ராஜன் விஷ்வா

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  664
 • Joined

 • Last visited

 • Days Won

  18

ராஜன் விஷ்வா last won the day on November 27 2015

ராஜன் விஷ்வா had the most liked content!

Community Reputation

515 பிரகாசம்

About ராஜன் விஷ்வா

 • Rank
  உறுப்பினர்
 • Birthday வியாழன் 04 ஏப்ரல் 1991

Profile Information

 • Gender
  Male

Recent Profile Visitors

2,495 profile views
 1. ஆதரவளித்த அண்ணன்களுக்கு அன்பு வணக்கம்...
 2. காற்றின் சுழிகளில் திருகி வெற்றிட நிறையில் தோற்று நீரின் பாயத்தில் பயணிக்கும் உதிர்ந்த பழுப்பு நிறச்சருகின் புறப்பரப்பின் கீழே நிறப்பிரிகையடையும் சூரிய பிரவாகத்தின் ஒளிக் கீற்றில் மெல்லப் படரும் வைகறையின் நிறத்தில் நெளியும் மஞ்சள் நதியின் இரு கரைகளிலும் வானேகி வளர்ந்த தென்னைமரங்கள் கடந்து தொடுவா னளவு பச்சையம் விரித்துக் கிடந்த பூமியின் உழவு மாடுகளை விற்ற கோடை நாளொன்றில் அப்பாவின் முகத்தில் வழிந்த மூதாதையரின் கண்ணீரை கழுவிச் சென்ற மழையில் முதன் முதலாய் நனைய பிடிக்க வில்லை..... ~ராஜன் விசுவா 10.4.16
 3. கெட்ட கனவுகள் வருவது வரைவில் நல்ல காரியமொன்று நிகழப்போவதாக சொல்லுவார்கள் இங்கு. சாவினைப் பற்றிய கதை என்பதால ஏனோ ரசிக்க மனம் வருதில்லை.. இயற்கை என்றாலும் துயர்தரும் நிகழ்வு என்பதால் அதிலுள்ள காரிய சம்பிரதாய நடைமுறைகளில் உள்ள சுவாரசயங்களை கூட கவனிக்க முடிவதில்லை. பெரும்பாலும் மரணவீடுகளில் சிறுவர்களை ஒதுக்கியே வைத்திருப்பதால் செத்த வீட்டு சடங்குகளை கற்பிதம் செய்வதற்கே சிலகாலமானது. இந்த சடங்குகளை செய்வதற்குள் பெரிய தர்க்கமே நடந்துவிடும் பெரியவர்களுக்குள். அதில் மாட்டிக்கொண்டு முழிப்பார் சடங்குகளை செய்ய வந்தவர். இறப்பின் நிகழ்வும் அதன் நிகழ்கண சூட்சமத்தின் மீதான அச்சமே வாழ்வை முன்னகர்த்தி செல்கிறது. அதில் சிலரது சுயஇறப்பு தான் அதிக தாக்கங்களையும் ஏமாற்றத்தையும் தருகிறது. அண்மையில் தூக்கு போட்டுகொண்ட என் பால்யகால உயிர்சிநேகிதனின் மரணம் தான் நினைவில வந்து வாட்டுகிறது இதை படித்ததும்... இப்போதெல்லாம் மரணம் மிக மலிவில் கிடைக்கிறது. மாதத்திற்கு தெரிந்த இருவர் யாரவது விபத்தில் சாகிறார்கள். இருக்கும்வரை வாழ்ந்துவிட்டு போவோம் மரணத்தை பற்றிய சிந்தனையின்றி. அதுவே மரணபயத்தை அகற்றும் வழி...
 4. Aa ஆகா மறந்தேவிட்டேன்.. விளக்கு மரங்களின் வெளிச்சத்தை இறந்த பின்னுன் ஈசல் ஒளிர்ப்பதாய் எழுதியுள்ளேன். நன்றி அண்ணா கருத்திற்கும் பச்சை புள்ளிக்கும்.
 5. மிக்க நன்றி அண்ணா... மழை எல்லா ஊரிலும் தானே பெய்யுது கவலையை விடுங்கள்.. மழையில் மழழையாய் மாறி மகிழ்ந்து இருங்கள். நன்றி சகோ வாழ்த்திற்கு உங்களது குறைகள் என்னை மேருகூட்டத்தானே, மகிழ்வே என்றும் நன்றி கு.சா மாமா... விகடகவி அண்ணா
 6. நன்றி சேயோன், சுவி, முனிவர்ஜீ நீங்கள் எழுதியது இன்னும் சிறப்பாக உள்ளது சுவி அண்ணா.. சாரலில் தானே நனைய முடியும்.. கவிதைக்கெல்லாம் பதில் போடுறீங்க தனி மடலனுப்பினால் ஒன்றும் அனுப்புவதில்லை.... உங்களதும், சர்வேயரின் நினைவுகளை கிளறி விட்டதே இந்த கவிதை அதன் இலக்கை அடைந்துவிட்டதாக மனம் உணருகிறது... எப்போதும் போல உங்களன்பிற்கு எனது வணக்கங்கள் புங்கை அண்ணா.. உங்கள் முன் நான் கத்துக்குட்டி தான் என்றைக்கும்..
