2009 ஈழத்தில் நடந்த இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவாகவும் இனப்படுகொலையை நினைவு கூறும் வகையிலும் தஞ்சை விளார் சாலையில் இரண்டரை ஏக்கர் நிலத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டு 8 -ம் தேதி திறக்கப்பட்டது.
கற்சிற்பங்கள், ஓவியங்கள் என காண்போர் மனதை நெருடும் வகையில் அமைக்கப்பட்டிருந்த இந்த முற்றத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா விரும்பவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 500 -ம் அதிகமான போலீசாரின் மேற்பார்வையில் முற்றம் இடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தஞ்சையில் பதட்டம் எழுந்துள்ளது.
"முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன் பகுதியில் உரிய அனுமதி பெற்று சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்டிருந்த இந்தப் பூங்கா இன்று அதிகாலை 5.30 மணியளவில் அத்துமீறி நுழைந்த காவல்துறையினரால் சட்டவிரோதமாக இடித்துத் தகர்க்கப்பட்டது. முன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அரை சுற்றுச் சுவரும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பெயர்ப்பலகையும் தரைமட்டமாகத் தகர்க்கப்பட்டது.
இப்படத்தில் காணப்படும் நீரூற்று வரை வந்து விட்ட காவல்துறையினர் அதற்குள் தோழர்கள் கூடியதால் தற்காலிகமாக இடிப்பதை நிறுத்தியுள்ளனர். ஆனால் முற்றத்திற்குள் செல்லும் பாதையை வேலி போட்டு அடைத்துள்ளனர். அனைத்துத் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்தக் கட்ட நடவடிக்கைக் குறித்து முடிவெடுக்கப்படும் என பழ. நெடுமாறன் அறிவிப்பு." என்ற தகவலைத் தருகிறார் நெடுமாறன் அவர்களின் புதல்வியான பூங்குழலி இவர்கள் முற்றத்தினுள்ளேயே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
http://tamilworldtoday.com/home