Jump to content

Paanch

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    7510
  • Joined

  • Last visited

  • Days Won

    18

Posts posted by Paanch

  1. 35 minutes ago, தமிழ் சிறி said:

    வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு டொலர் அனுப்புவதை தவிர்ப்பதன் மூலம் ஒருபோதும் ராஜபக்ஷர்கள் பாதிக்கப்பட போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

    image.jpg

  2. On 2/6/2022 at 16:58, nedukkalapoovan said:

    மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்ற திலீபனை பயங்கரவாதின்னு சொன்ன வாய்.. இப்ப இப்படி சொல்லுது. அப்ப இவரும் ஒரு பயங்கரவாதி.. அப்படித்தானே..?!

    மக்களைக் காக்கச் சிலுவை சுமந்த யேசுபிரானை அரசு அந்தச் சிலுவையிலே அறைந்தது. அது திலீபனுக்குப் பொருந்தும்.

    தன் மக்களை அழிக்கப் பயங்கரவாதத்தைச் சுமக்கும் சுமந்திரனை மக்களே அந்தப் பயங்கரவாதத்தில் அறைந்து வருகிறார்கள். இது சுமந்திரனுக்குப் பொருந்துகிறது.

    • Like 1
  3. 6 hours ago, satan said:

     இவரும் சளைக்காமல் அடுக்கடுக்காய்  கொழுத்தி போட்டுக்கொண்டே இருக்கிறார் ஆனால் ஒன்றும் வெடிக்கிற மாதிரி இல்லை.

    வெடிக்காத பட்டாசு கையில் எடுக்க வேண்டாம்

    எக்காரணம் கொண்டும் வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்க வேண்டாம். அவை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். சில சமயங்களில் புஸ்வாணம் கூட வெடிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.
     

    • Haha 1
  4. On 30/5/2022 at 06:25, தமிழ் சிறி said:

    அனைத்து அமைச்சர்களும் தங்கள் வீட்டுத் தோட்டங்களில் உணவுப் பயிர்களை பயிரிடத் தொடங்க வேண்டும் என்பதோடு நாடு எதிர்கொள்ளும் சவாலை முறியடிக்க, விவசாய அதிகாரிகளுடன் அரசு ஊழியர்களும் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

    image.jpg

    • Like 1
  5. ஒரு அரசுக்கான ஐந்து அறிவுரைகள் - திருக்குறள் 
    அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
    மானம் உடைய தரசு.

    பொருள்
    அறநெறி தவறாமலும், குற்றமேதும் இழைக்காமலும், வீரத்துடனும், மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களைக் கொண்டதே சிறந்த அரசாகும். 

    முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
    இறையென்று வைக்கப் படும்.

    பொருள்
    நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்.

    கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
    உடையானாம் வேந்தர்க் கொளி.

    பொருள்
    நலவாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களைப் பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும்.

    இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
    வகுத்தலும் வல்ல தரசு.

    பொருள்
    முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.

    தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
    நீங்கா நிலனான் பவர்க்கு.

    பொருள்
    காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்.

  6. image.gif.134ab85bc51d1b17736c0c55c839449e.gifசென்னை, டுபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற விமான நிலையங்களுக்குத் விமானங்கள் திருப்பி அனுப்பப்படுவதாக  விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஏனுங்க அங்கெல்லாம் அலையவேண்டும்....? மன்னாரில் எரிவாயு இருப்பதாக முன்பு செய்திகள் வந்தனவே.??🤔

     

  7. 1 hour ago, தமிழ் சிறி said:

    அனைத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களும்... இராஜினாமா செய்ய வேண்டும் -சுமந்திரன்

    சுமந்திரன் அவர்களே நீங்கள் எப்போ செய்யப்போகிறீர்கள்........?????????????????🤔

    • Haha 2
  8. 4 hours ago, தமிழ் சிறி said:

    தற்போதைய சூழ்நிலையில் இணைந்து பயணிப்பதுதான் சிறப்பு எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டீ.பி. ஹேரத் தெரிவித்துள்ளார்.

    Vaal-Pidithal-1.jpg

  9. 1 hour ago, தமிழ் சிறி said:

    இலங்கை சர்வதேச சந்தையில் 47 சதவீதம் கடன் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது.

