• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

ஊர்க்காவலன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  667
 • Joined

 • Last visited

 • Days Won

  5

ஊர்க்காவலன் last won the day on October 17 2014

ஊர்க்காவலன் had the most liked content!

Community Reputation

255 ஒளி

About ஊர்க்காவலன்

 • Rank
  உறுப்பினர்

Profile Information

 • Gender
  Male

Recent Profile Visitors

3,276 profile views
 1. முப்பாட்டனுக்கும் முப்பாட்டன் திருமணம் என்றாலே என்னவென்று தெரியாமல் விரும்பிய பெண்களுடன் உறவுகொண்டு நாடோடியாக அலைந்தான் (பெண்ணுக்கும் இது பொருந்தும்). இன்றும் தென் அமெரிக்காவில் பழங்குடியினர் அப்படி தான் வாழ்ந்து வருகின்றனர். பெண் தனக்கு விரும்பிய ஆணுடன் உடலுறுவது கொள்கின்றாள் / வாழ்கின்றாள். அவர்களிடம் பெண்கள் மீதான கூட அறவே இல்லை என்று நூல் ஆசிரியர்கள் கூறுகிறார்கள். திருமணம் என்பதே ஒரு அடிமை முறை (இயற்கைக்கு எதிரானதும் கூட). இதில என்ன வெங்காயம் புரட்சி வேண்டி கிடக்கு.
 2. இன்னும் 5 வருடங்களிற்கு தமிழர் தரப்போ அல்லது வேறு எந்த தரப்போ போர்க்குற்றம் பற்றியோ அரசியல் தீர்வு பற்றியோ இலங்கையுடனும் சரி, சர்வதேசத்துடனுடம் சரி பேச முடியாதவாறு இலங்கை மீது இப்பொழுது அனுதாப அலை வீசுகின்றது. யார் லாபம் அடைந்தார்கள் என்பதைவிட யாருக்கு நஷ்டம் என்று பார்த்தால் தமிழர்களுக்கே. உல்லாச துரையின் வீழ்ச்சி என்பது தற்காலிகமானது. இதற்கான தொகையினை சர்வதேசம் வேறு வழிகளில் (மீள்கட்டமைப்பு, அன்பளிக்கு etc) சரிசெய்து கொடுக்கும் என்பது என்னுடைய அபிப்பிராஜம்.
 3. அலெக்ஸ் ஹேலி இளம் வயதில் கடலோர காவற்படையில் பணிபுரிந்தார். அதன் பின் பத்திரிகை துறைக்கு வந்தார். எழுத்தாளராக மாறினார். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பசிபிக் கடலில் பயணம் செய்யும் ஒரு சரக்கு கப்பலில் அமெரிக்க கடற்கரைப் பாதுகாப்புப் படை சார்பாக சேர்ந்தார். அங்கே இருக்கும் நூலகத்தின் மூலம் ஏற்படும் வாசிப்பு அனுபவம் அவருக்கு எழுத்தார்வத்தைத் தூண்டியது. லண்டனில் ஒரு மியூசியத்திற்கு செல்ல நேர்ந்தது. அங்கே ஒரு பழங்கால எகிப்திய சிலையை கண்டார். அதில் உள்ள எழுத்துக்களை வைத்து அதன் வரலாற்றை ஒரு பிரெஞ்சு அறிஞர் கணிப்பதையும் கண்டார். அப்போதே அவருக்கு தனது முன்னோர்கள் மூலம் வழிவழியாக கடத்தப்பட்டு வரும் சில வார்த்தைகளையும், விசித்திரமான ஒலிகளையும் கொண்டு தமது மூதாதையர்களின் பூர்விகத்தை தேட வேண்டும் என்கிற எண்ணம் உதித்தது. இந்நிகழ்வுகளில் தாக்கத்தின் விளைவாக நெடுந்தேடல்களுக்கும், இன்னல்களுக்கும் இடையே தமது பூர்விக நாடான ஆப்ரிக்காவில் உள்ள காம்பியா பகுதியில் தனது பூர்விக கிராமத்தை சென்றடைந்தார். ஏழு தலைமுறைகளை பின்தொடர்ந்து சென்று எழுதப்பட்ட நாவல். ஏழாவது தலைமுறையின் பூர்விகமும் காம்பியா நாடு இல்லை. அவர்கள் மௌரேடானியன் போன்ற தீவுகளில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள். அலெக்ஸ் ஹெலி 1992ஆம் ஆண்டு காலமானார். 