யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

அஞ்சரன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Content Count

    2,597
  • Joined

  • Last visited

  • Days Won

    17

Posts posted by அஞ்சரன்


  1. மாவைக்கு  காஸ்  அடிச்சம்  அப்ப  வாழ்த்து சொல்லி  பெருமை  பட்டம்  இன்று  ரீ ரீ சி உறுப்பினருக்கு  அதே  சின்ன  பாம்பு  கொத்தி  இருக்கு  அதுக்கும்  நாம் வாழ்த்து  சொல்லி  பொருமை  படலாம்  வேறு  ஏதாவது  சொன்னால்  துரோகி  என்பாங்க .

     

    அடுத்த  தலைவர்  சின்ன மாப்பு  நோ  பாம்பு  வாழ்க .


  2. சும்மா  கருத்து  எழுதினாலே  ஆள் அனுப்பி  வெருட்டுரம்  போனை  போட்டு  என்ன  கேமா  என  கேட்கிறம்  இதில  வியாபார போட்டி  அதுவும்  பொருளாதார பிரச்சினை  என்றால்  சும்மா  விட  முடியுமா  சொல்லுங்க அதுதான் போட்டுட்டம் .

    நாங்களே  எல்லாம்  என  வாழ்த்து  சிலருக்கு பழகிவிட்டது அதை  மீறி  இன்னொன்று  வரும்  போது  அதை  ஏற்க மனசு  தடுக்கிறது .


  3. *கவர்ந்த வாசகங்கள்*

    *பேசி தீருங்கள்.
    பேசியே வளர்க்காதீர்கள்.

    *உரியவர்களிடம் சொல்லுங்கள்.
    ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.

    *நடப்பதைப் பாருங்கள்.
    நடந்ததைக் கிளறாதீர்கள்.

    *உறுதி காட்டுங்கள்.
    பிடிவாதம் காட்டாதீர்கள்.

    *விவரங்கள் சொல்லுங்கள்.
    வீண்வார்த்தை சொல்லாதீர்கள்.

    *தீர்வை விரும்புங்கள்.
    தர்க்கம் விரும்பாதீர்கள்.

    *விவாதம் செய்யுங்கள். 
    விவகாரம் செய்யாதீர்கள்.

    *விளக்கம் பெறுங்கள்.
    விரோதம் பெறாதீர்கள்.

    *பரிசீலனை செய்யுங்கள்.
    பணிந்து போகாதீர்கள்.

    *சங்கடமாய் இருந்தாலும்
    சத்தியமே பேசுங்கள்.

    *செல்வாக்கு இருந்தாலும்
    சரியானதைச் செய்யுங்கள்.

    *எதிர் தரப்பும் பேசட்டும்.
    என்னவென்று கேளுங்கள்.
    எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள்.

    *நேரம் வீணாகாமல்
    விரைவாக முடியுங்கள்.

    *தாமதமாய் முடியுமென்றால்,
    வேறு வேலை பாருங்கள்.

    *யாரோடும் பகையில்லை என்பது போல் வாழுங்கள்.


  4. இவ்வாறான மரியாதை  குறைந்து  விட்டது   அல்லது  தனக்கு அவமானம்  ஆகி  விட்டது  என அஞ்சி சிலர்  அவசர  முடிவுகள்  எடுத்தது உண்டு .

    யாழ்  மாவட்ட  தளபதி செல்வராஜ்  அண்ணையின் பஜிரோ வாகனத்தை  ஒரு இளநிலை  தளபதி  வேகாம  ஓடி  தடுமாறி  பனையுடன்  மோதி  சிதைந்து  போனது  ,ஆள்  காயம்  இல்லை  ஏதே தப்பிட்டார்  வாகனத்தை  பார்த்த  தளபதி  கோவத்தில்  இறங்கடா  பங்கரில  என சொன்னதுக்கு  உள்ளே  இறங்கி  குப்பிய  கடித்து  விட்டார் அந்த  இளநிலை  தளபதி ...

    இறுதியில்  போராளி நிலை  கூட  அறிவிக்காது  ஒரு பொதுமகனாக  அவரின்  உடல் வீட்டுக்கு  கொடுக்கபட்டது  இனிமேல்  இவ்வாறு  எவரும்  ஈடுபட  கூடாது  என்னும் சுற்றறிக்கையுடன் .

    இப்படி  பார்க்க  போனால்  தளபதி  ஜெயம் போன்றவர்கள்  உறுதியின் உச்சம்  எனலாம் ....தொடருங்கள்  உங்கள்   அனுபவங்களை பகலவன் .

     


  5. ஒரு எலியும் யானையும் கல்யாணம் பண்ணிகிச்சு.
    அடுத்த நாள் யானை செத்துப் போச்சு.
    எலி என்ன சொல்லி அழுதிருக்கும்???
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    அடப் பாவி.. 
    ஒரே ஒரு நாள் வாழ்ந்துட்டு.. 
    ஆயுசுக்கும் என்ன குழி தோண்ட வச்சிட்டியே..
    வாட்சப்பதிவு :p

    • Like 2

  6. 23 hours ago, குமாரசாமி said:

    vadivelu happycrying GIF - vadivelu happycrying tamil GIFs  உதை கேட்டதோடை எனக்கு ஆனந்தகண்ணீர் ஆறாய் ஓடுது..

    நீங்க  சொன்னதை  தானே  நானு  எழுதின  பிறகு  எதுக்கு  பீல்  பண்ணிட்டு .


