• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

goshan_che

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  4,794
 • Joined

 • Last visited

 • Days Won

  26

goshan_che last won the day on January 5

goshan_che had the most liked content!

Community Reputation

1,364 நட்சத்திரம்

1 Follower

About goshan_che

 • Rank
  Advanced Member

Profile Information

 • Gender
  Male

Recent Profile Visitors

3,740 profile views
 1. நான் கேட்ட அளவில் அவர் உச்சரிப்புத்தான் தமிழ்-தனமாக இருந்ததே ஒழிய மொழிநடையில் பிழையேதும் இல்லை. தவிரவும் ஒரு முன்னாள் போராளி, இந்தளவுக்காவது முயற்சிக்கிறாரே? எமது பிரச்சினைகள் பற்றி எடுத்துச் சொல்ல, நெஞ்சுரமும், பிரட்சினை பற்றிய தெளிவான புரிதலுமே போதும். மொழியை பார்த்துக்கொள்ள ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளர் போதும். பிரபாவும் தமிழ்செல்வனும் எடுத்து சொல்லாததையா நன்கு படித்த, நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் சம்பந்தனும், சுமந்துரனும் விக்கியும் கூறி விட்டார்கள்? குருசாமியை படித்தவர் என வரவேற்கும் நீங்கள், அந்த படித்தவரை நியமிக்கும், நீங்கள் ஆதரிக்கும் நல்ல முடிவை, எடுத்தது செல்வம் என்ற படிக்காத முன்னாள் ஆயுததாரி என்பதை மறுக்க முடியுமா? செல்வத்தின் மீதோ அவரின் அரசியல் மீதோ எனக்கு துளியூண்டும் நம்பிக்கை இல்லை. ஆனால் இதற்கும் படிப்புக்கும் மொழி ஆற்றலுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.
 2. செல்வம் பாராளுமன்றத்தில் குழுக்களின் பிரதித்தலைவர் பதவியில் இருக்கிறார். சபாநாயகர், பிரதி சபாநாயகர் இல்லாதவிடத்து அவரே சபையை நடத்துவார். நேற்று ரஞ்சன் ராமநாயக்க பேசும் போது சபை செல்வத்தின் தலைமையில் நடந்தது. சபையை அவர் சிங்கள மொழியிலேயே நடத்தினார்.
 3. ஜல்லிக்கட்டை மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடத்த வேண்டும் என சொன்னது இதைத்தான் ஐயா. மனிதர்களின் சாவு மட்டுமல்ல, காளைகளுக்கு சாராயம் ஊத்தல், ஊசியடித்தல், போல சினம் வரும் செயல்களை செய்யாமலும் கட்டுபடுத்த வேண்டும். நீங்கள் கூறியது போல ஏறு தழுவும் முறை இப்போ அருகி, பரிசுக்காக காளையை எப்படியும் அடக்கி விடும் மனோநிலையும், எப்படியும் யாராலும் அடக்கமுடியாதபடி காளையை சினம் கொள்ள வைக்கும் மனோநிலையுமே மேலோங்கி நிற்கிறது. இங்கேதான் தெளிவான இறுக்கமான கட்டுப்பாடுகள் அவசியமாகிறது. பிகு: ஜல்லிகட்டும் வழக்கம் தெலுங்கர் அறிமுகப்படுத்தியது என்பதை சொன்னதற்கு நன்றி. தம்பிகள் இன்னேரம் துடிச்சுப் போயிருப்பார்கள் பிகு2: ஒற்றைக்கு ஒற்றை - காளையின் கவனத்தை நான் ஈர்கிறேன், நீ திமிலை பிடி என டீலிங் நடக்கிறதா இல்லையா? இரண்டு சிந்திக்க தெரிந்த மிருகங்கள் திட்டமிட்டு, சிந்திக்க தெரியாத ஒரு மிருகத்தின் திமிலை பிடிப்பதில் வீரம் எங்கே ஐயா இருக்கிறது?
