Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13551
  • Joined

  • Last visited

  • Days Won

    45

ஈழப்பிரியன் last won the day on March 31

ஈழப்பிரியன் had the most liked content!

3 Followers

About ஈழப்பிரியன்

  • Birthday 06/26/1956

Contact Methods

  • MSN
    eelapirean@gmail.com
  • Website URL
    http://
  • ICQ
    0

Profile Information

  • Gender
    Male
  • Location
    அமெரிக்கா

Recent Profile Visitors

20512 profile views

ஈழப்பிரியன்'s Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • Week One Done
  • One Year In

Recent Badges

5k

Reputation

  1. கோ ஹோம் கோட்டா” போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியானதையொட்டி மீரிஹான பகுதியில் வெள்ளிக்கழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவுப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருந்தது. நேற்று (31.03.2023) மாலை போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதன் முன்னணி செயற்பாட்டாளர்களான டானிஸ் அலி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்தே அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் பலவந்தமாக கடத்தப்பட்டதாக தெரிவித்து, போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் குறித்தப் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்ததுடன், கோட்டாபய ராஜபக்சவின் வீட்டிற்கு செல்லும் வீதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம், https://tamilwin.com/article/tense-situation-at-mirihana-paper-news-1680319596
  2. 23 கோஷான் சே 0 ஒரு நாள்த் தானே கொஞ்சம் தம் பிடித்து நில்லுங்க. கடைசி ஆளா பதியிறதால கொஞ்சம் வில்லங்மும் இருக்கு.
  3. பனிப் பொழிவு 2 காலை 8 மணிக்கு இறங்க வேண்டும் என்று சொன்னாலும் 10 மணிக்குத் தான் இறங்க முடிந்தது. ஏறத்தாள 3 மணிநேர பயணம்.பிள்ளைகளுடன் போவதால் நின்றுநின்று போக வேண்டும்.மதியம் சாப்பாட்டுக்கு வேறு நிற்க வேண்டும். புறப்பட்டு கொஞ்ச நேரத்திலேயே பேத்திக்கு பம்பஸ் மாற்ற வேண்டும் என்று ஒரு கோப்பிக் கடையில் நிற்பாட்டினார்கள்.கோப்பிக் கடையில் பிள்ளைகளுக்கு டோநட்டும் கோப்பியும் வாங்கினார்கள்.எனக்கு எப்போதும் கோன்மபின் சாப்பிடவே விருப்பம்.எந்தநாளும் என்றில்லை இப்படி எங்காவது போனால் விரும்பி சாப்பிடுவது இதைத் தான். அங்கிருந்து புறப்பட்டு சக்கரமன்ரோ பகுதியில் மதியம் சாப்பாடு.நிறைய கூட்டமாக இருந்தது.இவர்கள் கொஞ்சம் முதலே முன்பதிவு செய்தபடியால் சுலபமாக உள்ளே போய்விட்டோம்.சாப்பாடு கொண்டுவர தாமதமாகி விட்டது. கூட்டத்தைப் பார்த்து இதை எதிர்பார்த்தது தான்.சாப்பாடு திறமாக இருந்தது. சக்கரமன்ரோவில் காலநிலையும் நன்றாகவே இருந்தது.இன்னும் ஒன்றரை மணிநேரம் ஓடினால் கொட்டேலுக்கு போய்விடலாம் என்றார்கள்.போகப் போக வழி நெடுகலும் ஏற்கனவே பனி கொட்டிக் கிடக்கிறது.இரு பக்கங்களிலும் பெரிய மலைகள்.