Jump to content

ஊர்க்காவலன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    675
  • Joined

  • Last visited

  • Days Won

    5

Posts posted by ஊர்க்காவலன்

  1. 7 minutes ago, Kapithan said:

    தாராளமாகத் திறக்கலாம். இதில் ஒரு பிரச்சனையும் இல்லை. வதியாதோர் வெளிநாட்டுக் கணக்கு என்று பெயர். 

    இலங்கை ரூபாயிலும் திறக்கலாம, அனுமதிக்கபட்ட வேற்றுநாட்டு பணக் கணக்கையும் ஆரம்பிக்கலாம்’. ஆனால் ரூபாயில் பணத்தை வைப்பிலிடுவது  பண மதிப்பிழக்கத்தால் பாதிக்கப்படலாம். 

    எனவே டொலரிலோ, பவுண்சிலோ திறப்பதுதான் பாதுகாப்பானது. அதற்கான வட்டியும் அதிகம். 

    வங்கியில் வைப்பிலிடும் பணத்தை அரசு எடுத்துக்கொள்ளும் அபாயம் என்பது நடைமுறையில் வெகு அரிதானது. இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் மேற்கு நாடுகள் வங்கிகளிண் பாதுகாப்புப் பெட்டகங்களில் வைக்த்திருந்த  தங்கள் மக்களின் தங்கத்தை எடுத்துக்கொண்டதாக எங்கோ வாசித்த நினைவு. 

    அதுசரி ஊர்க்காவலனுக்கு பென்சன் எடுக்கும் வயது நெருங்குகிறதோ? 

    🤣

    இல்லை தலீவரே. பென்சன் எடுக்க நிறைய காலம் இருக்கு.

    ஆனா பென்சன் எடுக்கிறதை திட்டமிடுற வயசுக்கு வந்திட்டன் :)

    சில சமூக சேவைகள் செய்வதற்கு நேரடியாக இலங்கையில் வங்கிக்கணக்கு இருந்தால் நடைமுறை சிக்கல் நிறையவே குறையும். அதற்கு தான் கேட்டனான். இந்த இடைத்தரகர்கள் மூலமாக செய்வது நம்பிக்கை குறைந்துகொண்டே போகிறது. 

  2. 2 minutes ago, MEERA said:

    உள்ளூரில் CMD - Cash Machine Deposit & CD - Counter Deposit மூலமாக பணம் வைப்பிலிட முடியாது. உண்டியல் மூலமான பணப் பரிமாற்றத்தை தடுப்பதற்காக.

    நீங்கள் தாராளமாக பணத்தினை எடுக்க முடியும். அந்த கணக்கினூடாகவே மற்றைய கணக்குகளுக்கு மாற்றவும் Standing Order - (நிலையியற் கட்டளை) பிறப்பிக்கவும் முடியும்.

    உங்களது பணம் சிறீலங்கா ரூபாவில் இருக்கும். 

    இறுதியான ஒரு கேள்வி. எந்த வங்கியில் இந்த NRRA வசதி உள்ளது? கணக்கினை ஆன்லைன் மூலம் திறக்கும் வசதிகள் இருக்குமா? 

    இலங்கையில் கோடி கோடியாய் முதலீடு செய்வதற்கு நான் இந்த தகவலை கேட்கவில்லை என்பதையும் கூறிக்கொண்டு....:)

  3. 22 minutes ago, MEERA said:

    சிறீலங்காவில் பிறந்த வெளிநாட்டுக் குடியுரிமை உள்ள ஒருவர் திறக்கலாம்.

    Non Resident Rupees Account  (NRRA) 

    இந்தக் கணக்கு சிலவருடங்களுக்கு முன்னர் கோத்தபாய அரசினால் வெளிநாட்டு நாணயக் கையிருப்பை அதிகரிக்கும் நோக்கில்   அறிமுகப்படுத்தப்பட்டது.

    உங்களது கடவுச்சீட்டும் வெளிநாட்டில் உங்களது முகவரியை உறுதிப்படுத்த சாரதி அனுமதிப் பத்திரமும் போதுமானது.

