அஞ்சரன்

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    2,597
  • Joined

  • Last visited

  • Days Won

    17

Everything posted by அஞ்சரன்

  1. சுவர் இடிப்புக்கு கூடி அழும் தலைவர்கள் எல்லாம் ஏன் கூட்டணியை உருவாக்கலாம் தானே அது என்ன தேர்தல் வந்தா ஆளுக்கு ஒரு திசையில் போற பழக்கம் .! காசு ...பணம் ...துட்டு ..மணி மணி ..!
  2. அம்பி மனைவியுடன் வந்து இருக்குறார் ஊரில ஆமிக்கு பயந்து பிள்ளையை தூக்கிட்டு ஆண்கள் போவது போல எல்லாம் ஓர் முன் எச்சரிக்கைதான் . உங்களுக்கு நகல் வேற அக்கா
  3. இது எல்லாம் நாளை அம்மா விடு அறிக்கையுடன் மறத்து போடும் லூசா விடுங்க லூசா விடுங்க ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் நமக்கு ஒரு கவலை இல்லை இந்தியனால் எந்த தீர்வும் கிடைக்காது பாருங்கோ . ஆர்ப்படங்களுக்கு வந்தவர்களை விட 'ஆரம்பம்' படத்துக்கு வந்தவர்கள் அதிகம் வசூலும் அதிகம் என்பதுதான் தமிழ்நாட்டின் உண்மை. முதலில் நாங்கள் எங்க மக்களுக்கு என்ன பண்ணலாம் எண்டு யோசிப்பம் நம்ம பிள்ளைகளுக்கு விளக்கேற்றும் வழியை பார்ப்பம் கூத்தாடிகள் காமடி சோ பாராமல் .
  4. ஒருகரை ரோட்டு சுவர் இடிக்க பட்டத்துக்கு அதை அரசியல் ஆக்கி ஜெயாவை துரோகி ஆக்கி அரசியல் இலாபம் தான் அங்கு நடக்கு எல்லாம் ஒருவகை பிழைப்புதான் . இவனைக் காட்டுற சினிமாவால முழுதும் இடிக்க படும் அபாயம் இருக்கு அம்மணி அஞ்சுவதும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை என்று அடிக்கடி சொல்லும் .
  5. கட்ட முதலே சொன்னம் வேணாம் என்று கேட்டியலே இப்ப அழுது என்ன பயன் இந்தியா நிலைப்பாடு மாறப்போவது இல்லை தமிழ்நாட்டுக்கு பயந்து மத்திய அரசு முடிவு எடுக்கும் என்கிற நினைப்பை மாற்றுங்கள் 29 மாநிலம் மிகுதி இருக்கு தொலுன்கான பிரச்சினையவே கண்டுக்காத மத்தி எங்களை கண்டுக்கும்மா . மாறா மத்தி என்ன சொல்லுதோ றோ என்ன நினைக்குதே அதுதான் நடக்கும் அது எவர் ஆட்சியில் தமிழ்நாட்டில் இருந்தாலும் மீறினால் ஆட்சி கலைக்கப்படும் என்பது தெரிந்த விடையம் இதில் ஜெஎன்ன கருணாநிதி என்ன இறையான்மை மிஞ்சி நாங்கள்தான் தலையில் தூக்கி ஆடுவது அவரு செய்வார் இவரு செய்வார் என்று . ஈழம் எங்கள் பிரச்சினை நாங்கதான் முடிவு எடுக்க வேணும் தவிர அவர்கள் அல்ல ஆதரவா இருக்கலாம் தமிழ்நாடு எதையும் செயல் படுத்த முடியாது முதலில் அவர்கள் போராடவேண்டியது புலிகள் மீதான தடை எடுப்புக்கு அதை செய்து முடித்தாள் இவ்வளவு பிரச்சினை வராது தேவையான வேலை செய்யாமல் தேவையில்லா செலவுகளும் வெட்டி பேச்சுக்களும் தீர்வை தராது என்பது உண்மை . மண்டியிடா மானம் ........அடங்கி கிடக்கும் பெட்டி பாம்பு
  6. சோழியன் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள் மேலும் வளரனும் நீங்க அண்ணே
  7. ஆயிரம் பச்சைகளைத் தனதாக்கிய தமிழ் சிறி அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்.
  8. உலகம் விழிப்பா தான் இருக்கு தமிழர் நாங்கதான் தூங்கிவிட்டம் என்பது மட்டும் உண்மை .

  9. இதுதான் உலகம் இது ஒரு கனாக்காலம் fb ஓங்கி குத்துங்க சார்
  10. நீதிபதி: நீ கொலை செஞ்சதைப் பார்த்த சாட்சிகள் 12 பேர் இருக்காங்க...! கைதி: யுவர் ஆனர் அதைப் பார்க்காதவங்க 21 பேர் இருக்காங்க. 12 பெரிசா? 21 பெருசா...?!!! :D:D
  11. அண்மையில் அதிக விருப்பு பச்சைப் புள்ளிகளை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ! குறிப்பாக சுமோ, மற்றும் தமிழினி ஆகியோருக்கும் வாழ்த்துக்கள் !!
  12. துணிவோடு முயற்சிக்கிற அத்தனை பேருமே ஜெயித்துவிடுவதும் கிடையாது. ஆனாலும், உலகத்தில் நாம் பார்க்கிற அத்தனை மாற்றங்களும், இப்படித் துணிச்சலாக முயற்சித்தவர்களால் மட்டுமே உருவாக்கப்பட்டவைதான்! .

