Jump to content

அஞ்சரன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2597
  • Joined

  • Last visited

  • Days Won

    17

Posts posted by அஞ்சரன்

  1. முள்ளி வாய்க்கால் முற்றம் இடிப்பு முழுத்தமிழர்களையும் இன்னொருமுறை இடிக்க நினைக்கும் ஒரு செயல் ...சூடு சுரணை ,மானம் ,ரோசம் உள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் இது சுடும் .சுடாதவர்களே என்னை மன்னியுங்கள் ........

    நாங்கள் செத்து விழுந்தபோது .....எம் உடைகள் களையப்பட்டபோது ...இசைப்பிரியா கதறி அழுதபோது ...இந்த சூடு சுரணை மானம் ரோஷம் எல்லாம் எங்க தமிழ்நாட்டு தமிழன் என்ன அடைவு கடையிலா வைத்து இருந்தான் அண்ணே .

     

    இனி புடுங்கிறது எல்லாம் தேவையில்லா ஆணி எவன் புடுங்கினா என்ன எங்களுக்கு தலைக்கு மேல போனபின் சாண் என்ன முழமென்ன .

     

  2. உன்னால் வாழ முடியாவிட்டால்- திருமணம் செய்யாதே!
    உன்னால் வாழ வைக்க முடியாவிட்டால்- குழந்தை பெற்றுக் கொள்ளாதே!
    உன்னால் போராட முடியாவிட்டால்-
    புரட்சி பன்னாதே!
    ....
    .
    .
    அன்று முள்ளிவாய்க்கால் மண்ணில்
    உயிரை இழந்தோம்!
    இன்று முள்ளிவாய்க்கால் முற்றத்தில்
    மானத்தை இழந்தோம்!
    ###
    மறுபடியும் எங்கள் வலிகளை வைத்து காமெடி பண்ணிவிட்டார்களே-:(

     

    (நன்றி ..பேஸ்புக் )

     

  3. நன்றி பேஸ்புக் ..ட்விட்டர் ...மேலதிக செய்திகளுக்கு இணைத்து இருங்கள் :D

     

     

    காமன் வெல்த்தும் ..மாணவர் போராட்டமும் காணமல் போயிட்டு சின்ன சுவர் இடிப்பில் இதுதான் இந்திய அரசியல் யுத்தி .

  4. இது என்ன கொடுமை உங்க விசுவாசத்துக்கு அளவே இல்லையா நாங்கள் தமிழக பிழைப்பு அரசியலை விமர்சனம் செய்கிறம் அதை நிங்களா முடிவு எடுத்து புலிகளுக்கு எதிரான கருத்து மாற்றுவது உங்க தப்பு ஐயாமாரே .

     

    எங்க கொள்கையும் எங்கள் இலக்கும் எங்கள் தலைமையும் சரியா இருக்கு எனக்கு சீமான் போறவர் தேவை படாதவர் அவ்வளவுதான் நாங்கள் சீமானை நம்பி போராட போகவில்லை பாருங்கோ .

    • Like 1
  5. ஓ நல்லது! அப்படி எனில் நீங்கள் என்னத்தைக் கிழிக்கலாம் என எதிர்பார்க்கின்றீர்கள். சீமான் ஒரு பதவிக்கு வந்து ஒன்றுமே செய்யாமல், ஏமாற்றி இருந்தால் கூட அவரைத் திட்டுவதில் நியாயம் உள்ளது. ஆரம்பித்த கட்சியே என்னமும் முழுமையடையவில்லை. அதுக்குள் அவர் இப்படித் தான் என்று சொல்ல நீங்கள் என்ன குடுகுடுப்புக்காரனா? உங்களை யாரும் நம்பச் சொல்லவில்லை. நீங்கள் எது முடியுமோ அதைச் சொல்லுங்கள். நாங்களும் வருகின்றோம். இல்லையெனில் பொத்திக் கொண்டு வேலையைப் பாருங்கள்...

     

    ஒன்னும் கிழிக்க வேணாம் ஈழ தமிழனை வாழவிட்டா போதும் சாமி அவங்க கிழிச்சதை 2009 பார்த்திட்டம் முதல் அவங்களை பொத்த சொல்லுங்க இன்னும் ஒரு 40 ஆயிரம் தேவை படுத்து போல இவனுகள் பிழைப்பு நடத்த சீ என்ன மனுஷர் பிணத்தில் பணம் பார்ப்பது இதில ஜால்ரா வேறு போங்க சேர் உங்க ஈழ பற்றும் நிங்களும் .

    ஈழ தமிழன் அனைவரும் போராடினானா.

