
  Advanced Member
 • Birthday April 14

Profile Information

 • Gender
  Male
 • Location
  Germany

Recent Profile Visitors

9,286 profile views
 1. தமிழினத்தை அழிக்கமுயலும் இந்தியனைவிடவும், இந்தியனுக்கு ஆதரவுகொடுக்கும் அமெரிக்கனைவிடவும், சீனா கேவலமானதா....? சீன, தமிழர் உறவுபற்றி சரித்திரங்களும் உயர்வாகத் தெரிவிக்கின்றனவே...!!
 2. சிறீலங்க அரசாங்கத்தில், வெள்ளைக் கொடி சமாதானத்துக்கு உரியதல்ல. இதுதெரியாமல் வெள்ளைக் கொடியோடு சென்ற போராளிகளையும், பொதுமக்களையும் அரசபடைகள் சுட்டுக் கொன்றதோ...
 3. சனாதிபதி என்றால் ஏதாவது கட்டாயம் உளறித்தான் ஆகவேண்டும். மக்கள் அதைக் கேட்டுத்தான் ஆகவேண்டும்.
 4. ஆயுதங்கள் மெளனிக்கும் வரை இலங்கையின் எந்தப்பாகத்திலும் தாக்குதல் நடாத்தக்கூடிய திறன் புலிகளிடம் இருந்தது. அதுவும் பொதுமக்கள் மீதான தாக்குதலை தென்னிலங்கையில் நடத்துவது என்பது புலிகளை பொறுத்தவரை மிக இலகுவான விடயமாகவே இருந்தது. ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. புலிகளிடம் இறுதிவரை விமானங்கள் இருந்தன. பெருந்தொகை மக்கள் கூடும் இடங்களின் மீது தென்னிலங்கையில் தாக்குதல் நடாத்துவது ஒன்றும் புலிகளுக்கு பெரிய விடயமே அல்ல.ஆனாலும் அவர்கள் அதை செய்யவில்லை. தம் எதிரியின் இலக்கை மட்டுமே தேர்வு செய்து, மக்களின் இழப்பை தவிர்ப்பதற்காக அநேக சமயங்களில் பெரும்விலை செலுத்தியவர்கள் புலிகள். இறுதிவரை தம் கொள்கையில் வழுவாது , விடுதலைப்போரை வழிநடத்தி மெளனித்து, வித்தானவர்கள் புலிகள். அன்று பயங்கரவாதம் என்னும் வரையறைக்குள் புலிகளை புகுத்தி , பல தசாப்தங்களாக தமிழர்களின். விடுதலைக்காக போராடிய விடுதலை அமைப்பை சர்வதேச, இந்திய கூட்டுடன் இலங்கை அரசால் அழிக்க முடிந்தது. இன்று, புலிகளை அழிக்க முண்டு கொடுத்த அதே சர்வதேசம் புலிகளை புரிந்துகொண்டிருக்கின்றது. பயங்கரவாதம் என்றால் என்ன என்பதை நேற்று சிங்கள மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். புலிகள் கோலோச்சிய காலத்தில்கூட தென்னிலங்கை இவ்வளவு அச்சத்துடன் இருந்தது கிடையாது. தமிழர்களுக்கான உரிமைகளை மட்டுமே புலிகளும், தமிழர்களாகிய நாங்களும் கேட்டோம். அப்பாவிகளின் உயிரை அல்ல. அன்று விதைத்ததை இன்று இலங்கை அறுவடை செய்கின்றது. யார் பயங்கரவாதிகள் என்பதை உலகம் புரிந்துகொள்ளும்.! ஒரு நண்பர் வாட்சப் மூலம் அனுப்பிக் கிடைத்த இடுகை.
 5. நியூசிலாந்தில் கொல்லப்பட்ட மக்கள் நியூசிலாந்தின் மக்கள். எங்கள் நாட்டில் கொல்லப்பட்ட மக்கள் சிறீலங்கரா, அல்லது இலங்கையரா என்ற சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.
 6. இலங்கையில் சிங்கள அரசாட்சி ஏற்பட்டபின் இதனைவிடவும் குரூரமாகத் தமிழ்மக்கள் கொல்லப்பட்டார்கள். கொன்றவர்களையும், கொலைகாரரின் பின்னால் இயங்கியவர்களையும் அரசுக்குத் தெரியும். தெரிந்தும் அவர்கள் தண்டிக்கப்பட்டார்களா,? இல்லையே.?? தண்டிக்கப்பட்டிருந்தால், இன்றைய இந்தக் கொலையாளிகளுக்குக் கொல்லத் துணிவு வந்திருக்குமா.? கொலையாளிகளுக்கு உயர் பதவியும், பின்னால் இயங்கியவர்களுக்கு அரசியல் செல்வாக்கும், மந்திரிப்பதவிகளும் கொடுத்துப் போற்றி வாழவைத்தால்.... அவர்களில் உறைந்துள்ள மிருகங்கள் பயமின்றி ஆரவாரத்துடன் வெளிவரத்தான் செய்யும். அப்படிப் பயமின்றிக் காரியங்கள் செய்பவர்களாகவே இன்றைய பல அரசியல்வாதிகளும் அவர்கள் படைகளும் உள்ளன. 'பேய்கள் அரசுசொய்தால் பிணம்தின்னும் சாத்திரங்கள்' என்பது பொய்யல்ல. இன்றும் தின்றது, இப்டியே போனால்...இன்னும் தின்னத்தான் போகிறது.
 7. இன, மத, பதவி வெறியால் கொல்லப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
