Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

goshan_che

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  8,966
 • Joined

 • Last visited

 • Days Won

  72

Posts posted by goshan_che

 1. 5 hours ago, Kapithan said:

  திரும்பவும் கூறுகிறேன், உருத்திரகுமாரன் சுயமாக முடிவுகள் எடுப்பவரல்ல. அவரை இயக்குபவர்கள் வேறு நபர்கள். அவர்களுக்கான ஆணை/ஆலோசனை கேபியிடம் இருந்து வருகிறது. 

  உண்மைதான் கற்பிதன். எனக்கு உருத்திரகுமார் பற்றி எப்போதும் நல் அபிப்ராயம் இருந்ததில்லை. யாழில் முதலில் நட்டு கழண்ட அரசு என்று எழுதி ஏச்சு வாங்கி இருக்கிறேன்.

  என்னை பொறுத்தவரை தனி நாட்டு கோரிக்கையை 2009 ற்கு பின் முன்வைப்பவர்கள், தெரிந்தோ தெரியாமலோ இலங்கையின் உற்ற நண்பர்கள்தான்.

  இதில் நாடு கடந்த ஒரு பாராளுமன்றை, அரசை நிறுபவர்களை யாரும் சீண்ட போவதில்லை. இந்த தொடக்க புள்ளியில் இருந்து கிளம்பி இவர்களால் ஏதும் செய்ய முடியாது.

 2. 4 hours ago, பையன்26 said:

  ந‌ம்பியா அணிய‌ வ‌ள‌த்து விட்ட‌து தென் ஆபிரிக்கா கிரிக்கேட் வாரிய‌ம்

  ஓமான் நாட்டில் கிரிக்கேட் விளையாடுப‌வ‌ர்க‌ள் கூட‌ இந்தியா ம‌ற்றும் பாக்கிஸ்தான்  வ‌ம்சாவ‌ழியின‌ர் 

  பப்புவா நியூகினி அவுஸ்ரேலியா நியுசிலாந் க‌ண்ட‌த்தை ஒட்டி இருக்கிற நாடு , அவ‌ர்க‌ள் என‌க்கு தெரிந்து 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பையில் எல்லாம் விளையாடி இருக்கின‌ம்..............


  20003ம் ஆண்டு இந்தியா கூட‌ சிமி பின‌ல் விளையாடின‌ கென்னியா அணி எங்கை என்று அற‌வே தெரியாது.............2003ம் ஆண்டு ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை வைத்து இருந்த‌து கென்னியா அணி

  அப்கானிஸ்தான் அணிய‌ ப‌ற்றி 9வ‌ருட‌த்துக்கு முத‌ல் நான் யாழ்க்க‌ள‌த்தில் எழுதினேன் க‌லைஞ‌ன் அண்ணாக்கு
  அண்ணா இவ‌ங்க‌ள் பாருங்கோ எதிர் கால‌த்தில் ந‌ல்லா விளையாடுவாங்க‌ள் என்று
  அப்ப‌ அவ‌ர் எழுதினார் அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ள் த‌ம்பி
  ப‌ந்துக்கு ப‌தில் குண்டை கொண்டு வ‌ந்து விளையாட‌ மாட்டாங்க‌ள் தானே என்று ப‌ம்ப‌லாய் எழுதினார்

  இப்ப‌ அப்கான் அணியின் அசுர‌ வ‌ள‌ர்ச்சியை க‌ண்டு ப‌ல‌ர் விய‌ந்து போய் நிக்கின‌ம்

  ஒரு நாள் அப்கானிஸ்தானிட‌ம் இந்தியா தோல்விய‌ ச‌ந்திக்கும் நாள் வ‌ரும் ஹா ஹா...................😁😀
   

  ஒரு ஆப்கானிஸ்தா ஆதரவாளன் என்ற வகையில் அவர்களை 2006 இங்கிலாந்து வந்ததில் இருந்து பின் தொடர்கிறேன். தலிபான் வந்திராவிட்டால் அவர்கள் இன்னொரு பாகிஸ்தானாக வந்திருப்பார்கள். இனி கஸ்டம்.

  ஓமான் எப்போதும் குடியேறிகளில் தங்கி இருப்பதால் ஓரளவுக்கு மேல் வர முடியுமோ தெரியாது.

