• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

அஞ்சரன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  2,597
 • Joined

 • Last visited

 • Days Won

  17

Everything posted by அஞ்சரன்

 1. ஜெயசுக்குறு ராணுவ நடவடிக்கை நடைபெற்ற காலம் வன்னியின் மேற்கு கிழக்கை கிழமைக்கு கிழமை மாறி மாறி திரிந்தவண்ணம் இருந்தோம்... எமது அணி விஷேட வேவு பிரிவு என்பதால் நாளாந்தம் எதிரி நிலை கண்காணித்து அறிக்கை கொடுக்க வேண்டிய பணியாக இருந்தது.. எமக்கு என்று ஒரு காப்பரண் எல்லை கிடையாது. வன்னியின் கிழக்கு பகுதியில் நின்ற எமக்கு அழைப்பு உடனும் கிளம்பி வரும்படி.. இரவுப் பயணம்.. வந்தவேகத்தில் நித்திரை தூக்கம் நல்லாய் உறங்கீட்டம்.. ஆனாலும் காதுகளில் பெண்களின் குரல் கூடுதால கேட்டபடி இருந்தது.. அதிகாலை விடியலை தேட கண்விழித்து பார்த்து பொறுப்பாளருக்கு தொடர்பை எடுத்தோம்.. எங்க வரணும்..? அவர் நீங்க நில்லுங்க நான் வந்து கூடி வாறன் என் பதில் சொல்லி தொடர்பை துண்டித்தார் . சரி எழும்பி முகம் கழுவ போவம் என கொட்டிலை விட்டு வெளியில் வந்தால் சுற்றி பெண்பிள்ளைகள்.. என்ன அண்ணாமரே குறட்டை ஆமி லைனுக்கு கேட்டு இருக்கும் என நக்கல் பண்ணியபடி நின்றார்கள்.. நாங்களும் பதிலுக்கு ம்ம் சென்றி பார்க்காமல் எங்க குறட்டை கேட்டியலே என்றபடி பேச்சு கொடுத்தம்.. அவர்கள் கடல்புலிகளின் மகளிர் அணி.. எக்கோ லைனில் நிறுத்த பட்டு இருந்தனர்.. அவர்களுக்கு அடுத்து விஷேட வேவு புதிய பயிற்சி பெற்ற போரளிகள் பப்பா லைனிலும் வவுனிக்குளம் அலைகரையில் ஜெயந்தன் சிறப்பு தாக்குதல் படையணியும் நிலை எடுத்து இருந்தது... கடல்புலிகள் அணிக்கு லெப்டினன் கேணல் காதம்பரி அக்கா கொம்பனி பொறுப்பா இருந்தார்.. வேவு அணி ஜெரி அண்ணையின் பொறுப்பிலும் ஜெயந்தன் படையணி இனியபாரதி பொறுப்பிலும் நின்றனர்... மூன்று முறிப்பில் இருந்து கல்லிருப்பு வரை பக்கவாட்டா நிலைகள் அமைந்து இருந்தது.. நாங்கள் ஒன்பது பேர் மேஜர் சுயாத்தின் தலைமையில்.. கையில் வரைபடம் கொண்டு என்ன நடக்கு என்றபடி உள் வந்தார் தீபக் மாஸ்ரர்.. இருக்குறம் அண்ணே என்ன பெரிய அலுவலா..? என கேட்டு யூரியா பையை தரையில் விரித்தான் செழியன்.. இல்லடப்பா வழமைதான் இந்தபக்கம் உடைக்க போறான் போல கிடக்கு அதுதான் இரண்டு நாள் ஆவது உள்ள தங்கி பார்க்க வேணும் பெடியள் புதுசு அதுதான் ஜெயம் அண்ணை உங்களை இங்கால எடுக்க சொன்னவர் ஒரு மாதம் அப்படி இப்படி நில்லுங்க என்று வரைபடத்தை விரித்து அதில் மூழ்கி போக.. அண்ணே பிளேண்டி சீனி இல்லை குடிப்பியலே என கேட்டபடி ஐங்கார் டின்னில் தேனீர் வைத்தாள் ஒரு பெண் போராளி.. காலையில் எழும்பி பிள்ளைகளிடம் ஒரு தேனீர், மதியம் ஜெயந்தன்காரரிடம் போனால் எதாவது சுட்டு வாட்டி வைத்து இருப்பாங்கள் அங்கின சாப்பாடு என்று இரண்டு நாள் போயிட்டு.. அடுத்த நாள் அதிகாலை பிள்ளைகளின் நிலைபக்கம் உடைப்பு.. செம சண்டை நடக்கு.. எங்களுக்கு