1976ல் வேர்கள் வெளிவந்தவுடன் அது அமெரிக்காவில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உலகிலேயே அதிகமாக விற்கப்பட்ட நூல்களின் பட்டியலில் வேர்கள் இடம் பெற்றது. இதுவரை 50ற்கும் அதிகமான மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கடந்த நூற்றிருபது வருட நீண்ட காலத்தில் உலகத்தை உலுக்கிய இது போன்ற ஒரு புத்தகம் வேறெதுவுமே வந்ததில்லை. ஒவ்வொரு ஆப்பிரிக்க குடும்பத்தினரிடமும் புனிதநூலாக இருக்குமளவிற்கு இந்நூல் முக்கியத்துவம் பெற்றது. // ஒளி மங்கிய மாலைபொழுதுகளில் பயிற்றுனர் அல்லது அவருடைய உதவியாளர்கள் புகழ்பெற்ற மாண்டிங்கா இனத்தவர் மேற்கொண்ட போர்களில் கையாண்ட வியூகங்களை வகுத்தனர். பயிற்றுனர் ஆலோசனை நல்கினார், "எதிரியை முற்றிலுமாக வளைத்துக் கொள்ள கூடாது. அவன் தப்பித்துச் செல்வதற்கும் ஒரு வழியைக் காட்ட வேண்டும். இல்லையேல் அவன் உயிர் பிழைப்பதற்காக மூர்க்கமாக போரிடத்தொடங்கி விடுவான். போரை எப்பொழுதும் பிற்பகலில் தான் தொடங்கவேண்டும். அப்போது தான் எதிரி தோல்வி அடையப்போவதை அறிந்து மானத்தை காத்துக்கொள்வதற்காக பின்வாங்கி இருளில் மறைந்திடுவான். போர் நடைபெறும் சமயத்தில் ஞானியர், கதைசொல்லிகள்,கருமான் யாரேனும் அவ்வழியாக பயணிக்க நேர்ந்தால் எத்தரப்பினரும் அவர்களுக்கு தீங்கு விளைவித்துவிடலாகாது. ஏனெனில், சினங்கொண்ட ஞானி அல்லாவிடம் வேண்டி அவர்களுக்கு தீமை நிகழும்படி செய்திடுவார். தாக்கப்பட்ட கதைசொல்லி தனது பேச்சு வன்மையால் எதிரியை தூண்டிவிட்டு மேலும் கொடூரமான முறையில் போர் புரியச்செய்வான். கருமான் பாதிக்கப்பட்டால் எதிரியினுடைய ஆயுதங்களை பழுதுநீக்கியும் புதிய ஆயுதங்களை செய்து கொடுத்தும் துணைநிற்பான். // // அவர்கள் தம் இன மக்கள் அடிமைகளாகக் கவர்ந்து செல்லப்பட்டதைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தனர். பரங்கியர்கள் கறுப்பு இன மக்களைக் கவர்ந்து சங்கிலிகளால் பிணைத்துக் கப்பல்களில் ஏற்றிக் கடல் கடந்து, மனிதர்களை தின்னுகின்ற வெள்ளையர்கள் நாட்டிற்கு கொண்டு சென்றனர். சற்று நேரம் அமைதி நிலவியது. சற்று நேரம் அமைதி நிலவியது. பின்னர், கிராமத்து மதகுரு சொன்னார், "முன்னைக்காட்டிலும் இப்பொழுது குறைந்திருக்கிறது. அதற்கு அல்லாவிற்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்." "நிறையத் திருடி செல்ல முடியாத அளவிற்கு நாம் எண்ணிக்கையில் குறைந்து போனோம்" முதியவர் ஒருவர் வெடித்தார். ஆசான் இடைமறித்தார், "திருடிச் சென்றவர்களை மட்டும் ஏன் என்ன வேண்டும்? எதிர்த்து நின்ற எத்தனை பேரைக் கொன்றிருக்கிறார்கள்? அவர்களையும் கணக்கிட வேண்டும். அவர்கள் கவர்ந்து சென்ற மக்களின் எண்ணிக்கையை காட்டிலும், அவர்களால் எரிக்கப்பட்டும், போரில் கொல்லப்பட்டும் ஏற்பட்ட இழப்பு அதிகம்." நெருப்பை வெறித்தபடி அவர்கள் நீண்ட நேரம் அமர்ந்திருந்தனர். பிறகு, மற்றொரு பெரியவர் அமைதியைக் கலைத்தார், "நமது மக்களுடைய உதவியில்லாமல் பரங்கியரால் இதனைச் செய்ய முடியாது. காம்பிய நாட்டு மலைவாழ் மக்களிடையே பரங்கியருக்கு கைக்கூலிகளாக செயல்படுகின்ற இனத்துரோகிகள் அனைத்து இனக்குழுக்களிலும் உள்ளனர்." முதுகிழவர் ஒருவர் நடுங்கிய குரலில் பேசினார், "பரங்கிய பய வீசியெறியிற எச்சிச் காசுக்காக நம்ம ஆளுகளே சொந்த இனத்துக்காக வேலை செய்யிறாங்க. பேராசை! இனத்துரோகம்!" சற்று நேரம் ஒருவரும் பேசவில்லை. நெருப்பு அரவமின்றித் தகித்துக்கொண்டிருந்தது. பயிற்றுனர் மீண்டும் பேசினார், பரங்கிப் பயலுகளுடைய பணத்தைக்காட்டிலும் மோசமானவை அவர்களுடைய இயல்புகள். காரணமே இல்லாமல் பொய் பேசுவார்கள். ரெம்பச் சுளுவாக ஏமாற்றுவார்கள். அதெல்லாம் அவர்களுக்கு மூச்சு விடுவதுபோல