  7. 6 hours ago, குமாரசாமி said:

    இன்னும்.....இன்னும் மேலை எதிர் பார்க்கிறம்.....உண்மையிலையே நீங்க ஒரு சிற்பி மாதிரி.. free laughing emoticon

    ஒரு  தலைவரை  காப்பாற்ற  முடியவில்லை  இப்ப  இருக்கும்  தலிவரையும்  கொடுத்துப்போட்டு  தமிழின  தலைவருக்கு  நாங்க  எங்க  போறது  என்ற   பயம்  தான்  சாமி .


  8. சீமான்  சிறப்பு  படையணி  விரைந்து போகுமே அங்கின  இன்னும்  இல்லையா ....

    உண்டியல்கொண்டு  போக  அங்க  என்ன  திருவிழாவா  நடக்கு  கலவரம்  அண்ணே  .


  9. தொண்ணூறுகளுக்கு முன் தீபாவளி,வருடம்,பொங்கல் என்றால் மட்டும் புது துணிகள் எடுப்பதும், தைப்பதும் என ஒரே ஆரவாரமாக இருக்கும் ஊரும்,குடும்பங்களும் உறவுகளும் ....

    துணி எடுத்து ஜீன்ஸ் தைப்பதற்கு சேட் தைப்பதற்கு என்றால் யாழ்ப்பாணம் வரணும் ஊரில இருந்து,ஆஹா பஸ்சில போகபோறம் என்பது கூட ஒரு பெரும் சந்தோஷம் அம்மா கடை சந்தியில் இருந்து,இலங்கை போக்குவரத்து சபை (சிடீப்பி) பஸ்ஸில ஏறினாள் வேலணை ஊடாக வந்து மண்குப்பான் குணம் அண்ணையின் கடையில் நின்று வடை சாப்பிட்டு, மண்டைதீவு என யாழ் பஸ் தரிப்பிடத்தை அடையும்...

    அப்பொழுதுகள் கூட பஸ் கரையில் கண்ணாடிப்பக்கம் இருந்து ஓடும் மின்கம்பம் எத்தனை,மரம் எத்தனை என எண்ணிக்கொண்டு வரும் போது,வேலணை புங்குடுதீவு பாலத்தில் பயணிக்கும் தருணம் இனிமை,வளைத்து வளைத்து கோலம் போட்ட களங்கண்டி ,மரக்குற்றிகளில் சிலையாக குந்தியிருந்து தூண்டில் போடும் மீனவர்,கடல் காற்று கொண்டுவரும் பாசி மணம்,களங்கண்டி தடிகள் மேலாக எறும்பு ஊருவது போல அமர்த்து இருக்கும் நீர் காகம் ,மீனை நேரம்பார்த்து குறியாக பிடிக்கும் பறவைகளின் வட்டமிடல் என அப்படியே ஒரு இயற்கை அழகை இப்பொழுது சிலாகித்து உணர முடிகிறது ,அன்நேரங்கள் அவைகள் எல்லாம் வெறும் விடுப்பும் வேடிக்கையும் மட்டுமே.

    யாழில் வந்து இறங்கினால் நேரக்க செல்வது இந்த பாரிஸ் ரெக்ஸ் கடைக்கு தான்,அங்க போனால் மாமா நிப்பார் ,துணிகளை எடுத்து கத்தரிக்கோலால் இந்த முனையில் இருந்து வெட்டி கொழுவி ஒரு இழுவையில் அடுத்த பக்கம் நேராக போகும், சின்ன வயது என்பதால் பக்கத்தில் நின்று பார்ப்பது எப்படி வெட்டுறார்கள் இப்படி என கைக்குக்குள் எதாவது இருக்குமோ ,அவர்கள் போனவுடன் உடைத்து தரும் யானை சோடாவும் அப்ப அமிர்தம் , வாடா என கூட்டி போய் ஜிம்மா பள்ளிவாசல் லேனுக்குள் இருக்கும் முஸ்லீம் தையல் கடையொன்றில் அளவெடுத்து தைக்க கொடுத்து விட்டு வரும் போது,மலாயன் கடையில் வடையும் சம்பலும் கட்டிக்கொண்டு வந்து அம்மா பின்னேரம் உடுப்பையும்,பொருள்களும் வாங்கி வருவா நீங்க போங்க வீட்ட என கூட்டிக்கொண்டு வந்து.
    அண்ணே இவங்களை அம்மா கடை சந்தியில் இறக்கி விடுங்க என ரைவரிடம் சொல்லி ஏற்றிவிட்டு டிக்கெட் எடுத்து தந்திட்டு போவார் மாமா.

    அதிலும் யாழ்ப்பாணம் வந்தால் மட்டுமே இயக்க அண்ணைமாரை ஆயுதத்துடன் அதிகமாக பார்க்கலாம்,அவர்கள் பிக்கப் வாகனங்களில் போவதும்,சைக்கிளில் போவதுமாக இயக்க பெடியள் போயினம் என ஒருவித உணர்வு தோன்றி மறையும்,ஏனெனில் அவ்வேளைகள் அவர்கள் எங்கள் கண்களுக்கு ஹிரோக்கள்.

    இந்த சந்தோஷங்கள் எல்லாம் தொண்ணூறுகளுக்கு பின்னர் இல்லாமல் போனதும்,உறவுகள் குடும்பங்கள் சிதறுண்டு பந்த பாசங்கள் அற்றுப்போனதுமாக போரும் அது கொடுத்த வாழ்வும் ,இன்று ஆளாளுக்கு ஒரு பக்கங்களில் ,ஒரு நாட்டில் இருந்து கொண்டு பேஸ்புக்கில் சுகம் விசாரிக்கும் நிலையில் வந்து நிக்கிறது கூட்டாக ஒட்டி இருந்து உறவாடிய உறவுகள் நிலை.