நிலைகள் இல்லை.. பிள்ளைகளுக்கு சப்போட்டுக்கு இறங்குங்க என்று அழைப்பு வரும் என்றால் அதுகும் இல்லை.. தலை தூக்க முடியாதபடி செல் போட்டு தாக்குறான்.. மதியம் நெருங்க நெருங்கிட்டான் என்றவுடன் கருணா அம்மான் இனியபரதிக்கு அழைப்பு.. டேய் பெடியளை கொண்டு எக்கோ பக்கம் உடனம் உடனம்... சரியண்ணை என தொடர்வை துண்டித்து வேகமா கிளம்பி ஓடியபடி அவர்கள் போக பின்னாடி நாங்களும் கவருக்கு வாறம் என சொல்ல வேணாம் இங்க நில்லுங்கோ ஆள் பேசும் உங்களின் வேலை இன்னும் முடியவில்லை தொடர்பு வரும் வரை வரவேணாம்... ஆத்து கிடங்கில் படுத்தபடி மேலால் போகும் கிபிரையும் செல்லையும் எண்ணிக்கொண்டு என்ன கொடுமை அங்க நிண்டு இருக்கலாம் வாத்திக்கு தொடர்பை போடுங்கோ சுயாத் என்று நச்சரித்தபடி இருக்க அவரே அழைப்பில் பப்பாக்கு நடுவுல வாங்கோ என்றார்.. சரி என கிளம்பி ஓடிவர கிபீர்.. ஒரு மட்டக்கிளப்பு போராளி மருவ கிறிகிட்டு வருது மடுவில் பொசிசன் எண்டான் (அவன் சொன்னது மறுபடியும் கிபீர் வருது பங்கருக்க போங்கோ என ) எங்களுக்கு சண்டை சத்தம் அவன் சொன்னது விளங்க வில்லை.. திருப்பி நல்ல தமிழ்ல சொன்னான் டேய் ...........மக்களே விழுந்து படுங்கோ என்று சொல்லி வாய் மூட புழுதி எழும்புது.. மரம் செடி கொடி எல்லாம் சரிஞ்சு விழ 100மீற்றர் தள்ளி விழுந்து இருக்கும் குண்டு.. அட அழிஞ்சு போவானே.. எல்லோரும் ஓகேயா.. ஓம் ஓம்.. திரும்பி குத்த முதல் ஓடுங்கடா என்று குரல் கொடுத்து விழுந்து அடித்து ஓடி ஒவ்வொரு நிலையில் போய் விளுந்தம் . பின்னேரம் சண்டை ஓய்வுக்கு வந்திட்டு.. அம்மான் வரட்டாம் உடனும்..தவல்வர அம்மானின் கட்டளை பீட நிலைக்கு போனம்.. அங்க அவன் இங்கால பெரிய அளவில் நசலை கொடுக்க போறான் போல இருக்கு நீட்டுவரிக்காரர் ஒரு ஐந்து பேர் வேணும் எண்டு சொல்லுங்கோ (விக்டர் கவச எதிர்ப்பு படையணி ).. அந்த ஒரு ஆர் பி ஜி போராளிக்கு முன்று பேர் பாதுகாப்பு கொடுக்க வேணும் அப்படி பெறுமதியா வளர்த்து வைத்து இருந்தார் தலைவர்.. நீட்டு வரி போராளிகளை கண்டால் பவள்வாகனம் பின்னாடி போகும் அப்படி காட்டு காட்டி வைத்து இருந்தவங்கள் அடியின் பவர் அப்படி . அம்மான் சொன்னார் இன்று இரவே போங்கோ என்ன நடக்கு எங்க சப்ளே வருது எந்த ரூட் பாவிக்குறான் முடிந்த அளவு பாருங்கோ கவனம் இப்ப முன்னுக்கா நிக்குறான் குறுக்க எங்காவது மாட்டாமல் பின்னாடி போய் சுற்றி வாங்கோ நல்லம் உங்களுக்கு.. கல்லிருப்பை பிடிச்சு இறங்குங்கோ ஒரு கிழமைக்குள் முடிஞ்சதை எடுங்கோ அவன் அடுத்த மூவ் எடுக்க முதல் நாங்க பூரணும் தம்பியா சரியா... தலயாட்டி நடந்தோம் வந்த வேகத்தில் எடுத்து வைக்க வேண்டியதை எல்லாம் வைத்து விட்டு பொழுது சாய இறங்கிநடக்க தொடங்க பின்னாடி அண்ணாக்கள் கவனம் மணிக்கூடு எலாம் எல்லாம் நிப்படுங்கோ சிலவேளை மறந்தால் அவன் நிலையில் நிக்கும்போது அடிச்சு காட்டி கொடுத்து போடும் என பிள்ளைகள் சொல்ல.. சரி பருவாயில்லை நீங்களே வைத்து இருங்கோ என்று கூறி கழட்டி கொடுத்து விட்டு கைகாட்டி நகர்ந்தோம் . இரவு ஏழு மணிக்கு பின் காடு புகுந்து நடந்து வண்டில் பதை ஓரமா குறிப்பு பிடித்து மூன்றுமுறிப்பு கல்லிருப்பு பிரதான வீதி கடந்து ஒரு கிலோமீற்றர் தள்ளி நிலை எடுத்தோம்.. இரவு பார்வை முடிந்து பகல்.. எம்மை நன்றாக மறைத்து சூரியனுக்காய் காத்து இருந்தோம்..