Jump to content

அஞ்சரன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2597
  • Joined

  • Last visited

  • Days Won

    17

Everything posted by அஞ்சரன்

  1. எங்கள் போராட்டம் திசைமாறி போய் விட்டது : சீமான் திண்டுக்கல்லில் நடந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி இல்ல திருமணத்தை, அந்த கட்சியின் ஒருங்கிணைப் பாளர் சீமான், அவரது மனைவி கயல்விழி ஆகியோர் நடத்தி வைத்தனர். முன்னதாக சீமான், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘’தஞ்சையில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்ற சுவர் இடிக்கப்பட்டதை கண்டித்தும், பழ.நெடுமாறன் உள்ளிட்ட 83 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்ததை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை (இன்று) மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்று போராடி கொண்டிருந்த சூழ்நிலையில், நினைவு முற்ற சுவர் இடிக்கப்பட்டதால் எங்கள் போராட்டம் திசைமாறி போய் விட்டது. தமிழக சட்டசபையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, முன்கூட்டியே தகவல் சொல்லாமல் அவசர, அவசரமாக நினைவு முற்ற சுவர் இடிக்கப்பட்டது. இதில், இந்திய உளவுத்துறை அமைப்புகளுக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது. நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவரை பெயர்த்து எடுத்திருப்பதன் மூலம் எங்கள் உணர்வுகளை சிதைக்கவும், அடக்கவும் முடியாது. இந்த சம்பவத்துக்கு பிறகு மாபெரும் எழுச்சி உருவாகி உள்ளது. இடிக்கப்பட்ட இடத்தை, தினமும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து செல்கின்றனர். இலங்கையில் 90 ஆயிரம் தமிழ்ப் பெண்கள் விதவைகளாக உள்ளனர். பாலியல் சித்ரவதை செய்யப்பட்டு பெண்கள் கொல்லப்பட்டனர். இசைப்பிரியா, பாலசந்திரன் கொலை சம்பவம் நடந்த போது தி.மு.க. ஆட்சி யில் இருந்தது. அப்போது எல்லாம் பேசாமல் இருந்துவிட்டு, தற்போது ஈழப்பிரச்சினை பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசுகிறார். தேர்தல் தேவையை உணர்ந்து, தற்போது அனைத்து கட்சியினரும் ஈழப்பிரச்சினை பற்றி பேசுகின்றனர். ஈழப்பிரச்சினை இல்லாமல் அரசியல் இல்லை. இது ஒரு வரலாற்று மாற்றம் ஆகும். மன்மோகன்சிங் பிரதமரான பிறகு 4 தடவை காமன்வெல்த் மாநாடு நடைபெற்றிருக்கிறது. இதில் 2 மாநாட்டில் அவர் பங்கேற்கவில்லை. தற்போது இலங்கையில் நடைபெறும் காமல்வெல்த் மாநாட்டில் தமிழர்களின் உணர்வுகளை மதித்து கலந்து கொள்ளவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது. மத்திய அரசு மற்றும் ராஜபக்சே அரசு ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்துள்ளதாக விளம்பரப்படுத்துவது ஏமாற்று வேலை ஆகும். அப்படி உதவி செய்திருந்தால் சேனல்–4 டி.