goshan_che

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  4,486
 • Joined

 • Last visited

 • Days Won

  23

Everything posted by goshan_che

 1. நீங்கள் இனப்பெருக்கத்தையும் காமத்தையும் குழப்புகிறீர்கள். இனப்பெருக்கம் செய்யும் எல்லா உயிரினங்களும் காமத்தை உணர்வதில்லை. சில மட்டுமே.
 2. கடவுளை அடைய பலவழிகள் உண்டாம் அண்ணை, அதில கோபிகைகள் கண்ணனை அடைந்த வழி உதுதானாம். எனக்கும் உந்த வழியால போக கிடைக்கும் எண்டால் நானும் நாளை முதல் ஆத்திகன் பிகு: சிவமூலிகை என்றால் யாதென தேடிப்பார்க்கவும்.
 3. அநேகமாக யுஎன்பியில் இருந்து மங்கள அல்லது ஹரின் பெர்ணாண்டோவை நியமிக்கலாமாம். யுஎன்பி யில் இல்லாத, ஹெல உறுமயவின் சம்பிக்க ரணவக்கவை அவ்வளவு எளிதில் பிரதமராக்க முடியும் போல தெரியவில்லை. சிங்கள கடும்போக்கு வாக்குகளை கவர சஜித்தே கிளப்பி விட்ட கதையாக அல்லது தமிழ் முஸ்லீம் வாக்காளரை கிலி கொள்ளவைக்க கோட்ட தரப்பு கிளப்பிவிட்ட கதையாகாவும் இருக்கலாம். நன்றியும் வாழ்த்தும் நுணா. நன்றியும் வாழ்த்தும் ஏராளன். நன்றியும் வாழ்த்துக்களும் அண்ணா.
 4. துல்பென், நம்பிக்கைக்கும் விஞ்ஞானத்துக்கும் எனக்குத் தெரிந்த வித்தியாசம்: நம்பிக்கை முடிந்த முடிபு என்று ஒன்றை புகுத்தும். விஞ்ஞானம் - இப்போதைக்கு இதுதான் எனச்சொல்லி திறந்த மனதுடன் இருக்கும். தவிரவும் ஒருவர் இரும்புக் கூழை குடித்தார் எனச் சொல்லும் போது, விஞ்ஞானம் அதை இருக்கும் தரவுகளை வைத்து உடனடியாக மறுக்காது. மாறாக - இதன் பின்னால் ஏதேனும் விளக்கம் இருக்குமா எனத் தேடும். இல்லை எனும் போது. இப்போதைக்கு இல்லை, எதிர்காலத்தில் இருக்கலாம் (1%) எனப்போட்டு வைக்கும். பொதுவாக விஞ்ஞானிகள் யாரும் கடவுள் கொள்கையை அடித்து மறுப்பதில்லை ஏனெனில் அவர்கள் தேடலுக்கு விசுவாசிகள். ஒரு காலத்தில் கடவுள் கொள்கை கூட விஞ்ஞான ரீதியாக நிறுவப்படலாம் என்பதற்கும் ஒரு கதவை அவர்கள் திறந்தே வைப்பார்கள். விஞ்ஞானத்தை ஒரு மதம் போல கடைப்பிடிப்பவர்கள்தான் - இது அல்லது அது என கறுப்பு-வெள்ளையாக வாதிடுவர். பிரபஞ்சத்தின் ஆக்கம், பிரபஞ்ச சக்திகள், என பல விடயங்கள் இன்னும் எமக்கு விளங்காதா grey areas. பெளதீக விதிகள் பிழைத்துப்போகும் நிலை ஒன்று உளது தெரியுமா ? உலகில் நாம் இரும்பு இன்ன வெப்ப நிலையில் உருகும் என ஒரு பெளதீக விதியை வைத்துள்ளோம். ஆனால் அண்டவெளியில் பெளதீக விதிகள் பிழைக்கும் புள்ளியில் - இரும்பு இன்னோர் வெப்ப நிலையில் உருகக்கூடும். இது செல்லப்பா சுவாமிக்கு எப்படி தெரியும்? என்றால் என்னிடம் பதில் இல்லை, ஆனால் இதை ஒரே அடியாக தூக்கி எறியவும் கூடாது என்பதே உண்மையான விஞ்ஞானியின் நிலையாக இருக்க முடியும். அடுத்து, நீங்கள் மதங்களையும் (நம்பிக்கை) கருதுகோள்களையும் போட்டு குழப்புகிறீர்கள். கடவுள் உள்ளார் - இது கருதுகோள். அவர் யானை முகத்துடன், பானை வயிற்றுடன் உள்ளார், இத்யாதி இத்யாதி - மதம். எனும் நம்பிக்கை. மதத்தால் விளைந்த இன்னல்கள் எல்லாவறையும் கடவுள் இருக்கிறார் என்ற கருதுகோளின் தலையில் சுமத்த முடியாது.
