Jump to content

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    14876
  • Joined

  • Last visited

  • Days Won

    164

Posts posted by goshan_che

  1. 12 hours ago, kalyani said:

    அவர்களின் ஒரு பகுதியாக இருந்த  யூக்ரேனை

    இந்த புரிதல் இன்மைதான் உங்கள் நிலைப்பாட்டின் அடிப்படை வழு. 

    உங்கள் மிகுதி கேள்விக்கான பதில்.

    தார்மீக வெளியுறவு கொள்கை என்று ஏதும் இல்லை. எல்லா நாடும் சுயநல அடிப்படையில் அணி சேர்ந்தும், பிரிந்தும், அணிசேராமல் நிற்க ஒரு அணியை உருவாக்கியும் மட்டுமே வெளியுறவை முன்னெடுக்கும்.

    இதில் நல்லவன், கெட்டவன், தப்பே செய்யாதவன், ஒப்பீட்டளவில் நல்லவன் - எதுவும் பொருட்டுல்லை.

    what is in your best interest என்பதே கேள்வி.

    நமது இனத்துக்கும் அப்படியே. 

  2. 2 hours ago, பெருமாள் said:

    முன்பு  மூன்று பெட் ரூம் உள்ளவீடு ஒருலட்சம் போனபோதும் வீட்டு வாடகை 1000தான் இப்போ 4.5லட்சம் போகும் அதே வீட்டு  வாடகை 1200

    இது சரியான தரவாக தெரியவில்லை.

    வாடகை ஏற்றம் அண்மையில் மந்தமானது உண்மைதான் ஆனால் இந்தளவுக்கு அல்ல.

    3 பெட் ரூம் வீடு 100,000 விலை கடைசியாக போனது 1995 காலப்பகுதியில் அப்போ அதே வீட்டு வாடகை 400-500 ஆகவே இருந்த நியாபகம்.

    இப்போ450,000 போகும் அதே வீட்டின் சராசரி வாடகை 1800 மட்டில்தான் வரும். அண்ணளவாக ஒரே விகிதத்தில்தான் வீட்டு விலை/வாடகை கூடியுள்ளது? 

    • Like 1
  3. 1922 கமிட்டியின் விதிப்படி இன்னும் ஒரு வருடத்துக்கு போரிஸ் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வர முடியாது.

    ஆனால் கபினெட் மந்திரிகள் பலர் விலகினால் - தட்சர் போல் வெளியேற வேண்டி வரலாம்.

    அல்லது 1922 கமிட்டியின் விதியை தளர்த்த வேண்டும். இந்த கமிட்டியின் செயற்குழு தேர்தல் விரைவில் வருகிறது. அதில் பொரிஸ் எதிர்பார்ட்டி அதிகம் வெண்டால் - விதி மாற்றப்பட்டு மீண்டும் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பு வரலாம்.

    ரிசி எதிர்பார்த்ததுதான் ஆனால் ஜாவித் திருமதி ஜான்சனின் நண்பர், முன்னாள் பாஸ். அவரே விலகியது ஆச்சரியம்தான்.

    The assasin never becomes the king என்பார்கள். அதனால்தான் லிஸ்சும், ஏனையோரும் இன்னும் ஒட்டி கொண்டிருக்கிறார்கள்.

     

    3 hours ago, பெருமாள் said:

    வீட்டு விலைகள் சரிவை சந்திப்பதை தவிர்க்க முடியாது வீடு வாங்குபவர்கள் கொஞ்சம் பொறுத்தால் மலிவான வீடுகள் வாங்கலாம் .

    சல்லி முட்டியை உடைச்சா காணுமாய் இருக்குமா பெரும்ஸ்😆

     

    2 hours ago, Nathamuni said:

    வீட்டு விலை குறையுமே, பெருமாள்?

    என்ன ஒரு டசன் வாங்கி விடுற ஐடியா போல😆

  4. 3 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

    இன்னமும் சில வருடங்களில் உலகின் தலைவராக “ விஸ்வ குரு” இந்தியா வந்துவிடும் என அமித் ஷா கூறியுள்ளார் என செய்தி ஒன்றை வாசித்த நினைவு. அப்படியானால் இந்த வரிசை கொஞ்சம் மாறிவிடும்.. விஸ்வ குருவின் பிரதம குருவாக ரஷ்யா வர சந்தர்ப்பம் இருக்கெல்லோ???