    14256730_10205770454300406_718317924_n.jpg?oh=05f1a03766ac7c7944ab10df7ce0d737&oe=57D31A38

     

    • Like 10

  10. புலிப்பார்வை  என்னும்  அழகிய  ஈழ  சினிமா  படத்தை  கொடுத்தவர்  கைதாகி  உள்ளார்  அவருக்கு  ஆதரவாக  சீமான்  நாம்  தமிழர்   கட்சி  இன்னும்  போராடாமல்  இருப்பது  மனவருத்தம்  அளிக்கிறது .


  11. On 24/08/2016 at 9:54 PM, Athavan CH said:

     

    இது  ஈழத்தின்  தலைசிறந்த கவிஞர்  நெற்கொலுதாசன்  அவர்களின்  பேஸ்புக்  பதிவு  ...தமிழ்நதியின்  எழுத்தே  எழுத்தா  என  கேட்கும்  அளவுக்கு  வளர்த்து  உள்ளார்  என்பது  மகிழ்ச்சி .


  12. லண்டனில் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் மனைவியுடன் அதிகமாக பேசுவது மனிதனுக்கு இதயத்திற்கு நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மனைவியுடன் பேசுவதால் 80 சதவீதம் பேருக்கு டென்ஷன் குறைகிறது என்றும் 90 சதவீதம் மாரடைப்பு குறைகிறது என்றும், அதனால் ஆயுட்காலம் அதிகரிக்கிறதென்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஆய்வில் 'யாருடைய மனைவியுடன்' என்று தெளிவு படுத்தப்படவில்லை.


  13. ஒரு பெண் தன தந்தையுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவளைக் காண அவளது தோழன் வருகிறான்.

    உடனே அந்த பெண் அவனிடம்," நீ பாமுக் எழுதிய,"அப்பா வீட்டில் இருக்கிறார்" என்ற ஆங்கில நாவலை வாங்க வந்தியா?" என்று கேட்கிறாள்.

    உடனே அவன் அந்த பெண்ணிடம்,"இல்லை நான் ஹும்ம்ஸ் எழுதிய "நான் எங்கே காத்திருப்பது உனக்காக ? என்ற ஆங்கில நாவலை வாங்க வந்தேன்" என்கிறான்.

    உடனே அந்த பெண்,"என்னிடம் அந்த புத்தகம் இல்லை, எனவே நீ என்னிடம் உள்ள.. கிரிஷ் எழுதிய "மாமரத்துக்கடியில் காத்திரு" என்ற புத்தகத்தை பெற்று கொள்" என்கிறாள்.

    உடனே அவன் அந்த பெண்ணிடம், நீ நாளை பள்ளிக்கு வரும் போது... "ஐந்து நிமிடத்தில் உன்னை அழைக்கிறேன்'' என்ற ரிடெய்ல் மேனேஜ்மென்ட் புத்தகத்தை கொண்டு வா என்கிறான்.

    உடனே அந்த பெண் அவனிடம், பகத் எழுதிய "நான் உன் நம்பிக்கையை காப்பாற்றுவேன்" என்ற புத்தகத்தையும் உனக்கு கொண்டு வருகிறேன் என்கிறாள்.

    உடனே அந்த பெண்ணின் தந்தை அந்த பெண்ணிடம், "இவன் இவ்வளவு புத்தகத்தையும் படிப்பானா?" என்று கேட்கிறார்.

    உடனே அந்த பெண்," ஆமாம் அப்பா, அவன் மிகவும் அறிவும், புத்தியும் மிகுந்தவன்" என்று கூறுகிறாள்.

    உடனே பெண்ணின் தந்தை கூறுகிறார்..," நீ அவனுக்கு ராபின் ஷர்மா எழுதிய "வயதானவர்கள் முட்டாள்கள் இல்லை" என்ற புத்தகத்தையும் மறக்காமல் குடு என்கிறார்.

    நீதி : அடேய்.. நீ LKG படிக்கிற ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர் டா

    • Like 1

  14. 10 minutes ago, ரதி said:

    இணைப்பிற்கு நன்றி அஞ்சரன்...இது[அப்பால் ஒரு நிலம்] புலனாய்வுப் பொறுப்பாளார் வீரமணியின் கதையா?

    சாள்ஸ் அன்ரனி  சிறப்பு  தளபதி  வீரமணியாக  இருக்கலாம் ரோமியோ பாத்திரம் பிரிகேடியர் பால்ராஜ் ஆக  இருக்காலம்  ஆசிரியருக்கு  வெளிச்சம் .


