• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

அஞ்சரன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  2,597
 • Joined

 • Last visited

 • Days Won

  17

Posts posted by அஞ்சரன்


 1. காசேதான் கடவுளடா.
  ********** ***********
  ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்க ஒரு நபருக்கு இருநூறு ரூபாய் என்று போட்டிருந்தது.நிறையப்பேர் பணம் கொடுத்து சுற்றி வந்தனர்.கஞ்சனுக்கும் அவன் மனைவிக்கும் ஹெலிகாப்டரில் சுற்ற ஆசை.அதே சமயம் இவ்வளவு செலவாகுமே என்று நினைத்து வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

  அவர்களின் தயக்கத்தைப் பார்த்த ஹெலிகாப்டர் இயக்குபவர் அவர்களை அழைக்க,அவர்கள் வேண்டாம் என்றனர்.அவரும் விடாமல்,''நீங்கள் ஹெலிகாப்டரில் ஏறுங்கள்.நீங்கள் பணம் கொடுக்க வேண்டாம்.ஆனால் ஒரு நிபந்தனை.நீங்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது சிறிது கூட சப்தம் போடக் கூடாது.சப்தம் போடாதிருந்தால் பணம் வேண்டாம்.ஆனால் சப்தம் போட்டால் உரிய கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும் என்றார்.உடனே மகிழ்ச்சியுடன் அவர்கள் இருவரும் ஹெலிகாப்டரில் ஏறினர்

  .ஹெலிகாப்டர் இயக்குனர் வானில் என்னென்னவோ வித்தைகள் செய்ய ஆரம்பித்தார்.குட்டிக் கரணம் போட்டார்.வேகமாக இயக்கினார்.ஆனாலும் சிறு சப்தம் கூட வரவில்லை. கீழே இறக்கியதும் இயக்குனர் அந்தக் கஞ்சனிடம், ''எப்படிங்க,நான் இவ்வளவு செய்தும் நீங்கள் சிறு சப்தம் கூட செய்யவில்லை?''என்று வியப்புடன் கேட்டார்.

  அந்தக் கஞ்சனும் பெருமையாக,எனக்கே ஒரு சமயம் கத்த வேண்டும் போல இருந்தது.ஆனாலும் சமாளித்து விட்டேன், என்றான்.அவரும் எந்த தருணத்தில் என்று கேட்க,

  கஞ்சன் சொன்னான்,என் மனைவி ஹெலிகாப்டரில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோதுதான்.

  # நீதி
  என்னதான் இருந்தாலும்... காசேதான் கடவுளடா...
  (அப்பாடா.. இருநூறு ரூபாய் மிச்சம்)


 2. ராமாயணப் போரின் இறுதிக்கட்டம்.போர்களம் எங்கும் இரத்த ஆறு பெறுக்கடுத்து ஓடுகிறது.போரில் தோல்வி அடைந்த ராவணன் மரண அவஸ்தையில் மரண தேவதையின் வரவுக்காக காத்திருக்கிறான்.

  இந்நிலையில் ஸ்ரீ ராமபிரான் தம்பி லக்ஷ்மணனை கூப்பிடுகிறார். "என்ன வேலையாக கூப்பிட்டீர்கள் அண்ணா? தம்பி..உனக்கு ஒரு முக்கியமான வேலை கொடுக்கிறேன்.ராவணன் என்னதான் தப்பான காரியம் செய்திருந்தாலும் அவன் ஒரு சக்கரவர்த்தி, சிறந்த சிவ பக்தன், பாடகன், தங்களை நன்கு அறிந்தவன், நேர்மையாளன். அதனால் நீ அவனிடம் சென்று அவன் உயிர்பிரிவதற்குள் ஏதாவது நல்லதை கற்று கொண்டு வா! என்று சொல்லவும் தமையன் சொல் தவறாத தம்பியும் கிளம்பி சென்றான்.

  ராவணன் தலைமாட்டுகருகில் நின்றான். காலடிஓசையை கேட்ட ராவணன விழிகளைத் திறந்து பார்த்தான் ஒன்றும் பேச வில்லை. ஏதாவது சொல்லக்கூடும் என்று எதிர் பார்த்து காத்திருந்து அலுத்துப்போன லக்ஷ்மணன் ராமரிடம் வந்து முறையிட்டான்.

