goshan_che

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  4,190
 • Joined

 • Last visited

 • Days Won

  18

goshan_che last won the day on September 22

goshan_che had the most liked content!

Community Reputation

1,073 நட்சத்திரம்

1 Follower

Profile Information

 • Gender
  Male

Recent Profile Visitors

3,043 profile views
 1. இதில் வரக்கூடிய சிக்கல்கள் யாவை? 1. பொறுப்புக்கூறல்- இந்த டேடாபேசில் கதியால் சண்டை பிடித்தவர், முன்னாள் காதலர், கடன் பிரச்சினை பட்டவர், பிடிக்காத நபரை எல்லாம் போடாமல் தடுப்பது எப்படி? ஏற்கனவே இப்படியாக தனிபட்ட விரோதம் உள்ளவர்களை தாக்கி எழுதும் நியூஜப்னா போன்ற காளான் தளங்கள் பல இருக்கிறன. அவை போல இது ஆகாமல் தடுக்கும் வழிமுறையாது? அப்படி ஒரு வழிமுறையின்றி இதை ஆரம்பித்தால் - இது நிச்சயம் ஒரு அவதூறு இணையாமகவே முடியும். 2. சும்மா நண்பன் சொன்னதை, முன் வீடு அங்கிள், பக்கத்து வீட்டு அன்ரி சொன்னதை எல்லாம் வைத்து இதில் ஒருவரை படத்துடன் பாலியல் குற்றவாளி எண்டு போட முடியாது. குறைந்த பட்சம் ஒருவரை போலீஸ் இது சம்பந்தமாக விசாரித்தால் மட்டுமே, விசாரணைக்கு உள்ளானார் என செய்தி போட முடியும். ஒரு கோர்ட் குற்றவாளி என தீர்க்கும் முன் குற்றவாளி எனப் போட்டால் - மான நஸ்ட வழக்கை எதிர்கொள்ள நேரும். 3. இப்படி பெயர் போடப்பட்ட ஒருவர் ஊருக்கு போய் அவருக்கு ஏதேனும் நடந்தால்- தளத்தை நடத்துபவர்கள் முதல், ஊரில் இதில் ஈடுபட்டவர் வரை பலர் வரிசையாக கம்பி எண்ண வேண்டி வரும். கூடவே புலம்பெயர் புலிகள் நாட்டில் சமாந்தர பொலீசை நடத்துகிறாரகள் என்ற கூச்சல் எழுப்ப பட்டு அது எம் மக்களின் கொஞ்ச நஞ்ச உரிமையையும் பறிக்க வழிகோலும். கூடவே மிகவும் நெருக்குவாரதுக்கு மத்தியில் வாழும் முன்னாள் போராளிகள் பலரின் நிம்மதியையும் காவு கொள்ளும். 4. இந்த மாதிரியான நடவைக்கைகள் எம்மை மேலும் மேலும் vigilantes ஐ நம்பும் ஒரு கட்டுபாடற்ற இனகுழு என சித்தரிப்போருக்கு உதவும். இதற்க்கான தீர்வு ஊரில் இருந்தே வரவேண்டும். அங்கே எமது பகுதிகளில் ஒரு சிறுவர் நலன் பேணும் சரிட்டியை நிறுவலாம் (NSPCC போல்). என்னதான் நடந்தாலும் ஊரில் இருப்போருக்கான பாதுகாப்பு, இலங்கை அரச பொறிமுறைக்கூடாகவே இப்போது சாத்தியம். எமக்கு இலங்கை அரசோடு கடுப்பு என்பதற்காக குளத்தோடு கோவித்து, கால் கழுவாமல் இருக்க முடியாது. ராணுவம், அரசியல் சம்ப்ந்த படாதா Tamils against Tamils வன்முறைகளுக்கு இலங்கையில் இருக்கும் சட்டத்தை, சட்ட பரிபாலன அமைப்பை வைத்து ஒரு குறைத் தீர்வையாவது பெறலாம். இந்த விடயத்தை இலங்கை அரசு மீது எமக்கு இருக்கும் நியாயமான விமர்சனத்தை கொட்டும் வாய்ப்பாக பார்க்காமல், எமது சிறார்களின் நலன் ஒன்றை மட்டும் வைத்து முன்னெடுப்போமாயின், இதற்கு ஒரு முடிவை எட்டலாம்.
