Jump to content

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    14922
  • Joined

  • Last visited

  • Days Won

    165

Posts posted by goshan_che

  1. 5 hours ago, satan said:

    நாடே கொந்தளிக்கும், எரியும், ரத்த ஆறு ஓடும்  தமிழர் உரிமை பெற்றால் இலங்கையில்.. எப்படி எல்லாம் முழுப்பூசணிக்காயை மறைக்க பாடுபடுகிறார்கள்!

    தமிழர் உரிமை பெற்றால் ரத்த ஆறு ஓடும் என்பதை நான் எங்கே மறுத்தேன்?

    நான் சொல்லாத ஒன்றை சொல்லி ஏன் பூசணிக்காயை என் தலையில் கட்டுகிறீர்கள்?

  2. 13 hours ago, குமாரசாமி said:

    நானும் நீங்களும் இலங்கையில் இருந்து வந்தவர்கள். சுத்துமாத்து சமூகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். எனக்கோ உங்களுக்கோ அது பெரிய விடயமல்ல.

    ஆனால் இந்த நிகழ்வை வெளியிட்டவர் வேறொரு நாட்டை சேர்ந்தவர்.அதுவும் அவர் ஒரு யுரியூப்பாளர். அவர் வெளியிட்ட காணொளி அவர் தம் நாடுகளுக்கும்  அதன் தொடர்புடையவர்கள் வரைக்கும் சென்று நாறடிக்கும். அவர் தன் மீதி பணத்தையும் மீள கொடுத்து தனக்குத்தானே பெருமை சேர்த்தாரே தவிர......முதல் சொன்ன நாறடிப்பு என்றுமே மீள பெறப்பட மாட்டாது.

    ஓம் இது அவர்களின் சுற்றுலாத்துறைக்கே ஒரு நாறடிப்புத்தான். 

    எப்போ? இதை நிழலி சொல்லுமாப்போல் ஈழத்தமிழர் அல்லாதோர் முன் கொண்டு செல்லும்போது.

    இலங்கை உண்மையிலே கொலைகளமாக இருந்த போதே சுற்றுலா போன வெள்ளைகள் பல கோடி.

    எனவே இப்படி செய்வது பெரிய தாக்கத்தை தராவிடினும் - ஒரு செய்தியையாவது சொல்லும்.

    ஆனால் இப்படியா சுத்துமாத்தோடு வாழ்ந்து வளர்ந்த எமக்கே இதை வைத்து பிம்பம் எழுப்ப முனைவது பேதமை.

    இதெல்லாம் சப்பை மேட்டர்.

    2024 நல்லூர் சீசனுக்கு போகும் வெளிநாட்டு தமிழர் அளவு நான் சொல்வதை உறுதி செய்யும்.

     

    5 hours ago, satan said:

    மறந்து போயிருக்கும் எப்படி நம்மவர் சொந்த நாட்டுக்குள்ளேயே விரட்டப்பட்டனரென.

    விரட்டப்பட்டதை வடக்கில் இருந்து பார்த்தவர்களுக்கு மறந்தாலும், விரட்டப்பட்டவர்களுக்கு மறக்காது.

  3. 4 minutes ago, நிழலி said:

    நான் இவ்வாறான, வெளி நாட்டவர்களின் காணொளிகளுக்கு வழக்கமாக இடும் பின்னூட்டம், "ஒரு பெரும் இனப்படுகொலையை, தடை செய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளை பாவித்து போர் நடாத்திய ஒரு அரசிடம் இருந்து, சிங்கள இனத்திலும் இருந்தும், வேறு எதனை எதிர்பார்க்கப் போகின்றீர்கள்" என்றே.

    இதனால் என்ன பயன்? போர்க் குற்ற விசாரணை எல்லாம் நடக்குமா? எனக் கேட்டால், கண்டிப்பாக இல்லை.

    ஆனால், ஆகக் குறைந்தது ஒரு சிலருக்காவது, இலங்கை எனும் சொர்க்க புரியில், ஒரு இனப்படுகொலை யுத்தம் இடம்பெற்றதா என கேள்விகளாவது மனசில் எழும்.

    அது.

    இது நியாயமான, தேவையான, வினத்திறனான செயல்.

    ஈழத்தமிழர், சொற்பமாக ஏனைய தமிழர் மட்டும் வாசிக்கும் தளத்தில் வந்து சிங்களவன் மோடன், இலங்கையில் ஒரே களவு என எழுதுவது ஒரு பயனையும் தராது.

    19 hours ago, பெருமாள் said:

    இடியாப்ப கொத்து 1800 ரூபா முழு பொய் அந்த வெள்ளை தனக்கு நிறைய

    எல்லாம் மங்கி, கடைசியில் பார்வையும்?