    போராடினால் இப்படி தோற்றிருப்பானா. :D

    நீங்கள் களத்தில் நின்றீர்களா?

    இல்லை ஓடி வந்தீர்களா? :D

    வசவுகள் எமக்கு இல்லையா?

    தனியே தமிழக தமிழனுக்கா? :D

    நாங்கள் எதையும் செய்ய மாட்டோமா?

    செய்பவனையும் திட்டி தீர்ப்போமா? :D

     

    சும்மா அடுத்தனவை குறை சொல்ல முன்னம் நாங்கள் என்ன பண்ணினோம் என்பதையும் பார்த்தால் நல்லது. :lol::icon_idea:

    உங்களை யார் அழ சொன்னது? <_<

     

    மொத்தமா எல்லோரு ஓடி வந்தவங்க தான் போற பயத்தில்தான் இப்புட்டு ஒப்பாரி இருக்கும் போது பாலுத்த மாட்டம் செத்தபின் எதுக்கு .

     

    ஈழம் இல்லாமல் தமிழ்நாடில் அரசியல் செய்ய ஆயிரம் பிரச்சினை இருக்கு ஆனா ஊனா என்றால் ஈழம் தூ .

    • Like 1
  6. நாளை உங்களைப் பார்த்து கள்ளமட்டை, கள்ளத்தோணி, தட்டுக்கழுவி என்று யாராவது விமர்சித்தால் எப்படி அது அசிங்கமாக இருக்குமோ அது போன்றே உங்களது கருத்தும் இருக்கின்றது. உங்களைப் போன்றவர்கள் நியாயமான விமர்சனம் என்பதற்கு அப்பால், அவருவருப்பான கருத்துக்களையே தூண்டுகின்றீர்கள். ஏன் பெண்களுக்கு இனவுணர்வு இருக்கக்கூடாதா? நெடுமாறன் ஐயா கைது செய்யப்படும்போது, அவரது மகளும் அருகில் தான் இருந்தார். சீமானை விமர்சிப்பது என்பது நியாயமாக இருப்பின் அதற்குப் பதிலைத் தருகின்றேன்.

     

    ஐயா இவனுங்க சினிமா எல்லாம் பார்த்து களைச்சு போனம் இனி எவனையும் நம்பும் எண்ணம் இல்லை எல்லாம் வெறும் சீன் நாளை வேறு ஒன்று கிடைக்கும் அதுவரை இது ஓடும் படங்களை போட்டு சேர் பண்ணிட்டு திரியவேண்டியது தான் ஒன்னும் ஆகுற காரியம் இல்லை பாருங்கோ .

  7. சீமான் அண்ணாவின் மனைவியும் ஈழ ஆதரவு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். இதுவும் ஈழம் மற்றும் தமிழகம் சம்பந்தப்பட்ட ஒன்று. அவர் மனைவி என்பதற்காக இங்கு வரக்கூடாது என்று சட்டமா என்ன? <_< சும்மா நக்கலடிக்காமல் போட்டு வாங்கோ.  <_<

     

    நாமும் எதுவும் செய்ய மாட்டோம். மற்றவர்களையும் குறை சொல்லிக்கொண்டிருப்போம். <_<

     

     

    எனக்கும் கூத்தாடிகளுக்கும்  என்ன சம்மந்தம் நான் என் அவங்களுக்கு அழவேணும் .

     

    எம்முடன் களத்துக்கு வந்தனா அல்லது

    பதுங்குகுழி வெட்டி தந்தானா எம்

    மக்களின் துயரில் கூட இருந்தார்களா

    எதுக்கு ஆதரவு கொடுக்க வேணும் நான்

    ஏன் கொடுக்கவேணும் ஆதரவு எமது

    சக போராளி பெண்களுக்கு ரைபிள் துடைத்து

    கொடுத்தாரா அல்லது சமையல் செய்தாரா

    நாங்கள் போராடும்போது சிங்களத்தி

    பூஜாவுடன் சினிமா சூட்டின்க்  இனம்

    அழிந்தபின் ஈழ பிழைப்பு

    பகலவன் விஜய்யுடன்

    அஜித்திடம்  அழைப்புக்கு காத்திருப்பு

    ஒன்றும் இல்லை இப்போ கட்சி

    இதில நான் கொடுக்க வேணும் ஆதரவு ...

     

     

    ஈழத்து நொந்த பொம்மம்ன் :D :D

  8. சுவர் இடிப்புக்கு கூடி அழும் தலைவர்கள் எல்லாம் ஏன் கூட்டணியை உருவாக்கலாம் தானே அது என்ன தேர்தல் வந்தா ஆளுக்கு ஒரு திசையில் போற பழக்கம் .!