அனேகமானவை பனி படிந்து போயிருந்தது. ஒருசில இடங்களில் மக்கள் பனியில் சறுக்கி விளையாடுவதையும் கேபிள் கார்கள் மக்களை சுமந்து மேலே கூட்டிச் செல்வதையும் தூரத்தே காண முடிந்தது.இப்படி தான் நாங்களும் நாளைக்கு போகப் போகிறோம் என்று சொன்னார்கள்.நாளை நடக்க போவதை தெரியாமல் ரசித்துக் கொண்டே வந்தோம். நாங்கள் போனநேரம் ஏற்கனவே விளையாடி முடிந்து மூட்டை முடிச்சுக்களுடன் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.எமக்காக ஒதுக்கப்பட்ட அறையில் எமது சாமான்களை வைத்துவிட்டு மகளும் மருமகனும் வெளியே போய் சுற்றி பார்க்க போனார்கள்.பிள்ளைகள் தூங்கிக் கொண்டிருந்ததால் அவர்களுடன் நாமும் படுத்து தூங்கவிட்டோம். பிற்பகல் 5 மணி போல் இரவு சாப்பாட்டுக்காக நடந்தே போனோம்.சாப்பாடு மதிய சாப்பாடு போல இருக்கவில்லை.மனைவியும் நானும் வேளைக்கே சாப்பாட்டை முடித்து பக்கத்தில் இருந்த கடையில் நொறுக்குத்தீனி என்று சிப்ஸ் பிஸ்கட் என்று கூடுலாகவே வாங்கி வந்தோம்.அடுத்த நாள் இது தான் சாப்பாடு என்று யாருக்கு தெரியும். மீண்டும் கொட்டேலுக்கு வர 8 மணி ஆகிவிட்டது.நாளைக்கு நிறைய பனி பொழியப் போகுது.அதற்கு முதல் போய் விளையாடிப் போட்டு வர வேண்டும்.7 மணிக்காவது இறங்க வேண்டும் என்று அடுத்த நாள் போடுற உடுப்புகள் எல்லாம் இப்பவே எடுத்து வையுங்கோ என்று அவரவர் உடுப்புகளை எடுத்து வைத்துவிட்டு 9 மணிக்கே படுக்கைக்கு போய்விட்டோம். பனி பொழியும். இப்ப இந்த உடைக்காரருக்கும் இடைஇடை அடி விழுகுது. இது தேவையா? பனியில் நனைய தயாராகுங்கள். இதுவும் ஒரு அனுபவம் தான்.
  4. https://m.crichd.vip/watch-star-sports-1-live-stream-indu கணனியில் விளையாட்டைப் பார்க்க மேலே உள்ள சுட்டியை அழுத்தவும். இது தெரிந்து தான் @Kandiah57 தனது கிட்னியை காப்பாற்றிக் கொண்டார்.
  5. குளிர் காலங்களில் இந்த இடத்து மலைகளில் படிந்திருக்கும் பனிகள் தான் போடை காலத்தில் கரைந்து காய்ந்து போயிருக்கும் இடங்களுக்கு உயிரூட்டுவதாக சொல்கிறார்கள். கோடை காலத்தில் பனிகள் கரைந்த பின்பு மலை ஏறுவதற்கென்றே பலர் வருவதாக சொல்கிறார்கள். மொத்தத்தில் 365 நாளும் இந்தப் பகுதி ஒரே கொண்டாட்டம் தான். நுணா நீங்களும் இங்கு கும்மாளம் அடித்திருக்கிறீங்க போல. அக்கா காய்ச்சல் தடிமன் வரப்போகுது. புங்கை இந்த படத்தைப் பார்த்த மகன் என்ன ஜெயிலில் இருந்து தப்பி வந்த மாதிரி இருக்கு என்றான்.
  6. டொனால்ட் டிரம்ப் மன்ஹாட்டன் கிராண்ட் ஜூரியால் குற்றம் சாட்டப்பட்டார், இந்த விஷயத்தை நன்கு அறிந்த பல ஆதாரங்களின்படி - அமெரிக்க வரலாற்றில் தற்போதைய அல்லது முன்னாள் ஜனாதிபதி கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது இதுவே முதல் முறை. முத்திரையுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வரும் நாட்களில் அறிவிக்கப்படும். இந்த நேரத்தில் குற்றச்சாட்டுகள் பகிரங்கமாக அறியப்படவில்லை, ஒரு ஆதாரம் CNN இடம் கூறினார். மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் ஆல்வின் பிராக்கின் அலுவலகம் டிரம்பின் வழக்கறிஞர்களை அணுகி, அவர் சரணடைவதைப் பற்றி விவாதிக்கும். https://www.cnn.com/2023/03/30/politics/donald-trump-indictment/index.html