 7. மழைக்காலம் துவங்கும் மேய்ச்சல் நிலங்களை புற்கள் போர்த்தியிருக்கும் எல்லாம் எரிந்த சாம்பலிலிருந்து மூங்கில் துளிர்க்கும் நொண்டி நாய் தங்க நிறகுட்டிகள் நான்கை ஈனும் நீண்ட குரலெடுத்து பாடும் ஒற்றை வால்க்குருவி கூடடைந்திருக்கும் வண்ணத்து பூச்சியொன்றின் நிறங்கள் குலைந்திருக்கும் தூறல் நின்றபின் வெளிக்கிடும் தவளைக்காக நீர்ப்பாம்பு கரையை பார்த்திருக்கும் குயவனின் கனவுகளுக்குள் தலைபிரட்டை நீந்த கற்றிருக்கும் சம்பா நாற்று நீரில் மிதந்திருக்கும் பெருங்கிழவன் உளம் விளைந்திருக்கும் செப்பனிடாத கூரைவழியோடும் மழையருவி சிலந்தியின் பின்னலில் சன்னல்களை வரைந்திருக்கும் விட்டில் பூச்சியின் சிறகில் விடிந்த பின்னும் ஒளிர்ந்தபடி விளக்கு மரங்கள் செம்படவனின் தோணிக்குள் தங்கமீன் புதுநீர்பரப்பை கண்டதாய் சிலாகித்திருக்கும மீண்டுமொரு மழைக்காலம் இப்படியான ஏதாவதொன்றை பிரசவிக்கும் புலரா இரவில் பெய்யும் பெருமழையில் நடந்தபடி நான் நனைந்து கொண்டிருப்பேன்... -ராஜன் விஷ்வா
 8. ராஜீவ் - கோமகன் அவரது சகாக்கள் - பூத கணங்கள் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள்
 9. நேற்றைய இரவு முழுதும் அழுதபடியிருந்தவர்களை கண்டு தாளாது போரிட சென்றவர்கள் வெற்றியோடு திரும்பினர் மதியம் நமது தோழனென நம்பியிருந்த பகல் பெரும்பூதமென மீண்டுமொரு காரிருளை வாரியிரைத்து போனது வடக்கே அமைதியாக இரவும், பகலென வேடமிட்ட நிசியும் பிணைந்த புணர்வில் பிறந்த குழந்தை பதிமூன்று ஆணா? பெண்ணா? என அறிவதில் கழிந்தது காலம் இடையில் கீரிடத்தை பறிக்க சிந்தனையில்லா கோமகனை கொன்று நம்மை பழிகடாவாக்கின பூதகணங்கள் விதியென நொந்தும் வெயிலென காய்ந்தும் புயலென வீழ்ந்திடாமலும் பூத்தன கார்த்திகை பூக்கள் சூல்கொண்ட மகவு தாயை பிரசவிக்கமுன் விழித்துக்கொண்ட இருளின் பிள்ளைகள் கைகுலுக்கிக் கொண்ட நாட்களில் சிவப்பு கழுத்துப்பட்டையுடைய கொலைகார மிருகத்தை போதிமரத்தடியில் வளர்த்தனர் அதன்பின்பொரு கோடை காலத்தில் நாம் தோற்றவராயிருந்தோம் அம்மணமாயிருந்தோம் பிணமாயிருந்தோம் இன்று சங்ககராவின் சதத்தை நீயும் கோலியின் சதத்தை நானும் கொண்டாடும் நிர்பந்தத்திலிருக்கிறோம்... நமது நாட்கள் நகர்வதேயில்லையென கவலையுறாதே "காந்தள் பூக்கள் கார்த்திகையில் மலர்வது மாவீரர்களுக்கு மரியாதை செய்யும் பொருட்டே" ~ ராஜன் விஷ்வா நன்றி முகடு இதழ், பாரிஸ்
 10. சுவடுகள் மீதெழும் பெருந்தெருக்கள். நீண்டுயர்ந்த பனைமரங்களில் கூடுகட்டும் பெயர் தெரியாப் பறவைகள் தரவை நிலங்களிலும் சிறுகுந்துச் சுவர்களிலும் நிறமறியாப் பூக்கள் நிழல்களிலும் நீள்வெளிகளிலும் பெருந்தூபிகளும் தாதுகோபுரங்களும், இனியென்ன ... அந்தோ இருள் மூடி எந்தைநிலம். இனியெப்போது யார் வருவீர் எமைத் தேடி... வலி மிகுந்த கவிதை அண்ணா
 11. வாழ்த்து தெரிவித்த புங்கை, சுவி, சசி வர்ணம், அஞ்சரன், கிருபன், வாத்தியார், நெர்கொலு தாசன், ஜீவன் சிவா அண்ணன்களுக்கு நன்றி... நிழலி அண்ணா ஒருமுறை சொன்னதிலிருந்து கவிதைக்கு பொழிப்புரை தருவதில்லை வாத்தியாரே... ஒரு மழைக்கவிதை எழுதின நேரம் பேய் மழை பெய்யுது, அடுத்த மழைக்கு வெளியிடலாம் என்டிருக்கேன்