  "தம்பி...உபதேசம் அறிவுறை போன்றவை மகான்களிடமிருந்து கேட்கும் போது அவர்கள் காலடி அருகில் நின்று கொண்டு கேட்பது தான் பண்பு. அதுதான் மரியாதை.நீயும் அதன்படியே நடந்து கொள்" என்று அறிவுறை சொல்லி அனுப்பினார்.

  இந்த முறை தன் கால்களுக்கருகில் நின்று கொண்டிருந்த லக்ஷ்மணனை ஏமாற்ற வில்லை ராவணன். அந்த வேதனையையும் மீறி அவன் முகத்தில் மலரந்தது ஒரு பாசப்புன்னகை. "தம்பி லக்குமணா..சிறிது என்னருகில் உன் காதைக்கொண்டு வா. எனக்குத்தெரிந்த வாழ்க்கைக்கு முக்கியமான மூன்று விஷயங்களைப்பற்றி கூறுகிறேன்."

  1. Smart Phone வாங்காதே. Smart boy என்று பேர் வாங்கு.

  2. Face Book-யை தப்பி தவறிக் கூட உபயோகபடுத்தாதே. உன் எதிரில் இருக்கும் மனிதர்களின் face தான் சிறந்த book.

  3. கடைசியும் முக்கியமான ரகசியம் என்னவென்றால்... Whats App Group-ல் சேர்ந்து time waste பண்ணாதே, Family and Children கூட பொழுதை கழித்தால்

  நீ ஹேப்பி ?
  உன் family ஹேப்பி?

  வரலாற்றுச் சாதனை.........சுமார் ஒன்பதரை ஆண்டு காலம் பயணத்திற்குப் பின்னர் நேற்று முன்தினம் ப்ளூட்டோவினைக் கடந்து சென்று வரலாற்றுச் சாதனை செய்துள்ளது இந்த விண்கலம். அப்போது இந்த விண்கலம் ப்ளூட்டோ மற்றும் அதன் நிலாக்களை ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் எடுத்தது.

  நியூயார்க்: ப்ளூட்டோ கிரகத்தில் 11 ஆயிரம் அடி உயர பனிமலைகள் இருப்பது நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம் அனுப்பியுள்ள புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. ப்ளூட்டோ கிரகமானது உறைநிலையில் உள்ள குட்டி கிரகமாகும். சூரியக் குடும்பத்திலிருந்து இது 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன்பு உருவாகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். கிரகங்களில் ஒன்றாக இருந்த இதை பின்னர் விஞ்ஞானிகள் தகுதி நீக்கம் செய்து விட்டனர். இந்த கிரகத்தைக் குறித்து ஆராய, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, கடந்த 2006ம் ஆண்டு நியூ ஹாரிஸான்ஸ் என்ற ஆளில்லா விண்கலத்தை விண்ணில் ஏவியது.


 3. நல்ல முயற்சி. சில எழுத்துப் பிழைகளை கவனிக்கவும். சில வசனங்கள் இலகுவில்  விளங்க முடியாமல் உள்ளன. ஆரம்பம் அப்படித்தான். தொடர்ந்து எழுதுங்கள். பாராட்டுக்கள்

  நன்றி  அக்கா  வருகைக்கு .


 4. சீட்டில் பல ரூட்டுகள்..., டேக் இட் ஈசி....!!

  ஆனாலும் சீட்டின் போதை தெளியிறதில்லை...!

  எப்படா  முடியும்  என்று  இருக்கு  ஆனால்  பிறகு  தொடங்கும்போது  நானும்  வாறன்  என்பது  ....நன்றி  வரவுக்கு கருத்துக்கு  அனைவருக்கும் .


 5. கதையின் சாரம் புரிந்தாலும்

  பல பெயர்கள்

  அவை அடிக்கடி பிரயோகிக்கப்படுவது

  தொடர் வசனங்கள்...

  என்பனவற்றால் கதையைப்புரிந்து வாசிப்பது தடைப்படுகிறது

  அவசரத்தில் எழுதினீர்களோ தெரியாது....

  கொஞ்சம் நேரம் எடுங்களேன் செம்மைப்படுத்த..

  மற்றும்படி

  நாம் எல்லோரும் கடந்த

  கடந்துவரும் விடயம் தானே... 

  உண்மைதான் நடப்பை  எழுதனும்  என்று  தோணிச்சு  ..