    அதில் 10 சதவீத கடனையே சீனாவுக்கு செலுத்த வேண்டியுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

    கடுகு சிறிதெனினும் காரம் பெரிது. 

    சீளாவைப்போல் வேறெந்த நாடுகளும் இதுவரை இலங்கையில் காலூன்றவில்லையே. 🤫

  10. On 20/5/2022 at 21:29, nedukkalapoovan said:

    ராஜீவ் காந்தியால் இறந்த குடும்பங்களுக்குள் இவையும் வருவினம். ஈழத்தில் ராஜீவ் காந்தியால் இறந்தது தமிழர்கள் இல்லையா..??  இவை ராஜீவுக்கு சேவம் செய்யப் போய் இறந்தார்கள்.. என்றால்.. ராஜீவை நம்பியதற்காக அவரால் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்கள் எப்படி மறக்கப்பட முடியும்..??! 

    இன்றுடன் ராஜீவ்காந்தி மரணித்து 31 வருடங்கள் நிறைவடைகின்றது. அதனையடுத்து ராஜீவ் ஒரு நேர்மையான சுத்தமான கைகளை உடையவர், அவரை அநியாயமாகக் கொன்றுவிட்டார்கள் என ஈழ எதிர்ப்புக் கூட்டங்கள் கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
    உண்மையிலேயே ராஜீவின் கைகள் சுத்தமானவையா? என்றால் ஒரு போதும் இல்லை. அவர் தமிழ் இனத்தை மட்டுமல்ல, சீக்கிய இனத்தைக் கூட அழிக்கத்துணை நின்ற ஒரு இனப்படுகொலையாளி, ஊழல்வாதி!
    தமிழினப் படுகொலையில் ராஜீவ்காந்தியின் பங்களிப்பு!
    1987இல் இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானதை அடுத்து 1987 யூலை மாதம் தமிழர் தாயகத்திற்கு இந்தியப் படைகள் ”இந்திய அமைதி காக்கும் படைகள்” என்ற பெயரில் பெருமெடுப்பில் வந்து இறங்கின.
    இந்தியப் படைகள் தமிழர் தாயகத்திற்கு வந்ததும், சிறிலங்கா இராணுவத்தினரின் ஆதிக்கம் குறைக்கப்பட்டு இந்தியா இராணுவத்தினரின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது.
    இதனால் இந்தியப் படையினர் தங்களைப் பாதுகாப்பார்கள் என்ற தோற்றப்பாடு தமிழர்கள் மத்தியில் எழுந்திருந்தது.
    இயக்கத்திடமிருந்து ஆயுதங்களை களைந்து அமைதியை ஏற்படுத்துவதாக சொல்லிக் கொண்ட இந்திய அமைதிப்படை மற்றும் உளவு அமைப்பான ரோ, மறுபுறமாக இங்கிருந்து தப்பிச்சென்று இந்தியாவில் ஒழித்திருந்த ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் போன்ற அமைப்புகளை மீள தமிழர் தாயகத்திற்கு அழைத்துவந்து அவர்களுக்கு பாரியளவில் ஆயுதங்களை வழங்கியிருந்தது.
    இயக்கத்திடமிருந்து ஆயுதங்களை பறித்துவிட்டு ஏனைய தமிழ் ஒட்டுக்குழுக்களை வைத்து இயக்கம் மீது தாக்குதல் நடத்தி அவர்களை ஒழிப்பது தான் இந்தியப்படை மற்றும் ரோ இன் திட்டமாக இருந்தது. இந்தத் திட்டத்தை இயக்கம் உணர்ந்து கொண்டதாலும், இந்தியப்படைகளின் பின்னணியில் இயங்கிய ஒட்டுக்குழுக்கள், இயக்கத்தின் முகாம்கள் மற்றும் இயக்க உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடாத்தத்தொடங்கியிருந்ததாலும் இந்தியப்படைகளின் தந்திர நடவடிக்கைப் பிழைத்துப் போனது.
    அதனையடுத்து இந்தியப்படைகள் இயக்கத்தை அழிக்கிறோம் என சொல்லிக்கொண்டு போரை ஆரம்பித்தன. ஆனால் இயக்கத்தை அழிப்பதற்கு மாறாக தமிழ் மக்களை கொன்று குவிப்பதில்த் தான் இந்தியப்படைகள் அதிக முனைப்புடன் செயற்பட்டது.
    அந்த வகையில் தமிழர் தாயகத்தில் இந்தியப்படைகள் செய்தி முக்கியமான சில சம்பவங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளது!
    🔴11.10.1987 - புதுக்காட்டுச் சந்தியில் பொதுமக்கள் மீது இந்தியப்படையினர் நடாத்திய தாக்குதலில் 8 தமிழர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