    காசு ...பணம் ...துட்டு ..மணி மணி ..!

  9. கவலைப் படாதையுங்கோ தலைவர் சீமான் பாத்துக் கொள்வார்!!!

     

    அம்பி மனைவியுடன் வந்து இருக்குறார் ஊரில ஆமிக்கு பயந்து பிள்ளையை தூக்கிட்டு ஆண்கள் போவது போல எல்லாம் ஓர் முன் எச்சரிக்கைதான் .

     

    உங்களுக்கு நகல் வேற அக்கா :rolleyes:

  10. இது எல்லாம் நாளை அம்மா விடு அறிக்கையுடன் மறத்து போடும் லூசா விடுங்க லூசா விடுங்க ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் நமக்கு ஒரு கவலை இல்லை  இந்தியனால் எந்த தீர்வும் கிடைக்காது பாருங்கோ .

     

    ஆர்ப்படங்களுக்கு வந்தவர்களை விட 'ஆரம்பம்' படத்துக்கு வந்தவர்கள் அதிகம் வசூலும் அதிகம் என்பதுதான் தமிழ்நாட்டின் உண்மை.

     

    முதலில் நாங்கள் எங்க மக்களுக்கு என்ன பண்ணலாம் எண்டு யோசிப்பம் நம்ம பிள்ளைகளுக்கு விளக்கேற்றும் வழியை பார்ப்பம் கூத்தாடிகள் காமடி சோ பாராமல் .

     

     

  11. மன்மோகன் சிங் பொதுநலவாய மாநாட்டை புறக்கணித்தது தேர்தலுக்காக. தமிழக மக்களுக்காக இல்லை என்பது தெரியும். ஆனால் முயற்சி செய்தால் மத்திய ஆட்சியை காலப்போக்கில் விழுத்த முடியும். வேறு மாநிலங்களுடன் நல்லுறவை பேணி அதை நடத்திக்காட்ட முடியும்.

    கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் நாங்கள் நம்பவில்லை. அவர்கள் போல் ஈழ அக்கறையில்லாதவர்கள் முதல்வர் பதவியை இனியும் வகிக்காதவாறு படுதோல்வியடைய செய்ய வேண்டும். ஈழ ஆதரவு நிலைப்பாடுடைய ஒருவர் முதல்வராக வர வேண்டும். அதன் பின் அவர் என்ன செய்கிறார் என்பது பற்றி இப்போதைக்கு அவசியமில்லை. பின்னர் பார்க்கலாம். நன்மை கிடைக்காவிட்டாலும் இப்பொழுது உள்ள நிலையை விட நிச்சயம் தீமை கிடைக்காது.

    ஈழம் எங்கள் பிரச்சினை. ஆனால் நாங்கள் மட்டும் முடிவெடுப்பதாக இருந்தால் எப்பொழுதோ எமக்கு ஈழம் கிடைத்திருக்கும். விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச ஆதிக்கம் ஈழ விடையத்தில் செல்வாக்கு செலுத்துகிறது. ஈழ, புலம்பெயர் மக்கள் சர்வதேச ரீதியாக விடுதலைக்காக போராடும் போது தமிழகத்திலும் ஈழ ஆதரவு நிலைப்பாடு தேவை. அதை பலர் இன்று செய்து வருகிறார்கள். சும்மா சீமான் அண்ணாவுக்கு, வைகோ ஐயாவுக்கு எதிராக எழுதும் நோக்கில் பலர் ஈழ எதிர்ப்பாளர்களை மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர்த்த விளைகிறார்கள். அதற்கு உங்கள் போன்றோர் துணைபோகின்றீர்கள்.

     

    புலிகளின் மீதான தடையை நீக்குவதற்கும் இன்னொரு பக்கத்தால் முயல்கிறார்கள் தான்.

     

    ஒருகரை ரோட்டு சுவர் இடிக்க பட்டத்துக்கு அதை அரசியல் ஆக்கி ஜெயாவை துரோகி ஆக்கி அரசியல் இலாபம் தான் அங்கு நடக்கு எல்லாம் ஒருவகை பிழைப்புதான் .

     

    இவனைக் காட்டுற சினிமாவால முழுதும் இடிக்க படும் அபாயம் இருக்கு அம்மணி அஞ்சுவதும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை என்று அடிக்கடி சொல்லும் .

