அஞ்சரன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  2,597
 • Joined

 • Last visited

 • Days Won

  17

Everything posted by அஞ்சரன்

 1. ஒரு குறும் செய்தி மூணு ரூபா ஆறுகோடி குறும் செய்தி எப்படி இலாபம் .... கொடுத்தது ஒருகிலோ தங்கம் ... சிரிச்சாபோச்சு ரவுண்ட் நளாஸ் அப்பக்கடை கூப்பன் போல .
 2. நீங்கள் செய்வது தவறு என்றோ பிழை என்றோ எங்காவது நான் சொன்னது இல்லை சில விஷயம் எம் மக்கள் சார்த்து இருக்கணும் என்பதே விருப்பம் அந்த மண்ணின் மகனா ஏற்ப்படும் ஆசையும் கூட ..
 3. சும்மாவே ஒரு சஞ்சிகை அடிச்சு போடவே அதை விற்று கொடுக்க வேணாம் என்று சொல்லி கடைகளுக்கு ஒரு குறுப் சொல்லி திரியுது ... எல்லோரும் தங்களுக்கு கீழே வேலை செய் நீ எதையும் செய்யகூடாது என்பதுதான் பாரிஸ் விதி மீரா அக்கா .. சாவு வீடோ கலியாணமோ மாலை நம்ம கழுதில இருக்கனும் இதை மீறி போனால் அவர் வேறு பார்ட்டி பார்த்து நடவுங்க என்று கொளுத்தி போட்டுட்டு போறது தான் பலரின் வேலை .
 4. பணத்தை கொடுத்தாலும் இங்கு இருக்கும் மொழிபெயர்ப்பு ஆக்கள் தாங்கள் எதோ விண்வெளியில் இருந்து வந்தவ போல அல்லவா கதை கதைப்பார்கள் .. நான் சொல்வதை எழுத்து என்றால் தாங்கள் நினைப்பதை எழுதுவது கேட்டா தங்களுக்கு எல்லாம் தெரியுமாம் நீர் சும்மா இரும் என்பார்கள் .
 5. நன்றி வருகைக்கு அக்கா ..அண்ணாக்கள் . உண்மைதான் வாத்தியார் ஆனால் நான் சொல்வது குறிப்பிட்ட காலம் ஆறு மாதம் ஒருவருடம் மட்டும் அவர்களுக்கு சிறு உதவியா இன்ன இடத்துக்கு போனால் கடிதம் வாசிச்சு சொல்லிவினம் ...பதில் கடிதம் எழுதி தருவார்கள் ..சில படிவம் நிரப்பலாம் என்னும் ஒரு நம்பிக்கை வேணும் ..இங்கு படித்த பல பிள்ளைகள் தமிழில் சரியா மொழிபெயர்க்க தெரியாமல் கூட இருக்கினம் ஆக அதுக்கான ஆக்களை தெரிவு செய்வது என்பது கடினம் என்றாலும் கூட பெரிதாக இல்லை ... நாட்டின் நடைமுறையை தெரிந்து கொள்ளும் வரை உதவலாம் .