  4. 22 minutes ago, குமாரசாமி said:

    மற்ற நாடுகளில் இருப்பதால் இலங்கையிலும் அது இருக்கலாம் எண்டிறியள்?
    சரி...ஒகே 😂

    WNwr0x.gif

    களவை கள்ளன் மட்டுமே “இருக்கலாம்” என சொல்வான்.

    ஆனால் ஒரு டி+வடை நானே 350 க்கு வாங்கியுள்ளேன். வெள்ளை தோல் தேவையில்லை, பாட்டா வோடும், அயர்ன் பண்ணாத சேர்டோடும் போய் ஆனால் கொழும்பு பஸ்சில் இருந்து இறங்கி கேட்டா ஆட்டோ வழமைக்கு 200, 300 கூட. சரி நமக்கு சின்ன வித்தியாசம் தானே என ஏறிப்போவது.

    ஒரு டி+வடை 600, 1000 கொத்து 1800 - களவுதான். ஆனால் இதை ஏதோ போபர்ஸ் ஊழல் மாதிரி எழுதுவது ?

    அந்த பெல்ஜியன் கடைசியில் காசை கொடுத்தும் வாங்காமல் - இனி ஏமாத்தாதே என சொல்லி போகிறான்.

    அவன் மனிதன்.

    பட்டபகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது, ஒரு பஞ்சையைதான் எல்லாம் சேர்ந்து திருடன் என்றே உதைக்குது.

    -பட்டுகோட்டை-

    பிகு

    அடுத்த தடவை இலண்டன் வரும் போது அந்த Black Cab Taxi யில் ஏறி ஒரு 20 மைல் பயணித்து பாருங்கள். ஓட்டுவது 99% மத்திய தர ஆங்கிலேயர் மட்டும்தான்.

    உங்கள் கொலிடே பட்ஜெட்டில் 50% உருவி விட்டு அனுப்புவார்கள்.

    அல்லது எந்த இத்தாலிய குறிப்பாக வெனிஸ் போய் நல்ல காசை வைத்து பின் பொக்கெட்டில் வைத்து அதே அனுபவத்தை அடையலாம்.

    அறுவார் ஒண்டுமில்லாத எண்ட முதலாவது ஐடி கார்ட் படத்தை செண்டிமெண்டா வச்சிருந்த பேர்சையே லவட்டினவனுக.

  5. 6 minutes ago, விளங்க நினைப்பவன் said:

    எல்லாவற்றையும் இலங்கையில் பறிகொடுத்ததினால் தானே அலைகின்றார்கள் அதையும் தெளிவாக குறிபப்பிட வேண்டும்

    உடுப்பில்லாமல் நாடு திரும்ப வெட்கப்பட்டு பல ரஸ்யர்களும் உக்ரேனியர்களும் அங்கேயே நீண்ட விசாவில் அல்லது ஓவர் ஸ்டேயில் தங்கி - சொந்தமாக ஓட்டல், உணவகங்கள் கூட நடத்துகிறார்கள் 🤣.

    *அண்மையில் ஒரு பீச்சில் whites only பார்ட்டி ஏற்பாடு செய்து சர்ச்சையாகியது.

  6. 7 minutes ago, குமாரசாமி said:

    அதுதானே உலகத்திலை இல்லாத பிரச்சனையா சிலோனிலை இருக்குது?
    மிண்டு கொடுத்து வாழ்பவர்களுக்கு சகலதும் சகஜம்.😂

    இலங்கையில் எவ்வித பிரச்சனையுமே இல்லை என நிறுவ ஒரு கூட்டம் யாழ் இணையத்தில் உள்ளது யாவரும் அறிந்ததே.🤣

    Bild

    சரி விடுங்கோ…இலங்கையில் போய் இறங்கின உடன என்னை எல்லாத்தையும் உருவி போட்டு அம்மணாய் ஓட விட்டார்கள்…

    யாரும் போக வேணாம் ….போகவே வேணாம்….

    ஆயிரகணக்கில் போகும் வெள்ளைகள் எல்லாம் அங்க அம்மணமா அலையுதுகள்…

    போதும்தானே🤣

  7. 48 minutes ago, குமாரசாமி said:

    உண்மையில் உலகிற்கே ஆப்பு வைக்கக்கூடிய நிலையில் ஒரு பொது எதிரியாக சீனாதான் இன்றுள்ளது
    ஈரானில் கூட 70 வீத வியாபார நிலையங்கள் சீனாவிற்குரியதாம்.அதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் மோசமான நிலையே. மேற்குலகை பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்கள் எங்கள் கண் முன்னே சீனாவின் பொருட்களை கண் முன்னே பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம்.