    விஸ்வ குருவிற்கும் ரஸ்யாவுடன் நீண்ட உறவு இருந்தாலும், பாகிஸ்தான் இம்ரானுக்கு பின் அதிகம் அமெரிக்க பக்கம் சாய்வதாலும், அடிப்படையில் பிஜேபி ஒரு அமெரிக்க வால்பிடி என்பதாலும், அவர்களின் பொருளாதாரத்தை ரஸ்யாவை இழப்பதை விட அமெரிக்காவை இழப்பது பாதிக்கும் என்பதாலும் குரு ஒரேயடியாக எந்த பக்கமும் சாய முடியாது.

    மேற்கில் எல்லாரும் அமெரிக்க தலைமையை ஏற்கிறார்கள். துருக்கி உட்பட.

    ஆனால் எதிர்பக்கம்

    ரஸ்யா v சீனா

    சீனா v இந்தியா என

    . அடிப்படை முரண்கள் உள்ளன.

    ஒரு அளவுக்கு மேல் இவர்கள் ஒன்றாக முடியாது.

  5. 45 minutes ago, உடையார் said:

    எனக்கு இப்ப கொஞ்சகாலமாக இந்த தேஜாவு வந்து கொண்டிருக்கு, மனைவிக்கும் சொல்லிவிட்டேன், என்னை பைத்திய வைத்தியசாலையில் சேர்க்க வேண்டாமென்று, இதை விபராமாக எழுதுகின்றேன் பிறகு🙄

    என்ன உடையார் இதை போய் இவ்வளவு சீரியசா எடுக்கிறியள்?

    எனக்கு சின்னதில் இருந்தே இது வரும். அடிக்கடி அல்ல ஆனால் வருடம் 1,2 தரம் வரும்.

    நான் கேட்ட பலரும் அப்படித்தான் சொல்லினம்.

    அனுபவத்தை எழுதவும்.

    • Like 1
  6. 2 hours ago, குமாரசாமி said:

    இப்ப நான் என்ரை ஆளுட்டை சுசி எண்ட சாப்பாட்டை இண்டைக்கு செய்து சாப்பிடுவமோ எண்டு கேட்டன்....
    அதுக்கான பதில்...
    பசுமதியை நல்லாய் குழைய விடுறன்
    நல்லாய் ஆற விடுறன்
    நாலு கரட் துண்டை கீலம் கீலமாய் வெட்டி போடுறன்
    அவக்கோடாவையும் கீலம் கீலமாய் வெட்டி போடுறன்
    ரின் மீனை அப்பிடியே தூவி விடுறன்
    திரணை திரணையாய் உருட்டி வைக்கிறன்......
    பருப்புக்கறியை தண்ணியாய் வைக்கிறன்(சோயா சோஸ்க்கு பதிலாய்) 
    மத்தியான சாப்பாடு இதுதான்.


    எங்கடை சாம்பார் புத்தி எப்பதான் மாறுமோ என மனதுக்குள் புறுபுறுத்தபடி குமாரசாமி வேலைக்கு நடந்தே சென்றார் 🚶🏾‍♂️:cool:

    புழுங்கல் அரிசி சோறு...

    ஆட்டுக்கறி...

    கீரி மீன் பொரியல்...

    # சூசி எல்லாம் கால் தூசி

  7. 3 hours ago, Kadancha said:

    sushi என்பது செய்யும் முறை.

    smoked  salmon, இறால், கணவாய், roasted meats, பக்குவமாக அரியப்பட்ட சீவல்கள் என்று, sushi க்கு கற்பனையே  எல்லை.

    அண்மையில் திண்ணையில் சொல்லி இருந்தேன். பலகாலமாக உவ்வே என ஒதுக்கியதை அண்மையில் மகன் சாப்பிடவைத்தார் என. ஆனாலும் வேகவைத்த ஒரு வகை இறால் டம்பிளிங்க்கைதான் உண்டேன். சுவை நன்றாக இருந்தது.

    1 hour ago, Kadancha said:

     

     

     

    wasabi என்பது உண்மையில் ஓர் radish (முள்ளங்கி, அனால் horseradish அல்ல) வகைசேர்ந்த கிழங்கு, கடுகு குடும்பம். 

