Jump to content

Paanch

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    7510
  • Joined

  • Last visited

  • Days Won

    18

Posts posted by Paanch

  1. 4 hours ago, Kapithan said:

    ஆண்பாலில் நம்பிக்கையா, பெண்பாலில் நம்பிக்கையா என்பதையும் ஒருக்காச் சொல்லிட்டுப் போறது...😉

    என் நம்பிக்கைப் பால் ஒன்று இரண்டல்ல அவை பலது தம்பி.

    ஆண்பால்

    பெண்பால்

    பலர்பால் 

    ஒன்றன்பால்

    பலவின்பால் 

    பசுவின்பால்

    ஆட்டுப்பால்

    தேங்காய்ப்பால்

    மேற்சொன்ன பால்கள் அனைத்திலும் நம்பிக்கை உண்டு, இந்தக் கள்ளிப்பாலில் மட்டும்தான் நம்பிக்கை இல்லை, அதனை யாருக்காவது கொடுத்துப் பரீட்சிக்கலாம் என்று எண்ணியுள்ளேன். உங்கள் உதவி கீடைத்தால் நன்று. இப்படி நான் எழுதியதும்....! நீங்களே பரீட்சித்துப் பாருங்கள்  என்று சொல்லுவீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்.!!

     

  2. 7 hours ago, goshan_che said:

    ஐயா,

    நீங்கள் உங்களை போலவே எல்லாரையும் வெளுத்ததெல்லாம் பால் என நம்புகிறீர்கள்.

    உண்மைதான் தம்பி, குடும்பத்தில் நான் கடைக்குட்டி, எனக்குப்பிறகு தம்பி தங்கைகள் யாரும் இல்லை. அதனால் நான் நீண்டகாலம் அம்மாவிடம் பால் குடித்ததாக அண்ணன் அக்காமார் சொல்வார்கள். அதனால்தான் என்னவோ பாலில் எனக்கொரு நம்பிக்கை.😋

    • Haha 2
  3. 12 minutes ago, புலவர் said:

    பழைய புளொட்காரரிடம் சொன்னால் ஈசியாய்  பிடிக்கலாம்.

    சரியாகச் சொன்னீர்கள், மாலைதீவைப் பிடிக்கப்போன அனுபவம் இவர்களுக்கு நிறையவே இருக்கிறது.

    கோத்தா இப்போ மாலைதீவில், 

  4. 1 hour ago, தமிழ் சிறி said:

    இன்றைக்கு... 13´ம் திகதி, 13:00 மணிக்கு முன், ரணிலும்... 
    இடத்தை காலி பண்ண வேண்டும் என்று 
    போராட்டக் காரர்கள் காலக்கெடு விதித்துள்ளார்கள்.  

    அதுக்குப் பிறகுதான்... "கிரிபத்" பாட்டி. 😁
    13´ம் திகதி... நல்ல கூத்து இருக்கு என்றது மட்டும் நிச்சயம். 
    ராஜ வன்னியன்... சுடச் சுட செய்தி கிடைக்கும், தொடர்ந்து இணைந்திருங்கள்.   

    13ம் இலக்கத்தை இங்கு யேர்மனியர்கள் அதிகமாக விரும்புவதில்லை, அது ஏனென்று இப்போது புரிந்தது.

    இலங்கையில் 13 தனது விளையாட்டைக் காட்டிவிட்டது.😁

  5. 1 hour ago, தமிழ் சிறி said:

    அத்தோடு, ஜனாதிபதி நாட்டைவிட்டு வெளியேறியதாகத் தெரிவித்த சபாநாயகர், அதன்பின்னர் தான் தவறுதலாக தெரிவித்ததாகவும் ஜனாதிபதி தற்போதும் நாட்டிலேயே தங்கியுள்ளார் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

    "நான் அரசியல்வாதியாக வருவதற்கு என்ன செய்யவேண்டும்" என பிரித்தானிய பிரதமராகவிருந்த வின்சன் சர்ச்சிலிடம் அவரது நண்பர் ஒருவர் கேட்டபோது.... "நீ செய்த தவறொன்றைத் தவறில்லை என்று வாதாடி வெல்லும் திறமை உனக்கிருந்தால் நீ அரசியல்வாதி" என்றாராம். 