 5. நான் அறிந்த வரையில் மதம் அண்மைகாலம் வரை யாழில் ஒரு மேட்டரே இல்லை. இப்போ செய்தி/ பதிவுகளை இணைபவர்கள் சிலர் தேடித் தேடி தமிழர்கள் மத்தியில் மதகுரோதத்தை தூண்டும் விதமாக செய்திகளை இணைப்பதை நான் முன்பும் ஒரு முறை சுட்டிக் காட்டியுள்ளேன். யாழில் இப்படியான திரிகளில் மூன்று பிரிவினர் முட்டி மோதுகிறார்கள். சைவத்தின் சாரணர்கள், விஞ்ஞானத்தின் வீரர்கள், கத்தோலிக்கத்தின் காவலர்கள் , என எதிரெதிர் முகாம்களுக்கு பெயரும் கொடுத்தபடி. குறிப்பாக சைவம் எதிர் கிறீஸ்தவம் என்ற அருவருப்பான பிடுங்குப்பாடுகள் ஒவ்வொரு திரியிலும் தொடர்வதோடு, சம்பந்தமில்லாத திரிகள், திண்ணைவரை இந்த வன்மம் வளர்கிறது. குமுதினிப் படகில் மதம் விசாரித்து வெட்டவில்லை. 87 இல் நல்லுர் கோயிலில் அடைகலம் புக நிர்பந்திக்க பட்டவர்களில் எல்லாரும் இந்துக்கள் இல்லை. நவாலி தேவாலயத்தின் மீது விழுத்தபட்ட குண்டு தமிழ் கிறீஸ்தவர்களை மட்டும் குறிவைத்து வீசப்படவில்லை. ஆனால் 10 வருடத்தில் இவை எல்லாவறையும் மறந்து விட்டோம். இந்த பிளவுகள் ஏற்படுத்தும், பொதுவெளியில் எழுதப்படும் கருத்துக்களின் பாதிப்பை பற்றி யாரும் கருதுவதாகக் தெரியவில்லை. செய்தி இணைப்பவர்களுக்கு தாம் இணைத்த திரி பற்றி எரிய வேண்டும். கண்டண்ட் வேணும். அது மட்டுமே ஒரே குறி. இன ஒற்றுமையாவது மண்ணாவது. அவர்கள் இப்படி என்றால் இதை கெட்டித்தனமாக கடந்து போகும் சாதுரியம் பல கருத்தாளர்களுக்கும் இல்லை. இந்த மூன்று பக்கத்திலும் எழுதுபவர்கள் எழுதி செய்த நன்மையை விட தீமையே அதிகம். ஆகவே என்னை கேட்டால், இப்படியானவர்கள் எழுதாமல் விடுவதும் நல்லதுக்கே. எழுத ஆளில்லை எண்டால், செய்தி இணைபவர்களும் தம் போக்கை மாற்றக்கூடும்.
 6. போட்டி முடிய இன்னும் 6 நாட்களே உள்ளன. கடைசியா முகத்தை பாக்கிரவை ஒருதரம்....சே இதென்ன அபசகுனமா வாயில வருகுது... கணிப்புகளை மாற்ற நினைச்சால், புதிதாக ஒரு பதிவை சட்டுபிட்டுன்னு போட்டு விடுங்கோ.
