Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Paanch

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  7510
 • Joined

 • Last visited

 • Days Won

  18

Paanch last won the day on December 3 2021

Paanch had the most liked content!

2 Followers

About Paanch

 • Birthday April 14

Profile Information

 • Gender
  Male
 • Location
  Germany

Recent Profile Visitors

16083 profile views

Paanch's Achievements

Grand Master

Grand Master (14/14)

 • Reacting Well Rare
 • Dedicated Rare
 • Very Popular Rare
 • Week One Done
 • One Year In

Recent Badges

2.7k

Reputation

1

Community Answers

 1. என் நம்பிக்கைப் பால் ஒன்று இரண்டல்ல அவை பலது தம்பி. ஆண்பால் பெண்பால் பலர்பால் ஒன்றன்பால் பலவின்பால் பசுவின்பால் ஆட்டுப்பால் தேங்காய்ப்பால் மேற்சொன்ன பால்கள் அனைத்திலும் நம்பிக்கை உண்டு, இந்தக் கள்ளிப்பாலில் மட்டும்தான் நம்பிக்கை இல்லை, அதனை யாருக்காவது கொடுத்துப் பரீட்சிக்கலாம் என்று எண்ணியுள்ளேன். உங்கள் உதவி கீடைத்தால் நன்று. இப்படி நான் எழுதியதும்....! நீங்களே பரீட்சித்துப் பாருங்கள் என்று சொல்லுவீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்.!!
 2. உண்மைதான் தம்பி, குடும்பத்தில் நான் கடைக்குட்டி, எனக்குப்பிறகு தம்பி தங்கைகள் யாரும் இல்லை. அதனால் நான் நீண்டகாலம் அம்மாவிடம் பால் குடித்ததாக அண்ணன் அக்காமார் சொல்வார்கள். அதனால்தான் என்னவோ பாலில் எனக்கொரு நம்பிக்கை.😋
 3. சரியாகச் சொன்னீர்கள், மாலைதீவைப் பிடிக்கப்போன அனுபவம் இவர்களுக்கு நிறையவே இருக்கிறது. கோத்தா இப்போ மாலைதீவில்,
 4. 13ம் இலக்கத்தை இங்கு யேர்மனியர்கள் அதிகமாக விரும்புவதில்லை, அது ஏனென்று இப்போது புரிந்தது. இலங்கையில் 13 தனது விளையாட்டைக் காட்டிவிட்டது.😁
 5. "நான் அரசியல்வாதியாக வருவதற்கு என்ன செய்யவேண்டும்" என பிரித்தானிய பிரதமராகவிருந்த வின்சன் சர்ச்சிலிடம் அவரது நண்பர் ஒருவர் கேட்டபோது.... "நீ செய்த தவறொன்றைத் தவறில்லை என்று வாதாடி வெல்லும் திறமை உனக்கிருந்தால் நீ அரசியல்வாதி" என்றாராம்.
 6. செத்த நாயிலிருந்து உண்ணிகள் விழுந்தாலும் அவை சாவதில்லை உயிரோடுதான் உலாவுகின்றன.😲
 7. உங்கள் ஊட்டத்தில் உள்ள உண்மைகளை வரவேற்கும் அதேநேரம், கவியழகன் மேலுள்ள காழ்ப்புணர்ச்சியை வரவேற்க முடியவில்லை. அவருடைய கூற்றில் உண்மைகளும் இருப்பதினால்தான் யாழ்கள உறவுகளும் அவருடைய பல கருத்துக்களுக்கு 'லைக்' போட்டு வரவேற்றுள்ளனர்.
 8. கபிதன் அவர்களே அவர் சொல்வதை ஏற்றுக்கொள்பவர்களும் உள்ளார்கள், விமர்ச்சிப்பவர்களும் உள்ளார்கள். ஆகவே அவர் கருத்துக்கள் முற்றிலுமே தவறானவை என்று எழுந்தமானமாகக் கூற முடியாது. சிந்திக்க வேண்டியவற்றை உள்வாங்கி ஏனையவற்றைப் புறம்தள்ளிவிடலாம். வடக்குச் சனம் வாக்களித்துத் தெரிவுசெய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே இன்று விமர்ச்சனத்துக்கு உள்ளாகியுள்ளனர். அதில் முக்கியமாக டக்ளசு தேவானந்தா, அங்கயன், சுமந்திரன் போன்றோரைத் தெரிவுசெய்த சனமும் அங்கிருக்கையில் எவர் முன்வந்து கல்லெறிவார்கள்.??