 6. நாம் இருக்கும் நாட்டில் அதாவது ஐரோப்பாவில் பெரும்பாலும் அதிகமா எல்லோரும் பாவிக்கும் சொல் ,தேசியம் ,மண்பற்று ,மக்கள் சேவை ,பொது தொண்டு இப்படி ஒரு பட்டியல் நீளும் எனக்கு ஏற்படும் ஆதங்கம் சிலவேளைகளில் உங்களுக்கு தோன்றலாம் அல்லது அந்த நிலமைகளில் வந்து போகலாம் ஒரு நொடி .. இங்கு எல்லா இனங்களிலும் ஒரு செயல்பாடு நான் கவனித்து இருக்கிறேன் ,அது யாதெனில் அகதியா குடிபெயர்த்து ஒருவரோ அல்லது ஒரு குடும்பமோ வந்தால் அந்த இனம் சார்த்த ஒரு அமைப்பு இருக்கு அவர்களிடம் முதலில் போவார்கள் ,அவர்கள் இவர்களுக்கு இப்ப என்ன தேவை என்றும் என்ன என்ன உடனடி அவசியங்கள் என்றும் ஆராய்ந்து அதுக்கான செயலில் இறங்கி முதல் கட்ட உதவிகள் செய்து ,பின்னர் இந்த நாட்டில் சட்டபடி தங்க என்ன செய்யவேணும் என்று அதுக்கான ஆலோசனைகள் வழங்கி தாங்கள் மொழி தெரிந்த மொழியை படித்த ஒருவரை அவருடன் அனுப்பி ,சில வேலைகளை செய்து கொடுத்து ஒரு ஆறுமாதம் ஆவது உதவிய இருப்பார் .. ஆனால் தமிழர்கள் மட்டும் ஒரு நாட்டில் ஆளுக்கு ஒரு சங்கம் ...ஒன்றியம் ..குழு ..கிராம அபிவிருத்து சேவைகள் என்று பல நிறுவனங்கள் இயங்கும் ஒரு உதவி கேட்டு போனால் அது தம்பி ஊருக்கு மட்டும்தான் செய்வம் இங்க உள்ளவைக்கு செய்யவதில்லை ,சரி அப்புறம் எதுக்கு இங்க உள்ளவர்களிடம் மட்டும் காசு கேட்டு போகிறார்கள் என்றுதான் தெரிவதில்லை ... நான் ஒரு முறை நண்பர் ஒருவர் கேட்டார் வந்த புதிதில் இந்த வீசா போடும் போம்(படிவம்) நிரப்ப வேணும் கையில காசு இல்லை ஒரு இரண்டுநாள் கழிந்து கொடுக்கலாம் இந்த போமை நிரப்பி வேண்டும் என்று சரி நானும் ஒரு பிரபல தேசியம் பேசுபவர் மக்களுக்காக தான் வாழ்வதா கூறும் ஒருவரிடம் கூட்டி போனேன் அண்ணே காசு இப்ப இல்லை இந்த போமை நிரப்பி தாங்கோ ஒரு நாள் கழிந்து காசு கொண்டுவந்து தாரன் என்று ,அதுக்கு அவர் சொன்ன பதில் என்னடா தம்பி இருபது லட்சம் செலவு பண்ணி இங்க வந்திட்டு இருபது யூரோ இல்லாமல் இருக்கிற என்பதே அந்த இருபது லட்சம் என்பது பலரின் உதவி என்று அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை காசு இல்லாட்டி இருக்கும்போது வாரும் நிரப்பி தாரன் என்று சொன்னார் ... ஓகே பின்னர் முன்னம் ஒரு அண்ணை நிரப்பின போமை பார்த்து நாங்களே நிரப்பினோம் அதில் கேட்டு இருப்பது அப்பா பெயர் ...முகவரி ..