 4. புரிதலுக்கு நன்றி 1. இது போலி ஜீவகாருண்யம் இல்லை. உலக வெப்பமாதல் பற்றி யாரும் கதைதால் - நீங்கள் வீட்டில் ஹீட்டர் போடுவதில்லையா? பெட்றோல் அடிப்பதில்லையா? என்றா கேட்பீர்கள்? 100% இலட்சிய ஜீவகாருண்யம் சாத்தியமில்லை. ஆனால் எம்மால் முடிந்தளவு பிற உயிர்களை இம்சிக்காமல் வாழலாமே? என்பது போலி ஜீவகாருண்யம் ஆகாது. எனக்கு மான் கறி பிடிக்கும் அதற்காக வீதியில் காரில் போகும் போது மான் குறுக்கிட்டால், பிரேக் அடிக்காமலா இருக்க முடியும். 2. ஜல்லி கட்டை கலாச்சார அடையாளம் என்பதை யாரும் மறுப்பதில்லை. ஆனால் இதுதான் எமது வீரம், பிரபாகரனை பார்த்ததாயா, இராவணை பார்த்தாயா என்பது சின்னப்பிள்ளைதனமானது. இதில் வீரமுமில்லை, விளையாட்டும் இல்லை. அண்மையில் love Island எனும் நிகழ்சியில் வேட்டைகாரருக்கு ஏற்பட்ட கதி. பிரிதானியாவில் hunting with hounds க்கு தடை - இப்படி இது இரு வேறு நாகரிகங்களிலும் ஒரே மாதிரியாகவே அளவிடப்படுகிறது. நம்மில் சிலர்தான், முற்போக்கு சிந்தனை என்றாலே அது ஏதோ வெள்ளைக்காரன் சமாச்சாரம் என்பதாக அலர்ஜி ஆகிறார்கள். 3. இயற்கை சமனிலையை எப்படி ஜல்லிகட்டு பேணுகிறது? Fox hunting, badger cull போன்றவற்றில் இது ஓகே, ஆனால் ஜல்லிகட்டில்? 4. காளை தானாகவே மதம் கொண்டு திமிறினால், தாக்கினால் அதை தனித்து அடக்கினால் அது வீரம், அல்லது ஒரு காட்டு விலங்கை அடக்கினால் -தனியாளாக அதில் சம சந்தர்பம் இருக்கும் - ஒரு காளையை உரே திரண்டு அடக்குவதில் என்ன சம சந்தர்பத்தை கண்டீர்கள்? குறைந்த பட்சம், 1காளை=1மனிதன் என்று மோதினால் கூட பரவாயில்லை. ஜல்லிகட்டில் “வீரர்கள்” காளையை அடக்குவதற்கும், போரில் புலிகளை மகிந்த வென்றதுக்கும் பெரிய வித்தியாசமில்லை. இது வீரம் என்றால் அதுவும் வீரம்தான்.
 5. அண்ணை, இங்க யார் ஸ்பெயின்ல நடக்கிறது சரி எண்டு எழுதினவை. ஒரு முற்போக்கு கருத்தை சொன்னா உடனே வெள்ளைகாரனை கொப்பி அடிக்கினம் எனும் உங்கள் பார்வையில்தான் கோளாறு. மேலே சொல்லப்பட்ட கருத்துகளை சிந்திக்க கறுப்பு, பழுப்பு மூளைகளாலும் முடியும். உண்மையிலேயே உங்களுக்கு வீட்டில் செல்லப் பிராணியாக வளர்பதற்கும், உணவுக்காக முடிந்தளவு நோவை குறைத்து கொல்வதற்கும், விளையாட்டுக்காக, பொழுதுபோக்குக்காக ஒரு ஜீவனை துன்புறுத்துவதற்கும் வித்யாசம் தெரியவில்லையா? இல்லை என்றால் - the gap between our respective understandings of the world is too big to fill. மன்னிக்கவும்.
 6. ஏன் டொக்டர் கரடி சிங்கமேதும் வளர்கிறாவோ? குசா அண்ணை, துல்பென் சொன்னதே சரி. சீக்கிரம் டாக்டரை அணுகவும். இஞ்ச எல்லாம் பிரீதானே பின்ன என்ன பயம் ?
 7. நோ டென்சன் கற்பிதன், போட்டி ஏதுமில்லை. சும்மா ஒரு சின்ன பகிடி அவ்வளவே. இவ்வளவு சீரியஸ்சான ஆளா நீங்கள்?
