Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Paanch

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  6,854
 • Joined

 • Last visited

 • Days Won

  17

Everything posted by Paanch

 1. அட பாவமே சாமிக்கே இந்த நிலை என்றால்...... பக்தகோடிகள் நிலை என்ன...? ***
 2. வன்னியர் சுவிற்சலாந்து வந்ததை அறிந்தவுடனே திண்ணையில் செய்தி போட்டேன். சாமியாருக்குத் திண்ணை வழுக்கிவிட்டதா.?
 3. உணவை உண்ணும்போது அறு சுவைகளையும், அதாவது இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கசப்பு. என ஒவ்வொன்றின் சுவையையும் தனித்தனியாக உணர்ந்து உண்ணக்கூடியவனது உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதுபோல்... கண்கள் காணும் அழகில் இருக்கும் காட்சிகளையும் உணர்ந்து ரசிப்பவனது உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் அது பிறரையும் மகிழவைக்கும் என்பதற்கு கள உறவு ராசவன்னியர் ஒரு சாட்சி.
 4. புத்தனுக்கு கெளதம புத்தரைத் தெரியும் என்பது எனக்குத் தெரியும், ஆனால் சிங்கள புத்த பிக்குகளைத் தெரியாதென்பது எனக்கும் தெரியாது.
 5. ஆழ்ந்த அஞ்சலிகள்...!! புத்தரே! விபச்சாரியுடன் தேனிலவை அனுபவிக்கும் அசிங்கத்தை உலகத்திற்கே அறிமுகம் செய்த நாடு இந்தியாவாகத்தான் இருக்க முடியும்.
 6. 'சீல் உடைத்தார்' என்றால் சீல் கொண்டுள்ளவர் என்றும் அர்த்தம் கொள்ளலாம். பலவந்தமாகத் திறப்பது வன்முறை அல்லவா.....???
 7. மக்கள் மட்டுமல்ல புத்திமான்கள், அரசியல் மேதாவிகள் உட்பட்ட அனைவருமே தலையை விட்டு வாலின் ஆட்டங்களையே விமர்சனத்திற்கு உள்ளாக்கி நாட்டை எப்படிக் கட்டியெழுப்பலாம் என்று சிந்திப்பதாகவே தெரிகிறது. நாட்டினுள் வதியும் சிறுபான்மை இனங்களை அழித்து அல்லது நாட்டைவிட்டு வெளியேற்றி இலங்கை என்ற நாட்டைத் தனிச்சிங்கள நாடாக உருவாக்கவேண்டும் என்ற சிந்தனையைச் சிங்களப் பிக்குகள் தங்கள் தலையில் கொண்டுள்ளவரையில் நாடு அதள பாதாளத்தை நோக்கிப் பயனிப்பதை எவராலும் தடுக்க முடியாது. .
 8. கோசான் எப்போது கோத்தாவுக்கு ஆதரவு கொடுத்தார்......? புதுக் கதையாக இருக்கிறதே...!!
 9. முன்னால் இருக்கும் 'தமிழ்' என்ற சொற்களை எடுத்துவிட்டால்...... சில வேளை முடியலாம்.
 10. திரிபு படுத்தப்பட்ட பாடநூல் தொடர்பில் மனித உரிமை செயல்பாட்டாளர் ம.கயன் அவர்களது கண்டனம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் பற்றிய அறிக்கையும் அனைவருக்கும் வணக்கம், நான் கயன் பேசுகிறேன், இது ஓர் அவசர வேண்டுகோள். உலகமெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழர்களுக்கான கோரிக்கையாக இதை நான் முன்வைக்கிறேன். தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தற்போது உருவாகியிருக்கும் தமிழ்க் கல்வி சார்ந்த பிரச்சனை தொடர்பாகவே உங்கள் முன் வந்திருக்கிறேன். நீண்டகாலமாக பிரான்சு நாட்டிலிருந்து உருவாக்கப்பட்டு செயற்படுவது தமிழ் கல்விப் பேரவை என்ற அமைப்பாகும். இந்த அமைப்பினுடைய பாடநூல்களே பிரான்சிலிருந்து அச்சடிக்கப்பட்டு உலகெங்கும் வழங்கப்பட்டு வந்தது. இந்தப்பாடநூலை வெளியிட்டுவந்த பொறுப்புக்குரியவர்களது நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும், பணமோசடிகள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, புதிதாக உருவாகியிருக்கும் அனைத்துலக தமிழர் கல்விப் பேரவை (ICEDT ) என்ற அமைப்பினால் புதிய பாடநூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப்புதிய பாடநூலில் ´திட்டமிட்ட இன அழிப்பினை மேற்கொள்ளும் விதமாக , முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னதான மாபெரும் திட்டமாக வரலாற்றை படுகொலை செய்யும்நோக்கில் பாடங்கள் எழுதப்பட்டுள்ளன. வரலாறு, கலை ஆகியவற்றையும் அழிப்பது இன அழிப்பின் ஒரு பகுதியே. இப்பாடநூலில் உள்ள வரலாற்றுத் திரிபுகள் உலகெங்கும் வாழும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களால் அடையாளம் காணப்பட்டு அறிக்கைகளாக வெளியிடப்பட்டுள்ளன அதைவிடவும்; இப்பாடநூல் மீளப்பெறப்பட்டு, நேர்த்தியான