அவரின் பெயர் இதை எழுதி கொடுக்க வருக்கு இருபது யூரோ இதில் அவர் தேசியத்துக்கு செயல்படும் பெரிய ஆளு வேற வெட்கமான விடையம் வந்தவனுக்கு உதவி பண்ணுவது கூட பணம் தீர்மானிக்கும் இடத்தில் ,எதுக்கு இந்த ஆளுக்கு ஊருக்கு ஒரு சங்கம் வைத்து இருக்கிறாக்கள் என்றுதான் புரியவில்லை ... அதாவது வேறு இனத்தவர் போல எம் இனமும் ஒருவர் அகதியா வந்தால் அவருக்கு ஒரு ஆறுமாதம் ஆவது உதவியா இருக்கலாம் சாப்பாடு கொடுக்க தேவையில்லை இங்கு என்ன செய்ய வேணும் எப்படி ஓவன்றையும் அனுகவேனும் என்றாவது ஒரு பொதுவான இடத்தில் கிழமைக்கு ஒருக்கால் ,அல்லது இரண்டு கிழமைக்கு ஒருக்கால் ஒரு இடத்தில் கூடி சந்தித்து அவர்களின் தேவைகளை சேவை செய்ய ஆர்வம் உள்ளவர்களை ஒன்றிணைத்து செய்து கொடுக்க முனைவது இல்லை ஏன் ,ஒரு சாதாரண படிவங்களை நிரப்ப கூட பக்கத்துக்கு இவ்வளவு தா என்று காசு வாங்குவதில் உள்ள நோக்கம் ஒருவனுக்கு சிறு உதவி செய்து கொடுப்பதில் இருப்பதில்லை ... பல அமைப்புக்கள் உள்ள இடத்தில் எந்த அமைப்பும் தங்களுக்கு இலாபம் இல்லாத எந்த வேலையும் செய்வதில்லை ,சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட எம்மவர்கள் கடைகடையா ஏறி இறங்கி திரிவது இன்னும் தொடர் கதையா இருக்கு ஒரு தலைமுறை இங்கு படித்து ஒரு நிலைக்கு வந்தபின் கூட இந்த அவலம் தொடருது ,ஒருவரிடம் போனால் அவர் தம்பி நான் மொழிபெயர்ப்பு மட்டுமே செய்வேன் கடிதம் எல்லாம் எழுதி கொடுப்பது இல்லை என்பார் ,அடுத்தவரிடம் போனால் அவர் கடிதம் என்ன என்று கேட்க முதலே முப்பது யூரோவை முற்ப்பணம் கட்டி விட்டு நாளைக்கு வாரும் என்பார் ,சரி அங்கால போனால் அலுவல் சொல்லமுதலே தம்பி இரண்டு நாள் எந்தவேளையும் எடுப்பதா இல்லை நான் ரொம்ப பிசி என்பார் ....... இவ்வாறு எம்மினத்தில் மட்டுமே அலைக்கழிக்கும் செயல் இருக்கு இதுக்கான நிவர்த்தியை இந்த சுமூகத்துக்கு எதாவது செய்யணும், செய்கிறம் என்று மார்வு தட்டி நிப்பவர்கள் கூடி ஒரு முடிவு எடுத்து சிறு ஆலோசனைகள் வழங்க ஆவது உதவ வேண்டு பல நாள் இல்லாவிட்டாலும் புதிதா வரும் ஒரு அகதி குடிமகனுக்கு ஆறுமாதம் ஆவது இலவசமா சில வேலைகளை செய்து கொடுக்க முயற்ச்சி செய்ய வேணும் ........ அதுக்கு நீங்கள் ஊருக்கு செய்கிறம் என்று சேர்க்கும் காசிலாவது செலவு செய்து உதவி புரிந்தால் வருபவர் நாளை நல்ல நிலைக்கு வரும் போது உங்களுக்கு அதை விட பல மடங்கு உதவி செய்வார் என்பதை எதிர் பார்க்கலாம் இல்லையா ... யூதனை பாருங்க ,ஆபிரிக்க நாட்டவனை பாருங்க ,சீனுவாவை பாருங்க என்று ஒற்றுமைக்கு வகுப்பு எடுக்காமல் நாங்களும் செயலில் இறங்க வேணும் என்று கேட்டுக்கொண்டு அமர்கிறேன் .
 7. இங்கு தேவையில்லா விவாதம் தொடங்குவது நீங்கள்தான் பின்னர் என்மேல பழியை போடுவதும் நீங்கள்தான் நான் என்ன பண்ணிறது யாழில் உங்களுக்கு நான்தான் பிரச்சினை என்றால் நேரடியா சொல்லலாம் வராமல் விடுறன் அதை விட்டு நான் என்ன போட்டாலும் எழுதினாலும் அங்க வந்து அக்கப்போர் பண்ணி கலவரம் பண்ணுவதே உங்க வேலையா இருக்கு முடில ...