அவனின் நடமாட்டம் மிக குறைவா இருந்தது.. காலையும் அப்படி வாகன ஓட்டம் கூடுதலா இருக்கு ஒரு 30க்கு மேல் காவலரண்.. அதில் மூன்றில் ஒன்றில்தான் இரண்டு ஆமி என நின்று இருந்தான் ஒரு பொழுது போட்டுது.. இண்டைக்கு நெருங்கி பார்ப்பம் டம்மியா இல்லையா என்று இரவு நகர்ந்து பார்த்து விட்டு விடிய போவம் வெளியில தடையை தண்டி வந்தா ஓகே கணிவெடி பதை எடுப்பம் இல்லாட்டி பார்ப்பம் என்று குறி நிலைகளை பார்த்து விட்டு நன்கு பேரும் நடக்க தொடங்கினோம் . இரவுடன் காடு மாறி நடந்து வந்து இடம் பிடிபடாமல் வந்து வவுனிக்குளம் அப்பால் உள்ள கிடாய்பிடித்த குளம் பக்கம் வந்து ஏறி திரும்பி மூன்றுமுறிப்புக்கு நடந்து வந்து சேர பசி உயிரை கொண்டு போகுது.. ஆளிட நிலைமை சொல்லவேணும்.. ஆக்கள் வந்திட்டாங்கள் அனுப்பவோ..? என வாத்தி கேட்க.. உடனும் ஆள் கிளம்ப போகுது ஓடி வரட்டாம் என.. அந்த களையுடன் மறுபடி மெயினுக்கு ஓட்டம்.. என்னடாப்பா என்ன கதை சாப்பிட்டியலா..? டேய் தண்ணி கொடுங்க.. சரி இருங்கோ கதைக்கலாம் ஒரு அவசரம் இல்லை நோமலுக்கு வாங்கோ என்று அம்மான் சொல்லிட்டு செட்டில் ஏதோ கேட்டபடி இருந்தார்.. நாங்கள் தண்ணி குடித்து விட்டு சரி அண்ணே அவன் இவ்வளவு இடமும் நெருக்கம் இல்லை சும்மாடம்மி வளங்கள் மாங்குளம் ஊடா நடக்கு போல.. இந்த ரோட்டு சாப்பாடு மட்டும்தான் போகுது.. வடிவா பார்த்தனியலா பிசகு இருக்க கூடாது நான் இன்று ஆளை சந்திப்பன் முடிவு கேட்க சிக்கல் இருந்தா முதலே சொல்லி போடுங்க என அமான்.. அப்பொது தமிழ்வேந்தன் சொன்னான் இல்லை முன்னுக்கு நல்ல நிலை போட்டு இருக்கு அதை உடைச்சா உள்ள ஒன்னும் இல்லை என்று.. ஓகே வரைபடம் எடுத்து கோடு போட்டு சொன்னார் இவ்வளவு துரம் என்ன நிலைமையில் இருக்கு ஒரு கிழமை பாருங்கோ என... இந்த ஒரு கிழமையும் உலர்உணவு சாப்பாடு மச்சி என்று சொன்னபடி தளம் திரும்பி மீண்டும் இரவுக்கு பயணம்.. அதிகாலை மீளுதல் என அம்மானின் எல்லையை குறித்து எடுத்து வந்து தீபக் மாஸ்ரர் இடம் கொடுத்தம்.. பார்த்திட்டு கொண்டு போனவர் ஜெயம் அண்ணையுடன் பேசிவிட்டு அம்மானிடம் கொடுத்து வந்து சொன்னார் இனி அவை முடிவு எடுப்பினம் அதுவரை நீங்க போய் பார்க்க வேணும் நிலை மாறுதா இல்லையா என.. ஓகே இரண்டு கிழமை போய் இருக்கும் சண்டை ஒழுங்கு சிறிய அளவு ஏற்பாடு பண்ணி முன்றுமுறிப்பு ஒரு கிலோமிற்றர் தாக்குதல் நடைபெற்று தாக்கி அழிக்கப்பட்டது.. அதில் லெப்டினன் தமிழ்வேந்தன் வீரச்சாவு அடைகிறான்.. கூடி திரிந்தவன் உடைக்கலாம் என ஆணித்தரமா கூறி நின்றவன் அச்சமரில் விதையாய் விழுந்தான்.. தோழனை சுமந்தபடி தளம் திரும்பினோம்...