    ஆனால் இந்த வங்கிக் கணக்கிற்கு உள்ளூரில் பணம் வைப்பிலிட முடியாது.  வெளிநாட்டிலிருந்து வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட பணமாற்றுச் சேவையினூடக அல்லது உங்களது வெளிநாட்டு வங்கியினூடாக மாத்திரமே வைப்பிலிடலாம்.

    மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட பணமாற்று சேவை வழங்குநர்கள். நாடுகள் ரீதியாக

    https://www.cbsl.gov.lk/en/remittance-partners

    மேலும் இவ்வகையான (வங்கிக்  கணக்கு ) வாடிக்கையாளர்களுக்கு நிரந்தர வைப்பிற்கான வட்டிவீதமும் வைப்பிற்கான காலமும் சற்றுக் குறைவானது.

    உள்ளூரில் வைப்பிலிட முடியாது என்றால் என்ன அர்த்தம்? 
    இலங்கை சென்றால் அந்த பணம் எடுக்க முடியாது என்று அர்த்தமா? 
    வைப்பிலிருக்கும் பணம் இலங்கை ரூபாயில் இருக்குமா அல்லது அந்தந்த நாட்டு நாணயத்திலா? 

  4. வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் (இலங்கை குடியுரிமை இல்லாதவர்) இலங்கையில் வங்கிக்கணக்கு தொடங்க முடியுமா? இணையத்தில் தேடியதில் முரணான தகவல்களே கிடைத்தன. 

    யாருக்காவது தெரிந்தால் பகிர்ந்துகொள்ளவும். 
    நன்றி 

  5. என்னுடைய சந்தேகம் இப்பொழுதும் இதை RAW செய்திருக்க வாய்ப்பில்லை என்பது தான். அதற்கு வலுசேர்க்கும் விதமாக நேற்று முதல் இணையத்தில் மித்துஜா என்பவர் உள்ளே கொண்டுவரப்பட்டிருக்கிறார். அவரின் அடையாள அட்டை முதல், கணவர், பிள்ளைகளுடன் இருக்கும் புகைப்படம் வரை வெளியிட்டிருக்கிறார்கள். அதை நான் இங்கே இணைக்க விரும்பவில்லை. அது மித்துஜா இல்லையென்றால் அவர் எல்லோர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் :)

    மித்துஜா சுவிசில் அகதி அந்தஸ்து நிலையில் தான் இருக்கிறார் என்பது அவருடைய அடையாள அட்டையில் இருந்து தெரிந்துகொள்ளலாம். சில மாதங்களிற்கு முன்னர் சுவிசில் துவராகவின் பெயரை வைத்து ஒரு பணவேட்டை நடந்தது அனைவரும் அறிந்ததே. அதுவும் மித்துஜாவின் திருவிளையாடலாக இருக்கலாம். இந்த சில்லறைத்தனமான வீடியோ கூட பணவேட்டை கும்பலின் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்பிருக்கிறது. 

    எது எப்படியோ மித்துஜா இதற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்றால் வெளியில் வந்து பேசவேண்டும். சம்மந்தம் இல்லாத பட்சத்தில் இணையத்தில் வதந்தி பரப்பிய அனைவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுத்து நஷ்டஈடு பெறட்டும். அவரின் மௌனம் மேலும் மேலும் அவர் மீதான சந்தேகத்தை அதிகரித்துக்கொண்டே செல்லும். 

    • Like 1
  6. RAW ஒரு மூன்றாம் தரப்பு நாட்டின் உளவுத்துறையல்ல. தொழில்நுட்பத்தை கையாளுவதில் அவர்களிற்கு பெரிய சிக்கல் இருக்கப்போவதில்லை. அப்படியிருக்கையில் இப்படி ஒரு மட்டமான அரைவேக்காட்டுத்தனமான காணொளியை ஏன் வெளியிட வேண்டும்? பார்ப்பவர்கள் இவ்வளவு  இலகுவாக இது பொய் என்று கண்டுபிடிக்க கூடிய ஒரு காணொளியை வெளியிடவேண்டிய தேவை என்னவென்று புரியவில்லை. 

    ஒன்றில் அவர்கள் தெரிந்தே இந்த தவறை செய்திருக்கவேண்டும். அல்லது இந்திய உளவுத்துறை அப்படி தரம்குறைந்து போயிருக்கவேண்டும் (இதை நான் பெரிதும் நம்பவில்லை).