 7. நேற்றைய கூட்டத்தில் தான் ஜனாதிபதியாகினால் புதியதாக ஒருவரை, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள ஒருவரை பிரதமராக்குவேன் என சஜித் கூறினார். கூடவும் ஊழல் குற்றச்சாட்டில் மாட்டியவர்களுக்கு தன் அமைச்சரவையில் இடமில்லை எனவும் கூறினார். பிணைமுறி வழக்கில் குற்றம் கூறப்படும் ரவி கருணாநாயக்க, ரணில் ஆகியோருக்கு சஜித் அடித்த ஆப்பாகவே இது கருதப்படுகிறது? இதனால் சஜித்தின் பலம் கூடுமா? குறையுமா? கூடும் என்பதே பல நோக்கர்களின் கருத்து.
 8. கண்டது சந்தோசம் பையா, மீள்வரவு நல்வரவாகுக. சும்மா குத்து மதிப்பா ஒரு கணிப்பை போட்டு விடுங்கோ. நன்றியும் வாழ்த்தும் நிலாமதி அக்கா. பிரச்சனைகள் எழாமல் இருக்க வேண்டும் என்பதே என் ஆதங்கமும். பொருத்தமான சின்னம்தான்.
 9. “மதம் - குடிகளின் ஓப்பியம்” என்கிறார் கால் மார்கஸ். சகல மதத்தவர்களினாலும் தூண்டப்பட்ட மதப்போதையால் உலகில் விளைந்த அல்லல்களோடு ஒப்பிட்டால் கஞ்சாவால் ஏற்பட்ட அல்லல்கள் புறக்கணிக்கதக்கது. எனவே மதப்போதைக்கு இந்த மரப்போதை எவ்வளவோ மேல்.
 10. புள்ளிங்கோ, ஓவரா டென்சன் ஆகவேண்டாம். கடையிற்சாமி இரும்பை காய்ச்சி குடித்தார் என்றால், அதை நான் ஒரு போதும் நம்ப போவதில்லை. எனது பாட்டனார் சொன்ன கதைகள் கூட ஆர்வத்தை தூண்டுவனவே ஒழிய அவற்றை உண்மை என நான் நம்பவில்லை. ஆனால், 100 வருடத்துக்கு முந்திய யாழில் வாழ்ந்த ஒரு நபரிடம் போய், இன்னும் நூறு வருடத்தில், ஒரு கையளவு பெட்டியில், 8000 மைலுக்கு அப்பால் லண்டனில் வாழும் ஒருவருடன் முகம் பார்த்து நேரலையாக பேச முடியும் (FaceTime) எனச் சொன்னால், அவரின் மனநிலை எப்படியாய் இருந்திருக்கும்? நாம் இப்போ இரும்பை காய்ச்சி குடிப்பதை எப்படி பார்கிறோமோ அதே மனநிலையாய்தானே இருந்திருக்கும்? சித்தர் என்றால் யார்? சித்துக்கள் அறிந்தவர். சித்து என்றால் என்ன? ஆங்கிலத்தில் சொல்வதானால் supernatural powers. supernatural என்றால் என்ன? attributed to some force beyond scientific understanding or the laws of nature. அதாவது - தற்போதைய விஞ்ஞான அறிவால், நாம் விளங்கி வைத்துள்ள இயற்பியல் விதிகளால் விளக்க முடியாததாகச் சொல்லப்படும் ஒரு சக்தி. சோழனுக்கும் பாண்டியனுக்கும், துப்பாக்கிச் சூடு ஒரு சித்து. அவர்கள் காலத்தில் ஒருவன் துப்பாக்கியால் ஒருவனை சுட்டிருந்தால், இதென்ன ஒரு குழாயில் இருந்து உலோகம் எப்படி இவ்வளவு விரைவாக வருகிறது ? இது தெய்வீக சக்தியா? எனவே எண்ணி இருப்பார்கள். இடி, மின்னல் முதல், அம்மை நோய், வரை எம் அப்போதைய