  13. தலைவர் கவனம். தலைவர் எங்கட வழிகாட்டி. தலைவர்தான் எங்கட அப்பா. தலைவர்தான் எங்கட அம்மா. அவருக்கு ஒன்றும் நடந்திடக் கூடாது. இ.இளங்கோ. வெட்கி தலைகுனித்து நிக்கிறோம் இளங்கோ அண்ணா செய்வது அறியாது வீரவணக்கங்கள் .
  14. குழலினிது, யாழினிது என்பார், குடிகாரன் பேச்சு கேளாதார்

  15. பகைவரையும் நண்பனாக கருது.., பண்பாளன் தான் உலகை வயப்படுத்த முடியும். * ஆசைகள் வளர வளர அவனுடய தேவைகள் வளர்ந்து கொண்டே போகும். * எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு. * மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும். * கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை

  16. 500 பச்சைப் புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட சாந்தி அக்காவை வாழ்த்துகின்றேன்.
  17. வைதேகிக்கும், சோழியன் குடும்பத்தினருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். புத்தன் அண்ணைக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் .!
  18. உறையும் பனியும் எரியும் வெய்யிலும் உங்கள் உறுதி கண்டு பணியும் .! http://youtu.be/7rw0obBBeAw
  19. எந்த இடத்தில் சத்தியப்பரமாணம் எடுக்கின்றோம் என்பது முக்கியமல்ல. அதில் எழுதப்பட்டிருக்கும் வசனங்கள் அனைத்தும் ஒரே விடயம்தான் என்பதனை மாத்திரம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது இலங்கை நாட்டின் ஜனனாயக சோசலிச குடியரசின் இறைமையை பேணிப் பாதுகாப்போம் என்றுதான் சத்தியப்பரமாணம் எடுக்கின்றோம் இந்த வசனங்கள் எங்கும் மாற்றப்படுவதில்லை என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.பா.அரி­ய­நேந்­திரன்

  20. தோழர் தியாகுவின் உடல் நிலை மோஷம் இவரின் மரணம் ஆவது தமிழ்நாட்டை தட்டி எழுப்ப வேணும் உண்ணா விரதம் என்றால் என்ன என்று மற்றவர்களுக்கு உணரும்படி செய்யட்டும் பார்ப்போம் .!

  21. மனைவி முட்டை பொரியல் தயாரித்துக் கொண்டிருந்தபோது சமையலறைக்குள் நுழைந்த கணவன், ""ஜாக்கிரதை! இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்று'' என்றான். கூடவே, ""என்ன சமையல் செய்றே? அதை திருப்பு; இன்னும் கொஞ்சம் வறுவலாக வதக்கு. கடவுளே! இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்று. அடி பிடிக்கிறது பார்! ஜாக்கிரதை! ஜாக்கிரதை!'' ""இன்னும் கொஞ்சம் வதக்கு, உப்பு போட மறக்காதே. கொஞ்சமா உப்பு போடு'' என்று அடிக்கடி குறுக்கிட்டுக் கொண்டே சொன்னான். பொறுமை இழந்த மனைவி கேட்டாள், ""என்ன ஆச்சு உங்களுக்கு? ஒரு முட்டை பொரியலைக் கூடச் செய்ய எனக்குத் தெரியாதா?'' கணவன் பொறுமையாகச் சொன்னான், ""இப்ப தெரிகிறதா? நான் கார் ஓட்டும்போது பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அடிக்கடி குறுக்கிட்டு எனக்கே கற்றுக் கொடுக்கிறாயே? அப்ப எனக்கு எப்படி இருக்கும்?''
  22. பிரபாகரனையும் ஈழத்தையும் என்று ஒரு வியாபார பொருளா பிழைப்புவாதமா பார்க்கவும் முன்னிறுத்தவும் அரசியல் தலைவர்கள் உணர்வாளர்கள் தொடங்கினார்களே அன்றே இவர்கள் மீது இருந்த மரியாதையை தொலைத்து விட்டது இப்பொழுது எமக்கு உள்ள தேவை எல்லாம் வலிகளை வேதனைகளை சுமந்த எம் மக்களின் மீண்டு எழும் வாழ்கை மட்டுமே .!

  23. படித்த ரசித்தது .! நாட்டின் No.1 முட்டாள் யார்? நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார். “நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?” “ஆம் மன்னா!” “அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார். அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னரயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார். ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??” “இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர். “தொடரும்” என்றார் மன்னர். “மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர். “சரி அடுத்து” “இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்” “களிப்படைதோம் அமைச்சரே! களிப்படைதோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?” "அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.” மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார். நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர். ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை. “உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர். “சரி எங்கே முதலாவது முட்டாள்?” அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த மொக்கையான பக்கம் வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக் கொண்டிருக்கும் இவர்தான் நீங்க முதல் முட்டாள்!”