  15. "அப்பால் ஒரு  நிலம்"  நாவலை வாசிக்க  தொடங்கும்  போது வழமையான  போர்  பற்றிய  வலியை  பேசப்போகிறது என்னும்  முன் சிந்தனையுடன் தான் தொடங்கியது  வாசிப்பு ,ஏனெனில் குணா கவியழகன் அவர்களின் முதல்  நாவல்கள் தந்து  போன வலியை இது  கொஞ்சம் கூடுதால  கொடுக்கலாம்  என்னும்  எண்ணமும்  இருந்தது, காரணம் அந்த  போரோடு வாழ்த்த  ஒவ்வெரு ஜீவனும்  அறியும்  அதன்  உக்கிரம் அதிலும்  அதில்  தன்னை  செலுத்தி நீந்திய இளையவர்களுக்கு அது  இப்பொழுது  பெரு  வலி .

    apaal

    வீரன் பற்றி ஆசிரியர்  சொல்ல  தொடங்கும் போது, எம்  அருகில் இருந்த ஒரு  வீரன் நினைவில் வருகிறான் ,அவன் தான் இளங்கீரன் இவன் பூநகரி மண்ணில் பிறந்த ஒருவன் அழகிய வெண்மை நிறமான  அவனுது தேகம், ஒரு பெண்ணுக்குரிய அவனின்வசீகர முகம்  எவரையும் இவன் பெடியன என  கேள்வியை  கேட்க தோன்றும் ,அடிப்படை பயிற்சி முடிந்து ,வேவு பயிற்சிக்கு வந்து நிக்கிறான் மாங்குளம் அண்டிய பனிக்கம்குளத்தில், இரவு  பகலாக  தொடர்  பயிற்ச்சி ஜெயசுக்குறு படைகளுக்கு  எதிரா வேவு பார்பதற்கு மிக பெரும்  தயார்  படுத்தல், எவர்  எப்ப  உறங்குகிறார்கள்  என்று  கூட  தெரியாத பயிற்ச்சி ஆக  அது  நீண்டு  போகுறது ,அதன்  களைப்பு அவனை  அடிக்கடி ஓடும் போது  கூட  நித்திரைக்கு  கொண்டு  சென்றுவிடும் ,ஒரு  இடத்தில  இருந்து விட்டால் அப்படியே  உறங்கி  விடுவான் ஒரே  கேலியாக  அவனை போட்டு  கிண்டி  எடுப்பதுதான்  சக போராளிகள் வேலையாக இருக்கும் ,மச்சான்  இவனை  நம்பி கம்பியை  கடக்க   முடியாது இவன்  கம்பி  நீட்டிவிடுவான்  அப்புறம் ஆமி  எங்களுக்கு கம்பி செருகுவான் என அவனை நக்கல் பண்ணாத  போராளிகள் இல்லை  எனலாம் .

     

    மூன்று பட்டு கொமாண்டோ கம்பிகளை  போட்டு ரைபிள் கோல்சாருடன் எழும்பி பாய்ய சொன்னால்  ஓடிவந்த  வேகத்தில் இடறி  அதன்  மேல் விழுந்து கம்பிகள் அவன் கைகளை உடலை கீறி இரத்தம் வடியும், ஆனாலும் மீண்டும்  பின்னாடி  வந்து  முயற்ச்சி  செய்வான் பார்வைக்கு  பாவமாக இருக்கும், ஆனால் தான்  கொள்கையில் சரியாக  இருப்பான் அதை  கடக்காமல்  ஒருநாளும்  வரவும் மாட்டான் ,பயிற்ச்சி மாஸ்டர்  சொல்லுவார் பருவாயில்லை நாளைக்கு முயற்ச்சி  செய்  என  இல்லை என்னால்  முடியும் என்பான்,அவனுக்கு  பிரச்சினை இந்த நித்திரை  தான், ஒரு நிமிடம் மேலாக  ஒரு  இடத்தில நின்றால் அப்படியே அயர்த்து போவான் அவனுக்கு கொடுக்காத தண்டனை இல்லை,ஒரு முறை வெள்ளி பற்றி படிப்புக்கும்  போது உறங்கி விட்டான் அதற்க்க மாஸ்டர் குண்டை  கழட்டி கையில் கொடுத்து விட்டு  சொன்னார் ,உன்கையில்  இருப்பது எட்டுபேர்  உயிர் கண்ணை  மூடினால்  கையை  விடுவ  விட்டால்  வெடிக்கும் நீ தான்  முடிவை  எடுக்கணும் என,தலையை  ஆட்டியவன் அப்படியே  உறங்கி போனான் வெள்ளி  பற்றி  படிப்பை  எவர் கவனித்தது இவனிடம்  குண்டு இருக்க, அது  மாஸ்டருக்கும் தெரியும் ,ஆனால்  அவர்  கொடுத்த குண்டு வெடிக்காது என  அவருக்கு மட்டும் தான் தெரியும் ,அவன் மெதுவாக உறங்கி போக குண்டு நழுவ போகுது என  ஆளையாள் பாய, மாஸ்டர் சிரித்த படி எழும்படா எழுப்பி  நில் நீ  திருந்த உன்னை  நம்பினால்  இப்ப  எல்லோரும்  வெள்ளி  பார்க்க வேண்டி  வந்திருக்கும் ,என  குண்டை கையில் எடுத்தார் அப்ப தான் தெரியும் அது  வெடிக்காது என .

     

    இவ்வாறு இருந்த அந்த போராளி இளங்கீரன் ஜெயசுக்குறு ஆமியுடன்  கிளிக்கோடு விளையாடிய  வரலாறு இருக்கிறது ,அவனிடம் ஒரு  அசாத்திய துணிவு  இருக்கிறது சரியான கணிப்பு  கூடவே இருக்கும் எப்பொழுதும் ,ஒரு முறை மாங்குளம் சின்ன கிணத்தடி கடந்து உள்ள போய் வரும் போது நால்வர் இவனும்  அதில்  ஒருவன் கண்டி றோட்டை  கடந்து எங்கள் நிலைகளுக்கு வர நடக்க தொடங்க ஆமி  கண்டுட்டு  அடிக்க வெளிக்கிட ,ஓடுங்கடா  என  சுயாத் கட்டளை போட ,ஓடி  வழமையான இடத்துக்கு வாங்கோ,  பிரிச்சு போ, எல்லாம்  பிரிச்சு போ,  என  கத்தியபடி ஓவரு  திக்காக நால்வரும் பிரிந்து போக ஓடி மறைந்து பின்னேரம்  ஒரு  செக்கள் பொழுதில் கல்லிருப்பு  றோட்டில் ஒரு  இடத்தில  நின்றுதான்  போனது, ஆகவே அங்க  போகணும்.