 8. மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் இந்தியா எங்கெணும் இந்துதுவாவை ஒரு சக்தியாக கட்டி எழுப்ப வேண்டும் என்ற ஆர் எஸ் எஸ் சின் நிலைப்பாட்டு கொள்கை முடிவில் மாற்றமில்லை. மத்தியில் ஆட்சி மாறினால் என்ன ஆகும்? சீமான் தன் கொந்திராந்தை செவ்வனே தொடர்ந்து செய்வார்.
 9. புலிப் பணத்தை, வெளிநாட்டில் புலி வேசம் போட்டவர்கள் ஆட்டையை போட்டார்கள்? ஆதாரங்களை சமர்பிக்க முடியுமா? முன்னாள் போராளிகள் என்ற பெயரில் அரசு இறக்கும் ஆட்கள் அரசியல் கட்சி தொடங்குகிறார்கள்? ஆதாரங்களை சமர்பிக்க முடியுமா? சுமந்திரன் பெட்டி வாங்கினார். ஆதாரங்களை சமர்பிக்க முடியுமா? சம்பந்தன் எதிர்கட்சி தலைவர் பதவிக்காக இனத்தை கூவி விற்றார். ஆதாரங்களை சமர்பிக்க முடியுமா? விக்கி ரஜனியை சந்தித்து தமிழ் தேசியத்துக்கு ஊறு செய்கிறார். ஆதாரங்களை சமர்பிக்க முடியுமா? முடியாதில்ல? அப்ப இதற்கு மட்டும் எப்படி ஆதாரம் இருக்கும். இவ்வளவு நுணுக்கமாக, திராவிட கொள்கை மீது, ரஜனி, சீமான், ரஞ்சித், கிருஸ்ணசாமி என பல முனைகளில் சிறிதும் பெரிதுமாக போர் தொடுக்கும் இந்துதுவா/பிஜேபி இந்த யுக்திக்கான ஆதாரங்களை விட்டு வைப்பார்களா என்ன? அப்போ நான் சீமான் மீது சொல்வது என் ஊகம்/அபிப்ராயமா? யெஸ் அண்ட் நோ - முன்பே ஒரு திரியில் எழுதிவிட்டேன்: 1. தமிழ் தேசியத்தை வளர்க்க பெரியாரை அவர் கொள்கைகளை விமர்சிக்க வேண்டியது இல்லை - விமர்சனத்தை, தேர்தல் அரசியல் செய்த அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயாவில் இருந்து ஆரம்பிக்கலாம். பெரியாரின் அற்புதமான கொள்கைகளை இந்த வியாபாரிகள் கொள்ளை அடிக்க பயன்படுத்தினார்கள். இந்த உண்மையை சொல்லி சீமான் அரசியல் செய்திருக்கலாம். பிஜேபியின் வளையத்துக்குள் போக முதல் சீமான் செய்த அரசியல் இதுதான். இப்போ பெரியாரை, அவர் கொள்கைகளை மூர்க்கமாக எதிர்க்க என்ன திடீர் காரணம்? பெரியாரை மக்கள் மனங்களில் இருந்து நீக்காமல் - இந்துதுவாவை புகுத்த முடியாது - அதனால்தான் எங்கே இருக்கு பெரியார் பூமி? என்று கேட்க வேண்டியதாகிறது. 2. சாதிய அடிப்படையில் தமிழரை தமிழன், தமிழன் அல்லாதோர் என கூறுபோடுதல். பிராமண எதிர்ப்பு என்ற ஒற்றை அணியில் இருக்கும் மக்களை, தமிழன், தமிழன் அல்லாதோர் என பெரும் பிரிப்பு பிரிப்பது சீமானின் வேலை. அதை பின்னர் சிறுக, சிறுக தலித், கொங்கு வேளாளர், தேவாந்திரகுலம், தேவர், என உடைப்பது ரஞ்சித் தரவளிகளின் வேலை. 3. முருகன் முப்பாட்டன் என்ற திடீர் பல்டி. இது நேரடியாக இந்துதுவா புகுத்தல். பிஜேபிக்கு அடுத்து கொள்கை ரீதியில் தமிழ்நாட்டில் இந்து மதத்தை முன்னிறுத்துவது நாத மட்டுமே. 4. நாயக்கரும், முதலியாரும், தமிழர் இல்லை ஆனால் - இந்திய துணை கண்டத்துக்கு அப்பால் இருந்து வந்த பிராமணர் தமிழர் எனும் அப்பட்டமான இந்துதுவா கொள்கை நிலைப்பாடு. இப்படி சீமான் பிஜேபியின் C டீம் என்பதற்கு - பல telltale signs எம் கண்முன்னே இருக்கிறது. இவற்றை வைத்து முன்வைக்கப்படும் நியாயமான சந்தேகம்தான் சீமான் பிஜேபியின் மறை கரம் எனும் கோட்பாடு.