  கவனத்தில்  எடுக்கிறேன் வசன  நடைகளை நன்றி 


 6. மச்சான் டி சொல்லு இதில போட்டு டக்கென்று வாறன் என்று சொல்லியபடி கைபேசியின் திரையில் கைகளை அழுத்தியபடி நடந்தான் ரமேஸ் ,உள்  மனதில் இன்றாவது அரைவாசி  தந்தால் நல்லது வாங்கி  அப்படியே அனுப்பி போடலாம் அப்பாக்கு வேற ஒப்ரேஷன் இருக்கு ,முதல் மாறிய வட்டி காசு வேற கொடுக்க வில்லை திரும்பியும் கேட்டால் எப்படி தருவீனம் என  எண்ணிக்கொண்டு வேகமா நடந்தான் இரயில் நிலையம் நோக்கி .......

  இவன் என்னடா  வேலை  முடிய வாடா ஊருக்கு  காசு  போடணும் என்னிடம் விஸா  இல்லை  நீதான்  போட்டு தரனும் என்று சொல்லிப்போட்டு  ,டி  சொல்லு  வாறன் எண்டுட்டு  எங்க போறான்  இவன் என தனக்குள்  கடுப்பாகியபடி  நகுலன் வீதியை அலுப்பா  பார்த்தான் ,வரட்டும் வரவிட்டு டி  குடிப்பம் இப்ப வெளியில நிப்பம் ஏரியாவில்  என்ன  நடக்கு  என்று பார்த்தபடி  என்று   நகுலன் நினைக்க ,அண்ணே நீங்க  வடகாடா என்று ஒருவன் கைகளை  கொடுக்க ஏவியபடி  கேள்வியை கேட்டான் .....

  இதில்தானே வாறன்  என்று  சொன்னான்  எங்க  போயிட்டான் என்று மீண்டும் அவன் இலக்கத்துக்கு தொடர்பை கொடுத்தான்  ரமேஸ் ,எதிராளி  அழைப்பில்  வர அண்ணே எங்க நான் கதவுக்கு  கிட்டவா  நிக்கிறன் நீங்க எங்க ,ஓம் தம்பி இந்தா வந்திட்டன்  ரயில்  கொஞ்சமா  சுனங்கிட்டு அதுதான் என்று  வேகமா  வந்து  கைகளை  கொடுத்தார் கஜன் பிறகு எங்கவாது டி  குடிப்பமா என்றபடி கேள்வியை  தொடுக்க .....

  நகுலனின்  அழைப்பு  மீண்டும் எங்கடா  நிக்கிற  வருவியா  நான்  போகவா என்றது ,இல்லடா  பொறு  பொறு   ஒரு  ஐந்து  நிமிடத்தில்  வாறன் ஆள் வந்திட்டு இப்ப வாறன் என்று துண்டித்தான்  அழைப்பை ,பிறகு  கஜன் அண்ணே எப்படி  சுகம் கனகாலம் கண்டு ,நான் போன் அடித்தால் கூட  எடுப்பதில்லை  நீங்கள் இல்லையோ  இருக்கோ போனை எடுத்து  கதையுங்கோ அண்ணே அதில என்ன வந்தது என்று  சொல்லிக்கொண்டு சேர்த்து  நடந்தான் ரமேஸ் .........

  உனக்கு தெரியும்  தானே  சீட்டுக்காரன் சுத்தி  போட்டான் அதுதான் உண்ட காசு  தரமுடியவில்லை  உனக்கும் கஷ்டம்  ,விஸா  வேற இல்லாமல்  வேலை  செய்கிற காசு அதுதான் எனக்கு  மனசு  கஷ்டமா  போயிட்டு  காசு  கையில  கிடைக்க  கால் பண்ணுவம் என்றுதான்  நான்  எடுக்கவே  இல்லை  இவ்வளவு  நாளும் பிறகு அப்பாக்கு  சுகமா உடல் நிலை .......

  நகுலனிடம் கைகளை கொடுத்தவன் உங்களை அங்க  கண்டிருக்கிறன் நீங்க  இன்னாரின் பெடியன்  தானே என்று  விளக்கம் கேட்க தொடங்கினான் ,ஓம்  நீங்க யாரு  என்று எனக்கு  சரியாய் தெரியவில்லை அதுதான் குழப்பம் என்றான் நகுலன் ,அட  தம்பி நீங்க அப்ப சின்ன பெடியல் நாங்க  உங்கட தோட்டத்துக்கு வேலைக்கு வரும் போது  களுஷான் கூட  இல்லாமல் விளையாடிக்கொண்டு  இருந்த ஆள் நீ அண்ணன்  எல்லாம் ,அப்பா அம்மா எல்லோரும் சுகமா அக்காக்கு  கலியாணம்  முடிஞ்சுதா என்று எல்லாம் ,எதோ உரிமை  உள்ளவர் போல கேள்விகள் கேட்டார் அவர் ........