  6. 7 hours ago, Kapithan said:

    தமிழர் சிங்களவர் பிரச்சனை எத்தனை நூற்றாண்டு காலத்தினை வரலாறாகக் கொண்டது என்பது உங்களுக்குத் தெரியும். அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட நம்பிக்கையீனமே இன்றைய இனப்பிரச்சனைக்கான அடிப்படை.  ஒரிரவில் இதனைத் தீர்க்க முடியுமா ? அப்படி ஒரு தீர்வை முன்வைத்தாலும் அது நின்று நிலைக்குமா ? 

    இத்தனை அழிவுகள் ஆகுதிகளைக் கண்ட பின்னரும் இந்தப் பிரச்சனையை இத்தனை இலகுவாகக் கையாளலாம் என சிந்திக்கும் வஞ்சகத்தனத்தை என்ன சொல்வது ? 

    யாராவது குணா கவியழகனுக்குச் " உந்த ஆர்ப்பாட்டக்காறரை ஒருக்க யாழ்ப்பாணப் பக்கம் கொண்டுவந்த என்ன ? " என்று சொல்லியிருப்பினம். அதைக் கேட்டுவிட்டு ஒரு வீடியோ போட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். 

    உங்கள் ஊட்டத்தில் உள்ள உண்மைகளை வரவேற்கும் அதேநேரம், கவியழகன் மேலுள்ள காழ்ப்புணர்ச்சியை வரவேற்க முடியவில்லை. அவருடைய கூற்றில் உண்மைகளும் இருப்பதினால்தான் யாழ்கள உறவுகளும் அவருடைய பல கருத்துக்களுக்கு 'லைக்' போட்டு வரவேற்றுள்ளனர்.

    • Thanks 1
  7. 7 hours ago, Kapithan said:

    உவர் சொல்லுறத வடக்கில போய்ச் சொன்னால், சொல்லுறவனுக்குத்தான் சனம் முதலில் கல்லெறியும்.

    கபிதன் அவர்களே அவர் சொல்வதை ஏற்றுக்கொள்பவர்களும் உள்ளார்கள், விமர்ச்சிப்பவர்களும் உள்ளார்கள். ஆகவே அவர் கருத்துக்கள் முற்றிலுமே தவறானவை என்று எழுந்தமானமாகக் கூற முடியாது. சிந்திக்க வேண்டியவற்றை உள்வாங்கி ஏனையவற்றைப் புறம்தள்ளிவிடலாம்.

    வடக்குச் சனம் வாக்களித்துத் தெரிவுசெய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே இன்று விமர்ச்சனத்துக்கு உள்ளாகியுள்ளனர். அதில் முக்கியமாக டக்ளசு தேவானந்தா, அங்கயன், சுமந்திரன் போன்றோரைத் தெரிவுசெய்த சனமும் அங்கிருக்கையில் எவர் முன்வந்து கல்லெறிவார்கள்.?? 

  8. 2 hours ago, குமாரசாமி said:

    கொழும்பு எல்லாமே காலியாகிட்டுது. இந்தாள் என்ன புதுக்கதை விடுது? :cool:

    இந்தப் பூனை இன்னும் கண்திறக்கவில்லை என்றாலும் மணத்தில் சில எலிகளைப் பிடிக்கத்தான் செய்கிறது.😄

  9. 10 minutes ago, Kapithan said:

    ஏப்ரல் 01 க்கு ஒரு புளுடா விட்டால் அதற்கெல்லாம் கருத்து கூற முடியுமா ? 

    அந்த நகைச்சுவைக்குக் கூட  பலர் ஏற்கனவே கருத்து கூறிவிட்டனர்.  

    அதுவும் போதாதென்றால் நீங்கள் ஆரம்பியுங்க்ள் , நாங்கள் தொடருவோம்..👍

     

    நல்லது! உங்களாலும் நல்ல கருத்தைத் தெரிவிக்க முடியவில்லையே.🤔

  10. On 10/7/2022 at 00:51, satan said:

    இனி இனவாதத்தை தூண்டி ஆட்சியை பிடிக்க முடியாது. நாட்டின் முன்னேற்றம் பற்றி பேச வேண்டும். நாமும், தமிழ்த்தேசியம் பேசி ஏமாற்றும் பேர்வழிகள் பற்றி யோசிக்க வேண்டும்.