    எல்லோரும் வந்தாச்சு  இவனை காணவில்லை இப்ப இவன்  இல்லாமல்  போக முடியாது சண்டை நடந்த மாதிரி தெரியவும் இல்லை துப்பாக்கி சூட்டு   சத்தமும் இல்லை எங்க போனவன் ஆமி  பிடிந்து இருப்பன்,அல்லது குப்பி கடிச்சானா ,இடத்தை விட்டுடானா என பல யோசனை  அனைவருக்கும் ,சரி ஆளை ஒருக்கா பார்ப்பம் பொறுங்க கொஞ்சம் இருளட்டும் என காத்திருந்து தேடியும் ஆள் இல்லை ,இப்ப  போனால் பதில் சொல் வேணும் இன்னும் ஒருநாள் நிண்டு  தேடுவம் என சுயாத் சொல்ல சாப்படு பிரச்சினை வந்தால் போவம் பக்கத்தில  தானே நிக்கிறம் என சொல்லிபோட்டு இரவில் குருவி சத்தம் ,மெல்லிய விசில் சத்தமாக அவனிடம்  இருந்து  ஏதாவது சிக்னல் வருகிறாதா என தேடல் தொடங்குது .

     

    அடுத்தநாளும் ஆள் கிடைக்கவில்லை இப்ப தளபதிக்கு என்ன  பதில் சொல்வது என்ன  நடந்தது  என  சொல்வது, எத்தினை கேள்விகள் எழும் ,என்னும்  குழப்பம் லீடருக்கு, சரி எதுக்கு தொடர்பை  எடுத்து சொல்லுவம்  வேற வழியில்லையே, என்னும் நோக்கில் வேக்கியை ஒன் செய்தார் சுயாத் ஓவர் என முடிக்க முந்திக்கொண்டு டயஸ் சொன்னார்,  ஆள் வந்திட்டு நீங்க வாங்க  என அட கருமம் தப்பிச்சம்  சாமி என ஒரு  சந்தோஷம் ,இரவு நடந்து விடியகாலை அறிவிச்சு எங்க  ஆக்களின்  இடம்  வந்து முதல் வேலையா இவனை ஓடி  போய்  என்ன  நடந்தது  என கேட்க  போனால் அவன் மிக பெறுமதியான  தகவலுடன் வந்திருந்தான் .

    செக்கள் பொழுதில் ஆமி கலைக்க இவன் கொஞ்ச தூரம்  ஓடியவன் விழுந்து படுத்து விட்டான் ஒரு பற்றையில், இவனை  கடந்து ஆமி போயிட்டு புலி ஓடிட்டு  என கிளியர்  பண்ணிபோட்டு  போக, பிறகு எழும்பி  இவன் நடக்க தொடங்கி  இருக்கிறான், அப்பொழுது கல்லிருப்பு ரோட்டால் ஆமி ஆட்லறிகளை கட்டியபடி  உழவு இயத்திரம் போவதை  கவனித்தவன் றோட்டை  கடக்காமல்  பக்கவாடாக  நடந்து எங்க போகுது  என  தொடர்த்து போய் மூன்று முறிப்பு சந்தியில் இருந்து கோண வாக்கில் ஒரு  ஆட்லறி நிலை புதிதாக  அமைக்கபட்டு  இருப்பதையும் ,அதற்கு செல் அடிப்பது என்றால் மட்டும் பின்னணியில் இருந்து கொண்டுவந்து அடித்து விட்டு மீண்டும் ஆட்லறி கல்லிருப்பு நோக்கி போவதாகவும் இருநாள் பக்கத்தில் இருந்து அவதானித்து   விட்டு தான்  வெள்ளி பார்த்து வந்து சேர்த்த கதை சொன்னான் .

    ஆச்சரியம் வெள்ளி படிப்பிக்க தூங்கியவன் இவனை நம்பி உள்ள கொண்டுபோக முடியாது என சொன்னவர்களுக்கு தான் செயல் மூலம் ஒரு பாடம் கொடுத்தான், வீரனை போல அவனும் நிலைமையில் தன்னை தயார் செய்து சாகாசம் புரிந்து வந்தான் ,சுயாத் நக்கலாக சொல்லும் இவன் ஓடி இருப்பான் ஐந்து பட்டு கம்பி வேலி  குறுக்க வந்திருக்கும் பாயிற பஞ்சில அதிலையே படுத்திட்டான் போல என ,ஓம் அண்ணை  அதுவும் உண்மைதான் நான் புகுந்து தான் வந்தான்  என மறுத்தான் போட்டான் இளங்கீரன் அவன் பின்னாளில் தனித்து வேவு பார்த்து செம்பியன் வேவு அணிக்கு போகும் அளவு வளர்த்து இருந்தான் .

    மணியின் காதலும் ,வீரனின் பாசமும் ,அருளினியின் காதலும் ,றோமியோவின் வேட்கையும் இறுதியில் வென்று இருக்க வேணும் எப்படி கனவாக போனது என்பதுதான் ரண வலி .