  ரமேஸ் உனக்கு அவனை தெரியாது தானே நான் சீட்டு போட்டவனை ,இல்லை கஜன் அண்ணே நீங்க  சொல்ல கேள்வி ஆளை கண்டதில்லை எவ்வளவு காசு கனபேருக்கு  கொடுக்கணும்  போல அப்படியா என்றான் ,ஓம்  தம்பி நாலு  சீட்டுக்கு  மேல எனக்கு  இரண்டு  சீட்டுக்காசு கடைசியா  எடுப்பம் என்று விட்டன் அது  ,எல்லாம்  போயிட்டு இப்ப என்ன  பண்ணுறது அவனை காணவும் இல்லை இப்ப போன்  நம்பர் வேறு மாற்றி போட்டான் என ஆதங்கப்பட்டபடி  மூச்சு விடார் கஜன் ......
  நகுலன் கேட்டான்  நீங்க கன   காலம்  வந்து  ,என்ன வேலை  செய்யுறிங்க வீடு எல்லாம் வாங்கியாச்சே என தொடுக்க, இல்லை  தம்பி இப்பவும்  ஒரு  சீட்டுக்காசு வாங்கிற  அலுவலாத்தான்  வந்தனான் இந்த வாறன் என்றான்  ஆளைக்காணம்  போனையும் கானம் ,ஓ பெரிய சீட்டா  சின்ன  சீட்டா  ,இல்லை  சின்ன  சீட்டு தான் அது  எப்பவோ  முடிச்சு  போயிட்டு இன்னும் காசு தரவில்லை தம்பி இழுக்கிறான் வைத்து சுத்து மாத்து வேலை போலத்தான் கிடக்கு ,என்ன  செய்கிறது மெதுவா தான் வாங்கி  எடுக்கணும் ,ஊரா சண்டைக்கு போக இங்க தெரியுமா தானே எவனும் நல்லவன் இல்லை தம்பி கவனம் கொடுக்கல் வாங்கல் எல்லாம் ........
  இப்படியே பேசிக்கொண்டு  கஜனும் ரமேசும் நகுலன்  நிக்கும் கடையடிக்கு  கிட்டவா  வர ,கஜனின் முகம் மாறியது  தம்பி  ரமேஸ் இதில இருக்கிற  கடையில்  டி  குடிப்பம் எதுக்கு அங்கின  தூரமா போவான் என்றார் ,இல்லை அண்ணே காசு அனுப்ப விஸா உள்ள பெடியன் அங்கதான் நிக்கிறான் அதுதான் நான் அங்க போகிறேன் என்றன் ரமேஸ் .....

  நல்லா பேசிக்கொண்டு இருந்த நகுலன் திடீர்  என்று அவசரமா சரி  அண்ணே நேரம் போட்டுது அவசரமா போகவேணும்  சந்திப்பம் என்று கைகளை கொடுத்து விட்டு வேகமா சந்தியை கடந்து போனான் ,என்னடா நிண்டவாக்கில போறான் ஒரு  பிளேண்டி  கூட  குடிக்காமல் என்று மனதுக்குள் அலுத்துக்கொண்டார்.....
  ரமேசுடன் போனால் அவரிடம் மாட்டவேனும் என்ன பண்ணுறது என்று யோசிச்சபடி கஜன் மனம் இன்றி கால்களை மெதுவா வைத்தான் ,காசு வேற கொண்டுவரவில்லை இவன் நான் காசு கொண்டுவந்திருப்பன் அனுப்பலாம் என்றுதான் வாரான் இதில வேற அந்தாள் நிக்கு எல்லாம் சிக்கலா  போகபோகுது  ,என்ன பண்ணலாம்  என்று மனதில் வேகமா கணக்கு போட்டான் கஜன் ......