 2. லண்டன் பவர் ஸ்டார் வாழ்க
 3. இப்ப இருக்குற ஒரு சினிமாக்காரன் சொல்லுங்கோ வெளிப்படையா எமக்காக இறங்கியவன் எவனும் இல்லை சங்கங்கள் கட்டளை போட்டா வந்து சுவிங்கம் சாப்பிட்டு போவங்க இதுக்கு அவங்களுக்கு மரியாதையை வேறையா அண்ணா வெளிநாடுகளில் படம் ஓட இப்ப இரண்டு சொல் ஈழம் பற்றி இடையில் போடினம் அதுகூட பிழைப்புதான் பாருங்கோ .
 4. நன்றி வாத்தியார் ....சோழியன் ..சாந்தியக்கா
 5. சாதித்தவன் குருதியை சிந்தியவன் எல்லாம் கசக்கி எறியப்பட்ட வெற்றுத்தாள்போல் இருக்க கேப்பில ஆட்டோ ஓடியவன் தலவீறாம் வடக்கை நம்பி அழிந்தது போதும் .சாந்தி அக்கா .!
 6. பல இப்படியான நிஜங்களை பார்த்து இருக்கிறேன் அருமை அக்கா பதிவு .!
 7. நன்றி கருத்துக்கும் வரவுக்கும்
 8. ஜனநாயக வழி நின்று நெடுநாள் போராடி எம் தலையில் காலிமுகத்தில் சாணி பூசி உருட்டி பிரட்டி எடுத்து எள்ளி நகையாடி சிங்களம் மகிழ்ந்து இருந்த போது... கேட்க நாதியற்று கேட்பார் எவரும் இன்றி எம்மை காக்க எவர் வருவார் என தந்தை செல்வா ஒரு மொழி ஒருஇனம் என தமிழ்நாடு ஓடி ஐயாமாரை எம் .... நிலை சொல்லி அழ அவரோ தன்னிலை சொல்லிவிட்ட வரலாறு எம்மிடம் இருக்கு நானோ இறையாண்மை அடிமை நீயோ இன்னொரு அடிமை உனக்கு... என்னால் என்ன செய்ய முடியும் என விளக்கம் சொல்லி கை கழுவி விட்ட கதை நினைவிருக்கு எமக்கு காலம் கடந்தது வர எமக்கான கனவை சுமந்த ஒரு வீரன் வர நாம் பட்ட மகிழ்வு அளவில்லை.. தம்பியா வந்த அண்ணன் பின் தானை தலைவனாய் வளர்த்த கரிகாலன் எம் இனத்தின் விடிவெள்ளி எம்மை ஒரு பாதையில் ஒளியுடன் கூட்டி போன வழிகாட்டி தான் நேசித்த மண்ணை மக்களை கட்டி காத்த வரலாற்று நாயகன் ஈழம் என்னும் ஒரு தேசம்.. உலக வரைபடத்தில் உருவாக நின்ற ஒரு நாயகன் மக்களில் இருந்து புலிகளை உருவாக்கி புலிகள்தான் மக்கள் மக்கள்தான் புலிகள் என முழங்கிய தேசியத்தின் தலைவனை அவர் பின்னால் சென்ற மக்களை... இன்று 30 வருடம் வராதவன் 3வருடம் முன்வந்தவன் பூனை என்கிறான் இடத்தை நிரப்ப முடியாது என்கிறான் ஈழப் பெண்ணை விதைவைப் பெண்ணை மணப்பேன் இலை மலர ஈழம் மலரும் என்றான் நடந்தது வேறு ... புலித்தடைக்கு அனுமதி கொடுத்த சபாநாயகர் காளிமுத்து பெண் கைபிடித்து இந்திய.. இறையாண்மைக்கு கட்டுப்பட்டு அரசியல் நடத்தும் பயல் எம தமிழ் தலைமைகளை.... பூனை என்பதா முன்னம் பெரியார் பேரன் என்றார் இப்போ பெரியார் தெலுங்கன் என்றார் அவரின் அரசியல் சாசனம் இந்திய இறையாண்மைக்கு உள் பட்டவேனே கட்சியில் உறுப்பினர் ஆகலாம்.. என்று இருக்க கனடாவிலும் ஐரோப்பிலும் கிளை