வி. குழுவினரை வவுனியா பகுதிக்குள் நுழையவிடாமல் ஏன் தடுத்தனர். சமீபத்தில் நடந்த தேர்தலில், தமிழர்கள் ராஜபக்சே கட்சிக்கு ஏன் ஓட்டு போடவில்லை. காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவதன் மூலம் ராஜபக்சேவின் இனப்படுகொலை, போர்க் குற்றம் ஆகியவை மூடி மறைப்பட்டு விடும். 2015–ம் ஆண்டு வரை காமன்வெல்த் தலைவராக ராஜபக்சே இருப்பார். இதனால் அவர் மீது எந்த குற்றச்சாட்டும் சொல்ல முடியாமல், வேடிக்கை பார்க்க வேண்டிய நிலை ஏற்படும்’’என்று கூறினார். http://www.naamthamilar.ca/?p=270373.html
  2. எவர் வந்தாலும் கடைசியா பழிய மத்தியில் போட்டு தப்புறதுதான் காலம் காலமா நடக்கு நாங்கதான் ஏமாந்து போறம் பாவப்பட்ட இனம் ஈழ தமிழ் இனம் .
  3. என்ன நீங்களே இப்படி பல்டி அடிச்சா மலையூரான் சீமானை நம்புங்கோ மண்டியிடாது மானம் ஆனால் பெட்டி வாங்கும்
  4. அப்பாடா ஒருமாதிரி ரோவில் பழி போட்டு அம்மாவின் கோவத்தில் இருந்து நாம தப்பிட்டம் ....நெடுமாறன் ஐயாவும் வைகோவும் தான் பாவம் பிழைக்க தெரியாதவர்கள் அரசியலில் நேற்று வந்தவருக்கு கூட உள்ள அரசியல் அறிவு அவர்களுக்கு இல்லை . முள்ளிவாய்க்கால் முற்றம் தகர்ப்பின் பின்னணியில் "ரோ"- பழ.நெடுமாறன் ஐயாவை விடுதலையின்றி தடுத்து வைக்க முயற்சி: சீமான் சீற்றம்
  5. செந்தமிழன் ஒரு கலியாண வீட்டுக்கு போயிட்டார் அங்க சொல்லி இருக்குற இது அனைத்தும் றோவின் செயல் என்று அதால் இப்ப அவரும் செப் ஜெயாவுடன் பகையும் இல்லை . இத்துடன் அனைவரும் இலை மலர ஒன்றினைவோம் ...........எங்க ஒருக்கா கையை மடக்கி சொலுங்கோ 'என் அண்ணன் சொன்னார் '.....!
  6. இந்திய அரசியல் முறை தெரிந்தா நிங்க கூப்பாடு போடுறியள் இறையான்மை அடிமைக்கு இன்னெரு அடிமை வக்காலத்து . இது தெரிந்துதான் நாங்க வேணாம் அவங்க எங்களை வைத்து பிழைப்பு நடத்துறாங்க என்று சொல்லுறம் பாருங்கோ . பேஸ்புக் இல்லாட்டி சுயகருத்துக்கு பஞ்சம் தான் இங்க கிளிப்பிள்ளைகள்
  7. தமிழ்நாட்டு முதலவர் தமிழர் தானே அவருக்கு ஏன் ஆங்கிலத்தில் கடிதம் தமிழில் எழுதி போடுங்கோ நானும் கையெழுத்து போடுறன் துளசி .
  8. நாங்கள் செத்து விழுந்தபோது .....எம் உடைகள் களையப்பட்டபோது ...இசைப்பிரியா கதறி அழுதபோது ...இந்த சூடு சுரணை மானம் ரோஷம் எல்லாம் எங்க தமிழ்நாட்டு தமிழன் என்ன அடைவு கடையிலா வைத்து இருந்தான் அண்ணே . இனி புடுங்கிறது எல்லாம் தேவையில்லா ஆணி எவன் புடுங்கினா என்ன எங்களுக்கு தலைக்கு மேல போனபின் சாண் என்ன முழமென்ன .