  கடையடிக்கு வந்த ரமேஸ் சுற்றி சுற்றி பார்த்தான் எங்கடா போயிட்டான் இவன் போன் கூட  அடிக்கவில்லை என்று சலித்துக்கொண்டு கைபேசியை எடுத்தான் ,அப்பொழுது அடேய் கஜன் நீ  உயிரோடு இருக்கிறியா என்றபடி ,எட்டி  கஜனை பிடித்தார் சோதியர் விடுங்க அண்ணே கையை என்று தட்டி விட்டான் கஜன் ,என்ன ஏது  என்று  புரியாமல் முழி பிதுங்கி  நின்றான் ரமேஸ் ,நான் ஒன்று வேணும் என்று செய்யவில்லை அந்த வடகாட்டு நகுல் தான் சீட்டு  ஏமாற்றி போட்டான் அவனை சோதியர் அதுதான் பிரச்சினை நீங்க  என்னுடன் பிடித்த  சீட்டு  தரமுடியாமல்  போனது ......
  டேய் அவனோ அவன் இப்பத்தான் இதில  என்னோட கதைச்சுக்கொண்டு நிண்டவன்  டக்கென்று  கையை கொடுத்திட்டு போட்டு வாறன் என்று  சொல்லிட்டு இந்தபக்கமா ஓடினான் ,எனக்கு தெரியாது அவன் தான் என்று  அல்லது  ஆளை பிடிச்சு வைத்திருப்பனே என்றார் சோதியர் ...

  ஐயோ அண்ணே அவன் தான் நகுலன் எனக்கு காசு போடவந்தவன் விஸா  உள்ள  பெடியன் ,இதில  நிண்டவன் என்று  சொன்னான் ரமேஸ் அட  ஊரில அவன் அப்பனின்  பெயர் விலாசம்  என்ன இவன் இங்க இப்படி ஊரை  ஏமாற்றி திரியுறான் நல்லவன் போல அல்லவா இப்ப பேசிட்டு இருந்தான் சே .....

  கஜனுக்கு நகுலன் கொடுக்கணும் ,சோதியருக்கு  கஜன் கொடுக்கணும் இரண்டும் நடக்கணும் என்றால் நகுலன் கஜனுக்கு கொடுக்கணும் ,என உள்ளார  யோசினையில் ஆழ்த்தான் ரமேஸ் காலமுன் சூழலும் ,வேகமா பணக்காரன் ஆகணும் என்னும் வேகமும் எப்படி எல்லாம் சுய கவுரவத்தை  விட்டு  ஏமாற்ற பண்ணுது மனிதரை ,இங்கு யார்தான் நல்லவர்கள் எல்லோருக்கும் பின்னுக்கு ஒரு பெரும் கதை இருந்துகொண்டே  இருக்கும் போல ஐரோப்பா வாழ்வின் சூழ்ச்சிமம் அதுதான் ஆக்கும் என எண்ணியபடி ரமேஸ் கஜனை பார்த்தான் ........

  தம்பி கோவிக்காத வேலை சம்பளம் செக் கொடுத்தனான் விஸாக்காரன் இன்னும் காசு தரவில்லை இண்டைக்கு கொண்டுவந்து தாரன் என்றவன் ,அதுதான் நான் உன்னை வரச்சொன்னனான் பொறு அவனுக்கு அடிப்பம் என்று அடுத்த சம்மாட்டி அடியை தலையில் இறக்கினார் கஜன் ....

  எதிர் முனையில் அழைப்பு கொடுக்க நேரடியா தொலைபேசி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது சிறுது  நேரத்தின் பின் முயற்ச்சிக்கவும் என கூறி  அணைந்தது தொடர்பு .

  • Like 5

 7. புங்குடுதீவில எந்த கண்ணதாசனா இருக்கும் 

  இதே  ஆச்சரியம்  என்றால் எங்க  அப்பத்தாக்கு  சின்னப்பா  தேவர்  எழுதிய  காதல்  கடிதம்  கிடக்கு அதை  போட்டால்  உங்கள்  நிலை  ஜி  :D


 8. திராவிடத்திடம்  மண்டியிட்டாரா  சீமான் ......அடுத்த  உரை  எப்ப வரும்  அண்ணே  வந்தேறிகள்   எல்லாம் இல்லை  எல்லோரும்  தமிழர்  என்று  பல்டி  அடிச்சு  :D


 9. தமிழன்  எப்ப  தமிழனுக்கு  நன்மை  செய்து  இருக்கிறான் ,யாராவது  செய்திட்டு  போக  அதில்  போய்  தங்கள்  பெயரை எழுதி  போட்டு  போற    வேலையத்தான்  இன்றுவரை  செய்கிறார்கள்  தமிழர்கள் .