  உண்மையில் நமிபியாவின் எழுச்சி சந்தோசமான விடயம்தான். 

  ஒரு காலத்தில் டெஸ்ட் அந்தஸ்து எடுக்க கூடிய வாய்ப்புகள் உள்ள நாடாக தெரிகிறது.

  கென்யாவின் வீழ்சி வருந்ததக்கதே. முன்பும் ஈஸ்ட் ஆபிரிக்கா என்ற பெயரில் உலக கோப்பையில் விளையடிய அணி. 96 உலக கோப்பையில் அவர்கள் ஆடிய ஆட்டம் மறக்க முடியாதது.

  பப்புவா நியூகினி, யு எஸ், கனடா என்று பல நாடுகளில் டி 20 மூலம் கிரிகெட் பரவி வருவது சந்தோசமான செய்தி.

  யூ எஸ் சில் மட்டும் கிரிகெட் நிலை பெறுமானல் - இந்தியாவின் பண ஆளுமைக்கு ஒரு சவாலாக அமையும்.

  • Like 1
 3. 12 hours ago, குமாரசாமி said:

  அப்பன் பொறுத்தார் பூமியாள்வார் எண்டது தெரியும் தானே

  பொல்லாதார் பாதாள உலகை ஆள்வார்🤣

  சவுத் ஆபிரிக்கா இல்லை இது சொதப் ஆப்பிரிக்கா🤣

 4. 1 hour ago, vasee said:

  தயவு செய்து எனது கருத்தினடிப்படையில் வியாபார முடிவு எடுக்காதீர்கள், எனக்கு இந்த துறையில் வெறும் ஆரம்ப அறிவு மட்டுமே உள்ளது.

  நன்றி வசி. நிச்சயமாக இல்லை. திரி தொடங்கும் போது எழுதிய டிஸ்கிளைமர் ஒவ்வொரு பதிவுக்கும் பொருந்தும்.

   

  • Like 1
 5. 1 hour ago, ரதி said:

  தடுப்பூசிகள் நூறில் ஒருவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதும் உண்மை தானே 
   

  நூறில் ஒருவருக்கு என்பது மிக அதிகமாக தெரிகிறது.

  தடுப்பூசி மட்டும் அல்ல சகல மருத்துகளுமே, ஏன் கத்தரிகாய், இறால், கச்சான் போன்றவையும் கூட ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

  • Like 1
 6. On 21/10/2021 at 03:03, Kapithan said:

  கட்டுரையில் வந்த மிகப் பெரும்பாலானவை தொடர்பாக எனக்கு பெரிதாக எதுவும் தெரியாது. 

  ஆனால் உருத்திரகுமாரன் விடயத்தில் அவருக்கு பின்னால் நின்று செயற்படுபவர்களைப் பார்த்ததில், அறிந்ததில், அனுபவப்பட்டதில், நாகத அரசு உண்மையில் தமிழர்களை செயற்பட விடாமல் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட இலவம் காய். மக்கள் அதைப் பார்த்து, பார்த்து, பார்த்து,........ ஏமாந்து போவதற்காக அமைக்கப்பட்ட ஒரு பொம்மை. இதனைக் கட்டுப்படுத்துவது கேபி ஊடாக இலங்கை அரசு. கேபியின் முகவர்கள் இருப்பது கனடா. 

  ஆக ஒன்று மட்டும் உண்மை. அதாவது, புலிகளின் கையில் அதிகாரம் போகக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தது தமிழர் தரப்பில் ஒரு படித்த கூட்டம். 

  போராட்டம் அழிந்தாலும் பிரச்சனையில்லை. ஆனால் அதிகாரம் மட்டும் புலிகளின் கைகளிற்கு போகக் கூடாது என்பதில் இவர்கள் மிகக் கவனமாக இருந்தார்கள், இருக்கிறார்கள். 

  இவர்களது ஆலோசனையை  நம்பியதுதான் புலிகளின் வீழ்ச்சிக்கும் போராட்டத்தின் அழிவுக்கும் காரணம் . தற்போதைய சூழலை அப்படியே பேணுவதுதான் இலங்கை அரசின் தேவை. இப்படியே  இன்னும் 10 வருடங்கள் போனால் அதற்கப்பால் தமிழருக்கு எதுவுமே இல்லை. 