     

    இன்று கூட சீன அதிபரை சர்வாதிகாரி என ஜேர்மன் பத்திரிகைகள் முழங்க..... ஜேர்மனிய ஆட்சியாளரும் அவர் அமைச்சரவையும் சீனாவில் குடிகொண்டு வர்த்தக் ஒப்பந்தகள் செய்துகொண்டிருக்கின்றனர்.

    தாய்வானில் கூட நான் சீனாவை குறை சொல்ல மாட்டேன். நாடு முழுவதும் மாவோவின் கீழ் வீழ - எஞ்சிய முதாளிதுவ தீவு அது. அதை கேட்பது ஒரு வகையில் நியாயமே.

    திபெத், உகிர் அட்டூழியங்கள் மிக மோசமனாவை.

    ஆனால் உலக அளவில் ? ஆதிக்க விரிப்பு, வர்த்த ஆளுமை - எல்லாரும் செய்ய முனைவதுதானே?

    51 minutes ago, குமாரசாமி said:

    யாருக்கு? 

    அது பொருட்டே இல்லை. விலை ஒன்றே கருதுபொருள்.

  8. 41 minutes ago, குமாரசாமி said:

    இதை என்னை நக்கலடிப்பதற்காக சொன்னீர்களோ தெரியாது 😂

    இல்லை பொதுவாக வில்லனும் வில்லனும் ஒன்றாவது சகஜம்தானே.

    42 minutes ago, குமாரசாமி said:

    அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்றாக தெரிந்த விடயம் ரஷ்யா தங்களுக்கு எதிரியல்ல என்பது

    அமெரிக்காவுக்கு சோவியத் காலம் தவிர ரஸ்யா வேறெப்போதும் எதிரி இல்லைத்தான். 

    ஆனால் கிழக்கு ஐரோப்பிய சிறிய தேசிய இனவழி நாடுகள், பின்லாந்து இவையின் நிலமை எப்போதும் முதலை குளத்தில் நீர் அருந்தும் மான்களின் நிலைதான். ரஸ்யாவில் ஒரு பீட்டர் த கிரேட், அல்லது அவன் த டெரிபிள், அல்லது கத்தரீன் த கிரேட், அல்லது ஸ்டாலின், அல்லது புட்டின் இருந்தால் இவர்கள் இரையாவது நிச்சயம்.

  9. ஒரு குட்டி ஸ்டோரி 

    50 வயதான எல்லாளன் பெரும் படையுடன். 

    எதிரே, சிறிய படையுடன் - ஆனால் பதின்ம வயதின் முடிவில் உள்ள கட்டேறிய உடலுடன் டுட்டு கெமுனு.

    தந்திரமாக வீரர்கள் மாய வேண்டாம் - நீயும் நானும் மட்டும் போரிடுவோம் என்கிறான் கெமுனு.

    சின்ன பயல், அதுவும் மோட்டு குடியினன், கவுங் தின்பதில் மட்டும் சூரன் - போரின் முதல் தவறாகிய எதிரியை கீழ் மதிப்பீடு செய்வதை செய்கிறான் மாமன்னன் எல்லாளன்.

    பெரும் படையை பாவிக்காமலே தோற்று, இறந்து போகிறான்.

    தீவு முழுவதையும் ஆண்ட கடைசி தமிழ் அரசு முடிவுக்கு வருகிறது.

    எல்லாளனில் தொடங்கியது - புத்தன் வரை தொடர்கிறது.

    கெமுனுக்கள் வென்று கொண்டே இருக்கிறார்கள் 🥲.

    ——******———

    (போர் நடந்த விதம் வரலாறா தெரியவில்லை, தமிழர் தரப்பில் கர்ணபரம்பரையாக வருகிறது - வெறும் கதையே என்றாலும் - செய்தி கனமானது).

    • Like 2
  10. 53 minutes ago, putthan said:

    கூலிக்கு மார் அடிக்கும்சிங்களவன் என்று சொல்லப்படாது...இது எங்களது சகோதரயாக்களின் தூர நோக்கு அரசியல் பார்வை(ராஜதந்திரம்.சாணக்கியம்) என்ற கோணத்தில் நீங்கள் பார்க்க வேணும் இன்று சிறிலங்கா அமேரிக்கா .இந்தியா போன்ற நாடுகளின் ஆதிக்கத்தினுள் வர போகின்றது இதை தடுத்து நிறுத்த ரஸ்யா,சீனா போன்ற  நாடுகளில் சகோதரயாக்கள் இராணுவ பயிற்சி எடுக்க வேணும்....இதில் மாற்று கருத்து ஒன்றுபட்ட சிறிலங்கா அம்பிகளுக்கு இருக்காது...அமெரிக்கா வந்து இறங்க ரஸ்யாவில் பயிற்சி பெற்ற தளபதிகள் எங்கன்ட லங்கா மாதாவை காப்பாற்றுவார்கள்

    இது உங்களுக்கு விளங்கும் என்பதால், உங்களுக்கும், உங்களை ஒத்தோருக்கும் மட்டும் எழுதுகிறேன்.