    "அப்பால் ஒரு  நிலம்" இப்படியான ஒரு சாகாச வீரனை பேசி போகிறது ,தாங்கள் கொண்ட இலட்சியத்தின் பற்றை இறுதிவரை ஏந்தி, உறவுகள் பிரிந்து ,வசந்த காலங்களை தொலைத்து ,சக பெண் போராளிகளை காணும் போது எழும் காதல் பார்வைகள் புறம் தள்ளி, போர் என்னும் அரக்கனை வெல்லும் ஒரு நோக்கு மட்டும் கொண்டு ஒரு  போராளியாக பயணிப்பது  என்பது  ஒருவித தவநிலை தான் ,ஒவ்வெரு பெரு வெற்றியின் பின்னும் ஒரு சாதாரண வீரன் பெரு வீரனாக பேழையில் உறங்கி போன காலங்களை இப்பொழுது மனத்திரையில் கொண்டு வருகையில், இதயத்தின் ஒரு மூலையில் நெருச்சி முள்ளாக குற்றி போகுறது குற்ற உணர்வும் அவர்களால் வாழ்கிறோம் என்னும் இந்த பிச்சை வாழ்க்கையும் .

    ஆனால் என்ன இந்த வீரர்கள் வாழ்வு எங்களில் இருந்து "அப்பால் ஒரு நிலமாக" வாழ்த்துகொண்டே இருக்கும் அது அவர்களுக்கான நிலம் .

    • Like 6

  16. முதலாளித்துவத்திற்கு முன்னைய சமூகச் சிந்தனை (இனக்குழும- நிலப்பிரபுத்துவ ) வாழ்வின் வெளிப்பாடுகள் தொடர்ச்சியாக முதலாளித்துவ சமூகத்திலும் தொடர்கின்றது. இங்கு அந்த சிந்தனை வடிவம் ( Subjective ) அகவுணர்சு சார்ந்த போலியுணர்வுக்குரியதாக இருக்கின்றது.
    சமூகத்தின் சிந்தனை வடிவங்கள் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றது என்ற புரிதல் என்பது அவசியமானதாகும். நாம் சமூகத்தின் முன் புத்திஜீவிகளாக பிரகடனப்படுத்துகின்ற போது அடிப்படையில் சமூகவிஞ்ஞானப் பார்வையில் சமூகத்தினை பார்க்க முயற்சிக்கின்றோமா என்ற கேள்வி அடிப்படையாக இருக்கின்றது.

    இங்கு சிந்தனை வடிவம் என்பது தனிமனிதர்கள் தீர்மானித்துக் கொள்வதில்லை. அது வாழ்நிலையே அதனை தீர்மானிக்கின்றது. அதேபோல அகமுரண்பாடுகள் சமூகத்தினை தீர்மானிப்பதில்லை. மாறாக புறநிலை (objecitve) என்பது பொருளாதார உறவுடன் கூடித்தீர்மானிக்கின்றது. இது இன்றையப் பொழுதில் மக்கள் பெரும்திரளின் கூட்டு வடிவத்தில் இருந்து உருவாகின்றது. இது இனக்குழுமத்தில் இருந்தும் அது கடந்து நிலமானிய சிந்தனையில் இருந்தும் மாறுபட்டு முதலாளித்துவ சிந்தனையில் நுழைகின்றது.
    இங்கு இனக்குழும- நிலமானிய சிந்தனை முறைகளின் எச்சங்கள் என்பது சமூகத்தின் தீங்கான பொதுவுண்மையாக அரசியலுக்கு பயன்படுத்தப்படுகின்றது.
    இனக்குழும- நிலமானிய முறைக்கு உட்பட்ட (taboo -socially stigmatized) மனிதர்களை பிரிக்கின்றது, அடக்குகின்றது, வளர்ச்சியை தடுக்கின்றது. இவற்றை உடைத்துக் கொண்டு முதலாளித்துவ கட்டத்திற்கு தேசிய இயக்கங்கள் வளருகின்ற காலமாகும்.
    ”உலக முழுவதிலும் முதலாளித்துவமானது நிலப்பிரபுத்துவத்தின் மீது இறுதி வெற்றி கொள்ளும் காலகட்டம் தேசிய இயக்கங்களுடன் இணைந்துள்ளது. சரக்கு உற்பத்தியின் முழுவெற்றிக்கு உள்நாட்டு மார்க்கெட்டைப் பூர்சுவாக்கள் கைப்பற்ற வேண்டியது அவசியம்; ஒரே மொழி பேசும் மக்களைக்கொண்ட அரசாங்க ரீதியில் ஐக்கியப்படுத்தப் பட்ட நிலப்பரப்புகள் அதற்கு வேண்டும். அம்மொழியின் வளர்ச்சிக்கும் அதன் இலக்கியம் உருப்பெற்றுத் திகழ்வதற்கும் முட்டுக் கட்டையாக உள்ள தடைகள் அகற்றப்பட்ட வேண்டும். இங்கேதான் தேசிய இயக்கங்களின் பொருளியல் அடித்தளம் இருக்கிறது. மனித உறவுகளுக்கு மிகமிக முக்கியமான சாதனம் மொழி. நவீன முதலாளித்துவத்துக்கு ஏற்ற அளவில் உண்மையிலேயே சுதந்திரமான, விரிவான வாணிகத்துக்கும், மக்கள் சுதந்திரமாகவும் விரிவாகவும் பல்வேறு வர்க்கங்களாக அமைவதற்கும், இறுதியாக மார்க்கெட்டுக்கும் ஒவ்வொரு சிறிய, பெரிய உடமையாளனுக்கும், விற்போருக்கும் வாங்குவோருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்து வதற்கும் மிக மிக முக்கியமானத் தேவையான சூழ்நிலைகள், மொழியின் ஐக்கியமும் தடையற்ற வளர;ச்சியும்தான்.” (லெனின்-தேசிய இயக்கங்களின் சுயநிர்ணய உரிமை)
    இங்கு வர்க்கங்களின் வளர்ச்சிப் போக்கை வெட்டரிவாள், வேல்கம்புகொண்டு எதிர்க் கொண்ட வாழ்வியல் சிந்தனையான போட்டி பொறாமை, வஞ்சகம், பில்லி, சூனியம் என்று சுருக்கிக் கொள்ள முடியாது. 
    நாம் எம்மை புத்திஜீவிகள் என்கின்ற போது நவீன காலத்திற்குரிய சிந்தனை வளர்ச்சியை உள்வாங்கிக் கொள்ளப்பட வேண்டும். பொருளாதார அமைப்பின் வளர்ச்சிக்கேற்ப விடயங்களை விளங்கிக் கொள்ள புதிய சொற்கள், வரையறைகள் உருவாகிக் கொண்டே வருகின்றது.