  ☹️😔

  சுப்பர்! எல்லாத்தையும் படிச்சவன் தலையில கட்டினால் போதும்🤣.

  மேலே சேரமான் போட்ட லிஸ்டில் உருத்திரகுமார் தவிர வேறு யார் படித்தவர்கள்?

  என்னை பொறுத்தவரை கதிர்காமர், நீலன், ஹூல் போன்றவர்கள் வெளிப்படையாக அரசுடன் சேர்ந்து இயங்கினார்கள்.

  இவர்களால் ஏற்பட்ட விளைவுகள் வெளிப்படையாக தெரிந்தன.

  ஆனால் புலிகளின் வெளிநாட்டு தளகர்த்தாக்கள் நாம், கஸ்ரோவுக்கு நாம் நெருங்கியவர்கள், புலிகளின் செய்திகள் எம்மைதான் அடைகிறன, கடைசியா காசு தாங்கோ, இதுதான் இறுதியுத்தம் இப்படியாக வால் பிடித்து திரிந்த “புலம்பெயர் நாட்டு புலி வால்கள்” செய்த நரித்தனங்கள் மிக அதிகம். 100 கதிர்காமருக்கு சமன்.

  இவர்களைதான் மேலே கட்டுரை தோலுரிக்கிறது.

  இன்றைக்கும் புலம் பெயர் தமிழ் மக்கள், இயக்க, பிரதேச, சமய, குழு வேறுபாடின்றி இணைய முடியாது இருக்கிறது, எமது மக்களுக்கு ஒரு கெளரவமான தீர்வை கொடுக்குமாறு அழுத்த கூடிய புலம்பெயர் சக்தி விழலுக்கு இறைத்த நீராகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் இப்படியான கிருமிகளே.  

  இந்த கிருமிகளில் பலரும் படிக்காதவர் என்ற வரையறைகுள்ளேயே வருவர். 

  • Like 4
  • Thanks 3
 7. 2 hours ago, vasee said:

  குறிப்பாக 10.0 C பகுதியில் கடைசி இரண்டு முயற்சியின் போதும் அதிகளவான முந்தய முற்சியினை விட ஒப்பீட்டளவான எண்ணிக்கையில் வர்த்தகம் நடைபெற்றுள்ளது, அதாவது அதிகளவான வழங்கல் காணப்படுகிறது, இந்த தகவல் எந்தளவிற்கு பொருத்தமாகவிருக்கும் என்பது தெரியாது

  இது Overbought நிலையா அல்லது Oversold நிலையா ? 

 8. On 21/10/2021 at 00:31, ஈழப்பிரியன் said:

  இப்போது EV (Electric vehicles)ஸ்ரொக் எல்லாமே சிப் இல்லாமல் விழுந்து போயுள்ளது.

  சிப் நிலவரம் சரியாகும் போது நிச்சயம் பல மடங்கு கூட வாய்ப்புள்ளது.

  இது நீண்ட காலம்.

  அதைவிட பெனி ஸ்ரொக்கில் கொஞ்சம் நல்லதாக தெரிவு செய்து ஒவ்வொன்றிலும் ஆயிரம் என்று 5-6 ஐ வாங்கி விடலாம்.

  சகல ஸ்ரொக்கையும் ஆரம்பத்தைப் பார்த்தால் எல்லாமே பெனிஸ்ரொக் தான் .

  வந்தா மலை போனா மயிர்.

  பெனி ஸ்டோக்ஸ் பற்றியும் உங்கள் தெரிவுகள் பற்றியும் முடிந்தால் எழுதவும்🙏🏾.