விளக்கத்துக்கு அப்பாற்பட்டவையே சித்துக்கள், தெய்வங்கள் ஆகின. இப்போ மறுபடியும் செல்லப்பரின் இரும்பு கூழுக்கு வருவோம். இரும்பு எனும் ஒரு திண்ம உலோகம், திரவமாக மாற அதி கொதி நிலை வேண்டும் என்பது எமது தற்போதைய அறிவு. ஆனால் இரும்பை திரவ நிலையிலேயே வைத்தபடி, வெப்பநிலைய மட்டும் தணிக்கும் ஒரு முறைய (மறுபடியும் திண்மம் ஆகாமல்) நாளைக்கே விஞ்ஞானம் கண்டுபிடிக்கலாம் அல்லவா? ( மூலக்கூறுகளை மாற்றி மூலங்களின் இயல்பை மாற்றலாம் என்பதுதான் அணுச்சிதைவு, அணு அமைப்பு விஞ்ஞானத்தின் அடிப்படை). இப்படி ஒரு முறையை செல்லப்பர் அறிந்து பயன்படுத்தினாரா? 99% இருக்க முடியாது எனவே நானும் நம்புகிறேன் ஆனால் 1% வாய்ப்பு உண்டல்லவா? எனவே சித்துக்கள் எனச் சொல்லப்படுபவற்றை நாம் நம்ப வேண்டியதில்லை. ஆனால் உண்மையிலேயே நாம் விஞ்ஞானத்தின் பாற்பட்டவர்களாயின் இதை பற்றி ஆர்வமாக (curious) இருப்பது நம் கடமை. எப்போது, இதுதான் முடிந்த முடிபு என விஞ்ஞானம் சொல்கிறதோ அப்போதே அது விஞ்ஞானம் எனும் பண்பை இழந்து நம்பிக்கை dogma எனும் நிலையை அடைந்துவிடுகிறது. விஞ்ஞானத்தில் dogmatic அணுகுமுறைக்கு இடமே இல்லை. be curious, be very curious.
 11. மருது, 1. இங்கே சாதி எங்கே வருகிறது என்று புரியவில்லை. எனது யோகர் பற்றிய துணுக்கில், அவர் சொன்னதை அப்படியே சொல்ல வேண்டும் என்பதற்காய் அடைப்புக் குறியை பாவித்து ஒரு சாதிய விளிப்பை எழுதினேன். அதை அப்படி எழுதாமல் அந்த சொற்றொடரை எழுத முடியாதது என்பதால். இதையா நீங்கள் சுட்டுகிறீர்கள்? தவிரவும் விபுலாநந்தர், சித்தானைக்குட்டி போல யாழிற்கப்பால் இருந்து வந்தவர்கள் பற்றியும் திரி துவங்கலாம், துவங்க வேண்டும் என்பதே என் அவா. (கடையிற் சாமி இந்தியர். கன்னடர்?). 2. நான் ஒரு அக்னோஸ்டிக் என்பது தெரிந்ததே - ஆகவே எனக்கு யோகரின் ஆன்மீகத்தில், மத மாச்சரியத்தில் ஈடுபாடு இல்லை. ஆனால் அன்னம் நீரை விலக்குவதை போல, ஆன்மிக்கத்தை விலக்கி விட்டு யோகரின் நிலையாமை தத்துவங்கள், இலகு தமிழ், குழப்படி கதைகளை ரசிப்பதில் எனக்கு ஒரு நெருடலும் இல்லை. 3.சாக்ரடீஸ்- பிளேட்டோ-அரிஸ்டாடில்- அலக்சாண்டர் போல எமது ஞானமரபினர் கடையிற்-செல்லப்பா-யோகர். எப்படி அவர்கள் சொன்னது எல்லாம் உண்மை என்றாகாதோ, அப்படித்தான் இவர்கள் சொன்னதும். தமது காலத்துக்கு ஏற்ப, தமது அறிவுக்கு ஏற்ப, தம்மை சூழ உள்ள உலகை விளங்க அவர்கள் எடுத்த முயற்சி நம் எல்லோரதும் கூட்டுப் பாரம்பரியம் - அதில் பலதை இப்போது நான் ஏற்காவிடிலும் கூட, அதை வரலாறாக பேண வேண்டியது எம் கடமை.