    அண்மையில் ஒரு பிரபல தாராளவய, இடது சார் (இடது சாரி அல்ல) எழுதிய Conservatism: The Fight for a Tradition என்ற புத்தகத்தை, (அதாவது இடதுசாரிகள், வலதுசாரியத்தை புரிந்துகொள்ள என ஒரு இடது சார் சிந்தனையாளர் எழுதிய புத்தகத்தை) புரட்டும் வாய்ப்பு கிடைத்தது.

    இந்த இடது சார் சிந்தனையாளர் யாருமல்ல - வலதுசாரிகளின் தங்க தலைவன் பொரிஸ் ஜோன்சனுக்கு மாமன், Edmund Fawcett.

    200 வருட அமெரிக்கா, யூகே வலது அரசியலை அலசுகிறது இந்த புத்தகம்.

    இந்த காலகட்டத்தில் அநேக காலம் இரு நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது - வலதுசாரிகள்.

    ஆனால் தாமே கெட்டிக்காரர், வல்லமையானோர், முற்போக்குவாதிகள் எனவும், வலதுசாரிகள் மோடயர், அடிமைபுத்தியினர், பணப்பேய்கள், பிற்போக்கினர் எனவும் சொல்லிகொள்வார்கள் இடதுசாரிகள். இரெண்டு நாட்டிலும்.

    இந்த புத்தகத்தின் முகவுரையில், வலதுசாரிகளை நோக்கி இவர் ஒரு கேள்வியை கேட்கிறார்:

    'if we're so smart, how come we're not in charge?

    நாம் அவ்வளவு கெட்டித்தனமானவர்கள் என்றால் நாம் ஏன் அதிகாரத்தில் இல்லை?

    ——————

    இதை படித்த போது என் மனதில் தோன்றிய எண்ணம், உங்கள் பதிவை வாசித்ததும் மீள உதித்தது:

    எல்லாளன் காலத்தில் இருந்து ஒவ்வொரு சிங்கள படை எடுப்பிலும், 1948க்கு பின் அத்தனை அரசியல் போராட்டதிலும் தோற்றுக்கொண்டே வருகிறோமே;

    If we are so smart, how come  we haven’t even won at least once?

    நாம் அவ்வளவு கெட்டிக்காரர், அவர்கள் அவ்வளவு மோடையர்கள் என்றால் - ஏன் நாம் ஒரு தடவை கூட ஒரு அரசியல் வெற்றியை அடையவில்லை?

    கட்டாயம் வாசிப்போர் பதில் எழுத வேண்டும் என்பதில்லை. சிந்தனையை தூண்டினால் போதும்.

     

     

     

     

    • Like 1
  11. 1 hour ago, putthan said:

    வெள்ளைக்காரன் ஆசியாவுக்கு வந்து இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி வழங்க மிகவும் கஸ்டப்பட்டவனாம்..லெவ்ட்,ரைட் பயிற்றுவிக்கவே பெரிய கஸ்டப்பட்டவனாம்...பிறகு ஒரு காலுக்கு லெஞ்சியை(சீலை துணியை) கட்டிவிட்டு....லெஞ்சி கக்குள்ள,நிக்காங் கக்குள்ள என பயிற்சி வழங்கி தங்களது பயிற்சியை வழங்கினார்கள் என் சொல்வார்கள்...

    வெடி வைக்க ஏன் மொழி ?டாங்கிக்கு பக்கத்தில போ முன்னுக்கு யார் வந்தாலும் டிரிகரை அமுக்கு என கை பாசையில் சொல்லி கொடுத்தா சரி தானே .

    தமிழ் ஏரியாவுக்கு வந்து, ஒரு காலில் சீலையும், ஒரு காலில் ஓலையும் கட்டி விட்டு - ஓலைக்கால், சீலைக்கால் என பழக்கியதாக எங்கள் ஊரில் சொல்வார்கள்.

    இரு இனங்களும் தம்மை தாமே நக்கல் அடிப்பதில் வல்லவர்கள் போலும்.