 9. 1 hour ago, கிருபன் said:

  கேள்விகள் 16) முதல் 18) வரையான பதில்களுக்குப் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

  நிலை போட்டியாளர் புள்ளிகள்
  1 நந்தன் 30
  2 ரதி 30
  3 மறுத்தான் 28
  4 கறுப்பி 28
  5 முதல்வன் 27
  6 ஏராளன் 27
  7 ஈழப்பிரியன் 27
  8 வாதவூரான் 27
  9 சுவைப்பிரியன் 27
  10 எப்போதும் தமிழன் 27
  11 பிரபா சிதம்பரநாதன் 27
  12 கிருபன் 25
  13 நுணாவிலான் 25
  14 தமிழ் சிறி 25
  15 கல்யாணி 25
  16 நீர்வேலியான் 24
  17 வாத்தியார் 23
  18 கோஷான் சே 23
  19 குமாரசாமி 23
  20 அஹஸ்தியன் 23
  21 சுவி 22
  22 பையன்26 21

   

  வாழ்த்துக்கள் நந்தன் 🦀

  பையன் :228_baby_chick: பிரான்ஸ் ஐயாவுடன் 🍾 ஐக்கியமாகி அதல பாதாளத்திற்கு மீண்டுவிட்டார் 

  Drag Underground The Mole People GIF - Drag Underground The Mole People Kidnapped GIFs

  எல்லா கேள்வியளையும் ஒண்டா கணித்து போடாமல். பிரித்து பிரித்து போட்டு தற்காலிகமாக ஒரு பத்து நிமிசம் கோசானை பாதாள உலகுக்கு அனுப்பியதை வன்மையாக கண்டிக்கிறேன் 🤣.

  இதற்கு ஒரு ஜனாதிபதி ஆணைகுழு விசாரணை தேவை😎

   

  நாளைக்கு நந்தன் இரெண்டு போட்டியிலும் என்னொட நிக்கிறார்😀.

  ஆளுக்கு இப்பவே பதற தொடங்கி இருக்கும்🤣.

  • Like 2
  • Sad 1
 10. எனது ஒரே வேண்டுகோள், பொம்பிளையள் என்ன வேணும் எண்டாலும் போடட்டும், போடாமல் விடட்டும். இந்த கோவிலுக்கு சேட்டை கழட்டி போட்டு வாற அங்கில்மாருக்கு இப்படி ஏதும் போட்டு விட முடியாதா🤣.

  • Like 1
  • Haha 1
 11. 21 minutes ago, Eppothum Thamizhan said:

  அயர்லாந்து வெல்லும் என்று கணித்த எல்லோருக்கும் ஆப்புத்தான் போலிருக்கிறது!! ஆனால் சார்ஜாவில் ஓட்டமெடுப்பது அவ்வளவு சுலபமல்ல!!

  ஒரு காலத்தில் bowlers graveyard ஆண் பெயரெடுத்த மைதானம் இப்போ நீங்கள் சொல்வது போல கஸ்டம்தான். பார்க்கலாம்.

  17 minutes ago, ஈழப்பிரியன் said:

  15  ஓவரில விளையாட்டு முடிந்துவிடும்.

  இன்றைக்கு கிழவர்பாடு கொண்டாட்டம் தான்.

  1 hour ago, goshan_che said:

  நான் வேற அவசரப்பட்டு நக்கல் அடிசிச்சிட்டன். 

 12. அயர்லாந்து தடவி கொண்டிருக்கிறாங்கள். ஸ்டேர்லிங் நிக்கும் வரை நல்ல போனது.

  கு. சா அண்ணை ஒரு கிளிப்பில முழு platoon ஐயும் பரலோகம் அனுப்ப போறாரோ?

 13. 3 hours ago, கிருபன் said:

  நமீபியா அயர்லாந்துக்கு நல்ல அடி கொடுத்தாலும் கொடுக்கும்!!! கிளிப்பை உருவி 21 பேரையும் போட்டாலும் போடலாம்😆

  கூண்டோட கைலாசம்🤣

 14. 6 hours ago, குமாரசாமி said:

  அதெண்டால் உண்மைதான்..... இப்ப உள்ள விளையாட்டுக்காரரை வைச்சு கணிக்கிறது சரியான கஷ்டம் கண்டியளோ 😎

  பழைய ஆட்கள் விளையாடினா மட்டும் …..🤣.

  இண்டைக்கு நமிபியா எண்டு போட்டிருக்கிறியள். 

  அநேகமா பின் சென்ரில தனிய நிக்க வேண்டி வரலாம். பேரனும் விட்டுட்டு ஓடுவார் போலதான் கிடக்கு. ஆமி வாற சிலமன் தெரிஞ்சா ஒரு கிளிப்பை அடிச்சு போட்டு ஓடிவாங்கோ🤣.