 10. பிந்தி  கிடைத்த   தகவல் படி  குழந்தையின் மிட்டாயை  பறிக்க  இசை  முயற்ச்சி  செய்ததால் தற்காத்துக்கொள்ளவே  தாய்  தாக்குதல்  நடத்தியுள்ளார்  :D

   

  scho0331_2.jpg


 11. குரு ,,,,,,,,,, என்ற ஸ்தானத்தில் உள்ளவர்க்கு 

  ஏன் எப்பொழுதும் யாரிடத்திலும் இல்லாத 

  பயமும் மரியாதையும் பெரும்பாலோருக்கு 

  இருக்கிறது தெரியுமா உறவுகளே smile உணர்ச்சிலை

  கு - என்றால் இருள் 

  ரு - என்றால் சத்ரு (எதிரி)

  அதாவது இருட்டினுடைய சத்ரு(எதிரி) ,,, 

  அறியாமை என்னும் இருளை அகற்றி வாழ்வின் 

  ஒளியேற்றும் திறன் கொண்டோர் என்றே 

  குரு என அழைக்கப்பட்டனர் போதிப்போர் 

  எல்லோரும் 

   


 12. சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்றுதான் நாங்களும் சொல்கிறோம். ஆயுதமற்ற நிராயுதபாணிகளை சுட்டுக்கொல்வது தவறு.

  காவல்துறை தங்களுக்கு ஆபத்து நேரும் பட்சத்தில் மட்டுமே எதிராளியைச் சுடமுடியும். இப்ப இந்த செம்மரக் கடத்தல் என்று வந்தவர்கள் ஆயுதங்களால் தாக்க முயன்றார்களா?

  இசை  கேள்வியை நாம் எப்படியும்  கேட்கலாம் அங்கு  என்ன  நடந்தது  என்று எவருக்கு  தெரியும் அவர்கள் திருப்பி  தாக்கியதாக  போலிஸ்  சொல்லுது  எது  உண்மை .


 13.  

  என்ன ஐயா உங்கள் நீதி, நியாயம்? மரத்தை வெட்டுபவன் நாளை தலையையும் வெட்டுவான், எனவே அவன் அந்நிய இடத்தில் சுட்டுக்கொல்லப்பட்டால் பிழை இல்லை என்று நியாயம் கற்பிக்கும் நீங்கள் புலிகளுக்கு துவக்கி தூக்கினவர்களுக்கும் இதே நீதி வெளிநாட்டில் வழங்கப்பட்டால் ஏற்றுக்கொள்வீர்களா? 

   
  உங்கள் நியாயப்படி சொறி லங்காவில் துவக்கு தூக்கினவர்களுக்கு வெளிநாட்டில் துவக்கு தூக்கி ஆட்களை கொல்வதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்? எனவே, இவர்களை பிரான்சிலோ, கனடாவிலோ, அமெரிக்காவிலே போலிசார் கைதுசெய்து எண்கெளன்டரில் கேட்டுக்கேள்வியில்லாமல் சுட்டுக்கொலை செய்யலாம்? 
   
  கத்தியால் மரத்தை வெட்ட தெரிந்தவனை விட, துவக்கினால் ஆட்களை சுடத்தெரிந்தவன அதிகளவு ஆபத்தானவன் இல்லையா? எனவே, உங்களை பிரான்ஸ் போலிசார் கேட்டுக்கேள்வியில்லாமல் பிடித்து எண்கெளன்டரில் சுட்டுக்கொன்றால் அப்போது நீதியும், தர்மமும் நிலைநாட்டப்படும்?

   

  ஐயா  சட்டம்  என்பது  எங்கு  மீறப்படாலும்  தண்டனை  ஒன்று  இருக்கு  என்பதை  கவனத்தில்  கொள்ளுங்கள் ....

   

  சும்மா  நானும்  மனுதபிமானி  என்று  வேஷம்  போடுவதில்  எனக்கு  உடன்பாடு  இல்லை  ,அப்படி  பார்க்க  போனால் அண்மையில்  பிரான்ஸில்  நடந்த  சம்பவத்துக்கு  தீவிரவாதிகள்  என்று   சொல்ப்பட்டவர்கள் கொல்ல்பட்டுரிக்க  கூடாது  இல்லையா ...