    இனவாதத்தையும் தமிழ்தேசியத்தையும் ஒரே கோட்டில் நிறுத்திப் பார்க்க முடியாது. இரண்டும் பாரிய வேறுபாடுகளைக் கொண்டது. 

    இனவாதம் தூண்டி வளர்க்கப்படு்கிறது. அதுவே இன்றுவரை இலங்கையில் ஆட்சி செய்கிறது.

    தமிழ்த்தேசியம் தோண்டிப் புதைத்து அழிக்கப்பட்டு வருகிறது. 

  11. 1583299117638.png

    இங்கு குணா கவியழகன் அவர்களின் கருத்துக்கான பின்னூட்டங்கள், நம்பிக்கையை இழந்த சோர்வின் அடிப்படையில் எழுந்தவைபோல் தோன்றுகிறது. ஒருவருடைய கருத்தை ஏற்றுக்கொள்ள இயலாவிட்டால், அவரது கருத்தை மேவிய, நிறைவேறக்கூடிய, நல்ல சிந்தனைகளை வெளியிட்டுப் பதிவதே, சோர்வின்றி வெற்றியை நோக்கிப் பிறரும் நகர்வதற்கு வழிவகுக்கும்.🙏 

    • Like 2
    • Thanks 1
  12. 19 hours ago, ராசவன்னியன் said:

    மாலத்தீவு கூட வல்லரசாவேன்னு சொல்லலாம், அது அவரவர் நம்பிக்கை சார்ந்தது. 😜

    கனவு காண்பதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு..!

    முதுகெழும்பே இல்லாத கோழை. முதுகெலும்பு அற்றவர் முதல்வராக ஆசைப்படக்கூடாது என்றும் எச். ராஜா கூறியுள்ளார்.

    முதுகெலும்பு அற்ற கோழை

  13. 2 hours ago, ராசவன்னியன் said:

    அவர்கள் போராட்டக்காரர்களை நோக்கி சுடவில்லை, காத்து வாக்கில வாசல் சுவற்றில் சுட்டு அவர்களை செல்லமா எச்சரிக்கிறார்களாம்..! 🤣

    இவர்களுக்குக் குறிபார்த்து சுடத்தெரியாது என்பது பன்னாட்டு அரசுகளை ஏமாற்றி அவர்களது இராணுவத்தினரை முள்ளிவாய்க்காலுக்கு அழைத்தபோதேதெரியவில்லையா.?

  14. ராஜபக்சர்களுக்கு குறிசொல்பவர் வெளியிட்ட முக்கிய தகவல்கள்

     அரச தலைவர் எனது கோயிலுக்கு வந்தது அரசியல் முடிவுகளையும் ஆலோசனைகளையும் பெறுவதற்காக அல்ல. சுகவீனம் காரணமாக நேர்த்தி கடனுக்காகவே வந்தார்.

    அரசியல்வாதிகளுக்கு கோயிலில் சேவைகளை வழங்கியமை குறித்து தான் தற்போது வருத்தப்படுவதாக அனுராதபுரம் இசுருபுர பிரதேசத்தில் வசிக்கும் ஞானா அக்கா என அழைக்கப்படும் ஞானவதி ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

    வலையொளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஞானக்கா இதனைத் தெரிவித்துள்ளார்.

    கோட்டாபய ராஜபக்சவுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்தி விட்டேன்.

    2.jpg

    மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நான் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்தி விட்டேன்.

    செல்வதற்கு இடமில்லாது இந்தச் சந்தர்ப்பத்தில் அவர வீட்டுக்கு அழைக்க மாட்டேன்.

    கோட்டாபய ராஜபக்சவின் குடும்பத்திற்கும் எனது கோயிலுக்கும் இடையிலான தொடர்பு 13 வருடத்திற்கு மேற்பட்டது.

