Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Paanch

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  6,795
 • Joined

 • Last visited

 • Days Won

  17

Everything posted by Paanch

 1. எனது அப்பாவின் பெயர் பஞ்சாட்சரம். என்னைச் சின்னப்பஞ்சன் என்று கூப்பிடுவார்கள். 79ல் நான் யேர்மனிக்குப் புலம்பெயர்ந்தேன். யேர்மானியர்கள் தகப்பனின் பெயரையே குடும்பப்பெயராக வைத்து ஒருவரை அழைப்பதால் Pa 'ப' என்ற ஆங்கில உச்சரிப்பை யேர்மானியர்கள் உச்சரிக்கும்போது 'பா' என்று உச்சரிப்பார்கள் அதனால் பாஞ் என்று பெயர் வந்தது. ஆனாலும் பஞ்சு என்ற பெயரில் யாழ்களத்தில் பதிந்தபோது, நான் உன்னைப் பதியமாட்டேன் என்று யாழ்களம் அடம்பிடித்தது, பாஞ் என்று கொடுத்தபோது ஏற்றுக்கொண்டது. 2006 என்று நினைக்கிறேன் எனது காரியாலக் கணனியில் யாழ்களத்தில் இணைவதற்குப் பஞ்சு என்று பதிந்ததையும், பின்பு கணணியில் நாங்கள் வெளித்தொடர்பு கொள்வதை அவர்கள் தடுத்து விட்டதால், யாழ்களத்தை தொடரமுடியாது கைவிட்டதை மீட்டுப் பார்ப்பதற்குத் தவறிவிட்டேன். அதனால் 'பஞ்சு' நிலைக்காது தவறி 'பாஞ்' நிலைத்துவிட்டது.
 2. உங்கள் பதிவின்படி 47 எழுத்துக்கள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் 46 எழுத்துக்கள் மட்டுமே பதிவிலுள்ளது. 42 எழுத்துக்களுக்கு பொருளுள்ளதாக தெரிவித்துள்ளீர்கள். தொல்காப்பியரும், ஆறுமுகநாவலரும் தெரிவித்துள்ள 42 எழுத்துக்களை விடவும் மேலதிகமாக உங்கள் பதிவிலிருக்கும், அ, உ, நெள, மு என்ற 4 எழுத்துக்களுக்கும் பொருளுள்ளது. ஆதித்தியஇளம்பிறையனும் மேலதிகமாகப் 10 எழுத்துக்களான எ, ஒ, இ, ஔ, கு,ஞா, ம,ள, ளு, று ஆகியனவற்றை இணைத்துள்ளார். ஆகவே தமிழில் ஓரெழுத்து சொற்கள் எத்தனை என்பதை இப்பதிவு உறுதிபடுத்தவில்லை என்ற ஐயமுள்ளது. தமிழ் அகராதியின் துணையோடு, முடிந்தளவு எழுத்துக்களுக்குரிய மேலதிக பொருள்களையும் நிறுவி, இங்கு பின்னூட்டம் செய்துள்ளேன். அ -----> எட்டு, இன்மை, எதிர்மறை, குறைவு, சம்மதி, சாரியை, அந்த, சுட்டு, தடை, பிறிது, வியப்பு, சுக்கு, திப்பிலி, சிவன், விஷ்ணு, பிரமன். ஆ -----> பசு, இசை, இரக்கம், பெண்மரை, பெண்ணெருமை, சிவஞானம், வியப்பு, இ -----> அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சி, உண்டி, கேட்டி, குறத்தி, வில்லி, ஊருணி, செவியிலி, எண்ணி. ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி, அம்பு, அரைநாண், இந்திரவில், இலக்குமி, கொக்கு, சரசுவதி, தாமரையிதழ், பாம்பு, வண்டு. உ -----> சிவன், உருக்கம், கட்டளை, கோபம், சம்மதி, செய்து, பிரமன். ஊ -----> தசை, இறைச்சி, உணவு, சந்திரன், சமாக்கியகலை, சிவன், ஊன். எ -----> வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம், ஏ -----> அம்பு, சிவன், செலுத்துதல், விஷ்ணு, அடே, அம்பு, இகழ்ச்சிக்குறி, இசைநிறை, ஈற்றசை, ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு, அரசன், ஆசான், கடுகு, சர்க்கரை, சன்னி, தும்பை, துர்க்கை, நுண்மை, மருந்து, பெருவியாதி, இருமல், கடவுள், குரு, கோழை, சிவன், பிதா, வந்தனை. ஒ -----> ஒழிவு, ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை, அயன், அரன், அழைத்தல், இரக்கம். ஒள -----> பூமி, ஆனந்தம், அழைத்தல், வியப்பு, தடை, கடித்தல், பூமி. கா -----> சோலை, காத்தல், காவடி, துலை, தோட்சுமை, பூந்தோட்டம், வருத்தம். கு -----> இருள், குற்றம், வருகுதி, சிறுமை, தடை, தொனி, நிந்தை, நன்கு, போக்கு, பூமி. கூ -----> பூமி, கூவுதல், மலங்கழித்தல். கை -----> கரம், உறுப்பு, இடம், உடனே, ஒப்பனை, ஒழுக்கம், கடுக்கை, சாமர்த்தியம், சிறுமை, தங்கை, தொனி, பக்கம், படைவகுப்பு, துதிக்கை, வரிசை. கோ -----> அரசன், தலைவன், இறைவன், அம்பு, ஆகாயம், ஆண்மகன், இடியேறு, இரக்கக்குறிப்பு, இலந்தை, உரோமம், எருது, கண், கிரகணம், சந்திரன், சூரியன், திசை, கோமேதயாகம், தேவலோகம், நீர், பசு, பூமி, பொறிமலை, மாதா, மேன்மை, வச்சிராயுதம், வாணி, வெளிச்சம். சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல். சீ -----> இகழ்ச்சி, திருமகள், அடக்கம், இலக்குமி, காந்தி, சம்பத்து, சரச்சுவதி, சீதல், நித்திரை, பார்வதி, பிரகாசம், பெண், விடம், விந்து. சே -----> எருது, அழிஞ்சில் மரம், சிவப்பு, சேரான்மரம். சோ -----> மதில், உமை ஞா -----> பொருத்து, கட்டு தா -----> கொடு, கேட்பது, அழிவு, குற்றம், கேடு, கொடியன், தாண்டுதல், பகை, பாய்தல், பிரமன், வருத்தம், வலி, வியாழம். தீ -----> நெருப்பு, அறிவு, இனிமை, உபாயவழி, கொடுமை, தீமை, நரகம். து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு, அசைத்தல், அநுபவம், எரித்தல், கெடுத்தல், சேர்மானம், நடத்தல், நிறைத்தல், பிறவினை, விகுதி, வருத்தல், வளர்தல். தூ -----> வெண்மை, தூய்மை, சீ, தசை, பகை, பற்றுக்கோடு, புள்ளிறகு. தே -----> நாயகன், தெய்வம், கிருபை. தை -----> மாதம், தைத்தல், பூசநாள், மகராசி. நா -----> நாக்கு, அயலார், சுவாலை, திறப்பு, நடு, பொலிவு நீ -----> நின்னை நே -----> அன்பு, நேயம் நை -----> வருந்து, நைதல், இகழ்ச்சிக்குறிப்பு நொ -----> நொண்டி, துன்பம், நோய், வருத்தம் நோ -----> நோவு, வருத்தம், சிதைவு, துக்கம், துன்பம், பலவீனம், வியாதி. நௌ -----> மரக்கலம் பா -----> பாட்டு, நிழல், அழகு, கடிகாரவூசி, கிழங்குப்பா, நிழல், நெசவுபா, பஞ்சிநூல், பரப்பு, பரவுதல், பிரபை, வெண்பா பூ -----> மலர், அழகு, இடம், இந்துப்பு, இருக்குதல், இலை, ஓமாக்கினி,ஒருகண்ணோய், ஒருநரகம், கூர்மை, தாமரை, தீப்பொறி, பிறப்பு, புட்பம், பூமி, பொலிவு, பே -----> மேகம், நுரை, அழகு பை -----> பாம்புப் படம், பசுமை, உறை, அழகு, குடர், சாக்கு, நிறம், பச்சைநிறம்,பொக்கணம், மந்தக்குணம், மெத்தெனவு. போ -----> செல், பிரியின்வாழாதென்போ. ம -----> சந்திரன், எமன், என்மர், ஒருமந்திரம், காலம், சிவபிரான், நஞ்சு, நேரம், பிரமன், விட்டுனு. மா -----> மாமரம், பெரிய, விலங்கு, அழகு, அழைத்தல், அளவு, அறிவு, ஆணி, இடித்தமா, இடை, இலக்குமி, எதிர்மறை, யுபசருக்கம், ஐயவுபசருக்கம், ஓரெண், ஒருமரம், கட்டு, கறுப்பு, சரச்சுவதி, சீலை, செல்வம், தாய், துகள், நஞ்சுக்கொடி, நிறம், பரி, பிரபை, பெரிய, பெருமை, மகதமதுவம், மரணம், மிகுதி, மேன்மை, வண்டு, வயல், வலி, வெறுப்பு. மீ -----> ஆகாயம், மேலே, உயரம், மகிமை, மேல், மேற்புரம். மு -----> மூப்பு மூ -----> மூன்று, மூப்பு. மே -----> மேன்மை, மேல், அன்பு. மை -----> அஞ்சனம், கண்மை, இருள், எழுதுமை, கருப்பு, குற்றம், செம்மறியாடு, நீர், மலடி, மலட்டெருமை, மேகம், மேடவிராசி, வெள்ளாடு. மோ -----> முகர்தல், மோதல், கேண்மோ. யா -----> அகலம், மரம், சந்தேகம், இல்லை, யாபன்னிருவர். வா -----> அழைத்தல் வீ -----> பறவை, பூ, அழகு, கருப்பந்தரித்தல், சாவு, சொல்லுதல், நீக்கம், போதல், விரும்புதல். வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல், புல், வையகம், வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல் ள -----> தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம் ளு -----> நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம் று -----> எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்
 3. இசைகேட்டால் புவி அசைந்தாடும். ஆடி வந்துவிட்டதே ஆயிரம் ஆனந்தமடைந்து வாழ்த்துகிறேன்.
 4. ஒரு பச்சைப்புள்ளி என்றாலும் அது யாழ்களத்தில் பூத்து மலரும்போது, அதன் அழகோடு, சுகந்த மணம்வீசுவதையும் மறுக்கமுடியாது. எனவே ஒரு பச்சைப்புள்ளி பெற்றவர்களும் வாழ்த்துக்கு உரியவர்களாகின்றனர். ஆகவே பச்சைப்புள்ளிகள் பெற்ற அனைவருக்கும் என் இதயம்கனிந்த வாழ்த்துக்கள்!!. இப்படி எழுதினால் யாராவது என்னையும் யாழ்களவு(உ)றவாக மதித்து வாழ்த்திவிட மாட்டார்களா! என்ற நப்பாசை எனக்கில்லை என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
 5. வணக்கம் அலைமகள்...! 100 பச்சைப் புள்ளிகளைப் பெற்றுள்ள ஒரு மகளை வாழ்த்துவதில் கிடைக்கும் மகிழ்ச்சியை விடவும், அந்தப் பச்சையின் பசுமையைக் கொண்டுள்ள உங்கள் மனதையும், அதன் செயலையும் வாழ்த்துவதில் அதிக மகிழ்ச்சி அடைகிறேன். அறியத்தந்த 600 பச்சைப் புள்ளிகள் பெற்ற தமிழ் சிறி அவர்களுக்கு வாழ்த்துக்களும்! நன்றிகளும்!!.
 6. ஐய்யகோ! இங்கேயும் ஹிந்தியனா! எச்சரிக்கைக்கு நன்றி ராஜவன்னியன். வங்கி பங்கருக்குள் போய்விட்டது. அள்ளுவதில் திறமை பெற்றவர்களே இன்று இங்கு யேர்மனியில் பொறுப்பாளர்கள். நீங்களுமா? வேண்டாம்! வேண்டுமானால் என் பச்சைப்புள்ளிகள் சிலவாயினும், அவற்றைத் தானமாகத் தருகிறேன். .
 7. பச்சை புள்ளிகளை அள்ளி எடுத்த சாதனையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!! முக்கிய அறிவித்தல்: பச்சை புள்ளிகளைப் பாதுகாப்பாக வைப்பதற்குச் சிறந்த வங்கி 'பாஞ் வங்கி'.........வட்டி மிக மிகக் குறைவு.
 8. காட்டு விலங்கிடமிருந்து பாதுகாப்பாக ஆடு பட்டியில் அடைக்கப்படுகிறது மனிதனின் உணவுக்காக.

  1. ராசவன்னியன்

   ராசவன்னியன்

   Regularly check PM inbox please!

 9. உங்கள் செயலால் நீங்கள் அங்கு புனிதர்கள் ஆகி நின்றீர். எங்கள் செயலால் நாங்கள் இங்கு அகதிகள் ஆகி நின்றோம்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.