 15. 20 hours ago, Kadancha said:

   

  இந்த மெழுகுதிரி என்பது, சந்தையில் வாங்குபவர்களும், விற்றுபவர்களும்,  குறிப்பிட்ட நேர இடைவெளியில் முட்டி மோதி, எவரின் விலை இறுதியாக தீர்மானிக்கப்படுகிறது என்பது குறிக்கிறது.

  இது எப்போதுமே இறந்த கால தரவு என்பதால், குறிப்புட கால இடைவெளியை, நிமிடம், மணிகள், நாட்கள், வாரங்கள், மாதங்கள்  என்று    பார்ப்பவர் வகைப்படுத்தலாம்.

  சிவப்பு நிற மெழுகு திரி, விற்பவர்கள் ஒங்கி விட்டதை குறிக்கும். பச்சை நிறம் வாங்குபவர் ஓங்கி விட்டார்கள்.

   தடித்த மெழுகு திரியின் மேலேம், கீழும் சற்று கோடாக இருப்பவை, முறையே அதி கூடிய விலை, அதி குறைந்த விலை. தடித்த மெழுகு திரிரில் இருக்கும் விலைவாசிகளே பெரும்பான்மையான வாங்குதல்கள்  (பச்சை நிறம்),  விற்பனைகள் (சிவப்பு நிறம்) நடை பெற்று இருக்கிறது.

  அதனால், சிவப்பு நிற மெழுகு திரி நேர இடைவெளியில், வாங்குதல்கள் நடைபெற இல்லை என்பது அல்ல, வாங்குதல்கள் நடைபெற்று இருக்கிறது, ஆனால், விற்றுபவர்கள் விலையை தஹிர்மானிப்பதில் ஓங்கி விட்டார்கள்.   

  இதை நீங்கள், livecharts.co.uk இணைய தளத்தில், எதாவது ஓர் சந்தையை தெரிவு செய்து, பொறுமையாக அவதானியுங்கள், உங்களுக்கு புரியும்.

  சிலவேளை, சிவப்பாக ஆரம்பித்து, பச்சையாக மாறும், மறு வளமாகவும் நடக்கும். முட்டி, மோதி ஒன்றை ஒன்று ஓங்குவதற்கு நடைபெறும் போராட்டத்தையும் உணரலாம்.  

  முக்கியமாக, மெழுகு திரி, சந்தையின் முட்டி மோதும் உணர்வை (emotions) மற்றும் போக்கை காட்டுவது. 

  அனால், எப்படி கணக்கு பார்ப்பது என்பது வேறு விடயம், முழு chart உடன் தொடர்பு பட்டத, technical analysis.
   

  நன்றி கடைஞ்ச்சா… அந்த சைட்டில் போய் அவதானிக்கிறேன். 

 16. 5 minutes ago, ரதி said:

  ரதி அக்கா தான் இருந்து பாருங்கள்

  🤣பார்க்கலாம்🤣

   

  2 minutes ago, ஈழப்பிரியன் said:

  லண்டனில கோவில் குளமொன்றும் பாக்கி இல்லைப் போலிருக்கு.

  என்ன செய்யுறது அண்ணை உணர்சி வசப்பட்டு பஞ்ச் டயலாக் எல்லாம் வேற விட்டுட்டன். வெள்ளி கிழமை ஜும்மாவுகும் போவம் எண்டு யோசிக்கிறன்🤣.

  • Like 1
  • Haha 1
 17. 1 minute ago, ரதி said:

  எப்படியும் நான் கீழ போவன் ...அரையிறுதிக்கு இலங்கையை போட வேண்டும் என்று இருந்தேன் ...அவசரத்தில் மாத்தி போட்டு விட்டேன் 🙂
   

  அது சரி வராது. இலங்கை தோக்கோணும் எண்டு கோவில் மரத்தின் காசு முடிஞ்சிருக்கிறன். பாப்பம் ரதி அக்காவா அம்மாளாச்சியா எண்டு🤣.

 18. 6 hours ago, ஏராளன் said:

  வாழ்த்தலாமே பிரண்ட்ஸ்.

  வாழும், வாழ்ந்து தொலையும் 🤣 (இம்சை அரசன் பாணியில் வாசிக்கவும்). 