    அந்த கிழங்கை (இஞ்சி பிள்ளையை உரஞ்சி இஞ்சி விழுது செய்வது போல), (உரிய முறையில் செய்யும் போது ) உலர்ந்த சுறா தோலில் (சுறா தோல் சாதாணரமாகவே சொரசொரப்பானது, sandpaper போல) உடனடியாக உரஞ்சி பெறப்படும் விழுதே wasabi, முறையான sushi க்கு பாவிப்பது.

    wasabi  குறித்த  காலநிலையில் மட்டுமே வாடாமல் இருக்கும் ஆகையால், அது விளையும் இடங்களான ஜப்பான், கொரிய, சீனா   போன்ற நாடுகளில் கிடைக்கும் உடனடி wasabi.   


    இப்பொது, wasabi கிழங்கு விற்கப்படுகிறது ( அளவுக்கு ஒப்பீட்டளவில் விலை கூடியது), ஆனால் fresh ஆக இருக்குமா என்பது சொல்லமுடியாது.

    வசாபியில் பிரட்டிய கடலை வகைகளும் நல்லா இருக்கும்.

    • Like 1
    • Thanks 1
  8. 2 hours ago, குமாரசாமி said:

    இந்த உலகில் மனிதனோ அல்லது நாடுகளோ இல்லையேல் ஏனைய உயிரினங்களோ தனித்து வாழ முடியாது. ஏதோ ஒன்றில் தங்கித்தான் வாழ வேண்டும். இது இயற்கையின் நியதி.

    இரும்பு திரைக்கு பின்னால் பூமியின் அரைவாசி இருந்த போதும், மீதி அரைவாசி அதில் தங்கி இராமல்தான் வாழ்ந்தது.

    2 hours ago, குமாரசாமி said:

    ரஷ்யாவிலிருந்து  உலகிற்கு ஏற்றுமதியாவது எரிபொருள் மட்டுமல்ல...இன்னும் பல பல.....
    மருத்துவத்திற்கு தேவையான பொருட்கள் முதல்  தொழில்நுட்பத்திற்கு  அவசியமான பொருட்கள் என பட்டியல் நீண்டு கொண்டே போகின்றதாம்.....

    ஆனால் அவை எவையுமே ரஸ்யாவில் மட்டும் இருக்கும் வளங்கள் அல்ல.

    பொதுவாக எப்போதும் அல்ல வாங்குபவனே கில்லி, விற்பவன் அல்ல. சில உடனடி பின்னடைவுகள் இருந்தாலும் ரஸ்யாவில் தங்கி இராமல் தமது பாட்டை பார்க்கும் இயலுமை மேற்கு நாடுகளுக்கு உள்ளது.

    உள்ளதில் அதிகம் பிரச்சனையானது எண்ணை/வாயு ஆனால் அதையே மத்திய/நீண்ட கால நோக்கில் சமாளிக்க மட்டும் அல்ல அதை ஒரு வாய்ப்பாக மாற்றி தமது நாட்டிலேயே அணு, காற்றாலை, போன்ற வலு மாற்றுகளுக்கு போக கூடிய வல்லமை யூகே, ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு உள்ளது.

    ஆகவே மேற்கிற்கு ரஸ்யாவின் இழப்பு ஒரு சின்ன குறுகிய கால தாக்கம் மட்டுமே.

    ஆனால் ரஸ்யாவுக்கு மேற்கின் சந்தையை இழப்பது நீண்ட கால நோக்கில் மிகவும் பாரதூரமானது. திரும்பி கம்யூனிஸ்ட் முறைக்கும் போக முடியாது. பொரிஸ் யெல்சின் காலம் போல் ஆகவும் முடியாது.

    இன்றைய பூட்டினின் பேச்சு டொன்பாஸ் வெற்றியோடு அவர் போரை நிறுத்த கூடும் என தெரிகிறது.

    ஆனால் என்ன நடந்தாலும் இரெண்டு பெரும் பின்னடைவுகள் ரஸ்யாவுக்கு அவர்கள் டொன்பாசை கைவிடும் வரை மாறாது.

