Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

ராஜன் விஷ்வா

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  664
 • Joined

 • Last visited

 • Days Won

  18

Everything posted by ராஜன் விஷ்வா

 1. "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு"

 2. தமிழரசிக்குட்டி ஓவியமொன்று வரைந்திருந்தாள். அதில் பெருமழை பெய்துகொண்டிருந்தது சூரியன் படுபிரகாசமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது அரைநிலா ஒன்றும் இருந்தது நட்சத்திரங்களும் கூட தூவப்பட்டிருந்தன கொஞ்ச மேகங்களும் அதனூடாக சில பறவைகளும் பறந்திருந்தன. "எல்லாமே இருக்கிறது இரவா,பகலா கோடையா,மழையா" என்றேன். "வானம்" என்றாள்..! --- கு.விநாயகமூர்த்தி https://www.facebook.com/vinayaga.moorthy.5070?hc_location=ufi நமது படைப்பும் முயற்சியும் காத்திரமாக இருக்குமானால் நிற்சயம் பிரசுரம் ஆகும் என்றே நினைக்கிறேன் சேயோன் அண்ணா
 3. You have been kicked from the chatroom. விசகு அண்ணனனுக்கு வணக்கம் தான் வச்சேன் திண்ணையில..... தூக்கி அடிச்சுட்டான் உந்த சிஸ்டம் பயபுள்ள.... வாடா வாடா எங்க ஏரியா பக்கம் வாடா வச்சுக்குறேன் உன்ன
 4. தாயே, துயரங்கள் பல கடந்து உறவுகள் தொலைத்து உற்றவன் கரம் பற்றி தொலை தேசம் புகுந்தாய் தாயை தாய் தேசத்திற்கு தந்து தனிமையில் அழுதிருந்த தருணங்கள் ஆயிரமிருக்கும் தகிக்கும் வெயிலிலும் உருக்கும் பனியிலும் நடந்த உன் பாதங்கள் ஒய்வெடுக்கட்டும் காலம் களவாடிய நாட்களின் நினைவுகளை மீட்பதிலேயே நிகழ்காலம் நிறைந்து கொள்கிறது உனக்கு சிநேகிதமாயிருந்த குளிர்காலத்தின் வாடைகாற்று அது செல்லும் இடமெல்லாம் உன் நட்பின் பெருமையை சொல்லிச் செல்லும் உபாதைகள் உன்னை உலுக்கிய போதும் உயிரன்பு அது குறையவில்லை தாயன்பு கொண்ட பேரன்பே என்றும் உனை மறவேன் என் காலமதிலே உன் அன்பு என்றும் நிறைந்திருக்கும்
 5. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பிற்கினிய யாயினி அக்கா.... 04-04-15 அன்று பிறந்த நாள் கொண்டாடிய சுமே அக்காவிற்கும் எனது வாழ்த்துக்கள்
 6. வாழ்த்துக்கள் நெடுக்ஸ் அண்ணா. தொடர்ந்தும் பல புள்ளிகள் பெற வாழ்த்துக்கள்.
 7. நன்றி அண்ணா உங்களின் தொடர்ச்சியான ஊக்கத்திற்கு, நானும் மற்றவரை போன்று சாதாரணமாக தான் எழுதுகிறேன், என்னை நீங்கள் மிகைபடுத்தி பாராட்டுகிறீர் பச்சை மட்டும் குத்திவிட்டு செல்லாமல் முன்பு போல் கருத்துக்களை பதித்து மேலும் வளமாக்குங்கள் அண்ணா
 8. பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் தீர்ந்ததும் எரிந்திடுவேன் நதியின் சிறகுகள் வேண்டாம் வளைந்து கொடுக்க பழகிடுவேன் வாழ்க்கை சிறகுகள் வேண்டாம் வலியது எளியது கற்றிடுவேன் வண்ண சிறகுகள் வேண்டாம் வசந்தங்களில் மட்டும் வாழ்ந்திடுவேன் உங்கள் எண்ணச் சிறகுகள் இருந்தால் காற்று வெளிகளில் கலந்திடுவேன்.... அன்புடன் விஷ்வா...
 9. வாழ்த்துக்கள் விசகு அண்ணா... நல்ல உடல் நலமும் பெற்று தொடந்தும் பல ஆயிரம் பச்சைகள் பெற்றிடுக
 10. "அந்தி சாய்ந்தால் அகநானூறு பொழுது புலர்ந்தால் புறநானூறு அதுவன்றோ தமிழர் வாழ்வியல் "