  14 minutes ago, ரதி said:

  அய் நம்ப முடியவில்லை😎 ரதி மூன்றாம் இடத்தில் 😂எப்ப இறங்க போறாவோ தெரியலையே:unsure: 

   

  அக்கா நீங்கள் joint first place. நாளைக்கு ஸ்கொட்லாண்ட் வெல்ல நம்ம ஏராளன் தம்பி தாராள மனசோட கதிரையை விட்டுத்தர நீங்களும் கறுப்பியும்தான் முதலாம் இடம்.

  @நந்தன் @மறுத்தான் sorry about that guys 🤣.என்னில பிழை இல்லை. அந்தோணியார் ஏமாற்றி போட்டார். உப்பிடிதான் ஓ எல் சோதனைக்கும் செய்தவர்🤣.

  • Haha 1
 19. 3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

  Step 1: find a good online broker

  இதுலயே ஸ்ரக் ஆகி நிக்குரன்.. ஆரும் நல்ல பாதுகாப்பான நம்பிக்கையான புரோக்கர் லிங் தாங்கப்பா..

  யோவ் புலவரே என்னையா இது பொது வெளில வச்சி புரோக்கர் லிங் கேட்கிறீங்க🤣.

  இப்ப எல்லாமே ஆன் லைனில்தானே. உங்களுக்கு traditional brokers வேண்டும் என்றால்  https://www.hl.co.uk Hargreaves Lansdown நல்லம். அவர்களும் ஒன்லைன் அப் எல்லாம் வச்சிருக்கினம்.

  ஆனால் coinbase, binance, eToro போன்றவற்றையும் டிரை பண்ணலாம்.

  புதிதாக தொடங்குபவர்கு நான் etoro வை பரிந்துரைப்பேன். User friendly. கொமிசன் இல்லை. ஆனால் இதை நம்பி ஏமாற வேண்டாம். Spread மிக அதிகமாக இருக்கும். அதாவது ஒரு பங்கின் விலை .10 என்றால் அவர்கள் .11 இல்தான் விற்பார்கள். பங்குகள் ஏறி கொண்ண்டிருக்கும் போது இந்த spread மேலும் அதிகரிக்கும்.

  அதே போல் ஆட்டொமேடிக்கா take profit, stop loss ஐயும் செட் பண்ணவும் கூடும்: அதையும் பார்த்து எமக்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும்.

  ஈடோர்ரொவில் 100,000 டாலருக்கு ஒரு விளையாட்டு கணக்கு தருவார்கள். முதலில் அதில் விளையாடி பாருங்கள். அதில் கொஞ்சம் பிடிப்பு வந்ததும் நிஜத்தில் 50$ க்கு செய்து பாருங்கள்

  அதே போல் copy trading உம் செய்யலாம். அங்கே நல்லா உழைக்கும் ஒருவரை அப்படியே கொப்பி பண்ண ஒரு 1000 டொலரை போடுவது. நீங்கள் ஏதுவும் செய்யவேண்டியதில்லை. அவர் லாபம் என்றால் நீங்களும் லாபம். அவர் நட்டம் என்றால் நீங்களும் நட்டம்.

  அதே போல் binance இல் அடிப்படை கணக்கு, பெரிய லெவலில் செய்பவர் கணக்கு எண்டு இரெண்டு இருக்கு. ஆனால் இது கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச். இங்கே ஸ்டொக் வாங்க முடியாது.

  மிக முக்கியமாக வாசியுங்கள். வசி தரும் வீடியோக்கள் போல தேர்ந்து எடுத்து பாருங்கள். ஒரு நிறுவனத்தை பற்றி முழுமையாக ஆராயுங்கள். 

  கிரிப்டோவில் முதலில் mining என்றால் என்ன, proof of work என்றால் என்ன போன்ற அடிப்படைகளை விளங்கி கொள்ளுங்கள். நாம் மைன் பண்ணும் அளவுக்கு தேவையில்லை ஆனால் அடிப்படை விளங்கினால் நல்லம். அதே போல் மேலே எழுஞாயிறு சொன்ன tether பற்றியும் அறியுங்கள். 

  பாய்ஸ் படத்தில் செந்தில் சொன்னது போல knowledge is wealth. அதை அடைந்து கொண்டால் பின்னர் அதை காசக்குவது அவ்வளவு கடினமாக இராது.