    1. சுவீடன், பின்லாந்தையும் இழந்து அதன் மூலம் பால்டிக் கடல், மற்றும் ஆர்டிக் வழியான எதிர்காலத்தில் பெரும் கடல் வழியாக வரக்கூடும் என எதிர்பார்க்கபடும் பகுதியில் நேட்டோவின் ஆளுமையை கூட்டியமை

    2. பொருளாதார தடைகள்

    டொன்பாசோடு புட்டின் அமைதியானால் - என்ன மாதிரி உக்ரேனை கட்டி எழுப்பபலாம் என்ற "புதிய மார்சல் பிளான்" போடும் நடவடிகைகள் இப்போதே ஜரூர் ஆகி விட்டன. ஏலவே "வேட்பாளர் நாடு" என ஈயூ அங்கீகரித்து விட்ட உக்ரேனின் பொருளாதாரமும் அதை மையமாக வைத்து ஈயூவின் பொருளாதாரமும் ஒரு புதிய - எரி சக்தியில் இருந்து விலகிய வழியில் பாய்ச்சல் காணலாம்.

    அதேவேளை ரஸ்யா - பணம் உள்ள "வாங்குவோர் சந்தையில்" இருந்து தனிமைப்படுத்த பட்டு தன்னை போலவே விற்போராக இருக்கும் சீனா, இந்தியா, பிரேசில், ஈரான் உடன் அவர்களின் terms இல் வர்த்தகம் செய்யும் நிர்பந்தம் உருவாகலாம்.

    இப்பவே சீனா

    அமெரிக்க, ரஸ்யா, சீனா

    என்பதை

    அமெரிக்கா, சீனா, ரஸ்யா என முன்னிறுத்த ஆரம்பித்து விட்டது. இது இன்னும் விரைவாகும்.

    அமெரிக்காவிடம் தன் முதல் நிலையை படிபடியாக பிரிட்டன் இழந்தது போல், சீனாவிடம் தன் இரண்டாம் நிலையை ரஸ்யா இழக்க வேண்டியும் வரக்கூடும்.

  9. 10 hours ago, Kapithan said:

    1) மேற்கின் இரெட்டை வேடத்தின் மீதான கோபம்

    2) ரஸ்யா வெல்ல வேண்டும் என்கிற விருப்பு 

    இதுதானே உங்கள் யூகம்  ? 

    1)

    2)

    முள்ளிவாய்க்காலின் பின்னர் எவன் செத்தாலென்ன, எவன் பிழைத்தாலென்ன என்கிற மனநிலையில்தான் இருக்கிறேன். 

     

    மொத்தத்தில் நாங்கள் இலங்கைக்கு மீண்டும்  அகதியாக விமானம் ஏறவேண்டிய நிலை ஏற்படும் என்கிறீர்கள் ? 

    ☹️

    1 மட்டும்தான்.

     

  10. 5 minutes ago, குமாரசாமி said:

    எனக்கு துண்டற விளங்கவிலை. நீங்கள் சொல்ல வருவது ஓடை 😷

     

    1 hour ago, Kandiah57 said:

    விளங்கவில்லை 🤣

    🤣 போன் ஸ்கிரீன் ஒ  படுத்து விட்டது

    ஆக்டோபர் வரை வெயிட்டிங்.

     

    • Haha 2
  11. 16 hours ago, vasee said:

    சம்பந்தப்பட்ட இரண்டு நாடுகள் தவிர்த்து அனைவரும் போருக்கு முடிவு வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள், புரியாத புதிர் இவ்வளவு தடைகளுக்கும் மத்தியில் எவ்வாறு இரஸ்சிய பொருளாதாரம் உயர்ந்துள்ளது என்பதுதா

    https://foreignpolicy.com/2022/04/22/russia-war-economy-sanctions-ruble/
     

    எம்மை எல்லாம் எலெக்டிரிக் காருக்கு மாற்றுவதும், பெற்றோலியத்தில் இருந்து 2035க்குள் விடுபடுவதும் அதை மக்களுக்கு இலகுவாக விற்பதும் கூட இந்த ஓஒரை தொடங்கிய காரணங்களில் ஒன்று.

    இப்போ  எண்ணை வள நாடுகள் கிட்டதட்ட அணைய முன் பிரகாசிக்கும் மெழுகுதிரிதான்.

    அதில் முதலாவதாக ஈயூ கைவிடுவது ரஸ்ய எண்ணையைதான். 

    16 hours ago, vasee said:

    உக்கிரேன் மற்றவர்களில் தங்கியிருப்பது அவர்களுக்குதான் ஆபத்தாகலாம். 