  7. கடந்த மார்கழியில் மகள் குடும்பத்தை பார்க்க சன்பிரான்சிஸ்கோ போயிருந்தோம். வழமையை விட கூடுதலான மழையாக இருந்தது.கலிபோர்ணியா மழை இல்லாமல் தண்ணீர் இல்லாமல் அழியப் போகுது என்று தொலைக்காட்சி பத்திரிகை செய்திகள் பல மாதங்களாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். இங்கு கூடுதல் மழை பெய்தால் மண்சரிவு ஏற்பட்டு அதனால் உயிர்ச் சேதம் பொருள் சேதம் என்று பல அழிவுகளை சந்திக்க வேண்டும். கலிபோர்ணியாவின் புவியியல் அமைப்பே சற்று வித்தியாசமானது.சமசீரான நிலங்களைக் காண்பது மிகவும் அரிது.மலைப் பிரதேசங்களை கூடுதலாக உள்ளடக்கியதே இந்த மாநிலம். இந்த புது வருடத்துக்கு பனிமலையில் சறுக்கி விளையாடப் போகிறோம் என்று மகள் சொன்னா.மகளும் கணவரும் ஒவ்வொரு வருடமும் பனியில் சறுக்கி விளையாட போவார்கள்.நீங்களும் சறுக்கி விளையாட போறீங்களோ என்று எம்மையும் கேட்டா.வேண்டாம் வேண்டாம் நாங்கள் பிள்ளைகளை பார்க்கிறோம் நீங்கள் விளையாடிப் போட்டு வாங்கோ என்று மறுத்துவிட்டோம். அவர்கள் வருடாவருடம் Tahoe என்ற இடத்துக்கு பனியில் சறுக்கி விளையாட போவதால் அதற்கேற்ற உடுப்புகள்,தண்ணீர் போகாத சப்பாத்து ,கையுறை என்று எல்லாமே வைத்திருக்கிறார்கள்.இப்போ நாங்களும் சேர்ந்து கொண்டபடியால் எங்களுக்கும் குளிருக்கு உடைகளும் தண்ணீர் போகாத கையுறையும் வாங்கினார்கள்.பின் விபரீதம் தெரியாமல் சப்பாத்தை ஏன் வீண்காசு என்று மறுத்துவிட்டேன். இந்த உடுப்பு பார்வைக்கு சாதாரணமாக இருந்தாலும் மிகவும் பாரமானதும் தடிப்பம் கூடியதும் ஆகும்.எவ்வளவு குளிரிலும் நம்பி போட்டுக் கொண்டு போகலாம். மூன்று நாள் கொட்டாட்டம் என்று புதுவருடத்துக்கு முதல்முதல் நாள் பெட்டி படுக்கைகளுடன் ஏற்கனவே பதிவு செய்த கொட்டேலை நோக்கி பயணம் தொடங்கினோம்.மகளும் கணவரும் சகலதையும் பொறுப்பெடுத்து செய்ததால் நான் எங்கு போகிறோம் காலநிலை என்ன எதுவுமே பார்க்கவில்லை.வழமையில் இப்படியான பயணங்கள் என்றால் அதுவும் குழந்தைகளுடன் போவதென்றால் போகிற வழியில் இருந்து நாங்கள் போய் நின்று திரும்ப வரும்வரை காலநிலை பாதுகாப்பு எங்கெங்கே வாகனத்துக்கு எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று அட்டவணையே போட்டுவிடுவேன். இந்த தடவை அப்படி எதுவும் செய்யாததன் விளைவை பின்னர் அனுபவிக்க நேரும்போது தான் உணர்ந்தேன். பனி பொழியும்.
  8. பெண் குரலில் பேசினால்த் தான் அலுவல் நடக்கும் போல.
  9. பணத்தை கொடுத்து வாங்கினால் பரவாயில்லை எந்த நாளும் பிச்சை பாத்திரம் என்றால் இப்படி தான் வரும்.
  10. இது ஏப்ரல் பூலுக்கு பாவனைக்காக இறக்கப்பட்டது. தெரிந்தோ தெரியமலோ திண்டுடாதேங்கோ.
  11. யாழிணையத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கடந்த 18 வருடங்களாக யாழுடன் நானும் பயணித்ததை நினைக்க சந்தோசமாகவும் பிரமிப்பாகவும் உள்ளது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.