 8. நான் ஊர் பிரச்சினை யாழில் எழுதுவது போடுவது இல்லை என்னும் முடிவில் தான் எதுவும் இப்பொழுது போடுவதில்லை .. அது உங்களை கூட தாக்கும் திறன் கொண்டது என்பது உங்களுக்கே தெரியும் மீள் திருப்பும் செயல் வேணாம் என்று நினைக்கிறேன் யாழில் .. நாவலரை எதுக்கு நீங்கள் முதல்மை படுததணும் என்பதே கேள்வி அதுக்கு கடந்த காலத்தை இழுத்து திசை திருப்புவான் ... அப்படி கமலாம்பிகை பழைய மாணவரை கூப்பிட்டு உங்கள் நிர்வாகம் என்ன வெருட்டியது என்றுகூட எனக்கு தெரியும் அண்ணே அமைதி நல்லது .
 9. கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லைதானே அண்ணே அது போதும் .. உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டது நான் பிடிச்ச முயலுக்கு .....
 10. நாவலரை எதுக்கு நாங்கள் தாங்குகிறோம் என்பதுதான் கேள்வி நீங்கள் பிரபலம் உலகம் எல்லாம் அவரை தெரியும் என்பது ஏற்புடையதா என்பது தெரியாது .. ஆனால் எங்கள் மண்ணில் பிறந்த எவரும் இல்லையா அதுக்கு தகுதியா என்பதுதான் கேள்வி வரலாற்றில் இருந்து மறைகப்ப்படும் ஒருவரை வெளியில் கொண்டுவாருங்கள் என்றுதான் சொல்கிறோம் .. இதில் அம்பலவாணர் என்ன விதத்தில் குறைந்தவர் என்றுதான் தெரியவில்லை .. உங்கள் கூற்றுப்படி பார்த்தால் தங்கம்மா அப்பாக்குட்டி பெயரிலும் கொடுக்கலாம் இல்லையா நிகழ்காலத்தில் வாழ்ந்த்தவர் என்பதால் .
 11. விஜயகாந்த் ஒரு தேசப் போராளி.. " என்ன ஆதாரம் ? " தம்பி .. நீங்க 'நரசிம்மா' படம் பார்க்கலையா.. # இவண் சீமான் பாறைகள் .
 12. கண்டிப்பா இந்த தடவை சூப்பர் சிங்கர் கனடா பிள்ளைக்குத்தான் கிடைக்கும் ..அடுத்த தடவை போட்டி ஆரம்பிக்கும் போது ஒரு பத்து ஐரோப்பா வாழ் பிள்ளையாவது அங்கின போய் பாடபோகுது என்பது மட்டும் உண்மை .. பனியில உழைக்கும் காசு டீவி பெட்டியில முகம் வரவேணும் என்று கொண்டுபொய் கொட்ட நாங்க ரெடி ஆகிட்டம் என்பது மட்டும் உண்மை .. இதை சொன்னா நம்மளை .........என்பாங்க .
 13. அவ்வாறு ஒருவரை தெரிவு செய்வது தவறு என்றால் நாவலர் பெயர் வேணாமே ...புங்கை மண் விருது என்ரே கொடுக்கலாம் தானே ஒரு விருது கொடுத்தால் அது அந்த மண்ணின் செய்தியை தாங்கி நிக்கவேணும் அல்லவா அதுக்கவே ... இது முழுக்க புங்குடுதீவு ஒன்றியம் செய்யும் நிகழ்வு ஆகவே முடிவு எடுக்கும் அதிகாரம் நிர்வாகத்திடம் இருக்கும் போது யாது ஊரே என்னும் கேள்வி தேவை அற்றது எம் மண் சார்த்த விருது எங்கள் மண்ணின் பெயர் சொல்லி நின்றால் ஒன்றும் தப்பில்லை .. வேலணை புங்குடுதீவு பாலம் போட்ட அம்பலவாணர் பெயரில் கூட கொடுக்கலாம் அதை விட வேறு என்ன பெருமை இருக்க போகிறது இலங்கையின் மிக நீளமான பாலம் போட்டவர் தனது செந்த முயற்ச்சியால் ஆகவே வரலாற்றில் வாழ்தல் வேணும் .. அல்லது புங்குடுதீவின் முதல் மாவீரன் பெயர் கூட வைக்கலாம் நாவலர் குறியீடு எனக்கு தேவையா என்பது ஒரு கேள்வியே .. தமிழ் தேசிய பண்புகள் உங்கள் பார்வையில் வைக்கபட்டுள்ளது ஆளாளுக்கு அது மாறுபடும் ஆகையால் அதுக்கான விளக்கம் கொடுக்க விரும்பவில்லை .