    🔴12.10.1987 - கொக்குவில் பிரம்படி மற்றும் பொற்பதியில் இந்தியப்படைகள் நூறிற்கும் மேற்பட்ட தமிழர்களை உயிருடன் நிலத்தில் படுக்க வைத்து அவர்கள் மேல் டாங்கி வாகனங்களை ஏற்றிக் கொலை செய்திருந்தார்கள்.
    🔴12.10.1987 - சுன்னாகம் மின்சார நிலையப்பகுதியில் இந்தியப்படைகள் நடாத்திய தாக்குதலில் 08 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
    🔴20.10.1987 - சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் அடைக்கலம் புகுந்திருந்தவர்கள் மீது இந்தியப்படைகள் நடாத்திய தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள்.
    🔴20.10.1987 - யாழ்ப்பாணம் நாவலர் பாடசாலையில் அடைக்கலம் புகுந்திருந்தவர்கள் மீது இந்தியப்படைகள் நடாத்திய தாக்குதலில் 17 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்
    🔴21.10.1987 - யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த இந்தியப்படைகள் நடாத்திய தாக்குதலில் 21 வைத்தியசாலைப் பணியாளர்களும், 46 நோயாளிகளும் கொல்லப்பட்டனர்
    🔴22.10.1987 - யாழ்ப்பாணம் அராலித்துறையில் இந்தியப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 35க்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர்
    🔴24.10.1987 - அச்சம் காரணமாக மக்கள் அடைக்கலம் தேடி தங்கியிருந்த கொக்குவில் இந்துக் கல்லூரி அகதிகள் முகாம் மீது இந்தியப்படைகள் நடாத்திய தாக்குதலில் 40 தமிழர்கள் கொல்லப்பட்டனர்
    🔴26.10.1987 - அளவெட்டி இந்து ஆச்சிரமத்தின் மீது இந்தியப்படைகள் நடாத்திய உலங்குவானூர்தித் தாக்குதலில் அங்கு தங்கியிருந்த முதியோர்கள், சிறுவர்கள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.
    🔴27.10.1987 - சாவகச்சேரி சந்தைப்பகுதியில் கந்தசஸ்டி விரதகால சூரன்போர் நிகழ்வின் மீது இந்தியப்படைகளின் இரு உலங்குவானூர்திகள் நடாத்திய தாக்குதலில் 68 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
    🔴05.11.1987 - மூளாய் வைத்தியசாலை மீது இந்தியப்படைகள் நடாத்திய எறிகணைத் தாக்குதலில் ஐந்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
    🔴11.11.1987 - நெடுங்கேணியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பாடசாலைகள், கோவில்கள் மற்றும் கட்டடங்கள் மீது இந்தியப்படைகள் நடாத்திய தாக்குதல்களில் 15க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
    🔴12.12.1987 - மட்டக்களப்பு பொதுச்சந்தை மீது இந்தியப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 159க்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். சந்தையிலிருந்த கடைகளும் தீ வைத்து எரிக்கப்பட்டது. எரிந்துகொண்டிருந்த கடைகளுக்குள் இரு குழந்தைகள் உட்பட தமிழர்களின் சடலங்களும், உயிருடன் இருந்தவர்களும் தூக்கிப் போடப்பட்டார்கள். கொல்லப்பட்டவர்களின் 31 பேரின் சடலங்கள் மட்டும் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஏனையவர்கள் கடைகளுடன் சேர்ந்து எரிந்து சாம்பலாகினர்.
    🔴17.01.1989 - வவுனியா காத்தார்சின்னக்குளம் பகுதியில் இந்தியப்படைகள் மேற்கொண்ட தாக்குதலில் 14 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