எளிதானவை." சில கணங்கள் கடந்தன. குண்டாவினுடையதற்கு அடுத்த பருவத்து இளைஞர் ஒருவர் கேட்டார், "பரங்கிகள் மாறவே மாட்டார்களா?" முதியவர் ஒருவர் நக்கலடித்தார், "மாறுவார்கள்! ஆறு பின்னோக்கி ஓடும் பொழுது!" // // சற்று தொலைவு சென்ற பொது, லேமின் கூச்சலிட்டது கேட்டது. ஏதேனும் முல்லை மித்திருப்பான் என நினைத்துத் திரும்பிய குண்டா, மேல்நோக்கி ஒரு சிறுத்தையைப் பார்த்து நடுங்கியபடி லேமின் நின்றிருந்ததை குண்டா கண்டான். "எப்படி சிறுத்தையை கவனிக்க நான் தவறினேன்?" ஆனால் உண்மையில், அந்தச் சிறுத்தை யார் கண்ணிலும் படாமல் மறைந்துகொள்ளவே விரும்பியது. அவர்கள் மீது பாய்ந்திருக்க வாய்ப்பில்லை. அத்துடன், அது போன்ற பெரும்பூனைகள் பகல்வேளையில் அளவுகடந்த பசியால் வாடினால் ஒழிய விலங்குகள் மீது கூட பாய்வதில்லை. பாதுகாப்பற்ற நிலையை உணர்ந்தாலோ, எரிச்சலூட்டினாலோ, காயப்படுத்தினாலோ தவிர அவை மனிதர்களை எந்த நேரத்திலும் தாக்கியதில்லை." கூடவே பயிற்றுநரின் அறிவுரைகளும் காதில் ஒலித்தன, "வேடனுடைய உணர்வுப் புலன்கள் கூர்மையாக இருக்கவேண்டும். பிறரால் கேட்க முடியாதவற்றையெல்லாம் அவன் கேட்க வேண்டும். இருட்டிலும் பார்வை தெளிவாக இருக்க வேண்டும்." // // பறங்கியருடைய பூமி! அது, பகலவன் தோன்றுமிடத்திலிருந்து மறையும் இடம் வரையிலும் நீண்டு கிடந்ததாக அவனுடைய மூதாதையர் கூறியிருந்தனர். குண்டாவின் உடல் முழுவதும் நடுங்கியது. உடலிலிருந்து வெளிப்பட்ட வியர்வை அவனுடைய நெற்றியில் மின்னியது. கடற்பயணம் முடிவடைந்துவிட்டது. அதன் கொடுமைகள் அனைத்தையும் தாக்குப்பிடித்து உயிர் பிழைத்து விட்டான். ஆனால், அவனுடைய கண்ணீர்துளிகள் கரையை நோக்கி விரைந்த நுரைகளுடன் கலந்து நீந்தின. ஏனெனில், அவனுக்குத் தெரியும்! அடுத்து நடக்கவிருந்த எதுவாயினும் அதுவரை நடந்தவற்றை காட்டிலும் மேலும் மோசமானது தான்! பயிற்றுநர் நினைவில் வந்தார், "அறிவுள்ளவன் சுற்றுச் சூழலை ஆராய்வதன் மூலம் விலங்குகளிடமிருந்து கற்றுக்கொள்கின்றான்." பயிற்றுநர் நினைவில் வந்தார், "அறிவுள்ளவன் சுற்றுச் சூழலை ஆராய்வதன் மூலம் விலங்குகளிடமிருந்து கற்றுக்கொள்கின்றான்." // // பொழுது சாய்ந்த கொண்டிருந்தது எதிரே வந்த மற்றொரு வண்டியைக் கடந்தனர். அந்த வண்டியை பரங்கி ஒருவன் செலுத்தினான். ஏழு கறுப்பர்கள் சங்கிலியால் வண்டியுடன் பிணைக்கப்பட்டு தடுமாறியபடி பின்தொடர்ந்தனர். சற்று நேரத்தில் வண்டி குறுகிய சாலைக்குள் திரும்பியது. குண்டா நிமிர்ந்து உட்கார்ந்தான். மரங்களினுடே வெள்ளையாக வீடொன்று தென்பட்டது. அச்சம் வயிற்றை பிசைந்தது. அல்லா! என்ன தான் நடக்கபோகிறதோ? இங்கே தான் என்னை சாப்பிடப்போகிறார்களா? பெட்டிக்குள் பின்புறமாக சரிந்து விழுந்தான். உயிரற்றவனாக கிடந்தான். // // மனிதர்களோடு சண்டையிடுவதற்கு ஏதுவான ஆயுதம் ஒன்றை தேடி எடுத்துக்கொள்ள வேண்டும். அல்லாவின் அடிமைகள் எவரும் தாக்கப்படும்போது போரிடத் தயங்கக்கூடாது என்பதை நினைவுபடுத்திக்கொண்டான. நாய்களோ மனிதர்களோ, காயமடைந்த காட்டெருமையோ, பசித்திருந்த சிங்கமோஎதுவாக இருப்பினும் ஓமோரோ கிண்டேயினுடைய மகன் போரிடுவதைக் கைவிடும் எண்ணத்திற்கு இடந்தரலாகாது. // மனிதர்களோடு சண்டையிடுவதற்கு ஏதுவான ஆயுதம் ஒன்றை தேடி எடுத்துக்கொள்ள வேண்டும். அல்லாவின் அடிமைகள் எவரும் தாக்கப்படும்போது போரிடத் தயங்கக்கூடாது என்பதை நினைவுபடுத்திக்கொண்டான. நாய்களோ மனிதர்களோ, காயமடைந்த