    ஓம். ஆனால் உள்ள கெடுதியில் எது அதிகம் ஆபத்தில்லாத கெடுதி என்பதே இங்கே கேள்வி.

    சுவீடனும், பின்லாந்தின் மாற இதுவே காரணம்.

    ரஸ்யாவை சூழ உள்ள எந்த நாடும் ரஸ்யாவை விட வேறு எந்த நாட்டையும் நம்பும். 

    காரணம் ரஸ்யாவின் track record அப்படி.

    • Like 1
  12. 2 hours ago, Kapithan said:

    அந்தத் தீவின் அமைவிடத்தைப் பாருங்கள். புரியும். 

    அது தவிர, இந்த யுத்தத்தில் அழிவு இருபகுதியினருக்குமே. அதில் இரண்டாம் கேள்விக்கே இடமில்லை. நீண்டகால நோக்கில் ரஸ்யா தன்னுடைய நிலையை ஸ்திரப்படுத்திக் கொண்டுள்ளதுடன் பேரிளப்பு உக்ரேனுக்கு.

    தற்காலிகமாக  அமெரிக்கா (மேற்கு) தன்னுடைய பொருளாதார ரீதியான சில அனுகூலங்களை பெற்றிருந்தாலும் (நீண்டகால நோக்கில்) சரிந்து முடிவுக்கு  வரும் தனது செல்வாக்கை தூக்கி  நிலைநிறுத்த முடியாது என்பது எனது அனுமானம். 

    யுத்தம் முடிவுக்கு வந்தவுடன் தற்போது வீரனாகக் கொண்டாடப்படும் செலண்ஸ்க,  உக்ரேனின் வரலாற்று குப்பைக்கூடைக்குள்   வீசப்பட்டு நாட்டை விட்டுத் தப்பியோடவேண்டிய நிலை ஏற்படும். 

     

    இறுதி வெற்றி, ஆயுத வணிகர்களுக்கே. 

    இந்தியாவுக்கு ஆப்பு வேகமாக இறுக்கப்படும். 

     

    மன்னிகவும் கற்ப்ஸ்.

    வழமையாக மிக தெளிவாக சிந்திக்க கூடிய நீங்கள் இதில் ரொம்ப far removed from reality ஆக உள்ளீர்கள்.

    ஏதோ ஒரு வெறுப்புணர்வு உஅதார்தத்தை பார்க்க விடாமல் உங்கள் கண்ணை கட்டுகிறது.

    அது என்ன என்பது கூட என்னால் ஊகிக்க முடிகிறது.

    பார்போம். இந்த யுத்தம் முடிவில் உண்மை புலரத்தொடங்கும்.

  13. 3 hours ago, விசுகு said:

    தள்ளாட்டத்தின் முதலாவது கட்டம்???

    அணு ஆயுதத்தை தவிர்து விட்டு பார்த்தால் ரஸ்யா எப்பவோ தள்ளாட்ச் தொடங்கி இருக்கும். ஆகவேதான் இந்த ஆயுதங்களை ரசிய மண்ணில் பாவிக்காமல் இருக்கிறார்கள்.

    இனி இப்படி ரஸ்யாவின் கட்டுபாட்டில் உள்ள உக்ரேன் பகுதிகள் மீது தாக்குதல் நடக்க கூடும்.

    அதே போல் கெரெசன் பகுதியில்  கேரில்லா தாக்குதலும் ஆரம்பித்து விட்டதாக சொல்லபடுகிறது.

     

    3 hours ago, kalyani said:

    ஸெலன்ஸ்கி ஒரு போராளியா? 🤣🤣🤣

    யாரு தம்பி நீங்க? நான் எப்ப செலன்ஸ்கி ஒரு போராளி எண்டு சொன்னேன்?

    ரொம்ப அடிவாங்கி இருபீங்க போல. சொல்லாததை எல்லாம் கற்பனை பண்ணி பதில் எழுதுறீங்க😅

    3 hours ago, Kapithan said:

    கோசான்

    நீங்கள் லண்டனில் இருக்கும் தமிழர் தரப்பு policy makers ல் ஒருவராக இருக்கிறீர்களா ? 

    நக்கலு🤣.

    யாழில் அலட்டுவதன்றி வேறொன்றும் அறியோம் பராபரமே🤣.