வரலாற்றுப் பாடநூல் வெளியிடப்பட வேண்டுமென வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டமும் யேர்மனியில் இருந்து முன்னெடுக்கப்பட்டது. அதைவிடவும் யேர்மனியில் இப்பாடநூல் மீளப்பெறப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி ஒன்றுகூடல்களும் நடைபெறுகின்றன. ஆனாலும்; திரிபுபடுத்தப்பட்ட பாடநூலை வெளியிட்ட அமைப்பினரோ அல்லது இதற்குப் பொறுப்பானவர்களோ இதுதொடர்பில் எவ்வித பதிலையும் தெரிவிக்காமல் தனித்தனியே வெவ்வேறு விதமான பதில்களைக் கூறிவருகிறார்கள் . எங்களுடைய இனம், மொழி, வரலாறு காக்கப்படவேண்டும் என நாம் போராடி வருகின்ற வேளையில், சிங்கள அரசின் திட்டமிட்ட பாடத்திட்டம் இதற்குள் புகுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இப்பாடத்திட்டத்தை உருவாக்கியவர்கள் ஒரு சில பிழைகள் தவிர்ந்த வேறெதுவும் இல்லை எனக் கூறி வருகிறார்கள். இதன்காரணமாக தமிழ்ப்பாடசாலைகள் இரண்டாகப் பிளவுறும் வாய்ப்புகளே அதிகம். ஒரே நாட்டுக்குள்ளே இரண்டு பாடத்திட்டங்கள் மூலம் புலம்பெயர்ந்த தமிழர்களைப் பிளவுபடுத்தும் வேலைத்திட்டங்களே இவையாகும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக நான் என்னை அர்ப்பணிக்கவுள்ளேன். 1985 ஆம் ஆண்டிலிருந்து நான் இந்த விடுதலைப்போராட்டத்தில் பங்குகொண்டுவருகிறேன். இன்று எனது கோரிக்கை யாதெனில்; ஏற்கனவே இயங்கி வருகின்ற தமிழ்க்கல்விப் பேரவை (பிரான்சு) அமைப்பினரும், புதிதாக உருவான ICEDT எனப்படும் அனைத்துலகத் தமிழர் கல்விப் பேரவை என்ற அமைப்பினரும் நேருக்கு நேர் கலந்துரையாடி, பிளவைத் தடுத்து நிறுத்தவேண்டும். அனைத்து நாட்டு ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர்களும் ஒன்றாகக்கூடி இதற்குரிய தீர்வைக்காண வேண்டும். இது விளையாட்டல்ல, எமது இனத்தின் விடுதலை சம்பந்தப்பட்ட விடயம் ஆதலால் இது தொடர்பாக அனைவரும் இணைந்து நேர்த்தியான வரலாற்றை எமது சந்ததிக்கு எடுத்துச் செல்ல ஆவன செய்யவேண்டும். மக்களையே ஓரங்கட்டி இங்கே எதையும் செய்யமுடியாது இதற்குரிய பொறுப்பானவர்கள் இவ்விடயங்களைக் கருத்திற்கொண்டு செயற்படவேண்டி, எதிர்வரும் வியாழக்கிழமை 14.10.2021 வரை கால அவகாசம் தருகிறேன். அதற்குள் இப்பாடப்புத்தகம் தொடர்பாக முடிவுகள் எட்டப்படாவிட்டால், 14.10.2021 அன்று நான் உண்ணாநோன்பை ஆரம்பிக்கவிருக்கிறேன் என்பதை அனைவருக்கும் அறியத்தருகிறேன். முற்றுமுழுதான உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தை நான் ஆரம்பிப்பதற்கு முன்பாக இதற்குரியவர்களுக்கு நான் கால அவகாசம் தந்திருக்கிறேன். அனைவரும் பிரான்சு நாட்டில் ஒன்றுகூடவேண்டும். இதற்குரிய தீர்வு எட்டப்படவேண்டும். அனைவரும் ஒன்றுகூட முற்படும் பட்சத்தில் அனைவருக்குமுரிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதிசெய்யப்படும். எமது தலைவர் தமிழ் மக்களுடைய விடுதலைக்காகப் போராடியவர். தலைவர் எமது இனத்திற்காக தனது குடும்பத்தையே தியாகம் செய்துள்ளார் இனியாவது நாம் அனைவரும் இந்த இடத்தில் ஒன்று திரண்டு போராடவேண்டும். பாடப்புத்தகத்தில் கையை வைத்துவிட்டு, அதை நியாயப்படுத்துவதைவிடுத்து இப்புத்தகம் தவறானது அடையாளம் காணப்படும் நிலையில் இப்புத்தகங்கள் முழுமையாக அழிக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளேன் அன்புடன் மனித உரிமை செயல்பாட்டாளர் ம. கயன்.
 11. எனக்கு அரசியல் அனுபவம் குறைவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எனக்கு அரசியல் அனுபவம் குறைவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனக்கு அரசியல் அனுபவம் குறைவு என்பதால் பிரதமர் மகிந்த ராஜபக்ச அதிகளவு ஈடுபாட்டை காண்பிக்கவேண்டும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனை அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்டகால வரலாற்றை கொண்ட அரசியல் குடும்ப உறுப்பினராக தான் காணப்பட்டாலும் தனக்கு தனிப்பட்ட அரசியல் அனுபவம் எதுவுமில்லை என இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார். மேலும் பலவருட அரசியல் அனுபவத்தை கொண் பிரதமரிடமிருந்து அதிக ஈடுபாட்டை எதிர்பார்ப்பதாக தெரிவித்த கோட்டாபய, ஜனாதிபதியான பின்னரே பல அனுபவங்களை தம் உள்வாங்கியுள்ளதாகவும் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ujirppu.com