காட்டெருமையோ, பசித்திருந்த சிங்கமோஎதுவாக இருப்பினும் ஓமோரோ கிண்டேயினுடைய மகன் போரிடுவதைக் கைவிடும் எண்ணத்திற்கு இடந்தரலாகாது. காலை உணவை உள்ளே தள்ளியவாறு குடிசையை நோட்டமிட்டான். ஏதேனும் ஆயுதம் தட்டுப்பாட்டால் யாருடைய கண்ணிலும் படாமல் எடுத்து ஒளித்து வைத்துக் கொள்ளலாமல்லவா. அடுப்பிற்கு மேலே கொக்கிகளில் தொங்கிய கரிபடிந்த பாண்டங்களைத் தவிர அவனுக்கு உணவளிக்கப்பட்ட வட்டமான தகரத்தட்டுகள் தென்பட்டன. ஆனால் அந்தக் கிழவி ஒரு மெலிய உலோகப் பொருளைக்கொண்டு உண்டதைக்கண்டான். அதன் முனையில் இடைவெளி விட்டு நான்கைந்து முட்கள் கொண்ட பகுத்து இருந்தது. அதனால் குத்தி எடுத்துச் சாப்பிட்டாள். அது என்னவாக இருக்கும்? சிறியதாக இருந்தாலும் பயனுள்ளது தான். சமயம் வாய்க்கும் போது கிழவியின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு அதைக் கைப்பற்றிகைப்பற்றிவிட வேண்டும். குண்டாவின் காதில் விழுந்த பரங்கியர் வார்த்தைகள் பல அவனைக் குழப்பின. ஆனால், அவற்றினுடைய பொருளைப் புரிந்து கொள்ள முயன்றான். காதில் விழுந்த ஒலிகளைப் பொருட்களுடனும் செயல்களுடனும் தொடர்புபடுத்திப் பொருள் காண்பதற்குக் கற்றுக்கொண்டான். ஆனால், ஒரே ஒரு வார்த்தை அவனை ரெம்பவே குழப்பியது. நாள்தோறும் பரங்கிகளும் கறுப்பர்களும் அந்தச் சொல்லை பயன்படுத்தியதைக் கேட்ட போதிலும் அவனால் அதனை புரிந்து கொள்ள முடியவில்லை. அது தான் "நீக்ரோ". குண்டா தப்பித்து மாட்டிக்கொண்டான். தெருக்காவலர்கள் முன் அம்மணமாய் நின்றுகொண்டிருந்தான். அவனுடைய குறியைக்காட்டிய பிறகு இடுப்பு வாரில் தொங்கிய வேட்டைக் கத்தியைக் காட்டினான். அதன் பின்னர், குண்டாவின் பாதத்தை சுட்டி, உடனே கையிலிருந்த கோடாரியையும் காட்டினான். குண்டாவிற்கு புரிந்துவிட்டது. அலறினான். கால்களால் உதைத்தான். மீண்டும் அடி விழுந்தது. இதயத்தின் எங்கோ ஒரு மூலையில் எழுந்த ஓலம் "மனிதன் மனிதனாக வாழ அவனுக்கு மகன்கள் வேண்டும்" என்றலறியது. கைகள் கீழிறங்கி குறிகளை மறைத்தன. இரு பரங்கியரும் கொடூரமாக இளித்தனர். ஒருவன் குண்டாவின் வலது பாதத்திற்கு கீழே மரக்கட்டையை நகர்த்தினான். மற்றவன் அதனுடன் சேர்த்துப் பாதத்தை இறுகக் கட்டினான். எவ்வளவோ முயன்ற போதிலும் குண்டாவால் பாதத்தை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. குருதி வழிந்து கொண்டிருந்த பரங்கி கோடாரியை தூக்கினான். அது மேல்நோக்கி விரைந்த போது, குண்டா அலறினான். தலையிலும் நெஞ்சிலும் அடித்துக்கொண்டான். கோடாரி வலுவாக, விரைவாகக் கீழிறங்கியது. தோல், நரம்பு, நாளம், தசை, எலும்பு அனைத்தும்சல்லி சல்லியாக சிதறின. நாடி நரம்பெங்கும் வலி வெடித்துத் துடித்தது. பாதம் அறுந்து முன்னோக்கி விழுந்தது. கண்கள் இருண்டன. காரிருளுள் மூழ்கிப் போனான்! வைத்த கண் வாங்காமல் சுடரையே பார்த்துக் கொண்டிருந்தான். சிந்திக்க முயன்றான். கரைந்து கொண்டிருந்த மெழுகு புழுதியோடு புழுதியாக உருகிக் கிடந்தது. இருளில் கிடந்த அவனுடைய மனதில் கப்பலில் பரங்கியரைக் கொல்வதற்குத் தீட்டிய திட்டம் நினைவுக்கு வந்தது. மிகப் பெரியதொரு கறுப்பர் போர்படையில் தானும் ஒரு போராளியாக, தனது கைகளைச் சுழற்ற முடிந்தவரை பரங்கியரை வதைக்க வேண்டும் என்கிற வேட்கை உந்தியது. ஆனால், செத்துக் கொண்டிருந்ததாக தோன்றிய