 2. எனெக்கன்னமோ, உந்த லொஜிக் சரோஜாதேவி புத்தகத்தை மாணவர்களிடம் கொடுங்கள், அதை படிப்பதன் மூலம் அவர்களின் வாசிப்பு பழக்கம் அதிகரிக்கும், அதன் பின் அவர்கள் திருகுறளை தேடிப் படிப்பார்கள் என்பது போல படுகிறது. நல்லவேளையாக இந்த பதிவுகளில் வருவனவற்றை வைத்து எம் வராலாற்றை ஆராயும் நிலையில் இலங்கையிலும், தமிழகத்திலும் ஆராய்சியாளர்கள் இல்லை என்பது நம்பிக்கையூட்டுகிறது. இப்படியான அபத்தங்களை பரப்புவதன் மூலம், இவர்களுக்கு கிளிக்ஸ் மட்டும் நாம் எடுத்துக் கொடுக்கவில்லை, பேஸ்புக்கில் வருவதுதான் செய்தி, யுடீப்பில் வருவதுதான் வரலாறு, விக்கிபீடியாதான் உலகப் பொது தகவல்தொரட்டி, மீம்ஸ்சில் போடுவதுதான் எம் அரசியல் என்று முடிக்ககூடிய பலரை பிழையாக வழிநடத்துகிரோமா என்பதையும் சிந்திக்க வேண்டும். நாய் பார்க்கும் வேலையை குதிரை பார்ப்பதில் நாம் வல்லவர்கள். வரலாற்றை துறைசார் நிபுணர்களிடம் விடுவதே நல்லது. போலி வைத்தியர்கள் போல, போலி வரலாற்றாளர்களும் ஆபத்தானவர்கள்.
 3. நன்றி. சரியாக 22 வருடங்களுக்கு முன் எமது பாடத்திட்டத்தில் உயர்தரத்துக்கு குவாண்டம் பிசிக்சை அறிமுகம் செய்தார்கள். அப்போது விழுந்து விழுந்து படித்தேன். அதன்பிறகு எப்போதாவது குவாண்டம் கொள்கை பற்றி விபரணத்தில் பார்பதோடு சரி. இப்பபார்த்தால் குவாண்டம் கம்யூட்டர் என்று நீங்கள் புதிதாக சொல்கிறீகள். போதாக்குறைக்கு 0-2 வரையானோருக்கு என்கிறீகள். இதுவே கண்ணை கட்டுதே . 1010, டிஜிட்டல், பைட்ஸ் இவை யாது என்பது முன்னே தெரிந்ததால்- இரண்டாம் முறை வாசித்த போது கொஞ்சம் பிடிபட்டுவிட்டது. நுணாவும் நல்ல கட்டுரையும், இணைப்புகளையும் தந்துள்ளார். அவருக்கும் நன்றி. இந்த நாள் வீண் அரட்டை மட்டும் இன்றி பலனுள்ளதாயும் கழிந்துளது. இந்த புத்தகத்தை மகனுக்கு வாங்கி கொடுக்க உள்ளேன். நன்றி.
 4. எந்த வண்டியை? கார் என்றால் பெரியதை விற்றுவிட்டு ஸ்மார்ட்கார் வாங்கலாம். புகையிரதம் எண்டால் ரெண்டு மூண்டு பெட்டியளை கழட்டி விடலாம். கழட்டமுடியாமல் உடம்போட ஒட்டின dadbod என்றால் கரைக்கவே கூடாது. சும்மா நிமித்தி நடந்தாலும் போதும். இப்ப எல்லா பீச்சுக்கு போனால் எதிர்பாலினத்தவர் யாரும் சிக்ஸ்பேக் காரரை பார்பதே இல்லை. டாட் போட்ற்குதான் கிராக்கி.
 5. அம்பனை இதை நீங்களா எழுதுகிறீர்கள்? அல்லது வெட்டி ஒட்டா? ஒருதரம் வாசித்துப் பார்த்தேன், கொஞ்சம் விளங்கினமாரியும், கனக்க விளங்காத மாரியும் இருக்கு . கலைச் சொற்களை தமிழில் கிரகிப்பது கடினமானது. ஆங்கிலத்தில் இதன் பிரதி இருக்கிறதா? புதிய ஒரு தகவலை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.
 6. அவரும் யாரினதோ மகன், சகோதரன், நண்பன் தானே? இவர் ஒன்றும் serial killer இல்லையே.