   

  எல்லாத்துக்கும்  நியாயம்  பேசுவது  தவறு எனக்கு  என்று  வரும்போது  ஒரு  நீதியும்  மற்றவர்களுக்கு  ஒரு  நீதியும்  கொடுப்பது  முதல்  தப்பு ..

   

  பசுவிற்கு  மகனை கொன்ற பரம்பரை நாம் .


 14. கடந்த சில ஆண்டுகளில் உருவாக்கம் பெற்ற ஈழத்தவர்களின் நாவல்களில் பெரும்பான்மையானவை வாசிப்பதற்கு உருசியாக இருந்தவைதான். அவற்றில் பல நளினத்தொனியில் ஈழப்போராட்தை விமர்சனம் செய்தவை. தமிழையும், ஈழப்போராட்டத்தையும் அவற்றின் தீயபக்கங்களால் மாத்திரம் படம் பிடித்துக் காட்டிய சிறுகதைகள் பிரபல்யம் அடைந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இவ்வாறான கதைகள், நாவல்களுக்குத் தமிழ்நாட்டிலும் சந்தை வாய்ப்புகள் அதிகமாகவே கிடைத்தன.

  இவ்வாறான படைப்புகள் நளினச் சிரிப்பைத் தந்துவிட்டுச் சென்றுவிடுபவை. வாசிக்கும் கணத்தில் வாசிப்பவர்களுக்குக் கிளுகிளுப்பூட்டுவதுடன் அவற்றின் கடமை முடிந்துவிடுகிறது.

  குணா கவியழகனின் "நஞ்சுண்ட காடு" அவ்வாறானதல்ல. அது பற்றியெரியும் ஒரு காடு. வாசகரின் உடலையும் உள்ளத்தையும் தீக்குளிப்புக்கு அழைத்துச் செல்கிறது இந்நாவல். தம்மைப் போராளிகள் என்று பிரகடனம் செய்யும் எத்தனைபேரின் இலக்கியத்தில் போரின் துல்லியத்தைக் காணமுடிந்தது ? ஈழப்போரை வெறும் புறநிiலைச் சம்பவங்களாகவும், சிறுபிள்ளை வேளாண்மையாகவும் மற்றும் இயக்க அடிபாடுகளாகவும் சித்தரித்த போலிப் போராளிகளின் இலக்கியங்கள் "நஞ்சுண்டகாட்டின்" முன் வெற்றுப்பாத்திரங்கள்.

   

  வாசுதேவன்  .....பாரிஸ் 

  மொழிபெயர்ப்பாளர் ..எழுத்தாளர் 

   


 15. தண்டனை கொடுங்கள், ஆனால் தீர விசாரித்துவிட்டு உண்மையாய் குற்றம் செய்தால் சட்டப்படியான தண்டனையை கொடுங்கள். சுட்டு கொல்லப்பட்ட 20பேரும் உண்மையாய் மரம் வெட்டினார்கள் என்பதற்கு சரியான ஆதாரங்கள் உள்ளனவா? இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு தண்டிக்கப்படவேண்டிய குற்றவாளிகள் என்று எப்படி முடிவுக்கு வந்தீர்கள்?  :(

   

  இந்த சம்பவம் பற்றிய படங்களையும், உறவினர்களின் கருத்துக்களையும் பார்த்தால் இது சொறி லங்காவில் ஆமிக்காரன் றோட்டில் போகின்றவனை பிடித்து சுட்டுத்தள்ளிவிட்டு அவர்களுக்கு புலிகளின் உடையை அணிவித்து புலிகளை கொன்றோம் என்று ரூபவாஹினியில் காட்டுவது போல் உள்ளது.

   

  கிந்தியர்கள் தமது நாட்டுப்பற்றை காட்டுவதற்கு நீங்கள் எழுதியது போன்ற கருத்தை பேஸ்புக்கில் பரவலாக எழுதுவதாய் யாழ் இணையத்தில் ஒருவரின் கருத்து காணப்பட்டது. ஆனால், போர் அனுபவங்கள் கொண்ட நாட்டில் வாழ்ந்த உங்களுக்கு ஏன் இப்படி கருத்து எழுதத்தோன்றுகின்றது? உங்கள் கருத்துக்கள் சிலவற்றை வாசித்து நீங்கள் ஒரு "முன்னாள்" என்பதை அறிந்தேன். ஒரு "முன்னாள்" இப்படி ஒரு கருத்தை எழுதியதை வாசிக்க ஆச்சரியமாய் இருக்கிறது.