    2009இல் இருந்து தமிழர் பிரச்சனையில் "யாரோ" ஒரு மீட்பர் வருவார் அதுவரை காத்திருங்கள் என்று ஆசைகாட்டியே தமிழர்களின் போராட்டத்தை  கிடப்பில் போட்டு வைத்திருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ அமைப்பு தாங்கள் தான் என்று சொல்பவர்கள் கூட தலைவர் வருவார் என்ற ஒரு மாயைக்குள் தான் தமிழர்களை வைத்திருக்கிறார்கள். அந்த மாயைக்குள்ளயே தமிழர்கள் இருக்கும் வரை அடுத்த கட்டத்திற்கு நகரமுடியாது. பெரும்பாலானவர்கள் இனி தலைவர் வருவார் என்பதை 14 ஆண்டுகள் சென்றபின்னர் நம்புவதாக இல்லை. ஆனாலும் தலைவர் வருவார் என்று நம்புகிற ஒரு சிறிய கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அது புலம்பெயர்ந்த முதலாம் தலைமுறை பெரியவர்கள் தான். இந்த காணொளி அவர்களை மறுபடியும் அந்த மாயைக்குள்ள வைத்திருப்பதற்காக இருக்கலாம். ப்ரொஜெக்ட் தலைவர் குடும்பம் என்று ஒன்றை தொடங்கி அடுத்த 10 ஆண்டுகள் காலத்தை ஒட்டட்டும் என்று நினைத்தார்களோ என்னவோ தெரியவில்லை. 
     

    • Like 2
    • Thanks 1
  7. நான் சில மதங்களிற்கு முன்னர் AI 2041 என்ற புத்தகம் வாசித்திருந்தேன். அது 2041 உலகம் தொழில்நுட்பத்தில் முக்கியமாக செயற்கை நுண்ணறிவு எவ்வளவு தூரம் வரை செல்லும் அல்லது செல்லலாம் என்பது பற்றியது. 

    அந்த புத்தகம் வாசித்த பின்னர் இப்படி ஏதாவது வரும் என்று எதிர்பார்த்திருந்தேன். 

    Deep fake என்பதை இன்னும் சரியாக கையாள தெரியாத ஒரு கூட்டம் இதை செய்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. இன்னும் ஒரு 10-15 வருடங்களில் அதை சரியாக பயன்படுத்தி தலைவரின் உரையை வெளியிடுவார்கள். அது வரை பொறுமை காக்கவும். 

    நான் உரையை கேட்கவில்லை. வீடியோவின் thumbnail பார்த்தே புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. 😄

  8. முதலாவது எற்கனவே கறிப்பிட்டபடி FNC சண்டை என்று அழைக்கப்பட்ட கட்டைக்காடு அயுதக்களஞ்சியத் தாக்குதல். அந்த சண்டையில் அவர் ஒரு புதிய போருத்தியை ஈழக்களங்களில் அறிமுகப்படுத்தினார். எதிரியின் தளத்திற்குள் இரகசியமாக ஊடுரவிச் சென்று, எதிரியின் பின்னால் நிலையெடுத்துவிட்டு, எதிரியின் பிடறியில் அடித்து அதிர்ச்சியடைய வைப்பது. ஈழக்களங்களில் அதனை நடைமுறைப்படுத்திக் காட்டியவர் அவர்.

    http://pagetamil.com/?p=9241

     

    யாருப்பா அது Pagetamil.com ? சும்மா மேலோட்டமா வாசித்த எனக்கு இவ்வளவு எழுத்துபிழை  :icon_idea:

    எழுதினதை ஒருக்கா மீளாய்வு செய்திட்டு வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் (பகுதி 2லும் இதே நிலை தான்).

  9. மாத்தையா கைதின் முழுமையான பொறுப்பும் சொர்ணத்திடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே பிரபாரன் மீது வைத்திருந்த விசுவாசம், தனது பொறுப்பிலிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை ஊடுருவி மாத்தையாவின் சதிக்கரங்கள் ஊள்நுழைந்ததாக அவர் நம்பியது என இரண்டும் சேர்ந்து அவரை ஒரு வெறி கொண்ட வேங்கையாகத்தான் மாத்தையாவின் முகாமிற்கு கொண்டு சென்றது.