 7. பலதடவை சொன்னதுதான். மீளவும் சுருக்கமாக. இந்த பதிவாளர் திருவிளையாடல், கந்தன்கருணை போன்ற படங்களை தமிழ் வரலாற்று ஆவணங்கள் என ஊண்டி படித்திருப்பார் போலும் . 1. நக்கீரனை மட்டுமில்லை - இன்னும் பல தமிழ் அறிஞர்களை, தமிழ் குறுநில மரபுகளை, மூதாதைகளை, கண்ணகியை, ஓளவையை கபளீகரம் செய்து எம்மை சிறுக சிறுக ஆக்கிரமித்ததே இந்து சமயம் (சைவம், வைஸ்ணவம் எக்செட்றா). இதை பற்றி முன்னைய திரியில் விளக்கமாக எழுதினேன். நீங்கள் பிறகு வரவே இல்லை. 2. வள்ளுவனுக்கும் இந்து சமயதுக்கும் என்ன தொடர்பு? 3. பக்தி இலக்கியம் இந்த ஆக்கிரமிப்பின் பின், ஆக்கிரமிப்புக்கு வலுச்சேர்க எழுந்த ஆக்கிரமிப்பாளரின் பிரச்சார இலக்கியம். மூவர் தமிழும், நாலாயிரதிவ்ய பிரபந்தமும் இவ்வகையே. இவற்றை ரசிக்கலாம். ஆனால் இவை எம்மினத்தின் வரலாற்றை சொல்லும் ஆவணங்கள் அல்ல. 4. கம்பராமாயணம் வால்மீகி ராமாயணம் என்ற வடமொழிக் கதையின், தமிழ் ரீமேக். இதை கம்பரே சொல்லித்தான் தொடங்குகிறார். ஆகவே இதிலும் எம் வரலாறு இல்லை. 5. இது உங்களிடம் நான் முன்பே கேட்ட விடை வராத கேள்விகளில் ஒன்று. தமிழ் இலக்கியத்தில் அல்லது அகழ்வாராச்சி சான்றில் “சிவன்” என்ற பதம் முதலில் எங்கே தோன்றிற்று? உங்கள் முகப்புத்தக நண்பரிடம் கேட்டும் சொல்லலாம். பிகு: அவரின் நேரத்தை மிச்சம் பிடிப்பதற்காக இப்போதே சொல்லிவிடுகிரேன், கேள்விக்கான பதில் தமிழ்த் கடவுள் படங்கள் எதிலும் இல்லை
 8. கீழடி, அகழ்வாரய்சி மூலம் கண்டு பிடிக்க பட்ட, தமிழ் பிராமி எழுத்துக்களை உடைய தமிழர் நாகரீகம். இப்படியான உண்மையான ஆராய்சிகளின் மூலம் எமது வரலாற்றை அறிய முற்பட்டு, ஆதாரபூர்வமா நிறுவும் போதுதாம் எமக்கான, எம் வரலாற்றுக்கான அங்கீகாரம் கிடைக்கும். மாறாக, ஒரு மம்பெட்டியை கூட பிடிக்காமல், கண்டதையும் வாசித்து விட்டு, கந்தபுரிதான் Canterbury, மதுரைதான் Madrid என்று கிளம்புபவர்களால் எமக்கு உலக அளவில் கேலியும் கிண்டலும்தான் மிச்சம். ஜேசு சாகும் தறுவாயில் “ஏலேய், ஏலேய் லாமா” என்று அரைமைக்கில் கூறியது தமிழ் என்று இப்படித்தான் முன்பு ஒரு வீடியோ வந்தது. யாழ் களத்திலும் இப்படியான, தமிழர் நாகரீகம்தான் சுமேரிய நாகரீகம். பெளத்ததை புத்தர் தமிழரிடம் இருந்தே அறிந்தார் என்பது போல சில பதிவுகளும், சீசனுக்கு சீசன் வருவதுண்டு. இவர்களின் ஒரே நோக்கம் தமது யூடியூப் விடியோக்களுக்கு பார்க்கும் அளவை கூட்டி அதன் மூலம் காசு பார்பதே. உண்மையான வரலாற்றாய்வாளர்களை பல்கலைகழகங்களில் தேடுவோம். யூடியூப்பிலும் இணையத்திலும் அல்ல
 9. அது மட்டுமா? முகமதூர் ரசூலல்லாஹ் எனவும் சொல்கிறாரகள். அதாவது அல்லாஹ்வின் கடைசி தூதர் நபி (ஸல்) மட்டுமாம்! அளவற்ற ஆற்றல் உள்ளவர் ஏன் நேரடியாக கதைக்காமல் தூதர் வைக்கிறார்?
 10. நெடுக்கு, யூட் இருவரும் சற்று சிந்திக்க வேண்டும். ஒரு வன்கொடுமைக்கு ஆளான பெண்ணிற்க்கு தீர்வென்பது, வன்கொடுமையாளரையோ அல்லது அவரது மகனையோ அல்லது இந்த விடயத்தில் தலையிடும் ஆணையோ கட்டி வைப்பதல்ல. கல்யாணம் ஒரு பெண்ணை காத்துவிடும், என்ற சிந்தனையின் வெளிப்பாடே இது. “கெடுத்தல்” என்ற வார்த்தையை ஏன் இன்னமும் பயன்படுத்துகிறீகள்? இந்த நிகழ்வால் இந்த பெண் தன்னிடம் இருந்த எந்த நல்லதையும் “கெட்டுபோக” விடவில்லை. அவள் மீது ஒரு அநியாயமான உடலியல், பாலியல் வன்முறை ஏவப்பட்டுளது. இதற்க்கான தீர்வு இந்த பெண்ணுக்கு அவசரமாக யாரோ ஒருவரை கட்டி வைப்பதல்ல. முதலில் நீதியை பெற்று கொடுக்க வேண்டும், அவளில் எந்த களங்கமும் இல்லை என்பதை நிறுவுவதன் மூலம் அவளின் தன்நம்பிக்கையை கட்டி எழுப்ப வேண்டும், காயங்களை ஆற்ற வேண்டும். தொடர்ந்தும் படிக்க, வாழ நட்ட ஈட்டை பெற்றுக் கொடுக்க வேண்டும். இத்தனையில் இருந்தும் மீண்டு வரும் போது தனக்கான இணையை அவராகவே தேடிக்கொள்வார்.
 11. இதில் எனக்கும் சந்தோசமே. நாம் இறையியல் என்ற தத்துவத்தை கொண்டிருந்தோம் என்பதில் எனக்கு ஒரு எதிர்கருத்தும் இல்லை. அது இந்து, சைவ சமயம் என்று சொல்வதில்தான் எனக்கு உடன்பாடில்லை. பெளத்தத்திற்கும் பின் அல்லது அதே காலத்தில் அல்லது சற்று முன்பாக எம்மிடம் பரவிய சமயமே சைவம். பெரியாரிசம் என்று ஏதுமில்லை. பகுத்தறிவு (ரேசனலிசம்) என்பது பெரியார் உருவாக்கியதல்ல. மனிதன் முதலில் சிந்திக்க தொடங்கிய போதே பகுத்தறியும் மனமும் வேலை செய்ய தொடங்கி விட்டது. பெரியார் அதை எம்மத்தியில் பிரபலப்படுத்தினார். அவ்வளவே. எம்மை சுற்றி நடப்பவற்றிக்கு இறை எனும் ஒரு பெரும்சக்தி காரணமா என ஆராய்வதும் கூட ஒருவகையில் பகுத்தறிவே. ஆதி குடிகள் பல இந்த ஆராய்சியில் ஈடுபட்டதை வரலாறு காட்டுகிறது. நாமும் அதற்கு விலக்கல்ல. நாம் நிறுவனமயபட்டு, பொய்யாண புராண இதிகாச கட்டுகதைகளை, சிலைகளை நம்பாமல், இயற்கையை வழிபட்டு (வழிபாடு என்பதை விட, இயற்கையை மதித்து, போசித்து, காத்து) வளர்ந்த ஒரு மக்கட்கூட்டம் எனும் வகையில், நாம் அப்போதே பகுத்தறிவாளர்களாய் இருந்துள்ளோம் என்பதில் எனக்கும் மட்டில்லா பெருமிதம்தான். இருக்க (நெடுக நிண்டா கால் நோக்கும்). நீங்கள் கேள்விகளை கண்டு மெல்ல நழுவும் ரகமில்லை. ஆனால் மலையளவு மறுக்க முடியாத ஆதாரங்களை வைத்த பின்பும், உங்கள் கொள்கையை சீர்தூக்கி பார்த்து, முன்னர் எடுத்த முடிவை மாற்றுவதில் நீங்கள் பின்னடிக்கிறீர்கள். அப்படி செய்வது அவமானம், இவர் சொல்லி நான் என்ன என் கருத்தை மாற்றுவது என நினைக்கிறீர்களோ தெரியாது.