  9. உன்னால் வாழ முடியாவிட்டால்- திருமணம் செய்யாதே! உன்னால் வாழ வைக்க முடியாவிட்டால்- குழந்தை பெற்றுக் கொள்ளாதே! உன்னால் போராட முடியாவிட்டால்- புரட்சி பன்னாதே! .... . . அன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரை இழந்தோம்! இன்று முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மானத்தை இழந்தோம்! ### மறுபடியும் எங்கள் வலிகளை வைத்து காமெடி பண்ணிவிட்டார்களே- (நன்றி ..பேஸ்புக் )
  10. நன்றி பேஸ்புக் ..ட்விட்டர் ...மேலதிக செய்திகளுக்கு இணைத்து இருங்கள் காமன் வெல்த்தும் ..மாணவர் போராட்டமும் காணமல் போயிட்டு சின்ன சுவர் இடிப்பில் இதுதான் இந்திய அரசியல் யுத்தி .
  11. இது என்ன கொடுமை உங்க விசுவாசத்துக்கு அளவே இல்லையா நாங்கள் தமிழக பிழைப்பு அரசியலை விமர்சனம் செய்கிறம் அதை நிங்களா முடிவு எடுத்து புலிகளுக்கு எதிரான கருத்து மாற்றுவது உங்க தப்பு ஐயாமாரே . எங்க கொள்கையும் எங்கள் இலக்கும் எங்கள் தலைமையும் சரியா இருக்கு எனக்கு சீமான் போறவர் தேவை படாதவர் அவ்வளவுதான் நாங்கள் சீமானை நம்பி போராட போகவில்லை பாருங்கோ .
  12. ஒன்னும் கிழிக்க வேணாம் ஈழ தமிழனை வாழவிட்டா போதும் சாமி அவங்க கிழிச்சதை 2009 பார்த்திட்டம் முதல் அவங்களை பொத்த சொல்லுங்க இன்னும் ஒரு 40 ஆயிரம் தேவை படுத்து போல இவனுகள் பிழைப்பு நடத்த சீ என்ன மனுஷர் பிணத்தில் பணம் பார்ப்பது இதில ஜால்ரா வேறு போங்க சேர் உங்க ஈழ பற்றும் நிங்களும் . மொத்தமா எல்லோரு ஓடி வந்தவங்க தான் போற பயத்தில்தான் இப்புட்டு ஒப்பாரி இருக்கும் போது பாலுத்த மாட்டம் செத்தபின் எதுக்கு . ஈழம் இல்லாமல் தமிழ்நாடில் அரசியல் செய்ய ஆயிரம் பிரச்சினை இருக்கு ஆனா ஊனா என்றால் ஈழம் தூ .
  13. ஐயா இவனுங்க சினிமா எல்லாம் பார்த்து களைச்சு போனம் இனி எவனையும் நம்பும் எண்ணம் இல்லை எல்லாம் வெறும் சீன் நாளை வேறு ஒன்று கிடைக்கும் அதுவரை இது ஓடும் படங்களை போட்டு சேர் பண்ணிட்டு திரியவேண்டியது தான் ஒன்னும் ஆகுற காரியம் இல்லை பாருங்கோ .
  14. எனக்கும் கூத்தாடிகளுக்கும் என்ன சம்மந்தம் நான் என் அவங்களுக்கு அழவேணும் . எம்முடன் களத்துக்கு வந்தனா அல்லது பதுங்குகுழி வெட்டி தந்தானா எம் மக்களின் துயரில் கூட இருந்தார்களா எதுக்கு ஆதரவு கொடுக்க வேணும் நான் ஏன் கொடுக்கவேணும் ஆதரவு எமது சக போராளி பெண்களுக்கு ரைபிள் துடைத்து கொடுத்தாரா அல்லது சமையல் செய்தாரா நாங்கள் போராடும்போது சிங்களத்தி பூஜாவுடன் சினிமா சூட்டின்க் இனம் அழிந்தபின் ஈழ பிழைப்பு பகலவன் விஜய்யுடன் அஜித்திடம் அழைப்புக்கு காத்திருப்பு ஒன்றும் இல்லை இப்போ கட்சி இதில நான் கொடுக்க வேணும் ஆதரவு ... ஈழத்து நொந்த பொம்மம்ன் :D
  15. சுவர் இடிப்புக்கு கூடி அழும் தலைவர்கள் எல்லாம் ஏன் கூட்டணியை உருவாக்கலாம் தானே அது என்ன தேர்தல் வந்தா ஆளுக்கு ஒரு திசையில் போற பழக்கம் .! காசு ...பணம் ...துட்டு ..மணி மணி ..!