 10. கைப்பாவைக்கும் கைக்கூலிக்கும் அப்படி என்ன பெரிய வித்யாசாம்? இரெண்டுமே அரசின் உத்தரவுக்கு ஏற்ப செயல்படுபவர்கள் என்ற அர்த்தத்தையே தருகிறது? ஒன்றில் இருக்கும் வசவுத்தொனி மற்றையதில் இல்லை. இது மட்டுமே நான் காணும் வித்தியாசம். அதாவது செவிடன் என்று எழுதுவதற்கும், செவிப்புலனற்றோர் என எழுதுவதற்கும் உள்ள வேறுபாடு. அரசியலில் வசவுச் சொற்றொடர்களின் பாவனை அருவருப்பானதே. துரையப்பாவை துரோகி என தமிழ் தலைவர்கள் கைகாட்டிய காலத்தில் இருந்து இது எம்மத்தியில் இருக்கிறது. பிரெக்சிற் விவாதத்தில் இருபகுதியும் பாவித்த வசவுகளை பார்த்தீர்களானால் இது ஒன்றும் எமக்கு மட்டுமே உரித்தானதல்ல எனப்புரியும். ஏனைய குழுக்கள் ஒரு அளுத்தமான அரசியல் சூழ்நிலைக்குள் போகும் போது அவர்களின் அரசியல் சம்பாசணைகள் தரம் குறைவடையும் பின்னர் மேல் எழும். 50 வருடமாக எமது அரசியல் ஜீவ-மரண அழுத்தத்தில் இருப்பதாலோ என்னவோ - நம் அரசியல் சம்பாசணையின் தரம் எப்போதும் குன்றியே இருக்கிறது. இதில் நீங்கள் காட்டிய சமூககாரணிகளும் கூட பாதிப்பு செலுத்துகிறன.
 11. இன்னும் சிரிச்சு முடியலடா சாமி வின்னர் படத்தில் வடிவேலுவின் தொடைநடுங்கி கையாள் பாட்டிமாவை காட்டி “தல போட்டுரவா?” என்பார். உடனே வடிவேலு “ சை போ... நாளைக்கி சாகப்போற கிழவிய இன்னிக்கு கொல்லப் போறியா” என்பார். அப்படிதான் இந்த “வீர”விளையாட்டும். சிங்கம், புலிய கூட்டியாந்தா ‘வீரர்கள்’ எல்லாரும் வெளிக்கு போய்டுவாங்க. விளையாட்டு என்பது இரு சமநிலையுள்ள தனியாட்கள் அல்லது குழுக்களிடையே நடப்பது. சிந்திக்கும் ஆறறிவுள்ள மிருகங்கள் பல கூட்டாக சேர்ந்து ஒரு ஐந்தறிவு மிருகத்தை துன்புறுத்துவது விளையாட்டல்ல, கொடுமை. பிகு: ஜல்லிகட்டை கலாச்சார அடையாளமாக, மிகுந்த கட்டுப்பாட்டு அடிப்படையில் அனுமதிக்க வேண்டும் ஏனேன்றால் பெரும்பான்மை தமிழக மக்கள் விரும்புவதை அதைத்தான். அதுதான் ஜனநாயகம், மாநில சுயாட்சியின் மாண்பு. ஆனால் இதில் வீரமும் இல்லை விளையாட்டும் இல்லை.
 12. இப்பதான் அண்ணை பொயின்ற பிடிச்சிருக்கியள். ரஜனி தமிழ் நாட்டில் பிஜேபியின் A டீம் கேப்டன் ( பிஜேபியின் எந்த டீமும் தேறாது என்பது வேறு விடயம்). ரஜனிக்கு கொடுக்கப்பட்ட வேலை, தமிழ்நாட்டில் திராவிட எதிர் அரசியல் செய்து, தமிழ்நாட்டில் திராவிடம் (அதிமுக) V திராவிடம் (திமுக) என்ற நிலையை மாற்றி திராவிடம் V இந்துதுவா என்ற நிலையை உருவாக்க வேண்டும். சீமான் பிஜேபியின் C டீம் கேப்டன். சீமானுக்கு கொடுக்கப்பட்ட வேலை - தமிழ் தேசியத்தினுள் ஒளிந்தபடி திராவிட அரசியலை தாக்கி, ரஜனியின் டீம் உள்ளே வர வெற்றிடத்தை ஏற்படுத்தி