 12. தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி. முன்பே சொன்னது போல சுமார் 30 வருடங்களுக்கு முன் மிக இளவயதில் வாய்வழி கேட்ட கதைகள்- தகவல்கள் பலவும் பிழையாக இருக்கலாம்.
 13. எனது விருப்பப்பாடல். பொன் சுந்தரலிங்கத்தின் தெய்வீக குரலில் https://www.himalayanacademy.com/view/antha-vaakkum_sl அந்த வாக்கும் பல்லவி அந்த வாக்கும் பொய்த்துப் போமோ ஆசான் நல்லூர் வீதியி லருளிய அநுபல்லவி இந்த ஆன்மா நித்திய மென்ற சரணங்கள் மங்கைய ராடவர் மைந்தர்கள் கூடி மகிழ்ந்தும் புகழ்ந்தும் வரதனைத் தேடி வந்தனை புரிய வருவார் கோடி செந்தமிழ் நாவலன் செல்லப்பன் சொன்ன தேங்கா யிளநீர் தீங்கனி கொண்டு திருவடித் தொண்டு செய்வதைக் கண்டு ஐம்புல னடங்கி நின்றவ ருண்டு ஆரறி வாரென ஆசான் சொன்ன கௌரிம னோகரி ஆனந் தாச்சி கமல ஆச்சிசெல் லாச்சி ஐவரும் உவந்து சேவடி கும்பிடு முத்தமன் தவத்தைச் செய்திடத் தந்திடு மருளே
 14. அவரா என்பது சரியாக நியாபகம் இல்லை. இவை எல்லாம் என் பாட்டனாரின் ஈசிச்சேரில் அருகே இருந்தபடி கேட்ட கதைகள். அவருக்கும் நியாபகம் மங்கத் தொடங்கிய, எனக்கும் கதை கேட்கும் சுவாரசியம் மட்டுமே இருந்த காலம் அது. ஆகவே தகவல்கள் பலதும் மங்கலாகவே நியாபகம் இருக்கிறது. இன்னொரு சம்பவம் - பசியை அடக்கும் பொருட்டு 1 கிழமை விரதம் இருந்த பின் தானே சமைத்தாரம் யோகர். சமைக்க, சமைக்க பசி வயிற்றை கிள்ளும்தானே? யோகர் “பொறு, அமைதியாக இரு” என்பதாக வயிற்றுக்கு சொல்வாராம் - வயிறு கேட்காதவிடத்து - உணவை மண்ணில் கவிழ்துக் கொட்டி விட்டு, சரி “இனிக் கிட” என்பாராம். இதே போல் இன்னொரு பிரமுகர் ஒருதடவை யோகரை அணுகி, சர்வ அடக்கமாக சாமி உங்கள் வரலாற்றை எழுதவேணும் என்றாராம். சரி என்று தேதி ஒன்றை கொடுத்தாராம் யோகர். குறிந்த தேதியில் யோகர் பிரமுகரை கண்டுகொள்ளவில்லையாம். பிரமுகர் யோகரை அணுகி, “ சாமி வராலாறு” எனவும் “ வரலாறென்ன வரலாறு, வண்ணானின் கல் என எழுதிக்கொண்டு போ என துரத்தி அடித்தாராம் யோகர்”. பாடல்கள் சில கீழே:
 15. நல்லதொரு முயற்சி மல்லிகை வாசம். எமது வீட்டில் நான் சிறுவனாக இருந்த போது அல்லும் பகலும் யோகர் சாமியின் பாட்டுக்கள் கேட்கும். எனக்கு இப்போதும் பல பாடல்கள் மனப்பாடம். சில சமயம் வாய்விட்டு பாடும் போது மன அமைதி கிட்டும். எனது விருப்பப்பாடல்கள், “சூரியன் வருவது யாராலே” மற்றும் “அந்த