     

     

    • Like 1
  10. ஏற்கனவே ஒரு உறுப்பினர் இப் பெயரில் இணைந்து இருக்கின்றார். இன்னொரு பெயரை தாருங்கள்.

     

    சரி. அப்படியென்றால் எனது பெயரை "ஊர்க்காவலன்" என்று மாற்றிவிடுங்கள். 

  11. செங்கொடி, நான் பாதுகாப்பு இருக்காது என்று தெரிந்து  எல்லாவற்றையும் எதிர்பார்த்து முகம்கொடுக்கவும் தயாராகத்தான் இலங்கை சென்றேன். அம்மாவின் சமாதியை பார்க்காமல் உயிர்வாழ்ந்து என்னத்தை சாதிக்கப்போகிறேன் என்கிற கருத்தை முகநூலில் பதிவுசெய்துவிட்டே சென்றேன்.16 வயசில் சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதில் இருந்தே பல தடவைக்குமேல் கொலை முயற்சிகளில் இருந்து தப்பியிருக்கிறேன்.1972 ஏப்பிரல் 2ம்திகதி இரவு அதிஸ்ட்டவசமாக ஒரு அமரிக்க தத்துவஞானி என்வீட்டுக்கு வந்திருந்ததால் பொலிஸ் என்கவுண்டரில் இருந்து தப்பினேன். எனினும் எல்லாத் தடவையும் அதிஸ்ட்டம் என் பக்கத்தில் இருக்காது என்பதையும் அறிவேன்.

    நான் எவ்வழியிலாவது மீண்டும் இலங்கைதீவுக்குச் செல்வேன்.

     

    ஜயா உங்கள் அம்மாவின் சமாதியை பார்த்தாகிவிட்டது. பின்னர் எதற்கு இன்னுமொரு முறை அங்கே செல்ல விரும்புகிறீர்கள்? 

     

    உங்களைப்போன்றவர்களே சிறீலங்காவை புறக்கணிக்கணிப்பு என்பதை அலட்சியப்படுத்தினால் ஒரு சராசரி தமிழன் என்ன செய்வான்? Amnesty International போன்ற அமைப்புக்கள் இலங்கையின் சுற்றுலாத்துறையை புறக்கணிக்கும் இந்த நேரத்தில் நீங்கள் செய்வது பொறுப்புள்ள காரியமா? 

     

    சற்று சிந்தித்துப்பாருங்கள் நீங்கள் அங்கே சென்று வருகின்ற ஒவ்வொரு முறையும் அங்கிருந்து அகதியாக வருபவர்களிற்கு திருப்பி அனுப்பும் சந்தர்ப்பம் அதிகரித்துக்கொண்டே இருக்கும். உங்கள் அம்மாவின் சமாதிக்கு நீங்கள் செல்ல நினைத்ததை ஓரளவு ஏற்றுக்கொண்டாலும் நீங்கள் மீண்டும் அங்கே செல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

     

    நீங்கள் அங்கே சென்று மீண்டும் இப்படியொரு நிலை வந்தால் மறுபடியும் உங்களிற்கு உதவ முன்வரும் உங்களின் தோழர்களிற்கு தான் ஆபத்து அதிகம். அதை பற்றியும் சிந்தியுங்கள். இம்முறை உங்களிற்கு உதவியவர்களின் பெயர்களை வெளியிடவே தயங்குகின்றீர்கள். உங்களின் தொலைபேசியை ஒட்டுக்கேட்ட சிங்களத்திற்கு அது யார் என்பது தெரிந்திருக்கும் தானே. அவர்களை எப்படியும் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிபார்கள் என நினைக்கின்றேன். அவர்களை நீங்கள் இன்னொரு முறை இதே பிரச்சனைக்குள் மாட்டிவிடாமல் இருப்பதற்கு நீங்கள் சிறீலங்காவை புறக்கணிப்பதே சிறந்தது. 

     

    இனி உங்களின் விருப்பம் ஜயா...

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.