   

  • Like 1
 20. 2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

  நான் ஊரில் போய் செட்டில் ஆக இருப்பதால் இருக்குற காசபோட்டு சொந்தமா ஒரு வீடுவாங்கி வீட்டு ஏஜென்சிக்காரனிடம் விட்டிட்டு ஊருக்கு போய் செட்டில் ஆகிற ஜடியாவில் இருப்பதால் வீட்டு ஏஜென்ஸிக்காரனிடம் கொடுத்தால் 

  *வாடகைக்கு இருப்பவன் காசு கட்டாமல் பிரச்சினை விட்டால் அவனை எழுப்பவதை அதனால் வரும் பிரச்சினைகளை வீட்டு ஏஜென்சிக்காறன் பாத்துக்கொள்ளுவானா அல்லது ஓனர் நான் தான் வரணுமா?

  *ஏஜென்சிக்காறன் வீட்டில் வாடகைக்கு இருப்பவனிடம் வாங்கும் காசைவிட எவ்வளவு குறைவா எங்களுக்கு தருவான்..? அதிலும் ஏதும் சுத்துமாத்துவிடுவானோ ஏஜென்சி..?

  *ஏஜென்சிக்காறன் வாடகைக்கு ஆளை இருத்திவிட்டு எங்களுக்கு யாரையும் இருத்தவில்லை அதனால் காசு இல்லை என்று பொய் சொல்ல சான்ஸ் இருக்கா..?

  இதெல்லாம் தெரிஞ்ச ஆரும் இருந்தா எனக்கு கொஞ்சம் சொல்லுங்கப்பா.. மண்டை சுத்துது யோசிச்சு யோசிச்சு காசை என்னத்தில பாதுகாப்பா முதலிடலாம் வருமானத்தோட எண்டு பாத்ததில கடைசியா தேறின ஒரே ஒப்சன் இதுதான்.. ஆனா அதிலும் இந்த ஏஜென்சி செக்சன் எனக்கு விளங்கேல்ல.. ஆரேன் கெல்ப்பண்ணுங்கப்பா..

  கூடவே பங்கு வியாபாரத்தில் கொஞ்சம் கொஞ்சம் வாங்கி ரெஸ்ற் பண்ணி பாத்து ஊரிலபோய் சும்மாதான இருப்பன் இதை செய்யலாம் எண்டு பாத்தா முதல் ஸ்டெப்

  Step 1: find a good online broker

  இதுலயே ஸ்ரக் ஆகி நிக்குரன்.. ஆரும் நல்ல பாதுகாப்பான நம்பிக்கையான புரோக்கர் லிங் தாங்கப்பா..

  வீடு

  லண்டன் நிலவரத்தை சொல்கிறேன். நீங்கள் மிக மட்டமான ஏனெஜ்சியிடம் போகதவரைக்கும் இப்படி நடக்க குறைவு. ஏற்கனவே இந்த துறையில் வீடு வாடகைக்கு விட்டு இருப்பவர்கள் நிச்சயம் ஒரு நல்ல எஸ்டேட் ஏஜெண்டை பரிந்துரைப்பார்கள்.

  சிலர் rent guarantee அதாவது வாடைக்கு ஆள் வருதோ இல்லையோ ஏஜென்சி வாடகை தரும் என்ற ஏற்பாடும் தருவார்கள். ஆனால் அப்படியானவர்களின் கொமிசன் அதிகமாய் இருக்கும்.

  அது உங்களுக்கு சரி வராவிடில் லோக்கல் கவுன்சில்கள் உங்களிடம் வீட்டை வாடைக்கு எடுக்க தயாராய் இருப்பார்கள். ஆனால் அவர்கள் தரும் வாடகை மாக்கெட் ரேட்டில் 10% அளவில் குறைவாய் இருக்கும். அவர்கள் கொண்டு வரும் ஆட்களும் குழப்படிகாரராய் அமையலாம். ஆனால் ஏஜெண்ட் பீஸ் இல்லை, நீண்டகால rent guarantee மற்றும் சில கவுன்சில்களில் வீட்டை வாடைக்கு விட முன் திருத்தி எடுக்க grant உம் கிடைக்கும்.