 14. இதிலோ நீங்கள் குறிப்பிடும் தமிழ்தேசிய பண்புகள் எவை என்பதை விளக்கம் கொடுத்தால் நல்லம் .. அத்துடன் புங்குடுதீவுக்கும் நாவலருக்கும் என்ன சம்மந்தம் என்று விளக்கம் தந்தாள் நல்லம் அண்ணே ஏனெனில் ஊரின் பெயரிலே கொடுத்தால் கூட நல்ல விஷயம் எதுக்கு நாவலர் பெயர் என்னும் கேள்வி இருக்கு முடிந்தால் பதில் தாங்கோ .
 15. கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது. ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது. யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது. அந்தப்பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், “பார்த் தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!” என்று சொல்லிச் சிரித்தது. அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, “அப்படியா, நீ பயந்து விட்டாயா?” என்று கேட்டது. அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது: “நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழு ந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்.” நீதி : தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
 16. படித்ததில் பிடித்தது: பிறந்த நாளை விவரிக்கவும் என மேதகு.அப்துல்கலாம் அவர்களிடம் BBC யில் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன விளக்கம்... நம் வாழ்கையில் அன்று ஒரு நாள் தான், நாம் அழும் பொது நம் அன்னை சிரித்தாள்...
 17. யானையை எப்படி ஆட்டோவில் ஏற்றுவது ? "பேண்டை கழட்டி விட்டு" எலிபேண்டில் இருந்து பேண்டை எடுத்து விட்டால் அது 'எலி" ஆகி போய்விடும். அப்புறமா ஆட்டோவில் எளிதில் ஏற்றிவிடலாம்.
 18. வெளிநாட்டு பொது சேவை எல்லாம் பெரும்பாலும் இலாப நோக்கம் கொண்டது அதனால் உண்மையான பொது சேவை செய்பவர்களும் பாதிக்கபடுவது பல நடந்திருக்கு புத்தன் அண்ணே தொடருங்கள் ..
 19. நன்றி அண்ணாக்கள் வரவுக்கு கருத்துக்கு கண்டிப்பா அவர்களை வேறு ஒரு தளத்துக்கு கூட்டி போகும் பொறுப்பு அனைவரிடமும் இருக்கிறது என்பதே விருப்பம் .
 20. ஈழ சினிமா என்பதும் ,ஈழத்தை விட்டு வெளியில் சாதிப்பது என்பதும் ,ஈழ திரை அல்லது குறும்பட படைப்பளிகளுக்கு ஒரு பெரும் போராட்டம் என்றே சொல்லலாம் ,வெள்ளித்திரைக்கு கொடுக்கும் அளவு ஆதரவு இந்த ஈழ குறும்பட படைப்பளிகளுக்கு கொடுக்கபடுவதில்லை அவர்கள் எப்படி ஒரு நூறு வீத தரமான படைப்பை கொடுத்தாலும் ,அதை ஓரம் கட்டி தென்னிந்திய சினிமா மேகத்தில் மூழ்கி கிடப்பதும் தென்னிந்திய தொலைக்காட்சி பெட்டிகள் முன் கண்ணீரும் கம்மளையுமா உக்கார்த்து அழுது வடிபதுமா ஈழ மக்களின் கலைத்தாகம் போகுது ... ஆக அவர் திறமையான ஆளா இல்லையா என்பது எல்லாம் எங்களுக்கு முக்கியம் இல்லை