   

  இந்த கொலைகளை கண்டிப்பவர்களில் பல அரசியல்வாதிகள் உங்களுக்கு பிடிக்காதபடியால் இப்படி எழுதினீர்களா? ஒன்றும் புரியவில்லை.

  சம்பவம் நடந்தது  அவனின்  பிரதேசம்  அவங்கள்  ஒன்றும்  தமிழ்நாட்டில்  புகுத்து  சுடவில்லை ஆக  நியாயம்  பேசுறம்  என்று  உண்மையை  மறைக்க  கூடாது  காசுதாரன்  என்று  மரத்தை  வெட்ட  போனவர்கள்  நாளை  தலையை  வெட்ட  கூட  போவார்கள் என்பதை  நாம்  கவனிக்க  வேணும் ....

   

   

  அந்த  இடத்தில்  தமிழன்  இல்லை   வேறு  மாநிலக்காரன்  இருந்தாலும்  நிலைமை  இதுதான் ..

   

  வீரப்பனை சுட்ட  ஆத்தாவை  ஈழத்தாய்  என்று  புகழ்பாடிய  வாய்கள்  தான்  இன்று இருபது  பேரின்  மரணம்  பற்றி வரிந்து  கட்டி  பேசுது ..

   

  பரமக்குடி  துப்பாக்கி  சூடு  யாரு  செய்தது  மத்தியா  வரலாறு  முக்கியம்  அண்ணே .


 16.  

  பூப்பதும் உதிர்வதும் வாழ்வில் இரண்டற கலந்தது 
  எப்பொழுது விளங்கும் எம் உறவுகளுக்கு.
   
  கவிதை அழகு.  இறுதி வரிகள் மிகவும் அழகு.

   

  நன்றி சேயோன் வருகைக்கும் கருத்துக்கும் .


 17. பதில் சொல்ல முடியாத டயலாக்ஸ்

  1. படுக்கையில் படுத்து கண்மூடும்போது....தூங்கப்போரியா ?

  [இல்லை தூக்குல தொங்கப்போறேன்

  2. மழை நேரத்தில் வெளில கிளம்புறதைப் பார்த்துட்டு..... மழைல வெளியே போறியா?

  [ இல்லை மாரியாத்தாவுக்கு கூல் ஊத்தப்போறேன்:-) ]

  3. அறிவாளி நண்பன் லேண்ட் லைனுக்கு கால் பண்ணிட்டு...... மச்சி எங்கிருக்கே?

  [ உங்க ஆயா வீட்ல இருக்கேன் மச்சி ]

  4. பாத்ரூம்லேர்ந்து ஈரத்தோட தலை துவட்டிகிட்டு வெளில வரும்போது..... குளிச்சியா?

  [ இல்லை கும்மி அடிச்சேன் ]

  5. தரைதளத்தில் லிஃப்டுக்காக காத்திருக்கும் போது... மேலே மாடிக்கி போறியா?

  [ இல்லை அமெரிக்கா போறேன் ]

  6. அழகான பூங்கொத்தை டார்லிங்குக்கு குடுக்கும் போது..... இது என்ன பூவா?

  [ இல்லை புளியம்பழம் ]

  7. சினிமா டிக்கெட் எடுக்க வரிசையில் நிக்கிம்போது, அறிவாளி நண்பன் .....இங்கே என்ன பன்றே?

  [ ம்ம் மண்ணெண்ணெய் வாங்க நிக்கிறேன் ]

  8. கேண்டீன்ல நின்னுகிட்டிருகும்போது, நண்பன்....... என்ன மச்சி சாப்பிட வந்தியா?

  [ இல்லை சாணி வறட்டி தட்ட வந்தேன் மச்சி ]

  9. எழுதிட்டிருக்கும் போது, நண்பன்.... மச்சி எழுதிட்டிருக்கியா?

  [ இல்லை மச்சி எருமை மாடு மேய்ச்சிட்டு இருக்கேன் ]

  10. தடுக்கி தரையில் விழுந்ததை பார்த்துட்டு, நண்பன்.... என்ன மச்சி விழுந்துட்டியா?

  [ இல்லை, நீச்சல் அடிச்சிட்டிருக்கேன் ]