 9. இந்தப் பூனை இன்னும் கண்திறக்கவில்லை என்றாலும் மணத்தில் சில எலிகளைப் பிடிக்கத்தான் செய்கிறது.😄
 10. நல்லது! உங்களாலும் நல்ல கருத்தைத் தெரிவிக்க முடியவில்லையே.🤔
 11. இனவாதத்தையும் தமிழ்தேசியத்தையும் ஒரே கோட்டில் நிறுத்திப் பார்க்க முடியாது. இரண்டும் பாரிய வேறுபாடுகளைக் கொண்டது. இனவாதம் தூண்டி வளர்க்கப்படு்கிறது. அதுவே இன்றுவரை இலங்கையில் ஆட்சி செய்கிறது. தமிழ்த்தேசியம் தோண்டிப் புதைத்து அழிக்கப்பட்டு வருகிறது.
 12. இங்கு குணா கவியழகன் அவர்களின் கருத்துக்கான பின்னூட்டங்கள், நம்பிக்கையை இழந்த சோர்வின் அடிப்படையில் எழுந்தவைபோல் தோன்றுகிறது. ஒருவருடைய கருத்தை ஏற்றுக்கொள்ள இயலாவிட்டால், அவரது கருத்தை மேவிய, நிறைவேறக்கூடிய, நல்ல சிந்தனைகளை வெளியிட்டுப் பதிவதே, சோர்வின்றி வெற்றியை நோக்கிப் பிறரும் நகர்வதற்கு வழிவகுக்கும்.🙏
 13. முதுகெழும்பே இல்லாத கோழை. முதுகெலும்பு அற்றவர் முதல்வராக ஆசைப்படக்கூடாது என்றும் எச். ராஜா கூறியுள்ளார்.
 14. இவர்களுக்குக் குறிபார்த்து சுடத்தெரியாது என்பது பன்னாட்டு அரசுகளை ஏமாற்றி அவர்களது இராணுவத்தினரை முள்ளிவாய்க்காலுக்கு அழைத்தபோதேதெரியவில்லையா.?
 15. ராஜபக்சர்களுக்கு குறிசொல்பவர் வெளியிட்ட முக்கிய தகவல்கள் அரச தலைவர் எனது கோயிலுக்கு வந்தது அரசியல் முடிவுகளையும் ஆலோசனைகளையும் பெறுவதற்காக அல்ல. சுகவீனம் காரணமாக நேர்த்தி கடனுக்காகவே வந்தார். அரசியல்வாதிகளுக்கு கோயிலில் சேவைகளை வழங்கியமை குறித்து தான் தற்போது வருத்தப்படுவதாக அனுராதபுரம் இசுருபுர பிரதேசத்தில் வசிக்கும் ஞானா அக்கா என அழைக்கப்படும் ஞானவதி ஜயசூரிய தெரிவித்துள்ளார். வலையொளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஞானக்கா இதனைத் தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்சவுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்தி விட்டேன். மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நான் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்தி விட்டேன். செல்வதற்கு இடமில்லாது இந்தச் சந்தர்ப்பத்தில் அவரை வீட்டுக்கு அழைக்க மாட்டேன். கோட்டாபய ராஜபக்சவின் குடும்பத்திற்கும் எனது கோயிலுக்கும் இடையிலான தொடர்பு 13 வருடத்திற்கு மேற்பட்டது. அரச தலைவராக தெரிவான பின் அவர் கோயிலுக்கு வரவில்லை அரச தலைவராக தெரிவாகும் முன்னர் அவர் அடிக்கடி கோயிலுக்கு வந்து சென்ற போதிலும், அரச தலைவராக தெரிவான பின்னர் அவர் என்னை சந்திக்க கோயிலுக்கு வரவில்லை. இப்படியான பின்னணியில் கோட்டாபய ராஜபக்சவுடன் தற்போது எவ்வித தொடர்புகளும் இல்லை. ஹிருணிகா பிரேமச்சந்திர வெளியிட்ட கருத்துக்கள் காரணமாக சமூகத்தில் என்னை பற்றி தவறான விம்பம் ஏற்பட்டுள்ளது” என்றார் ibctamil.com
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.