  14. 1 hour ago, குமாரசாமி said:

    கனக்க கதைச்சால் மாதா மாதம் படி கட்டவேண்டி வரும் 🤣

    🤣🏃🏿🏃🏿🏃🏿

     

    1 hour ago, குமாரசாமி said:

    சரி சரி உக்ரேனுக்கு நீங்களும் உங்கடை மேற்கும் மிண்டு குடுக்க......
    சீனக்காரன் அமசடக்காய் சந்திரமண்டலத்திலை வீடு கட்ட வெளிக்கிட்டுட்டானாம்.....பாவம் அமெரிக்கா வாயில மண்ணு கண்ணுகளா....😁

    கொழும்பு துறைமுகர்ச் நகர் பற்றி ஒரு வருடம் முதல் எழுந்த கருதுக்களை நினைவுபடுத்தி அமைகிறேன்🤣.

  15. 4 hours ago, goshan_che said:

    பின்லாந்தும், சுவீடனும் நேட்டோவில் இணையும் process முடிந்தவுடன், டொன்பாசை ரஸ்யாவுக்கு விட்டு கொடுத்து, எஞ்சும்  உக்ரேனுக்கு ஈஈயூ உறுப்புரிமை, நேட்டோ, கையொப்பம் இட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் என ஏதோ ஒன்ஐ கொடுத்து போர் முடிவுக்கு வரலாம் என நினைக்கிறேன்.

    ஆனால் ஐரோப்பாவிற்கு ரஸ்யா எரிசக்தியில் தங்கி இருப்பதற்கு சாவு மணி அடித்தது அடித்ததுதான்.

    ஒரு 5-10 வருடத்தில் உக்காந்து யோசிக்கும்போது இந்த போரில் வென்றது யார் என்பது புட்டினுக்கு விளங்க தொடங்கும். 

    சும்மா score மட்டும் அல்ல. நாம் விரும்பியது போல இருக்கவேணும் score.

    இல்லாவிட்டால் அது மேற்கின் ஊடக பரப்புரை 🤣.

    மன்னிகவும் கற்ப்ஸ். சும்மா பகிடிக்கு சொன்னேன்🙏🏾.

    1 hour ago, குமாரசாமி said:

    இவ்வளவும் புட்டின் இருக்கும் மட்டும் தான். அதன் பின் சகலதும் சுபம். பழைய குருடி கதவை திறவடி கதைதான்.....

    அதாகப்பட்டது…புட்டின் என்ற தனி மனிதன் இல்லாவிட்டால் போர் வந்திராது?

     

  16. 1 hour ago, nunavilan said:

    அத்தீவில் உக்ரேன் இராணுவமும் இல்லை என்று செய்திகள் வருகின்றனவே???🤔

    மிகவும் சமயோசிதமான முடிவு.

    புட்டினை போன்ற சொந்த வீரர்களை விட தனது வறட்டு கெளரவமே முக்கியம் என எண்ணும் ஒரு அகம்பாஅவ தலைமைதான் ஒரு பொட்டல் தீவில், எந்த அரணும் இன்றி, எதிரியின் மிசைல், டிரோன் சூட்டு எல்லைக்குள் வீரர்களை sitting duck ஆக நிறுத்தி வைத்து எதிரிக்கு target practice கொடுக்கும்.

     

  17. 5 hours ago, Paanch said:

    பிறந்த இடத்தை நாடுதே பேதைமட நெஞ்சம் கிருணிக்காவை நாடுதே கண்.😍

    இலங்கையில் பெண்களின் கறந்த இடமும் அரையாகவோ அன்றி முழுமையாகவோ மூடித்தான் இருக்கும் கோசான் அவர்களே,! அதனால்தான் பட்டினத்தாரின் மொழிபை உங்களுக்காகச் சிறிது மாற்றினேன்.😋

    🤣 அவரும் எல்லாம் நாடி முடிந்த பின் தானே எழுதினவர் ஐயா🤣.

  18. 2 hours ago, nunavilan said:

    30% யுக்ரேன் இப்போ ரஸ்யா கட்டுப்பாட்டில் உள்ளது. 40நாடுகள் ஆயுதங்களை வழங்கியும் யுக்ரேனால் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. நாளுக்கு 200 யுக்ரேனியர் இறப்பதாக  ஸெலன்ஸ்கி கூறியுள்ளார்.