வாக்கும் பொய்த்துப் போமோ”. எனது தாய்வழி பாட்டானார் யோகர் சுவாமிகள், செல்லப்பா சுவாமியை நல்லூரடியில் சந்திப்பதற்கு முன்பிருந்தே அவரின் நண்பர். பின்னாநாளிலும் இந்த பழக்கம் தொடர்ந்தது. ஒரு முறை யாழில் தனது தாய் நிலமை மோசம் என அறிந்து எனது பாட்டனார் அவசரமாக கிளிநொச்சியில் இருந்து வந்த சமயம். காரை செம்மணியில் வைத்து மறித்த யோகர், என்னை மறுபடியும் கொண்டுபோய் கிளிநொச்சியில் விடு எனக் கேட்டாராம். தாயை பார்க்க வேண்டும், ஆனால் யோகரோ முன்கோபி என்ன செய்வது ? என என் பாட்டனார் குழம்ப, “ கொம்மாவை பற்றியே யோசிக்கிறாய்? அவ போய் சேந்துட்டா, என்னை கிளிநொச்சியில விட்டுட்டு ஆறுதலா போய் காரியம் செய்” என்றாராம் யோகர்! இதே போல், ஒரு முறை ஒரு பெரிய கொழும்பு பிரமுகரும், யோகரும், என் பாட்டனாரும் சாப்பிட அமர்ந்தார்களாம். பிரமுகர் நீர் தெளித்து வாழை இலையை வணங்க, “ நீ சாப்பிட வந்தனியோ? வாழையிலையை குளிப்பாட்ட வந்தனியோ?” என கேட்ட யோகர் அந்த பிரமுகரை சாப்பிடவிடாமல் எழுப்பி வீட்டே அனுப்பினாராம் . என்னால் முடிந்த துணுக்குகள், பாடல்களை நானும் இணைக்கிறேன். தேவை இல்லை என்பது என் அபிப்பிராயம்.
 16. அந்தப் பழக்கம் கோசானின், வரலாறு, சமூககல்வி, எதிலுமே இல்லை ஓம், இந்த சந்தேகம் யாருக்கும் வரக்கூடாது என்பதற்காகவே உறங்கும் போதும் காலை ஆட்டியபடி உறங்குவேனாக்கும்
 17. சொல்லாமல் கொள்ளாமல் எஸ் ஆகியமைக்கு முதற்கண் மன்னிப்பு கேட்கிறேன். தேடிய உறாவுகளுக்கும், தொடர்து திரியில் விடயங்களை இணைத்த உறவுகளுக்கும் கோடி நன்றிகள். வேலையில் எதிர்பாராத ஒரு பொறுப்பை கடைசிநேரத்தில் ஏற்கும்படியாகி விட்டது. ஒரு வரி சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்தான் - மன்னித்தருள்க. நன்றியும் வாழ்துக்களும். நன்றியும் வாழ்துக்களும்.
 18. மக்களே, 1. சுரேஸ் இப்ப எம்பியா? இல்லையே 2. அவர் இப்ப கூட்டமைப்பில் உள்ளாரா? இல்லையே. பின்ன என்ன விண்ணானததுக்கு இந்த நம்பகம் இல்லாத செய்தியை நம்பி இவ்வளவு எழுதுகிறீர்கள்
 19. ஒரு முறை யாழ் பஸ்நிலையத்தில் ஒரு ஆட்டோ டிரைவருடன் தமிழில் பேச அவர் கொச்சை தமிழில் பேசினார். சரி குடியேற்றம் இங்கே வரை வந்து விட்டதே என நொந்தபடி ஆட்டோவில் ஏறி அவருடன் சிங்களத்தில் பேச்சு கொடுத்தால் ஆள் மலங்க மலங்க முழித்தார் . வெளிநாட்டில் இருந்து வந்த சக தமிழனிடம் கொஞ்சம் அதிகமாக் ஆட்டையை போட சிங்கள வேடம்