    அரச தலைவராக தெரிவான பின் அவர் கோயிலுக்கு வரவில்லை

    அரச தலைவராக தெரிவாகும் முன்னர் அவர் அடிக்கடி கோயிலுக்கு வந்து சென்ற போதிலும், அரச தலைவராக தெரிவான பின்னர் அவர் என்னை சந்திக்க கோயிலுக்கு வரவில்லை.

    image.jpg

    இப்படியான பின்னணியில் கோட்டாபய ராஜபக்சவுடன் தற்போது எவ்வித தொடர்புகளும் இல்லை.

    ஹிருணிகா பிரேமச்சந்திர வெளியிட்ட கருத்துக்கள் காரணமாக சமூகத்தில் என்னை பற்றி தவறான விம்பம் ஏற்பட்டுள்ளதுஎன்றார்

    ibctamil.com

  15. 14 minutes ago, ராசவன்னியன் said:

    வல்லரசா? யார் சொன்னா??

    இங்கே உள்ளவனுக்கு மூனு வேளை சாப்பாட்டுக்கு வழியில்லை, கார்பொரேட் நிறுவனங்கள் கொழுத்துக்கொண்டிருக்கு.. நீங்க வேறை..!

    இதைச் செய்தால் வல்லர(சாகலாம்)சு ஆகலாம் என்று மாலை முரசு செய்திகள் சொல்கிறதே.!

     

  16. 8 minutes ago, ராசவன்னியன் said:

    அட்டு பீசோ, ஆஃபர் பீசோ..! கோழி குருடா இருந்தாலும், ஐயருக்கு கு(ரு)சி முக்கியம். 😜

    அப்போ இந்தியாவின் வல்லரசாகும் கனவும் இப்படித்தானா.???

  17. ஜப்பான் மரியாதைக்குரிய அரசியல்வாதியை இழந்துவிட்டது ஜனாதிபதி

     ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கி சூட்டில் உயிரிழப்பு!

     

    k.png         

    ஜப்பான் மிகவும் மரியாதைக்குரிய அரசியல்வாதியை இழந்துவிட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

    ஜப்பானில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஜப்பானின் தேசிய ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், இந்த விடயம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , “ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் துயர மரணம் ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. ஜப்பான் மிகவும் மரியாதைக்குரிய அரசியல்வாதியை இழந்துவிட்டது.

    அவரது குடும்பத்தினருக்கும், ஜப்பான் மக்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்என பதிவிட்டுள்ளார்.

     

    சாத்தானின் அனுதாபம். 

    சாத்தானுக்கு????

  18. 1 hour ago, தமிழ் சிறி said:

    ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு அமெரிக்காவில் மாத்திரமே பொருளாதார தடைகளை விதித்துள்ளதாகவும், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை வாங்குவது என்பது அந்த நாடுகளின் வேலை எனவும் அவர் கூறியுள்ளார்.

    அமெரிக்க சனாதிபதிக்கு மீசை இல்லை ஆகவே மண் ஒட்டாது.😆

    image.jpg

  19. 4 hours ago, ஈழப்பிரியன் said:

    ஆஆஆஆ
    நீங்களே போட்டுக் கொடுத்துவியள் போல இருக்கே பாஞ்ச்?

    அப்படி அல்ல ஈழப்பியரே! மட்டக்களப்பிலும், யாழ்ப்பாணத்தில் இருக்கும் இராணுவம் அனைத்தும் கொழும்பு சென்றுவிட்டால், சிறிது காலமாவது அங்குள்ள மக்கள் இராணுவத் தொல்லையின்றி சற்று நிம்மதியாக இருப்பார்களே என்ற எண்ணத்தினால் வந்தது.😌 

  20. இலங்கையைப் பற்றிய சில சுவாரசியமான செய்திகள் தெரியுமா? 

     lk.jpg

    உலகின் எட்டாவது அதிசயமாக இலங்கையின் சீகிரியா யுனெஏசுகோவால் (UNESCO) அறிவிக்கப்பட்டது.

     

    இலங்கையிலேயே உலகின் முதல் யானை அனாதை இல்லம் ஆரம்பிக்கப்பட்டது.

     

     இலங்கை அதன் வடிவத்தால் இந்து சமுத்திரத்தின் முத்துஎன்றும் இந்தியாவின் கண்ணீர் துளிஎன்றும் அழைக்கப்படுகிறது.