  12. 1 hour ago, putthan said:

    தப்பி கிப்பி பிழைத்து வந்தால் அவர்களுக்கு சிறிலங்காவில் கதாநாயக வரவேற்பு வழங்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வைத்தவிடுவார்கள் சிங்கள மக்கள்...அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிய சிங்கள லே (ரத்தம்)என கோசத்தை முன் வைப்பார்கள்

    ஆனால் இரெண்டே வருடத்தில் ஜொக்காவையும் உருவி விட்டு துரத்துவார்கள்🤣

    • Haha 1
  13. 24 minutes ago, குமாரசாமி said:

    சில வேளைகளில் அமெரிக்கா ஈரானுடனான தன் வெற்றிக்காக ரஷ்யாவுடன்  உக்ரேனை பேரம் பேசப்படலாம். ரஷ்யாவும் அதற்கு சில வேளைகளில் சம்மதிக்கலாம். அமெரிக்காவிற்கு உக்ரேனை விட இஸ்ரேலும் மத்திய கிழக்கு அமைதியும் மிக முக்கியம் . பலஸ்தீன விடுதலை இரண்டாம் பட்சம்.😎

    இப்படியான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பழைய கதைகள் உண்டுதானே. 😂

    நிச்சயமாக.

    குர்தீக்களை ஒன்றுக்கு ரெண்டு தரமும், ஆப்கானிஸ்தானில், வியட்நாமில் தம் சகபாடிகளை வச்சு செஞ்ச அமேரிக்காவும்,

    ஆப்கான், வார்சோ, கிழக்கு ஜேர்மனி சகபாடிகளை வச்சு செஞ்ச ரஸ்யாவும்,

    டிரம்ப் புட்டின் காலத்தில் இதை செய்ய நிறையவே சாத்திய கூறுகள் உள்ளது.

    #ஒரு வல்(லூறு)லரசின் மனது இன்னொரு வல்(லூறு)லரசிற்குத்தான் புரியுமாமே🤣.

    என்னை போன்ற நனைந்த பிஸ்கோத்துகள்தான், உக்ரேனிய இனவழி தேசிய சுயநிர்ணயம், பலஸ்தீனருக்கு நாடு, ஈரானில் பெண்ணுரிமை என அலம்பிகொண்டிருப்பது.

    அவர்களுக்கு இவை எல்லாமே just transactional.

    அதுவும் டிரம்ப் - நல்ல விலை படிந்தால் - ஜேர்மனி, நேட்டோ, அமெரிக்காவையே கூவி விற்று விடுவார்🤣🤣🤣

    • Haha 1
  14. 22 minutes ago, putthan said:

    ஈழத்து எம்.ஜி.ஆர் ஒர் யூ டியுப்பில் கதைக்கும் பொழுது, நீங்கள் மேற்கூறிய கருத்துப்பட கூறியிருந்தார்....

    இல்லை அண்ணா,

    இவர் கூறுவது போராடும் ஓர்மம், வழிமுறைகள் பற்றி. இவர் கூறுவது எனக்கு துளியும் உடன்பாடில்லை.

    நான் சொல்லுவது குரோதம் காரணமாக நமக்கு நாமே இலங்கை நாசாமாய் போய்விட்டது, என பொய்சொல்லி சந்தோசம் அடைந்து விட்டு, குப்புற படுப்பதை.

    நாளைக்கு எழும்பி பார்த்தால் இலங்கை அப்படியேதான் இருக்கும். பழைய படி டிப்ரெசன் ஆகி - மீண்டும் வந்து ஐயோ இலங்கையில் கொள்ளை, கொள்ளை என எழுதவேண்டும்.

    இப்படியான நச்சு சுழற்சி அவர்களுக்கும் நல்லது இல்லை, சமூகத்துக்கும் நல்லது இல்லை.

     

    • Thanks 1
  15. 22 minutes ago, Justin said:

    இந்த விடயத்தில் எனக்காகவும் சேர்த்தே அறிவுரை சொல்லியிருக்கிறீர்கள் என்பதால் நன்றிக் குறி போட்டிருக்கிறேன்!

    பி.கு: நீங்களும் இனி பப்புக்குப் போய் டயற் பெப்சி குடிப்பதை க் கைவிட வேண்டும்😎. அப்படி ஒரு வெண்டிங் மெசின் கூட இல்லையா லண்டனில் டயற் பெப்சி எடுக்க?

    சுவீட்னர் நியாபகத்தை பாதிக்குமாம் - நான் ஏற்கனவே கண்ணாடியை கட்டிலுக்கு கீழே வைத்து விட்டு, பிரிஜ்ஜுக்குள் தேடுற ஆள்🤣.

    அதனால் இப்போ எல்லாம் பப்பாயா ஜூஸ் வித் அவுட் சுகர்தான். 

    சொர்கம் அண்ணா இலங்கை - எங்க போனாலும் கிடைக்கும். இந்த நாட்டில் போய் பப்பாயா ஜூஸ் எண்டு கேட்டா ஒண்டு ஏதோ கெட்ட வார்த்தை மாதிரி பாக்கிறார்கள் அல்லது பப்பாளி தோட்டத்தின் விலை சொல்கிறார்கள்.