    யாழ்மையவாதத்திற்கு வாதம் (thesis) வைக்கின்ற போது அதற்கு எதிரான வாதம் முன்வைக்கப்பட வேண்டும். மாற்றாக பழைய உற்பத்தி உறவில் தொடர்ந்து வரும் சிந்தனை வடிவத்தை அப்படியே எவ்வித மறுவாதமும் செய்யாமல் ஒப்பிக்கின்ற போது சிந்தனை வடிவத்தினை வளர்க்க மறுக்கின்றது.
    இங்கு பாகுபாடு சமூகத்தில் இல்லை என்று மறுப்பது என்பது ஒன்று பாகுபாடு ஏன் அவ்வாறு இருக்கின்றது, அதன் இயக்கப்பாடு எவ்வாறு இருக்கின்றது என்று ஆராய்வது வேறாகும்.

    எனவே ஆண்டாண்டு காலமாக விளங்கப்படும் காரண காரியங்களுக்கு அப்பால் சமூக விஞ்ஞானப் பார்வையின் ஊடாக தெளிவுகளை முன்வைக்கப்பட வேண்டும்.
    பழைய உற்பத்தி முறையில் தொடரும் சாதியம், பிரதேசவாதம், தீவிரமதவாதம் என்பன பழைய உற்பத்தி உறவை தொடர்ச்சியாக வைத்திருப்பதாக இருக்கின்றது.
    இங்கு பொருளாதார அமைப்பின் மீது கட்டப்பட்ட சிந்தனை வடிவம் தீர்மானிக்கும் விடயங்களை வர்க்க விடுதலைக்கு எதிராக நிறுத்தப்படுவதாகும்.

    அதாவது சாதியம், பிரதேசவாதம், தீவிர மதவாதம் என்பது மக்களை அடக்கியாள்கின்றது. இந்தச் சிந்தனையின் அணுகுமுறையைக் பின்பற்றி ஒடுக்கும் வர்க்கம் இவற்றை ஆயுதமாக உபயோகித்துக் கொண்டு வந்திருக்கின்றன. இவற்றின் மூலமாக மக்களை தமது கொடூர பிடியில் தொடர்ந்தும் வைத்திருந்தன> வைத்திருக்க முனைகின்றன. இவ்வாறான சிந்தனை என்பது நிறுவனமயப்படுத்தப்பட்டு உள்ளன. இவைகள் சாத்திரம்> சம்பிரதாயம்> சடங்குகள்> வழமைகள் (தேசவழமை) போன்ற போர்வைக்குள் மறைந்திருக்கின்றன. இவைகளே ஒடுக்குமுறைச் சக்திகள்.

    இவ்வாறான கருத்துமுதல்வாதத்திற்கும், அகமுரண்பாட்டிற்கும் முன்னிலை கொடுத்து புனித முலாம் பூசுவது தான் தலித்தியம், இரட்டைத் தேசியம் என்ற கருத்துருவாக்கம். அடக்குமுறையையும், அகமுரண்பாட்டையும் உருவாக்கிக் கொள்ளும் இனக்குழும- நிலமானிய முறைக்கு உட்பட்ட (taboo -social stigmatized வசைகள், வடுச் சொற்கள்,) மனிதர்களை பிரிக்கின்ற சிந்தனை என்பது புதிய பொருளாதார அமைப்பு முறையை மாற்றியமைக்கின்ற போதே படிப்படியாக இல்லாதாக்க முடியும்.