அச்சத்தால் குண்டாவின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. சாவதென்றால் என்ன? என்றென்றைக்கும் அல்லாவுடன் கலந்திருக்கப் போகிறான். அல்லாவுடன் இருப்பது எப்படி இருக்கும் என்பதைச் சொல்வதற்கு அவரிடமிருந்து திரும்பியவர் எவரையும் காண முடியவில்லை. அதே போல, பரங்கியருடன் இருந்த அனுபவத்தைச் சொல்வதற்கு எந்தவொரு கறுப்பனும் திரும்பியதில்லை. சற்று நேரம் அமைதியாகச் சிந்தனையில் ஆழ்ந்த பிறகு, பேசத் தொடங்கினான். "உன்னுடைய கிறுக்குத் தனத்தை கேள்விப்பட்டேன். நல்ல காலம்! கொல்லாமல் விட்டு விட்டார்கள். அவர்களால் முடியும். சட்டத்தில் அப்படித்தான் இருக்கிறது. பிடில் வாசிக்கும் போது சோர்வடைந்து விட்டேன் என்பதற்காக அந்த வெள்ளையன் எனது கையை வெட்டியதைப் போலத் தான். தப்பியோடும் போது எவன் பிடித்தாலும் கொல்லலாம். அவனுக்குத் தண்டனை கிடையாது. சட்டம் சொல்கிறது! வெள்ளைக்காரர்களுடைய தேவாலயங்களில் ஆறுமாதத்திற்கு ஒரு முறை அத்தகைய சட்டங்களை படித்துக்காட்டுகிறார்கள். குடியிருப்புகளை ஏற்படுத்தும் போதெல்லாம் முதலில் சட்டமியற்றுவதற்கான அவையைக் கட்டுகிறார்கள். அடுத்து, தம்மை கிறிஸ்தவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக தேவாலயத்தை கட்டுகின்றனர். நீக்கிரோக்கள் துப்பாக்கி ஏந்தக் கூடாதும் குண்டாந்தடி போன்ற கொம்பு கூட வைத்திருக்கக் கூடாது. அனுமதிச் சீட்டு இல்லாமல் பயணம் செய்தால் இருபது சவுக்கடிகள், வெள்ளைக்காரர்களுடைய கண்களை உற்றுப்பார்த்தால் பத்து, வெள்ளை கிறிஸ்தவனுக்கு எதிராக கையை ஓங்கினால் முப்பது என்றெல்லாம் சட்டம் இருக்கிறது. பொய் கூறியதாக வெள்ளையன் சாட்சி சொன்னால், ஒரு காதை அறுப்பர். இரண்டு முறை பொய் சொன்னால் இரண்டு காதுகள். வெள்ளையனை கொன்றுவிட்டால் தூக்கிலிடப்படுவாய். நீக்ரோவை கொன்றால் சவுக்கடி மட்டும் தான். நீக்ரோவுக்கு எழுதப் படிக்க கற்றுக்கொடுப்பதோ, புத்தகம் கொடுப்பதோ சட்டத்திற்கு புறம்பானது. "எங்கேயும் செல்ல முடியாது. யதார்த்தத்தை புரிந்து கொண்டு, பொருந்திப் போக தொடங்கு. என்ன டோபி! கேட்கிறதா?" குண்டாவின் முகத்தில் கோபம் கொப்பளித்தது, "குண்டா கிண்டே!" கத்தி விட்டான். அவனுக்கே வியப்பாக இருந்தது. கலப்பினத்தவனும் அதிர்ந்து போனான், "இங்க பார், உங்ககுப் பேசக் கூடத் தெரியுமா? ஆனா, பயலே... நா சொல்றதைக் கேள்! ஆப்பிரிக்க மொழயில் பேசுவதை விட்டு விடு. வெள்ளையன் கேட்டால் வெறி கொள்வான். நீக்ரோ என்றாலே அவனுக்கு பயம். உன்னுடைய பெயர் டோபி தான். என்னை பிடில்காரர் என்பார்கள். இளைஞனாக இருந்த போது நானும் பலமுறை தப்பியோடினேன். எனது தோலை உரித்துவிட்டனர். ஒருவழியாகத் தப்பியோடுவதற்கு வழியே இல்லை என்பது தலையில் உரைத்தது. இரண்டு மாநிலங்களிற்கு அப்பால் ஓடினாலும் அவர்களுக்குள் உள்ள தகவல் தொடர்பு மூலம் அறிந்து கொண்டு புறப்பட்ட இடத்திற்கே கொண்டு சேர்ந்திடுவர். தப்பியோட விரும்பாதவர்கள் யாருமே இல்லை. ஆகாத செயலுக்காக அடிக்கடி திட்டம் தீட்டி இளமைக் காலத்தை என்னைப் போல வீணடிப்பதற்குப் பதிலாக அவர்களுடைய போக்கில் உடன்பட்டுப் போவது தான் நல்லது. வயதாகி முதுமை அடைந்து விட்டேன். ஆனால், கணக்குப் பார்த்தால், உன்னுடைய வயதளவு காலம், நான் இப்படி, பரங்கிகள் நம்மை பார்த்துச் சொல்வதைப் போல, ஒன்றுக்கும் உதவாத, சோம்பல் மிக்க, தலையை சொறிந்து கொண்டு திரிகிற நீக்ரோவாகத் தான் காலத்தை கடத்தி வருகிறேன். எஜமானரை வண்டியில் ஏற்றிக்கொண்டுக் கொண்டு திரிந்த போது அவர்கள் வரி