• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

அஞ்சரன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  2,597
 • Joined

 • Last visited

 • Days Won

  17

Everything posted by அஞ்சரன்

 1. அவனுக்கு வயது ஒரு பூக்கும் காலத்துடன் சேர்த்து இருந்தது இளமை வசீகரமும் அவனை நன்றாக வளப்படுத்தி இருக்க தன்னை இன்னும் மெருகேற்ற அடிக்கடி ஜிம்மிலும் போய் இருக்க தவறுவது இல்லை. என்ன ஆளும் வடிவு கெட்டிக்காரனும் வேற. முதல் பார்க்கும் எந்தப்பெண்ணும் ஒருமுறை இருமுறை திரும்பி பார்க்கும் அழகன். பழைய இதிகாச கதாநாயகன் போல வர்ணிக்கும் அளவு அழகு இருத்தும் என்ன பண்ணுறது. பிறக்கும் போது அவனுடன் கூடி பிறந்தது வெட்கம். எவரையும் திரும்பி பார்க்க அவன் கண்கள் தயங்கும். அவனுடன் போவது அவனை பார்க்கும் பெண் நம்மளையும் பார்ப்பாள் என்கிற நட்பாசை. சரி விசயத்துக்கு வருவம். ஆலை இல்லாத ஊரில் இலுப்பம் பூ சக்கரை என்பதைபோல நம்ம ஏரியாக்கு நாம்தான் கீரோ. லுமாலா சைக்கிள மடக்கி வெட்டுற வெட்டில நாலு பெட்டையள் சுழண்டு விழும் (அப்படி நம்ம நினைப்பு ). கருவாச்சிக்கும் கருத்தம்மா முனியம்மா பெண்ணுக்கும் நம்மமேல கண்ணு. நம்மட ஒரு லுக்குக்கு ஏங்கி திரியும் அதுகள். இது இப்படி இருக்க ரோட்டில நாம போனால் நம்ம பசுபதி ஐயா சொல்லுவாரு பாருடா மன்னர் காளைமாதிரி எப்படி தினவெடுத்து திரியுது எண்டு. குளிக்கிற்மோ இல்லையோ சேட்டு ஐயின்பண்ணிதான் போடுவம். கொலர் கலர் மாறி போனால் லேஞ்சி வைப்பம். பல ஐடியா இருக்கு கைவசம். சரிவிடுங்க மேட்டருக்கு வருவம். இப்படி போயிட்டு இருந்த வாழ்க்கையில இடையில் வந்தவன்தான் நான் முதலில் சொன்ன அவிச்ச றால் பையன். திடீர் என ஒருநாள் நம்ம ஏரியாக்கு வந்து நிண்டான். யாரு இவன் நம்மளயே குறு குறு எண்டு பார்க்குற பிள்ளைகள் இம்புட்டு அழகான பையன விடுவாளுகளா கோயிலுக்கு நேந்து விட்ட கோழி சேவல் கணக்கா வந்து நிண்டா? நல்லகாலம் வந்தவன் முதல் நட்பை என்னுடன் வைத்தான். அதால நமக்கு பிழைப்பு ஓகே. அவனுக்கு நம்ம ஏரியா பற்றி ஒருநாள் பூரா குளக்கட்டில் இருத்தி வகுப்பெடுத்து நா வறண்டு போனது வேறகதை. கோயிலுக்கு கூட்டிப்போனால் சாமிய மட்டும் பார்ப்பான். பக்கத்தில் நிக்கும் மாமியை பாரான். எனக்கு ஒரே டவுட்டு இவன் நல்லவனா கெட்டவனா எண்டு. அநியாயத்துக்கு நல்லவனா இருக்குறான் எண்டு அவன் கதை கேட்க முயற்ச்சி செய்தேன். தன் குடும்ப நிலைமையும் தான் வளர்ந்த கதையும் சொன்னான். இப்படி ஒரு உலகம் மறைவில் இன்னும் இருக்குது என்பதுதான் வேதனை. அவனை மிக கண்டிப்பாக வளர்த்து இருக்குறார் தகப்பனார். தன் ஜாதி பற்று பிறரை மதிக்காத நிலை தங்கள் குடும்பம் தவிர மற்றவர்களுடன் நிமிர்ந்து பேச அனுமதிக்காத தன்மை. வளர்ந்து ஆளாகி பெரியவன் ஆன பின் அவனின் தந்தையின் மரணம் இடம்பெயர்வு இவை இரண்டுமே அவனை ஒரு சமூகத்துக்கு தேவையான மனிதன் ஆக்கி இருக்கு. வெளிதோற்றம் வேறு ஒருவரின் மனநிலையின் பிரதிபலிப்பு வேறு என்பதை அவனுடன் பழகிய நாட்கள் எனக்கு கற்று கொடுத்தது. எல்லோருடைய கடந்தகாலம் ஒரு இருண்ட அல்லது சொல்லமுடியாத பக்கத்தை கொண்டே இருக்கு என்பதுதான் ஆச்சரியம் ஆகவே உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு சிறிய சுகந்திரம் கொடுத்து வளருங்கள் பின்னாளில் கஷ்டம் தெரியாமல் வாழ என்னுடன் இருந்த நட்பு வைத்த காலத்தில் மிக சந்தோஷமா இருத்தான் இப்ப எப்படி இருகுறனோ அவனுக்கே வெளிச்சம் .