 12. மனிதர்களுக்கு மட்டுமா நடனமாடத் தெரியும்.... நாங்களும் ஆடுவோமே.
 13. அபிவருத்திப் பணிகளை கண்காணிக்கும் அதிகாரிகளின் நிதி நிலமைகளை ஆராய்ந்தால்..... உரிய முறையில் அவர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாத காரணங்களும் வெளியாகலாம்.
 14. செய்யும் நன்மையும் தீமையும் நேரடியாக இல்லாவிட்டாலும் யார் மூலமாகவோ கூட நமக்கே திரும்பி வந்து சேரும் என்பதை நமது தர்மம் மிகவும் வலியுறுத்துகிறது. கே.எஸ்.அழகிரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேசிய மக்கள் கட்சி புகார்… கே.எஸ்.அழகிரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேசிய மக்கள் கட்சி புகார்… Posted By: adminon: October 05, 2021In: இந்தியாNo Comments Print Email உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை விமர்சித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி தேசிய மக்கள் கட்சித் தலைவர் எம்.எல் ரவி, சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறையிடம் புகார் அளித்துள்ளார். கடந்த அக்டோபர் 1 ம் தேதி மறைந்த நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் 93 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டதால் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அந்த சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நீதிமன்றத்திற்கு வர 25 நிமிடம் காலதாமதமானது. பொது ஊழியரான தன்னை தடுத்து நிறுத்த யாருக்கும் உரிமை இல்லை எனத் தெரிவித்த நீதிபதி, தனது பணி பாதிக்கப்பட்டதால் அது குறித்து உள்துறை செயலாளர் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தார் அதன்படி காணொலி காட்சி மூலம் உள்துறை செயலாளர் பிரபாகர் ஆஜராகி வருத்தம் தெரிவித்ததோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறாது என உத்தரவாதம் அளித்ததை ஏற்றுக்கொண்டு, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அதே மரியாதையை நீதிபதிகளுக்கும் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இதை விமர்சித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்ட அறிக்கையில், அசாதாரண சூழலில் ஏற்பட்ட எதிர்பாரா நிகழ்வை இயல்பாக எடுத்துக்கொள்ளாமல் பொங்கி எழுந்துள்ளதாகவும், உள்துறை செயலாளரை வசை பாடியது கண்டனத்துக்குரியது எனவும் தெரிவித்திருந்தார். முதலமைச்சருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்குவதை நீதிபதி புரிந்து கொண்டாரா என்றும், நீதிபதி தன்னுடைய வரம்பை மீறிப் பேசியது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார். கே.எஸ்.அழகிரியின் அறிக்கை நீதிமன்ற அவமதிப்பு எனவும், நீதிபதி மீது அவதூறு பரப்பும் வகையில் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு செயல்பட்டுள்ள அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரி தேசிய மக்கள் கட்சித் தலைவரும்,வழக்கறிஞருமான எம்.எல் ரவி உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பியிருந்தார். இந்த நிலையில், இன்று தலைமை நீதிபதி அமர்வில், எம்.எல். ரவி சார்பில் பதிவுத்துறைக்கு அனுப்பிய புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு முறையிட்டார். இதைக் கவனத்தில் எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
 15. வாழ்த்துக்கள் ஈழப்பிரியன் புரட்டாசி 13 விசேடமான நாளாம்....
 16. கள்ள வியாழன் கழுத்தறுக்கும் என்று சொல்வார்கள். யாருடைய கழுத்துகள் அறுபட்டன என்பது நாளை வெள்ளிக்கிக்கிழமை வெளிச்சத்திற்கு வரலாம்.
 17. வினை விதைத்தவர்கள் நிச்சயம் வினை அறுப்பார்கள். பிள்ளைகளால் பாதிப்படைந்த பெற்றோரின் கண்ணீருக்கு காலம் நிச்சயம் பதில் சொல்லும்...
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.