  ஊருக்கு போவதாகின் மிக நல்ல ஐடியா நீங்கள் செய்ய நினைப்பது. எனக்கு தெரிந்த பலர் வாடைக்கு விட்டு விட்டு அமெரிகா, இலங்கை, அவுஸ், ஸ்பெயின் போயுள்ளார்கள். 

  எப்போதும் வீடு நல்ல கொண்டிசனில், வாடைக்கு கிராக்கி உள்ள இடத்தில் இருந்தால் - கவுன்சிலிடம் போகாமல் எஜென்சி மூலம் கொடுப்பது லாபம்.

  ஆனால் வருடம் அல்லது இரெண்டு வருடம் ஒரு முறை வந்து பாக்கிற மாரி இருங்கோ. எப்பவும் உடையவன் பாரா வேலை ஒரு முழம் கட்டை.

  தவிரவும் மருத்துவ இதர செலவுக்கு இலங்கையில் காசில்லை என்றால் நாயும் சீண்டாது. ஆகவே எப்போதும் அடுத்த பிளேன்னில் ஏற தயாராகவே அங்கே போக வேண்டும் என்பது என் கருத்து. 

  நான் 80 (இருந்தால்) க்கு மேல் ஊரில் இருக்க விரும்பமாட்டேன். கேர் ஹோமில் இருந்து யாழில் வந்து அறழை கதையள் கதைக்க வேண்டியதுதான் (இப்பவே அதுதானே🤣). 

  • Like 1
 21. 5 hours ago, Elugnajiru said:

  மெழுகுதிரி இடையில் நின்றால் கவனமாக முதலீடு செய்து ஓரிரு மணி நேரத்திலோ நிமிடக்கணக்கிலோ வித்துக் காசு பாக்கலாம்

  நன்றி. இந்த மெழுகுதிரியை எப்படி பார்ப்பது என்பதை யாராவது எளிய முறையில் விளங்க படுத்தினால் நல்லம். எல்லாம் தியரியை வாசிக்கும் போது விளங்குது ஆனால் அதை வைத்து கணிக்கும் போது சரியாக வருவது கஸ்டமாயிருக்கு.

  TRX 0.15 வரை போக கூடும் என்கிறார்கள். Take profit, stop loss போட்டு விட்டு பார்த்து கொண்டிருக்கிறேன்😎.

  58 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

  நானும் கண்ணை மூடிக்கொண்டு 4000 பவுண்சைத் தொலைத்துவிட்டு நிற்கிறேன். என்ன செய்வது நட்டப்பட்டுத்தான் அனுபவத்தைப் பெறவேண்டி இருக்கு .

  பிட்காயினிலா போட்டனிங்கள்? 

 22. இந்த போர்வாள் துருப்பிடித்து பல பத்து வருடங்கள் ஆகிவிட்டது.

  துரை வந்தும் எதையும் சாதிக்கப்போவதில்லை.

  குறைந்த பட்சம் மதிமுகவையாவது  சதன் திருமலைகுமார், மல்லை சத்யா, சிப்பி பாறை ரவிசந்திரன் போன்ற நெடுநாளைய விசுவாசிகளிடம் கொடுத்திருந்தால், வாரிசு அரசியலால் திமுகவில் இருந்து வெளியேறிய போது தற்கொலை செய்தவர்களின் ஆன்மாவை அவமதிக்காமலாவது விட்டிருக்கலாம்.

  • Like 1
 23. 1 hour ago, கிருபன் said:

  உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

   

  1 hour ago, கிருபன் said:

  கர்நாடகத்தில் சி மற்றும் டி பிரிவு பணிகளை முழுக்க முழுக்க உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கி சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

  ஏனைய மாநிலங்கள் கன்னடிகா, தெலுங்கு, குஜராத், மராட்டிய இன மக்களுக்கு மட்டும் இடம் ஒதுக்கி உள்ளனவா?

  அல்லது உள்ளூர் மக்களுக்கு இடம் ஒதுக்கி உள்ளனவா?

  மற்றைய மாநிலங்கள் போல தமிழ்நாடும் செய்யவேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதுதான்.

  ஆனால் ராமதாஸ் இங்கே வார்த்தைகளை வைத்து ஜில்மால் பண்ணுவதாக தெரிகிறது.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.