    🔴02-04.08.1989 - வல்வெட்டித்துறையில் இந்தியப்படையினர் நடாத்திய தாக்குதல்களில் 66 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டனர்.
    பதிவு செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 8000க்கும் அதிகமான தமிழர்கள் இந்தியப்படைகளால் கொல்லப்பட்டிருந்தனர். உண்மையான தொகை அண்ணளவாக 15000 - 25000 வரை இருக்கலாம் என சொல்லப்படுகின்றது.
    3500க்கும் அதிகமான தமிழ்ப் பெண்கள் இந்திய இராணுவத்தினரால் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டிருந்தனர். இந்தியப்படைகளின் இவ்வாறான பாலியல் வன்புணர்வுகள் பற்றி மக்கள் இந்திய இராணுவத்தளபதியிடம் முறையிட்ட போது இவ்வாறான முறைப்பாடுகளுடன் யாரும் என்னிடம் வரவேண்டாம் என்றும், இந்தியப்படைகள் யாரையாவது சுட்டால் மாத்திரம் முறையிடவும் எனக் கூறியிருந்தார். அத்துடன் இக் காலப்பகுதியில் இந்தியப்படையினர் பரவலான பாலியல் வன்புணர்வுச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்ததால் அதையொரு குற்றமாகக் கருதவேண்டாமென இந்திய இராணுவத்தளபதிகள் மக்களை நிர்ப்பந்தித்திருந்தார்கள்.
    4000க்கும் அதிகமான தமிழர்கள் இந்தியப்படைகளால் காணாமலாக்கப்பட்டிருந்தனர்.
    550,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் அகதிகளாக இடம்பெயர்ந்திருந்தனர்.
    தமிழர்கள் பல பெறுமதி வாய்ந்த சொத்துக்கள் இந்தியப்படைகளால் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
    சீக்கிய இனத்தவர்கள் மீதான வன்முறைகள்!
    31.10.1984அன்று இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி, அவருடைய இரண்டு சீக்கிய இனத்தைச் சேர்ந்த பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து இந்தியாவில் பல இடங்களில் சீக்கிய இனத்தவர்களுக்கெதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தன. அதனால் பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
    அதனைத் தொடர்ந்து நடைபெறும் கலவரங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கலவரங்களில் ஈடுபடவேண்டாமென காங்கிரஸ் உறுப்பினர்களை வேண்டிக்கொள்ளுமாறு இந்திராகாந்தியின் மகனான ராஜீவ்காந்தியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கு ”பெரிய மரம் விழுந்தால் நிலம் அதிரத்தான் செய்யும்” என சீக்கிய இனத்தவர்களுக்கெதிராக நடைபெற்ற வன்முறைகளை ராஜீவ்காந்தி நியாயப்படுத்தியிருந்தார். இது சீக்கிய இனத்தவர்கள் மீதான இனப்படுகொலையெனவும் வர்ணிக்கப்படுகின்றது.
    அதைப்போலவே 21.10.1987அன்று யாழ்ப்பாணம் வைத்தியசாலை மற்றும் பல இடங்களில் இந்திய இராணுவத்தினரால் பல தமிழர்கள் கொல்லப்பட்டு இரு வாரங்களின் பின்னர், இந்தியாவில் ஒரு கூட்டத்தில் பேசிய ராஜீவ் ”இலங்கையில் இந்தியப்படை சிறப்பாக செயற்படுகின்றது” எனக்கூறி தமிழர்கள் மீதான இனப்படுகொலையை மூடிமறைத்திருந்தார்.
    1984இல் நடைபெற்ற போபால் விசவாயுக்கசிவிற்குக் காரணமானவர்களை தப்பிக்க வைத்தது, மற்றும் ஆயுதக்கொள்வனவில் ஊழல் என ராஜீவ் மீது பல ஊழல் குற்றச்சாட்டுக்களும் உள்ளது.
    ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட போது அவருடைய கட்சி முக்கியஸ்தர்கள் யாரும் அருகில் இருக்கவில்லை. இவ்வாறான பல விடயங்களால் ராஜிவ் மரணத்திற்கு உட்கட்சிப் பிரச்சனைகள் காரணமாக இருக்கலாம் என்ற வலுவான சந்தேகங்கள் உண்டு
    • Thanks 1
  11. 1 hour ago, தமிழ் சிறி said:

    அடுத்த வருடம் முழுவதும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டங்களை செயற்படுத்த முன்னுரிமை வழங்குவது அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

    சிறிலங்காவின் நெருக்கடிகளை தீர்க்குமா புதிய சீர்திருத்தம்! அமைச்சரவையின் அனுமதிக்காக நாளை.....

    அரசியலமைப்பின் 21வது சீர்திருத்தம் நாளை (23) அமைச்சரவையின் அனுமதிக்காக அனுப்பப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

    இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாத வகையில் திருத்தம் கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்தார்.

    இதேவேளை, தற்போதுள்ள ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்துவதுடன், அவற்றையும் சுயாதீனமாக ஆக்குவதற்கு அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் நோக்கப்படுவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

    மத்திய வங்கியின் ஆளுநரை அரசியலமைப்பு சபையின் கீழ் கொண்டு வருவதற்கும் புதிய திருத்தம் முன்மொழிகிறது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

    சிறிலங்காவின் நெருக்கடிகளை தீர்க்குமா புதிய சீர்திருத்தம்! அமைச்சரவையின் அனுமதிக்காக நாளை.....

    இதேவேளை, திருத்தங்களின் அடிப்படையில் 21வது சீர்திருத்ததில் இலங்கையின் குடிமகனாக இல்லாத அல்லது இலங்கையின் குடிமகனாக இருக்கும் போது மற்றும் ஒரு நாட்டின் குடிமகன் ஒருவர் நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கத் தகுதி பெறமாட்டார்.

    அரசியலமைப்பு பேரவையில் பிரதமர், சபாநாயகர், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், பிரதமரால் மற்றும் எதிர்கட்சி தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள், மற்றும் எதிர்க்கட்சித் தலைவர், இலங்கை தொழில் வல்லுநர் அமைப்பால் பரிந்துரைக்கப்படும் ஒருவர், இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் பரிந்துரைக்கப்படும் ஒருவர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட அரச பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர், ஏற்கனவே பிரதமரால் மற்றும் எதிர்கட்சி தலைவரால் நியமிக்கப்பட்டவர்களுக்கு புறம்பாக நாடாளுமன்றில் பெரும்பான்மை விருப்பத்தை கொண்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் அங்கம் வகிப்பார்கள்.

    இந்த பேரவைக்கு சபாநாயகர் தலைவராக இருப்பார். சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுபவர்களை அரசியலமைப்பு பேரவையேஅரச தலைவருக்கு பரிந்துரைக்கும். சுயாதீன ஆணைக்குழுக்கள், தேர்தல், பொது சேவை, தேசிய காவல்துறை, கணக்காய்வு சேவை, மனித உரிமைகள், நிதி, எல்லை நிர்ணயம், தேசிய கொள்வனவு ஆணைக்குழுக்கள் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுக்களாக அமையும்.

    அரசாங்கத்தால் பொருட்கள் மற்றும் சேவைகள், பணிகள், ஆலோசனை சேவைகள் போன்றவை, கொள்முதல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும்.

  12. 9 hours ago, nochchi said:

    அமரர். திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு.

    இறுதி வணக்க நிகழ்வில் 40பேர் மட்டுமே பங்குபற்ற நகரம் அனுமதித்துள்ளதாக அறிந்தேன், ஆகவே பங்குபற்ற விரும்புபவர்கள், நிகழ்வுக்குப் பொறுப்பானவர்களுடன் முன்கூடியே தொடர்பு கொண்டு செல்லவேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது.   

  13. அம்மாவை உயிரோடு சந்தித்து அளவளாவி அவரது வீர வாழ்க்கை பற்றியும், போராட்ட வாழ்வுபற்றியும் நேரில் அறியும் பாக்கியம் பெற்ற பேற்றை எண்ணும்போது அவர் மறைவின் துன்பத்தையும் மீறி மனதில் ஒரு உத்வேகம் எழத்தான் செய்கிறது. மறைவு துன்பத்தைத் தந்தாலும் மறைந்த தினம் ஏதோ ஒன்றை உணர்த்தி நிற்கிறது. தமழீழம் வளர உரமாக்கப்பட்ட மக்களோடு என் ஆத்மாவும் இணையவேண்டும் என்று இந்த நாளைத் தேர்ந்தெடுத்து இணைந்தவர்போல் தெரிகிறார்.