    (சில கொச்சிகாய்களை தூவி விட்டுளேன் - உங்களுக்கு அல்ல, விலக்கி விட்டு குடிக்கவும்🤣).

  16. 24 minutes ago, தமிழ் சிறி said:

    கிட்டத் தட்ட ஒரு மாதத்திற்கு முன் (March 19) வந்த தீர்ப்பை இது வரை எந்தத் தமிழ் ஊடகமும் வெளியிடாமல், ஆதவன் கூட தாமதமாகத்தான் வெளியிட்டு இருப்பதன் மர்மம் புரியவில்லை.
    சும்மா செய்திகளுக்கே இந்த யூ ரியூப் காணொளி தயாரிப்பவர்கள் சலங்கை கட்டி ஆடுவார்கள். அவர்களும் இந்த விசயத்தில் அடக்கி வாசிக்கின்றார்கள். 😂

    அதுதான் எனக்கும் விளங்கவில்லை.

    அதுவும் ஆதவன் இதை தூக்கி, தூக்கி அல்லவா அடித்திருக்க வேண்டும்.

    சுபாஷ் கவனத்துக்கு - லைக்காவில் நல்ல சம்பளத்தில் PR Director வேலை இருந்தால் - நான் தயார்🤣.

    தமிழ் யுடியூப் - அவர்கள் எங்கே சுயமாக செய்தி சேகரிக்கிறார்கள்- ஹைகோர்ட்டுக்கு எப்படி போவது என்பதே தெரிந்திருக்காது. எவனாவது செய்திபோடுவான் - அதை பற்றி ஒரு பத்து நிமிடம் விட்டத்தை பார்த்து யோசித்து விட்டு, பின் வாங்குகிறார்கள், பாண் வாங்குகிறார்கள் என கமெரா முன் வந்து வாயால் வடை மட்டும் சுடுவார்கள்.

    முன்பு நிலாந்தன், அரூஸ், ரிசி, திருநாவுகரசர் பேப்பரிலும், ரமேஷ் வவுனியன், நிராஜ் டேவிட் ரேடியோவிலும் சுட்ட அதே வடைதான்.

    இப்போ யூடியூப்பில்.

    இவர்கள் புலம்பெயர் தமிழர் இயலுமை பற்றி  சுட்ட வடைகளை அவர்கள் நம்ப, அவர்கள் பற்றி இவர்கள் சுட்ட வடையை புலம்பெயர் தமிழர் நம்ப - இப்படி உருவான ஒரு மாய வலை - 2000 பின்னான அழிவுக்கு பெரும் காரணமானது.

    அத்தனை அழிவுக்கு பின்னும் இவர்கள் வடை வியாபார மட்டும் நிற்கவே இல்லை.

    வடைகளை வாங்க வாடிக்கையாளர் இருக்கும் போது, யூடியூப் காசும் தரும் போது - அவர்கள் ஏன் விடப்போகிறார்கள்.

    நான் இப்போ யூடியூப்பில் தமிழ் வீடியோ என்றால் - மீன் வெட்டும் வீடியோத்தான்.

    ஒரு சாம்பிள். நான் ஸ்பீட் செல்வம்னா ரசிகன்.

    11 minutes ago, பெருமாள் said:

    கூகிள் ட்ராஸ்லேட்டையே அதிரவைத்த புள்ளியல்லவா நீங்க .

    ஆனாலும் உங்க அளவுக்கு Artificial intelligence   இல்லை Sir.

    • Like 1
  17. 23 minutes ago, தமிழ் சிறி said:

    ஆதவன் இணையம் லைக்காவினுடையது என நினைக்கின்றேன்.
    நீதிமன்றம் சம்பந்தப் பட்ட செய்தி என்றபடியால் தவறாக இருக்க சந்தர்ப்பம் இல்லை. 
    பொய்ச் செய்தி என்றால்… சவுக்கு சங்கரும் ஆதவனை  நார் நாராக கிழித்துப் போட்டு விடுவார். 😂 🤣 
     

    கேட்பவர் கேட்டால் கல்லும் கரையுமென்பர்.

    தேடும் முறையில் தேடினால் கூகிளும் கொடுக்குமென்பர்🤣.

    செய்தி உண்மைதான்.

    https://www.thehindu.com/news/national/tamil-nadu/savukku-shankars-video-against-lyca-has-been-blocked-youtube-llc-informs-madras-high-court/article68057307.ece/amp/

     

  18. 22 hours ago, குமாரசாமி said:

    தற்போது அமெரிக்காவில் தேர்தல் காலம் இல்லையென்றால் நிலவரங்கள் வேறு விதமாக இருக்கக்கூடும்.