     

    இலங்கையில் அதிகளவில் கறுவா உற்பத்தி செய்யப்படுகிறது.

     

    இலங்கையில் உள்ள நுவரெலியா பிரதேசம் சிறிய இங்கிலாந்து’ (Little England) என்று அழைக்கப்படுகிறது.

     

    உலகில் முதன் முதலில் பெண் பிரதமரைக் கொண்ட நாடு இலங்கையாகும்.

     

    சிங்கக் கொடி என்றும் அறியப்படும் இலங்கையின் தேசியக் கொடியில் பல்வேறு கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

    2lk.jpg

    இலங்கை தெற்காசியாவில் இரண்டாவது உயர்ந்த கல்வியறிவு விகிதத்தைக் கொண்டிருக்கிறது. (மாலைத்தீவிற்கு அடுத்ததாக)

    3lk.jpg

     

    ஏற்றுக்கொள்வதை வெளிப்படுத்த மக்கள் தலையை ஆட்டும் பழக்கம் இலங்கையில் உள்ளது என கூறுகின்றனர்.

     

    இங்கு கோட்டல் எனக்குறிப்பிடப்பட்ட அனைத்திலும் இரவில் தங்குவதற்கான வசதி காணப்படாது.

    4lk.jpg

    உலகின் பழமையான மனிதனால் நடப்பட்ட மரத்தின் தாயகம் இலங்கையாகும். (சிறீ மகா போதி)

    5lk.jpg

    உலகின் நான்காவது பெரிய தேயிலை உற்பத்தியாளரும், (சீனா, இந்தியா மற்றும் கென்யாவுக்குப் பிறகு) மூன்றாவது பெரிய ஏற்றுமதியாளரும் இலங்கையே ஆகும்.

    6lk.jpg

    உலகின் மிகப்பெரிய நிலப் பாலூட்டியான யானையையும், மிகப்பெரிய கடல் பாலூட்டியான நீல திமிங்கலத்தை ஒரே நாளில் காணக்கூடிய ஒரே நாடு இலங்கை என்று கூறப்படுகிறது.

  21. 2 hours ago, தமிழ் சிறி said:

    இதன் காரணமாக ஜனாதிபதி செயலகம், டெம்பில் லேன், பிரதமர் இல்லம் மற்றும் பொலிஸ் தலைமையகம் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதிசெய்து பொது ஒழுங்கை முகாமைத்துவம் செய்யுமாறு கட்டளை அதிகாரி விசேட அதிரடிப்படையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இதற்காக கடமைகளில் ஈடுபடுவதற்கு பெருமளவிலான விசேட அதிரடிப்படை அதிகாரிகள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

    எனவே கொழும்பு பிரதேசத்தில் உள்ள முகாம்கள் மற்றும் நிலையங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் வீட்டிலிருந்து பணிக்கு சமூகமளிக்கும் உத்தியோகத்தர்கள் அனைவரையும் அவசர கதியில் மேற்படி கடமைகளுக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    கட்டளை அதிகாரி மட்டக்களப்பையும், யாழ்ப்பாணத்தையும் மறந்ததேன்........?????????😲

  22. 7 hours ago, ஈழப்பிரியன் said:

    இதுகளுக்கு சாப்பாடு போட யார் வீட்டையாம் போறது?

    ஒன்று மரத்தில் புடுங்கிப் பசியாறும் மற்றது மண்ணில் மேய்ந்து பசியாறும். மனிதரைப்போல் அவித்துப் பொரித்துச் சாப்பிட அடுப்பையும் தேடாது, எரிவாய்வையும் தேடாது..😜

    • Haha 1
  23. 1 hour ago, தமிழ் சிறி said:

    சைக்கிளை 8 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தததாகவும், அதனையே தாம் வாங்கி மீள விற்பனை செய்வதற்காக விளம்பரப்படுத்தியதாக கூறியுள்ளார்.

    அம்மாடியோவ்! சைக்கிள் யானைவிலை, குதிரைவிலை! நான் இதில்தான் சவாரி செய்வேன்.!!😆 

    மான் மீது குதிரை சவாரி செல்லும் குட்டி குரங்கின் வைரல் வீடியோ..!

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.