 11. இதுக்கு தனியா ஒரு திரி திறந்து பல கட்ட விவாதத்துக்கு பிறகுதான் முடிவ சொல்ல போறன் பதில் சொன்ன வாலி அண்ணா சுமே அக்காவிற்கு நன்றி, சுமே அக்கா மன்னிசுகோங்க திரியில நீங்க தான் காரணகர்த்தா
 12. ஒருவர் கடைக்கு சென்று 200 ரூபாய்க்கு பொருள்களை வாங்கி 1000 ரூபாயை கடைக்கரரிடம் கொடுக்கிறார் , சில்லைறை இல்லை என்று 1000 ரூபாயை பக்கத்துக்கு கடையில் தந்து சில்லறை மாற்றி ரூபாய் 200 பொருளுக்கு எடுத்துக்கொண்டு மீதியை கொடுக்கிறார். சிறிது நேரத்தில் வந்த பக்கத்துக்கு கடைக்காரர் அந்த 1000 ரூபாய் கள்ள நோட்டு என்று சொல்லி வேறொரு 1000 ரூபாயை வாங்கி கொண்டு செல்கிறார், இப்போது கடைக்காரருக்கு எவ்வளவு நட்டம் ?
 13. வாத்தியாரே இப்பிடி சொல்லி கொடுத்தா பிள்ளையள் கதி? பிள்ளையை அடிக்கராதா இருந்தாலும் புருசனை அடிக்கராதா இருந்தாலும் முன்னுரிமை பெண்களுக்கே
 14. ஒரு வீட்டில் ஒன்பது பிள்ளைகள் உள்ளனர். ஒவ்வொருவரும் எதாவது ஒன்றை செய்து கொண்டிருக்கின்றனர் A தூங்குகிறார் B டி.வியில் கிரிக்கெட் பார்க்கிறார் C பாட்டு பாடுகிறார் D செஸ் விளையாடுகிறார் E குளிக்கிறார் F சாப்பிடுகிறார் H சைக்கிள் ஒட்டுகிறார் I விடியோகேம் விளையாடுகிறார் G என்ன செய்கிறார் அப்படியானால் ?
 15. போனில் யாழ் களம் பயன்படுத்தினால் இணைய பக்கத்தின் கீழ் பகுதியில் use desktop version / use mobile version என்று இருக்கும். use desktop version பயன்படுத்தினால் ஒரளவு கம்ப்யூட்டர் போன்று பயன்படுத்தலாம் துளசி அக்கா...
 16. எதுவரை உன் மொழி நீள்கிறதோ அதுவரை உன் நாடு... எதுவரை உன் மொழி வாழ்கிறதோ அதுவரை உன் இனம்......

 17. எதுவரை உன் மொழி நீள்கிறதோ அதுவரை உன் நாடு... எதுவரை உன் மொழி வாழ்கிறதோ அதுவரை உன் இனம்....!

 18. வாழ்க்கை பாதையில் இயைந்து ஒன்றிய எதுவித முற்சாய்வும் இல்லாத சமரசமான வாழ்வினை வாழ்தலே வாழ்வின் சாரம்சம்..

 19. இன்றைய உணவிற்க்கான தேடலில் நாளைய பசி இல்லாத செல்வந்தன் - ஏழை நாளைய உணவிற்கான தேடலில் இன்றைய பசியை இழந்த ஏழை - செல்வந்தன்

 20. திரும்பி வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏதும் இல்லை, காத்திருப்பதெல்லாம் மழையற்றுப் போன நிலத்தின் ஏன் என்ற கேள்வி மட்டுமே..... :|

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.