Jump to content

Paanch

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    7510
  • Joined

  • Last visited

  • Days Won

    18

Status Replies posted by Paanch

  1. வணக்கம் நட்புகளே, எனக்கு வயது 30, திருமணம் ஆகவில்லை, எனக்கு புகைப்பழக்கம் சுத்தமாகவே கிடையாது ஆனால் மது அருந்தும் பழக்கம் 3 வருடங்களாக இருக்கிறது, சில சமயத்தில் வாரத்தில் 2 அல்லது 3 முறை, சில சமயத்தில் மாதத்தில் 2 அல்லது 3 முறை நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவேன். சில சமயங்களில் அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்து சாப்பிட்டு படுத்த பின்பும் அல்லது அடுத்த நாள் காலையில் நெஞ்சு பகுதியில் படபடப்பாக இதயம் வேகமாக துடிக்கும், அது சில நிமிடங்களிலேயே சரியாகி விடும். 

    ஆனால் இப்போதெல்லாம் அந்த நெஞ்சு படபடப்பு காரணமே இல்லாமல் அடிக்கடி வந்து போகிறது.

    (மது அருந்தாமல் இருந்தால் கூட அந்த படபடப்பு வருகிறது.)

    நெஞ்சு படபடப்பு வரும் போது நெஞ்சு வலி, நெஞ்சு எரிச்சல், மூச்சு திணறல், அதிக வியர்வை, வாந்தி, தலை சுற்றல், மயக்கம், தோள் பட்டை வலி, கை, கால் வலி, முதுகு வலி என்று எந்த விதமான அறிகுறியும் இதுவரை எனக்கு வந்தது இல்லை. ஆனால் உடல் அடிக்கடி சோர்வாகவே இருக்கிறது, சரியாக சாப்பிட முடிவில்லை, இரவில் சரியான தூக்கமும் இல்லை, அடிக்கடி தலை வலி வரும். 

    நான் மது அருந்துவதை விட்டு 3 மாதங்கள் ஆகிறது, 

    நான் இந்த மாதிரி நெஞ்சு படபடப்பு வரும் போது அடிக்கடி ஒரு அரசு தலைமை மருத்துமனைக்கு சென்று டாக்டரிடம் பிரச்சனைகளை சொல்லுவேன் எனக்கு அடிக்கடி ஈசிஜி (ECG) எடுத்து பார்ப்பார்கள் ஆனால் எல்லாம் நார்மலாக தான் இருக்கும். 

    பிறகு டாக்டர் ஒரு நாள் நீங்கள் ஒரு இருதய டாக்டரிடம் (Heart Specialist) சென்று பாருங்கள் என்று சொன்னார். 

    நானும் இருதய டாக்டரிடம் சென்று எனக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை எல்லாம் சொன்னேன் பிறகு அவர் எனக்கு முதலில் ஈசிஜி (ECG) எடுத்து பார்த்தார் அதில் நார்மலாக தான் இருந்தது பிறகு எக்கோ பரிசோதனை செய்து பார்த்து விட்டு எல்லாம் நார்மலாக தான் இருக்கிறது என்று சொல்லி விட்டு பிறகு தைராய்டு டெஸ்ட் எடுத்து பார்க்க சவன்னார் அதிலும் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் (Haemoglobin) அளவு குறைவாக உள்ளது என்று சொல்லி சில மாத்திரைகள் மற்றும் ஒரு டானிக் எழுதி அதை வாங்கி தினமும் சாப்பிட சொன்னார், நானும் டாக்டர் சொன்னதை போல தினமும் மருந்து மாத்திரை சாப்பிட்டுகொண்டு தான் இருக்கிறேன் ஆனால் மறுபடியும் அடிக்கடி அந்த நெஞ்சு படபடப்பு வருகிறது, இது மாரடைப்பிற்கு (Heart Attack) உண்டான அறிகுறியா அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா என்று தெரியாமல் தினமும் குழப்பமாகவும், பயமாகவும் இருக்கிறது!!

    1. Paanch

      Paanch

      உங்களுக்கு திருமணம் ஆகவில்லை என்று தெரிவித்துள்ளீர்கள். அப்போ எப்படி இந்தப் படபடப்பு நெஞ்சு வலி, நெஞ்சு எரிச்சல், மூச்சு திணறல், அதிக வியர்வை, வாந்தி, தலை சுற்றல், மயக்கம், தோள் பட்டை வலி, கை, கால் வலி, முதுகு வலி எல்லாம் வருகிறது.....? ஆச்சரியமாக உள்ளது.?? 😲 

    2. (See 1 other reply to this status update)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.