    1/5 -20% என நினைக்கிறேன்.

    ஆனால் புலிகள் புத்தளத்தை கைவிட்டது போல - 100% யும் இழக்காமல், 20% அதுவும் அதிகம் ரஸ்ய பெரும்பான்மை பகுதிகளை இழக்கலாம் என் உக்ரேன் நினைக்ககூடும். 

    1 minute ago, விசுகு said:

    உக்ரைன் ஐரோப்பாவுக்குள்  இருக்கு என்பதையும்
    உக்ரோனை  கைவிடுவது  ஐரோப்பாவை  கைவிடுவதற்கு  சமன்  
    என்பதையும்  மறந்து  விடுகிறோம்
     

    👍🏿

  19. 1 hour ago, vasee said:

    உண்மைதான், பைடன் ஆட்சிக்கு வந்தவுடன் அப்கானிஸ்தானை கைவிட்டமாதிரி உக்கிரேனிற்கும் நிலை வரலாம். எப்படி அமெரிக்கா அப்கானிஸ்தானில் இருந்து பின்வாங்கியவுடன் நேச நாடுகளும் அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டார்களோ அதே நிலமை வரலாம்

    பைடன் ஒபாமாவிடம் துணை ஜனாதிபதியாக இருந்த போதே ஆப்கானில் இருந்து வெளியேற வேண்டும் என கூறியவர்.

    அதே போல் வெளியேறும் ஒப்பந்தத்தை தலிபானுடன் போட்டது, நாள் குறித்தது பைடன் அல்ல. டிரம்ப்.

    அமெரிக்கா தன் தேவை முடிந்த பின்பே கைவிடும்.

    ரஸ்யா ஒரு அணு சக்கியாக இருக்கும் வரை, ஐரோப்பாவில் அந்த அமெரிக்காவின் தேவை ஒரு போதும் முடியாது.

    ஆகவே உக்ரேனை இப்படி கைவிட சாத்தியம் குறைவு.

    ஆனால் பின்லாந்து, சுவீடன் இணைந்த பின், போலந்தில் 5th army ஐ இறக்கிய பின், ஜேர்மனிக்கும் ராச்யாவுக்கும் இடையான வர்தகர்கள் நிரந்தரமாக துண்டித்த பின், ரஸ்ய எரி சக்தியை ஐரோப்பிய சந்தையில் இருந்து அகற்றிய பின் - குறித்த பகுதியை ரஸ்யாவுக்கு விட்டு கொடுக்கும்படி அமெருக்கா உக்ரேனை அழுத்தும். அதற்கு விலையாக உக்ரேனுக்கு ஈயூ உறுப்புரிமை கொடுக்கப்படலாம்.

     

    • Like 2
  20. 1 hour ago, vasee said:

    உக்கிரேன் தனது இராணுவ வெற்றியினை அரசியல் வெற்றியாக்க முன்வராவிட்டால் உக்கிரேன் கைவிடப்படும் நிலை ஏற்படலாம்.

    பின்லாந்தும், சுவீடனும் நேட்டோவில் இணையும் process முடிந்தவுடன், டொன்பாசை ரஸ்யாவுக்கு விட்டு கொடுத்து, எஞ்சும்  உக்ரேனுக்கு ஈஈயூ உறுப்புரிமை, நேட்டோ, கையொப்பம் இட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் என ஏதோ ஒன்ஐ கொடுத்து போர் முடிவுக்கு வரலாம் என நினைக்கிறேன்.

    ஆனால் ஐரோப்பாவிற்கு ரஸ்யா எரிசக்தியில் தங்கி இருப்பதற்கு சாவு மணி அடித்தது அடித்ததுதான்.

    ஒரு 5-10 வருடத்தில் உக்காந்து யோசிக்கும்போது இந்த போரில் வென்றது யார் என்பது புட்டினுக்கு விளங்க தொடங்கும். 

    38 minutes ago, Kapithan said:

    போராட்ட காலத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை வைத்து புளகாங்கிதம் அடைந்தவர்கள் அல்லவோ நாங்கள். 

    எங்களுக்கு score தானே முக்கியம். ☹️

    சும்மா score மட்டும் அல்ல. நாம் விரும்பியது போல இருக்கவேணும் score.

    இல்லாவிட்டால் அது மேற்கின் ஊடக பரப்புரை 🤣.