என்பதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். வரிகள் என்றால் என்ன? பிடில்காரர் தொடர்ந்தார், "வெள்ளைக்காரர்கள் வாங்குகின்ற பொருட்களுக்கு விலைமதிப்புக்கும் கூடுதலாக செலுத்த வேண்டிய பணம் வரிகள் எனப்படும். இந்த மண்ணுக்குரிய மன்னர் தன்னை செல்வந்தனாக்கிக் கொள்ள வரிகளை விதிக்கிறார்". வெள்ளைக்காரர்களுள் ஒருவரான கொலம்பஸ் இந்த இடத்தை கண்டுபிடித்ததாக அவர்களாகவே பீற்றுகின்றனர். அவர்களுக்கு முன் இந்தியர்கள் இருந்தனர் என்றால் அவர் கண்டுபிடித்தார் என்று எப்படிச் சொல்ல முடியும்? அவர்கள் ஆக்கிரமிக்கின்ற இடங்களில் அதற்கு முன் வாழ்ந்தவர்களைத் தான் கணக்கிலெடுத்துக் கொள்வதே இல்லையே! அவர்களை காட்டுமிராண்டிகள் என்றல்லவா சொல்கிறார்கள்." பிடில்காரர் சற்றே நிறுத்தினார். பிறகு, திடீரென்று வெடித்தார். "இதோ பார். ஆப்பிரிக்க நீக்ரோக்களான உங்களிடமிருந்து என்னைப் பிரித்துப் பார்க்கச் செய்வது எது? உன்னைப் போன்றோர் ஐந்தாறு பேரை எனக்குத் தெரியும். இங்குள்ள நீக்ரோக்களுடைய வாழ்க்கை முறை உங்களுடையத்தைப் போல இருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்கள். ஆப்பிரிக்காவைப் பற்றி எதுவுமே தெரியாத எங்களிடம் எப்படி எதிர்பார்க்கின்றிர்கள்? நாங்கள் அங்கே சென்றதுமில்லை. இனி, போகப் போவதுமில்லை!" பெரியவர் மிகவும் வெறுப்புடன் பேசினார், "அவர்கள் கீழ்த்தரமான ஏழை வெள்ளையர்கள்! தமது வாழ்வில் எந்தவொரு நீக்கிரோவையும் அடிமையாக பெற்றிராதவர்கள். அவர்களுக்கென்று அடிமைகள் இல்லாததால் பிறருடைய அடிமைகளை பிடித்து, அடித்து துன்புறுத்துவத்தில் மிகவும் விருப்பம். நீக்ரோக்களை தனியே விட்டு வைத்தால், கிளர்ச்சியில் ஈடுபடக்கூடும்." "அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் யாரோ ஜார்ச் வாஷிங்டன் என்கிற எஜமான் மிகப் பெரிய படையைத் திரட்டி போராடுகிறாராம். மிகப்பெரிய பண்ணைக்கு சொந்தக்காரராகிய அவரிடம் ஏராளமான அடிமைகள் உள்ளனராம். செந்நிறச் சீருடை வீரர்களை எதிர்த்து போராடுவதற்க்காக புதிய இங்கிலாந்துப் பகுதியில் அடிமைகளிற்கு விடுதலை அளித்துள்ளாராம்." அன்றிரவு குடிசையில் தனிமையில் இருந்த போது, ஒவ்வொரு புதிய இளம்பிறையின் போதும் தவறாமல் குடுக்கைக்குள் போட்டு வைத்திருந்த பன்னிற கூழாங்கற்களை பன்னிரெண்டு பன்னிரெண்டாக அடுக்குவதில் மணிக்கணக்காக செலவிட்டான். அவனை சுற்றி புழுதித்தரையில் பதினேழு குவியல்கள் இருந்தன. அவனுக்கு முப்பத்திநான்கு வயதாகிவிட்டது. அவனுடைய கிராமத்தில் வாழ்ந்த அதே காலநீளம் அளவிற்கு வெள்ளையர் மண்ணிலும் வதைந்து விட்டான். இன்னமும் அவன் ஆப்பிரிக்கன் தானா? அல்லது அவனும் நீக்ரோ ஆகிவிட்டானா? அப்பாவை கடைசியாக பார்த்தபோது அவருக்கிருந்த வயது அவனுக்கு வந்துவிட்டது. இருப்பினும் அவனுக்கென்று மகன்கள் இல்லை, குடும்பம் இல்லை, கிராமம் இல்லை. அடிமைகளிற்கு பிறந்த குழந்தைகளை ஆபிரிக்கர்களாக மாற்றும் முயற்சியில் கிட்டத்தட்ட 20 வருடங்களின் பின்னர் குண்டாவிற்கு ஒன்று தெளிவாகியது "பிறந்தது முதல் தமது வாழ்நாள் முழுவதையும் இங்கயே கழித்து வந்த அவர்களால் விடுதலைக் காற்றை சுவாசித்துப் பிறந்த தன்னுடைய உணர்வுகளை உரியமுறையில் புரிந்துகொள்ள முடியாதென்றெண்ணி கைவிட்டான். இப்பொழுதெல்லாம் மாண்டிங்கா வார்த்தைகளை நினைத்துப் பார்த்ததுகூட இல்லை. அவனுடைய சிந்தனை மொழியே பரங்கியாகிவிட்டது . ஆனாலும் இருப்பது ஆண்டுகள் உருண்டோடிய பின்னரும் அவன் இன்னும் பன்றி இறைச்சியை தொட்டதில்லை. அமெரிக்கர்களிற்கிடையில் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் அவனுடைய முதலாளி போர் மூண்டால் யாரை ஆதரிப்பாய் என்று கேட்க, அவன் சொன்னான் "இரண்டு நாய்கள் எலும்புக்காக சண்டையிட்டால், எலும்பாக இருக்கப்போவது நீக்ரோக்கள் தானே முதலாளி." டிசம்பர் மாத தொடக்கத்தில் ஓர் இரவு வேளையில் "பிரிவினை என்றால் என்ன?" என்று அவன் கேட்டான். அவர்களை தோள்களை குலுக்கினர். அவன் தொடர்ந்தான் "தென் கரோலினா அதைத் தான் செய்ததாக முதலாளி சொன்னார். அமெரிக்காவிலிருந்து அது வெளியேறிவிட்டதாக அவருடைய குரல் தொனித்தது.". "அவர்கள் வாழ்கின்ற நாட்டிலிருந்து எப்படி அவர்களே வெளியேறுவார்கள்" டாம் வியந்தான். "வெள்ளையர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்" என்றாள் ஐரீன். லில்லி சொன்னாள் "என்னுடைய பழைய முதலாளி அவரை பற்றி படு மோசமாக விமர்சிப்பார். கோணல் கால்களும், நெட்டைகைகளும், மயிரடர்ந்த அருவருப்பான தோற்றமும் கொண்ட லிங்கன் மனிதக் குரங்கைப் போலவோ, கொரில்லாவைப் போலவோ இருப்பார் என்று அவர் அடிக்கடி சொல்வதுண்டு. அழுக்கடைந்த மரக்கட்டைகளாலான வீட்டில் பிறந்து வளர்ந்த லிங்கன் நீக்ரோக்களைப் போல கடுமையாக உழைத்து வேலி ஓரங்களில் கிடைத்த கரடிகளையும் காட்டுப்பூனைகளையும் பிடித்து தின்று வாழ்ந்தவர் என்றும் அவர் சொன்னார்".
 4. உப்பு நாய்கள் பெருநகரத்தின் ரகசியங்களை பேசுகின்றது. பெருநகரங்களில் வாழ்கின்ற மனிதர்களின் ரகசியங்களை பேசுகின்றது. கஞ்சா, திருட்டு, விபச்சாரம், தகாத உறவுகள் என்று பெருநகரங்களில் புதைந்துகிடக்கின்ற அனைத்தும் இந்த புத்தகத்தில் கதைப்பொருளாக.வருகின்றது இந்த புத்தகத்தினை வெறுக்க வேண்டும், இல்லாவிடின் ரசிக்க வேண்டும். முன்னுரையிலேயே எவ்வளவிற்கு எவ்வளவு பாராட்டுகள் வந்தனவோ, அதே அளவிற்கு மிரட்டல்களும் வந்தன என்று எழுதப்பட்டிருக்கின்றது. எழுத்தும், கதைப்பொருளும் நான் மிகவும் ரசித்தவைகளில் ஒன்று. கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு கிடக்கின்றது என்போருக்கான புத்தகமல்ல இது.
 5. இந்த காணொளியின் இறுதியில் அவர் தன்னுடைய புத்தகம் ஒன்றை இருவருக்கும் பரிசளிக்கின்றார். அந்த புத்தகம் அவரின் வாழ்க்கை வரலாறு. ஜேர்மன் மொழியில் "Der fremde Deutsche" என்று வெளிவந்திருக்கின்றது. தமிழில் "ஜெர்மனிய அந்நியன்" என்று பொருள்படும். பல்லாயிரம் தமிழர்களை கொன்றுகுவித்த இலங்கை அதிபர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்தாலும், அவருக்கு சிகிச்சை அளிப்பது தன்னுடைய தொழில் அறம் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழர்களின் பிரச்சனை பற்றி அவர் வாய்திறப்பதில்லை என்ற கருத்திற்காக இதனை இங்கே எழுதுகின்றேன். இந்த புத்தகத்தில் மிகவும் முக்கியமான விடயம் ஒன்று உள்ளது. தமிழ் ஊடகங்களில் வருகின்ற செய்திகளை பார்க்கும் போது, இதுவரை யாரும் அவரை பற்றியோ அல்லது அவரின் புத்தகத்தை பற்றியோ ஆராய்ந்து எழுதியதாக தெரியவில்லை. அவர் ஆண்கள் மீது கொண்ட காதலை பற்றி இந்த புத்தகத்தில் ஆழமாக பேசப்படுகின்றது. ஆண்கள் மீது மட்டுமே ஈர்ப்புகொண்டவர். அதனால் அவர் சந்தித்த பிரச்சனைகள், அவமானங்கள் பற்றி பேசுவது இந்த புத்தகத்தின் சிறப்பம்சமாக நான் பார்க்கின்றேன்.
 6. வணக்கம் ஊர்க்காவலன்.