 2. அவ் ஜீவா அண்ணா கதை கற்பனை கலந்து எழுதபட்டது .
 3. முகம் அழகா இல்லாதவன் ரிம் தான் பண்ணனும் நன்றி நெடுக்கலபோவான் . என் கொலைவெறியன பெயர் ஷப்பா.
 4. உங்கள் ஆதரவுக்கு நன்றி அனைவருக்கும் .........என்னை வைச்சு காமடி கீமடி பண்ணவில்லைதானே
 5. நான் 10ஆம் வகுப்பை நிறைவு செய்யமுன் என் முன்னால் அடிக்கடி வந்து போவாள். எப்படியாவது அவளை தொட்டு பார்க்கும் ஆசை எனக்கு ஆனால் வயது இல்லை என என்னை போக தடுப்பார் உறவுகள். ஆனாலும் என்னுள் ஆசை தீயாய் எரிய முயற்சி செய்தவண்ணம் அவளின் காதலர்களுடன் அடிக்கடி தொடர்பில் இருப்பேன். அவர்கள் அவளை பலமுறை கொண்டு வந்து காட்டி போவார்கள். ஆசை அதிகமாக நானும் சண்டை பிடித்து அவர்களுடன் போய் விட்டேன். விளைவு மூன்று மாதங்களில் எனக்கு சொந்தம் ஆனாள். அவளை கழட்டி பிரித்து சுத்தம் பண்ணி அணைத்து தூங்கும் சுகம் எவளவு இனிமை. அவளில் வரும் வாசனை ஒரு தனி சுகம். உறக்கத்திலும் பாதுகாப்பை உறுதிப்படித்தி வெட்கம் அற்று உறங்குவாள். கைகளில் ஏந்தி அவளை காடுமலை வயல்கள் எல்லாம் நடப்பேன்.என்னுடன் சுற்றுவது எண்டால் அவளுக்கு கொள்ளை பிரியம். போகும் வழிகளில் மான் மரை அணில் எலி எதுகும் மிச்சம் இல்லை பதம் பார்ப்பாள் அவளை வருடி நடக்கும் பொழுது என் சந்தோஷம் சொல்லி மாளாது. பெரும் தடுப்பு ஒன்று போட்டு அவளை வைத்து கடும் சண்டை. அவள் என் கைகளில். நான் பக்கத்தில் நின்றால் கடும் வாய்க்காரி. 31பல்லையும் கழட்டி வைப்பாள். மறுபடியும் நான் பூட்டி விட்டால் அதுகும் மீதம் இருக்காது காறி உமிழ்ந்து துப்பி விடுவாள். சண்டையில் இருக்கும் வேகமும் என்னை காப்பற்ற இருக்கும் விவேகமும் அடா போடவைக்கும். ஒரு முறையும் நம்பிக்கை துரோகம் எனக்கு செய்யாதவள். நோய் நொடி என களைப்பு அடையாதவள். அவள் எனக்கு கிடைத்தது வரமே என நான் இருக்க ஒருமுறை கடும் சண்டை. அவளின் வாயில் வீக்கம். கூடுதலா பேசி இருப்பாள் போல. வைத்தியரை நாடும்படி எனக்கு கட்டளை வருகிறது. அழைத்து போனேன் சுற்றி பிரட்டி முன்னாள் பின்னால் பார்த்து விட்டு சொன்னார் இனி நீ அவளுடன் வாழமுடியாது உனக்கு இன்னும் ஒரு புதிய காதலி ஏற்பாடு செய்கிறம் போட்டு இரண்டு நாள் கழிய வா என. பெரும் சோகம். என் சந்தோஷம்கள் துக்கம்கள் எல்லாவற்றிலும் கூட இருத்தவள் அவளை எப்படி பிரிவேன் என. ஆனாலும் எதோ ஒரு காதலி இல்லாமல் என்னால் வாழ முடியாது என்பதால் 2 நாள் கழிந்து சென்றேன். ஆச்சரியம் எனக்கே. ரஷ்சியன் 47வயது காதலியை வாங்கி வைத்து விட்டு ஒரு புதிய அமெரிக்க எம்16 காதலியை காட்டி இனி இவளுடன் வாழ் என சொன்ன போது நான் பட்ட ஆனந்தத்துக்கு அளவே இல்லை இனி எந்த சூழலிலும் உன்னை விட்டு நான் பிரியேன் என மனதில் சத்தியம் செய்து அவளை கட்டி அணைத்தேன். கந்தக வாசம் என் நாசியில் பட்டு சிலிர்க்க என் துப்பாக்கி என்னை இறுக்க பிடி என்றது ..!!
 6. பெரும்பாலும் கடையில எண்டு நினைக்குறன் காசு கொடுத்தது கொடுக்காதது எனக்கு தெரியாது
 7. உங்களை எல்லாம் நினைத்தால் பாவமா இருக்கு நன்றி அனைவருக்கும் .
 8. இசைக்கலைஞன்அன்று சிங்களவனிடம் இருந்தது "பயங்கரவாதம்" எனும் அரசியல் ஆயுதம். இன்று தமிழனுக்குக் கிடைத்திருப்பது "போர்க்குற்றம்" எனும் பிரம்மாஸ்திரம்