  21. 6 minutes ago, kalyani said:

    நான் போட்ட காணொளி   பொய்யா கோவாலு. 😇அதற்க்கான பதில் என்ன??
     

     

    நீங்க போட்டது பொய் வீடியோ எண்டு நான் எங்க எழுதினேன் வவ்வாலு🤣.

    பூட்டின் ஏதோ ஒன்றுக்கு பயந்து ஆட்களை பல அடி தூரத்தில் சந்தித்தது குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன். அதன் பின் அவர் பலரை அருகில் சந்தித்து விட்டார்.

    முந்தநாள் கூட இந்தோனேசிய அதிபரை பக்கத்தில் வைத்து கரைத்தார்.

    ஆகவே புட்டின் தஜிகிஸ்தான் அதிபரை சந்தித்த வீடியோ ஒரு செய்தியே அல்ல. அதை வைத்து அவர் முன்னர் எதுக்கோ பயந்து தனது சொந்த அமைச்சரையெர் பல அடி தூரத்தில் சந்தித்தார் என்பதை இல்லை என்று சொல்ல முடியாது.

    விளக்கம் ஓகேயா?

    12 minutes ago, kalyani said:

    உங்களை மாதிரி பாய் போட்டு படுக்க முடியாது புறோ. வந்தமா வாசிச்சமா , எழுதனமா என்று போய்கிட்டே இருப்போமுங்க.

    அதென்ன புட்டின் துதி பாடும் ?? நீங்கள் நேட்டோவுக்காக துதிபாடும் போது நாங்கள்  எதிர்க்கருத்து எழுதக்கூடாதா??

    அது மட்டும் அல்ல. நடக்கும் செய்திகளை, ஏனையோரின் பதில்கஐ கூட வாசிக்காமல் - வந்து துதிபாடுவதை மட்டும் செய்து விட்டு எஸ் ஆகி விடுவீர்கள் என்பதும் உங்களுடன் இங்கே, திண்ணையில் என் அனுபவம்.

    ஆகவேதான் உங்களுக்கு அதிகம் நேரம் செலவிடாமல் “மழுப்புறது”🤣

  22. 1 hour ago, குமாரசாமி said:

    வந்தால் அமைதியாய் பொலிற்ரிக் பண்ண விடுறியள் இல்லையே....:cool:

     

    பொலிடிக்ஸ யாரு சார் பாக்கிறாங்க இப்பெல்லாம்🤣

  23. 19 minutes ago, kalyani said:

    இப்படியான  உங்களின் மழுப்பலை இன்று தான் காண முடிந்தது. 

    ஆஹா…

    நீங்கள் ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா யாழுக்கு வந்து புட்டின் துதிபாடும் செய்திகளை மட்டும் இணைக்காமல்…தொடர்ந்து வந்தால் உங்கள் ஆதர்ச நாயகன் புட்டின் பற்றி நான் எழுப்பும் இன்னும் பல மழுப்பல்களை காணலாம்.

    எப்படி வசதி?

    புட்ஸ் தனது சொந்த பாதுகாப்பு அமைச்சரையே பத்தடிக்கு அப்பால் வைத்து டீல் பண்ணிய வீடியோ கீழே.

    இன்னும் மேசை கொஞ்சம் நீண்டிருந்தால் பாதுகாப்பு அமைச்சர் பெலரூசில் இருந்துதான் கதைச்சிருப்பார் 🤣.

    https://www.dailymail.co.uk/video/vladimirputin/video-2613785/Video-Putin-hosts-meetings-defence-minister-long-table.html

    சேர்ட்டை கழட்டி போட்டு போஸ் கொடுத்தால் மட்டும் போதாது.

    சொந்த பாதுகாப்பு அமைசரையாவது பக்கத்தில் வைத்து பார்க்கும் தில் வேணும்🤣.

     ஓடி வந்த புலம்பெயர் தமிழனை விட புட்டின் பெரிய பயந்தாங்கொள்ளியாய் இருக்கிறார். அதனால்தானோ என்னமோ பல ஓ.வ. தமிழர்களுக்கு அவரை பிடிக்கிறது🤣.

    பிகு

    ஓ மன்னிகவும் இது ஆஅங்கில இணையதளம் - வீடியோ பொய்யாகவே இருக்கும். சரிதானே🤣.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.