     

  12. கட்ட முதலே சொன்னம் வேணாம் என்று கேட்டியலே இப்ப அழுது என்ன பயன் இந்தியா நிலைப்பாடு மாறப்போவது இல்லை தமிழ்நாட்டுக்கு பயந்து மத்திய அரசு முடிவு எடுக்கும் என்கிற நினைப்பை மாற்றுங்கள் 29 மாநிலம் மிகுதி இருக்கு தொலுன்கான பிரச்சினையவே கண்டுக்காத மத்தி எங்களை கண்டுக்கும்மா .

     

    மாறா மத்தி என்ன சொல்லுதோ றோ என்ன நினைக்குதே அதுதான் நடக்கும் அது எவர் ஆட்சியில் தமிழ்நாட்டில் இருந்தாலும் மீறினால் ஆட்சி கலைக்கப்படும் என்பது தெரிந்த விடையம் இதில் ஜெஎன்ன கருணாநிதி என்ன இறையான்மை மிஞ்சி  நாங்கள்தான் தலையில் தூக்கி ஆடுவது அவரு செய்வார் இவரு செய்வார் என்று .

     

    ஈழம் எங்கள் பிரச்சினை நாங்கதான் முடிவு எடுக்க வேணும் தவிர அவர்கள் அல்ல ஆதரவா இருக்கலாம் தமிழ்நாடு

    எதையும் செயல் படுத்த முடியாது முதலில் அவர்கள் போராடவேண்டியது புலிகள் மீதான தடை எடுப்புக்கு அதை செய்து முடித்தாள் இவ்வளவு பிரச்சினை வராது தேவையான வேலை செய்யாமல் தேவையில்லா செலவுகளும் வெட்டி பேச்சுக்களும் தீர்வை தராது என்பது உண்மை .

     

    மண்டியிடா மானம் ........அடங்கி கிடக்கும் பெட்டி பாம்பு :icon_idea:

     

     

     

     

    • Like 1
  13. அண்மையில் அதிக விருப்பு பச்சைப் புள்ளிகளை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ! குறிப்பாக சுமோ,  மற்றும் தமிழினி ஆகியோருக்கும் வாழ்த்துக்கள் !!

  14. தலைவர் கவனம்.
    தலைவர் எங்கட வழிகாட்டி.
    தலைவர்தான் எங்கட அப்பா.
    தலைவர்தான் எங்கட அம்மா.
    அவருக்கு ஒன்றும் நடந்திடக் கூடாது.

    இ.இளங்கோ.

     

     

    வெட்கி தலைகுனித்து நிக்கிறோம் இளங்கோ அண்ணா செய்வது அறியாது

    வீரவணக்கங்கள் . :(

    • Like 1
  15. மனைவி முட்டை பொரியல் தயாரித்துக் கொண்டிருந்தபோது சமையலறைக்குள் நுழைந்த கணவன், ""ஜாக்கிரதை! இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்று'' என்றான்.

    கூடவே, ""என்ன சமையல் செய்றே? அதை திருப்பு; இன்னும் கொஞ்சம் வறுவலாக வதக்கு. கடவுளே! இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்று. அடி பிடிக்கிறது பார்! ஜாக்கிரதை! ஜாக்கிரதை!''

    ""இன்னும் கொஞ்சம் வதக்கு, உப்பு போட மறக்காதே. கொஞ்சமா உப்பு போடு'' என்று அடிக்கடி குறுக்கிட்டுக் கொண்டே சொன்னான். பொறுமை இழந்த மனைவி கேட்டாள், ""என்ன ஆச்சு உங்களுக்கு? ஒரு முட்டை பொரியலைக் கூடச் செய்ய எனக்குத் தெரியாதா?''

    கணவன் பொறுமையாகச் சொன்னான், ""இப்ப தெரிகிறதா? நான் கார் ஓட்டும்போது பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அடிக்கடி குறுக்கிட்டு எனக்கே கற்றுக் கொடுக்கிறாயே? அப்ப எனக்கு எப்படி இருக்கும்?''

    • Like 1
  16. படித்த ரசித்தது .!

    நாட்டின் No.1 முட்டாள் யார்?

    நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

     
    “நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”
     
    “ஆம் மன்னா!”
     
    “அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.
     
    அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னரயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.
     

     
    ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”
     
    “இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.
     
    “தொடரும்” என்றார் மன்னர்.
     
    “மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.
     
    “சரி அடுத்து”
     
    “இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”
     
    “களிப்படைதோம் அமைச்சரே! களிப்படைதோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”
     
    "அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”
     
    மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.
     
    நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.
     
    ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.
     
    “உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.
     
    “சரி எங்கே முதலாவது முட்டாள்?”
     

    அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த மொக்கையான பக்கம்  வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக் கொண்டிருக்கும் இவர்தான் நீங்க  முதல் முட்டாள்!”

     

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.