    பிள்ளைகளைப் பெற்று அவர்களைத் தமிழின விடுதலைக்காக மாவீரர்களாக்கிய அந்த அன்னையின் ஆன்மா சாந்திபெற வேண்டுகிறேன்.🙏

    அன்னையைப்பற்றி அறியாதவர்கள் அறிவதற்கு அவரது பிள்ளைகள், மருமகனின் வெளியீடுகளான மனஓசை, சிவா தியாகராசாவின் பெருநினைவின் சிறுதுளிகள், மூனாவின் நெஞ்சில் நின்றவை போன்ற வெளியீடுகளிலிந்து படித்து அறியலாம்.   

    • Like 1
  14. 1 hour ago, ஏராளன் said:

    90 லட்சம் மொத்த உயிரிழப்புகளில், 67 லட்சம் உயிரிழப்புகளுக்கு காற்று மாசுபாடு காரணம் என்றால், 14 லட்சம் உயிரிழப்புகளுக்கு காரணம் நீர் மாசுபாடாக இருக்கிறது.

    இந்தத் 90 லட்சம் உயிர்கள் இழப்பிற்கும் காரணமாக இருந்து உலக பணக்கார வரிசையில் இடம்பிடித்து மகிழ்ந்தவர்கள் எத்தனைபேர்....?? அவர்களை வாழ்த்தி மகிழ்ந்த மக்கள் எத்தனைபேர்...?? 😲

    • Like 1
  15. 'விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்லதாக இருக்கலாம்' - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்

    18 டிசம்பர் 2019
     

    இரா.சம்பந்தன்

    பட மூலாதாரம்,விடுதலைப் புலிகள்

    இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது ஒரு நல்ல விடயமாக இருக்கலாம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார் .

    யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

     

    இதற்கே தலைவர் கோபப்பட்டதாகச் செய்தியில்லை.

  16. 2 hours ago, ஏராளன் said:

    இந்த இனப்படுகொலைக்கு பிரதமர் ரணிலே அப்போது வழியேற்படுத்திக்கொண்டார். இனப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண்பதற்கான சமாதான உடன்படிக்கையை ரணிலே செய்தார். இதன்போது புலிகள் அமைப்பில் இருந்து கருணா அம்மானை பிரித்தெடுத்து புலிகளை ரணில் பலவீனப்படுத்தினார். அத்தோடு, புலிகளால் பலவீனப்பட்டிருந்த ராணுவத்தை மீள கட்டியெழுப்ப ரணிலே அடித்தளமிட்டார்" எனவும் தெரிவித்ததாக, அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

     

  17. 8 minutes ago, தமிழ் சிறி said:

    பல்கலைக்கலக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளதுடன், தமிழர்களுடன் சிங்கள மக்களும் பங்கேற்றுள்ளனர். அத்துடன், சிங்கள, கிறிஸ்தவ மதத் தலைவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

    மதவெறி இனவெறி அற்ற ஒன்றுகூடல் நிகழ்வும், நினைவேந்தலும், நல்லதொரு ஆரம்பம்.

    இடையில் வந்தன கழியட்டும். முன்புபோல் சவரக்கடைகள் முதல் பார வண்டிகளோடு வீடுகள்வரை, சகல மதங்களின் கடவுள்களும் இணைந்து ஒன்றாகித் துலங்கட்டும்.🙏  

  18. 3 hours ago, nunavilan said:

    இது  நரியுடன் செய்யப்பட்ட  இரகசிய ஒப்பந்தம் போலுள்ளரது.

    பொந்துக்குள் நண்டுகள் உள்ளனவா என்று நரியானது தன் வாலைவிட்டு ஆராய்ந்து பார்ப்பது போன்று மகிந்தமாத்தையாவுக்காக இந்த நரியும் மக்களை ஆராச்சி செய்கிறதோ????🤫  

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.