 12. இல்லை. சிவனை வழிபடுவதுதான் சைவம். அபொர்ஜினிகள், செவ்விந்தியர்கள், நியூசிலாந்தின் மையோரிகள், அந்தமான் பழங்குடிகள், அமேசன் பழங்குடிகள், பபுவாநியுகினி பழங்குடிகள் இவ்வாறு பலரும் இயற்கை வழிபாட்டாளர்கள். ஆனால் சைவம் இல்லை. இயற்கை வழிபாடு எந்த சைவ சித்தாந்தம்?
 13. எந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்! Shyamsundar IPublished:September 22 2019, 12:16 [IST] மதுரையில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியில் வரிசையாக பெரும் திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக மதுரைக்கு அருகே உள்ள கீழடியில் தொல்பொருள் ஆராய்ச்சி நடந்து வருகிறது. எங்கு இருக்கிறது மதுரை மாவட்டத்திற்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது கீழடி கிராமம். இங்கு செய்யப்பட ஆய்வுகள் மூலம் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் அங்கு அகழ்வாராய்ச்சி நிறுத்தப்பட்டது. பின் தற்போது மீண்டும் அங்கு ஆராய்ச்சி தொடங்கி நடந்து வருகிறது. எத்தனை வருடம் இந்த நிலையில் தற்போது அங்கு கிடைத்திருக்கும் பொருட்கள்தான் இந்திய வரலாற்றில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆம் கீழடியில் கிடைத்த பொருட்களில் செய்யப்பட்ட கார்பன் ஆராய்ச்சியில் அதன் வயது 2600 வருடங்களுக்கு முந்தையது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 600 வருடங்களுக்கும் முன்பு. என்ன எல்லாம் கிடைத்தது இதற்கு முன் உலகில் எங்கும் இவ்வளவு பழமையான பொருட்கள் கிடைக்கவில்லை. ஏற்கனவே இங்கு மணி, பொத்தான், தோடு, தகடு, தொங்கட்டான் ஆகிய பொருட்கள் கிடைத்தது. தற்போது கழிவு நீர் குழாய்கள். செப்பு பாத்திரங்கள். மண் பானைகள் ஆகியவை கிடைத்து உள்ளது. இதன் மூலம் 2600 வருடங்களுக்கு முன்பே தமிழ் நாகரீகம் முன்னேறி சிறப்பாக இருந்தது நிரூபணம் ஆகி உள்ளது. குறிப்பு என்ன இந்த ஆதாரங்களில் சில விலங்குகள் பொம்மைகள் இருந்துள்ளது. ஆனால் வழிப்பாடு நடந்ததற்கான அடையாளங்கள் இல்லை. மிக மிக முக்கியமாக இந்த ஆராய்ச்சியில் இதுவரை இந்து மத அடையாளங்கள் கிடைக்கவில்லை. அதாவது ஆதி தமிழர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறும் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்ன அறிக்கை இது தொடர்பாக தொல்லையில் துறை வெளியிட்டு இருக்கும் ஆய்வு அறிக்கையில், எங்கள் ஆய்வில் சில விலங்குகளின் சின்னங்கள் கிடைத்தது. ஆனால் எங்கும் மதம் மற்றும் வழிபாடு தொடர்பான சின்னங்கள் கிடைக்கவில்லை, என்று கூறியுள்ளது. இதன் மூலம் தமிழர்கள் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், புத்தம், சைவம், வைணவம் என்று எதையாவது பின்பற்றினார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இயற்கையை வழிபாடு அதே சமயம் சில வரலாற்று ஆய்வாளர்கள், தமிழர்கள் இயற்கை வழிபாடு நடத்தி இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்த முடிவுகள் மூலம் இந்தியாவின் மொத்த முகமும் மாற போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திராவிட வரலாறு, தமிழர் வரலாறு, இந்திய வரலாறு, இந்து வரலாறு அனைத்தையும் கீழடி மொத்தமாக மாற்றி எழுதும் நாள் வெகு தொலைவில் இல்லை! https://tamil.oneindia.com/news/tamilnadu/no-religion-related-foundings-have-been-found-n-keezhadi-civilization-yet/articlecontent-pf401983-363624.html
 14. உங்களின் அடுத்த கேள்விக்குப் பதில், இந்த விடயத்தை நான் சொன்னது போல இலங்கையில் வைத்தே இந்த நபரின் குடும்பம் செய்யலாம். இல்லையாயினும், ஒரு பிரிதானிய பிரஜை, அல்லது வதிவாளர் வெளிநாட்டில் ரேப் போல கடும் குற்றம் இழைத்தார் என்று பிரிதானிய பொலீசில் முறையிட்டால் நிச்சயம் அதை விசாரிப்பார்கள். ஒரு குற்றம் எங்கே வழக்காடப் படுகிறது என்பது பின்வரும் வழிகளில் தீர்மானிக்கப்படும். 1. எங்கே குற்றம் நிகழ்ந்தது? 2. குற்றத்துக்கான சாட்சியங்கள், சாட்சிகள் எங்கே உளர்? 3. குற்றவாளி எங்கே வசிக்கிறார்? முதலில் இதை பிரிதானிய பொலீஸ் விசாரிக்கும். இந்த நபர், மகளை இண்டர்வியூ செய்வார்கள். முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் CPS ற்கு அனுப்புவார்கள். அவர்கள் இந்த வழக்கை எங்கே விசாரிப்பது பொருத்தம் என தீர்மானிப்பர்கள். அப்போ இலங்கையின் நிலைமையை காட்டி, வழக்கை இங்கேதான் விசாரிக்க வேண்டும் எனக் கோரலாம். மீறி இலங்கை என CPS முடிவு செய்தால். இதை இலங்கை அரச வக்கீலுக்கு அனுப்பி, FCO மூலம் வழக்கை நியாயமாக நடத்த அளுத்தம் கொடுப்பார்கள். அதுவும் நடக்காவிடின், சாட்சிகளை யூகேயிற்கு எடுத்து, இங்கேயே வழக்கை நடத்துவார்கள்.
 15. மீரா, இந்த பெண்ணுக்கு 19 என்றாலும், இந்த நபர் பின்வரும் வழிகளில் தண்டிக்கப்படலாம். 1. பாலியல் வன்கொடுமை (ரேப்). எத்தனை வயதான பெண்ணாகினும் இசைவு (consent) இல்லாமல் உடலுறவு கொண்டால் அது ரேப்தான். இசைவு தன்விருப்பில் வரவேண்டும். மாறாக மிரட்டியோ (கொல்லுவேன்), அளுத்தத்துக்கு உள்ளாக்கியோ (வேலையால் நீக்குவேன்) அல்லது போதை மயக்க நிலைக்கு உள்ளாக்கியோ பெறப்படும் இசைவு, இசைவாக கருதப்படாது. 2. ஒருவரின் மீது, குறிப்பாக வயதில் இளையவர்கள் மீது, நம்பிக்கைகுரிய, மதிப்புகுரிய தாக்கம் செலுத்தும் நிலையில் உள்ள பெரியவர்கள், அந்த இளயவருடன் உறவு வைத்தால், அந்த இசைவை சட்டம் உன்னிப்பாக பார்க்கும். உதாரணமாக ஒரு 21 வயது பலகலை மாணவி, அவரது பட்டமளிப்பை தீர்மானிக்கும் வலுவுடைய பேராசிரியருடன் உறவு வைத்தால், அதை உடனடியாக தன்விருப்ப உறவு என ஏற்கப்படாது. இலங்கையில் இசைவுக்கான வயது 16. ஆனால் 18 வயதுவரை ஒருவர் சிறார். இந்த பெண் சிறுமி எனும் நிலையில் இருந்து இப்போதுதான் young adult ஆக மாறியுள்ளார். இவரை இப்படி ஆக்கியவர் தந்தை ஸ்தானத்தில் இருக்கும் மாமன். இது நிச்சயமாக நம்பிக்கை மீறிய, அளுத்தம் மூலம் பெறப்பட்ட இசைவு. 