அவர் இந்திய தொலைக்காட்சியில் ஒருமுறை தலைகாட்டினால் அவர் வாழ்நாள் ஹீரோ அதுக்கு பிறகு அவர் நடிக்காவிட்டாலும் பருவாயில்லை ,போற இடம் எல்லாம் அந்த பெயரை வைத்தே அவர் வாழ்வார் என்னும் ஒரு நியதியில் ஈழ சினிமா மேல் ஈழ மக்கள் பார்வை இருக்கு ,இவைகள் எவ்வளவு ஆரோக்கியமானது என்பது அல்ல இப்ப பிரச்சனை ,பல வருடங்களாக குறும்படம் ,நாடகம் ,என எதோ ஒரு படைப்பை இப்பவும் சமூகம் சார்த்து கொண்டுவரும் ஈழ படைப்பாளிகளை எவரும் கண்டுகொள்வது இல்லை என்பதுதான் வேதனையானது ... சரி ஐரோப்பா போன்ற பெரும் நகரங்களில் இடம்பெறும் திரை பட சம்மந்தமான நிகழ்வில் கூட முற்று முழுதா அதை ஒழுங்கு அமைப்பது ஈழத்தமிழர் என்றாலும், அங்கும் தென்னிந்திய நடிகர் தான் சிறப்பு அழைப்பாளர் அதுவும் அங்கின படமே இல்லாமல் ஒருவர் வெட்டியா சுற்றிக்கொண்டு இருப்பார் அவரை கூட்டி வந்து நடுக்கதிரையில் இருத்தி அழகு பார்ப்பதில் எமக்கு என்ன திருப்தி என்றுதான் விளங்கவில்லை ,.. இப்ப அது கொஞ்சம் முன்னேறி ஊர் சங்க கூட்டம் ,வீட்டு விஷேசம் எல்லாத்துக்கும் அங்கின இருந்து ஒரு குறுப்பை கூப்பிட்டு பொன்னாடை போர்த்தி அழகு பார்ப்பது பெருகிட்டு வரது ,இதில் என்னதான் பெருமை இருக்கு என்றுதான் விளங்க வில்லை உங்களின் பிள்ளைகள் உங்களின் திறைமையான படைப்பளிகள் இருக்கும் போது , நேற்று வந்து ஒருவன் இந்திய டீவியில் பாடிட்டான் என்பதுக்காக அவரை கூப்பிட்டு கவுரவ படுத்துவதன் நேக்கம் இன்னும் புரியவில்லை , அதை ஏன் நீங்க உங்கள் ஈழ படைப்பளிகளுக்கு கொடுப்பதில்லை ......... ஆக வாக்கு போட்டுத்தான் என் திறமை அங்கீகரிக்க படவேண்டும் என்னும் நிலைக்கு சிறந்த ஈழ படைப்பாளிகள் தரம் இழந்து போகவில்லை அவர்களின் அந்த தன்மான திமிர் என்பது அவர்களின் படைப்புக்கள் பேசிக்கொண்டு இருக்கும் ,அங்கீகரிப்பு என்பது ஒரு லைக்கில் கிடைக்கும் என்றால் அது உண்மையான படைப்பா இருக்காது ,ஒரு படைப்புக்கு விமர்சனம் எழுந்தால் மட்டுமே அவன் இந்த சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் படைப்பை கொடுத்திருக்கிறான் என்று தெரிகிறது ... ஆக சின்னத்திரை நாடகத்திலும் ...சொல்வதெல்லாம் உண்மையை விடவா உங்கள் வீடுகளில் கதை இல்லை என்பதால் கொஞ்சமா ஈழ படைப்பாளிகளின் குறும்படங்கள் ...முழு நீளப்படங்கள் ..போன்றவற்றுக்கு கொஞ்சம் ஆதரவு கரம் நீட்டினால் நல்லது புலம்பெயர் ஈழத்தமிழர்களே எங்கள் பிள்ளைகளை நாங்கள்தான் தட்டி கொடுத்து வளர்த்து விடவேணும் ,தனிய வியாபார இலாப இலக்கை மட்டும் கொண்டு இயங்கும் தனியார் தொலைக்கட்சிக்ளுக்கு அடிமை பட்டு கிடக்காது எங்களை சுற்றி என்ன நடக்கு என்பதையும் ஒரு நொடி பார்ப்போம் . அவதாரம் குழு ,ராணி படைப்பகம் பாரிஸ்மதி சுதா ஈழம் ..