 9. என் உங்களுக்கு அப்படி ஒரு ஆசை
 10. மீசை என்ன லாபம் வளர்த்தால் டவுட்டு
 11. புங்கையூரானுக்கும்... இதில் அடங்கியுள்ள‌ விடயங்கள், உண்மையாகவே இவ்வளவு நாளும் தெரியாதா? அவ் அப்பாவி அங்குசாமி .
 12. உண்மை முயற்சி செய்ய வேணும் .
 13. ஒருவரும் கவிதையை ரசிப்பதா இல்லை பூட்டை திறப்பதில் குறியா உள்ளீர்கள் :p
 14. ஓகே வந்திட்டுயல் டீயை சொலுங்கோ :p நல்வரவு ஆகட்டும் .
 15. அதுசரி என் சொல்ல மாட்டியள் மொழு மொழு நிலைமை வரும் வரும் :p
 16. ஆணா பிறந்தால் ஒரு வயதுக்கு பிறகு ஆரம்பிக்கும் அதீத ஆசை மீசை எப்பொழுதும் கண்ணாடியில் முகம் பார்க்க உள்மன கேள்வியில் எழும் ஒரு ஆதங்கம் எப்ப வளரும் எப்படி வளரும் நாம வளர்க்க வேணுமா அதுவா வளருமா தாடையை வழித்தா வருமா அல்லது வந்தபின் வழிக்க வேணுமா யாரிடம் கேட்கலாம் எப்படி கேட்கலாம் அப்பா சேவ்செய்யும் பிளேட்டை ஆட்டை போட்டு அடிவளவில் போய்நிண்டு கண்ணாடி இல்லாமல் கண்டபடி இழுத்து வெட்டுக்காயம் இப்பொழுதும் போகவில்லை அடையாளம் மீசையை முறிக்கிட்டு போறவனை பார்த்து பொறாமை பெரிய இவரு எண்டு நினைப்பு எங்களுக்கும் வளரும் எல்லோ உள்மன களிப்பு வளர்த்த பின் தெரித்தது பராமரிக்க பத்து ரூபா கிழமைக்கு வேணும் எண்டு அதுவரை மீசை மேல் இருத்த ஆசையெல்லாம் குறைந்து தடுக்கும் யோசனை தானாக வர மனதில் காரணம் இருக்கு என்ன தோல்வி எண்டாலும் கேட்கும் முதல் கேள்வி மண் ஒட்டவில்லை என்னும் பெரும் நக்கல் நையாண்டி அன்று எடுத்த முடிவு திடமா நான் வளர்ப்பது இல்லை இனிநான் மீசை கிளின் சேவ் இனி எவர் சொல்வார் மண் ஒட்டியதை பற்றி இவர்களுக்காய் நான் தண்ணியில விழமுடியும் அதனால் போனது என் ஆசை மீசை . (முறிக்கிட்டு யாரவது கேள்வி கேட்ககூடாது என்னய்யா ஆமா ) யோகு அருணகிரி .
 17. நான் இன்னும் வயதுக்கு வரவில்லை அதனால் படிக்க வில்லை :p இந்த உலகத்துக்கு நீங்கள் எதோ சொல்லவாறியல் எண்டு மட்டும் புரியுது பகிர்வுக்கு நன்றி அண்ணே .
 18. நன்றி கோமகன். மலர்கள் மிக அழகு. .
 19. கோமகன் அண்ணே அந்த வயதில் எழுத்த கேள்வி இப்ப தெளிவா இருக்குறம் ஏலே :p நன்றி கருத்துகூறிய அனைவருக்கும் .
 20. சாத்திரியாரின் மனைவி பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை மற்றவர்களுடன் சேர்ந்து நானும் வேண்டுகிறேன்.