எதுக்கு டொலர்பார்க்க யூரோ பார்க்கவா சிவத்த துண்டு போட்டு விறைப்பா நின்றால் எம் தலைவன் ஆகமுடியும் என்கிற நினைப்பா எம் தலைவன் காட்டி போன கட்சி அவர்... உருவாக்கி போன கூட்டமைப்பு அதை கேள்வி கேட்கவும் மாற்றி அமைக்கவும் எமக்கே உரிமை சினிமா கூத்தடிக்கு இல்லை எம்மை கேள்வி கேட்கும் உரிமை.. பொன்சேகா கோமாளிகள் என்றபோது வராத கோவம் இப்ப ஏன் வருது விக்கி தமிழ்நாட்டு அரசியலை சொல்ல இவருக்கு ஏன் வருது கோவம் இவர் மட்டுமா அங்கே அரசியல் தலைவர் ... புலிபோல் சூடு போட்டு கொண்டாலும் பூனை புலியாக முடியாது மானே நீதான் எமக்கு அடுத்த காமடியன் பவரே பதவியும் கதிரையும் வர நீ நாளை நிப்பா திருமாவளவன் நிலைமையில்.. அரசியல் மாற்றும் மாற்ற பண்ணும்..!
 9. அநேக நாக்குகளில் வழிகிறது துர்நாற்றம் சிலவேளைகளில் விசமாகவும். அருமையான வரி .!
 10. ஹா ஹா ஹா முடில ரதி ஒரு இந்தியாவின் தேசிய கட்சி சீமானுக்கு பயமாம் ஏலே .
 11. நான் இன்னும் வயதுக்கு வராத காரணத்தால் இவை பற்றி எழுத விரும்பவில்லை
 12. வாழ்க சீமான் ஈழத்தின் திறவு கோல் இனத்தை காக்க வந்த விடிவெள்ளி எம் தன்மான உலக தமிழ் தலைவன் மேதகு சீமான் அவர்களை வாழ்த்தி வணக்கி அவரின் கடைசியில் சேர விரும்புகிறேன் ஏற்றுக்கொள்ளுங்கள் . ஈழதமிழன் லூசன் தேவையில்லாமல் தியாகம் அர்ப்பணிப்பு எண்டு செய்து செத்து போனதுதான் மிச்சம் ஒருத்தனுக்கும் அரசியல் அறிவு இல்லை சும்மா துவக்கு துக்கிட்டு அடிப்பான் கிழிப்பன் என்டுகிட்டு சும்மா அரைமணித்தியாலம் ஐநாவில பேசி பெற்று இருக்கலாம் அதை விட்டுட்டு ஒருத்தன் போய் ஐநாவில் தீக்குளிக்கிறான் ஆராவது தீக்குளித்தா அதில் நாங்க குளிர் கயவேனும் சும்மா தியாகம் கையை மடக்கி நீட்டி முழங்கி பேசினா எல்லாம் நடக்கும் 35 வருட போராட்டத்தை மூன்று வருடத்தில் இல்லமல் ஆக்கி என் பக்கம் எப்படி கொண்டு வந்தான் அதுதான் ராஜத்திரம் நாலு காசு பார்த்தமா கலியாணம் கட்டினமா பிள்ளையை பெறமா அண்ணன் சொன்னார் எண்டு அறிக்கை விட்டமா ஈழத்தில் பிறந்து வளர்த்த எங்களுக்கு தெரியாததை சீமான் பி பி சி க்கு சொல்லிட்டாராம் கேளுங்க இதுவரை எவனும் போராட்டம் பற்றி சொன்னதே இல்லை சீமான் மட்டும் முதல் முதல் உலக வானொலிக்கு சொல்லி இருக்குறார் அதுவே முதல் வெற்றி அடுத்து ஐநா வந்தது ஈழம் வென்றார் சீமான் . தேசியத்தலைவனுக்கு விசுவாசமா உண்மையா இருக்குற எவனும் சீமானுக்கு செம்பு தூக்கான் என்பது உண்மை சொல்லுக்கு முன் செயல் என வாழ்த்தவர் எங்கள் தலைவர் ...........வஞ்சனை செய்வாரடி வாய் சொல்லில் வீர்ரரேடி . .
