Jump to content

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  11726
 • Joined

 • Last visited

 • Days Won

  34

Everything posted by ஈழப்பிரியன்

 1. பிள்ளைக்கும் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள். இணைப்புக்கு நன்றி யாயினி.
 2. நான் எங்கை கனடா வந்தன்?கனடிய உறவுகளின் குரலாக பதிவு செய்திருக்கிறேன். அதுசரி நீங்க கனடாவில போல.
 3. ஆஆஆ கோடை விடுமுறைக்கு விமான ரிக்கட் எல்லாம் எடுத்து வைத்திருக்கும் இந்த நேரத்திலயா? அதுவும் கனடியன் டாலர் 300 போகுதாம் போய ஒருக்கா குத்தாட்டம் போடுவமென்றா இது வேற பிரச்சனையா போச்சே.
 4. என்ன கொடுமை குடும்பமே போராளிக் குடும்பமாகவல்லவா இருந்திருக்கிறார்கள். அம்மாவுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள். தகவலுக்கு நன்றி நொச்சி. மேலதிக தகவல்களுக்கு நன்றி சிறி.
 5. இந்தக் காணொளியின் 10 நிமிடத்தின் பின் சந்திரிகாவைப் பற்றி பத்திரிக்கையாளர் கூறிய போது நன்றிக் கடனுக்காகவே இனஅழிப்பு என்ற வார்த்தையை சொல்லி விளக்கேற்றியிருக்கிறார் என்று சொல்லுகிறார். அதாவது குண்டுத் தாக்குதல்களில் மயிரிழையில் தப்பிய சந்திரிகா தனது குடும்பமும் இலக்கு வைக்கப்படலாம் என்று பயந்திருந்த காலத்தில் எந்தக் காலத்திலும் குடும்பத்தினரை எதுவுமே செய்ய மாட்டோம் என்று தமிழ் தேசிய தலைமை (புலிகள்) சந்திரிகாவுக்கு நேரடியாக உத்தரவாதம் வழங்கியதாக சொல்கிறார். தானும் அதில் சம்பந்தப்பட்டிருந்ததால் இந்தநேரம் இதைச் சொல்ல கடமைப்பட்டுள்ளதாக சொல்கிறார். உங்களில் யாருக்கேனும் இந்த செய்தி பழசாக இருக்கலாம்.ஆனால் எனக்கு இது புதியசெய்தி.
 6. எம்மை அமைச்சராக்கியதே போதும். நீங்கள் எதுவுமே தர தேவையில்லை பிரதமரே. நம்ம கஜானாவை நாமே நிரப்பிக் கொள்வோம்.
 7. இராணுவ அடக்குமுறைக்கொள்கையால் சிங்களதேசம் தன்னைத் தானே அழித்துக் கொண்டிருக்கிறதே தவிர, தமிழினத்தின் சுதந்திர எழுச்சியை அதனால் அழித்துவிட முடியாது. இந்த உண்மையை சிங்களப்பேரினவாதம் என்றோ ஒருநாள் உணர்ந்தே தீரும்! - தலைவர் பிரபாகரன் (மாவீரர் நாள் உரை -1997) முகநூலில் இருந்து.
 8. போரினால் இறந்த போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஆழ்ந்த அஞ்சலிகள்.
 9. இன்று தமிழ் இனஅழிப்பு நாளில் பேரறிவாளன் விடுதலையாகியது மிகவும் சந்தோசமாக உள்ளது. அவரது விடுதலைக்காக பாடுபட்ட குரல் கொடுத்த அத்தனை பேருக்கும் நன்றிகள்.
 10. யாராவது அவருக்கு வாக்குப் போட்டு வெல்ல வைத்திருந்தா தானே அவர்களுக்கு ஆதரவாக செயற்படணும்.
 11. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பேராசிரியர் கிருஸ்ணன்.
 12. அருமையான ஒரு வீரனை கலைஞனை கொன்னுட்டாங்களே. இணைப்புக்கு நன்றி வளவன்.
 13. வணக்கம் சரவிபி. உங்களுக்கு நிறையவே எழுத்தாற்றல் இருக்கிறது போல தெரிகிறது. இங்கு நிறைய பகுதிகள் இருக்கின்றன.புகுந்து விளையாடுங்கள். நீங்களும் பெருமையடைந்து யாழுக்கும் பெருமை சேருங்கள்.
 14. மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில், ஆர்மேனியாவின் முன்னாள் அரசுத் தலைவரான ஆர்மென் சர்கிசியன் (Armen Sarkissian) அவர்கள் எட்டாவது முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை வழங்க இருக்கின்றார். பல்வேறு ஆளுமைகளை கொண்ட இவரது முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையானது, மே 18 தமிழீழத் தேசிய துக்க நாளாகிய புதன்கிழமை, செவ்வாய்க்கிழமை New York 2:00 PM / UK : 7:00 PM / EU : 8:00 PM நேரத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் www.tgte.tv வலைக்காட்சியிலும், Facebook: @mediatgte -- இதர உலகத்தமிழ் ஊடகங்கள் வழியாகவும் காணலாம். ஒவ்வொரு ஆண்டின் உலகின் முக்கிய பிரமுகர்களை அழைத்து முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இம்முறை எட்டாவது அரங்கினை தொட்டுநிற்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையினை வழங்கும் அரசியல் பிரமுகரான ஆர்மென் சர்கிசியன் அவர்கள், (2018-2022) காலப்பகுதியில் ஆர்மேனியாவின் 4வது அரசுத் தலைவராக இருந்துள்ளார். (1996-1997) காலப்பகுதியில் ஆர்மேனியாவின் பிரதமராகவும் பொறுப்பு வகித்த இவர், (1998-2018) காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்தில் நாட்டின் நீண்ட காலம் பணியாற்றிய தூதராகவும் இருந்துள்ளார். (1995-1996) காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஆர்மேனியாவின் தலைவராக இருந்துள்ளதோடு, மேற்குலகில் தொடங்கிய முதல் ஆர்மேனிய தூதரகத்தினை லண்டனில் தொடங்கியவர் என்பதோடு, பெல்ஜியம, நெதர்லாந்து, லக்செம்பர்க் மற்றும் வற்றிக்கான் ஆகிய நாடுகளுக்கு ஆர்மேனியாவின் மூத்த தூதராக விளங்கியுள்ளார். Video: Sri Lanka’s Killing Fields: https://youtu.be/r3yPzyM0KMU
 15. கருணா குழு பிள்ளையான் குழு வரதராஜபெருமாள் குழு பரந்தன் ராஜன் குழு இன்னும் பல குழுக்களை தீனி போட்டு வளர்த்து வருகிறோம். இனிவரும் காலங்களில் இவர்களுக்கு வேலைகள் வரப்போகுது. பழிபோட யாராவது வேணுமே?அதுதான் இப்பவே சொல்லிப் போட்டம்.
 16. ஆகா ரசியாவிடம் குறைந்த விலைக்கு வாங்கி வியாபாரம் நடக்குது. அமெரிக்கா காண்டாக போவுது.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.