    ஓம்…

    ஆனால் இதில் இன்னொரு பாடமும் உள்ளது.

    என்னதான் அப்பா டக்கர் இஸ்ரேலாய் இருந்தாலும்….

    பெரிய பானையை உடைக்கக்கூடாது.

    @விசுகு அண்ணை கவனத்துக்கு👆🏼🙏.

    சிலவேளை பைடன் வெண்டதும் அடிக்கலாம் என ஒரு உத்தரவாதம் இஸ்ரேலுக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம்.

    டிரம்ப் வந்தால் எப்படியும் ஈரானுக்கு அடிதான். எப்ப என்பதுதான் கேள்வி. புட்டின் கடுமையாக கண்டிப்பதோடு சரி🤣.

    ஆனால் நவெம்பர் வரை நெத்தன்யாகு தாக்கு பிடிக்கோணும் எண்ட கவலை அவருக்கு🤣.

    அவனவனுக்கு அவனவன் பதவி. 

    • Haha 1
  19. 21 hours ago, விளங்க நினைப்பவன் said:

    காபிருக்கு லீட்டருக்கு 20 ரூபாய் + 1000 ரூபாய்  என்று வைத்தாலும் வைப்பார்கள் என்று இல்லை கட்டாயம் ஆரம்பத்தில் வைப்பார்கள் பின்பு வருடங்கள் செல்ல செல்ல காபிர்கள் இல்லாமல் ஆக்கபட்டு நம்பிக்கையாளர்கள் மட்டுமே வாழ்வார்கள்
    இங்கே முல்லாக்கள் ஹமாசுக்காக பொறுப்பில் உள்ள  சிலரே களம் இறங்குவார்கள் போன்று தெரிகின்றதே

     

    எல்லா முஸ்லிம்களையும் ஒரே சட்டியில் போட்டு வறுக்க முடியாது. இலங்கையில் பெரும்பாலானவர்கள், மலேசியா, தமிழ் நாட்டு முஸ்லிம்கள் இப்படி இல்லை.

    ஆனால் என்ன பிரச்சனை - அடிப்படைவாதிகள் கை ஓங்கும் போது ஏனையோர் அடங்கி போகிறார்கள் அல்லது சல்மான் ருஸ்டிகளாக்கப்படுகிறார்கள்.

  20. 10 minutes ago, suvy said:

    ஹையா .....வெய்யில் பிடிக்காத இடம் வெள்ளையாய் இருக்கு........!  😂

     

    இந்த கொமெண்ட்டை - புதிய பதிவுகளில் பாத்து விட்டு….அடிச்சு…பிடிச்சு வந்து படத்தைப்பார்த்தா…..

    வேணும்……

    என்ர புத்திக்கு….

    வேணும்…..🤣

    • Haha 1
  21. 1 hour ago, பெருமாள் said:

    இல்லையண்ணை படிப்பறிவு இல்லாத தமிழ் ஒழுங்கா வாசிக்க தெரியாத பெருமாள் இந்த இணைப்பை இணைத்து இருக்கிறார் எதுக்கும் ஒருக்கா இந்த செய்தியை fact check  செய்து பார்த்து விட்டு சொல்றன் .😀

    இடியாப்ப கொத்து 1800 ரூபா முழு பொய் அந்த வெள்ளை தனக்கு நிறைய யூடுப்  subscribers வேணுமென்பதற்காக விட்ட  புளுகு பொய் .😀

     

    இதுக்கெல்லாம் ஏன் இப்படி வளைஞ்சு முட்டு கொடுக்க வேண்டும்.

    உலகில் எந்த நாட்டில் தான் களவு இல்லை. அதுவும் டூரிஸ்ட் போகும் நாடுகளில் - இலண்டனில் இல்லாத களவா?

    திப்பு சுல்தானின் வாளை களவெடுத்து, அதை பார்க்க டிக்கெட் போட்டு காசு பார்க்கும் இராஜ குடும்பத்துக்கு வாழ்க்கை பூரா விசுவாசமாய் இருப்பேன் என சத்தியம் செய்து பிராஜா உரிமை பெற்ற நாம், 1000 ரூபா கொத்தை 1900 ரூபாவுக்கு வித்தமைக்கு ஏன் இவ்வளவு கடுப்பாகிறோம்?

    நடந்தது இலங்கை என்பதால் மட்டும்? 🤣. இலங்கை மேல் உள்ள ஆத்திரத்தில்.

    இது உங்களுக்கு ஒரு மன நிம்மதியை தராலாம் - வேறு எதுவும் ஆகாது.