3. எல்லாவற்றிக்கும் மேலாக, இந்த பெண்ணும், இந்த நபரின் மகளும் வழங்கப் போகும் சாட்சியத்தின் வலு. நினைத்துப் பாருங்கள் - இந்த நபரை அவரின் மகளே இலங்கை கொண்டு சென்று பொலீசில் ஒப்படைக்கிறார். மீடியாவை கூட்டி என் தந்தை இப்படி ஒரு வன்புணர்வாளன் இவரை தப்பவிடக்கூடாது என சொல்கிறார். வழக்கில் சாட்சியும் அளிக்கிறார். இந்த நபருக்கு வக்கீலுக்கு காசு கட்டவே யாரும் இல்லை எனும் நிலை. மேலே நான் சொன்னது போல நடந்தால் இந்த வழக்கில் இந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்தார் என நிறுவுவது இலகுவானது. 4. மேலே நான் சண்டமாருதனுக்கு அளித்த பதிலையும் பாருங்கள். முறைதவறிய உறவு (incest) எனும் வகையில் 15-25 வருடம் கடூழிய சிறைக்கு அனுப்பவும் முடியும். இரெண்டு குற்றபத்திரிகையும் ஒன்றாக தாக்கல் செய்யலாம். 5. இதுவே எனது குடும்பத்தில் நடந்து இருந்தால்? ஒரு வழக்கை ஒருபோதும் இப்படி subjective ஆக அணுக முடியாது. சில நேரம் இந்த நபரை நான் கொல்லவும் கூடும். என்ன செய்வேன் என்பதை நடந்த பிந்தான் கூறமுடியும். ஆனால் ஆத்திரம் கண்ணை மறைக்காமல், பெண்ணின் எதிர்காலத்துக்கு எது நல்லது என சிந்தித்து objective ஆக அணுகினால்- இந்த சிக்கலுக்கான விடை பின்வருமாறு. பெண் 19 வயதில் முறையற்ற கற்பவதி. எப்படியும் பிள்ளை பிறக்கும் போது ஊர் அறியும் (இப்போதே அறிதிராவிடின்). ஆகவே சொந்த ஊருக்கு இதை மறைத்து பயனில்லை. இலங்கையிலும், வெளிநாட்டிலும் வாழும் ஏனையோருக்கு இதை தெரியாவண்ணம், பெண்ணின் பெயரை வெளியிடக் கூடாது என ஒரு கோர்ட் ஓடரை பெற முடியும். டெல்லி வழக்கில் கொலையான “நிர்பயா” அந்த பெண்ணின் உண்மை பெயரா? இல்லை. ஆனால் உலகமே அந்த பெயரைதான் அறிந்தது ( பின்னாநாளில் அவர் குடும்பம் பெயரை வெளியிடும்வரை என நினக்கிரேன்). இவ்வாறு இந்த பெண்ணின் நலனை சகல வழியிலும் பாதுகாத்த படி இந்த நபருக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க முடியும். குறிப்பாக அந்த நபரின் மகள், மருமகன், குடும்பம் மனது வைத்தால். இங்கே பலதடவை எழுதப்பட்டது போல, இந்த நபரின் சொத்துக்களில் இருந்து இந்த பெண்ணுக்கு நட்ட ஈடும், பிறக்கும் குழந்தைக்கு ஜீவனாம்சமும் பெற்றுக் கொடுக்க முடியும். அதன் மூலம் இந்த பெண் தன் வாழ்வை, வேறு பெயரில், இலங்கையின் இன்னொரு பகுதியில் தொடரவும், பின்னாளில் ஒரு தக்க துணையை இனம்கண்டு குடும்ப வாழ்வில் ஈடுபடவும் கூட இது உதவக்கூடும். பி.கு: இந்த கிழவனை ரெண்டு தட்டுத் கட்டியதால் - அந்த பெண்ணிற்கு, அவரின் எதிர்கால வாழ்வுக்கு என்ன நன்மை விழைந்தது?