 8. நட்புக்கு அன்புமட்டுமே தெரியும். வயது, வருமானம் எதுவும் தெரியாது. நான் பிறக்கும் முன்னரே தமிழ் சிறி, ராசவன்னியன் போன்றவர்களின் நட்பு கிடைக்கும் என்று தெரிந்திருந்தால் பிறக்கும்போது அழாமல் பிறந்திருப்பேன். இன்னிசைக்கு உரியவரை முன் நிறுத்தி தமிழ்த் தலைவன் பின் இணைந்தால் என் வயது உதித்துவரும்.
 9. கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது ஏன் தெரியுமா May 22, 2014 | Filed underஇந்துசமயம் | Posted by குப்பிளான் நீறில்லா நெற்றி பாழ்; கோயில் இல்லா ஊர் பாழ் என்பது முதுமொழி. அந்த காலத்தில், ஒரு ஊரை உருவாக்குவதற்கு முன், கோயிலை உருவாக்கினர். அதற்கு முன்,நீரோட்டம் பார்த்து, மண்ணின் தன்மை அறிந்து, சாலை அமைத்து, அதன் பின்னரே கோயில் கட்டினர். இதனால் தான் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக்கூடாது என்பர். முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?… கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என தெரிகிறது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக் கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன. நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குட முழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்? ஆச்சர்யம்தான். அவ்வளவு தானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!. ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் எர்த் ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000 சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான். இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.
 10. கவலை வேண்டாம்! அம்மனுக்கு இரத்தப்பலி கொடுத்த பக்தர்களை அம்மன் காத்து அருள்புரிவார்.!!
 11. அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக.!! என்னைத் தாத்தாவாக்கிய பேரன் வாதவூரானுக்கு ஒரு பாடல்.....
 12. வயதை சொல்லியதற்காக அல்ல, அது தவறு.... யாருக்கும் பாரமில்லாமல் இருக்கிறேன் (முயற்சிக்கிறேன்) என்று சொல்ல முயன்றதற்காக ஒரு பச்சை தர முயன்றேன் பச்சை முடிந்துவிட்டதாம். Sorry, you cannot add any more reactions today.
 13. தமிழாலும், இசையாலும், இதயத்தாலும் என் பிறந்தநாளில் என்னை வாழ்த்திய யாழ் உறவுகளுக்கு நன்றிகள் பல. நாலுபேர் வாழ்த்த வாழவேண்டும் என்று ஆன்றோர் சொல்வார்கள். ஆனால் என்னை ஆறுபேர் வாழ்த்தப் பேறுபெற்றேன். எந்த வயதில் எப்படி வாழ்வு அமைந்தால் வாழ்வு இன்பமயமாகும் என்று நான் அறிந்ததை யாழுறவுகளுக்கும் அறியத்தருவதில் இன்பமடைகிறேன். 1 − வயதில் பிறர் துணையில்லாமல் நிற்பது . . . 4 − வயதில் உடையில் சிறுநீர் போகாமல் இருப்பது . . . 8 − வயதில் வீட்டிற்கு வழி தெரிவது . . . . 12 − வயதில் நல்ல நண்பர்கள் இருப்பது . . . 18 − வயதில் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது . . . 23 − வயதில் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றிருப்பது . . . 25 − வயதில் பணம் சம்பாதிப்பது . . 30 − வயதில் குடும்பத் தலைவனாய் இருப்பது . . . 35 − வயதில் பணத்தை உருவாக்குவது . . . 45 − வயதில் இளமையாய் தோன்றுவது . . . 50 − வயதில் பெற்ற பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை தருவது . . . 55 − வயதில் இன்னும் உன் செயல்கள் திறமையாக இருப்பது . . 60 − வயதில் இன்னும் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது . . . 65 − வயதில் நோயில்லாமல் இருப்பது . . . 70 − வயதில் யாருக்கும் பாரமில்லாமல் இருப்பது . . . 75 − வயதில் பழைய நட்பு தொடர்ந்திருப்பது . . . 81 − வயதில் வீட்டிற்கு வழி தெரிவது . . . 86 − வயதில் மறுபடியும் படுக்கையில் சிறுநீர் போகாமல் இருப்பது . . . 90 − வயதில் யார் துணையும் இல்லாமல் நடப்பது . . . இதில் நான் எந்த வயதில் இருக்கிறேன் அறிந்து சொல்பவர்களுக்கு ஒரு பச்சை.