 13. ஓம் பிராபகரன் முட்டாள் இந்த நூற்றாண்டில் எப்படி வாழ்வது என்று தெரியாமல் பேசாமல் சீமானிடம் கொடுத்துட்டு ஒதுங்கி இருக்கலாம் 30 னாயிரம் போராளிகளும் லட்சம் மக்களின் இழப்பும் வீண் தேவை அற்றது அரை மணிநேரம் ஐநாவில் பேசி பெறுவதை விட்டுட்டு மோட்டுத்தனமா நாங்க போராடி இருக்குறம் பாருங்கோ . எங்களிடம் இருக்கும் கோவணத்தை அவிழ்க்க சீமான் முயற்சி பண்ணுறார் அதுகும் போனால் மானம் போயிடும் எண்டுதான் நாங்க கத்துறம் .
 14. வெளி உலக்குக்கு சீமானை ஒரு இயக்குனரா மட்டும் தெரியும் அவர் சொல்லும்படி ஒன்றும் மிக பெரிய அரசியல் வாதி கிடையாது எதையும் தீர்மானிக்கும் சக்தியும் அவரிடம் இல்லை ஈழ போராட்டம் தொடங்கிய காலம் தொட்டு நாங்கள் ஒட்டுகுழுக்களுடன் மோதிட்டுதான் வாறம் எமக்கு இது ஒன்றும் புதிதும் இல்லை லாயிக்கா பேசிட்டு போகலாம் அண்ணே நாங்கள் தொடர்ச்சியா துரோக அரசியலை பார்த்து வளர்த்தவர்கள் அதனால் எவனையும் அதீதமா நம்புவது தவறு சில இடங்களில் தட்டி வைக்க வேண்டிய தேவை இருக்கு எமக்கு நமது போராட்டம் அதன் நகர்வும் புலிகளா வகுக்க படுவது சீமானால் அல்ல .
 15. அவரும் டிவியிலும் மைக்கிலும் மட்டும் கொக்கரிக்க முடியும் தமிழ்நாட்டில் ஜாதியை ஒழிப்பது என்பது பகல் கனவு அம்பி அவரே தன் ஜாதியில்தான் பெண் எடுத்தார் முன்னுதாரணமா அவர் ஒரு அருந்ததியர் அல்லது பள்ளர் விட்டில் பெண்ணு எடுத்து இருக்கலாம் அல்லவா பேசுவது சுகம் செய்யல கடினம் இந்தியா அப்படி அங்க சினிமாதான் வாழ்க்கை .
 16. சினிமாவில் அவரின் சம்பாத்தியம் எங்களுக்கு தெரியாதா போங்கண்ணா பகிடி விடாமல் சீமானை விட நான் நல்லா உணர்ச்சி பொங்க கையை மடக்கி கத்தி பேசுவன் எனக்கு பின்னுக்கு எத்தின பேர் வாரியல் . நேரடியான கேள்வி சீமான் ஈழ விடுதலைக்கு செய்ததை முடித்தா சொல்லுங்க மாணவர் போராட்டம் ஜெயிலில் இருந்தார் எண்டு நீட்டி முழங்க வேணாம் அதுல்லாம் ஒரு தியாகி முத்துகுமார் செங்கொடி தியாகத்தால் வந்தது அதை சீமான் பயன்படுத்தி கொண்டது சீமனால் தனியா ஏற்படுத்திய மாற்றம் ஒன்று சொல்லுங்கோ என் சண்டை .