கொடுப்பது. இப்படி கிருஸ்ணசாமி, பா ரஞ்சித் என ஒவ்வொரு வேறுபட்ட முனைகளில் இருந்து திராவிடத்தின் மீது போர் தொடுக்கும் பல சில்லறை டீமுகள் இப்போ தமிழ்நாட்டில் இறக்கிவிடப்பட்டுள்ளன. A-Z அத்தனை டீமுகளினதும் ஒரே குறிக்கோள் தமிழ்நாட்டில் இந்துதுவாவை மாற்று சக்தியாக நிறுத்துவது. இதன் ஒரு அங்கம் - இந்துதுவா ஈழத்தமிழர் அபிமானமுடையது என நிறுவுவது. அதற்கு விக்கி பயன்படுத்தபடுகிறார் என்பது தெளிவு. ஆனால் இதை வைத்து அவர்களை நாமும் ஏன் பயன்படுத்தி எம் பயணத்தை முன்னேற்ற முயற்சிக்க கூடாது என விக்கியும் யோசிக்கலாம் அல்லவா? அப்போ ஏன் சீமானை அரவணைத்து எம் பயணத்தை முன்னேற்ற முயற்சிக்க கூடாது? ஏனென்றால் தமிழ்நாட்டில் இந்துதுவா நிறுவப்பட்ட மறுகணமே, சீமானுக்கான தேவை அற்றுப்போக, அவர் சத்தமின்றி மேடையில் இருந்து அவரின் போசகர்களால் அகற்றப்பட்டு விடுவார். அதனால் சீமானுடன், தமிழ் தேசிய இந்திய எதிர்ப்பு அடிப்படையில் போடப்படும் எந்த உடன்பாடும் செயல் வடிவம் பெறாது. ஆனால் ரஜனியுடன், இந்துத்துவா, ஆன்மீக அடிப்படையில் கட்டப்படும் உறவால் கொஞ்சூண்டு பேரம் பேசும் வலுவையாவது அடைய முடியும் என சொல்ல முடியாவிட்டாலும், முயற்சிக்கலாம்.
 13. நான் முன்பே வேறு திரிகளில் எழுதியதை நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன். துரோகி, கைக்கூலி, காட்டிகொடுப்பவன், கோடரிக்காம்பு இப்படியான வசவுகளை நான் பாவிப்பதில்லை. எழுந்தமானமாக (casual) கையாளப்படும் இந்த வசவுகளால் நாம் பல உயிர்களை கூட பலி கொடுத்தோம் என்பதும் வரலாறே. மேலே நீங்கள் மீராவை இடித்துரைத்ததிலும் கூட எனக்கு உடன்பாடே. ஏனென்றால் “கைக்கூலி” என்ற வசவை பாவிக்காமல் மீரா அதே கருத்தை கூறி இருக்க முடியும். தவிரவும் தன் சந்தேகம் ஏன் நியாயமானது என்பதை கூட அவர் சொல்லவில்லை. ஆனால் ஒருவர் அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்று ஆதரபூர்வமாக நிரூபணம் ஆகும் போது, அல்லது குறைந்தபட்சம் நியாயமான சந்தேகம் எழும் பட்சத்தில், அதை அப்படியே உள்ளபடியே “அரசின் கைப்பாவை” என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்ல முடியும்? இன்னொன்றையும் நீங்கள் கவனத்தில் எடுக்கவேண்டும், இதே யாழ்களத்தில், சுமந்திரன் பெட்டி வாங்கினார், சம்பந்தன் கட்டி வாங்கினார் என்றும்தான் ஆதாரம் இல்லாமல் எழுதப்படுகிறது. இதே நிலைதான் விக்கிக்கும். ஆகவே இங்கே யாரும் ஆதாரத்துடன் எழுதுவதாக தெரியவில்லை. சம்பந்தன் போகும் பாதை எனக்கு பிடிக்கவில்லையா - அப்போ சம்பந்தன் பெட்டி வாங்கிவிட்டார் என்று எழுதலாம். விக்கி ரஜனியை சந்தித்தது பிடிக்கவில்லையா? விக்கிக்கு மறைகழண்டு விட்டது என எழுதலாம். அதே போல - அரசினால் விடுவிக்கப்பட்ட ஆளா? அவர் போகும் பாதை எனக்கு பிடிக்கவில்லையா - கையோடு இருக்கிறது கைக்கூலிப் பட்டம் . இது யாழில் சாதாரண வழமைதான்.