    சிறிலங்லாவை, சொறிலங்கா, இந்தியாவை, ஹிந்தியா என அழைப்பது போல் உங்கள் போன்றோரின் நியாயமான கோவத்தின், சிறுபிள்ளைத்தனமான வெளிப்பாடு இது என்பது வாசிப்போர் அனைவருக்கும் தெரியும்.

    ஆனால் சிங்களவன் கெட்டிக்காரன் - அளுத்கடே நானா மீது வழக்கு பாய்ந்து விட்டது. களுத்தற ஆள் காசை திரும்பி கொடுத்தபடியால் தப்ப கூடும்.

    இதை வைத்தே தாம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பில் கவனம் என பலத்த பிராசாரம் ஆரம்பமாகி விட்டது.

    புறக்கணி சிறிலங்கா என கூவி விட்டு கள்ளமாய் நெக்டோ இறக்கிய வியாபாரிகள் அல்லவா நாம்?

    சிறுபிள்ளைதனமாக எழுத, கோவிக்க, கைகை பிசைய சக தமிழன் மீது சேறடிக்க மட்டுமே எம்மால் முடியும்.

    உலகின் மிக மோசமான விஷம். ஆற்றாமையால், கையாலாகதனத்தால் வரும் குரோதப்புத்தி.

    இந்த விஷம் எவரையும் எதுவும் செய்யாது. வைத்திருப்பவரை சிறு, சிறுக சாகடித்து விடும்.

     

    அரசியல் செய்யலாம். இலங்கையை மூர்கமாக எதிர்க்கலாம். எமது மக்கள் உரிமைக்காக போராடலாம்.

    லாம் இல்லை. செய்ய வேண்டும்.

    ஆனால் குரோதம் - அதன் பால் வரும் சிறுபிள்ளைத்தனம் நல்லதல்ல.

    அட்வைஸ் என எடுக்க வேண்டாம், பழகிய தோஷத்துகாக சொல்கிறேன். இதே அட்டிடியூட்டுடன் எந்த விசயத்தில் இருக்கும் எவருக்கும்.

    • Like 3
    • Thanks 3
  22. 19 hours ago, ooravan said:

    நீங்கள் பூலோக சொர்க்கம் இலண்டன் வந்ததில்லையா?

    https://www.swlondoner.co.uk/life/14082023-five-bizarre-london-scams-that-you-need-to-know-about
     

    https://theculturetrip.com/europe/united-kingdom/england/london/articles/13-scams-all-tourists-should-avoid-in-london

    கனடாவில் ஒவ்வொரு மனிதனும் யேசு, புத்தர்தான் போலும்?

    சுய அனுபவம்.

    இலண்டனில், பரிசில் ஒரு கணிசமான விலையுள்ள பொருளை, பையை கண்ணுக்கு புலப்படும் வகையில் காரில் விட்டு நாம் யாரும் காரை பார்க் செய்வதில்லை. ஒன்றில் கையோடு எடுத்துப்போவோம் அல்லது டிக்கியில் பூட்டுவோம்.

    கொழும்பில் சர்வசாதாரணமாக காரில் இவற்றை விட்டு போகிறார்கள்.

  23. 21 hours ago, குமாரசாமி said:

    காஸா அழிந்தாலும் பரவாயில்லை. ஆனால் இஸ்ரேல் எனும் நாடு இருக்கக்கூடாது என முடிவெடுத்திருக்கிறார்கள் போலும்

    ஈரான் என ஒரு நாடே இல்லாமல் போனாலும் பரவாயில்லை, இஸ்ரேல் ஒழிந்தால் போதும் என முல்லாக்கள் முடிவு செய்தால் நீங்கள் சொன்னது போல் நடக்கலாம்.

    ஆனால் முல்லாக்கள் அந்தளவு முட்டாள்கள் இல்லை. ஈக்குவானத்தை புட்டின் தலையில் கட்டி விடும் அளவாவது அவர்களுக்கு அறிவுள்ளது🤣.

    இது பகிடி. பிறகு ஏதோ புட்டின்-புருசன் மாரி என்னை வந்து சேட் கொலரில் பிடிக்க வேண்டாம்🤣

    46 minutes ago, ஏராளன் said:

    அண்ணை எல்லாம் அந்த அக்கரைப்பற்று அங்கிள்(63) தந்த உசார் தான் காரணமோ?!

    மருமோன், தயவு செய்து குடும்ப ரகசியத்தை பரகசியமாக்கா வேண்டாம்🤣

    17 minutes ago, விசுகு said:

    அங்கிள் என்பதற்கு என் கண்டனங்கள் 🤪

    இத பார்த்த கண்டனம் மாரி தெரியேல்லையே🤣

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.