 21. வெட்டி கதை பேசி வெண்ணிலா ஒளியில் என் வீட்டு முற்றத்தில் அக்கம் பக்கம் உள்ளவர் எல்லாம் சேர்ந்து இருந்து பக்கத்துவீட்டு நிலவும் நானும் ஓரமாய் விடுப்பு கேட்டு தெரித்த சினிமா தெரியாத அரசியல் போன கோயில் என வண்ண வண்ண கலர் பூசி கதை பேசி இருந்த காலம் விஜயகந்தும் அர்ஜுனும் இந்தியாவை காப்பது போல் எமக்கு ஒரு ராம்போ இருந்தா நாடு விரைவா கிடைக்கும் என எமக்குள் ஓடும் என்ன ஓட்டம் தலைகால் புரியா சந்தோஷம் பக்கத்து வீட்டு பெடியள் எல்லாம் நல்லவங்கள் இல்லை நிலா நானே உனக்கு எல்லாம் செய்யும் யோக்கியன் என பொய்பேசி அறியாத வயது அதில் ஆயிரம் கதைசொல்லி மனதுக்குள் பூரித்து நமக்குள் ஒரு உலகம் ஏற்படுத்தி வண்ணத்து பூச்சி போல இறக்கை விரித்து திரிந்த காலம் அது வெட்டை வெளியும் பூவரசம் மரநிழலும் இலைகளில் சுருட்டிய பீப்பியும் கொடுத்த சந்தோஷம் எப்பொழுதும் மனதில் இருக்க ஒருநாள் இரவு என் நிலா வரவில்லை கேள்வியது மனதில் எல்லோரும் சிரித்து இருக்க நான் மட்டும் சோகமாய் ஒரு கட்டத்தில் முடியாமல் போக கேட்டுவிட்டேன் நிலா அம்மாவிடம் உங்களுடன் ஏன் நிலா வருவது இல்லை என் வீட்டுக்கு இப்பொல்லாம் என ஆதங்கத்தை அவள் பெரிய மனுசி ஆகிட்டாள் அக்கம் பக்கம் இரவில் போகக்கூடாது காத்துகருப்பு படுமாம் அதுகும் எனக்கு புரியல எதுகும் எனக்கு விளங்கவில்லை நேற்றுவரை என்னுடன் இருந்து கதை பேசியவள் எப்படி பெரியவள் ஆனால் நான் மட்டும் சின்னவனா இருக்க மீண்டும் விடைதெரியா கேள்வியுடன் உறக்கத்துக்கு மூன்றுகிழமை கடந்திருக்கும் பார்க்கவே முடியாதா என என் மனம் ஏங்கி இருக்க ஒருநாள் காலை என் வீட்டு வேலியோரம் நின்றிருந்தால் என் நிலா என் கண்கள் ஆயிரம் கேள்வியுடன் அவளை பார்க்கக் அவள் கண்கள் ஓராயிரம் ஏக்கத்துடன் என்னை பார்க்க சிறுவயது குறும்பும் விளையாட்டு தனமும் ஒரு புரிதலாய் எம்முள் மாறியிருக்கு என என் மனம் கதைசொல்லிச்சு எனக்கு இலைமறை காயாய் இளையவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள் வாழ்வின் மாற்ற விநோதத்தை பல கேள்விட்டு விடைகிடைக்கும் என்னை போல நல்லவர்க்கு (நோ பேசக்கூடாது )உங்களையும் சேர்த்து புரிதல் அறிதல் தெரிதல் எல்லாம் ஒரு ஆவல் ..! யோகு அருணகிரி .