  16. அம்பி மனைவியுடன் வந்து இருக்குறார் ஊரில ஆமிக்கு பயந்து பிள்ளையை தூக்கிட்டு ஆண்கள் போவது போல எல்லாம் ஓர் முன் எச்சரிக்கைதான் . உங்களுக்கு நகல் வேற அக்கா
  17. இது எல்லாம் நாளை அம்மா விடு அறிக்கையுடன் மறத்து போடும் லூசா விடுங்க லூசா விடுங்க ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் நமக்கு ஒரு கவலை இல்லை இந்தியனால் எந்த தீர்வும் கிடைக்காது பாருங்கோ . ஆர்ப்படங்களுக்கு வந்தவர்களை விட 'ஆரம்பம்' படத்துக்கு வந்தவர்கள் அதிகம் வசூலும் அதிகம் என்பதுதான் தமிழ்நாட்டின் உண்மை. முதலில் நாங்கள் எங்க மக்களுக்கு என்ன பண்ணலாம் எண்டு யோசிப்பம் நம்ம பிள்ளைகளுக்கு விளக்கேற்றும் வழியை பார்ப்பம் கூத்தாடிகள் காமடி சோ பாராமல் .
  18. ஒருகரை ரோட்டு சுவர் இடிக்க பட்டத்துக்கு அதை அரசியல் ஆக்கி ஜெயாவை துரோகி ஆக்கி அரசியல் இலாபம் தான் அங்கு நடக்கு எல்லாம் ஒருவகை பிழைப்புதான் . இவனைக் காட்டுற சினிமாவால முழுதும் இடிக்க படும் அபாயம் இருக்கு அம்மணி அஞ்சுவதும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை என்று அடிக்கடி சொல்லும் .
  19. கட்ட முதலே சொன்னம் வேணாம் என்று கேட்டியலே இப்ப அழுது என்ன பயன் இந்தியா நிலைப்பாடு மாறப்போவது இல்லை தமிழ்நாட்டுக்கு பயந்து மத்திய அரசு முடிவு எடுக்கும் என்கிற நினைப்பை மாற்றுங்கள் 29 மாநிலம் மிகுதி இருக்கு தொலுன்கான பிரச்சினையவே கண்டுக்காத மத்தி எங்களை கண்டுக்கும்மா . மாறா மத்தி என்ன சொல்லுதோ றோ என்ன நினைக்குதே அதுதான் நடக்கும் அது எவர் ஆட்சியில் தமிழ்நாட்டில் இருந்தாலும் மீறினால் ஆட்சி கலைக்கப்படும் என்பது தெரிந்த விடையம் இதில் ஜெஎன்ன கருணாநிதி என்ன இறையான்மை மிஞ்சி நாங்கள்தான் தலையில் தூக்கி ஆடுவது அவரு செய்வார் இவரு செய்வார் என்று . ஈழம் எங்கள் பிரச்சினை நாங்கதான் முடிவு எடுக்க வேணும் தவிர அவர்கள் அல்ல ஆதரவா இருக்கலாம் தமிழ்நாடு எதையும் செயல் படுத்த முடியாது முதலில் அவர்கள் போராடவேண்டியது புலிகள் மீதான தடை எடுப்புக்கு அதை செய்து முடித்தாள் இவ்வளவு பிரச்சினை வராது தேவையான வேலை செய்யாமல் தேவையில்லா செலவுகளும் வெட்டி பேச்சுக்களும் தீர்வை தராது என்பது உண்மை . மண்டியிடா மானம் ........அடங்கி கிடக்கும் பெட்டி பாம்பு
  20. சோழியன் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள் மேலும் வளரனும் நீங்க அண்ணே
  21. ஆயிரம் பச்சைகளைத் தனதாக்கிய தமிழ் சிறி அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்.
  22. உலகம் விழிப்பா தான் இருக்கு தமிழர் நாங்கதான் தூங்கிவிட்டம் என்பது மட்டும் உண்மை .

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.