  விடுகதைகள் என்ற திரியை 2014 ஜூன் மாதத்தின் பின்னர் நீங்கள் தொடரவில்லை. நீங்கள் விடுகதை பற்றிய திரி திறந்தது தெரியாது நானும் ஒன்றைத் திறந்துவிட்டேன். நீங்கள் மீண்டும் வந்து அத்திரியைத் தொடர்ந்தால்  எனக்கு ஆட்சேபனை இல்லை. நீங்கள் தொடர மாட்டீர்கள் எனில் நான் தொடர்ந்தும் விடுகதைகளைப் போடலாம். உங்கள் எண்ணத்தைத் தயவுசெய்து எனக்குத் தெரியப்படுத்துங்கள். நன்றி.

  அன்புடன் சுமே

 7. 800 பச்சைபுள்ளிகளை பெற்ற சிறுமி சாந்தி "அக்காவிற்கு" வாழ்த்துக்கள்!
 8. பச்சைபுள்ளிகள் எடுத்து சாதனை படைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
 9. யாருப்பா அது Pagetamil.com ? சும்மா மேலோட்டமா வாசித்த எனக்கு இவ்வளவு எழுத்துபிழை எழுதினதை ஒருக்கா மீளாய்வு செய்திட்டு வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் (பகுதி 2லும் இதே நிலை தான்).
 10. சரி. அப்படியென்றால் எனது பெயரை "ஊர்க்காவலன்" என்று மாற்றிவிடுங்கள்.
 11. வணக்கம் எனது பெயரை "தம்பி" என்று மாற்றிவிட முடியுமா? நன்றி.