 17. ஈழ தமிழர்களையும் அவர்களின் தேசிய தலைமைகளையும் விமர்சிக்கும் தாக்கும் அதிகாரம் யாரு சீமானுக்கு கொடுத்தது நோகாமல் நொங்கு எடுக்குற வேலை வேணாம் போராட தொடங்கிய எங்களுக்கு தெரியும் அடுத்த கட்டம் என்ன என்று அதை சீமான் தீர்மானிக்க வேணாம் .
 18. இசை எவரும் எம்மை வைத்து பிழைப்பார்கள் அவர்களால் ஒரு வரம்புக்கு மீறி போக முடியாது நமது தேவை மத்திய அரசில் எமக்கு சாதகமான அரசியலை முன் எடுப்பது தமிழ்நாடு இந்தியாவின் 29 மாநிலங்களில் ஒன்று அவ்வளவுதான் இவர் செய்வார் அவர் செய்வார் என்பது மாயை நாங்கள் தமிழ்நாட்டு வட்டத்தில் நிக்கிறம் வெளியில் போகவேணும் மற்ற மாநிலத்துக்கு எமது பிரச்சினை விளங்க வேணும் பிற மாநிலக்கரனுக்கு ஈழ தமிழர் பயங்கரவாதிகள் என்றுதான் தெரியும் அதை உடைக்கவேணும் அதுக்கான நகர்வுகள் முக்கியம் அண்மைய மெட்ராஸ் கபே படம் அதுக்கு ஒரு சாட்சி .
 19. நாங்களும் இது எல்லாம் செய்து கேட்டு களைத்து போனம் அதியமான் .முதல் வளர்மதி வரை கதைத்தம் சீமானிடம் தொடர்பை ஏற்ப்படுத்த அவர்கள் முடியாது என்றார்கள் இப்ப வளர்மதி வெளியில் வந்திட்டார் நாம் தமிழர் ஒரு ஜாதிக்கட்சியா மாறுது எண்டு சொல்லு அம்பி .சீமான் தனது பேட்டி ஒன்றில் சொல்லி உள்ளார் திராவிட கட்சியுடன் கூட்டணி இல்லை என்று ஒரு பேச்சும் விடாமல் கேட்பியள் அதை எப்படி விட்டியல் .
 20. அற்புதம் அம்மாவை போய் கூடி போறது நீங்க அவா போறது கிடையாது நீங்கள் இந்த உலகில் இல்லை சீமான் மாயைவிட்டு வெளியில் வந்து பாருங்க எது கற்பனை சுபா முத்துக்குமாரன் கொலைக்கு என்ன முடிவு யாரு செய்தது அவனே நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அவனை போட்டது யார் மேலோட்டமா சீமானை பார்ப்பதை நிறுத்துங்க அம்பி .
 21. இவ்வளவும் சீமான் வாயால் பேசிட்டு இருக்க உங்களை தூக்கில் போட்டால் உடலை என்னிடம் தருபடி சொல்லுங்கள் என முருகனிடம் கூறினார் ஆனால் வைகோ அதை சட்டபடி டெல்லியில் இருந்து மூத்த சட்டவாளர் ராம் ஜெம்த்தலனி அவர்களை கூப்பிட்டு துக்கி நிறுத்தினார் என்பதுதான் உண்மை . 90க்கு பிறகு வந்த இப்போது உள்ள இளம் சமூகத்துக்கு சீமான் ஹிரோ அவர்கள் வரலாற்றை இணையத்திலும் யுடிப்பிலும் பார்ப்பவர்கள் அரசியலும் மேடை பேச்சும் ஒன்று அல்ல .
 22. இதுதான் பையா உங்களிடம் நான் எதிர் பார்த்தது இவ்வளவு பேறும் அரசியலுக்கு வரமுன் புலிகளை பிரபாகரனை முன் நிறுத்தி வந்தவர்கள் வந்த பின் பதவி பட்டம் கதிரை ஆசை மாற்றும் அல்லது மாற்ற பண்ணும் இதை இன்னும் சீமானுக்கு கிடைக்க வில்லை கிடைத்த பின் இவர்கள் நிலைதான் அவருக்கும் கூட்டு சேராமல் அங்கு அரசியல் பண்ண முடியாது சீமான் சொல்வார் திராவிட கட்சியுடன் கூட்டணி இல்லை என்று அப்ப யாருடன் ஜாதி கட்சியுடனா எல்லாமே முரண் .