    இவைகளை வைத்தே வர்க்கங்களின் வளர்ச்சிப் போக்கை விளங்கிக் கொள்ளாது தமிழ் தேசத்தின் போராட்டத்தை வேளாளியமாக கொள்கின்றது. 
    அகமுரண்பாட்டையும், கருத்துமுதல்வாத சிந்தனை வடிவத்தையும் பயன்படுத்துவது யார் என்றால் பேரினவாதம், அடையாள அரசியல் செய்பவர்கள், போலி இனவாத இடதுசாரிகள் ஆகும். 
    அகநிலை சிந்தனை வடிவத்திற்கு மாற்றாக சமூக வளர்ச்சியை விளங்கிக் கொள்வது என்றால்..
    இயக்கவியல் என்பது மிகமிக முழுமையான, ஆழமான, ஒரு தலைப் பட்சமில்லாத வடிவத்தில் வளர்ச்சியைப் பற்றி விளக்கும் போதனையாகும். நிரந்தரமாக வளர்ச்சியற்ற வண்ணமுள்ள பருப்பொருளை தமக்கு பிரதிபலித்துக் காட்டும் மனித அறிவின் சார்பு நிலையை வலியுறுத்தும் போதனை என லெனின் விளக்கின்றார். 
    இயற்கை என்பதே வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கும் பருப்பொருள். சுயமாக இயங்கிக் கொண்டே இருக்கின்றது. இந்த இயற்கையை மனித அறிவில் பிரதிபலிக்கின்றது. இது பொருளாதார அமைப்பினைப் பொறுத்து பிரதிபலிக்கிக்கின்றது. மனிதர்கள் உருவாகுவதற்கு முன்னரே உயிரிணங்கள் தோண்றியிருக்கின்றன. இவைகள் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டங்களையும் பல்வேறு பரிமாணங்களையும் போராட்டத்தின் ஊடாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது.

    அரசியல் பொருளாதாரத்தினை விளங்கிக் கொள்ள உற்பத்திச் சக்தியின், உற்பத்தி உறவிற்கு மேல் கட்டப்பட்ட பொருளாதார அமைப்பினை பற்றிய போதிய முன்னறிவு அவசியமானதாகும். பொருளாதார அமைப்புச் சார்ந்து உற்பத்தி முறை, வினியோகம், பரிவர்த்தனை போன்றவற்றை ஆராயும் முறையை வெளிப்படுத்துகின்றது. 
    பொருளாதார அமைப்புமுறை என்ற அத்திவாரத்தின் மீதுதான் அரசியல் மேல்கட்டுமானம் கட்டப்படுகின்றது. முதலாளித்துவ பொருளாதாரவாதிகள் மதிப்பு பற்றிய உழைப்புத் தத்துவத்தை வெளிக் கொண்டு வந்தார்கள். மார்க்ஸ் ஒவ்வொரு பண்டத்தின் மதிப்பும் அதை உற்பத்தி செய்வதில் செலவழிக்கப்பட்ட சமுதாய ரீதியான அவசியமான உழைப்பு நேரத்தின் அளவைக் கொண்டு நிர்ணயிக்கப்படுதாக விளக்கினார் என்கின்றார் லெனின். பொருட்களுக்கு இடையேயான பரிமாற்றம் மனிதர்கள் இடையிலான உறவு நிலவுவதை மார்க்ஸ் விளக்கினார். பணம் தனிப்பட்ட உற்பத்தியளவில் பொருளாதார வாழ்வை இறுகப்பிணைக்கின்றது. மூலதனம் இந்த பிணைப்பை வளர்ச்சியுறுவதை குறிக்கின்றது. மனிதனின் உழைப்புச் சக்தியே ஒரு பரிமாற்றப் பண்டமாகி விடுவதை நிறுவினார்.

    தொழிலாளி உற்பத்தி சாதனத்தைக் கொண்ட உரிமையாளனிடம் தனது உழைப்புச் சக்தியை விற்கின்றார்கள். அவர்கள் பெறும் கூலியைக் கொண்டு தமது வாழ்விற்கான செலவைப் பெறமுடிகின்றது. மறுபகுதியை ஊதியமின்றியே உழைத்து முதலாளிக்கு உபரிமதிப்பை உண்டாக்குகின்றனர். இந்த உபரிமதிப்புத் தான் இலாபத்துக் தோற்றுவாய் இதுதான் முதலாளியின் செல்வத்திற்கான தோற்றுவாய். உபரி பற்றி வெளிப்படுத்திய கோட்பாடு மார்க்சீயத்தின் முக்கிய கண்டுபிடிப்பாகும். மார்க்சீயம் ஒன்றே கூலி அடிமைமுறையை ஈவிரக்கமின்றி எதிர்க்கும் ஒரே தத்துவம் என்று லெனின் நிரூபித்தார்.

    மார்க்சின் மூன்றாவது உள்ளடக்கக் கூறானது வர்க்கப் போராட்டமாகும். வர்க்கப் போராட்டம் தான் எல்லா வளர்ச்சிக்கும் ஆதாரமாகவும் உந்து சக்தியாகவும் விளங்குகின்றது. சமூக அமைப்பில் உள்ள முரண்பாடுகளை வர்க்கப் போராட்டத்தின் ஊடாகவே தீர்த்துக் கொள்ள முடியும். இதுவரையில் அனைத்துப் போராட்டங்களும் வர்க்கப் போராட்டத்தின் ஊடாக மனித சரித்திரம் கடந்து வந்துள்ளது. மனிதர்களின், இயற்கையின் வளர்ச்சி என்பது முரண்பட்டதாகவும், இரசாயன மாற்றத்திற்கு உற்பட்டதாகவும் இருந்திருக்கின்றது. பரிணாம வளர்ச்சி என்பது கூட ஒன்றையொன்று போராடி விழுங்கியே வந்திருக்கின்றது. வர்க்கங்களை உள்ளடக்கியதே சாதியச் சிந்தனையும், அதனைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் பொருளாதார அமைப்புமாகும்.
    உற்பத்தி உறவு - உற்பத்தி சக்தி பற்றிய புரிதல் இல்லாவிடின் அடக்குமுறையாளர்கள் போராட்டங்களை சிதைத்துக் கொண்டே இருப்பார்கள்.

    மேலதிகமாக வாசித்து அறியhttp://velanவேலன்.blogspot.no/2016/03/1_23.html

     
    நன்றி ..வேலன் 
    Velan இன் படம்.